R2447 – விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2447 (page 76)

விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி

A BOTTLE OF SPIKENARD, VERY COSTLY

யோவான் 12:1-11

“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.” மாற்கு 14:8

பூமிக்குரிய ஊழியத்தில் நம்முடைய ஆண்டவரின் கடைசி வாரம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. பஸ்கா பண்டிகை வர ஆறு நாளைக்கு முன்னே, யூதர்களின் ஓய்வுநாளாய் இருந்தது; அந்த ஓய்வுநாள் மணியளவில் ஆறு முடிவடைந்தது; அநேகமாக அப்போதுதான் நம்முடைய ஆண்டவரும் அவருடைய சீஷர்களும், “குஷ்டரோகியான சீமோன் வீட்டில்” மார்த்தாள் மற்றும் மரியாளால் உபசரிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தச் சீமோன் அவர்களுடைய தந்தையாக இருந்திருக்கக்கூடும். அவர்களின் சகோதரனாகிய லாசருவும் அங்குப் பந்தியிருந்தவர்களில் ஒருவராக இருந்தார்.

தமது மரணம் வெகுவாய்ச் சமீபித்திருப்பதை ஆண்டவர் அறிந்திருந்ததினால், நேசிக்கப்பட்ட தம்முடைய சீஷர்களுக்கு அதைக்குறித்துச் சில தகவல்களைக் கொடுத்தார். பொதுவாக, சீஷர்களின் புரிந்துகொள்ளுதலுக்கு அப்பாற்பட்ட சில அற்புதமான விஷயங்களை எப்பொழுதும் இயேசு பேசுவதினால், அவர்கள் சமீபமாய் இருக்கும் கல்வாரியில் நிகழப்போகிற பயங்கரமான சோக நிகழ்ச்சியைக்குறித்து உணர்ந்துகொள்ள தவறினார்கள். இவைகள் நமக்கு ஆச்சரியமாக இருப்பதற்கு அவசியமில்லை. ஏனெனில், நமது கர்த்தர் உவமைகளாகவே பேசினார் என்று வேதவாக்கியங்கள் காணப்படுகின்றது; “இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை.” உதாரணமாக: “இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.” “நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான் நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 2:19; 6:51,53) இப்படியான உவமை பாஷைகளில் கர்த்தர் பேசியிருந்ததை நாம் மனதில்கொண்டு நிதானிக்கும்போது, அவருடைய மரணத்தை முன்னறிவித்த நமது கர்த்தருடைய வார்த்தைகளான, “மனுஷகுமாரன் உயர்த்தப்படுவார்” மற்றும் இதுபோன்ற மற்ற வாக்கியங்களினுடைய சரியான அர்த்தத்தை அப்போஸ்தலர்களால் புரிந்திருந்திருக்க முடியாது என்று நாம் உணர்கின்றோம்.

ஓய்வுநாள் மாலையில் இயேசு அபிஷேகிக்கப்பட்டதைக்குறித்தும், அங்குப் பெத்தானியாவில் நடந்த இராவிருந்தைக்குறித்தும் பார்ப்பதற்கு முன், மரியாள் நளததைலத்தினால் அபிஷேகம் பண்ணின காரியமானது தமது அடக்கத்திற்கு ஏதுவாக பண்ணினாள் என்று நமது கர்த்தர் அறிவித்த காரியங்களை புரிந்துகொள்ளத்தக்கதாக, அந்நாளுக்குப் பிறகு தொடரும் நாட்களில் நடக்கும் சம்பவங்களை நம் மனதில் கொண்டுவரலாம். மறுநாள் காலையில் (வாரத்தின் முதல் நாள் – பொதுவாக இன்று ஞாயிற்றுக்கிழமை என்று அழைக்கப்படுகிறது). கழுதைக் குட்டியை அழைத்துவரும்படிக்குக் கூறி, பின்னர் அதின்மேல் ஏறி எருசலேமுக்குப் பிரயாணம் பண்ணினார். லாசரு உயிர்த்து எழுப்பப்பட்ட அந்த அற்புதத்தை ஜனங்கள் கண்டிருந்ததினால் கும்பல் கும்பலாகக் கூட்டங்கூடி, சகரியாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறும் வண்ணமாக அவரை மேசியா என்றும், தாவீதின் குமாரன் என்றும் வந்தனம் செய்து, வழியில் வஸ்திரங்களையும், மரக்கிளைகளையும் பரப்பினார்கள். (ஆகவே, பொதுவாக இது குருத்தோலை ஞாயிறு என்று அழைக்கப்படுகிறது). இத்தருணத்தில்தான், நம்முடைய ஆண்டவர் எருசலேமை நோக்கி கண்ணீர்விட்டு, “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” (மத்தேயு 23:38) என்று அறிவித்தார்.

இரண்டாவது நாளாகிய திங்கட்கிழமை அன்று, காசுக்காரர்களை ஆலயத்திலிருந்து துரத்தியிருக்க வேண்டுமென்றும், அங்குள்ள ஜனங்களுக்கு அவர் போதித்தார் என்றும், கருதப்படுகிறது. மேலும், அந்த நாளின் பகல் வேளையில் அவர் பிரயாணம் பண்ணிக்கொண்டு இருக்கும்போதுதான் கனியற்ற யூத தேசத்திற்கு அடையாளமாய் இருந்த கனியற்ற அத்திமரத்தைச் சபித்துப் புறக்கணித்தார் என்றும் பதிவுகளிலிருந்து நாம் அறிந்துகொள்கிறோம். மூன்றாம் நாளாகிய செவ்வாய்கிழமை அன்று, மீண்டும் ஆலயத்தில் பிரசங்கிப்பதிலும், கேள்விகளுக்குப் பதில் கொடுப்பதிலும் அவர் நேரத்தைச் செலவிட்டார். மேலும், அன்று மாலையில் அவர்கள் பெத்தானியாவுக்குத் திரும்பியபோது, அண்மையில் சம்பவிக்கப்போகும் மாபெரும் சம்பவங்கள் தொடர்பான காரியங்களை அவர் தம் சீஷர்களோடு சம்பாஷித்துக் கொண்டிருந்தார். நான்காம் நாளாகிய புதன்கிழமையோ, பெத்தானியாவில் அமைதலாக கழிந்தது. ஐந்தாம் நாளாகிய வியாழன் அன்று, அவருடைய சீஷர்கள் பஸ்கா இராப்போஜனத்தை ஆயத்தம்பண்ண துவங்கினார்கள். மாலை ஆறு மணிக்குமேல் அது புசிக்கப்பட்டது; அந்த மாலை, ஆறாம் நாளாகிய வெள்ளிக்கிழமையின் துவக்கமாய் இருந்தது. யூதர்களின் முறைமையின்படி அது நீசான் 14-ஆம் தேதியாய் இருந்தது. அன்றைய இரவு கெத்செமனே அனுபவங்கள் தொடர்ந்தது. மறுநாள் காலை பிலாத்துவுக்கு முன் விசாரணை செய்யப்பட்டு சிலமணி நேரங்களுக்குப் பிற்பாடு சிலுவையில் அறையப்பட்டு, மரித்துப்போனார்.

[R2448 : page 76]

நமது கர்த்தர் சிலுவையில் அறையப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன், குஷ்டரோகியான சீமோனின் வீட்டில், அதாவது மார்த்தாள், மரியாள், லாசருவின் வீட்டில் அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பல் குறித்த சம்பவத்திற்கு இப்பொழுது வரலாம். “இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார்” (யோவான் 7:1); நமது கர்த்தர் இங்கு ஒரு விருந்தாளியைப்போல் மாத்திரம் போய் வந்துக்கொண்டிருந்தார் என்றும், அவருடைய பெரும்பான்மையான நேரத்தைக் கலிலேயாவில்தான் செலவழித்துக்கொண்டிருந்தார் என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். இயேசுவையும், மேசியாவுக்கு உயிருள்ள சாட்சியாக வாழ்ந்துகொண்டிருந்த லாசருவையும் கொலை செய்ய வேண்டும் என்று சில முன்னிலை வகிக்கும் யூதர்கள் வகைதேடி கொண்டிருந்தது அறியப்பட்ட காரியமாய் இருந்தும், தாம் பலி செலுத்தப்படவேண்டிய நேரம் இப்பொழுது வந்துள்ளபடியினால் கர்த்தர் தம் சத்துருக்கள் மத்தியில் வந்தார்.

இது ஒரு சராசரியான விருந்தாக இருக்கவில்லை, மாறாக, நம்முடைய ஆண்டவரைக் கனப்படுத்தும்படியாக ஒரு விசேஷித்த விருந்தாய் இருந்தது. எனினும், இந்த விருந்தோடு தொடர்புள்ள ஒரு சம்பவம் அவ்விருந்தின் மற்ற அனைத்து அம்சங்களைக் காட்டிலும் பிரமாண்டமாய் இருந்தபடியினால், சுவிசேஷத்தைப் பதிவு செய்தவர் அக்காரியத்தை மாத்திரம், [R2448 : page 77] அதாவது விலையேறப்பெற்ற நளததைலத்தினால் நமது கர்த்தர் அபிஷேகம்பண்ணப்படும் காரியத்தை மாத்திரம் குறிப்பிடுகின்றார். “இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மாற்கு 14:9) என்று ஆண்டவர் தாமே கூறினார். ஆகவே, ஆண்டவரால் மிக உயர்வாகக் கருதப்படும் இப்பணிவிடையின் விவரங்களை நாம் மிக ஆழமாக ஆராய்ந்து பார்ப்பது மிகவும் ஏற்றதாயிருக்கின்றது.

பேராசிரியர் ஷாப் அவர்கள்: “இங்குத் தைலம் என்று கூறப்படுவது சாதாரணமான தைலமாக இராமல் நறுமண திரவமாக இருக்கின்றது” என்று கூறுகின்றார். அந்தத் தைலத்தைக்கொண்டிருந்த வெள்ளைக்கல் பரணியானது, குடுவை (அ) ஜாடி (அ) கழுத்துப்பகுதி குறுகலாக உள்ள புட்டியின் வடிவம் கொண்டு காணப்பட்டது. மேலும், பரணி உடைக்கப்பட்ட காரியமானது, நறுமணதைலத்தை மூடியிருந்த ஜாடியின் முத்திரை உடைக்கப்படுகின்றதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. யூதாசின் அதிருப்தியான வார்த்தைகள் அந்தத் தைலத்தின் மதிப்பை வெளிப்படுத்துகிறது. ஏனெனில், “அதை 300 தினாரிக்கு விற்றிருக்கலாமே” என்று கூறினான். தினாரி என்ற வார்த்தை பணம் என்று 5-ஆம் வசனத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் ஒரு பணம் (தினாரி) ஒருநாளின் கூலியாக இருந்தது (மத்தேயு 20:2). இதன் மதிப்பை இக்காலத்துப் பணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒரு நாளுக்கு 50 செண்ட் (டாலரில் 100-இல் ஒரு பங்கு) கூலி கொடுக்கப்படுகிறது. இப்படியிருக்க 300 தினாரியானது, 150 டாலர் மதிப்புள்ளதாய் இருக்கிறது. ஆகவே, அந்த நளதம் என்னும் தைலம் உண்மையில் மிக விலையுயர்ந்ததாக இருந்தது. அது ரோம பவுண்ட் அளவின்படி 12 அவுன்சுகளாகும். இந்த நளதம் என்னும் தைலம் விலையுயர்ந்தது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்நாளிலுங்கூட கிழக்கத்திய தேசத்தில் மிகச் சிறந்த ரோஜா பூக்களினால் தயாரிக்கப்படுகிற (ரோஜா) தைலமானது மிகவும் விலையுயர்ந்ததாய்க் காணப்படுகின்றது; நாலு இலட்சம் (4,00,000) முழுமையாக வளர்ச்சியடைந்த ரோஜாக்கள், ஓர் அவுன்ஸ் (ரோஜா) தைலத்தைத் தயாரிக்கத் தேவைப்படுகிறது; இதன் தூய்மைக்கு ஏற்றவாறு மதிப்பு உயரக்கூடியதாய் இருக்கிறது; ஓர் அவுன்ஸ் (ரோஜா) தைலம் 100 டாலர் விலை கொண்டிருக்கும்போது, கர்த்தரை அபிஷேகம் பண்ணுவதற்கு மரியாள் பயன்படுத்தின அளவுள்ள (ரோஜா) தைலத்தின் விலையோ 1200 டாலர் விலையுள்ளதாய் இருக்க வேண்டும். நீரோ என்ற சக்கரவர்த்திதான், முதன்முதலில் இப்படிப்பட்ட விலையுயர்ந்த நறுமணம் வீசும் தைலங்களைப் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. ஆனால், இப்படிப்பட்ட இனிமையான நறுமணதைலம் கொண்டு அபிஷேகம் பண்ணப்படுவதற்கும், பெருமைபடுத்தப்படுவதற்கும் மிகவும் பாத்திரமாய் இருந்தவர், “பூமியின் இராஜாக்களுக்கெல்லாம் பிரபுவாய் காணப்பட்டவரே” ஆவார்; இவரை அபிஷேகம் பண்ணும் கனம் மரியாளுக்குக் கிடைத்தது.

இது ஒரு வீணான காரியம் என்று யூதாசே முதலில் தடை விதித்தான் அவனுக்குப் பிரச்சனை என்னவெனில், அவன் கர்த்தரைக் கொஞ்சமாக நேசித்தும் மற்றும் பணத்தை மிக அதிகமாய் நேசித்தும் இருந்ததேயாகும். மற்றவருக்காக நமது அன்பு செலவிட விரும்பும் தொகையின் அளவானது, ஒருவிதத்தில் நம்முடைய அன்பின் அளவையே எடுத்துக்காட்டுகின்றதாய் இருக்கிறது. மற்றச் சீஷர்களும் யூதாசின் வார்த்தைகளைக் கருத்தில்கொண்டு, அச்சம்பவத்தை யூதாஸ் கண்ணோக்கின விதத்தில் கண்ணோக்கி, மரியாளின் கிரியைகளுக்கு மறுப்புத்தெரிவித்தார்கள் என்று வேறொரு சுவிசேஷகர் குறிப்பிடுகின்றார். ஆயினும், யூதாசின் குணலட்சணத்தைச் சற்று வெளிச்சத்திற்குக் கொண்டுவரும்படியாக அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தினார்; “அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்” என்று யோவான் கூறுகின்றார் (யோவான் 12:6).

“அவளை விட்டு விடுங்கள்” என்ற நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகள், அன்பைக்காட்டிலும் பணத்தை அதிகமாக மதிப்பிட்ட சீஷர்களுக்குக் கடுமையான ஒரு கண்டிப்பாயிருந்தது. ஆம், உண்மையில் தரித்திரர்கள் அநேகர் இருந்தார்கள், இன்னமும் அதிக தரித்திரர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு ஊழியம் செய்வதற்குப் பல வாய்ப்புகள் இருந்தது. ஆயினும், நம்முடைய ஆண்டவரை விசேஷித்தவிதமாய்க் கனப்படுத்துவதற்கும், மரியாளுடைய அன்பையும், பக்தியையும் அருமையாய்ச் சித்தரித்துக்காட்டும் நறுமணதைலங்களை அவர்மேல் ஊற்றுவதற்கும் உரிய வாய்ப்புகள் அதிக நாட்கள் காணப்படுவதில்லை. ஆகவே, இப்படி மிகவும் விலையுள்ள செலவுகளைச் செய்வது நியாயம் என்று நமது கர்த்தர் அங்கு அறிவித்தார். பணத்தோடு அன்பின் உணர்வுகளை சமமாக்கும் கருத்துக்களை தாம் ஆதரிப்பதில்லை என்பதை கர்த்தர் வெளிப்படுத்தினவரானார். ஆயினும், யூதாசைப்போன்று பணமானது தரித்திரருக்குச் செலவழிக்கப்பட வேண்டும் என்று கவலைப்படக்கூடிய நபர்கள், அநேகத் தருணங்களில் தங்களுக்குக் கிடைக்கிற பணத்தில் மிகவும் சிறிய அளவுகளையே தரித்திரர்களுக்குக் கொடுக்கின்றார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.

மாறாக, மரியாளிடத்தில் காணப்பட்ட ஆழமான, உண்மையான, அன்புள்ள இருதயங்கள் விலையுயர்ந்த பலிகளைச் செலுத்துவதிலே பிரியப்படுகின்றது, அதேசமயம் சரீரப்பிரகாரமாகத் தரித்திரராய் இருப்பவர்களுக்கு உதவியாகவும், ஆழ்ந்த இரக்கத்துடனும் காணப்படுகின்றது. மற்றவர்களுக்கு நாம் ஊழியம் புரியும் விஷயத்தில், அவர்களுக்குப் பணத்தேவை மாத்திரமே இருப்பதில்லை என்பதையும், பணம் தேவைப்படாதவர்களுக்கு அன்பும், அனுதாபமும் தேவைப்படும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. நம்முடைய ஆண்டவர் இப்படிப்பட்டவர்களில் ஒருவராய் இருந்தார்; அவருடைய இருதயம் அன்பினால் முழுமையாக நிரப்பப்பட்டிருப்பினும், அப்போஸ்தலர்களில் அடையாளப்படுத்தப்படும் விழுந்துபோன இனத்திலேயே உயர்குணமுள்ளவர்களினுடைய ஏறக்குறைய நலிந்துபோன மனங்களில்கூட அவரால் சிறு தோழமையையே அடைய முடிந்தது. மரியாளிடத்திலோ அவருக்குச் சுகந்த வாசனையாக, புத்துணர்வாக, மற்றும் வலுவூட்டுதலாகக் காணப்படும் சத்து மருந்தாகவும், வாசனையாகவும் இருக்கும் ஆழமான அன்பையும், பக்தியையும் காணமுடிந்தது. மற்ற அனைவரைக்காட்டிலும் மரியாள் ஆண்டவரின் குணநலன்களின் ஆழங்களையும், அகலங்களையும், உயரங்களையும், நீளங்களையும் நன்கு அறிந்திருந்தாள். எனவே, அவள் ஆண்டவரின் பாதத்தருகே அமர்ந்து கற்றுக்கொள்வதில் சந்தோஷமடைந்ததும் அல்லாமல், இப்பொழுது தன்னுடைய பக்தி மற்றும் தன்னுடைய அன்பைக்குறித்து அவருக்குக் கொஞ்சம் வெளிப்படுத்தத்தக்கதாக, மிகுந்த விலைக்கொடுத்து செலவழிப்பதிலும் மகிழ்ச்சி அடைந்தாள்.

பொதுவான வழக்கத்தின்படி, மரியாள் முதலில் தைலத்தை ஆண்டவரின் சிரசில் ஊற்றினாள். (மாற்கு 14:3) அதற்குப் பின் மீதியிருக்கும் தைலத்தை அவர் பாதத்தில் ஊற்றினாள். ஆனால், இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்த அப்போஸ்தலனாகிய யோவான், ஆண்டவரின் தலையில் தைலம் ஊற்றினதை முழுமையாக மறந்துபோய், பாதங்கள் அபிஷேகம் பண்ணப்பட்ட காரியத்திலும், அவள் தனது தலைமயிரினால் அவர் பாதங்களைத் துடைத்த காரியத்திலும், மிகவும் அதிகமாய் வெளிப்பட்ட பக்தியில், மிகவும் ஆழமாக ஆட்கொள்ளப்பட்டுவிட்டார் என்பது தெரிகின்றது. உண்மையில் இது ஓர் அன்பின் வெளிப்பாடு மற்றும் நினைவுகூருவதற்குப் பாத்திரமான ஒரு பக்தியாகும்.

மரியாளைக் குறித்து ஒருவர் அளித்த விமர்சனம்: “அவள், ஸ்திரீகளுக்குரிய பிரதான ‘ஆபரணத்தை’ எடுத்து அதைப் பிரயாணத்தின் மூலம் தூசிகள் படிந்திருந்த தன்னுடைய போதகரின் பாதங்களைத் துடைப்பதற்கு அர்ப்பணித்தாள். போதகருக்குத் தன்னிடத்திலிருந்த சிறப்பான ஒன்றைக் கனம் குறைந்த பணிவிடைக்குக்கூட அர்ப்பணம் பண்ணினாள். அச்செய்கையானது அவளது பக்தி மற்றும் அன்பின் கூடுமான அளவு உச்சக்கட்ட வெளிப்பாடாய் இருந்தது. அவளது சிறந்த பொக்கிஷத்தை மிக பக்தியான முறையில் அர்ப்பணித்தாள். அவள் இருதயத்தில் பெற்றிருந்த ஆழமான உணர்வுகளை வார்த்தையினால் பேசாமல், இவ்விதமான கிரியைகளினால் வெளிப்படுத்தினாள்.”

அந்தத் தைலத்தின் நறுமணம் வீடு முழுவதும் நிரம்பியதைக்குறித்து நாம் ஆச்சரியபட [R2448 : page 78] வேண்டியதில்லை. மேலும், சந்தேகத்திற்கிடமின்றி அந்த வாசனை அந்த வீட்டில் நீண்ட நேரம் தங்கியிருந்திருக்க வேண்டும். ஆனால், அதைக்காட்டிலும் விலையேறப் பெற்ற மரியாளின் இருதயத்தில் நிரம்பியிருந்த அன்பு ஆண்டவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் என்றும் மறக்கப்படுவதில்லை. மேலும், அவளுடைய பக்தியின் நறுமணமானது நூற்றாண்டுகள் கடந்து நம்மிடத்தில் வந்து அவளுடைய பணியைக் கனப்படுத்தவும், அவளுடைய நடத்தையைப் பின்பற்றுவதற்கு விருப்பமும் கொண்டுள்ள அனைத்து உண்மையான இருதயங்களுக்கு ஆசீர்வாதத்தையும் கொண்டு வந்துள்ளது.

நம்முடைய அன்பான மீட்பரோடு நாம் தனிப்பட்ட (நேரடியான) விதத்தில் தொடர்புகொள்வதற்கான சிலாக்கியம் (இக்காலத்தில்) நமக்கு இல்லை. ஆயினும், மரியாளின் கிரியைகளுக்கு ஒத்தக் கிரியைகளைச் செய்வதற்கான, அநேக வாய்ப்புகளை (இக்காலத்தில்) நாமும் பெற்றிருக்கிறோம்; அதாவது நம்முடைய கர்த்தரின் “சகோதர சகோதரிகளை” அன்பு, இரக்கம், மகிழ்ச்சி மற்றும் சமாதானமாகிய நறுமண தைலத்தினால் அபிஷேகம் பண்ணுவதற்கான சிலாக்கியம் நமக்குரியதாய் இருக்கின்றது; இவைகள் அதிகமாய்ச் சுயத்தை வெறுத்துச் செய்யப்படும்போது, இவைகள் நமது மூத்தச் சகோதரனுடைய கணிப்பில் மிகுந்த விலையேறப்பெற்றதாகக் காணப்படும்; அதாவது நமது மூத்தச் சகோதரனுடைய (கர்த்தர் இயேசுவினுடைய சகோதர சகோதரிகளுக்கு எதை நாம் செய்கின்றோமோ அல்லது செய்யாமல் இருக்கின்றோமோ, அவைகளை நாம் அவருக்கே செய்தோம் அல்லது செய்யவில்லை என்பதாகக் கருதப்படும் என்று கூறினவருடைய கணிப்பில் மிகுந்த விலையேறப்பெற்றதாகக் காணப்படும் (மத்தேயு 25:40,45). இன்னுமாக, “கர்த்தருடைய சரீர அங்கங்கள்” என்று அடையாளப்படுத்தப்படும் இந்தச் “சகோதர சகோதரிகளுக்கும்கூட” கர்த்தர் அடையாளமாகவும் இருக்கின்றார். மேலும், இக்கண்ணோட்டத்தை வைத்து நாம் பார்க்கையில், இப்பொழுது தூதர்களுக்கும், துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும், மற்றும் அருளப்பட்டிருக்கிற சகல நாமங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டு, பிதாவுக்கு அடுத்த நிலையில் காணப்படும் சரீரத்தின் தலையாயிருக்கிறவருடைய சிரசின்மேல் நறுமணதைலம் ஊற்றுவது நமக்கான சிலாக்கியமாய் இராவிட்டாலும், இந்தச் சுவிசேஷ யுகத்தில் அவருடைய சபையாக ஜீவித்துக்கொண்டிருக்கும் கடைசி அங்கங்களாகிய கிறிஸ்துவின் பாதங்கள் மீது நறுமணதைலம் ஊற்றுவதற்கான சிலாக்கியம் நமக்குரியதாய் இருக்கிறது.

இந்தச் சுவிசேஷயுகத்தின் நிறைவு வருடங்கள், நம்முடைய ஆண்டவரின் பூமிக்குரிய நிறைவு நாட்களுக்கு எந்தெந்த விதங்களிளெல்லாம் ஒப்பாகக் காணப்படும் என்பதை நாம் அறியோம். அதுபோல, சரீரத்தினுடைய தலையின் அனுபவங்களுக்கு, கிறிஸ்துவின் சரீரத்தினுடைய பாதங்களின் அனுபவங்கள் எந்தளவுக்கு ஒப்பாகக்காணப்படும் என்பதையும் நாம் அறியோம். எனினும் நாம் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்துவதும், ஒருவரையொருவர் உற்சாகமூட்டுவதும், சோதனைகளில் ஒருவரையொருவர் நிலைநிற்க உதவுவதும், “கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை நிறைவேற்றுவதும்” நமக்கு அளிக்கப்பட்ட ஆசீர்வாதமான சிலாக்கியங்கள் என்பதை நாம் அறிவோம் (கொலோசெயர் 1:24). கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திடுவதற்கு, முதலாவதாக மரியாளைப்போல நாமும் (இவ்வாய்ப்புகளைக்குறித்து) அதைக் குறித்து உணர்ந்துகொள்ள வேண்டும்.

“மாம்சத்தின்படி” நம்முடைய குடும்பத்தின் அங்கங்களை நாம் புறக்கணித்துவிட வேண்டும் என்று எந்த ஆலோசனையும் இங்கு நமக்குக் கொடுக்கப்படவில்லை; இவர்களுக்கென்று கவனம் செலுத்தப்படுவது சரியான விஷயம்தான்; மேலும் இவர்களுக்கடுத்த விஷயங்களில் கவனம் செலுத்தப்படவேண்டிய காரியங்களைக்குறித்துக் கர்த்தருடைய ஜனங்கள் அவருடைய அன்பின் ஆவியை, அதாவது இரக்கம், பொறுமை, சாந்தம், நீடிய பொறுமை ஆகியவைகளை முழுமையாகவும், இலவசமாகவும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்ப அதிகமதிகமாய் உணர்ந்துகொள்வார்கள். நம்முடைய விசேஷித்த முயற்சிகளும் பாடுகளும் மாம்ச குடும்பத்தோடு நின்றுவிடாமல், மாறாக விசேஷமாக விசுவாச வீட்டாருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று வசனங்கள் வலியுறுத்தும் காரியத்தையே நாமும் வலியுறுத்துகிறோம் (கலாத்தியர் 6:10). வருங்காலத்தில் பொதுவான மனுக்குலத்திற்கு நன்மை செய்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். ஆனால், கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஊழியம் செய்யக்கூடிய வாய்ப்பு இக்காலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு நன்மை செய்தல் தொடர்பாகவும் – நம்முடைய குடும்பத்தினரிடத்திலும், கிறிஸ்துவின் அங்கத்தினர்களிடத்திலும் நம்முடைய வார்த்தைகளினாலும், நடத்தையினாலும் அன்பை வெளிப்படுத்துவது தொடர்பாகவும் ஒருவர் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகளை மேற்கோளிடுகின்றோம்: “வீட்டிலிருக்கும் அங்கங்கள் ஒருவருக்கொருவர் செய்யும் அன்பின் அடிப்படையிலான கிரியைகளிலிருந்தே சுகந்த வாசனை உண்டாகின்றது. நம்முடைய வீட்டின் இனிமையான நறுமணங்கள் விலைமதிப்புள்ள வீட்டுப்பொருட்களினாலும், தொங்குதிரைகளினாலும், ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட சித்திரங்களினாலும், மென்மையான [R2449 : page 78] தரை விரிப்புகளினாலும் உண்டாகுவதில்லை. பல வீடுகளில் இவைகள் காணப்பட்டாலும், அந்த வீட்டின் சூழ்நிலை ருசியற்ற, மணமற்ற மெழுகு பூக்கள்போல் இருக்கிறது.”

மற்றொருவர் கூறும்போது: “ஒருவேளை என்னுடைய நண்பர்கள் என்னுடைய சரீரத்தின்மேல் ஊற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அனுதாபமும், பாசமுமாகிய நறுமணதைலங்களினால் நிரப்பப்பட்ட வெள்ளைக்கல் பரணிகளை எங்கோ மூலையில் வைத்திருப்பார்களானால், எனக்கு அவைகள் தேவைப்படும்போது, நான் அவைகளினால் புத்துணர்வும், மகிழ்ச்சியும் அடையத்தக்கதாக அவர்கள் அதை என்னுடைய சோர்ந்துபோன மற்றும் உபத்திரவமான நேரங்களில் என்னிடத்தில் கொண்டுவந்து, அவைகளைத் திறக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அன்பு மற்றும் அனுதாபத்தின் இனிமைகள் எதுவும் என் மீது யாரும் வீசிடாத ஒரு ஜீவியத்தை ஜீவிப்பதைப் பார்க்கிலும், பூக்குவியல்கள் இல்லாத எளிமையான சவப்பெட்டியைப் பெற்றுக்கொள்வதிலும், புகழுரை இல்லாத அடக்க பெற்றுக்கொள்வதிலும் நான் திருப்தியாய் இருப்பேன் சவப்பெட்டியின் மீதுள்ள ஆராதனையைப் பூக்களினால் என்னுடைய கடந்தகால சோர்வின் மத்தியிலான வாழ்க்கைக்கு நறுமணம் வீச முடியாது.