R1809 – பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1809 (page 110)

பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு

JESUS BEFORE THE HIGH PRIEST

மாற்கு 14:53-64; மத்தேயு 26:47-75; லூக்கா 22:47-65; யோவான் 18:2-27

“அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாயிருந்தார்.” ஏசாயா 53:3

மாற்கு 14:53. இயேசு முதலாவதாக அன்னாவிடம் கொண்டு செல்லப்பட்டார் (யோவான் 18:13); அன்னா என்பவர் ரோமர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், பிரதான ஆசாரியனுக்குரிய ஸ்தானமானது, வாழ்நாள் முழுவதுமுள்ள ஸ்தானமானபடியால், இவர்தான் நியாயப்பிரமாணத்தின்படி நியாயமாய்ப் பிரதான ஆசாரியனாய்க்காணப்பட வேண்டியவர் ஆவார் மற்றும் அன்னா இவ்வாறாகவே யூதர்களால் அநேகமாகக் கருதப்பட்டிருந்தபடியாலே, அவரிடத்தில் ஆலோசனைக்காக முதலாவது நாடப்பட்டது. இவரது மருமகன் (அதாவது ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று தீர்க்கத்தரிசனம் உரைத்தவருமாகிய யோவான் 18:14) காய்பா, ரோமர்களால் நியமிக்கப்பட்டுத் தற்போது பணியாற்றிக்கொண்டிருந்த பிரதான ஆசாரியனாய்க் காணப்பட்டார். (மத) அதிகாரிகள் கொண்டிருந்த உணர்வுகளோடு அன்னா ஒருமனப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிகின்றது மற்றும் இயேசுவிடம் அவரது போதகங்கள் குறித்தும், அவரது சீஷர்கள் குறித்தும் சில கேள்விகள் கேட்ட பிற்பாடு, அவரைக் காய்பாவிடம் கட்டுண்டவராக அனுப்பிவைத்தார் (யோவான் 18:19-24).

இரவு நேரத்தில் மரணத்தண்டனைக்கு ஏதுவான குற்றங்களுக்கான விசாரணையை நடத்துவதற்கு, யூதருடைய நியாயப்பிரமாணமானது அனுமதி வழங்காததினாலும், அதுவும் அன்று பஸ்கா இராப்போஜனத்தினுடைய இரவாக இருந்தபடியால், அப்படியானதொரு விசாரணை மேற்கொள்ளப்படுவது என்பது, இன்னும் மறுப்பிற்கிடமானதாக இருந்தபடியால், அத்தேசத்தின் பிரதிநிதிகள் தேவனால் அபிஷேகிக்கப்பட்ட தங்கள் மேசியாவை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கும் குற்றத்தில் பங்கெடுக்கத்தக்கதாக, சம்மதத்தோடு ஒன்றுகூடி வந்த இந்தக் கூடுகையானது, சட்டத்திற்கு எதிரான கூடுகை என்பது தெளிவாய்த் தெரிகின்றது. இந்தக் கூடுகையிலிருந்து அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு, நிக்கொதேமு போன்ற சில மனிதர்கள் நிச்சயம் கவனமாய்த் தள்ளிவைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும் மற்றும் புதிய போதகருக்கு (இயேசுவுக்கு) ஆதரவானவர்கள் என்று அறியப்பட்டிருந்த இன்னும் சிலரும் அநேகமாக தள்ளிவைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். இவர்கள் இக்காரியங்கள் குறித்து அநேகமாய் எதுவும் அறியாமல் காணப்பட்டிருக்க வேண்டும் (யோவான் 19:38,39; 7:50,51).

வசனங்கள் 55-59. எத்துணை ஆச்சரியப்படத்தக்கதான உண்மை இங்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது: அதாவது பூமியிலேயே மிகவும் கடாட்சிக்கப்பட்ட/தயவு பாராட்டப்பட்டதான ஜாதியினுடைய மாமனிதர்கள், கல்வியறிவுள்ள மனிதர்கள், ஞானவான்கள், அதிகாரிகள், வயதானவர்களும், அனுபவசாலிகளுமான மனிதர்கள், மதப் போதகர்கள், உலகம் கண்டதிலேயே தூய்மையானவராகவும், மிகச் சிறந்த பண்புகள் உடையவராகவும் காணப்படுகின்ற ஒருவருக்கு எதிராக இப்படியாய் வேண்டுமென்றும், நீண்டகாலமாய் முன்கூட்டியே திட்டமிட்டும், பொல்லாப்பாய்க் கூட்டுச் சதி ஆலோசனை பண்ணினது தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பொதுவிடங்களில் உபதேசிக்கையில், அவரது வார்த்தைகளினாலேயே, அவரை அகப்படுத்தும்படிக்கு இரகசிய பிரதிநிதிகளை அவர்கள் அடிக்கடி அனுப்பிவைத்தது மாத்திரமல்லாமல், இயேசுவைக் காட்டிக்கொடுக்கத்தக்கதாக, உண்மையற்ற ஓர் அப்போஸ்தலனுக்கும் மற்றுமாக அவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல் இருந்தபோதிலும், அவரைக் கைதுபண்ணத்தக்கதாக ஓர் ரோமப் போர்ச்சேவகக் குழுவினருக்கும் இறுதியில் இலஞ்சம் கொடுத்தார்கள். அடுத்ததாக, இந்த மரியாதைக்குரிய, கல்வியறிவுள்ள, மேன்மைமிக்கக் கூட்டத்தார், தாங்கள் பகைத்திட்டதான கைதியைக் கைதுசெய்த பிற்பாடு, அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கத்தக்கதாக, நியாயப்பிரமாணம் எதிர்ப்பார்க்கின்ற பிரகாரமாய் ஒன்றுக்கொன்று இசைவாய்க் காணப்படுகின்றதான இரு சில சாட்சிகளைக் கண்டுபிடிப்பதில் விறுவிறுப்பாய்க் காணப்பட்டார்கள் (உபாகமம் 19:15). அவருக்கு எதிராய் விருப்பத்தோடு பொய்ச்சாட்சிச் சொன்னவர்கள் அநேகரைக் கண்டுபிடித்தார்கள், ஆனால், எவருடைய சாட்சியும் ஒன்றோடொன்று இசைவாய்க் காணப்படவில்லை.

வசனங்கள் 60-62. நியாயப்பிரமாணம் எதிர்ப்பார்க்கும் இக்காரியத்தினை அவர்கள் திருப்திபண்ணிட முடியாதபோது, பிரதான ஆசாரியன் இயேசு தம்மையே குற்றவாளியென்று காண்பிக்கத்தக்கதாக, அவரை வற்புறுத்துதலுக்குள்ளாக்கும் வண்ணமாக, “இவர்கள் உமக்கு விரோதமாய்ச் சாட்சிச் சொல்லுகிறதைக்குறித்து, நீர் ஒன்றும் சொல்லுகிறதில்லையா?” என்று கேட்டார். ஆனால் இயேசுவோ உண்மையானது அத்தருணத்தில் விரும்பப்படவில்லை என்றும், தங்களுடைய இருதயத்தில் கொலைப்பாதகத்தை நன்கு சீராட்டி வைத்திருக்கும் இந்த மனுஷர்களுக்கு, தாம் பேசும் உண்மை பொருட்டாய் இராது என்றும் அறிந்தவராக, (ஞானத்துடன்) அமைதி காத்து, எதுவும் பேசாமலிருந்தார். இன்னுமாகத் தம்முடைய ஜீவனைப் பலிச்செலுத்துவதற்கான தமது வேளை வந்துள்ளது என அவர் அறிந்திருந்தபடியால், அவர் தம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையிலும் இல்லை. ஆனால் “நீர் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்கப்பட்டதன் வாயிலாக, அவர் தம்மை வெளிப்படுத்துவதற்கு வலியுறுத்தப்பட்டபோது, தமது பதிலானது, தம்முடைய மரணத்தை உத்தரவாதமாக்கிடும் என்பதை அறிந்தவராக, அவர் நிதானமாய் “நான் அவர்தான்” என்று கூறி, “மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்ற தீர்க்கத்தரிசனத்தையும் கூறினார்.

இந்தத் தீர்க்கத்தரிசனமானது அவரது மரணம் மற்றும், உயிர்த்தெழுதலின் நிச்சயத்தைச் சுட்டிக்காட்டினது மற்றும் இன்னுமாக சுவிசேஷயுகத்தினுடைய முடிவில் அவர் வல்லமையிலும், மகா மகிமையிலும், அதாவது அவரது இராஜ்யத்தினுடைய வல்லமையிலும் மற்றும் மகிமையிலும் திரும்பி வருதலைச் சுட்டிக்காட்டுகின்றதாகவும் இருந்தது; இந்த இராஜ்யத்தைக் குறித்து, அது இவ்வுலகத்தினுடையதாகவோ (அ) சாத்தான் பிரபுவாகக் காணப்படுகின்றதான இந்த யுகத்தினுடையதாகவோ இராமல், நீதி வாசம் பண்ணுகின்ற இனிவரும் உலகத்தினுடையதாய் இருக்குமென அவர் முன்னமே வலியுறுத்திக் கூறியுள்ளார் (யோவான் 14:30; எபிரெயர் 2:5; 2 பேதுரு 3:13).

தாம் தேவனால் பிறந்தவர் என்றும், தாம்தான் நீண்டகாலமாய் முன்னுரைக்கப்பட்டு வந்த மேசியாவாக, இஸ்ரயேல் மற்றும் உலகத்தினுடைய இரட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றுமுள்ள அவரது இந்த வெளிப்படையான மற்றும் பயமற்ற ஒப்புக்கொள்ளுதலானது, தேவதூஷணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது மற்றும் மாய்மாலமான பிரதான ஆசாரியனோ, தீர்க்கத்தரிசிகளினால் முன்னுரைக்கப்பட்டதான எழுத்துக்களை நிறைவேற்றுகிறவராக, தங்கள் மத்தியில் நின்றுகொண்டிருக்கின்றதான ஸ்தோத்திரிக்கப்பட்டவருக்கு அடையாளமான தனது வஸ்திரத்தை, இப்படியானதொரு தேவதூஷணத்தைக்கேட்டு அதிர்ச்சியும், நடுக்கமும் அடைந்ததாகக் காண்பிக்கும் வண்ணமாகக் கிழித்தார் மற்றும் “இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவ தூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றார். அதற்கு அவர்களெல்லாரும் இவர் (லேவியராகமம் 24:16; உபாகமம் 18:20-இல் பரிந்துரைக்கப்பட்டபடி தேவதூஷணத்திற்குரிய தண்டனையாகிய) [R1809 : page 111] மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறார் என்று தீர்மானம் பண்ணினார்கள்.”

இப்படியாக யூத அமைப்பானது, அவிசுவாசம் மற்றும் குற்றம் எனும் குழிக்குள்/சாக்கடைக்குள் விழுந்தார்கள் மற்றும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் விஷயத்திலும், அவரை நிராகரிக்கும் விஷயத்திலும் ஜனங்கள் – பரிசேயர்களில் அல்லது அதிகாரிகளில், எவரேனும் அவரை விசுவாசிக்கின்றார்களா எனக் கருதி பார்த்ததினால் — ஜனங்கள் தங்கள்மேல் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவர்களாய்க் காணப்பட்டு, அதிகாரிகளோடுகூட குழிக்குள் விழுந்து, “இவரது இரத்தப்பழி எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக” என்று சத்தமிட்டார்கள். “மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் (அவரது சத்திய வார்த்தைகளின் பேரில்) பற்றுதலாயிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்” என்று சங்கீதக்காரன் நன்றாய்ச் சொல்லியிருக்கின்றார் (சங்கீதம் 118:8,9). இதற்கு (யூத யுகத்திற்கு ஒத்த) சுவிசேஷயுகத்தில், தற்காலத்தில் காணப்படுகின்றதான கிறிஸ்தவர்கள் கவனம் செலுத்துவார்களாக; சத்தியமானது அதன் ஏற்றக்காலத்தில் மீண்டுமாக வெளிப்படுகையில், இது தேவனுடைய ஜனங்கள் என்று தங்களை அறிக்கைப் பண்ணியுள்ளவர்களை நெருக்கடிக்குள்ளாகக் கொண்டுவந்து, அவனவனுடைய (விசுவாசத்தின்) வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று பரிசோதிக்கின்றதாய்” இருக்கின்றது. நாம் மனித ஆதரவுகளின் மீது சாய்வோமானால், நாம் நிச்சயமாய் விழுந்துபோவோம்; ஆனால் கர்த்தருடைய வார்த்தையோ என்றென்றும் தாங்கும் தன்மையுள்ளதாகும்.