R5050 (page 198) [தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்)
மத்தேயு 13:33
வேதவாக்கியங்கள் எங்கும் புளிப்பு என்ற வார்த்தையானது, பாவத்திற்கு அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவேதான் தூய்மையுள்ள இயேசு “வானத்திலிருந்து இறங்கின அப்பம்” என்று அடையாளப்படுத்தப்படத்தக்கதாக, யூதர்கள் புளிப்பில்லாத அப்பத்தினைப் பயன்படுத்திடுவதற்குக் கட்டளையிடப்பட்டனர். மீண்டுமாக அவர்களது வருடாந்தர பஸ்கா காலத்தின்போதும், யூதர்கள் தங்கள் வீடுகளிலிருந்து புளிப்பை அப்புறப்படுத்தி, அதைச் சுட்டெரித்து, அழித்துப்போடும்படிக்குக் கட்டளையிடப்பட்டிருந்தனர். இங்கும் மீண்டுமாக புளிப்பு என்பது பாவத்திற்கு, சீர்க்கேட்டிற்கு அடையாளமாய் இருக்கின்றது. இதைக் குறித்துப் பரிசுத்த பவுல் அடிகளார் சபைக்கு எழுதுவதாவது: “எனவே புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் (பாவம், பகைமை, விரோதம், துர்க்குணம் முதலானவைகளை) தூக்கி எறிந்துவிடுங்கள். அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாயிருப்பீர்கள்” அதாவது கிறிஸ்துவோடுகூட ஒரே புளிப்பற்ற அப்பத்திலுள்ளவர்களாய் இருப்பீர்கள் என்பதாகும். இந்த அப்பத்தைக் குறித்தே அவர் “அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்” என்று குறிப்பிடுகின்றார். (1 கொரிந்தியர் 5:7 திருவிவிலியம்; 1 கொரிந்தியர் 10:17)
ஒரு குறிப்பிட்ட பலியில் அப்பமானது, புளித்த மாவுள்ளதாகச் சுடப்பட வேண்டும் என்பது உண்மைதான்; எனினும் இது சபையாகிய நம்மையும் மற்றும் நாம் சுபாவத்தின்படி பாவிகளாகவும், மற்றவர்களைப்போலவே கோபாக்கினையின் பிள்ளைகளாகக்காணப்பட்டோம் என்ற உண்மையையும், சுடும்போது, புளிப்பினுடைய கெடுக்கும் தன்மையானது நிறுத்தப்படுகின்றது என்பதையும் அடையாளப்படுத்து வதற்கேயாகும் என்று நாம் நம்புகின்றோம்; இந்தச் சுடுதலானது, நமக்குள் பாவமான மற்றும் சீர்க்கேடான தன்மைகள் முற்றிலுமாய் அழிக்கப்படத்தக்கதாக, சபையானது கடந்துபோக வேண்டிய அனுபவங்களை அடையாளமான விதத்தில் அடையாளப் படுத்துகின்றதாய் இருக்கின்றது.
இந்த உவமையில் ஒரு ஸ்திரீ குடும்பத்திற்கான உணவு/மாவில் புளித்த மாவைக் கலப்பதாகவும் மற்றும் இதன் காரணமாக மாவு முழுவதும் புளிப்பேறினதாகவும் கர்த்தர் குறிப்பிடுகின்றார். இதன் காரணமாகக் குடும்பத்தில் எவரேனும் சுத்த மற்றும் புளிப்பற்ற அப்பத்தை விரும்பினாலும், பெற்றுக்கொள்ள முடியாது; காரணம் புளிப்பு முழுவதும் பரவிவிட்டது. இது எதனை அடையாளப்படுத்துகின்றது? வேதவாக்கிய அடையாளங்களினுடைய விஷயத்தில் ஸ்திரீ மத அமைப்புக்கு அடையாளமாய் இருக்கின்றாள். உவமையில் இடம்பெறும் ஸ்திரீயானவள், ஆரம்பக்காலத்தில் அதிகாரமுடைய மற்றும் சுத்த அப்பத்தை அதாவது கர்த்தரினால் விசுவாச வீட்டாருக்கு அளிக்கப்பட்டதான தூய அப்பத்தைப் பெற்றிருந்த ஓர் அமைப்பை அடையாளப் படுத்துகின்றாள்.
ஸ்திரீ உணவனைத்துடன், புளிப்பை, தப்பறையை, போலி உபதேசத்தினைக் கலந்துவிட்டாள். புளிப்பேற்றப்படாமல் எதுவும் விடப்படவில்லை. விளைவு அஜீரணமாகும். தூய்மையானதான தேவவார்த்தையானது ஏற்றுக்கொள்ளப்படுகிறதில்லை. புளிப்பானது பரவியுள்ளபடியால், இன்றைக்கு [R5050 : page 199] இறையியல் உபதேசங்கள் அனைத்தும், அனைத்துச் சபைப் பிரிவுகளிலுமுள்ள கிறிஸ்தவ ஜனங்கள் அனைவருக்கும் வெறுப்பிற்குரியதாகவும், கேடானதாகவும் காணப்படுகின்றது.
நடந்திருப்பவைகளுக்குத் தீர்க்கத்தரிசனமாக இவ்வுவமை காணப்படுகின்றது. உண்மையான கிறிஸ்தவர்கள் அனைவரும் இருண்ட யுகத்தினுடைய விசுவாசப்பிரமாணங்களினின்று, இயேசு மற்றும் அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கத்தரிசிகளினுடைய வார்த்தைகளுக்குச் செவிக்கொடுக்க திரும்பும் காலம் வந்துள்ளது. வேதாகமத்தின் போதனைகளே, கலப்படமற்ற தேவவார்த்தை என்றும், அதுமாத்திரமே “நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கும்” என்றும், அதுமாத்திரமே “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி” செய்யும் என்றும் மீண்டுமாகச் சுட்டிக்காட்டுபவர்களில் முதன்மையானவராக, புனித போப் அவர்கள் இடம் பெறுவதைக் கண்டு நாம் மகிழ்கின்றோம். (2 தீமோத்தேயு 3:15-17)