R2743 – நறுமணம் வீசிய தைலம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2743 (page 376)

நறுமணம் வீசிய தைலம்

A PERFUME OF SWEET ODOR

மத்தேயு 26:6-16
“அவளால் முடிந்ததைச் செய்தாள்.”

முந்தின பாடங்களானது எருசலேமுக்கு, எரிகோ வழியாக நமது கர்த்தர் பிரயாணம் பண்ணுகையில் நடந்திட்ட நிகழ்வுகளை நமக்குக் காண்பித்ததாய் இருக்கின்றது அதாவது வழியருகே காணப்பட்ட குருடான மனுஷன் சொஸ்தப்படுத்தப்படுகின்றான்; சகேயுவுடனான உரையாடல் நடைபெறுகின்றது மற்றும் பிரபுவானவன் பற்றின உவமை கொடுக்கப்படுகின்றது; எருசலேமுக்கு அண்மையில் காணப்பட்டனர் மற்றும் சீஷர்களும், ஜனங்களில் அவர்கள் அநேகரும், தேவனுடைய இராஜ்யமானது உடனடியாக வெளிப்படும், அதாவது பூமிக்குரிய பிரமாண்டத்துடன் ஸ்தாபிக்கப்படும் என்று எதிர்பார்த்துக் காணப்பட்டனர். எரிகோவிலிருந்து, எருசலேம் இருபது மைல் தூரமாக இருந்தது. (மரித்தோரிலிருந்து ஆண்டவர் எழுப்பிய) லாசரு மற்றும் அவருடைய இரண்டு சகோதரிகளாகிய மார்த்தாள், மரியாள் வசித்த பெத்தானியா, எருசலேமுக்கு அருகாமையில் [R2743 : page 377] இருந்தது. அவர் மாம்சத்தில் தம்முடைய கடைசி ஓய்வுநாளை அவர்களின் வீட்டில் அனுசரிப்பதற்கு முடிவு செய்தார். யூத பிரமாணத்தின்படி ஓய்வுநாளை அவர்கள் அனுசரித்து, அந்த நாள் சந்தோஷத்துடன் முடிவடைந்தது என்று நாம் எண்ணுகின்றோம். ஆயினும், அந்நாளில் நடந்த பல சம்பவங்கள் மீது கவனம் செலுத்தப்படாமல், மாலை நேரத்தில், சூரியன் அஸ்தமித்தப்போது, ஓய்வுநாள் முடிவடையும் நேரத்தில், வாரத்தின் முதலாம் நாள் ஆரம்பிக்கும் வேளையில் அங்கு நடத்தப்பட்ட இராவிருந்தின் மீதே விசேஷித்த கவனம் செலுத்தப்பட்ட விதத்தில் பதிவுகள் காணப்படுகின்றது.

அந்த விருந்து குஷ்டரோகியாகிய சீமோனின் வீட்டில் நடத்தப்பட்டது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் சீமோனைக்குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஒருவேளை அவர் மரித்திருக்கலாம். இந்தச் சீமோன் என்பவர், லாசரு, மார்த்தாள், மரியாளுடைய தந்தையாகவோ அல்லது விதவையான மார்த்தாளின் கணவராகவோ இருந்திருக்கக் கூடும் என்றும், மரியாளும், லாசருவும் மார்த்தாளுக்கு இளையவர்கள் என்றும் கருதப்படுகிறது. ஆயினும் இவைகள் பாரம்பரிய அனுமானமாக இருப்பதினால், வசனங்களில் இதைப்பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. முன்பு ஒரு தருணத்தில் நம்முடைய ஆண்டவர் அவர்கள் வீட்டிற்கு வந்தபோது, மரியாள் அவர் பாதத்தருகே அமர்ந்து அவருடைய வாயின் வார்தைகளைக் கவனித்துக்கொண்டு, வீட்டு வேலைகளைக் கவனியாமல் விட்டதைக்குறித்து, ஆவிக்குரிய விஷயத்தில் கொஞ்சம் குறைவான ஈடுபாட்டையும் மற்றும் நடைமுறை விஷயத்தில் நல்ல காரியசக்தி உள்ளவளாகவும் இருந்த அவளது சகோதரியாகிய மார்த்தாள் குற்றம் சாட்டினபோதே மரியாள், “தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்தெடுத்துக் கொண்டாள்” என்று கூறினார்; அதாவது பணிவிடைகள் அங்கீகரிக்கப்படக் கூடியவைகளாகவும், பாராட்டப்படக் கூடியவைகளாகவும் இருப்பினும், பக்தியும் ஐக்கியமுமே மிகவும் அங்கீகரிக்கப்படக் கூடியவைகள் என்ற விதத்தில் கர்த்தர் கூறினார் என்பதை நாம் நினைவில்கொள்ளலாம்.

நம்முடைய ஆண்டவருடைய பூமிக்குரிய ஜீவியத்தை நிறைவுசெய்யும் உபத்திரவங்கள் சம்பவிப்பதற்கு முன்பாக, இந்த இரண்டு சகோதரிகளும் எல்லா விதங்களிலும் அவருக்கு இந்த விருந்தில் ஊழியம் செய்வதற்கு நாம் பொறாமைக் கொள்வதற்கு ஏதுவான சிலாக்கியத்தினைப் பெற்றிருந்தார்கள். முன்புபோல் இப்பொழுதும்கூட இந்த இரண்டு சகோதரிகளின் பணிகள், வெவ்வேறாக இருந்தன; எனினும் இம்முறை முன்னேற்பாடுகளுடனும், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடனும் இவர்கள் பணிகளைச் செய்திருக்கக்கூடும். பந்தியில் அமர்ந்தவர்களுக்கு, மார்த்தாள் மற்றவர்களோடுகூட உணவுகளைப் பரிமாறியிருக்க வேண்டும். அதேநேரத்தில், மரியாள் குறிப்பான விசேஷித்த வேலைக்காக ஆயத்தமாயிருந்திருக்க வேண்டும். அவள் ஏதோ ஒரு விதத்தில் விலையேறப்பெற்ற நளதம் என்னும் தைலமாகிய வெள்ளைக்கல் பரணியைப் பெற்றிருந்தாள். ஒருவேளை அவள் பரணியை விலைகொடுத்து வாங்கி அதிகநேரம் செலவழித்துத் தைலத்தை உண்டுபண்ணியிருக்க வேண்டும் அல்லது தைலத்தை வாங்குவதற்கும்கூட அதிகளவு பணம் செலவழித்திருக்க வேண்டும். ஆண்டவரின் வருகையை அவள் முன்னறிந்தவளாக அந்த விருந்தின்போது, உலகத்தின் மிகச்சிறப்பான சக்ரவர்த்திகள், இராஜாக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் நடத்தபடுவதுபோல, ஆண்டவரையும் அபிஷேகிக்க வேண்டும் என்று முழுமையாக அந்த இராவிருந்தில் ஏற்பாடு பண்ணியிருந்தாள். இராஜாக்கள், சக்ரவர்த்திகள், முதலானவர்களே இவ்விதமாய்த் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்படுவார்கள்; இத்தகைய விலையுயர்ந்த காரியத்திற்குச் செலவிடுவது, மற்றவர்களுக்கு மிகவும் அரிதாய் இருந்தது. ஏனெனில், நறுமணதைலம் தயாரிப்பதற்கான வசதிகள் நமக்கு இன்று காணப்படுவதுபோல் அக்காலத்தில் இருக்கவில்லை; ஒருவேளை வீட்டிலேயே நறுமணதைலம் தயாரிக்கப்பட்டாலும், அதற்காகச் செலவிடப்பட்ட நேரம் மிகுதியாக இருந்தபடியினால் அதை மிகவும் விலையேறப்பெற்றதாகக் கருதி மிகுந்த ஐசுவரியவான்களுக்கு மாத்திரமே விற்பது வழக்கமாய் இருந்தது.

விருந்து துவங்கியது, இயேசு தம்முடைய சீஷர்களோடும், மற்ற விருந்தினர்களோடுங்கூட மேஜையில் அமர்ந்திருந்தார். கிழக்கத்தியரின் வழக்கத்தின்படி நீண்ட, குறுகின மேஜையைச் சுற்றி விருந்தினர்கள் தங்களுடைய கால்களை நீட்டினபடியே, படுக்கை அல்லது திவான் மேல் சாய்ந்தவண்ணம் அமர்ந்திருப்பார்கள். ஒரு முழங்கையின் மீது சரீரத்தின் மேற்பாதியைச் சாய்த்துக்கொள்வதும், மற்றக் கரத்தைக்கொண்டு உணவை வாய்க்கு எடுத்துச் செல்வதும் வழக்கமாய் இருந்தது. நம்முடைய வழக்கத்தின்படி பயன்படுத்தப்படும் நாற்காலிகளில் உட்காருவது அக்காலத்தில் அவர்களுடைய வழக்கமாய் இருக்கவில்லை.

மார்த்தாளும், அவளுடைய தோழிகளும் உணவு பரிமாறிக் கொண்டிருக்கையில், மரியாள் முன் வந்து, தான் வைத்திருந்த வெள்ளைக்கல் பரணியை உடைத்து, நம்முடைய ஆண்டவரின் தலையில் அந்த விலையேறப்பெற்ற தைலத்தை ஊற்றினாள். அதைத் தொடர்ந்து, மீதமுள்ள தைலத்தை அவருடைய பாதங்களில் ஊற்றி, தன்னுடைய தலைமயிரினால் துடைத்தாள் என்று யோவான் பதிவு செய்துள்ளார். நமது கர்த்தருக்கான மரியாளினுடைய அன்பானது மிகவும் ஆழமானதாகவும், மிகவும் பலமானதாகவும் காணப்பட்டப்படியால், ஏதேனும் சாதாரணமான செயல்களைச் செய்வதில் அவ்வன்பிற்குத் திருப்தி இருந்திருக்காது. பூமியின் இராஜாக்கள் இப்படிப்பட்ட தைலத்தினால் அபிஷேகிக்கப்படுகையில், அவளுடைய சிநேகிதரும், அவளுடைய ஆண்டவரும், மேசியாவுமாக இருந்தவரை சிறந்த தைலத்தினால் அபிஷேகிப்பது அவளுக்கு மிகப் பொருத்தமாய்த் தோன்றியது. அவர் மீது அவள் கொண்டிருந்த அன்பு மிகுதியாய் இருந்தபடியினால், அவ்வன்பானது சிக்கனம் என்ற விஷயத்தை அறியாமல் இருந்தது. அதாவது அவளுடைய பிரியமானவருக்கு, தான் அளிக்கும் எக்காரியமும் மிகச் சிறப்பானதாய்க் காணப்படாது என்று எண்ணினாள். தன் இருதயத்தில் அவள் கொண்டிருந்த உச்சிதமான அன்பை, இப்படிப்பட்ட விலையுயர்ந்ததும், மிக நேர்த்தியானதுமான நறுமணதைலத்தைக் கொண்டு அபிஷேகித்து வெளிப்படுத்தினாள். அந்த வீடு முழுவதும் வீசின நறுமணதைக் காட்டிலும், அதிக நறுமணமாய்க் காணப்பட்ட நறுமணத்தை – அதாவது மரியாளை இப்படிச் செய்ய தூண்டின, அவளது இருதயத்தினுடைய அன்பின் நறுமணத்தை இக்காரியங்களை முழுமையாக நம்முடைய ஆண்டவர் புரிந்துகொண்டார்.

ஆனால் சீஷர்கள் சுயநலமாக இருந்தபடியினாலும், மரியாளுடைய உண்மையான உணர்வைப் புரிந்துக்கொள்ள முடியாமல் இருந்தபடியினாலும் அவளிடத்தில் குற்றம் கண்டுபிடித்தார்கள். இக்குற்றம் கண்டுபிடித்தலுக்கு வழிநடத்தும் தலைவனாகவும், வாயாகவும்/கருவியாகவும், மற்றும் குற்றம் கண்டுபிடித்தலின் ஆவியை மற்றச் சீஷர்களுக்குள் தூண்டிவிட்டவனுமாய் இருந்தவன், சீஷர்களின் கூட்டத்திற்குப் பொருளாளராக இருந்த யூதாஸ் [R2744 : page 377] ஆவான் என்று பதிவுகள் தெரிவிக்கின்றன. அந்த விலையேறப்பெற்ற தைலத்தின் விலைக்கிரயம் தன்னுடைய பணப்பையில் வந்து சேரவில்லை என்றும், அப்படி ஒருவேளை வந்தால் அதில் கொஞ்சத்தையாகிலும் எடுத்துத் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கென்று செலவு செய்ய முடியாமல் போயிற்றே என்றும் உள்ள விஷயங்களே அவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது. ஏனெனில், “அவன் திருடனானபடியினால் பணப்பையை சுமந்தவனாக இருந்தான்…” என்று நமக்குக் கூறப்பட்டுள்ளது. யூதாஸ் எதிர்ப்புத் தெரிவித்த விஷயத்தை வைத்துப் பார்க்கும்போது மரியாள்தான் இத்தைலத்தைத் தயாரித்தாள் என்பது தெரியவருகிறது; ஏனெனில் அதை அதிக பணம் கொடுத்து வாங்கினதற்காக யூதாஸ் குற்றம்சாட்டவில்லை; மாறாக அதை 300 பணத்திற்கு விற்றிருக்கலாம் என்றுதான் குற்றம்சாட்டுகின்றான். இந்தத் தைலம் 300 ரோம தினாரி, அதாவது 48 டாலர்கள் மதிப்பு உள்ளது மற்றும் இன்றைய பண மதிப்பின்படி இதற்கு அதிக தொகைக் காணப்படும். அக்காலத்தில் ஒரு தினாரி ஒரு நாளின் கூலியாக இருந்ததை நாம் அறிந்திருக்கிறோம்; இப்படியாக 300 தினாரி என்பது ஒரு வருடத்தின் வேலைக்கான கூலியாக இருந்திருக்க வேண்டும். ஆகவே, இந்தத் தைலம் கணிசமான தொகை மதிப்புள்ளதாக இருந்திருக்க வேண்டும். இப்படி மரியாள் தைலத்தை இயேசுவின்மீது ஊற்றினது, வரம்பு மீறின செயல்பாடு என்பது உண்மைதான். ஆனால் இது அவளுடைய வரம்பு மீறின அன்பை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. மேலும் இது தேவனும், தூதர்களும் கனப்படுத்த விரும்பும் கர்த்தருக்காகச் செலவிடப்பட்டது. மேலும் கர்த்தருடைய உண்மையான மதிப்பை அத்தருணத்தில் அவரோடுகூட இருந்த அனைவரைக் காட்டிலும், அதிகமாய் மரியாளே உணர்ந்திருந்தாள்.

அன்பு நிறைந்த மரியாள்! அவள் மற்றவர்களும் புரிந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் தனது அன்பின் வெளிப்படுத்தலாகிய இந்த விலையேறப்பெற்ற தைலத்தைத் [R2744 : page 378] தயாரித்துக்கொண்டிருக்கும்போது, எத்தகைய உணர்வுகள் அவளுடைய இருதயத்தில் நிரம்பியிருந்திருக்கும் என்பதை நம்மால் ஓரளவுக்குக் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது. ஆனால் இப்பொழுதோ, எல்லாம் எதிர்மாறாகக் காணப்பட்டது; தன்னுடைய நண்பர்களும், விருந்தாளிகளுமாய் இருந்த கர்த்தரின் நெருங்கிய தோழர்களுடைய கோபத்தை அவள் எதிர்கொள்ள வேண்டியதாய் இருந்தது; கர்த்தரும்கூடச் சீஷர்களைப்போன்றே தனது செயல்பாடுகளைக் கருதி அதைப் புறக்கணித்து, தான் அளித்த நறுமணதைலத்தைக் குறித்துக் கண்டனம் தெரிவித்துவிடுவாரோ என்ற அச்சங்கள் அவளுடைய இருதயத்தை மூழ்கடித்தது. நம்முடைய கர்த்தர் அவளுடைய கிரியைகள் நேர்த்தியானது என்று கூறி, அவளுடைய உணர்வுகளுக்குச் சீஷர்களால் இரக்கம் காட்ட முடியவில்லை என்று அவர்களைக் கடிந்துகொண்டு, தம்முடைய சரீரத்தின்மேல் அவள் நறுமணத்தைலம் ஊற்றின காரியமானது, தம்முடைய அடக்கத்திற்கான ஆயத்தம் என்று அவர்களிடத்தில் கூறுவதை அவள் கேட்டபோது, அவளுடைய இருதயத்திலிருந்து எத்தகைய பெருஞ்சுமைகள் இறக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டும். இயேசுவுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் இடையில் நடந்த இந்தச் சம்பாஷணையின்போது, மரியாள் அநேகமாக அந்தத் தைலத்தைத் தலையில் மட்டுமல்ல, அவருடைய பாதத்திலும் ஊற்றி, அவருடைய பாதங்களை தன்னுடைய தலைமயிரினால் துடைத்திருக்க வேண்டும். மேலும், அவள் தனது தலைமயிரை அவருடைய பாதங்களைத் துடைப்பதற்குப் பயன்படுத்தின காரியமானது, தனக்கு அலங்காரமாய் இருப்பவைகளிலேயே மிக விலையேறப்பெற்ற விஷயத்தை கர்த்தருக்கு பணிவிடை செய்ய பயன்படுத்தியதில் அவள் மகிழ்ச்சி கொண்டதற்கான சான்றாக உள்ளது.

மரியாள் ஆண்டவரின் சரீரத்தை அடக்கம் செய்யக்கூடிய சிந்தனையில் அவரை அபிஷேகித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர் பேசின வார்த்தைகளை மிக ஆச்சரியத்தோடு மரியாளும், மற்றவர்களும் கேட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும். பண்டைய காலத்தில் மரித்துப்போன பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு இப்படிப்பட்ட வாசனை திரவியங்களை ஊற்றி ஆயத்தம் செய்வது வழக்கமாயிருந்தது. இவைகளுக்குத் தாராளமாக பணத்தைச் செலவழிப்பார்கள் இக்காலத்தில் நாமுங்கூட மிக அழகான சவப்பெட்டிகளையும், விலையுயர்ந்த பூக்களையும், மலர் வளையங்களையும் அன்பின் வெளிப்பாடாக வைப்பதுண்டு. இரட்சகர் உயிரோடு இருக்கும்போதே மரியாள் அவர் மீது விலையேறப்பெற்ற தைலத்தை ஊற்றின காரியமானது, நாம் அன்புசெய்கிறவர்களிடத்தில் நாம் கையாளவேண்டிய மாதிரியை நமக்குக் காட்டுகின்றது. நம்முடைய நண்பர்கள் மரிக்கும் வரையிலும் நாம் காத்திருந்து அவர்களுடைய உணர்வற்ற மற்றும் எதையும் புரிந்துகொள்ள முடியாத சடலங்களுக்கு நமது கவனத்தைச் செலுத்துவதைக்காட்டிலும், அவர்கள் உயிரோடு இருக்கும்போதே நாம் நம்முடைய தைலமுள்ள பரணியைத் திறந்து, அவர்களுடைய தலையின் மீதும், சோர்ந்துபோன அவர்களுடைய பாதங்கள் மீதும் ஊற்றுவது நலமாய் இருக்கும். நம்முடைய வெள்ளைக்கல் பரணிகள் நம்முடைய இருதயங்களாக இருக்கின்றது. அவைகள் நல் வாழ்த்துதல்கள், இரக்கம், எல்லோரிடத்திலும் அன்பு, அதிலும் விசேஷமாக தலையாகிய கிறிஸ்துவாகிய நமது கர்த்தர் இயேசுவிடத்திலும், அவருடைய சரீரமாகிய சபையின் அங்கங்களிடத்திலும் அன்பு எனும் ஐசுவரியமும், இனிமையும் உள்ள நறுமணதைலங்களினால் நிரம்பியிருக்க வேண்டும்; அதிலும் விசேஷமாக இப்பொழுது நம்மோடுகூட இருக்கும் பாத அங்கங்கள் மீதான அன்பிலும் நிரம்பியிருக்க வேண்டும்; இந்த பாத அங்கங்கள் மீது இனிமையான வாசனையுள்ள அன்பையும், ஈடுபாட்டையும் நாம் அவருடையவர்களாய் இருப்பதினால், கர்த்தருடைய நாமத்தில் காட்டுவதற்கான சிலாக்கியம் இப்பொழுது நமக்குரியதாய் இருக்கிறது.

“எத்தனைதரம், கவனமற்றவராய் இருந்துள்ளோமே, இருந்துள்ளோமே;
காத்திருந்திருக்கிறோமே ஜீவியத்தின் இனிமையான நிகழ்வுகள் ஓய்ந்திடும்வரை!
உடைத்திடுகின்றோமே நம்முடைய தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியை,
மணம் வீச கடைசி தருணத்தின்போதே!

ஓ! ஜீவனோடுள்ள மற்றும் நம்மைப்போன்று பாடுள்ள
நமது நண்பனுக்குச் செலுத்திடுவோமே கவனத்தினை!
அன்பின் பார்வைக்காய், கண்களைப் பார்க்கின்ற நண்பனுக்கு,
பாராட்டின வார்த்தைக்காய் ஏங்குகின்ற நண்பனுக்குச் செலுத்திடுவோமே
கவனத்தினை!”

தேவனிடத்தில் அர்ப்பணித்த ஒவ்வொரு உண்மையான பிள்ளைகளும் வெள்ளைக்கல் பரணி போன்ற தங்களுடைய இருதயத்தில் பரிசுத்த ஆவி, அன்பின் ஆவி, விசேஷித்த நறுமணம் வீசும் தைலம், கர்த்தருக்கும் மனுஷருக்கும் மிகவும் விலையேறப்பெற்றதுமான நறுமணங்களைப் பெற்றிருக்க வேண்டும். இருதயத்திற்குள் இவ்விஷயங்கள் உடனுக்குடன் சேகரிக்கப்பட முடியாததினால் இவைகள் விலையேறப்பெற்றவைகளாகும். ஆகவே, “தேவனுடைய பரிபூரணத்தினால் முழுமையாக நிரப்பப்படுவதற்கு” நீடியபொறுமை தேவைப்படுகிறது. சொல்லர்த்தமான பரணியின் முத்திரையை உடைப்பதற்கு முன்பல்ல, முத்திரை உடைத்த பின்னர் உள்ளிருந்த தைலம் வெளியே ஊற்றின பிற்பாடே அதற்குரிய நறுமணம் வெளிப்பட்டது. இக்காரியம்போன்றே, நம்முடைய இருதயத்தின் விஷயமும் காணப்படுகின்றது; ஆனால் நம்முடைய இருதயங்களிலிருந்து இத்தைலங்கள் தொடர்ச்சியாகப் பொழிந்துக்கொண்டிருந்தாலும், இருதயத்திற்குள் அதின் அளவு பெருகிக்கொண்டே இருக்கின்றது என்னும் விஷயத்தில் நம்முடைய இருதயங்கள், மரியாளுடைய சொல்லர்த்தமான பரணியைப் போல் இருப்பதில்லை (சொல்லர்த்தமான பரணிகளின் முத்திரைகள் உடைக்கப்பட்டு, தைலம் வெளியே கொட்டும்போது, பரணிக்குள் இருக்கும் தைலத்தின் அளவு குறைகிறது; ஆனால் நம்முடைய இருதயத்தின் விஷயத்தில் இப்படியாக இருப்பதில்லை).

தைலமானது, கர்த்தர்மேல் அதாவது அவருடைய தலையின்மீதும், பின்னர் அவருடைய சரீரத்தின் தாழ்மையான மற்றும் எளிமையான பாதத்தின்மீதும் மரியாளினால் ஊற்றப்பட்டது போன்றே, நம்முடைய இருதயங்களும் அதற்குள் காணப்படும் பரிசுத்தமான அன்பும் காணப்படவேண்டும். மற்றவர்களால் இக்கிரியைகளைப் புரிந்துகொள்ளாதபட்சத்திலும், நாம் நம்முடைய அன்பையும், ஈடுபாட்டையும் பாவிகள் அல்லது தரித்திரர் நிலையிலுள்ள புறஜாதி உலகத்தார் மீது காட்ட வேண்டும் என்று மற்றவர்கள் எண்ணினாலுங்கூட, நம்முடைய பணி மரியாள் செய்தது போன்றதாகவே காணப்படவேண்டும். ஏனெனில் ஆயிரம் வருஷ ஆட்சியில் இந்த உலகம் ஆசீர்வதிக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அப்பொழுது ஆண்டவரோடுகூட அவருடைய சீஷர்களும் இந்த மனுமக்களை ஆசீர்வதிப்பதற்கு ஒருமித்துச் செயல்படுவார்கள். ஒருவேளை நாம் நம்முடைய இருதயத்தின் பொக்கிஷங்களைக் கிறிஸ்துவின் சரீர அங்கத்தினர்மேல் ஊற்றுவதற்குச் சிலர் அறியாமையில் தடை செய்தால், அவைகளால் நாம் சோர்ந்து போகாமல், ஆண்டவரின் உற்சாக மூட்டும் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, அவர் நம்மை அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்களாய், சரீரமாகிய சபை முழுமையாக மரிப்பதற்கு முன்னதாக அவர்களுக்கு அளிக்க வேண்டிய ஆறுதலை அளிக்கக்கடவோம். ஆகவே பரிதாபத்திற்குரிய உலக ஜனங்களைக்காட்டிலும், கிறிஸ்துவுடைய பாடுகளுக்குப் பங்காளிகளாக இந்தப் பூமிக்குரிய ஒட்டத்தைப் பரதேசிகளாய் ஓடி முடிக்கக்கூடிய சபை வகுப்பாருக்கு முதலில் ஆறுதல் அளித்து, புத்துணர்வு ஊட்டுவதே ஏற்றதாயிருக்கிறது. கிறிஸ்துவின் பாடுகள் நிறைவடைந்த பிற்பாடு கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஆறுதல் அளிப்பதற்கும், உற்சாகம் அளிப்பதற்குமான வாய்ப்புகள் இருக்காது. ஆகவே கிறிஸ்துவினுடைய பாடுகள் நிறைவடையும் வரையிலும் இக்காரியங்களை நாம் செய்துக்கொண்டு வரவேண்டும்; இவர்களைக் குறித்துதான் நமது கர்த்தர் இவர்களுக்குச் செய்யப்படுவது எதுவோ அது தமக்கே செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்று கூறினார். (மத்தேயு 25:40)

ஆகவே, மார்த்தாள் போன்றவர்கள் தங்களுக்குரிய வழியிலும், மரியாள் போன்றவர்கள் தங்களுடைய மிகுந்த விலையேறப்பெற்ற நளததைலங்கள் மூலமும், தங்கள் இருவரின் ஊழியங்களில் ஒன்றும் மறக்கப்படுவதில்லை என்ற நிச்சயத்துடன் ஊழியம் செய்வார்களாக. ஏனெனில், இவர்கள் இருவரையும் பாராட்டும் விதமாகவும், மற்றவர்கள் இவர்களைக்குறித்து, எப்படி எண்ணியிருந்தாலும் சரி, இவர்கள் இருவருடைய அன்பைக் கர்த்தர் உணர்ந்தும், ஏற்றுக்கொண்டும் இருந்தார் என்பதற்கான சாட்சிகளாகவும், இவர்கள் இருவரை நினைவுகூரும் வண்ணமாகவும் இவர்கள் இருவரும் பேசப்பட்டார்கள், 18 நூற்றாண்டுகளாகப் பேசப்பட்டும் வருகின்றார்கள்.

சுயநலமான இருதயங்களில் இருந்து வரும் எதிர்ப்புகள்

மரியாளின் பக்திக்குரிய வெளிப்பாட்டை எதிர்த்தும், தரித்திரரின் சார்பாக மிகக் கனிவோடு பேசின அந்த மனுஷன் யார் என்றால், திருடனும், கொலைபாதகனுமாகிய யூதாஸ்காரியோத் ஆவான். இப்படிப்பட்டக் கோட்பாடு, சுவிசேஷ யுகம் முழுவதிலும் நல்ல கோட்பாடு என்று கருதப்பட்டும் வருகிறது. அதாவது, கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அர்ப்பணிக்கப்பட்ட அங்கங்களை [R2744 : page 379] அபிஷேகிப்பதிலும், ஆசீர்வதிப்பதிலும் விலையேறப்பெற்ற நேரம் செலவிடப்படுவதைக் குறித்து எதிர்ப்புத் தெரிவித்தும், சமுதாயச் சேவைகளுக்கு சார்பாக மிகுந்த கூக்குரல் எழுப்பிக்கொண்டிருப்பவர்கள், எப்போதும் இருதயத்தில் விசேஷமாக புறஜாதி ஜனங்களுக்குரிய நலனுக்கடுத்த விஷயத்தில் அக்கறைக்கொண்டவர்கள் அல்ல, மாறாக சுயநல நோக்கம் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். மனசாட்சியுடைய கர்த்தருடைய அருமையான ஜனங்கள் இப்படிப்பட்ட மாய்மாலக்காரர்களால் அடிக்கடி தவறாய் வழிநடத்தப்படுகிறார்கள்; கர்த்தருக்குப் பிரியமான காரியத்தைச் செய்த மரியாளுக்கு எதிராக மற்ற அப்போஸ்தலர்கள் நியாயமான கோபம் கொள்ளத்தக்கதாக யூதாஸ்கூட ஒரு சமயத்தில் அப்போஸ்தலர்களை, தனது போலி பேச்சினால் தவறாய் வழிநடத்திவிட்டான். மேலும் மரியாள் செய்தது கர்த்தருக்குப் பிரியமாக காணப்பட்டதன் காரணமாகவே இந்தச் சுவிசேஷம் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகின்றதோ, அங்கு இவள் செய்ததும் நினைவுகூரப்படும் என்று கர்த்தர் கட்டளையிட்டார்.

இந்நாளிலும் கூட 350-க்கும் மேலான மொழிகளில் இச்சுவிசேஷமானது உலகத்திலுள்ள ஒவ்வொரு முக்கியமான தேசங்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டுள்ளது. நமது கர்த்தர் மரியாள் நினைவுகூரப்படவேண்டும் என்று மாத்திரம் விருப்பம் கொள்ளாமல், விசேஷமாக அவளுடைய கிரியைகள் நினைவுகூரப்பட வேண்டும் என்றும் விரும்பினார். நற்செய்தியை அறிந்துக்கொள்ளக்கூடிய அனைவரும் இப்படியாக தமக்கும், தம்முடைய சரீரத்திற்கும் காண்பிக்கப்பட்ட இவ்விதமான அன்பை, தாம் அங்கீகரிக்கின்றார் என்றும், நம்முடைய அன்பு எவ்வளவு விலையுயர்ந்ததாய் இருக்கின்றதோ, அவ்வளவாய் அவர் அதை அங்கீகரிக்கவும் செய்கின்றார் என்றும் அறிந்துக்கொள்ள வேண்டுமென விரும்புகின்றார். இக்கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது கர்த்தருடைய பார்வையில் பிரியமாய் இருக்கும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்திலுள்ள மற்ற அங்கங்கள் மீது தன்னுடைய இருதயத்திலிருந்தும், ஜீவியத்திலிருந்தும் நறுமணதைலங்களைப் பொழிவதற்குத் தொடர்ந்து நாட வேண்டும். மேலும், இப்படிச் செய்வதன் மூலம் அவன் கர்த்தருக்குப் பிரியமாய் இருப்பதோடல்லாமல் தனக்கு ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வான் என்று உணர்ந்துக்கொள்ளக்கடவன். ஏனெனில், எந்த வெள்ளைக்கல் பரணியும் அதன்மேல் தைலம் படாமல் மற்றவர் மீது தைலத்தை ஊற்ற முடியாது; இப்படியாகவே நம்முடைய இருதய விஷயங்களிலும் காணப்படுகின்றது. அதாவது, நம்முடைய இருதயங்கள் கிறிஸ்துவின் சரீர அங்கங்களாகிய மற்றவர்கள் மீது கர்த்தருக்காகவும், அவருடைய நோக்கங்களுக்காகவும் கொண்டிருக்கும் அன்பு மற்றும் அர்ப்பணிப்பு எனும் நறுமணத்தைலங்களை ஊற்றுகையில் இக்காரியமானது தற்காலத்திலேயே கர்த்தருடைய அங்கீகரிப்பையும், ஆசீர்வாதத்தையும் மற்றும் எதிர்காலத்திலும் நமக்கு ஆசீர்வாதங்களை நிச்சயமாய்க் கொண்டுவரும்.

கிறிஸ்துவின் சரீர அங்கங்களை அடக்கம் செய்வதற்காக அவருடைய சத்தியம் மற்றும் கிருபை என்னும் தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்படுவதற்குத் தற்காலத்தில் ஏறெடுக்கப்படும் சில முயற்சிகள் உடன் சீஷர்களால் கண்டிக்கப்படலாம். உதாரணத்திற்கு, உதவி பணிகளுக்கென ஒரு வருடத்திற்குச் செலவிடப்படும் நேரம், ஆற்றல், மற்றும் அதிகப்படியான பணங்கள் கர்த்தருடைய அருமையான பிள்ளைகளில் அநேகரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, யூதாஸ் கூட்டத்தாரால் கசப்பான விதத்தில் கண்டனம் செலுத்தப்படும். ஆயினும், ஆண்டவரின் அங்கீகரிப்பை உணர்ந்துகொண்டு, நம்முடைய பாத்திரம் மகிழ்ச்சியினால் நிரம்பி வழிவதற்கு நாம் அனுமதிக்கின்றோம். (சகோதரர் ரசல் கூறுகின்றார்). நம்முடைய உடன் சீஷர்களோ, நாங்கள் ஏற்றக் கால சத்தியத்தை விசுவாச வீட்டாருக்கு மாத்திரமே கொடுத்துக்கொண்டிருக்காமல், பாவிகளுக்குக் கொடுக்கவேண்டும் என்று நம்மிடத்தில் கூறுவதுண்டு; தற்கால சத்தியம் என்னும் இனிமையான தைலத்தைக் கொண்டு பரிசுத்தவான்களை அபிஷேகம் பண்ணுவதற்கு நாம் நாடிக்கொண்டிருக்காமல், மாறாக நாம் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் மத்தியில் செல்லவேண்டும் என்றும், குடிசையில் வாழும் ஜனங்கள் மத்தியில் சேவையில் ஈடுபடவேண்டும் அல்லது வெளிநாடுகளில் சென்று ஊழியம் புரிய வேண்டும் என்றும் நம்மிடம் கூறுவதுண்டு. யூதாஸ் வகுப்பாருக்குரிய உண்மையான பிரச்சனை என்னவெனில், கர்த்தருடைய ஜனங்கள் மத்தியில் சத்தியம் பரிமாறப்படுமாயின், தங்கள் பணப்பெட்டிகளுக்குள்ளே சேர்த்துவைக்கலாம் என்று இவ்வகுப்பார் எண்ணின பணங்கள், சத்தியம் பரிமாறப்படுவதின் வேலைகளில் செலவழிந்துபோய்விடுமே என்ற அச்சமாகவே இருந்தது. இன்னுமாக, கிறிஸ்தவ பிரிவு சபைகளிலுள்ள எண்ணிக்கையும், செல்வாக்கும் குறைந்துவிடும் என்றும் இவர்கள் அஞ்சுகின்றனர். ஆனால், இவர்களுடைய பயங்கள் பெரும்பாலும் கற்பனையாகவே இருந்தது. ஏனெனில், சத்தியம் [R2745 : page 379] என்னும் நறுமணதைலமானது, கிறிஸ்துவின் சரீர அங்கங்கள் மீது மாத்திரமே ஊற்றப்படக்கூடிய விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இப்படிப்பட்ட சரீர அங்கங்களிடத்திலேயே சத்தியம் சென்றுசேரத்தக்கதாகவும், மற்றவர்களிடத்தில் இச்சத்தியமானது, எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாத விதத்தில் கர்த்தர் வழிநடத்துவார் என்றே நம்முடைய விசுவாசம் காணப்படுகின்றது. அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்துவின் சரீர அங்கத்தினர்கள் வெகுசிலராக இருப்பதினால், அவர்களுடைய அபிஷேகம் பண்ணப்படுதலும், பாபிலோனிடமிருந்து அவர்களுடைய பிரிக்கப்பட்ட ஜீவியமும், அவர்களுடைய அடக்கமும், அவர்கள் சொற்பமாய் இருக்கும் காரணத்தினால், கவனிக்கப்படுவதில்லை என்றாலும், இவ்வமைப்புகளிலிருந்து உப்பாகவும், ஒளியாகவும் அவர்கள் எடுக்கப்படும் காரியமானது, இவ்வமைப்புகளுக்கு பயங்கரமான பாதிப்பையும், வரவிருக்கிற மகா உபத்திரவக் காலத்தில் இவ்வமைப்பு வீழ்ச்சியடைந்து போவதற்கு ஏதுவாகவும் இருக்கிறது. (மத்தேயு 5:13,14)

ஆகவே மரியாள் மற்றும் யூதாசின் எதிரடையான நடத்தையில் மாதிரியாக்கப்படும் அன்பு மற்றும் சுயநலத்திற்கு இடையில் உள்ள மிகப்பெரிய வேறுபாட்டை நாம் தெளிவாக அறிந்துகொள்ள மறக்க வேண்டாம். மரியாள் எரிகிற அன்பினால் நிரப்பப்பட்டிருந்தபடியால், அவளுடைய கர்த்தரைக் கனப்படுத்துவதற்கும், ஆறுதல் படுத்துவதற்கும், பிரியப்படுத்துவதற்கும் அதிக காரியங்களைப் பலி செலுத்துவதற்கு விருப்பம் கொண்டிருந்தாள். மாறாக, யூதாஸ் பலி செலுத்துவதற்கு விருப்பம் கொள்ளாமலும், அடிமைக்குரிய விலையாகிய 30 சேக்கல் வெள்ளிக்காக தனது கர்த்தரை அவருடைய சத்துருக்களிடம் விற்றுப்போடுவதற்கும் விருப்பமுள்ளவனாய் இருந்தான். இதுமாத்திரமல்ல, மரியாளிடம் வெளிப்பட்ட அன்பு சாதகமான தாக்கத்தை யூதாசிடம் ஏற்படுத்தவில்லை. எதிர்மாறான தாக்கத்தையே ஏற்படுத்திற்று. மரியாளுடைய அன்பும், அதை நமது கர்த்தர் அங்கீகரித்த விஷயமும் யூதாசுக்குள் எதிர்ப்பின்ஆவியைத் தூண்டிவிட்டதுபோல் தோன்றுகின்றது. ஏனெனில், நமது கர்த்தரைக் காட்டிக்கொடுக்கும்படிக்குப் பிரதான ஆசாரியனுடன் பேரம் பேசி ஆலோசிப்பதற்குப் புறப்பட்டுச் சென்றான் என்று பார்க்கின்றோம்.

தான் செய்யக்கூடிய வேலைக்கான பணத்தை, யூதாஸ் முன்னதாகவே வாங்கினான் என்று அதன் கிரேக்க வார்த்தையும், Revised Version – என்ற மொழியாக்கமும் தெரிவிக்கின்றது. அவன் அவர்களோடு ஒப்பந்தத்தைப் பண்ணிக்கொண்டான். பொல்லாப்பான வேலைக்காக தன்னை விற்றுப்போட்டான். அதாவது, தனக்கு நன்மை செய்தவராகிய கர்த்தருக்கு எதிராக பொல்லாப்புச் செய்ய தன்னை விற்றுப்போட்டான். கர்த்தருடைய வல்லமை என்ன என்று அவன் முழுமையாக அறிந்திருந்தான். மேலும், அவன் வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும் ஏதுவாக, அவரிடத்திலிருந்து அதிகமான வல்லமையையும் பெற்றுக்கொண்டவனாய் இருந்தான். எவ்வளவு விநோதமான காரியம்! ஆயினும் அவன் செய்த குற்றத்திற்கு ஞானமாக காரணம் சொல்லுவதற்கு வழியைத் திட்டம் பண்ணிவைத்திருந்தான் என்பதிலும் ஐயமில்லை. சந்தேகத்திற்கு இடமின்றி, இந்நாளிலும் நம்முடைய ஆண்டவரை மறைமுகமாக பல பூமிக்குரிய நன்மைகளுக்காகவும், செல்வாக்குகளுக்காகவும் அல்லது பணத்திற்காகவும் விற்க துணிகிறவர்கள் நியாயமான காரணத்தைக் கூறுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் மரியாளைப் போல எந்தளவுக்கு நம்முடைய இருதயங்கள் உண்மையையும், அர்ப்பணிப்பையும் கொண்டிருக்குமோ, அவ்வளவாய் யூதாசின் நடத்தையானது நமக்கு வெறுப்பாயும், நம்மால் செய்ய இயலாததாயும் இருக்கும். ஆயினும் இந்தக் குணலட்சணங்களுடைய உச்சக்கட்டமானது சடுதியாய் நிறைவு அடைந்துவிடவில்லை. துவக்கத்திலிருந்து மரியாளுக்குள் இருந்த அன்பு படிப்படியாக வளர்ச்சியடைந்துக் கொண்டிருந்தது; போதகரின் பாதப்படியிலிருந்து அவர் அளிக்கும் ஆவிக்குரிய போஷாக்கைப் பெற்றுக்கொள்வதற்கு அவள் கையாண்ட வழக்கத்தின் மூலம் அவளது அன்பு அதிகம் பலம் அடைந்தது; இது [R2745 : page 380] தொடர்பாகத்தான் மரியாள் நல்ல பங்கைத் தெரிந்துக்கொண்டாள் என்று கர்த்தர் கூறினார், எனினும் மார்த்தாள் அங்கீகரிக்கப்படாமலும் விடப்படவில்லை. மேலும் ஆண்டவருடைய வல்லமை பல வழிகளில் செயல்படுவதை கண்டபோது, அதிலும் விசேஷமாக அவளது சகோதரன் கல்லறையிலிருந்து உயிரோடு வெளியே கொண்டுவரப்பட்டபோது, மரியாள் விசுவாசத்திலும், அன்பிலும் மேலும் வளர்ச்சியடைந்தாள். அவளுடைய முழு இருதயமும் இந்த அன்பினாலும், மற்றும் கர்த்தரைப்பற்றின புரிந்துகொள்ளுதலினாலும் நிரம்புவது வரையிலும் மற்றும் அதை விலையேறப்பெற்ற விதத்தில் அவருடைய தலையின் மீதும், பாதத்தின் மீதும் வெளிக்காட்டும் அளவுக்கு அவைகள் வளரும்வரையிலும், அவைகளை விருத்திசெய்துக்கொண்டே இருந்தாள். இதற்கு எதிரிடையாக, யூதாஸ் நீண்டகாலமாகச் சுயநலத்தின் ஆவியானது தன் இருதயத்திற்குள் அதிகமதிகமாய் ஊடுருவி வருவதற்கு அனுமதித்துக் கொண்டிருந்தான். மேலும் பணத்தினால் என்ன சாதிக்கலாம் என்ற எண்ணங்களுக்கு இடம் கொடுத்துப் பணத்தைச் சேகரித்து வைப்பதற்கான எண்ணங்களுக்கும் இடம் கொடுத்துவிட்டான். இது அவனது ஆத்துமாவை சங்கிலியிட்டப்படியால், நித்தமும் அவன் காணக்கூடிய ஆண்டவரின் குணநலன்களை உணர்வதைத் தடைசெய்தது; ஆகவே பணத்தைத் தவிர வேறு எதையுமே அவனால் எண்ணமுடியவில்லை. மேலும் படிப்படியாக இந்தச் சுயநலத்தின் கட்டுகள் அவனுடைய இருதயத்தைச் சுற்றிக் கடினமாய் இறுக்கிக்கொண்டிருந்தது. பின்னர் அவனுடைய இருதயத்திற்குள் இருந்த அன்பு, பக்தி, தோழமை தொடர்பான யாவற்றையும் வெளியே கசக்கிப் பிழிந்து வெளியேற்றிவிட்டது. மேலும், இவ்விதமாக அவன் சுயநலத்திற்கும், துரோகத்திற்கும், கீழ்த்தரத்திற்கும், நன்றியற்ற தன்மைக்கும் பிரதிநிதியானான். மேலும், அவனுடைய நாமம் இப்பண்புகளின் அர்த்தத்தைக் கொண்ட நாமமாகவும் விளங்கிவிட்டது. ஆகவே இங்குள்ள நமக்கான பாடம் என்னவெனில்: நீதி, நன்மை, அன்பு, மற்றும் பரிசுத்தம் தொடர்பான யாவற்றையும் பற்றின புரிந்துக்கொள்ளுதலையும், அன்பையும் நாம் விருத்திச்செய்ய வேண்டும்; இன்னுமாக சுயநலம், கீழ்த்தரம், இகழ்ச்சி, கனவீனம் தொடர்புடைய யாவற்றையும் விசேஷமாக நம்முடைய இருதயங்களிலிருந்தும், ஜீவியங்களிலிருந்தும், முடிந்தமட்டும் எதிர்த்துப்போராடி, அழித்துப்போட்டுவிட வேண்டும்.