R5341 – நமது “ஆசீர்வாதத்தின் பாத்திரம்”

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5341 (page 327)

நமது “ஆசீர்வாதத்தின் பாத்திரம்”

OUR "CUP OF BLESSING”

“கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16,17 திருவிவிலியம்)

தேவனைப் போற்றிக்கொண்டு, நாம் பானம்பண்ணுகின்றதான ஆசீர்வாதத்தின் பாத்திரமானது உண்மையில் அநேக விதத்தில் ஆசீர்வாதத்தின் பாத்திரமாகவே இருக்கின்றது. அது கிறிஸ்துவோடு பாடுபடுவதற்கான பாக்கியமான சிலாக்கியத்தையும், அந்தப் பாடுகளுக்கான பலனாகக் கடந்துவரும் ஆசீர்வாதமான காரியங்களையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. வாக்குத்தத்தங்களானது இராஜ்யத்தில், நாம் இராஜ்யத்தின் சந்தோஷங்களில் பங்கடையும்போது நிறைவேறுதலை அடையும் என்று கர்த்தர் தெரிவித்துள்ளார்.

தேவனால் நாட்டப்பட்டதான மாபெரும் திராட்சச்செடியின் பாகமாக சபை அடையாளப்படுத்தப்படுகின்றாள்; இதை இயேசு, “நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள்” என்று கூறிக் குறிப்பிடுகின்றார் (யோவான் 15:5). இந்தத் திராட்சச் செடியினுடைய அருமையான கனிக் குறித்து நமது கர்த்தர் நம்மிடம் கூறுகின்றார்; மற்றும் கனி வளருதல் என்பது, நமது அனுபவங்களினுடைய துக்கமான பாகத்தைக்குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஒரு விதத்தில் பாத்திரமானது சந்தோஷத்தைக்குறிக்கின்றதாய் இருக்கும்; இதை நாம் இந்தத் தற்காலத்தினுடைய பாடுகளைக்கடந்து, மகிமைக்குள் பிரவேசிக்கும்போது அடைகின்றவர்களாய் இருப்போம் (மத்தேயு 26:29). “தேவனைப் போற்றுதல்/ஸ்தோத்திரித்தல்” [திருவிவிலியம்] (நாம் ஆசீர்வதிக்கிற – KJV மொழிப்பெயர்ப்பில்) என்று ஆதார வசனத்தில் இடம்பெறுகின்றதான வார்த்தைகளானது, கர்த்தருக்கு நன்றி மற்றும் துதி ஏறெடுத்தலைக்குறிக்கின்றதாய் இருக்கும் எனப்புரிந்துகொள்ளப்படலாம். இருதயத்தில் நன்றி இல்லாமலும், மதிப்பினை உணர்ந்துகொள்ளாமலும் பாத்திரத்தைப் பெற்றுக்கொள்பவர்கள், பலனை அடையமாட்டார்கள். ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளதான ஆசீர்வாதங்களைப்பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், கிறிஸ்துவோடு பாடுபடுவதற்கான இந்த மாபெரும் சிலாக்கியத்திற்காக, நன்றியுணர்வோடு பாத்திரத்தினை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

“கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா (ஐக்கியமாயிருக் கிறதல்லவா?)” எனும் அப்போஸ்தனுடைய இந்தக் கேள்வியைக் கவனிக்கையில், நாம் நம் மனங்களுக்கு முன்பாக இரண்டு கருத்துக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்; முதலாவதாக கிறிஸ்துவினுடைய இரத்தத்தை அடையாளப்படுத்துகிறதும், அப்போஸ்தலனால் இங்குக் குறிப்பிடப்படுகிறதுமான சொல்லர்த்தமான பாத்திரத்தை, சொல்லர்த்தமான திராட்சப்பழரசத்தை மனதின் முன்பாகக் கொண்டிருத்தல் வேண்டும் மற்றும் இரண்டாவதாக அவரது பாத்திரத்தில், பலியின் பாத்திரத்தில் பங்குகொள்வதற்கான சிலாக்கியத்தினை நாம் பெற்றிருக்கின்றோம் என்ற உண்மையை மனதின் முன்பாகக்கொண்டிருத்தல் வேண்டும். அவரது மரணத்தில் பங்குகொள்வதற்கு, அவரது பாடுகளில் பங்குகொள்வதற்கு நாம் சிலாக்கியமடைந்திருக்கின்றோம். இந்த ஒரு கருத்தானது, மற்ற வேதவாக்கியங்கள் மூலமாகவும் முன்வைக்கப்படுகின்றது இயேசு தமது சரீரமாகிய சபைக்குத் தலையாக – இருக்கின்றார் போன்றவைகள் முன்வைக்கப்படுகின்றது. அவர் உலகத்திற்கான மாபெரும் தீர்க்கத்தரிசியாகவும், ஆசாரியனாகவும், இராஜாவாகவும், நியாயாதிபதியாகவும் மற்றும் ஆசி வழங்குபவராகவும் காணப்படப்போகின்றார்.

வேதவாக்கியங்களின்படி, மாபெரும் தலையானவர், மரணம்வரையிலும் பாடுகள் அனுபவித்திட்டபபிற்பாடு, உலகத்திற்காக தம்முடைய ஜீவனை கையளித்தபிற்பாடு மகிமைப்படுத்தப்பட்டார். நாம் அவரது அங்கத்தினர்களாக, அதாவது சீக்கிரத்தில் மகிமையில் அவரது அங்கத்தினர்களாகக் காணப்படத்தக்கதாக, மாம்சத்தில் இப்பொழுது அங்கத்தினர்களாக ஏற்றுக்கொண்டுள்ளார். நாம் ‘அங்கத்தினர்கள்’ எனும் வார்த்தையினை, பாராளுமன்றத்தின் அங்கத்தினர்கள் குறித்துப் பேசும் விதத்திலேயே குறிப்பிடுகின்றோம். பாராளுமன்ற குழுவில் அநேக அங்கத்தினர்கள் காணப்படுவதுபோலவே, கிறிஸ்துவினுடைய சரீரத்தில் அநேக அங்கத்தினர்கள் காணப்படுகின்றனர். கிறிஸ்துவை விசுவாசித்தல் மற்றும் தங்களையே தேவனுக்குக் கொடுத்தல் எனும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இவர்கள் தங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்துகின்றவர்களாய்க் காணப்படுகின்றனர். அப்போது நமது கர்த்தர் இவர்களைத் தம்முடைய அங்கத்தினர்களாக இப்பொழுது பூமியில் அங்கத்தினர்களாகவும், பிற்பாடு மகிமையில் அவருடைய அங்கத்தினர்களாகவும் ஏற்றுக்கொள்வார்.

நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்

ஆகையால் இந்தப் பாத்திரத்தில் நாம் உண்மையாய்ப் பானம்பண்ணும்போதே, நாம் நமது “அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திட” முடியும் (மத்தேயு 26:27; 2 பேதுரு 1:10). “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” எனும் கட்டளையானது, இரண்டு அர்த்தங்கள் கொண்டவையாக இருக்கின்றது; முதலாவது அர்த்தம், சுவிசேஷ யுகம் முடிவடைவதற்கு முன்னதாக அது முழுவதுமாகப் பானம் பண்ணப்பட வேண்டும் மற்றும் இரண்டாவது அர்த்தம், அவரது சரீரத்தினுடைய அங்கத்தினர்களாகிய அனைவரும் அதில் பானம்பண்ணிட வேண்டும் என்பதாகும். பதினெட்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இப்பொழுது காணப்பட்டுக்கொண்டிருக்கின்றதான சரீரம் மற்றும் தலையாகிய கிறிஸ்துவின் பாடுகள் குறித்தும், பின் தொடரும் மகிமை குறித்தும் பரிசுத்தவானாகிய பேதுரு பேசியிருக்கின்றார் (1 பேதுரு 1:8-12; 4:1; 5:1). கடைசி அங்கத்தினன் பரலோக நிலைக்குள் கடந்து போனவுடனே, கிறிஸ்துவின் பாடுகள் அனைத்தும் முடிவடைந்துபோனதாக இருக்கும் மற்றும் அதற்குமேல் எவருக்குமே *கிறிஸ்துவின் பாடுகளில்” பங்கடைவதற்கான சிலாக்கியமும், அவருடைய மகிமையில் பங்கடைவதற்கும், அவரது மணவாட்டியாக, ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகுவதற்குமான சிலாக்கியமும் கிடைக்காது.

அநேக திராட்சப்பழங்களுடைய இரசத்தை உடையதாக இருப்பினும், அது ஒரே பாத்திரம்தான் மற்றும் அநேக கோதுமை மணிகளினால் உண்டுபண்ணப்பட்டிருந்தாலும், அது ஒரே அப்பம்தான். உலகத்திற்கான அப்பமாக வேண்டுமெனில், மணிகளானது அதன் தனித்துவத்தையும் மற்றும் அதன் ஜீவனையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஜீவன் வழங்குகிற ஒன்றாகக் காணப்பட வேண்டுமெனில் திராட்சப்பழங்களானது, தங்களைத் திராட்சப்பழங்களாகத் தக்கவைத்திட முடியாது. இப்படியாகக் கர்த்தருடைய ஜனங்கள் ஒரே அப்பத்திலும், ஒரே பாத்திரத்திலும் பங்குகொள்பவர்களாய் இருக்கின்றனர் என்பதான அப்போஸ்தலனுடைய வார்த்தைகளிலுள்ள அழகை நாம் பார்க்கின்றோம். அவரது பாத்திரத்தில் பங்குகொள்வதற்கான கர்த்தருடைய அழைப்பை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவும், ஒரே அப்பத்தின் அங்கத்தினர்களாக, அவரோடுகூடப் பிட்கப்படுவதன் மூலமாகவும், புதிய சுபாவத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமே ஒழிய மற்றபடியல்ல; அவரது மரணத்திற்குள்ளான ஞானஸ்நானத்தில் அவரோடுகூட அடக்கம் பண்ணப்படுவதின் மூலமாகத்தான் அவரோடுகூட, மகிமைக்கும், கனத்திற்கும், அழியாமைக்குமான உயர்த்தெழுதலை – முதலாம் உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒரே அப்பத்தில் சபையின் பங்கு

அப்பமானது முதலாவதாக, நமக்காகவும், பொதுவான உலகத்துக்காகவும் வேண்டி பிட்கப்பட்டதான கர்த்தராகிய இயேசுவினுடைய சரீரத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. விரிவான கண்ணோட்டத்தில் பார்க்கையில், அது கிறிஸ்துவினுடைய சரீரம் முழுவதையும், அவரது அங்கத்தினர்களாகுபவர்கள் அனைவரையும் உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. இப்படியாக அப்பம் பிட்கப்படுதலானது, சரீரம் பிட்கப்படுதலானது, 18 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

கர்த்தருடைய இராப்போஜனம் நிறுவப்பட்டபோது, இயேசு அப்பத்தைப் பிட்டார் என்று நாம் வாசிக்கின்றோம். சொல்லப்போனால், அப்போது அவரால் மாத்திரமே அப்பத்தைப் பிட்க முடியும். இயேசு தம்முடைய பலியின் மூலமாகவும், உயர்த்தப்படுதலின் மூலமாகவும் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருடைய குறைவினை நிறைவாக்குவதுவரையிலும், மனுக்குலத்தில் மீதியானவர்கள் அனைவருமே, தேவனுடைய பார்வையில், நீதிமான்கள் அல்லாதவர்களாகவே காணப்பட்டனர். ஆகவே இயேசுவே முதலாவதாக அப்பத்தைப் பிட்டார். இன்று புளிப்பில்லாத அப்பமானது, நினைவுகூருதலின் காலக்கட்டத்தில், நம் ஒவ்வொருவரிடத்திலும் கடந்துவரும்போது மற்றும் நாம் ஒவ்வொருவரும் அதில் ஒரு பங்கை/பாகத்தை எடுத்துக்கொள்ளும்போது, அவனவன் தனக்காகவே அதைப் பிட்டுக்கொள்கின்றான்.

நமது கர்த்தர் முதலாவது அப்பத்தைப் பிட்டக் காரியமானது, நமக்குத் தனிப்பட்ட பங்கு இல்லை என்பதைக்குறிப்பதாகாது. நமது கர்த்தருடைய சரீரத்தை (பிட்குதலை) நொறுக்குவதை பரம பிதா செய்ய வேண்டியிருந்தது என்பதை நாம் நினைவுகூருகின்றோம். எழுதப்பட்டிருக்கிறபடியே, யேகோவாவோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்” (ஏசாயா 53:10). இது நமது கர்த்தருடைய சித்தத்திற்கு எதிராக செய்யப்படவில்லை. குமாரனை நொறுக்கும்/பிட்கும் காரியத்தினை பரம பிதா செய்ய வேண்டியிருந்ததுபோன்று, தெய்வீக ஏற்பாட்டிற்கு இசைவாக, அப்பத்தில் பங்குபெறுகிறவர்களாகிய நம்முடைய நொறுக்குதலையும் பரம பிதா செய்கின்றார்.

அடுத்த அதிகாரத்தில் அப்போஸ்தலனால், “கர்த்தருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” என்று கூறப்பட்டுள்ளதான வார்த்தைகள், இயேசுவினுடைய மரணத்திற்கே குறிப்பாய்ப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. வார்த்தைகளினுடைய பின்னணி அமைப்பானது, இங்குக் கர்த்தர் இயேசுவே தனிப்பட்ட விதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; *ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:26). “அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்” (சங்கீதம் 45:11). சபை எங்குமே ஆண்டவர் என்று குறிப்பிடப்படவில்லை.

இன்னுமாக “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று இயேசு கூறியுள்ளதையும் நாம் நினைவுகூரவேண்டும் (லூக்கா 22:19). அவர் “உங்களை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றும், பலியிலுள்ள உங்கள் பங்கினை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றும் சொல்லவில்லை. நாம் அவரோடுகூட மரித்தவர்களாய்க் காணப்பட வேண்டும். பின்வரும் மகிமைகளில் பங்கடைய வேண்டுமெனில், இந்தத் தற்காலத்தின் பாடுகளில், நாம் அவரோடுகூடப் பங்குகொள்ள வேண்டும் என்பதை நினைவுகூருகின்றோம். பிதா குமாரனைத் தலையாகத் தந்தருளினார்; “இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” ஆவார் (எபிரெயர் 3:1; ரோமர் 8:17,18; 9:5).

இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றது

இரத்தத்தில் ஜீவன் இருக்கின்றதென வேதவாக்கியங்கள் கூறுகின்றன (லேவியராகமம் 17:11). இதற்கு இசைவாகவே, யூதர்கள் இரத்தத்தைப் புசிப்பதற்கு எப்போதும் தடைப்பண்ணப்பட்டவர்களாய் இருந்தனர். மிருகங்களினுடைய மாம்சம் புசிக்கப்படுவதற்கு முன்னதாக, அவைகளின் இரத்தம் சிந்தப்பண்ணப்பட வேண்டும். யூதர்களின் நடுவே தங்கியிருக்கின்றதான எந்த அந்நியர்களும்கூட, எந்த இரத்தத்தையும் புசிக்க அனுமதிக்கப்படவில்லை (லேவியராகமம் 17:10-14). இப்படியாக ஜீவன் என்பது மிகவும் புனிதமான [R5342 : page 328] ஒன்று என்று தேவன் தெரியப்படுத்தினார். மனிதனுக்குத் தேவன் கொடுத்ததான இந்த ஜீவ ஆக்கக்கூறானது, இரத்தத்தில் காணப்படுகின்றதாய் இருக்கின்றது. இரத்த நாளங்களில் இரத்தம் ஓடிக்கொண்டிருப்பது வரையிலும், ஜீவன் காணப்படுகின்றதாயிருக்கும்; ஆனால் இரத்தம் சிந்தும்போது, அந்த ஜீவராசி மரிக்கின்றது.

நமது கர்த்தர் தம்முடைய பூமிக்குரிய ஜீவனை ஒப்புக்கொடுத்தபோது, அந்த ஜீவனைத் தமக்காகப் பயன்படுத்தும் வண்ணமாக, அந்தப் பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமையை அவர் தம் வசமாய் வைத்துக்கொள்ளவில்லை. “விலையுயர்ந்த முத்தை” அடைய விரும்புபவர்கள் அனைவரும், தங்களிடத்திலுள்ள யாவற்றையும் விற்க வேண்டும், அதாவது தாங்கள் அனுபவிக்கின்றதான பூமிக்குரிய ஜீவன் (அ) சிலாக்கியங்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்திட வேண்டும் என்று அவர் நமக்கு உவமை ஒன்றில் கூறியுள்ளார் (மத்தேயு 13:45,46). நமது கர்த்தர் பரிபூரணமான பூமிக்குரிய ஜீவனை உடையவராய் இருந்தார். அவர் அந்த ஜீவனை ஒப்புக்கொடுத்தார். “அவர் தம்முடைய ஆத்துமாவை (ஜீவனை) மரணத்திலூற்றினார்” (ஏசாயா 53:12). இது எதன் அடிப்படையில் ஆகும்? நமக்கு முன்பாக அவர் முன்வைத்ததான அதே காரியங்களினுடைய அடிப்படையிலேயே ஆகும்; அதாவது “நாம் பிழைத்திருக்க வேண்டும் எனில், நாம் மரித்தாக வேண்டும்; நாம் ஆளுகைசெய்ய வேண்டுமெனில், நாம் பாடுபட வேண்டும்; நாம் அவரோடுகூட மரித்திருக்க வேண்டும்” என்பதாக அவர் நம் முன் வைத்ததான இதே காரியங்களினுடைய அடிப்படையிலேயே ஆகும் (2 தீமோத்தேயு 2:11,12). ஆகையால் அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடருகின்றவர்களாகிய நாமும், அவர் செய்த வண்ணமாகவே செய்ய வேண்டும்.

நாம் அவரது சீஷர்களெனச் சகோதர சகோதரிகளுக்கு நம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுப்போமானால், நாம் இயேசு செய்ததையே செய்கிறவர்களாக இருப்போம். இவை அனைத்தும் உலகத்துக்காகச் செயல்படுத்தப்படப்போகின்றது. அந்தப் பூமிக்குரிய ஜீவனை அவர் கையளித்தது என்பது, பாதுகாத்து வைத்துக்கொள்வதற்காக இராமல், மாறாக இறுதியில் அதை மனுக்குலம் அனைத்திற்கும் (கைமாற்றிவிடுவதற்கே) கொடுத்துவிடுவதற்கே ஆகும். மனித ஜீவனுக்கான உரிமை இன்னும் அவரது கட்டுப்பாட்டின்கீழாக இருக்கின்றது. அவரே மாபெரும் மத்தியஸ்தராக, தம்மால் ஊற்றப்பட்டதான ஜீவனை, மனுக்குலத்தின் உலகத்திற்காகக் கொடுத்தருளுவார்.

சபையாகிய நாம் அவரோடுகூட, அவரது பாடுகளில் பங்கடையத்தக்கதாகவும், ஆவிக்குரிய தளத்தில் அவரது மகிமையான இராஜ்யத்தில் பங்கடையத்தக்கதாகவும், அவர் இப்பொழுது நமக்கு, தம்முடைய புண்ணியத்தை/தகுதியைத் தரிப்பிக்கின்றவராய் இருக்கின்றார். ஆகையால் இந்தப் பாத்திரமானது, பூமிக்குரிய ஜீவனையும், அதனுடன் உள்ள உரிமைகள் அனைத்தையும் முழுமையாய்த் துறந்துவிடுதலைக் குறிக்கின்ற தாயிருக்கும். நமது கர்த்தருடைய பூமிக்குரிய ஜீவனானது பறிமுதல் செய்யப்படவில்லை, மாறாக ஒப்புக்கொடுக்க மாத்திரந்தான்பட்டது (யோவான் 10:17,18). அதை ஒப்புக்கொடுத்ததற்கான நோக்கம் என்னவெனில், மனுக்குலம் அதனை பெற்றுக்கொள்ளத்தக்கதாக அதை அவர் தனிப்பட்ட விதத்திலும், என்றென்றுமாகவும் துறந்துவிடுவதாக இருந்தது. அவர்கள்வசம் கைமாற்றும் காரியத்தினை, அவர் இன்னமும் நிறைவேற்றி முடிக்கவில்லை, எனினும் இந்த நோக்கத்திற்காகவே, அவர் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்துவிட்டார்.

பறிமுதல் செய்யப்படாத, பூமிக்குரிய ஜீவனுக்கான உரிமை

உலகத்தை மீட்டுக்கொள்வதற்கான தெய்வீகச் சித்தத்தை நிறைவேற்றும் பணியை நமது கர்த்தர் மேற்கொண்டார் மற்றும் அதை நிறைவேற்றும் காரியத்தினைத் தொடர்ந்தார், எனினும் அவர் நோக்கத்தினை இன்னமும் நிறைவேற்றி முடிக்கவில்லை. அவர் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்தார், ஆனால் அதன் உரிமையை அவர் இழக்கவில்லை. அவர் மரணத்திலிருந்து எழுப்பப்பட்டபோது, அவருக்கு இன்னமும் அந்தப் பூமிக்குரிய ஜீவன்மீது உரிமை இருந்தது மற்றும் அந்த ஜீவனைத் தமக்காக அவர் பயன்படுத்தக்கூடாது என்றும், அதைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்களாகிய உலகம் அனைத்திற்கும், தம்முடைய சபை தம்மோடுகூட ஆளுகை செய்யும் ஆயிர வருடங்களடங்கிய தம்முடைய ஆளுகையின் முடிவில், ஒப்படைக்கப்பட/கொடுக்கப்பட வேண்டும் என்றுமுள்ள புரிந்துகொள்ளுதலை உடையவராய் இருந்தார்.

ஆகையால் அவரது ஜீவன், அவரிடமிருந்து பிடுங்கப்படவில்லை; அவரது கீழ்ப்படியாமையினால் மாத்திரமே அவரிடமிருந்து, அவரது ஜீவன் பிடுங்கப்பட முடியும் (லேவியராகமம் 18:5; எசேக்கியேல் 20:11; லூக்கா 10:28; ரோமர் 10:5). அவர் தாமாய் முன்வந்து, தெய்வீகச் சித்தத்திற்கு இசைவாகத் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார். தம்முடைய ஜீவனானது தெய்வீக நீதியினுடைய கரங்களில் சொத்தாகக் காணப்படத்தக்கதாகவும், இதினிமித்தம் காலங்கள் வரும்போது, அந்தச் சொத்தை தாம் மனுக்குலத்திற்காகப் பயன்படுத்தத்தக்கதாகவும், அவர் தமது ஜீவனை ஒப்புக்கொடுத்தார் (யோவான் 6:51).

நமது கர்த்தருடைய மனுஷீக ஜீவனானது என்றென்றும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என்பதும், அதை அவர் திரும்ப எடுக்கக்கூடாது என்பதும் தெய்வீக நோக்கமாய்க் காணப்பட்டது. அவர் தம்முடைய ஜீவியத்தை யோர்தானில் அர்ப்பணம் பண்ணி, அந்தப் பலியைக் கல்வாரியில் முடித்தார். சுவிசேஷ யுகம் முழுவதிலும், அவர் தம்முடைய மறைபொருளான சபையைப் பலிச்செலுத்திக் கொண்டுவருகின்றார். இந்தச் சரீர அங்கத்தினர்களுடைய பலியினை அவர் நிறைவேற்றின உடனே, மகா பிரதான ஆசாரியனுக்குச் சொந்தமான, அவர்களது ஜீவனுக்கான உரிமைகளானது, புதிய உடன்படிக்கையை முத்திரிப்பதின் மூலமாக உலகத்தை வாங்குவதற்காக, மீட்டுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும். இதன்பின் உடனடியாக, அவரது இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும். அவரது புண்ணியமானது, அவரது ஜீவன – உரிமையானது முழுச் சபையும், திரைக்கு அப்பால் கடந்து போகாததுவரையிலும் அடுத்தக் கட்டமாகச் செயல்படுத்தப்படாது என்பது, கிருபாசனம் ஆட்டினுடைய இரத்தத்தினால் தெளிக்கப்படும் காரியத்தினால் அடையாளப்படுத்தப்படுகின்றது. நமது கர்த்தருடைய இரத்தமும், அவரது சரீரத்தினுடைய இரத்தமும், அனைத்தும் ஒரே இரத்தமாயிருக்கின்றது. அநேக அங்கத்தினர்கள் அடங்கின ஓர் ஆசாரியன் ஆகும். அது அனைவருக்கும், அதாவது சர்வலோகத்தினுடைய பாவங்களுக்குமான ஒரே பாவநிவாரணம் ஆகும் (1 யோவான் 2:2).

இரத்தம், கிறிஸ்துவினுடைய மரணத்தை மாத்திரம் குறிக்காமல், புண்ணியம்/தகுதி தரிப்பிக்கப்பட்டதான அவரது சரீரத்தினுடைய அங்கத்தினர்கள் அனைவருடைய மரணத்தையும்கூடக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இது தொடர்பாகவே அப்போஸ்தலன் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் (ஐக்கியம் (அ) பங்குகொள்ளுதல்) ஐக்கியமாய் இருக்கிறதல்லவா?” நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் (ஐக்கியம் (அ) பங்குகொள்ளுதல்) ஐக்கியமாய் இருக்கிறதல்லவா?” அதாவது பாத்திரத்திலும், அப்பத்திலும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதுபோல, அவருடன் ஓர் ஐக்கியம்/பங்கெடுத்தல் ஆகும். காரியம் முழுவதுமே அவரைப்பற்றியதுதான்; ஆனாலும் கிறிஸ்துவின் அங்கத்தினர்களென, மாம்சத்தைப் பலிச்செலுத்துவதில், கிறிஸ்துவினுடைய பாடுகளிலான நமது பங்கெடுப்பில், நமக்கான தனிப்பட்ட பங்கினையும்கூட நாம் நினைவுகூருகின்றோம்.