R4171 – ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்?

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R4171 (page 149)

ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்?

WHY OUR LORD WAS CRUCIFIED

யோவான் 19:17-42

“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்.” 1 கொரிந்தியர் 15:3

வரலாறுகளின் மிகுந்த குறிப்பிடத்தக்க உண்மைகளில் ஒன்று, உலகத்திலேயே மிகுந்த அறிவுடையவர்களும், மிகவும் நாகரிகமடைந்தவர்களுமான ஜனங்கள், கிட்டத்தட்ட 19 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக குற்றவாளியெனச் சிலுவையில் அறையப்பட்டதாக ஒப்புக்கொள்ளப்படும் ஒருவரை, தங்களது தலைவராக, தங்களது ஆசாரியனாக, தீர்க்கத்தரிசியாக மற்றும் இராஜாவாக அங்கீகரித்திருக்கும் காரியமே ஆகும்! இன்னுமாக இவருடைய நாமத்தில், இவருடையப் பின்னடியார்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள உபதேசங்களான: இவர் சிலுவையில் அறையப்பட்டக் காரியமானது, தெய்வீகத் திட்டத்தினுடைய ஒரு பாகம் என்றும், இன்னுமாக இவர் சிலுவையில் அறையப்படுவது அவசியம் என்றும், சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தினால், அதாவது சிலுவையில் அறையப்பட்டவரின் மரணத்தினால் சபை மற்றும் உலகத்திற்கான பாவங்களுக்குரிய பாவநிவாரணம் செய்யப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தும் உண்மையும்கூட மிகவும் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது; “நம்முடைய பாவங்களை சபையின் பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” (1 யோவான் 2:2). தெய்வீக வழிநடத்துதலின்படி பார்க்கும்போது, கிறிஸ்துவின் சிலுவையே, மரமல்ல, மாறாக சிலுவையினால் அடையாளப்படுத்தப்படும் பலியே) பாவம் உலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாகவே, அது பிரவேசிக்கும் என்பதை முன்னறிந்திருந்த தேவன், நம்முடைய இனத்திற்காக ஆயத்தம்பண்ணியுள்ள மகா இரட்சிப்பிற்கான மையமாக உள்ளது என்பதை நாம் காண்கின்றோம். தெய்வீகத் தீர்ப்பானது, மரணமாக இருந்தது மற்றும் இந்தத் தீர்ப்பானது ஆதாம் மற்றும் அவருடையச் சந்ததியார் மீது காணப்பட்டது. தண்டனைத் தீர்ப்பின் கீழ்க் காணப்பட்ட எவனாலும் தன்னையோ அல்லது தன்னுடைய சகோதரனையோ மீட்டுக்கொள்ள முடியாது, ஆகவே மனிதனை மீட்கத்தக்கதாக லோகோஸ் தமது பரலோக நிலைமையை விட்டு, மனிதனாக வேண்டும் என்ற விதத்தில் தெய்வீக ஏற்பாடு காணப்பட்டது.

ஏதொ ஒரு விதத்தில் மனிதனாகிய கிறிஸ்து மரிப்பது என்பது, ஆதி தண்டனைத் தீர்ப்பை ஈடு செய்வதற்குப் போதுமானதாய் இருந்திருக்கும்; ஆனால் இயேசுவின் உண்மையானது தூதர்களுக்கும், மனிதர்களுக்கும் குறிப்பாய் நிரூபிக்கப்படுவதற்கும் மற்றும் தூதர்களுக்கும், துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாகவும், எல்லா நாமங்களுக்கு மேலாகவும் இயேசுவைப் பிதா உயர்த்தும் காரியத்திலும், இன்னுமாக அனைவரும் பிதாவைக் கனப்படுத்துவது போன்று, குமாரனையும் கனப்படுத்தும் நிலைக்கு இயேசுவைப் பிதா உயர்த்தும் காரியத்திலும், [R4171 : page 150] பிதா நியாயமாய்ச் செயல்பட்டுள்ளார் என்பது நிரூபிக்கப்படுவதற்கும் என்று சோதிக்கின்ற விதத்திலும், அவமானமான விதத்திலும் மரணத்தை ஏற்பாடு பண்ணுவதன் மூலம், நமது அருமை மீட்பர், தம்மிடத்தில் கொண்டிருக்கும் உண்மையைப் பரீட்சித்திட தேவன் பிரியமாய் இருந்தார். இதன் காரணமாகவே, சிலுவை மரணம் என்பது வேதவாக்கியங்களில் மிகவும் அவமானமான மரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது; “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” (கலாத்தியர் 3:13). கூடுதலாக வழங்கப்பட்ட சிலுவையின் அவமானத்தைக் குறித்து அப்போஸ்தலன், இயேசுவுக்குப் பிதாவோடு இருந்திட்ட மகிமையை அவர் துறந்து, தம்மைத்தாம் தாழ்த்தி, அடிமையின் ரூபம் எடுத்து வந்தது குறித்துப் பேசுகையில், “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்” (பிலிப்பியர் 2:8-11) என்று குறிப்பிடுகின்றார். எந்த ஓர் உயர் குடிமகனுக்கும் மிகக் கடினமானதாகக் காணப்படுகின்ற, அதிலும் குறிப்பாகப் பூரண மனுஷனுக்கு மிகவும் கடினமானதாகக் காணப்படுகின்ற சிலுவையின் இந்த அவமானமானது, நமது அருமை மீட்பருடைய விஷயத்தில், அவருக்கு மகிமைக்கும், கனத்திற்கும் மற்றும் திவ்வியச் சுபாவமாகிய அழியாமைக்கும் ஏறிச் செல்வதற்கான படிக்கல்லாயிற்று. இந்த அவமானமான சிலுவையினிமித்தமாக, நமது அருமை மீட்பர், அவருக்கு உண்மையாய்ச் சொந்தமானவர்களும், கர்த்தருடைய வார்த்தைகளினால் வழிகாட்டப்பட்டவர்களுமாகிய நம் அனைவரின் கணிப்பிலும்கூட, ஏற்கெனவே உயர்வான நிலையில் காணப்படுகின்றார். நாம் இப்படியாகச் சிலுவையின் மரணபரியந்தமாக நிரூபிக்கப்பட்டுள்ள நமது எஜமானின் உண்மையிலும், கீழ்ப்படிதலிலும் மேன்மைப்பாராட்டுகின்றோம். எனினும் இப்படியான கருத்திற்கு உயர் விமர்சகர்களும், பரிணாமக் கொள்கைவாதிகளும் ஆதரவு தெரிவிப்பதில்லை என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். இவர்கள் தங்களையே ஞானிகள் என்று எண்ணிக்கொண்டு, பரத்திலிருந்து வருகிறதும், தகப்பனாகிய ஆதாமின் கீழ்ப்படியாமைக் காரணமாக ஆதாமினாலும், அவருடைய சந்ததியாராலும் இழந்துபோகப்பட்ட ஜீவனுக்கான ஈடுபலி விலைக்கிரயமானது நமது அருமை மீட்பர் தம்மையே பலியாக்கி, பிதாவிடம் ஒப்படைத்ததின் மூலம் மாத்திரமே உண்டானது என்றும், இந்த ஈடுபலியின் மூலமாக மாத்திரமே மனுக்குலம் உயிர்த்தெழுதலையும், தேவனுடன் இசைவிற்குள்வந்து, நித்தியஜீவன் பெறுவதற்கான வாய்ப்பையும் அடைய முடியும் என்றும் நமக்குப் போதிக்கிறதுமான ஞானத்தைப் புறக்கணித்து விடுகின்றனர்.

நீதிமானை அவர்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்கள்

நம்முடைய இந்தப் பாடத்தில் நாம் பிரதான ஆசாரியனாலும், ஆலோசனை சங்கத்தாராலும் நமது கர்த்தர் விசாரணைபண்ணப்பட்டதையோ அல்லது நமது கர்த்தர் பிலாத்துவின் விசாரணை ஸ்தலத்தினிடத்திற்கும், பிற்பாடு ஏரோதினிடத்திற்கும், பின்னர் மீண்டும் பிலாத்துவினிடத்திற்கும் கொண்டுவரப்பட்டதையோ மற்றும் இன்னுமாக கர்த்தரை விடுவிப்பதற்கென ரோம தேசாதிபதியான பிலாத்து எடுக்கும் முயற்சிகளையோ பார்க்கப்போவதில்லை. கலவரம் எழும்பிவிடும் என்ற அச்சத்தினாலேயே, இயேசுவைச் சிலுவையில் அறையும்படிக்கு, பிலாத்துச் சம்மதித்துக் கட்டளையிட்டார் மற்றும் அதேவேளையில், தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி, “இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன்” என்று கூறினார். அதற்கு ஜனங்கள், “இவருடைய இரத்தப்பழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக” என்று கூறினார்கள் மற்றும் இயேசு சிலுவையில் அறையப்படும்படிக்குக் கொண்டுபோகப்பட்டார்.

அதுமுதற்கொண்டு எருசலேம் பல முறை இடித்தும், மீண்டுமாய்க் கட்டி எழுப்பப்பட்டும் இருக்கின்றது மற்றும் சில தெருக்களின் தளமட்டமானது முன்பிருந்த மட்டத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கின்றது; எனினும் வயா டோலோர்சா (via Dolorosa) அல்லது “துக்க பாதையானது” இன்னமும் சுட்டிக்காட்டப்படுகின்றது மற்றும் ஆர்ச் ஆப் எக்கிஹோமோ (Arch of Ecce Homo) என்று அழைக்கப்படுகின்றதான வளைவு பாதையின் ஒரு பகுதியும் இன்னமும் காணப்படுகின்றது! இவ்விடத்தில் தான் பிலாத்து நின்று, நமது கர்த்தரை விடுதலைபண்ணும்படிக்கு வேண்டிடும் வண்ணமாக மூர்க்கமாய்க் காணப்பட்ட ஜனங்களை நோக்கி, “இதோ இந்த மனுஷன்!” அதாவது, மனுக்குலத்திலேயே, உங்கள் இனத்திலேயே சிறந்தவராய்க் காணப்படும் இவரை நான் சிலுவையில் அறைந்திட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா? இவரைப் பாருங்கள்! இவ்விஷயம் குறித்து இறுதியாய் முடிவு செய்யுங்கள்! என்று கூறுவதுபோன்ற அர்த்தத்தில் கூறினார் என்பதில் இவ்விடத்திற்குக் கீர்த்தியுள்ளது. இந்தப் பாரம்பரியங்களானது பின்வரும் கண்டுபிடிப்பினால் ஆதாரம் அடைந்துள்ளது; அதாவது சமீபக்காலங்களில் பிலாத்துவின் அரண்மனை இருந்த இடமென்று அனுமானிக்கப்படுகின்ற இடத்தில் வீட்டின் அஸ்திபாரத்திற்காக தோண்டி/அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டபோது, ஒரு குறிப்பிட்ட ஆழம் தோண்டினதில், விசாலமான மற்றும் வேலைபாடுள்ள மொசைக் (Mosaic) தளவரிசைப்படுத்தின மேடை பாகம் வெளிப்பட்ட காரியத்தினால் ஆதாரம் அடைந்துள்ளது; இந்தத் தளவரிசைப்படுத்தின மேடையானது அரண்மனை சம்பந்தப்பட்டதாகும்; இது யோவான் 19:13-ஆம் வசனத்தில் இடம்பெறும் தளவரிசைப்படுத்தின மேடையென்ற நியாயாசனத்திற்கு ஒத்திருக்கின்றது; “பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.” நமது கர்த்தரும், அவரைச் சிலுவையில் அறைந்திடுவதற்காக வந்திட்டதான ரோம வீரர்களும், எபிரெய பாஷையில் கொல்கொதா என்றும், இலத்தீனில் கல்வாரி என்றும் அழைக்கப்படுகின்றதான “மண்டையோட்டு ஸ்தலத்திற்குப்” போகையில், அவர்கள் எடுத்துக்கொண்ட பாதையை அடையாளங்கண்டு கொள்ளத்தக்கதாக, பட்டணத்தினுடைய சிறு வரைபடம் ஒன்றை நாம் இவ்வெளியீடோடுகூட வெளியிடுகின்றோம். கல்வாரி என்று அனுமானிக்கப்படுகின்ற இடமானது, எருசலேமுக்கு அருகாமையிலுள்ள மலையாகும் மற்றும் இது தொலைவிலிருந்து பார்க்கப்படும்போது, மண்டை ஓட்டினுடைய தோற்றத்தினைக் கொண்டிருக்கின்றது; இதன் பள்ளங்களானது, கண் குழிகளினுடைய தோற்றத்தினைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. நவீன கால கல்விமான்கள், இந்த இடமே, சுவிசேஷபதிவில் குறிப்பிடப்பட்டிருக்கின்ற அம்சங்களுள்ள இடத்திற்கு ஒத்திருக்கின்றது என்று ஒத்துக்கொள்கின்றனர்; அதாவது பட்டணத்துச் சுவர்களுக்கு வெளியே – பட்டணத்திற்கு அருகே – எளிதில் பார்க்கக்கூடிய இடம் – அடிக்கடி நடமாடப்படும் நடைபாதையின் அருகாமையில் எனும் அம்சங்களுக்கு ஒத்திருக்கிறது; மற்றும் இவ்விடமானது இன்னமும் யூதர்களால் “கல்லெறியும் ஸ்தலமென’ அழைக்கப்படுகின்றது. ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு கிறிஸ்தவ பாரம்பரியமானது, இவ்விடத்திலேயேதான் ஸ்தேவான் கல்லெறியப்பட்டதாக முடிவுசெய்துள்ளது.

“இயேசு மாத்திரம் தனிமையில் சிலுவை சுமந்திட,
உலகம் அனைத்தும் சுதந்திரமடைந்து போய்விட வேண்டுமோ?’

சிலுவையில் அறையப்படுபவர்களின் விஷயத்தில், குற்றவாளி தன்னுடைய சொந்த சிலுவையைச் சுமந்து செல்ல வேண்டும் என்பது வழக்கமாய் இருந்தது; ஆகையால்தான் இயேசு தமது சிலுவையைச் சுமந்து சென்றார் என்று வாசிக்கின்றோம்; அதாவது கடந்த 24 மணி நேரங்களில் நடந்திட்ட காரியங்களினால் உண்டான சோர்வின் காரணமாகவும், தூக்கமின்மையினாலும், உணவு உட்கொள்ளாததினாலும், அடிக்கப்பட்டதின் காரணமாக ஏற்பட்ட மிகுந்த களைப்பினாலும், சோர்வினாலும், கர்த்தர் சிலுவையினுடைய பாரபளுவின் கீழ் பலம் குன்றி, மயக்கமடைவது வரையிலும், இயேசு தமது சிலுவையைச் சுமந்துச் சென்றார் என்று பார்க்கின்றோம். அவர் பரிபூரணமானவராகக் காணப்பட்டார் என்ற உண்மையை நாம் நினைவுகூருகையில், அவருக்கு அதிக பலம் இருந்திருக்கும் என்று நாம் எண்ணக்கூடும்; ஆனால் பரிபூரணமான ஒரு மனிதன் கண்டிப்பாக தோற்றத்தில் இராட்சசன் அல்லது பலத்தில் ஹெர்க்குலஸ் போன்றோ இருப்பதில்லை எனும் விஷயத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்; இப்படியாக இயல்புக்கு மாறுப்பட்ட பலம், தோற்றம் காணப்படுவது என்பது பூரணமின்மையினுடைய விளைவுகளேயாகும். ஆணிலும், பெண்ணிலும் காணப்படும் மனம் மற்றும் சரீரத்தின் சிறந்த இயல்புகளை ஒன்றுசேர பெற்றிருக்கும் நிலையிலேயே நமது இனத்தினுடைய பரிபூரண மாதிரி (specimen) காணப்படும் என்றும், மிதமான பலத்துடனும், மென்மையுடனும், கம்பீரத்துடனும், நாகரிகத்துடனும் காணப்படுவதே பரிபூரணம் பற்றின ஓரளவுக்கான நம்முடைய புரிந்துகொள்ளுதல் என்றும் நாம் அனுமானிக்கின்றோம். இப்படியாகவே கனிகள் மற்றும் காய்கறிகளுடைய விஷயத்திலும் காணப்படுகின்றது; பெரிய கனிகள் எப்போதும் கரடுமுரடானவைகளாக இருக்கின்றது; பூரணமான கனிகள் பெரிய பருமன் அளவிலோ, கரடுமுரடாகவோ அல்லது மிகச் சிறுபருமன் அளவிலோ இருப்பதில்லை. நம்முடைய இனத்தாரில் பெரும்பான்மையானவர்கள் ஒன்றில் மிகவும் மென்மையானவர்களாக அல்லது மிகவும் கரடுமுரடானவர்களாகக் காணப்படுமளவுக்கு, நம்முடைய இனமானது, பரிபூரணத்திலிருந்து மிகவும் தொலைத் தூரத்தில் போய்விட்டது. நம்முடைய கர்த்தருடைய விஷயத்தில் இன்னுமாக அவர் தம்முடைய ஜீவனை மூன்றரை வருடங்களாகப் பலிச் செலுத்திக் கொண்டுவந்தார் என்றும், அனைத்து விதமான வியாதிகளைச் சொஸ்தப்படுத்தினதின் [R4171 : page 151] மூலம், அவரிடமிருந்து சத்துவம் கடந்துபோய்க் கொண்டே இருந்தது என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்த இழப்புகளும்கூட அவரைப் பலவீனமாக்கினது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், அவர் மூன்றரை வருடங்களாக மரித்துக்கொண்டிருந்தார் மற்றும் பிதாவின் சித்தத்திற்கு இசைவாக தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கும் காரியத்தை நிறைவேற்றி முடிக்கத்தக்கதாக, இப்பொழுது அவர் கல்வாரி நோக்கி போய்க் கொண்டிருந்தார்.

நமது கர்த்தருடைய சீஷர்களில் சிலர் காரியங்களைப் பார்வையாளராக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் (யோவான் மாத்திரமே அங்கே காணப்பட்டார்) மற்றும் கர்த்தருக்காக சிலுவையைச் சுமப்பதற்குச் சீஷர்கள் மகிழ்ச்சியாய் இருந்திருப்பார்கள் என்பது உண்மையே. தாங்கள் சட்டத்தின் அதிகாரிகள் காரியத்தில் குறிக்கிடுபவர்களாகக் கருதப்படுவார்கள் என்ற அச்சமே, சீஷர்கள் கர்த்தருக்காக சிலுவைச் சுமக்கும் பணியைச் செய்வதற்குத் தடையாக இருந்தது என நாம் அனுமானிக்கின்றோம். எனினும் தேவையை உணர்ந்துகொண்ட போர்ச்சேவகர்கள், போகிற வழியில் ஒருவரைக் கண்டு, இயேசுவின் பின்னே சிலுவையைச் சுமந்து வரும்படிக்கு வற்புறுத்தினார்கள். “சிலுவையை அவர் பின்னே சுமந்துக்கொண்டு வரும்படி” எனும் வார்த்தைகளானது, கொஞ்சம் சிலுவையைத் தாங்கி, இயேசுவைக் கொஞ்சம் பாரப்பளுவிலிருந்து விடுவிப்பதையோ அல்லது இயேசு முன்னே நடக்க, சீமோன் சிலுவையின் பின்னே அனைத்துப் பாரப்பளுவையும் சுமந்து வருவதையோ குறிக்கின்றதாக இருக்கலாம். சீமோன் மீது திணிக்கப்பட்ட இந்த வேலையானது, மிகவும் விலையேறப்பெற்ற ஒரு சிலாக்கியமாகும். சீமோனுக்குக் கிடைத்திட்ட இந்த வாய்ப்பின் நிமித்தமாக, கர்த்தருடைய பின்னடியார்களில் எத்தனைபேர், சீமோன் மீது பொறாமை அடைந்துள்ளனர்! சீமோன் பிற்பாடு கிறிஸ்தவனானார் என்றும், இதனால் இவரைக்குறித்தும், இவருடைய ஊரின் பெயரைக்குறித்தும் அப்போஸ்தலனாகிய யோவான் அறிந்திருந்தார் என்றும் பாரம்பரியமானது தெரிவிக்கின்றது. பாரம்பரியம் [R4172 : page 151] தெரிவிக்கும் இக்காரியத்திற்கு, இந்தச் சீமோனுடைய குமாரர்களுடைய பெயர்கள் குறிப்பிடப்படுகின்ற காரியமானது பலமான ஆதாரமாகக் காணப்படுகின்றது; (மாற்கு 15:21).

நம்முடைய கர்த்தருக்காக நாம் அனுதாபம் கொண்டு, அவருக்குச் சிலுவைச் சுமப்பதில் உதவி செய்திடுவதற்கு நாம் எவ்வளவு மகிழ்ச்சியாய்க் காணப்பட்டிருந்திருப்போம் என்று சிந்தித்துப் பார்க்கும் அதே வேளையில், இக்காரியம் தொடர்புடைய விஷயத்தில், கர்த்தர் நமக்கு இரண்டு சிலாக்கியங்களை அருளி உள்ளார் என்பதையும் நாம் மறந்து போய்விடக்கூடாது. முதலாவதாக அவர் நம்மிடத்தில் கூறுவது என்னவெனில், நாம் அவருடைய சீஷர்களென அவரைப் பின்பற்றி வந்தோமானால், நாம் தற்காலத்தில் சிலுவையைச் சுமக்கும் விஷயத்தில் அவருடன் பங்கடைபவர்களாய் இருப்போம்; “என்னுடைய சீஷனாகும் எவனும் தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்;” நாம் கர்த்தரை விசுவாசித்து, விசுவாசத்தின் காரணமாக நீதிமானாக்கப்பட்டு, தேவனிடத்தில் சமாதானம் பெற்ற பிற்பாடு மற்றும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளதை உணர்ந்துகொண்ட பிற்பாடு, நாம் நம்மை முழுமையாய் அர்ப்பணம் பண்ணுவதற்கு, நம்முடைய சிலுவையைச் சுமப்பதற்கு, நம்முடைய சொந்த சித்தங்களைத்தள்ளி, கர்த்தருடைய சித்தத்தை, அதாவது கர்த்தரை அனுப்பிவைத்தவராகிய பிதாவினுடைய சித்தமாகிய கர்த்தருடைய சித்தத்தைச் செய்வதற்கு அழைக்கப்படுகின்றோம். நம்முடைய சிலுவையை அன்றாடம் சுமந்துச் செல்லத்தக்கதாக, போதுமான அளவுக்கு இந்தச் சிலாக்கியத்தை மதிக்கின்றோமா? நாம் இன்னமும் சிலுவையைச் சுமந்துகொண்டிருக்கின்றோமா? அவர் “முடிந்தது” என்று சொன்னதுபோன்று, நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணியாகிய வார்த்தைகளின் மூலமும், அன்றாட – நடத்தையின் மூலமும் சத்தியத்திற்குச் சாட்சிப்பகரும் சிலாக்கியத்தின் விஷயத்திலும் “முடிந்தது” என்று சொல்லும் நிலையை நாம் அடையும் ஓட்டத்தின் இறுதிவரை, நாம் கர்த்தருடைய கிருபையினால் தொடர்ந்து சிலுவையைச் சுமப்போம் என்பதாக நம்முடையத் தீர்மானம் காணப்படுகின்றதா?

சிலுவைச் சுமத்தலுக்குரிய இரண்டாம் வழி, உலகில் நம்மைச் சுற்றி, கிறிஸ்துவினுடைய பிரதிநிதிகளெனக்காணப்படும், கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கத்தினர்களாகிய மற்றவர்களுக்கு உதவிச் செய்வதாகும். கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களில் எவரேனும், சுமப்பதற்கு மிகவும் பாரமுள்ள சிலுவைகளைச் சுமப்பதையோ, பாரப்பளுவினால் அமிழ்ந்துபோகத்தக்கதான நிலையிலோ அல்லது ஏற்கெனவே அமிழ்ந்துப் போய்விட்ட நிலையிலோ காணப்படுவதை நாம் பார்ப்போமானால், நாம் நமது எஜமானையும் மற்றும் அவருடைய பாரங்களை, அவர் சுமப்பதற்கு உதவிட நாம் எவ்வளவு ஆசைப்பட்டோம் என்பதையும் நினைவுக்குக் கொண்டுவருவோமாக; மேலும் அவருடைய நாமத்தில், அவருடையச் சீஷர்களாகிய இந்தச் சிறியவர்களுக்குச் செய்யப்படும் எதுவும், அவருக்கே செய்யப்பட்டதாகும் என்று நமக்கு உறுதியளிக்கும் அவருடையச் சத்தத்திற்கு நாம் செவிக்கொடுப்போமாக. ஓ! சிலுவை சுமப்பது என்பது, கர்த்தருடைய சிறுமந்தையிலுள்ள அநேக பாரமடைந்துள்ள மற்றும் பெலவீனப்பட்டுள்ள மந்தையினருக்கு உதவிகரமான அநேக வார்த்தைகள் பேசுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும்! இன்னுமாக அது அநேகம் இரக்கம் பாராட்டுதல்களையும் குறிக்கின்றதாய் இருக்கும்! இப்படியான உதவிகரமான வார்த்தைகளும், இரக்கம்பாராட்டுதல்களும், கர்த்தரால் தம்முடைய சரீரத்தின் அவயங்கள் என்று அங்கீகரிக்கப்படுபவர்களில் சிலருக்கு எத்தகைய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் கொண்டுவருகின்றதாய் இருக்கும்! துயரத்தின்போது எப்படி நம்முடைய சரீரத்தினுடைய ஓர் அவயம், மற்றொரு அவயத்திற்கு உதவிபுரிகின்றதோ, அப்படியே கிறிஸ்துவினுடைய சரீரத்தின் விஷயத்திலும் காணப்படுகின்றது. அனைத்து அங்கத்தினர்களும் ஒருவருக்கொருவர் தாங்கியும், ஒருவரையொருவர் பலப்படுத்தியும், ஒருவரையொருவர் ஆறுதல்படுத்தியும், ஒருவரையொருவர் புத்துயிர்பெறச் செய்தும் மற்றும் இராஜ்யம் தொடர்புடைய நம்முடைய நம்பிக்கைகளின் மகிமையான நிறைவேறுதலுக்காக பொதுவாய் ஒருவரையொருவர் ஆயத்தம்பண்ணியும் காணப்பட வேண்டும்.

சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை

சிலுவையில் அறையப்படுதல் பற்றின அநேக விவரங்கள் தனித்தனியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மாற்கின் பதிவின்படி சிலுவையில் இயேசு அறையப்பட்டக் காலமானது மூன்றாம் மணி வேளை, அதாவது ஒன்பது மணியளவாகும், ஆனால் யோவானோ ஆறாம் மணி வேளை (அ) மதியம் என்று குறிப்பிடுகின்றார். சிலுவையில் அறையப்படுவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்ட மூன்றாம் மணி வேளையை மாற்கு குறிப்பிட்டிருக்கலாம் மற்றும் யோவானோ நமது கர்த்தர் சிலுவையின்மேல் காணப்பட்ட வேளையைக் குறிப்பிட்டிருக்கலாம்; அதாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது முதல் மெதுவாய்க் கல்வாரி நோக்கிப் பிரயாணம் பண்ணுவதற்கும், இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கும், “இவர் யூதருடைய இராஜாவாகிய, நாசரேத்தூர் இயேசு” எனும் நமது கர்த்தருக்கு எதிரான குற்றச்சாட்டு எழுதப்பட்டப் பலகையை உண்டுபண்ணி, அதைச் சிலுவையில் தொங்கவிடுவதற்கும், பிற்பாடு இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையை உயர்த்தி நிறுத்துவதற்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் எடுத்திருக்கும்; இவையெல்லாம் முடிந்த பிற்பாடு இயேசு சிலுவையின்மேல் காணப்பட்ட ஆறாம் மணி வேளையைத்தான் யோவான் குறிப்பிடுகின்றார்.

குற்றவாளி மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதற்குரிய குற்றத்தைச் சுட்டிக்காட்டும் வண்ணமாகச் சிலுவையின் மீது போடப்பட்டிருந்த மேல்விலாசத்தின் காரணமாக யூத தலைவர்கள் அதிருப்தி அடைந்தார்கள். அதைக்குறித்து அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள் மற்றும் இயேசு, யூதருடைய இராஜா எனும் காரியத்தை மறுதலிக்கவும் செய்தார்கள். ஆனால் அதை மாற்றுவதற்குப் பிலாத்து மறுத்துவிட்டார்; பொறாமை மற்றும் துர்க்குணம் காரணமாகவே யூத அதிகாரிகள், இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்துள்ளார்கள் என்பதை உணர்ந்துகொண்ட பிலாத்து, விசேஷமாக அவர்களுக்குக் கடிந்துகொள்ளுதலாய் இருக்கத்தக்கதாகவே, இப்படி எழுதிப்போட்டார். இப்படியாக அவர்களைப் பிலாத்து இப்பொழுது அவமானத்திற்குள்ளாக்கினார். ஜனக்கூட்டத்தார் அனைவராலும், அந்த மேல்விலாசத்தைப் படிக்க முடிந்தது; ஏனெனில் பொது ஜனங்களுடைய எபிரெய மொழியிலும், ரோம அரசாங்கத்தினுடைய இலத்தீன் மொழியிலும், அக்காலக்கட்டத்தின் கல்விமான்களுடைய கிரேக்க மொழியிலும், அதாவது மூன்று மொழிகளிலும் மேல்விலாசம் எழுதப்படுவது வழக்கமாய் இருந்தது. இயேசுவினுடைய சத்துருக்கள் அங்குக் காணப்பட்டபோதிலும், சிலுவையில் அறையப்பட்ட இயேசு, மேசியாவெனப் பிரகடனப்படுத்தப்பட்டார். எனினும் இது எவ்வளவு விநோதமாய் உள்ளது! சிலுவையில் அறையப்பட்ட ஒரு மேசியா! மனிதனுடைய வழிகளிலிருந்து, தேவனுடைய வழிகளும், தம்முடைய காரியங்களை நிறைவேற்றுகிற அவரது வழிவகைகளும் எவ்வளவு வேறுபட்டதாய்க் காணப்படுகின்றது! உண்மையில் வானங்கள் எவ்வளவாகப் பூமியிலிருந்து உயரமானதாக இருக்கின்றதோ, அப்படியே நம்முடைய வழிகளிலிருந்து, அவருடைய வழிகளானது மேன்மையானதாகக் காணப்படுகின்றது. ஒருவேளை இயேசு மரிக்கவில்லை என்றால், ஒருவேளை நம்மை அவர் பாவத்திலிருந்து மீட்டுக்கொள்ளவில்லை என்றால், அவரால் மனிதனைக் கொஞ்சம் சிறந்த விதத்தில் வாழ்ந்திட, மனிதனுக்கு உதவியிருக்க முடியுமே ஒழிய, மற்றபடி ஆதாமின் காரணமாக இழந்துபோகப்பட்டதும், மீட்பின் வாயிலாக அல்லாமல் மற்றப்படித் திரும்பப்பெற்றுக்கொள்ள முடியாததுமான நித்திய ஜீவனுக்கு அவரால் மனிதனை நடத்தியிருக்க முடியாது. தெய்வீகத் திட்டத்தின் கீழ், உலகத்தை மீட்டுக்கொள்ளத்தக்கதாகத் தம்மையே தாழ்த்தினவர், இப்பொழுது பிதாவினால் வல்லமை மற்றும் கனத்தினுடைய தமது வலதுபாரிசத்தினிடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார் மற்றும் இன்னும் சீக்கிரத்தில் வாக்குத்தத்தத்தின்படி பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிக்கத்தக்கதாகப் பொல்லாப்பை வீழ்த்துவதற்கும், நீதியை மேம்படுத்துவதற்கும், பெலவீனர்களுக்கும், ஏழைகளுக்கும், அறியாமையில் காணப்படுகிறவர்களுக்கும் உதவிடுவதற்குமென, கர்த்தர் தம்மை இஸ்ரயேலின் இராஜாவாகவும், முழு உலகத்தின் இராஜாவாகவும் வெளிப்படுத்துவார் (ஆதியாகமம் 12:3).

நமது கர்த்தர் கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறையப்பட்டார். இயேசுவின் இருபக்கங்களிலும் அவரோடுகூடச் சிலுவையில் அறையப்பட்டிருந்த இரண்டு கள்வர்களும், [R4172 : page 152] அநேகமாகப் பரபாசினுடைய கூட்டத்தின் அங்கத்தினர்களாகவும், ஜனங்களால் ஏறக்குறைய வீரர்களாகக் கருதப்பட்டவர்களாய் இருந்தனர். எனினும் இவர்களை ஜனங்கள் இகழ்ந்து பேசினதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இப்படியாகவே கர்த்தருடைய பின்னடியார்களின் விஷயத்தில் இன்றுவரை காணப்படுகின்றது. நம்முடைய எஜமானும், அவருடைய நோக்கங்களும் மக்களின் ஆதரவைப் பெறவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; இன்னுமாக உலகத்தினுடைய கல்விமான்களும், செல்வாக்குமிக்கவர்களும் கர்த்தருக்கு எதிராய்க் காணப்பட்டதுபோலவே, நமக்கும் எதிராய்க் காணப்படுவார்கள் என்பதையும், இவை அனைத்தும், அவரோடுகூடப் பாடுபட்டோமானால், அவரோடுகூட ஆளுகைச் செய்வோம் என்னும் அவருடைய வார்த்தை மற்றும் கொள்கையின் அடிப்படையில் நடைப்பெறும் தெய்வீகத் திட்டத்தின்படியே நடந்தேறுகின்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிலுவையில் அறையப்பட்டதின் விவரங்கள் விவரமாகக் கொடுக்கப்படவில்லை மற்றும் இப்படியாகக் கொடுக்கப்படாமல் இருந்ததற்காகவும் நாம் மகிழ்ச்சிக்கொள்ளுகின்றோம், ஏனெனில் விவரமான விவரங்கள் கொடுக்கப்படாமலேயே, சிலுவையில் அறையப்படும் காட்சியானது, மனங்களுக்குக் கோரமானதாகக் காணப்படுகின்றது; மேலும் தண்டனைத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பற்றின விவரங்களைப் பதிவுசெய்துள்ள நான்கு சுவிசேஷகர்களும், சிலுவையில் அறையப்படுதல் பற்றின விவரமான விவரங்களைக்குறித்து எதுவும் பதிவு செய்திடாத உண்மையானது, இப்படிப்பட்டதானக் காரியங்களின் விஷயத்தில் வேதாகமம் பொதுவாய்க் கைக்கொள்ளும் முறைமைகளுக்கு முழு இசைவுடனே காணப்படுகின்றது; இம்முறைமையானது பொதுவாய்ச் சம்பவங்களைப் பதிவுசெய்யும் எழுத்தாளருடைய முறைமையிலிருந்து மிகவும் வேறுபட்டதாய் இருக்கின்றது.

அயன் மேக்லாரென் அவர்கள் சிலுவையில் அறையப்படுதலின் விவரங்களைப் பின்வருமாறு பதிவு செய்கின்றார்:

“சிலுவையில் அறையப்படுதலைப் போன்றதொரு கொடூரமான/கொடுமையான மரணம் இருப்பதில்லை; இது கொடுமையாய் இருப்பதற்கான காரணம், கைதி இரத்த இழப்பினாலோ (அ) சிறு கால பகுதிக்குள்ளாகவோ மரிப்பதினால் இராமல், மாறாக மூடப்பெறாத புண்களினுடைய வலியும், கை கால்களுக்கு இரத்த ஓட்டம் தடைப்பட்டதும், நரம்பு மண்டலத்தின் பதற்ற நிலையும், இதயம் மற்றும் மூளையின் அழுத்தமுமேயாகும். ஐந்து மணி நேரம் இயேசு கிழிப்பட்ட நரம்புகளினால் ஏற்பட்ட வலியையும், கடுமையான தாகத்தினுடைய துயரத்தையும், சரீரம் அடைந்த சித்திரவதையினாலான வலியையும், வேகமாய் அதிர்வுறும் மூளையின் வலியையும் சகித்துக்கொண்டிருந்தார்!”

சிலுவையிலிருந்து பேசப்பட்ட ஏழு வார்த்தைகள்

இப்படியாகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் சூழ்நிலையில் காணப்படும் ஒருவர், அதிகம் பேசுவாரென நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நமது கர்த்தர் சிலுவையில் தொங்குகையில் பேசினதாக பதிவுபண்ணப்பட்டுள்ள வார்த்தைகளை (அ) செய்திகளை மாத்திரமே பேசினாரே ஒழிய, மற்றப்படி எதுவும் பேசவில்லை. இந்த வார்த்தைகளானது, நமது கர்த்தருடைய குணலட்சணம் மற்றும் போதனைகளுடைய மிக முக்கியமான அம்சங்களில் சிலவற்றை உண்மையாய்ப் பிரதிபலிக்கின்றதாய் இருக்கின்றது.

சிலுவையிலிருந்து பேசப்பட்ட இந்த வார்த்தைகளில், முதலாவதாகப் பேசப்பட்டதாகப் பொதுவாய் அறியப்பட்டிருக்கும் வார்த்தைகளானது லூக்கா 23:34-ஆம் வசனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” நமது கர்த்தருடைய இருதயமானது, மன்னிப்பின் ஆவியினால் நிரம்பியிருந்தது என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை, எனினும் அநேக காரணங்களின் நிமித்தமாக, இது கர்த்தர் பேசின வார்த்தைகளாக இருக்குமோவென நாம் சந்தேகிக்கின்றோம்; காரணங்கள் பின்வருமாறு: (1) இவ்வார்த்தைகளானது, கிரேக்க மூலப்பிரதிகளிலும், (4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த) எண்: 1209 கோடெக்ஸ் வாற்றிக்கானசிலும், (5-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த) கோடெக்ஸ் அலெக்ஸ்சாண்டிரினசிலும் காணப்படுகிறதில்லை; (2) இந்த வார்த்தைகள் பொருத்தமானதாய் இல்லை, ஏனெனில் நமது கர்த்தருடைய மரணத்திற்குக் காரணமாய் இருந்தவர்கள் மனம் வருத்தம்கொள்ளவே இல்லை மற்றும் மனம் வருத்தம்கொள்ளும் காரியமானது, மன்னிப்பு வழங்குவதற்கு அவசியமாய் இருக்கின்றது வேதவாக்கியங்கள் தெளிவாய்ச் என சுட்டிக்காட்டுகின்றன என்பதாக நமது புரிந்துகொள்ளுதல் காணப்படுகின்றது; (3) நமது கர்த்தருடைய மரணத்துக்குக் காரணமாய் இருந்தவர்கள் அவரில் நம்பிக்கையோ அல்லது அவரது மரணத்தினுடைய புண்ணியத்தின் பலன்மீது விசுவாசத்தையோ கொண்டிருக்கவில்லை மற்றும் ஒருவன் மன்னிப்புப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக, விசுவாசம் வைக்கவேண்டும் என்பதே வேதவாக்கியங்களின் தெளிவான போதனையாக இருக்கின்றது; (4) நமது கர்த்தருடைய மரணத்திற்குக் காரணமாய் இருந்தவர்கள், பாவத்தை நினைத்து மனம் வருந்தின இருதயங்களைக் கொண்டிருந்ததாகவோ மற்றும் பாவத்திலிருந்து விலகினதாகவோ எவ்விதமான பதிவுகளும் இல்லை மற்றும் இப்படியான மனம்வருந்தும் நிலையில் காணப்படாததுவரையிலும், எவராலும் மன்னிக்கப்பட முடியாது என்பதே வேதவாக்கியங்களின் தெளிவான போதனையாக இருக்கின்றது; (5) நமது கர்த்தர் இன்னும் தம்முடைய பலியின் வேலையை நிறைவேற்றி முடிக்கவில்லை மற்றும் இன்னும் அவர் பிதாவினிடத்திற்கு ஏறிச்சென்று, விசுவாசிகளின் சார்பாக அந்தப் பலியை ஒப்படைக்கவில்லை. ஆகையால் பாவத்தை மன்னிக்க, பிதா ஆயத்தமாய் இருக்கமாட்டார்; (6) அவர்கள் புரிந்திட்டப் பாவம் மன்னிக்கப்பட்டதற்கும் நமக்கு எந்தச் சாட்சிகளும் இல்லை மாறாக, “இயேசுவினுடைய இரத்தப்பழியானது எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் வரக்கடவது” என்று யூதர்கள் வேண்டிக்கொண்டதற்கான பதிலானது அத்தேசத்தார் மீது வந்த உபத்திரவக்காலத்தின்போது கொடுக்கப்பட்டதற்குரிய சாட்சிகளையே நாம் பெற்றிருக்கின்றோம்; இந்த உபத்திரவத்தைக் குறித்தே அப்போஸ்தலன், “அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது” (1 தெசலோனிக்கேயர் 2:16) என்று குறிப்பிடுகின்றார்.

சிலுவையிலிருந்து பேசப்பட்டப் பிரசித்திப்பெற்ற இரண்டாம் வார்த்தையான, “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிப்பாய்” என்பது அதிகாரப்பூர்வமான வார்த்தையாகும். இந்த வார்த்தைகளானது, தனது பாவங்களை ஒப்புக்கொண்டு, கர்த்தருடைய இராஜ்யத்தில் கர்த்தர் வரும்போது, கர்த்தருடையத் தயவையும், கருணையையும் பெறுவதற்கு விரும்பின கள்வனிடம் பேசப்பட்டது. நமது கர்த்தர் தம்முடைய இராஜ்யத்தில் இன்னும் முழுமையாய்வரவில்லை; ஆகவே தன்னை நினைவுகூரும்படிக்கு கள்வன் விரும்பின காலப்பகுதி இன்னமும்வரவில்லை. நமது கர்த்தருடைய ஜீவியம் மற்றும் நம்பிக்கைகள் அந்தகாரத்திற்குள் காணப்படுவது போன்று தோன்றியபோதிலும், மனம்வருந்திய கள்வனின் விண்ணப்பத்திற்குச் செவிகொடுக்க தம்மால் முடியும் என்றும், வேண்டிக்கொண்டபடியே தாம் செய்வார் என்றும் நமது கர்த்தர் மனம்வருந்தின கள்வனுக்கு உறுதியளித்தார். அந்த விண்ணப்பத்தினுடைய நிறைவேறுதலானது, வேதவாக்கியங்கள் தெரிவிக்கிற பிரகாரம், நமது கர்த்தர் தம்முடைய இரண்டாம் வருகையின்போது, தமது மகா வல்லமையைக் கையில் எடுத்துக்கொண்டு, பாவத்தின் காரணமாக இழந்துப்போகப்பட்டதும், விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்டுக்கொள்ளப் பட்டதுமான பரதீசை பூமியில் திரும்பவும் நிறுவும்போது, நிறைவேற்றப்படும். அப்போது மனம்வருந்தின கள்வனும் வருவான்; ஆம், பிரேத குழிகளில் இருக்கும் அனைவரும் மனுஷக்குமாரனுடைய சத்தம் கேட்கும் காலம் வருமென்று வேதவாக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன; இப்படியாகச் சத்தம் கேட்பவர்களில், மற்றக் கள்வனுங்கூட ஒருவனாகக் காணப்படுவான். அனைவரும் ஆயிரவருட இராஜ்யத்தினுடைய அனுகூலமான சூழ்நிலைகளுக்குள் கொண்டுவரப்படுவார்கள்; எனினும் மற்றவர்களிலும் மேலாக இந்த மனம்வருந்தின கள்வன் அனுகூலம் பெற்றிருப்பான் என்பதிலும், நமது மீட்பருடைய மரணத் தருவாயில், ஆறுதலான வார்த்தைகளைப் பேசி ஊழியம் பண்ணிட்டதற்காக, விசேஷமான பலனை அடைவான் என்பதிலும் நமக்கு நிச்சயமே.

“அதோ உன் மகன்!” “அதோ உன் தாய்!”

நமது கர்த்தருடைய தாயாகிய மரியாளும், அவரது அன்புக்குரிய சீஷனாகிய யோவானும் சிலுவையின் அருகாமையில் நின்றுகொண்டிருந்தார்கள்; மேலும் அவர்கள் அழுதும், துக்கித்துக்கொண்டும் இருந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் நமது கர்த்தரோ [R4173 : page 152] தம்மைக்குறித்தும், தம்முடைய கடும் வேதனை குறித்தும் எண்ணுவதற்குப்பதிலாக, மற்றவர்களைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தார். அவர் தம்முடைய ஊழியத்தின் நாட்களில், நன்மை செய்பவராகச் சுற்றித் திரிந்ததுபோலவே, தம்முடைய மரண வேளையிலுங்கூட மற்றவர்களுக்கான நன்மையையும், நலனையுமே சிந்தித்தவராகக் காணப்பட்டார்; “அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய்” (யோவான் 19:26,27) என்று கூறி, தம்முடைய தாயாரை, தம்முடைய அன்புக்குரிய சீஷனுடைய பராமரிப்பின் கீழ் ஒப்படைத்தார். அருமையானதொரு பாடம்! இது நம்முடைய கர்த்தரின் இருதயத்தினுடைய இரக்கத்தையும், அனுதாபத்தையும் எவ்வளவாய் நமக்குக் காண்பித்துத் தருகின்றது மற்றும் இது – நாம் நம்முடைய சிறியதும், பெரியதுமான சொந்தப் பிரச்சனைகளிலும், சிரமங்களிலும் நாம் முழுமையாய் மூழ்கிப்போய்விடக்கூடாது, மாறாக மற்றவர்களுடைய பாரம் சுமப்பவர்களாக நாம் காணப்பட வேண்டும் என்றும், பூமிக்குரிய (அ) ஆவிக்குரிய விஷயங்களில் நம்முடையப் பராமரிப்பின் கீழ்க் காணப்படுபவர்கள் அனைவரின் ஆசீர்வாதத்திற்காகக் நமது அனுதாபங்களையும், நமது எண்ணங்களையும், நமது திட்டங்களையும் நாம் செயலாக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும் நமக்கு எவ்வளவாய்ப் படிப்பித்துத் தருகின்றது!

“என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” இந்த வார்த்தைகளானது, சிலுவையிலிருந்து இயேசுவினால் பேசப்பட்ட நான்காம் வார்த்தைகளாகும். இவ்வார்த்தைகளானது, நமது கர்த்தருடைய கடுந்துயரத்தின் ஆழத்தை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. நீதியுள்ளவராகவும், இயேசுவினிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவனை, நீதிமானாக்குகிறவருமாய்த் தேவன் விளங்கும்படிக்கும் மற்றும் இயேசுவில் விசுவாசம் வைக்கிறவர்களுக்கு, ஆதாமுக்குள் இழந்துபோகப்பட்ட பிதாவின் தயவினிடத்திற்கும், நித்திய ஜீவனிடத்திற்கும் திரும்பிவருவதற்கான ஒரு வாய்ப்பையும், மரணத்திலிருந்து ஓர் உயிர்த்தெழுதலையும் ஏற்றவேளையில் பிதா அருளும்படிக்கும், கர்த்தர் பாவிக்கான ஈடுபலி விலைக்கிரயமாக, பதிலாளாக/மாற்றாளாக மரித்துக்கொண்டிருந்தார். அவர் நமக்கான பதிலாளாக இருக்க வேண்டுமெனில், நாம் பாவிகளென அனுபவிக்கும்படிக்கு விதிக்கப்பட்ட அனைத்தையும் அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஆகவே அவர் தம்முடைய ஜீவனை இழப்பது மாத்திரம் அல்லாமல், அவர் பிதாவுடன் கொண்டிருந்த சகல ஐக்கியத்திலிருந்தும் துண்டிக்கப்பட வேண்டியிருந்தது. கணநேரம் ஐக்கியம் துண்டிக்கப்படுதலே [R4173 : page 153] போதும்; ஆனால் இருளான, தனிமைப்படுத்தப்பட்டதான அந்தக் கணப்பொழுது கண்டிப்பாய் வரவேண்டும். ஆகவே இதுவே நமது கர்த்தருடைய அனுபவங்களிலேயே மிகவும் இருளான தருணமாகவும், (இந்தத் துண்டிக்கப்படுதலின் அனுபவத்திற்கு நிழலாக மாத்திரமே காணப்பட்ட) கெத்செமனேயின் இருளைக்காட்டிலும் இருளான தருணமாகவும் இருந்ததென நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த அனுபவம் ஏன் நமது கர்த்தருக்கு வந்தது என்பதற்கான காரணத்தை, ஞானத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றபடியால் நாம் எத்துணை மகிழ்ச்சியடைகின்றோம்! மேலும் இந்தக் காரணத்தை நாம் உணர்ந்துகொள்கையில், இது கிறிஸ்து மூலமான நமக்குரியதான ஆசீர்வாதங்கள் பற்றியதான உணர்ந்துகொள்ளுதலினால் நம்முடைய இருதயங்களை அதிகமதிகமாய் நிரப்புவதாக; அதாவது “பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” என்ற நமது ஆண்டவருடைய வார்த்தைகளை நமக்குப் பொருத்த முடியத்தக்கதாகப் பிதாவினுடைய ஐக்கியம் மற்றும் அன்புக்கு மீண்டும் திரும்புவதற்குரிய சிலாக்கியமாகிய ஆசீர் வாதங்கள் பற்றியதான உணர்ந்துகொள்ளுதலினால் நம்முடைய இருதயங்களை அதிகமதிகமாய் நிரப்புவதாக (யோவான் 16:27). “நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்.” நமது கர்த்தருடைய மரணத் தருவாயின்போது பேசப்பட்ட இந்த வார்த்தைகளானது, அவரிடத்தில் உண்மையற்ற தன்மை இருந்ததெனத் தெரிவிப்பதில்லை மற்றும் இது திரித்துவ உபதேசம் தொடர்ந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை! இவ்வார்த்தைகளானது, தமக்குப் பிதாவிடம் இருக்கும் உறவைக் குறித்து அவர் பேசியிருந்தவைகளுக்கு முழு இசைவுடனே காணப்படுகின்றது.

இயேசு ஐந்தாவதாக, “தாகமாய் இருக்கிறேன்” என்றார். இந்த வார்த்தைகளானது, அநேகம் உண்மைகளை மனதிற்கு முன்பாய் அழுத்தத்துடன் கொண்டுவருகின்றது; அவை பின்வருமாறு: (1) சூரியனின் வெப்பத்திற்கு வெளிப்படுத்தப்பட்ட நிலையிலும், நரம்புகளின் எரிச்சல் மற்றும் வலியின் கீழ், தாகம் என்பது சிலுவையில் அறையப்பட்டிருக்கும் நபருக்கான முக்கியமான சித்திரவதைகளில் ஒன்றாகும்; (2) தண்ணீர் உட்பட அனைத்தையும் சிருஷ்டிக்கும் மாபெரும் வேலையில், நமது கர்த்தர் தேவனுடைய பிரதிநிதியாகக் காணப்பட்டிருந்தார் எனும் உண்மையை நாம் எண்ணிப்பார்க்கையில், கர்த்தர் தாகம் கொள்வதற்கென விரும்பித் தாழ்ந்ததும், பணிந்ததும், ஆம் மனுக்குலத்திற்காக மரிப்பதற்கென அவர் விரும்பி தாழ்த்தினதும், பணிந்துகொண்டதுமான காரியங்கள், மனுக்குலத்திற்காக அவர் கொண்டிருந்த அன்பிற்கான குறிப்பிடத்தக்க விளக்கமாகும். தாகத்திற்கான இந்த வார்த்தைகளானது அனைத்தும் அதாவது தாம் நிறைவேற்றும்படிக்குத் தம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த வேலை அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அவர் அறிந்த பின்னரே உரைக்கப்பட்டதாக நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளானது சங்கீதம் 69:21-ஆம் வசனத்தினுடைய நிறைவேறுதலாய் இருக்கின்றது. “என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.” உணர்வை மழுங்கச் செய்யும் பானத்தை வாங்க மறுத்த நமது கர்த்தர், இப்பொழுது காடியில் தோய்க்கப்பட்டு, அநேகமாக இரண்டு அல்லது மூன்று அடி நீளமுள்ள கோலில் மாட்டி வழங்கப்பட்டக் கடற்காளானை ஏற்றுக்கொண்டார். இந்தக் காரியங்களை நாம் எண்ணிப்பார்க்கையில், நம் அனைவருக்காகவும் மரித்திட்ட நமது கர்த்தர், நாம் ஜீவத்தண்ணீரையும், ஜீவ அப்பத்தையும், அதாவது நாம் அனைவரும் நித்தியமான ஜீவனை அடையத்தக்கதாக பசித் தாகம் கொண்டிட்டார் என்பதை நினைவில் கொள்வோமாக!

முடிந்தது

இந்த ஆறாம் வார்த்தையானது, ஜெயத்தினுடைய ஒரு வார்த்தையாகக் காணப்படுகின்றது. தாம் செய்யும்படிக்குத் தமக்குப் பிதா கொடுத்திருந்த வேலையைக் கர்த்தர் நிறைவேற்றியுள்ளார்; ஆரம்பம் துவங்கி முடிவுவரை கர்த்தர் உண்மையாய் இருந்துள்ளார் மற்றும் தம்மையே பலியாக்கி உள்ளார். அவர் தம்முடைய பூமிக்குரிய ஓட்டம் முடிவடைந்ததில் மகிழ்ச்சிக்கொண்டார்; அது ஜெயத்துடன் முடிவடைந்ததினாலும், இந்த முடிவு என்பது இறுதியில் மனுக்குலத்தின் உலகம் ஆசீர்வதிக்கப்படப் போவதையும், மனுக்குலம் பாவம் மற்றும் மரணம் மற்றும் எதிராளியானவனுடைய வல்லமையினின்று விடுவிக்கப்படப் போவதையும் குறிக்கின்றதாய் இருக்கும் என்பதினாலும் அவர் மகிழ்ச்சிக்கொண்டார். இப்படியாகப் பார்க்கப்படும்போது, நமது கர்த்தர் பரலோக வாசஸ்தலத்தைத் துறந்து, மனித சுபாவம் எடுக்கத்தக்கதாக தம்மைத் தாழ்த்தினப்போதே, தம்முடைய வேலையை ஆரம்பித்தவரானார்; பின் அது அவர் முப்பதாம் வயதை அடைவது வரையிலும் தொடர்ந்தது என்றும் சொல்லப்படலாம்; எனினும் வேத வாக்கியங்களின்படி பார்க்கப்படும்போது நிறைவேற்றப்பட்ட வேலையான பலியின் வேலையானது, அவர் யோர்தானில் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டபோது, தம்மை மரணம் வரைக்கும் அர்ப்பணம் பண்ணினபோது ஆரம்பித்த ஒன்றாக இருக்கின்றது. அவர் சிலுவையில் அறையப்படுவதற்குக் கொஞ்சக் காலம் முன்னதாக, “ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்” (லூக்கா 12:50) என்று கூறினார். மரணத்திற்குள்ளான அவரது ஞானஸ்நானத்தின் காலமானது மூன்றரை வருடங்களாக இருந்தது மற்றும் இப்பொழுது இறுதியான தருணம் வந்துள்ளது. “முடிந்தது.” …

“பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.” இது கர்த்தருடைய இறுதி வார்த்தைகளாகவும், நமது கர்த்தருடைய பூமிக்குரிய ஊழியத்தின் இறுதிச்செய்கையாகவும், இறுதி வடிவம் கொடுத்தலாகவும் (finishing touch) கருதப்படுகின்றது. எதை இழந்தும் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிடுவதற்கு நாடினவர், தாம் மரிக்கும்போது, தம்முடைய ஜீவனுக்கான ஆவி, பிதாவின் பராமரிப்பிலும், பாதுகாப்பிலும் காணப்படும் என்று முழுமையான நம்பிக்கைக் கொண்டிருப்பதும், அவர் இவ்விதமாய் அதை வெளிப்படுத்துவதும் எத்துணை பொருத்தமானதாயுள்ளது! இப்படியாகவே அவருடைய பின்னடியார்களின் விஷயத்திலும் காணப்பட வேண்டும். நம்முடைய அனைத்தையும் கர்த்தரிடத்தில் ஒப்புவித்திருக்கிற நாமும், மரணத்திற்குள் செல்லும்போது பயமற்றுக் காணப்படத்தக்கதாக, அவருடைய விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை முழுமையாய்ச் சொந்தமாக்கிக் கொண்டிருக்க வேண்டும். நமது கர்த்தருடைய விஷயத்தில் அவருக்கு மரணம் என்பது, நமக்கு மரணம் காணப்படுவதைக் காட்டிலும், அதிகமானதாய்க் காணப்பட்டிருக்க வேண்டும். உயிர்த்தெழுதல் பற்றின கர்த்தருடைய வாக்குறுதியை மாத்திரமல்லாமல், நமது கர்த்தருடைய விஷயத்தில் தெய்வீக வல்லமைக்கான ஓர் உதாரணத்தையும் நாம் பெற்றிருக்கின்றோம். மரணத்திலிருந்து நமது கர்த்தர் இயேசுவை எழுப்பினவருடைய வல்லமையானது, இயேசு மூலமாய் நம்மை மகிமைக்கும், கனத்திற்கும், அழியாமைக்கும் கொண்டுவந்திட செயல்படுத்தப்படும். நமது கர்த்தர் ஒரு முன்னோடியாவார்; அவருக்கு முன்னதாக எவருமே மரணத்திலிருந்து மனுஷீக ஜீவனுடைய பூரணத்தினிடத்திற்கோ (அ) திவ்விய சுபாவத்தினுடைய பூரணத்தினிடத்திற்கோ எழுப்பப்படவில்லை.

சொல்லர்த்தமாகவே இருதயம் உடைந்தது

தேவன் மீதும், உயிர்த்தெழுதலின் மீதுமான, தமது நம்பிக்கையைத் தம்மைச் சுற்றி நின்ற அனைவரும் கேட்கத்தக்கதான விதத்தில் மகா சத்தமாய்க் கூறினதாகப் பரிசுத்தவானாகிய லூக்கா அவர்கள் நமக்குத் தெரிவிக்கின்றார். சொல்லர்த்தமாய் இருதயம் உடையப்பெற்ற ஒருவரால் தொனிக்கப்படும் கூக்குரலாகவே, இயேசுவின் இந்தக் கூக்குரல் இருக்குமென நவீன எழுத்தாளர்கள் சிலரால் கருதப்படுகின்றது மற்றும் இப்படியாக இருதயம் உடைந்துபோனதே நமது கர்த்தருடைய மரணம் சம்பவித்ததற்கான காரணம் என்னும் யூகம் காணப்படுகின்றது. சொல்லர்த்தமாகவே இருதயம் உடைந்து போகும் வாய்ப்புள்ளது என்பது ஒத்துக்கொள்ளப்படுகின்றது. இருதயம் இப்படிச் சொல்லர்த்தமாக உடைந்து போவதற்கானக் காரணம் நமது கர்த்தர் காட்டிக் கொடுக்கப்பட்டதிலும், கர்த்தர் மறுதலிக்கப்பட்டதிலும், ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்பட்டதிலும், சவுக்கினால் அடிக்கப்பட்டதிலும் மற்றும் சிலுவையில் அறையப்பட்டதிலுமுள்ள அவமானமானச் சூழ்நிலைகளேயாகும் என நாம் சொல்ல முற்படலாம்; மற்றும் இவைகள் அனைத்தும் ஆவியில் நமது கர்த்தருக்கு அழுத்தம் கொடுத்ததாய் இருந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆனால் நம்முடைய கணிப்பின் படி, தெய்வீக ஐக்கியம்/உறவு துண்டிக்கப்பட்டதின் காரணமாகவும், அவரது ஜீவியத்தின் கடைசி நேரங்களில் அவருக்கு ஏற்பட்டத் தனிமையின் காரணமாகவும் அவரது நான்காம் வார்த்தையில் வெளிப்பட்டத் துயரமே, அவரது இருதயம் உடைந்து போவதற்கான முதன்மையான காரணமாக இருக்கின்றது.

நமது கர்த்தர் இருதயம் உடைந்து/வெடித்து மரித்தார் என்று அனுமானிப்பதற்கான காரணங்களுக்குரிய அறிவியல் சார்ந்த விளக்கங்கள் பின்வருமாறு:
“இதற்குச் சாட்சியாக, போர்ச்சேவகனுடைய ஈட்டியினால் இயேசு குத்தப்பட்டப்போது, வெளிவந்த இரத்தமயமான தண்ணீர் காணப்படுகின்றது. இருதயத்திலிருந்து, இருதயத்தை மூடியிருக்கும் சவ்வுப்பகுதிக்குள் கசிந்த இரத்தமானது, நிண நீராகவும் (serum), உறைந்த இரத்தமாகவும் பிரிந்தது. சொல்லர்த்தமாகவே இருதயம் உடைந்துபோனபடியாலே இயேசு மரித்தார்.”

தெய்வீக ஏற்பாட்டின்படி, இயேசு சிலுவையில் தொங்கின வேளையில், முழுவதும் விநோதமான இருளினால் பூமி மூடப்படுவதின் மூலமாக, இயற்கையானது நமது கர்த்தருக்கான அனுதாபத்தை வெளிப்படுத்தும்படிக்கு ஏற்பாடு பண்ணப்பட்டக் காரியத்தில் நமக்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இக்காரியம் குறித்து ஒரு பழைய மூலப்பிரதி பின்வருமாறு தெரிவிக்கின்றது: “அநேகர் போக்கிலும், வரத்திலும் விளக்குடன், சென்றவர்களாய்க் காணப்பட்டார்கள் மற்றும் இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்படுவது வரையிலும் இருள் நிலவினது.” ஒரு மாபெரும் பூமியதிர்ச்சி அவ்வேளையில் ஏற்பட்டது என்றும், இதனால் பரிசுத்த ஸ்தலத்தையும், மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரித்திட்ட ஆலயத்தின் கனமான திரைச்சீலையானது, மேல் துவங்கி, கீழ் வரையிலும் கிழிந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது; திரைச்சீலைக் கிழிந்தக் காரியமானது, அப்போஸ்தலர் குறிப்பிடுவதுபோன்று, இப்பொழுது மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் செல்லும் பிரவேசம் [R4173 : page 154] வெளியாக்கப்பட்டுள்ளது என்பதையும், இந்தப் பிரவேசமானது கிறிஸ்துவின் பாடுகள் மற்றும் மரணம் மூலம் ஏற்பட்டுள்ளது என்பதையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. மாற்கு சுவிசேஷத்தின்படி, அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு என்பவர், பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டதாகப் பார்க்கின்றோம். அனைத்துப் பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது, இந்த யோசேப்பு என்பவர் சிறந்த ஒரு நபராக இருந்திருக்கின்றார். இவரைக்குறித்து மத்தேயு அவர்கள் “ஐசுவரியவான்” என்றும், லூக்கா அவர்கள் இவரைக் குறித்து, “உத்தமனும் நீதிமானுமானவர்” மற்றும் தேவனுடைய இராஜ்யத்திற்குக் காத்திருக்கிறவர் என்றும், மாற்கு அவர்கள் இவரைக்குறித்து, “கனம் பொருந்திய ஆலோசனைக்காரனும்,” மற்றும் ஆலோசனை சங்கத்தின் உறுப்பினர் என்றும் குறிப்பிடுகின்றனர். “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது” என்று இயேசு கூறியுள்ளார். ஐசுவரியவான்களுக்குக் கடினமாய் இருக்கும், காரணம் ஒருவேளை அவர்கள் ஏழைகளாய் இருந்திருந்தால், அவர்கள் மேற்கொள்ள வேண்டியவைகளைக் காட்டிலும், அவர்கள் ஐசுவரியவான்களாய் இருப்பதினிமித்தம் அதிகமாய் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். ஒருவேளை அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு ஐசுவரியவானாய் இருக்கவில்லையெனில், அவர் முழுமையாய் இயேசுவினுடைய பின்னடியாராகியிருந்திருப்பார். எனினும் அவரைக்குறித்து அநேகம் நல்லக் காரியங்கள் சொல்லப்படவிருப்பதினாலும், சோதனையின் கீழ் அவரது தைரியமும், துணிவும் குறைந்துபோவதற்குப்பதிலாக, பெருகினதினாலும் நாம் மகிழ்கின்றோம். அவர் இறுதியில் முழுமையாக ஒரு சீஷனாகவும், அடிச்சுவட்டைப் பின்தொடரும் பின்னடியாராகவுமானார் என்று நாம் நம்பலாம். இவரைக் குறித்துக் கெய்கீ அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“யோசேப்புச் செய்த காரியம் சாதாரணமான ஒரு காரியமல்ல; ஏனெனில் எந்த ஒரு காலக்கட்டத்திலும் மரித்தவரை அடக்கம்பண்ணும் காரியத்தில் ஈடுபடுபவர் ஏழு நாட்கள் தீட்டுப்பட்டவராகக் காணப்படுவார் மற்றும் அந்நபர் தொடும் அனைத்தும் தீட்டுப்பட்டதாய் இருக்கும் (எண்ணாகமம் 19:11); மேலும் பஸ்கா காலக் கட்டத்தின்போது யோசேப்பு அடக்கம்பண்ணும் காரியத்தில் ஈடுபட்டது என்பது அவரை, முழுப் பஸ்கா வாரம் முழுவதிலும் பரிசுத்தமான அனுசரிப்புகள் மற்றும் களிகூருதல்களிலிருந்து ஒதுக்கிவைத்துவிடும்.”
கன்மலையில் இயற்கையாகவே வெட்டப்பட்டிருந்த யோசேப்பினுடைய கல்லறையானது, ஆண்டவர் அங்கே அடக்கம் பண்ணப்பட்டதின் மூலம் எவ்வளவாய்க் கனப்படுத்தப்பட்டது!

யூதர்களின் மத்தியில் ஐசுவரியவானும், செல்வாக்குமிக்கவருமான நிக்கொதேமு என்பவர் நமது கர்த்தருடைய சரீரத்திற்கான அடக்கம் பண்ணுவதற்குரிய பராமரிப்பில், யோசேப்புடன் இணைந்து செயல்பட்டதைப் பார்த்து நாம் மகிழ்கின்றோம். இத்தருணத்தின்போது இம்மனுஷர்கள் வெளிப்படுத்தின தைரியம் மற்றும் வைராக்கியத்தின் காரணமாக, இவர்கள் கர்த்தருடைய கரத்தினின்று விசேஷித்த ஆசீர்வாதம் பெற்றிருப்பார்கள் என்பதில் நமக்கு நிச்சயமே. ஊழியம் புரிவதற்கான வாய்ப்புகள் வரும்போது, பயத்தின் காரணமாக பின்வாங்கிவிடுபவர்கள் ஆண்டவரினால் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதிலும், இப்பொழுது அவர் ஜெயங்கொள்பவர்களுக்கு அருளும் மாபெரும் பலனைப் பெற்றுக்கொள்வதற்கு ஆண்டவரினால் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதிலும் நமக்கு நிச்சயமே. இதில் நமக்குள்ளப் படிப்பினை என்னவெனில், நீதிக்காகவும், சத்தியத்திற்காகவும், கர்த்தருக்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும் எதையும் இழந்து துணிவுடன் நிற்க வேண்டுமென்பதேயாகும். கிடைத்திட்ட வாய்ப்புகளுக்கும், சிலாக்கியங்களுக்கும் நாம் துணிவுடனும், உண்மையுடனும் இருப்பதினிமித்தம் இழப்புகள் அநேகம் இருப்பின் தற்கால ஜீவியத்திலும் சரி மற்றும் இனிவரும் ஜீவியத்திலும் சரி, நமக்கான பலனும் அதிகமாக இருக்கும். இயேசுவின் ஊழியக்காலம் தொடர்புடைய விஷயத்தில், இங்கு/இத்தருணத்தில் நிக்கொதேமு மூன்றாம் முறையாகக் குறிப்பிடப்படுகின்றார். முதலாம் முறையின்போது, இவர் இயேசுவை இரவு வேளையில் சந்திக்கின்றார் (யோவான் 3). இரண்டாம் [R4174 : page 154] முறையின்போது, கர்த்தரைக் கைது செய்திட முயற்சி எடுக்கப்பட்ட போது, இவர் ஜாக்கிரதையுடன், இயேசு சார்பில் குறுக்கிட்டுப் பேசுகின்றார். (யோவான் 7:44-52). ஆனால் இப்பொழுதோ இவர் சிலர் குறிப்பிட்டுள்ளதுபோன்று “தன்னால் அதிகமானவைகளைச் செய்ய முடிந்திருக்கும் முந்தைய வாய்ப்புகளைத் தவறவிட்டுவிட்டோம் என்ற துயரத்தைத் தேற்றத்தக்கதாக, ஊழியம் புரிவதற்கான கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.” இவர் ஐசுவரியவானாக இருந்தார் மற்றும் யூதர்கள் மரித்தவர்களை அடக்கம்பண்ணப் படுவதற்குப் பயன்படுத்தும் வெள்ளைப்போளத்தையும், கரிய போளத்தையும் கலந்து, ஏறக்குறைய நூறு இராத்தல் அளவு நிக்கொதேமு கொண்டுவந்தார். சத்தியம் மற்றும் அதற்கான ஊழியம் தொடர்புடைய விஷயத்தில் நாம் நடுநிலையில் காணப்படுவதில் திருப்திக் கொண்டிருக்க கூடாது என்றுள்ள படிப்பினை நமக்குக் காணப்படுகின்றது. நாம் முடிந்தமட்டும் உறுதியுடன் காணப்பட வேண்டும்; நாம் நீதியின் பக்கமாய் நின்று, நம்முடைய முழுப் பலத்துடன் கர்த்தருடைய நோக்கங்கள் மற்றும் கர்த்தருடைய சகோதரர்கள் சார்பில் செய்ய வேண்டியதைச் செய்திட வேண்டும்; ஞானத்தையும், பகுத்தறிவையும் பயன்படுத்தும் அதேவேளையில் நாம் துணிவுடனும் காணப்பட வேண்டும். ஜீவியத்தில் மகிழ்ச்சியையும், ஆறுதலையும் கொண்டுவருவதற்குரிய நம்முடைய மலர்களை நாம் கொண்டுவந்திட வேண்டும் மற்றும் இந்த மகிழ்ச்சியையும், ஆறுதலையும் அனுபவிப்பதை மரணம் தடுத்துப்போடுவது வரையிலும் நாம் காத்திருக்கக்கூடாது.

நியூமேன் ஹால் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“கொல்கொதா! இது பூமியினுடைய மேற்பரப்பினுடைய மையப்பகுதி என்றும், குடியிருப்பிற்குரிய பூமி கோளத்தினுடைய நடுமையம் என்றும் ஒரு புராணக் கதை உண்டு. அந்தப் புராணக் கதையை நாம் எடுத்துக்கொள்வதில்லை, மாறாக அது முன் வைக்கும் உண்மையையே நாம் எடுத்துக்கொள்கின்றோம்; ஏனெனில் கிறிஸ்துவின் சிலுவை என்பது சகல கோத்திரங்கள் மற்றும் ஜாதிகளிடமிருந்து சகல விசுவாசிகளும் ஒன்று சேரும் சபையினுடைய உண்மையான மையமாகக் காணப்படுகின்றது.”

இன்னொருவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“சிலுவை நம் முன் இருக்க, நம்முடைய ஜீவியங்களை நம்முடைய சொந்த ஆசீர்வாதத்திற்கும் மற்றும் நம்மையே திருப்திப்படுத்துவதற்கென ஒப்புக்கொடுப்பதற்கு நம்மால் எப்படித் துணியமுடியும்? கிறிஸ்துவின் பாடுகளில் பங்குக்கொள்ளாமலும், இன்பங்களை எப்போதும் தெரிந்துகொண்டு, ஒருபோதும் உபவாசித்தலைத் தெரிந்துகொள்ளாமலும் இருந்து, இந்த உலகத்தின் காரியங்களையும், அதன் ஆஸ்திகளையும் (அ) அதன் தயவுகளை (அ) அதன் உயர் ஸ்தானங்களை நம்முடைய ஜீவியத்தின் முக்கிய இலக்காக எப்படி நம்மால் கொண்டிருக்க முடியும்?”

பிலிப்பிஸ் புரூக்ஸ் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார்:

“என்னுடைய நண்பனே, நீ உன்னுடைய சிலுவையை வைத்திருக்கின்றாய். நீ செய்யும் வேலையில், வலி உள்ளது. ஆனால் உன்னுடைய அனைத்து வலிகளிலும், தேவனுடைய அன்பானது உனக்கு அதிகமாகியும், தெளிவாகியும் கொண்டிருக்கின்றது என்பதை நீ அறிந்துகொள்வாயானால், அப்பொழுது ஒவ்வொரு பலியிலும் உன்னால் வெற்றிச் சிறக்க முடியும். உன்னுடைய சிலுவையானது கர்த்தருடைய மகிமையிலும், அழகிலும் சிலவற்றை உனக்குப் பெற்றுத்தந்துள்ளது. களிகூரு, சந்தோஷப்படு, ஏனெனில் நீ கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்பட்டிருக்கின்றாய்.”

நம்முடைய ஆதார வசனம்

இந்தப் பாடத்தை நாம் நிறைவு செய்கையில், நாம் இப்பாடத்தின் ஆதார வசனத்தினுடைய முக்கியமான சத்தியங்களை நினைவுகூருவோமாக; “கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்துள்ளார்.” இயல்பாகவே மரணம் என்ற ஒன்று சம்பவிக்கும் என்பதினாலோ அல்லது மற்ற மனிதர்களைப் போலவே இயேசுவும் பாவி என்பதினாலோ அல்லது எப்படி மரிக்க வேண்டுமென்று நமக்குக் காண்பிக்க வேண்டும் என்பதினாலோ இயேசு மரிக்கவில்லை; அவர் நம்முடைய பாவங்களுக்காக மரித்தார். அவர் மரித்ததற்கானக் காரணம் நம்முடைய பாவங்கள் ஆகும்; நம்முடைய பாவங்களுக்கான தண்டனை, மரணத்தண்டனையாக இருந்தபடியாலும், நாம் ஏதேனும் ஒரு தளத்தில், ஏதேனும் எதிர்க்கால ஜீவியத்தை அடைவதற்கு நாம் மீட்கப்பட வேண்டியிருந்தபடியாலும் அவர் மரித்தார்.

“காலாக் காலங்களாக நிகழ்ந்துவந்த மரணங்கள் அனைத்திலும், மேலோங்கி நிற்கும்
கிறிஸ்துவின் சிலுவைதனிலே நான் மேன்மைப்பாராட்டுகின்றேனே;
இதன் உயர் கருத்துகளிலேயே,
புனித கதையின் அனைத்து விளக்கமும் மையம் கொண்டுள்ளதே.”