R2429 (page 34)
நம்முடைய கடந்த வெளியீட்டில், இந்த வருடத்தின் எபிரெய ஆண்டுக்குறிப்பேடானது (calander) ஆதிக் கணக்கீடுமுறைமைக்கு இசைவாய் இல்லை என்று நாம் குறிப்பிட்டிருந்தோம் (மற்றும் நாங்கள் இதுபோன்ற சிக்கல்களை முன்பும் எதிர்க்கொண்டிருந்திருக்கின்றோம்). ஆகையால் இவ்விஷயம் குறித்து ரபி மேயர் (Rabbi Mayer) அவர்களைச் சந்தித்துப் பேசினோம். அவர் கொடுத்த விளக்கம் என்னவெனில், பஸ்காவிற்கு வேறுபாடற்ற தேதியைப் பெற்றுக்கொள்வதில் யூதர்கள் பெரும் சிரமமடைகின்றனர்; காரணம் ஜாமக்காரர்கள் அமாவாசையைக் கண்ட பிற்பாடு, அக்காரியமானது மலை உச்சியிலிருந்து தீச்சுடர் மூலம் சைகைக்காட்டப்பட வேண்டும் மற்றும் தூதுவர்கள் மூலம் பல்வேறு இஸ்ரயேல் இனத்தார்களிடம் செய்தி அனுப்பி வைக்கப்பட வேண்டும். இதன் காரணமாக 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக, நான்காம் நூற்றாண்டில் ஹில்லல்ஸ் ஆண்டுக்குறிப்பேடானது (Hillel’s Calander) ஏற்றுக்கொள்ளப்பட்டது மற்றும் இதுவே அதுமுதல் பின்பற்றப்பட்டு வருகின்றது.
பஸ்கா தேதி தொடர்புடைய விஷயத்தில் நாம் இரண்டு முக்கியமான காரியங்களை மனதில் கொண்டிருக்க வேண்டும்; அவை (1) “கிறிஸ்து” மரித்தவர்களில் முதற்பலனானார்” எனும் காரியத்திற்கான நிழலாக அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்கட்டுக்கொண்டுவரப்படுகிற காரியமானது, நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் நாளாகிய நீசான் 16-ஆம் தேதியில் நிகழத்தக்கதாக பஸ்காவானது இளவேனிற் சம இரவு பகல் நாளுக்குப் பிற்பாடு (எனினும் மிகவும் பிற்பாடல்ல) காணப்பட வேண்டும். (2) ஆட்டுக்குட்டியானது பௌர்ணமியன்று அடிக்கப்பட வேண்டும்; இந்தக் காரியமானது யூதர்களுக்கு நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழான நிறைவுள்ள தேவ தயவானது அங்கு முடிவுற்றதையும், பின்னர் அந்த ஜாதியார்: “இவர் இரத்தம் எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் இருப்பதாக” என்று வேண்டிக்கொண்டதற்கேற்ப, அவர்கள் புறக்கணிக்கப்பட்டதையும் மற்றும் நலிவுற்றதையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
எந்த மாதம், முதலாம் மாதம் என்று கணக்கிடும் விஷயத்தில் தீர்மானம் எடுக்கும் காரியமானது, இஸ்ரயேலுடைய மூப்பர்கள் வசத்தில், மேற்கூறப்பட்ட வரையறைகளுக்கு உட்பட்டுவிடப்படுகின்றது; மேலும் இவர்கள் நீசானைக் கணக்கிடுவதற்கென்று இளவேனிற் சம இரவு பகல் நாள் வருவது வரையிலும் மற்றும் அடுத்ததாக அமாவாசை வருவது வரையிலுமாக எப்போதும் காத்திருப்பதில்லை. (இப்படியாக செய்திருப்பார்களானால், இந்த வருடம் நீசான் மாதமானது ஏப்ரல் 11-ஆம் தேதி அன்று மிகவும் தாமதமாகி துவங்கியிருந்திருக்கும்). மாறாக எப்போது சமஇரவு பகல் நாளை எதிர்ப்பார்த்திடலாம் என்பதை இவர்கள் அறிந்திருந்தபடியால், அறுவடையின்போதும், சம இரவு பகல் நாளுக்குப் பிற்பாடும் தோன்றும் பௌர்ணமிக்கு முந்தின அமாவாசையின் நிகழ்வினை இவர்கள் இந்த முதலாம் மாதத்தினுடைய துவக்கமாகவும், தங்களது வருடத்தினுடைய துவக்கமாகவும் ஏற்றுக்கொள்கின்றனர். நிச்சயமாகவே இதுவே நாமும் பின்பற்ற வேண்டிய கோட்பாடாகும்.
இந்தக் கோட்பாடைப் பின்பற்றுகையில், இந்த வருடம் சம இரவு பகல் நாளைத் தொடரும் பௌர்ணமியானது மார்ச் 27-ஆம் தேதியிலாகும்; மற்றும் இதுவே நீசான் 14- ஆம் தேதியும், நமது கர்த்தருடைய மரணத்தின் ஆண்டு நிறைவு நாளுமாகும்; யூதருடைய கணக்கிடுதலின்படி 14-ஆம் தேதியானது மார்ச் 26-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமையன்று, மாலை 6 மணிக்குத் துவங்குகின்றது; அதாவது கடைசி இராப்போஜனத்தினுடைய ஆண்டு நிறைவு நாளாகும். இதை வைத்துப்பார்க்கையில், நமது கடந்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியும், யூத தேதியும் தவறாகும் மற்றும் இத்தனை சீக்கிரமாய் இதைத் திருத்தம் செய்வதற்கான வாய்ப்பிற்காக நாங்கள் மகிழ்கின்றோம்.
ஆண்டுக்குறிப்பேடானது (Almanac), அமாவாசைக்கான தேதியினை மார்ச் 11-ஆம் தேதி என்று கொடுத்திருப்பதைச் சிலர் கவனித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை; ஆனால் இந்தத் தேதியிலிருந்து 14-நாட்கள் எண்ணப்பட்டால், அந்நாளானது பௌர்ணமிக்கான நாளாய் இருப்பதில்லை. ஆகையால் இருண்ட நிலவை (dark moon), அமாவாசை (New Moon) என்று எடுத்துக்கொள்வதற்குப்பதிலாக, யூதர்கள் நிலவு சிறிதளவு கண்களுக்குத் தெரியும்வரை காத்திருந்து, அதிலிருந்து தேதியைக் கணக்கிட்டார்கள் என்று நாம் கருதுகின்றோம். ஆகையால் இப்பொழுது கணக்கிட்டுப் பார்க்கும்போது, அமாவசையானது (New Moon) மார்ச் 13- ஆம் தேதியின் இரவும், மார்ச் 14-ஆம் தேதியின் காலையுமான வேளையில், கண்களுக்குச் சிறிது தெரியும் நிலாவாகக் காணப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படலாம்; அன்றே நீசான் 1 -ஆம் தேதி ஆகும்.