R3877 – அவளால் இயன்றதை அவள் செய்தாள்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3877 (page 330)

அவளால் இயன்றதை அவள் செய்தாள்

SHE HATH DONE WHAT SHE COULD

மத்தேயு 26:6-13

“அவள் நற்கிரியைகளைச் செய்தாள்.”

யூதருடைய ஓய்வுநாள் நிறைவுபெற்ற மாலையில், வழக்கத்தின்படியே இயேசுவும், அவருடைய சீஷர்களும், இன்னும் மற்றவர்களும் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் எருசலேமில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடும்படிக்கு, எரிகோவிலிருந்து முந்தின நாளின் சாயங்கால வேளையிலேயே வந்துவிட்டார்கள்; மேலும், இந்தப் பஸ்காவைக் குறித்துதான் கர்த்தர் இயேசு, “தாம் பாடுபடுகிறதற்கு முன்னே அவர்களுடன்கூட, இந்தப் பஸ்காவை புசிக்க ஆசையாய் இருந்தார்” என்று தெரிவித்தார் (லூக்கா 22:15). அவர் தாம் எருசலேமுக்குப் போகவேண்டும் என்றும், அங்கு தாம் சிலுவையில் அறையப்படுவார் என்றும், சீஷர்களிடத்தில் கூறியிருந்தபோதிலும், அவர்களால் அதை உணர்ந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில், அநேகக் காரியங்களை அவர் அவர்களோடு உவமைகளாகவே பேசியிருந்தார். எடுத்துக்காட்டாக, நானே வானத்திலிருந்து இறங்கின அப்பம் என்றும், இன்னுமாக என்னுடைய மாம்சத்தைப் புசித்து, இரத்தத்தைப் பானம் பண்ண வேண்டும் என்றும் கூறியிருந்தார். அநேகமாக, அவர் சிலுவையில் அறையப்படுவது குறித்துக் கூறின காரியங்களையுங்கூட, அவர்கள் உவமைகளாகவே எண்ணியிருந்திருக்கக்கூடும்; சிலுவையில் அறையப்படும் விஷயத்தைப் பொறுத்தமட்டில் பேதுரு அதை ஏற்க மறுத்தபோது, கர்த்தர் பேதுருவைக் கடிந்துகொண்ட பின்னரும்கூட சீஷர்களால் அந்த வார்த்தைகள் உவமைகள் அல்ல என்பதைப் புரிந்துக்கொள்ள முடியாமல் இருந்தார்கள்.

அந்த விருந்து குஷ்டரோகியாகிய சீமோன் வீட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சீமோன் என்பது அக்காலக்கட்டத்தில் மற்றும் அந்த இடங்களில் பொதுவான பெயராக காணப்பட்டது; இந்தச் சீமோனே குஷ்டரோகியாகிய சீமோன் என்று வேறுபடுத்திக் குறிப்பிடப்பட்டுள்ளார் – அநேகமாக ஆண்டவரால் இந்தச் சீமோன் சொஸ்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதுவே இயேசுவுக்கும் லாசருவின் குடும்பத்திற்கும் ஏற்பட்ட நெருக்கமான உறவுக்குக் காரணமாக அமைந்திருக்கலாம். அந்தக் குடும்பத்தில் லாசரு, மார்த்தாள் மற்றும் மரியாள் முக்கியமான நபர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள். சுவிசேஷகர் ஒருவர், லாசரு அந்தப் பந்தியில் அமர்ந்திருப்பதாகவும், மார்த்தாள் அவருக்குப் பந்தி பரிமாறினதாகவும் தெரிவிக்கின்றார். இந்தப் பாடத்தில், மரியாள் செய்த காரியத்தைக் குறித்து விசேஷமாக நாம் பார்க்கப்போகின்றோம். இந்த மரியாள், கர்த்தர் சாய்ந்த நிலையில் பக்கவாட்டில் படுத்துக்கொண்டிருக்கும்போது அவர் கிட்டே சென்று, விலையேறப்பெற்ற தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியின் முத்திரையை உடைத்தாள் என்று பார்க்கிறோம். பதிவுகளில் ஒன்று, இத்தைலம் மிகவும் விலையேறப்பெற்றது என்றும், மற்றொரு பதிவு, அதன் விலை 300 பணம் என்றும் தெரிவிக்கின்றது. நம்முடைய பண மதிப்பின்படி அது சுமார் 50 டாலர் மதிப்புடையதாய் இருக்கும்.

இப்படிப்பட்ட அபிஷேகத் தைலங்கள் அரிதாயிருந்தது, அதிலும் பொதுவாக இராஜாக்கள் அல்லது இளவரசர்கள் அல்லது பிரபுக்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. யூதாசினுடைய முறுமுறுப்பினால் தாக்கம்பெற்றச் சீஷர்களும் அத்தைலம் விரயம் செய்யப்பட்டதினிமித்தம் நியாயமாக எழும்பும் கோபத்தினால் நிறைந்தவர்கள் ஆனார்கள். பணப்பையைச் சுமந்து திரிந்தவனும், அக்கூட்டத்தாருக்குப் பொருளாளராக இருந்தவனுமாகிய யூதாஸ் திருடனாய் இருந்தான் என்றும், பணத்தைத் தரித்திரருக்குச் செலவுசெய்யலாம் என்று அவனிடமிருந்து வெளிப்பட்ட அக்கறையுடன் கலந்த வார்த்தைகள் மாய்மாலம் என்றும் யோவான் நமக்குத் தெரிவிக்கின்றார். யூதாசினுடைய வாதத்திற்கு ஆதரவு தெரிவித்த மற்ற அப்போஸ்தலர்கள் மீது நாம் அனுதாபமே கொள்ளவேண்டும். ஏனெனில், அவர்கள் அனைவரும் ஏழைகளாய் இருந்தார்கள். மேலும், இப்படிப்பட்ட ஆடம்பரமான செலவுகளுக்கும், வீண் செலவுகளுக்கும்/வரம்பு மீறின செலவுகளுக்கும் பழக்கமற்றவர்களாகவே இருந்தார்கள்; மேலும், இக்கோணத்தில் பார்க்கையில், அப்போஸ்தலர்கள் இன்றைய நாட்களில் காணப்படும் பெரும்பான்மையான கர்த்தருடைய ஜனங்களுக்கு அடையாளமாய் இருக்கிறார்கள்; இன்றைய கர்த்தருடைய ஜனங்களும்கூட நறுமணதைலத்திற்கான விலை சீட்டு (bill) 50 டாலருக்குரியது எனப் பார்க்கும்போது விரையமான வீண்செலவு என்றே கூறுவார்கள். இக்காரியத்தை இயேசு எவ்வாறாகக் கண்ணோக்கினார் என்பதன் மீதே நாம் அதிக கவனமுள்ளவர்களாய் இருக்கின்றோம். இப்படிப்பட்டதான விஷயங்கள் குறித்ததான நம்முடைய கருத்துக்கள் ஏறத்தாழ நம்முடைய சுயநலத்தினாலோ அல்லது வறுமையினாலோ அல்லது பணச்சிக்கனம் காரணமாகவோ தவறாகவே காணப்படுகிறது.

அந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?

சீஷர்கள் மத்தியில் காணப்பட்ட குற்றம் கண்டுபிடிக்கும் மற்றும் விமர்சிக்கும் ஆவியை நமது ஆண்டவர் அறிந்து, “அந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று மரியாளின் சார்பில் அவர்களைக் கடிந்து கொண்டார். சரியான காரியத்தை ஏற்ற நேரத்தில் செய்வதற்கு, ஸ்திரீகளுக்குரிய உள்ளுணர்வானது அவளை வழி நடத்தியது. அவள் தன்னால் என்றுமே தீர்க்கமுடியாத அளவுக்கு, தான் போதகருக்குக் கடன்பட்டுள்ளாள் என்றும், இந்த விலையேறப்பெற்ற நறுமணதைலம் தனது நன்றிக்கான சிறிய வெளிப்பாடாகவும், அவரைப் பாராட்டுவதற்குரிய சிறிய மரியாதையுமாகவே இருக்கும் என்றும் உணர்ந்திருந்தாள். இருதயப்பூர்வமான பக்தியைக் கர்த்தர்மேல் வைப்பதற்கு அவர் பாத்திரவானாக இருந்தார் என்று அவள் கண்டுபிடித்தாள். பெண்களின் உரிமைக்காக போராடுபவளாக அவள் இருக்கவில்லை. கர்த்தருடைய பெயரையும், அவருடைய கீர்த்தியையும் குறித்துப் பிரசங்கிப்பதற்குப் பிரயாணம் பண்ணுவதற்கும், அப்போஸ்தலர்களின் கூட்டத்தில் தன்னையும், மார்த்தாளையும் சேர்க்காமல் இருந்ததற்கும், அவள் கர்த்தர்மேல் குற்றம் சாட்டவில்லை. ஒருவேளை, அவள் இப்படிப்பட்டதான வேலைகளை எல்லாம் செய்யும்படிக்குக் கட்டளை பெற்றிருந்திருப்பாளானால், அதை மகிழ்ச்சியுடன் செய்திருப்பாள் என்பதில் ஐயமில்லை, ஆனால் பெண்களுக்கே உரியதாய் அவளிடத்தில் காணப்பட்ட சுபாவங்கள் இப்படியாக குற்றம் சாட்டிடுவதற்கு அவளைத் தூண்டிவிடவில்லை; மேலுமாக கர்த்தருடைய செய்தியைப் பிரசங்கிக்கும் விஷயத்தில் கர்த்தர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாரபட்சம் பார்க்கின்றார் என்று கர்த்தர்மேல் குற்றம் சாட்டுவதற்கு அவளைத் தூண்டவும் இல்லை.

சத்தியத்தைப் பொதுகூட்டங்களில் அறிவிக்கக்கூடிய கனத்திற்குரிய ஊழியத்தை நடப்பிக்க தடைவிதித்திருந்தபோதிலும், “அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்” என்று நம்முடைய ஆண்டவர் அறிவித்தார். ஆண்டவரைப் பிரியப்படுத்தும் காரியத்தை அவள் செய்தாள். பெண்ணின் இருதயத்திற்குரிய உண்மையான மற்றும் பெருந்தன்மையான சுபாவங்கள் மற்றும் அன்பு மற்றும் பயபக்தி மற்றும் நேர்மை ஆகியவைகளை விவரித்துக்காட்டினவளாக இருந்தாள். வார்த்தைகளினால் அல்லாமல் கிரியைகளின் மூலமாக அவள் பேசிவிட்டாள். கர்த்தர் மீது அவள் கொண்டிருந்த நேசம், இரக்கம் மற்றும் அன்பின் கிரியைகளினுடைய நறுமணம் யுகங்களைக் கடந்து வந்துள்ளது; மேலும் அவள் அவர் தலையின் மீதும், பின்னர் அவர் பாதங்கள் மீதும் ஊற்றின தைலத்தினுடைய இனிமையான சுகந்த வாசனை கிறிஸ்துவின் முழுச் சபையையும் நிரப்பின [R3877 : page 331] வண்ணமாகக் காணப்படுகிறது. இந்தக் காரியத்தைக் குறித்தே, “இந்தச் சுவிசேஷம் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவள் செய்ததும் சொல்லப்படும்” என்றார்.

மரியாளைக் குறித்த எவ்வளவு இனிமையான நினைவுகூருதல்! கர்த்தரை இவ்விதமாய் அபிஷேகம் பண்ணும் விஷயத்தில் அவளுடைய உள்ளுணர்வு, சீஷர்களின் இவ்விஷயம் தொடர்பான எண்ணங்களைக் காட்டிலும் மேலானதாய் இருக்கின்றது, என்ற உண்மையை நாம் உணரும்போது அவளின் மீது நம் அனைவருக்கும் அன்பும், மதிப்பும் ஏற்படுகின்றது; கர்த்தரை அபிஷேகம் பண்ணின விஷயத்தில் அப்போஸ்தலர்கள் மிகவும் அக்கறையற்றவர்களாகவும், கணக்குப் பார்க்கிறவர்களாகவும், மிகவும் இலாப நஷ்டம் பார்க்கிறவர்களாகவும் இருந்தார்கள். சீஷர்களிடம் காணப்பட்ட இந்தக் குறைபாட்டினைத் தன்னுடைய அன்பு கலந்த பக்தியின் மூலம் நிறைவாக்கினவளாய் இருந்தாள். அன்று முதல் இன்றுவரையுள்ள கடந்த நூற்றாண்டுகளில் காணப்பட்டச் சபை சரித்திரத்தில் பெண்கள் சந்தேகத்திற்கிடமின்றி நன்மைப்பயக்கும் பங்கினை மரியாளைப்போல் நிறைவேற்றி வந்திருக்கின்றனர். (மரியாளைப் போன்ற) பெண்களுடைய பாகம் இல்லாமல் இருந்தால், இயேசுவினுடைய மதமானது இன்றிருப்தைக் காட்டிலும், மிகவும் சடங்காச்சாரமாகவும், கடமைக்குரியதாகவும், ஆர்வம் காட்டுவதற்கு பாத்திரமற்றதாகவும் இருந்திருக்கும்; ஆனால், இந்த உண்மையான பெண்மையின் பரந்த மற்றும் ஆழமான அன்பானது, கிறிஸ்துவினுடைய இருதயத்தையும், கிறிஸ்துவினுடைய அன்பையும் புரிந்துகொள்வதற்கு உதவிசெய்தது; மேலும், ஆட்டுக்குட்டியானவருடைய பின்னடியார்கள் அனைவருக்கும் ஆசீர்வாதமாயும் இருந்துள்ளது.

தரித்திரர் எப்போதும் உங்களோடிருக்கிறார்களே

ஆண்டவரிடம் ஜெபிப்பதற்கும், அவருடைய திட்டங்களை அறிந்துகொள் வதற்கும் செலவிடப்படும் தருணங்கள் மற்றும் அவருடைய ஊழியத்தைச் செய்வதற்கும், பெற்றச் சத்தியங்களை அறிவிப்பதற்கும் செலவிடப்படும் பணங்கள், காலங்கள் விரயமாக்கப்படுகின்றது என்று கருதுவதும், மேலும் இவ்விதமாய்ச் செலவிடுவதால், தரித்திரர்களுக்குக் கொஞ்சமே செலவிடப்படுகின்றது என்று அனுமானிப்பதும் தவறாகும். மாறாக, ஒருவர் எவ்வளவாய்க் கர்த்தரிடத்தில் மெய்யான அன்புடன் கலந்த பக்தி கொண்டிருக்கின்றாரோ அவ்வளவாய் அவர் கர்த்தருடைய ஊழியத்திலும், தரித்திரர்களிடத்திலும் அக்கறை உள்ளவராய்க் காணப்படுவார். ஒருவன் தரித்திரரிடத்திலும், தன்னுடைய தானதர்மங்களை அடையத்தக்க நிலையில் இருக்கும் யாவரிடத்திலும் மிகுந்த இரக்கமும், மிகுந்த தாராள மனப்பான்மையும் கொண்டிராமல் அவனால் கர்த்தரை உண்மையாய் அன்புகூர முடியாது. “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு” (நீதிமொழிகள் 11:24) என்று வேதவாக்கியங்கள் கூறுகிறது. கர்த்தருடைய பின்னடியார்கள் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டுமே தவிர, பிசினித்தனம் பண்ணக்கூடாது. பிசினித்தனமாய் இருந்து சொத்துக்களைத் திரளாய்ச் சேர்த்து வைக்கவும் கூடாது. அவர்கள் தண்ணீர்கள்மேல் தங்கள் ஆகாரத்தைப் போடுகிறவர்களாய் இருக்க வேண்டும்; அவர்கள் நன்மை செய்து கர்த்தரிடத்தில் பலனை எதிர்பார்க்கிறவர்களாய் இருக்க வேண்டும்; அவர்களிடம் கர்த்தரால் ஒப்படைக்கப்பட்ட ஐசுவரியங்களை அவர்கள் ஆவிக்குரிய விதத்திலும், பூமிக்குரிய விதத்திலும் இலவசமாய்/தாராளமாய்ப் பயன்படுத்தி அதற்கே உரிய அவர்களுக்கான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கிறவர்களாய் இருக்கவேண்டும்.

பக்தியுள்ள மரியாளுடைய இந்தக் கிரியையும், அதற்காக நம் ஆண்டவருடைய விமர்சனமும், சுவிசேஷ யுகம் முழுவதிலும் உள்ள ஆண்டவருடைய ஜனங்களுக்குப் பேருதவியாயிருக்கிறது. ஒரு காலத்தில், கர்த்தருடைய ஜனங்கள் நடத்தின ஒருநாள் ஆவிக்குரிய கூட்டங்களையும், பொது மாநாடுகளையும் நடத்துவதற்கு அதிகமான பணம் செலவழிந்துவிடுகிறது என்றும், அப்பணத்தைக் கொண்டு மற்ற ஊழியங்களைச் செய்யலாம் என்றும் எண்ணினோம். ஆயினும், நாம் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் பணம் என்னும் தாலந்தைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆசீர்வாதம் உண்டென்பதை அறிந்துகொண்டோம். சத்தியத்திற்கடுத்த விஷயங்களில் கொஞ்சம் பணங்களையும், கொஞ்சம் தியாகங்களையும், செய்ய மறுப்பவர்கள் சத்தியத்திற்குச் செலவிடுவதின் காரணமாகக் கர்த்தரிடத்திலிருந்து வரும் திரளான பிரதிபலன்களாகிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும். மாறாக தங்களுடைய பணத்தை மற்றவர்களுக்குச் சத்தியத்தை வழங்கும் விஷயத்திற்கும், தங்களுடைய சொந்த இருதயத்திற்குப் போஷாக்களிக்கும் விஷயத்திற்கும் செலவிட நாடுவார்களானால், அதற்கேற்ற மாபெரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு பூமிக்குரிய தேவைகளைக் கர்த்தர் சந்திப்பார் என்று நாம் சிந்திக்கின்றோம்; ஆனால் ஒருவேளை இப்படியாய்ச் சந்திக்கப்படவில்லை என்றாலும் அவர்கள் ஆவிக்குரிய விருந்துகளின் காரணமாகப் பூமிக்குரிய விஷயங்களில், தரித்திரர் நிலையில்தான் காணப்படுவார்களென்றாலும் – ஆவிக்குரிய போஷாக்கே, ஆத்துமத்தின் கொழுமையே, கிறிஸ்துவுக்குள் புதுச் சிருஷ்டிகளெனச் செழித்தோங்குவதே நமக்கு மிகவும் முக்கியம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இந்த ஒரு பண்பிலும், அதேசமயம் அறிவிலும், ஆண்டவருக்கு ஒப்பாக [R3878 : page 331] அன்பிலும் வளர்ச்சியடைவதே, கிறிஸ்துவின் பள்ளியில் அங்கத்தினர்களோடு சக அங்கத்தினர்களாக இருக்கும் நமக்கான முக்கிய நோக்கமாய் இருக்கின்றது.

அவரை அடக்கம் செய்வதற்காக அபிஷேகம் செய்தல்

அவரை அடக்கம் செய்வதற்கு எத்தனமாக மரியாளின் கிரியை இருந்ததாக நமது கர்த்தர் கூறுகிறார். அவர் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுவார் என்ற அவரது தீர்க்கத்தரிசனத்தை உணராதவர்களாகவும், மறந்தவர்களாகவும், இயேசுவின் கூட்டத்தில் இருந்த அநேக கனத்திற்குரிய ஸ்திரீகள், கர்த்தரின் அடக்கப்பண்ணப்பட்ட சரீரத்தை அபிஷேகிக்கும்படி, அக்காலத்து வழக்கத்தின்படி கந்தவர்க்கங்களையும், நறுமணதைலத்தையும் வாரத்தின் முதல் நாளில் கொண்டு கல்லறைக்கு வந்தனர். அவர்களின் நோக்கம் சந்தேகத்திற்கிடமின்றி சரியானதாக இருந்தபோதிலும், கர்த்தரின் அடக்கத்திற்கு முன்னதாகவே, மரியாள் அவரை அபிஷேகித்த காரியம் மிக நேர்த்தியாய் இருந்தது மற்றும் கர்த்தரின் பார்வையில் வரவேற்கத்தக்கதுமாயிருந்தது. இதுபோல், நாமும் நம்முடைய நண்பர்கள், சகோதர சகோதரிகளிடம் இப்படிப்பட்ட செயல்களை வெளிப்படுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். இது, நம்முடைய அன்பான சகோதர சகோதரிகள் தங்கள் பிரயாணத்தின் முடிவை எட்டுவதற்கு முன்பும், அதாவது அவர்கள் இன்னமும் போராட்டம் என்னும் பள்ளத்தாக்கிலே காணப்படும்போது நாம் அவர்களை அன்பான வார்த்தைகள், கனிவான பேச்சுக்கள், தயவுள்ள செயல்கள் ஆகியவற்றினால் அபிஷேகிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றது. கர்த்தருடைய பின்னடியார்களில் மிகவும் பலவான்களாய் இருப்பவர்களுக்கும்கூட, சில சமயம் இரக்கம் மற்றும் உற்சாகமூட்டும் வார்த்தைகள் எவ்வளவு அவசியமாய் இருக்கும் என்பதை நாம் அறியோம். மேலும், அத்தகைய இரக்கத்தை நாம் அவர்களுக்குக் காட்டும்போது, நாம் நம்முடைய சொந்த இருதயங்களுக்கே நன்மை செய்கின்றவர்களாய் இருக்கின்றோம்.

மிகைப்படுத்திய வார்த்தைகளையும், தேவையற்ற டாம்பீகமான வார்த்தைகளையும் ஒருவர் மீது ஒருவர் பொழிய வேண்டும் என்ற அர்த்தத்தில் நாம் சொல்லவில்லை. இரக்கம் மற்றும் உற்சாகமான வார்த்தைகளைப் பேசுவதற்கும், மாய்மாலமாகப் பேசக்கூடிய வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உண்டு. இரக்கமுள்ள இருதயத்தையும், தெய்வீக அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட இருதயத்தையும் உடையவர் நறுமணதைலம் உள்ள வெள்ளைக்கல் பரணியாக இருக்கின்றார். மேலும், தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியாகிய இருதயத்தைத்திறந்து ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் மேலும், நம்முடன் தொடர்பில் இருக்கும் நம்முடைய பூமிக்குரிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள்மேலும் அத்தைலத்தை ஊற்ற வேண்டும். மேலும், ஊற்றுவதற்கேற்ற ஆசீர்வாதத்தை நாம் பெற்றுக்கொள்வோம்; இதை நாம் மறந்துவிட வேண்டாம்; மற்றவருடைய ஜீவியத்தின் பாதையில் மலர்களைத் தூவுவதற்கென நமக்கு அன்றாடம் வரக்கூடிய வாய்ப்புகளை நாம் பயன்படுத்து வோமாக; நாம் இப்படிச் செய்துக்கொண்டிருக்கும்போது வேறொருவர் நமக்காகவும் கூட மலர்களைத் தூவும்படிக்கு கர்த்தர் ஒருவேளை அனுமதிக்கலாம். மற்றவர்களுக்கு நீர் பாய்ச்சுகிறவனுக்கு நீர் பாய்ச்சப்படும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், மற்றவர்களுக்கு உதவிச் செய்கின்றவன், பசியாய் விடப்படுவதில்லை; மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடியவன், ஆறுதல் அளிக்கப்படாமல் விடப்படுவதில்லை. சந்தேகத்திற்கிடமின்றி நாம் எந்தளவுக்கு இரக்கமான, தாராளமான ஆவியைப் பெற்றிருந்து, மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறோமோ, அந்தளவுக்கு நமக்குத் தேவைப்படும் நேரத்தில் ஐசுவரியமுள்ள ஆசீர்வாதங்களில் நம்முடைய பங்கை நாம் பெற்றுக்கொள்ளத்தக்கதாகக் கர்த்தர் பார்த்துக்கொள்வார்.

”அவரோடு ஒருவரும் இருக்கவில்லை” அவரை முழுமையாகப் புரிந்துக்கொள்ள ஒருவராலும் முடியவில்லை

நமது கர்த்தருடைய ஊழியத்தின் முடிவில், அவருடைய கிருபையுள்ள நற்செய்தியைப் பெரும்பான்மையான யூதர்கள் ஏற்றுக்கொள்ளாததினாலும், அவரை நம்பாததினாலும் கர்த்தர் ஏமாற்றத்தின் உணர்வுகளை அடைந்திருப்பார். இந்த உணர்வானது, யூதாஸ் தம்மைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏற்கெனவே திட்டம் தீட்டியுள்ள காரியத்தை அவனுடைய மனதிலிருந்து வாசித்தபோது விசேஷமாய்த் தோன்றியிருக்க வேண்டும். மேலும் பதினொரு அப்போஸ்தலர்களிடத்திலும் பயத்தின் ஆவியைத்தான் கர்த்தர் கண்டார்; தம்மை யார் காட்டிக்கொடுப்பார் என்று அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார் மற்றும் தம்முடைய இக்கட்டு வேளையில் மற்ற அப்போஸ்தலர்களும் தம்மைத் தனியே விட்டுவிட்டு பயத்தினிமித்தம் ஓடிப்போய் விடுவார்கள் என்றும் அறிந்திருந்தார். இந்த மனுஷர்களிடத்தில் (அப்போஸ்தலர் களிடத்தில்) இயேசு தமது செய்தியையும், தமது அன்பையும், தமது ஆவியையும் இவ்வளவு தூரம் பரிமாறியிருந்தபோதிலும், அவர்கள் இன்னமும் பல விஷயங்களில் பெலவீனர்களாய் இருப்பார்களேயானால் – தம்முடைய ஊழியத்தில் தாம் கொஞ்சமே சாதித்துள்ளார் என்ற எண்ணங்களும், இந்தப் பன்னிரண்டு பேரைக்காட்டிலும் மற்ற ஐந்நூறு சகோதர சகோதரிகளும்கூடக் குறைவான பக்தியுடனே இருப்பார்கள் என்ற எண்ணமும் கர்த்தருக்குள் உதித்தன.

இப்படிப்பட்டதான எண்ணங்களுடன் காணப்பட்ட கர்த்தரிடத்தில் அவரைப் [R3878 : page 332] புரிந்தவண்ணமாய் இருந்த ஓர் அன்பான ஆத்துமா வெள்ளைக்கல் பரணியை எடுத்துக்கொண்டு வந்து அவருடைய அடக்கத்திற்கு முன்பதாக அபிஷேகம் பண்ணின காரியமானது, அவருக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும். நம்முடைய அருமையான ஆண்டவருடைய இருதயத்திற்குள் கடந்து வந்ததும், வரவிருக்கிற நாட்களில் அவர் கடந்துசெல்ல வேண்டிய அனுபவங்களுக்காக அவரைப் பலப்படுத்துகிறதுமாகிய சந்தோஷமும், ஆறுதலும், ஆசீர்வாதமானதும், முந்நூறு பணத்தைக் காட்டிலும் அதிக விலையேறப்பெற்றதாய் இருந்தது. இந்தச் சம்பவம் மரியாளை நினைவுகூரும்படி சொல்லப்படவேண்டும் என்று மாத்திரம் கர்த்தர் விரும்பவில்லை; இன்னுமாக நித்திய காலமாய் இருக்கும் எதிர்காலத்தில் கர்த்தருடைய உண்மையான பின்னடியார்கள் மத்தியில் மரியாள் மிக உயர்வான ஸ்தானம் வகிப்பாள் என்று நாம் எண்ணுகின்றோம். அவள் இஸ்ரயேலை ஆட்சி செய்யும் பன்னிரண்டு சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அப்போஸ்தலர்களில் ஒருவராக இடம்பெறாவிட்டாலும், அவள் அன்புகூர்ந்தவரும் மற்றும் தன்னுடைய பக்தியை யாருக்காக வெளிப்படுத்தினாளோ, அந்தக் கர்த்தருக்கு அருகாமையில் காணப்படும் ஏதோ ஒரு பிரமாண்டமான, கனமிக்க ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்வாள் என்பதில் நமக்கு நிச்சயமே.

அறியப்படாத எழுத்தாளர் ஒருவர் கூறும்போது: “உங்களுடைய நண்பர்கள் மரிப்பது வரையிலும் அன்பும், இரக்கமும் உள்ள வெள்ளைக்கல் பரணியை முத்திரையிட்ட நிலையிலேயே வைத்துவிடாதீர்கள். உங்களுடைய நண்பர்களுடைய ஜீவியத்தை இனிமையாக்குங்கள். அவர்களுடைய செவிகள் கேட்கும் நிலைமையிலும் மற்றும் அவர்களது இருதயங்களானது உற்சாகமடைவதற்கு ஏதுவான நிலைமையிலும், நீங்கள் சொல்லும் வார்த்தைகளினால் சந்தோஷப்படக்கூடிய நிலைமையிலும் இருக்கும்போதே, உற்சாகமான வார்த்தைகளையும், மகிழ்ச்சியான வார்த்தைகளையும் பேசுங்கள். அவர்கள் மரித்துப்போன பின்னர் நீங்கள் கூறவேண்டுமென்றிருக்கும் அன்பான வார்த்தைகளை, அவர்கள் மரித்துப்போவதற்கு முன்னதாகவே சொல்லுங்கள். அவர்களது சவப்பெட்டிகளுக்கு நீங்கள் அனுப்ப வேண்டுமென்றிருக்கும் மலர்களை, அவர்கள் மரித்துப்போவதற்கு முன்னதாகவே அவர்களது இல்லங்களைப் பிரகாசிப்பதற்கும், மணமூட்டுவதற்கும் என்றும் அனுப்பிவையுங்கள். ஒருவேளை என்னுடைய நண்பர்கள் நான் மரித்த பிற்பாடு, என்னுடைய சரீரத்தின்மேல் ஊற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அனுதாபமும், பாசமுமாகிய நறுமணதைலங்களினால் நிரப்பப்பட்ட வெள்ளைக்கல் பரணிகளை எங்கோ மூலையில் வைத்திருப்பார்களானால், எனக்கு அவைகள் தேவைப்படும்போது, நான் அவைகளினால் புத்துணர்வும், மகிழ்ச்சியும் அடையத்தக்கதாக, அவர்கள் அதை என்னுடைய சோர்வான மற்றும் உபத்திரவமான நேரங்களில் என்னிடத்தில் கொண்டுவந்து அவைகளைத் திறக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அன்பு மற்றும் அனுதாபத்தின் இனிமைகள் எதுவும் என் மீது யாரும் வீசிடாத ஒரு ஜீவியத்தை ஜீவிப்பதைப் பார்க்கிலும், பூக்குவியல்கள் இல்லாத எளிமையான சவப்பெட்டியைப் பெற்றுக்கொள்வதிலும், புகழுரை இல்லாத அடக்க ஆராதனையைப் பெற்றுக்கொள்வதிலும் நான் திருப்தியாய் இருப்பேன். நம்முடைய நண்பர்கள் அடக்கம் பண்ணப்படுவதற்கு முன்னதாக, அவர்களை அபிஷேகம்பண்ணிடுவதற்கு நாம் கற்றுக்கொள்வோமாக. இறந்த பின் காட்டுகின்ற அன்பு எவ்விதத்திலும் அவர்களின் பாரத்தைத் தணித்து, அவர்களைச் சந்தோஷப்படுத்துவதில்லை. சவப்பெட்டியின் மீதுள்ள பூக்களினால் அவர்கள் மரிப்பதற்கு முன்னதாக கடந்துவந்த சோர்வின் மத்தியிலான வாழ்க்கைக்கு நறுமணம் வீச முடியாது.”

சுயநலத்திற்கு எதிரான தாராளகுணம்

இச்சம்பவத்திற்குப் பிற்பாடு, யூதாஸ் பிரதான ஆசாரியரிடம் சென்று இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்கு முப்பது வெள்ளிக்காசுகளுக்கு ஒப்புக்கொண்டு, இயேசுவைத் தனது கரங்களினால் காட்டிக்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டிருந்தான் என்று பதிவு செய்யப்பட்டுள்ள காரியங்களை நாம் பார்த்துவிட்டு இப்பாடத்தை முடிவு செய்யலாம். மரியாளின் இரக்கத்திற்கும், அன்பிற்கும் மற்றும் யூதாசின் சுயநலத்திற்கும் எவ்வளவு பெரிய வேறுபாடுகள் உள்ளது! மரியாள் மிகவும் அன்பினால் நிரப்பப்பட்டவளாய் இருந்தபடியினால், தான் உட்காரவேண்டும் என்று விரும்பின பாதங்களை உடைய மாபெரும் போதகருக்கு அதாவது, அநேக ஆசீர்வாதங்களையும், இருதயத்திற்குச் சந்தோஷம் அளிப்பவைகளையும் தான் பெற்றுக்கொண்டதான உதடுகளையுடைய மாபெரும் போதகருக்கு, அதாவது கல்லறையிலிருந்து தனது சகோதரனை வெளியே கொண்டுவந்ததும், தன்னுடைய தகப்பனைக் குஷ்டரோகத்திலிருந்து சொஸ்தப்படுத்தினதுமாகிய வல்லமையைக் கொண்டிருந்த மாபெரும் போதகருக்கு, தான் செய்த காரியம் போதுமானது அல்ல என்று எண்ணினாள். நாமும் அதே போதகருக்கு எவ்வளவு கடமைப்பட்டுள்ளோம் என்பதையும், அவருடைய அற்புதமான ஜீவனுள்ள வார்த்தைகள் நம்முடைய இருதயத்திற்குள் சந்தோஷத்தையும், சமாதானத்தையும், ஆசீர்வாதத்தையும் கொடுத்திருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அவருடைய வார்த்தைகளினால் நாமும் மரண நிலையிலிருந்து அழைக்கப்பட்டுள்ளோம்; அப்போஸ்தலர் அறிவிக்கிற பிரகாரமாக நாம் ஒருகாலத்தில், பாவத்தினாலும், மீறுதலினாலும் மரண நிலையில் இருந்தோம், ஆனால் இப்பொழுதோ கர்த்தருடைய ஆவியினால், அன்பின் ஆவியினால், நாம் உயிர்ப்பிக்கப்பட்டு ஜீவன் பெற்றிருக்கிறோம்.

நாமும்கூட பாவம் என்னும் குஷ்டரோகத்தைப் பெற்றிருந்தோம்; ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கப்பட்டுக் காணப்பட்டோம்; மற்றவர்களைப் போலவே நாமும் கோபாக்கினையின் பிள்ளைகளாகக் காணப்பட்டோம். ஆனால், நம்முடைய பாவங்கள் கிருபையாக இரட்சகரினால் மூடப்பட்டது; குஷ்டரோகமும் சுத்தமாக்கப்பட்டது. மேலும், விலையேறப்பெற்ற இரத்தத்தின் மீதான விசுவாசத்தின் வாயிலாக நமது தேவனுடைய பார்வையில், பனியைக் காட்டிலும் வெண்மையாக்கப்பட்டோம். நாமும் கூட ஆண்டவரின் பாதப்படியில் அமர்ந்து அவருடைய போதனைகளை அனுபவிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம். மேலும், நம்முடைய மனங்கள் புதிதாகிறதினாலே மறுரூபமும் அடைகிறோம். நாம் அவருக்குக் காணிக்கைகள் செலுத்தினாலும், அவைகள் நம்முடைய இருதயத்தின் நன்றிக்கான வெளிப்பாடாக இருக்காது என்று எண்ணுவது ஏற்கத்தகுந்ததல்லவா? ஆண்டவர் விரும்பும் விலையேறப்பெற்ற தைலமுள்ள வெள்ளைக்கல் பரணிகளை நாமும் அவருக்குக் கொண்டுவரலாம் அல்லவா! ஆம், தலை மகிமையடைந்துவிட்டது. சரீரத்தின் பல அங்கத்தினர்களும் திரையைக் கடந்துவிட்டனர். ஆனால், கிறிஸ்துவின் இறுதி அங்கத்தினராகிய பாத அங்கத்தினர் மட்டுமே நம் மத்தியில் காணப்படுகின்றார்கள். நம்முடைய முழு வல்லமையோடு ஆவிக்குரிய காரியங்களிலும், பூமிக்குரிய காரியங்களிலும் கிறிஸ்துவின் பாதத்திற்கு உதவிகளைச் செய்ய துரிதப்படுவோம். பாத அங்கங்களிடமிருந்து பூமிக்குரிய கறைகளைச் சுத்தம் பண்ணுவதற்கு எவ்வளவு கண்ணீர்கள் நாம் சிந்தவேண்டியதாயினும், அவைகள் அனைத்தையும் நாம் முழு வல்லமையோடே செய்வோமாக; அவர்களை விலையேறப்பெற்ற நளததைலம் கொண்டு அபிஷேகம் பண்ணுவோமாக. கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கங்கள் மீது, அவர்கள் மத்தியில் மிகவும் தாழ்மையும் எளிமையுமானவர்கள் மீது நாம் செலுத்தும் அன்பும், பாசமும் எவ்வளவு விலையேறப்பெற்றதாய் இருக்குமோ அவ்வளவு நலமாய் இருக்கும்; நம்முடைய இருதயங்களில் அவருக்காகவும், அவருடையவர்களுக்காகவும் நாம் கொண்டிருக்கும் அன்பே நம்முடைய அனைத்து விஷயங்களிலும் வெளிப்படக்கூடியதாய் இருக்கவேண்டும். காலம் விரைவாகப் போய்கொண்டிருக்கிறது – அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள் என்ற பாராட்டிற்குரிய வார்த்தைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் நாம் அபிஷேகம் பண்ணுவதற்குரிய வாய்ப்புகள் இல்லாமல் போய்விடுவதற்கு ஏதுவாக சீக்கிரத்தில் கடைசி அங்கங்களும் திரைக்கு அப்பால் போய் விடுவார்கள். ஆகவே, உலகத்தில் இப்பொழுது அவருக்கு அடையாளமாய் இருப்பவர்களாகிய விசுவாச வீட்டாருக்கு, அதாவது கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கங்களுக்கு நாம் உண்மையாய் இருப்பதின் மூலம் நமது கர்த்தருடைய அன்பான உதடுகளிலிருந்து, இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள் என்ற பாராட்டைச் சம்பாதித்துக் கொள்வோமாக.

மூப்பது வெள்ளிக்காசுகளுக்காக

நம்முடைய விழுந்துபோன நிலையின் இழிவான கிரியைகளுக்கு அஸ்திபாரமாகச் சுயநலம் காணப்படுகிறது. சுயநலமான பேராசையினிமித்தம் ஏவாள் விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியைப் புசித்தாள். பாவமும், மரணமும் ஆளுகை செய்துகொண்டிருக்கும் கடந்த ஆறாயிரம் வருடங்களாகக் காணப்பட்ட சகல இழிவான, கீழ்த்தரமான காரியங்களும் சுயநலத்தின் அடிப்படையிலேயே இருந்தது. ஆகவே, தெளிந்த புத்தியுள்ள ஆவியையே நாம் ஒவ்வொருவரும் நாட வேண்டும். அதாவது, ஒருபக்கம் நாம் மிகவும் கருமிகளாகவும் இருக்கக்கூடாது, மறுபக்கம் மிகவும் ஊதாரியாகவும் இருக்கக்கூடாது. இரண்டில் ஏதோ ஒரு பக்கத்தில் நாம் ஒருவேளை அஜாக்கிரதையாய் இருப்போமானால், கருமித்தனத்திற்குப் பதிலாக மிகவும் தாராளமாய்ச் செய்யும் பகுதியில் நாம் அஜாக்கிரதையாக இருப்பது பாதுகாப்பானதாயும், நலமானதாயும் இருக்கும் அல்லவா? பொருளாசையே எல்லா தீமைக்கும் ஆணிவேராயிருக்கிறது (திருவிவிலியம்) என்று அப்போஸ்தலர் எழுதியிருப்பது சரியே. பொருளாசை என்பது பணத்தை மாத்திரம் குறிப்பிடாமல் பெயர், புகழ், அதிகாரம் அல்லது செல்வாக்கையும் குறிப்பிடுகின்றது. மேலும், “அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து (வழுவி) திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக்கொள்கிறார்கள்” (1 தீமோத்தேயு 6:10) என்றும் அப்போஸ்தலர் கூறுகிறார்.

இந்த வகுப்பாருக்கு, தனது ஆண்டவரை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்றவனாய் இருக்கின்ற யூதாஸ் உதாரணமாக இருக்கின்றான். இயேசு, தாம் சீக்கிரத்தில் மரித்துப்போவதாகவும், இந்தத் தைலம் தம்முடைய அடக்கத்திற்குத் தொடர்புடையதாய் இருக்கின்றது என கூறினதை ஒருவேளை யூதாஸ் புரிந்திருந்தாலும் சரி; இந்த விஷயங்கள் அனைத்தும் கர்த்தருக்கு நிச்சயமாய் சம்பவிக்கும் என ஒருவேளை யூதாஸ் புரிந்துக்கொண்டவனாய் இருந்து, இன்னும் முப்பது வெள்ளிக்காசுகள் தனக்கு இலாபம் என்று எண்ணினாலும் சரி; இவைகள் அவன் குற்றவாளி அல்ல என்று தீர்த்துவிட முடியாது. யூதாசுக்குப் போதகருடன் நெருக்கமான உறவு இருந்தபோதிலும், அவருடைய விலையேறப்பெற்ற வார்த்தைகள் மற்றும் பலத்தக் கிரியைகள் குறித்த அறிவு அவனுக்கு இருந்தபோதிலும் இப்பொழுது சுயநலமும், கீழ்த்தரமும் யூதாசினுடைய இருதயத்தில் ஆழ்ந்து பதிந்து போனபடியினால் அன்போ, பயபக்தியோ அச்சுயநலத்திற்கு எதிராக எதிர்த்து நிற்கமுடியவில்லை.

யூதாஸ், “அவனுடைய சொந்த இடத்திற்குச் சென்றான்,” அதாவது இரண்டாம் மரணத்திற்குச் சென்றான். ஆகவேதான், அவன் பிறவாதிருந்தால் நலமாயிருக்கும் என்று ஆண்டவர் கூறினார். எவ்விதமான சுயநலமுள்ள இலட்சியங்களை எவன் ஒருவன் தன் இருதயத்தை ஆண்டுகொள்ள அனுமதிக்கின்றானோ, எவன் ஒருவன் கர்த்தருடைய கிருபையும், சத்தியமும், தன் இருதயத்திற்குள் வரவும், இருதயத்தை விரிவாக்கி அதனை அன்பினால் நிரப்புவதற்கு அனுமதிக்காமல் இருக்கின்றானோ, அப்படிப்பட்டவன் தனக்கென்று நியமிக்கப்பட்டுள்ள இரண்டாம் மரணத்திற்குப் போக நேரிடும். தேவனுடைய ஆவியினாலும், பெருந்தன்மையின் ஆவியினாலும், அன்பினாலும் நிரப்பப்படுவதற்கு விரும்புபவர்களுக்கு மட்டுமே தேவனுடைய தெய்வீக ஏற்பாடுகள் காணப்படுகிறது. [R3879 : page 333] ஆகவே, நாம் அனைவரும் யூதாசின் ஆவியை, சுயநலமான இருதயத்தை, பண ஆசையை, சுயவிருப்பத்தை, இலட்சியங்களை, அதிகமதிகமாய்த் தவிர்த்து, மரியாளுடைய அன்பான இருதயத்தையும், தாழ்மையையும், அதிகமதிகமாய்ப் பெற்றுக்கொள்ளக்கடவோம். அதாவது, சத்தியத்திற்கு ஊழியம் புரிவதற்கெனத் தனக்குரியவைகளைச் செலவுசெய்ய அவள் சித்தம் கொள்வதற்கு உதவினதோடல்லாமல், கண்ணீர் சிந்தும் அளவிற்கும், ஸ்திரீயின் விலையேறப்பெற்ற ஆபரணமாகிய தலைமயிரைத் தனது போதகருக்கு, தனது கர்த்தருக்கு மற்றும் அவருடைய பாதங்களாகிய எளிய அங்கங்களுக்கு ஊழியம் புரியும் அளவிற்கும், அவள் தன்னைத் தாழ்த்திக்கொள்வதற்கும் அவளுக்கு உதவின தாழ்மையை நாம் அதிகமதிகமாக பெற்றுக்கொள்வோமாக.