R843 – பாதம் கழுவுதல்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R843 (page 3)

பாதம் கழுவுதல்

FEET WASHING

கிழக்கத்திய நாடுகளில் பாதரட்சைகள் பயன்படுத்தப்படுவதினால், பாதங்கள் மண்ணும், புழுதியும் ஒட்டிக்கொள்ளும் விதத்தில் காணப்படுகின்ற காரணமாக, பாதங்கள் கழுவப்படுதல் என்பது வழக்கமாகச் செய்யப்படும் பழக்கமாகவும், தேவையாகவும் காணப்பட்டது. இந்தப் பணிவிடையானது மிகவும் கனமற்ற பணிவிடையாகக் கருதப்பட்டது மற்றும் குடும்பத்திற்காகவும், விருந்தினர்களுக்காகவும் இப்பணிவிடையானது கீழான பணிவிடைக்காரர்களினால் (அ) அடிமைகளினால் செய்யப்படுகின்றது.

இயேசு தம்முடைய சீஷர்கள் மத்தியில் சுயநலத்தின் ஆவி இருப்பதைக் கவனித்தார்; தம்மோடுகூட அவர்கள் பங்கடைவார்கள் என்பதாக தாம் வாக்களித்துள்ளதான இராஜ்யத்தில், தங்களில் யார் ஸ்தானத்திலும், அதிகாரத்திலும் பெரியவர்களாய் இருக்க வேண்டும் என்று அவர்கள் பண்ணின வாக்குவாதத்தின் வார்த்தைகளானது, அவரது காதுகளில் விழுந்தது. இந்த ஆவியானது எந்தளவுக்கு வளர்ந்து, பலப்படுத்தப்படுகின்றதோ, அந்த அளவுக்கு, அது அவர்களுக்கு அபாயமானது என்பதை இயேசு முன்னறிந்தவராக, இந்த ஆவியினைக் கடிந்துகொண்டார். இந்த ஆவியானது 4 முதல் 6-ஆம் நூற்றாண்டுகளின் காலங்களில் போப் மார்க்க அமைப்பில் பூ பூத்து, அதன் கசப்பான கனியைக் கொணர்ந்தது மற்றும் இந்த அசுத்தமான ஊற்றினின்று இன்னமும் பொல்லாப்புகளும், தப்பறைகளும் பாய்ந்துகொண்டே இருக்கின்றது. அவர் ஒரு சிறுபிள்ளையை எடுத்து, சீஷர்களின் நடுவில் நிறுத்தி, “நீங்கள் பிள்ளைகளைப் போல் (சூழ்ச்சியற்றவர்களாக, எளிமையானவர்களாக) ஆகாவிட்டால், நான் உங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றதான இராஜ்யத்திற்குப் பாத்திரமானவர்களாய் இருக்கமாட்டீர்கள்” என்றார். “அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவன் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” (மாற்கு 10:42); “கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்;” [R844 : page 3] “உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (மாற்கு 10:43). “உங்களில் யார் அதிகமாய்ப் பணிவிடைப் புரிகின்றார்களோ, அவரே பெரியவராய் உங்களால் அடையாளங்கண்டுகொள்ளப்பட வேண்டும். நானும் கூடப் பிரதான பணிவிடைக்காரனாய் இருக்கின்றேன், ஏனெனில் மனுஷகுமாரன் ஊழியம் கொள்ளவும் மற்றும் இவ்விதமாய்க் கனம் அடையவும் வராமல், மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். ஆகையால் நான் உங்களுக்காகச் செய்யும் பெரிய ஊழியத்தின் நிமித்தமாக, நான் உங்களுக்கு முதன்மையானவராய் இருக்கின்றேன் மற்றும் இப்படியாகவே உங்கள் மத்தியிலும் காணப்படுவதாக. எந்தளவுக்கு நீங்கள் ஒருவரிலொருவர் சுயநலமற்ற பலியுடன்கூடிய அன்பையும், ஊழியத்தையும் காண்கின்றீர்களோ, அவ்வளவாய் ஒருவரையொருவர் உயர்வாய் எண்ணிக்கொண்டு, கனப்படுத்துங்கள். இப்படியானவர்களை அவர்களது கிரியையின் நிமித்தம் மிகவும் உயர்வாய் எண்ணிக்கொள்ளுங்கள்” எனும் விதத்தில் இயேசு கூறினார். (1 தெசலோனிக்கேயர் 5:13)

ஆனால் இவைகளுக்கும் பிற்பாடு, போதகருடனும் அவரது மாதிரியின் கீழிலும் அவர்கள் மூன்றரை வருடங்கள் செலவழித்திட்ட பிற்பாடும்கூட, பெருமையின் ஆவியும், மற்றவர்கள் மீது எஜமானாய்க் காணப்படுவதற்கும், முதன்மையானவர்கள் என்று தாங்கள் கனப்படுத்தப்பட/பாராட்டப்பட வேண்டும் என்பதற்குமான ஆசையும் இன்னமும் காணப்பட்டது; மேலும் தாம் அவர்களை விட்டுக் கடந்துபோக இருக்கையில், அவர்களோடு உள்ள கடைசி மாலை வேளையில், இந்த ஒரு பாடத்தினை அவர்களது இருதயங்களில் நிரந்தரமாய்க் காணப்படுமளவுக்குப் பதிய வைத்திட இயேசு நாடினார். ஆகையால் பஸ்கா இராப்போஜனத்திற்குப் பிற்பாடு, அவர் பந்தியை விட்டு எழுந்து, தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலமாக, மிகவும் கனமற்ற பணிவிடையை, அவர்களுக்குச் செய்தார். அவர்கள் அவருக்கோ (அ) ஒருவருக்கொருவரோ இத்தகைய பணிவிடையைச் செய்திடுவதற்கு அநேகமாக எண்ணிக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள் மற்றும் இவ்வளவு தாழ்மையில், அவர் தங்களுக்குப் பணிவிடைப் புரிவதை மறுக்க முடிந்தவர்களாயும் காணப்பட்டனர்.

இயேசு முடித்த பிற்பாடு அவர்களை நோக்கி: “நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல. அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்” என்றார் (யோவான் 13:12-17). “நான் உங்களுக்குக் கொடுத்துள்ளதான படிப்பினையை நீங்கள் புரிந்துகொள்வீர்களானால் மற்றும் உணர்ந்துகொள்வீர்களானால் மற்றும் அதைக் கைக்கொள்வீர்களானால், அதனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள் மற்றும் என் ஊழியங்களில் உதவிப் பெற்றுக்கொள்வீர்கள் மற்றும் உங்களுக்கு ஒரு பங்கு உண்டு என்று நான் வாக்களித்துள்ளதான இராஜ்யத்திற்கு ஆயத்தமாக்கப்படுவீர்கள்” என்ற விதத்தில் கூறினார்.

அப்போஸ்தலர்கள் அநேகருடைய வாழ்க்கையை நாம் பார்க்கையிலும் மற்றும் எத்தகைய சுயத்தை வெறுத்தலுடன், தாங்கள் சக அங்கத்தினர்களாகக் காணப்படும் கிறிஸ்துவின் சரீரத்திற்கு, தலையாகவும், அனைவருக்கும் முதன்மையானவராகவும் இருந்தவரின் மாதிரியைப் பின்பற்றி ஊழியம் புரிந்திருக்கின்றனர் என்று பார்க்கையிலும், இப்படிப்பினையானது அதற்கே உரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதில் நமக்கு ஐயமில்லை.

“நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” (யோவான் 13:15) என்று கர்த்தர் கூறினபோது, அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்ற கேள்வி எழும்புகின்றது. கொள்கையிலும், ஒருவருக்கொருவர் ஊழியம் புரிவது தொடர்புடையதான படிப்பினையிலும் மாதிரி காணப்படுகின்றதா? அல்லது பாதங்களைக் கழுவும் சடங்கென்ற ஊழிய முறைமையில் மாதிரி காணப்படுகின்றதா? இரண்டாம் கருத்துச் சரியானது என்று யூகிப்பது என்பது, சடங்காச்சாரத்தின் கீழ், உண்மையான படிப்பினையை மறைத்துப் போடுவதாய் இருக்கும். ஒருவேளை சடங்கில்தான் மாதிரி காணப்படுகின்றதென்றால், பின்னர்ச் சடங்கினுடைய அனைத்து அம்சங்களும் கைக்கொள்ளப்பட வேண்டும்; மேல் வீட்டறை ஒன்று காணப்படவேண்டும் – இராப்போஜனம் காணப்படவேண்டும் – பாதரட்சைகள் அணியப்பட வேண்டும் – அதே விதமான வஸ்திரங்கள் அணியப்பட வேண்டும் – சீலை அரையிலே கட்டிக்கொள்ளப்பட வேண்டும். இல்லை; போதகரினால் தாழ்மையுடன் சீஷர்களுக்குப் பண்ணப்பட்ட விஷயத்திலேயே மாதிரி காணப்படுகின்றது; சடங்கில் அல்ல. உடன் அங்கத்தினர்களுக்கு மிகவும் கனமற்ற பணிவிடையைக்கூட அவர் புரிந்ததிலுள்ள மாதிரியையே நாம் பின்பற்றிட வேண்டும் மற்றும் இதை நாம் எந்தளவுக்குப் பின்பற்றுகின்றோமோ, அவ்வளவாய் ஆசீர்வதிக்கப்பட்டிருப்போம் மற்றும் அவ்வளவாய் நாம் நித்தியமான இராஜ்யத்திற்கும், தேவனுக்கு ஊழியம் புரிவதற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருப்போம்.

பாதரட்சைகள் இன்னமும் அணியப்படுகின்றதான கிழக்கத்திய நாடுகளில் இன்று வாழ்பவர்களுக்கு வேறுவிதங்களிலும், போதகரினால் பயன்படுத்தப்பட்ட விதத்திலும் மாதிரியைப் பின்பற்றிடுவதற்கான வாய்ப்பு இருக்கலாம்; மற்றும் முற்றிலும் வேறான சூழ்நிலைகளில் காணப்படுபவர்கள் “மாதிரியை” பல்லாயிரம் விதங்களில் பின்பற்றிடலாம். உடன் சீஷர்களில் சிலர் உங்கள் பட்டணத்திலும், என்னுடைய பட்டணத்திலும் வாழ்கின்றனர். அவர்களுக்கு நாம் எவ்வாறு ஊழியம் புரிந்திடலாம்? அவர்களை நாம் எப்படிப் புத்துணர்வு அடையப்பண்ணலாம்? கர்த்தருடைய “மாதிரிக்கேற்ப” நாம் அவர்களிடத்தில் எப்படி நம்முடைய அன்பையும், பரிவையும் காண்பிக்கலாம்? இந்தத் தட்பவெட்ப நிலையில் அவர்களது பாதங்களைக் கழுவுதல் ஏற்புடையதாய் இராது; இப்படிச் செய்வது என்பது அசௌகரியமாகவும், இன்ப மற்றதாகவும் மற்றும் “மாதிரிக்கு” எதிரான பணிவிடையாகவும் காணப்படும். ஆனால் மற்ற விதங்களில் நம்மால் “சரீரத்திற்கு” ஊழியம் புரிந்திடலாம் மற்றும் இப்படியாய் மாதிரியை உண்மையாய்ப் பின்பற்றிடலாம். பூமிக்குரிய விஷயத்திலும், ஆவிக்குரிய விஷயத்திலும் அவர்களுக்கு ஊழியம் புரிவதற்கான நமக்கான பல்வேறு வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் வாய்ப்பிற்காகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் மற்றும் துக்கத்தையோ, சோர்வையோ காணுகையில், நம்முடைய சகோதரனுடைய பாரங்களைத் தூக்கிவிடுவதற்கு (அ) நமது சகோதரிகளுடைய துக்கத்தைத் தேற்றுவதற்கு, நம்முடைய உதவிகரத்தினை நாம் நீட்டிடலாம்; அவர்களுக்கு ஊழியம் புரிந்திடுவதற்கான, அதாவது அடையாளப் பேச்சில் அவர்களது பாதங்களைக் கழுவிடுவதற்கான நம்முடைய வாஞ்சையை, நம்முடைய கிரியைகள் மற்றும் வார்த்தைகள் மூலம் அவர்கள் காணும்படி செய்திடலாம்.

உங்கள் உதவியை அவர்கள் கேட்பது வரையிலும் காத்துக் கொண்டிருக்காதீர்கள்; ஏனெனில் அவர்கள் எந்தளவுக்கு வளர்ந்துள்ள சீஷர்களாய்க் காணப்படுகின்றார்களோ, அவ்வளவாய் அவர்கள் உங்கள் உதவியினைக் கெஞ்சி கேட்காதவர்களாய்க் காணப்படுவார்கள். அவர்கள் தங்கள் பாரங்களையும், சோதனைகளையும் உங்களிடத்தில் சொல்வது வரையிலும் காத்துக் கொண்டிருக்காதீர்கள், மாறாக முன்னேற்பாடுடன் பார்த்துக்கொண்டிருங்கள்; ஏனெனில் அவர்கள் எந்தளவுக்குப் போதகருடைய ஆவியைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்களோ, அவ்வளவாய் அவர்கள் முறையிடாதவர்களாகக் காணப்படுவார்கள் மற்றும் “எப்போதும் சந்தோஷமாய்” – உபத்திரவத்திலும்கூடச் சந்தோஷமாய் ஜீவிப்பவர்களாய் இருப்பார்கள்.

“சரீரத்திற்கான” இத்தகைய ஊழியங்களை வெட்கப்படாமல் நாடி, சந்தோஷங்கொள்ளுங்கள் – சரீரத்திற்கான ஊழியங்கள் என்பது கர்த்தர் இயேசுவுக்கே புரியப்பட்டதாகும். பூமிக்குரிய தேவைகள் சார்ந்த ஊழியங்களைக் காட்டிலும், புதிய சிருஷ்டிகளென நாம் ஒருவருக்கொருவர் புரியும் ஊழியங்களே மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. சரீரத்தைச் சத்தியத்தினால் கழுவுதலானது – சரீரத்தை வார்த்தையினால் பரிசுத்தம் ஆக்குவதும், சுத்திகரிப்பதும் இப்பொழுது நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. (எபேசியர் 5:26,27) உங்கள் சக அங்கத்தினர்களுடைய விசுவாசத்தையும், ஜீவியங்களையும் சுத்திகரிக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் விஷயத்தில் நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் சத்தியத்துடன், தாழ்மையாயும், அவர்களுக்கு ஊழியம் புரிய வேண்டும், அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும், ஆறுதல்படுத்த வேண்டும் மற்றும் புத்துணர்வடையச் செய்ய வேண்டும் என்ற உண்மையான வாஞ்சை கொண்டவர்களாயும் அவர்களை அணுகுகின்றீர்களா? இப்படிச் செய்கின்றீர்களானால், தொடருங்கள்; உங்கள் ஊழியத்தைச் செய்யுங்கள்; போதகரும் இப்படியாகவே செய்துள்ளார்; இதுவே அவரது மாதிரியாகும்; தொடர்ந்து செய்யுங்கள். எவ்வளவுக்கு அதிகமாய் இப்படிச் செய்கின்றீர்களோ மற்றும் அதிக நேரம் செலவழித்து, பிரயாசம் எடுத்து, சௌகரியத்தைப் பார்க்காமல், சுயத்தை வெறுத்தலுடன் செய்கின்றீர்களோ, நீங்கள் போதகருடைய பார்வையில் பெரியவர்களாகவும் மற்றும் கர்த்தர் உங்களது அன்பையும், அந்த அன்பின் ஊழியத்தையும் காண்கின்றது மற்றும் அறிந்திருக்கிறது போன்று, சரீரத்தின் அங்கத்தினர்களும் உங்களைக் காணும்போது, அறியும்போது நீங்கள் சரீரத்தில் மிகவும் கனப்படுத்தப்பட்டவர்களாகவும், பிரியத்திற்குரியவர்களாகவும் காணப்படுவீர்கள்.

இயேசுவினுடைய தலைச்சிறந்த “மாதிரியை” தொடர்ந்து பின்பற்றுங்கள்; “உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் சுத்தமாகத்தக்கதாக,’ கழுவுங்கள் மற்றும் ஒருவர் ஒருவரால் கழுவப்பட்டிருங்கள், மற்றும் உலகத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் தினந்தோறும் தொடர்புக்குள் வருகின்றதான அசுசிகளைச் சுத்திகரித்து, களைந்துபோடுங்கள். அனைவருக்குமான பிரதான ஊழியக்காரனும், கர்த்தருமானவர் அனைவருக்காகவும் கொடுத்திட்டதான விலையேறப்பெற்ற இரத்தத்தினுடைய புண்ணியத்தினால், நீங்கள் ஏற்கெனவே அனைத்திலுமிருந்து நீதிமானாக்கப்பட்டு, சுத்தமானவர்களாகவும், பரிசுத்தமானவர்களாகவும் கருதப்படுகின்றபடியால், பழைய புளித்த மாவாகிய மாய்மாலம், பொறாமை மற்றும் சுயத்தை உயர்த்துதல் ஆகியவற்றைக் கழித்துப்போடுங்கள்.