R2773 – கெத்செமனே – விழிப்பும், ஜெபமும்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2773 (page 77)

கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்

GETHSEMANE – WATCHING AND PRAYING

மத்தேயு 26:36-46

“என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.” லூக்கா 22:42

“அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்” எனும் வார்த்தைகளை வாசிக்கையில், கர்த்தர் இயேசுதான், பரம பிதா என்று கிறிஸ்தவ ஜனங்கள் மத்தியில் நிலவிக்கொண்டுவரும் கருத்தில் தவறு இருக்கின்றது என்பதை யாரும் உணராமல் இருக்க முடியாது (எபிரெயர் 5:7); இன்னுமாக இயேசுதான் பிதா என்றால், பிதாவுக்கு நேராக அவருடைய ஜெபம் நடிப்பாக இருந்திருக்கும்; மாறாக இயேசு தம்மைக்குறித்துக் கூறியிருந்தது போன்று அவர் பிதாவாய் இராமல், தேவனால் அனுப்பப்பட்ட குமாரனாக, தேவனுடைய ஒரே பேறானவராக, சிருஷ்டிகள் அனைத்திற்கும் முதற்பேறானவராக, தேவனுடைய சிருஷ்டிகளுக்கு ஆதியானவராக இருந்தார் (யோவான் 10:29; 1:14; கொலோசெயர் 1:15; வெளிப்படுத்தல் 3:14). இதைத் தவிர நம்முடைய கர்த்தருடைய, அப்போஸ்தலர்களுடைய பேச்சிற்கும், அவருடைய போக்கிற்கும் வேறே நியாயமான அர்த்தங்கள் இல்லை.இது குறித்த சத்தியத்தை உண்மையாய்த் தேடுகிறவர்களுக்கு 5-ஆம் தொகுதியைப் பரிந்துரைக்கின்றோம்.

நமது கர்த்தரும், அவருடைய சீஷர்களும், அவருடைய மரணத்திற்கான நினைவுகூருதலை நிறுவிவிட்டு, மேல் வீட்டறையை விட்டுப் புறப்பட்டுப் போனார்கள். இவர்கள் கெத்செமனே என்று அழைக்கப்படும் தோட்டம் இருந்த ஒலிவ மலைக்குப் போனார்கள். கெத்செமனே எனும் பெயருக்கான அர்த்தம், எண்ணெய் செக்கு ஆகும்; இங்கு ஒலிவ பழங்கள் அரைக்கப்பட்டு, வெளிச்சத்திற்காகவும், உணவிற்காகவும் பயன்படும் எண்ணெய் எடுக்கப்படுவதினால் இப்பெயர் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. சுவிசேஷகர்களில் ஒருவர், அதைக் கெத்செமனே தோட்டம் என்று குறிப்பிடுகின்றார்; இங்கு இடம்பெறும் தோட்டம் (garden) எனும் வார்த்தையானது, பழங்காலங்களில் பழத்தோட்டம் (orchard) எனும் வார்த்தைக்கான அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது; அது பூந்தோட்டம் அல்ல. அது ஒலிவ மலையின் அருகில் சுமார் 150 அடிகள் உள்ள சிறிய வேலியிட்டு அடைக்கப்பட்டிருந்த இடமாகக் காணப்பட்டது. மேலும் இங்குதான் நமது கர்த்தருடைய வியாகுலம் கலந்த ஜெபம் ஏறெடுக்கப்பட்டது என்ற பிரபலமும் காணப்படுகின்றது. இங்கு மிகவும் பலவருடமுள்ள மற்றும் மிகவும் முடிச்சுகள் உள்ள எட்டு ஒலிவ மரங்கள் காணப்படுகின்றது; இதுதான் அதே துல்லியமான இடமாக இருப்பினும் (அ) இல்லாவிட்டாலும், இதுவே குறிப்பிடப்பட்டிருக்கும் அம்சங்களுக்குப் போதுமான அளவுக்கு இசைவாய் இருக்கின்றது.

நமது கர்த்தர் இவ்விடத்திற்குப் போவதற்கு அநேகமாக இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம் என்னவெனில்: துரோகியான யூதாசும், அவனால் கூட்டிக்கொண்டுவரப்படும் கூட்டத்தாராலும், தாம் கைது செய்யப்படுவார் என்பதை உணர்த்த நமது கர்த்தர், மிகவும் அன்பாக மாடி அறையைப் பயன்படுத்தும்படிக்கு அனுமதித்த நண்பனுக்குப் பிரச்சனையைக் கொண்டுவர [R2774 : page 78] அநேகமாக விரும்பவில்லை என்பதாகும். இரண்டாவது காரணம் என்னவெனில், அவர் நடு இராத்திரியின் அமைதியான வேளையை விரும்பி, மலைப்பகுதிக்குச் சென்று, தேவனுடன் தனிமையில் இருக்க விரும்பினார் மற்றும் தம்முடைய ஆத்துமாவை ஜெபத்தில் ஊற்றி, நடக்கவிருக்கும் சம்பவங்களுக்குப் போதுமான பலத்தைப் பெற்றுக்கொள்ள அவர் விரும்பினார் என்பதாகும். இந்த இரண்டாம் கருத்துக்கு இசைவாகவே, நமது கர்த்தர் தோட்டத்தின் வாசலை அடைந்தவுடன், சீஷர்களில் எட்டுப்பேரைக் காவல் காக்கும்படிக்கு வெளியே நிறுத்திவிட்டு, மற்றத் தருணங்களில் கர்த்தரால் விசேஷமாய்க் கனப்படுத்தப்பட்ட அதே மூன்று சீஷர்களை, அதாவது பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்மோடுகூடக் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார். தைரியமுள்ள பேதுரு, உணர்ச்சிமிக்க யாக்கோபும், யோவானுமாகிய இடிமுழக்க மக்கள் அவருடன் கூட்டிக்கொண்டு செல்லப்பட்டனர்; இந்த மூவரும் அவருடைய சீஷர்களிலேயே மிகுந்த தைரியமுள்ளவர்களும், மிகுந்த வைராக்கியமுள்ளவர்களும், மிகுந்த உண்மையுள்ளவர்களுமாய்க் காணப்பட்டனர். இவர்களைக் கர்த்தர் இந்தக் கவலைக்கிடமான வேளையில் தம் அருகாமையில் காணப்பட வேண்டும் என்று விரும்பினார். எனினும் இந்தத் தருணத்திலும்கூட, கர்த்தர் தம்முடைய ஜெபத்தில் இன்னும் தனித்துக் காணப்பட விரும்பினார்; காரணம் இந்த அவருடைய உண்மையான நண்பர்களுங்கூடச் சூழ்நிலையை உணர்ந்துகொள்ள முடியாமல் காணப்படுவார்கள்; “ஜனங்களில் ஒருவனாகிலும் அவருடன்கூட இருக்கவில்லை.” ஆகவே இந்த மூவரையும் விட்டு, கல்லெறியும் தூரத்திற்கு அப்பால் போய், பதிவுகளின்படி முகம்குப்புற விழுந்து பிதாவுடன் சம்பாஷித்தார்.

இத்தருணத்திலுள்ள நமது கர்த்தருடைய அனுபவங்களைப்பற்றின பல்வேறு பதிவுகளை வைத்து, எல்லாவற்றையும் தொகுத்துப்பார்க்கும்பொழுது, அவர் ஒருபோதும் அனுபவித்திராத மன வேதனையானது, மிகுந்த வேதனையுடன் அவர்மேல் கடந்துவந்திருந்ததை நம்மால் பார்க்க முடிகின்றது. மேலும் அவர்மேல் வந்த பாரத்தின் சுமை அதிகரித்துக்கொண்டே இருந்தது; அதாவது, “மரணத்துக்கு ஏதுவான துக்கமாய் இருந்தது,”அதாவது அவருடைய ஜீவியத்தையே நசுக்கிப்போடும் அளவுக்கு உள்ள துக்கமாய் இருந்தது என மத்தேயுவின் பதிவின்படி பார்க்கின்றோம். மாற்கு 14:33-ஆம் வசனத்தின்படி ஏதோ எதிர்ப்பாராத விதத்தில் அவர்மேல் துக்கம் வந்ததுபோலவும், ஏதோ அவர் திகைத்துவிட்டது போலவும், “அவர் திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும்” செய்தார் என்று பார்க்கின்றோம். வைத்தியனாகிய லூக்கா அவர்களின்படி, அவர், “மிகவும் வியாகுலப்பட்டார்” (லூக்கா 22:44) என்று பார்க்கின்றோம்; இங்கு இடம்பெறும் வியாகுலத்திற்கான (agony) கிரேக்க வார்த்தையின் பொருளானது, ஆற்றலிலும், வீரியத்திலும் பெருகிக்கொண்டிருக்கும் ஒரு போராட்டம் என்பதாக இருக்கின்றது; ஆகவே, “அவருடைய வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது” என்று பார்க்கின்றோம்; இந்த இரத்த வியர்வை என்பது, இன்றைய வைத்தியர்களினால் மிகவும் அபூர்வமான ஒன்றாகக் கருதப்பட்டாலும், இரத்த வியர்வை என்பது அவர்களால் அறியப்பட்டுள்ள ஒன்றாகத்தான் இருக்கின்றது. இரத்த வியர்வை என்பது, மரணத்துக்கு ஏதுவான துக்கமாகிய உச்சக்கட்ட நெருக்கடியையே சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. (*Vatican மூலப்பிரதிகளில் நமது கர்த்தருயை இரத்த வியர்வைக்குறித்த பதிவு இடம்பெறவில்லை என்றும், Sinaitic மூலப்பிரதிகளில் இது இடம்பெற்றாலும், இது பின்னாளில் வல்லுனர் ஒருவரால் அகற்றப்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் டிஸ்கென்டார்ப் அவர்கள் தெரிவிக்கின்றார். ஆகையால் இவ்வசனப்பகுதியானது சந்தேகத்திற்குரியதாக (அ) கேள்விக்கு இடம் கொடுப்பதாகக் காணப்படுகின்றது.)

நமது மீட்பருடைய இந்தத் துயரம், கண்ணீர்கள், ஜெபங்கள் என்பது அவருடைய பெலவீனத்தை உறுதிப்படுத்துகின்றது என நாத்திகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இவர்கள் விவாதிப்பது என்னவெனில், பல்வேறு மதங்களைச் சார்ந்த பலர் இரத்தச் சாட்சி மரணத்தைத் தைரியத்துடனும், விருப்பு, வெறுப்பு அற்று, உறுதியுடனும், சிலசமயம் புன்னகையுடனும் சந்தித்திருக்க, இவர்கள் எல்லாரையும் காட்டிலும் உயர்வாய் இருப்பதற்குப்பதிலாக, இயேசுவின் இந்நடக்கைகள் மூலம் அவர் கோழையானவராகவும், கீழானவராகவும் காணப்படுகின்றார் என்பதேயாகும். ஆனால் இவர்கள் கிரகித்துக்கொள்ளாத ஒரு தத்துவம், இச்சம்பவத்துடன் தொடர்புடையதாய்க் காணப்படுகின்றது. விழுந்துபோன, சீர்க்கெட்டுப்போன, கீழான மனுக்குலத்திற்கு உணர்ச்சியற்ற நிலைமை காணப்படுவதினால் இவர்கள் வலியையும், மரணத்தையும் அலட்சியமாகவே கருதுகின்றனர்; இதினிமித்தம் இவர்கள் பெரிதும் துன்பம் அடையாமலேயே மரணத்திற்குள் தாங்களும் கடந்து செல்கின்றனர் அல்லது இரக்கம் இல்லாமல், கருணையின்றி மற்றவர்களுக்கு மரணத்தைத் தண்டனையாகவும் வழங்குகின்றனர். இப்படிப்பட்ட கடினமானவர்கள், விருப்பு வெறுப்பு இல்லாத கல் மனதையுடையவர்கள் போல் இயேசு இல்லை என்பதினாலும், அவர் மென்மையான, அன்பான, பரிவான உணர்வுகளையும், உணரும் திறன்களையும் கொண்டிருந்தார் என்பதினாலும், மற்ற/வேறெந்த மனுஷனைக்காட்டிலும் மிகவும் பரிவுடனும், மிகவும் மென்மையாகவும், மிகவும் தூய்மையுடனும், மிகவும் கூர்மையான உணர்வுடனும் இயேசுவினால் அனுதாபம்/இரக்கம்கொள்ள முடியும் என்பதினாலும், நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். நம்பொருட்டு, தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கும் விஷயத்தில் அவர் தம்மைத்தாம் எந்த ஒரு நிலைக்குள்ளாக வைத்திருந்தார் என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்க வேண்டும்; ஏனெனில் ஒரு சிருஷ்டி பூரணமாய் இருந்ததாயின், அதன் உணர்வுகள் மிகுந்த உணர்வுத்திறன் கொண்டதாயும், உயர் ஆற்றல் மிக்கதாயும் காணப்படும்; சந்தோஷத்தையும் அதிகமாய் உணர்ந்துகொள்ளும், துக்கத்தையும் அதிகமாய் உணர்ந்துகொள்ளும் திறன் கொண்டிருக்கும். நமது கர்த்தர் முழுமையாய்ப் பூரணமானவராக இருந்தபடியினால், மற்றவர்களைக்காட்டிலும், கர்த்தரே வலியின் தாக்கத்திற்கு அதிகமாய் உள்ளாகுகின்றவராய் இருப்பார்.

இதுவுமல்லாமல், அவரிடம் பரிபூரணமானதும், எவ்விதமான தண்டனையினாலும் இழக்கப்பெறாததுமான ஜீவன் இருந்தது மற்றும் அதனைவிட்டு தாம் பிரியப்போகின்றார் என்பதை அறிந்தும், உணர்ந்தும் இருந்தார்; மனித குடும்பத்திலுள்ள மற்றவர்களோ ஜீவன் பறிமுதல் பண்ணப்பட்ட நிலைமையில் அல்லது ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கப்பட்ட நிலைமையில் வாழ்கின்றவர்களாய்க் காணப்படுகின்றபடியால், ஏதோ ஒருவிதத்தில் ஜீவனை விட்டுப்பிரிய வேண்டும் என்பதை உணர்ந்தவர்களாக இருந்தனர். ஆகவே, கர்த்தருடைய பின்னடியார்களில் எவரேனும் தங்களுடைய ஜீவனை ஒப்புக்கொடுப்பதைக்காட்டிலும், நமது கர்த்தர் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுப்பது என்பது முற்றிலும் வேறுபட்டக் காரியமாக இருக்கும். பரிபூரண ஜீவன் என்பது, நூறு பாகங்களை உடையது என்று வைத்துக்கொள்ளுங்கள், நமது கர்த்தர் நூறு பாகங்களையும் ஒப்புக்கொடுக்க வேண்டியவராக இருக்கின்றார்; ஆனால் மீறுதல்கள், பாவங்கள் மற்றும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதின் காரணமாக 99 பாகங்களிலும் மரித்துப் போய்விட்ட நமக்கு, மரணத்தில் ஒப்புக்கொடுப்பதற்கு ஒரே ஒரு பாகமே இருக்கும். மரணம் சில நிமிடங்களில் நடக்கக்கூடிய ஒன்று என்ற அறிவின் காரணமாக, ஜீவனை இழப்பதை நாம் அலட்சியமாகக் கருதுவது என்பது, அவர் ஜீவனை இழப்பதைக் கருதுவதிலிருந்து, முற்றிலும் வேறுபட்ட காரியமாகும்; அதாவது, “உலகம் தோன்றுவதற்கு முன்னதாக” பிதாவுடன் கூடக் காணப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும், தாம் இப்பொழுது ஒப்புக்கொடுக்கப்போகும் ஜீவனானது பாவத்தின் காரணமாகப் பறிமுதல் செய்யப்படாமல், மாறாக தாம் விரும்பி பலி செலுத்துவதினாலேயே என்ற அவருடைய உணர்ந்துகொள்ளுதலின் அடிப்படையிலும், நமது கர்த்தர் கொண்டிருந்த தெளிவான அறிவில், அவர் ஜீவனை இழப்பதைக் கருதுவதிலிருந்து, முற்றிலும் வேறுபட்ட காரியமாகும்.

ஜீவனை இழப்பது என்பது, நமது கர்த்தருடைய துக்கத்திற்கான முக்கிய காரணி என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. இதை அப்போஸ்தலர் எபிரெயர் 5:7-ஆம் வசனத்தின் வார்த்தைகளில் தெளிவாகத் தெரிவிக்கின்றார். “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்.” பிதாவின் சித்தத்தைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்கு ஒவ்வொரு நாளும் சுயத்தைப் பலி செலுத்தும் விஷயத்தில் கடந்து சென்றது இன்னும் ஒருசில மணி நேரங்களில் அனைத்தும் முடிந்துவிடும்; இந்த ஒரு எண்ணமானது, வேறொரு எண்ணத்தையும் கூடக் கூட்டிக்கொண்டு வந்தது, … தாம் பிதாவின் சித்தத்தைப் பூரணமாய்ச் செய்துள்ளாரா? மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் என்று தமக்கு வாக்களிக்கப்பட்ட பலனை/பரிசைத் தம்மால் உரிமைக்கோர முடியுமா? தம்மால் பெற்றுக்கொள்ள முடியுமா? என்பதேயாகும்.

பூரணத்தின் அளவுகோலுக்கு ஏற்ப வரும் விஷயத்தில், அவர் ஏதேனும் தவறிப்போனால், அவருடைய மரணம் என்பது, முற்றிலுமான அழிவாக இருக்கும்; மனுஷர்கள் அனைவரும் தாங்கள் அழிந்துபோவதைக் குறித்துத் திகிலடைந்தாலும், எவராலும் அழிவின் அர்த்தத்தினுடைய முழு ஆழத்தையும், அழுத்தத்தையும் அவரைப்போல் அதாவது, பரிபூரணமான ஜீவனை உடையவராக மாத்திரமல்லாமல், பிதாவுடன் தமக்கிருந்த முந்தின மகிமைப்பற்றின நினைவுகளைப் பெற்றிருந்த அவரைப்போல் அறிந்துகொள்ள முடியாது.

[R2774 : PAGE 79]

அவரைப் பொறுத்தமட்டில், அழிவைப் பற்றின சிந்தனையே, அவருக்குத் துக்கத்தையும், ஆத்துமாவில் அச்சத்தையும் கொண்டுவந்தது. இதே சிந்தனையானது முன்பு அவருக்கு இப்படியாக அழுத்தத்தைக் கொடுக்கவில்லை. இதுவே இப்பொழுது அவரை மரணத்துக்கு ஏதுவான அதிர்ச்சிக்கலந்த துக்கம் கொள்ளுமளவுக்கு அவர்மேல் பாரமாய் அழுத்தினது. தாம் தீமை செய்தவராக, நியாயப்பிரமாணத்தின்படி பாடுபடப்போவதைக் கர்த்தர் உணர்ந்தார்; தம்மைக் குற்றஞ்சாட்டுவதற்கு அநேகர் தீர்மானத்தில் இருக்க, பரலோக நீதிபதியும் தம்மைக் குற்றவாளி இல்லையென்று தீர்ப்பாரா? தாம் முற்றிலும் குற்றமற்றவராக இருக்கின்றாரா? என்ற கேள்வி அவருக்குள் இயல்பாகவே எழும்பினது.

கொஞ்சம் நேரம் ஜெபம் பண்ணின பிற்பாடு, அவர் தம்முடைய மூன்று சீஷர்களிடத்தில் வந்தார். மற்றவர்களைக் காட்டிலும், இம்மூவரிடமே அவருடைய மாபெரும் நம்பிக்கை காணப்பட்டது; இவர்கள் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானக் கூட்டாளிகளாக இருந்தனர்; ஆனால் இவர்களை நித்திரைப் பண்ணுகிறவர்களாக இயேசு கண்டார். துயரத்தின் காரணமாகவே இவர்கள் தூங்கிப்போய்விட்டனர் என லூக்கா அவர்கள் விவரிக்கின்றார். அந்த இரவும், அதன் பாடங்களும் மனதில் ஆழமாய்ப் பதிந்ததாய் இருந்தது; அவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத நினைவுகூருதலின் போஜன காரியங்களானது, ஆண்டவருடைய மரணத்தைக்குறிக்கின்றது என ஆண்டவர் தெரிவித்ததினாலும், இன்னுமாய் அவர்களில் ஒருவன் ஆண்டவரைக் காட்டிக்கொடுப்பான் என்றும் அவர் கூறினபடியினாலும், அவர்கள் மீது மிகுந்த துக்கமான பாரத்தை கொண்டுவந்ததாய் இருந்தது. துக்கத்தின் காரணமாக, மந்த தன்மையுடன் கூடிய தூக்கம் அவர்களுக்கு ஏற்பட்டது. “நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்று அவர்களை மென்மையாய் நமது கர்த்தர் கடிந்து கொண்டார். “எனக்காக மாத்திரம் நீங்கள் விழித்திராமல், உங்களுக்காகவும் நீங்கள் விழித்திருக்க வேண்டும். நம் அனைவர் மீதும் கடுமையான சோதனை காலம் வரவிருக்கின்றது; இந்தப் பொல்லாத காலக்கட்டத்தில் விழுந்துபோகாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற விதத்தில் கர்த்தர் கூறினார்.

பின்னர், மீண்டும் கர்த்தர் ஜெபம் பண்ணும்படிக்குக் கடந்துபோனார். மூன்று முறையும், அவர் ஒரே வார்த்தைகளைக் கூறி ஒரே உணர்வுகளை வெளிப்படுத்தி – ஜெபம் பண்ணினதாக நமக்குக் கூறப்பட்டுள்ளது; அதாவது அவருடைய இருதயத்தை அழுத்திக்கொண்டிருந்த காரியத்திற்காக ஜெபம் பண்ணினார். பிதாவின் சித்தத்தைச் செய்வதற்கு நாடி, இப்பொழுது தமது ஓட்டத்தை முடிக்கப்போகின்ற அவர், தாம் அங்கீகரிக்கத்தக்க விதத்தில் செய்துள்ளார் என்று நம்பிக்கைக்கொள்ளலாமா? மரணத்திலிருந்து, உயிர்த்தெழுதல் மூலமாய்த் தம்மைத் தேவன் இரட்சிப்பார் என விசுவாசத்தின் முழு நிச்சயத்தை தம்மால் பெற்றுக்கொள்ளக்கூடுமோ? கர்த்தருடைய விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கும் வண்ணமாக, அவரை ஆறுதல் படுத்தும்படிக்கும், அவருக்கு நிச்சயம் கொடுக்கும்படிக்கும், அவரைப் பலப்படுத்தும்படிக்கும், தேவதூதன் அனுப்பி வைக்கப்பட்டார். என்ன செய்தி தேவதூதன் கொண்டுவந்தார் என்பது பற்றி நமக்குக் கூறப்படவில்லை, எனினும் அது சமாதானம் கொடுக்கும் செய்தியாகவும், கர்த்தருடைய நடத்தைப் பிதா அங்கீகரிக்கத்தக்கதாய் இருந்தது என்பதற்கும், அவர் மரணத்திலிருந்து, உயிர்த்தெழுதல் மூலம் மீண்டும் ஜீவனுள்ளவராய் கொண்டுவரப்படுவார் என்பதற்கும் உறுதியளிக்கும் செய்தியாகவும் இருந்திருக்கும் என நாம் எண்ணுகின்றோம். இவை நமது கர்த்தருக்கு முன்பாக இருக்கும் சோதனைக்கு அவசியமான பலத்தையும், தைரியத்தையும் அவருக்கு அளிப்பதற்குப் போதுமானதாய் இருந்தது; மேலும் அதுமுதல் அனைவர் மத்தியிலும் கர்த்தர் அமைதியுடன் காணப்பட்டார். யூதாசும், அவனோடு வந்த சேனைகளும், கர்த்தரிடம் வந்தபோது, எல்லோர் மத்தியிலும் கர்த்தரே மிகவும் அமைதலுடன், சாந்தத்துடன் காணப்பட்டார்; பிரதான ஆசாரியனாகிய காய்பாவிற்கு முன்பாக இயேசு காணப்பட்ட போதும், இப்படியாகவே காணப்பட்டார்; பிலாத்துவுக்கு முன்னதாகவும் இப்படியே காணப்பட்டார்; சிலுவையில் அறையப்பட்டபோதும் இப்படியாகவே காணப்பட்டார்; தாம் பிதாவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்பது பற்றியும், மகிமை, கனம் மற்றும் அழியாமை குறித்த கிருபையான வாக்குத்தத்தங்கள் அனைத்தும் தமக்கு உரியது என்பது பற்றியும் உள்ள செய்தியில், கர்த்தர் சமாதானம் அடைந்தார்; இப்பொழுது அவரால் எந்தச் சோதனைக்குள்ளாகவும் கடந்து செல்ல முடிந்தது.

(அவருடைய சகோதரர்களாகிய) நம்மைப்போன்று அவர் எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டதாக வேதவாக்கியங்கள் நமக்கு நிச்சயம் கொடுக்கின்றது; கெத்செமனேயில் உள்ள இந்த அவருடைய அனுபவத்தில், கர்த்தருடைய ஜனங்களுக்கு வரப்போகின்ற மிகக் கடுமையான சோதனைகளில் ஒன்று சித்தரிக்கப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். பலியின் “இடுக்கமான வழியில்” உள்ள சோதனைகளும், சிரமங்களும், அனைத்தும் எவ்விதத்திலும் பலனளிக்காது என்று நம்மை எண்ணவைத்து, நாம் முயற்சியைக் கைவிட்டுவிடத்தக்கதாக நம்மைச் சோர்வுபடுத்தும்படிக்கு, சிலசமயங்களில் எதிராளியானவன் முயல்வான். இப்படிப்பட்ட எண்ணங்கள், தாங்கள் அர்ப்பணிப்பின்போது செலுத்தின வாக்குறுதிகளை நிறைவேற்றத்தக்கதாக நேர்மையுடனும், உண்மையுடனும் நாடுபவர்களுக்கு வருகையில், இது அவர்கள் மேற்கொள்ள வேண்டிய கடுமையான சோதனைகளில் ஒன்றாய் இருக்கும்; பரம காரியங்களுக்காக இந்த உலகத்தையும், அதன் ஆசைகளையும், எதிர்பார்ப்புகளையும், இலட்சியங்களையும், விருப்பங்களையும் கைவிட்டுவிட்டவர்களுக்கு, ஏதேனும் விஷயம் அவர்களுடைய பரம நம்பிக்கைகளை மூடிப்போட்டுவிடும்பட்சத்தில், இவர்கள் ஒருவேளை மகிமையான வாக்குத்தத்தங்களைக்காணாமல், ஏற்றுக்கொள்ளாமலிருந்தால், காணப்படும் இருளைக்காட்டிலும், அடர்த்தியான இருள் சூழ்நிலைமையில் இவர்கள் காணப்படுவார்கள். இப்படியான தருணங்களில் இவர்கள் என்ன செய்ய வேண்டும்? நாம் கர்த்தருடைய மாதிரியைப் பின்பற்றி, அனைத்தும் சரியாக இருக்கின்றதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளும்படிக்கு, பிதாவின் முகத்தை நாட வேண்டும். உலகமானது நம்மை வெறுத்து, நமக்கு எதிராய்ப் பொய்யாய் அநேக தீமைகளைப் பேசும்போது, அவருடைய அங்கீகரிப்பு இன்னமும் இருக்கின்றது என்பதற்கான ஏதேனும் உறுதிபாடுகளை அடைவதற்கு ஆவலாய் நாம் காணப்பட வேண்டும்; அனைத்தும் சரியாக நடக்கும் என்றும், ஜீவனுக்கான மேலான உயிர்த்தெழுதலில் ஒரு பங்கை கர்த்தர் நமக்குக் கொடுப்பார் என்றும் ஏதேனும் புதிய உறுதிபாடுகள் கிடைக்க ஆவலாய் நாம் காணப்பட வேண்டும்.

நமது கர்த்தருடைய அனுபவங்களுக்கும், நம்முடைய அனுபவங்களுக்கும் நாம் இவ்விதமாய்த் தொடர்புபடுத்திப்பார்த்திட்டாலும், மிகப் பெரிய வித்தியாசம் நமக்கும், கர்த்தருக்கும் இடையே காணப்படுகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது; நாம் மரித்துக்கொண்டிருப்பவர்கள் என்றும், நம்மில் 99 பாகங்கள் ஏற்கெனவே மரித்துவிட்டது என்றும், இதனால் மரணத்தின் (அ) நித்திய ஜீவனுக்கான அர்த்தத்தை முழுமையாய்ப் புரிந்துகொள்ள முடியாது என்றும் நாம் மறந்துவிடக்கூடாது; இவைகள் எல்லாவற்றையும் விட நமக்கு நமது கர்த்தருடைய மாதிரி [R2775 : page 79] காணப்படுகின்றது மற்றும் இன்னுமாக நம்முடைய சரீரங்களிலும், ஆவிகளிலும் அவரை மகிமைப்படுத்துவதற்கான நம்முடைய பிரயாசங்கள் எவ்வளவு பூரணமற்ற பலனைக் கொடுத்திட்டாலும், இருதயத்தில், நோக்கத்தில், சித்தத்தில் நமது உண்மையைக் கர்த்தருக்கு நாம் நிரூபிக்கும் பட்சத்தில், நம்முடைய சொந்த பரிபூரணத்தினால் அல்லாமல், அவருடைய பரிபூரணத்தினால் முதலாம் உயிர்த்தெழுதலில் நாம் பங்கடைவோம் என்ற நிச்சயமும் நமக்கு இருக்கின்றது.

“பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால், நீங்கட்டும்” என்று நமது கர்த்தர் ஜெபம் பண்ணினதாக சுவிசேஷகர்கள் பதிவு செய்துள்ளனர். ஒருவேளை அவர் ஜெபம் பண்ணினதானது, “ஒருவேளை என்னுடைய மரணம் அவசியப்படாமலேயே மனுக்குலத்திற்கான உம்முடைய இரட்சிப்பின் திட்டத்தை ஏதேனும் விதத்தில் நிறைவேற்றிட முடியும் என்று உம்முடைய அளவில்லாத அன்பும், இரக்கமும் ஒருவேளை காணும்பட்சத்தில் பிதாவே, அப்படியாகவே நடப்பதாக” என்று அர்த்தப்படுமாயின் – இயேசு, ஆதாம் மற்றும் அவருடைய பாவங்களுக்குச் சரிநிகர் சமானபலி செலுத்தப்படுவதன் மூலம் மனுக்குலத்தைச் சீர்ப்பொருத்தும் பிதாவின் திட்டத்தை முழுமையாய்க் கிரகித்துக்கொள்ளவில்லை என்பதாகிவிடும்; ஏனெனில் ஈடுபலி தேவை என்பதைக் கர்த்தர் ஒருவேளை அறிந்திருந்தாரானால், ஈடுபலியைக் காட்டிலும் குறைவான வேறு எதுவாலும் பலன்களைக்கொடுக்க முடியும் என நம்முடைய கர்த்தர் எண்ண வாய்ப்பில்லை. ஆகவே, அவரைப் பாரமாய் அழுத்திக்கொண்டிருந்தது என்னவெனில், ஒருவேளை அவர் தேவதூஷணம் புரிந்தவராகக் கைது செய்யப்பட்டால், அவரை அவருடைய சத்துருக்கள் இரகசியமாய் அழித்துப்போடுவதற்குத் திட்டம் பண்ணாமல், அவரை ரோமர்களிடம் கையளிப்பார்கள் [R2775 : page 80] என்பதாகும்; இப்படியாக அவருடைய சத்துருக்கள் அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்கு எவ்வளவு வல்லமையையும், செல்வாக்கையும் செலுத்திடுவார்கள் என்பதையும் கர்த்தர் உணர்ந்திருந்தார் மற்றும் சிலுவையில் அறையும் முறையே ரோமர்கள் மரணத் தண்டனையை அளிக்கும் முறை என்றும் கர்த்தர் அறிந்திருந்தார்; மற்றும், “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” என்று வேதவாக்கியங்கள் கூறுவதையும் கர்த்தர் அறிந்திருந்தார் (கலாத்தியர் 3:13).

“நான் தேவனால் கைவிடப்பட்டவராகவும், தேவனால் சபிக்கப்பட்டவராகவும், என்னுடைய தேசத்தின் ஜனங்களினால் கருதப்படப்போகிறேன். என்னுடைய எல்லா உணர்வுகளும், இப்பொழுதும், எப்பொழுதும் பிதாவுக்கு உண்மையாகவே இருக்க, நான் தேவதூஷணம் புரிந்தவராகக், குற்றவாளியாக மரிக்கவிருக்கிறேன்” என்பதே கர்த்தருடைய எண்ணங்களின் மையமாக இருந்தது. இது நமது கர்த்தருடைய கவலையின் விசேஷித்த அம்சமாகும்; இதுவே துக்கத்தின் “பாத்திரமாய்” இருந்தது; இதைத்தான் நீங்கக்கூடுமானால் நீங்கட்டும் என்று விரும்பினார். தம்முடைய மரணம் அவசியமான ஒன்றும், தவிர்க்கப்பட முடியாத ஒன்று என்றும் கர்த்தர் அறிந்திருந்தார்; தம்முடைய மரணம் அவசியம் என்று பலமுறை தம்முடைய சீஷர்களுக்கு அறிவித்துமிருந்தார்; ஆனால் சிலுவை பரியந்தமான அவருடைய அவமானத்துடன் கூடிய மரணமே, அவரைத் தயங்கபண்ணினது; காரணம் இப்படியாக அவர் அவமான மரணம் மரிப்பது என்பது வெட்கமாகவும், ஜனங்களுக்கும், தாம் அன்புகூர்ந்தவர்களுக்கும், தாம் நன்மை செய்யும்படிக்கு நாடினவர்களுக்கும், தம்மைத் தவறாய்க் காட்டுவதோடு கூட, தாம் தேவனால் சபிக்கப்பட்டவர் என்ற எண்ணத்தைக் கொடுக்கின்றதாகவும் இருக்கும்; தேவனால் சபிக்கப்பட்டவர் என்றால், தமக்கு உயிர்த்தெழுதல் குறித்த மகிமையான வாக்குத்தத்தம் பற்றின காரியத்திற்கு எவ்விதமான நம்பிக்கையும் இல்லை என்பதாக இருக்கும். ஆனால் அவர் உண்மையில் தேவனால் குற்றம் சாட்டப்படுவதில்லை என்றும், கொஞ்சம் நேரம் சபிக்கப்பட்ட ஆதாமின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டு, ஆதாமின் சந்ததியாகிய நமக்கு, “அவர் சாபமாக்கப்படுவார்” என்றும் தேவதூதனினால் நிச்சயமளிக்கப்பட்டபோது, அவரால் சிலுவையையும், அதன் அவமானங்களையும் பொறுமையாய்ச் சகிக்க முடிந்தது.

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு, விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்

நம்முடைய கர்த்தர் மற்றும் அப்போஸ்தலர்களுடைய விஷயத்தில், சோதனையின் இருளான வேளையில் விழித்திருந்து, ஜெபம் பண்ணுவதற்குரிய முக்கியத்துவம் சித்தரிக்கப்பட்டுள்ளதை நாம் பார்த்தோம். நமது கர்த்தர் சீஷர்களுக்குச் சொன்னவைகளை தாமும் கைக்கொண்டார்; அவர் விழித்திருந்து ஜெபம் பண்ணினார், ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டார், அவர் பெலப்படுத்தப்பட்டார் மற்றும் ஜெயங்கொண்டவராக வந்தார். அப்போஸ்தலர்கள் விழித்திருக்கவில்லை, அவர்கள் ஜெபம் பண்ணவில்லை, சூழ்நிலைக்கான அவசியங்களை உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டார்கள், இவைகள் காரணமாக அவர்கள் சிதறடிக்கப்பட்டுப்போனதையும், தடுமாறி/திகைத்துப்போனதையும், நாம் பார்க்கின்றோம்; இவர்களில் ஒருவர், இவர்கள் அனைவரிலும் மிகவும் பலமானவர், “அனைவரும் உம்மை கைவிட்டுப்போனாலும் நான் உம்மை விட்டுப்போவதில்லை” என்று சற்று முன்பு தற்பெருமையடித்துக் கொண்டவர், தன்னுடைய சூழ்நிலைகளினால் மிகவும் மேற்கொள்ளப்பட்டுவிட்டார்; ஜெபத்தினாலும், விழித்திருப்பதினாலும் அடையப்பெற்றிருக்கும் பலம், பேதுருவுக்கு இல்லாமல் இருந்தபடியினால், அவர் கர்த்தரை நிந்தித்து மறுதலித்துவிடும் அளவுக்கு மிகவும் பெலவீனமாய்க் காணப்பட்டார்.

எப்போதெல்லாம் பரிசுத்தமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள ஜீவியத்தை ஜீவிக்க முற்பட்டு, ஆனால் விழித்திருந்து, ஜெபம் பண்ணும்படியான கர்த்தருடைய கட்டளையைக் கர்த்தருடைய ஜனங்கள் புறக்கணிப்பதை நாம் காண்கையில், இவர்கள் ஞானமற்று நடக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம்; மேலும், இவர்கள் எவ்வளவுதான் கன்னிகைகளாகவும், தூய்மையானவர்களாகவும் இருப்பினும், இவர்கள் புத்தியில்லாதவர்கள் ஆவார்கள்; தன்னந்தனியாக இவர்களால் சுயத்தையும், பாவத்தையும், எதிராளியானவனையும் ஜெயங்கொண்டுவிட முடியாது. ஆண்டவருக்கே பலப்படுத்தப்படுதல் அவசியப்படுமாயின், நிச்சயமாய் அது நமக்கும் அவசியம்; அவர் பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும் தம்முடைய வேண்டுகோளுக்கான பதிலைப் பெற்றுக்கொண்டாரானால், இது தேவனுடைய நாமத்திற்காகவும், அவருடைய ஊழியத்திற்காகவும் எதையும், மற்றும் எல்லாவற்றையும் நாம் நல்ல போர்ச்சேவகர்களாக சகிக்கத்தக்கதாக நம்மைப் பெலப்படுத்தக்கூடிய விசுவாசத்தின் பூரண நிச்சயத்தை அளிப்பதற்கு, பிதா பிரியப்படுகின்ற வழியை/வழிமுறையை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. கர்த்தரை உண்மையோடு, ஜெபத்தில் நாடுபவர்கள், நிச்சயமாய்க் கர்த்தர் இயேசு பெற்றுக்கொண்டதுபோல, ஓர் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்; ஆறுதல் படுத்துவதற்கும், உற்சாகப்படுத்துவதற்கும் என்று அன்று அனுப்பப்பட்ட அதேவிதமான பரலோகத்தின் தூதுவர் அனுப்பி வைக்கப்படமாட்டார் எனினும், வேறுவிதமான பரலோகத்தின் தூதுவர் நமக்காக நிச்சயமாய் அனுப்பிவைக்கப்படுவார். அத்தூதுவர்/அது நம்முடைய சோதனைகளை, நமக்கான பிரச்சனைகள் என்று கண்டு, நம்மீது அனுதாபங்கொள்ளும், சக சகோதரர்களாக இருக்கலாம்; இல்லையேல் அது ஒருவேளை அப்போஸ்தலர்கள் ஏவப்பட்டு கொடுத்த கிருபையான வார்த்தைகளின் மூலம் தேவன் நம்மிடம் பேசுகின்றவராய் இருக்கலாம். நமது கர்த்தரின் விஷயத்தில், அப்போஸ்தலர்கள் அவருக்காக அனுதாபங்கொள்ளாமல் (அ) அவருக்கு உதவிடாமல் இருந்துவிட்டனர். எப்படியிருப்பினும், பெலமானது கடந்துவரும்; அது மனுஷர் (அ) தேவதூதரின் வாக்காக இல்லாமல், மாறாக நாம் அவருக்குப் பிரியமாயும், அவரால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாகவும் இருக்கின்றோம் என்றும், தேவனை அன்புகூருகிறவர்களுக்கென்று அவர் வைத்துள்ள மகா மேன்மையும், அருமையுமானவைகளை நாம் உரிமைகோரலாம் மற்றும் எதிர்பார்க்கலாம் என்றுமுள்ள தேவனுடைய வாக்காகவே இருக்கும்.

சொல்லப்போனால், உலகம் அனைத்தையும் சோதிக்கத்தக்கதாக உலகத்தின் மீது வரப்போகின்ற சோதனை வேளையில்தான் நாம் இப்பொழுது காணப்படுகின்றோம். இது “சோதனை காலம்” அல்லது இந்த யுகத்தின் முடிவு பகுதியிலுள்ள சோதனைகள் என்று வேதவாக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இது கர்த்தருடைய உண்மையான ஜனங்கள் அனைவருக்கும், அதாவது அவருக்குத் தங்களை முழுமையாய் அர்ப்பணித்துள்ளவர்கள் அனைவருக்கும் கெத்செமனே வேளையாய் இருக்கின்றது. இது நமது கர்த்தரைப் போன்று நாம் தேவனுடையவர்கள் என்றும், அவர் நம்முடையவர் என்றும், இவ்வேளையில் நம்மை அவரது பலமானது, சுமந்து செல்லும் என்று நம்பிக்கைக்கொள்ளலாம் என்றுமுள்ள முழு நிச்சயத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, பிதாவின் முகத்தை நாம் நாடுவதற்கான வேளையாகும். இது,

“பூமிக்குரிய எந்த மேகமும் எழும்பி,
உம்முடைய அடியானின் கண்களிலிருந்து
உம்மை மறைக்காமல் இருப்பதாக”

என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான வேளையாகும். இந்த ஒரு வேளையில், “சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்ற ஆண்டவருடைய வார்த்தைகளை அலட்சியப்படுத்துகின்றவர்கள் சோதனைக்குட்பட்டு, விழுந்துபோவார்கள். இந்த வீழ்ச்சி/விழுகை என்பது, கடுமையாய் இருக்கும்; என்னதான் அவர்கள் பேதுரு போன்று பிற்பாடு குணப்பட்டாலும், அது கண்ணீருடன்தான் குணப்படுகின்றதாய் இருக்கும்.

சிலர் விழித்திருக்காமல் ஜெபம் பண்ணும் தவறைச் செய்கின்றனர்; இன்னும் சிலர் ஜெபம் பண்ணாமல் விழித்திருக்கின்றார்கள்; ஆனால் கர்த்தர் சொல்லியுள்ளது போன்று, இரண்டையும் சேர்த்துச் செய்வதுதான் பாதுகாப்பான மற்றும் சரியான ஒரே வழிமுறையாக இருக்கும். நாம் விழித்திருக்க வேண்டும் மற்றும் உலகம், மாம்சம் மற்றும் பிசாசின் அத்துமீறுதலுக்கு எதிராக காவல் காக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகள் கொடுக்கும் உற்சாக மூட்டுதல் அனைத்தையும், அவருடைய பிரசன்னத்தை மற்றும் யுகத்தின் மாபெரும் மாறுதல்களைப் பற்றின அடையாளங்களையும், கர்த்தருடைய வார்த்தைகளின் நிறைவேறுதல்களுக்கான சாட்சியங்களையும் நாம் கவனிக்கின்றவர்களாய் இருக்க வேண்டும். விசுவாசத்திலும், நம்பிக்கையிலும், உண்மையிலும், அன்பிலும் நம்மைப் பலப்படுத்துகின்ற அனைத்திற்காகவும் நாம் கவனித்திருக்க வேண்டும்; மற்றும் இப்படியாக கவனித்திருக்கும் அதே வேளையில், நாம் இடைவிடாமல் ஜெபம் பண்ணவும் வேண்டும். நாம் கர்த்தருடைய ஜனங்களுடன் சேர்ந்து ஜெபம் பண்ண வேண்டும்; நாம் நம்முடைய இல்லங்களில், குடும்பத்தினராகச் சேர்ந்து ஜெபம் பண்ண வேண்டும்; நாம் தனிமையில் இரகசியமாக ஜெபம் பண்ண வேண்டும். நாம் பேசும் மற்றும் செய்யும் அனைத்திலும் நமக்கு ஜெப சிந்தை காணப்பட வேண்டும். அதாவது, பிதா அங்கீகரிக்கத்தக்கதான விதத்தில் நாம் நம்முடைய கையில் வருகின்ற காரியங்களை நம்மால் முடிந்தமட்டும் செய்வதற்கும், நம்முடைய திராணிக்கு மிஞ்சினதாய் இருக்கும் சோதனைகளிலிருந்து அவரால் நாம் பாதுகாக்கப்படுவதற்கும், இறுதியில் பொல்லாங்கனிடமிருந்து விடுவிக்கப்பட்டு நம்முடைய கர்த்தருடைய இராஜ்யத்தில் நாம் இடம்பெற்றுக் கொள்வதற்கும் என்றும், நம்முடைய ஜீவியத்தின் விஷயங்கள் அனைத்திலும் வழிநடத்தல் பெற்றுக்கொள்வதற்கென, நம்முடைய இருதயங்கள் தொடர்ந்து கர்த்தரிடத்தில் போய்க்கொண்டே இருக்க வேண்டும். அன்பான சகோதர சகோதரிகளே, ஒவ்வொரு இல்லங்களிலும் வாட்ச் டவர் வெளியீடு சுமந்துவரும் நம்முடைய கர்த்தருடைய வார்த்தைகளான: “சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்பதை நாம் அதிகமதிகமாக நினைவில் கொள்வோமாக மற்றும் செயல்படுத்திடுவோமாக!