R1806 – உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1806 (page 105)

உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்

PERFECT THROUGH SUFFERING

“அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.” எபிரெயர் 5:7-10

இந்த வசனத்தை ஐந்து தலைப்புகளின் கீழ் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளுகிறோம்: (1) அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்; (2) எதற்காகப் பயந்தார்; மற்றும் எதிலிருந்து அவர் இரட்சிக்கப்பட்டார்? (3) அவர் குமாரனாயிருந்தும்; (4) அவர் எந்தவிதத்தில் பூரணமாக்கப்பட்டார் மற்றும் (5) யாருக்கு அவர் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்.
அப்போஸ்தலருடைய இந்த வார்த்தைகள், நம்முடைய அருமையான ஆண்டவரின் அனுபவங்களின் உள்ளார்ந்தப் பார்வையைத் தருகிறது. இவைகள் அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் நமக்காகச் சுமந்த சுமைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவி செய்கிறது. கீழ்க்காணும் வாக்கியத்தைக் குறிப்பாகக் காணலாம்.

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில்

நம்முடைய ஆண்டவர் மாம்சத்திலிருந்த நாட்களிலும், மாம்சத்தில் இல்லாத நாட்களிலும் எந்த விதமான வித்தியாசமும் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர் மனித இயல்பில் உயிர்த்து, எழுப்பப்பட்டார் என்றும், அவருடைய மாம்சம் மகிமையடைந்ததாகவும் கூறுகிறார்கள். மற்றும் சிலர் அவர் மனிதனாக வாழ்வதற்கு முன் அவர் இருக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்களுக்கு மாறானவைகளே அப்போஸ்தலனுடைய இந்த வாக்கியங்களில் குறிப்பாகச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்ல, மற்ற வசனங்களிலும் உறுதியாகச் சொல்லப்படுகிறது. “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்” (எபிரெயர் 2:14). “அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (யோவான் 1:14). “அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்கள் ஆகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே” (2 கொரிந்தியர் 8:9). “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்” (யோவான் 6:51). ஆம், அவருடைய மனுஷசரீரமே, அவரது தாழ்மையின் சரீரமாக, பலி செலுத்துவதற்காக, “ஆயத்தம் பண்ணப்பட்ட சரீரமாக இருந்தது” (எபிரெயர் 10:4-5). மேலும் அந்தச் சரீரம் பலி செலுத்தப்பட்டது; பலி செலுத்தப்பட்ட அந்தச் சரீரம் திரும்ப எடுத்துக்கொள்ளப்படவில்லை; நம்முடைய மீட்பிற்காக அது விலைக்கிரயமாகக் கொடுக்கப்பட்டது. ஆகவே அவர் மாம்சத்தில் இனி மனுஷனாக ஜீவிப்பதில்லை; அதை அவர் பலி செலுத்தினதினால் இப்பொழுது அவர் மிக உன்னதமான நிலைக்கு உயர்த்தப்பட்டு, நம்முடைய தெய்வீக பிரதான ஆசாரியனாக என்றென்றும் ஜீவிப்பவரானார். “ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்” (2 கொரிந்தியர் 5:16).

அவருடைய தாழ்த்தப்படுதலானது, நித்தியமான தாழ்த்தப்படுதல் அல்ல, மாறாக அதைத் தொடர்ந்து மகிமையான ஓர் உயர்த்தப்படுதலை அடைந்தார் – திவ்விய சுபாவத்திற்கும் மற்றும் அச்சுபாவத்திற்கே உரிய மகிமையான சரீரத்திற்கும் உயர்த்தப்பட்டார் – “பிதாவினுடைய தன்மையின் சாயலானார்” (எபிரெயர் 1:3); அவர் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவராக இருந்தாலும், கிறிஸ்துவின் விசுவாசமுள்ள சீஷர்கள் ஒரு நாளில் அவரைக் காண்பார்கள், ஏனெனில், “அவர் இருந்த வண்ணமாக இல்லாமல் – இருக்கிற வண்ணமாக நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம்” என்று எழுதியிருக்கிறது (1 யோவான் 3:2). இதற்காக, அவர் மாம்சத்தில் இருந்த நாட்களில், “பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன் என்று ஜெபித்தார்” (யோவான் 17:24).

ஆயினும் அவர் மாற்றம் அடைந்திருந்தாலும், நம்முடைய ஆண்டவர் அதே இயேசுதான். [R1806 : page 106] “ஏனெனில், இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்” என்று அப்போஸ்தலர் கூறுகிறார் (எபேசியர் 4:10). அவர் ஆவியின் தன்மையிலிருந்து மனித உருவம் எடுத்தபொழுது அவரில் எந்த மாற்றமும் இல்லாததுபோல, மனித இயல்பிலிருந்து தெய்வீக நிலைக்கு மாறும்பொழுதும் அவருடைய தனித்துவம் அழிக்கப்படவில்லை. அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின் அவர் தாமே, “மரித்தேன் ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” என்று கூறினார்.

தேவனுடைய குமாரன் உண்மையில் மாம்சமானார் என்ற வசனத்தை நாம் ஆழ்ந்த நன்றியுள்ள இருதயங்களோடு ஏற்றுக்கொண்டோம். மேலும் மாம்சத்திலுள்ள அவருடைய நாட்கள் எண்ணப்பட்டதாகவும், குறைவாக இருந்ததினால் நாம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். நம்மைப்போல அவருக்கும், “குறைவான நாட்களும் முழு உபத்திரவத்தோடு காணப்பட்டது.” விசேஷமாக பலியின் வேலையைச் செய்வதற்காக அவர் உடன்படிக்கைப் பண்ணின பின் வந்த நாட்களானது வேதனைகளும், ஏமாற்றங்களும், துயரங்களும் உள்ள நாட்களாகக் காணப்பட்டது. இந்நாட்களானது தேவைப்படும் நேரங்களிலெல்லாம் கிருபையைப் பெற்றுக் கொள்ளத்தக்கதாக பரலோக கிருபாசனத்தண்டைக்கு அவரை வழி நடத்தியது. ஊழியத்தின் விறுவிறுப்பான பகல்பொழுது நிறைவடைந்தவுடன், ஜெபத்திற்கான இடத்தைத் தேடிடுவது நம்முடைய ஆண்டவரின் வழக்கமாக இருந்தது. மலைகளும், வனாந்தரங்களும் அவருக்கு மறைவிடமாய் இருந்தது மற்றும் அடிக்கடி அவர் முழு இரவும் ஜெபித்தவராய் இருந்தார்.

தேவனோடு அவர் கொண்டிருந்த இரகசியமான ஐக்கியத்தினால் ஆவிக்குரிய பலத்தையும், ஆறுதலையும், தேறுதலையும் பெற்றார். விலையேறப்பெற்ற தொடர்பு கொள்ளக்கூடிய இப்படிப்பட்டத் தருணங்களில், அவர் வேறுயாரிடமும் திறக்கமுடியாத தம்முடைய இருதயத்தை தந்தையிடம் முழுமையாக திறந்தார்; அத்தருணங்களில் அவருடைய சகலவிதமான வேதனைகளையும், பாரங்களையும், பயங்களையும் அவரிடம் கூறினார் மற்றும் அத்தருணங்களில் பிதாவாகிய தேவன் அவருடைய அன்பான அங்கீகரிப்பையும், ஆதரிக்கும் தம் கிருபையையும் கொடுத்து தம்மை அவருக்கு வெளிப்படுத்தினார்.

எதற்காகப் பயந்தார்; எதிலிருந்து இரட்சிக்கப்பட்டார்?

என்ன! நம்முடைய ஆண்டவர் பயந்தாரா? என்று சிலர் ஆச்சரியப்பட்டுக் கேட்கலாம். ஆம்! மேற்கூறப்பட்ட அப்போஸ்தலரின் வார்த்தைகள், நம்முடைய ஆண்டவர், “மாம்சத்தில் இருந்த நாட்களில்” நமக்காக அவர் அனுபவித்த மிகப்பெரிய மனரீதியான போராட்டத்தைக் குறிப்பிடுகிறது. இந்த மனப்போராட்டம் அவருடைய ஞானஸ்நானத்துக்குப் பின் வனாந்தரத்தில் அவர் சோதிக்கப்படும்போதே உடனடியாக துவங்கி, கெத்செமனே தோட்டத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. அநேகமாக கெத்செமனேயில்தான் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு, “பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்” (எபிரெயர் 5:7).

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அல்லது அவருடைய அன்பு தோல்வியடைந்துவிடும் என்று எண்ணி நம்முடைய ஆண்டவர் பயப்படவில்லை. “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” என்று அவர் அறிந்திருந்தார். தேவன் உடன்படிக்கையைக் கடைப்பிடிப்பவர் என்றும், அவருடைய சகலவிதமான நடத்தைகளும், நடவடிக்கைகளும் சத்தியம் மற்றும் நீதி என்ற நித்தியமான கோட்பாடுகளின்மேல் அஸ்திபாரம் கொண்டிருக்கின்றது என்றும், அதிலிருந்து சிறிதேனும் மாறுபடுதல் என்பது அவருடைய நெறிமுறையில் இயலாத ஒன்று என்றும் அவர் அறிந்திருந்தார். ஆனாலும் மனுக்குலத்தின் இரட்சிப்பின் திட்டமானது, ஆசரிப்புக்கூடாரத்தின் நிழலான ஊழியங்களில் பிரதான ஆசாரியன் குறித்துக் கூறப்படும் ஒவ்வொரு சிறு எழுத்திற்கும், எழுத்தின் உறுப்பிற்குமான, பிரதான ஆசாரியனுடைய கீழ்ப்படிதலைச் சார்ந்ததாய் இருக்கும் விதத்தில் ஏற்பாடுபண்ணப்பட்டிருந்தது என்பதையும் அவர் அறிந்திருந்தார். [*ஆசரிப்புக்கூடார நிழல்கள், பக்கம் (ஆங்கிலம்) – 78; தமிழ் பக்கம் – 85 பார்க்கவும்]. அந்தப் பலிகள் செலுத்தப்படுவதுமட்டுமல்ல, துல்லியமாய்க் குறிப்பிட்டுள்ளபடியே பலிகள் ஏறெடுக்கப்பட வேண்டும். நிழலான பிரதான ஆசாரியனாகிய ஆரோன் பலி செலுத்துவதற்கான கட்டளைகளுக்கு ஏற்ப செய்யத் தவறியிருந்தால் (லேவியராகமம் 9:16) அல்லது கட்டளையின் ஏதேனும் அம்சத்தை அவர் மறந்து அல்லது தவிர்த்திருந்தால் அல்லது அவருடைய சொந்தக் கருத்துக்களை அதில் பொருத்தியிருந்தால், அவர் கிருபாசனத்தின்மேல் இத்தகைய அபூரணமான பலியின் இரத்தத்தைத் தெளிப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்; அவருடைய பலி அங்கீகரிக்கப்பட்டிருந்திருக்காது; அவர் மரித்திருப்பார் மற்றும் ஜனங்களை ஆசீர்வதிப்பதற்கு அவர் ஒருபோதும் வெளியே வந்திருக்கவும் முடியாது (லேவியராகமம் 16:2-3).

இப்படியாக மீட்பின் மிகப்பெரிய வேலையை மேற்கொள்ளுவதினால் பிரதான ஆசாரியர் இம் முழுமனுக்குலத்தின் ஜீவன் மற்றும் மரணத்தின் பிரச்சனைகளை மட்டும் தம்மேல் சுமந்து கொள்ளாமல், தம் விஷயத்தைக்கூட அவர் பொறுப்பேற்றிருந்தார். அடையாளமாக பேசவேண்டுமெனில் அவருடைய சொந்த வாழ்க்கையையும், அவருடைய கரங்களில் எடுத்துக்கொண்டார். இப்படிப்பட்ட கனமான பொறுப்புகளைச் சுமந்த நம்முடைய ஆண்டவர் பயந்ததில் எந்த விதமான ஆச்சரியமுமில்லையே! தெய்வீகக் கிருபை இல்லாமல் பரிபூரண மனித சுபாத்தினால்கூடத் தாங்கிகொள்ள முடியாதளவுக்கு அவர் காணப்பட்டதான சோதனைகளினால் உண்டான மன அழுத்தம், மிகப்பெரிதாக இருந்தது. ஆகவே அவர் அடிக்கடி ஜெபம் செய்வதற்கு இடம் தேடினார். அவர் கடந்துசென்ற உபத்திரவங்களின் மாபெரும் போராட்டத்தினை கவனியுங்கள் – வனாந்தரத்தில் தந்திரமான மற்றும் வஞ்சகமான சோதனைகள்; [* R1688 – பார்க்கவும்] பாவிகளால் தமக்கு விரோதமாகச் செய்யப்பட்ட விபரீதங்கள்; அவர் இரட்சிக்கும்படி வந்தவர்கள் வெளிப்படுத்தின கீழ்த்தரமான நன்றியின்மையைச் சிந்தித்துப் பாருங்கள். மேலும் அவருடைய வறுமையையும், நண்பர்களின் இழப்பையும், அவருடைய சோர்வுகளையும், களைப்புகளையும், உழைப்புகளையும், வீடற்ற நிலையையும், அவருக்கான கசப்புள்ள மற்றும் கடுமை தணியாத உபத்திரவங்களையும், இறுதியாக அவர் காட்டிக் கொடுக்கப்பட்டதையும், அவரது மரண வேதனையையும் சிந்தியுங்கள். கண்டிப்பாக, இந்தச் சூழ்நிலைகளின்கீழ்த் துன்பத்தைத் தாங்கி சகிப்பதற்கான சோதனைகளும் மற்றும் பலியின் பிரமாணத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிவதற்குமான சோதனைகளுமே, அவர் அனுபவித்த உச்சக்கட்ட சோதனைகளாய் இருந்தது. ஆண்டவருக்குள் எப்படிப்பட்ட ஜாக்கிரதையை இது ஏற்படுத்தியது; ஏனெனில் ஆசாரியனாக அங்கீகரிக்கப்படத்தக்கதான பலிகளைச் செலுத்துவதற்குரிய தம் பணி முழுவதின் விஷயத்திலும் குறைவு ஏற்பட்டால், இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் மற்றும் ஒப்புரவாகுதலின் நாளைத் தொடர்ந்துவரும் மகிமை நிகழாமல் போய்விடுமோ என்று அவர் பயந்திருந்தார். ஆகையால், “அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின் வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்” (எபிரெயர் 4:1) என்று அப்போஸ்தலர் கூறுகிறார்.

நம்முடைய ஆண்டவர் அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சிந்தையில் பின்வரும் கேள்விகள் அவருக்குள் அழுத்தத்தை அதிகரித்தது: தேவனுடைய சித்தத்திற்கு ஏற்றவாறு, அனைத்தையும் துல்லியமாக இதுவரையில் நான் நிறைவேற்றியுள்ளேனா? மேலும் இப்பொழுது நான் படப்போகும் துன்பம் பற்றி முழுக்க அறிந்த நிலையில், என்னால் கசப்பான பாத்திரத்தின் அடிவண்டல் வரையிலும் பானம்பண்ணிட முடியுமா? சரீர் ரீதியான துன்பங்களை மாத்திரமல்லாமல் அவமானங்களையும், நிந்தனைகளையும் மற்றும் கொடூரமான ஏளனங்களையும் என்னால் சகித்திட முடியுமா? என்னுடைய சொந்த நீதியில், சகலத்தையும் தேவன் அங்கீகரிக்கும் விதத்தில், பூரணமாக அனைத்தையும் என்னால் செய்து முடிக்க முடியுமா? என்னுடைய சீஷர்கள் சிதறடிக்கப்படுகிறதையும், திகலடைவதையும், என் முழு வாழ்க்கையின் வேலைகள் அழிக்கப்படுவதையும், என் நாமமும் மற்றும் தேவனுடைய காரணங்களும்/ நோக்கங்களும் பழிக்கப்படுவதையும், என்னுடைய சத்துருக்கள் வெற்றிக் கொள்வதையும், பெருமையில் முழக்கமிடுவதையும் என்னால் சகிக்க முடியுமா?

நம்முடைய ஆண்டவருடைய இறுதியானப் போராட்டம் இவ்வாறாக இருந்தது. சந்தேகத்திற்கு இடமின்றி, அவருடைய நம்பிக்கையைத் தளர்ந்துபோகச் செய்வதற்கும், அவர் தவற போகின்றார் (அ) அங்கீகரிக்கப்படும் விதத்தில் பணி புரிவதில் தவறிப்போய்விட்டார் என்றுமுள்ள பயங்களினால் அவரது மனதை நிரப்பிடுவதற்கும் மற்றும் இப்படியாக உயிர்த்தெழுதல் என்பது நிச்சயமில்லை என்று அவரை எண்ண செய்வதற்கும் ஏதுவாக, சூழ்நிலைகளையும், அவரது தளர்வையும், சோர்வையும் பயன்படுத்திப் பார்ப்பதற்கு அந்த பயங்கரமான நேரத்தில், இருளின் வல்லமைகள் விறுவிறுப்பாய்ச் செயல்பட்டிருக்கும். இத்தகைய நேரங்களில் ஒரு பரிபூரணமான மனித இருதயத்தில், இத்தகைய எண்ணங்கள் முன் வந்து நிற்க, பின் அவர் அமிழ்ந்துபோவதில் ஆச்சரியம் இல்லை மற்றும் உணர்வுகளின் கடுந்துயரமானது, வேர்வையின் துளிகளை இரத்தத்தின் துளிகளாக வெளியேற்றியது. ஆனால் சோர்வுக்கு அவர் இணங்கி, அவர்மேல் வந்த இறுதியான [R1806 : page 107] கடுஞ்சோதனையின்போது போராட்டத்தைக் கைவிட்டாரா? இல்லை; முன்னேறிச் சென்று, தேவனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய பலியை முழுமையாகச் செலுத்தும்படிக்கும் – அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஓர் ஆட்டுக்குட்டியைப்போல தாம் செல்லத்தக்கதாகவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருக்கத்தக்கதாகவும் – அவருடைய மனித சித்தம் தெய்வீகக் கிருபையினால் வலுப்படுத்தப்படுவதற்காக, இந்த மனித பயங்களை அவர் தமது பரலோக தந்தையிடம் – தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரிடம் – எடுத்துச்சென்றார்.

மேலும் அவர் பிதாவினிடம் வேண்டிக்கொண்ட ஜெபங்கள் வீணாகவில்லை. “தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்.” அவருடைய ஆத்துமாவின் உணர்ச்சிகளை [R1807 : page 107] எந்த வார்த்தைகளும் வெளிப்படுத்த முடியாது என்பதினால், அவருடைய ஜெபங்கள் சுருக்கமாக இருந்தப் போதிலும், அந்த நேரம் முழுவதும் அவரது ஆவியானது, வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்து கொண்டிருந்தது (ரோமர் 8:26). அவருக்கு ஆறுதல் அளித்து ஊழியம் செய்யவும், தெய்வீகத் தயவு அவரோடு இன்னும் உள்ளது என்று உறுதியளிக்கவும், மரணம்வரை எல்லாவற்றையும் சகிக்க புதிய தைரியத்தையும், மன வலிமையையும், உறுதியான பலத்தையும் கொடுக்கவும் தேவன் அவருக்கு ஒரு தூதனை அனுப்பினார். இந்த ஒரு தெய்வீகக் கிருபையின் உதவியோடு நம்முடைய ஆண்டவர் அந்த நொடிப்பொழுதிலிருந்து, அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலையை முடிப்பதற்கு தளரா உறுதிகொண்ட தைரியத்தோடு முன் சென்றார். அதற்குப் பின் மனம் குழப்பமடைந்து, சோர்ந்துப்போன சீஷர்களிடம் வந்து, “இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்” என்று அவரால் அமைதியாகக் கூறமுடிந்தது. இப்பொழுது கசப்பான மனப்போராட்டம் நிறைவடைந்தது; பிணத்தின்மேல் போர்த்தப்பட்ட சீலையைப்போல, அவரை மரணத்திற்கேதுவான துக்கம் கொள்ள செய்யத்தக்கதாக அவர் முன் காணப்பட்டதான ஆழமான இருளை, பரத்திலிருந்து பிரகாசித்த ஒளியானது விரட்டியது. ஆம், தமக்கு உண்டான பயத்தின் விஷயத்தில் அவர் கேட்கப்பட்டார்; பயம் விரட்டப்பட்டது மற்றும் தேவன் தந்த பலத்தில் பலமடைந்தவராக, நியாயப்பிரமாணத்தின் எழுத்தையும், எழுத்தின் உறுப்பையும் தம்மால் நிறைவேற்ற முடியும் என்றும், அங்கீகரிக்கப்படத்தக்கதான பலியைச் செலுத்த முடியும் என்றும் இயேசு உணர்ந்தார் மற்றும் இதனால் மரணத்திலிருந்து தமக்கான இரட்சிப்பையும், உயிர்த்தெழுதலையும் குறித்து உறுதியடைந்தார்.

ஆண்டவரின் சார்பில் இந்த ஒரு பயம் பாவமாக இருக்கவில்லை; இது அவருடைய அடிச்சுவடிகளில் நடக்க முயற்சிக்கிறவர்களாகிய, நாம் கொண்டிருக்க வேண்டுமென்று சொல்லப்படுகிற பயமேயாகும்; நமக்கருளப்பட்ட விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களானது மாறாததும், உறுதியானதுமான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே உள்ளது என்று உணரத் தவறாதிருப்போமாக (எபிரெயர் 4:1). இது தம்முடைய வாக்குத்தத்தங்களை பிதா நிறைவேற்றுவதற்குரிய அவரது வல்லமை மற்றும் விருப்பம் குறித்த சந்தேகங்களினால் ஏற்பட்ட பயமல்ல; மாறாக பிதாவின் நடவடிக்கைகளை இயக்கும் நீதியான கொள்கைகள் பற்றிய அறிவின் காரணமாகவும், இன்னுமாக குமாரன் தமது பலியின் உடன்படிக்கையை நிறைவேற்றும் பட்சத்தில் அதற்குப் பலனாக, நித்திய ஜீவனையும், மகிமையையும் நீதியாய் நிர்ணயித்திட்ட, வளைந்துக் கொடுக்காத பிரமாணம் பற்றிய அறிவின் காரணமுமான பயமாகும்; மற்றும் அதே நேரத்தில் தாம் ஒரு மனுஷனாக இருக்கின்றார் என்பதையும், இருதயமும், சரீரமும் பரிபூரணமாய் இருப்பினும், தெய்வீகக் கிருபையினால் வலிமையூட்டப் படவில்லையெனில் தாம் தவறிடுவார் என்பதையும் அவர் உணரத் துவங்கினபோது பயம் ஏற்பட்டது. “என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்” என்று ஆண்டவரின் இந்த ஒரு பயத்தையும், அவருக்குச் சகாயம் வந்த பிறப்பிடத்தையும் பற்றி சங்கீதக்காரன் கூறினார் (சங்கீதம் 73:26). இது பிள்ளைகள் கொண்டிருக்கும் அச்சமாகும். அங்கீகரிக்கப்பட்ட குமாரனாக அவர் தேவனிடத்தில் கொண்டிருக்கும் உறவுக்கு ஏற்றதான ஒரு பயமாகும்.

அவர் குமாரனாய் இருந்தும்

அவர் குமாரனாய் இருந்தும், அவர் பட்ட பாடுகளினால் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். யேகோவா தேவனால் அவர் தொடர்ந்து குமாரன் என்று அங்கீகரிக்கப்பட்டது, அவருடைய பூரணநிலையை உறுதிப்படுத்துகின்றது; எந்த நேரத்தில் பாவம் செய்திருந்தாலும் அந்த உறவு பறிபோயிருக்கும். இதே கோட்பாட்டின் கீழ், தேவனுடைய புத்திரர்களாக நாம் அங்கீகரிக்கப்படுகிறோம், ஏனெனில் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவின் நீதியானது நமக்குத் தரிப்பிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் அவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு குமாரனாகவும், பாவமில்லாமல் பரிபூரணமாகவும் இருந்தாலும், அவர் பூரணரானார் என்று அப்போஸ்தலர் அவரைக்குறித்து கூறுகிறார் – அவர் அனுபவங்களின் வழிமுறையாக – அவமானங்கள் மற்றும் உபத்திரவமான அனுபவங்கள் வழிமுறையாக – ஏதோ விதத்தில் பூரணராக்கப்பட்டார். அவர் எந்த விதத்தில் பூரணராக்கப்பட்டார் என்று நாம் கேள்விக்கேட்கலாம்; இதற்கான பதிலை தலைப்பிலுள்ள வேதப்பகுதியில் காணலாம் – “அவர் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். தாம் (இந்தப் படிப்பினையில்) பூரணரானபின்பு”. தேவனுடைய குமாரன் என்று அவர் அங்கீகாரம் பெற்றிருந்தாலும்; எப்போதும் தேவன் அவர்மேல் பிரியமாக இருந்தாலும்; நீதியுள்ள தகப்பனுடைய பிரியத்திற்குரிய நம்பிக்கைகளைக் கொஞ்சமேனும் குலைத்துப் போடாதவராக இருந்தாலும்; அவர் வாழ்வதற்கு ஆதாரமே, அவருடைய தந்தை என்பதையும், சகல ஞானம், நன்மை மற்றும் கிருபைக்கும் தந்தையே ஊற்றும், காரணரும் ஆவார் என்பதையும் அவர் எப்போதும் அடையாளங்கண்டு கொண்டிருந்த போதிலும்; தம்முடைய ஜீவனுக்காகவும் மற்றும் அதன் ஆசீர்வாதங்களுக்காகவும், உன்னத தேவனுக்கு தாம் ஆழமான நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டிருப்பதையும் அவர் எப்போதும் அடையாளங்கண்டு கொண்டிருந்தபோதிலும்; எல்லா ஞானத்திற்கும், கனத்திற்கும், மகிமைக்கும், வல்லமைக்கும் இருப்பிடமாக பிதா இருப்பதினால், அவருடைய பரிபூரண சித்தமே உன்னதமான பிரமாணமாகவும், பரிபூரண நீதிக்கும், சத்தியத்திற்கும், ஆழமான அன்பிற்கும், கிருபைக்கும், ஆழ்ந்த ஞானத்திற்குமான மிகுந்த பூரணமான வெளிப்படுத்துதல் என்றும் அவர் எப்போதும் அடையாளங்கண்டு கொண்டிருந்தபோதிலும்; பிதாவுக்கே எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் மிகுந்த அன்பான கீழ்ப்படிதலும், உண்மையும் உரித்தாகும் என்று அவர் எப்போதும் அடையாளங்கண்டு கொண்டிருந்தபோதிலும்; பிதாவின் சித்தத்தை அங்கீகரிப்பதிலும், அதைச் செய்வதிலும் எப்போதும் அகமகிழும் குமாரனாக அவர் இருந்தபோதிலும்; அவர் அழைக்கப்பட்டதான ஆசாரியத்துவப் பொறுப்புகளுக்கு அவசியமாய்க் காணப்படும் உறுதியான மற்றும் நிரூபிக்கப்பட்டக் குணங்களின் விஷயத்தில், அவர் இன்னும் பூரணரானவராக எண்ணப்படவில்லை. அனைவரும் தங்களுடைய நம்பிக்கைகளை எந்த உறுதியான அஸ்திபாரத்தின்மீது கட்ட வேண்டும் என்று அறிந்து கொள்ளும்படியாக, இந்த ஆசாரிய பொறுப்பின் விஷயத்தில், அவர் கடுமையானச் சோதனைகளினால் நிரூபிக்க வேண்டியது அவசியமாக இருந்தது. இந்த நோக்கத்திற்காகவே அவருடைய உண்மையானது கெத்செமனேயில் கடுமையாய்ச் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. அநேகமாக இறுதிச் சோதனையை முகமுகமாகச் சந்திக்கும்வரையிலும் நம்முடைய ஆண்டவரும் கூட அவரது நீதியான குணத்தினுடைய பலத்தை உணராதிருந்திருக்கலாம். அங்கு அவர் உச்சக்கட்டமான அளவுக்குச் சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்டார் மற்றும் அந்தக் கடும்சோதனையின்கீழ் முழு அளவில் பூரணமாய் விளங்கின அவரது குணங்களானது, தெய்வீகக் கிருபையினால் மகிமையான பூரணமுள்ள அதன் முழுமையை அடைந்தது.

இப்படியாக பாடுபட்டதின் மூலம், சுயத்தை மிகவும் ஆழமாய் வெறுத்தவராக தேவனுடைய பூரண சித்தத்திற்குக் கீழ்ப்படிய கற்றுக்கொண்டார்; தேவனும் இப்படியாகக் காணப்படுவதற்கு அனுமதித்தார், ஏனெனில் இப்படி நிரூபிப்பது என்பது, அவர் அழைக்கப்பட்ட அந்த உன்னதமான நிலைக்குப் பாத்திரவானாக்கும் குணத்தினுடைய அந்தப் பூரண வளர்ச்சிக்கும், வெளிப்படுத்துதலுக்கும் தேவையாயிருந்து.

குணலட்சணத்தில் பூரணம் மற்றும் சரீரத்தில் பூரணம் ஆகிய இவ்விரண்டும் வேறுபட்ட காரியங்கள் என்பதை நாம் மனதில்கொள்ள வேண்டும். சரீரத்தில் பூரணம் என்பது தேவனுடைய வேலையாகும்; ஆனால் குணலட்சணத்தில் பூரணமாகுதல் என்பது, தெய்வீக வழிநடத்தல் மற்றும் மேற்பார்வையின் கீழ், தெய்வீகப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிதலின் மூலமான, அறிவுள்ள சிருஷ்டிகளின் வேலையாக இருக்கிறது. ஆதாம் பூரணமான மனுஷனாகவும், குற்றம் இல்லாதவரும் அடிமைப்படாதவரும், அவருடைய ஆதி அழகில் மகிமையுள்ளவராக இருந்தார்; ஆனால் அவருடைய குணங்களை வளர்ச்சியடையப்பண்ணும் விஷயத்தில், அவர் வெகு சீக்கிரத்தில் தவறிவிட்டார்; ஆகவே பரிபூரண நிலையை இழந்தார். சோதனையின்றி குணங்கள் முற்றிலும் வளர்ச்சியடைய முடியாது. இது ஒரு செடியைப்போல: முதலில் மென்மையாக இருக்கும்; இதற்குத் தேவனுடைய அன்பின் பிரகாசம் அதிகமாய்த் தேவைப்படுகிறது; அவருடைய கிருபையாகிய தண்ணீரை அடிக்கடி [R1807 : page 108] இதற்குப் பொழிய வேண்டியதாய் இருக்கிறது; விசுவாசத்திற்கும், கீழ்ப்படிதலைத் தூண்டுவதற்கும், அவருடைய குணங்களைப் பற்றின அறிவை அஸ்திபாரமாகக்கொண்டு இது வளர்க்கப்படவேண்டும்; இப்படிப்பட்ட சாதகமான சூழ்நிலைகளின் கீழ் வளர்க்கப்பட்ட பின் இது பயிற்சிக்கொடுக்கும் கிள்ளிவிடுதலின் கரங்களுக்கு ஆயத்தமாகுகின்றது மற்றும் சில கடினமானவைகளைச் சகிப்பதற்கும் ஆற்றல் பெறுகிறது. மேலும் கொஞ்சம் கொஞ்சமாக குணங்களின் வலிமை வளர்ச்சியடையும்போது, அதற்குக் கொடுக்கப்படும் சோதனையானது, குணலட்சணத்தை அதிக வலிமையும், அழகும் மற்றும் கிருபையும் அடையச்செய்கின்றது; இறுதியில் குணலட்சணம் – உபத்திரவத்தின் வாயிலாக – உறுதியடைகின்றது, ஸ்திரப்படுகின்றது, பூரணப்படுகின்றது.

நம்முடைய ஆண்டவருடைய குணத்தின் விஷயத்தில், அதாவது அதன் ஆரம்பப் பருவத்தில் பூரணமாக காணப்பட்ட விலையேறப்பெற்ற இந்தக் குணமானது, இறுதியில் அது முழுமை அடைந்ததில் பூரணப்படுத்தப்பட்டு, உறுதிபடுத்தப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டதற்கு முன்பு வரையிலும்கூட, அதற்கு வைக்கப்பட்டதான சகலவிதமானச் சோதனைகளின் வழியாக அதன் பூரண நிலையைத் தக்கவைத்துக்கொண்டது. இது நம்முடைய பாடத்தின் இறுதி தலைப்புக்கு வழி நடத்துகிறது; அதாவது –

யாருக்குக் கிறிஸ்து நித்திய இரட்சிப்புக்குரிய காரணராக இருக்கின்றார்?

“தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார்.”

“தாம் பூரணரான பின்பு” என்ற இந்தத் துவக்க வார்த்தைகளில் நம்முடைய சிந்தையை அதிகமாகச் செலுத்த வேண்டும். அதுவும் முன்னதாக காண்பிக்கப்பட்டபடி, உபத்திரவம் எனும் வலியுடன்கூடிய பயிற்சியின் வழியாக அவர் பூரணரானார். இப்படியாகப் பூரணப்பட்ட அவர், தேவனுக்கும், மனுஷனுக்கும் மத்தியஸ்தராகவும், பிரதான ஆசாரியராகவும் பொறுப்பை ஏற்பதற்குப் பொருத்தமானவர் ஆனார். அவருக்குக் கீழ்ப்படியும் யாவரின் சார்பாகவும் அவர் அந்த ஆசாரியப் பொறுப்பை நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டவருடைய நியாயமான வழியை நேசிக்காத கீழ்ப்படியாதோர், அதில் நடப்பதற்கான எந்த விருப்பமும் இல்லாததினால், ஆண்டவரின் – மத்தியஸ்தரின் வேலையினாலான எந்தப் பலனையும் அடையமாட்டார்கள். ஆனால் அவருக்குக் கீழ்ப்படியக்கூடியவர்களுக்கு, “அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு (ஆறுதல் அளித்திட, விடுவித்திட) உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.”

ஆகவே உபத்திரவங்கள் வழியாக அவர் முதலில் பூரணராக்கப்பட்டார். சுவிசேஷயுகத்திலுள்ள அனைத்து அன்பான சீஷர்களும் எப்படிப்பட்ட பாடுகள், அவமானங்கள், துக்கங்கள், நிந்தனைகளுக்குள் கடந்துபோக வேண்டும் என்பதைப் பரலோக தந்தை அறிந்திருக்கின்றார். இந்த வனாந்தரத்திலிருந்து வாக்குத்தத்தம் செய்யப்பட்ட அந்தத் தேசத்திற்குப் பயணம் செய்வதற்குள், சபைக்கு எதிராக விறகுகட்டைகள், சித்திரவதைக்குரிய கருவிகள் மற்றும் நாகரிகமான சித்திரவதை முறைகளைக்கொண்டும், மத தலைவர்களைக்கொண்டும் சாத்தான் போராடுவான் என்று எல்லாவற்றையும் நோக்கும் நம் தேவன் அறிவார். துன்மார்க்கனுடைய அக்கினியாஸ்திரங்கள் போன்ற கசப்பான வார்த்தைகள் அவர்களை காயப்படுத்தும் என்று அவர் முன்னறிந்திருந்தார் (சங்கீதம் 64:2-3). ஆகவே, “தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது” (எபிரெயர் 2:10). “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்” (எபிரெயர் 4:15-16). ஆ! எவ்வளவு கவனமாக நம்முடைய ஞானமுள்ள பரலோக பிதா தம்முடைய சகல ஜனங்களுக்கான நலன்களை முன்னதாகவே கவனத்தில் கொண்டிருந்திருக்கின்றார். அவரது குணலட்சணங்கள் மற்றும் கையாளுதல்களின் இந்தக் கணநேர கண்ணோட்டங்களின் ஊடாக, “பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” – என்று சீஷர்களிடம் நம்முடைய ஆண்டவர் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு உண்மையாக உள்ளது என்பதை நாம் காணலாம்.

ஆனால் உபத்திரவங்களின் வழியாக ஆசாரியத்துவத்தின் பொறுப்புக்காகப் பூரணப்படுத்தும் செயல்முறை ஒருபக்கம் இருக்க, நம்முடைய ஆறுதல், திருப்தி மற்றும் தேறுதலுக்காக நம்முடைய பிரதான ஆசாரியன் பூரணப்படுத்தப்பட்டது பற்றிய உண்மையும் கவனிக்கப்பட வேண்டும். பாவத்தினால் சூழப்பட்டிருந்தபோதிலும், பாவஞ்செய்யத்தக்கதாக, அனைத்துக் கட்டங்களிலும் சோதிக்கப்பட்டிருந்தபோதிலும் இவர் ஒருவரே, “பாவமே அறியாதவரும், வாயில் வஞ்சனை காணப்படாதவருமாக” இருந்தவர். “அவர் பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமாக” இருந்தபோதிலும், நம்முடைய துயரத்திற்கும், துக்கத்திற்கும் பழக்கப்பட்டவராய் இருந்தார். கசப்பான அனுபவங்கள் மூலம் அவர் நமக்குப் பின்வருமாறு பரிந்துபேசுபவராகத்தக்கதாக, நம்முடைய பிரதான ஆசாரியரெனப் பூரணப்படுத்தப்பட்டார் – அதாவது (1) நம்முடைய இரட்சிப்பைச் சட்டப்பூர்வமாக சாத்தியமாக்குவதற்குத் தேவன் அங்கீகரிக்கக் கூடிய பலியை அவர் செலுத்துவதின் மூலமும், (2) மகிமையான சபையாக, கறைதிறை அற்றவர்களாகக், குற்றமற்றவர்களாக தேவனுக்கு முன் நம்மை நிறுத்தும்வரையில், நம்மைச் சுத்திகரித்துத் துப்புரவாக்கித் தூய்மைப்படுத்துவதின் மூலமும் அவர் நமக்குப் பரிந்து பேசுபவராகத்தக்கதாக, நம்முடைய பிரதான ஆசாரியரெனப் பூரணப்படுத்தப்பட்டார்.

பரலோக பிதாவின் பூரணம் மற்றும் ஸ்தானம்/ பொறுப்புகள் அனைத்தும், நம்முடைய ஆண்டவர் அவருடைய தந்தைக்குக் கீழ்ப்படிவதற்கானக் காரணமாக இருந்ததுபோலவே, நம்முடைய மாபெரும் பிரதான ஆசாரியனுக்குரிய தனிப்பட்ட மற்றும் பொறுப்பின் விஷயத்திலான முழுமையானப் பூரணமும், மற்றும் இந்தப் பொறுப்பில் தேவனால் அவர் அமர்த்தப்பட்டார் என்ற உண்மையும், சபையும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற காரியத்திற்கு பலமான ஊக்கமாகவும், பலமான [R1808 : page 108] கோரிக்கையாகவும் காணப்படுகிறது. தேவன் நமக்கு ஒரு கற்றுக்குட்டியானவரை நியமிக்கவில்லை அல்லது சுயநலத்தினாலோ, இழிவான ஆதாயத்தினாலோ இயக்கப்படும் ஒருவரை நியமிக்கவில்லை; மாறாக ஞானமுள்ள மற்றும் நன்மையான ஒவ்வொரு கட்டளையைக் கொடுப்பவரும், அவரைப்போல நாமும் உறுதிபெற்று, பலப்படுத்தப்பட்டு, ஸ்திரப்படும் வரையில், அன்பினால் நமக்குக் கிருபையின்மேல் கிருபையளிக்கக்கூடிய மிகப்பெரிய பிரதான ஆசாரியரை தேவன் நமக்கு ஏற்படுத்தினார்.

இந்த மகிமைக்கு நம்மை நடத்தக்கூடிய இந்தப் பயிற்சியானது, நம்முடைய ஆண்டவர்தாமே அனுபவித்த, பயிற்றுவிக்கும் விதத்திலான பாடுகளின், அளவான பாடுகளாக இருப்பது அவசியமாயுள்ளது. சபை நீதியில் பூரணமடைவதற்கு மட்டுமே அழைக்கப்படாமல், இயேசுவின் சரீர அங்கத்தினர்களெனக் கிறிஸ்துவோடு ஆசாரிய பொறுப்புகளில் பங்கெடுப்பதற்காகவும் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்பதினால், அவர்களும் அவமானங்களிலும், பலியிலும், மரணபரியந்தமும் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். இப்பொழுது இந்த யுகத்தில், அவருக்குக் கீழ்ப்படிவதே மேற்கூறியவைகள் அனைத்தையும் குறிப்பதாய் இருக்கும்; ஏனெனில் நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 4:3

இந்த மகாபெரிய பிரதான ஆசாரியரிடம் நம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்கையில், அவருடைய அன்பையும், அவருடைய குணம் மற்றும் நோக்கத்தின் பூரண வாய்மையையும், உன்னதமான அவருடைய ஞானமும் மற்றும் கிருபையும் முழுமையாகப் பெறக்கூடிய உறுதியைச் சபை பெறுகிறது மற்றும் சகல காரியங்களிலும் நற்குணம், அன்பு மற்றும் பரந்தமனப்பான்மையின் மேன்மையான மற்றும் பரிசுத்தமான கோட்பாடுகளினால் அவர் இயக்கப்படுகின்றார் என்ற உறுதியைச் சபை பெறுகிறது. அவர் மூர்க்கமானச் சோதனைகளினால் தாக்கப்பட்டபோதிலும், அவர் பூரணத்தினின்று கொஞ்சமும் விலகிடவில்லை. அவருடைய குணத்தின் ஒவ்வொரு காட்சியும் மற்றும் சாட்சியும் முழுமையான நம்பிக்கையை நமக்குள் தூண்டுகின்றபடியால், அவருக்குக் கீழ்ப்படிவது என்பது ஒவ்வொரு அடியெடுத்து வைத்தலிலும், பூரணத்திற்கு நேரான நம்முடைய முன்னேறுதலைக் குறிக்கின்றதாய் இருக்கும். இப்படிப் பின்பற்றக்கூடிய ஒவ்வொருவருக்கும் அவர் “நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராயிருக்கின்றார்”. பாவம் இல்லாதவரும், எந்தக் குறைப்பாடுகள் இல்லாதவரும், பலவீனங்களை உணரக்கூடியவரும், தம்முடைய பூரணத்தில் மகிமையானவரும், தாம் பெற்ற பொறுப்புகளில் மகிமையானவராகவும் இருக்கக்கூடிய இப்படிப்பட்ட பிரதான ஆசாரியருக்காகத் தேவனுக்கு நன்றி செலுத்துவோமாக. ஒருவேளை அவர் அபூரணமான மனுஷராக, சில மேன்மையான தகுதிகளை மட்டுமே கொண்டவராக, நம்மைப்போல தவறுகள் செய்வதற்கு உட்பட்டவராக, கணிப்பில் குறைவுள்ளவராக, சுயநலத்தோடு அல்லது கீழ்த்தரமான செயல்முறை கொள்கைகளோடு செயல்படுபவராக அல்லது அவருடைய கண்களிலிருக்கும் உத்திரத்தை உணராமல் மற்றவரின் கண்களிலிருக்கும் துரும்பை அகற்றும் முயற்சிகளை ஏறெடுக்கக்கூடியவராக இருந்தால், அவர் காட்டும் வழியில் நம்மை நாம் ஒப்படைப்பதற்கு நிச்சயமாகப் பயப்பட்டிருந்திருப்போம் மற்றும் இப்படிப்பட்ட பிரதான ஆசாரியரை சர்வ வல்லமையுள்ள தேவன் ஏன் கொடுத்தார் என்றும் ஆச்சரியபட்டிருந்திருப்போம்! ஆனால் நம்முடைய பிரதான [R1808 : page 109] ஆசாரியர் அப்படிப்பட்டவரல்ல. அவருடைய பூரணத்தைக்குறித்து யேகோவா தேவன்தாமே சாட்சிகொடுத்திருக்கிறார் மற்றும் நமக்கான அவருடைய மாபெரும் அன்பானது, ஆயிரக்கணக்கான வழிகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது; அதில் பிரதானமாக அவர் தம்மையே நமக்காகக் கொடுத்ததிலாகும்.

அவர் மாம்சத்தில் வருவதற்கு முன், எப்பொழுதும் நீதியின் பிரமாணமாகவே காணப்பட்ட – தேவனுடைய சித்தம் செய்வதில் நம் ஆண்டவர் கொண்டிருந்த உண்மைக்கு ஆதாரமானது, சிருஷ்டிப்பின் வேலைகளிலும் மற்றும் அதைச் சார்ந்த வேலைகளிலும் தேவனோடு இணைந்து செயல்படும் ஒவ்வொரு பணியிலும் மனமகிழ்ச்சியோடு அவர் கிரியைச் செய்தார் என்பதில் விளங்குகின்றது. மனித நிலைக்கு தம்மைத் தாழ்த்துவது, இப்படிப்பட்ட உன்னதமான பணியிலிருந்து கீழே இறங்குவதாகும்; ஆயினும் இதை மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் செய்தார். அதற்குப் பின் பூமிக்குரிய அவருடைய சோதனைகள் வந்தது. இறுதியாக கெத்செமனே மற்றும் கல்வாரியின் கடுமையான சோதனைகள் வந்தது. இங்கு தேவனிடத்திலான அவரது உண்மைக்கான ஒரு சோதனை, அதாவது அவருக்கு உண்டான யாவையும் தியாகம்பண்ணி உண்மையை நிரூபிப்பதற்கான ஒரு சோதனை வந்தது. இதைக் கடந்த பிற்பாடு, ஞானமுள்ளவரும், அன்புள்ளவரும், வல்லமையுள்ளருமான தேவனிடம் ஆண்டவர் தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்து, தேவனுடைய அன்பு மற்றும் இரக்கத்தினால் தாம் இரட்சிக்கப்படுவதற்கு எதிர்பார்த்தவரானார் (லூக்கா 23:46). இது உண்மையில் ஒரு கடுஞ்சோதனையாக இருந்தபோதிலும், அந்த நேரத்தில் இந்தச் சோதனையின் ஒவ்வொரு அம்சத்தினுடைய தேவையைக் குறித்து அவரால் காண முடியாதபோதிலும், (மத்தேயு 28:39, 42, 44) தம்முடைய நேசகுமாரனைத் துன்பப்படுத்தும் தேவையற்ற வலியை அனுமதியாதளவுக்குத் தேவனுடைய அன்பு மிகவும் பெரிது என்பதை அவர் அறிந்திருந்தார் மற்றும் இதனால் தேவனுடைய வழிகளை அவ்வேளையில் அவரால் புரிய முடியாதபோதிலும், இயேசு தேவன்மேல் முழு நம்பிக்கைக்கொண்டார்.