R1801 – கெத்செமனேயில் வியாகுலம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1801 (page 95)

கெத்செமனேயில் வியாகுலம்

THE AGONY IN GETHSEMANE

மாற்கு 14:32-42; மத்தேயு 26:36-46; லூக்கா 22:39-46; யோவான் 18:1

“பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ?”

இந்தப் பாடத்தினுடைய துயரம் நிறைந்த காட்சிகளை நாம் பார்க்கையில், பயபக்தியுடனும், ஆழ்ந்த நன்றியுடனும், நம்முடைய பாரத்தையே அவர் சுமந்திட்டார் என்றும், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது என்றும், அவரது தழும்புகளினாலே நாம் சுகமானோம் என்றும் நினைவுகூருவோமாக.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் நன்கு பரீட்சயமான இச்சம்பவப்பதிவானது, விலையேறப்பெற்ற படிப்பினைகளுள்ள ஒன்றாகும், அதிலும் விசேஷமாக அவரது கிருபையினால் கர்த்தருடைய அடிச்சுவடுகளில் பின்தொடர்வதற்குப் பிரயாசம் எடுக்கின்றவர்களாக இருப்பவர்களுக்கு விலையேறப்பெற்ற படிப்பினைகள் முழுக்க நிரம்பப்பெற்ற ஒன்றாகும். நாம் புரிந்துகொள்வது என்னவெனில்: (1) போதகர் தாம் காட்டிக்கொடுக்கப்படுவதற்கும் மற்றும் தமக்குக் கடுமையான சோதனைகள் வருவதற்குமான தம்முடைய வேளை சமீபித்துள்ளது என்பதை உணர்ந்தபோது, அவர் முதலாவதாக சீஷர்களைத் தேற்றி, அவர்களுக்கு ஆலோசனைக் கொடுத்து, அவர்களுக்காக, அவர்களோடுகூட ஜெபம் ஏறெடுத்தப் பிற்பாடு தேவனிடத்தில் ஜெபம்பண்ணுவதற்கும், அவரோடு ஐக்கியம் கொள்வதற்கும், தேவையான வேளையில் கிருபைப் பெற்றுக்கொள்வதற்கும் வேண்டி தனியான ஓர் இடத்தைத் தேடுவதே அவரது அடுத்தக்கட்ட உறுதியான உணர்வாய்க்காணப்பட்டது. (2) தம்முடைய சீஷர்களுக்கான அவரது அன்பையும் மற்றும் அவர்களது அன்பையும், அனுதாபத்தையும் திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவரது விருப்பத்தையும் நாம் கவனிக்கின்றோம். “தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்.” மேலும் அவர் அவர்களை அன்புகூர்ந்ததினாலும், அவர்களும் தம்மை அன்புகூருகிறார்கள் என்று அவர் அறிந்திருந்ததினாலும் தாம் ஜெபம் பண்ணப்போகிற இடத்தில், அவர்களும் தம்மோடுகூட விழித்திருந்து, ஜெபம் பண்ணத்தக்கதாக, அவர்கள் வருவதற்கு அனுமதித்தார். தம்முடைய இறுதி ஜெபவேளையானது காட்டிக்கொடுப்பவனால் சடுதியாய்க் குறுக்கிடப்படாமல் காணப்படத்தக்கதாக, வெளிக்காவல் புரியும் வண்ணமாக பேதுரு, யாக்கோபு மற்றும் யோவானைத் தவிர மற்ற அனைவரையும் தோட்டத்தின் நுழைவாயிலில் நிறுத்தி வந்தார்; இந்த மூவருடன்கூட அவர் தோட்டத்திற்குள் வந்தார்; அனலாய் இருக்கும் சுபாவமுள்ள இந்த மூவரிடத்தில் தேறுதலான அனுதாபத்தை, அவர் கண்டதாகத் தெரிகின்றது மற்றும் விழித்திருந்து, ஜெபம் பண்ணுவதற்கான உண்மையான வேண்டுகோளை விடுத்தவராக, அவர் அவர்களைவிட்டு, கல்லெறியும் தொலைவுக்குப் போயுள்ளார். ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கையில் அவர் மூன்று தரம் எழுந்து “என் ஆத்துமா மரணத்திற்கு ஏதுவான துக்கம் கொண்டிருக்கிறது” என்று கூறி மனித அனுதாபத்தின் தொடுதலைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, வியாகுலமான ஆத்துமாவுடன் அவர்களிடத்தில் திரும்பிவந்தார். அவரைக் கொஞ்சம் நேரம் சோர்வுபடுத்தினதும், இரத்தத்தின் மாதுளிகள் வியர்வையாக வருமளவுக்குக் கடுமையான அளவில் மனதிற்கும், நரம்பிற்கும் அழுத்தம் ஏற்படுத்தினதுமான துக்கமாக, வியாகுலமாக அது காணப்பட்டது.

போதகர் இப்படி மனித அனுதாபத்தை விரும்பினது என்பது, அவர் சார்பிலான பெலவீனத்திற்கான அறிகுறியாகாது. அவருடைய சுபாவமானது கரடுமுரடானதாகவோ, விருப்பு வெறுப்பு அற்றதாகவோ, வலி, இழப்பு மற்றும் நிந்தனை தொடர்புடைய விஷயத்தில் உணர்வற்றதாகவோ இல்லை; அவர் தொடர்பு வைத்திருக்கும் நபர்கள், அவரது மகிமையான பூரணத்திற்கு வெகுக் கீழானவர்களாகக் காணப்பட்டபோதிலும், அவரது சுபாவமானது பெருமையானதாகவோ, தம்மையே சார்ந்துள்ளதாகவோ, மனித உறவினின்று தம்மைப் பிரித்து விலகுகின்றதாகவோ இல்லை. கிருபையாக அவர் கீழ் நிலையிலுள்ள மனித சாயலுக்குத் தம்மைத் தாழ்த்திக்கொண்டார் மற்றும் அவர்களைப் பிரியத்திற்குரிய சகோதரர் என்று கருதினார் மற்றும் அவர்களைக்குறித்து அவர் வெட்கப்படவில்லை. அவரது சுபாவமானது நுட்பமானதாகவும், அன்புள்ளவைகளை, நல்லவைகளை, உண்மையுள்ளவைகளைக் கூர்மையாய் உணர்ந்து [R1801 : page 96] கொள்ளுகிறதாகவும், இவைகள் அனைத்திற்கும், எதிர்மாறான வலியையும்கூட அதே அளவுக்கு உணர்ந்துகொள்ள முடிகிறதாகவும் காணப்பட்டது. மனிதனுடைய சீர்க்கேடும், மனிதனுடைய துயரங்களும், அவரது பூமிக்குரிய ஜீவியக்காலம் முழுவதும், அவரைத் தொடர்ந்து வெகு பாரமாய் அழுத்தி இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் பயங்கரமான வேளையிலோ, ஒட்டுமொத்த உலகத்தினுடைய பாரங்களும், துயரங்களும் அவரது தோள்கள் மீது குவிக்கப்பட்டது மற்றும் அவர் பாவிபோன்று பாடுபட வேண்டும், மரிக்க வேண்டும்; அதாவது உயிர்த்தெழுதலுக்காகப் பிதாவின் கிருபையை மாத்திரம் விசுவாசித்தவராக மரித்துப்போக வேண்டும். இந்த ஒரு வேளையில் அவரது மரணம், சரீர வியாகுலம், அவமானம், கொடுமை மற்றும் கோர மரணத்திற்கேதுவான சித்திரவதை முதலானவைகள் பற்றின உணர்ந்துகொள்ளுதல் மாத்திரம் அவருக்குள்காணப்படாமல், இன்னுமாகத் தம்முடைய பிரியமான சீஷர்கள் பயத்தினாலும், திகிலினாலும் மேற்கொள்ளப்பட்டு, தம்மை தனிமையில் விட்டுவிடும்போது தாம் அனுபவிக்கப்போகும் தனிமைக் குறித்த உணர்வும் அவருக்குள் குவிந்தன; மற்றும் திரும்பிட முடியாத அளவுக்கான யூதாசினுடைய இழப்பும், யூத ஜாதியாருடைய நடவடிக்கைக் குறித்துமான கவலைகரமான நினைவுகளும் அவருக்குள் குவிந்தன அவரது சொந்த ஜனங்கள் அவரை அசட்டைப்பண்ணி, “இவர் இரத்தப்பழி எங்கள் மீதும் எங்கள் பிள்ளைகள் மீதும் வருவதாக” என்று கூறினதன் மூலம் அவரது இரத்தப்பழியைத் தங்கள் தலைகள் மீது பெற்றுக்கொண்டனர். இதன் விளைவாக அவர்கள் மீது சீக்கிரத்தில் வரும் பயங்கரமான பெருந்துன்பத்தை அவர் முன்னறிந்தவராய் இருந்தார். தம்முடைய பலியின் மூலமாக, உலகத்திற்குப் பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலையைத் தாம் பெற்றுக்கொள்வது வரையிலும், குற்றவாளியாய்க் காணப்பட்ட உலகமானது தொடர்ந்து தவித்து, பிரசவ வேதனைப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பதானது, அவரைப் பொறுப்பினுடைய பாரம் குறித்து உணரச் செய்தது; இதை ஓரளவுக்கு நம்மால் கணிக்க மாத்திரமே முடிகின்றதேயொழிய, முழுமையாய்ப் புரிந்துகொள்ள முடியாது. இவைகள் அனைத்துடன்கூட பாவநிவாரண நாளினுடைய நிழலான பலியின் மாதிரிக்கேற்ப, தாம் ஏறெடுக்க வேண்டிய பலி தொடர்புடையதான நியாயப்பிரமாணத்தினுடைய ஒவ்வொரு எழுத்தும், எழுத்தின் உறுப்பும் பூரணமாய் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற உண்மைப் பற்றின அறிவும் அவருக்கு இருந்தது [*ஆசரிப்புக்கூடார நிழல்கள், ஆங்கில பக்கம் – 39; தமிழ் பக்கம் – 43 பார்க்கவும்]. பணியில் ஏதாகிலும் ஒரு பாகத்தில் அவர் தவறி விட்டாரானால், தமக்கும், மனுஷர்களுக்குமான அனைத்தும் இழந்துபோய்விட வேண்டியிருக்கும். அவர் பரிபூரண மனிதராகக் காணப்பட்டாலுங்கூட, மாம்சமானது எவ்வளவுதான் பூரணமாய் இருப்பினும், அது அவ்வேலையைச் சமாளிப்பதற்குப் பொருத்தமானதல்ல.

அந்தப் பயங்கரமான வேளையில், அவர் தனித்துக் காணப்படும்பொழுது, திணறவைக்கும் இரவினுடைய இருளில் தற்காப்பில்லாமல், தம்மைக் காட்டிக் கொடுப்பவனுக்காகக் காத்திருக்கையில் தம்மைத் துன்புறுத்தப் போகிறவர்களின் சித்தமானது பகைமையினால் வெறியூட்டப்பட்டு, சாத்தானுடைய ஆற்றலினால் நிறைந்திருக்க, நமது கர்த்தர் எத்தகைய மன வலிமையுடன் காணப்பட வேண்டும்! ஓ! உலகம் மற்றும் அவருடைய எதிர்க்காலமானது தராசில் எவ்வளவாய் நடுங்கினது! தெய்வீக உதவியில்லாமல், பரிபூரணமான மனித சுபாவம்கூட, இத்தகைய ஒரு நெருக்கடியான நிலையைச் சமாளிக்க முடியாது; ஆகையால் உயிர்த்தெழுதலின் வாயிலாகத் தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லவரை நோக்கி, அவர் பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி ஜெபம் பண்ணினார். தேவையான ஆறுதலானது ஏசாயா தீர்க்கத்தரிசியின் (42:1,7) வாயிலாகக் கொடுக்கப்பட்டது; இவர் மூலம் யேகோவா தேவன், “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். அவர் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை. கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, (விழுந்துபோய்விடாதபடிக்கு அல்லது தவறிடாதபடிக்கு) உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கெத்செமனேயின் பயம் கலந்த நெருக்கடியானது, சகிப்புத்தன்மையின் ஆற்றல்களை, அவைகளின் உச்சக்கட்ட அளவு வரையிலும் ஈடுபடுத்தின பிற்பாடு, அவரது ஜெபமானது, “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” (மத்தேயு 26:39) என்பதாக மாத்திரம் காணப்பட்டது. பாத்திரம் அவரைவிட்டு நீங்கக்கூடாததாய் இருந்ததினால், தேவதூதன் வந்து, அவருக்கு ஊழியம் புரிந்திட்டார். எப்படி ஊழியம்புரிந்திட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது, எனினும் அநேகமாக வரவிருக்கும் மகிமைத் தொடர்புடையதான தீர்க்கத்தரிசன நிழல்களினாலும், விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களினாலும் அவரது மனதினைப்புத்துணர்வடையப் பண்ணியிருந்திருக்க வேண்டும்; இந்த நிழல்களையும், வாக்குத் தத்தங்களையும் கொண்டு, அடர்த்தியான இருளின் இருட்டானது அவரது ஆத்துமாவை மூடி, அவரது நம்பிக்கையை நெருக்கி, “மரணத்திற்கு ஏதுவான’ துக்கத்தை அவருக்குக் கொண்டுவந்திட்டதான அந்த வேளையில், அவரை தேற்றிடுவதற்கு, சீஷர்கள் அவைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்து கொள்ளவில்லை. ஆ! யேகோவா தேவனே அவரை ஆதரித்தார், அவரது பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம்! அவரது வாக்குத்தத்தத்திற்கேற்ப அவரது தாசன் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை.

அந்தப் பாக்கியமான ஊழியத்தின் காரணமாக தைரியமானது வலுவூட்டப்பட்டது மற்றும் அதைக் கண்டு நாம் மிகவும் வியப்படைகின்றோம். அது வலி, அவமானம் மற்றும் இழப்புக் குறித்த விருப்பு வெறுப்பு இல்லாத தன்மையின் காரணமாக உண்டான தைரியமாய் இராமல், தெய்வீக வாக்குத்தத்தம் மற்றும் வல்லமையெனும் திரைக்குள்ளாக நங்கூரமிடப்பட்டுள்ளதான விசுவாசத்தினால் உண்டான தைரியமாகும். அவர் தமது விசுவாசக் கண்களினால் சத்தியம் மற்றும் நீதியினுடைய மகிமையான வெற்றியைக் கண்டபோது – தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக்கண்டு, திருப்தியடைந்த போது – மீட்கப்பட்ட உலகத்தினுடைய நித்தியமான சந்தோஷத்தையும், ஆசீர்வாதத்தையும், பிதாவினுடைய ஆசீர்வாதங்களின் ஐசுவரியத்தையும், வரவேற்பையும் பரலோகத்திலும் பூலோகத்திலும் உள்ள உண்மையுள்ள சிருஷ்டிகள் யாவருடைய நன்றியறிதலையும், அன்பையும் கண்டு, திருப்தியடைந்தபோது – ஆம் விசுவாசம் மற்றும் முடிவு பரியந்தமும் உண்மையாய்ச் சகித்தலின் பலன்களை உணர்ந்தபோது, அவர் தேற்றப்பட்டார் மற்றும் உற்சாகமூட்டப்பட்டார்; இப்பொழுது அவரால் அமைதலுடனும், தைரியத்துடனும்கூட சத்துருக்களைச் சந்திக்க சென்றிடமுடியும். ஆம் இந்த வெற்றியினாலே, இந்த விசுவாசத்தினாலேயே அவர் ஜெயங்கொண்டார் மற்றும் நாமும் இப்படியாகவே ஜெயங்கொள்ள வேண்டும்.

இப்பொழுது கெத்செமனேயில் வரப்போகின்றதான நிகழ்வுகள் குறித்த பயம் கலந்த உணர்ந்துகொள்ளுதல்கள் முடிவுக்கு வந்தது. யூதாசுக்கும், ரோம சேவகர்களுக்கும் அவர் பதில் கொடுத்தபோதும், அப்பதிலினால் அவர்களுக்கு ஏற்பட்ட தாக்கத்தின்போதும், அவரது அமைதியான, உன்னதமான மனோதிடத்தைக் கவனியுங்கள். இந்த வியத்தகு மனிதனுடைய (இயேசுவினுடைய) கம்பீரமும், வீராந்த தோற்றமும் அவர்களை மிகவும் அடக்கினதால், ஒருவேளை அவர் தம்மை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கவில்லையெனில், அவர்களால் அவரைப் பிடித்திருக்க முடியாது. திகைப்படைந்த மற்றும் களைப்புற்றிருந்த சீஷர்களுக்கான அவரது இரக்கத்துடன் கூடிய அக்கறையையும், அவர்களுக்கான அவரது, “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” என்ற அன்புடன் கூடிய காரணங்கள் காட்டுதலையும், தாம் கைது செய்யப்படும்போது, தம்முடைய சீஷர்கள் தமக்கு ஏற்படப்போகும் துன்புறுத்துதலிலிருந்து தப்பித்துக்கொள்ளத்தக்கதாக, அவர்கள் வழியில் போவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று சேவகர்களிடம் அவர் வேண்டிக்கொண்டதையும் (யோவான் 18:8) கவனியுங்கள். அவருடைய சோதனைகள், கேலிக்குள்ளாக்கும் நிகழ்வுகள் அனைத்தின் மத்தியிலும் மற்றும் இறுதியில் சிலுவையில் அறையப்படுதலின் போதும், மற்றவர்களுடைய நலனுக்கடுத்த விஷயங்களிலுள்ள அவரது தைரியமும், அக்கறையும் ஒருபோதும் நலிந்து போய்விடவில்லை.

ஆகையால் இப்படி நமது கர்த்தரை மிகவும் கடுமையான சோதனையின் கீழ்க் கண்டு, எப்படி யேகோவா தேவனின் கரம் அவரை ஆதரித்தது என்று காண்கையில், அது அவரது அடிச்சுவடுகளில் நடப்பதற்குப் பிரயாசம் எடுத்துக்கொண்டிருக்கும் அனைவருடைய விசுவாசத்தையும் பெலப்படுத்திடுவதாக மற்றும் இவர்களிடமே கர்த்தர், “திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்; இந்த விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” என்று கூறினார் (யோவான் 16:33; 1 யோவான் 5:4). கிறிஸ்துவினுடைய சரீரத்தின் பாதமானது கல்லில் இடறாதபடிக்கு (ஏதோ சில அமிழ்த்துகிற சோதனைகளானது அவர்களுக்கு மிகவும் பாரமானதாய்ப் போகாதபடிக்கு), அவர்களை ஏந்திக்கொண்டு போகும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு யேகோவா தேவன் கட்டளையிட்டிருக்கின்றார் அல்லவா? (சங்கீதம் 91:11,12). ஆம், அவரது கரமானது தலையாகிய நமது கர்த்தர் இயேசுவை ஆதரித்தது போலவே, பாதங்களையும் நிச்சயமாய் ஆதரித்திடும். அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும் என்றாலும், “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கின்றார்” என்கிறார் (லூக்கா 12:32). இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு பணிவிடை ஆவிகள் அனுப்பப்பட்டு இருக்கின்றனர். இவர்களது பணிவிடைகளானது நம்மால் பார்க்க முடியாது என்றாலும், இவைகள் உண்மைதான். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் சக அங்கத்தினர்கள் கூட, ஒருவருக்கொருவர் கர்த்தருடைய தூதுவர்களாய்க் காணப்படுகின்றனர் மற்றும் இவர்களும் பாதங்களை ஏந்திடுவதற்கான சிலாக்கியத்தில் பங்கடைபவர்களாய்க் காணப்படுகின்றனர்.

ஆனால் தேவையின் போதான இந்த உதவியை நாம் பெற்றுக்கொள்வதற்கு, நாம் அதற்காக வேண்டிக்கொள்வது அவசியமாகும். உண்மையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வேளையும் தேவையின் வேளையாகவே காணப்படுகின்றது; ஆகையால் ஜெப நிலையிலேயே நாம் ஜீவிப்பது, அதாவது இடைவிடாமல் ஜெபம் பண்ணுவது நமக்கு அவசியமாய் உள்ளது. நமது கர்த்தருக்கே தம்முடைய ஜீவியத்தின் விறுவிறுப்பான சூழ்நிலைகளினின்று அடிக்கடி விலகி, தேவனிடத்திற்குத் தனியே சென்று, அன்பின் நெருக்கமான ஐக்கியத்தினை உறுதியாய் வைத்துக்கொள்வது அவசியமாய் இருந்ததானால், நமக்கும் நிச்சயமாகவே அவசியமாய் இருக்கும்; மற்றும் இப்படியாகச் செய்யும்போது, நாமும் தேவையின் போதான கிருபையை எப்போதும் பெற்றுக்கொள்கின்றவர்களாய் இருப்போம். கடுமையான சோதனைகளின் வேளைகளில், நமது கர்த்தருடைய விஷயத்தில் காணப்பட்டதுபோலவே, இருளானது ஆத்துமாவை ஆழமாய் சூழ்ந்து கொள்ளுகிறதாய்க் காணப்படும், நம்பிக்கையின் நட்சத்திரங்கள் அனைத்தையும் மறைத்துப் போடுகிறதாய்க் காணப்படும்; எனினும் நாமும் கர்த்தரைப் போன்றே யேகோவா தேவனுடைய சர்வ வல்லமையுள்ள கரத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு, “ஆகிலும் என்னுடைய சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது” என்று கூறுவோமானால், அவரது கிருபை எப்போதும் போதுமானதாய் இருக்கும்; மற்றும் சங்கீதக்காரனோடுகூட நாமும் “என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” என்று கூறமுடியும் (சங்கீதம் 73:26); மற்றும் கர்த்தரோடுகூட நம்முடைய இருதயங்களும், “பிதா எனக்கு ஊற்றின பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ?” என்று கூறும்.