R5570 – இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5570 (page 332)

இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்

JESUS TRIED BY PILATE

மத்தேயு 27:11-26

“பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.” 22-ஆம் வசனம்.

சீசருடைய அரசாங்கத்திற்கான பிரதிநிதியாகவும், யூதேயாவிற்கான ரோம தேசாதிபதியாகவும் பிலாத்துக் காணப்பட்டார். இயேசுவினுடைய மரணத்தின் விஷயத்தில், நாம் இவரைக் கடுமையாய்க் குற்றஞ்சாட்டிட விரும்பவில்லை. இவர் என்ன செய்ய வேண்டுமோ, அதையே செய்தவராய்க் காணப்பட்டார். யூதர்களுடைய கோட்பாடுகளை (அ) மதம் சார்ந்த வாக்குவாதங்களைக் குறித்துத் தெளிவு படுத்துவதற்காக பிலாத்து யூதேயாவில் காணப்படாமல், மாறாக யூதேயாவின் ஜனங்களை அமைதியானவர்களாகவும், ஒழுங்குடையவர்களாகவும், ரோம அரசாங்கத்திற்குக் கீழ்ப்பட்டுக் காணப்படுபவர்களாகவும் வைத்துக்கொள்வதற்கே இவர் யூதேயாவில் காணப்பட்டார். நாட்டில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டுமெனில், இவர் நீதியாய் ஆளுகை செய்ய வேண்டும் என்பது செயல்முறைக்கொள்கையாகக் காணப்பட்டது; எனினும் ரோம அரசாங்கத்தின் நன்மைக்கு வேண்டி நீதி, தியாகம் பண்ணப்பட வேண்டியும் இருந்தது. இயேசுவைக்குறித்துப் பிலாத்து ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கின்றார் என்றும், நேரம் நியமித்து, இயேசுவை அவர் சந்தித்தும் இருக்கின்றார் மற்றும் இயேசுவினுடைய போதனைகள் தொடர்பாகக் கேள்விகள் கேட்டும் இருக்கின்றார் என்றும் பாரம்பரியமானது தெரிவிக்கின்றது.

ஜனங்கள் விழிப்படைவதற்கு முன்னதாகவும், இயேசு கைது செய்யப்பட்டது தொடர்பாக, அவரது நண்பர்களும், ஜனங்களும் ஒத்துழைத்து ஏதேனும் செய்வதற்கு முன்னதாகவும், இயேசு ஆலோசனை சங்கத்தார் முன்னிலையில் எந்தளவுக்கு விரைவாகக் காலையில் கொண்டுவரப்பட முடியுமோ, அவ்வளவுக்கு முன்னதாகக் கொண்டுவரப்பட்டார். எவ்வளவுக்கு வேகமாய் முடியுமோ, அவ்வளவு வேகமாய்ப் பிரதான ஆசாரியர்களும், ஆலோசனை சங்கத்தினுடைய பிரதிநிதிகளும் இயேசுவை ரோம நாட்டு தேசாதிபதியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, இயேசுவை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கும்படிக்குப் பிலாத்துவினிடத்தில் வேண்டிக் கொண்டார்கள். இயேசுவுக்கு எதிரான அவர்களது குற்றச்சாட்டு என்ன என்று பிலாத்துக் கேட்டார். இயேசு ஒரு பொல்லாத மனுஷன் என்றும், தண்டனைப் பெறுவதற்குப் பாத்திரவான் என்றும், அப்படியாக அவர் இல்லையென்றால் தாங்கள் அனைவரும் அவரைக் குற்றஞ்சாட்டிக்கொண்டு, அங்கு வந்து நிற்கமாட்டார்கள் என்றும் தந்திரமாகப் பதிலளித்தார்கள்.

ரோம கையாளுதலின் கீழ், யூதர்கள் தங்கள் மதம் சார்ந்த அனைத்து வாதங்கள் தொடர்புடைய விஷயங்களைக் கையாளுவதற்கு மிகுந்த சுதந்திரம் பெற்றிருக்கின்றார்கள் என்றும், யூதமார்க்கத்திற்கு தான் காப்பாளன் அல்ல என்றும், ஆகையால் அவர்களே தங்களது (மதம் சார்ந்த) வழக்குகளைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்றும் பிலாத்து அவர்களுக்கு நினைப்பூட்டினார். இதைத் தாங்களும் அறிவார்கள் என்றும், ஆனால் மரணத்தண்டனை விதிப்பதற்கான அதிகாரம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் ஆசாரியர்கள் பதிலளித்தார்கள். இப்படியாகக் குற்றமற்ற நபர் ஒருவர் மீது பிலாத்து மரணத்தண்டனையைச் சுமத்தத்தக்கதாக, அவர்கள் வேண்டுமென்றே திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றனர் என்பதான அவர்களது பொல்லாப்பினுடைய ஆழத்தை வெளிப்படுத்தினவர்களானார்கள். பின்னர் இயேசு ஜனங்களின் மனதைத் தவறான திசையில் திருப்பினார்; அதாவது ரோம அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிவதிலிருந்தும், உண்மையாய் இருப்பதிலிருந்தும் ஜனங்களுடைய மனதைத் திருப்பினார் என்றும், இராயனுக்கு ஜனங்கள் வரி செலுத்தக்கூடாது என்று ஜனங்களிடத்தில் இயேசு கூறினார் என்றும், இயேசு தம்மை யூதருடைய இராஜாவாகிய மேசியா என்று உரிமைப்பாராட்டிக்கொள்கின்றார் என்றும் இயேசுவைக் குற்றம் சாட்ட ஆரம்பித்தார்கள்.

இக்குற்றச்சாட்டுகளானது, ரோம தேசாதிபதி கவனத்தில் எடுத்துக்கொள்ளுவதற்கான கட்டாயத்திற்குள்ளாக்கும் கடுமையான குற்றச்சாட்டுகளாகும்; மேலும் இவைகள், ஆலோசனை சங்கத்தார் முன்னிலையில் நடைப்பெற்றதான விசாரணையின்போது, இயேசுவுக்கு எதிராகக் கூறப்பட்டதான குற்றச்சாட்டுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாய்க் காணப்படுகின்றது என்று நாம் கவனிக்கின்றோம். குற்றச்சாட்டுகள் போலியானதாக இருந்தபோதிலும், இயேசு தம்மைக் காத்துக் கொள்வதற்கென எதையும் கூறவில்லை. தாம் மரிப்பதற்கான வேளை வந்துள்ளதென இயேசு அறிந்திருந்தார். தமக்கான தெய்வீகத் திட்டத்தினுடைய ஒரு பாகமாய்க் காணப்படுவதாக அவரால், அறிந்துகொள்ளப்பட்டக் காரியங்களை அவர் புறம்பே தள்ளிவிட விரும்பவில்லை/முற்படவில்லை.

இயேசு பிலாத்துவின் முன்னிலையில்

தோற்றத்தில் மிகவும் கனிவானவராகத் தோன்றும் இயேசுவானவர், ரோம சாம்ராஜ்யத்திற்குப் பாதகமாய் அமையும் புரட்சியினை எழுப்புவதற்கு வாய்ப்பில்லையெனப் பிலாத்துச் சிந்தித்தவராகவே, இயேசுவை ஏறெடுத்துப்பார்த்தார். பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் பொறாமையினாலேயே குற்றஞ்சாட்டினார்கள் என்று பிலாத்து உணர்ந்து கொண்டதாக, மற்றொரு பதிவு நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இந்த மதத் தலைவர்களுடைய போதனைகளைக் காட்டிலும், இயேசுவினுடைய போதனைகளானது ஜனங்களுடைய மனதை அதிகம் கவர்ந்துள்ளது எனவும், இயேசுவின் மரணத்திற்குப் பொறுப்பாளியாகுவதிலிருந்து தங்களைத் தவிர்த்துக்கொள்ள நாடினவர்களுக்காக, பிலாத்துவாகிய தான் கீழ்த்தரமானதும், அநீதியானதுமான காரியத்தைச் செய்து கொடுக்கும்படிக்கு தான் வேண்டிக்கொள்ளப்பட்டிருக்கின்றார் எனவும் பிலாத்துக் கொஞ்சம் உணர்ந்துகொண்டார்.

எனினும் பிலாத்து, நசரேயனுக்காக அனுதாபம் கொள்பவர்போன்று தெரியப்படக்கூடாது. இராயனைப் பற்றியல்லாமல், வேறொரு இராஜா குறித்து முன்வைக்கப்பட்டதான குற்றச்சாட்டுகளைக் குறித்துப் பிலாத்து அக்கறையற்றவராகக் கையாளுவது போன்றும் தெரியப்படக்கூடாது. ஆகையால் அவர் இயேசுவை நோக்கி: “உமக்கு எதிராய்ச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை நீர் கேட்கவில்லையா? ஏன் நீர் உத்தரவு எதுவும் கொடுக்கவில்லை மற்றும் குற்றஞ்செய்துவிட்டேன் (அ) குற்றஞ்செய்யவில்லை என்று கூறி மன்றாடவில்லை?” என்றார். இயேசு எதுவும் பேசவில்லை.

பஸ்காவினுடைய துவக்க நாளாக இருந்தபடியினால், ரோம தேசாதிபதியின் இருப்பிடத்திற்குப் பிரவேசிப்பதிலிருந்து தவிர்த்துக்கொண்ட பரிசேயர்களினிடத்திற்கும், வேதபாரகர்களினிடத்திற்கும் பிலாத்து வெளியே வந்தார். பிரதான ஆசாரியர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு, அவர்கள் பேசினவைகளைக்கேட்டு வந்தவராக பிலாத்து, “நீர் யூதருடைய இராஜாவா? நீர் அதை ஒப்புக்கொள்கின்றீரா?” என்று கேள்வி கேட்டார். இயேசுவோ பிரதியுத்தரமாக, “என்னைக் கண்டதினாலும் மற்றும் என்னுடைய போதனைகள் குறித்து அறிந்திருந்ததினாலும் கேள்வி கேட்கின்றீரா அல்லது என்னுடைய சத்துருக்கள் உறுதியாய் முன்வைத்தவைகளின் அடிப்படையில் மாத்திரம் உம்முடைய கேள்வி காணப்படுகின்றதா?” என்று கேள்வி கேட்டார். இயேசுவினுடைய சொந்த தேசத்தினுடைய பிரதான மனிதர்களே அவரை ஒப்புக்கொடுத்துள்ளார்கள் என்றும், இத்தகைய எதிர்ப்பை அடையத்தக்கதாக அவர் செய்துள்ளது என்னவென்று, தான் இப்பொழுது அறிய விரும்புகின்றார் என்றும் பிலாத்துக் கேட்டார்.

தமது இராஜ்யமானது இவ்வுலகத்திற்குரியதல்ல, அதாவது இந்தத் தற்கால யுகத்திற்குரியதாகவும் (அ) தற்கால ஒழுங்கிற்குரியதாகவும் இல்லை என்று இயேசு பதிலளித்தார். ஆகையால் தாம், சீசருடைய இராஜ்யத்துடன் மோதலில் இல்லை/சண்டையிலில்லை என்ற விதத்தில் இயேசு பதிலளித்தார். இயேசுவும் சரி, அவரது நண்பர்களும் சரி, அரசியல் ஆட்சியை எதிர்த்துக் கலகம் எதுவும் செய்யவில்லை எனும் உண்மை பற்றிப் பிலாத்துக் கணிப்பதற்கு ஏதுவாயிற்று; ஏனெனில் ஒருவேளை இயேசுவினுடைய இராஜ்யமானது ஒரு பூமிக்குரிய ஆட்சியாக இருந்திருக்குமாயின், நிலவும் ஆட்சிக்கு எதிராக அவரும், அவரது நண்பர்களும் கலகமே செய்திருப்பார்கள். தமது இராஜ்யமானது, எதிர்க்காலத்திற்குரியது என்று இயேசு கூறினார். “அப்படியானால், நீர் உம்மை இராஜா என்றும், எப்போதோ மற்றும் எங்கோ நீர் ஆளுகை செயல்படுத்துவீர் என்றும் கூறுகின்றீரா?” என்று பிலாத்துக் கேட்டார். இயேசுவோ, தாம் ஓர் இராஜா என்றும், இதற்காகவே தாம் பிறந்திருக்கின்றார் என்றும், இதற்காகவே தாம் உலகத்திற்கு வந்தார் என்றும் பதிலளித்தார். தாம் சத்தியத்திற்குச் சாட்சிபகர வேண்டுமென்றும், சத்தியவான்கள் அனைவரும், மற்றும் இப்படியானவர்கள் மாத்திரமே, தம்முடைய சாட்சியை உணர்ந்துகொள்ள முடிகின்றவர்களாய் இருப்பார்கள் என்றும் கூறினார்.

‘ஆ!’ “அனைவருக்கும் இதுதானே கேள்வியாய்க் காணப்படுகின்றது; ‘எது சத்தியம்’ என்பதுதான் அனைவருக்கும் கேள்வியாய் உள்ளது. யாருக்குமே அது தெரிவதில்லை” என்றார் பிலாத்து. பின்னர் அவர் யூதர்களினிடத்திற்குப்போய், “இவரில் நான் எந்தக் குற்றத்தையும் கண்டுபிடிக்கவில்லை. இவர் சீசருக்கோ அல்லது அவருடைய சட்டங்களுக்கோ எதிரான குற்றவாளியாக எவ்விதத்திலும் இல்லை. இவருடைய சுதந்திரத்தையோ அல்லது இவரது உரிமையையோ நீதியாய்த் தடைப்பண்ணிப்போடும்படிக்கு நான் முடிவெடுக்கத்தக்கதாக, இவர் எதையும் செய்யவில்லை” என்று பிலாத்துக் கூறினார்.

பிரதான ஆசாரியர்களும், வேதசாஸ்திரிகளும் அபாயத்தை உணர்ந்தார்கள். இயேசுவைச் சிலுவையில் அறைந்துப்போடலாம் என்று அவர்கள் நம்பிக்கையாய்க் காணப்பட்ட தருணத்தில், இயேசு தங்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கு வாய்ப்புள்ளதோ? பின்னர் அவர்கள் இயேசு கலிலேயா நாடு தொடங்கி அனைத்து இடங்களிலும் உபதேசம் பண்ணி ஜனங்களைக் கலகப்படுத்துகின்றார் என்று தீவிரமாய்/சீற்றத்துடன் குற்றஞ்சாட்டினார்கள். கலிலேயா என்ற வார்த்தையைப் பிலாத்துக் கேட்டபோது, “இவர் கலிலேயரா?” என்று விசாரித்தார். இயேசு கலிலேயன் என்று பதிலளிக்கப்பட்டபோது, “அப்படியானால் இந்தப் பிரச்சனைமிக்க வழக்கை நான், கலிலேயாவின் இராஜாவாகிய ஏரோதினிடத்திற்கு மாற்றிவிடுகிறேன்” என்று பிலாத்துக் கூறினார்; ஏரோதுக்கும் எருசலேமில் அப்போது அரண்மனை இருந்தது.

[R5571 : page 333]

இயேசுவைக்குறித்து அறிந்துகொள்வதற்கு ஆர்வத்துடன் காணப்பட்டதான ஏரோதினிடத்திற்கு இயேசு அனுப்பி வைக்கப்பட்டார். ஏரோது, இயேசுவைக்குறித்து அநேக விஷயங்களைக் கேள்விப்பட்டவராகவும், இயேசு ஏதாகிலும் அற்புதம் செய்வதைப்பார்ப்பதற்கு விரும்பினவராகவும் காணப்பட்டார். ஏரோது, நமது கர்த்தரிடம் கேள்விகள் கேட்டார். ஆனால் இயேசு எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இயேசுவைக்குறித்து, இராஜாவினிடத்தில் (ஏரோதினிடத்தில்) கடுமையாய்க் குற்றம் சாட்டினார்கள். ஏரோதும், அவரது போர்ச்சேவகர்களும் அவரைப் பரியாசம் பண்ணினார்கள் மற்றும் மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, பரியாசம் பண்ணப்பட்ட இராஜாவைப் போல் அவரைப் பிலாத்துவினிடத்திற்கு ஏரோது திரும்ப அனுப்பிவைத்தார். பிலாத்துவின் சார்பில் ஏரோதிற்கு மதிப்புக்கொடுக்கப்பட்டதான இச்செய்கையும் மற்றும் ஏரோதும் மரியாதையைத் திரும்பக்காட்டின செய்கையும், இவர்கள் இருவருக்கும் இடையில், சில காலமாய் நிலவிவந்ததான பகைமையைத் தகர்த்து, இவர்களை இணைத்தது.

பிலாத்துவும் சரி, ஏரோதும் சரி, அவரைக் குற்றவாளியெனத் தீர்க்கவில்லை

இயேசுவைக் குற்றஞ்சாட்டினவர்களை நோக்கி பிலாத்து மறுபடியுமாக, “ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்ய வில்லையே. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்” (லூக்கா 23:14-17). இயேசுவை இந்தளவுக்குப் பாடுபட அனுமதிக்கும்போது, யூதர்கள் அமைதியடைவார்கள் என்ற எண்ணத்திலும் மற்றும் இயேசுவினுடைய ஜீவனைக் காப்பாற்றுவதற்கான எண்ணத்திலுந்தான் இந்தத் தண்டனை கொடுக்கப்பட்டது என்பது உறுதியே.

வருஷத்தினுடைய அந்த ஒரு காலக்கட்டத்தில், பஸ்காவை முன்னிட்டுப் பிலாத்து, பலமுறை கைதிகளை விடுதலைப் பண்ணியுள்ளார். இம்முறையும் பிலாத்துக் கைதிகளில் எவரையேனும் விடுதலைப் பண்ணுவாரா அல்லது இல்லையா என்று அவ்வேளையில் ஜனக்கூட்டமானது, பிலாத்துவுக்குச் சந்தோஷ ஆரவாரமிட்டு, கேட்டுக்கொண்டனர். இது இயேசுவைத் தள்ளிவிடுவதற்கும், அவரைப் பிரதான ஆசாரியர்கள் மற்றும் ஜனங்களுடைய தலைவர்களின் கரங்களினின்று விடுவிப்பதற்கும் ஏற்ற வாய்ப்பு எனப் பிலாத்து எண்ணினவராக, ஜனங்களை நோக்கி: “சிறையில் காணப்படுகின்றதான யூதர்களுடைய இராஜாவென்று உரிமைப் பாராட்டிக் கொண்டவரை, நான் உங்களுக்கு விடுதலைப்பண்ணட்டுமா?” என்று கேட்டார். ஜனக்கூட்டத்தாரோ தங்களது மதத் தலைவர்களை நோக்கிப்பார்த்தார்கள் மற்றும் கொள்ளையனாகிய பரபாசை விடுதலைப் பண்ணுவதற்குத் தேசாதிபதியை வற்புறுத்திடத் தூண்டி விடப்பட்டார்கள். ஜனக்கூட்டத்தாரை நோக்கி பிலாத்து: “அப்படியானால், மேசியா என்னப்பட்ட இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். தங்கள் மதத்தலைவர்களால் ஏவப்பட்டதான ஜனக்கூட்டத்தாரோ: “அவரைச் சிலுவையில் அறைய வேண்டும்!” என்று சத்தமிட்டார்கள். பிலாத்துவோ பிரதியுத்திரமாக: “ஏன் இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன்” என்றார் (லூக்கா 23:22). பரியாசம் பண்ணப்படவும், வாரினால் அடிப்பிக்கப்படவும் மாத்திரம் இயேசு கையளிக்கப்பட்டார். காத்துக்கொண்டிருந்த யூதர்களை நோக்கி பிலாத்து: “அவரிடத்தில் நான் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு அவரை வாரினால் அடிப்பித்து, இன்னும் கொஞ்சம் நேரத்திற்குள்ளாக அவரை நான் உங்களிடத்தில் வெளியே கொண்டுவருவேன்” என்றார்.

இயேசுவை விடுவிப்பதற்கான பிலாத்துவினுடைய பிரயாசங்கள்

இயேசு முள்முடியும், சிவப்பான அங்கியும் தரிப்பிக்கப்பட்டவராக வெளியே வந்தார். பிலாத்து அவர்களை நோக்கி: “எகி ஹோமோ!” (Ecce homo!) – அதாவது இதோ, இந்த மனுஷன்! என்றார். யாரை நான் கொன்றுபோடுவதற்கென, நீங்கள் முயன்றுகொண்டிருக்கின்றீர்களோ, அம்மனுஷனைப் பாருங்கள். இதோ பாருங்கள், உங்கள் இனத்திலேயே (அ) மனுக்குலத்திலேயே இம்மனுஷன் மிகச் சிறந்த மனுஷனாகக் காணப்படுகின்றார். இவரது துக்கத்தையும், அவமானத்தையும் பாருங்கள். இவரது குணத்தினுடைய அருமையான மேன்மையை இதோ பாருங்கள். இவருக்கு எதிராக உங்களுக்கு, என்ன கோபம் இருப்பினும், இவருடைய அவமானங்களை நீங்கள் காண்கையில், இப்பொழுது நீங்கள் சாந்தமாகுவீர்கள்” என்றார். ஆனால் அவர்களோ, “இவரைச் சிலுவையில் அறையும், இவரைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். பிலாத்துவோ பிரதியுத்தரமாக: “இதுவே உங்கள் விருப்பமானால், நீங்கள் அவரைச் சிலுவையில் அறையலாம்; ஆனால் நான் அவரில் எந்தக் குற்றத்தையும் காணவில்லை – நான் அவரில் எந்தத் தவற்றையும் காணவில்லை” என்றார். அப்போது யூதர்கள் தங்களது எதிர்ப்பிற்கான உண்மையான காரணத்திற்கு வந்தார்கள், காரியங்களினுடைய உண்மை விஷயத்திற்கு வந்தார்கள்; அதாவது இயேசு தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறிக்கொண்டார் எனவும், அதைத் தாங்கள் தேவதூஷணமாகக் கருதிக்கொண்டார்கள் எனவும் தெரிவித்தார்கள். பிலாத்து இதைக் கேட்டபோதோ, மிகவும் பயம் அடைந்தவராக, இயேசுவை நோக்கி: “நீர் எங்கேயிருந்து வந்தவர்?” என்று கேட்டார் மற்றும் இயேசுவிடமிருந்து எந்த மாறுத்தரமும் அவருக்கு வரவில்லை. அப்போது பிலாத்து அவரிடம்: “நீர் என்னோடே பேசுகிறதில்லையா? உம்மைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உம்மை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உமக்குத் தெரியாதா? என்றார். இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்” (யோவான் 19:10,11). பின்னர்ப் பிலாத்து மறுபடியுமாக இயேசுவை விடுதலைப் பண்ணிடுவதற்கு எண்ணினார்; எனினும் இப்படிச் செய்வது என்பது, அமைதியும், சமாதானமும் தக்கவைப்பதற்கும், தான் பொறுப்பேற்றுள்ள பட்டணத்தில் அமளியைத் தூண்டிவிடுவதற்கு ஏதுவாய் இருக்கும் என்று எண்ணினார். யூதர்களோ: “இவரை விடுதலைப்பண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை இராஜா என்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி” என்று சத்தமிட்டார்கள். இது பிலாத்துவைத் தர்மச்சங்கடமான நிலைக்குள்ளாக்கியது. இயேசுவை விடுதலைப்பண்ணுவது என்பது, பிலாத்துவை இராயனுடைய எதிரிக்கு ஆதரவளிக்கின்றவராக்கும்; இன்னுமாக (விடுதலைப்பண்ணும் பட்சத்தில்) பிலாத்து விநோதமாய்த் தோன்றுவார், ஏனெனில் இயேசு அவருடைய சொந்த நாட்டாரினாலேயே குற்றஞ்சாட்டப்பட்டவராகவும், தமக்கு ஆதரவாகப் பிலாத்துவைத் தவிர வேறு எவரையும் உண்மையில் பெற்றிராதவராகவும் காணப்பட்டார்.

இயேசுவுக்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தும் விதமாகவும், இது விஷயம் தனக்கு விசேஷமான சொப்பனம் வந்ததை அறிவிக்கும் விதமாகவும், தன்னுடைய மனைவியிடத்திலிருந்து, பிலாத்துவுக்கு வந்ததான செய்தியின் நிமித்தமாகவும் பிலாத்துத் திகைப்பிற்குள்ளானார். மீண்டுமாக யூதர்களுடைய அதிகாரிகளிடமிருந்து இல்லாமல், மாறாக ஜனங்களின் உதவியைப் பிலாத்து நாடினார். உயர்நிலையில் உள்ளவரான இயேசுவை அவர்கள் முன்பாக நிறுத்தி, பிலாத்து: “இதோ உங்கள் இராஜா!” என்று சத்தமிட்டுக் கூறினார். ஆனால் இது ஜனக்கூட்டத்தாரை ஆத்திரமூட்ட மாத்திரமே செய்தது, மற்றும் அவர்களோ: “இவரை அகற்றும், சிலுவையில் அறையும்! இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே இராஜா இல்லை” என்று தீவிரமாய்/சீற்றத்துடன் சத்தமிட்டார்கள்.

நம்பிக்கை இழந்தவராக, ஜனங்கள் முன்னிலையில், தனது கைகளில் தண்ணீர் ஊற்றி, கழுவிக்கொண்டு பிலாத்து, “இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார். ஜனங்களோ, “இவர் இரத்தப்பழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக!” என்று சத்தமிட்டார்கள்.

அப்படியாகவே நடந்ததல்லவா! 18 நூற்றாண்டுகளுக்கு மேலாக யூதர்கள், தேவனுக்கு அந்நியர்களாக்கப்பட்டும், தீர்க்கத்தரிசிகள் இல்லாமலும், ஆசாரியர்கள் இல்லாமலும், பாவநிவாரண பலிகள் இல்லாமலும், பாவ நிவாரண நாட்கள் இல்லாமலும் பாடுபட்டிருக்கின்றனர் (ஓசியா 3:4,5). “ஆ! அவர்களது அக்கிரமமானது மன்னிக்கப்படுகிறதற்கும், கர்த்தர் இஸ்ரயேல் மேல் விண்ணப்பத்தின் மற்றும் கிருபையின் ஆவியை ஊற்றிடுவதற்கும், அவர்களது புரிந்து கொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பதற்கும் மற்றும் அவர்கள் அனைவரும் அவரைத் துதிப்பதற்குமான வேளை நெருங்கிக் கொண்டிருக்கின்றது” (சகரியா 12:10).

ரோம சாம்ராஜ்யத்தினுடைய நலனுக்கடுத்த விஷயங்களுக்கு எதிராய் இராததாய்க் காணப்படும் ஜனங்களுடைய விண்ணப்பங்களுக்குச் சம்மதிப்பதற்குப் பிலாத்துக் கட்டுப்பட்டவராய் இருந்தபடியால், அவர் விண்ணப்பத்திற்கு இணங்கி, இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து, கள்வனாகிய பரபாசை அவர்களுக்கு விடுதலைப்பண்ணினார்.

அதே ஆவி இன்னமும் மேலோங்கிக் காணப்படுகின்றது

கடந்த 18 நூற்றாண்டுகளில் மனித சுபாவமானது மாற்றம் அடைந்துள்ளதென நாம் எண்ணிட வேண்டாம். சூழ்நிலைகள் இன்றும் அதைப்போலவே காணப்படுகின்றது என நாம் நம்பலாம்; இன்றும்கூட இயேசுவினுடைய (அ) அவரது சீஷர்களுடைய மரணத்தை, எந்த ஒரு தேசத்தினுடைய அரசியல் வட்டாரங்களானது விரும்பி, இவர்களது மரணமானது, சமாதானத்திற்கு ஏற்றதாக இருக்குமெனக் கருதுமானால் மற்றும் விசேஷமாக அந்த ஒரு தேசத்தின் மத அதிகாரிகளும், போதகர்களும் ஜனங்களை எளிதில் நம்பவைக்கும் தன்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்குக் குற்றமற்றவர்கள் பலியாகுவது அவசியமெனக் கேட்டுக்கொள்ளும் பட்சத்தில், இயேசுவோ (அ) அவரது சீஷர்களோ எந்தவொரு தேசத்திலுங்கூட மரணத்தண்டனைக் குள்ளாக்கப்படுவார்கள்.

எதிர்க்காலத்தில் இம்மாதிரியான அனுபவங்களானது, தேவனுடைய பரிசுத்தவான்களில் சிலருக்குக் கடந்துவருமானால், நாம் ஆச்சரியமடையாமல் இருப்போமாக. மதத்திற்கு நலமானவைகள் என்று சொல்லப்படுகின்றதான இந்த நலன்களுக்காக மத அதிகாரிகளினால் குரல் எழுப்பப்படும்போது, அரசியல் அதிகாரிகளினுடைய வல்லமையைக்கொண்டு, நீதியானது புரட்டிப்போடப்பட்டு, யுகம் முழுவதிலும் குற்றமற்றவர்கள் மரணத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று வரலாற்றின் பக்கங்களானது காண்பிக்கின்றது. அனைத்துக் காலக்கட்டங்களிலுமுள்ள தேவனுடைய ஜனங்கள் நடந்துகொள்ள வேண்டிய விதமானது, ஆண்டவரினால் முன்வைக்கப்பட்டுள்ளது; அதென்னவெனில், தேவனுடைய சித்தத்தை எதிர்ப்பின்றி முழுமையாய் ஏற்றுக்கொள்ளுதலாகும் மற்றும் அவரது நோக்கம்/காரணங்களுடைய நலனுக்கடுத்த விஷயங்களில் தேவனுடைய மேற்பார்வை உள்ளது என்று முழுமையாய் உணர்ந்து கொள்ளுவதாகும் மற்றும் விளைவுகளானது மிகவும் அதிகமான நித்திய கனமகிமையாய் இருக்கும் என்று முழுமையாய் நம்பிக்கைக்கொண்டிருத்தலாகும்.

“உலகம் அனைத்துமே எந்தன் முடிவை ஏளனம் பண்ணினாலும்,
இயேசுவே என் பங்காய்க் காணப்படுவாரே;
அனைவரிலும் அழகானவராகிய அவரைத் தவிர,
வேறு எவரிலும் நான் திருப்தியடைகிறதில்லையே.
உம் பாடுகளை, உம்மோடுகூட நான் ஏற்றுக்கொள்கின்றேனே,
உம் தரித்திரத்தையும், அவமானமான சிலுவையையும்,
உம்மோடுகூட நான் ஏற்றுக்கொள்கின்றேனே.
உலகத்தின் இன்பங்களினின்று விலகி ஓடுகின்றேனே.
உலகத்தின் பொக்கிஷங்களைக் களிம்பைப்போல் கருதிடுவேன் நானே.