R3887 – அசட்டைப் பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3887 (page 349)

அசட்டைப் பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்

DESPISED AND REJECTED OF MEN

மத்தேயு 26:57-68

“அவர் அசட்டைப் பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்ட வருமாய் இருந்தார்” என்று ஏசாயா தீர்க்கதரிசி எழுதியுள்ளார்” (ஏசாயா 53:3). கர்த்தரைப் பற்றின அறிவிற்கு வந்தவர்களுக்கும், தெய்வீக வார்த்தையின்படியான கண்ணோட்டத்தின் படி மனிதனைப் புரிந்துகொள்ளும் நிலைக்கு வந்தவர்களுக்கும், கர்த்தரின் மரணம் தொடர்பான அனைத்துச் சம்பவங்களும் எவ்வளவு விநோதமாகத் தோன்றியிருக்கும். இப்பொழுது நாம் அச்சம்பவங்களைப் பார்க்கப்போகிறோம். அதாவது, நாமும் அச்சூழ்நிலைகளில் காணப்பட்டு, அவைகளைப்பார்த்துக் கொண்டிருப்பது போன்று அச்சம்பவங்களை நாம் பின் தொடரப்போகின்றோம். இன்னுமாக நம்முடைய கர்த்தரைச் சூழ்ந்து காணப்பட்ட பிரதான பாத்திரங்களினால் உண்மையான சூழ்நிலை/நிலைமை என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்குக் கடினமாக இருந்தது என்றும் நாம் உணர்ந்து கொள்கின்றோம். மேலும், இவர்களிடமிருந்து தற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் பக்கமாக நாம் திரும்பிப் பார்க்கும்போது, சில படிப்பினைகளை நாம் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் தற்போதைய அறுவடை காலம் தொடர்புடைய மாபெரும் மற்றும் முக்கியமான விஷயங்களுடன் நாமும் தொடர்புடையவர்களாய் இருக்கின்றோம் என்றும், உண்மையான நிலை என்ன என்று நம்மால் புரிந்துகொள்ள முடியாததாய் இருக்கும் மாபெரும் நிகழ்வுகளின் அருகாமையில் காணப்படுகின்றோம் என்றும், நாம் மிகவும் கவனமாய் இருந்து சோதனைக்குள் விழுந்துவிடாதபடிக்கு நாம் ஜெபத்துடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும் உணர்ந்து கொள்ளலாம். நம்முடைய நிலையற்ற/இடறல்கள் நிறைந்த நிலையைப் பார்க்கையில், இப்பாடத்தில் நாம் பார்க்கப்போகிறவர்களுடைய கண்டனத்திற்குரிய நடவடிக்கைகள் மீது நமக்கு அனுதாபமே ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

இயேசுவும், சீஷர்களும் கெத்செமனே தோட்டத்தின் வாசலண்டைக்கு வந்தார்கள். இரண்டு பட்டயங்களில் ஒன்றை வைத்திருந்த பேதுரு, தனது ஆண்டவரைப் பாதுகாக்கும்படிக்கு அதனை பயன்படுத்த ஆரம்பித்தார். முதல் வெட்டாக பிரதான ஆசாரியனுடைய அரண்மனை ஊழியர்களில் ஒருவனாகிய மல்குஸ் என்பவனின் காதை வெட்டினார். இயேசு அவர்களிடம் பட்டயம் எடுத்துக்கொள்ளும்படி சொன்னபோது, அவர்களிடத்தில் இரண்டு பட்டயம் ஏற்கெனவே உள்ளது என அவர்கள் பதிலை அளித்தபோது, “இது போதும்” என்று இயேசு கூறினார். பட்டயம் வைத்திருக்கின்றோம் என்ற அவர்களுடைய பதிலானது, சீஷர்கள் கர்த்தரைப் பாதுகாப்பதற்கு எனப்போராட விருப்பத்துடன் இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தினது. இவ்வெளிப்படுத்தல், போதுமானதாய் இருந்தது. “பட்டயத்தை உறையிலே போடு” என்ற ஆணை உடனடியாக இயேசுவினிடமிருந்து வந்தது. காது வெட்டப்பட்டதன் மூலமாக வந்த வாய்ப்பை, இயேசு காதை சொஸ்தப்படுத்தி தம்முடைய சத்துருக்களுக்குத் தமது இரக்கத்துடன் கூடிய பெருந்தன்மையை வெளிக்காட்டு வதற்குப் பயன்படுத்தினார். பட்டயத்தை எடுக்கின்றவன் பட்டயத்தினால் மடிவான் என்பதிலுள்ள படிப்பினையைச் சீஷர்கள் முழுமையாகக் கற்றுக் கொண்டார்கள். ஆகவேதான், பிற்பாடு எங்கும் அவர்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யும் விஷயத்தில் வன்முறையைக் கையாண்டதாகப் பதிவு செய்யப்படவில்லை. கர்த்தருடைய அனைத்துப் பின்னடியார்களும் இப்படிப்பினையைக் கற்றுக்கொண்டு, செயல்முறைப்படுத்தினால் எவ்வளவு நலமாயிருக்கும். இப்படிப்பினையைச் சில பின்னடியார்கள் புறக்கணித்த காரியமானது, கர்த்தருடைய போதனைகளுக்கு அவமரியாதை உண்டுபண்ணும் விதத்திலும், அவருடைய உண்மையான நோக்கத்திற்குப் பாதிப்பு உண்டுபண்ணும் விதத்திலும், ஆனால் பெயர்க் கிறிஸ்தவ மண்டலம் மற்றும் அதன் திரளான களைகளுக்கு அனுகூலம் உண்டுபண்ணும் விதத்திலும் வரலாற்றின் [R3888 : page 350] பக்கங்களைக் களங்கப்படுத்தியுள்ளது. கர்த்தருடைய அனைத்து ஜனங்களும் இப்படிப்பினையைத் தங்கள் இருதயத்திற்குள் கொண்டு செல்கிறவர்களாகக் காணப்பட்டு, “சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்ற கர்த்தருடைய வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்கிறவர்களாகவும் இருக்க வேண்டும் (மத்தேயு 5:9). நமது போதகரின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக நாம் ஒருபோதும் பட்டயத்தையும், பூமிக்குரிய வல்லமைகளையும் பயன்படுத்துகின்றர்களாய் இருக்கக்கூடாது. கர்த்தரிடத்தில் போதுமான வல்லமை உள்ளது. மேலும், வல்லமை செயல்படுத்துவதற்கான வேளை வரும்போது, அவரே இந்த மாபெரும் வல்லமையைத் தமது கரத்தில் எடுத்துக் கொள்வார். மேலும், நீதியின் பட்டயம் உறையிலிருந்து எடுக்கப்பட்டுப் பயங்கரமான உபத்திரவக்காலத்தை உண்டுபண்ணும். ஆனால், இவைகளெல்லாம் அதற்குரிய ஏற்றக்காலத்தில் நடைப்பெறும். மேலும், பூமியின் விஷயங்கள் மீதான பொறுப்பைக் கர்த்தர் எடுத்துக்கொள்வார். மேலும், இந்த அனுபவங்கள் வாயிலாக உண்டாகும் படிப்பினைகள் ஜனங்களுக்குப் பாதிப்பை உண்டுபண்ணுகிறதாய் இராமல், நன்மையாகவே காணப்படும். கர்த்தருடைய ஜனங்கள் இப்பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரே பட்டயம் ஆவியின் பட்டயமாகும். அதாவது, தேவனுடைய வார்த்தையாகிய பட்டயமேயாகும். மேலும், வார்த்தையின் அழுத்தத்தினாலோ அல்லது கடுஞ்சொல்லினாலோ அல்லாமல் அல்லது தேவனுடைய வார்த்தையாகிய பட்டயத்தைப் பயன்படுத்தும் நபரின் கோப வெளிப்படுத்தல்களினாலுமல்லாமல், இப்பட்டயம் அதற்குரிய கூர்மையினாலும், ஊடுருவும் வலிமையினாலும் செயல்படுவதற்கு நாம் விட்டுவிட வேண்டியவர்களாய் இருக்க வேண்டும். இப்பட்டயத்தைப் பயன்படுத்துபவர்கள் அன்பில் சத்தியத்தைச் சொல்ல வேண்டும் என்று வழி காட்டப்படுகின்றனர். இவ்விதமாய் அன்பில் சொல்லப்படும்போது, சத்தியத்தினால் அதன் வேலையை அதற்குரிய வழியில் செய்ய முடியும்.

எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்

கர்த்தர் கைது செய்யப்பட்ட போது, சீஷர்கள் அனைவரும் அவரைத் தனியே விட்டு ஓடிப்போன காரியத்தை நாம் பார்க்கும்போது, சீஷர்கள் மிகவும் கோழைத்தனமாக நடந்து கொண்டதுபோன்று தோன்றலாம். ஆனால், அவர்கள் நமது கர்த்தருடைய வார்த்தையின்படியே போனார்கள் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். “என்னை தேடுகிறதுண்டானால் இவர்களைப் போகவிடுங்கள்” என்று கர்த்தர்தான் அதிகாரிகளிடம் கூறினார் (யோவான் 18:8). தேசத்தின் சட்டத்திற்கும், அரசியல் நீதிமன்றத்திற்கும் பிரதிநிதித்துவம் வகிக்கும் பிரதான ஆசாரியனின் கரங்களில் கர்த்தர் சிக்கின பிற்பாடு, சீஷர்கள் தங்களைக் கொண்டு கர்த்தருக்கு எவ்விதமான பிரயோஜனமில்லை என்றும், இந்தப் பிரதான ஆசாரியர்கள் இயேசுவுக்கு எதிராக கெடுதல் விளைவிக்கக்கூடியவர்கள் என்றும் சீஷர்கள் உணர்ந்திருந்தனர். “இவர்களைப் போகவிடுங்கள்” என்ற இயேசுவின் வார்த்தைகளைச் சீஷர்கள் கர்த்தரிடமிருந்து வந்த கட்டளை என்றுகூட எடுத்திருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் குழம்பிப் போயிருந்தார்கள். அவர்கள் இயேசுவோடு ஒட்டிக்கொண்டிருந்தபோது, வித்தியாசமானக் காரியங்களையே அவரிடத்தில் எதிர்ப்பார்த்தவர்களாக இருந்தார்கள். அவர் (இராஜாவாக) உயர்த்தப்படுவார் என அவர்கள் எதிர்ப்பார்த்த நிலையிருந்தபோது, அவரோ தாம் சிலுவையில் அறையப்படுவதைக்குறித்தும் பேசிக்கொண்டிருந்தார், துக்கத்துடன் இருந்தார், வேதனையுடன் இருந்தார். இப்பொழுதோ, அவர் கைதும் செய்யப்பட்டுவிட்டார். அனைத்தும் குழப்பமாகவும், சோர்வை உண்டாக்குவதாகவும் சம்பவித்தது. மேலும், முற்றிலும் ஏமாற்றம் அடைந்தவர்களாக அவர்கள் அநேகமாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பியிருக்க வேண்டும். பேதுருவும், யோவானும் மாத்திரம் தொலை தூரத்தில் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். பிரதான ஆசாரியனுடைய அரண்மனைக்கும், முற்றத்திற்கும் அவர்கள் வந்த பிறகு இயேசு முதலாவதாக வயதில் மூத்தவராகக் காணப்பட்ட ஆசாரியனாகிய அன்னாவுக்கு முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார். சிறிது நேரம் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார். பின்னர் இவருடைய மருமகனும், அதிகாரப்பூர்வமான ஆசாரியனாகவும் காணப்பட்டவராகிய காய்பாவினுடைய வீட்டு முற்றத்திற்கு இயேசு அனுப்பி வைக்கப்பட்டார். இயேசு அன்னாவுக்கு முன்பு கொண்டு போகப்பட்ட காரியமானது, அன்னாவுக்கு மரியாதையளிக்கும் விதத்தில் மாத்திரமே செய்யப்பட்டது. மற்றபடி காய்பாதான் இயேசு கைது செய்யப்படுவதற்குரிய காரணமாக இருந்தார். மேலும் இந்தக் காய்பா, யூதர்களுடைய மூப்பர்களில் சிலருடன் இயேசுவுக்கு எதிராக என்ன குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரலாம் என்ற விதத்தில், அவருடைய விசாரணைக்கான ஆயத்தமாக அவரை விசாரிக்கும்படிக்குக் காத்துக் கொண்டிருந்தார். (பிரமாணத்தின்படி அவரைக் காலையிலேயே விசாரணை செய்யலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை. ஆகவே, சட்டத்திற்கு எதிராக இரவில் நிகழ்த்தப்பட்ட இந்த விசாரணையே அவர்கள் செய்த உண்மையான விசாரணையாகும். பிலாத்து இயேசுவை ‘விசாரணை செய்து’, அவருக்கு மரணத்தண்டனை அளித்துவிட வேண்டும் என்பது அவர்களுடைய எண்ணமாக இருந்தாலும், அவர்கள் பிலாத்துவினிடத்தில் தாங்கள் இயேசுவை சட்டப்பூர்வமாக குற்றவாளியென்று தீர்த்துள்ளதாக கூறினார்கள்).

பொய்ச் சாட்சிகளைத் தேடுதல்

இயேசுவைக் குறித்தும், அவருடைய போதனைகள் குறித்தும், அவருடைய வல்லமையான கிரியைகள் குறித்தும் பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும் அதிகமாகத் தெரிந்து வைத்திருந்தார்கள் என்பதில் ஐயமில்லை. இயேசுவின் கடைசி அற்புதங்களில் ஒன்றாகிய லாசருவை மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்பண்ணின சம்பவமானது, எருசலேமுக்குள் சம்பவித்தப்படியினால், இவ்விஷயம் வேதபாரகர் மற்றும் பரிசேயரின் ஆவேசத்தைக் கிளப்பிவிட்டது. ஆகவே, இயேசுவைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்ற தீர்மானத்திற்குள் வந்தார்கள். ஏனெனில், இப்படிப்பட்ட அற்புதங்களை இன்னும் கொஞ்சம் இயேசு பண்ணினால் ஜனங்கள் முற்றும் முழுமையாக அவர் பக்கம் போய்விடுவார்கள் என்றும், ஜனங்கள் மீதான தங்கள் ஆதிக்கம் தகர்ந்துபோய்விடும் என்றும் அஞ்சினார்கள். இப்பொழுது இயேசு அவர்கள் கைகளுக்கு அகப்பட்டுவிட்டார். ஜனங்களுக்குத் தெரியாமலும், எவ்விதமான தொந்தரவுகள் கிளறிவிடப்படாமலும் இயேசுவைக் கைது செய்துவிட்டனர். அவரைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்ற கொலைப்பாதக எண்ணம் இன்னமும் அவர்களிடத்தில் காணப்பட்டது. அவரை எப்படிக் கொன்று போடலாம் என்ற கேள்விதான் அவர்களிடம் எழும்பினதேயொழிய, நீதியின்படி எப்படிச் சேவை புரியலாம் என்ற கேள்வி அவர்களுக்குள் காணப்படவில்லை. இன்னுமாக, நீதி மற்றும் நியாயப்பிரமாணத்திற்குப் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள், நீதியின் நிபந்தனைகளுக்கு ஒத்துப்போவது போன்று எப்படிக் காண்பிக்க வேண்டும் என்றும், அதேசமயத்தில் தங்களுடைய இருதயங்களில் காணப்படும் கொலைப்பாதகத்தை எப்படி நிறைவேற்றுவது என்றும்தான் அவர்களுக்குள் கேள்வி காணப்பட்டது. ஆகவேதான், அவர்கள் பொய்ச் சாட்சிகளைத் தேடினார்கள் என்று வாசிக்கின்றோம். போதகரைப் பற்றி அறிந்தவைகளைக் கூறும் உண்மை சாட்சிகளை அவர்கள் தேட விரும்பவில்லை. மாறாக அறியாமையினாலோ, போதகரைத் தவறாகப் புரிந்து கொண்டதினாலோ அல்லது பிரதான ஆசாரியர்களின் ஆதரவை/தயவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பி திட்டவட்டமாக கர்த்தரையும், அவருடைய போதனைகள் முதலானவைகளையும் தவறாய்ப் பேசுகின்ற பொய்ச் சாட்சிகளையே அவர்கள் தேடினார்கள். ஆனால், அவர்களால் ஒருவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிரதான அதிகாரிகள் தவிர மற்றபடி அவ்வதிகாரிகள் தொடர்புடைய எவரும் நமது கர்த்தருடைய போதனைகளைத் தவறாய்ப் புரிந்துகொள்ளவில்லை என்பதும், கர்த்தருடைய போதனைகளைத் தவறாய்ச் சாட்சி பகரவும் விரும்பவில்லை என்பதும் பாராட்டத்தகுந்த விஷயமாகும். இறுதியாக, ஒருவேளை ஆலயம் அழிக்கப்பட்டால் அதனை தம்மால் மூன்று நாளுக்குள் எழுப்பிவிட முடியும் என்று இயேசு கூறினதைக் கேட்டோம் என்று சொல்லிய இரண்டு சாட்சிகளைக் கண்டுபிடித்தனர். இது தவறான சாட்சியல்ல, இயேசு பேசின வார்த்தைகளை இந்தச் சாட்சிகள் புரிந்துகொண்ட அர்த்தத்தில்தான் பிரச்சனை; கேட்டவர்களிலும் பெரும்பாலானோர் இப்படியாகவேதான் எடுத்துக்கொண்டிருந்தார்கள். பிற்பாடு பரிசுத்த ஆவியின் வெளிச்சத்தினால் இயேசு இங்குத் தமது சரீரத்தைத்தான் ஆலயமாகக் குறிப்பிட்டார் என்று அப்போஸ்தலர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே, அறியாமையின் காரணமாக இந்த இரண்டு சாட்சிகள் தாங்கள் இயேசுவுக்கு எதிராக சாட்சிக் கூறினோம் என்றும், தாங்கள் இயேசுவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் சாட்சியைக் கூறிவிட்டோம் என்றும், இயேசுவினிடத்தில் தற்பெருமை அடித்துக்கொள்ளும் ஆவியும், ஆலயத்தின் மகத்துவத்தையும், மேன்மையையும் அலட்சியப்படுத்தும் தன்மையும் வெளிப்பட்டதற்கானச் சாட்சியைக் கூறுகின்றோம் என்றும் இவர்கள் எண்ணிக் கொண்டாலும், இந்த இரண்டு சாட்சிகளும் பொய்ச் சாட்சிகள் என்று குற்றம் சாட்டப்பட முடியாது. கர்த்தருக்கு எதிராக ஏதாகிலும் சாட்சியைக் கொண்டுவரலாம் என்ற தன்னுடைய எடுத்த பிரயாசம் தோல்வியடைந்து விட்டது என்று பிரதான ஆசாரியன் உணர்ந்துகொண்டான். ஆனாலும், தன்னுடைய இந்தத் தோல்வியை அங்கிருந்த ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென அவர் விரும்பவில்லை. ஆகவே, இச்சாட்சி மிகவும் இன்னலுக்குரிய சாட்சியாக தனக்குத் தோன்றியதுபோல் காட்டிக்கொண்டு, அநியாயத்தைக் காண்பதினால் உண்டாகும் கோபம் தனக்கும் எழும்பியதுபோன்று இயேசுவை நோக்கி, அவருடைய செவிகளில் இந்தச் சாட்சி விழுந்ததா இல்லையா? என்றும், இச்சாட்சி தவறென நிரூபிக்க அவரிடம் சான்று ஏதேனும் உள்ளதா? அதாவது, சாட்சியை அவரால் தவறு என்று நிரூபித்துக் காட்டமுடியவில்லையோ? என்று கேட்டார். இயேசு ஒன்றும் பேசவில்லை. இரண்டு சாட்சிகளும் அவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டுமாகக் கூறிக்கொண்டிருந்தாலும் கூட, எந்தப் பிரமாணமும் அவரைக் குற்றஞ்சாட்டுவதற்கு ஏதுவாக, அவ்வார்த்தைகளில் ஒன்றும் இருக்கவில்லை.

“நீர் கிறிஸ்துவா?”

ஆலயம் தொடர்பான கேள்வியில் இயேசுவை விவாதம் பண்ண வைத்து, அப்படியாக அவர் பேசும் வார்த்தைகளில் எதையாகிலும் குற்றம் என்று தீர்த்துவிடலாம் என்று முயற்சித்தப்போது, இயேசுவை விவாதம் பண்ணும் நிலையில் கொண்டுவர முடியாமற்போனதால் குற்றம் சாட்டத்தக்கதான வார்த்தைகள் அடங்கிய பதிலை இயேசு வழங்கத்தக்கதாக ஒரு முன்னணி வகுக்கும் கேள்வியை மிகுந்த பயபக்தியுடன் இயேசுவிடம் கேட்க வேண்டும் என்று பிரதான ஆசாரியன் தனக்குள்ளாகவே எண்ணிக் கொண்டான். “நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவோ (மேசியாவோ)” என்பதை எங்களுக்குச் சொல்லும் என்பதே இயேசுவின் முன்பு வைக்கப்பட்ட கேள்வியாகும். இயேசு, தாம் மேசியா என்று தற்பெருமை அடித்துக் கொண்டிருக்கவில்லை என்றும், அமைதியுடன் தம் வேலையைச் செய்துகொண்டு கடந்துபோய்க் கொண்டிருந்தார் என்றும், நன்மை செய்தும், ஜனங்களுக்குப் போதித்துக் கொண்டும் இருந்தார் என்றும், “இம்மனுஷன் பேசினதுபோல் வேறு எவரும் பேசினதில்லையே” என்று சாட்சி பெறத்தக்கதாக இவருடைய கிரியைகள் காணப்பட்டது என்றும், இயேசு தம்மை அனுப்பினவருடைய வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார் என்றும், ஆகவே இவர் மேசியா என்றும் காய்பாவுக்கு அநேகமாகத் தெரிந்திருக்க வேண்டும். இயேசு, தாம்தான் மேசியா என்று ஒப்புக்கொள்வதன் மூலம் தம்மைத்தாமே குற்றவாளியாக இங்கு ஆக்கிக்கொள்வாரா அல்லது இல்லையா என்பதே கேள்வியாக இருந்தது. ஒருவேளை, தாம்தான் மேசியா என்பதை ஒப்புக்கொள்ள இயேசு மறுத்திருப்பாரானால், அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக் கண்டுபிடிக்க வேறு எந்த வழிதான் காணப்பட்டிருக்கும்? ஆனால், இயேசு இக்கேள்விக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவர் ஒருவேளை அமைதியாக நின்றிருந்திருப்பாரானால் அது அவர் தாம் மேசியா இல்லையென்று மறுதலிப்பதற்கும், சத்தியத்தை மறுதலிப்பதற்கும், அத்தேசத்தின் பிரதான ஆசாரியனுக்கு அறிவையும், அச்சம்பவம் தொடர்பான பொறுப்பையும் வெளிப்படுத்த மறுதலிப்பதற்கும் [R3888 : page 351] சமமாகிவிடும். ஆசாரியன் அத்தேசத்திற்கு/ஜனங்களுக்குத் தலைவனாக இருக்கின்றபடியினால், இயேசு மேசியா என்று அவர் அறிந்துகொள்வது எல்லாவிதத்திலும் அவருக்கு அவசியமே. ஆகவே நமது கர்த்தர், “நீர் சொன்னபடியே” என்று பதிலளித்தார். அதாவது, நீர் சொன்னது உண்மை என்று நான் ஒப்புக்கொள்கின்றேன் அல்லது நான் தேவனுடைய குமாரனாகிய மேசியாதான், இன்னுமாக மனுஷக்குமாரன் வல்லமையின் வலது பக்கத்தில் அமர்ந்தவராக மகிமையோடு வானத்தில் வருவதை நீங்கள் இனிமேல் காண்பீர்கள் என்ற விஷயத்தையும் நான் உனக்கு உறுதியளிக்கின்றேன் என்ற விதத்தில் பதிலளித்தார்.

மற்ற இடங்களில் பேசினதுபோல இங்கும் நமது கர்த்தருடைய வார்த்தைகள் சுருக்கமாகவே உள்ளது. இச்சமயத்தில் அதிலும் இப்படிப்பட்ட சூழ்நிலையின் போது, அங்கிருந்த ஜனங்களிடம் எதிர்க்காலத்திற்குரிய தெய்வீகத் திட்டத்தை விவரித்துக்கூறுவது, கர்த்தருடைய நோக்கமாகவும் இருக்கவில்லை. மேலும், அப்படிக் கூறுவதும் சரியாக இருந்திருக்காது. “கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்” (சங்கீதம் 25:14). ஆகவே, நமது கர்த்தர் இப்படியாகக் கூறவில்லை: “என்னை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்போகிறீர்கள், இந்த நாளில் நான் இரண்டு கள்வர்கள் மத்தியில் சிலுவையில் அறையப்படுவேன். நான் மூன்றாம் நாளில் உயிரோடு மீண்டுமாக எழுந்திருப்பேன். அதற்குப் பிற்பாடு நாற்பது நாட்கள் கழிந்த பின்னர் நான் பிதாவினிடத்திற்கு ஏறிப்போவேன். பின்னர் என்னுடைய பரிசுத்த ஆவியை நான் பெந்தெகொஸ்தே நாள் அன்று அனுப்புவேன். ஆவிக்குரிய இராஜ்யத்திற்குரிய வேலைகள் ஆரம்பமாகும். முழு உலகிலும் சபை ஜனங்கள் தெரிந்தெடுக்கப்படும் வேலை நடைபெறும். சபையின் எண்ணிக்கையிலுள்ள அங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், நான் வல்லமையிலும், மகா மகிமையிலும் மீண்டும் இரண்டாம் வருகையில் வருவேன். அப்போது உங்களால் நான் விசாரிக்கப்படுகிறவராக வராமல், உங்களுக்கு நீதிபதியாகவும், முழு உலகத்திற்கு இராஜாவாகவும், அதிகாரியாகவும், முழு அறிவு மற்றும் முழு ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் அடங்கிய ஆயிரம் வருஷம் அரசாட்சியின் ஆசீர்வாதங்களை ஒவ்வொரு சிருஷ்டிகளுக்கும் அருளத்தக்கதாகவும் நான் வருவேன்.” இயேசு எதிர்கால தெய்வீகத் திட்டத்தை விவரித்திருக்க வேண்டுமானால் இப்படித்தான் விவரித்திருக்க வேண்டும். ஆனால், இப்படியாக அவர் கூறவில்லை. நமது கர்த்தருக்கே இவ்விஷயங்கள் அனைத்தும் தெரியும். ஆனாலும், இவைகளைச் சொல்வதற்கு அன்று ஏற்றவேளையாக இருக்கவில்லை என்பதை நம்மால் கர்த்தருடைய வார்த்தைகளிலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

இவ்வுண்மைகள் தொடர்பான எத்தனை படிப்பினைகள் இங்கு நமக்குக் காணப்படுகின்றது. நாம் ஏதாகிலும் ஒரு காரியத்தைக் குறித்துத் தகவல்கள் தேடிக்கொண்டிருந்தால் அவ்விஷயத்தில் நாம் முற்றிலும் நேர்மையுடனும், முற்றிலும் நியாயத்துடனும் இருக்க வேண்டும்; இன்னுமாக, ஒன்றை/ஒருவரை தவறாய்க் காட்டுவதன் மூலம் எவ்வளவுதான் நன்மைகள் உண்டாகும் என்று நமக்குத் தோன்றினாலும் ஒன்றையும்/ஒருவரையும் தவறாகக் காட்டுவதற்கான வாய்ப்புகளை நாம் தேடக்கூடாது. கர்த்தருடைய ஜனங்களாக இருக்கும் அனைவரிடமும் நியாயம் எனும் விஷயம் மேலோங்கிக் காணப்பட வேண்டும். நீதியும், நியாயமும் தேவனுடைய சிங்காசனத்தின் ஆதாரமாய்க் காணப்படுகின்றது என நாம் வாசிக்கிறதுபோலவே, கர்த்தருக்கு உரியவர்கள், அதாவது இக்காலக்கட்டத்தில் ஜெயம் கொண்டவர்களாக வரவேண்டுமென எதிர்பார்ப்பவர்களுடைய அனைத்துக் குணலட்சணங்களுக்கு அஸ்திபாரமாக நீதி நியாயம் காணப்பட வேண்டும். நேர்மையுடனும், நியாயத்துடனும் காணப்படுகின்றவர்கள் மாத்திரமே, தற்காலத்தில் கர்த்தருடைய வார்த்தைகளில் வெளிப்படும் செய்தியினால் தாக்கம் பெற்றவர்களாய் இருக்க முடியும். மேலும், யாரெல்லாம் தங்களுடைய நேர்மை, உண்மையை இழந்துவிட்டார்களோ, அவர்கள் சத்தியத்தை இழந்துபோவதும் நிச்சயமே. தேவன் விஷயத்திலும், நம் விஷயத்திலும், நம் நண்பர்கள் விஷயத்திலும், நம் சத்துருக்கள் விஷயத்திலும் நியாயத்தோடு நாம் நடந்துகொள்ள வேண்டிய விஷயத்தில் அஜாக்கிரதை ஏற்படாதவாறு கவனமாய் இருக்கக்கடவோம். நாம் அனைவரிடமும் சராசரியான நியாயத்திற்கும் மேலாகவே செய்பவர்களாகவும், செய்ய வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டியிருந்தாலும், சராசரியான நியாயத்திற்கும் கீழாக நாம் செய்பவர்களாக இருக்கக்கூடாது, இருக்கவும் முடியாது. ஆம், நாம் அன்புடனும், தாராள மனப்பான்மையுடனுமே காணப்பட வேண்டும்.

அநீதியான காரியத்தைக் கண்டதினிமித்தம் நீதியான கோபம் உண்டானதுபோன்று நடிப்பு

இயேசு தம்மை மேசியா என்று கூறினதைக் கேட்ட பிரதான ஆசாரியன், இதுவே இயேசுவுக்கு எதிராக தீமையான தோற்றம் கொண்டதுபோன்று காணப்படும் பலமான, அதேசமயம் [R3889 : page 351] உண்மையைச் சொல்லப்போனால் ஒரே குற்றச்சாட்டாய் இருக்கப்போகின்றது என்று உணர்ந்துகொண்டார். இயேசுவின் வார்த்தைகளில் தீமையில்லை. ஏனெனில், அவர் கூறினது உண்மையாக இருந்தது. ஆனால், மகா பயபக்தியுடன் இருப்பதுபோன்ற நடிப்புடனும், தேவன் மீது மிகுந்த மரியாதை இருப்பதுபோன்ற நடிப்புடனும், மேசியா குறித்த தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு மிகுந்த பயபக்தி கொண்டிருப்பதுபோன்ற நடிப்புடனும், இயேசு கூறின இப்படிப்பட்ட வார்த்தைகளினிமித்தம் இடியே விழுந்துவிட்டது போன்ற திகைப்பு ஏற்பட்டுவிட்டது போன்ற நடிப்புடனும் காய்பா எழுந்து நின்றார். இப்படிப்பட்ட வார்த்தைகளினிமித்தம் எரிச்சலும் கோபமும் தனக்கு மூண்டுவிட்டது என்ற முழு நடிப்புடன் முகத்தை வைத்துக்கொண்டு இயேசுவின் இப்படிப்பட்ட வார்த்தைகள் தேவனுக்கு அவமரியாதையை உண்டுபண்ணினபடியால், இயேசு தேவதூஷணம் பேசிவிட்டதாக, தான் கண்டுபிடித்துவிட்டது போன்றும், அதினால் தனக்குக் கோபம் மூண்டுவிட்டது போன்றும், தன்னுடைய நாடகமாகிய நீதியின் கோபத்தை வெளிப்படுத்தும் வண்ணமாக தனது வஸ்திரத்தைக் கிழித்தார். பின்னர், ஜனங்களை நோக்கி, “இது தேவதூஷணம்… இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது?” இப்படிப்பட்ட மோசமான குற்றத்திற்கு எது சரியான தண்டனையாக இருக்கும்? இவரைப்போல் வந்து தங்களைத் தேவனுடைய குமாரனாகிய மேசியா என்று அறிவித்து, ஜனங்களை சொஸ்தப்படுத்தி, மரித்தோரை உயிரோடு எழுப்பியும், ஜனங்களிடமிருந்து பிசாசுகளைத் துரத்தியும், தங்களது வல்லமையை வெளிப்படுத்தின மற்றவர்களை நாம் எப்படி இதற்கு முன்னதாக தடுத்து நிறுத்தினோம்? என்று உரக்கக் கத்தினார். இயேசுவைக் கொன்றுபோட வேண்டும் என்ற நோக்கத்தில் அங்குக் கூடியிருந்த மூப்பர்கள், “இவன் மரணத்துக்குப் பாத்திரனாய் இருக்கிறான்” என்று பதிலளித்து, தங்கள் வாக்குகளை அளித்தார்கள். இயேசு காத்திருக்க வேண்டியிருந்தது. இதற்கிடையில் அவரைத் திட்டித்தீர்த்தார்கள். மூப்பர்களும், அதிகாரிகளும் இயேசுவை இப்படியெல்லாம் செய்யவில்லையென்றாலும், அவர்களுடைய சம்மதத்தின் பேரிலும், அனுமதியின் பேரிலும் சிலர் கர்த்தரை அடித்தார்கள், அவர் மேல் துப்பினார்கள், அவருடைய கண்களைக் கட்டி யார் அவரைக் குட்டித் துன்புறுத்துகின்றார்கள் என்பதை அவர் சொல்லி, தாம் ஒரு மேசியா என்றும், தீர்க்கத்தரிசி என்றும் நிரூபித்துக் காட்டும்படிக்கு அவரிடம் கூறினார்கள். மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல, அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். அவர் தம்மைக் காத்துக்கொள்ளும் படிக்குப் பேசவுமில்லை, அல்லது தமக்குள் காணப்படும் வல்லமையைப் பயன்படுத்தவுமில்லை, அல்லது தம்மை விடுதலை பண்ணும்படிக்குப் பன்னிரண்டு லேகியோன்கள் ஆயத்தமாக இருப்பார்கள் என்று அவர் ஏற்கெனவே கூறியிருந்த லேகியோன்களையும் அவர் அழைக்கவில்லை. மாறாக, தம்முடைய பலியின் உடன்படிக்கையையே நிறைவேற்றிக் கொண்டிருப்பதாக உணர்ந்து கொண்டு தம்மை ஒப்புக்கொடுத்துவிட்டார். மேலும், பிதாவின் சித்தம் இதுவாகவோ, அல்லது வேறு எதுவாகவோ இருந்தாலும் சரி, அது தம்மில் நிறைவேற வேண்டும் என்றே விரும்பினவராகக் காணப்பட்டார்.

இதில் நமக்குள்ள படிப்பினை என்ன? அவரைக் குறித்துக்கற்றுக்கொள்வதற்கும், அவருடைய மாதிரியைப் பின்பற்றுவதற்கும் நாம் உடன்படிக்கை பண்ணியுள்ளோம். அப்படியானால், அடிகளையும், சோதனைகளையும், “பாவிகளினால் உண்டான விபரீதங்களையும்” நாம் எப்படி ஏற்றுக்கொள்கின்றோம்? நாமும் அவரைப்போலவே பொறுமையுடனும், நீடிய பொறுமையுடனும் காணப்படுகின்றோமா? பிதாவுக்குத் தெரியாமல் எதுவும் நமக்கு நடக்காது; அதாவது, நம்முடைய நன்மைக்கு ஏதுவல்லாத எதையும் அவர் அனுமதிக்க விரும்பமாட்டார் என்றும், அவரால் அனுமதிக்க முடியாது என்றும் உணர்ந்து கொண்ட நிலையில் இவைகளையெல்லாம் நாம் சகித்து முன்னேறுகின்றோமா? தீமையான அனுபவங்கள் பெறுவதற்கு ஏதுவான நிலையில் (தவறு செய்த நிலையில்) நாம் காணப்படுவோமேயானால், அதையும் நாம் பொறுமையோடு சகிக்க வேண்டுமென்று நாம் சொல்வது சரியல்ல. ஏனெனில் இயேசுவின் விஷயத்தில், “இவரோ, தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே” என்று அவர் அருகே இருந்த கள்வர்களில் ஒருவன் சாட்சிக் கொடுப்பதை நாம் நினைவு கூருகின்றோம். நம்மைத் துன்பப்படுத்துபவர்கள் விஷயத்திலும், நம்மை வெறுக்கிறவர்கள் விஷயத்திலும், நம்முடைய நோக்கங்கள் நல்லவைகளாக இருந்தாலும், நாம் பெற்றுக்கொண்ட தீமைக்குச் சில விதங்களில் நாம் நன்மையையே அவர்களுக்குச் செய்திருந்தாலும், இப்படிப்பட்டவர்களுடனான நம்முடைய எல்லா நடவடிக்கைகளிலும் நாம் மிக நேர்த்தியாக இருந்துள்ளோம் என்று நம்மால் சொல்லமுடியாது. “நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிற வருக்குத் தம்மை ஒப்புவித்தார்” (1 பேதுரு 2:20-23).

அடிகளையும், நிந்தனைகளையும் பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நம்மால் முடிந்தமட்டும் நம்முடைய தவறுகளினிமித்தம், அவைகளைப் பெற்றுக் கொள்ளாதபடிக்கு நாம் பார்த்துக்கொள்வதோடுமட்டுமல்லாமல், இவ்வனுபவங்கள் வருகையில் அவைகளைப் பொறுமையுடனும், முறுமுறுப்பில்லாமலும் ஏற்றுக்கொள்வோமாக. மேலும், இவ்விதமாக நமது கர்த்தருடைய சாயலுக்கு ஒத்த குணலட்சணத்தில் அதிகமாய் வளர்ந்து, அக்குணங்களை வெளிப்படுத்துகின்றவர்களாகவும் இருப்போமாக. இப்படியாக செய்பவர்களுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இறுதியில் அவர்களுக்கு ஆசீர்வாதமாய் முடியும் என்ற நிச்சயித்தைக் கர்த்தர் அருளுகின்றார். ஆனால், இப்படிச் செய்யாமல், தங்கள் உரிமைகளுக்காக யுத்தம் பண்ணுகிறவர்களாகவும் இருப்பவர்கள், தாங்கள் சிலுவையைச் சுமந்துவருவோம் என்று தாங்கள் பண்ணியுள்ள உடன்படிக்கையின் தன்மையை ஒன்றில் புரிந்துகொள்ள முடியாதவர்களாய்க் காணப்படுகின்றார்கள் இல்லையேல், உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு ஒத்துப்போக இவர்களுக்கு விருப்பமில்லை என்பது வெளியாகுகின்றது.

பஸ்கா ஆட்டுக்குட்டியும், உலகத்தின் பாவமும்

“பஸ்கா ஆட்டுக்குட்டியானது இஸ்ரயேலர்களுடைய முதற்பேறானவர்களை மாத்திரம் தப்புவித்தது என்றும், இதன் நிஜம் என்பது, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கின்றதான தேவாட்டுக்குட்டியாகிய” நமது கர்த்தர் இயேசு, பஸ்கா இரவின் நிஜமாகக் காணப்படும் இந்தச் சுவிசேஷ யுகத்தில் முதற்பேறானவர்களின் சபையை மாத்திரம் தப்புவிப்பார் (அ) கடந்துபோகப் பண்ணுவார் என்ற காரியமாய் இருக்கும் என்றுமுள்ள உண்மையினை நீங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளீர்கள். இது உண்மையானால், உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டி எனும் யோவானுடைய வார்த்தைகளானது எப்படிப் புரிந்துகொள்ளப்பட வேண்டும்?”

நம்முடைய பதில் என்னவெனில், இந்தச் சுவிசேஷயுகத்தின்போது கிறிஸ்துவினுடைய பலியின் புண்ணியத்தின் வாயிலாக, தெய்வீக இரக்கத்தின் வாயிலாக, அர்ப்பணிக்கப்பட்டவர்களாகிய, விசுவாச வீட்டாராகிய, முதற்பேறானவர்களின் சபை மாத்திரமே தப்புவிக்கப்படுகின்றனர் (அ) கடந்துபோகப்பண்ணப்படுகின்றனர். எனினும் முதலாம் (அ) பிரதான உயிர்த்தெழுதலாகிய “கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில்,” அவரோடுகூடப் பங்கடைபவர்களும், “பரலோகத்தில் பேரெழுதியருக்கிறவர்களுமான முதற்பேறானவர்களின் சபையினுடைய” விடுதலையுடன், தெய்வீகத் திட்டமானது நிறைவடைகிறதில்லை. கிறிஸ்துவின் புண்ணியமானது, முதலாவது சபைக்குச் செயல்படுத்தப்படுவது என்பது தெய்வீகத் திட்டத்தினுடைய ஒரு நியாயமான நிகழ்வாய் மாத்திரம் காணப்படுகின்றது. கிறிஸ்துவோடுகூடப் பூமிக்குரிய நன்மைகளுக்கு மரிப்பதற்கும், புதுச் சிருஷ்டிகளென முதலாம் உயிர்த்தெழுதலில் பிழைத்திருப்பதற்குமாய் இப்பொழுது அருளப்பட்டிருக்கும் சிலாக்கியத்தில், சீக்கிரத்தில் சபையானது பங்கடைந்து முடிந்துவிடும். பின்னர் கிறிஸ்துவினுடைய, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தின் புண்ணியமானது, “உலகத்தின் பாவத்தினைச் சட்டபடி எடுத்துப்போடத்தக்கதாக” மனுக்குலத்தின் உலகத்திற்காகச் செயல்படுத்தப்படும். அது செயல்படுத்தப்படும்போது, அது உலகத்தின் சார்பில், நீதியினை உடனடியாய்த் திருப்திசெய்து, திரும்பக் கொடுத்தலின் ஆசீர்வாதங்களுக்காக உலகத்தினை மீட்பரிடத்தில் கொடுத்துவிடும். அப்பொழுது தேவாட்டுக்குட்டியும், “ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டியாகிய” சபையும், ஆயிரவருட யுகத்தின்போது, உண்மையில் உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடும் பணியினை நடத்திடுவார்கள். –

– ரீபிரிண்ட்ஸ், பக்கம் 4555