R3366 – இப்பொழுதே முடிவு செய்யுங்கள்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3366 (page 149)

இப்பொழுதே முடிவு செய்யுங்கள்

CHOOSE YE THIS DAY

(யோசுவா 24:15; திருவிவிலியம்) மாற்கு 15:1-15

“அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.” லூக்கா 23:4

நம்முடைய ஜீவியத்தில் நாள்தோறும் நமக்கு முன்பாக வைக்கப்படும் கேள்விகளுக்கு, நாம் எடுக்கும் சரியான தீர்மானங்களின் அடிப்படையில்தான் எல்லாம் சார்ந்துள்ளது என்பது இப்பாடத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. நமது கர்த்தரும், பதினொரு அப்போஸ்தலர்களும் மேல் அறையைவிட்டு, கெத்செமனே தோட்டத்திற்குப் புறப்பட்ட போது, யூதாஸ் தனக்குள் ஏற்கெனவே அன்று மாலையில் தீர்மானம்பண்ணிவைத்திருந்தபடி, இயேசுவின் கூட்டத்தைவிட்டு, பிரதான ஆசாரியர்களுடன் இரகசிய ஒப்பந்தம் போடவும், பஸ்கா காலமாய் இருந்தபடியினால் பட்டணத்தில் வந்திருந்த திரளான ஜனங்களுக்குத் தெரியாமல், இயேசுவைத் தனிமையில் கலகமின்றி பிடிப்பதற்குரிய இடத்திற்குப் பிரதான ஆசாரியரின் பணியாட்களையும், ஆதரவாளர்களையும் வழிகாட்டும்படிக்கும் புறப்பட்டுப்போனான். மேலும், ரோமர்கள் ரோம அதிகாரத்திற்கு எதிரான புரட்சியின் அறிகுறிகளைக் கண்ட மாத்திரத்தில், அப்புரட்சியை அணைத்துப் போடுவதில் ரோமர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தபடியினால், ஒருவேளை இயேசுவின் நண்பர்கள், மக்கள் மத்தியில் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டால், யூதர்களின் மதத் தலைவர்கள் ரோமர்களின் பார்வையில், ரோமர்களுடைய ஆட்சியை எதிர்த்து, துரோகம் பண்ணுகிறவர்களாகக் கருதப்பட்டுவிடுவார்களோ என்ற எண்ணம் (அச்சம்) யூத மதத்தலைவர்களிடம் காணப்பட்டது. யூதாஸ், பிரதான ஆசாரியர்களுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் பண்ணியிருந்தார் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இயேசுவும், மற்ற [R3366 : page 150] அப்போஸ்தலர்களும், போஜனம் முடித்த பிற்பாடு எவ்விடத்திற்குப் போவார்கள் என்பதை அறிந்துகொள்வதற்கே, யூதாஸ் பஸ்கா போஜனத்தின் போது, அவர்களோடு காணப்பட்டதற்கான பாதிக்காரணமாகும். “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்” என்று யூதாசிடம், நமது கர்த்தர் பேசின வார்த்தைகளானது இக்காரியங்கள் ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதையும், மேலும், இயேசு அவைகளை இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையினால் அறிந்திருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றது. அதுவே, கடைசி தீர்மானம் எடுப்பதற்கு யூதாசுக்குரிய வேளையாக இருந்தது. யூதாஸ் பணப்பிரியனாக இருந்தான். மேலும் பணத்திற்காக கர்த்தரை விற்றுப்போடவும் தீர்மானித்திருந்தான். இயேசு தம்மைத்தாமே விடுவித்துக்கொள்வார் என்று அநேகமாக யூதாஸ் யூகம் பண்ணியிருக்க வேண்டும். இன்னுமாக நமது கர்த்தருக்குப் பாதிப்பு உண்டுபண்ணாமல், பணம் சம்பாதிக்கலாம் என்றுகூட எண்ணியிருக்கலாம். எப்படியிருப்பினும், யூதாசின் இச்செயல்பாடுகள் அவனுடைய இழிவான குணலட்சணத்தையும், சுயநலமான காரணங்களுக்காக தீமையைச் செய்ய விரும்பும் தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றது. மேலும், யூதாசின் செயல்பாடானது, அக்கிரமம் புரிவதற்கென பாலாக் அளிப்பேன் என்று கூறிய பரிசுகளுக்காக மிகவும் ஆசைப்பட்ட பீலேயாம் தீர்க்கதரிசியை நமக்கு நினைப்பூட்டுகின்றது.

கூழுக்காகச் சத்தியத்தை வியாபாரம் பண்ணுதல்

கர்த்தரைப் பணத்திற்காக விற்றுப்போட்ட காரியமானது, யூதாஸ் செய்ததுபோன்று, அதேவிதத்தில் இன்று செய்யமுடியாது. எனினும், நம்முடைய நாட்களிலும் கூட இதே இழிவான ஆவிக்கு கொஞ்சம் ஒத்த ஆவி சிலரிடம் வெளிப்படுகின்றது என நாம் விசுவாசிக்கின்றோம். யூதாசின் அளவுக்கு இச்செயல்பாடு அப்படியே (இன்று) காணப்படாவிட்டாலும், அதேமாதிரி (இன்று) காணப்படுகின்றது. மேலும், சாதகமாய்ச் சூழ்நிலைகள் அமைகையில் யூதாசின் அளவுக்குச் செயல்பாடுகள் காணப்படுவதற்கு வாய்ப்பில்லை என யார் நிச்சயம் அளிக்கமுடியும்? சிலர் பண ஆதாயங்களுக்காக, பணத்திற்காக, சமுதாய அநுகூலங்களுக்காகச் சத்தியத்தை விற்றுப்போட விருப்பம் உள்ளவர்களாய் இருக்கின்றார்கள். இன்னும் சிலர் யூதாஸ் எப்படிப் பூமிக்குரிய ஆதாயத்திற்காக தலையாய் இருந்தவரை விற்றுப்போட்டானோ, அப்படியே கர்த்தருடைய சரீர அங்கங்களை விற்றுப்போட விருப்பம் உள்ளவர்களாய்க் காணப்படுகின்றனர். அதாவது, ஒருவரையொருவர் தீமைக்கு ஒப்புக்கொடுப்பது, மற்றும் கிறிஸ்துவின் சரீர அங்கங்கள் மீது தீமை, உபத்திரவம், எதிரான காரியங்கள் / துன்பங்கள், நிந்தனைகள் [R3367 : page 150] முதலியவைகள் வர உதவுவதுமேயாகும். எனினும், இப்படிப்பட்டவர்கள் ஒருகாலத்தில் யூதாசைப் போன்று இத்தகைய பொல்லாத திட்டங்களையும், நன்றியில்லா தன்மைகளையும் உடையவர்களாயிராமல், முற்றிலும் நல்லவர்களாகவே காணப்பட்டிருந்தார்கள். இன்னும் இப்படிப்பட்டவர்கள் ஒருகாலத்தில் சுயத்தின் மீதான அன்பினாலோ, பணத்தின் மீதான அன்பினாலோ அல்லது வேறு எவ்வித தீமையான காரியங்களினாலோ அபிஷேகம் பண்ணப்பட்ட சரீரத்தின் அங்கங்களுக்குப் பாதிப்பு உண்டுபண்ணத்தக்கதாக ஏவப்படாமலே காணப்பட்டார்கள். இரயில் வண்டியிலுள்ள ஒரு மின்விசை மாற்றும் சாதனம் (switch) எப்படி இரயில் வண்டியை முற்றிலும் வேறு தண்டவாளத்தில் மாற்றிவிடுகின்றதோ, அதுபோல சிறு காரியங்களைக்குறித்து நாம் எச்சரிக்கையாய் இருக்கக்கடவோம். ஏனெனில், இச்சிறு காரியங்கள் இரயில் வண்டியின் சுவிட்ச் போன்று, நாம் அடைய வேண்டும் என முதலில் விரும்பின இலக்கிலிருந்து நம்மை வேறு திசைகளுக்கு மாற்றிவிடும். நமக்கு அனுதினமும் வரும் குணலட்சணத்திற்கான சோதனைகளை, பரிட்சைகளை எதிர்கொள்ளும் விஷயத்தில் நாம் மிகவும் கவனமாய் இருந்திட வேண்டும் மற்றும் அவைகளைக்குறித்து நாம் எடுக்கும் தீர்மானங்கள், நம்முடைய தற்கால மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளதாய்க் காணப்படுகின்றன.

மேல் வீட்டறையிலிருந்து நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களோடு கெதரோன் ஆற்றைக் கடந்து, ஒலிவ மலைக்குச்சென்று, கெத்செமனே தோட்டத்திற்குப் பிரவேசிக்கையில் ஒரு சோதனைக்குள்ளேயே பிரவேசித்தார். கர்த்தருடைய சோதனை/பரிட்சையானது, யூதாசுக்குரிய சோதனையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். அவ்வேளையில் அவர் முழுமையான தீர்மானம் உடையவராகக் காணப்பட்டார். அவருடைய அர்ப்பணம் நிறைவடைந்துவிட்டது. மேலும், தாம் நிறைவேற்றும்படிக்கு அவர் இவ்வுலகத்தில் கடந்து வந்ததற்கான வேலை தொடர்பான எவ்விதமான தயக்கமும் அவரிடத்தில் காணப்படவில்லை. இன்னுமாக, நம்முடைய பாவங்களுக்காக மரிப்பது குறித்து அல்லாமல், வேறு எவ்விதமான எண்ணங்களும் அவரிடத்தில் இல்லை. ஆனால், அவர் மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டிருக்கையில், இன்னும் சில மணி நேரங்களுக்குள்ளாக தமது அர்ப்பணம் அதாவது, “மரணத்திற்குள்ளான தமது ஞானஸ்நானம்” குறித்த அனைத்து விஷயங்களும் “நிறைவேறப்” போகின்றது என அவர் உணர்ந்தபோது, இரண்டு விஷயங்கள் அவருடைய கவனத்திற்கு முன்பு வீரியத்துடன் வந்து நின்றது. இதில் ஒரு விஷயம் என்னவெனில், அவர் ரோம நீதிபதிகள் முன்பாகவே குற்றம் சாட்டப்படுவார் என்றும், ரோம முறையான சிலுவையில் அறையப்படும் முறையின்படியாக தமது மரணம் சம்பவிக்கும் என்றும், தமக்கு ரோம அரசாங்கம் தீர்ப்பு வழங்கத்தக்கதாக தம்முடைய குணலட்சணங்களும், போதனைகளும் தம்முடைய சத்துருக்களாகிய பிரதான ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகர்களால் தவறாய்க் காண்பிக்கப்படும் என்றும், தாம் மனுஷர்கள் மத்தியில் பொல்லாங்கு விளைவித்தவராகவும், தேவனுக்கு எதிராக தேவ தூஷணம் பேசினவராகவுந்தான் உலகத்திற்கு முன்பு தம் மீதான குற்றச்சாட்டுகள் காண்பிக்கப்படும் என்றுமான விஷயங்களை அவர் தெளிவாய் உணர்ந்துகொண்டார்.

எதற்கும், அதாவது சாவுக்கும் துணிந்தவர்களாகவும், சட்டத்தின் பாதுகாப்பை இழந்த நிலையில் பாடுபடுவதற்கான வாய்ப்பு வருகையில், அதிலும் கெட்ட எண்ணங்களுடன் மகிழ்ச்சிக் கொள்ளும் நபர்கள் உலகத்தில் இருக்கின்றார்கள் என்பதில் நமக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை. மேலும், இத்தகையவர்கள் தங்களை ஏறக்குறைய கதாநாயகர்களாகக் கருதுகின்றனர். இன்னுமாக, இவர்களைப் போன்றே சீரழிந்த மனநிலை உடைய வகுப்பார் மத்தியில் இவர்கள் ஏறக்குறைய கதாநாயகர்களாகவே காணப்படுகின்றனர். ஆனால், மிகுந்த நேர்மையான மனப்பாங்கை உடையவர்களுக்கு அதாவது, மாண்பு மிக்கவர்களுக்கும், கனம் பொருந்தியவர்களுக்கும், தூய்மையான நோக்கம் உடையவர்களுக்கும் இவ்விதமான அனுபவங்களுக்குள் கடந்து செல்வது என்பது, மிகக் கடினமான சோதனையாகக்காணப்படும். எவ்விதமான சீர்க்கேட்டையும் உணர்வுகளில் பெற்றிராத பூரணமான நமது அருமையான மீட்பர் இப்படியானதொரு சூழ்நிலையில் காணப்படும்போது, நாம் உணர்ந்துகொள்வதைக் காட்டிலும், அவர் அதிகமாக வெட்கமும், அவமானமும் அடைவார் என்பதை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது. இந்த வெட்கம் மற்றும் மனுஷர் மத்தியில், தாம் ஓர் ஆபத்தான மனுஷன் எனவும், தேவனுக்கு எதிராக தேவதூஷணம் பேசினார் எனவும், தம்மேல் சுமத்தப்படப்போகின்ற இந்த நிந்தனைகளாகிய விஷயங்களையே நமது கர்த்தர் பாத்திரம் என்ற வார்த்தைகளில் குறிப்பிட்டு, தம்மை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும், ஆனாலும், தம்முடைய சித்தத்தின்படியல்ல, பிதாவின் சித்தப்படியே ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணினார் என நாம் நம்புகின்றோம்.

ஜனங்களில் ஒருவனும் அவரோடு இருந்ததில்லை

கெத்செமனே தோட்டத்தில் காணப்பட்ட துயரமான அவ்வேளையானது, அதாவது சூழ்நிலைகள் எப்படியாக இருக்கின்றது எனக் கர்த்தர் உணர்ந்துகொண்ட அளவுக்குச் சீஷர்களால் உணர்ந்துகொள்ள முடியாமல் தூங்கிக்கொண்டிருந்த அந்த வேளையானது, நமது அருமையான மீட்பருடைய அனுபவங்களிலேயே அவருக்கு மிகச் சோதனையான வேளையாக இருந்தது. துக்கம், அவமானம் மற்றும் நிந்தனை எனும் பாத்திரத்தில், “மரத்தில் தொங்குகிறவன் சபிக்கப்பட்டவன்” என்று நியாயப் பிரமாணத்தில் எழுதப்பட்டிருக்கின்றதே என்ற எண்ணமும் வந்து சேர்ந்தது. மேலும் இவ்வசனத்தின்படி, அவர் தேவனுடைய ஜனங்கள் அனைவர் மத்தியிலும், சபிக்கப்பட்டவராகக் காட்டப்படுவார். இன்னும் சில எண்ணங்கள் அவருக்குள் உதித்தன: “நியாயப்பிரமாணம் கோரும் விஷயங்கள் அனைத்தையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பதில் நான் ஏதேனும் விஷயங்களில் தவறியிருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கக்கூடுமோ?” இன்னுமாக, நான் குறிப்பிடத்தக்கதான ஏதோ ஒரு சிறு விஷயத்தில் தவறிப்போய்விடுவதற்கும், இதனால் தேவனுடைய நியாயப்பிரமாணத்தினிமித்தம் உண்டாகும் சாபமானது, என் மேலேயே நிலைத்துக் காணப்படுவதற்கும், மற்றும் இதனால் பிதாவின் சித்தத்தை இவ்வளவு தூரம் நிறைவேற்றின பிற்பாடும், பரிபூரண மனிதனாக இருந்து இவ்வளவு தூரம் தெய்வீக நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றின பிற்பாடும், நிரந்தரமாக ஜீவனை இழந்துப் போவதற்குமான வாய்ப்பு என்னில் இருக்கக்கூடுமோ? என்பவைகளேயாகும்.

அவருடைய நரம்பு மண்டலத்தின் மீது அழுத்தம் அளவுக்கு மீறி காணப்பட்டபடியினால், இரத்த வியர்வை அவருக்கு ஏற்பட்டது. இரத்த வியர்வை ஏற்படுவது என்பது அரிதான ஒருவகை உடல் நலக் குறைவாகும். இது அரிதானதாக இருந்தாலும் மருத்துவர்களுக்குத் தெரிந்தவைகளேயாகும். இவ்வெண்ணங்கள் தொடர்பாக அவருக்கு ஏற்பட்ட வேதனையானது, அனைத்து வேதனைகளைக் காட்டிலும் பெரியதாய் இருந்தது. ஒருவேளை அவர் சிறுவிஷயத்தில் தவறியிருந்தாலும் கூட, அவருக்கு எதிர்காலம் என்ற ஒன்று இருப்பதில்லை. இன்னுமாக உயிர்த்தெழுதலின் மூலமாக மீண்டும் பிதாவின் அன்பினிடத்திற்கும், அவருடைய தயவைப் பெற்றுக்கொள்வதும், பரலோக நிலைகளுக்குத் திரும்புவதுமாகிய பிரகாசமான எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் சீர்க்குலைந்து போய்விடும். இதைக்குறித்துதான் அப்போஸ்தலர் “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்” என்று குறிப்பிடுகின்றார் (எபிரெயர் 5:7). அவர் அச்சம் கொண்ட விஷயத்தில் அவர் கேட்கப்பட்டார். மேலும், உயிர்த்தெழுதலின் மூலமாக அவர் மரணத்தினின்று விடுவிக்கப்பட்டார். இன்னுமாக, மரணத்தைக்குறித்த பயத்தினின்றும், பிதாவின் சித்தம் குறித்த விஷயத்தில் தமது உண்மை மற்றும் அத்தருணம் வரையிலும் பிதாவினால் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் தாம் காணப்படுகின்றாரோ என்பது குறித்த சகல ஐயங்களினின்றும் கர்த்தர் விடுவிக்கப்பட்டார். ஒரு தேவதூதன், பரலோகத்தின் தூதன் அவருக்குத் தோன்றி, அவரைப் பெலப்படுத்தி, அவரை ஆறுதல்படுத்தி, அவர் மேல் காணப்படும் பிதாவின் அன்பு, பராமரிப்புக் குறித்தும் அவர் பிதாவின் பார்வையில் நன்கு பிரியமான நிலையிலேயே காணப்படுகின்றார் என்பதைக்குறித்தும் தெரிவித்து, அவருக்கு நிச்சயம் கொடுத்தார். இயேசுவின் இருதயப்பூர்வமான உண்மைக்குறித்த நிச்சயமே/உறுதிபாடே இயேசுவுக்கு அவசியமாயிருந்தது. தம்முடைய நடத்தையில் பிதா நன்கு பிரியமாயிருக்கின்றார் என்றும், இந்த அனுபவங்களின் முடிவில் அவர் நமது மீட்பராகும்படிக்கு உலகத்திற்கு வருவதற்கென விட்டுவந்த மகிமைகளை மீண்டும் பெற்றுக் கொள்வதோடுகூட அவருக்கு முன்பாக வைக்கப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தங்களில் காணப்படும் மற்றச் சகல சந்தோஷங்களும் கிடைக்கும் என்றும் உள்ள நம்பிக்கையினால், எவ்விதமான அனுபவங்களுக்குள்ளும் தைரியத்துடன் கர்த்தரால் கடந்து செல்ல (இப்பொழுது) முடியும். அவருடைய மேன்மையான இருதயத்திற்குச் சோதனை வந்தது. ஆனால், அதன் விளைவாக அவருக்கும், மற்றவர்களுக்கும் மாபெரும் ஆசீர்வாதம் உண்டாயிற்று. அவருடைய சோதனைக்கான பலனாக அவருக்குள் சமாதானமும், சந்தோஷமும், நம்பிக்கையும் உண்டாகி, அவைகள் அவரை அன்றைய இரவு நேரத்திலும், அடுத்த நாளிலும், அவருடைய மரிக்கும் தருவாய் வரையிலும், மிகுந்த அமைதலுடன் காணப்பட உதவிற்று. மேலும், இப்படியாக (அவருக்கு வந்த சோதனை) அப்போஸ்தலர் அறிவிக்கிற பிரகாரமாக அவரை உயிர்த்தெழுதலில் மகிமையடையச் செய்தது. இன்னுமாக இறுதியில் மனுக்குலம் மீதுள்ள சாபத்தை மாற்றிப்போடுவதன் மூலமாக மனுக்குலத்தின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் ஆசீர்வாதம் கடந்துவரும். அவர் மரணம்வரை உண்மை காண்பித்த விஷயமே மனுக்குலத்தின் மீது காணப்படும் சாபத்தை மாற்றிப்போடுவதற்கான அதிகாரத்தை அவருக்குக் கொடுத்தது.

தம்முடைய நண்பன் என அறிவிக்கப்பட்ட ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டார்

இயேசு இருந்த இடத்திற்கு யூதாஸ் பிரதான ஆசாரியனின் வேலையாட்களுடன் வந்தான். இந்த வேலையாட்கள் நம்முடைய காலக்கட்டத்திலுள்ள காவல்துறை படைகளுக்கு ஒப்பாக இருந்தார்கள். அவர்களில் சிலர் பட்டயங்களையும், இன்னும் சிலர் தடிகளையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள் என்பது, நமது கர்த்தருடைய வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. பேதுருவும், அப்போஸ்தலர்களில் மற்றொருவரும் தங்களிடத்தில் பட்டயத்தை வைத்திருந்தார்கள். அந்நாட்களில் பட்டயம் கொண்டு செல்வது விநோதமான காரியமல்ல என்றாலும், அப்போஸ்தலர்களிடம் அது காணப்படுவது விநோதமேயாகும். நமது கர்த்தர் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்படவில்லையென்பதை விவரிப்பதற்கே அப்போஸ்தலர்களிடம் பட்டயம் காணப்பட்டது என்பதில் ஐயமில்லை. நமது கர்த்தருடன்கூடப் பதினொரு திடகாத்திரமான சரீரமுடைய மனுஷர்கள் காணப்பட்டார்கள். மேலும், நமது கர்த்தர் தம்முடைய பாதுகாப்பிற்காக இவர்களுக்குக் கட்டளைக் கொடுப்பாரானால், அதற்கென்றே இவர்கள் தங்கள் ஜீவனையும் ஒப்புக்கொடுக்க தயாராக இருந்தார்கள். மேலும், இவர்களுள் ஒருவராகிய பேதுரு, தமது பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய காதை வெட்டினார். ஒருவேளை நமது கர்த்தர் கட்டளையிட்டிருப்பாரானால் அல்லது பேதுருவிடம் அவர் செய்ததுபோதாது எனக் கர்த்தர் தெரிவித்திருப்பாரானால், கர்த்தருக்கான இவர்களது போராட்டம் கடுமையாகக் காணப்பட்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை. கர்த்தரோ பேதுருவை அவருடைய பட்டயத்தை அவருடைய உறையிலேயே போட்டுவிடும்படி கூறினார். அதாவது, பேதுரு இம்மாதரியான மாம்சத்திற்குரிய ஆயுதங்களைக் கொண்டு தனது கர்த்தருக்காக யுத்தம் பண்ணக்கூடாது என்று கூறினார். இதற்கிடையில் வெட்டப்பட்ட காதுடைய வேலைக்காரனையும் கர்த்தர் சொஸ்தப்படுத்தினார். நமது கர்த்தர் தம்மையே ஒப்படைத்துச் சரணடைந்ததினிமித்தம் தமது அப்போஸ்தலர்கள் கைது செய்யப்படக்கூடாது என்ற நிபந்தனையை முன்வைத்தார்.

இப்படியாக, அப்போஸ்தலர்கள் தூக்கத்திலிருந்து கர்த்தரால் எழுப்பப்பட்டார்கள், அவரால் ஆச்சரியமடைந்தார்கள், கைது செய்யப்படுவதிலிருந்து அவரால் விலக்கப்பட்டுக் காணப்பட்டார்கள். மேலும், அவருடைய சீஷர்கள் அவர்களிடமிருந்து அவர்களுடைய கர்த்தர் கைது செய்து கொண்டுபோகப்படுவதையும் கண்டார்கள். அவர்கள் திகைப்புடனும், குழம்பிப்போன மனதுடனும் காணப்பட்டார்கள். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாகவே பல்வேறு தருணங்களில் இதைப்போன்ற சூழ்நிலைகள் சீக்கிரத்தில் எதிர்ப்பார்க்கப்படலாம் என நமது போதகர் அவர்களுக்குக் கூறியிருந்த போதிலும், அவர்கள் திகைப்புடனும், குழம்பிப்போன மனநிலையிலும் காணப்பட்டார்கள். “சோதனைகுட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என ஏற்கெனவே ஆண்டவர் கூறின பிரகாரம், அச்சமயமானது அவர்களுக்கும் சோதனையான சமயமாகக் காணப்பட்டது. அவருடைய வார்த்தைகளை அவர்கள் போதுமான அளவுக்குப் புரிந்து கொள்ளவில்லை. இன்னுமாக, சோதனை வேளையானது வருகையில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபடியால், அதற்கு அவர்கள் ஆயத்தமில்லாமலும் காணப்பட்டார்கள்.

நமது கர்த்தர் கைகள் கட்டப்பட்ட நிலையில் அன்னாவிடத்திற்கும், காய்பாவினிடத்திற்கும் இழுத்துச் செல்லப்பட்டார். அது இரவு நேரமாகவும், சுமார் ஒரு மணி அளவும் காணப்பட்டாலும், யூதர்களுடைய பிரதான அதிகாரிகளில் சிலரும், ஆலோசனை சங்கத்தின் அங்கங்களில் சிலரும் கூடி வந்திருந்தனர். அன்றைய இரவு இயேசு கைது செய்யப்படுவார் என்றும், இயேசுவின் சீஷர்களில் ஒருவன் இயேசுவைப் பிடித்து, கைது செய்யத்தக்கதாக அதிகாரிகளை வழி நடத்துவான் என்றும், இவ்விஷயங்களைப் பொதுவான ஜனங்கள் அறிந்துகொள்வதற்கு முன்பும், பஸ்கா வாரம் ஆரம்பிப்பதற்கு முன்பும், எவ்வளவு சீக்கிரமாய்ச் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் இயேசுவின் மரணம் அடுத்த நாள் சம்பவித்தாக வேண்டும் என்னும் அளவுக்கு இவ்விஷயங்கள் அவசரமாய்ச் செய்யப்பட வேண்டும் என்றும் இந்த யூத அதிகாரிகளுக்கும், ஆலோசனை சங்கத்தாரின் அங்கங்களுக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தபடியாலே, அவர்கள் உடனே கூடிவந்தார்கள். சூரியன் மறைந்தது முதல் சூரியன் உதிக்கும் வரையிலும், இடையில் காணப்படும் காலப்பகுதியில் மரணத் தண்டனைக்குரிய எந்த மனுஷனையும் விசாரணை செய்வது பிரமாணத்திற்கு விரோதமாய் இருந்தபடியால் இவர்கள் நடத்தின இந்த விசாரணையானது வழக்கத்திற்கு மாறான விஷயமாகும். சூரியன் உதித்த பிற்பாடே ஆலோசனை சங்கத்தார் எடுக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமானவைகள் என்று கருதப்படும். இவர்கள் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றத்தக்கதாக நியாயப்பிரமாணத்தை மீறுவதற்கும், இவர்கள் சித்தம் கொண்டவர்களாகக் காணப்பட்டார்கள்.

தேவதூஷணம் எனும் பயங்கரமான குற்றச்சாட்டு

இயேசு பிரதான ஆசாரியன் முன் நின்றுகொண்டிருக்கையில், அவருடைய சத்துருக்கள் அவருக்கு எதிராக சாட்சிகளைக் கொண்டுவந்து விசாரணை தொடர்ந்துக் கொண்டிருக்கையில், நமது கர்த்தர் தம்மைத் தற்காத்துக்கொள்ள எதுவும் முன் வைக்கவில்லை என்று சொல்லப்படுகின்றது. இன்னுமாக, ஏதோ ஒரு குற்றத்தை அவரிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவர்களுடைய நோக்கமாயிருந்தப்படியாலும், அவர்களுடைய இருதயத்தில் கொலைப்பாதகம் காணப்பட்டப்படியாலும், தற்காத்துக் கொள்வதற்கான பிரயாசங்கள் பயனற்றதாகவே காணப்படும். தேவதூஷணம் என்னும் குற்றச்சாட்டை நிலைவரப்படுத்துவதற்கே அவர்கள் நாடினார்கள். இந்தத் தேவதூஷணம் எனும் குற்றச்சாட்டானது, நியாயப்பிரமாணத்தின் கீழ் மரணத் தண்டனைக்கு ஏதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்றாக காணப்பட்டது. மேலும், இயேசு மரிக்க வேண்டும் என்பதே அவர்களுக்கு வேண்டிய காரியமாகவும் இருந்தது. இயேசு தம்மைத் தேவனுடைய குமாரன் என்று அறிவித்ததின் மூலம் தேவனுக்கு எதிராக தூஷணம் பேசினார் என்றும், ஆலயத்தை இடித்து அதை மூன்று நாளில் மீண்டும் கட்டுவதாக இயேசு அறிவித்ததின் மூலம் ஆலயத்திற்கு எதிராக தூஷணம் பேசினார் என்றும் அவர்களுடைய வாதம் காணப்பட்டது. ஒரு தீர்மானத்திற்குள் வந்தார்கள். எனினும், விடியும்வரை எதையும் அவர்களால் செய்ய முடியாது. இதற்கிடையில் ஆசாரியனுடைய வீட்டு முற்றத்தில் காணப்பட்ட குறுகிய மனப்பான்மையுடைய வேலைக்காரர்கள் கர்த்தர் மேல் காறி உமிழ்ந்து, அவருடைய கண்களைக் கட்டி, அவரை அடித்து, “உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள். மேலும், இப்படியாகவே விடியும்வரை அந்த மணி நேரங்கள் கடத்தப்பட்டன. இவைகள் கர்த்தருக்குச் சோதனைகள் என்று யூதர்கள் எண்ணினார்கள். ஆனால், கர்த்தருடைய சோதனைகள் அனைத்தும் கடந்துபோன காலங்கள்/மணி நேரங்களிலேயே காணப்பட்டது. இது யூதர்களுடைய பிரதான ஆசாரியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஆலோசனை சங்கத்தாரின் அங்கங்களுக்கும் மற்றும் யூத ஜனங்களுக்குமே சோதனையாக இருந்தது. இவர்கள் சத்தியம் அல்லது தப்பறையில் எதை நேசிக்கின்றார்கள் என்பதற்கும், நீதி மற்றும் அநீதியில் எதை நேசிக்கின்றார்கள் என்பதற்குமான சோதனையாக/பரிட்சையாகக் காணப்பட்டது. இவர்களோ அநீதியின் பக்கம் சாய முடிவு பண்ணினார்கள்.

இதற்கிடையில், அப்போஸ்தலனாகிய பேதுருவுக்கு மிகுந்த சோதனை ஏற்பட்டது. இவர் ஆசாரியனுடைய வீட்டின் முற்றத்தில் எப்படியோ வந்துவிட்டார். மேலும், இவர் முற்றத்தில் நின்று குளிர்க்காய்ந்து கொண்டிருக்கையில், இவரால் உள்ளே சம்பவிக்கும் விஷயங்களைப் பார்க்கவும், கேட்கவும் முடிந்தது. மாம்ச சுபாவத்தின் முதல் அம்சமாகிய தன் உயிரைக் காக்கும் தன்மையானது, இவரை மேலோங்கி தோற்கடித்து விட்டது. இன்னுமாக, ஒருவேளை தான் இயேசுவின் பின்னடியார்களில் ஒருவனாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டால், தானும் போதகருக்கு ஏற்பட்ட நிலையையே அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று பேதுரு யோசித்து, இயேசுவின் மீதுள்ள பிரச்சனைகள், தன் மீது வராமல் தடுக்கப்பட வேண்டுமென விரும்பி, தனக்கு இயேசுவைத் தெரியும் என்ற உண்மையைப் பேதுரு மறுதலித்த விஷயத்தில் மேற்கூறிய மாம்சத்தின் அம்சமானது காட்சியளித்தது. இரண்டாம் முறையும் பேதுரு தனக்கு இயேசுவை யார் என்று தெரியாது எனச் சொல்கையில் சத்தியமும் பண்ணினார். பாவம் பேதுரு! பேதுருவுக்கு அது கடுமையான சோதனையின் வேளையாய் இருந்தது. ஆனால், அந்தோ பரிதாபம் பேதுரு தோற்றுவிட்டார். ஒருவேளை கிறிஸ்துவினிமித்தமாகவும், தான் இயேசுவின் சீஷனென்று ஒப்புக்கொள்வதினிமித்தமாகவும், பேதுரு ஏதேனும் பாடுகள் [R3367 : page 152] பட்டிருப்பாரேயானால் பேதுரு எவ்வளவாகக் கனப்படுத்தப்பட்டிருப்பார்! ஆனால், ஒருவேளை பேதுரு அப்படிச் செய்திருப்பாரேயானால், பேதுருவின் அனுபவங்கள் வாயிலாகக் கற்பிக்கப்படும் மிகுந்த விலையேறப்பெற்ற படிப்பினைகளை அனைத்துக் கர்த்தருடைய பின்னடியார்களும் இழக்க நேர்ந்திருக்கும்.

இச்சம்பவத்தில் வெளிப்பட்ட பேதுருவின் பெலவீனங்கள் மற்றும் பிற்பாடு அவர் மிகவும் கசந்து, அழுது, அறிக்கை செய்து மன்னிப்புப் பெற்றுக்கொண்டதான விஷயங்கள் கர்த்தருடைய பின்னடியார்கள் அனைவருக்கும் மிகுந்த ஆசீர்வாதமாய் [R3368 : page 152] சில விஷயங்களில் அமைந்துள்ளது. அதாவது, பேதுருவைப் போன்று கர்த்தருடைய பின்னடியார்களிடத்திலும், பெலவீனங்கள் வெளிப்படும்போதும், பேதுரு செய்த தவறில் சில சமயம் கர்த்தருடைய பின்னடியார்களும் விழுந்து காணப்படும்போதும் ஆசீர்வாதமாய் அமைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அகப்பட்டவர்கள் தங்கள் தவறுகளுக்காக மனங்கசந்து அழ வேண்டும் என்பதை பேதுருவிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளனர்; இன்னுமாக இப்படிப்பட்ட நிலையில் அகப்பட்டவர்கள், பேதுரு கர்த்தரினால் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மனப்பூர்வமாக மன்னிக்கப்பட்டதையும், அவர் இந்த அனுபவங்கள் வாயிலாக கற்றுக்கொண்ட பாடமானது, அவருடைய ஜீவியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும், இவை அவருக்கு அனுகூலமாகவே இருந்தது என்பதையும் காண்கையில், தாங்கள் முற்றிலுமாய்த் தள்ளிவிடப்படவில்லை என்பதையும் பேதுருவிடமிருந்து கற்றுக்கொண்டுள்ளனர். பேதுருவைக் குறித்து இப்படி ஒரு கூற்றுக் காணப்படுகின்றது; அது என்னவெனில், இந்தச் சம்பவம் நடந்த பிற்பாடும் கூட, பேதுரு தினந்தோறும் சேவல் கூவுகின்ற நேரத்தில் எழுந்திருந்து அந்த நாளில் வெளிப்பட்ட தனது பெலவீனத்தையும், பின்னர்ப் பெற்றுக்கொண்ட மன்னிப்பையும் நினைவுப்படுத்திப் பார்ப்பாராம். அது பேதுருவுக்குச் சோதனை வேளையாக இருந்தது. மேலும், இதைப்போன்ற சோதனை வேளைகள் நம் அனைவருக்கும் கூட வரும். எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் கர்த்தரை மறுதலித்து விடாமல் பார்த்துக்கொள்ளக்கடவோம். இன்னுமாக நமது கர்த்தர் தம்மையும், அவருடைய வார்த்தைகளையும், அவருடைய சகோதர சகோதரிகளையும் சரிசமமான நிலையில் வைத்து மதிப்பிடுகின்றார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும், அவருடைய வார்த்தைகளை மறுதலிப்பவர்கள் கர்த்தரையே மறுதலித்துவிடுகின்றனர் என்றும், அவருடைய தீர்க்கத்தரிசனமான வார்த்தைகளை மறுதலிப்பவர்கள், கர்த்தரையே மறுதலித்து விடுகின்றனர் என்றும் அவர் நமக்குத் தெரிவித்துள்ளார்.

ரோமுக்கு எதிரான துரோகம்

சூரியன் உதயமாகிய பின்னர், ஆலோசனை சங்கத்தார் சட்டப்பூர்வமாகக் கூடினார்கள். மேலும், பிரதான ஆசாரியன் தான் சாட்சிகளை விசாரித்ததாகவும், இயேசு தேவனுக்கும், ஆலயத்திற்கும் எதிராக தூஷணம் பேசினது உண்மையென நிரூபிக்கப்பட்டுவிட்டன என்றும் கூறியவைகளை ஆலோசனை சங்கத்தார் ஏற்றுக்கொண்டு, இயேசு மரிக்க வேண்டும் என்ற தீர்ப்பில் முடிவுக்கு வந்தார்கள். பின்னர் இவ்விஷயத்தை எப்படி ரோம தேசாதிபதியான பிலாத்துவுக்கு முன்பாக வைப்பதெனத் தனியாக ஆலோசனை பண்ணினார்கள். தேவதூஷணம் போன்ற எந்தக் குற்றச்சாட்டிற்கும் பிலாத்துக் கவனம் காண்பிக்கமாட்டார் என்றும், தேவதூஷணம் எனும் குற்றம், ரோம சட்டத்தின் கீழ் ஒரு குற்றமேயல்ல என்று கூறுவார் என்றும் அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே பிலாத்துவுக்கு முன்பாக இயேசுவுக்கு எதிராக சாட்டப்பட வேண்டிய குற்றம், இயேசு ரோம அரசாங்கத்திற்கு எதிரான துரோகி என்றதாகவே காணப்பட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள். இன்னுமாக ரோம அரசாங்கத்திற்கு எதிரான இராஜ துரோகம் எனும் குற்றச்சாட்டிற்கு ஆதரவாக, அவர்கள் இராயனுக்கு மேலாக வேறொரு இராஜா இருக்கின்றார், அது மேசியாவாகிய தாம்தான் என்று இயேசு கூறினதாகக் கூறினார்கள். இன்னுமாக, இக்குற்றச்சாட்டிற்கு ஆதரவாகக் காணப்படும் வண்ணம், இயேசு இராயனுடைய அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டாம் என்று தடுத்தார் எனப் பொய்யுரைத்தார்கள். இராயனுக்கு வரி செலுத்தும் விஷயத்தில் இயேசுவைச் சிக்கவைக்கும்படியே இரண்டு தினங்களுக்கு முன்னர் முயற்சி செய்தனர். ஆனால் “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்” என்ற இயேசுவின் பதிலோ அவர்கள் எதிர்ப்பார்த்ததற்கு எதிர்மாறாகக் காணப்பட்டது (மாற்கு 12:17). இன்னும் சொல்லப்போனால், இயேசு தமக்காகவும், பேதுருவுக்காகவும் வரி செலுத்தும்படிக்குப் பேதுருவை மீனிடம் அனுப்பினார். ஆனால் இவர்களின் இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள், அவர்கள் முன்வைத்த இராஜ துரோகம் எனும் முக்கிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவளிக்கும் விதமாகக் காணப்பட்டது.

இப்பொழுது பிலாத்துவுக்கான சோதனை வேளை வந்தது. பிலாத்து நியாயாதிபதியாக நின்றார். மேலும், இவ்வழக்கிலுள்ள நீதியையும், அநீதியையும், உண்மையையும், பொய்யையும், சரியையும், தவறையும் கண்டறிவது இவருடைய வேலையாக ஒப்புவிக்கப்பட்டிருந்தது. எத்துணை அருமையான ஒரு வாய்ப்பை இவர் பெற்றிருந்திருக்கின்றார்! பொறாமையினிமித்தமே அவர்கள் இயேசுவைக் கையளித்துள்ளார்கள் என்பதைப் பிலாத்து உணர்ந்த மாத்திரத்தில் பிரதான ஆசாரியனின் தீய எண்ணங்களுக்கு பிலாத்து உடன்படுவதற்கு ஒருவேளை மறுத்திருந்திருப்பாரானால், ஒருவேளை பிலாத்து, பிரதான ஆசாரியனையும், ஆலோசனை சங்கத்தாரையும், ஜனக்கூட்டத்தையும் கலைத்து அனுப்பிவிட்டு, இயேசுவை விடுவித்து, அவர்களில் எவரேனும் இயேசுவுக்கு ஏதேனும் தாக்குதல் கொடுப்பார்களானால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என எச்சரித்துவிட்டிருந்திருப்பாரானால், சரித்திரத்தின் கண்களுக்கு இது எத்துணை பெருந்தன்மையான காட்சியாகக் காணப்பட்டிருந்திருக்கும்! இப்படியாக நடக்கவில்லை என்றபோதிலும், பிலாத்துவின் நடத்தையும், நற்பெயரும் பாராட்டத்தகுந்ததாகவும், கவருவதாகவும் காணப்படுகின்றது. பிலாத்துவுக்கு ஒரு சோதனை/பரிட்சை வந்தது என்றும், அதில் அவர் நேர்த்தியான பாகத்தை எடுக்க தவறிவிட்டார் என்றும் நாம் கண்டாலும், இந்த தேசாதிபதியைப் பெரும்பாலானோர் பார்க்கின்ற அவமதிப்பான பார்வையில் நாம் பார்ப்பதில்லை.

பிலாத்து ஒரு யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ இராமல், தேவன் அற்றவனும், உலகத்தில் எவ்விதமான நம்பிக்கையும் இல்லாத புறஜாதி மனுஷனானவன் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். பிலாத்து எதை நம்பிக்கொண்டிருப்பவனாக இருந்திருந்தாலும் சரி, ஆனால் அவனுக்கு யூத மதத்தில் எவ்விதமான நம்பிக்கையும் இல்லை என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். பிலாத்து இயேசுவில் விசுவாசம் வைக்கவுமில்லை, இன்னுமாக மேசியா குறித்ததான வாக்குத்தத்தங்களை அவர் ஒரு பொருட்டாக எண்ணினதுமில்லை. பிலாத்து ரோமிலுள்ள இராயனுடைய அரசாங்கத்தின் பிரதிநிதியாகக் காணப்பட்டு, ஒரு தேசாதிபதியாகவே காணப்பட்டார். யூதர்கள் மற்றும் அவர்களுடைய பண்டிகைகள் முதலானவற்றின் மீது எவ்விதமான அக்கறை கொண்டிராத பிலாத்து, யூதர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவிதத்தில் தனக்கென்று சொந்த விருப்பங்களும், உவகைகளும் கொண்டிருந்த நபர் ஆவார். பிலாத்துவுக்குத் தேவன் யார் என்பது தெரியாததினால், அவர் தேவனுக்கு இணங்க வேண்டியதில்லை, ஆனால் பிலாத்து இராயனை அறிந்திருந்தபடியினால் அவருக்கே அவர் இணங்க வேண்டும். மேலும், பிலாத்துப் பட்டணத்தில் சமாதானத்தையும், அமைதியையும் தக்கவைத்துக்கொண்டு, ரோமின் அதிகாரத்தையும், மரியாதையையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றே இராயன் இவரிடம் எதிர்ப்பார்த்தார். நாட்டில் சமாதானம் தக்க வைக்கப்படுவதற்கென ஒன்றல்ல, பத்தல்ல, ஆயிரக்கணக்கான அப்பாவி மனுஷர்கள் கொல்லப்பட்டாலும், அது ரோமுக்கு ஒரு பொருட்டல்ல. ஆகவே ரோம தேசாதிபதியாக இருந்த பிலாத்து, எருசலேமுக்குள் சமாதானத்தை நிலவச் செய்வதே அவருடைய பிரதான கடமையாகும்.

நீர் யூதர்களின் இராஜாவா?

மேற்கூறிய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், பிலாத்துவின் நடவடிக்கை நீதியானதும், சரியானதுமாய் உள்ளது என்று நாம் கூறலாம்; ஆனாலும் பிலாத்துச் செய்திருக்கலாம் என்று நாம் கூறும் நடக்கைகளோடு இந்த நடவடிக்கையை நாம் ஒப்பிட்டுப் பார்க்கையில் இது நீதியானதும், சரியானதுமல்ல. பரிசேயர்களுடைய குற்றச்சாட்டைப் பிலாத்து உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் மாய்மாலக்காரர்கள் எனப் பிலாத்து அறிந்திருந்தார். உலகத்தின் வரலாற்றிலேயே, எல்லாக் காலக்கட்டங்களிலும் காணப்பட்ட மிகுந்த பொல்லாப்பு என்னவெனில், அது மதம் என்னும் போர்வையின் கீழ்ப் பகட்டாய் சுற்றித்திரியும் பொல்லாப்பே ஆகும்; மேலும் சத்தியம், உண்மை, நன்மை என்ற போர்வையில் செய்யப்படும் தீமைகளேயாகும் என்று நாம் இங்குக் குறிப்பிட விரும்புகின்றோம். பிலாத்துத் துரோகக் குற்றத்திற்கான விவரங்களைக் கேட்டபோது, பிரதான ஆசாரியர்கள் ஆச்சரியமடைந்தனர்; ஏனெனில், அவர்கள் தங்கள் வாக்குகள் எவ்விதமான நிரூபணங்களும் இல்லாமலேயே ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஒருவேளை இவர்களே ஒரு யூதன், இராஜ துரோகியாகக் காணப்பட்டு, மரணத்திற்குப் பாத்திரனாய் இருக்கின்றான் எனக்கருதினால், நிச்சயமாக பிலாத்துச் சந்தேகிக்க வேண்டும்; ஏனெனில் இவர்கள் தங்கள் இனத்தாரில் ஒருவன் இப்படியானதொரு குற்றச்சாட்டின் கீழ் அழிக்கப்படுவதை விரும்பமாட்டார்கள் என்று பிலாத்துவுக்குத் தெரியும். பிலாத்து இயேசுவைப் பார்த்தார். இயேசுவினிடத்தில் குற்றவாளிக்குரிய எந்தத் தோற்றத்தையும் பிலாத்துவினால் பார்க்கமுடியவில்லை. இன்னுமாக, கலகவாதிகளின் தலைவனுக்குரிய எவ்வம்சமும் அவரிடத்தில் பிலாத்துவால் பார்க்க முடியவில்லை. மாறாக சாந்தமும், பொறுமையும், நீடியபொறுமையும், அன்புமே இயேசுவின் அம்சங்களாகப் பிலாத்துவுக்குத் தெரிந்தது. “நீர் யூதருடைய இராஜாவோ” என்று பிலாத்து இயேசுவிடம் வினவினார். நமது கர்த்தரின் பதில் “ஆம்” என்ற வார்த்தைக்குச் சரிசமமாக இல்லை எனினும், அவருடைய பதிலானது தாம் தம்மை இராஜா என அறிவித்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவிக்க விரும்பவில்லை என்பதையும் [R3368 : page 153] தெரிவிக்கும் விதமாகவும் காணப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தேவனுடைய இராஜ்யம் குறித்து விவரிக்க முற்படுவது என்பது தகுதியாய் இருந்திருக்காது. ஏனெனில் அங்கு இருப்பவர்களில் எவருமே கேட்பதற்கோ, ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது புரிந்துகொள்வதற்கோ ஆயத்தமான நிலையில் காணப்படவில்லை. இன்னுமாக அப்படி முயற்சிப்பது என்பது பன்றிகள் முன்பு முத்துக்களைப் போடாதே என்று நமது கர்த்தர் கற்பித்ததற்கு முரண்பாடாகவே அமைந்துவிடும். அங்கிருந்தவர்கள் இராஜ்யமானது ஆவிக்குரிய இராஜ்யமாக இருக்கும் என்பதையோ, அதற்குப் பூமிக்குரிய பிரதிநிதிகள் காணப்படுவார்கள் என்பது முதலான காரியங்களையோ புரிந்துகொள்வதற்கு ஆயத்தமற்ற நிலையில் காணப்பட்டார்கள்.

இதற்கிடையில் பிரதான ஆசாரியர்கள் அவர் மேல் கடுமையாய்க் குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார்கள். இயேசுவோ, எதுவும் பேசாமல் காணப்பட்டார். “அவர் ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்; மயிர்க்கத்தரிக் கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்” (அப்போஸ்தலர் 8:32). இயேசு தம்மைத் தற்காத்துக்கொள்ள முயற்சிக்கவுமில்லை, தமக்கு எதிராக வழங்கப்படும் தீர்ப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் அவர் அவ்விடத்தில் காணப்படவில்லை. மாறாக, அவர் தம்முடைய ஜீவனைப் பலி செலுத்தவும், ஜீவனை ஒப்புக்கொடுக்கவும், எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் தம்முடைய ஜீவன் எடுக்கப்பட அவர் அனுமதிக்கத்தக்கதாகவுமே அவ்விடத்தில் காணப்பட்டார். தமக்கு அளிக்கப்படப்போகும் தீர்ப்புகள் குறித்து எவ்விதமான கலக்கமும், திகைப்பும் இல்லாமல் இயேசு காணப்படுவதைக்குறித்துப் பிலாத்து ஆச்சரியமடைந்தார். இவைகள் அனைத்தும் நம்முடைய கர்த்தருடைய ஜீவியமும், போதனைகளும் எவ்விதத்திலும் ரோமனின் நலனுக்கடுத்த விஷயங்களுக்கு ஆபத்து விளைவிப்பவைகள் அல்ல என்றும், பிரதான ஆசாரியர்கள் குற்றஞ்சாட்டும் அனைத்தும் தவறானவைகள் என்றும் அதிகமாக நிரூபித்துக் காட்டியதோடு பிரதான ஆசாரியர்கள் இயேசுவுக்கு எதிராக உச்சக்கட்டமான எதிர்ப்பைக்காட்டும் வெறுப்பின் ஆவியைப் பெற்றிருந்தார்கள் என்பதையும் வெளிப்படுத்திற்று.

இயேசுவுக்குப் பதிலாக பரபாஸை பரிந்துரைத்தல்

கொஞ்சம் காலத்திற்கு முன்னதாக ரோம அதிகாரத்திற்கு எதிரான, உண்மையான கலகச் செயல்பாடுகள் சம்பவித்துக் கொண்டிருந்தன. மேலும், இதன் காரணமாகவே பரபாசும், மற்றவர்களும் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். கூட்டத்தில் யாரோ ஒருவர் பிலாத்துவை நோக்கி இக்காலக்கட்டத்தில் அவர் வருடந்தோறும் செய்கிற தமது வழக்கத்தின் முறையில் செய்யும்படிக்குக் கூக்குரல் இட்டார். அதாவது கருணையும், தயவும் காண்பிக்கும் வண்ணமாக, ஏதோ ஒரு கைதியை விடுவிக்கும் வழக்கத்தைச் செய்யும்படிக்குக் கூக்குரலிட்டார். இதைக் கேட்ட மாத்திரத்தில் உடனே ஜனக்கூட்டம் முழுவதும் அதைப் பிடித்துக் கொண்டு அதையே கூக்குரலிட ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே, “யூதருடைய இராஜாவை நான் உங்களுக்காக விடுதலைப்பண்ண உங்களுக்கு மனதுண்டா” என்று பிலாத்து அவர்களிடம் வினவினார். இயேசுவை விடுவிக்கும்படிக்கு ஆதரவளிக்கத்தக்கதாக ஜனங்கள் மத்தியில் கொஞ்சம் உற்சாகம் ஏற்படுத்த வேண்டும் என்பதே பிலாத்துவின் எண்ணமாக இருந்தது. ஏனெனில், பிரதான ஆசாரியர்களே இயேசுவுக்கு விரோதமாகக் காணப்படுகிறார்களே ஒழிய, ஜனங்கள் இயேசுவுக்கு விரோதமாகக் காணப்படவில்லை என்று பிலாத்து உணர்ந்துகொண்டதாக நாம் வாசிக்கின்றோம். பிலாத்து இயேசுவின் சார்பாக கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ஜனங்களை இழுத்து, அவர்களுடைய வேண்டுதலின்படி இயேசுவை விடுவித்துவிடலாம் என்று முயற்சித்தார். ஆனால் இயேசுவைக் குற்றம் சாட்டின பிரதான ஆசாரியர்களோ, கலகக்காரனாகிய பரபாசை விடுவிக்கக்கோரும்படிக்கு ஜனங்கள் மத்தியில் தூண்டிவிட்டார்கள். ஒரு புறஜாதி தேசாதிபதியின் முன்னிலையில் இப்படிப்பட்ட விதத்தில் இந்தப் பிரதான ஆசாரியர்கள் தங்கள் நயவஞ்சகத்தை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு வெட்கம் ஏற்படவில்லையோ என்று சிலர் யோசிக்கலாம். அதாவது, இயேசுவை ரோமுக்குத் துரோகி என்று குற்றஞ்சாட்டி அவரைச் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று கூறின அதேசமயத்தில், கலகவாதி என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லாத பரபாசை விடுவிக்கும்படி வற்புறுத்தி, இவர்கள் தங்கள் நயவஞ்சகத்தை வெளிப்படுத்தியதில் அவர்களுக்கு நாணமில்லையோ என்று சிலர் யோசிக்கலாம்.

இயேசுவின் பெரும்பான்மையான ஊழியங்கள் கலிலேயாவில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் காரியங்களைக் கேட்ட பிலாத்து, கலிலேயாவிற்கு அதிகாரியாகவும், தற்சமயம் எருசலேமுக்கு வந்திருப்பவருமான ஏரோதினிடத்தில் இவ்வழக்கை ஒப்புவித்து ஓய்ந்துவிடலாம் என எண்ணினார். ஆகவே, இயேசு கட்டுண்ட நிலையில் ஏரோதிடம் அனுப்பப்பட்டார். மேலும், இவரோடுகூட இவர் ஒரு கலிலேயனாக இருக்கின்றபடியால், ஏரோதின் அதிகாரத்தின்/தீர்ப்பின் கீழ் இவருடைய வழக்கை ஒப்புவிக்க பிரியப்படுவதாகவும் விளக்கவுரை எழுதி பிலாத்து அனுப்பினார். உண்மையைச் சொல்லப்போனால், பிலாத்துத் தன்னிடமிருந்த இயேசுவின் வழக்கு மாறிப்போவதில் மகிழ்ச்சிக்கொண்டார். ஏனெனில், குற்றமற்ற மனுஷனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனால், அதேசமயம் ரோம அரசாங்கத்திற்கு எதிரான துரோகியெனப் பிரதான ஆசாரியர்களால் குற்றஞ்சாட்டப்படும் ஒருவரை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்க தான் ஒருவேளை மறுத்துவிட்டால், தனக்கெதிராக பிரதான ஆசாரியர்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களைக் குவிப்பார்கள் என்றும் உணர்ந்துகொண்டவராகக் காணப்பட்டார். இப்படிப்பட்ட தனது நடத்தைகள் புரட்சிக்கு வழிநடத்துபவைகள் என ரோம் கருதும் என்றும் பிலாத்து உணர்ந்துகொண்டார். இன்னுமாக ஒருவேளை பிலாத்து தான் அம்மனுஷனிடத்தில் கலகத்திற்கான எவ்வித அபாயம் காணப்படவில்லை என்றும், இயேசு அமைதியான குற்றமற்ற மனுஷன் என்றும் விவரித்துக் கூறினாலும், ரோமில் உள்ளவர்கள் (இராயன் மற்றும் மேலதிகாரிகள்) பிலாத்து இவ்விஷயத்தில் மிகவும் ஈடுபாடு காட்டுகின்றார் எனவும், பிலாத்து ரோம அதிகாரத்திற்கு எதிராக வார்த்தையிலோ, கிரியைகளிலோ கலகத்திற்குத் தொடர்புடைய நிலையில் மிகச் சிறிய அளவு குற்றச்சாட்டைப் பெற்றிருக்கும் எவனையும், எல்லோரையும் மரணத்தீர்ப்புக்கு ஒப்புக்கொடுப்பதில் எப்போதும் தயாராக இருந்திருக்க வேண்டும் எனவும் யோசிப்பார்கள் எனப் பிலாத்து உணர்ந்து கொண்டார். இப்படி நடந்தால் சந்தேகத்திற்கு இடமின்றி பிலாத்து தனது பதவியை இழக்க வேண்டும். இன்னுமாக மீதமான வாழ்க்கை முழுவதையும் கீழ்நிலையிலேயே கழிக்கவும் நேரிடும். பிலாத்து மிகவும் சோதனையான நிலையில் காணப்பட்டார்.

ஏரோதின் வாய்ப்பு மற்றும் தோல்வி

இயேசு ஏரோதின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டுவரப்பட்டது என்பது, ஏரோதுக்கான சோதனை காலத்தைச் சுட்டிக்காட்டியது. ஏரோது இயேசுவை எப்படி வரவேற்க போகின்றார்? நீதி, சத்தியம், நியாயம், தூய்மை மற்றும் நன்மை தொடர்புடைய விஷயங்களில் இவருடைய (ஏரோதினுடைய) நடக்கை எப்படியாகக் காணப்படும்? இதே ஏரோதுதான் சில வருடங்களுக்கு முன்னதாக யோவான்ஸ்நானனைச் சிரைச்சேதம் பண்ணினவர் ஆவார். மேலும் இந்த ஏரோது இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டபோது, யோவான்ஸ்நானன்தான் இயேசுவாக வந்துள்ளார் எனக் கூறினவராகக் காணப்பட்டார். ஏரோது இயேசுவைக் காண்பதில் மகிழ்ச்சிக் கொண்டிருந்தார் என்றும், இயேசு செய்ததாக தான் கேள்விப்பட்ட அற்புதங்களில் சிலவற்றை இயேசு தனக்குச் செய்துகாட்டுவார் என எதிர்பார்த்ததாகவும், இயேசு அவருக்கு முன்பு அமைதியாகக் காணப்பட்டார் என்றும், இப்படிப்பட்ட ஒரு மனுஷன் முன்பு அவர் பேசுவதற்கு எதுவுமில்லை என்றிருந்தார் என்றும் நாம் வாசிக்கின்றோம். இத்தகைய இயேசுவின் நடத்தை ஏரோதுக்குக் கடிந்துகொள்ளுதலாக இருந்தாலும், இந்த அவருடைய நடத்தையானது, அவருடைய மற்ற அனைத்து நடத்தைகளுக்கும் இசைவாகவே உள்ளது. அதாவது, அன்றைய தினமே தாம் மரிக்க வேண்டியதாகக் காணப்படும் தெய்வீக நோக்கம் நிறைவேறுவது தடைபடக்கூடாது என்ற இயேசுவினுடைய தீர்மானத்திற்கு இசைவாகவே இருந்தது.

இயேசு தனக்குப் பதிலளிக்காததையும், தன்னுடைய மகிழ்ச்சிக்காக எந்த அற்புதங்களையும் செய்யாததையும் கண்ட ஏரோது, இயேசுவுக்கு இராஜாவைப்போன்று [R3369 : page 153] வஸ்திரம் தரிப்பிக்கப்படவும், அவரைக் கேலி பண்ணவும் தனது சேவகர்களுக்கு அனுமதி வழங்கினான். இன்னுமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கே இப்படி வஸ்திரம் தரிக்கச்செய்து, அவர்களைக் கேலியாக வணங்கி, அவர்களைக் குட்டுவது, சேவகர்களுடைய அன்றைய கால வழக்கமாக இருந்தது. இவைகளை இயேசுவுக்குச் செய்தபிற்பாடு அவர் பிலாத்துவினிடத்தில் திரும்ப அனுப்பப்பட்டார். இன்னுமாக, இப்படிப் பிலாத்து நடந்துகொண்டதைப் பாராட்டுகின்றதாகவும், இது முதல் பிலாத்துவின் அதிகாரத்திற்கு உட்பட்ட விஷயங்களில் தான் தலையிடுவதைக் குறைத்துவிடுவதாகவும் ஏரோது தெரிவித்தார். இதுமுதல் முன்பு எதிரிகளாக இருந்த பிலாத்துவும், ஏரோதும் நண்பர்களானார்கள்.
அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாம்

இயேசுவின் வழக்கானது மீண்டும் பிலாத்துவினிடத்தில் திரும்பினபோது, பிரதான ஆசாரியர்கள் தங்கள் திட்டங்கள் தோல்வியடைந்துவிடுமோ என அச்சம் கொண்டு இயேசுவுக்கு மரணத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையில் விடாப்பிடியுடன் காணப்பட்டதோடில்லாமல், அதைக்குறித்துக் கூக்குரலிடும்படிக்கு ஜனக்கூட்டத்தையும் தூண்டிவிட்டார்கள். சுமார் ஆறுமுறை பிலாத்து இயேசு குற்றமற்றவர் என்று அறிவித்தார். மேலும், பிலாத்துவுக்கு இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் என நாம் ஏற்கெனவே பார்த்து அந்த நிலையினிமித்தம் அவர் யூதர், ஆசாரியர்கள் மற்றும் ஜனங்களின் கோரிக்கையை முற்றிலும் நிராகரிக்க [R3369 : page 154] கொஞ்சம் தயங்கினார். அதிலும், விசேஷமாக “இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி” என்ற வார்த்தைகள் பேசப்பட்டதைக் கேட்டபோது, பிலாத்துத் தயங்கினார் (யோவான் 19:12). இப்படிப்பட்ட விஷயங்களிலுள்ள நியாயத்தைத் தனது மேலதிகாரிகள் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று உணர்ந்த பிலாத்து, இவ்விஷயத்தில் யூதர்களைத் திருப்திபடுத்துவதற்கான எல்லா வழிகளையும் கையாண்டார். இதில் முதல் படியாக இயேசு சவுக்கினால்/வாரினால் அடிக்கப்படும்படிக்குக் கட்டளையிட்டார். வாரினால் அடிப்பதின் மூலம் இயேசுவின் இரத்தத்திற்காக வெறிகொண்டிருக்கும் அவருடைய சத்துருக்கள் திருப்தியடைவார்கள் எனப் பிலாத்து எதிர்பார்த்தார். இதற்கிடையில், பிலாத்துவின் மனைவி இயேசுவைக் குறித்துச் சொப்பனம் கண்டதாகவும், அவருக்கு எதிராக எதுவும் செய்துவிட வேண்டாம் எனவும் வலியுறுத்திப் பிலாத்துவுக்குத் தூது அனுப்பினாள். இம்மாதிரியான சூழ்நிலைகளில் ஓர் உலகப்பிரகாரமான மனுஷன் என்ன செய்வான் என்று எதிர்பார்க்கப்படலாமோ, அவை அனைத்தையும் பிலாத்துச் செய்தான். ஆனால், இவ்விடத்தில்/இந்தச் சூழ்நிலைகளின் கீழ் ஒரு கிறிஸ்தவன் காணப்பட்டிருந்திருப்பானானால், அவன் செயல்பாடு வித்தியாசமாகக் காணப்பட்டிருந்திருக்கும்; அதாவது நீதியின் மீது சராசரியான அன்பைக் காட்டிலும் அதிகம் அன்பைக் கொண்டவனும், நீதிக்காக அனைத்து நலன்களையும் தியாகம் செய்ய விருப்பம் கொண்டவனுமான கிறிஸ்தவனோ அல்லது கிறிஸ்தவ செல்வாக்கின் கீழ்க்காணப்படும் ஒருவன் இவ்விடத்தில் / இந்தச் சூழ்நிலைகளின்கீழ் இருக்கும்போது, வித்தியாசமான செயல்பாடுகளே அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படலாம்.

இயேசுவைக் கொன்றுபோட வகைத் தேடிக்கொண்டிருந்தவர்களிடமிருந்து இயேசுவை விடுவிக்கும்படியான முயற்சிக்குத் தொடர்பாகவே இயேசுவை முன் கொண்டுவந்து நிறுத்தி, “இதோ இந்த மனுஷன்” என்று பிலாத்துக் கூறினான். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையின் போது, நமது கர்த்தரிடத்தில் நிலவின அமைதியும், அவருடைய முகபாவனையும் பிலாத்துவை மதிப்புக் கொடுக்கத்தக்கதான வியப்பிற்குள் ஆழ்த்தியது என்பது, அவர் மேற்கூறின “இந்த வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. அவருடைய வார்த்தைகள் இப்படியாக அர்த்தம் கொடுக்கின்றதாய் இருந்தது. அதாவது, “நீங்கள் சிலுவையில் அறையும்படிக்குக் கூறிக்கொண்டிருக்கின்ற இம்மனுஷனைப் பாருங்கள்! யூதர்களே இம்மனுஷனைப் போன்ற ஒரு நபர் உங்கள் தேசத்தில் காணப்படுவதில்லை. இவருக்குச் சமமான ஒரு மனுஷன் எங்குமே இருக்கமாட்டான் என நான் எண்ணுகின்றேன்!” ஆனால் இவை அனைத்தும் வீணே. ஜனங்கள் பரவசமடைந்தவர்களாக நமது கர்த்தருடைய இரத்தத்திற்காகக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தார்கள். பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக் கொடுப்பதற்கு முன்னதாக தான் இத்தீர்ப்பை விரும்பவில்லை என்பதற்கும், இயேசுவுக்கு மரணத்தீர்ப்பு வழங்க அவர்கள் தன்னை வற்புறுத்தினார்கள் என்பதற்கும், இதற்குப் பொறுப்புத் தானல்ல என்பதற்கும், தான் குற்றம் புரிந்தவன் அல்ல என்பதற்கும் அக்காலக்கட்டத்தின் அடையாள வழக்கத்தில், ஒரு காரியத்தைப் பிலாத்துச் செய்தார். “கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தினத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்துக் கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்” (மத்தேயு 27:24).

இந்தப் பரிட்சைகளின் முடிவு/விளைவு அல்லது இவர்களின் தவறுகளுக்கான தண்டனை

இப்பாடத்தில் நாம் எத்தனை பரிட்சைகள், சோதனைகளைப் பார்த்துள்ளோம். இப்பொழுது முடிவுகளை நாம் சுருக்கமாகப் பார்க்கலாம். யூதாஸ் தனக்கான பரிட்சையில்/சோதனையில் தோற்றுப்போனதின் விளைவாக தனது சொந்த கைகளினாலே நாண்டுகொண்டு செத்துப்போனான். மரணத் தண்டனை தீர்ப்பு அளிப்பதற்கு விருப்பமற்ற நிலையில் செயல்பட்ட கருவியாகிய பிலாத்து, யூதர்கள் அளவுக்குக் குற்றம் செய்தவனாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் காலத்திற்குள்ளாகவே ரோம தேசாதிபதிக்குரிய தனது பணியை இழக்க நேரிட்டு, மனம் தளர்ந்து போய்த் தற்கொலை செய்து கொண்டான். பிரதான ஆசாரியனாகிய அன்னாவோ இச்சம்பவங்களுக்குப் பின்னர் வாரினால் அடிக்கப்பட்டு, தெருக்கள் வழியாக தரையில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொலைச் செய்யப்பட்டார். “சிலுவையில் அவரை அறையும்” என்றும், பிலாத்துவுக்குப் பிரதியுத்தரமாக, “இவனுடைய இரத்தம் எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் வரக்கடவது” என்றும், கூக்குரலிட்ட ஜனங்கள் சிறு காலப்பகுதிக்குள்ளாக இரத்த ஸ்நானத்திற்குள்/குளியலுக்குள் கடந்து சென்றார்கள்; இவர்கள் மீது இந்த அனுபவங்கள் எருசலேம் முற்றிலும் அழிக்கப்பட்ட போது வந்தது; மேலும் இவர்களுடைய பட்டணம் முழுமையாக அழிக்கப்பட்ட போது, ஆயிரக்கணக்கானோர் ஜீவனை இழந்தனர்; பாலஸ்தீனியாவில் முழு யூதர் அரசாங்கமும் கவிழ்க்கப்பட்டது; ஜீவன் தப்பினவர்கள் பல்வேறு தேசங்களிலும், ஜனங்களுக்குள்ளும் சிதறடிக்கப்பட்டார்கள். இவர்கள் தங்கள் மீது வருவித்துக் கொண்டதான சாபம் இன்றும் சில விதங்களில் காணப்படவே செய்கின்றது; அவருடைய இரத்தம் இன்னமும் இவர்கள் மேல் காணப்படுகின்றது; அன்று முதல் இன்றுவரை யூதர்கள் மிகவும் பாடுபட்டுள்ளனர்; 1878-ஆம் வருடம் முதல், இவர்கள் மீது இருந்த தெய்வீகக் கோபமானது/தயவின்மையானது, இவர்களை விட்டுக் கடந்துபோய்க் கொண்டிருந்தாலும், அது கிட்டத்தட்ட 1914-ஆம் வருடம் வரையிலும் சில விதங்களில் நீடித்தே காணப்படும். கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையினால் மன்னிக்கப்படுவதன்காரணமாக சாபம் ரத்துச் செய்யப்படும்.

இன்னொரு பக்கத்தில் சோதனைகளைச் சரியான விதத்தில் ஏற்றுக்கொண்டு, தேவனிடத்திலான தங்களது உண்மையை மெய்ப்பித்துக் காட்டியவர்கள் மீது வந்த ஆசீர்வாதங்களையும் கவனிப்போமாக. நமது கர்த்தர் மரணம் வரையிலும், அதாவது சிலுவையின் மரணப்பரியந்தம் உண்மையுள்ளவராகக் காணப்பட்டதினால் அவர் தூதர்கள், சத்துவங்கள், துரைத்தனங்கள், அதிகாரங்கள் மற்றும் எல்லா நாமங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டார். அப்போஸ்தலனாகிய பேதுரு கொஞ்சம் தவறில் விழுந்துபோனவராகக் காணப்பட்டாலும், மனந்திரும்பினதின் மூலமாகவும், மனங்கசந்து அழுததின் மூலமாகவும், மீண்டுமாகக் கர்த்தருடைய தயவிற்குள்ளாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இன்னுமாக அவர் இந்தக் கவலைக்கிடமான அனுபவங்கள் வாயிலாகப் படிப்பினையையும் பெற்றுக்கொண்டார். இன்னுமாக, அப்போஸ்தலர்கள் மத்தியில் தலைச் சிறந்தவர்களில் ஒருவராகவும், மிகுதியாய்க் கனப்படுத்தப்பட்ட வருமானார். இன்னுமாக, இவர் இராஜ்யத்தில் அவருடைய மீட்பருடன் உடன் சுதந்தரராகவும் கனப்படுத்தப்படுவார்.

உங்கள் நடுவே பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து – (துன்ப தீ – திருவிவிலியம்) ஏதோ புதுமை என்று திகைக்க வேண்டாம்

நம்முடைய பாடத்தில் நாம் பார்த்த அதே சோதனைகள், அப்படியே நமக்கும் வரும் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மாறாக, அக்கினிப்போன்ற சோதனைகளை/துன்ப தீ போன்ற சோதனைகளையே நாம் எதிர்பார்க்க வேண்டும். மேலும், எவ்விதத்தில் நாம் அச்சோதனைகளை எதிர்க்கொள்கின்றோமோ, அதனடிப்படையிலேயே விளைவுகள் காணப்படுகின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நாம் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நமது பரமபிதாவுக்கு உண்மையாய் இருப்போம் என்றும், எப்படியேனும்/எதை இழக்க நேர்ந்தாலும் பிதாவின் சித்தம் செய்வோம் என்றும், பூமிக்குரிய நலன்களைத் தியாகம் பண்ணியும் பிதாவின் சித்தம் செய்வோம் என்றும், இவைகளையெல்லாம் முறுமுறுத்துக் கொண்டு செய்யாமல், “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச்செய்ய விரும்புகின்றேன். உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என்று நமது கர்த்தரைக்குறித்துத் தீர்க்கதரிசனமாய் உரைக்கப்பட்ட பிரகாரம் செய்வோம் என்றும், தீர்மானம் எடுக்கவேண்டும் என்பதே நமக்கான பாடமாகும். (சங்கீதம் 40:3). ஒருவேளை போதகரைப் பின்பற்றுவதில் நாம் தற்காலிகமாக இடறிவிழுந்தாலும் நாம் சோர்ந்து போய்விடக்கூடாது. மாறாக, இடறிவிழுந்து போன இந்த அனுபவங்கள் கர்த்தரிடத்தில் நெருக்கமாக உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கும், அது முதல்/இனி மேல் கர்த்தரோடு நடக்கையில் மிகுந்த உண்மையுள்ளவர்களாகவும், மிகமிக ஜாக்கிரதையுள்ளவர் களாகவும் நம்மை ஆக்கிக்கொள்வதற்கும் அந்தத் தவறுகளையும், இடறல்களையும் ஆசீர்வாதங்களாக நாம் மாற்றிவிட வேண்டும் என்பதே மற்றொரு படிப்பினையாய் நமக்கு உள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்: இயேசுவுக்கு எதிரான மக்களின் கூக்குரல் குறித்ததான இச்சம்பவம்/இக்காட்சியானது மக்களாட்சி அதற்கே எதிராகத் தெரிவிக்கும் கண்டனமாக எப்போதும் பார்க்கப்பட்டு வருகின்றது. (Vox populi, Vox Dei) ஜனங்களுடைய சப்தமானது, தேவனுடைய சத்தமாயிருக்கிறது – என்று இதன் போலிப்புகழ்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் – ஆனால் இங்கே நடந்ததைப் பாருங்கள். இயேசு மற்றும் பரபாஸ் இவர்களில் ஒருவரை ஜனங்கள் தெரிந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது, ஜனங்கள் பரபாசை தெரிந்துகொண்டார்கள். அப்படியானால் மக்களாட்சி, மன்னர் ஆட்சி போன்று கேடாகவே உள்ளது. ஜனங்களைக் காட்டிலும், ஆசாரியர்கள், வேதபாரகர்கள் மற்றும் பெருந்தன்மையுடையவர்களாவது மேம்பட்ட விதத்தில் நடந்து கொண்டார்களா? இவர்களுடைய ஆ லோசனையின்படியே ஜனங்கள் பரபாசை தெரிந்து கொண்டார்கள் என நாம் பார்க்கின்றோம். ஜனங்களுடைய சப்தம் சில காரியங்களில் நம்பிக்கைக்குப் பாத்திரமாகக் காணப்படுகின்றது. ஆனால், தற்கால சூழ்நிலைகளின் கீழ்க் காணப்படும் நாகரிகமான ஜனங்களுக்கு உலகில் நிலவும் அரசாங்க அமைப்புகளிலேயே ஜனநாயக/குடியரசு அமைப்பே அநேகமாகச் சிறந்தது ஆகும். [R3369 : page 155] ஆனால், மத விஷயங்களைப் பொறுத்தமட்டில் ஜனங்களுடைய சப்தமானது, தேவனுடைய சத்தத்திலிருந்து தொலை தூரத்தில் காணப்படுகின்றது. “எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில்” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார் (1 கொரிந்தியர் 1:21). பிரபலமான சப்தங்கள் நமக்கெதிராய்ச் சப்தமிடும்போது, சுயஞானமானது நம்மைத் தவறான முடிவுகள் எடுப்பதற்கு வழிவகுத்துவிடக்கூடாது. கர்த்தருடைய வார்த்தைகள் மூலம் வெளிப்படும் கர்த்தருடைய சப்தத்தையே நாம் நாட வேண்டும், செவிசாய்க்க வேண்டும். இதில் நமது மீட்பர் திருப்திக்கொண்டது போன்று நாமும் திருப்திக்கொள்ள வேண்டும். தேவன் நம்மை வழி நடத்துகின்றபடியால், அவர் நமக்கு அனுமதிக்கும் விஷயங்களில் நாம் திருப்திக்கொள்ள வேண்டும். சபையினுடைய கடைசி முடிவின் அனுபவங்கள் சில விதங்களில் நமது அன்பான மீட்பருடைய அனுபவங்களுக்கு ஒத்துக் காணப்படலாம். கர்த்தருடைய ஜனங்களில் சிலர் தேவதூஷணக்காரர்களாகவும், கிறிஸ்து எனும் வேறொரு இராஜா உள்ளார் என்று பிரசங்கம் பண்ணினதின் விளைவாக அரசாங்கங்கள் முன்பு நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அப்படியாகச் சம்பவிக்கும்போது, நம்முடைய நிலைப்பாட்டினை குறித்து நமக்கு எவ்வித ஐயமும் காணப்படக்கூடாது. அச்சமயங்களில் நாம் கர்த்தர் மேல் முழு நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் மற்றும் அவருக்கும், அவருடைய வார்த்தைகளுக்கும், அவருடைய சகோதர சகோதரிகளுக்கும் உண்மையாயும் இருக்க வேண்டும். இந்தப் பாடுகள் அனைத்தும், அதிக மேன்மையான நித்திய கன மகிமையை உண்டு பண்ணும் என்று, தமது வார்த்தையின் மூலம் நமக்கு நிச்சயம் அளித்துள்ள தேவனுடைய கரங்களில் இந்தச் சோதனைகள் மற்றும் பரிட்சைகளின் முடிவுகளை ஒப்படைத்துவிடுவோமாக.