R1100 – நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1100 (page 1)

நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்

ANNIVERSARY OF OUR LORD'S DEATH

புதிய வாசகர்களுடைய நலன்கருதி, நமது கர்த்தருடைய மரணத்தை வருடத்திற்கு ஒருமுறை, அதன் ஆண்டுநிறைவு நாளில் நினைவுகூர்ந்து ஆசரிப்பது நம்முடைய வழக்கமாய் இருக்கின்றது என்று நாம் குறிப்பிடுகின்றோம்.

“பாவத்தின் சம்பளம் மரணம்” என்றும், நமது அருமை மீட்பரினால் அனைவருக்குமாகக் கொடுக்கப்பட்டதான ஈடுபலியானது, அவரது ஜீவனாய் இருக்கின்றது என்றும், உண்மையாய் உணர்ந்துகொள்பவர்கள் அனைவருக்கும் – அவரது மரணம், அவரது சிலுவையானது, எப்போதும் அவர்களது கவனத்தினுடைய மையமாகக் காணப்பட வேண்டும்; மற்றும் இதிலிருந்தே எதிர்க்கால ஜீவன் மற்றும் ஆசீர்வாதங்களுக்கான நமது நம்பிக்கைகள் அனைத்தும் உண்டாகுகின்றதாய் இருக்கின்றது. இப்படியானவர்கள் அனைவரும் கல்வாரியில் வெளிப்பட்டதான நமக்காக மரித்திட்ட அன்பை, மீட்பரின் அன்பை, அனைத்தையும் சகித்த அன்பை, வல்லமையுள்ள அன்பைக்குறித்து நினைவுகூர்ந்து ஆசரிப்பதைச் சிலாக்கியமாகக் கருதிடுவார்கள். “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” (யோவான் 15:13) ஆனாலும் தேவனுடைய அன்பானது, விசேஷமானதாகவும், மற்ற அனைத்து அன்பிற்கும் மேலானதாகவும் காணப்படுகின்றது; ஏனெனில் நாம் பாவிகளாகவும், சத்துருக்களாகவும் இருந்தபோதே, நம்மைத் தேவனிடத்தில் கொண்டுசேர்க்கத்தக்கதாகவும், ஆதாமினுடைய மீறுதல் காரணமாக இழந்துபோகப்பட்டதான பரிபூரண நிலைமைக்கும், தேவனுடன் இசைவாய் உள்ள நிலைமைக்கும், மனிதனைச் சீர்ப் பொருந்தப்பண்ணுவதற்கான உரிமையும், வாய்ப்பும் தமக்குக் கிடைக்கத்தக்கதாகவும் கிறிஸ்து அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக நீதியுள்ளவராய் மரித்தார்.

தம்முடைய உண்மையுள்ள பின்னடியார்களிடத்திலான இந்த விருப்பத்தினை முன்னறிந்தவராகவும், இந்த விருப்பத்திற்கான தமது அங்கீகரிப்பையும், அந்த விருப்பம் ஏற்றது என்பதையும் சுட்டிக்காட்டும் வண்ணமாகவும், நமது கர்த்தர் அந்த எளிமையான, அதே சமயம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் “கடைசி இராப்போஜனம்” என்று அழைக்கப்படும் நினைவுகூருதலை நிறுவினார். இது அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில் மற்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டதான அதே நாளிலும் – நீசான் மாதத்தினுடைய 14-ஆம் தேதியன்று – பஸ்கா பண்டிகை ஆரம்பிப்பதற்கு முந்தின நாளில் நிறுவப்பட்டது.

நாம் நாளைக் கணக்கிடும் முறையிலிருந்து, எபிரெயர்களுடைய நாள் கணக்கிடும் முறைமையானது வித்தியாசமானதாகும். அவர்களுக்கு ஒரு நாளானது சூரிய அஸ்தமனத்துடன் (அ) மாலை 6 மணியுடன் துவங்குகின்றதாய் இருக்கின்றது. இதனால்தான் நமது கர்த்தரும், அப்போஸ்தலர்களும் கடைசி இராப்போஜனத்தைச் சுமார் 8 மணிக்குப் புசித்துவிட்டு, பின்னர் கெத்செமனே தோட்டத்திற்கும், பிலாத்துவினிடத்திற்கும், ஏரோதினிடத்திற்கும் சென்று, பின்னர் அதே நாளின் மதிய வேளையில் அவர் சிலுவையில் அறையப்பட முடிந்தது. அநேகமாக நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதலான அடையாளமான இராப்போஜனமும், அவரது மரணமும் அதே/ஒரே நாளில் இடம்பெறத்தக்கதாகவே, எபிரெயர்கள் 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளினை, இரவுடன் துவங்கும் வழக்கத்தினைக் கொண்டிருக்கத்தக்கதாக ஏற்பாடு பண்ணப்பட்டது. மீண்டுமாக இரவு என்பது பாவம் எனும் இருளான வேளையையும், மரணத்தில் நித்திரைப்பண்ணுகிற வேளையையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; மற்றும் இதனை தொடர்ந்து உயிர்த்தெழுதலின், பரலோக வெளிச்சத்தின், ஆசீர்வாதத்தின் மகிமையான மற்றும் நித்திய காலமான காலை வருகின்றது; இந்தக் காலையானது ஆயிரவருட யுகத்தில், நீதியின் சூரியன் தனது செட்டைகளில் ஆரோக்கியத்துடன் உதிக்கையில் துவங்குகின்றதாய் இருக்கின்றது.

சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியினுடைய பஸ்கா இராப்போஜனத்தின் இடத்தில், கர்த்தரால் நிறுவப்பட்டதான அப்பமும், திராட்சரசமுமுள்ள அவரது நினைவுகூருதல் இராப்போஜனமானது இடம்பெறுகின்றது என்ற உண்மையும், பஸ்கா ஆட்டுக்குட்டியும், அது புசிக்கப்பட்டதைத் தொடர்ந்து உண்டான எகிப்திலிருந்துள்ள விடுதலையும், தேவ ஆட்டுக்குட்டிக்கும், அவரது புண்ணியங்களில் பங்கெடுப்பவர்கள் அனைவருடைய விடுதலைக்கும் நிழலாய்க் காணப்படுகின்றது என்ற உண்மையும், ஆட்டுக்குட்டியின் நிஜமாகிய “உலகின் பாவத்தைச் சுமந்து தீர்க்கின்ற தேவாட்டுக்குட்டியினுடைய” மரணத்தை, அதன் ஆண்டுநிறைவு நாளில் நினைவுகூர்ந்து ஆசரிப்பதே, இதற்கான ஒரே சரியான மற்றும் ஏற்ற மற்றும் சிறந்த நேரமாக இருக்கும் என்பதின் ஏற்புடைமையை நாம் அடையாளம் கண்டுக்கொள்ளத்தக்கதாக நம்மை வழிநடத்தும். இப்படியாகவே நாம், “நீங்கள் இதைப் பானம் பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்ற அவரது வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நமது கர்த்தர் நோக்கம் கொண்டிருந்தார் என்று நாமும் நம்புகின்றோம்; அதாவது, “நீங்கள் இந்தப் பஸ்கா இராப்போஜனத்தை ஆசரிக்கும்போதெல்லாம், நீங்கள் நிழலான ஆட்டுக்குட்டியையும், எகிப்திலிருந்துள்ள நிழலான விடுதலையையும் நினைவுகூரும்படி இதைச் செய்யாமல், மாறாக என்னை நிஜமான தேவாட்டுக்குட்டி என்று விசுவாசிக்கின்ற நீங்கள், என்னையும், உயிர்த்தெழுதலின்போதுள்ள உண்மையான கடந்துபோகுதலையும் எண்ணிட வேண்டும்” எனும் விதத்தில் கூறினார்.

ஒவ்வொரு யுகத்திலும் காணப்பட்டக் கிறிஸ்தவர்களானவர்கள் கல்வாரியில் நடந்த இம்மாபெரும் நிகழ்வையும், அங்கு உலகத்தின் ஜீவனானது விலைக்கொடுத்து வாங்கப்பட்டதான காரியத்தையும் ஆசரிக்க வேண்டும் என்பது ஏற்புடையது என்பதை ஏதோ விதத்தில் அடையாளங்கண்டுகொண்டுள்ளனர் மற்றும் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வுக்கும், உயிர்த்தெழுதலுக்கும் நினைவுகூருதலாக அநேகர் “புனித வெள்ளியையும்,” “ஈஸ்டர் ஞாயிறையும்” ஆசரிக்கின்றனர். ஆனால் கர்த்தருடைய மரணத்தை, இராப்போஜனத்தில், அவரால் அங்கீகரிக்கப்படுகின்றதான, அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிக்கும் காரியமானது, கிட்டத்தட்ட 16 நூற்றாண்டுகளுக்கும்மேலாக கவனிக்கத்தவறப்பட்டுள்ளது. இது இரண்டு காரணங்களுக்காக தவிர்க்கப்பட்டது. முதலாவது காரணம், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அறிக்கைப் பண்ணிக்கொள்ளுகிறவர்களுக்கும், யூதர்களுக்கும் இடையில் பகைமை உண்டானதேயாகும்; அதாவது தங்கள் மீது யூதர்களுடைய மற்ற வழக்கங்கள் மற்றும் ஆசரிப்புகளினுடைய செல்வாக்கினைக் குறித்த கிறிஸ்தவர்களின் அச்சத்தினால், புதிய மதத்தை, பழைய மதத்துடன் இணைக்கின்றதான இணைப்புகளைத் துண்டித்துப்போடுவதற்காகும்; மற்றும் இரண்டாவது காரணம் போப்மார்க்கம் கட்டுப்பாட்டினைப் பெற்றிருந்தபோது, உலகத்தின் பாவத்தை எடுத்துப்போடுவதற்கு எப்போதும் போதுமானதாய்க் காணப்பட்ட ஒரே மற்றும் ஓர் உண்மையான மரணத்திற்குப்பதிலாக, “பூசைபலியானது” கொண்டுவரப்பட்டதாகும். (இந்தப் பூசைபலியானது, கிறிஸ்துவை மீண்டும் மீண்டுமாகப் பலியிடுவதைத் தெரிவிக்கின்றதாய் இருந்தது).

போப்மார்க்கத்தினுடைய இருளினின்று வெளியே வந்திட்டவர்களான புராட்டஸ்டண்டினர்கள், பூசை பலியை – அருவருப்பை – நிராகரிக்குமளவுக்கும் மற்றும் கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆதியில் காணப்பட்டதான, அதற்கே உரிய எளிமையில் ஆசரிக்குமளவுக்கும், போதுமானவைகளை அடையாளம் கண்டுகொண்டனர். எனினும் அதை எத்தனைதரம் ஆசரிப்பது ஏற்றதாய் இருக்கும் என்பது தொடர்புடைய விஷயத்தில் சந்தேகத்திலேயே காணப்பட்டனர்; சிலர் ஞாயிறுதோறும் என்றும், சிலர் மாதந்தோறும் என்றும், சிலர் காலாண்டுதோறும் என்றும், சிலர் இன்னும் சில விதத்திலும் ஆசரித்துவருகின்றனர்.

இவ்விஷயம் தொடர்புடையதான வேதவாக்கியங்களினுடைய ஆதாரமானது, அனைத்துச் சந்தேகங்களையும், அனுமானங்களையும் தெளிவுபடுத்துகின்றதாய் இருக்கின்றது மற்றும் அதன் ஆதி எளிமையிலும், முழுக்க அர்த்தம் நிரம்பின நிலையிலும் நினைவுகூருதல் குறித்த கட்டளையை முன்வைக்கின்றதாய் இருக்கின்றது. இவ்விஷயம் குறித்து R1013-இல் நாம் விளக்கியிருப்பினும், புதிய வாசகர்களுக்கு அதே ரீபிரிண்ட்ஸ் எண்ணின் கீழான புதிய தலைப்பாகிய, “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” எனும் பாடத்தினைப் பரிந்துரைக்கின்றோம். நம்மிடத்தில் அதனுடைய சில பிரதிகள் காணப்படுகின்றது மற்றும் இக்கண்ணோட்டத்திலிருந்து இப்பாடத்தினைப் படிக்க விரும்புகிறவர்களுக்கு, நாம் அந்தப் பிரதிகளை இலவசமாகக் கொடுக்க விரும்புகின்றோம்.

யூதர்களால் கைக்கொள்ளப்படும் விதம்போலவே அப்போஸ்தலர்களால் கைக்கொள்ளப்பட்டதுபோன்றும், ஆதித் திருச்சபையினரால் கைக்கொள்ளப்பட்டது போன்றும், இந்த ஒரு நிகழ்வை, அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிக்கும் பழக்கத்தினை நாமும் கொண்டிருக்கின்றோம் – அதாவது சூரியக்காலக் கணக்கிடுதலின்படியாக அல்லாமல் சந்திரக்காலக் கணக்கிடுதலின்படியாகும். ஆதித் திருச்சபையினர் சந்திரக்காலத்தைப் [R1100 : page 2] பின்பற்றினதுபோல, நாமும் பின்பற்றுகையில், அந்த நாளானது, வாரத்தினுடைய ஏதோ ஒரு நாளாய் இடம் பெறுகின்றது*. (*புனித வெள்ளியையும், ஈஸ்டர் ஞாயிறு முதலானவைகளை ஆசரிப்பவர்கள், சந்திர காலக்கணக்கிடுதலையே பயன்படுத்துகின்றனர்; எனினும் துல்லியமாய் அல்ல; ஏனெனில் துல்லியமான சந்திர காலக்கணக்கிடுதலின்படியான தேதிக்குப்பதிலாக, அதற்கு அருகாமையில் காணப்படுகின்றதான வெள்ளிக்கிழமையையும், ஞாயிற்றுக்கிழமையையும், ஆண்டுநிறைவு நாட்களுக்காகத் தெரிவு செய்து கொள்கின்றனர்.) இந்த வருடம் அது ஏப்ரல் 14-ஆம் தேதி ஞாயிறு மாலையாக (6 மணிக்குமேல்) இருக்கின்றது. அந்தநாள் மாலையில் 6 மணிக்கு, எபிரெய மாதமாகிய நீசான் மாதத்தின் 14-ஆம் தேதி துவங்குகின்றதாய் இருந்து, திங்கட்கிழமை மாலை 6 மணிவரை நீடிக்கின்றதாய் இருக்கின்றது; இந்தத் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பஸ்கா பண்டிகை என்று அழைக்கப்படும் யூதர்களுடைய ஏழுநாள் பண்டிகையினுடைய முதல்நாளாகிய நீசான் 15-ஆம் நாள் துவங்குகின்றதாய் இருக்கின்றது. நாம் அவர்களது பண்டிகையையும் ஆசரிப்பதில்லை மற்றும் சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியையும் பயன்படுத்துகிறதில்லை. நம்முடைய ஆசரிப்பானது நிஜமான, உண்மையான தேவாட்டுக்குட்டியாய்க் காணப்படுகின்றவர்பற்றியாகும் மற்றும் இவருக்கே அப்பமும், திராட்சரசமும் அடையாளங்களாய்க் காணப்படுகின்றது. எதிர்க் காலத்தில் நாம் யூதர்களுடைய சந்தோஷத்தின் ஏழு நாட்கள் பண்டிகையினுடைய நிஜத்தை – தேவனுடைய ஜனங்கள் அனைவரும் (இஸ்ரயேலர்களால் – அடையாளப்படுத்தப்படுபவர்கள் – அவரோடு இசைவிற்குள்ளாக வந்துவிட்டவர்களும், அவரோடு இசைவிற்குள்ளாக வரும் அனைவரும்) – பாவம் மற்றும் அதன் பின்விளைவாகிய மரணத்தைக் கடந்துவந்து, அக்கறையில் வந்து நிற்கும்போதும் மற்றும் இப்பொழுது முதற்பேறான சபையையும், இவர்களைப் பின்தொடர்ந்து வரவும், கர்த்தரைச் சேவிக்கவும் விரும்புகின்றவர்களையும் அடிமைப்படுத்திடுவதற்கு நாடிக்கொண்டிருக்கின்றதான சாத்தானும், ஈட்டிகளும், கவண்களும், பொல்லாப்பான தந்திரமுள்ள இரதங்களும் உள்ள அவனது மனமார்ந்த பின்னடியார்களும் இறுதியில் முற்றிலுமாக ஜெயங்கொள்ளப்படும்போதும், இரண்டாம் அல்லது நித்தியமான மரணத்திற்குள் தள்ளப்படும்போதும் – நாம் கொண்டாடுவோம். இவர்களது இந்த இறுதி அழிவானது, பார்வோனும், அவனது குதிரை வீரர்களும் செங்கடலில் மூழ்கடிக்கப்படுவதில் அடையாளப்படுத்தப்படுகின்றது. இந்த அழிவிலிருந்து ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தின் கீழ்க் காணப்பட்டதான அனைவரும் காப்பாற்றப்பட்டனர் – (தற்காலமாகிய சுவிசேஷயுகமாகிய அந்த இரவில்) முதற்பேறானவர்கள் மாத்திரம் காப்பாற்றப்படாமல் (தப்புவிக்கப்படாமல்), இவர்களால் அடுத்தநாள் காலையில் (ஆயிரவருட யுகத்தில்) வழிநடத்தி வரப்பட்டதான கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும்கூடக் காப்பாற்றப்பட்டனர்.

நமது ஆட்டுக்குட்டியானவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் பலன்பெற்றவர்களாகிய விசுவாசிகளில் இரண்டு (அ) மூன்று பேர் எங்கெல்லாம்கூடி இதை அநுசரிக்க வாய்ப்புள்ளதோ, அவர்கள் ஒன்றுகூடிட மறவாமல், ஒன்றுகூடி நமக்கு மிகவும் விலையேறப்பெற்றவைகளைச் செய்து தந்துள்ளவரான அவரின் நினைவாக “இதைச் செய்வோமாக.” முடிந்தமட்டும் கர்த்தருடைய சரீரத்தின் அநேக அங்கத்தினர்கள் இவ்வாறாக ஒன்றுகூடிட விரும்பினாலும், யாரையும் வற்புறுத்தாதீர்கள்; எண்ணிக்கை அவசியம் என்று எண்ணாதீர்கள்; உங்கள் ஐக்கியத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட நபர் உங்களோடுகூடக் கண்டிப்பாய்க் கலந்து கொள்வது அவசியம் என்று எண்ணாதீர்கள்; உங்களோடுகூடச் சேர்ந்து இந்தச் சிலாக்கியத்தினை அனுபவிப்பதற்கு உங்கள் சுற்றுப்புற வட்டாரத்தில் எவருமில்லையெனில், கர்த்தரோடு தனிமையில்கூடி, அவரது இந்த மாபெரும் பலியினை ஆசரியுங்கள்.

இந்த எளிமையான ஏற்பாட்டின் விஷயத்தில் அதை ஆசரிக்கும் காரியமும், அடையாளங்களைக் கையாளும் காரியமும், சிலர் போதிப்பதும் மற்றும் விசுவாசிப்பதும் போன்று, ஒரு விசேஷித்த வகுப்பாருக்கு, அதாவது “குருமார் வகுப்பாருக்கு” உரியது என்று எண்ணிட வேண்டாம். தம் உண்மையான பின்னடியார்கள் மத்தியில் கர்த்தர் இம்மாதிரியான பாகுபாடுகளைப்பார்ப்பதில்லை; மாறாக, “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்; கிறிஸ்து [R1101 : page 2] ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்” என்றே கூறியுள்ளார். நீங்கள் எல்லாரும் கிறிஸ்துவின் ஊழியக்காரர்களாய் (வேலைக்காரர்களாய்) இருக்கின்றீர்கள்; நீங்கள் அனைவரும் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறவர்களாய் (அறிவிக்கிறவர்களாய்) இருக்கின்றீர்கள்; அந்த நற்செய்தியை உங்கள் மகிழ்ச்சிகரமான வார்த்தைகள் மற்றும் பார்வைகள் மற்றும் கிரியைகள் மூலம் வெளிப்படுத்துகிறவர்களாகவும், உங்கள் நாவுகள், பேனாக்கள் மற்றும் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள்/பக்கங்கள் மூலம் தெரிவிக்கின்றவர்களாகவும் இருக்கின்றீர்கள்; மனிதனால் ஏற்படுத்தப்படாமல், மாறாக “மெல்கிசெதேக்கின் முறைமையின்படியான” “இராஜரிக ஆசாரியக்கூட்டத்தில்” – நம்முடைய மாபெரும் பிரதான ஆசாரியனுடைய சரீரத்தில் அங்கத்தினர்களாக திவ்விய ஏற்படுத்துதலினால் உண்டான ஆசாரியர்களாய் நீங்கள் இருக்கின்றீர்கள். (மத்தேயு 23:8; வெளிப்படுத்தல் 1:6; எபிரெயர் 3:1;4:14; 7:21)

மற்றவர்களை இல்லாமல் அர்ப்பணிக்கப்பட்டவர்களின் கூட்டத்தையே நாடுகிறவர்களாக இருப்பினும், உடன்படிக்கைப்பண்ணாத வேறு எவருமே கலந்துகொள்ளக்கூடாது என்று சொல்லுகிறவர்களாக இருக்க வேண்டாம்; கர்த்தருடைய பந்தியிலுள்ள மற்றவர்களுடைய உரிமைகளைக்குறித்துத் தீர்மானம் பண்ணிடுவதற்கும் முயற்சிக்காதீர்கள். உங்களால் நிராகரிக்கப்படும் எவரேனும் கூடிடுவதற்கும், அநுசரிப்பதற்கும் விரும்புவார்களானால், கர்த்தரோடுகூட அன்று வஞ்சகன் பந்தியில் காணப்பட்டான் என்றும், அந்த இரவில் அவன் பணத்திற்காக அவரைக் காட்டிக்கொடுத்தான் என்றும் நினைவில்கொள்ளுங்கள். பிசாசுக்கு ஊழியம் புரிந்திட்ட யூதாசை, பிசாசு வெளியே புறப்பட்டுப்போக வைப்பதுவரையிலும், கர்த்தர் யூதாசை சகித்துக்கொண்டிருந்தாரானால், இப்பொழுதுள்ள அந்த வகுப்பார் சார்பிலான பிரிந்துசெல்லுதலும் அவர்களாலேயே நடைப்பெறத்தக்கதாக நீங்களும் காத்திருக்கலாம்.

அலிகெனியிலுள்ள (Allegheny) சபையாராகிய எங்களோடுகூட இங்குவந்து கூடிடுவதற்கும், ஆசரிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுப்பதும், தொலைவிலிருந்து வருகின்றவர்கள் அனைவரையும் எங்களால் முடிந்தமட்டும் உபசரிப்பதும் எங்களுடைய வழக்கமாய் இருந்துவருகின்றது; மேலும் நாங்கள் மீண்டுமாக, இந்த வருடத்தில் அன்போடுகூட இந்த அழைப்பை விடுக்கின்றோம். நாம் நம்முடைய மீட்பரின் பலியை நினைவுகூர்ந்து ஆசரிப்பதற்கும், பின்தொடரும் மூன்று தினங்களிலும் அதன் ஐசுவரியத்தையும், பலன்களையும் – இப்பொழுது அர்ப்பணிக்கப்பட்டச் சபைக்கும், எதிர்க்காலத்தில் “பூமியின் குடிகள் அனைத்திற்குமான” பலன்களையும் குறித்துச் சிந்தனைச் செய்வதற்கும், வரமுடிந்தவர்கள் அனைவரும் வாருங்கள். இனியும் அழைப்பு விடுக்கப்படும் என்றோ, தனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படும் என்றோ காத்திருக்காதீர்கள். வருகின்றவர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர் மற்றும் இது உங்களுக்கான விசேஷித்த அழைப்பாகும். ஆனால் எவரும் கசப்பான இருதயத்தோடு (அ) பெருமையோடு (அ) வீணான மேட்டிமையோடு வராமல், மாறாக மீட்பருக்கான அன்பில் நிரம்பிவழியும் இருதயத்தோடும் மற்றும் அவரைக்குறித்தும், அவரது சித்தம்குறித்தும், திட்டம் குறித்தும், நமக்கான சிலாக்கியம்குறித்தும் நன்கு அறிந்துகொள்ள வேண்டுமென்ற வாஞ்சையில் நிரம்பின இருதயத்தோடும் வாருங்கள்; நாம் அனைவரும் ஒன்று கூடிடலாம்.

உங்களால் வரமுடியுமா என்பது குறித்து முடிந்தமட்டும் சீக்கிரமாய் முடிவு செய்யுங்கள். உங்களால் வரமுடியும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களானால், இது குறித்து மாத்திரம் எங்களுக்குக் கடிதமோ (அ) அஞ்சல் அட்டையோ அனுப்பி வையுங்கள். உங்கள் முகவரியைத் தெளிவாய்க் குறிப்பிடுங்கள் மற்றும் உங்களோடுகூட வேறு யாராவது வருகின்றார்கள் என்றால், அவர்களைக்குறித்தும், நீங்கள் எந்த இரயில் பாதை வழியாக வருவீர்கள் என்பதுகுறித்தும், எந்நேரத்தில் வந்துசேருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கப்படலாம் என்பதுகுறித்தும் தெளிவாய்க் குறிப்பிடுங்கள்.

(கிறிஸ்துவுக்குள்ளாக – அவரது மரணத்திற்குள்ளாக மூழ்குதலை (அ) உண்மையான ஞானஸ்நானத்தை அடையாளப்படுத்துகின்றதான) தண்ணீர் ஞானஸ்நானத்திற்கான வாய்ப்பு அக்கூடுகையின்போது காணப்படுமா என்று கேட்கப்பட்ட அநேக கேள்விகளுக்குப் பதில் – ஆம்! அதற்கான நல்ல வாய்ப்புள்ளதென நாம் கூறுகின்றோம். கிறிஸ்துவுக்குள் தாங்கள் ஏற்கெனவே ஸ்நானம் கொண்டுள்ளதை உணர்ந்தவர்களாக கர்த்தரையும், அப்போஸ்தலர்களையும் தண்ணீர் ஞானஸ்நானத்தில் பின்பற்றிடுவதற்கு விரும்புகின்றவர்கள், ஏப்ரல் 14-ஆம் தேதி ஞாயிறன்று மதியவேளையில், இதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வார்கள். இப்படியாக ஞானஸ்நானம் எடுப்பவர்கள் அனைவரும் இது விஷயம்குறித்துத் தங்கள் வேதாகமத்துடனும், கன்கார்டன்ஸ்சுடனும் (Concordance) ரீபிரிண்ட்ஸ் 1539-ஆம் பக்கத்தையும் கவனமாய்ப் படிப்பதற்குக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடந்த பஸ்கா இராப்போஜனத்தின்போது 23 பேர் இத்தகையதொரு சிலாக்கியத்தினைச் சந்தோஷத்துடன் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் எவரையும், இப்படியாகத் தங்கள் அர்ப்பணிப்பை வெளியரங்கமாய் அறிக்கைப்பண்ணிடுவதற்கு நாம் வற்புறுத்துவதில்லை. இன்னுமாக தண்ணீர் ஞானஸ்நானத்தை ஐக்கியத்திற்கான பரீட்சையாகவும் நாம் வைக்கிறதில்லை; எனினும் முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ள ஒருவர் தண்ணீர் ஞானஸ்நானத்தினுடைய அருமையையும், ஏற்புடைமையையும் பார்ப்பதற்குச் சீக்கிரமாகவோ (அ) கொஞ்சம் காலம் கழிந்தோ வழிநடத்தப்படுவார் என்றும், அவர் எப்போது பார்க்கின்றாரோ, அதுமுதல் அது அர்ப்பணத்திற்கான ஆழத்திற்கும் மற்றும் உலகத்திற்கும் அதன் கருத்துக்களுக்கும் கிறிஸ்துவோடுகூட மரித்துவிடுவதற்கான உண்மைக்குமான பரீட்சையாக மாறிவிடுகின்றது என்றும் நாம் நம்புகின்றோம்.

கர்த்தரினால் பயன்படுத்தப்பட்ட அப்பமானது, புளிப்பில்லாத அப்பமாகும்; புளிப்பினால் உப்பப்படாமல் உண்டாக்கப்பட்ட அப்பமாகும்; இது கிட்டத்தட்ட மாவு மற்றும் தண்ணீரினால் செய்யப்பட்ட சாதாரணமான ரொட்டி (water crackers) போன்று காணப்படும், ஆனால் பெரிதாகவும், மெல்லியதாகவும் காணப்படும். எபிரெய குடும்பத்தினரிடமிருந்து இத்தகைய அப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்ததானால், பெற்றுக்கொள்ளுங்கள்; இல்லையேல் மாவு மற்றும் தண்ணீரினால் செய்யப்பட்ட சாதாரணமான ரொட்டி பெற்றுக்கொள்வது வசதியாய் இருந்தால், அதையே பயன்படுத்துங்கள். நாம் “நியாயப்பிரமாணத்தின் கீழ்க் காணப்படாததினால்” புளிப்புச் சேர்க்கப்படாத அப்பமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியமில்லை என்றாலும், இராப்போஜனம் அநுசரிக்கப்படும் வேளையின் விஷயம்போன்று, இதிலும் நாம் அன்பினாலும், சிலாக்கியத்தினாலும் இயக்கப்படுகின்றவர்களாய்க் காணப்படுகின்றோம். சரியான வேளையில் அநுசரிப்பதிலுள்ள விசேஷித்த ஏற்புடைமையைக் காண்பதினால், இராப்போஜனத்தைச் சரியானவேளையில் ஆசரித்திட நாம் விரும்புவதுபோலவே, அப்பத்தின் விஷயமும் காணப்படுகின்றது; அப்பமானது நமது கர்த்தருடைய சரீரத்திற்கான அடையாளமாய் இருக்கின்றது என்று நாம் காண்கையிலும் மற்றும் புளிப்பு என்பது வேதவாக்கியங்களில் சீர்க்கேட்டிற்கும், பாவத்திற்கும் அடையாளமாய்ப் பயன்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கையிலும், நாம் இயல்பாகவே பரிசுத்தமானவரை, மாசில்லாதவரை, குற்றமற்றவரை, பாவிகளுக்கு விலகினவரை – தூய்மையானவரை அடையாளப்படுத்திடுவதற்கு, எளிமையாகப் பெற்றுக்கொள்ள முடிகின்றதான தூய்மையான (புளிப்பில்லாத) அப்பத்தை அடையாளமாகப் பயன்படுத்திடுவதற்கு விருப்பம்கொள்ள வழிநடத்தப்படுவோம்.

தம்முடைய சிந்தப்பட்ட இரத்தத்தை அடையாளப்படுத்திடுவதற்கு நமது கர்த்தரினால் பயன்படுத்தப்பட்ட திராட்சரசமானது/wine (இன்றும் பாரம்பரியமான யூதர்கள் பஸ்காவுக்கான தங்கள் திராட்சரசத்தைத் தயாரிப்பதுபோன்று) திராட்சப்பழச்சாற்றைத் (grape juice) துரிதமாய்ப் புளிப்பேற்றுவதற்கெனப் புளிப்புச் சேர்க்கப்படாமல் ஆயத்தம் பண்ணப்பட்டதாய் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. எனினும் அது புளிப்பான திராட்சரசமேயாகும் (wine); திராட்சப்பழச்சாற்றிலுள்ள (grape juice) புளிக்க வைக்கும் தன்மங்களானது, இரசத்தை மெதுவாய்ப் புளிப்பாக்குகின்றது மற்றும் அசுத்தங்களை நீக்குகின்றது மற்றும் இப்படியாக திராட்சரசமாக (wine) மாறுகின்றது. இராப்போஜனத்தின்போது நமது கர்த்தரினால் பயன்படுத்தப்பட்ட திராட்சரசமானது (wine) சுத்தமான திராட்சரசம் (pure wine) (வெறும் திராட்சப்பழச் சாறாக/grape juice இருக்க முடியாது, காரணம் திராட்சப்பழச்சாறானது இலையுதிர் காலம் துவங்கி வசந்த/இளவேனிற் காலம்வரையிலும் புளிக்காமல் காணப்பட முடியாது) என்பதுகுறித்து நமக்குத் தெளிவாய் இருப்பினும், மற்றும் இதுபோன்றதான இரசமானது அதிகளவில் பானம்பண்ணுதல் என்பது வேதவாக்கியங்களில் போதைக்கொண்டு வெறிக்கப்பண்ணும் என்பதாகக் குறிப்பிட்டிருப்பினும், கலப்படமான wine/ஒயின்கள் மற்றும் வர்த்தக மதுபானங்கள் உண்டுபண்ணுகிற நாசத்தையும், ஆரோக்கியம் மற்றும் குடும்பத்திற்குச் சீரழிவையும் உண்டுபண்ணியுள்ளதையும், உண்டு பண்ணிக்கொண்டிருக்கிறதையும் நாம் நன்கு உணர்ந்திருப்பதினால், நமது கர்த்தர் விலையேறப்பெற்ற ஜீவன் கொடுக்கின்ற தமது இரத்தத்தை அடையாளப்படுத்துவதற்கென்று, இந்தக் கலப்படமான மற்றும் பாதகமான ஒயின்களையோ/திராட்சரசங்களையோ அல்லது வேறு ஏதாகிலும் வகை திராட்சரசங்களையோ அடையாளமாக தெரிந்தெடுக்கமாட்டார் என்பதில் எங்களுக்கு உறுதியே; சுத்தமான திராட்சரசம்கூட (pure wine) மதுபானம் பருகுவதற்கான ஆசையை விழிக்கப்பண்ணிடுவதாக (அ) ஆசையைப் புத்துயிரடையப் பண்ணுவதாய் இருக்கும் என்று கருதப்படுகின்றது. இது விஷயத்தில் நம்முடைய மரித்துக்கொண்டிருக்கும் சந்ததியில் அதிகரித்து வருகிறதான இப்பெலவீனத்தைக் கர்த்தர் கருத்தில்கொண்டிருப்பார் என்று நாம் நம்புகின்றோம். இது விஷயம் குறித்ததான நமது கர்த்தருடைய எண்ணங்களை நாம் இப்படியாக இருக்குமென நிதானிப்பதினாலும், அடையாளங்களைப் பயன்படுத்தி அவரது மரணத்தை நினைவுகூர்ந்து ஆசரிப்பது என்பது கட்டளையின் பேரில் செய்யப்படாமல், மாறாக ஆசரிப்பது என்பது சிலாக்கியமாக இருக்கின்றபடியாலும், புளிப்பில்லாத அப்பங்களை நாம் பயன்படுத்துவது தவறாய் இருக்காது என்று நாம் காண்கின்றோம் மற்றும் ஒருவரையும் தூண்டிவிடாதபடிக்கு, wine/திராட்சரசத்திற்குப் பதிலாக வேறொன்றைப் பயன்படுத்துவது என்பது தவறாகவோ அல்லது கட்டளையை அலட்சியப்படுத்துவதாகவோ இருக்காது என்று நாம் காண்கின்றோம்; விசேஷமாக இதே ஒரு கொள்கையானது, அப்போஸ்தலனாலும்கூடப் பலமாய் முன்வைக்கப்படுகின்றது; அவர் சொல்லியுள்ளதாவது: “மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலகீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.” “ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.” (ரோமர் 14:21; 1 கொரிந்தியர் 8:13)

அப்படியானால் wine/திராட்சரசத்துக்குப் பதிலாக என்ன பயன்படுத்தப் படலாம்? நியாயப்பிரமாணத்தின்படி புளிப்பான அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டியதான பஸ்கா வாரத்தின்போது எபிரெயர்கள் என்ன செய்வார்களோ, அதையே நாமும் செய்யலாம். ஒருவேளை அவர்களுக்குத் திராட்சரசம் (wine) தீர்ந்துபோய்விட்டதென்றால், துரிதமாய்ப் புளிக்கவைக்கப்படுவதற்கெனப் புளிப்புச் சேர்க்கப்பட்ட இரசத்தைத் தவிர்த்து, உலர்ந்த திராட்சைகளினால் உண்டாக்கப்பட்டதும் மற்றும் “திராட்சப்பழ ரசத்திற்கு” (fruit of the vine) சமமானதுமானதை, wine/திராட்சரசத்திற்குப் பதிலாகப் பயன்படுத்துவார்கள். நம்மாலும் அதைச் சுலபமாய்ச் செய்ய முடியும். இனிப்புத் தன்மை அதிகமாய்க் காணப்படுகின்றதான சாதாரணமான உலர் திராட்சைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்; அவைகளைக் கொஞ்சம் நீருடன் வேகவைத்தப் பிற்பாடு, வடிக்கட்டி, ரசத்தை மாத்திரம் எடுத்துக்கொள்ளுங்கள். இது உண்மையான “திராட்சரசமாய்” (wine) இருப்பதுபோல, உண்மையில் “திராட்சப்பழரசமாகவும்” (fruit of the vine) காணப்படுகின்றதல்லவா? நமது கர்த்தரும், அப்போஸ்தலர்களும் உலர் திராட்சரசமோ (அ) திராட்சப்பழச்சாற்றையோதான் பயன்படுத்தினார்கள் என்று நாம் வலியுறுத்தாமல், மாறாக உண்மையான திராட்சரசத்தைத்தான் (wine) பயன்படுத்தினார்கள் என்று கூறுகிறவர்களாக இருப்பினும், நம்முடைய சீதோஷண நிலைக் காரணமாகவும், நம்முடைய நாட்களிலுள்ள விரைவான வாழ்க்கை நடைமுறை அழுத்தங்கள் காரணமாகவும், ஆண்கள் மத்தியில் சுயகட்டுப்பாட்டின் விஷயத்திலான பெலவீனம் காரணமாகவும், மாறுபட்ட சூழ்நிலைகள் காரணமாகவும் உண்மையான (wine) திராட்சரசத்திற்குப்பதிலாக உலர் திராட்சரசத்தை, திராட்சப்பழரசமாக (fruit of the vine) நாம் பயன்படுத்துவதைக் கர்த்தர் அங்கீகரிப்பார் என்று நாம் நம்புகின்றோம்.