R2312 – பிலாத்துவின் முன்னிலையில் இயேசு – “அவரை நினைத்துக்கொள்ளுங்கள்”

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2312 (page 159)

பிலாத்துவின் முன்னிலையில் இயேசு - “அவரை நினைத்துக்கொள்ளுங்கள்”

JESUS BEFORE PILATE – "CONSIDER HIM"

மத்தேயு 27:11-26

“பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.” 1 தீமோத்தேயு 1:15

கெத்செமனே தோட்டத்தில் கர்த்தர் கைதுச் செய்யப்பட்ட பிற்பாடு, விசாரணைப் பண்ணப்படத்தக்கதாக அவர் பிரதான ஆசாரியர்கள், அன்னா மற்றும் காய்பாவின் முன்னிலையில் கொண்டுவரப்பட்டார் மற்றும் மத்தேயு 26:59-66 வரையிலான வசனங்களில் இடம் பெறுகின்றதான விசாரணை நடைப்பெறுவதற்கு முன்னதாக, பிரதான ஆசாரியனுடைய இந்த வீட்டில்தானே அநேகமாக யூதருடைய ஆலோசனை சங்கத்தினர் கூடி, விசாரணை நடத்தப்பட்டது. காலையில் சுமார் 1-மணி அளவுக்கு, அநேகமாக நமது கர்த்தர் உள்ளே கைதியாகக் கொண்டுவரப்பட்டார் மற்றும் கிட்டத்தட்ட காலை 5:30 மணிவரை விசாரணை நீடித்ததாகக் கருதப்படுகின்றது; அநேகமாக அதே நாளில் 6 முதல் 8 மணிக்குள், அவர் ரோம அரசாங்கத்தினுடைய பிரதிநிதியாகிய பிலாத்துவின் முன்னிலையில் கொண்டுவரப்பட்டார். நமது கர்த்தரைக் கைது செய்வதற்கென்று பிரதான ஆசாரியர்களும், ஆலோசனை சங்கத்தினுடைய முன்னிலை வகிக்கும் யூதர்களும் சில காலமாகவே ஆவலுடன் காணப்பட்டார்கள் மற்றும் யூதர்கள் அவரைக் கொன்றுபோடுவதற்கு நாடினபடியால், அவர் (யூதேயா மாகாணத்திலுள்ள) யூதர்கள் மத்தியில் சஞ்சரிக்காமல், கலிலேயாவில் சஞ்சரித்துவந்தார். “ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது” (மத்தேயு 26:5) என்று அவர்கள் தங்களுக்குள்ளாக யோசித்துக் கொண்டார்கள்; ஆனால் நமது கர்த்தரோ அவர்களிடமிருந்து நழுவிச் சென்றுவிட்டார் மற்றும் பஸ்கா பண்டிகையினுடைய காலத்தில், “தாம் இவ்வுலகத்தை விட்டுப்போகும்படியான தம்முடைய வேளை வந்தது” என்றும், பஸ்கா காலத்தின் போதே நியாயப்பிரமாணத்தினுடைய நிழல்களையும் மற்றும் தீர்க்கத்தரிசனங்களையும் நிறைவேற்றிட வேண்டும் என்றும் இயேசு அறிந்தவராக, பஸ்கா பண்டிகையினுடைய காலத்தில்தானே திரும்பிவந்தார். இறுதியில் இயேசு கழுதையின்மேல் ஏறி எருசலேமுக்கு வந்ததினாலும், அவர் ஆலயத்திலிருந்து காசுக்காரர்களைத் துரத்தினபடியாலும், அவர்கள் கோபம் அடைந்தவர்களாக, ஜனங்கள் அனைவரும் வீட்டில் காணப்படுகின்றதான இரவு வேளையில், இயேசுவைக் காட்டிக்கொடுப்பதாக முன்வந்த யூதாசினுடைய திட்டத்தைப் பற்றிக்கொண்டார்கள்; அவரது விசாரணையைக் காலந்தவறி, இரவில் நடத்தினார்கள்; அவர் யூதருடைய ஆலோசனை சங்கத்தினால் குற்றவாளியெனத் தீர்க்கப்பட்டார் மற்றும் மரணத்தீர்ப்பிற்கு அவசியமான பிலாத்துவின் சம்மதத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, காரியத்தை அவசரமாய்ச் செயல்படுத்தினார்கள்.

யூதர்களுடைய பிரதான நீதிமன்றமும், எழுபது முக்கியமான மனிதர்களைக் கொண்டதுமாக ஆலோசனை சங்கத்தார் முன்னிலையிலான விசாரணையில், நீதியானது பின்பற்றப்படுவது, அதாவது நீதியின் தோற்றமாகிலும் காணப்படுவது அவசியமாகும்; ஆகையால் நமது கர்த்தர் மரணத்திற்குப் பாத்திரமானவர் என்று காண்பிக்கத்தக்கதாக, அவருக்கு எதிராக எதையாகிலும் நிரூபிக்கத்தக்கதாக, சாட்சிகள் கொண்டுவரப்படுவதற்குத் தேடல் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இப்படியான சாட்சிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் இறுதியில் பொய்ச்சாட்சிச் சொல்ல விரும்பும் இருவரைப் பெற்றுக்கொண்டார்கள்; இந்தச் சாட்சிகளானவர்கள் நமது கர்த்தருடைய வார்த்தைகளைக் கொஞ்சம் தவறாய்ப் பொருட்படும் விதத்தில் பேசி பொய்ச்சாட்சிச் சொன்னார்கள்; இவர்கள் நமது கர்த்தருடைய வார்த்தைகளைத் திரித்த கண்ணோட்டங்களில் கூறுவதன் வாயிலாக, இயேசுவுக்கு எதிராக சாட்சி பகரவும் மற்றும் பிரதான ஆசாரியர்களுடைய தயவைப் பெற்றுக்கொள்வதற்கும் விரும்பினவர்கள் ஆவார்கள்.

ரோம தேசாதிபதியுடைய சம்மதம் இல்லாமல் மரணத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் ஆலோசனை சங்கத்தாரிடத்தில் இல்லாதிருந்ததாலேயே, அவர்கள் இயேசுவைப் பிலாத்துவுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள் மற்றும் அவர் மோசமான பண்புகள் உடையவர் என்றும், அவர் குற்றவாளியென முறைபடிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்றும், மரணத் தண்டனைக்கான தங்களது உத்தரவிற்கும், தீர்ப்பிற்கும் சம்மதம் தெரிவிப்பது மாத்திரமே பிலாத்துச் செய்ய வேண்டிய முறையான காரியம் என்றுமுள்ளவைகளைச் சுட்டிக்காட்டும் வகையில், இயேசுவைக் கட்டப்பட்ட நிலையில் பிலாத்துவுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

ஆலோசனை சங்கத்தாரின் முன்னிலையில் நடைப்பெற்றதான விசாரணையில், இராஜத்துரோகம் (அ) கலகம் பற்றின எந்தக் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படவில்லை, ஏனெனில் இப்படியான குற்றச்சாட்டுகளை வைப்பது என்பது முறையானதாய் இருக்காது; காரணம் ரோமின் நுகத்தடியிலிருந்து விடுதலைக்கான தங்களது உரிமையை யூதர்கள் [R2312 : page 160] பற்றிக்கொண்டிருப்பவர்களாய் இருப்பதினால், ரோமிற்கு எதிரான துரோகம் என்பது யூதமார்க்கத்திற்கு உண்மையாய் இருப்பதாய் இருக்கும்; இன்னுமாக இதற்காகவே, அதாவது ஓர் இரட்சகருக்காகவே, ஒரு மாபெரியவருக்காகவே அவர்கள் நூற்றாண்டுகள் காலமாய்க் காத்திருக்கின்றனர்; ஆகையால் ஆலோசனை சங்கத்தார் முன்னிலையில், தேவதூஷணம் எனும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் யேகோவா தேவனிலும், யூத மதம் மற்றும் வழக்கங்களிலும் நம்பிக்கையற்றவராக அநேகமாய்க் காணப்பட்டதான பிலாத்துவின் முன்னிலையில், தேவதூஷணம் எனும் குற்றச்சாட்டிற்கு எவ்விதமான மதிப்பும் இருக்காது. ஆகையால் இராயனுக்குத் துரோகம் புரிந்தார் எனும் குற்றச்சாட்டானது பிலாத்துவுக்கு முன்வைக்கப்பட்டது; ரோம அதிகாரத்தை உண்மையாய்ப் பாதுகாப்பவர்கள் எனும் ஸ்தானத்தைப் பிரதான ஆசாரியர்களும், ஆலோசனை சங்கத்தினர்களும் மாய்மாலமாய் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் பிலாத்துவோ அவர்களது தந்திரத்தை அடையாளங்கண்டுகொண்டார். தனக்கு முன்பாக நிற்கும் கைதி, ஒரு குறிப்பிடத்தக்க மனிதன் மாத்திரமல்லாமல், அவர் (ரோம) சாம்ராஜ்யத்திற்கு அபாயகரமான சத்துரு இல்லை என்றும் பிலாத்து, மனித சுபாவம் குறித்து அறிந்துகொண்டிருந்த அனுபவத்தின் காரணமாக, ஒரு பார்வையிலேயே கண்டுகொண்டுவிட்டார்.

“நீர் யூதருடைய இராஜாவா?” என்று பிலாத்து நமது கர்த்தரிடத்தில் கேட்ட கேள்வியானது, பலத்தரப்பட்ட அர்த்தம் நிறைந்த, ஆர்வமிக்க ஒரு கேள்வியாகும். ஒருவேளை பிலாத்து (இயேசுவிடமிருந்து) அதிகாரம் மற்றும் ஆளுகை மற்றும் வல்லமை மற்றும் மகத்துவம் குறித்து உரத்தச் சத்தத்தினாலான (அ) அதிகாரப்பூர்வமான விதத்திலான ஏதேனும் வலியுறுத்துதலையாகிலும் எதிர்ப்பார்த்திருப்பாரானால் (அ) (பிலாத்துவாகிய) தன்னுடைய அனுதாபத்திற்கான (அ) கருணைக்கான ஏதேனும் வேண்டுகோளை (இயேசுவிடமிருந்து) எதிர்ப்பார்த்திருப்பாரானால் (அ) (இயேசு தமது) பயத்தை வெளிப்படுத்துவாரென எதிர்ப்பார்த்து இருந்திருப்பாரானால், இயேசுவின் பதிலானது பிலாத்துவுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்க வேண்டும். போதகர் எளிமையான மற்றும் சுருக்கமான வார்த்தைகளில், “நீர் சொல்லுகிறபடிதான்” என்று மாத்திரம் பதிலளித்தார்.

[R2313 : page 160]

யூத மூப்பர்களும், ஆசாரியர்களும் இயேசுவின் மீது குவித்திட்டதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கும், பழிகளுக்கும் இயேசு எந்தப் பதிலும் கொடுக்கவில்லை – “ஒரு வார்த்தைக்கூடக் கூறவில்லை.”

தம்முடைய வேளை வந்துள்ளது என்பதை இயேசு அறிந்திருந்தார்; அடிமண்டி வரையிலுமாக தாம் பானம்பண்ணுகிறதான கசப்பும், அவமானமும் நிறைந்த பாத்திரமானது, பிதாவால் அனுமதிக்கப்பட்டவை என்று இயேசு அறிந்திருந்தார்; அவருடைய சித்தமானது, முழுமையாய்ப் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதாய் இருந்தது; தம்மைக் குற்றப் பழியினின்று விடுவித்துக்கொள்வதற்கோ, பிரதான ஆசாரியர்களால் விரும்பப்பட்டதான மரணத்தீர்ப்பை எதிர்ப்பதற்கோ (அ) தவிர்த்துக்கொள்வதற்கோ அவருக்கு எந்த விருப்பமுமில்லை. தன்னுடைய சொந்த ஜீவனைத் தக்கவைத்துக்கொள்ளும் விஷயத்தில் ஒருவர் இந்தளவுக்குப் புறக்கணிப்பது, பிலாத்துவுக்கு வியப்பாய் இருந்தது; தமது சத்துருக்களை எதிர்ப்பதற்கும் மற்றும் தமது ஜீவனைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் எந்த முயற்சியையும் எடுத்துக்கொள்ளாத நமது கர்த்தரைக் கண்டு பிலாத்து ஆச்சரியமடைந்தாலும், (அவர்மேல் வைக்கப்பட்ட) குற்றச்சாட்டுகளானது அற்பத்தனமான கட்டுக்கதைகள் என்றும், கருத்தில் எடுத்துக்கொள்வதற்குப் பாத்திரமற்றவைகள் என்றும் கூடப் பிலாத்துத் தெளிவாய்க் கண்டுகொண்டார்; ஆகையால்தான் வழக்கமாய் ஒரு கைதியை விடுதலைப்பண்ணுகிற காலக்கட்டமாய், அக்காலம் இருந்தபடியால், இயேசு நீதியாய்க் குற்றஞ்சாட்டப்பட்டார் என்றும், நீதியாய்த் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டார் என்றும் குற்றஞ்சாட்டுகிறவர்கள் நினைத்துகொள்ளலாம், மற்றும் அதற்குப் பின்னர் இயேசு விடுவிக்கப்படுவார் என்று பிலாத்துக் கூறினார். ஆனால் தங்களது திட்டங்களானது தோல்வியடையப்போகின்றது என்ற எண்ணத்தினால் குற்றஞ்சாட்டினவர்கள் கோபமடைந்தார்கள் மற்றும் தங்கள் கைதி, தங்களிடமிருந்து தப்பித்துவிடுவாரோ என்று அவர்கள் அச்சமடைந்து, அக்கட்டளைக்கு எதிராகக் கூக்குரலிட்டு, ஜனங்களைத் தூண்டிவிட்டார்கள்.

ரோம தேசாதிபதியாகிய பிலாத்துவின் நாட்களில் காணப்பட்ட மற்றவர்களைப் போன்றும் மற்றும் இன்றுவரையிலுமாகக் காணப்படுகின்றவர்களைப் போன்றும், ரோம தேசாதிபதியான பிலாத்துவும் எளிதில் பயத்தினால் தாக்கத்திற்குள்ளாகுபவராகக் காணப்பட்டார்; அதிலும் விசேஷமாகச் சொப்பனங்களினால் ஒருவேளை ஏற்படும் பயத்தினால் தாக்கத்திற்குள்ளாகுபவராகக் காணப்பட்டார்; பிலாத்து இயேசுவுக்கு எதிராக செயல்படாதபடிக்கு அவரை எச்சரிக்கைப்பண்ணி, இயேசுவின் நிமித்தமாக, தான் சொப்பனத்தில் வாதிக்கப்பட்டதாகவும், பிலாத்துவின் மனைவியிடமிருந்து வந்த செய்தியின் நிமித்தமாக, இயேசுவை விடுவிக்க வேண்டும் என்று பிலாத்துத் தீர்மானித்தார். இதற்கேற்ப ஜனங்களுக்காக விடுவிக்கப்படப்போகின்றவர், ஒன்றில் இயேசுவாக இருப்பார் அல்லது நன்கு தெரிந்த கள்வனாகிய பரபாசாக இருப்பார் என்ற தனது தீர்மானத்தைப் பிலாத்துத் தெரிவித்தார். இயேசு அல்லது பரபாஸ் என்று முன்வைத்ததினால், பரபாஸ் என்பவன் விடுதலைப் பண்ணப்படுவதற்கு ஜனங்களால் விரும்பப்படாதவனானபடியால், இரண்டு பேரில் பரபாசுக்குப் பதிலாக இயேசுவை விடுவிக்கலாம் என்று யூதர்கள் இறுதியில் முடிவிற்கு வந்துவிடுவார்கள் என்று பிலாத்து நிச்சயமாய் எண்ணி இருந்திருக்க வேண்டும். ஆனால் பிலாத்துத் தவறாய் எண்ணி இருந்திருக்கின்றார்; மத வெறியர்களால் ஏவப்பட்டதான பகைமையானது, ஆழமானதாகவும், பொல்லாததாகவும் மற்றும் மிகுந்த அளவில் மனசாட்சியற்றதாகவும் காணப்பட்டது மற்றும் உடனடியாக பரபாஸ் தெரிவு செய்யப்பட்டார்; இதினிமித்தம் பிலாத்துப் பொறுப்பாளியாகிவிட்டார் மற்றும் இயேசுவும் தீர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டார்.

தேசாதிபதியோ இன்னும் சிக்கலுக்குள்ளானார். சிக்கலான சூழ்நிலையிலிருந்து வெளிவர முயற்சித்தபோது, அவர் திட்டமிடாமலேயே, தன்னை மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கினவராக, இயேசுவை என்ன செய்ய விரும்புகின்றார்கள் என்று விசாரித்தார். “அவரைச் சிலுவையில் அறையும்” என்ற இரத்தத்தை உறையப் பண்ணுகிறதான அவர்களது கூக்குரலானது, பிலாத்துவை ஆச்சரியப்படப்பண்ணினது மற்றும் அவர், “(இல்லை!) ஏன் என்ன பொல்லாப்புச்செய்தார்?” என்று கேட்டார். ஆனால் இந்த வழக்கு உறுதியற்றுப்போவதைக் கண்ட இரத்த பிரியராயிருந்த குற்றஞ்சாட்டுபவர்கள், “அவரைச் சிலுவையில் அறையும், அவரைச் சிலுவையில் அறையும்” என்று மிகவும் சீற்றத்துடன்/தீவிரமாய்க் கத்தி, ஒரு கலகத்தை உருவாக்கினார்கள் மற்றும் தாங்கள் கேட்டுக்கொண்டது நிறைவேற்றப்படவில்லையெனில், கலகம் பரவலாய் வெடிப்பதற்கான அபாயத்திற்குரிய வாய்ப்புள்ளது என்பதைப் பிலாத்துவின் மனதில் பதியவைத்திட இப்படியாக முயற்சித்தார்கள்.

பரிதாபத்திற்குரிய பிலாத்து! அவர் ரோம சாம்ராஜ்யத்திற்கான பிரதிநிதியாகவும், அதன் சார்பில் பேசுகிறவராகவும் காணப்பட்டார் மற்றும் எவ்விதத்திலாகிலும், ஒழுங்கை தக்கவைக்க வேண்டியவராகவும் காணப்பட்டார். கோரிக்கைகளுக்குப் பிலாத்து இணங்கினார், எனினும் அவர்கள் முன்னிலையில், அவர் தனது கைகளை அடையாளமாய்க் கழுவிக் கொண்டதன் மூலமும், “இந்த நீதிமானுடைய இரத்தபழிக்கு நான் குற்றமற்றவன், (என்னைப்போன்று இரத்தப்பழிக்கு நீங்கள் நீங்கலாகத்தக்கதாக) நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினதன் மூலமும், வழங்கப்பட்டுள்ளதான தீர்ப்பிலிருந்து தான் வேறுபட்டிருப்பதைப் பிலாத்துச் சுட்டிக்காட்டினார். இப்படியாகப் பொறுப்பை அவர்கள் மீது வைத்தபோது, அவர்களுடைய மனம் மாறும் என்று அவர் கண்டிப்பாய் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். அநேகமாக இதே ஓர் எண்ணத்தை மனதில் கொண்டுதான் (அ) அநேகமாகச் சிலுவையில் ஒருவர் அறையப்படுவதற்கு முன்னதாக, அந்நபர் முதலாவதாக வாரினால் அடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் காணப்பட்டப்படியால்தான், நமது அருமை மீட்பர், சிலுவையில் அறையப்படுவதற்கென ஒப்புக்கொடுக்கப்படுவதற்கு முன்னதாக, வாரினால் அடிக்கப்பட்டார்.

எதிர்ப்புக் குரலில், “இவர் இரத்தப்பழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக” என்ற அவர்களது கூக்குரலானது, பிலாத்துவின் அரமனை முழுவதுமாக ஒலித்தது மற்றுமாக பரலோக வாசஸ்தலத்திலும் எதிரொலித்தது மற்றுமாக அவர்களுக்கு எதிரான தெய்வீக நியாயத்தீர்ப்புக் குறித்தத் தீர்க்கத்தரிசனமாகப் பதிவு செய்யப்பட்டது. அந்தோ! பரிதாபத்திற்குரிய யூதர்கள்; என்ன நியாயந்தீர்த்தீர்களோ, அதினாலேயே நீங்கள் நியாயந்தீர்க்கப்பட்டீர்கள். நசரேயனுடைய உண்மையான பின்னடியார்கள் உங்களை ஒருபோதும் தாக்கவில்லை என்றாலும், அவரது பெயரளவிலான நண்பர்களோ, பிலாத்துவினுடைய வாரிசுகளுடைய கரங்களின் வாயிலாக உங்களை அடிக்கடி பழிக்குப்பழி வாங்கியிருக்கின்றனர். “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே இராஜா இல்லை” என்று நீங்கள் கூக்குரலிட்டீர்கள் மற்றும் உங்களது வார்த்தைகளைச் சர்வவல்லமையுள்ளவர் கருத்தில் எடுத்துக்கொண்டார். ஓ! பரிதாபத்திற்குரிய யூதர்களே, விசுவாசிக்கின்ற அனைவரையும் (தேவனுக்கு முன்பாக) பரிசுத்தமுள்ளவர்களாக்குகின்றதும், மனுக்குலத்தைப் போல உங்களுக்கும் பாவநிவாரண இரத்தமாக, இரத்தபலியாக இலவசமாய் அருளப்பட்டதுமான, அவரது இரத்தத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வதைத் தவிர, மற்றப்படி அவருடைய இரத்தப்பழி குறித்து நீங்களே உங்களுக்குக் கூறிக்கொண்டதான சாபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வழியில்லை. அது புது உடன்படிக்கையின் (முத்திரையாகும்) இரத்தமாகும்.

நம் நிமித்தமாக மிகவும் பொறுமையுடன் நமது அருமை மீட்பர் சகித்திட்டதான அவமானம் குறித்ததான விவரங்களானது மிகவும் உருக்கமானதாய்க் காணப்படுகின்றது மற்றும் வேறெந்த காரியத்தைக் காட்டிலும் இதை வாசிக்கையில்தான் அநேக இருதயங்கள் மனந்திரும்பியுள்ளது. இது நமது கர்த்தரையும், அவரது இரத்தமானது சாத்தியமாக்கின மீட்பையும் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டவர்களிடத்திலும், அதன் ஆற்றலை இன்னமும் இழந்து போகவில்லை; பாவிகளால் தமக்கு விரோதமாகச் செய்யப்பட்டதான இவ்விதமான மா விபரீதங்களைச் சகித்த அவரை நாம் ஒவ்வொரு முறையும் நோக்கிப்பார்க்கையிலும் மற்றுமாக இவைகளெல்லாம் (அவர் அனுபவிப்பதற்கு) அவருக்குப் பாத்திரமானவைகளல்ல, ஆனாலும் இவை நம் நிமித்தமான அவரது பலியினுடைய ஒரு பாகம் என்பதை நாம் நினைவுகூருகையிலும், இவைகள் நமது இருதயங்களைப் பக்குவப்படுத்துகின்றது. நாம் அவரது அடிச்சுவடுகளில் நடக்க நாடுகையில், கர்த்தரோடு ஒப்பிடும்போது, இலேசானதாயுள்ள உபத்திரவங்களைச் சகிக்கையில், நாம் மனதில் சோர்ந்து (அ) தளர்ந்து போகாதபடிக்கு, கிறிஸ்துவினுடைய சாந்தத்தையும், பொறுமையையும் மற்றும் பாடுகளையும், அதுவும் மிகவும் அநியாயமாய் அவரால் சகிக்கப்பட்ட பாடுகளையும், கர்த்தருடைய பின்னடியார்கள் அனைவரும் நோக்கிப்பார்க்க வேண்டும் என்று அப்போஸ்தலன் வலியுறுத்தி, இக்காரியம் தொடர்புடையதான மிகவும் அழுத்தமிக்க படிப்பினைகளில் ஒன்றைச் சுட்டிக்காண்பிக்கின்றார் (எபிரெயர் 12:3). இன்னுமாக அதே காரியத்தைக் கிறிஸ்துவினுடைய மற்றப் பாடுகள் தொடர்புடையதாகக் குறிப்பிடும் வகையில் அப்போஸ்தலன், நாம் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, நம் நிமித்தம் அவர் தரித்திரரானார் என்றும், நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாடுபட்டார் என்றும், நமக்காக அவர் தம்முடைய ஜீவனை விரும்பி வந்து, பலியாக ஒப்புக்கொடுத்தார் என்றும், “நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாய் இருக்கிறோம் என்றும் குறிப்பிடுகின்றார்.