R5421 – உங்களால் கூடுமா?

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5421 (page 84)

உங்களால் கூடுமா?

ARE YE ABLE?

“நான் குடிக்கப்போகும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்க, உங்களால் கூடுமா என்றார். மத்தேயு 20:22

நம்முடைய இரட்சகரினால் இவ்வார்த்தைகள் பேசப்பட்ட சந்தர்ப்பத்தை நாம் நினைவுக்குக்கொண்டுவந்து பார்க்கிறோம்; இயேசு தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு சிலநாட்களுக்கு முன்பாக இதைக்கூறினார். இயேசு தம்முடைய இராஜ்யத்தில், தம்முடைய சிங்காசனத்தில் இருக்கும்போது, தம்முடைய சீஷர்களும் தம்முடன்கூட இருப்பார்கள் என வாக்களித்திருந்தார். கர்த்தர் சொன்ன விஷயத்தில் அவர்கள் மிகவும் நம்பிக்கையாக இருந்தபடியினால் அவர்கள் தாங்கள் வகிக்கப்போகும் ஸ்தானத்தைக் குறித்து விவாதம் பண்ணிக்கொண்டிருந்தனர். யாக்கோபு மற்றும் யோவான் எனும் இரண்டு சீஷர்களுடைய தாயானவள் இயேசுவினிடத்தில் வந்து, இராஜ்யத்தில் தன்னுடைய இரண்டு குமாரர்களும் அவருக்கு வலது பக்கமாகவும், இடது பக்கமாகவும் இருப்பதற்கு வேண்டிக்கொண்டாள். இயேசு இரண்டு சீஷர்களிடத்தில் திரும்பி, “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா?” என்று கேட்டார்.

இயேசு தம்முடைய ஊழியத்தின் ஆரம்பத்திலேயே தண்ணீரினால் ஞானஸ்நானம் எடுத்துக்கொண்டார் என நாம் அறிவோம். தெய்வீகத் திட்டத்திற்கு இசைவாக, அவர் மனுஷருக்கான இரட்சகராக மரிக்க வேண்டியிருந்தது. அவர் முப்பது வயதை அடைந்தவுடன் நியாயப்பிரமாணத்தின்கீழ் முப்பதாவது வயதை – அடைந்தவுடன், இந்த மரணத்தை அவர் அடையாளமாய்த் தெரியப்படுத்தினார். அவருடைய ஊழியத்தின் மூன்றரை வருட காலப்பகுதியில், அவர் இந்த ஸ்நானத்தை நிறைவேற்றிக்கொண்டிருந்தார்; அதாவது தம்முடைய ஆத்துமாவை மரணத்திற்குள் ஊற்றிக்கொண்டிருந்தார். இந்த மரணத்தை அவர் கல்வாரியில் முடித்தார். “நான் பெறும் ஸ்நானத்தை’ என்று இயேசு கூறியுள்ளார். இதை அவர் தற்காலத்தின் அடிப்படையிலேயே குறிப்பிடுகின்றாரே ஒழிய எதிர்க்காலத்தின் அல்லது கடந்த காலத்தின் அடிப்படையில் குறிப்பிடவில்லை. ஆனால் அவர் பாத்திரத்தைக் குறித்து வித்தியாசமாகப் பேசுகின்றார். “நான் குடிக்கப்போகும் பாத்திரத்தில்” என்று கூறுகின்றார். பாத்திரத்தின் விஷயத்தில் தற்காலத்தின் (அ) கடந்த காலத்தின் அடிப்படையில் பேசாமல் எதிர்கால அடிப்படையில் பேசுகின்றார். தாம் எருசலேமுக்குப் போகப்போவதாகவும், அங்கு அவர் சிலுவையில் அறையப்படுவார் என்றும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் கூறியிருந்தார். வேறொரு தருணத்தின்போது, “மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை” என்று கூறியிருந்தார் (யோவான் 6:53). போதகர் தாம் சிலுவையில் அறையப்படுவதுபற்றிக் கூறியிருந்தவைகளைச் சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் இயேசு சூழ்நிலையைப் புரிந்தவராக இருந்தார் மற்றும் தமக்காக இப்பாத்திரம் ஊற்றப்படப்போகின்றது என்பதையும் இயேசு அறிந்திருந்தார். இதைக் குறித்து அவர் மீண்டுமாக, “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றார் (யோவான் 18:11).

நமது கர்த்தருக்கான விசேஷித்த சோதனை

பாத்திரம் எனும் வார்த்தையானது, ஜீவியத்தின் பல்வேறு அனுபவங்களைக் குறிப்பதாக நாம் எண்ணக்கூடும்; அதாவது அனைவருக்கும் சந்தோஷமும், துக்கமும் கலந்த பாத்திரம் உள்ளது என்று எண்ணக்கூடும். ஆனால் இயேசு இவ்வார்த்தையை வேறே அர்த்தத்தில் பயன்படுத்தினார். அவர் கெத்செமனே தோட்டத்தில் இருந்தபோது, “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபம்பண்ணினார். மீண்டுமாக அதே இரவில், “என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினால் ஒழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது” என்று கூறியும் ஜெபம்பண்ணினார். மரணத்திற்குள்ளான அவருடைய ஸ்நானத்தின் விஷயத்தில், நமது கர்த்தருக்கு எவ்விதமான தயக்கமுமில்லை. ஆரம்பம் துவங்கியே இம்மரணத்திற்குள்ளான ஸ்நானத்தின் விஷயத்தில் அவர் விரும்பி முன்வந்து பங்கெடுத்தார். அவமானமான மரணத்தைத்தான், அவர் நீங்கக்கூடுமானால் நீங்கட்டும் என்று ஜெபம்பண்ணினார். ஆனால் இப்படி அவமானத்துடன் தாம் மரிக்க வேண்டும் என்பதுதான், தமக்கான பிதாவின் சித்தமாக இருக்கின்றது என அறிந்துகொண்ட மாத்திரத்தில், அதை ஏற்றுக்கொள்வதிலும் அவர் விருப்பமாயிருந்தார்.

தெய்வீகப் பிரமாணத்தைத் தூஷித்தவராக நமது கர்த்தர் மரணத் தண்டனைக்குக் கையளிப்பதற்கென நியாயப்பிரமாணத்தில் எதுவும் இல்லை. எனினும் அவருக்கு எதிராக தேவ தூஷணத்தின் குற்றமே தேர்ந்தெடுக்கப்பட்டது. “இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்று இயேசு பேசின விஷயத்திலும், அவர் தம்மைத் தேவனுடைய குமாரன் என்று உரிமை கோரின விஷயத்திலும் இயேசு தேவ தூஷணம் செய்ததாக [R5421 : page 85] ஆலோசனை சங்கத்தார் முடிவுபண்ணினார்கள். தாம் மிகவும் நேசித்த பிதாவுக்குத் தூஷணம் பேசினதாகக் கருதப்படுதலிலும், ஒரு குற்றவாளி எனச் சிலுவையில் அறையப்படுதலிலும் உள்ள அவமானம் மற்றும் நிந்தையிலிருந்து விடுவிக்கப்படவே இயேசு விரும்பினார். மேலும் இது குறித்த பாரமே அவருடைய மனதை விசேஷமாக அழுத்திக்கொண்டிருந்தது.

இயேசு தாம் மரிப்பதற்காகவே பூமிக்கு வந்திருப்பதையும், தாம் பாடுப்பட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார். ஆனால் (அவமானம் அடைதலாகிய) தம்முடைய அனுபவத்தின் இந்த ஒரு பாகத்தை அவர் முழுமையாய்ப் புரிந்துகொள்ள வில்லை. “சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” என்பதை இயேசு அறிந்திருந்தார். இவ்வார்த்தைகள் இயேசு தம்முடைய ஊழியத்தின் ஆரம்பக் காலங்களில் நிக்கொதேமுவிடம் கூறியிருந்தார் (யோவான் 3:14). ஆனால் தாம் இழிவுபடுத்தப்படப் போகின்ற, அவமதிக்கப்படப்போகின்ற நேரத்தை அவர் நெருங்க நெருங்க, அவ்விஷயம் அனைத்தையும் அவர் உணர்ந்தபோது, அவர் மிகவும் கூனிகுறுகி, “இப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் என்னைவிட்டு நீங்கட்டும்” என்று கதறி, தம்முடைய இருதயத்தை ஊற்றினார். ஆனால் தம்முடைய அர்ப்பணிப்பின்போது, “இதோ தேவனே உம் சித்தம் செய்ய வருகின்றேன்” என்றுள்ள தம்முடைய உறுதிமொழியை உண்மை என்று தெரிவிக்கும்வண்ணமாக, உடனடியாக இயேசு, “ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று கூறினார் (மத்தேயு 26:39).

அவருடைய அவமானத்தில் பங்குகொள்வதற்கு நாம் விரும்புகின்றோமா?

நமது இரட்சகர் தம்முடைய சீஷர்களிடம் பின்வரும் விதத்தில் கேட்டார். அதாவது, உங்களுடைய ஜீவன்களை எடுத்துவிடுவது அநியாயமானதாய் உங்களுக்குத் தோன்றும் நிலையிலும், உங்களுடைய ஜீவியங்களை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்க உங்களால் கூடுமா? நான் பானம்பண்ணப்போகின்ற இந்தப் பாத்திரத்தில், உங்களால் பானம்பண்ணக்கூடுமா? இது அவமானமும், நிந்தனையும், இழிவும் தொடர்புடையதாய் இருக்கும். என்னோடுகூட இந்தப் பாத்திரத்தில் நீங்கள் பங்குபெற விரும்புகின்றீர்களா?” என்று கேட்டார். “எங்களால் கூடும்” என்று சீஷர்கள் பதிலளித்தார்கள். அவர்கள் விருப்பத்துடன் காணப்பட்டனர்.

இதே பாத்திரம்தான் இராப்போஜனத்தில் இடம்பெறும் பாத்திரத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றது என்பதைக் காண்கின்றோம். அப்பம் நமது கர்த்தருடைய சரீரத்தையும், திராட்சரசம் அவருடைய இரத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றது. பாத்திரமானது, அவருடைய மரணம் தொடர்புடைய அவமானத்தையும், நிந்தனையையும் விசேஷமாக அடையாளப்படுத்துகின்றது; அவருடைய பாத்திரத்தில் பங்குகொள்வதற்குத் தாங்கள் விரும்புகின்றதாக இரண்டு சீஷர்களும் கூறினார்கள்; அவர்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. என்ன வந்தாலும், உண்மையாய் இருக்க அவர்கள் ஆயத்தமாயிருந்தனர். அவர் என்ன நிபந்தனைகள் வைத்தாலும், அதற்குச் சம்மதிக்க ஆயத்தமாயிருந்தனர். ஸ்நானம் எனும் வார்த்தையின் அல்லது பாத்திரம் எனும் வார்த்தையின் முழுப்பொருளையும் அவர்கள் இன்னமும் அறிந்துகொள்ளவில்லை. இப்படியாகவே அவருடைய சீஷர்கள் அனைவரும் காணப்பட்டனர். பெந்தெகொஸ்தே நாள் வரும்போதோ, அவர் முன்னுரைத்திருந்ததுபோல, அவர்களிடம் அவர் பேசியிருந்த அனைத்தும் அவர்களுடைய நினைவுக்குவரும் (யோவான் 16:4; 13:19). ஆனால் அவர்கள் விருப்பத்துடனும், வாஞ்சையுடனும் காணப்பட்டனர். இப்படியாகவே நாமும் காணப்பட வேண்டும். அவர்கள் விரும்புவார்களானால், அவர்கள் இந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும், இங்கு இப்படியாகத் தொடர்ந்து விருப்பம் கொண்டிருந்து, தம்முடன் தொடர்ந்து பாடுபடுவார்களானால், தம்மோடுகூடத் தம்முடைய சிங்காசனத்தில் ஆளுகைசெய்வார்கள் என்றும் இயேசு உறுதியளித்தார். ஆனாலும், சிங்காசனத்தில் ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தைக் கூறுவது தமக்கான காரியமாய் இராமல், பிதாவுக்கு அடுத்த காரியமாகவே இருக்கின்றது என்று இயேசு தெரிவித்தார்.

இடுக்கமான வழியில் நம்முடைய அருமையான மீட்பர் தைரியத்துடனும், மனோதிடத்துடனும் நடந்துசென்றது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. அவர் எத்துணை பலமானவராகவும், தைரியமானவராகவும் காணப்பட்டிருக்கின்றார்! அவர் பின்வாங்குவதற்கான சிந்தனையைக் கொண்டிருக்கவேயில்லை; உலகத்தின் நன்மைக்காகத் தம்மைப் பலிசெலுத்த வேண்டும் என்றுள்ள பரலோகத்திலுள்ள பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே அவருடைய முழு நோக்கமாக இருந்தது. அப்போஸ்தலர்களுக்கு முன்பாக எத்துணை ஓர் உயர்வான மாதிரி முன்வைக்கப்பட்டது – மிகுதியான தாழ்மை மற்றும் சுயத்தை முழுக்கச் சரணடையப்பண்ணுவதன் மூலமாக ஜெயங்கொள்ளுவதற்கான உயர்வான ஒரு மாதிரி முன்வைக்கப்பட்டது!

சபை கர்த்தருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுதல்

கர்த்தருடைய பாத்திரத்தில் சபை பானம்பண்ணுதல் என்பது, தற்காலத்தில் கிறிஸ்துவின் பாடுகளிலுள்ள நமது பங்கெடுப்பை அடையாளப்படுத்துகின்றது. சரியான நிபந்தனைகளின்கீழ் இப்பொழுது வராத எவரும், புதிய உடன்படிக்கைக்கான மாபெரும் மத்தியஸ்தரினுடைய சரீரத்தில் அங்கம் ஆகிடமுடியாது. ஆகவே, இரத்தத்தைப் பானம் பண்ணுவது என்பது, பாத்திரத்தில் பங்கடைதல் ஆகும். ஒருவேளை நாம் அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணவில்லை என்றால், நாம் அவருடைய மகிமையில் அவருடன் பங்கடையமுடியாது. “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்று இயேசு கூறினார் (மத்தேயு 26:27). அனைவரும், பானம்பண்ண வேண்டும், மற்றும் முழுப் பாத்திரமும் இந்த யுகத்தில் காலியாக வேண்டும்.

கிறிஸ்துவின் பாடுகளில் பங்கடைவதற்கென நாம் அனுமதிக்கப்பட்டிருப்பது என்பது மிகவும் பெரிதான சிலாக்கியமாகும். ” அவரோடேகூட பாடுபட்டால் அவரோடு கூட ஆளுகை செய்வோம்.” புதிய யுகத்தை ஆரம்பித்து வைப்பதிலும், அதின் ஆசீர்வாதங்களை விநியோகிப்பதிலும் நாம் பங்கடைவோம். இரத்தத்தைத் தெளிக்கும் நிஜமான மோசே, மகிமையடைந்த தலையும், அவரது சரீரமாகிய சபையுமான கிறிஸ்து ஆவார். “மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” (அப்போஸ்தலர் 3:22). மோசே சிறிய அளவில் கர்த்தருக்கு நிழலாக காணப்படுகின்றார். சரீரம் இப்பொழுது உயிர்த்தெழுப்பப்பட்டுக்கொண்டு வருகிறது . இயேசு முதலாவதாக எழுப்பப்பட்டார். பின்னர் அப்போஸ்தலர்கள் அனைவரும், பின்னர் அவருடைய சரீரத்தின் மீதி அங்கத்தினர்கள் அனைவரும் எழுப்பப்படுவார்கள்.

மோசே ஜனங்கள் அனைவர்மீதும் தெளித்ததுபோல இந்த நிஜமான மோசேயும் நிறைவடையும்போது மனுக்குலத்தின் உலகத்தின்மீது “தெளிப்பார்;” மேலும், இது மனுக்குலத்தைத் தெய்வீகப் பிரமாணத்துடனான இசைவிற்குள் கொண்டுவருவதைக் குறிக்கின்றதாய் இருக்கும். மனுக்குலத்தின்மீது தெளிக்கப்படுவதற்கு ஆயிரம் வருடங்கள் தேவைப்படும். ஆகவே பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்கும், இரத்தத்தைத் தெளிப்பதற்கும் இடையே பெரிய வித்தியாசம் காணப்படுகின்றது. இரத்தத்தைத் தெளிப்பது என்பது, நீதிமானாக்கப்படுதலைக் குறிக்கின்றது. ஆனால் சபையினால் பாத்திரத்தில் பானம்பண்ணப்படுவது என்பது, நீதிமானாக்கப்படுதலை மாத்திரமல்லாமல், பரிசுத்தமாக்கப்படுதலையும் குறிக்கின்றதாய் இருக்கும்.

தெய்வீக நோக்கங்களை நமது கர்த்தர் அடையாளம் கண்டுகொள்ளுதல்

“என் பிதா எனக்குக் கொடுத்தப் பாத்திரத்தில் பானம்பண்ணாதிருப்பேனோ?” என்று பரிசுத்தவானாகிய பேதுருவிடம் கூறப்பட்ட நம்முடைய கர்த்தரின் வார்த்தைகளானது, முடிவில் கடுமையானதாய் இருக்கும் அவருடைய மரண அனுபவங்களைப்பற்றியே குறிக்கின்றதாய் இருக்கின்றது. அவர் மனுஷரால் அவமதிக்கப்பட்டு, தேவனுடைய சத்துருவாக, அதாவது தேவ தூஷணம் புரிந்தவராகக் கருதப்பட்டார். தம்முடைய சரீரப்பிரகாரமான பாடுகள் கடுமையானதாகக் காணப்படும் என்று அவர் அறிந்திருந்தார்; எனினும் அவருடைய வலியில் இன்னும் கூடுதல் வலியாக, அவருடைய பரிபூரணமான மனதிற்கு, அவமானமும், கெட்டப்பெயரும் காணப்பட்டது. எனினும், இந்தப் பாத்திரத்தையே, பிதா அவருக்குக் கொடுத்திருந்தார். இதுவே இயேசு தொடர்புடைய தெய்வீக நோக்கமாக இருந்தது.

நமது கர்த்தர் தம்முடைய நேர்மையை நிரூபித்துக் காட்டுவதற்கு அவசியமாய் இருந்த அனைத்து அனுபவங்களையும் பெற்றிருந்தார். ஏனெனில், தேவ தூதர்கள் மற்றும் மனுஷர்களாகிய இருவருக்கு முன்பாகவும், அவர் தமது நேர்மையை/உண்மையை வெளிப்படுத்துவது அவசியமாய் இருந்தது. அனைத்து விஷயங்களும் மனிதனுடைய சிருஷ்டிப்புக்கு முன்னதாகவே தேவனால் ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது. “அவர் உலக தோற்றத்திற்கு முன்னதாக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இருந்தார்” (வெளிப்படுத்தல் 13:8). அடிக்கப்படும் ஆட்டுக்குட்டி தொடர்புடைய அனைத்தும் பிதாவினால் முன்னமே அறியப்பட்டிருந்தது. இயேசு மனுஷனை மீட்கத்தக்கதாகவும், இப்படியாக உண்மையும் இரக்கமுமுள்ள பிரதான ஆசாரியனாக ஆகத்தக்கதாகவும் இயேசு பாவிகளுக்கு உரியதான பாத்திரத்தைப் பானம்பண்ண வேண்டியிருந்தது. அது பாடுகள் மற்றும் மரணத்தின் பாத்திரமாய் இருந்தது. இயேசு யூதனை மீட்கத்தக்கதாக சிலுவையின் மரணத்தை அடைவது அவசியமாய் இருந்தது.

கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்ததில் வெளிப்பட்ட அன்பு மற்றும் நேர்மை

அவருடைய பாடுகள் அனைத்தும் வேத வாக்கியங்களில் முன்னறிவிக்கப் பட்டிருந்தது. வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பம் உயர்த்தப்பட்ட விஷயத்தில் சிலுவையில் அறையப்படுதல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அவருடைய அனுபவங்கள் அனைத்தும் முன்னமே அறியப்பட்டிருந்தது, முன்னமே ஏற்பாடு பண்ணப்பட்டிருந்தது மற்றும் அவசியமாய் இருந்தது. பிதாவின் சித்தத்தை நிறைவேற்றத்தக்கதாக, அவர் பூமியில் வந்தபோதோ, வரவிருக்கின்ற அனைத்தையும் அவர் அறியவில்லை. ஆனாலும், “புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ள” பாடுகளை அவர் அனுபவித்ததின்மூலம் அவர் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். பிதாவின் சித்தம் அனைத்திற்கும் அவர் தம்மையே ஒப்புக்கொடுத்தார் மற்றும் இப்படியாகத் தம்முடைய நேர்மையை நிரூபித்தார். “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வந்தேன்.” என்று அவரே கூறினார் (யோவான் 6:38). அவருடைய பலி பட்சிக்கப்படுவதற்குரிய வேளை நெருங்கியபோது, கெத்செமனேயின் தனிமையில், “பிதாவே இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்” எனப் போதகர் ஜெபம்பண்ணினார். அவர் மரணத்தின் பாத்திரம் நீங்குவதற்கு ஜெபம் பண்ணினார் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மாறாக சிலுவையில் அறையப்படுதலில் உள்ள அவமானத்தின் அனுபவங்கள் மாறக்கூடுமோ (அ) இல்லையோ என்றே எண்ணினவராகக் காணப்பட்டார். எனினும், அவர் முறுமுறுக்காமல் (அ) எதிர்க்காமல், “ஆயினும் என்னுடைய சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது” என்று கூறினதையே நாம் காண்கின்றோம்!

நம்முடைய பாத்திரத்திற்கான விசேஷித்த மேற்பார்வை

நமது நேச கர்த்தர் கசப்பான பாத்திரத்தை அடிமண்டிவரை பருகினார் என்றும், அதுவும் மிகவும் நன்றியுடன் பருகினார் என்றும் நாம் காண்கின்றோம். நாம் அனைவரும்கூட [R5422 : page 86] அப்பாத்திரத்தில் பானம்பண்ணத்தக்கதாக நமக்கும் அவர் பாத்திரத்தைக் கொடுத்துள்ளதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். அவருக்கு இருந்த அதே அனுபவங்கள் அப்படியே நமக்கு இருப்பதில்லை. எனினும் பிதாவின் சித்தமான வழியில், மரணம் மற்றும் பாடுகளின் பாத்திரத்தில் நாம் அனைவரும் பானம் பண்ண வேண்டும். இயேசு பரிபூரணமானவராக இருந்தபடியால் அவரை மிகக் குறிப்பிடத்தக்க விதத்தில் பிதா கையாண்டார்.

நம்முடைய விஷயத்தில் அனுபவங்கள் வித்தியாசமானதாய்க் காணப்படும்; ஏனெனில் நாம் பூரணமில்லாதவர்களாய்க் காணப்படுவதினால், பூரணமானவரைக் கையாளும் கண்ணோட்டத்தில் இருந்துகொண்டு நாம் கையாளப்பட முடியாது. ஆகவே நமக்கான பாத்திரம் என்பது, போதகருடையதுபோன்று நிர்ணயிக்கப்பட்டதாக, குறிப்பிட்டதாக இருக்குமென்று எண்ணக்கூடாது; மாறாக, பிதா தம்முடைய குமாரனுடன்கூட நாம் மரணத்தின் பாத்திரத்தில் ஒரு பங்கடையும்படிக்கு நம்மை அனுமதித்துள்ளார். பிதாவின் திட்டத்தின்படி, பிதாவினால் நம்முடைய பாத்திரம் ஊற்றப்படுகிறதாயினும், நம்முடைய பாத்திரமானது நம்முடைய இரட்சகரினால் மேற்பார்வையிடப்படுகின்றது.

போதகருடைய விஷயத்தில், முழு உலகத்தின் பாவத்திற்கெனப் பாத்திரம் அவசியமாய் இருந்தது. நம்முடைய விஷயத்தில் அது அவசியமில்லை; எனினும் நமது கர்த்தருடைய பாடுகளிலும், மகிமையிலும் ஒரு பங்கை நமக்கு அருளுவது பிதாவுக்குப் பிரியமாயிற்று. இயேசு நம்முடைய குறைவுகளை நிறைவாக்கி, நம்முடைய குணநலன்களை வளர்த்தி, நம்மை அவருடைய மகிமையின் சாயலுக்கு வனைகின்றார். நமது பாத்திரத்தின்மீதான நமது கர்த்தருடைய மேற்பார்வை இல்லையெனில் நாம் அநேக விஷயத்தில் குறைவாகவே வளர்ச்சியடைந்திருப்போம்; ஆகவே, நம்முடைய பாத்திரத்திற்கு விசேஷித்த மேற்பார்வை அவசியமாய் உள்ளது. ஆகவேதான், அவசியமான அனுபவங்கள் நமக்கு வரும் அதே வேளையில் அவருடைய கிருபையும் நமக்குப் போதுமானதாக இருக்கும் என்றும், நம்முடைய பெலவீனத்தில் அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும் என்றும், அனைத்தும் நம்முடைய நன்மைக்கு ஏதுவாகவே நடக்கும் என்றும் கர்த்தர் நமக்கு வாக்களித்துள்ளார்.

நாம் அவருடைய பாத்திரத்தில் பங்கெடுக்காதது வரையிலும், நாம் அவருடன் கூட மரணத்திற்குள் மூழ்காததுவரையிலும், நம்மால் அவருடைய மகிமையின் இராஜ்யத்தில் பங்கடையமுடியாது என்பதையும், அவருடைய சிங்காசனத்தில் அவருடன்கூட ஒருபோதும் நம்மால் உட்கார முடியாது என்பதையும், நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. மாபெரும் விலையுடைய இந்த முத்தை அடையத்தக்கதாக, இந்தப் பூமியின் அனைத்தையும், குப்பையும், நஷ்டமும் என்று எண்ணக்கடவோமாக. பாடுகளின் அனுபவங்கள் நமக்கு வரும்போது, நாம் அச்சமடையாமல் இருப்போமாக. இன்னுமாக, “நம்மை சோதிக்கும்படி, நம் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்” காணப்படுவோமாக; ஏனெனில் நம்முடைய அன்புக்குரிய போதகருடன் கூட இப்பொழுது பாடுபடுவதற்கும், பின்னர் நித்தியத்திற்குரிய இராஜ்யத்தில் அவருடன்கூட மகிமைப்படத்தக்கதாக, “நாம் அழைக்கப்பட்டும் இருக்கின்றோம்!”

“உனக்கு பக்கபலமாக நிற்க நண்பனும் இல்லை,
இளைப்பாறுதல் தர எந்தக் கரமும் இல்லை,
குறுகலான வழி, நெருக்கமான பாதையில் நடக்க உன்னால் கூடுமா?
காரிருளில் உன்னால் துணிச்சலாக முன்னேறிச் செல்ல முடியுமா?
அங்குக் கர்த்தர் வெளிச்சத்தை அனுப்பும் வரை
பொறுமையோடு காத்திருக்க உன்னால் முடியுமா?”

“இப்படியாக… அவர் அளிக்கும் பாத்திரத்தில் நீ பானம் பண்ணி
சத்தியக்கொடியை உயர்த்திப் பிடித்திருக்கும்போது
நீ அவருடையவனாய் இருப்பாய்,
அவருடைய கிரீடம் உனக்கு மகுடமாகும்.
அவரது சிங்காசனத்தில் நீ அமர்ந்து,
அவரது மகிமையில் பங்குபெறுவாய்.”