R3551 – நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3551 (page 136)

நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்

I PRAY FOR THEM

யோவான் 17:15-26

நமது கர்த்தர் தம்முடைய மரணத்தைக் குறித்த நினைவுகூருதலை நிறுவின இரவில், அவர் தம்மைக் குறித்தும், தமக்கு வரவிருக்கும் சிலுவை மரணத்தைக் குறித்தும் முழுமையாகச் சிந்தித்துக்கொண்டிருக்காமல், விசேஷமாகத் தம்முடைய சீஷர்களைக் குறித்துச் சிந்தனை செய்பவராகவும், அவர்களுக்காக ஜெபம் பண்ணுகிறவராகவும் காணப்பட்டார். “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவான் 16:33). “இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. என்னுடையவைகள்யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள் அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள் நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” (யோவான் 17:1,9-11).

“இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்று சபையார் அனைவருக்கும் அப்போஸ்தலன் கட்டளையிட்ட வார்த்தைகளுக்கு மாதிரியாக, நமது கர்த்தருடைய முழு வாழ்க்கையும் காணப்படுகின்றது. நமது கர்த்தரும் கூட எப்போதும் ஜெப சிந்தனையுடன் கூடிய இருதயத்துடனே காணப்பட்டார். மேலும், ஜீவியத்தின் சகல விஷயத்திற்காகவும், பிதாவுக்குச் செலுத்துகின்ற நன்றியினால் அவருடைய இருதயம் இருந்தது. அவருடைய இருதயம், பிதாவின் பராமரிப்புடன் கூடிய பாதுகாப்பை உணர்ந்திருந்தது. அவரை விசுவாசித்தது, அவருக்குள் நம்பிக்கைக்கொண்டிருந்தது. மேலும் ஒவ்வொரு பிரச்சனையான தருணங்களிலும், பிதாவே பிரச்சனைகள் அனைத்தையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றத்தக்கதாக, இயேசுவின் இருதயம் பிதாவை நோக்கி பார்க்கிறதாகவும் இருந்தது. ஆனால், இடைவிடாமல் ஜெபம் பண்ணும் நமது கர்த்தருடைய இத்தன்மையானது, அவர் வாழ்க்கையின் அன்றாட காரியங்களிலிருந்து கொஞ்சம் திரும்பி, பிதாவோடு இரகசியமாக/தனிமையில் பேசுவதற்கெனச் சில சமயம் சுருக்கமாகவும், சில சமயம் தனிமையில் இராப்பொழுது முழுதும், ஜெபத்தில் கழிப்பதற்கென அவர் விரும்பின அவருடைய மிகுந்த தனிப்பட்ட ஜெபங்களை/தியானங்களைத் தடுத்ததே இல்லை. இயேசு, தமது சீஷர்களை அன்பு செய்தபோதிலும், அவர்கள் இன்னும் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாதபடியினால், அவருடைய கண்ணோட்டத்திலிருந்து அவர்களால் காரியங்களை முழுமையாய்ப் புரிந்துக்கொள்ள முடியாது. பிதா மாத்திரமே முழுச் சூழ்நிலைகளையும் பற்றிப் புரியக்கூடியவராகவும், அறிந்தவராகவும் காணப்பட்டார். ஆகவே இயேசு சகல மனித உதவிகளிடமிருந்தும் புறம்பாக்கி, தனிமைப்படுத்தப்பட்ட போது, இது அவரை ஜெபத்தின் வாயிலாகப் பிதாவிடம் நெருங்கி வரவும், அடிக்கடி வரவும் செய்தது.

இப்படியாகவே, கர்த்தருடைய பின்னடியார்கள் காணப்பட வேண்டும். நாம் எந்தளவிற்கு அவருடைய குணலட்சணத்திற்கு ஒப்பாக வளருகின்றோமோ, அவ்வளவாய் நாமும் அவரைப்போன்று இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறவர்களாகவும், எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துகிறவர்களாகவும், அவரை நம்முடைய சகல நம்பிக்கை, இலட்சியம் மற்றும் சந்தோஷத்திற்கான மையமாக உணர்ந்து, நமது இருதயங்களில் பாடுகிறவர்களாகவும் இருப்போம். மேலும், அவரைப்போன்று ஏற்றவேளையில் சகாயமும், இரக்கமும் பெற்றுக்கொள்ளத்தக்கதாக கிருபையின் சிங்காசனத்தை அணுகுவதற்கான சிலாக்கியங்களை அதிகம் பயன்படுத்துகின்றவர்களாகவும் இருப்போம். மேலும் நம்முடைய பூமிக்குரிய அல்லது ஆவிக்குரிய அருமையானவர்கள், நம்முடைய அனுபவங்களுக்கு அனுதாபம்/இரக்கம்/ஆறுதல் காட்ட இயலாமல் இருக்கின்றார்கள் என்று எவ்வளவாக காண்கின்றோமோ, அவ்வளவாக அப்படியான அனுபவங்களின் நேரங்களில் பூமிக்குரிய அனுதாபம்/இரக்கம்/ஆறுதல் இல்லாமையினிமித்தம் இயேசுவைப்போன்றே நன்மையும் அடைவோம். அதாவது, அம்மாதிரியான (ஆறுதல் அற்ற) அனுபவங்களானது, மாபெரும் ஆசீர்வாதம் மற்றும் சந்தோஷத்தை நமக்கு தரக்கூடியதான பரலோகத் தேற்றரவாளனிடம் (பிதா), நம்மை அடிக்கடி/அதிகமாய்க் கொண்டுசெல்லக் கூடியதாக இருக்கும்.

உலகத்துக்கு அல்லாமல் சபைக்கே

இந்த ஜெபத்திலும் சரி, வேதவாக்கியங்கள் எங்கும் சரி சபைக்கும், உலகத்திற்கும் இடையில் தெளிவான எல்லைக்கோடு போடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து உணராதவர்களுக்கு மாபெரும் இழப்பு நேரிடுகின்றது. ஏனெனில், இது ஆச்சரியமான விதத்தில், “சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து” பார்ப்பதற்கு உதவுகின்றது. “தேவன் உலகத்தை அன்புகூர்ந்தார்;” “இயேசு தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார்.” இயேசு, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாவார் என்றபோதிலும், அவர் உலகத்தான் அல்லாததுபோல, அவருடைய சீஷர்களாகுபவர்களும் உலகத்தாரல்ல. “நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல” (யோவான் 17:16). சபைக்கும், உலகத்திற்கும் நடுவே உள்ள இந்த வேற்றுமையைக்காண தவறுவது, உண்மை கிறிஸ்தவத்திற்கு ஆபத்தான விளைவைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும்.

உலகமானது சில வாக்குத்தத்தங்களையும், பண்டிகைகளையும், சில வழக்க முறைகளையும் தனதாக்கிக்கொண்டுள்ளதால், அது ஏறத்தாழ சபையின் கிருபைகளுக்கு ஒத்ததாகவும் அல்லது போலியாகவும் காணப்படுகின்றது. இதைச் சமுதாயப்பண்பாடு என்றே அழைக்கலாம். இவ்விதமாக உலகத்தின் பெரும் பகுதியானது, இன்று தவறுதலாகச் சபையின் பாகம் என்று அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றது. சபை என்பது, மீண்டுமாக ஜெநிப்பிக்கப்பட வேண்டும் என்றும், உயிர்த்தெழுதலின்போது, அவர்கள் மீண்டும் பிறக்க வேண்டும் என்பவைகளைப் புரிந்துக்கொள்ளாதவர்களுக்கு, இது பெரும் பாதிப்பாகும். அவர்கள் தங்களையே வஞ்சித்துக்கொண்டிருக்கின்றனர். இது உண்மை சபைக்கும், கர்த்தருடைய உண்மையான பின்னடியார்களுக்கும், தங்களுடைய புதிய சுபாவங்களைக்கொண்டு மாம்சத்தின் பெலவீனங்களோடு போராட வேண்டியவர்களுக்கும் கூடப் பாதிப்பாய் அமைகின்றது. எப்படியெனில், இவர்களுடைய மாம்சம் பொதுவான வழக்கமுறைகளைக் கொண்டு தன்னை நியாயப்படுத்த நாடுகின்றது. மேலும், பொதுவான கோட்பாடுகளைத்தாண்டி செயல்படுவது மதவெறி என்றும், மதத் தீவிரவாதம் என்றும் இவர்களுடைய மாம்சம் வலியுறுத்துகின்றது. மரணம் வரையிலுமான சுயத்தை வெறுத்த விஷயத்திலும், வாழ்க்கையின் விஷயத்திலும் இயேசு மற்றும் அவருடைய அப்போஸ்தலர்கள் கொண்டிருந்த கோட்ப்பாடுகளின்படி, கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் வாழும்போது, நாம் உலகம் மற்றும் பெயர்க்கிறிஸ்தவ மண்டலத்தாரின் கண்ணோட்டத்தின்படி மதத்தீவிரவாதிகள் என்றே கணிக்கப்படுவோம் என்பதைக் கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நமது கர்த்தர் உலகத்துக்காக ஜெபம் பண்ணவில்லை, ஏனெனில், உலகத்தைக் கையாளுவதற்கான கர்த்தருடைய வேளை இன்னும் வரவில்லை; அவ்வேளையானது கிறிஸ்துவின் சரீரமாகிய சபை தெரிந்தெடுக்கப்படுவது வரையிலும் வருவதில்லை. அவர் விசேஷமாகத் தம்முடைய அப்போஸ்தலர்களுக்காக ஜெபம் பண்ணினார். ஏனெனில், அவர்கள் உலகத்தில், தம்முடைய விசேஷமான பிரதிநிதிகளாகக் காணப்படப் போகின்றவர்கள். மேலும், அதுவரையில் உண்மையான இருதயங்களோடு அவரை விசுவாசித்துக் கொண்டிருந்த 500 சகோதரருக்காகவும், அவருடைய ஜெபம் உள்ளடங்கி காணப்பட்டது. இவர்கள் மாத்திரமல்லாமல், வசனம்-20) யுகம் முடியும் வரையிலும் காணப்படும் இதுபோன்ற வகுப்பார் யாவருக்குமாக, அவருடைய விண்ணப்பம் காணப்பட்டது. அதாவது அவருடைய சீஷர்களாகவும், பின்னடியார்களாகவும் ஆகத்தக்கதாக, உலகத்திடமிருந்து பிரித்து, சத்தியத்தின் இடுக்கமான வழியில் செல்லத்தக்கதாக, யார் யாருடைய விசுவாசமானது, மிகுந்த உண்மையுடனும், முழுமையுடனும் இருந்து, அவர் மேல் நம்பிக்கையுடனும் காணப்படுகின்றதோ, அத்தகையவர்கள் யாவருக்குமாக அவருடைய விண்ணப்பம் ஏறெடுக்கப்பட்டது.

எவைகளுக்காகக் கர்த்தர் ஜெபம் பண்ணவில்லை

இன்றைய உலகத்திலுள்ள பெயர்க்கிறிஸ்தவச் சபையின் கண்ணோட்டத்தை நாம் எடுத்துக்கொண்டு, நம்மை ஒரு பெயர்க்கிறிஸ்தவ விசுவாசியின் ஸ்தானத்திலும், பெயர்க் [R3551 : page 137] கிறிஸ்தவன் அறிக்கைப்பண்ணுகிற விசுவாசத்தின் கண்ணோட்டத்திலும் நம்மை நாம் பொருத்திப்பார்க்க முற்படுவோமாகில், நம் கர்த்தர் தற்கால சூழ்நிலைகளுக்காகவே ஜெபித்தார் என்று நாம் எண்ணிக்கொள்வோமானால், அவருடைய ஜெபம் பின்வரும் வார்த்தைகளை உள்ளடக்கிக் காணப்படலாம்:

“என்னுடைய பின்னடியார்கள் எண்ணிக்கையில் மிகப் பெரிய அளவாக வேண்டும் என்றும், அவர்கள் மிகவும் செல்வ செழிப்புடனும், மிகவும் கல்வியறிவு உடையவர்களாகவும் இருந்து, இதன் மூலம் அவர்கள் உலகத்தார் மத்தியில் சிறப்பு மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்றும், நான் ஜெபம் பண்ணுகின்றேன். இன்னுமாக, அவர்கள் மாபெரும் மதப் பிரிவுகளாகப் பிரிய வேண்டும் என்றும், அவர்களில் சிலர் சத்தியத்தின் ஒரு பாகத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டும், வேறு சிலர் சத்தியத்தின் பாகங்களோடு தப்பறைகளையும், முரண்பாடுகளோடு கலந்துவிடவும் வேண்டும் என்று நான் ஜெபம் பண்ணுகின்றேன். வெளித்தோற்றமான பயபக்தியும், சுயத்தில் திருப்தியும், பெருமையும்/கௌரவமும் கொண்டு, சமயக் குருமார் திருச்சபை (Episcopalians) என்று அறியப்படும் வகுப்பாருக்காக நான் ஜெபம் பண்ணுகின்றேன். வெஸ்ட் மினிஸ்டரின் அறிக்கையின்படியான விசுவாசத்தைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்து, பிற்காலங்களில் தாங்கள் கைக்கொண்டிருந்த விசுவாசத்திற்கு நேர் எதிர்மாறான, சுருக்கமான பிற்சேர்க்கையை 1902-ஆம் வருடத்தில் வெளியிடப்போகும் கௌரவமான வகுப்பாருக்காகவும் நான் ஜெபம் பண்ணுகின்றேன். இன்னுமாக, வெஸ்லியின் தலைமையின் கீழ் நடத்தப்பட்டு, தங்கள் வழிபாடுகளில் அநேக உலகரீதியான வழக்கங்களையும், கவர்ச்சிகளையும் சேர்த்துக்கொண்டு, மிகவும் செழிப்புள்ளவர்களாகி, வருடம் முழுவதும் தங்கள் சபை கட்டிடத்தைக் குறித்துப் பெருமையாகப் பேசப்போகும் மற்றொரு மாபெரும் சபை பிரிவுக்காகவும் நான் ஜெபம்பண்ணுகிறேன். இன்னுமாக, என்னுடைய நாமத்தைத் தரித்துக்கொண்டு, லூதரை பின்பற்றுகிற மற்றுமொரு மாபெரும் பிரிவு அல்லது என் பின்னடியார்களின் வகுப்பாருக்காகவும் நான் ஜெபம் பண்ணுகின்றேன். என்னுடைய இராஜ்யத்தைத் தன்னுடையது என்று கூறிக்கொண்டு, பூமியின் இராஜாக்கள்மேல் வல்லமையிலும், மாபெரும் மதிப்பிலும், கனத்திலும் ஆளுகை செய்வோம் என்று உரிமை பாராட்டிக்கொண்டும், தங்களுடைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளே என்னுடைய பிரதிநிதி என்றும், உலகத்தின் ஆவிக்குரிய சக்கரவர்த்தி என்றும் உரிமை பாராட்டப்போகும் மாபெரும் ரோம கத்தோலிக்க திருச்சபைக்காக நான் ஜெபம் பண்ணுகின்றேன். இன்னுமாக, இச்சபை பிரிவானது, தன்னுடைய சூழ்ச்சியான திட்டங்கள் வாயிலாக, என்னுடைய வார்த்தைகள் பொது ஜனங்களைச் சென்றடையாத வண்ணம் பார்த்துக்கொள்ளட்டும் என்றும், இச்சபை பிரிவானது எண்ணற்ற அதன் பூசை பலிகளை, பாவத்திற்கான என்னுடைய மாபெரும் பலிக்கு அடையாளமாக வைக்கட்டும் என்றும், இப்பிரிவினர் செழித்தோங்கவேண்டும் என்றும், இவர்கள், “உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கட்டும்” என்றும் நான் ஜெபம் பண்ணுகின்றேன்.

இன்னுமாக, இந்த அனைத்து சிறு சிறு பிரிவினரும், செழித்தோங்க வேண்டும் என்றும், அந்த ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடத்தில் மாத்திரமே சத்தியம் இருக்கின்றது என எண்ணிக்கொண்டு, தங்கள் தங்கள் விசுவாசப் பிரமாணங்களில் திருப்தி அடைந்தவர்களாகக் காணப்பட்டு, வழியையும், சத்தியத்தையும், ஜீவனையும் அறிந்துக்கொள்வதற்கென வேதவாக்கியங்களை ஆராய்வதிலிருந்து தடைபண்ணப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், நான் ஜெபம் பண்ணுகின்றேன். இப்பிரிவினர்கள் அனைவரும் இவ்விதமாகச் சிதறடிக்கப்பட்டவர்களாகவும், பிரிந்து பிரிந்து காணப்படுகிறவர்களாகவும் இருந்து, தங்களுக்கு இடையில் ஒருவருக்கொருவர் வேலிகள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் நான் ஜெபம் பண்ணுகின்றேன். இன்னுமாக, இப்பிரிவினர்கள் தங்களை ஒவ்வொரு பிரிவினரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்கு அவர்கள் மதபிரிவின் எல்லை கோடுகளைக்கொண்டிருப்பதோடு, அரசியல் ரீதியான எல்லைக் கோடுகளையும், தேசம் சார்ந்த அடிப்படையில் பிரிக்கும் எல்லைக்கோடுகளையும் கொண்டவர்களாக இருந்து, இதன் காரணமான ஒரு பிரிவை அல்லது தேசத்தைச் சார்ந்த ஆயிரமாயிரமானவர்கள், மற்றப் பிரிவினர் (அ) தேசத்தைச் சார்ந்தவர்களை அச்சுறுத்தி, யுத்தம் புரிந்து, கொன்றுபோடவும் நான் அவர்களுக்காக ஜெபம் பண்ணுகின்றேன். இன்னுமாக இவர்கள் ஒருவரோடு ஒருவர் யுத்தம் பண்ணுவதற்கும் (அ) ஒருவரையொருவர் பயமுறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் என ஒவ்வொரு வருடமும் படைகளுக்காகவும், ஆயுதங்களுக்காகவும், போர்க்கப்பல்களுக்காகவும், பல மில்லியன் டாலர்களைச் [R3552 : page 137] செலவழிக்கும் அளவிற்கு இவர்களுக்கு இடையே காணப்படும் இந்தத் தேசம் அடிப்படையிலான வித்தியாசங்கள் மிஞ்சி போவதற்காகவும் நான் ஜெபம் பண்ணுகின்றேன். இன்னுமாக, கிறிஸ்தவ மண்டலத்தார் கையாளும் என்னுடைய போதனைகளினால் உண்டாகும் மகிமையான காரியங்களைக் கண்டு அந்நிய தெய்வங்களை வணங்கும் உலகத்தார் வசீகரம் அடைய வேண்டும் என நான் ஜெபம் பண்ணுகின்றேன். மேலும், அந்நிய தெய்வங்களை வணங்கும் உலகத்தார் வசீகரிக்கப்பட்டு, நாமும் தனிக் கட்சிகளாகவும், மதப்பிரிவினரின் உறுப்பினர் ஆகலாம் வாருங்கள் என்றும், நாமும் ஆயுதம் தரித்து, யுத்தம் பண்ணலாம் என்றும், தூய்மை அற்று நடப்பதற்கும், குடிவெறிக் கொள்வதற்கும், நெறிதவறிச் சிற்றின்பங்களில் ஈடுபடுவதற்குமான பிரத்தியேக உரிமை கிறிஸ்தவத் தேசங்களுக்கு மாத்திரம் முழுமையாக இல்லை. ஆகையால், இச்செயல்களை நாமும் செய்யத்தக்கதாகக் கிறிஸ்தவத் தேசத்தாரின் வழிமுறைகளை நாமும் கற்றுக்கொள்வோம் வாருங்கள் என்றும் ஒரே குரல் எழுப்பும்படிக்கு நான் அவர்களுக்காக ஜெபம் பண்ணுகின்றேன்.’ இவ்வாறாகவே அவரது ஜெபம் அமைந்திருக்கும்.

எவைகளுக்காக நமது கர்த்தர் ஜெபம் பண்ணினார்

நமது கர்த்தருடைய விண்ணப்பங்கள் மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டது. அவருடைய சீஷர்கள் உலகத்தில் சிறுபான்மையாகவே இருப்பார்கள் என்றும், அவர்கள் உலகத்தால் வெறுக்கப்படுவார்கள் என்றும், உலகத்தால் எதிர்க்கப்படுவார்கள் என்றும், உலகத்தால் தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், அவர்களில் அநேகர் பெரியவர்களாக இருக்கமாட்டார்கள் என்றும், ஞானிகளாக அநேகர் இருக்கமாட்டார்கள் என்றும், ஐசுவரியவான்களாக அநேகர் இருக்கமாட்டார்கள் என்றும், பிரபுக்களாக அநேகர் இருக்கமாட்டார்கள் என்றும், பிரதானமாக ஏழைகளாகவும், “சிறுமந்தையினராகவுமே” இருப்பார்கள் என்றும்தான் அவருடைய ஜெபத்தின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றது. இயேசு தனிப்பட்ட விதத்தில் தெரிந்தெடுத்துக்கொண்ட சீஷர்களிடம் காணப்பட்ட பண்புகளானது, பிற்காலங்களிலும் அவருடைய உண்மையான பின்னடியார்களென, அவரிடம் கிட்டிச்சேரும் அனைவரிடமும் காணப்பட வேண்டும்.

கிறிஸ்தவத் தேசங்கள் மற்றும் கிறிஸ்தவப் பிரிவுகளின் மக்கள் மகாத் திரளாய்க் காணப்பட்டாலும், “கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.” மேலும், இந்த ஜெபத்தை நாம் பார்க்கையில், இந்த யுகத்தில் அவர் தம்முடைய ஜனங்களை உலகத்திடமிருந்து பிரிக்காமல், அவர்களை உலகத்தில்தான் விட்டுச்சென்றார். அவர்கள் இருதயம் உலகத்திடமிருந்து பிரிந்திருப்பது மாத்திரமே முக்கியமானதாகும். “நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன்” (யோவான் 17:15). தீமையை நன்மை என்று நாம் சொல்லக்கூடாது, உலகம் தூய்மையாகிவிட்டது என்று நாம் சொல்லக்கூடாது, அது இன்னமும் தீமை நிறைந்ததாகவே உள்ளது. கர்த்தரைச் சிலுவையில் அறைந்து, அவருடைய பின்னடியார்களைத் துன்பப்படுத்திய யூத மார்க்கம் அப்போது எந்த நிலையில் காணப்பட்டதோ, அதே நிலையில்தான் இன்று கிறிஸ்தவ மண்டலமும் நடைமுறையில் காணப்படுகின்றது.

அப்போதிருந்த யூதர்களின் பிரதானமான மதப் பிரிவினர், தங்களைத் தேவனுடைய பரிசுத்த ஜனங்கள் (இதுவே பரிசேயர் என்ற வார்த்தைக்கான அர்த்தமாகும்) என்று தாங்களே அழைத்துக்கொண்டனர். மேலும், முழுத்தேசமும் வெளிப்புறமான ஒழுக்கம் என்னும் தளத்தில் நின்றுக்கொண்டிருந்ததை, கர்த்தர் தமது பார்வையில் நாடகமாகவே பார்த்தார். அந்தத் தலைவர்களைக் குறித்து, அவர் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்றும், உள்ளே முழுத் தீட்டு காணப்படுகின்றது என்றும் கூறினார். மேலும், அவர்கள் பாத்திரத்தின் வெளிபாகத்தைச் சுத்தமாக்கியிருக்க, உட்புறத்தை அழுக்காகவே விட்டுவிட்டார்கள் என்றும், அவர்கள் தங்கள் காப்பு நாடாக்களை அகலமாக்கிக் கொண்டு, வீதிகளில் ஜெபம் செய்கிறார்கள் (மத்தேயு 23:5), ஆனால் அவர்களின் இருதயமோ பரிசுத்தம் (அ) அன்புக்கு மிகத் தொலைவில் காணப்படுகின்றது என்றும், கர்த்தர் கூறினார். ஒருவேளை நியாயப்பிரமாணத்தின் மேலோட்டமான கருத்து ஏழை விதவையின் வீட்டை எடுத்துக்கொள்வதற்கு அனுமதிக்குமாயின், மேலும், அப்படிச் செய்யும் போதும், அச்செயல் அதிக அளவில் பழித் தூற்றுதல் கொண்டுவருவதில்லை என்றால், தவறான விதத்தில் விதவையின் வீட்டை எடுக்க விரும்பும் அளவிற்கு, அவர்களுடைய இருதயம் பரிசுத்தத்திற்கும் (அ) அன்பிற்கும் மிகத் தொலைவில் காணப்படுகின்றது. (மத்தேயு 23:14,23-28) இன்றைய காலங்களிலும் இப்படியாகவே காணப்படுகின்றது. வெளிப்புறத்தில் பளபளப்பு (அ) பாசாங்கே காணப்படுகின்றது. அநேக சந்தர்ப்பங்களில் மாய்மாலமும், வெளிவேஷமான வழிபாடுந்தான் காணப்படுகின்றது; நாகரிகமான உடைகள் மற்றும் சந்தோஷம் ஆகியவற்றில் மூழ்கிப்போன நிலையிலும், கடுமையான பாவங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் விக்கிரக ஆராதனையில் மூழ்கிப்போன நிலையிலும், இருதயம் தேவனிடத்திலிருந்து மிகத் தொலைவில் இருக்க, உதடுகள் மாத்திரமே அசைகின்றதாய் இருக்கின்றது.

இத்தகைய சூழ்நிலைகளிலிருந்து தம்முடைய உண்மையான பின்னடியார்கள் பரலோக வல்லமையினால் விலக்கிக்காக்கப்பட வேண்டும் என்றே நமது கர்த்தர் ஜெபம் பண்ணினார். அதாவது மாய்மாலங்கள் மீது ஈர்க்கப்படுவதிலிருந்தே விலக்கி, காக்கப்படுவார்களே ஒழிய, மாய்மாலக்காரர்களிடமிருந்து பின்னடியார்கள் பிரிக்கப்படுவதில்லை. இது சுவிசேஷ யுகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றது என நாம் விசுவாசிக்கின்றோம். கர்த்தருடைய ஜெபம் நிறைவேறியுள்ளது என்றும், சிதறி ஆங்காங்கே காணப்படும் அவருடைய சிறுமந்தையானது, அதாவது மெய்யான திராட்சச் செடியின் கிளைகளானது, இருதயத்தில் ஆவிக்குரியவர்களாகத் தழைத்து ஓங்கியுள்ளனர். மேலும், உலகத்தின் ஒரு பாகமாக மாத்திரமே இருக்கும் பெயர்க்கிறிஸ்தவ மண்டலத்தாரிடமிருந்து, முற்றிலும் பிரிந்த ஜீவியத்தைக் கைக்கொண்டவர்களாக இருக்கின்றனர் என்றும் நாம் நம்புகின்றோம். இன்றும் உலகத்திற்குள் இருந்தும், உலகத்தார் அல்லாததுபோன்று இருப்பவர்கள் இந்த அறுவடையின் காலக்கட்டத்தில், “என் ஜனங்களே நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்” என்று பாபிலோனிடமிருந்து அழைக்கப்பட்டு வருகின்றார்கள் (வெளிப்படுத்தல் 18:4). பாபிலோனிலிருந்து விடுதலைப் பெற்றுத் திரும்புவதற்கென இஸ்ரயேலர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டபோது, 50,000 பேர் மாத்திரமே புறப்பட்டு வந்தவர்களின் இலக்கமாயிருக்க, இதைப்போன்றே எல்லாவற்றையும் விட்டுவிட்டு, சத்தியத்தையும், நீதியையும் பின்பற்ற சந்தோஷத்துடனும், தாமதம் காட்டாமலும் வருபவர்களின் எண்ணிக்கை சொற்பமானதாய் இருக்கத்தக்கதாக கர்த்தர் தப்பறைகளின் பிரபலத்தையும், சத்தியத்தின் பிரபலமின்மையையும் இதற்கேற்றாற்போல் ஒழுங்குச் செய்திருக்கின்றார்.

உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்

இந்த ஜெபமானது, இரண்டு காரியங்களைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. முதலாவதாக, ஏன் அவர்கள் காக்கப்படுவார்கள் என்றும், இரண்டாவதாக, கர்த்தருடைய பின்னடியார்கள் எப்படிக் காக்கப்படுவார்கள் என்பதுமேயாகும். (1) அவர்கள் உலகத்தார் அல்லாததினால், அவர்கள் கர்த்தருடைய பட்சமாய் நிற்போம் என்று வந்தவர்களானபடியினால், அவர்கள் பாவம் மற்றும் உலகத்திற்கு மரித்துப்போனவர்களாகக் கருதப்பட்டு, பரிசுத்த ஆவியினால் புதியதான ஜீவனுக்குள் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளபடியினால் அவர்கள் காக்கப்படுகின்றார்கள். (2) அவர்கள் உலகத்தில் இருக்கையில் காக்கப்படுவார்கள். ஆனாலும், உலகத்தினால் காக்கப்படாமல், அவர்களுடைய இருதயத்தில் காணப்படும் சத்தியத்தின் வல்லமையினால் காக்கப்படுவார்கள். சத்தியமானது, அவர்களைப் பரிசுத்தமாக்கும் அல்லது பிரித்து வைக்கும். ஏதாகிலும் ஒரு சத்தியம் அல்ல, அனைத்துப் பெயர்க்கிறிஸ்தவ சபைகளின் சத்தியங்களும் அல்ல, மாறாக, தெய்வீகக் குணலட்சணம், தெய்வீகத் திட்டம் மற்றும் இவைகளுடனாக சபையின் தொடர்பைக் குறித்ததான தெய்வீக வெளிப்படுத்தல்கள் உடைய சத்தியமே அவர்களைகாக்கின்றது. இவைகள் அனைத்தையும்தான் கர்த்தர் இரத்தின சுருக்கமாக, “உமது/என் வசனமே சத்தியம்” என்று [R3552 : page 138] கூறுகின்றார். அதாவது, வசனமாகிய சத்தியமே என்னுடைய சீஷர்களை உலகத்தினின்று பிரிக்கக்கூடியதாக இருக்கின்றது என்றார்.

“உபதேசங்கள்” உலகத்தின் அனைத்து மூலைகளிலும், பெயர்க்கிறிஸ்தவச் சபைகளிலும் பிரபலமற்ற நிலையில் போய்விட்டது என்று நாம் அறிவோம். இதில் எவ்வித ஆச்சரியமுமில்லை! பெயர்க்கிறிஸ்தவ மண்டலத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் இயக்கங்களின் உபதேசங்களும், விசுவாசப்பிரமாணங்களும் தப்பறையான விஷயங்களோடு மிகவும் கலக்கப்பட்ட நிலையில் காணப்படுவதினால், இவைகள் ஆவிக்குரிய மனதினுடைய ஆவிக்குரிய புலன்களுக்கு மிகவும் வெறுப்பாயிருப்பதினால், பெயர்க்கிறிஸ்தவ மண்டலத்தாரின் மேஜையிலிருந்து, இப்படிப்பட்ட வைகளைப் பங்கெடுக்க சபை ஜனங்கள் எவ்வளவேனும் விரும்புவதில்லை. இதைக் குறித்துதான், தீர்க்கத்தரிசி, “போஜன பீடங்களெல்லாம் வாந்தியினாலும், அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது” என்று கூறுகின்றார். இருண்ட யுகத்தின் போது, உருவாக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசப்பிரமாணமும் இன்றும் அருவருக்கத்தக்கதாகவே இருக்கின்றது. ஆனால், “உமது வசனமே சத்தியம்” என்று சொல்லப்படும் சத்தியமானது ஒருபோதும் ஊசிப்போவதில்லை, ஒருபோதும் சலிப்படைவதில்லை (அ) அருவருக்கப்படும் நிலைக்குப்போவதில்லை. அது இன்னமும் பரலோகத்திலிருந்து வந்த அப்பமாகவே இருக்கின்றது. அது இன்னமும் ஜீவ அப்பமாகவே இருக்கின்றது. மேலும், சத்தியத்தில் காணப்படும் அனைவராலும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளாக மாத்திரம் இருந்து, அவருடைய வார்த்தை எனும் போஜனத்தைப் புசித்து, அதனை உட்கிரகித்துக் கொண்டவர்கள் அனைவராலும், பால்குடிப்பதை மறந்து, பலமுள்ள ஆகாரம் புசிக்க ஆயத்தமாக இருக்கும் அனைவராலும், “தெய்வீகத் திட்டமானது எனது ஏக்கங்களைத் திருப்தி செய்தவண்ணம், வேறு எதுவும் என்னை திருப்திச் செய்ய முடியாது” என்று பாடுகிற கவிஞனோடு சேர்ந்து பாட முடியும்.

சத்தியமானது இருதயத்தின் ஏக்கங்களை நிறைவு செய்வதினால், சத்தியம் இருதயத்தைச் சுத்திகரிக்கும் வல்லமை உடையதாக இருக்கின்றது. ஒவ்வொரு இருதயத்திலும் காணப்படும் தாலந்துகள்/திறமைகள் மற்றும் விண்ணப்பங்கள் செயல்பட வேண்டுமென விரும்புகின்றது. இருதயத்தின் இந்தப் பல்வேறு தாலந்துகள் மற்றும் பண்புகளின் பசிதாகத்தைச் சந்திப்பதற்கு/திருப்திப்படுத்துவதற்கு ஏதாகிலும் கொடுக்கப்பட வேண்டும். இருதயத்தின் ஏக்கங்களை (அ) ஆர்வங்களைத் திருப்திப்படுத்துவதற்கென்று, தெய்வீக வார்த்தைகளின் மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களானது, இருதயத்திற்குள் கொண்டுபோகப்படவில்லை எனில், இருதயம் மற்ற விஷயங்களைக்கொண்டு திருப்தியாகிவிடும். உலகமும், மாமிசமும், பிசாசும் இருதயத்தைச் சூழ்ந்து, பல்வேறு கவர்ச்சிகர மானவைகளை அதற்கு அளித்துக்கொண்டிருப்பதினால், ஒருவேளை இருதயமானது தெய்வீக வாக்குத்தத்தங்களினால் நிரப்பப்படாமலோ, நிரப்பப்பட்ட நிலையில் காக்கப்படாமலோ விடப்படும்பட்சத்தில், கவர்ச்சியான இவைகளில் சிலவற்றை இருதயம் ஏற்றுக்கொண்டு நிரம்பிவிடும். ஆகவேதான், நமது கர்த்தருடைய உவமைகளில் இப்படியாக வருகின்றது, “அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிககேடுள்ளதாயிருக்கும் என்றார்’” (மத்தேயு 12:43-45). கிறிஸ்துவின் மீதான விசுவாசம் முலம் நீதிமானாக்கப்படுவதினால், நம்முடைய இருதயங்கள் பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டால் மாத்திரம்போதாது, நம்முடைய இருதயத்தில் கர்த்தர் நிரம்பி இருக்கவும் வேண்டும்; மேலும், தம்மைச் சத்தியம் என அழைக்கும் கர்த்தர், உணவாக, போஷாக்காக பல்வேறு சத்தியங்களை நம்முடைய இருதயத்திற்குக் கொடுக்கின்றார்; நமது இருதயத்தை நிரப்புகின்றார்; நம்முடைய ஆர்வங்களைத் திருப்திச் செய்கின்றார். மேலும் இப்படியாக நிரப்புவதின் மூலம், நீதியின் பால் பசிதாகம் உள்ளவர்களை அவர் பரிசுத்தப்படுத்துகின்றார். மேலும் இப்படியாக, அவர்களை முற்றிலுமாகப்பிரித்து, உலகத்திடமிருந்தும், அதன் ஆவி, அதன் நம்பிக்கைகள், அதன் நோக்கங்கள், அதன் இலட்சியங்களிடமிருந்தும் அவர்களைப் பிரித்துக்காக்கின்றார்.

தேவனுடைய ஏற்ற வேளையில் செயல்படும் தேவனுடைய வல்லமை

நீதியின் பால் நமக்கு அன்புள்ளதா? நீதியை உலகத்தில் நாம் எதிர்ப்பார்க்கவும் முடியாது. தற்கால சூழ்நிலைகளின் கீழ் நீதியை பூமியில் ஸ்தாபிக்கலாம் என்று நாம் எதிர்ப்பார்க்கவும் முடியாது. தேவனால் வாக்களிக்கப்பட்ட இராஜ்யம் அல்லாமல், வேறு எதுவும் நீதியை ஸ்தாபிக்க முடியாது என்று ஒப்புக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே நோவாவின் புறா போன்று நம்முடைய இருதயங்கள் நீதியின் மையமாகவும், ஊற்றாகவும் இருக்கும் கர்த்தரிடத்திலேயே திரும்புகின்றது. சமாதானத்தையும், சந்தோஷத்தையும் நாம் விரும்புகின்றோமா? முழு உலகமும் சந்தோஷத்தை நாடினாலும், அதைக் கண்டடையவில்லை என்று உலகத்திலிருந்தபோது, நம்முடைய கடந்தகால அனுபவங்கள் நமக்குக் காட்டியுள்ளது. கர்த்தரைக் கண்டடைந்தவர்களாகிய நாமோ சந்தோஷத்தின் இரகசியத்தை அதாவது, ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாகக் கழிக்கும் கிறிஸ்தவனுடைய இரகசியத்தைக் கண்டடைந்துள்ளோம். நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக நாம் வல்லமையையும், செல்வாக்கையும் விரும்புகின்றோமா? ஆனால், இவைகளைத் தற்கால சூழ்நிலையின் கீழ்ப் பெற்றுக்கொள்வது, கூடாத காரியம் என்று சத்திய வசனம் நமக்குக் கூறுகின்றது. ஆனால் நாம் ஒருவேளை உண்மையுள்ளவர்களாகக் காணப்பட்டு, முதலாம் உயிர்த்தெழுதலில் வல்லமை, மகிமை, கனம் மற்றும் அழியாமை பெற்றுக்கொள்ளும் போது, பூமியின் சகல குடிகளை ஆசீர்வதிப்பதாகிய இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களில் நம்முடைய மாபெரும் எதிர்ப்பார்ப்புகளும், சிறந்த இலட்சியங்களும் நிறைவேற்றப்படுவதைக் காணலாம். ஐசுவரியங்கள் நம்மைக் கவருகின்றதா? வேதவாக்கியங்கள் உண்மையான ஐசுவரியங்களை உடையதாக இருக்கின்றது. இன்னும் நாம் கர்த்தரைப் பின்பற்றுகையில், இப்பொழுது விசுவாசத்தினால் அனைத்தும் நமக்குச் சொந்தமாக இருக்கின்றது; பின்னர் பரலோக இராஜ்யத்தில், நம்முடைய போதகருடன் நாம் உடன் ஊழியர்களாக ஆகும்போது, அனைத்தும் உண்மையில் நமக்கே சொந்தமாகிவிடுகின்றது என்று வேதவாக்கியங்கள் நமக்கு உறுதியளிக்கின்றது.

“நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்” (யோவான் 17:18). பிதா எப்படிக் குமாரனை அனுப்பினார் என்றும், குமாரன் மாம்சமாகி, நம் மத்தியில் மனுஷனாக வாசம் பண்ணுபவராக மாற்றப்படுவதற்கு முன்பு, அவருக்கு பிதாவோடு இருந்த மகிமையைத் துறந்து வந்தார் என்றுமான காரியங்களுக்கு, நமக்குப் போதுமான அளவு நிரூபணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகத்தாராகப் பிறந்துள்ள நாம், எந்த விதத்தில் உலகத்திற்கு அனுப்பப்படுகின்றோம்? உண்மைதான் ஒரு காலத்தில் அப்போஸ்தலர்கள் விசேஷமாக அனுப்பப்பட்டிருந்தனர். ஆனால், கர்த்தருடைய சகல பின்னடியார்களும் ஒரு விதத்தில் அனுப்பப்பட்டிருக்கின்றார்கள். இருதயத்திலும், சத்தியத்திலும் நாம் அவருடையவர்களாக இருக்கத்தக்கதாக நாம் உலகத்தினின்று, பிரிக்கப்படாதது வரையிலும், நாம் அனுப்பப்படுவதில்லை. பின்னரே, அவருடைய நாமத்தில், அவருடைய காரணத்திற்கென, ஒரு வேலை செய்யும்படிக்கு அவர் நமக்கு ஒரு கட்டளையை (அ) செய்தியைக் கொடுத்துள்ளார். அவருடைய காரணம் என்று சொல்லும்போது, அது நீதியின் பொருட்டான காரணமாகவே இருக்கின்றது. கர்த்தருடைய உண்மையான பின்னடியார்கள், தேவனுக்கான ஸ்தானாபதிகளாகவும், இயேசுவின் பிரதிநிதிகளாகவும் இருக்கின்றார்கள். அவர் உலகத்தில் இருந்ததுபோன்று, நாமும் உலகத்தில் இருக்கின்றோம். ஆகவே நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடக்கும்படிக்கும், நமக்குள்ளாகவே பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், பாவத்திற்கு எதிராகவும், நீதி, சத்தியம் மற்றும் வெளிச்சம் ஆகியவைகளுக்கு ஆதரவாகச் சகலவிதமான நேர்த்தியான வழிகளிலும் நம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்துவதற்கும் அவர் நம்மை அழைக்கின்றார்.

சபையோடு மகிமை பங்கிடப்படுதல்

“அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி, அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்” (யோவான் 17:19, திருவிவிலியம்). இத்தருணத்தில் பிதாவின் திட்டம் குறித்துத் தெளிவான புரிந்துக்கொள்ளுதலுக்குள், நமது கர்த்தர் வந்துவிட்டார் என்பது இவ்வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. அதாவது, இராஜ்யத்தில் தம்மோடு உடன்சுதந்தரர்கள் ஆகுவதற்கும், தம்முடைய மகிமையில் பங்கடைவதற்குமான நோக்கத்திற்கெனத் தம்முடைய சீஷர்கள் வளர்த்தப்பட வேண்டும் என்பதைக் குறித்ததான பிதாவின் திட்டத்தை முழுமையாகப் புரிந்துக்கொண்டிருந்தார். இராஜ்யத்தின் இத்தகைய மாபெரும் மகிமையைப் பங்குப்போடுவது, இயேசுவின் மாபெரும் மகிமையைக் குறைத்துப் போடுவதுபோன்று, நாம் பார்க்கும் மாத்திரத்தில் நமக்குத் தோன்றலாம். அதாவது, இது மோசேயுடன் இஸ்ரயேல் ஜனங்களுக்கு நியாயம் விசாரிப்பதற்கென, 70 மூப்பர்கள் நியமித்த காரியமானது, மோசேயின் அதிகாரத்தை (அ) கௌரவத்தைக் குறைத்துப் போடுவதுபோன்று அதைப்பார்க்கும் மாத்திரத்தில் தோன்றியதுபோல் காணப்படுகின்றது.

ஆனால், நிழலில் மோசே மிகவும் சாந்தத்துடனும், மகிழ்ச்சியுடனும், 70 மூப்பர்களையும் தன்னுடன் பணிபுரிய வரவேற்கும் விதத்தில், “ஆண்டவரின் மக்கள் அனைவருமே [R3553 : page 138] இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அளிப்பது எத்துணை சிறப்பு!” என்று கூறுகின்றார் (எண்ணாகமம் 11:29, திருவிவிலிய மொழியாக்கம்). ஆகவே கர்த்தர் இயேசுவும், தம்முடன் கூட்டிச்சேர்க்கப்படும் சபையானது, தம்முடைய இராஜ்யத்தில் உடன்சுதந்தரர்களாக இருப்பது, தம்முடைய மகிமையைக் குறைத்துப் போடுகின்றதாய் இருக்குமே என்று எண்ணுவதற்குப் பதிலாக, அவர்களை இருதயப்பூர்வமாகத் தெய்வீகத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். இன்னுமாக அவர் தாம் இடம் விட்டுக்கொடுப்பதாகக் கூறுகின்றார். அதாவது, பிதாவின் பரிசாகிய மகிமை மற்றும் கனம் ஆகிய அம்சங்களில் தம்முடைய பின்னடியார்கள் பங்கடையும் படிக்கும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட மகா அருமையான வாக்குத்தத்தங்கள் மற்றும் சத்தியத்தின் வாயிலாக தங்களை அர்ப்பணித்து, இத்தகைய கனத்திற்குள் வரவும், தம்மோடு கூட உடன்சுதந்தரர்களாக இருக்கும்படிக்கும் வந்த அவர்கள் பங்கடையத்தக்கதாக, குமாரன் விலகி இடம் விட்டுக்கொடுத்தார் என்று கூறுகின்றார். இதே கருத்துதான், “நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்… என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்” என்ற வசனங்களில் வெளிப்படுகின்றது. (யோவான் 17:22,23)

தேவனுடைய அன்பானது நம்முடைய இருதயங்களில் ஊடுருவுகையில், அதில் சுயநலம் குடிக்கொள்வதற்கு இடமே இருப்பதில்லை. நமது அன்பான மீட்பர், மற்றவர்கள் தெய்வீகச் சுபாவத்திற்குள் உயர்த்தப்பட்டு, இராஜ்யத்தின் பங்காளிகள் ஆக்கப்படபோவதைக் குறித்துப் [R3553 : page 139] பொறாமை கொள்வதற்குப் பதிலாக, தம்முடைய ஜெபத்தில் தாம் இத்திட்டத்திற்கு முழுமையாக ஒப்புக்கொள்ளுவதாகவும், இதற்கு இருதயப்பூர்வமான ஒத்துழைப்பையும் அருளுவதாகவும், இத்திட்டம் இப்படி இருப்பதினிமித்தம் தமக்கும் சந்தோஷமாய் இருப்பதாகவும், பிதாவிடம் அறிக்கைப்பண்ணினார். இக்காரியங்கள் பரலோக மணவாளனுக்கு ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுள்ள, வருங்கால மணவாட்டிகளாகிய நமக்கு எத்தகைய கருத்துக்களைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. நம்மை நம்முடைய தாழ்மையான நிலையிலிருந்து உயர்த்தி, அவரோடுகூட, அவருடைய இராஜ்யத்தில் அவருடைய சிங்காசனத்தில், அவருடைய பிதாவின் அன்பில் பங்கடையச் செய்வதில் கர்த்தர் பிரியமுள்ளவராக இருக்கின்றார்.

அதிசயங்களிலேயே அதிசயம்! தெய்வீகக் கருணைக்கு முடிவே இல்லை! நாம் இன்னமும் பாவிகளாக இருக்க, இன்னமும் மரணம் என்னும் தெய்வீகத் தீர்ப்பின் கீழ் இருக்கையிலேயே, நாம் அன்புகூரப்பட்டுள்ளோம். மாபெரும் விலை கொடுத்து மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளோம். மீட்கப்பட்ட பின்னர் இப்பொழுது, ஒரு பரலோக சத்தத்தை நாம் கேட்கின்றோம்… “இன்னும் மேல் நிலைக்கு/உயர வாருங்கள்.” ஆம், இராஜாதி இராஜாவிடத்திற்கும், கர்த்தாதி கர்த்தரிடத்திற்கும், பிதாவின் ஒரே பேறானவரிடத்திற்கும், கிருபையும், சத்தியமும் முழுமையாகக் கொண்டிருப்பவரிடத்திற்கும், அவரோடு கூட அவருடைய சிங்காசனத்திலும், அவரோடு உடன்சுதந்தரர்களாகவும் இருக்க வாருங்கள் என்பதேயாகும். அன்பு மற்றும் சுயநலமின்மையின், இம்மாபெரும் வெளிப்படுத்துதலை நம்முடைய மனங்களுக்கு முன்பாக நாம் என்றென்றும் வைத்திருக்கக்கூடுமானால், தேவனுடைய அருமையான குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருக்கும்படி நாடுகின்ற அனைவருடைய மனங்களிலிருந்தும், ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் ஒவ்வொரு போட்டி மனப்பான்மையும் சிதறடிக்கப்பட்டுப்போய்விடும். மேலும் இப்படி நினைவில் கொண்டிருக்கும்போது, சரீரத்தின் ஒவ்வொரு மற்ற அங்கமும், கர்த்தருடைய ஊழியத்தில் பயனுள்ளவர்களாக வளர்வதில் நம்மை எவ்வளவாகச் சந்தோஷம் கொள்ளசெய்யும். மேலும், இப்படி நினைவில் கொண்டிருக்கும்போது, “கனம் பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக் கொள்ளுங்கள்” என்ற வேதவாக்கியத்தின் விளக்கத்தை நாம் அதிகமதிகமாய் உணர்ந்துகொள்ளச் செய்து, மற்றச் சகோதரருடைய வளர்ச்சியிலும், சபைக்கான அவனுடைய பயன் அதிகமடைகையிலும், தேவன் மற்றும் மனுஷரிடத்திலும், அவன் பெற்றுக்கொள்ளும் தயவிற்கான சாட்சிகள் அதிகமாகையிலும் நம்மை மகிழ்ச்சிக் கொள்ளச்செய்யும் (ரோமர் 12:10). சரீரத்தின் உடன் அங்கங்களாகிய மற்றச் சகோதரர்களின் வளர்ச்சியில், இவ்விதமாகச் சந்தோஷம் கொள்ள முடிகிறவர்களுக்கு, மாபெரும் மகிமையான தலைக்கு ஒத்திருக்கும் சாயலில், தாங்கள் வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதற்கான சாட்சியாகவும் அமைகின்றது. இம்மனநிலையில் இல்லாதவர்கள், இதற்காக முயற்சி செய்ய வேண்டும்; மேலும், இதை அடையும் வரையிலும் முயற்சியைத் தொடர்ச்சியாகக் கொண்டிருக்க வேண்டும்.

அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும்

வெளிநாடுகளில் காணப்படும் நிறுவனங்கள் மற்றும் குழுக்களின் ஆவியானது, எங்கும் பரவிக்கொண்டிருப்பதினால், அது சபைகளையும், சபை பிரிவுகளையும் இணைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி, மாபெரும் மத நிறுவனங்கள்/அமைப்புகளாக வளர்ச்சிகொள்வதற்கு நேராக நடத்துகின்றது. மேலும், இவர்களது இத்தகைய வளர்ச்சியானது, கர்த்தருடைய உண்மையான அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஜனங்களின் சுதந்தரத்திற்கு ஆபத்தான தொந்தரவாக இருந்தாலும், இது அவர்களுடைய ஆவிக்குரிய நன்மைகளை பாதிப்பதில்லை. இவ்வளர்ச்சிகள் கர்த்தருடைய சிறுமந்தையினருக்கு ஆசீர்வாதமாகக்கூட விளங்குகின்றது. எப்படியெனில், இவர்களுடைய இத்தகைய அமைப்பு வளர்ச்சியினிமித்தம், சிறுமந்தையினர் தங்களுடைய வேதவாக்கியங்களின் அடிப்படையிலான போதனைகளிலிருந்து மற்றப் போதனைகளை வேற்றுமையாகக் கண்டு, சத்தியத்தில் உறுதிகொண்டு, தங்களை முற்றிலும் பெயர்க்கிறிஸ்தவ அமைப்புகளிலிருந்து பிரித்துக் கொண்டவர்களாகவும் இருக்க முடிகின்றது. களைகளோ ஒன்றாகக் கட்டப்படவும் செய்கின்றது. “அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒரு போதும் காணப்படாமற்போகும்” (வெளிப்படுத்தல் 18:21)

“அவர்களெல்லாரும் ஒன்றாய் இருக்க வேண்டும்” என்ற நமது கர்த்தருடைய ஜெபமானது, யுகம் முழுவதிலும் நிறைவேறியுள்ளது. உண்மையாக அவர்களுடையவர்களாக இருக்கும் அனைவருக்கும் பிதா மற்றும் குமாரனுடன் கூட ஒரே இருதயமுள்ளவர்களாகவும், ஒரே நோக்கம் உள்ளவர்களாகவும், ஒரே ஆவி/சிந்தை உடையவர்களாகவும் காணப்பட்டுள்ளனர். பூமிக்குரிய விசுவாசப்பிரமாணங்களினாலும், சங்கிலிகளினாலும், தெய்வீகமானவர்களோடு ஐக்கியத்தை/உறவை ஏற்படுத்த முடியாது. கர்த்தருக்குச் சொந்தமானவர்கள் விஷயத்தில் இன்றும், என்றென்றும் இப்படியாகவே காணப்படுகின்றது. வெளித்தோற்றமான அடையாளச் சொற்களினால் அல்ல (அ) அடையாளங்களினால் அல்ல (அ) வெளித் தோற்றமாக பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பதினால் அல்ல, மாறாக, விசுவாசம் மற்றும் அன்பின் மூலமாக அவர்கள் ஒருவரையொருவர் (தேவன், குமாரன், சபை) அறிந்துக்கொண்டிருக்கின்றனர். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துக் கொள்வார்கள் என்றார்” (யோவான் 13:35). “நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்” (1 யோவான் 3:14). உண்மைதான், நாம் அனைத்து மனுஷர்களையும் அன்புகூர்ந்து, வாய்ப்பு அமையும்போது, சகலருக்கும் நன்மை செய்ய நாடுகையில், அப்போஸ்தலர் அறிவித்த பிரகாரம், “விசேஷமாக விசுவாச வீட்டாருக்கு,” அதாவது, கர்த்தரை அன்புகூர்ந்து, அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தின் மீது விசுவாசம் வைத்து, அவருக்கென்று தங்களை முழுமையாக அர்ப்பணம் செய்து, தங்களால் முடிந்தமட்டும் அவருடைய சித்தத்தைச் செய்து, நாளுக்கு நாள் அவர் சித்தம் என்ன என்று இன்னுமாக அறிந்துக் கொள்ள நாடுபவர்களாகிய விசுவாச வீட்டாருக்கு நன்மை செய்ய நாடுபவர்களாக நாம் இருக்க வேண்டும்.

கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் காணப்படும் இந்த ஒற்றுமையானது, (ஆள்தத்துவத்தின்) நபர்களின் ஒற்றுமையைக் குறிப்பதில்லை. கர்த்தருடைய பின்னடியார்கள் மாம்ச சரீரத்தின் விஷயத்தில் ஒன்றானவர்கள் அல்ல. மாறாக, ஆவியில்/சிந்தனையில் ஒன்றாக இருக்கின்றனர். இந்த உதாரணமே/விளக்கமே, தமக்கும், பிதாவுக்கும் இடையில் காணப்படும் ஒன்றாய் இருத்தலுக்கான விளக்கமாக அமைகின்றது எனக் கர்த்தர் விளக்குகின்றார். அவர்கள் இருவரும் ஒரு நபராக இராமல், சிந்தனையிலும், நோக்கத்திலும், சித்தத்திலுமே ஒன்றாய் இருக்கின்றார்கள். ஏனெனில், பிதாவின் பார்வைக்கும் பிரியமாய் இருக்கும் பிதாவின் சித்தத்தையே, தாம் எப்போதும் செய்கின்றதாகக் கர்த்தர் கூறுகின்றார். இவ்விதமாகவே, நாமும் பிதாவின் சித்தமாகக் காணப்படும், கர்த்தருடைய சித்தத்தைச் செய்து, அவருக்குள்ளும், அவருடைய அன்பிலும் நிலைகொண்டிருக்கின்றவர்களாகக் காணப்படுகின்றோம். மேலும், இவ்விதமாக ஆவியிலும், சத்தியத்திலும் பிதாவும், குமாரனும், மணவாட்டியாகிய சபையும் ஒன்றாயிருக்கின்றார்கள்.

கிறிஸ்துவோடு கூட அவருடைய மகிமையில் பங்கடைதல்

“பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனே கூட இருக்க விரும்புகிறேன்” (யோவான் 17:24). இது ஒரு விண்ணப்பம் அல்ல, மாறாக தம்முடைய சித்தம் குறித்துக் கர்த்தர் இங்கு அறிக்கையிடுகின்றார். அதாவது, பின்வருமாறு அவர் கூறுவது போன்றுள்ளது: “பிதாவே என்னுடைய பின்னடியார்கள் தொடர்புடைய விஷயத்தில், இதுவே உம்முடைய சித்தமென நான் புரிந்துள்ளேன். நானும் அதையே விரும்புகின்றேன். நீர் ஆயத்தம் பண்ணியுள்ள இந்த மாபெரும், தாராளமனமுள்ள ஏற்பாட்டிற்கு/ஒழுங்குமுறைக்கு நான் ஆட்சேபனையின்றி ஒப்புக்கொள்கின்றேன். இறுதியில், என்னுடைய பின்னடியார்கள் என்னோடு கூட, ஒரே மகிமையின் தளத்தில், என்னோடு இடம் பெற்றுக்கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். மேலும், உலகம் தோன்றுவதற்கு முன்பும், என்னுடைய இந்தச் சீஷர்களுக்கு ஒழுங்குகள் ஏற்பாடு பண்ணுவதற்கு முன்பும், என் மீது கொண்டிருந்த அன்பின் நிமித்தமாகவே, எனக்கு நீர் கொடுத்த மகிமைகளை என்னுடைய பின்னடியார்கள் காணவும், அதில் அவர்கள் பங்கடையும்படிக்கு அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவதில் நான் மகிழ்ச்சிக்கொள்வேன்” என்பதேயாகும்.

கர்த்தருடைய ஜெபத்தின் இறுதியான வார்த்தைகள் அழகாகவும், பிதாவிடத்திலும், தாம் பிதாவிடத்தில் கொண்டுள்ள உறவின் மீதுமுள்ள, கர்த்தருடைய நம்பிக்கையைக் குறித்து வெளிக்காட்டுவதாகவும் இருக்கின்றது. அவர் பிதாவை அறிந்திருந்தார். ஆகவேதான் பிதாவினால் நாம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், அவர் அளிக்கும் நித்திய காலத்திற்குமான ஜீவனுக்குள் நாம் பங்கடைவதற்கும் அளிக்கப்படும் மகாபெரும் சாட்சி இதுவே என்று நம்மைக் குறித்த விஷயத்தில் அவர் கூறியுள்ளார். “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” (யோவான் 17:3). “நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்” (யோவான் 17:25). உம்முடைய நாமம் குறித்தும், உம்முடைய குணலட்சணம் குறித்தும், உம்முடைய மகத்துவம் குறித்தும், உம்முடைய நற்பண்புகள் குறித்தும், உம்முடைய அன்பு குறித்தும், உம்முடைய நன்கொடைகளைக் குறித்தும் நான் அவர்களுக்கு அறிவித்துள்ளேன். இன்னமும், அவர்கள் தாங்கிக்கொள்ளும் அளவிற்குத் தகுந்தாற்படி, சத்திய அறிவில் அவர்கள் வளரும்போது, அதிகமாக உம்மைக் குறித்து அவர்களுக்கு வெளிப்படுத்துவேன். இப்படியாக நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும் உம்மைக் குறித்து அவர்களுக்குத் தெரியப்படுத்துவேன் என்ற விதத்தில் கூறினார்.

தேவனுடைய இந்த அன்பும், கிறிஸ்துவினுடைய இந்த அன்பும் எத்துணை அதிசயமாய் உள்ளது! இதன் நீளத்தையும், அகலத்தையும், உயரத்தையும், ஆழத்தையும் நம்மால் அளக்க முடியாததுபோன்று தோன்றுகின்றது! கர்த்தரைத் தங்களுடைய மீட்பராகவும் ஏற்றுக்கொண்டு, அவருடன் ஓர் உடன்படிக்கையின் உறவிற்குள் வந்துவிட்டு, தங்களிடத்தில் இருக்கும் கொஞ்சமான காரியங்கள் அனைத்தையும் அவருக்கென்று கொடுத்துவிட்டு, அவர் ஏற்பாடுபண்ணியுள்ள இந்த அனைத்து ஆசீர்வாதங்களில் பங்கடையும் வாய்ப்பை அவரிடத்தில் பெற்றுக்கொண்ட பிற்பாடு, பெலவீனத்தாலோ (அ) எதிர்ப்பினாலோ (அ) வேறு ஏதாவது காரணங்களினாலோ ஒருவேளை கீழே தள்ளப்பட்ட நிலையில் காணப்பட்டார்களானால், அத்தகையவர்கள், பிதா நமக்காகக் கொண்டிருப்பதும், குமாரன் பங்கிட்டுக் கொடுப்பதுமான இந்த மாபெரும் அன்பை நினைவில் கொண்டுவந்து, எண்ணிப்பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும். அதாவது, நாம் பாவிகளாகவே இருக்கையில் நம்மை மீட்டுக்கொண்டது மாத்திரமல்லாமல், (ஒருவேளை) நாம் அவருக்காக பாடுபடுவோமானால், நாம் அதிசயமான ஆசீர்வாதங்களையும், சிலாக்கியங்களையும் மற்றும் கர்த்தராகிய கிறிஸ்துவுடன் உடன்சுதந்தரத்துவத்தையும் அடையும்படிக்கு, நம்மை அழைத்ததுமான அன்பை நாம் நினைவில் கொண்டுவந்து, எண்ணிப் பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும். ஒருவேளை நாம் அவருக்காகப் பாடுப்படுகிறவர்களாக இருப்போமாகில், இந்த அன்பானது நம்மைவிட்டு எளிதில் தள்ளிப்போவதில்லை; நாம் பின்வாங்கி இரண்டாம் மரணத்திற்குள்போவதை அனுமதிப்பதைக் காட்டிலும், இந்த அன்பானது நம்மைச் சிட்சித்துத் திருத்துகின்றது. பின்னர், [R3553 : page 140] இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருப்பவர்களையும், உண்மையுள்ள வார்த்தைகளைத் தொடர்ந்துப்பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பவர்களையும், இறுதியில் இந்த அன்பானது ஒன்றில் சிறுமந்தையினராகவோ (அ) திரள்கூட்டத்தினராகவோ விடுவித்துவிடுகின்றது. ஆனால், எந்த அளவுக்கு இந்த அன்பானது, நம்மிடத்தில் செழிப்பாகக் காணப்படுகின்றதோ மற்றும் எந்த அளவுக்கு கிறிஸ்து நம்முடைய இருதயங்களில் குடிகொண்டு இருக்கின்றாரோ/வாசம் பண்ணுகின்றாரோ, அவ்வளவாய் பிதாவின் பார்வையில் பிரியமாகவும், நமது கர்த்தரால் அங்கீகரிக்கப்படுகிறதுமான காரியங்களைச் செய்வதில் விருப்பமாகவுமுள்ள பதிலுக்குப் பதிலான அன்பு நம்மிடத்தில் காணப்படும்; மற்றும் அவ்வளவாய் கர்த்தருக்கும், நம்முடைய ஆத்துமாக்களுக்கும் இடையே திரையிடுகின்ற எதையும் செய்ய வெறுப்பும் நம்மிடத்தில் காணப்படும். தெய்வீக அன்பின் நீளம், அகலம், உயரம், ஆழம் ஆகியவற்றை நாம் இப்படியாகப் புரிந்துக்கொண்டுள்ளபடியால், நாம் புதிய தைரியம் கொள்வோமாக. மேலும், தேவனுடைய இந்த அன்பானது, அவருக்காகவும், அவருடைய காரணங்களுக்காகவும்/நோக்கங்களுக்காகவும் நாம் மாபெரும் வைராக்கியமும், பக்தியும் கொள்ளத்தக்கதாக நம்மை நெருக்கி ஏவுவதாக.