R2917 – நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2917 (page 380)

நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டார்

CHRIST OUR PASSOVER WAS SACRIFICED FOR US

யாத்திராகமம் 12:1-17

வாதைகள் ஒவ்வொன்றும் மோசேயின் மூலமான பார்வோனின் வேண்டுதல்களுக்கு இணங்க தெய்வீக இரக்கங்களினால் ஓய்ந்துபோனாலும், பார்வோனின் இருதயமோ கடினப்பட்டு கொண்டிருந்தது. தேவன் முன்னதாகவே அறிந்து அறிவித்திருந்த வண்ணமாக தேவனுடைய தயவு பார்வோனை மனந்திரும்புதலுக்கு ஏதுவாக நடத்தாமல் அவனை இன்னும் கடினப்படுத்தவே செய்தது. கடைசி பத்தாவது வாதை இந்தக் கடினமான மனிதனை (பார்வோன்) உருக்குலைய வைத்து, இஸ்ரயேலை விடுவிக்கும் கட்டாயத்திற்குள் அவனை நடத்தும் என்று தேவன் மோசேயினிடத்தில் கூறியிருந்தார். இந்த (கடைசி) வாதை வருவதற்கு முன்பு பார்வோன் இஸ்ரயேலர்களை விடுவிப்பதற்கு விரும்புகின்றானோ? என்று மோசே அவனிடம் கேட்டார். மேலும் எதிர்மறையான பதில் வந்தபோது இதன் விளைவாக அச்சம் மிகு ஆபத்து எகிப்தியர்கள் மீது வருமென்று பார்வோனை எச்சரிக்கவும் செய்தார். பின்னர் உடனடியாக மோசே கோசேன் நகரத்தைவிட்டுத் திரும்பி ஜனங்களை யாத்திரைக்கு ஆயத்தம் பண்ணும்படி புறப்பட்டார். இஸ்ரயேலர்கள் போகவேண்டும் என்றதாலும், தங்களின் ஆட்சியாளர்கள் பிடிவாதத்தில் இருப்பதின் நிமித்தம் வருத்தம் கொண்டதாலும், இஸ்ரயேலர்களுக்குத் தாராளமாக பொன், வெள்ளி ஆபரணங்களையும், விலையுயர்ந்த பொருட்கள் பலவற்றையும் எகிப்தியர்கள் கொடுத்தார்கள். தேவன் இஸ்ரயேலர்களோடு இருக்கிறார் என்றும், எகிப்தியர்களுக்கு எதிராக இருக்கின்றார் என்றும் பார்வோனால் உணரமுடியாமல் இருந்தபோதிலும், எகிப்திய ஜனங்கள் இதை ஏதோ விதத்தில் உணர்ந்திருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பயணத்திற்கான ஆயத்தத்திற்கு எத்தனை நாட்கள் எடுத்தது என்று நமக்குத் தெரியவில்லை, ஆனால் அந்த நாட்களானது பார்வோனுக்கும் மற்றும் மோசேயினாலும், ஆரோனாலும் முன்வைக்கப்பட்டதான கடைசி அச்சுறுத்தல் குறித்து அறிந்திருந்திருந்த அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பின் காலமாகவே இருந்திருக்குமென்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் பயணத்திற்கு ஆயத்தம்பண்ணுவதற்கு அநேக நாட்கள் தேவைப்பட்டிருந்திருக்கும் என்பதில் நமக்கு உறுதியே; ஏனெனில் ஜனங்களில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பழுதற்ற ஒரு வயது ஆண் ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்ற அறிவிப்புகளிலிருந்து மேற்கூறிய உறுதி நமக்குக் கிடைக்கின்றது; இந்த ஆட்டுக்குட்டியானது பஸ்கா என்று அழைக்கப்படுகின்றதான மத ஆசரிப்பிற்கு அடிப்படையாகப்போகின்றது மற்றும் பஸ்காவானது அதுமுதல் அந்த ஜாதியாரால் ஆசரிக்கப்பட்டு வருகின்றது. ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்து, அதை மற்றவைகளிடமிருந்து பிரித்து, ஆபிப் (பின்னர் நீசான் என்று அழைக்கப்பட்ட) மாதம் 10-ஆம் தேதிவரை பாதுகாத்து, அந்த மாதத்தின் 14-ஆம் தேதியிலே சாயங்காலங்களுக்கு நடுவில் (ஒரு நாளினுடைய மாலை 6 மணியிலிருந்து, அடுத்தநாள் மாலை 6 மணிவரை – வழக்கமான யூத நாள்) அடிக்கப்பட வேண்டும். அந்த ஆட்டுக்குட்டியின் மாம்சம் அன்றைய நாளின் மாலையில் புசிப்பதற்காக சுடப்பட வேண்டும். அதன் இரத்தம் வீட்டுவாசலின் நிலைக்கால்களிலும் மற்றும் மேற்சட்டங்களிலும் [R2918 : page 380] தெளிக்கப்படுவதற்கென எடுத்து வைக்கப்பட வேண்டும். அந்த நாளின் இரவில் குடும்பம் குடும்பமாக ஒன்றுக்கூடி கசப்பான கீரைகளோடு, சுடப்பட்ட மாமிசமானது, பிரயாணத்திற்கான எதிர்ப்பார்ப்புடன், எகிப்தை விட்டு 15-ஆம் தேதி காலையில் நேரமே புறப்படுவதற்கெனப் பாதரட்சைகளையும், கைகளில் தடிகள் முதலியவற்றையும் எடுத்துக் கொண்டு புசிக்கப்பட்டது.

யாத்திராகமம் புஸ்தகத்தில் பதிவு செய்யப்பட்ட இச்சம்பவம் எபிரெயர்களுக்கு மிகவும் சுவாரசியமானதாகும், விலையேறப்பெற்ற ஒன்றாகவும் காணப்பட்டது மற்றும் அது தொடர்பான பிரமாணமானது அந்த ஜாதியாரின் வரலாற்றில் மிக முக்கியமான சம்பவமாகக் காணப்படுகின்றது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கோ இது அதிலும் மேன்மையான முக்கியத்துவம் கொண்டுள்ளதாகும். நிஜமான இஸ்ரயேலனான கிறிஸ்தவனைப் பொறுத்தவரையில் இந்த முழுச் சம்பவமும் நிஜமான இரவின் முடிவிலும் மற்றும் நிஜமான பஸ்கா நாளின் துவக்கத்திலும், நிஜமான மோசேயின் கரங்களின்மூலம், நிஜமான இஸ்ரயேலர்களுக்குக் கிடைக்கப்பெறும், நிஜமான விடுதலையைக்குறிக்கின்றது. “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டார்” என்ற நம்முடைய ஆதார வசனமானது, கர்த்தராகிய இயேசுவே நிஜமான ஆட்டுக்குட்டி என்று அடையாளப்படுத்துகின்றது மற்றும் அவர் செலுத்திட்ட பலியை நாம் இப்பொழுது எதிர்ப்பார்த்திருக்கின்றதும் மற்றும் சமீபித்திருக்கின்றதுமான விடுதலையுடன் தொடர்புபடுத்துகின்றது (1 கொரிந்தியர் 5:7). இந்தக் கருத்துக்கள் அனைத்துப் பிரிவுகளிலுமுள்ள கிறிஸ்தவர்களால் உணரப்பட்டுள்ளது. மேலும் நம்முடைய கர்த்தரின் இராப்போஜனமானது, பஸ்கா இராப்போஜனத்தின் நிஜத்திற்கான நினைவுகூருதல் என்று விசேஷமாக கத்தோலிக்க திருச்சபைகளாலும், புராட்டஸ்டண்டின் பழைய பிரிவுகளில் உள்ளவர்களாலும் உணரப்பட்டுள்ளது. எபிரெயர்கள் பஸ்காவை வருடந்தோறும் அனுசரிப்பதுபோன்று, இந்தச் சபைகளும் வருடந்தோறும் “புனித வெள்ளி” என்ற பெயரிலும், கர்த்தரின் இராப்போஜனம் என்ற பெயரில் அடையாளமான இராப்போஜனத்தையும், “தேவனுடைய ஆட்டுக்குட்டியின்” மரணத்திற்கும் மற்றும் “முதற்பேறானவர்களின் சபைக்குக்” பாராட்டப்பட்ட தெய்வீக இரக்கத்திற்குமான நினைவுகூருதலாக அனுசரிக்கின்றனர்.

நாம் சற்று நேரம், பஸ்காவின் அம்சம் சிலவற்றையும் மற்றும் நிஜமான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய நமக்கான, அவைகளின் அர்த்தங்களையும் பார்க்கலாம். ஆட்டுக்குட்டியை அந்த மாதத்தின் 10-ஆம் தேதியில் எடுத்துக்கொண்ட விஷயம், நமது கர்த்தராகிய இயேசு, தமது முதலாம் வருகையின்போது, தமது ஊழியத்தின் முடிவில் இஸ்ரயேலர்களுக்கு அதே நீசான் மாதம் 10-ஆம் தேதியில் கழுதைக்குட்டியின்மீது ஏறிச்சென்று, தம்மை இராஜாவாக முன்வைத்ததைக் குறிக்கின்றது. இச்சமயத்தில்தான் இஸ்ரயேல் ஜாதியார் அவரை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்; ஆனால் அவர்களோ, “அவரைவிட்டு தங்களுடைய முகங்களை மறைத்துக் கொண்டார்கள்.” அவர்கள் ஓர் ஜாதியாரென விரும்பின ரூபத்தை அவர்களால் அவரிடத்தில் பார்க்கமுடியவில்லை. நீசான் மாதம் 14-ஆம் தேதியன்று மாலையில் நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களோடு பஸ்காவைப் புசித்தார். அன்றைய இரவிலேயே அவர் காட்டிக்கொடுக்கப்பட்டார். நீசான் மாதத்தின் 14-ஆம் நாளின் காலையில் அவர் குற்றவாளியாக தீர்க்கப்பட்டுச் சிலுவையில் அறையப்பட்டார். பின்னர் அதே நாளில் அடக்கம்பண்ணப்பட்டார். இவைகள் அனைத்தும் நீசான் மாதம் 14-ஆம் தேதியில் சாயங்காலங்களுக்கு நடுவில் நடந்தது; அதாவது நாளின் ஆரம்பமாகிய மாலை 6 மணி முதல், நாளானது முடிவுறும் அடுத்த மாலை 6 மணிவரையிலான காலப்பகுதிகளுக்குள் நடந்தது. அடுத்த நாளில், 15-ஆம் தேதியில், மாலையில் யூதர்களின் பஸ்கா பண்டிகை அனுசரிக்கப்பட்டது. நம்மிடத்திலான தேவனுடைய கிருபையில் சந்தோஷம் கொள்வதன் மூலமும், தொடர்ந்து புசிப்பதின் மூலமும், நாம் அந்தப் பண்டிகையை நிஜமாக அனுசரிக்கிறோம். ஆனால் கர்த்தருடைய இராப்போஜனமானது, நீசான் மாதம் 14-ஆம் தேதிக்கு உரியதாகவும், தேவனுடைய ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டதின் நினைவுகூருதலாயும் உள்ளது. பஸ்கா புசிக்கப்பட்ட இரவானது, இந்தச் சுவிசேஷ [R2918 : page 381] யுகத்தை அடையாளப்படுத்துகின்றது; அதாவது பாவமும், தீமையும் மேலோங்கி காணப்படுகின்றதும் மற்றும் “தங்களுக்காக பலியிடப்பட்ட பஸ்காவாகிய கிறிஸ்துவின்” புண்ணியங்களைப் புசித்தும், அவருடைய மாம்சமே மெய்யான அப்பம் என்று உணர்ந்தும் கர்த்தருடைய ஜனங்கள் காணப்படுகின்றதான இருளான நேரமாகிய இந்தச் சுவிசேஷயுகத்தை அடையாளப்படுத்துகின்றது.

ஆட்டுக்குட்டியின் மாம்சத்தோடு யூதர்கள் – பாவத்திலிருந்து விலகியிருக்கும் நிலையை அடையாளப்படுத்துகின்றதான புளிப்பில்லாத, தூய்மையான, கலப்படமில்லாத அப்பத்தையும் புசித்தார்கள். இது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் பரம பிதாவினிடத்திலிருந்து நமக்குவரும் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை அடையாளப்படுத்துகின்றது. “இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.” (யோவான் 6:50) எபிரெயர்கள் தங்களுக்குரிய அப்பத்தையும், ஆட்டுக்குட்டியையும் புசித்ததுபோல, நிஜமான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களும் கிறிஸ்துவின் கிருபைகளிலும், புண்ணியங்களிலும் இலவசமாய்ப் பங்கெடுப்பதோடல்லாமல், கசப்பான கஷ்டங்கள், சோதனைகள், தவறாக கருதப்படுதல் மற்றும் பாடுகளை அடையாளப்படுத்தும் “கசப்பான கீரைகளையும்” கூடப் பெற்றுக்கொள்கின்றனர். எபிரெயர்கள் காலையிலுள்ள தங்களுடைய பிரயாணத்திற்கு ஆயத்தமாய் இருந்த நிலையில் புசித்ததுப்போல, உண்மையான இஸ்ரயேலர்கள் இந்தச் சுவிசேஷயுகத்தில் இந்த ஆவிக்குரிய கிருபைகளில் பங்குகொண்டு, தற்போது எகிப்தில் இருப்பதைப்போல் தோன்றினாலும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கே ஏங்கியவர்களாய் இருக்கின்றனர். மேலும் இவர்களின் வாழ்க்கைமுறை இவர்கள் இந்தத் தேசத்தில், உலகில், பரம தேசத்தையே நாடித் தேடும் பரதேசிகளும், அந்நியர்களுமாய் இருக்கின்றனர் என்று சுட்டிக் காட்டுகின்றது. ஆனால் பஸ்கா புசிக்கப்பட்ட அன்றைய இரவில் விடுதலை வராமல், இரவைத் தொடர்ந்த காலையிலே வந்தது. இதுபோலவே, ஆவிக்குரிய இஸ்ரயேலர்களின் விடுதலையும், இவ்வுலகத்தின் அதிபதியின் ஆளுகையில் பாவம் மற்றும் உபத்திரவத்தின் இரவில் வருவதில்லை. “உம்முடைய இராஜ்யம் வருவதாக” என்று நாம் ஜெபிக்கும், எதிர்பார்க்கும், காத்திருக்கும் ஆயிரவருட அரசாட்சியின் காலையிலேயே விடுதலை வருகின்றது. “தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.” (சங்கீதம் 46:5)

பஸ்கா என்பது இஸ்ரயேல் ஜனங்கள் காலையில் செங்கடலைக் கடந்து செல்வதை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறிக்கும் என்று சிலர் எண்ணுவது தவறாகும். இப்படியாக எதுவுமில்லை. பஸ்கா ஆட்டுக்குட்டி புசிக்கப்பட்ட மற்றும் அதன் இரத்தம் நிலைக்கால்களில் பூசப்பட்ட இரவில் இஸ்ரயேலரின் முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதல் காரணமாக அல்லது தப்புவிக்கப்பட்டதினிமித்தமாக, கடந்துபோகுதல்/பஸ்கா என்ற பெயர்ச் சூட்டப்பட்டது. சங்காரத்தூதன் எகிப்து முழுவதும் சென்று, எகிப்தின் அனைத்து முதற்பேறானவர்களையும் சங்கரித்தார். மேலும் இரத்தம் மேற்சட்டங்களில் மற்றும் நிலைக்கால்களில் பூசப்பட்ட நிபந்தனையின் பேரில் இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். இந்தத் தெய்வீகக் கட்டளையை மதியாமல் கர்த்தர் மோசே மூலமாய் அறிவித்தப் பிரகாரமாய் இஸ்ரயேலர்களில் யாராகிலும் தங்களின் வீட்டு நிலைக்கால்களிலும், கதவுகளிலும் இரத்தம் பூசாமல் இருந்தால், எகிப்தியர்களுக்கு சம்பவிக்கிறவண்ணமாகவே இவர்களுக்கும் சம்பவிக்கும். யார் கர்த்தருடைய ஜனங்கள் என்றும், யார் அவருடையவர்கள் இல்லை என்றும் இரத்தம் வேறுபடுத்திக் காட்டியது.

ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கு இது எதைக்குறிக்கும்? நம்முடைய பஸ்கா ஆட்டுகுட்டியென நமது கர்த்தர் இயேசுவின் பலியினுடைய மீட்பின் புண்ணியத்தின் மீதுள்ள விசுவாசத்தை அறிக்கையிடுவதே, இரத்தம் தெளிக்கப்படுவதின் அர்த்தம் என்று நாம் பதில் கூறுகின்றோம். இந்த விஷயங்களைக் குறித்ததான கர்த்தருடைய வார்த்தைகளைக் காணும் யாவரும் இரத்தம் சிந்துதலில்லாமல் பாவ மன்னிப்பு இல்லை என்று உணர முடியும். மேலும் இப்படியாக நம்முடைய இரட்சகரின் மரணத்தினுடைய முக்கியத்துவத்தை உணரும் ஒருவர், அதை அறிக்கையிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படலாம், அதாவது நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்படுவது அடையாளப்படுத்துகின்ற அறிக்கையிடுதலானது எதிர்ப்பார்க்கப்படலாம். கதவுகளில் இரத்தம் காணப்படுவது என்பது, கதவுக்குள் இருக்கும் அனைவரும் இரத்தம்மீது நம்பிக்கைக் கொண்டிருப்பதால், அதன் புண்ணியத்தின்கீழ் இருப்பதைக்குறிக்கின்றது. கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டாகும் மீட்பைப்பற்றின உபதேசமானது, நூற்றாண்டுகள் காலமாக அரைகுறையான தெளிவோடு காணப்பட்டிருந்தபோதிலும், இந்த யுகத்தின் முடிவில் கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொண்டவர்களுக்கும், போதகர்கள் என்று தங்களையே அழைத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், விமர்சகர்களுக்கும் இது கேள்விக்குறியாக இருப்பது ஆச்சரியமே/குறிப்பிடத்தக்கது. இத்தகையவர்கள் கர்த்தருடைய பார்வையில் இஸ்ரயேலர்களாய் இராமல் எகிப்தியர்களாகவே இருக்கின்றனர். இஸ்ரயேலர்கள் என்றும், தம்முடைய ஜனங்கள் என்றும் அவர் அடையாளம் காணும் யாவரும், அவரையும், அவருடைய வார்த்தைகளையும் மற்றும் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து இயேசு விலையேறப்பெற்ற இரத்தத்தைச் சிந்தினதுமூலம், அவர் நமக்கு நிறைவேற்றின வேலையையும் அடையாளம் கண்டுகொள்வார்கள்.

பதிலாள் உபதேசமானது இந்த நிழலில் மிகுந்த அழுத்தத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தமானது இரத்தநாளங்களில் இருக்கும்போது ஜீவனைக் குறிக்கின்றது. ஆகவே அது சிந்தப்படுவது மரணத்தைக்குறிக்கும். மரணத்தீர்ப்பானது நம்முடைய மனுஷசந்ததிக்கு எதிராக இருந்தபடியால் கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரிக்கவேண்டியது அவசியமாய் இருந்தது. ஆகவே இந்த யுகத்தில் அவர் அங்கீகரிக்கும் ஒவ்வொருவரும் பாவ நிவாரணபலியின்மீது விசுவாசமும், அதை அறிக்கை செய்கிறவர்களாயும் இருக்க வேண்டும் என்று கர்த்தர் கடமைபடுத்தியுள்ளார். இரத்தம் தெளிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களின் விசுவாசத்திற்கான ஓர் ஆதாரமாய், ஓர் அடையாளமாய், ஒரு சாட்சியாய், ஒரு சான்றாக இரத்தம் உள்ளது. இது தேவனுக்கான அடையாளமாக இராமல், மனிதனுக்கானதாய் உள்ளது. தேவன் தப்புவிக்கச் செய்வார், ஆனால் தப்புவிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு இஸ்ரயேலனும் தன்னுடைய பங்கைச் செய்துள்ளானோ என்று பார்த்துக்கொள்வது அவனுடைய காரியமாய் இருக்கின்றது.

அனைத்து இஸ்ரயேலர்களுக்கும் மரண ஆபத்து உள்ளது என்று தவறாய்க் கருதப்படக்கூடாது. முதற்பேறானவர்களுக்கே ஆபத்து இருந்தது. இதுவே நிழலின் மிக முக்கியமான அம்சமாகும். கர்த்தரையும், நீதியையும் நேசிக்கும் அனைவருக்கும், அதாவது முதற்பேறானவர்களுக்கும், மற்ற அனைவருக்கும் காலையில் விடுதலை வருகின்றதாய் இருந்தாலும், ஆயிரவருட அரசாட்சியின் காலைக்கு முன்பான இரவில் விசேஷமான சோதனை வரும்; இந்த விசேஷமான சோதனை முதற்பேறானவர்களை மாத்திரம் பாதிக்கும். யார் இந்த முதற்பேறானவர்கள்? பரலோகத்தில் பெயர் எழுதப்பட்ட “முதற்பேறானவர்களின் சபையே,” “சிறுமந்தையே,” புதிய சுபாவத்திற்குள்ளும் மற்றும் நமது கர்த்தரோடுக்கூட வரவிருக்கின்ற இராஜ்யத்தில் உடன் சுதந்திரத்திற்குள்ளும் ஜெநிபிக்கப்பட்டவர்களே – இந்த முதற்பேறானவர்கள். பார்வோன் மற்றும் அவனுடைய வல்லமை மற்றும் அடிமைத்தனத்திலிருந்தும் இஸ்ரயேலர்களாகிய மற்ற அனைவரும் விடுவிக்கப்படுவது, மற்ற அனைவரும் சாத்தானின் வல்லமையிலிருந்தும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்படுவதை அடையாளப்படுத்துகின்றது. ஆனால் இந்த இரவில் ஆபத்தில் இருப்பவர்களும், சுவிசேஷ யுகத்தில் தப்புவிக்கப்படுகிறவர்களும் அல்லது கடந்துபோகப்படுகின்றவர்களும் சிறுமந்தையாகிய முதற்பேறானவர்களின் சபையே ஆகும். இதுவே நிழல் தெளிவாய் முன்வைக்கும் காரியமாகும். பஸ்காவிற்குப்பின்/கடந்துபோகுதலுக்குப் பின்னரே புதிய ஒழுங்குகளின் கீழ் இந்தப் பஸ்காவில் தப்புவிக்கப்பட்டவர்கள், லேவியர்களாக தலைமை வகிக்கிறவர்கள் ஆனார்கள் என்பது நினைவில்கொள்ளப்படலாம். மேலும் இவர்களிடத்திலிருந்தே ஆசாரியர்களான சிறுமந்தை வந்தனர். ஆகையால்தான் முதற்பேறான சபையை, “நீங்களே இராஜரிக ஆசாரிய கூட்டத்தார்” என்று அப்போஸ்தலர் கூறுகின்றார். (1 பேதுரு 2:5,9)

இந்தப் பஸ்கா ஆட்டுக்குட்டியின் நிஜம், நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டார் என்று அறிந்து கொண்டோம். மாம்சீக இஸ்ரயேலர்களால் அநுசரிக்கப்பட்ட நிழலின் இடத்தில் வேறொரு நினைவுகூருதலை ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய நமக்கு, நம்முடைய கர்த்தர் நிறுவியுள்ளார். அவர் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில், அவர் ஒரு யூதனாக பஸ்கா இராப்போஜனத்தைப் புசித்த அதே இரவில், பஸ்கா இராப்போஜனத்தைப் புசித்தப் பின்னர், அதை நிறுவினார். உலகத்தின் பாவத்தைப் போக்குகிற நிஜமான தேவனுடைய ஆட்டுக்குட்டியாக அவர் தம்மையே அடையாளப்படுத்தும் அப்பத்தையும், திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு தம்முடைய உண்மையான சீஷர்கள் அனைவரும் யூதர்கள்போன்று நிழலான பஸ்காவை ஆசரியாமல், இதுமுதல் [R2919 : page 382] நிஜமான பஸ்காவை அனுசரிக்கும்படியாகக் கட்டளையிட்டார். “இதைப் பானம்பண்ணும் (பஸ்கா அனுசரிக்கும்போது) போதெல்லாம், (நிழலாய் நடந்த விடுதலையை இனிமேல் நினைவுகூராமல்) என்னுடைய நினைவாகச் செய்யுங்கள் என்றார்.” இது வருடாவருடமும் மற்றும் இன்னமும் நினைவுகூரப்படுகின்றது.

இப்பாடம் குறித்த விஷயத்தில் சில தேவனுடைய ஜனங்கள் குழப்பமடைந்துள்ளதாலும், நினைவுகூருதல் இராப்போஜனமானது, யூதருடைய பஸ்காவிற்கான நிஜத்தின் நினைவுகூருதல் என்ற உண்மையினைக் கவனிக்கத்தவறினதாலும், கர்த்தருடைய உத்தரவு இல்லாமலேயே, தாங்களாகவே இராப்போஜனத்தின் ஆசரிப்பிற்கான வேளைகளையும், காலங்களையும் நிர்ணயிப்பதற்குத் தங்களுக்குச் சுயாதீனம் இருப்பதாக எண்ணிக்கொள்கின்றனர். இவர்கள் இப்படியாகச் செய்திடும் விஷயத்தில், பழியிலிருந்து விலகுவதற்குக் காரணங்கள் இருக்கின்றது; ஏனெனில் மாபெரும் எதிராளியானவனால் அமைப்பு நிறுவப்பட்டது முதற்கொண்டு, 18 நூற்றாண்டுகளாக, அநேகம் உபதேசங்களும், தவறான ஆசரிப்புகளும் இயேசுவின் பின்னடியார்கள் மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டது; இப்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட உபதேசங்களில் ஒன்று பூசைபலி உபதேசமாகும்; இது கிறிஸ்துவின் பலியைத் திரும்பத்திரும்ப ஏறெடுப்பதற்கான நோக்கம் உடையதாகும் மற்றும் பாதிரியார் கிறிஸ்துவின் மாம்சத்தை உருவாக்கி, யாருக்காகப் பூசைபலி ஏறெடுக்கபடுகின்றதோ, அவரின் பாவங்களுக்காகக் கிறிஸ்துவைப் பூசைபலியில் மீண்டுமாகப் பலிசெலுத்துகின்றார் என்பதாகக் கூறப்படுகின்றது. போப்மார்க்கத்தினின்று வெளியே வந்தவர்களாகிய புராட்டஸ்டண்டினர்கள், பூசைபலியைப் புறக்கணித்தனர் என்றபோதிலும், பூசைபலியானது அடிக்கடிப் பண்ணப்பட்டதினால், கர்த்தருடைய இராப்போஜனமும் காலம் மற்றும் வேளைத் தொடர்புடைய விஷயத்தில் எவ்வித வரையறை இல்லாமல் ஆசரிக்கப்பட வேண்டுமென்று கற்பனைபண்ணி, ஆசரித்துவருகின்றனர். கடைசி இராப்போஜனத்திற்கென்று இன்னும் பஸ்காவின் தேதியினைக் கடைப்பிடிப்பவர்களாகிய பழமைமிக்க சபைகளுங்கூட, யூதர்களுடைய வழக்கத்திற்கு மாறான புதிய வழக்கத்தினைத் தேர்ந்தெடுத்துக்கொண்டனர் – அதாவது இவர்களது புதிய வழக்கத்தின்படி நினைவுகூருதலுக்கான நாளானது எப்போதும் உண்மையான/சரியான தேதிக்கு அருகாமையிலுள்ள வெள்ளிக்கிழமையன்று காணப்படுகின்றது மற்றும் இதனால் பின்வரும் ஞாயிறானது ஈஸ்டராகக் காணப்படும்; இது வாரத்தினுடைய முதல் நாளில் இடம்பெற்ற நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்கான நினைவுகூரும் நாளாய்க் காணப்படுகின்றது.

நமது கர்த்தரினாலும், அப்போஸ்தலர்களினாலும் பயன்படுத்தப்பட்டதும், அன்றும், இன்றும் கர்த்தருடைய ஜனங்கள் சிலரால் பயன்படுத்தப்பட்டதுமான யூத காலக்கணக்கீட்டு முறைமையின்படி, பஸ்காவின் வருடாந்தர ஆசரிப்பிற்கான அடுத்த வருஷத்தின் ஆண்டு நிறைவு நாளின் தேதி 1902-இல், ஏப்ரல் 20-ஆம் தேதி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிற்பாடு காணப்படும்.