R2745 (page 380)
மத்தேயு 21:1-17
“கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.”
மார்த்தாள் மற்றும் மரியாளுடைய வீட்டில் நடைப்பெற்ற விருந்திற்குப் பிற்பாடு, அடுத்தநாள் காலையில், அதாவது வாரத்தினுடைய முதல் நாளில் (ஞாயிற்றுக் கிழமையில்) நமது கர்த்தர், எருசலேமிற்குள் இராஜாவெனப் பிரவேசிப்பதற்கான ஆயத்தங்களை நேரமே ஆரம்பித்தார். “தம்முடைய சொந்த” ஜனங்கள் தம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்திருந்தபோதிலும், இன்னுமாக அவர் தாம் அதிகாரிகளினால் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்று தம்முடைய சீஷர்களிடம் ஏற்கெனவே பகிர்ந்திருந்தபோதிலும் மற்றும் முந்தின இரவில் மரியாளுடைய தைலம் ஊற்றும் காரியமானது, தம்மை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தபோதிலும், அவர் தம்மை யூதர்களுடைய இராஜாவென முறையாக முன்வைப்பதும் மற்றும் இப்படியாகத் தேவனுடைய தயவானது, “முதலாவது யூதருக்கே” உரியது எனும் தேவ வாக்குத்தத்தத்தை அந்த ஜனங்களுக்கு நிறைவேற்றுவதும் தெய்வீகத் திட்டத்தில் அவசியமான பாகமாய் இருந்தது.
அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று, அவரை இராஜாவாக்கிட வேண்டும் என்று ஜனங்களில் சிலரிடம் காணப்பட்ட மனப்பான்மையை, முந்தின தருணங்களின் போதெல்லாம், அவர்களின் நடுவிலிருந்து கடந்துபோய்விடுவதன் மூலம் நமது கர்த்தர் எதிர்த்தவராய் இருந்தார் (யோவான் 6:15); ஆனால் இப்பொழுதோ நேரம், அதாவது ஏற்றவேளை வந்துள்ளபடியால், முந்தின தருணங்களிலெல்லாம் ஆரவார அணிவகுப்பை அவர் தடைப்பண்ணினது போலல்லாமல், இப்பொழுது தமது ஆரவார அணிவகுப்பை நிதானித்து திட்டமிட்டவராய்க் காணப்பட்டார். கழுதையும், அதன் குட்டியும் எங்கு மற்றும் எப்படிக்காணப்படும் என்று தெளிவாய்க் குறிப்பிட்டதின் வாயிலாக இயற்கைக்கு அப்பாற்பட்ட தம்முடைய வல்லமையை வெளிப்படுத்தினவராக, கழுதையையும், அதன் குட்டியையும் கொண்டுவரும்படிக்கு, சீஷர்களில் சிலரை அவர் அனுப்பி வைத்தார். குதிரைக்குப் பதிலாக கழுதை பயன்படுத்தும் வழக்கம் இருந்தது; இஸ்ரயேலின் இராஜாக்கள் அனைவரும், தங்களது முடிசூட்டு விழாவின்போது கழுதையின்மேல் ஏறிச்செல்வது வழக்கமாயிருந்ததெனப் பாரம்பரியமானது தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.
கழுதை வந்தடைந்தபோது, சீஷர்களும், ஜனக்கூட்டத்தார் அனைவரும் உற்சாகம் அடைந்தார்கள்; எரிகோவிலிருந்து வந்தவர்களும், பரிசுத்த நகரம் செல்வதற்கும், பஸ்கா கொண்டாடுவதற்கென்றும் மேற்கொள்ளப்பட்ட பிரயாணத்தின் போது, நமது கர்த்தருடைய வல்லமையையும், போதனைகளையும் நேரில் கண்டறிந்தவர்களுமான அநேக ஜனங்கள், ஓய்வுநாளன்று அவர் பெத்தானியாவில் தங்கினதுபோலவே, பெத்தானியாவில் தங்கினார்கள் என்பதாகத் தெரிகின்றது. இவர்களும், சீஷர்களுமாக சேர்ந்து ஒரு சிறு குழுவினராகி, இயேசுவை இராஜாவென வாழ்த்த ஆரம்பித்தார்கள் மற்றும் அவருக்கும் மரியாதை செலுத்தும்விதமாக, அந்நாட்களில் புகழ்மிக்கவர்களுக்குச் செய்யும் வழக்கத்தின்படி, அவர் ஏறிச்சென்ற கழுதையானது, தங்கள் வஸ்திரங்கள்மேல் மிதித்துச் செல்லத்தக்கதாக, தங்களது மேல் வஸ்திரங்களை வழியிலே பரப்பினார்கள்; இன்னுமாகப் பேரீச்சைமரக்கிளைகளையும், மலர்களையும், புல்லையும் பறித்து வந்து, வழியிலே பரப்பினார்கள்.
இயேசு இப்படியாகக் கனமிக்க ஸ்தானத்துடன், முன்பாக சவாரிப்பண்ணிக் கொண்டிருக்கையில், இந்தக் கூட்டத்தார் எருசலேமுக்குப் போகும் சாலையில், பின்தொடர்ந்து வந்தனர். பட்டணத்திலிருந்து/நகரத்திலிருந்து வந்த மற்றொரு கூட்டத்தாரோ, மாபெரும் தீர்க்கத்தரிசியும், போதகருமானவர் பெத்தானியாவில் இருக்கின்றார் என்று கேள்விப்பட்டவர்களாக, அவரையும், லாசருவையும் காணத்தக்கதாகப் புறப்பட்டுவந்தார்கள் மற்றும் இந்தக் கூட்டத்தார் கர்த்தரையும், அவருக்குப் பின்பாக வந்தனம் கூறி வந்தவர்களையும் கண்டபோது, இவர்களும் திசையைத் திருப்பிக்கொண்டு, கூட்டத்தை முன்னின்று நடத்துவோர் போலாகி, மற்றவர்களைப்போல, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று வந்தனமிட்டனர்; “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்பது இராஜ வம்சாவழியான/சந்ததிவழியான இராஜா” என்பதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஏரோது இராஜாவுக்கு எதிராகவும், இவருக்கு அதிகாரம் வழங்கிட்டதான ரோம சாம்ராஜ்யத்திற்கு எதிராகவும் துரோகம் புரிந்துள்ளனர் எனும் குற்றச்சாட்டினைத் தாங்களே தங்கள் மீது கொண்டுவராதபடிக்கு, “இராஜா” எனும் வார்த்தையைப் பயன்படுத்துவதை அநேகமாக ஜனங்கள் தவிர்த்திருக்க வேண்டும்.
அது பார்க்கின்றவர்களின் பார்வைக்கேற்ப மகா இராஜாவின் நகரத்திற்குள்ளான பிரம்மாண்டமான (அ) கேலிக்கிடமான ஒரு வெற்றி விஜயமாய்க் காணப்பட்டது. மேசியாவின் மீதான ஆவலினாலும், இஸ்ரயேலுக்காக நீண்ட காலம் வாஞ்சிக்கப்பட்டதான ஆசீர்வாதங்கள் விரைவில் நிறைவேறப்போகின்றது என்ற நம்பிக்கையினாலும் முழுக்க நிரம்பப் பெற்றவர்களாகிய சீஷர்கள் மற்றும் ஜனக்கூட்டத்தாரின் கண்ணோட்டத்தின்படி, அதாவது மரித்தவர்களை உயிர்த்தெழுப்புவதற்கும், வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்துவதற்கும் வல்லமை கொண்டிருப்பவராகிய இந்த மாபெரும் தீர்க்கத்தரிசியினால், அவரது ஏற்றவேளையிலும், வழியிலும் தம்மையும், அவர்களையும், அனைத்துச் சத்துருக்களும் ஜெயிக்க முடியாமல் போவதற்குச் செய்ய முடியும் என்றும், தீர்க்கத்தரிசிகளினால் முன்னுரைக்கப்பட்டதான மகிமையான காரியங்கள் அனைத்தையும் இவரால் நிறைவேற்ற முடியும் என்றுமுள்ள விசுவாசத்தினால் முழுக்க நிரம்பப்பெற்றவர்களாகிய சீஷர்கள் மற்றும் ஜனக்கூட்டத்தாரின் கண்ணோட்டத்தின்படி அது ஒரு பிரம்மாண்டமான தருணமாகவும், உண்மையான வெற்றி விஜயமாகவும் காணப்பட்டது. இயேசு தம்முடைய மரணம் குறித்துத் திரும்பத் திரும்ப முந்தின தருணங்களின்போதெல்லாம் அவர்களிடம் கூறியிருந்தாலும் மற்றும் பேதுரு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் பேசினதற்காக இயேசு அவரைக் கண்டித்துப் பேசியிருந்தபோதிலும், அவரது சீஷர்களாலும், மற்றவர்களாலும், அவரது வார்த்தைகளினுடைய உண்மையான அர்த்தத்தினை புரிந்துகொள்ளமுடியவில்லை மற்றும் பிற்காலங்களில் தங்களுக்குப் புரியபோகின்றதான, “மறைப்பொருள்களாகவே” அவர்களால் கருதப்பட்டது. இது அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு, அவர்களால் பேசப்பட்ட வார்த்தைகளிலிருந்து உறுதியாகுகின்றது; “அவரே இஸ்ரயேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்” என்ற அவர்களது வார்த்தையிலிருந்து உறுதியாகுகின்றது. (லூக்கா 24:21)
ஏரோது, பிலாத்து, பிரதான ஆசாரியர்கள் மற்றும் வேதபாரகர்களின் கண்ணோட்டத்தின்படி, இந்த ஆரவார அணிவகுப்பானது மதவெறிக் கொண்ட ஒரு தலைவனுடைய மற்றும் அவரால் [R2745 : page 381] ஏமாற்றப்பட்ட அறிவில்லாதவர்கள் மற்றும் மதவெறி கொண்டவர்களுடைய அணிவகுப்பாய் இருந்தது. இப்படியாகவே அவர்கள் பார்த்தார்கள் என்பது உறுதியே. இந்த இழிவான நசரேயனும், அவரது கூட்டத்தாரும், தாங்கள் நிர்வகித்துவருகின்றதான நிர்வாகத்திற்கு எதிராக ஒரு சேனையை உருவாக்கி மற்றும் அதற்குரியவைகளைப் பார்த்துக்கொள்வார்கள் என்று இராஜாவாகிய ஏரோதும், பிலாத்துவும் கொஞ்சமும் பயப்படவில்லை என்பதும் உறுதியே. இந்த மத வைராக்கியமானது/வெறியானது ஏதோ விதத்தில் பரவி, தங்கள் மீது அரசியல் வல்லமைகளுடைய கோபத்தையும், ஒடுக்குதலையும் கொண்டுவரும் என்றும், இதைப் பயன்படுத்தி இந்த அரசியல் வல்லமைகளானது, யூதர்களுக்கான சுயாதீனங்களில் இன்னும் குறுக்கிடும் என்றும் மாத்திரமே மதத்தலைவர்கள் பயந்தவர்களாய்க் காணப்பட்டனர். வேதவாக்கியங்களில் இடம்பெறுகின்றதான கிருபையுள்ள வாக்குத்தத்தங்களினுடைய நிறைவேறுதலுக்காகவே, தேவனால் இயேசு மேசியாவாக அனுப்பப்பட்டவரென, பிரதான அதிகாரிகளில் எவரும் இயேசுவில் விசுவாசம் வைக்கவில்லை என்பதில் உறுதியே. இதைக்குறித்து அப்போஸ்தலர்கள், “சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்”; “அறிந்தார்களானால் மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே” என்று கூறியுள்ளனர். (அப்போஸ்தலர் 3:17; 1 கொரிந்தியர் 2:8)
அந்த ஊர்வலமானது, இன்னுமொரு கோணத்தில் நமது கர்த்தரினாலும், இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாகிய, கண்களுக்குப் புலப்படாத தூதர் சேனையினாலும்கூடப் பார்க்கப்பட்டது. இவர்களுங்கூட ஜனக்கூட்டத்தாரின் உணர்வுகளில்/ஆர்வத்தில் பங்கெடுத்துக்கொண்டார்கள், ஆனாலும் முற்றிலும் வேறுபட்ட ஒரு கண்ணோட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டவர்களானார்கள்; அதாவது இந்த வெற்றி விஜயமானது தெய்வீகத் திட்டத்தினுடைய ஒரு பாகம் மாத்திரந்தான் என்றும், கர்த்தர் தம்மைப் பலியாக்கிடுவது நிறைவடைந்தும், இப்படியாக “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரத்தைப்” பெற்றுக்கொள்வதன் வாயிலாகக் கர்த்தர் சார்பில் அடையப்படுகின்றதான [R2746 : page 381] மாபெரும் வெற்றிக்கான ஒரு முற்செயல் மாத்திரம்தான் என்றும், பாவத்தைக் கீழாக்கிப் போடுவதற்கும், அனைத்தையும் தேவனுக்குக் கீழ்ப்படுத்துவதற்கும், பிதாவுடனும், அவரது சாம்ராஜ்யத்தின் பிரமாணங்களுடன் முழுமையான இசைவுக்குள் வர விரும்புகின்ற யாவரையும் பாவம், வியாதி மற்றும் மரணம் எனும் பயங்கரமான குழியினின்று தூக்கிவிடுவதற்கும் என்று மிகுதியான வல்லமை மற்றும் அதிகாரத்துடன் தூரதேசத்திலிருந்து (பரலோகத்திலிருந்து), தம்முடைய இராஜ்யத்துக்கு அவர் வெற்றிவாகையுடன் திரும்பிவருதலுக்கான முன்னடையாளம் என்றும் உணர்ந்துகொண்டவர்களாய்க் காணப்பட்டனர். இதுவே தேவனுடைய கிருபையினால் நாம் புரிந்துகொள்வதற்குச் சிலாக்கியம் பெற்றதான, அந்த வெற்றி விஜயத்தை/அணிவகுப்புக் குறித்த மிகுந்த மகிமையான கண்ணோட்டமாகும் மற்றும் நாமும் “நம்முடைய கண்கள் காண்கிறதினாலும், நம்முடைய காதுகள் கேட்கிறதினாலும் பாக்கியவான்களாய் இருக்கின்றோம்’ என்றதான நமது கர்த்தருடைய வார்த்தைகளைக் கூறுவோமாக.
ஜனக்கூட்டத்தார் நடுவில் ஆரம்பத்தில் காணப்பட்ட சில பரிசேயர்கள், நமது கர்த்தர் கூறினவைகளையோ (அ) செய்தவைகளையோ மறுத்துப் பேச முடியாமல் காணப்பட்டாலும், ஜனக்கூட்டத்தாரும், சீஷர்களும் அவரை இராஜாவென வாழ்த்துவதற்கும், ஓசன்னாக்கள்! (இரட்சிப்பு, ஸ்தோத்திரித்தல், துதி!) கெம்பீரிப்பதற்கும் அவர் அனுமதிக்கக்கூடாது என்று முறையிட்டதாக லூக்காவின் பதிவு நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இந்நிகழ்வு தொடர்புடையதான தீர்க்கத்தரிசனத்தை இயேசு அறிந்தவராக, சீஷர்களைக் கடிந்துகொள்வதற்கும் மற்றும் அவர்களது ஆரவாரங்களைத் தடுப்பதற்கும் மறுத்தது மாத்திரமல்லாமல், தேவன் தாமே தீர்க்கத்தரிசி வாயிலாக, “எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி” என்று கூறியிருக்கின்றார் என்றும், ஆகையால் கெம்பீரித்தல்கள் காணப்பட வேண்டும் என்றும், இப்படியாகக் கெம்பீரிப்பதற்கென ஜனங்கள் உற்சாகமடையவில்லை என்றாலும், தீர்க்கத்தரிசனம் நிறைவேறாமல் போய்விடாதபடிக்கு, இந்தக் கல்லுகள்கூடக் கெம்பீரித்திருக்கும் என்றும் பரிசேயர்களுக்குத் தெரிவித்தார் (சகரியா 9:9).
கர்த்தர் கழுதையின் மீது ஏறிப் புறப்பட்ட இடமான பெத்பகேயுவிலிருந்து, எருசலேமுக்குக் கொஞ்சம் தொலை தூரந்தான் காணப்பட்டாலும், எருசலேம் பட்டணமானது ஒலிவ மலையினால், பார்வையிலிருந்து மறைந்து காணப்பட்டது மற்றும் கர்த்தர் ஒலிவ மலையினுடைய உச்சிக்கு வந்தபோதோ, எருசலேம் பட்டணமானது திடீரெனப் பார்வைக்குத் தெரிந்தபோது, அவர் ஊர்வலத்தை நிறுத்தி, பட்டணத்தைக்குறித்துக் கண்ணீர்விட்டழுது, “உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்” என்று கூறினார். (லூக்கா 19:41-44) இந்த வார்த்தைகளை வைத்துப் பார்க்கும்போது, நமது கர்த்தர் தம்மோடுகூட அங்குக் காணப்பட்டதான ஜனக்கூட்டத்தார், பட்டணத்திற்கும், தேசத்திற்கும் பிரதிநிதித்துவம் படுத்துபவர்களாய் இருக்கின்றார்கள் என்பதாகக் கருதவில்லை என்பது உறுதியே; ஏனெனில் இவர்கள் தம்மோடுகூட அங்குக் காணப்பட்டு, “யேகோவாவின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்!” என்ற வார்த்தைகளைக் கெம்பீரித்துக் கொண்டிருந்தாலும், நமது கர்த்தருடைய வார்த்தைகளானது, ஜனங்களின் பிரதிநிதிகளாகிய இஸ்ரயேலின் தலைவர்களும் மற்றும் பிரதானமானவர்களும் அவரது இரண்டாம் வருகையின்போது அவரை இராஜாதி இராஜன் என்றும், கர்த்தாதிகர்த்தன் என்றும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்வதற்கான காலம் வரவுள்ளது என்பதையும், ஆனாலும் இதற்கிடையில் தங்களது சந்திப்பின் காலத்தை அடையாளங்கண்டுகொள்ளதவறின காரியமானது, அவர்களுக்கு மாபெரும் சிலாக்கியத்தின் இழப்பாகக்காணப்படும் மற்றும் இன்னுமாக இந்தச் சுவிசேஷ யுகத்தில் கர்த்தரினால் அவர்களது வீடு பாழாக்கிவிடப்படுவதாகவும், கைவிடப்படுவதாகவும் காணப்படும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; அவரை ஏற்றுக்கொண்ட (அ) ஏற்றுக்கொள்ளப் போகின்றதான இஸ்ரயேலில் காணப்பட்டதான உண்மையுள்ளவர்களாகிய மீதியானவர்கள்போக, தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடைய எண்ணிக்கை நிறைவடைவதற்குப் போதுமானவர்களைக் கர்த்தர் இந்தச் சுவிசேஷயுகத்தில் புறஜாதிகள் மத்தியிலிருந்து சேர்த்துக்கொள்வார். மத்தேயு 23:39-ஆம் வசனத்தைப்பார்க்கவும்.
இந்த வெற்றி ஆரவாரத்துடன்கூடிய அணிவகுப்பானது, பரிசுத்த நகரத்தை, தலை நகரத்தை, மகா இராஜாவின் நகரத்தை நோக்கியே நோக்கம் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. நமது கர்த்தர் ஏரோதினுடைய அரண்மனைக்குச்சென்று, அது தமக்குரியதென அவர் அதிகாரத்துடன் கேட்டுக்கொள்ளவில்லை; அவர் பிலாத்துவின் அரண்மனைக்குச்சென்று தம்மை அங்கீகரிக்கும்படிக்கு அதிகாரத்துடன் கேட்டுக்கொள்ளவில்லை; மாறாக யேகோவாவின் பிரதிநிதியென, மேசியாவென, இஸ்ரயேல் மற்றும் உலகத்தினுடைய இரட்சகராகும்படிக்குத் தேவனால் அனுப்பப்பட்டவரென பிதாவின் வீட்டிற்கு (அ) அரண்மனைக்கு, அதாவது ஆலயத்திற்குச் சரியாய்ச்சென்றார்.
ஆலயத்தில் நடைப்பெற்ற காட்சியானது, குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஆலயம் நாகரிகமடைந்த உலகத்தினுடைய அனைத்துப் பாகங்களிலுமுள்ள யாத்திரிகர்களால் நிரம்பிக்காணப்பட்டது; வருடத்தினுடைய அந்தக் காலக்கட்டத்தின்போது கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கும் மற்றும் நியாயப்பிரமாணத்தின்படி பஸ்காவை அனுசரிப்பதற்கும் என்று பல்லாயிரக்கணக்கான ஜனங்கள் நாகரிகமடைந்த உலகத்தினுடைய அனைத்துப் பாகங்களிலிருந்து வருவதுண்டு. அநேகமாக இவர்களில் அநேகர் “செய்கையிலும், வாக்கிலும் வல்லமையுள்ளவரான” நாசரேத்தூர் இயேசுவைக்குறித்துக் கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தவர்களாய்க் காணப்பட்டனர். இவர்களில் அநேகர் இயேசுவினால் குணப்படுத்தப்பட்டவர்களாக (அ) இந்த விதமாய் ஆசீர்வதிக்கப்பட்டதான (குணப்படுத்தப்பட்டதான) நண்பர்களைப் பெற்றிருந்தவர்களாய்க் காணப்பட்டனர்; மேலும் இயேசுவோடுக்கூட வந்து, “உன்னதத்திலிருக்கிறவருக்கு ஓசன்னா” என்றெல்லாம் கெம்பீரித்து வருகிறதான ஜனக்கூட்டத்தார் எத்தகையதொரு சலசலப்பை உண்டுபண்ணியிருப்பார்கள் என்று நம்மால் நன்கு கற்பனைச் செய்துபார்க்க முடிகின்றது. மத சம்பந்தமான விஷயங்களிலும், இன்னும் விசேஷமாக ஆலயத்திலும், ஜனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்ததான பரிசேயர்களும், வேதபாரகர்களும் மற்றும் பிரதான ஆசாரியர்களும், இயேசுவுக்கு எதிராகக் கோபமடைந்தபோதிலும், அச்சந்தர்ப்பத்தில் அவருக்குப் பாதிப்பு உண்டுபண்ண வல்லமையற்றவர்களாகத் தங்களைக்குறித்து உணர்ந்து கொண்டார்கள்; ஏனெனில் இயேசு எந்த விதத்திலும் அங்கு நியாயப்பிரமாணத்திற்கு எதிராகச் செய்யவில்லை மற்றும் இது அனைவருக்குமே தெரியவும் செய்தது. தம்முடைய அதிகாரத்திற்கு உட்பட்டவைகளை மாத்திரம் தாம் செய்வதாகக் காண்பிக்கும் பொருட்டு நமது கர்த்தர், ஆவிக்குரிய இராஜாவுக்கு ஏற்புடையதுபோன்று தமது அதிகாரத்திற்கு உட்பட்டதைச் செயல்படுத்த ஆரம்பித்தார்; அதாவது பரிசுத்த ஆலயத்தையும் அதன் எல்லைகளையும் பரிசுத்த குலைச்சலாக்கிப் போட்டவர்களைக் கண்டனம்பண்ணி, காணிக்கைச் செலுத்துவதற்கெனப் புறாக்களை விற்பனைக்காக வைத்திருந்தவர்களையும், காசுக்காரர்களையும் வெளியே துரத்துவதன் மூலம் செயல்பட்டார்; இந்தக் காசுக்காரர்கள் என்பவர்கள், தொலைத்தூரத்திலிருந்து தொழுதுகொள்ளுவதற்கெனப் பிரயாணம்பண்ணி வந்துள்ளவர்களுக்கான தேவைகள் சார்ந்த விஷயத்தில், இலாபங்களை ஈட்டிக்கொள்பவர்களாகக் காணப்பட்டனர்; தொலைத்தூரத்திலிருந்து தொழுதுகொள்வதற்கென வந்தவர்களின் பணங்களானது, யூத பணமாக இராததினால், அவைகள் ஆலயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத காரணத்தினால், அவர்கள் பணத்தைத் தங்களுக்கு நஷ்டமான விதத்திலும், காசுக்காரர்களுக்கு இலாபமான விதத்திலும், மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அத்தேசத்தினுடைய (அ) ஆலயத்தினுடைய சரியான/நியாயமான சட்டங்களில் நமது கர்த்தர் குறுக்கிடுகின்றார் என்பதாக நாம் புரிந்துகொள்ளக்கூடாது; அவர் எல்லா விதத்திலும் சட்டத்திற்கு ஒத்துப்போனவராகவே காணப்பட்டார். ஆனால் நியாயப்பிரமாணத்தினுடைய கட்டளையின்படி ஆலயத்தினுடைய பரிசுத்தத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அவசியப்படுவதற்கேற்றதான பலத்தைப் பயன்படுத்துவதற்கு அனைத்து யூதர்களுக்கும் உரியதான முழு அதிகாரத்தையே, இயேசுவும் உடையவராயிருந்தார்.
குருடர்களும், சப்பாணியுமானவர்கள் ஆலயத்தில் நமது கர்த்தரிடத்தில் வந்து, தங்கள் குறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள் மற்றும் பின்னர் அவர் ஜனங்களுக்குப் போதித்தார்; இப்படியாக அவர் தொடர்ந்து பல நாட்கள் சொஸ்தமாக்கியும், போதித்தும் காணப்பட்டு, இரவு [R2746 : page 382] வேளைகளில் பெத்தானியாவுக்குப் போயும், அடுத்த நாள் காலையில் ஆலயத்திற்கு வந்தவராகவும் காணப்பட்டார்; ஆனால் அவர் தம்மை இராஜாவெனத் திரும்பவும் சுட்டிக்காண்பிக்கவில்லை (நிரூபணம் அளிக்கவில்லை); ஏனெனில் ஒருமுறை சுட்டிக்காண்பித்தது (நிரூபணம் அளித்தது) என்பது நோக்கத்தினை நிறைவேற்றிடுவதற்குப் போதுமானதாய் இருந்தது. அந்த ஒரு நிரூபணமானது, அந்தப் பட்டணத்தின் மற்றும் தேசத்தின் அதிகாரிகள் அவரை இராஜாவென முறையாக ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை அருளினதாய் இருந்தது; ஆனாலோ இவர்களது எதிரிடையான ஆவியானது, ஆலயத்தினுடைய முற்றங்களில் பிள்ளைகள் “ஓசன்னா!” என்று கெம்பீரிப்பதை இவர்கள் கண்டு, அதைக் கர்த்தர் தடைப்பண்ணும்படிக்கு, வேண்டிக்கொள்வதற்கென வந்தபோது வெளிப்பட்டது; இவர்களுக்குப் பிரதியுத்தரமாக நமது கர்த்தர் வேதவாக்கியங்களை மேற்கோளிட்டு, இவ்விஷயம் தெய்வீகத் திட்டத்திற்கு இசைவானதாகக்காணப்படுகின்றது என்றார்; “குழந்தைகளுடைய வாயினாலும், பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர்” என்று குறிப்பிட்டார். இதை உலக ஞானிகள் உணர்ந்துகொள்ளவில்லை மற்றும் தன்னலத்தின் காரணமாகக் குருடாக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டனர்; ஆனால் சிறு பிள்ளைகளோ, அதிலும் விசேஷமாக எளிமையான இருதயத்தினாலும், சாந்தத்தினாலும் சிறு குழந்தைகள் போலானவர்களோ, கர்த்தருடைய துதிகளைக் கெம்பீரிப்பதற்குக் கர்த்தரினால் பயன்படுத்தப்பட்ட கருவிகளானார்கள்.
நீசான் மாதம் 10-ஆம் தேதி அவர் வெற்றி பிரவேசம் பண்ணி தம்மை முன்வைத்ததற்கும், பஸ்கா ஆட்டுக்குட்டியெனப் பதினான்காம் தேதி அவர் சிலுவையில் அறையப்படுவதற்கும் இடைப்பட்ட நாட்களிலேயே, அதாவது ஆலயத்தில் காணப்பட்டதான அந்த நாட்களிலேயே அநேகமான அவரது உவமைகளும், விசேஷித்த உபதேசங்களும் வழங்கப்பட்டன (யாத்திராகமம் 12:3,6 வாசிக்கவும்). இந்த உவமைகள் முதலானவைகளெல்லாம் மத்தேயு சுவிசேஷத்தில் 23 முதல் 25 வரையிலான அதிகாரங்களிலும், மாற்கு சுவிசேஷத்தில் 11 முதல் 13 வரையிலான அதிகாரங்களிலும், யோவான் சுவிசேஷத்தில் 12 முதல் 16 வரையிலான அதிகாரங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மற்ற விஷயங்களைக் குறிப்பிட்டதோடு கூட மாம்சீக இஸ்ரயேலர்களிடமிருந்து தேவனுடைய தயவானது எடுக்கப்பட்டதையும் குறித்து இயேசு அப்போது குறிப்பிடும் வண்ணமாக:
“எருசலேமே, எருசலேமே, தீர்க்கத்தரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.” (மத்தேயு 23:37-39)
தற்காலத்திலுள்ள நாம் இந்த நிகழ்வுகளிலிருந்து சிறந்த பாடங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவைகளினுடைய நிழலான அம்சங்களும் மறக்கப்படக்கூடாது என்றும் நாம் தெரிவிக்கின்றோம்; நமது கர்த்தருடைய ஊழியத்தின் இறுதிக்காலங்களில் நடைப்பெற்றதும் மற்றும் மாம்சீக இஸ்ரயேல் வீட்டாரின் புறக்கணிக்கப்படுதலும், நீக்கப்படுதலும் தொடர்புடையதுமான நிகழ்வுகளானது, சுவிசேஷ யுகத்தினுடைய முடிவின்போது, அதாவது தற்காலத்தில், இன்றைய பெயரளவிலான இஸ்ரயேலர்களாகிய பாபிலோனுடைய புறக்கணிப்பிற்கும், நீக்கிவைக்கப்படுவதற்கும் நிழலாகவும், சித்தரிப்பாகவும் காணப்படுகின்றது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். மில்லேனியல் டாண் வெளியீட்டினுடைய இரண்டாம் தொகுதியினுடைய 235-ஆம் பக்கத்தில், கர்த்தர் தம்மை முறைப்படி மாம்சீக இஸ்ரயேல் முன்பாக முன்வைத்ததற்கும், அவருடைய புறக்கணிப்பிற்கும் ஒத்த ஒரு வருடம் 1878-ஆம் வருடமென நாம் ஏற்கெனவே காண்பித்துள்ளோம். முதலாவது (அ) மாம்சீக வீட்டார் புறக்கணிக்கப்பட்டது போலவே, அவ்வருடத்தில் பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர் புறக்கணிக்கப்பட்டனர்; எனினும் இரண்டு தருணங்களிலும் உத்தம இஸ்ரயேலர்கள் அனைவரும் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர் மற்றும் இதற்குரிய ஆசீர்வாதங்களையும், அவரது கரத்திலிருந்து பெற்றுக்கொண்டார்கள்.
அந்த வருடம் (1878) முதற்கொண்டு, நமது கர்த்தர் தம்முடைய ஆவிக்குரிய ஆலயமாகிய, உண்மை சபையில் காணப்பட்டு, கேட்கிறதற்குச் செவியுடையவர்கள் அனைவருக்கும் விசேஷமான விதத்தில் போதிக்கிறவராகவும், குருடானவர்களின் கண்களைத் திறந்தும், ஆவிக்குரிய ஊனமுடையவர்கள் அவரது வழியில் நடக்கத்தக்கதாக, அவர்களுக்கு உதவிபுரிந்தும் காணப்படுகின்றார் என்று நாம் புரிந்துகொண்டுள்ளோம். அதுமுதற்கொண்டு உண்மையாய்த் தொழுதுகொள்பவர்களை உள்ளடக்கியுள்ளதான ஆலய வகுப்பார் சார்ந்த அனைவரும், தெய்வீக வார்த்தைகளிலுள்ள ஆச்சரியமான காரியங்களைக் குறித்துக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இன்னுமாக அந்த ஒரு காலக்கட்டத்தில் தான், உண்மையாய்த் தொழுதுகொள்ளாதவர்களும், சத்தியத்தை வியாபாரம் பண்ணுகிறவர்களுமாகிய காசுக்காரர்கள் மற்றும் புறா விற்பவர்கள் முதலானவர்களை, ஆலயத்திலிருந்து கர்த்தர் வெளியே துரத்தினார்; இன்னுமாக அந்த ஒரு காலக் கட்டத்தில்தான், இன்றைய நாட்களின் பரிசேயர்களுக்கும், வேதபாரகர்களுக்கும் கோபம் ஏற்படுகின்ற விதத்தில் பாலகர்களின் வாயிலிருந்தும், குழந்தைகளுடைய வாயிலிருந்தும் சத்தியம் பறைச்சாற்றப்படுகின்றது.
அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான, ஏற்கெனவே சத்தியம் எனும் நறுமண தைலத்தினால் அபிஷேகிக்கப்பட்டதான கிறிஸ்துவினுடைய சரீரத்தின் கடைசி அங்கத்தினர்கள் தங்கள் பலியை நிறைவேற்றி முடித்தவுடன், முதலாம் உயிர்த்தெழுதல் நிறைவடைந்து, கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் அவருடன்கூட மகிமை அடைந்திருப்பார்கள்; கிறிஸ்துவினுடைய பாடுகள் நிறைவடைந்தவுடன், மகிமையானது விரைவாய்த் தொடருகின்றதாயிருக்கும். ஆனால் இதற்கிடையில், அதாவது மகிமை வெளிப்படுவதற்கு முன்னதாக, ஒரு மகா உபத்திரவக்காலம் வரும்; அது உலகத்தின் மீதான அக்கினியின் (உபத்திரவத்தின்) மற்றும் புகையின் (குழப்பத்தின்) காலமாய் இருக்கும்; அது – மாம்சீக இஸ்ரயேல் மீதும், அவளிடமிருந்து தப்பித்துக்கொள்ளாதவர்கள் மீதும் பட்சிக்கும் விதமான பழிவாங்குதல் கடந்துவந்ததுபோல விசேஷமாகப் புறக்கணிக்கப்பட்ட பாபிலோன் – மீதும், மகா உபத்திரவம் வருவதற்கு முன்னதாக, அவளிடமிருந்து தப்பித்துக் கொள்ளாதவர்கள் மீதும் (அந்த மகா உபத்திரவமான காலம் வருகையில்) அது அக்கினியின் மற்றும் புகையின் காலமாய் இருக்கும். (லூக்கா 3:16,17; மத்தேயு 13:38-43)