R3895 – எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3895 (page 363)

எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்

AS DECEIVERS AND YET TRUE

லூக்கா 23:13-25

“இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை என்றார் பிலாத்து.” லூக்கா 23:14

“இருள் ஒளியைப் பகைக்கின்றது” என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகளானது, அவருடைய விஷயத்திலும் சரி, இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதிலுமுள்ள அவரது அடிச்சுவட்டைப் பின்தொடரும் பின்னடியார்களின் விஷயத்திலும் சரி உண்மையென நிரூபணமாகியுள்ளது. இவ்வார்த்தைகளுக்கான உதாரணமாக, நமது கர்த்தர் பிலாத்து மற்றும் ஏரோதின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு மற்றும் பல்வேறு விதத்தில் கொடுமைப்படுத்தப்பட்டச் சம்பவங்கள் தொடர்புடைய அனைத்தையும் இப்பாடத்தில் நாம் காணலாம் மற்றும் இதே காரியங்களை அவரது உண்மையான பின்னடியார்களின் விஷயத்திலும் நாம் பொருத்திப்பார்க்கலாம். இச்சமயத்தின்போதான அவரது அனுபவங்களில், “உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்!” என்ற நமது கர்த்தருடைய மற்றொரு வாக்கியத்திற்குக்கூட உதாரணம் காணப்படுகின்றது (மத்தேயு 6:23). “எவ்விதத்திலும் (நன்மை) மிகுதியாயிருக்கிறது” என்று அப்போஸ்தலர் குறிப்பிட்டுள்ளது போன்று, யூத ஜனங்கள் ஓரளவுக்கு வெளிச்சம் உடையவர்களாகக் காணப்பட்டனர் (ரோமர் 3:2). எனினும் நமது கர்த்தருடைய சத்துருக்களின் மத்தியில் மிகவும் வெறித்தனமாக/ மூர்க்கத்தனமாகக் காணப்பட்டவர்கள் பிரதான ஆசாரியர்களும், அதிகாரிகளும் மற்றும் இவர்களால் தூண்டிவிடப்பட்ட யூத ஜனக்கூட்டத்தினரும் ஆவார்கள்; இந்தப் பிரதான ஆசாரியர்களும், அதிகாரிகளும் தங்களுடைய கல்வி அறிவின் நிமித்தமும், பாசாங்கான பக்தியின் நிமித்தமும், “மோசேயின் ஆசனத்தில் உட்காரும்’ அதிகாரப்பூர்வமான ஸ்தானத்தின் நிமித்தமும் சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பை உடையவர்களாகக் காணப்பட்டனர். இவர்களுடைய இருள் எவ்வளவு அதிகமாய் இருக்கின்றது; இவர்களது நீதி எவ்வளவு தவறான அர்த்தம் கொண்டதாய்க் காணப்படுகின்றது; இவர்களிடத்தில் எந்தவிதமான அன்பும் எவ்வளவாய் இல்லாதிருந்தது. இவர்கள் மனுஷர் மத்தியில் தேவனையும், அவரது இராஜ்யத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பாத்திரமற்றவர்கள் என்றும், ஆகையால் இவர்கள் தள்ளிவிடப்படுவார்கள் என்றும், ஆவிக்குரிய இஸ்ரயேல் எனும் ஒரு வகுப்பார் மேசியாவின் பங்காளிகளாக, அவரது மணவாட்டிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றுமுள்ள தெய்வீகத் தீர்மானங்களில் விளங்கும் ஞானத்தை, இவர்கள் எவ்வளவு அருமையாக முழுமையாய் நிரூபித்துக்காட்டிவிட்டார்கள். இன்றும் இப்படியாகவே இருக்கின்றதல்லவா? இவர்களைப் போன்று, இன்றும் இந்த யுகம் முழுவதிலும் ஒரு வகுப்பார் காணப்படுகின்றார்கள் அல்லவா? அதாவது தேவனையும், மாம்சத்திலுள்ள கிறிஸ்துவின் அங்கங்களில் பிரதிநிதித்துவப்படும் அவரது அபிஷேகம் பண்ணப்பட்டவரையும் எதிர்க்கும் ஒரு வகுப்பார் இன்றும், இந்த யுகம் முழுதிலும் காணப்படுகின்றார்கள் அல்லவா? ஆம் இருக்கின்றார்கள்; ஒட்டுமொத்த உலகமும் எதிராளியானவனுடைய குருடாக்கும் தாக்கத்தின் கீழ்க் காணப்பட்டு, வெளிச்சத்தையும், சத்தியத்தையும், வெளிச்சத்தின் பிள்ளைகளையும், சத்தியம் பிரகடனப்படுவதையும் எதிர்க்கின்றதாய் இருப்பினும், பெயர்க்கிறிஸ்தவ மண்டலத்தாரும், அவளது (Doctors of Divinity) வேதசாஸ்திரிகளுந்தான் பிரதானமாய் எதிர்க்கின்றவர்களாகவும், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கும், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் உண்மையான அங்கத்தினர் அனைவருக்கும் எதிராக “சிலுவையில் அறையுங்கள்! சிலுவையில் அறையுங்கள்!” என்று கூக்குரலிடுகின்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இப்படியாகச் செயல்படுகின்றவர்கள் தொடர்புடைய விஷயத்தில், அவர்கள் துணிகரமான குற்றம் புரிந்துள்ளார்கள் என்று சொல்லுமளவுக்கு, அவர்கள் போதுமான அளவுக்கு வெளிச்சம் பெற்றிருக்கவில்லை என்று அப்போஸ்தலராகிய பேதுரு வலியுறுத்துவதால், நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இயேசுவைப் பழிதூற்றினவர்களையும், அவரை உண்மையாய்ச் சிலுவையில் அறைந்து போட்டவர்களையும் குறித்து அப்போஸ்தலர், “சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன்” (அப்போஸ்தலர் 3:17) என்று குறிப்பிடுகின்றார். இந்த யுகம் முழுவதிலும் கிறிஸ்துவின் சரீரத்திற்கு எதிரான பெரும்பான்மையான எதிர்ப்புகளானது, குருடான நிலைமையிலும், அறியாமையிலும் செய்யப்பட்டன என்று கர்த்தரினால் கருதப்படும் என்பது நமக்கு நிச்சயமே. நம்முடைய சத்துருக்களை அன்புகூருவதற்கும், நம்மைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நன்மை செய்வதற்கும், அப்படிப்பட்டவர்களுக்காய் ஜெபம் பண்ணுவதற்குமான இருதய நிலைமையில் நாம் காணப்பட வேண்டும்; மேலும் கர்த்தருடைய ஆசீர்வாதமான இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போதும், கர்த்தரைப்பற்றின தெளிவான அறிவு [R3895 : page 364] பூமியை நிரப்பிக் காணப்படும்போதும், இந்தக் குருடரான மற்றும் கடுமையான சத்துருக்களில் அநேகர்/அனைவரும் தங்களது புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்பெற்று, தேவனுடைய மகிமையை அறிக்கைப்பண்ணும் நாவையும், அவருக்கு முன் முடங்கி பணியும் முழங்கால்களையும் உடையவர்கள் மத்தியில் காணப்படுவார்கள் என்ற நல் நம்பிக்கையையே நாம் உடையவர்களாய் இருக்கின்றோம்.

பிலாத்துவின் முன்னிலையில் இயேசு

நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட நாளினுடைய காலை வேளையில், சுமார் 8 மணி அளவில், நமது கர்த்தர் பிலாத்துவுக்கு முன்பாக அழைத்து வரப்பட்டார். இதற்கும் அதிகாலமே யூத ஆலோசனை சங்கத்தார் கூடிக்கொண்டு, இரவு வேளையில் பிரதான ஆசாரியனுடைய விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டக் குற்றச்சாட்டுகளை அங்கீகரித்தனர்; அதாவது இயேசு தேவனுக்கும், அவருடைய நாட்டிற்கும் எதிராக தேவதூஷணமும், துரோகமும் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டைக் கூட்டங்கூடி அங்கீகரித்தனர். இந்தக் குற்றச்சாட்டானது, இயேசு பிரதான ஆசாரியன் முன்பு, தாம் தேவனுடைய குமாரனாகிய மேசியா என்று ஒப்புக்கொண்டதன் வாயிலாக நிரூபணமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இயேசுவின் நிமித்தமாக அவர்கள் வெட்கமடைந்தார்கள் மற்றும் இப்படியான ஓர் இராஜாவை, ஒரு மேசியாவை, ஓர் இரட்சகரை அவர்கள் விரும்பவில்லை. நமது கர்த்தர் கைதுச் செய்யப்பட்டக் காரியமானது/செய்தியானது பட்டணத்தினுடைய ஜனங்களுக்கு எட்டி, மிகப்பெரிய கிளர்ச்சி ஏற்படுவதற்கு முன்பும், இயேசுவின் நண்பர்களில் சிலர் அவரைப் பாதுகாக்க முற்படுவதற்கு முன்பும், இயேசுவைக் கைதுச் செய்தவர்கள் நேரமே, பிலாத்துவினுடைய அரமனைக்குச் சென்றார்கள்.

கைதியைப்பற்றி பிலாத்து சில நொடிகளிலேயே கிரகித்துக்கொண்டார். யூத ஆலோசனைச் சங்கத்தினர் நமது கர்த்தர் இயேசு மீது செலுத்திட்டக் குற்றச்சாட்டுகளிலிருந்து முற்றிலும் மாறான குற்றச்சாட்டுகளானது, நமது கர்த்தருக்கு எதிராக பிலாத்துவின் முன்னிலையில் வைக்கப்பட்டது. அவை மூன்றாகும்: (1) கலகவாதியாக இருந்து, கிளர்ச்சியை உண்டுபண்ணி ஜனங்களை, அதிகாரத்தை எதிர்ப்பதற்கு நேராக இயேசு வழிநடத்தியுள்ளார் என்றும், (2) ஜனங்கள் இராயனுக்கு வரி கொடுக்கக்கூடாது என இயேசு போதித்தார் என்றும், (3) தாம்தான் வரிகள் பெற்றுக்கொள்வதற்குப் பாத்திரமான இராஜாவாய் இருக்கின்றார் என இயேசு கூறியுள்ளார் என்றுமுள்ள குற்றச்சாட்டுகளேயாகும். குற்றச்சாட்டுகள் உண்மையற்றவைகளாக இருந்தபடியினால், பிலாத்து உடனடியாக, குற்றச்சாட்டுகளைத் தொகுத்திட்ட யூத அதிகாரிகளுடைய பகைமையைக் கிரகித்துக்கொண்டார். ரோம அரசாங்கத்தினுடைய அரசியல் அதிகாரத்திற்குப்பதிலாக, யூத அதிகாரிகளுடைய மத அதிகாரமே அபாயத்தில் இருப்பதைப் பிலாத்துக் கண்டுகொண்டார். வாசலுக்கு வெளியே காணப்பட்ட ஜனக்கூட்டத்தினர், அவர்கள் மதப்போதகர்களுடைய தூண்டுதலினால், கட்டுப்பாடற்றவிதத்தில் குற்றச்சாட்டுகளைக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர். இயேசு எதுவும் கூறாமல் காணப்பட்டார்; ஆகவே இயேசு தமக்காக வாதிட திறமிக்கவர்போன்று வெளிப்படையாகத் தென்பட்டபோதிலும், அவர் அமைதலுடனும், மனதை/தம்மை அடக்கின நிலையிலும், எதிர்க்காமலும், பழியினின்று விடுவித்து தம்மைத் தற்காத்துக்கொள்ள முயலாமலும் இருப்பதைக்கண்டு, பிலாத்து ஆச்சரியமடைந்தார். இயேசுவை விடுவிப்பதற்கு அல்லது ஜனங்களுடைய விருப்பத்தின்படி அவரைத் தண்டிப்பதற்குத் தன்னிடத்தில் அதிகாரம் இருக்கின்றது என்பதை இயேசு அறிந்திருக்கவில்லையா என்று கூடப் பிலாத்து இயேசுவிடம் வினவினார். நமது கர்த்தருடைய பதிலானது சாந்தமான ஒன்றாகும்; அதாவது பரம் பிதாவினால் அனுமதிக்கப்பட்டால் ஒழிய, மற்றப்படி பிலாத்துவுக்குத் தம்மேல் எவ்விதமான அதிகாரமும் இருப்பதில்லை என்று இயேசுவின் பதில் காணப்பட்டது. ஆ! இதுவே நமது கர்த்தருடைய மன அமைதிக்கான இரகசியமாகும். இயேசு தம்முடைய ஜீவியத்தையும், தம்முடைய அனைத்தையும் ஒப்புக்கொடுத்துள்ளார்; தம்முடைய அனைத்துக் காரியங்களையும் அவர் பிதாவினிடத்திற்கு ஒப்புக்கொடுத்துள்ளார்; அவருக்குப் பிதாவினுடைய அன்பிலும், ஞானத்திலும் நம்பிக்கை இருந்தது, ஆகையால் அவர் பிதா தமக்கு ஊற்றின பாத்திரத்தில் பானம்பண்ண விருப்பமுள்ளவராகவும், தம்மை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதிலும், அந்த வேலையை நிறைவேற்றுவதிலும் களிகூருகிறவராகவும் காணப்பட்டார். இப்படியாகவே இந்த யுகம் முழுவதிலுமுள்ள கர்த்தருடைய பின்னடியார்களும் காணப்பட வேண்டும்; அதாவது அவர்கள் எந்தளவுக்கு தங்களது அர்ப்பணிப்பைப்பற்றி முழுமையாய் உணர்ந்துக்கொள்கின்றார்களோ மற்றும் இருதயத்தில் அவருடைய ஆவியினால் நிரப்பப்பட்டு மற்றும் பிதாவின் சித்தத்திற்கு அன்புடன்கூட ஒப்புக்கொடுக்கின்றார்களோ, அவ்வளவாய் அவர்கள் மிகவும் கடுமையான மற்றும் சோதனையான வேளைகளில் அமைதல் உள்ளவர்களாகக் காணப்படுவார்கள்; மேலும் இதினிமித்தமாக அவர்களது மன அமைதியையும், அவர்கள் தங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதையும், எல்லாப்புத்திக்கும் எட்டாத மேலான தேவ சமாதானம் அவர்களது இருதயத்தை ஆளுவதையும் உலகத்தார் கண்டு ஆச்சரியப்படுவார்கள்.

இயேசுவுடனான தனது சுருக்கமான சம்பாஷணையை முடித்துவிட்டு, பிலாத்து ஜனங்கள் கூடிக்காணப்படும் தனது அரமனையினுடைய முற்றத்து வாசலுக்கு வந்து, “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்று வெளிப்படையாகவே அறிக்கையிட்டார். யூத அதிகாரிகளோ ஏமாற்றமடைந்தவர்களாக, எங்கே தங்களது கைதி (இயேசு) தங்களிடமிருந்து தப்பித்துக்கொள்வாரோ என்ற அச்சத்தினால் மிகவும் ஆத்திரமடைந்தவர்களாக, தீர்ப்பில் அதிருப்தியடைந்ததைத் தெரியப்படுத்தும்படிக்கு, ஜனக்கூட்டத்தாரைத் தூண்டிவிட்டார்கள். பிலாத்து தனது தீர்ப்பை வழங்கிவிட்டார் மற்றும் அதனை மாற்றுவதற்கும் அவருக்கு மனதில்லை; எனினும் பொதுஜனங்கள் மற்றும் செல்வாக்குமிக்க அதிகாரிகளுடைய கோபத்தின் முன்னிலையில் இயேசுவை விடுதலைப்பண்ணிட பிலாத்துத் தயங்கினார். கலிலேயா பற்றின ஏதோ சில வார்த்தைகள் பேசப்பட்டதைத் தற்செயலாக பிலாத்துக் கேட்க, இயேசு கலிலேயனா என்று பிலாத்து விசாரித்தார் மற்றும் அதை உறுதிபடுத்தின பிற்பாடு, “இம்மனுஷன் கலிலேயனாக இருக்கின்றபடியால் நான் இவரை, எருசலேமிலே வந்திருக்கின்ற ஏரோதுவினிடத்திற்கு அனுப்புகின்றேன்” என்றார். பின்னர் நமது கர்த்தர் ரோம போர்வீரர்களுடைய குழுமத்துடன் பகீரங்கமாக, ஏரோதுவினிடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்; இந்த ஏரோது நமது கர்த்தரைச் சந்திக்க ஆவலாய்க் காணப்பட்டார்; இயேசுவைக் குறித்து அநேகம் காரியங்களைக் கேள்விப்பட்டிருந்த ஏரோது, ஒருவேளை தன்னால் சிரைச்சேதம் பண்ணப்பட்ட யோவான் ஸ்நானன்தான், மரணத்திலிருந்து உயிரோடு எழுந்து இயேசுவாக வந்துள்ளாரோ அல்லது இல்லையோ என்று யோசனைப் பண்ணிக்கொண்டு காணப்பட்டார். ஆனால் ஏரோது இயேசுவிடம் கேள்விகள் கேட்டப்போது, இயேசு ஒரு பதிலும் கொடுக்கவில்லை. பேச வேண்டிய தருணங்களும் உள்ளன மற்றும் அமைதிக்காக்க வேண்டிய தருணங்களும் உள்ளன மற்றும் நமது கர்த்தர் இயேசு தமது சூழ்நிலைகளைத் தம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டிருந்தார். ஏரோதினிடத்தில் அவர் ஒருவேளை ஏதாகிலும் கூறியிருப்பதைக் காட்டிலும், அவர் அமைதலுடன் காணப்பட்டதே மிகவும் ஆற்றல்மிக்க காரியமாய் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இயேசுவின் இந்த அமைதியின் நிமித்தம் ஏரோது சினமடைந்திருப்பார் என்பது உறுதி என்றாலும், ஏரோது அதை வெளிப்படுத்தி, தன்னை அவமானப்படுத்திக்கொள்ளத் துணியவில்லை. ஆகவே தன்னுடைய போர்ச்சேவகர்களில் சிலரைக் கொண்டு, இயேசுவுக்கு மினுக்கான வஸ்திரம் உடுத்தவும், கேலியாக அவரை வணங்கவும் அனுமதிப்பதன் மூலம், ஏரோது திருப்தியடைந்தான். இயேசு ஒரு போலி என்றே ஏரோது கருதினார் மற்றும் தாம் இராஜா என்று இயேசுவினால் உரிமை பாராட்டிக்கொள்ளப்படும் விஷயங்கள் கேலிக்கு இடமானவைகள் என்று ஏரோது கருதினார் என்பதிலும் ஐயமில்லை. இயேசு குற்றமற்றவர் என்றே ஏரோதினுடைய தீர்ப்புக் காணப்பட்டது. மரணத் தண்டனைக்கு ஏதுவான குற்றம் எதுவும் கைதியினிடத்தில் தன்னால் காணமுடியவில்லை என்று அறிவித்துக் கைதியைப் பிலாத்து ஏரோதிடத்திற்கு ஒப்படைத்தது போன்று, ஏரோதும் கைதியை பிலாத்துவினிடத்திற்கு மீண்டும் (விசாரித்துவிட்டு, தீர்ப்புக் கூறி) அனுப்பி வைத்தார். பிலாத்துத் தன்னிடத்திலேயே மீண்டும் இயேசுவின் வழக்கு வந்துள்ளதைக்கண்டு, பிரதான ஆசாரியர்களையும், ஜனங்களுடைய அதிகாரிகளையும் அழைப்பித்து, “அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே. ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்” (லூக்கா 23:14-16).

பிலாத்துவினுடைய தவறுக்காகக் காரணம் காட்டுகின்றோம்

அநேகர் பிலாத்துவினுடைய கொடூரத்தன்மையின் நிமித்தம், அவரைப் பழித்துரைப்பதுண்டு; பிலாத்து ஒரு பொல்லாத மனிதன் என்றும், தன்னுடைய தீர்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட விருப்பமற்றவர் என்றும் அநேகர் கூறுகின்றனர்; இன்னுமாக இயேசுவைத் தண்டிக்கும்படியான இவருடைய கருத்தானது மேற்கூறிய இந்தப் பெலவீனங்களுடைய வெளிப்படுத்தலே என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர்; இன்னுமாக இயேசுவில் குற்றம் எதுவும் இல்லையெனில், நீதியானது இயேசுவுக்கான மரணத் தண்டனையை மாத்திரமல்லாமல், இயேசு சவுக்கினால் அடிக்கப்படுவதையும் தடைப்பண்ணியிருக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பிலாத்துவுக்கு அநீதியே இழைக்கப்பட்டுள்ளது. பிலாத்து ஒரு புறஜாதி ஆவார்; மேசியாவுக்கான யூதருடைய எதிர்ப்பார்ப்பின் மீது எவ்விதமான நம்பிக்கையும் அற்றவர் மற்றும் [R3895 : page 365] யூதர்களுக்கு மதிப்பும் கொடுக்காதவர் ஆவார்; யூதர்களைக் கலகம்பண்ணுகிற ஜனங்களாகவே கருதினார்; இவர்களை ஒழுங்குமுறையுடன் ரோம பேரரசினுடைய ஆளுகையின் கீழ் வைப்பதற்கென்று பிலாத்து அங்குப் பணி அமர்த்தப்பட்டார். கண்ணுக்குத் தெரியாத அநேக தெய்வங்கள் இருப்பினும், ரோம சக்கரவர்த்தியே, அதாவது இராயனே தெய்வங்களின், கண்ணுக்குத் தெரிகின்ற பிரதிநிதி என்றும், இராயனுடைய கனமும், அதிகாரமும், மதிப்பும் எவ்விதத்திலும் தக்கவைக்கப்பட வேண்டும் என்றும் பிலாத்துக் கருதிக்கொள்ளத்தக்கதாகவே, அவருக்கான ஜீவியத்தின் பயிற்சிகள் காணப்பட்டன. நீதி செய்வதற்காக அல்லாமல், மாறாக ஒழுங்கை தக்கவைத்துக்கொள்வதற்கும், தெய்வீகத் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கோ, அதனை நடந்தேற்றுவதற்கோ அல்லாமல், மாறாக ரோம சாம்ராஜ்யத்தினுடைய அதிகாரத்தினுடைய பிரதிநிதியாக இருந்து, அந்த அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்குத்தான் எருசலேமில் ரோமினுடைய பிரதிநிதியாக பணி அமர்த்தப்பட்டுள்ளார் என்று பிலாத்து நன்கு அறிந்திருந்தார். ரோமுக்கான மரியாதை தக்க வைக்கப்படுவதற்கும் ரோமுக்கான மதிப்பு அடையப்பெறுவதற்குமென ஒவ்வொரு வருடமும் ஒருவேளை பல ஆயிரம் நிரபராதிகள் கஷ்டம் அனுபவித்தால், இதனால் ரோமுக்கு என்ன கஷ்டம்? ஒருவேளை யூதர்கள் மத்தியிலான ஏதேனும் அநீதியான காரியமானது, அவர்களை ரோமுக்கு உண்மையற்றவர்களாக இருப்பதற்குத் தூண்டுமாயின், ரோமின் அதிகாரம் உறுதியாய் நிலைநாட்டப்பட்டிருக் கத்தக்கதாக அந்த அநீதி சரிச்செய்யப்படும்; ஆனால் யூத அதிகாரிகளும், ஜனங்களும் யாருக்கேனும் அல்லது ஏதேனும் காரியத்திற்கு எதிராக கைக்கோர்த்துக்கொண்டு, ரோமுக்கான தங்களது உண்மையை மெய்ப்பித்துக் காட்டுவார்களானால், ரோமுக்குப் பிரதிநிதியாக அமர்த்தப்பட்டிருக்கும் பிலாத்து, [R3896 : page 365] ஜனங்களின் விருப்பத்திற்கு இணங்கி, ஒழுங்கையும், அமைதியையும் தக்கவைக்க வேண்டுமென்றே ரோம சக்கரவர்த்தியும், அவரது அவை உறுப்பினர்களும் எதிர்ப்பார்ப்பார்கள். நமது கர்த்தருடைய தனிச்சிறப்பைப் பிலாத்து உணர்ந்து அதினிமித்தம் கொண்டிருந்த மதிப்பினால் அல்லது முந்தின இரவில் பிலாத்துவின் மனைவி கண்ட சொப்பனத்தினுடைய தாக்கத்தினால்தான், இயேசுவை விடுவிப்பதற்கு, பிலாத்து யூத அதிகாரிகளுடன் போராடினார். பிலாத்துவின் ஸ்தானத்தில் காணப்படும் அநேக நபர்கள், அநேகமாக தங்களது கட்டுப்பாட்டின் கீழ்க் காணப்படுபவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர்களைப் பிரியப்படுத்துவதற்கென இயேசுவை மரணத்தண்டனைக்கு ஒப்புக்கொடுத்திருப்பார்கள்; அதாவது, “யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்த” சம்பவத்தில் ஏரோது நடந்துகொண்டது போன்று நடந்து கொண்டிருந்திருப்பார்கள். (அப்போஸ்தலர் 12:2,3)

சவுக்கினால்/வாரினால் அடிக்கப்பட்டச் சம்பவம் பின்வரும் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்பட வேண்டும்; அதாவது பிலாத்து தனது அரமனையின் வாசலில் காணப்பட்ட கும்பலின் கலக ஆவியைத் தணித்திடவே விரும்பினார்; ஒருவேளை இயேசு தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதைக் காட்டிலும் வாரினால் அடிக்கப்பட்டு இப்படியாக அவமானப்படுத்தப்பட்டாலே ஜனங்கள் அநேகமாக நன்கு திருப்தியடைந்து, காரியத்தை விட்டுவிடுவார்கள் என்றே பிலாத்துக் கருதினார். ஆகவே கெட்ட நோக்கத்தினால் அல்லாமல், மாறாக பிலாத்து நல்ல நோக்கத்துடனே இயேசு வாரினால் அடிக்கப்படும்படிக்குச் செய்தார் என்று பிலாத்துவைக் குறித்து உயர்வாகவே நாம் கருதுகின்றோம்.

பொது மக்களினுடைய கருத்தின்படி, பரபாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டான்

வருடத்தினுடைய அந்தத் தருணத்தின்போது, பெருந்தன்மையின் வெளிப்படுத்துதலாகவும், அத்தருணத்தில் நிலவும் மகிழ்ச்சியுடன்கூட, இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சி காணப்படத்தக்கதாகவும், ஒரு கைதியை விடுதலைச் செய்வது ரோம அரசாங்கத்தினுடைய வழக்கமாக இருந்தது. பிலாத்து இதனை அவர்களுக்கு நினைவுப்படுத்திக்கொண்டு, இயேசுவை வாரினால் அடித்தப் பிற்பாடு, தான் விடுதலைப் பண்ணப்போகும் கைதி இயேசு ஆவார் என்று குறிப்பாகச் சொன்னார்; ஆனால் பிலாத்துவினுடைய இந்தக் கருத்துக்கு எதிராக, ஜனக்கூட்டத்தினர் ஒரே குரலாக, “இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். ஜனங்கள் இப்படிச் சத்தமிடுவதற்குப் பிரதான ஆசாரியர்களும், அதிகாரிகளும் காரணம் என்பதில் நமக்கு ஐயமில்லை; ஜனங்களை இவர்கள் இயேசுவுக்கு எதிராக தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தார்கள். யூதர்களைப்பற்றி நாம் எண்ணிப்பார்க்கும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் இருதயத்தின் நிலைமை நம்மைத் திகைக்கவே வைக்கின்றது. பரபாஸ் என்பவன் உண்மையில் கலகவாதியாவான் மற்றும் கொலைபாதகத்தின் நிமித்தம் அவன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்; இவனையே ஜனங்கள், இயேசுவுக்கு எதிராக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்! உண்மையில் இவர்கள் தங்களுடைய இருதயத்தின் கொலை பாதக நிலைமையை வெளிப்படுத்தினார்கள்; வெளித்தோற்றத்தில் இவர்கள் ஒழுக்கமுள்ள ஜனங்களாகவும், நியாயப்பிரமாணத்தை மதிக்கிறவர்களாகவும் இருந்திட்டாலும், உள்ளிலோ எதிராளியானவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டவர்களாகவும், வெளிச்சத்ததையும், வெளிச்சத்தைச் சுமந்து வந்த மா பெரியவரையும் பகைக்கிறவர்களாகவும் காணப்பட்டனர். இதுபோலவே இந்தச் சுவிசேஷயுகம் முழுவதிலும், எப்போதும் கலகவாதிகளும், கொலை பாதகர்களும் உயர் ஸ்தானங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றாலும், பரிசுத்தவான்கள் அபூர்வமாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சுமார் 19 நூற்றாண்டுகள் கடந்து சென்றுள்ள இன்றைய காலங்களிலும் கூட மற்றும் உலகத்தின் பெரும்பான்மையான நாகரிகமான பாகங்கள் கிறிஸ்தவமண்டலம் என்று அழைக்கப்பட்டாலும் கூட, இப்பொழுது ஒருவேளை நமது கர்த்தர் தம்மை இராஜாவென முன்வைப்பாரெனில், அவர் புறக்கணிக்கப்படுவார் என்பதிலும், இன்னுமாக அவருக்குப் பதிலாக ஒரு கொலைபாதகன் தேர்ந்தெடுக்கப்படமாட்டான் என்றாலும், கொலைபாதக ஆவியும், உலகத்தின் ஆவியும், எதிராளியானவனின் ஆவியும், அதாவது அப்போஸ்தலர் குறிப்பிடுகிறதுபோல மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகளாகிய பகைமையிலும், துர்க்குணத்திலும், பொறாமையிலும், சண்டைச் சச்சரவுகளிலும் அடிக்கடி வெளிப்படும் எதிராளியானவனுடைய ஆவியும் கொண்டுள்ளவரே நிச்சயமாய்த் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதிலும் நமக்கு உறுதியே. சீஷன் தனது ஆண்டவரிலும் பெரியவன் அல்ல; மேலும் சீஷன் எந்தளவுக்குத் தன்னுடைய ஆண்டவருக்கு இருதயத்தில் ஒத்திருக்கின்றானோ, அவ்வளவாய் அவன் தற்காலத்தில் எவ்விதமான மிகுந்த கனம் மற்றும் மதிப்பு மிக்க ஸ்தானங்களுக்குள் தான் தள்ளப்படாதபடிக்கு பார்த்துக்கொள்கின்றவனாய் இருப்பான். நாம் எந்த விதத்திலும் கனமிக்க ஸ்தானங்களில் அமர்ந்திருப்பவர்களைப் பழித்துக் கூறுவதில்லை. பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க நல்ல மற்றும் தலைச்சிறந்த நபர்கள் சிலர் உயர் கனமிக்க ஸ்தானங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று நாம் நம்புகின்றோம், ஆனாலும் இப்படியாக அபூர்வமாகவே காணப்படுகின்றது. எனினும் ஒரு நல்ல குடிமகனுக்கும், நல்ல அதிகாரிக்கும், நல்ல மனுஷனுக்கும் மற்றும் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் பின்னடியானாகிய பரிசுத்தவானுக்கும் மிகுந்த வித்தியாசம் உள்ளது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். தேவனுடைய கிருபையினால், நாம் ஆண்டவருடனே காணப்பட வேண்டும் என்று தீர்மானிப்போமாக; இப்படியாக காணப்படும்போது நாம் பிரபலமற்றவர்கள் ஆகுவோம் என்றும், அவமானப்படுத்தப்படுவோம் என்றும், இகழ்ச்சிக்குள்ளாகுவோம் என்றும், தீமை அனுபவிப்போம் என்றும் எதிர்பார்ப்போமாக மற்றும் இதுவே அவருடைய சிலுவையில், நமக்கான பங்காகக்காணப்படும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம்; சிலுவையைச் சுமப்பவர்கள் மாத்திரமே, கிரீடத்தை அணியமுடியும் என்பதையும் நாம் நினைவில்கொள்வோமாக.

“ஒவ்வொரு மனிதனுக்கும், ஜாதிக்கும் தீர்மானம் எடுக்கும் தருணம் வந்திடுமே ஓர்நாள்,
சத்தியத்திற்கும், தப்பறைக்கும் இடையிலான வாக்குவாதத்தின்போதே,
நன்மையின் அல்லது தீமையின் பக்கமாய் நின்றிடவே.
மாபெரும் காரணத்திற்காய், தேவனின் புதிய மேசியா
ஒவ்வொருவருக்கும் அளிக்கின்றாரே மலர்ச்சியை (அ) அழிவினையே.
இடதுபக்கம் சென்றிடுதே வெள்ளாடுகள்
வலதுபக்கம் சென்றிடுதே செம்மறி ஆடுகள்:
அந்த இரவிற்கும், வெளிச்சத்திற்கும் இடையிலேயே – அவர்கள்
தெரிந்தெடுக்கும் முடிவானது என்றென்றும் நிலைநிற்குமே!’

பிலாத்துவினுடைய மனைவியின் சொப்பனம்

எடர்செய்ம் (Edersheim) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: “இயேசுவுக்குப் பதிலாக பரபாசை தேர்ந்தெடுக்கலாம் என்று ஜனங்கள் முடிவெடுத்துக் கொண்டிருக்கையில், பிலாத்துத் தன்னுடைய நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், பிலாத்துவினுடைய மனைவி, அவருக்கு ஆளனுப்பி: நீர் இயேசுவைச் சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக்க வேண்டாம்; இன்றைக்குச் சொப்பனத்தில் அவர் நிமித்தம், நான் வெகுவாகப் பாடுபடுத்தப்பட்டேன் என்று கூறி எச்சரித்தாள்”. பாரம்பரியமானது, அவளுடைய பெயரைப் புரோக்குல்லா (Procula) என்று வழங்குகின்றது. முந்தின ரோம தேசாதிபதியின் (Saturninus) மனைவியைப் போன்று புரோக்குல்லாவும் யூதமார்க்கத்தமைந்தவளாக மாத்திரம் இராமல், இயேசுவைப்பற்றி அறிந்தவளாகவும் இருந்து, இயேசுவைக் குறித்துப் பிலாத்துவிடம் அன்று மாலையில் பேசினவளாகவும் இருந்திருக்கலாம் அல்லவா? இவைகள் அனைத்தும் இயேசுவைத் தண்டிக்கும் விஷயத்தில் பிலாத்துக் கொண்டிருந்த விருப்பமின்மையும், இயேசுவைக் குறித்த புரோக்குல்லாளின் சொப்பனத்திற்கும் விளக்கம் அளிக்கின்றதாய் இருக்கின்றது.

ஏன் இவர் என்ன பொல்லாப்புச் செய்தார்?

பிலாத்து இரண்டாம் முறையாக ஜனங்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்திட முற்பட்டார்; ஆனால் அவர்கள் மீண்டுமாக “அவரைச் சிலுவையில் அறையும், அவரைச் சிலுவையில் அறையும்” என்றே கூக்குரலிட்டார்கள்; பிலாத்து மூன்றாந்தரமாக ஜனங்களை நோக்கி: ஏன் இவர் என்ன பொல்லாப்புச் செய்தார்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவரிடத்தில், தான் காணவில்லை என்றும், தான் இவரைத் தண்டித்து விடுதலையாக்கப்போவதாகக் கூறினார். ஆனாலும் கலகக் கூட்டத்தாரோ [R3896 : page 366] அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஜனக்கூட்டத்தாரும், பிரதான ஆசாரியரும் இட்டச் சத்தம் மேற்கொண்டது.

இச்சம்பவத்தைக் குறித்து ஸ்டால்கர் (Stalker) அவர்கள் பின்வருமாறு விமர்சிக்கின்றார்: “இந்த ஒரு காட்சியானது, அடிக்கடி மக்களாட்சி அதற்கே எதிராகக் கண்டனம் தெரிவிக்கும் காட்சியாக இருக்கின்றது எனக் கருதப்படுகின்றது. Vox populi, Vox Dei – ஜனங்களின் சப்தமே தேவனின் சப்தம் – என்று இதன் போலிப்புகழ்ச்சியாளர்கள் கூறியுள்ளனர் – ஆனால் இங்கே நடந்ததைப் பாருங்கள். ஜனங்கள் இயேசு மற்றும் பரபாசுக்கிடையில் தேர்வு செய்ய வேண்டியிருந்தபோது, அவர்கள் பரபாசைத் தேர்ந்தெடுத்தார்கள்! மக்கள் விஷயமே இப்படி இருக்குமாயின், இந்தக் காட்சியானது, பிரபுக்கள் ஆட்சிக்கும் எதிராகவே தீர்ப்பு அளிக்கின்றதாய் இருக்கின்றது. ஜனங்களைக் காட்டிலும், ஆசாரியர்களும், வேதபாரகர்களும், பிரபுக்களும் மேம்பட்டு நடந்துகொண்டார்களா என்ன? இவர்களுடைய ஆலோசனையின்படியே, மக்கள் கூட்டத்தினர் தேர்வுச் செய்தனர்.”

ஆசாரியர்கள் மற்றும் யூத அதிகாரிகளுடைய வாக்குவாதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது; சம்பவம் ரோமில் தெரிவிக்கப்படும் என்றும், ரோம அதிகாரத்தினுடைய பிரதிநிதியாகிய பிலாத்துவினுடைய எச்சரிக்கையற்றத் தன்மை வெட்ட வெளிச்சமாக்கப்படும் என்றும் அவர்கள் தெளிவாகப் பிலாத்துவிடம் தெரிவித்தார்கள்; அதாவது இஸ்ரயேலின் ஆட்சியில் பாசாங்கு/போலித்தனம் பண்ணும் ஒரு நபர் காணப்பட்டார் என்றும், ரோமுக்குத் தாங்கள் உண்மையாக இருந்ததினால் தாங்களே அந்நபரைக் கைதுச்செய்து, அந்நபரை ரோம தேசாதிபதியினிடத்தில் கொண்டு வந்திருக்க, அந்தத் தேசாதிபதி அந்நபரைச் சிலுவையில் அறைவதற்குப்பதிலாக, விடுதலைப் பண்ணினதன் மூலம் தனது கடமையின் விஷயத்தில் அக்கறையற்றுக் காணப்பட்டார் என ரோமில் விவரம் சொல்லப்படும் என்றும் அவர்கள் தெளிவாகப் பிலாத்துவிடம் தெரிவித்தார்கள். பாவம் பிலாத்துவின் குணத்திற்கும், ஸ்தானத்திற்கும், படிப்பிற்கும் இவ்விடம் மிக கடுமையான இடமாக காணப்பட்டது. இறுதியாக நிர்பந்தத்தின் நிமித்தம் எதிர்க்கும் முயற்சியைக் கைவிட்டார்; ஒருவேளை இவருடைய ஸ்தானத்தில் வேறொரு மனிதன் காணப்பட்டிருப்பானானால், இம்மாதிரியான ஒரு விஷயத்தில் ஜனங்களுடைய விருப்பத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்று எண்ணியிருந்திருக்கக்கூட மாட்டான். பின் ஜனங்களுடைய விருப்பப்படியே நடக்கட்டும் என்று இறுதியாகப் பிலாத்துத் தீர்ப்பு வழங்கினார். இதுதான் பூமிக்குரிய சட்டங்களினாலும், நீதி நியாயத்தினாலும் அடையப்பெற்ற உச்சக்கட்டமான நிலை அல்லவா? ஜனங்களுடைய விருப்பத்திற்கு எதிராக, எந்த மனுஷ சட்டங்களால் எதிர்த்து நிற்கமுடியும்? இன்றும் நம்முடைய விஷயத்திலும் இப்படியாகத்தான் காணப்படுகின்றது அல்லவா? ஜனங்களே சட்டங்களைத் தொகுக்கின்றனர் மற்றும் ஜனங்களே அதை நிறைவேற்றவும் செய்கின்றனர் மற்றும் பிலாத்து, இயேசுவினுடைய சொந்த நாட்டினுடைய ஜனங்களின் விருப்பத்திற்குச் செவிக்கொடுக்க மாத்திரமே செய்தார். “அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை” என்றே வேதவாக்கியங்கள் குற்றம் சுமத்துகின்றன. இங்கு அப்போஸ்தலன் பிலாத்துவின் மீது இல்லாமல், மாறாக யூதர்கள் மீதும், அவர்களின் அதிகாரிகளின் மீதுந்தான் குற்றம் சுமத்துகின்றார்.

பிலாத்துக் கைகளைக் கழுவிக்கொண்டார்

பிலாத்து தனது மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் வண்ணமாகவும், பொறுப்பாளியாகுவதிலிருந்து அனைவரின் பார்வைக்கு முன்பாகத் தன்னை விலக்கிக்கொள்ளும் வண்ணமாகவும், தண்ணீர் கொண்டுவரும்படிக்குக் கூறி, ஜனங்களின் முன்னிலையில் தண்ணீரினால் தனது கைகளைக் கழுவிக்கொண்டார். இப்படியாகத் தனது கைகளைக் கழுவிக்கொள்ளுவதின் மூலமாக, “இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்பதை அடையாளத்தின் வாயிலாகவும், வார்த்தைகளின் வாயிலாகவும் தெரிவித்தார் (உபாகமம் 21:6-9). தனிப்பட்ட விதத்திலும் சரி, மத ரீதியிலும் சரி எவ்விதமான வரையறைகளையும் கொண்டிராத இந்தப் புறஜாதி அதிகாரியான பிலாத்து நீதியை உணர்ந்திருந்த அளவுக்குக்கூட, நீதியை உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு யூதர்கள் எவ்வளவாய்க் குருடர்களாகக் காணப்பட்டனர்; ஒருவேளை பிலாத்துப் பொதுஜனங்களின் விருப்பத்திற்கு இணங்கியிருந்திருப்பாரானால், அவருக்கு எல்லா விஷயங்களிலும் சிறப்புகள் கிடைத்திருக்கும். இவர்களது இந்த இருதய கடினமானது, “இவரது இரத்தப்பழி எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் வரக்கடவது” என்று கூறிப் பொறுப்பை ஆசாரியர்களும், அதிகாரிகளும் மற்றும் ஜனக்கூட்டத்தினரும் ஏற்றுக்கொள்வதில் காண்பித்த விருப்பத்தில் வெளிப்படுகின்றது. முழுப்பொறுப்பும் யூதர்கள் மீதே கடந்து வந்தது.

தாங்கள் குத்தினவரை

யூதர்கள் மீது பொறுப்பு வந்தது என்றபோதிலும், குருடாக்கப்பட்ட கண்கள் திறக்கப்படும் காலம் வரும் என்றும், அப்போது யூதர்கள் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்த்து, அவருக்காகப் புலம்புவார்கள் என்றும் தேவன் தீர்க்கத்தரிசி மூலம் ஏற்கெனவே அறிவித்துள்ளார் (சகரியா 12:10). அப்படியான ஒரு காலம் வருகின்றபடியாலும், ஜெபம் மற்றும் விண்ணப்பத்தின் ஆவியை அவர்கள்மேல் ஊற்றி, அவர்கள் பாவங்களை அகற்றிப்போடுவாரெனக் கர்த்தர் வாக்களித்துள்ளபடியாலும், தேவனுக்கு நன்றி. யூத ஜனங்கள் பல நூற்றாண்டு காலமாகக் கடுமையான அனுபவங்களைப் பெற்றுவிட்டார்கள்; இன்னுமாக அவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றார்கள் என்பதைக் கிறிஸ்துவினுடைய ஆவியையுடைய அனைவரும் அறிய வரும்போது களிகூருவார்கள்; இதுமாத்திரமல்லாமல் யூதர்களிடத்தில் முதலாவதாக ஆரம்பமாகும் ஆசீர்வாதமானது, மகிமையிலுள்ள ஆவிக்குரிய இஸ்ரயேலாகிய கிறிஸ்துவினுடைய தெய்வீக வழிக்காட்டுதலின் கீழ் ஆசீர்வாதமானது, யூதர்கள் வாயிலாகக் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆளுகையின்போது, பூமியின் குடிகளிடத்தில் கடந்துபோகும் என்பதை அறியும்போதும் களிகூருவார்கள்.

எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும்

அப்போஸ்தலனுடைய இந்த வார்த்தைகளானது (2 கொரிந்தியர் 6:8), இயேசுவின் உண்மையான பின்னடியார்கள் அனைவரும், இயேசுவைப்போன்றே ஏறக்குறைய அனுபவங்கள் பெற்றுக்கொள்வார்கள் என்று ஆண்டவரினால் வலியுறுத்தப்பட்டக் கருத்துக்கு ஒத்ததாகவே காணப்படுகின்றது. இயேசு சத்தியமும், வழியும் மற்றும் ஜீவனுமானார்; அவர் உண்மையுள்ளவர்; ஆயினும் அவர் எத்தரெனச் சிலுவையில் அறையப்பட்டார்; அவர் பாவத்தினால் குருடாக்கப்பட்ட உலகத்தினாலும், அவர் காலத்தில் வாழ்ந்து வந்த மிகவும் வெளிச்சமுள்ள ஜனங்களினாலும் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்டார். சீஷன் தன் போதகரிலும் பெரியவனல்ல மாறாக சீஷன், தான் போதகரோடு துணைவனாக இருக்கும் சிலாக்கியத்தில் மேன்மை பாராட்டிக்கொள்ள வேண்டும். ஆகவே நாம் சட்டப்பூர்வமாகவும், அநியாயமாகவும் தவறாய்க் காட்டப்படும் சூழல்கள் [R3897 : page 366] மத்தியிலும், போலியாளாக காட்டப்படும் சூழல்கள் மத்தியிலும், குத்தப்பட்டு, வாரினால் அடிக்கப்படும் சூழல்கள் மத்தியிலும், களிகூரக் கற்றுக்கொள்வோமாக. இப்படியாக, நமது அருமை இரட்சகருடன் பங்காளியாக இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதை நாம் மகிழ்ச்சியாய்க் கருதிக்கொள்வோமாக; நன்மைச் செய்வதில் நீடிய பொறுமையுடன், தளர்ந்துபோகாமல் காணப்பட்டால் ஏற்றகாலத்தில் அவருடைய இராஜ்யத்தில் அவரோடுகூட உடன் சுதந்திரத்துவம் எனும் மகிமையான பலனை அறுப்போம் எனும் பாடத்தையும் நாம் கற்றுக்கொள்வோமாக!