R1794 – நமது கர்த்தருடைய நிழலான வெற்றி

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1794 (page 85)

நமது கர்த்தருடைய நிழலான வெற்றி

OUR LORD'S TYPICAL TRIUMPH

மத்தேயு 21:1-17; லூக்கா 19:29-48; யோவான் 12:12-19; மாற்கு 11:1-11

“ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்.” மாற்கு 11:9

இப்பாடம் நம்முடைய மனங்களை, நமது கர்த்தருடைய மாம்ச ஜீவியத்தின் கடைசி நாட்களில் நடந்திட்ட வேதனையான சம்பவங்களுக்கும், அவருடைய மனுஷீக ஜீவன் அவர் சிலுவையில் அறையப்படுவதன் மூலமாய் முடிவடைந்ததற்கும், பின்னர் மரணம் மற்றும் பாதாளத்தின் திறவுகோல்களை உடையவராகவும், இரட்சிப்பதற்கும் வல்லமையுள்ளவராகவும் காணப்பட்ட உயிர்த்தெழுந்த கர்த்தரிடத்திற்கும் படிப்படியாகக் கொண்டு செல்கின்றது. முந்தின பாகத்தில் அவருடைய அற்புதங்களினால் ஈர்க்கப்பட்டு, அவருடைய போதனைகளைக் குறித்து ஆச்சரியமடைந்து, அவருடைய போதனைகளினால் கவரப்பட்டுக் காணப்பட்ட ஜனங்கள் மத்தியில் அவர் பிரபலமடைந்து வருவது அதிகரித்து வருவதைப் பார்த்தோம். ஜனங்களோடுகூட, அவருடைய வாயினின்று புறப்பட்டு வந்த கிருபையான வார்த்தைகளினிமித்தம் நாமும் ஆச்சரியமடைந்து இருந்தோம், மற்றும் அவருடைய வார்த்தைகளை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தோம்; மேலும் தேவனுடைய ஆவியானது, நமக்கு அவருடைய ஆலோசனையாகிய தைலத்தை அளித்தபோது, நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளாகக் கொழுந்துவிட்டு எரிந்தன. இப்பொழுது நாம் அவருடைய மனுஷீக ஜீவியத்தின் கடைசி சில நாட்களுக்குள்ளாக, அவரோடுகூட மனதளவில் பிரவேசிக்கையில் அந்த வேதனையான சம்பவங்கள் நம்முடைய இருதயங்களை, நமக்காக அனைத்தையும் இலவசமாய்ப் பலியாக்கின அவருடைய ஐசுவரியமான அன்போடும், பரிவோடும் நெருங்கின உறவிற்குள்ளாகவும், புரிந்துகொள்ளுதலுக்குள்ளாகவும் கொண்டுவருவதாக.

[R1795 : PAGE 85]

மேசியா என்று உரிமைப்பாராட்டின விஷயத்தின் உண்மைக்குச் சாட்சி பகர்ந்திட்ட அவருடைய 31/2 வருடக் காலப்பகுதிக்கொண்டதும், லாசருவை மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பினதோடு நிறைவடைந்ததுமான, அவருடைய பொதுப்படையான போதனைகளும், வேலைகளும், வெற்றிகரமாய் முடிந்தது போன்று காணப்பட்ட தோற்றமானது, அவருடைய சீஷர்கள் மற்றும் இஸ்ரயேலர்களில் பலரின் நம்பிக்கைகளை உயிரோட்டம் அடையச் செய்தது; அதாவது இப்பொழுது தங்கள் இராஜா, தங்கள் மேசியாவாக உண்மையாய் வந்துள்ளார் என்றும், தீர்க்கத்தரிசிகளால் முன்னுரைக்கப்பட்டிருந்த இஸ்ரயேலின் மகிமை சீக்கிரத்தில் உணரப்படும் என்றும் எண்ணினார்கள். இப்படியாகப் பொது ஜனங்களுடைய மனநிலை இருக்கையில், தாம் இராஜ ஸ்தானத்தை எடுக்க பொதுப்படையாக முயற்சிப்பதன் மூலம், சகரியா 9:9-ஆம் வசனத்தின் தீர்க்கத்தரிசனத்தை நிறைவேற்றுவதற்காக தமக்கு வாய்ப்பு இருப்பதைக் கர்த்தர் கண்டார். சூழ்நிலைகள் சாதகமாய் இருந்தது மாத்திரமல்லாமல், வேளையும் வந்திருந்தது.

தேவன் அவர்களுடைய பிதாக்களுடன் பண்ணின உடன்படிக்கையின்படி, இராஜ்யத்தின் சுவிசேஷமானது முதலாவதாக யூதர்களுக்கே கொடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் தேசமாகவே சுவிசேஷத்தை உணர்ந்துகொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ மாட்டார்கள் என்பதை முன்னமே தேவன் அறிந்திருந்தார்; மற்றும் ஜனங்களில் கொஞ்சமானவர்கள் மாத்திரமே கிருபையின் உடன்படிக்கைக்குத் தகுதியானவர்களாக இருப்பார்கள் என்றும், மீதமானவர்கள் (அவர்களுடைய தவறானக் கருத்துக்களினாலும், இருதயக் கடினத்தினாலும்) குருடாக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள் என்றும், மாபெரும் உடன்படிக்கையின் ஆசீர்வாதமானது புறஜாதியார்களில் சிலரால் உணர்ந்துகொள்ளப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்படுகையில், இந்தப் புறஜாதியார்கள் ஆபிரகாமின் சந்ததியாராகக் கருதப்படுவார்கள் என்றும், தேவன் தம்முடைய தீர்க்கத்தரிசி மூலமாய் முன்னறிவித்துள்ளார். இந்தப் புறஜாதியிலிருந்து வந்தவர்கள், மாம்சத்தின்படி ஆபிரகாமின் பிள்ளைகளாய் இராமல், மாறாக ஆவியின்படி, ஆபிரகாமின் விசுவாசத்தைப் பெற்றிருப்பதினால் ஆபிரகாமின் பிள்ளைகளாய் இருப்பார்கள்; ஏனெனில் தேவன் கல்லிலிருந்துக்கூட ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை எழுப்ப வல்லவராக இருக்கின்றார் என்று இயேசு கூறினார். ரோமர் 9:27; ஏசாயா 10:22,23; ரோமர் 11:7,11,12; அப்போஸ்தலர் 13:46; கலாத்தியர் 3:9,16,28,29; மத்தேயு 3:8,9-ஆம் வசனங்களைப் பார்க்கவும்.

தேவன் இஸ்ரயேல் ஜனங்களுடைய பிதாக்களுடன் பண்ணின இந்த உடன்படிக்கையின் காரணமாகவும், மற்றும் மற்றத் தீர்க்கத்தரிசனங்களுடைய அறிவுறுத்தலின் காரணமாகவும், இயேசு தம்மை மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு முன்னதாக, அவர்களுடைய இராஜாவென முன்வைத்தார்; ஆயினும் ஜனக்கூட்டத்தார் அவருக்கு இராஜரிகமான வரவேற்புக் கொடுத்து, ஓசன்னாக்கள் கூறி, வந்தனம் சொல்லி வரவேற்றாலும், அவர்களுடைய தவறான போதகர்களால், அவர்களுடைய நிலையற்ற மனங்கள் தடுமாறும் என்றும், எதிர்ப்பு வரும்போது, ஜனங்கள் தாங்கள் கூறின வந்தனங்களுக்கு ஏற்ப நடக்க விருப்பமற்று இருப்பார்கள் என்றும், இன்னும் சில நாட்களுக்குள்ளாக, “இவரைச் சிலுவையில் அறையும்! இவரைச் சிலுவையில் அறையும்!” என்று கூக்குரலிடுவார்கள் என்றும் இயேசு அறிந்திருந்த போதிலும், தம்மை அவர்களுக்கு முன்பாக இராஜாவென முன்வைத்தார். (யோவான் 12:1,12,13; 19:6,7,14,15)

விளைவு/முடிவு என்னவாக இருக்கும் என்று அறிந்திருந்த போதிலும், ஏன் இப்படி இயேசு இராஜரிக அதிகாரத்தை எடுத்துக்கொள்ளும், இந்தச் செயல்பாட்டைச் செய்தார்? என்று கேள்வி [R1795 : page 86] கேட்கப்படலாம்; வரவிருக்கிற நன்மையான காரியங்களுக்கான மாபெரும் நிழல்களின் ஒரு பாகமாகவே, இச்செய்கை செய்யப்பட்டது என்று நாம் அப்போஸ்தலர்களுடைய போதனைகளை வைத்துக்கொண்டு பதில் தெரிவிக்கின்றோம்.

இப்படியாக இயேசு எருசலேமுக்குள் வெற்றி விஜயம் கொடுத்ததும், அதன் காலக்கணக்குக் காரியமும், யூத யுகத்திற்கான நிஜமாய்க் காணப்படும் இந்தச் சுவிசேஷ யுகத்தின் முடிவில், கிறிஸ்து இராஜாவாக வருவதைச் சித்தரித்துக் காண்பிக்கின்றது; யூத யுகமும், சுவிசேஷயுகமும், காலங்கள் மற்றும் சம்பவங்கள் விஷயத்திலும் இணையானவைகளாக இருக்கின்றன (தொகுதி 2, அத்தியாயம் 7 பார்க்கவும்). இந்த இணையின்படி கி.பி. 1878 எனும் வருடமானது, இந்த யுகத்தின் இராஜாவாகிய நம்முடைய உயிர்த்தெழுந்த கர்த்தர், தம்முடைய மாபெரும் வல்லமையை எடுத்துக்கொள்வதற்கும், தம்முடைய ஆளுகையை ஆரம்பிப்பதற்குமான காலமாக இருக்கின்றது.

இது நிறைவேறியுள்ள உண்மையாக இருக்கின்றபடியினால் இதை நாம் தயக்கம் இல்லாமல் தெரிவிக்கின்றோம். தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவர் மற்றும் சபையின் கீழ், பூமியில் தேவனுடைய இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதற்கான காலம் சமீபித்துள்ளது என்பதற்கு, அதிக உறுதியான தீர்க்கத்தரிசனங்களில், நமக்கு மிகுதியான நிரூபணங்கள் காணப்படுகின்றன (தொகுதி 2 மற்றும் 3 பார்க்கவும்). இந்த உண்மைக்குக் கிறிஸ்தவர்கள் மாத்திரமல்லாமல், முழு உலகத்தாரும்கூட, கேட்பதற்கும், செவிசாய்க்கும் அளவுக்கும் ஞானமுள்ளவர்களாய்க் காணப்படுவார்களானால், இன்னும் திரளான சத்தியங்களுக்கு வழி நடத்தப்படுவார்கள்.

அநேகர் அவரது வருகை பற்றின தவறான கருத்துக்கள் கொண்டிருப்பதினால், கர்த்தருடைய பிரசன்னம் பற்றின உண்மைக்குக் குருடர்களாய் இருக்கின்றார்கள் என்பது வேதவாக்கியங்களில் தெளிவாய்ச் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது. அவரை மாம்சத்தில் பார்க்கலாம் என்றும், மாம்ச கண்களுக்குப் புலப்படும் விதத்தில் சொல்லர்த்தமான மேகங்களில், சொல்லர்த்தமான எக்காளத்தின் சத்தத்தினால் அவரது வருகை அறிவிக்கப்பட்டு, அவர் வருவார் என்றும் அநேகர் எதிர்ப்பார்த்திருப்பதினால், அவர் மாம்சத்தில் இல்லாமல், மாறாக மாம்ச கண்களுக்குப் புலப்படாத ஆவியின் ஜீவியாகவும், அதே வேளையில் அதிக உறுதியான தீர்க்கத்தரிசன வார்த்தைகள் மூலமாக, விசுவாசக் கண்களுக்குத் தெளிவாய்ப் புரிந்துகொள்ளத்தக்கதாகவும், வந்து இப்போது இருக்கின்றார் என்பதையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை; மற்றும் முழு உலகத்தின் மீது இருளை இப்பொழுது மிக விரைவாக அளித்துக்கொண்டிருக்கும் உபத்திரவமாகிய மேகங்கள் மத்தியில், அவரது வந்திருத்தலையும், வல்லமையும் உணர்ந்துகொள்ள முடியாமலும் காணப்படுகின்றனர். எனினும் இவைகள் அனைத்தும் கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொண்டவர்கள் யாவருக்கும், மிக முக்கியமான உண்மைகளாக இருக்கின்றது. “உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்” என்ற வார்த்தைகள் உண்மையுள்ளவர்களாகிய உங்களுக்கே சொல்லப்பட்டுள்ளது (லூக்கா 21:28). அனலுமின்றி, குளிருமின்றிப் போயுள்ள, கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிக்கைப் பண்ணிக்கொள்பவர்களுக்கும், மற்றும் ஒடுக்கப்படுபவர்களின் கூக்குரல்களையும், துன்பப்படுபவர்களின் துயரத்தையும் பொருட்படுத்தாமல், உலக இன்பங்களினால் தங்கள் ஆத்துமாக்களுடைய ஆசைகளைத் திருப்திப்பண்ண நாடுபவர்களாகிய உலகப்பிரகாரமானவர்களுக்கும், “யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்” என்ற வார்த்தைகள் சொல்லப்பட்டுள்ளது. (தானியேல் 12:1)

“என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள்” (மத்தேயு 21:13) என்று சொல்லி, ஆலயத்தில் காசுக்காரர்களுடைய பலகைகளைக் கவிழ்த்துப்போட்டதான கர்த்தருடைய அதிகாரப் பூர்வமான செய்கையானது, நிழலான செய்கையாகும்; இது இந்த யுகத்தினுடைய முடிவில், தேவனுடைய வீட்டார் என்று அறிக்கைப் பண்ணுகிறவர்களிடத்தில் ஆரம்பிக்கும் நியாயத்தீர்ப்பையும், சத்தியத்தை வியாபாரம் பண்ணுபவர்களுக்கு எதிரான அவருடைய மாபெரும் கோபத்தையும், சுட்டிக்காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. (மத்தேயு 21:12,13; 1 பேதுரு 4:17)

பின்னர் ஆலயத்திற்கு அவரோடு வந்திருந்த குருடர்களையும், சப்பாணிகளையும் அவர் சொஸ்தப்படுத்துகின்ற காரியமானது, எவ்வாறு சபையில் ஆவிக்குரியவற்றில் குருடர்களாயும், சப்பாணிகளாயும் இருந்திட்டவர்கள், அவருடைய சுகமாக்கும் தொடுதலினால் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதைச் சுட்டிக்காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. “குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.” (மத்தேயு 21:14; வெளிப்படுத்தல் 3:18,19)

(இன்றும் கர்த்தரினால் சொஸ்தப்படுத்தப்பட்ட குருடர்களுக்கும், சப்பாணிகளுக்கும் எதிராக பிரதான ஆசாரியர்கள் போன்றதான தலைமை குருக்கள் இருப்பது போன்று) பிரதான ஆசாரியர்கள், புதிய இராஜாவை மகிமைப்படுத்தினவர்களுக்கு எதிராக, தங்களது எரிச்சலை வெளிப்படுத்தினபோது, இயேசு: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறினார். (லூக்கா 19:40) ஏன்? காரணம், சகரியா தீர்க்கத்தரிசியானவர் இந்தக் கெம்பீரிப்பையும், களிகூருதல்களையும் பற்றி முன்னமே கூறியுள்ளார். (சகரியா 9:9) மற்றும் இப்பொழுது வேளை வந்துள்ளது, மற்றும் தீர்க்கத்தரிசனமும் நிறைவேறினது; “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்;” இது அப்போது நிழலாய் இருந்தது மற்றும் இப்பொழுது நிஜமாய் இருக்கின்றது. கெம்பீரிப்பும், களிகூருதலும் அப்போது இருப்பது அவசியமாய் இருந்ததானால், இப்போதும் அவசியமானதேயாகும். இராஜாவை இப்பொழுது தங்கள் மத்தியில் காணப்படுபவராக, அடையாளம் கண்டுகொள்பவர்களாகிய பரிசுத்தவான்கள் மத்தியில் இப்பொழுது காணப்படும் சந்தோஷம் மாபெரியதேயாகும்; மற்றும் அவருடைய வந்திருத்தலையும், இராஜ்யத்தையும் குறித்ததான அவர்களது பறைச்சாற்றுதலானது கெம்பீரிப்பாக இருக்கின்றது; இந்தக் கெம்பீரித்தலானது விசுவாசிக்கப்படவில்லை என்றாலும், தொனித்துக்கொண்டிருக்கின்றது. ஆண்டவர், “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா” (மத்தேயு 21:16) என்று கூறினார். இதன் நிஜமும் இப்படியாகவே இப்பொழுது காணப்படுகின்றது. ஏனெனில் இராஜாவின் வந்திருத்தல் குறித்தும், அவருடைய வல்லமை குறித்துமான அடையாளம் கண்டுகொள்ளுதலினால் எழும்பும் ஓசன்னா, இன்றுள்ள பிரதான ஆசாரியர்கள் மற்றும் மத குருமார் வகுப்பாரிடமிருந்து எழும்பாமல், மாறாக சாதாரணமான ஜனங்களாகிய குழந்தைகள் மற்றும் பாலகருடைய வாயிலிருந்தே துதிக் கேட்கப்படுகின்றது; “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! ஆளுகை செய்வதற்கும், இப்பொழுது தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபித்துக் கொண்டிருப்பவருமாகிய தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!” என்று துதிக் கேட்கப்படுகின்றது.