R5560 – இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5560 (page 316)

இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்

MOCK TRIALS OF JESUS

மத்தேயு 26:57-68

“அடிக்கப்படும்படி கொண்டுப்போகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.” ஏசாயா 53:7

நாகரிகமுடையவனோ அல்லது அஞ்ஞானியோ, எப்படியாக இருப்பினும், பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரிடத்திலும், நியாயம் எனும் மனதின் தன்மையானது இயல்பாகவே நியாயத்திற்காகப் பரிந்து பேசுகின்றதாய் இருக்கின்றது. ஆகவே ஒவ்வொரு தேசமும், அதன் சட்ட புஸ்தகங்களில் நியாயமான சட்டங்களைப் பெற்றிருக்க நாடுகின்றது; மேலும் சீசர் மற்றும் லைகர்கஸ் (Lycurgus) போன்றவர்களுடைய சட்டங்களுடன்கூட, உலகத்தினுடைய அநேக சட்டங்களானது, அதிகப்படியான ஞானத்தையும், அதிகப்படியான நீதியையும்/நியாயத்தையும் வெளிப்படுத்தி உள்ளது என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

ஆனால் மோசேயின் கரங்களில், தேவனாலே சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட யூதருடைய நியாயப்பிரமாணமானது, உண்மையில் உயர் நிலை வகிக்கின்றதாய் இருக்கின்றது; மற்றும் கிறிஸ்தவ மார்க்கத்தினை ஏதேனும் அளவில் அடையாளங்கண்டுகொண்டதாகத் தெரிவிக்கின்றதான தேசங்கள் அனைத்தினுடைய சட்டங்களானது, உயர் நிலையில்/தளத்தில் நீதியின் கொள்கைகளை முன் வைத்திட நாடுகின்றது; எனினும் இந்தச் சட்டங்களுக்கு விளக்கம் கொடுக்க முற்படும் விஷயத்திலும், அவைகளைத் தனிப்பட்ட நபர்களிடத்தில் செயல்படுத்தும் விஷயத்திலும், சட்டங்களையும், நியாயமான கொள்கைகளையும் மீறுவதற்கு அவசியமான சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஆகிவிட்டன என்று சாக்குப்போக்குகள் சொல்வதும், நியாயத்தின் கொள்கைகளினின்றும், சட்டங்களினின்றும் விலகுவதுமாகிய செயல்கள் எங்கும் காணவேபடுகின்றது.

யூதருடைய நியாயப்பிரமாணத்திற்கு எதிராக, இயேசு அநீதியான விதத்தில், யூதருடைய நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டச் சம்பவமானது, நம்மை ஒன்றும் ஆச்சரியத்துக்குள்ளாக்குவதில்லை; இன்னுமாக அச்சம்பவமானது, மற்ற நீதிமன்றங்களில், பல்வேறு சம்பவங்களின்போது நடைப்பெற்ற காரியத்திலிருந்து வேறுபட்டதாகவும் நாம் எண்ணுவதில்லை.

சட்ட விரோதமான முறையில் – கைது செய்தல்

பிலாத்துவினுடைய கட்டளையின் பேரிலோ அல்லது ஏரோதினுடைய கட்டளையின் பேரிலோ அல்லது இவர்களுடையப் போர் வீரர்களினாலோ இல்லாமல், வேறு நபர்களினால் இயேசு கைது செய்யப்பட்டார். யூத மார்க்கத்திற்கு நன்மை கொடுக்கிறதாய் இருக்குமெனத் தாங்கள் கொண்டிருந்த திட்டங்களுக்கு, இயேசுவும் அவரது ஊழியமும் தீங்கு விளைவிக்கின்றதாய் இருக்குமெனக் குறிப்பாய்த் தீர்மானம் செய்து காணப்பட்டிருந்த பிரதான ஆசாரியனும், அவரது [R5561 : page 316] கூட்டாளிகளுந்தான், இயேசுவைக் கைது செய்தார்கள். இயேசுவைக் கொலை செய்ய வேண்டுமென முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அனைத்துக் கொலைக்காரர்களும் செய்வதுபோன்று, இந்தக் கொலைக்காரர்களும், தங்களின் இந்தச் செய்கைக்கு ஏதேனும் விதத்தில் நியாயம் கற்பிக்க நாடினார்கள்; இன்னுமாக இவர்கள் அரசியல்வாதிகளாகக் காணப்பட்டப்படியால், தங்களைக் காட்டிலும் மென்மையான மனசாட்சிகளை உடையவர்களைக் கருத்தில் கொண்டவர்களாக, தங்கள் செய்கை நியாயமானதுபோன்று தோற்றமளிக்கத்தக்கதாக வகைத்தேடினார்கள்.

ஆசாரியர்களுடைய பொறுப்பின் கீழ், அநேக மனிதர்கள் ஆலயத்திலும், அதன் சுற்றுப் புறங்களிலும் காவற்காரராய்ப் பணிபுரிந்தனர். இவர்கள் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களாய்க் காணப்பட்டனர்; இந்த வேலைக்காரர்களே பட்டயங்களுடனும், ஆயுதங்களுடனும், பந்தங்களுடனும், யூதாசுடன் பின்தொடர்ந்து வந்தார்கள்; அன்றிரவு, இயேசு வழக்கம்போல் பெத்தானியாவுக்குப் போக நோக்கம் கொள்ளாமல், மாறாக தம்முடைய சீஷர்களுடன் கெத்செமனே ஒலிவ தோட்டத்தில் ஒன்றுகூடுவதற்கு நோக்கம் கொண்டுள்ளார் என்று யூதாஸ் முன்கூட்டியே அறிந்தவனாய் இருந்தான்.

பிரதான ஆசாரியனுக்குரிய ஸ்தானத்திலிருந்து ஓய்வுப் பெற்றிருந்த அன்னாவின் வீட்டிற்கு இயேசுவை நேரடியாய்க் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இவர் ஓய்வு பெற்ற ஸ்தானத்தில், இவரது மருமகனாகிய காய்பா பொறுப்பேற்றிருந்தார். அன்னா இயேசுவை விசாரணை செய்து தோல்வியடைந்தார்; பின்னர் தன்னுடைய வீட்டு முற்றத்திலேயே, தன்னுடைய வீட்டோடு சேர்ந்து காணப்பட்ட காய்பாவின் வீட்டில், காணப்பட்டக் காய்பாவினிடத்திற்கு இயேசுவை அனுப்பி வைத்தார். அங்கு அநேகமாகக் காலையில் மூன்று மணியளவுக்கு ஆலோசனை சங்கத்தினர் கூடினர்.

இயேசுவைக் கொன்று போடுவதற்கான திட்டம் நன்கு போடப்பட்டிருந்தது. இயேசுவையும், மற்ற அப்போஸ்தலரையும் விட்டு பஸ்கா போஜனத்தின்போது யூதாஸ் கடந்துபோனது முதல், இந்த விசாரணை நடைப்பெறுவது வரைக்குமுள்ள, இடையில் காணப்பட்ட நேரங்கள் முழுவதும், பட்டணம் எங்கும் காணப்பட்ட ஆலோசனை சங்கத்தாரை, அவர்களது இல்லங்களிலிருந்து கூட்டிச் சேர்ப்பதற்கெனச் செலவிடப்பட்டது. இயேசு ஜனங்களுக்குப் போதித்ததினாலும் மற்றும் ஜனங்களுக்கு அவரால் போதிக்கப்பட்டவைகளானது, பரிசேயர்கள் மற்றும் வேதப்பாரகர்கள் மற்றும் முன்னோர்களுடைய பாரம்பரியத்தின் அதிகாரத்தை பலவீனப்படுத்தினதாலும், இயேசுவைக் கொன்றுபோடுவதற்கு நாடின இவர்கள், “ஒருவனும் ஒருக்காலும் பேசாததுபோன்று பேசினவரை” கொன்றுப்போடுவதற்கான இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் நியாயப்படுத்துவதற்காக, (இப்பொழுது சூழ்நிலைகள் அனைத்தும் ஏதோ கைமீறிப்போனதுபோன்று இவர்கள் கருதி) இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் காண்பித்துக் கொண்டார்கள். (யோவான் 7:46; மத்தேயு 26:55).

புரோகிதருக்குரிய/ஆசாரியனுக்குரிய அதிகாரம் தக்கவைக்கப்படுவதற்கு, அறியாமையும், மூடநம்பிக்கையும் அவசியம் என்பது தவறான மதப்போதனைகளுடைய கொள்கையாகும். ஆகவேதான் தப்பறையானது எப்போதும் சத்தியத்தைப்பகைக்கின்றதாய்க் காணப்படுகின்றது; ஆகவேதான் இருள் எப்போதும் வெளிச்சத்தைப் பகைக்கின்றதாய் இருக்கின்றது. இயேசு ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட காரியமானது, வெளிச்சத்திற்கு மேலாக, இருள் வெற்றியடைந்து ஓங்கின மற்றுமொரு சம்பவமாக மாத்திரமே உள்ளது. எனினும் இது தோற்றத்தில் மாத்திரமே வெற்றியாகக் காணப்பட்டது; ஏனெனில் இவ்விதமாகவே தேவனுடைய திட்டமானது நடந்தேறியது. இவ்விதமாகவே பாவத்திற்கான மாபெரும் பாவநிவாரணம் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது; இதன் விளைவாக இறுதியில் பாவம், சாத்தான் மற்றும் மரணம் வீழ்த்தப்படும் மற்றும் நீதியும், சத்தியமும் உலகமெங்கும், நித்திய காலமாய் ஸ்தாபிக்கப்படும்.

அநீதியான ஒரு விசாரணை

மிகுந்த செல்வாக்குமிக்க 70 யூதர்களை ஆலோசனை சங்கமானது கொண்டிருந்தது. மற்றும் இவர்களது வார்த்தைகளுக்கு, ஜீவன் (அ) மரணத்திற்கான அதிகாரத்தை அக்கால கட்டத்தில் கைகளில் பெற்றிருந்த ரோம தேசாதிபதியிடம் மிகுந்த செல்வாக்கு இருந்தது.

காய்பா பிரதான ஆசாரியனுக்குரிய பணியை மாத்திரம் செய்யாமல், இதனோடுகூட, இயேசுவின் விஷயத்தில், இயேசுவுக்கு எதிராக வழக்கை நடத்தும் வழக்கறிஞராகவுங்கூடச் செயல்பட்டார். ஆலோசனை சங்கத்தாரைக் கூட்டிச் சேர்க்கும்போது, சாட்சியாளர்களைத் திரட்டும் பணியையும் காய்பா மறவாதிருந்தான்; இந்தச் சாட்சிகள், சாட்சி சொல்லத்தக்கதாக இலஞ்சம் கொடுக்கப்பட்டார்கள் என்று நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீய ஆவிகளின் பிடியிலிருந்து இயேசுவினால் விடுவிக்கப்பட்டவர்களில், இயேசுவினால் குருடான கண்கள் திறக்கப்பட்டவர்களில், இயேசுவினால் செவிடான காதுகள் திறக்கப்பட்டவர்களில், இயேசுவினால் மரண நித்திரையினின்று எழுப்பப்பட்டவர்களில் யாரையாகிலும் ஆலோசனை சங்கத்தின்முன் கொண்டுவருவதற்கான எந்தப் பிரயாசங்களும் எடுக்கப்படவில்லை. பிரதான ஆசாரியன், லாசருவின் சம்பவத்தைக்கூட அறிந்திருந்தார், ஆனால் அவர்கள் இப்படிப்பட்டச் சாட்சிகளை விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைக் கொலை செய்திட விருப்பமாய் இருந்தார்கள், அதுவும் நியாயமானது போன்றதொரு மூடலின் கீழ்ச் செய்ய விரும்பினார்கள்.

காய்பா சாட்சியாளர்களை அழைத்தார், ஆனால் சாட்சியாளர்களின் சாட்சிகள் இசைவற்றிருப்பதைக் கண்டார்; யூதருடைய நியாயப்பிரமாணத்தின்படி, எந்த ஒரு காரியத்தை நிரூபிப்பதற்கு, குறைந்த பட்சம் ஒன்றுபோல் இரண்டு சாட்சிகளாகிலும் இருக்க வேண்டும். இறுதியாக ஆலயம் குறித்து இயேசு ஏதோ கூறித் தாங்கள் கேட்டதாகத் தெரிவித்த இரண்டு சாட்சிகளுடைய சாட்சிகள் கொஞ்சம் ஒத்திருந்ததாய் இருந்தது; அதாவது இயேசு தம்மால் ஆலயத்தை இடித்துப்போட்டு, மூன்று நாட்களுக்குள் கட்டியெழுப்ப முடியும் என்று கூறி, தாங்கள் கேட்டதாகச் சாட்சியாளர்கள் தெரிவித்தனர். இவர்கள் அநேகமாய் இயேசுவின் வார்த்தைகளைத் தவறாய்ப் புரிந்துள்ளனர். எனினும் குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்குவதற்கு, இவர்களது சாட்சிகள் பலமான விஷயங்களாகக் காணப்படவில்லை.

கடைசி முயற்சியாக, தேவதூஷணமெனக் குற்றம் சாட்டத்தக்கதாக, இயேசுவையே எதையாகிலும் பேச வைப்பதற்குக் காய்பா முயன்றார். கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, இயேசு எதுவும் பதிலளிக்கவில்லை; ஆனால் இப்பொழுதோ காய்பா, “நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன் பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன்” என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு, இயேசுவினால் அமைதியாய் இருந்து, பதிலளிக்காமல் இருக்க முடியாது. இக்கேள்விக்குப் பதிலளிக்காமல் இருப்பது என்பது, இந்த மாபெரும் சத்தியத்தை மறுதலிக்கிறதாகவும் இருக்கும் மற்றும் ஆலோசனை சங்கத்தாருக்குச் சரியான சாட்சியை அளிப்பதற்குத் தவறிப்போவதாகவும் இருக்கும். ஆகவே காய்பா சொன்னது சரிதான் என்று இயேசு ஒப்புக்கொண்டார்.

தேவதூஷணம் என்று கூறுவதற்கான வாய்ப்பு இது என்று பிடித்துக் கொள்வதற்கான ஆவலில், காய்பா தாவி, துள்ளி எழுந்தார்; ஆனால் இயேசு இன்னும் தொடர்ந்து, “மனுஷ குமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். இப்படி இயேசு கூறினதினிமித்தம் காய்பா மிகவும் அதிர்ச்சியடைந்தது போன்று நடித்து, ஆலோசனை சங்கத்தார் மத்தியில் தேவனுடைய பிரதிநிதியாகக் காணப்படும், தான் பயங்கரமான ஏதோ ஒன்றைக் கேட்டுள்ளதைப் போன்று ஆலோசனை சங்கத்தாருக்குக் காண்பிக்கத்தக்கதாகக் காய்பா தன்னுடைய ஆசாரிய வஸ்திரத்தைக் கிழித்து நாடகமாடினார். காய்பா ஆலோசனை சங்கத்தாரை நோக்கி, “இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது – உங்களது தீர்ப்பென்ன – என்று கேட்டார்;” அதற்கு அவர்கள், “மரணத்துக்குப் பாத்திரனாய் இருக்கிறான்” என்றார்கள்.

இந்தக் கருத்திற்கு/முடிவிற்கு இரண்டு பேர் மாத்திரம் விலகி நின்றார்கள் என்பது தெளிவாய்த் தெரிகின்றது; இவர்கள் இயேசுவுக்கு மாபெரும் மதிப்புக்கொடுப்பதற்குக் கற்றிருந்த அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும், நிக்கொதேமுவும் ஆவார்கள். இவர்களால் என்னதான் செய்யமுடியும்? அதிகப்பட்சமாக, ஆலோசனை சங்கத்தாரின் இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என்றும், இராத்திரி வேளையில் ஒருவரை மரணத் தண்டனைத் தீர்ப்பளிப்பதற்கென விசாரணை நடத்துவதை நியாயப்பிரமாணமானது தடைச்செய்கின்றது என்றும்தான் இவர்களால் கூற இயலும். விடியும்போது, சட்டப்பூர்வமாய் நடவடிக்கை எடுக்கத்தக்கதாக ஆலோசனை சங்கத்தார் காத்துக்கொண்டிருந்த வேளையில், இயேசு அடுத்திருந்த அறையில் காவல் [R5561 : page 317] வைக்கப்பட்டார். தேவதூஷணம் உரைத்தவராகவும், குற்றவாளியாகவும் பிரதான ஆசாரியனால் தீர்க்கப்பட்ட இயேசுவானவர், பிரதான ஆசாரியன் செய்வதெல்லாம் சரியென அறியாமையில் எண்ணிக்கொண்டிருந்த பிரதான ஆசாரியனுடைய வீட்டில் காணப்பட்ட வேலைக்காரர்களுடைய பல்வேறு அவமதிப்புகளுக்கு ஆளாக்கப்பட்டார்.

தெய்வீகச் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, ஒப்புக்கொடுத்தார்

“நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலை செய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்துநிற்கவில்லை” (யாக்கோபு 5:6) என்ற வசனத்தின் வார்த்தைகளும் மற்றும் நம்முடைய இப்பாடத்தின் ஆதார வசனத்தின் வார்த்தைகளும் முழு இசைவுடன் காணப்படுகின்றது மற்றும் இரண்டுமே, இவ்விசாரணையின்போது காணப்பட்ட இயேசுவுக்குப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. இயேசு தம்முடைய ஜீவனைக் காத்துக்கொள்ள முற்படவில்லை என்ற விதத்தில், அவர் தம்முடைய வாயைத் திறவாதவராய்க் காணப்பட்டார். பிதாவின் சித்தமல்லாத எதுவும் தமக்கு நிகழ்வதில்லை என்பதை இயேசு உணர்ந்தவராக, காரியங்களை அவர் தடைப்பண்ணிட முற்படாமல், காரியங்கள் அவைகளின் போக்கிலேயே நடைபெறத்தக்கதாக மகிழ்ச்சியுடன் அனுமதித்தார்.

தம்மைத் தற்காத்துக்கொள்ளத்தக்கதாக, “எந்த மனிதனும் பேசாததுபோல்” பேசின அவரது அறிவுள்ள மனமும், அவரது நாவும் வாதங்களை முன்வைத்ததானால், காய்பாவும், முழு ஆலோசனை சங்கத்தாரும் நடுங்கிப்போயிருப்பார்கள் என்பதிலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கத் துணிந்திருக்கமாட்டார்கள் என்பதிலும் சந்தேகமில்லை! சத்தியம் முன் வைக்கப்படுவதற்கு, என்ன பேசப்படுவது அவசியமாய் இருந்ததோ, அதை மாத்திரமே இயேசு பேசினார்; மேலும் அவர் பேசின சத்தியத்தையே, அவரது சத்துருக்கள் தவறான விதத்தில், தேவதூஷணம் என்று கூறினார்கள்.

இயேசுவின் பின்னடியார்கள் உலகத்திடமிருந்து முழு நீதியையும், எப்போதும் சரியாய்ப் புரிந்துகொள்ளப்படுவதையும் எதிர்பார்க்கக்கூடாது என்று வேதவாக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. இவர்கள் தங்களது எஜமானைப் போன்றே, தங்களுக்கான அனுபவங்களின் பாத்திரமும்கூட, பரம ஞானத்தினால் மேற்பார்வையிடப்படுகின்றது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்; இன்னுமாக தெய்வீக ஏற்பாடுகளுக்குத் தாங்கள் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக இருந்தால், தங்களுக்கான அனுபவங்கள் அனைத்தும் மேலான நன்மைக்கு ஏதுவாய் நடந்தேறுவதைத் தங்களால் காணமுடியும் என்பதையும் இவர்கள் நினைவில்கொள்ள வேண்டும். “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 8:28).