R1657 (page 160)
யாத்திராகமம் 14:19-29
“விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்துபோனார்கள்.” – எபிரெயர் 11:29
தேவனுடைய முற்காலத்து ஜனங்களுடைய சரித்திரத்தின், இவ்வதிகாரமானது தேவனுடைய வல்லமை மற்றும் ஞானம் மற்றும் அன்பிற்கான உதாரணமாக விளங்குகின்றது. இதன்பால் கவனம் காட்டுகின்ற அனைவருக்கும் இது, சர்வ வல்லமையுள்ளவருடன் எதிர்த்துப்போராடுவதற்கான பிரயாசம் எடுத்தலைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்கத்தக்கதாக எச்சரிப்பாய்க் காணப்படுகின்றது. அவருடைய பராமரிப்பின்கீழ்க் காணப்படுபவர்கள் எவ்வளவு வலுவற்றவர்களாகவும் (அ) முக்கியத்துவமற்றவர்களாகவும் (அ) ஏழைகளாகவும் (அ) மனுஷருக்குள்ளே அசட்டைப்பண்ணப்பட்டவர்களாகவும் காணப்பட்டாலுங்கூட அவர்களுக்கு எதிராய் ஓங்கியெழும்பும் கரமானது, தேவனுடைய வல்லமைக்கு எதிராக எதிர்த்து நிற்கிறதாய் இருந்து மற்றும் நிச்சயம் கெடுதலுக்கு ஆளாகுகின்றதாய்க் காணப்படும்.
எகிப்திலிருந்து நிழலான இஸ்ரயேலின் இந்த விடுதலையானது, தேவனுடைய ஊழியக்காரர்களாய் இருப்பதற்கும் மற்றும் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வாஞ்சிப்பவர்கள் அனைவரும் பாவத்திலிருந்தும், அதன் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்படுவதைச் சித்தரிக்கின்றதாய் இருக்கின்றது; இந்த வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களானது, வாதைகளுக்குப் பிற்பாடு, மனிதனுடைய முன்னேற்றத்திற்கும், தேவனிடத்தில் நெருங்குவதற்கும் தடையாய் இருக்கின்ற பாவம் மற்றும் சுயநலத்தினால் உண்டான அமைப்புகள் அனைத்தும் முற்றிலுமாய் அழிகையில் நிறைவேறும். (வெளிப்படுத்தல் 16) பார்வோனின் சேனையானது, கடலினால் கவிழ்க்கப்பட்டக் காரியமானது, அண்மையில் சம்பவிக்க இருக்கிற மகா “உபத்திரவ காலத்தில்,” அடிமைப்படுத்தி வைத்திருக்கும் தற்காலத்து அமைப்புகளில் அநேகமானவைகள் ஒழுங்கின்மையினால் கவிழ்க்கப்படும் எனும் உண்மைக்கு ஒத்ததாக இருக்கின்றது. பொல்லாதவர்கள் அனைவரையும் இறுதியில் கவிழ்த்துப்போடுகின்றதான புயலானது ஏற்கெனவே கிட்ட நெருங்கி வந்துகொண்டிருக்கின்றது; ஆனால் தேவனை நாடுகின்றவர்களும், அவரில் தங்களது விசுவாசத்தைவைத்து, அவரது ஞானமானது சுட்டிக்காட்டும் பாதையில் தொடருகின்றவர்களுமானவர்கள் அனைவருக்கும் தப்பித்துக்கொள்வதற்குமான போக்கு அருளப்பட்டிருக்கும்.
யாத்திராகமம் 11:2; 12:35, 36-ஆம் வசனங்களில் ஆங்கிலத்தில் இடம்பெறும் “borrowed” மற்றும் “lent” என்பதான வார்த்தைகளானது, shaal என்ற எபிரெய வார்த்தையினுடைய சரியற்ற மற்றும் தவறாய்ப் பொருள் கொடுக்கும் மொழிபெயர்ப்புகளாகக் காணப்படுகின்றது என்பதையும், தேவன் சார்பிலான ஒரு நேர்மையற்றக் கட்டளையாகவும், இஸ்ரயேலர்கள் சார்பிலான ஒரு நேர்மையற்ற நடக்கையாகவும் தோன்றும் அர்த்தத்தைக் கொடுக்கின்றது என்பதையும் இங்குக்குறிப்பிட வேண்டியது முக்கியமானதாய்க் காணப்படுகின்றது (தமிழ் மொழியாக்கம் சரியாக உள்ளது). இஸ்ரயேலர்கள் கடனாய் வாங்கவில்லை, மாறாக வெள்ளியுடைமைகளையும், பொன்னுடமைகளையும், வஸ்திரங்களையும் கேட்டுக்கொண்டார்கள். எகிப்தியர்களும் கடனாகக் கொடுக்கவில்லை, மாறாக இஸ்ரயேலர்கள் கேட்டுக்கொண்டதை, அவர்களுக்குக் கொடுத்தார்கள். இப்படியாக இஸ்ரயேலர்கள் தங்களது நீண்டகாலப் பணிகளுக்காக சில வெகுமானங்களைப் பெற்றுக் கொண்டார்கள்; அதுவும் இவைகளை அவர்களின் வேண்டுகோளை மறுப்பதற்குரிய பயத்தினால் மாத்திரமே அவர்களை ஒடுக்குபவர்கள் கொடுத்தார்கள்.
நமக்கான தேவனுடைய தேர்வுகளானது, எத்தனைதரம் அகோரமான சிலுவையாகவே தோற்றமளிக்கின்றது: ஆனால் நாம் நெருங்கிப்பார்க்கையில், அந்தச் சிலுவையில் பரத்திலுள்ள நம்முடைய பிதாவினிடத்திலிருந்துள்ள அன்புக்குரியதும், உற்சாகமளிக்கிறதுமான ஒரு செய்தியை நாம் காணமுடிகின்றது. தெய்வீகச் சித்தத்திற்கு ஒருவேளை நாம் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுக்கவில்லையெனில், நாம் அந்தச் சிலுவையினின்று பொறுமையற்றவர்களாக விலகிப்போய், அது கொண்டுவந்த பாக்கியமான செய்தியை ஒருபோதும் வாசித்திருந்திருக்கமாட்டோம். அது சிலுவைதான், எனினும் அது இப்பொழுது ஒரு பொக்கிஷமாகும்.
நன்னெறி: ஒவ்வொரு சிலுவையையும் அதற்குரிய படிப்பினைக்காக ஆராய்ந்து பாருங்கள். அனைவருக்கும் அதிகப்படியான கிறிஸ்தவ அன்புடன், B.H.Barton, Minot, N. D. – Jan. 27, 1916.
– Pilgrim Echoes, p. 511