R2453 – நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2453 (page 88)

நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்

I AM THE WAY, THE TRUTH AND THE LIFE

யோவான் 14:1-14

சீஷர்களுடைய பாதங்களை அவர் கழுவின பிற்பாடு, துணிக்கையானது யூதாசுக்குக் கொடுத்தப்பிற்பாடு, யூதாஸ் புறப்பட்டுப்போன பிற்பாடு, தம் நிமித்தம் அந்த இரவில் சீஷர்கள் அனைவரும் இடறலடைவார்கள் என்று சீஷர்களுக்குக் கூறின பிற்பாடு, சேவல் கூவுவதற்கு முன்னதாக பேதுரு தம்மை மூன்று முறை மறுதலிப்பார் என்று தெரிவித்த பிற்பாடு, பதினொரு பேரின் இருதயங்களும் பாரம் அடைந்ததாகவும், குழப்பம் அடைந்ததாகவும், நடக்கப்போகிறவைகள் குறித்த பயத்தினால் கலக்கமடைந்ததாகவும் இருந்திருக்கும் என்பதை நம்மால் அறியமுடிகிறது. ஆண்டவர் தம்மை மேசியா என்றும், இராஜ்யத்தின் சுதந்தரவாளி என்றும் மற்றும் தாங்கள் அவருடைய சிங்காசனத்தில் அவரோடு கூட இருப்பார்கள் என்றும் கூறியபோது, தாங்கள் அதைத் தவறாய்ப் புரிந்துக்கொண்டார்களா அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டார்களா? எனச் சீஷர்கள் கலங்கினார்கள். ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் அவர் கழுதையின் மீது ஏறி வந்தபோது, இஸ்ரயேலின் இராஜாவாக, தேவனுடைய குமாரனாக, ஜனங்களால் ஒசன்னாக்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க, இப்பொழுது ஆண்டவர், “துக்கம் அடைவதையும்,” காட்டிக்கொடுப்பது பற்றிக் கூறுவதும், சீஷர்களாகிய தாங்கள் சிதறடிக்கப்படுவது குறித்தும், தம்முடைய சொந்த மரணம் குறித்தும் கூறுவதை அவர்கள் எப்படித்தான் புரிந்துக்கொள்ள/எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கலங்கியிருந்தனர்.

இப்படியான அவர்களுடைய கலகத்தில் காணப்பட்ட எண்ணங்களுக்குத்தான், நமது கர்த்தர் [R2453 : page 89] யோவான் சுவிசேஷத்தின் 14,15,16 மற்றும் 17-ஆம் அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆறுதலும், தேறுதலுமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுகின்றார். இவ்வார்த்தைகளை அவர், “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்தில் விசுவாசமாயிருங்கள்” என்று கூறி ஆரம்பிக்கின்றார்.

அப்போஸ்தலர்கள் இயேசுவுடன் தொடர்புக்குள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் ஏற்கெனவே தேவனுடைய ஊழியக்காரர்கள் என, தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டனர். அவர்கள் ஏற்கெனவே தேவனில் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டிருந்தனர். அவர்கள் கபடற்ற உத்தம இஸ்ரயேலர்களாக இருந்தனர். இதை நமது கர்த்தருடைய ஜெபத்தின் வார்த்தைகள் உறுதிப்படுத்துகிறது. அதாவது, “அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள், [R2454 : page 89] அவர்களை எனக்குத் தந்தீர்” (யோவான் 17:6) என்ற வார்த்தைகள் உறுதிபடுத்துகின்றது. அவர்களுடைய இருதயத்தின் கலக்கமானது, அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளின் அஸ்திபாரம் சார்பானது அல்ல, ஏனெனில் இந்த அஸ்திபாரங்கள் உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேவனை அறிந்தவர்களாகவும், தேவனில் விசுவாசம் உள்ளவர்களாகவும் மாத்திரம் இராமல், இராஜ்யம் தொடர்பான தேவனுடைய வாக்குத்தத்தங்களையும், அந்த இராஜ்யத்தின் வாயிலாகப் பூமியின் குடிகள் அனைத்தின் மீது வரும் ஆசீர்வாதங்களையும் அறிந்திருந்தவர்களாகவும், விசுவாசித்திருந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்களுடைய மனங்களுக்கு முன்பாக எழும்பின கேள்வி, இயேசு தொடர்பானதேயாகும். அதாவது, இயேசு உண்மையில் மேசியாவா? அல்லது அவருடைய அற்புதமான வார்த்தைகள் மற்றும் கிரியைகளைக் கண்டு, தாங்கள்தான் தவறான சில எதிர்ப்பார்ப்புகளை வளர்த்துவிட்டார்களா? மூன்றரை வருட ஊழியத்திற்குப் பிற்பாடு, அவர் தாங்கள் கொண்டிருந்த எதிர்ப்பார்ப்பின்படி தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபித்து, அனைத்தையும் தமக்குக் கீழ்ப்படுத்துவதற்குப் பதிலாக, அவர் தம்முடைய சத்துருக்களின் கரங்களில் மரிப்பதை, இப்பொழுது எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? அவர், தாம் போகப்போவதாகவும், அவர் போகவில்லையெனில், தங்களால் அங்குவரமுடியாது என்றும் கூறுகின்றார்; இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே, அவர்களுடைய மனங்களுக்கு முன் எழும்பிநின்ற கேள்விகளாகும்.

“ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்,” “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான்” (யோவான் 3:3,5) என்று கர்த்தர் தம்முடைய ஊழியத்தின் ஆரம்பக்கட்டத்தில், நிக்கொதேமுவிடம் பேசின வார்த்தைகளின் அர்த்தத்தை, இன்னமும் அப்போஸ்தலர்கள் கற்றறிந்து கொள்ளவில்லை. இவைகள் ஆவிக்குரிய சத்தியங்களாய் இருப்பதால், பெந்தெகொஸ்தே நாளில் இவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டு, “சகலபரிசுத்தவான்களோடு கூடத் தெய்வீகத் திட்டத்தினுடைய அகலமும், நீளமும், ஆழமும்,உயரமும் இன்னதென்று உணர்ந்துக்கொள்வதற்கு” அனுமதிக்கப்படுவது வரையிலும் இவைகள் சீஷர்களால் புரிந்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால் அவர்களுக்கு இப்பொழுது கொஞ்சம் ஆறுதல் தேவை. ஆகவே அவர்களால் புரிந்துக்கொள்ள முடியும் அளவுக்கு உள்ள சிறப்பானதும், பலமானதுமான ஆவிக்குரிய உணவை, அறிவுரையை அவர்களுக்குக் கொடுக்க முற்பட்டார். அவர்களிடத்தில் கூறுவதற்கு அவருக்கு அநேகம் காரியம் இருந்தது; ஆனால் அவைகளையெல்லாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகமானது, அவர்களுடைய இருதயங்களை ஆயத்தப்படுத்துவது வரையிலும், அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது மற்றும் புரிந்துக்கொள்ள முடியாது.

பிதாவிடத்திலும், அவருடைய திட்டத்திலுமுள்ள அவர்களது விசுவாசத்தை அவர்களுக்குள் புத்துயிரடையச் செய்யத்தக்கதாக, “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்” என்று கூறி நமது கர்த்தர் ஆறுதல் படுத்துவதை ஆரம்பித்தார். அதாவது, “பிதாவினுடைய திட்டமனைத்தும் நிறைவேறும் என்ற உண்மையை உணர்ந்துக்கொள்ளுங்கள். மேலும் பிதாவுக்கு, வார்த்தையிலும், கிரியையிலும் நான் உண்மையாய் இருப்பதை நீங்கள் பார்த்துள்ளபடியினாலும், என்னிலுள்ள நற்கிரியைகளில் பிதாவினுடைய வல்லமை வெளிப்பட்டுள்ளதை நீங்கள் பார்த்துள்ளபடியினாலும், விசுவாசத்தினுடைய நங்கூரம் உறுதியாய் நிலைத்திருப்பதாக. என்னைத் தொடர்ந்து விசுவாசித்துக்கொண்டிருங்கள், தொடர்ந்து நம்பிக்கைக்கொண்டிருங்கள். இப்படியிருந்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும். தெய்வீகத் திட்டத்தினுடைய விரிவாகுதலுக்காகக் காத்திருங்கள். அது நீங்கள் எதிர்ப்பார்த்த உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பைக் காட்டிலும், திருப்தியை அளிக்கும். நான் போகிறேன் என்று சொன்னப்படியினால், அதாவது பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்று சொன்னப்படியினால் நீங்கள் குழம்பிப்போயிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுடைய நன்மைக்காகவே போகிறேன் என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அநேக வாசஸ்தலங்களுள்ள என்னுடைய பிதாவின் வீட்டில் உங்களுக்கென ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தும்படிக்குப் போகின்றேன். இதைச் செய்த பிற்பாடு, நான் நிச்சயமாய் மீண்டும் வந்து நாம் என்றென்றும் சேர்ந்துக் காணப்படத்தக்கதாக, உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன்” என்ற விதத்தில் இயேசு கூறினார்.

இப்படியாகச் சொற்ப வார்த்தைகள் மூலம், ஆண்டவர் சுவிசேஷயுகத்தின் வேலையை விவரித்து, தம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்தும், யுகத்தின் முடிவில் சபையின் மகிமையடைதலைக் குறித்தும் சுட்டிக்காட்டினார். அவர்கள் கண்டிப்பாகக் கடந்துச்செல்ல வேண்டிய பொறுமைக்கான மற்றும் விசுவாசத்திற்கான பரீட்சைகளைக் குறித்தும் இங்கு அவர் விவரமாய் விவரிக்கவில்லை. இவைகள் குறித்து வேறே தருணங்களில், எச்சரிப்புக் கொடுத்துள்ளார் (மத்தேயு 24-ஆம் அதிகாரம்). இப்பொழுது அவர்களுடைய இருதயங்கள் கலக்கமடைந்துள்ளது. அவர் கடந்துப்போவது அவசியம் என்றும், அவரது இரண்டாம் வருகை நிச்சயமாய்க் காணப்படுமென்றும், ஆயத்தம் பண்ணப்படும் வாசஸ்தலங்களில் நித்திய காலத்திற்குமான ஐக்கியத்திற்குள் அனைவரும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பது நிச்சயமானது என்றும், உள்ள வாக்குத்தத்தங்களினால் அவர்களை அவர் ஆறுதல்படுத்த மாத்திரம் செய்பவராக இருந்தார்.

பிதாவின் வீடு என்பது, உண்மையில் அண்டசராசரமாகும்; மற்றும் அடையாள வார்த்தைகளில் பேசும்போது, வானம் அவருடைய சிங்காசனமாகவும், பூமி அவருடைய பாதப்படியாகவும் கூறப்படுகிறது. தேவனுடைய புத்திரர்கள் அனைவருக்குமான நித்திய காலத்திற்குரியதுமான ஆசீர்வாதங்களுக்குத் தெய்வீக விவேகமானது, மிகுதியான முன்னேற்பாடுகளைப் பண்ணியுள்ளது. தெய்வீக ஏற்பாடுகளில், மனிதனுடைய விழுகைக்கு முன்னதாக மனிதன் தேவனுடைய இசைவான நிலைமையில் காணப்பட்டபோது, அவனுக்கு ஓர் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது. ஆனால் பாவத்தின் காரணமாக, நீதிமான்களுக்குரிய நித்தியமான வாசஸ்தலத்தை அடைவதற்கான மனிதனுடைய உரிமைகள் அனைத்தும், பறிமுதல் பண்ணப்பட்டது. மேலும் நமது அருமையான மீட்பர் மனிதனையும், அவனால் இழக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும், உடைமைகளையும் மீட்பதற்கென உலகத்தில் காணப்பட்டவராய் இருந்தார் (லூக்கா 19:10; எபேசியர் 1:14). அவர் பேசிக்கொண்டிருந்தபோது, (மனிதனால் இழக்கப்பட்டது அனைத்தையும்) அவர் இன்னமும் விலைகொடுத்து வாங்கவில்லை… இன்னும் சில மணிநேரங்களுக்குள்ளாகக் கல்வாரியில் அனைத்தையும் நிறைவேற்றிட நமது கர்த்தர் சித்தங்கொண்டிருந்தார். இதற்கென அவர் தம்மைப் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது. அதாவது ஒரு மனிதனாக, அவர் கிறிஸ்து இயேசுவாகிய மனிதனான, தம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டியிருந்தது; மற்றும் இப்படியாகத் தம்மை ஒப்புக்கொடுத்த பிற்பாடு, மனிதர்கள் மத்தியில் அவரால் மனிதனாகக் காணப்பட முடியாது. தெய்வீகச் சித்தத்திற்கு அவர் கீழ்ப்படிந்து, மனிதனாகிய கிறிஸ்து இயேசுவாகிய தம்மை, பலிச் செலுத்துவதன் மூலமாக ஆதாமையும், ஆதாமுடைய சந்ததியையும் மீட்டுக்கொள்வது மாத்திரமல்லாமல், தாம் மரணத்திலிருந்து மேலான தளத்திலுள்ள புதிய சுபாவத்திற்கு, திவ்வியச் சுபாவத்திற்கு உயர்த்தப்படுவதும் அவருக்கான நம்பிக்கையுமாய் இருந்தது. ஆகவே, கிறிஸ்து இயேசு எனும் மனிதனாகிய அவர், அவர்களை விட்டுக் கடந்துப்போவதும், அவரை மனுஷனாக அவர்கள் இனிமேல் காணாமல் இருப்பதும் அவசியமாயிருந்தது. ஆனால் ஏற்றவேளையில், அவருடைய இரண்டாம் வருகையின்போது, அவர்களும் மனித நிலைமையிலிருந்து, ஆவிக்குரிய நிலைமைக்கு மாறி, “அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசித்து அவருக்கு ஒப்பாயிருப்பார்கள்” (1 யோவான் 3:2).

அவர் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்த பிற்பாடு, பிதாவிடம் ஏறிச்சென்று, மனுஷர் சார்பாகத் தம்முடைய பலியை, மனிதனுக்கான ஈடுபலியாக ஒப்படைப்பதும் அவசியமாய் இருந்தது. இதையும் அவர் செய்தார். பாவங்களுக்கான அந்தப்பலியானது, மனிதனின் சார்பாகப் பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கும், இதன் காரணமாகவே, இயேசுவைத் தங்களுடைய மீட்பராக ஏற்றுக்கொள்ளும் அனைவரின் மேலும் ஆசீர்வாதம் கடந்துவருகின்றது என்பதற்கும், பெந்தெகொஸ்தே நாளின் ஆசீர்வாதங்கள் தெய்வீகச் சான்றாக/உறுதியாகக் காணப்படுகின்றது.

[R2454 : page 90]

நம்முடைய கர்த்தருடைய மரணத்திற்கும், அவருடைய இரண்டாம் வருகையின் காலத்திற்கும் இடையிலான, இடைப்பட்ட காலமானது, எவருடைய விசுவாசக் கண்ணோட்டத்தின்படியும் நீண்ட காலம் அல்லவே. (1) இது தேவனுடைய கண்ணோட்டத்தில் நீண்ட காலப்பகுதியல்ல, ஏனெனில் அப்போஸ்தலர் பேதுரு, “கர்த்தருக்கு … ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும்” (2 பேதுரு 3:8) என்று கூறியுள்ளார். (2) இது உண்மையான விசுவாசிகளுடைய கண்ணோட்டத்திலும் நீண்டபகுதியல்ல, ஏனெனில் விசுவாசிகள் எவருடைய வாழ்நாட்களும், காத்திருக்கும் நாட்களும், ஐம்பது வருடங்களுக்கு மேலாக இருந்ததில்லை. இந்த இடைப்பட்ட காலப்பகுதியை, நாம் நீண்ட மற்றும் மிகவும் பொருத்தமற்றக் கண்ணோட்டத்தின்படிப் பார்க்கக்கூடாது. அதாவது, ஏதோ நாம் பதினெட்டு நூற்றாண்டுகளாக வாழ்ந்து, காத்துக்கொண்டிருப்பது போன்று பார்க்கக்கூடாது. “அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்;’ மணவாளன் வரும்போதும், ஒவ்வொருவனும் அவருடன் சேர்த்துக்கொள்ளப்படத்தக்கதாக, ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் பரீட்சைகளும், மெருகூட்டப்படுதல்களும், ஆயத்தப்படுத்தல்களும் போதுமானதாயிருக்கும். இப்படியாக ஆயத்தப்பட வேண்டியது ஒருவிதத்தில் ஒட்டுமொத்த சபையாக இருந்தாலும் கூட அது முக்கியமாக, கர்த்தருடைய பின்னடியார்களிலுள்ள ஒவ்வொருவரின், தனிப்பட்ட விதத்திலான ஆயத்தப்படுத்தலாகவும் இருக்கின்றது. “நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள்” (யோவான் 14:4). மூன்று வருட காலமாக நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களுக்கு தம்மைத் தெரியப்படுத்திக்கொண்டிருந்தார். இன்னுமாக அவர்களுக்குப் பிதாவின் குணலட்சணத்தைக் குறித்தும் தெரியப்படுத்திக் கொண்டிருந்தார். ஆகவே, இப்பொழுது தாம் பிதாவினிடத்திற்கு, வீட்டிற்குச் செல்வதாக அவர் தெரிவித்தப்போது, அவர்கள் பிதாவை முன்பில்லாத அளவுக்கு அறிந்துள்ளதையும், முன்பில்லாத அளவுக்கு பிதா அளிக்கும் நீதியின் மற்றும் உண்மையான சந்தோஷத்தின் வீட்டைக் குறித்து உணர்ந்துக்கொள்ள முடிகின்றதையும் உணர்த்திட வேண்டியவர்களாய் இருந்தார்கள். இன்னுமாகக் கர்த்தருடைய போதனைகள் மற்றும் வழிநடத்துதலின் கீழான அவர்களுடைய இந்த அனுபவமானது, தேவனுடைய வழியுடன் அவர்களைப் பழக்கிவைத்துள்ளது. அதாவது, அவ்வழியைத் தேவனுடைய வழி என்று அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளாதிருந்த போதிலும், அவ்வழிக்கு அவர்கள் பழக்கிவிக்கப்பட்டிருந்தனர். ஆகவேதான் நமது கர்த்தர், “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கின்றேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” என்று கூறினார்.

நமது கர்த்தருடைய பலியின் மூலமாக, “ஈடுபலியின்” மூலமாக, அவருடைய பலியின் புண்ணியம் பாவிகளுக்குத் தரிக்கப்படுவதன் மூலமாக மாத்திரமே, சீஷர்கள் பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் அல்லது மீண்டுமாகப் பிதாவினிடத்திலான ஐக்கியத்திற்குள்ளாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்ற விதத்தில் நமது கர்த்தர், “வழியாக” இருக்கின்றார். அவருடைய வார்த்தைகள், அவருடைய அறிவுரைகள், அவருடைய வழிகாட்டுதலின் வாயிலாக மாத்திரமே, சீஷர்கள் தேவனுடைய ஆவிக்கு, சத்தியத்தின் ஆவிக்கு இசைவுடன் வருவதற்குரிய நம்பிக்கைக் காணப்படும் என்ற விதத்தில் நமது கர்த்தர், “சத்தியமாக” இருக்கின்றார். மனுக்குலம் முழுவதும் மரித்து, தெய்வீகத் தண்டனை தீர்ப்பின் கீழ்க் காணப்படுவதால், ஜீவனுக்கான உரிமைகள் அனைத்தையும் இழந்துள்ளபடியினால், எவரும் நமது கர்த்தர் மூலம் அல்லாமல், அதாவது நமக்காக அவர் கொடுத்திட்ட ஜீவன் மூலமாக வராத எவரும், ஜீவனுக்குரிய நிலைமைக்குள் மீண்டுமாக வரமுடியாது என்றவிதத்தில் நமது கர்த்தர் “ஜீவனாக” இருக்கின்றார். இப்படியாக, அவர் நமக்கான ஈடுபலியாகவும் (அ) வழியாகவும், நீதியிலும், சத்தியத்திலும் நமக்கான போதகராகவும், நமக்கு ஜீவன் கொடுப்பவராகவும் இருக்கின்றார்… “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை” (அப்போஸ்தலர் 4:12). “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்,” அதாவது வேறெந்த வழி மூலமாகவும், வேறெந்த சத்தியம் மூலமாகவும், வேறெந்த ஜீவன் மூலமாகவும் பிதாவினுடைய வீட்டிலுள்ள வாசஸ்தலம் ஏதாகிலும் ஒன்றில் இடம்பெற்றுக்கொள்ளலாம் என்று, எந்த மனிதனும் எண்ணிக்கொள்ளாதிருப்பானாக என்ற விதத்தில் கர்த்தர் கூறுகின்றார் (யோவான் 14:6)

இப்படியாகவே, ஆயிரவருட யுகத்தின்போதும், கிறிஸ்துவானவர் வழியாகவும், சத்தியமாகவும், ஜீவனாகவும் இருப்பார். கர்த்தர் தம்முடைய பலியின் மூலமாக, சுவிசேஷ யுக சபையாகிய, தம்முடைய மணவாட்டிக்கு, தேவனுடைய வீட்டிலுள்ள பரலோகப்பகுதியில் ஒரு வசிப்பிடத்தைத் திறந்து வைத்ததுபோன்று, அதே பலியின் மூலமாக, பிதாவின் வீட்டிலுள்ள பூலோகப்பகுதியில், ஒரு வசிப்பிடத்தை (அவருக்குக் கீழ்ப்படிகின்றவர்களுக்கு – அப்போஸ்தலர் 3:21) மீட்டு, மனுக்குலத்திற்குத் திரும்பக் கொடுப்பார். அந்தப் பூமிக்குரிய வசிப்பிடமோ, தேவனுடைய பரதீசாகக் காணப்படும்.

அப்போஸ்தலர்கள் அதிகமாய் ஆண்டவரை மதித்தாலும், அவருடைய பூரணம் குறித்த கருத்தை,அதாவது அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனுடைய சாயலாய் இருக்கின்றார் என்ற கருத்தை, அவர்கள் கிரகித்துக்கொள்வதற்கு, அவர்களுக்குச் சிரமமாய் இருந்தது (1தீமோத்தேயு 3:16). “தேவன் ஆவியாயிருக்கின்றார்,” மாம்சத்தில் இல்லை; ஆகவே அவரைப் பார்க்க முடியாது என்பதாக அவர் கூறியுள்ளதையும் அப்போஸ்தலர்கள் கேட்டிருந்தனர்; மற்றும் இக்கருத்தை அவர்கள் நியாயப்பிரமாணத்திலிருந்தும் அறிந்திருந்தனர். “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்” (யோவான் 1:18) என்பதை அவர் ஏற்கெனவே கூறியிருப்பதையும் அவர்கள் கேட்டிருக்கின்றனர். ஆனால், இயேசுவைத் தாங்கள் பார்க்கையில், தெய்வீகமானவரிடத்தில் காணப்படக்கூடிய அனைத்தையும் தாங்கள், அவரில் பார்க்கின்றார்கள்; அதாவது தெய்வீகமானவரின் பூரணச் சாயலை, மாம்சத்தில் பார்க்கின்றார்கள் என்ற விஷயத்தை, அவர்கள் அதுவரையிலும் கிரகித்துக் கொள்ளவில்லை. ஆகவேதான், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்ற உண்மையினிடத்திற்கு அவர்களுடைய கவனத்தை அவர் திருப்ப வேண்டியிருந்தது. இவ்வார்த்தைகளை, தாம்தான் பிதா என்ற அர்த்தத்தில் அவர்களிடத்தில் அவர் கூறவில்லை. காரணம் பிதா தம்மிலும் பெரியவர் என்றும், தாம் செய்யும் கிரியைகள் பிதாவினுடைய வல்லமையினாலே செய்யப்படுகின்றது என்றும், அவர் அநேகம் தரம் தெளிவாய் அறிவித்திருக்கின்றார் (யோவான் 14:28,10). மேலும் தேவன் கண்களுக்குப் புலப்படாதவர் போன்று இருப்பதுபோல, தம்மைப் பார்க்கும்போது, கண்களுக்குப் புலப்படாத ஜீவியைப் பார்ப்பதாக அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமெனும் அர்த்தத்திலும் அவர் கூறவில்லை. அவர்கள் தம்முடைய குணங்களை, தம்முடைய நோக்கங்களை, தம்முடைய அன்பைப் பார்க்கும்போது, பிதாவை எல்லாவற்றிலும் உண்மையுடன் வெளிப்படுத்தும் மெய்யான தோற்றத்தின் ஒரு வெளிப்படுத்தலைக் காண்பதாகவே, அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமெனும் அர்த்தத்தில் கூறினார். பிதாவுக்கும், தமக்கும் இடையே நிலவும் ஒற்றுமை குறித்தும், தம்முடைய சித்தமானது, பிதாவின் சித்தத்திற்குள் புதைக்கப்பட்டுள்ளது குறித்தும், தமக்கு வேறே சித்தமில்லை, “என் சித்தமல்ல, உம் சித்தமே ஆகக்கடவது” என்பதைக் குறித்தும் அவர்களைப் புரிந்துக்கொள்ள வைத்தார். இன்னுமாக, பிதா தம்முடைய வல்லமையின் மூலமாகவும், தம்முடைய ஆவியின் மூலமாகவும், தம்மில் வாசம் பண்ணினதால், தம்முடைய வார்த்தைகளும், கிரியைகளும் முற்றும் முழுமையாகப் பிதாவுடையதே என்றும் அவர்களுக்குப் புரியவைத்தார். தம்முடைய ஊழியத்தின் நாட்களில் அவர்களால் பார்க்கப்பட்ட கிரியைகள் அனைத்தும், தம் மீது உன்னதமானவரின் வல்லமை காணப்படுகின்றது என்பதற்கும், தம் மூலம் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதற்கும் சான்றாக இருக்கின்றது என்றும் அவர்களிடம் கூறினார். இவைகள் அப்போஸ்தலர்களை முழுமையாய்த் திருப்திப்படுத்தி, அவர்களுடைய இருதயங்களுக்குச் சமாதானத்தைக் கொண்டுவந்தது.

இன்னுமாக தாம் பிதாவினிடத்திற்குப் போக வேண்டியதன் அவசியம் பற்றி விவரிக்கும் வண்ணமாக, தாம் கடந்துப்போவதினால், தம்முடைய பின்னடியார்கள், தாம் செய்ததைக் காட்டிலும் பெரிய கிரியைகள் செய்வார்கள் என்று நமது கர்த்தர் அறிவித்தார். இந்த “பெரிய கிரியைகளில்” சில, இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடுச் செய்யப்படும் என்று எண்ணுவது அநேகமாகச் [R2455 : page 90] சரியாகவும் இருக்கலாம். அதாவது மரணம் என்னும் நித்திரையினின்று மனுக்குலத்தின் உலகத்தை எழுப்பி, விருப்பமும் மற்றும் கீழ்ப்படிதலும் காட்டுகின்றவர்களை, மனுஷீக ஜீவனுக்குரிய முழுமையான பூரணத்திற்குத் திரும்பக் கொண்டுவருவதாகிய மாபெரும் கிரியை, இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடு செய்யப்படும். இது உண்மையில் முதலாம் வருகையின் போது, நமது கர்த்தர் இயேசுவினால் செய்யப்பட்ட கிரியையைக் காட்டிலும், பெரிய கிரியைதான். காரணம், முதலாம் வருகையின் போது, கர்த்தர் இயேசு மரணத்தில் நித்திரை பண்ணிக்கொண்டிருந்த சிலரை, மனித சுபாவத்திற்குரிய முழுமையான பூரணத்திற்குக் கொண்டுவராமல் வெறுமனே எழும்பப்பண்ணினதே அவருடைய பெரிய கிரியையாக இருந்தது.

ஆனால் நம்முடைய அபிப்பிராயத்தின்படி, இவை மாத்திரமே கர்த்தருடைய பின்னடியார்கள், [R2455 : page 91] அவர்களுடைய ஆண்டவர் பண்ணின கிரியைக் காட்டிலும், செய்யும் பெரிய கிரியையல்ல. கர்த்தருடைய கிரியைகள் மாம்சீகத் தளத்திலேயே காணப்பட்டது. பரிசுத்த ஆவி அப்பொழுது அருளப்படவில்லை; அவர் ஈடுபலியைச் செலுத்தி, அதைப் பிதாவிடம் ஒப்படைத்து, அதைப்பிதா ஏற்றுக்கொள்ளாதது வரையிலும், பரிசுத்த ஆவி வருவதில்லை. இதன் காரணமாக, அவர் யாருக்கு ஊழியம் புரிந்திட்டாரோ, (அவருடைய சீஷர்கள் கூட ஆவியினால் ஜெநிப்பிக்கப்படவில்லை). அவர்களுக்கு அவரால் ஆவிக்குரிய கண்ணோட்டத்தின்படி போதிக்கமுடியவில்லை. அவர்களுடைய செவிகள், பூமிக்குரியது தொடர்பானவைகளினால் நிறைந்திருந்தது. பரலோகம் தொடர்புடைய காரியங்கள் பற்றி அவர்களால் புரிந்துக்கொள்ளப்பட முடியவில்லை. காரணம், “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்.” “பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?” (1 கொரிந்தியர் 2:10,14; யோவான் 3:12).

இன்னமும் ஆவியினால் ஜெநிப்பிக்கபடாமலும், புத்திரத்துவத்திற்குரிய சிலாக்கியம் இன்னமும் அருளப்படாத நிலமையிலுமுள்ள வேலைக்காரர் வீட்டாரின் மத்தியில், நமது கர்த்தரால் பூமிக்குரிய தளத்தின் அடிப்படையிலேயே அல்லாமல், மேலான தளத்தின் அடிப்படையில் எதையும் போதிக்கவும், செய்யவும் முடியவில்லை. அதாவது உவமைகளினாலும், மறைப்பொருள்களினாலுமே ஜனங்களிடம் போதித்தார். இவைகள் ஏற்றவேளையில் பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்துதல் கீழாக, சபை புரிந்துக்கொள்வார்கள். இதன் காரணமாகவே நம்முடைய கர்த்தருடைய அற்புதங்கள் அனைத்தும் சரீரப்பிரகாரமான நிலையிலும், எளிமையாய்ப் புரிந்துக்கொள்ளப்படும் அவரது போதனைகள் அனைத்தும், சுபாவத்தின்படியான மனிதனால் உணர்ந்துக் கொள்ளப்படும் நிலையிலும் காணப்பட்டது.

பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிற்பாடு, அதாவது பரிசுத்த ஆவி வந்திறங்கினப் பிற்பாடு கர்த்தரால் செய்யப்பட்டவைகளைக் காட்டிலும், கர்த்தருடைய ஜனங்கள் அவருடைய நாமத்தில், அவருடைய பிரதிநிதிகளாக இருந்து, பெரியதும், மிகவும் ஆச்சரியமானதுமான கிரியைகளைச் செய்தார்கள். கர்த்தர் குருடர்களின் கண்களைத் திறந்தார். ஆனால் அவருடைய பின்னடியார்கள் மனிதனுடைய புரிந்துக் கொள்ளுதலின் கண்களைத் திறப்பதற்குரிய சிலாக்கியத்தைப் பெற்றுக் கொண்டனர். கர்த்தர் சரீரத்தில் வியாதிப்பட்டவர்களைச் சொஸ்தப்படுத்தினார். ஆனால் அவருடைய சீஷர்கள் ஆவிக்குரிய நோயாளிகளைச் சொஸ்தப்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர். கர்த்தர் சரீரப்பிரகாரமான குஷ்டரோகத்தைச் சொஸ்தப்படுத்தினார். ஆனால் ஆவிக்குரிய குஷ்டரோகமாகிய பாவத்தைச் சொஸ்தப்படுத்துவதற்குரிய சிலாக்கியம், அவருடைய பின்னடியார்களுக்கு உரியதாய் இருக்கின்றது. நம்முடைய கர்த்தர் மரித்தவர்களை உயிர்ப்பித்தார். ஆனால் அநேகரை மேன்மையான அர்த்தத்தில் மரணத்தை விட்டு நீக்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கப்பண்ணும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்குரிய சிலாக்கியம், அவருடைய பின்னடியார்களுக்கு உரியதாய் இருக்கின்றது. இந்தப் பெரிய கிரியைகளுக்கான சிலாக்கியங்கள் கர்த்தருடைய ஜனங்களுக்குக் காணப்படுகின்றது. இந்தத் தங்களுடைய பெரிய ஆசீர்வாதங்களைப் புரிந்துக்கொண்டு, பிதாவின் வேலையில் ஊக்கத்துடனும், வைராக்கியத்துடனும் ஈடுபட்டிருப்பவர்கள் பாக்கியவான்களாக இருக்கின்றனர். ஆனால் கர்த்தருடைய தாலந்தைப் பெற்றுக்கொண்டு, அதை நிலத்தில், அதாவது வேலையின கீழ், இன்பத்தின் கீழ், சமுதாயத்தின் கீழ்ப் புதைத்துப் போடுபவர்கள், ஆண்டவருடைய இரண்டாம் வருகையின் போது, அவரால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்றோ, அல்லது, “உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று அவர்களை நோக்கி கர்த்தர் கூறுவார் என்றோ எதிர்ப்பார்க்கக்கூடாது.

இன்னுமாக, சபை தொடர்புடைய அனைத்துக் காரியங்களிலும், தாம் தொடர்ந்து பிதாவினுடைய பிரதிநிதியாக இன்னமும் காணப்படுவதை, சுட்டிக்காட்டும் வண்ணமாக நமது கர்த்தர், யோவான் 14:13-ஆம் வசனத்தின் வார்த்தைகளைக் கூறி நமக்கு உறுதியளிக்கின்றார். அதாவது பிதா அனைத்தையும் குமாரனுடைய கரங்களில் ஒப்படைத்துள்ளார் என்றும், குமாரன் எல்லாவற்றிலும் பிதாவைக் கனப்படுத்தி, அவருடைய நாமத்திற்கு மகிமை சேர்ப்பார் என்றும், கூறி நமக்கு உறுதியளிக்கின்றார்.