R1013 – என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R1013 (page 3)

என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்

THIS DO IN REMEMBRANCE OF ME

“பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து… எவ்விதமாய் அப்படிச்செய்யலாமென்று வகைதேடினார்கள். அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார்… வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்ளுங்கள்; தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப் பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார்” (லூக்கா 22:7,2,8-20).

இதுவே கர்த்தருடைய இராப்போஜனமானது நிறுவப்பட்டது குறித்து லூக்கா அவர்களால் பதிவு செய்யப்பட்டதான எளிமையான பதிவாகக் காணப்படுகின்றது; மீண்டுமாக நியமிக்கப்பட்ட வேளை சமீபிக்கையில், “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்ற வார்த்தைகளை நாம் நினைவிற்குக்கொண்டு வருகின்றோம். இந்த வேண்டுகோளுக்கு இணங்கி, நாம் நமது கர்த்தரினால் நிறுவப்பட்டதான எளிமையான ஆசரிப்பைத் திரும்பத்திரும்ப ஆசரிப்பதன் மூலம், நமது பஸ்காவினை மீண்டுமாக நினைவுகூர்ந்து ஆசரிக்கின்றோம்.

வருடம் 1888-இல், மார்ச் மாதம், 26-ஆம் தேதி திங்கள் பிற்பகல், கல்வாரியில் நிகழ்ந்த நமது கர்த்தருடைய மரணத்தின் ஆண்டுநிறைவு நாளாக இருக்கின்றது – யூதரின் முதலாம் மாதத்தில் 14-ஆம் தேதியாய் இருக்கின்றது; யூதர்களுக்கு ஒரு நாள் மாலை, சூரிய அஸ்தமனத்துடன் ஆரம்பமாகுகின்றது. ஆகையால் மார்ச் 25-ஆம் தேதியாகிய, ஞாயிறு மாலையானது, “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவாட்டுக்குட்டியாக,” நிஜமான பஸ்கா ஆட்டுக்குட்டியெனத் தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதலாக, கர்த்தரால் நிறுவப்பட்டதான நமது கர்த்தருடைய இராப்போஜனத்தின் ஆண்டுநிறைவு நாளாய்க் காணப்படுகின்றது.

அந்த ஒரு தருணத்திற்காக, இங்குள்ள சபையார், வழக்கமாய் நாம் கூடுகிற அலிகெனியின் (Allegheny), பெடெரல் தெருவிலுள்ள (Federal Street) மேல்வீட்டறையில், மாலை 7:30 மணிக்குக் கூடிடுவார்கள்; மற்றும் நமது மீட்பரை அன்புகூருகிறவர்களும், நாம் கூடி ஆசரிக்கின்றதான ஈடுபலியினை மதிக்கிறவர்களுமானவர்கள் அனைவரும், நம்மோடுகூடக் கூடிடுவதற்கு நாம் மிகுந்த அன்போடுகூட அழைக்கின்றோம். தொலை தூரத்திலிருந்து வருபவர்களை வரவேற்று உபசரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். எங்களோடுகூட எத்தனை பேர்களால் வந்து கூடமுடியுமோ, வந்து கூடுங்கள். இதனை தொடர்ந்து பல நாட்களுக்கு, அநேகம் கூடுகைகள் ஏற்பாடு பண்ணப்படும்; இதில் யுகங்களுக்கடுத்த திட்டம் தொடர்புடையதான கேள்விகள் கேட்கப்படுவதற்கான நல்வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். அர்ப்பணிக்கப்பட்டவர்கள் அனைவரும் சத்தியத்திற்கு ஊழியக்காரர்களாய் இருக்கின்றபடியால், தங்களைப் பயனுள்ளவர்களாக்கிக் கொள்வதற்குத் தங்களை ஆயத்தம் பண்ணிக்கொள்ளும்படிக்கு, இம்மாதிரியான கூடுகைகள் அருளும் வாய்ப்புகளைப் பயன்படுத்த முடிகிறவர்கள் யாவரும் பயன்படுத்திக்கொள்ளுவது இன்றியமையாததாகும்.

ஆனால் சொற்பமானவர்கள் மாத்திரமே இங்கு வந்துகூடிட முடியும் என்பதை நாம் அறிவோம்; அனைத்து இடங்களிலும் காணப்படுகின்ற கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உண்மையுள்ளவர்கள் அனைவரும், தம்மையே பலிச்செலுத்தினதன் வாயிலாக நம்மை மீட்டுக்கொண்டவராகிய தேவ ஆட்டுக்குட்டியானவரை “நினைவுகூரும்படி இதைச் செய்வார்களாக.” அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றதான இப்படிப்பட்டவர்கள், [R1014 : page 3] விலையேறப்பெற்ற விசுவாசத்தில் ஒத்த நிலையில் இரண்டு (அ) மூன்று பேர் காணப்பட்டாலும்கூட, ஒன்றுகூடிட வேண்டும். தனிமையில் காணப்படுபவர்கள்கூடக் கர்த்தரோடும், மாம்சத்தில் ஆங்காங்கே காணப்படுகின்றதான ஒரே சரீரத்தின் உடன் அங்கத்தினர்களோடும், இருதயத்தினுடைய ஐக்கியத்தில், அப்பத்தைப் பிட்டு, திராட்சரசத்தில் பங்கெடுக்கலாம்.

மற்றக் காரியங்களில் காணப்படுவதுபோலவே, இந்தக் காரியத்திலும் கிறிஸ்தவர்கள் வேதவசனங்களினுடைய உபதேசங்களை விட்டுவிட்டவர்களாகவும், ஆதித் திருச்சபையினுடைய மாதிரியை விட்டுவிட்டவர்களாகவும், இது ஆசரிப்பதற்கான காலம் தொடர்புடைய விஷயத்தில் பல்வேறு வழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களாகவும் காணப்படுகின்றனர். வெகு சிலரே, அதை “இராப்போஜனமாக” ஆசரிக்கின்றனர்; புராட்டஸ்டண்டினர்கள் பொதுவாய் மாலைக்குப்பதிலாக, வசதிக்காக மதிய வேளையைத் தெரிவு செய்துள்ளனர். சிலர் கர்த்தருடைய மரணத்தை ஞாயிறுதோறும் நினைவுகூர்ந்து ஆசரிக்கின்றனர்; சிலர் மாதத்திற்கு ஒருமுறை என்றும், சிலர் மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்றும் ஆசரிக்கின்றனர். இவர்கள் நேரத்தின் விஷயத்திலும், அடிக்கடி ஆசரிக்கும் விஷயத்திலும் அக்கறையற்றவர்களாகக் காணப்படுகின்றனர்; இவர்கள் எண்ணுவது என்னவெனில்: “இதை ஆசரிப்பது நல்லது எனில், ஏன் இதை அடிக்கடி, ஆம் தினந்தோறும் ஆசரிக்கக்கூடாது!” என்பதேயாகும். இதற்கு வேறு சிலர் பதிலளிப்பது என்னவெனில்: இப்படிச் செய்வதினால், அவ்வாசரிப்பானது அதற்குரிய பயபக்தியையும், ஆற்றலையும் இழந்துவிடுமே! என்பதேயாகும். இப்படியாகவே, இப்பொழுது இவர்கள் ஆசரிக்கையில் காணப்படுகின்றது. ஞாயிறுதோறும் ஆசரிப்பவர்கள் அப்போஸ்தலர் 2:42, 46 மற்றும் 20:7, 11-ஆகிய வசன பகுதிகளைத் தவறாய்ப் புரிந்துகொண்டவர்களாய்க் காணப்படுகின்றனர். இவைகளெல்லாம் கர்த்தருடைய இராப்போஜனம் ஆசரிக்கப்பட்ட தருணங்கள் என்று இவர்கள் அனுமானித்துத் தவறு செய்துவிட்டனர். இவ்வசனப்பகுதிகளானது, தொலை தூரங்களிலிருந்து ஆதித் திருச்சபையினர் வாரத்தின் முதல்நாள் தோறும் ஒன்றுகூடுகையில், அவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து எளிமையான உணவை உட்கொண்ட வழக்கத்தையே குறிப்பிடுகின்றதாய் இருக்கின்றது; அதாவது இப்பொழுதும் நாட்டுப்புறங்களில் “அன்பின் விருந்து” என்ற பெயரில் ஒன்றாய்ச் சேர்ந்து புசிக்கும் வழக்கம்போன்ற ஆதித் திருச்சபையினரின் வழக்கமே இவ்வசனப்பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த “அன்பின் விருந்துகளானது” யூதாவினால் (12-ஆம் வசனத்தில்) குறிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இதில் பங்கெடுக்கும் அனைவரும் உண்மையுள்ள சகோதர சகோதரிகள் அல்ல என்றும் நமக்குச் சுட்டிக்காண்பிக்கின்றார். இந்த அன்பின் விருந்துகளானது நமது கர்த்தருடைய (அ) அப்போஸ்தலர்களுடைய எந்தக் கட்டளையின் பேரிலும் ஏற்படுத்தப்படவில்லை; மாறாக வாரத்தின் முதல்நாள் கொண்டாடுவதுபோன்று, இதுவும் நன்றியுள்ள இருதயங்களால் தானாய்ச் செய்யப்பட்ட செயலாகும். இப்படியாக ஆதித் திருச்சபையினர் வாரந்தோறும் நமது கர்த்தருடைய (மரணத்தையல்ல, மாறாக) உயிர்த்தெழுதலைக் கொண்டாடினார்கள் மற்றும் அவர்களது அன்பின் விருந்துகளில் அப்பம் பிட்கப்பட்டதானது, கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பாக, எம்மாவு எனும் கிராமத்திலும், மற்றத் தருணங்களிலும், அவர்களது சாதாரணமான மதிய உணவின்போது, கர்த்தர் அப்பம்பிட்டுத் தம்மைச் சீஷர்களுக்கு வெளிப்படுத்தின காரியத்தின் இனிமையான ஞாபகப்படுத்துதலாய் இருந்தது (லூக்கா 24:29, 30, 42; யோவான் 21:12, 13). இப்படியாக அவர்கள் அவரது உயிர்த்தெழுதலையும், அவரை அறிந்துகொள்ளத்தக்கதாக தங்களது கண்கள் திறக்கப்பட்டதையும் குறித்துக் கொண்டாடினார்கள். (கர்த்தருடைய இராப்போஜனத்தில் அப்பத்தைப்போன்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டதான) திராட்சரசத்தை அவர்கள் (இந்த அன்பின் விருந்துகளில்) பயன்படுத்தவுமில்லை; இந்த விருந்துகளைக் கர்த்தருடைய இராப்போஜனம் என்றும் அவர்கள் அழைக்கவுமில்லை; கர்த்தருடைய இராப்போஜனத்திற்கே உரிய விசேஷித்த பயபக்தியுடன் இந்த விருந்துகளை அனுசரியாமல், மாறாக நன்றியுடனும், சந்தோஷத்துடனும் அவர்கள் அனுசரித்து வந்துள்ளனர். “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணினார்கள்” (அப்போஸ்தலர் 2:46).

மாதத்திற்கு ஒருமுறை அல்லது காலாண்டிற்கு ஒருமுறை, ஞாயிற்றுக்கிழமை மதிய வேளையில் “இராப்போஜனத்தை” ஆசரிப்பவர்கள், “நீங்கள் இதைப் பானம் பண்ணும்போதெல்லாம்” என்ற பரிசுத்த பவுல் அவர்களின் வார்த்தைகளையே, தங்கள் இந்த வழக்கத்திற்குக் கூறுகின்றவர்களாய் இருக்கின்றனர் (1 கொரிந்தியர் 11:23, 25); இவ்வசன வார்த்தைகளானது, அதைத் தாங்கள் விரும்பும்போதெல்லாம் ஆசரிப்பதற்கான சுதந்தரத்தை அளிப்பதாக இவர்கள் எண்ணிக்கொள்கின்றனர். ஆனால் அப்போஸ்தலனோ “போதெல்லாம்” எனும் வார்த்தையை ‘எப்போதெல்லாம்’ எனும் அர்த்தத்தில் பயன்படுத்துகின்றார். “எப்போதெல்லாம் இதைச் செய்கின்றீர்களோ” என்பதானது, எதைப்பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதின் மீது கவனத்தைத் திருப்புகின்றதாய் இருக்கின்றது. இவ்விடத்தில் பவுல், “(நமது கர்த்தர்) தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே” என்று குறிப்பிடுகின்றார் மற்றும் அப்போது, அங்கு நமது கர்த்தரினால் தமக்கான நினைவுகூருதல்களாகவும், யூதர்களால் புசிக்கப்பட்டதான நிழலான பஸ்காவின் இடத்தில் இடம்பெறுகின்றதாகவும் அப்பத்தையும், திராட்சரசத்தையும் நிறுவினார் என்றும் குறிப்பிடுகின்றார். யூத வழக்கத்தையும் மற்றும் அது மீண்டும் மீண்டுமாக எப்போது ஆசரிக்கப்பட்டது என்பதையும் அறிந்தவர்களுக்கே பவுல் இதை எழுதினார்; ஆகையால் “பானம் பண்ணும்போதெல்லாம்” (அ) எப்போதெல்லாம் என்ற வார்த்தையானது இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுநிறைவு நாளைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தது.

நிழலான ஆட்டுக்குட்டியினுடைய இரத்தத்தின் வாயிலாக, இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் அடைந்த நிழலான கடந்துபோகுதலுக்கான வருடாந்தர நினைவுகூருதலை அகற்றுவதற்காகவே கர்த்தருடைய இராப்போஜனமானது திட்டமிடப்பட்டது. இப்படியான ஒரு நிகழ்வானது, நமது கர்த்தரினாலும், அவரது அப்போஸ்தலர்களினாலும், யூதர்கள் அனைவராலும் ஆசரிக்கப்பட்டபடியே, அதன் ஆண்டுநிறைவு நாளில் ஆசரிக்கப்படுவதே ஏற்றதாய் இருக்கும். அவர்கள் வேறு ஏதாகிலும் காலப்பகுதியில் ஆசரிப்பதற்கு எண்ணவே இல்லை; அமெரிக்கர்களும் தங்கள் விடுதலைக்கான அறிக்கையானது கையெழுத்திடப்பட்ட நிகழ்வை, ஜூலை 4- ஆம் தேதியன்று கொண்டாடுவதற்குப்பதிலாக வேறு தேதிகளில் கொண்டாடுவதற்கு எண்ணுவதில்லை.

கர்த்தர் சுட்டிக்காட்டியுள்ளதுபோலவே இராப்போஜனத்தை நம்மைப்போன்று யூதருடைய முதலாம் மாதத்தின் 14-ஆம் தேதியன்று ஆசரிக்கும் வழக்கத்தினை ஆதித்திருச்சபையினர் பெற்றிருந்தனர். ஆதியிலிருந்த தூய்மையான விசுவாசத்தின் விஷயத்தில் மாபெரும் விசுவாச துரோகமானது அப்போஸ்தலர்களின் நாட்களிலேயே ஆரம்பித்தப்போதிலும், மேற்கூறப்பட்டதான இந்த வழக்கமானது, நான்காம் நூற்றாண்டில், நைஸ் குழுவினால் அதிகாரப்பூர்வமாக அழிக்கப்படுவதற்கு முன்புவரை சில கிறிஸ்தவர்களால் தொடர்ந்து கைக்கொள்ளப்பட்டு வந்தது; அதாவது அப்போஸ்தலர்களால் நிகழுமென முன்னறிவிக்கப்பட்டதான மாபெரும் விசுவாச துரோகமானது, பிற்பாடு போப்மார்க்கம் என்று அழைக்கப்பட்டதான மாபெரும் தப்பறையான அமைப்பாகப் பகுதியளவு வளர்ந்து காணப்பட்ட நான்காம் நூற்றாண்டுவரை, இந்த வழக்கமானது சில கிறிஸ்தவர்களால் தொடர்ந்து கைக்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த ஒரு காரியம் குறித்து, மோஷியம் அவர்கள் எழுதின சபை சரித்திரம் (Mosheim’s Church History) எனும் புத்தகத்தின் 523-ஆம் பக்கத்திலிருந்து சிலவற்றை நாம் மேற்கோளிடுகின்றோம்; அவர் கூறுவதாவது: “இந்த (இரண்டாம்) நூற்றாண்டினுடைய முடிவு காலங்களில் ஆசியா மைனரிலுள்ள கிறிஸ்தவர்களுக்கும், மற்றப் பாகங்களிலுள்ள, அதிலும் குறிப்பாய் ரோம சபையிலுள்ள கிறிஸ்தவர்களுக்கும் இடையில் கடுமையான வாதம் உண்டானது… ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் நிறுவப்பட்டதான கர்த்தருடைய இராப்போஜனத்தையும், அடுத்து சம்பவித்த மீட்பருடைய மரணத்தையும் முதல் யூத மாதத்தினுடைய 14-ஆம் தேதியில் நினைவுகூர்ந்து ஆசரிக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர்… இந்த ஒரு வழக்கத்தினை அவர்கள் அப்போஸ்தலர்களாகிய பிலிப்பு மற்றும் யோவான் வழியாய்த் தாங்கள் பெற்றுக்கொண்டதாகக் குறிப்பிட்டனர்.”

ஆனால் அதற்கென்று மீட்பருடைய மரணத்தைப் பொருத்தமற்ற காலங்களில் நினைவுகூர்ந்தவர்கள், இதினிமித்தம் நமது கர்த்தரினால் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள் என்று நாம் போதிப்பதாக எவரும் தவறாய்ப் புரிந்துகொள்ள வேண்டாம். இல்லவே இல்லை, தேவனுக்கு நன்றி, சுவிசேஷசபையானது, எல்லா விஷயங்களிலும் நியாயப்பிரமாணத்தின் கீழ் வைக்கப்படாமல், கிருபையின் கீழ் வைக்கப்பட்டிருக்கின்றது. (பொருத்தமற்ற காலங்களில்) இவ்விதமாய், ஆனால் நமது கர்த்தருடைய சரீரத்திற்கும், இரத்தத்திற்குமான அடையாளங்களில் உண்மையான இருதயத்தில் பங்கெடுத்தவர்கள் சிலவிதங்களில் இழப்பினை அடைபவர்களாக இருப்பினும், அதாவது இவ்வாசரிப்பானது இருதயத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் ஆற்றலானது, அடிக்கடி ஆசரிக்கப்படுவதன் காரணமாகக் குறைந்துபோகின்ற விதத்தில் இழப்பினை அடைபவர்களாக இருப்பினும், அவரே பாவங்களுக்கான பலியாவார் என்று இப்படியாய் அறிக்கைப்பண்ணின இவர்களை அவர் புறக்கணிப்பதில்லை. ஆனால் நமது கர்த்தருடைய வார்த்தைகளின் நோக்கமானது கிரகிக்கப்படும்போது, முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளவர்கள் அனைவரும், அவரது ஏற்பாடுகளானது சிறந்தது மற்றும் மிகவும் ஏற்றது என்றும், யாருக்கு நினைவுகூருதலாய் இருக்கின்றதோ, அவரால் மிகவும் அங்கீகரிக்கப்படும் நிலையில் இருக்கின்றது என்றுமுள்ள உறுதியில் மகிழ்ச்சியுடன் அவரது ஏற்பாடுகளுக்கு இணங்குவார்கள்.

அடையாளங்களானது கருத்தில் எடுக்கப்பட வேண்டும்

ஏற்றவேளை குறித்தக் காரியம் மாத்திரம் கவனிக்க தவறப்படாமல், அடையாளங்களாகிய திராட்சரசம் மற்றும் புளிப்பற்ற அப்பத்தினுடைய உண்மையான அர்த்தம்கூட “இருண்ட யுகங்களினுடைய” ஆவிக்குரிய இருளின் நிமித்தமாகத் தெளிவற்றதாய்க் காணப்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில், புறமதத்தினுடைய தத்துவ ஞானங்களிலிருந்து, கிறிஸ்தவத்திற்குள்ளாகக் கொண்டுவரப்பட்டதான திரித்துவ உபதேசத்தை உடையவர்களின் தப்பறைகளானது, தேவனுடைய பிள்ளைகளுடைய மனங்களைத் திரித்துப்போட்டு, மூடிப்போட்டு, நமது மீட்பர் நமக்கான ஈடுபலி விலைக்கிரயமெனக் கொடுத்திட்டதான பலி குறித்தத் தெளிவான கண்ணோட்டங்களைக் காண தடைப்பண்ணினதாய் இருந்தது.

கிறிஸ்துவையும், வரவிருக்கின்ற விடுதலையையும் முன்னடையாளப்படுத்தின இஸ்ரயேல் ஜனங்களின் நிழலான ஆட்டுக்குட்டியானது, (பாதுகாப்பிற்காக வீட்டின்மீது தெளிக்கப்பட்டதான இரத்தத்தைத் தவிர்த்து) அனைவராலும் புசிக்கப்பட்டது. இப்படியாகவே உண்மையான ஆட்டுக்குட்டிக்கான நினைவுகூருதல் சின்னங்களினுடைய விஷயத்திலுமாகும். அப்பமானது அனைவராலும் புசிக்கப்படும்; திராட்சரசமோ சொற்பமானவர்களால் மாத்திரமே பங்கெடுக்கப்படும். அப்பமும், திராட்சரசமும், நமது கர்த்தருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. நமது கர்த்தர், ஒரு மனிதனாக, உலகத்திற்கு ஜீவன் கொடுக்கத்தக்கதாக, பரலோகத்திலிருந்து இறங்கிவந்த ஜீவனுள்ள அப்பமாவார் (சொல்லர்த்தமாக ஜீவ அப்பமாவார்). அடையாள விளக்கமானது அருமையாய் உள்ளது: மனுக்குலமானது – ஜீவன் இல்லாமையினால் மரித்துக்கொண்டிருக்கின்றது மற்றும் மரணத்தை நிறுத்துவதற்கும், நல்நிலை ஆக்கிடுவதற்கும், ஆதாமில் இழந்துபோனதான ஆதிப் பரிபூரணத்திற்குச் சீர்ப்பொருந்த பண்ணுகிறதற்கும் ஏதுவாக ஜீவன் உண்டாக்கும் தன்மைகளை முழுக்கப்பெற்றுள்ளதான உணவிற்கான தேவையில் காணப்படுகின்றது. மனிதர்கள் சைவ உணவிலும், அசைவ உணவிலும், தாது பொருள்களிலும், வேதியியலிலும், அனைத்துப் பகுதிகளிலும் சஞ்சீவிகளை/அனைத்து நோய்களுக்கான மருந்துகளை, வாழ்நாளை நீட்டிப்பதற்கான மருந்துகளை, ஜீவனைத் திருப்பிக்கொடுக்கிற மருந்துகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்; ஆனால் அனைத்துமே விருதாவாக உள்ளது; இப்படியான எந்த “ஜீவ அப்பமும்” இதுவரையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மனிதர்கள் இப்படியாக விருதாவாய் நான்காயிரம் வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கையில், பரலோகத்திலிருந்து மெய்யான ஜீவ அப்பமானது இறங்கிவந்தது; இதை ஒருவன் புசித்தானானால் (அதைத் தனக்கெனப் பயன்படுத்துவது அவனுக்கான சிலாக்கியமாக இருக்க, அதைத் தனக்கெனச் சொந்தமாக்கிக்கொள்வானானால் அல்லது பங்கெடுப்பானானால்) அவன் என்றென்றும் ஜீவிப்பான். அதாவது அவனது மீட்பிற்காக தேவன் அருளியுள்ள வழிவகை மீதான விசுவாசத்தினால், ஜீவனுக்கான தயவை அவன் ஏற்றுக்கொள்கையில், அதற்கான நிபந்தனையின் அடிப்படையில், ஆம் அவைகளின் அடிப்படையில் மாத்திரம், ஜீவனைப் பெற்றுக்கொள்ளலாம். இதையே நமது கர்த்தர் அடையாள வார்த்தையில் தமது மாம்சத்தைப் புசித்தல் என்று குறிப்பிட்டார்.

அடையாள விளக்கமானது எவ்வளவு முழுமையாய், அருமையாய் உள்ளது என்பதைக் கவனியுங்கள். தேவனுடைய குமாரன், அவர் முதலில் பரலோக (அ) ஆவிக்குரிய ஜீவியாகக் காணப்பட்டபோது, அவர் மனிதனுக்கான அப்பமாகக் காணப்படவில்லை மற்றும் அவர் தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தை அப்பமாகக் கொடுத்திருந்தாரானால், வேறுபட்ட சுபாவமுடையவர்களாகிய (மனித சுபாவமுடையவர்களாகிய) நம்மால் அதை நம்முடையதாக்கிக்கொள்ள முடியாது; அதாவது ஒரு மரத்தினைப் போஷிப்பதும், முழுமைப்படுத்துவதுமான விஷயங்களானது (காற்று, ஈரப்பதம், பூமி/நிலம்), வித்தியாசமான சுபாவத்தின் காரணமாக மனிதனை முழுமைப்படுத்த முடியாததுபோலாகும். மனுஷன் மனுஷீக அல்லது மாம்சீக சுபாவம் உடையவனாவான். ஆகையால் தேவனுடைய ஆவிக்குரிய குமாரன், மரித்துக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஜீவ அப்பத்தைக் கொடுக்கவேண்டுமானால், அந்த அப்பம் ஜீவனளிக்கும் சத்து நிரம்பப் பெற்றுள்ளதான மாம்சமாகக் காணப்பட வேண்டும்.

இதற்கான ஆயத்தத்திற்காகவே தேவனுடைய குமாரன், ஆவியிலிருந்து, மாம்சத்திற்கு மாற்றப்பட்டார். “அவர் மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினபோது” அவர் இவ்வளவாய்த் தம்மைத் தாழ்த்தினவரானார் (யோவான் 1:14). மாம்சமே ஜீவன் கொடுக்கும் அப்பமாகப்போகின்றது; பரலோக அல்லது ஆவிக்குரிய நிலைமையில் காணப்பட்ட அவர் பூமிக்குரியவர் (அ) மனுஷனானதால், மாம்சமானதால், இந்த அப்பமானது பரலோகத்திலிருந்து இறங்கிவந்த அப்பம் என்று, அதாவது ஆவிக்குரிய (அ) பரலோக நிலையிலிருந்து பூமிக்குரிய (அ) மனித சுபாவத்திற்கு இறங்கி வந்த அப்பம் என்று கூறப்படுவது உண்மையே. இதுவே மனுஷன் புசித்தால், மரியாமல் இருக்கப்பண்ணுகிறதான ஜீவ அப்பமாகும் (யோவான் 6:50).

இப்பொழுது நாம் ஜீவ அப்பத்தைக் கண்டுபிடித்துவிட்டோம், ஆனால் அவரை நாம் எவ்வாறு புசிப்பது? ஜீவனுள்ள எதையும் நாம் புசிக்கமுடியாது; நோயின் காரணமாக மரிக்கும் எதுவும்கூட உணவிற்கு ஏற்றதாய் இருக்காது. ஆகையால் ஒருவேளை நமது கர்த்தர் இயற்கையான மரணம்* என்று அழைக்கப்படுகின்றதான மரணத்தை அடைந்தாரானால், இது அவரும், மற்ற மனிதர்களைப்போன்று பாவி என்பதை நிரூபிப்பதாய் இருந்திருக்கும்; ஏனெனில் மரணம் என்பது, பாவத்திற்கான தண்டனையாக இருக்கின்றது; மற்றும் இப்படியாக மரிக்கும் அவரில் பங்கெடுப்பது/ அவரைப் புசிப்பது என்பது, புதிய ஜீவன் எதையும் கொடுக்கிறதாய் இராது. [*உண்மையில் இயல்பான மரணம் என்ற ஒன்று கிடையாது. தேவனுடைய ஏற்பாட்டில் ஜீவன் என்பதுதான் இயல்பான நிலையாகும் மற்றும் இயல்பான ஜீவனுக்கு எதிரான மீறுதல்களின்போதே மரணம் வருகின்றது – மரணம் என்பது கீழ்ப்படியாமைக்கான, பாவத்திற்கான பின்விளைவு (அ) தண்டனையாகும். எனினும் இயல்பான மரணம் எனும் வார்த்தையானது, விழுந்துபோன, ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டுள்ளதான சந்ததி தொடர்பாகப் பயன்படுத்தலாம்; ஏனெனில் இயல்பான மரணம் என்பது பாவத்திற்கான இயல்பான விளைவாகவும், அனைத்து மனித பாவிகளுக்கும் பொதுவானதாகும். ஆகையால் நமது கர்த்தர் பாவம் செய்யாததினால் அவரால் வியாதி முதலானவைகளால் மரிக்க முடியாது; ஒருவேளை அவர் பாவம் செய்வாரானால், அவரது மாம்சமானது ஜீவன் அளிக்கிறதாய் இருக்க முடியாது. அவரது மாம்சமானது நமக்கு ஜீவன் அளிக்கத்தக்கதாக அவர் தமது ஜீவனை நமக்கான மீட்கும்பொருள் விலைக்கிரயமாகக் கொடுக்க விரும்பினாலேயே தவிர, மற்றபடி அவருடைய ஜீவன் எடுக்கப்பட முடியாது.] ஆகையால் [R1014 : page 4] மனிதனாகிய கிறிஸ்து இயேசுவின் பலியின் மூலமாகவே அல்லாமல், நமக்கு இந்த ஜீவனுக்கான உணவை (அ) ஜீவ அப்பத்தை அளிக்கிறதற்கு வேறெந்த வழியும் இல்லை என்று நாம் காண்கின்றோம்; நம்முடைய ஜீவனானது பறிமுதல் பண்ணப்பட்டதுபோல, அவரது ஜீவனும் பறிமுதல் பண்ணப்பட்டதினால், அவர் மரிக்கவில்லை; மாறாக ஆதாமுக்கும், இவர் வாயிலாக ஜீவனை இழந்து [R1015 : page 4] போனவர்களாகிய நம் அனைவருக்கும் என்று அவர் தம்மை ஈடுபலியாக, சரிநிகர்சமான விலையாக, மீட்கும்பொருளாக ஒப்புக்கொடுத்தவரானார். மாம்சத்தில் அவரது ஜீவியமானது, அவரது மாதிரியானது, ஆலோசனையானது, போதனைகளானது, எப்படி இசையினால் (பாட்டினால்) பட்டினிக்கிடந்து இறக்கும் மனிதனை ஜீவனோடு வைக்க முடியாததுபோலவே, ஜீவன் கொடுக்கமுடியாது. நாம் அவரது பரிபூரணமான மாதிரியைக் குறித்து ஆராயலாம் மற்றும் பின்பற்றுவதற்கு முயற்சிக்கலாம், ஆனால் அதனை நம்மால் பூரணமாய்ச் செய்ய முடியாது, ஏனெனில் நாமே மரித்துக்கொண்டிருக்கின்றோம் மற்றும் பலத்தில் குறைவுப்பட்டிருக்கின்றோம். நமக்கு ஜீவன், ஜீவனளிக்கும் உணவு தேவை மற்றும் வேறெந்த விதத்திலும் நாம் பெற்றுக்கொள்ள முடியாத இந்த ஜீவனை நமக்கு அளிக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காகவே, அவர் மாம்சமானார்.

ஆகையால் இக்காரியம்குறித்து அவர் தம் சீஷர்களிடத்தில் பேசிக்கொண்டிருக்கையில், “மனுஷகுமாரன் பாடுகள் பட்டு” என்று கூறினதின் மூலம், அவர்கள் தம்மைப் புசிக்க வேண்டுமானால் ஆட்டுக்குட்டியானது அடிக்கப்படுவது அவசியம் என்று அவர்களுக்குக் கூறினார். அவர் மாம்சத்திலேயே, அவர்களது போதகராகவே தொடர்ந்து காணப்பட்டிருந்திருப்பாரானால், அவர்கள் நிச்சயமாய் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள், ஆனால் ஒருபோதும் ஜீவன் பெற்றிருந்திருக்கமாட்டார்கள். ஆகவேதான் “மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்” என்றும், “நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாய் இருக்கும்; நான் போகாதிருந்தால் (நான் மாம்சத்திலேயே இருந்துவிட்டால், நான் என்னைப் பலியாக ஒப்புக்கொடுத்து, இவ்விதமாய் உங்கள் மீட்பிற்கான பிதாவின் திட்டத்தினை நடந்தேற்றவில்லை என்றால்) தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்” என்றும் கூறினார். தேவனால் புத்திரர்கள் என்று அடையாளம் கண்டுகொள்ளப்படத்தக்கதாகவும், அப்படியானவர்களுக்கு ஜீவன் அருளப்படத்தக்கதாகவும், நீங்கள் ஆக்கினையிலிருந்து தப்பித்து, தேவனால் அங்கீகரிக்கப்படத்தக்கதான மற்றும் தேவனுக்கு இசைவான நிலைக்கு வருவதற்கு என்னுடைய பலியின் மூலமாகவும், என்னில் பங்கெடுப்பதன் மூலமாகவுமே ஒழிய, உங்களுக்கு வேறு வழியில்லை, என்ற விதத்தில் கூறினார்.

ஆகையால் சத்தியத்தை ஜீவ அப்பம் என்று எண்ணிக்கொள்வதும், சத்தியத்தைப் புசிப்பது என்பது நம்மை நீதிமானாக்கும் என்றோ, ஜீவிப்பதற்கான உரிமையைக் கொடுக்கும் என்றோ எண்ணிக்கொள்வதும் தவறாகும். மலைப் பிரசங்கத்தையும், கர்த்தருடைய மற்றச் சொற்பொழிவுகளையும் விசுவாசிப்பது என்பது ஜீவனைக் கொடுக்கும் என்று எண்ணிக்கொள்வதும் தவறாகும். இவைகளெல்லாம் சத்தியங்கள்தான் மற்றும் இவைகள் ஆட்டுக்குட்டியோடு புசிப்பதற்கும், ஆட்டுக்குட்டியினைப் புசித்தப் பிற்பாடும், புசிப்பதற்கு ஏற்றதாய்க் காணப்படும் நல் உணவுகளாகும்; ஆனால் இவை ஆட்டுக்குட்டி இல்லாமல் ஜீரணமாகாது. இதே சத்தியங்களானது அநேகருக்கு ஜீரணமாகாமல் இருந்துள்ளது மற்றும் ஊட்டச்சத்து உணவாய் இருப்பதற்குப்பதிலாக, வாந்தி உண்டாக்குகிறவைகளாகச் செயல்படுகின்றன மற்றும் “அநேகர் கர்த்தருடனேகூட நடவாமல் பின்வாங்கிப் போனார்கள்.” ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்டு, அப்போஸ்தலர்கள் விசுவாசத்தின் வாயிலாக ஜீவனளிக்கும் அந்த உணவில் புசிப்பதற்கு முன்புவரையிலும், பன்னிரண்டு பேரும்கூட, நமது கர்த்தருடைய போதனைகளிலிருந்து குறைவான போஷாக்கையே பெற்றவர்களாய் இருந்தார்கள். பிற்பாடு ஜீவனுடைய பலத்தினாலும், சக்தியினாலும்தான், அவர்களிடத்தில் போதகர் பேசியிருந்ததான அனைத்துக் காரியங்களிலிருந்தும் இனிமையையும், பலத்தையும் அடையமுடிகின்றவர்களாய் இருந்தார்கள். ஆட்டுக்குட்டியைப் புசித்தலானது, அது கொண்டுவந்ததான புதிய ஜீவனானது, அவர்களை மீண்டுமாகத் தேவனுடனான ஐக்கியத்தில் சீர்ப்பொருத்தியது மற்றும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை அவர்கள் பெற்றுக்கொண்டபோது, சத்தியங்களை, ஏற்றக்கால உணவுகளென அவர்களால் உணர்ந்துகொள்ள முடிந்தது மற்றும் பலமடையத்தக்கதாகப் பயன்படுத்த முடிந்தது.

நமது ஆட்டுக்குட்டியானவர் நமக்காக, நம் சார்பிலாக அடிக்கப்பட்டார்; ஏனெனில் அவர், ஜீவன் பெறும்படிக்கு அனைவராலும் புசிக்கப்பட வேண்டிய அப்பமாகக் காணப்படுகின்றார் மற்றும் அவர் தம்மை ஒப்புக்கொடுக்காதது வரையிலும் நம்மால் அவரைப் புசிக்க முடியாது. இப்பொழுது அவர் என்ன கொடுத்தார்? மற்றும் நாம் என்ன புசிக்கின்றோம்? என்பதைப் பார்க்கலாம். அவரது மாம்சமே என்பது நம்முடைய பதிலாகும். ஆனால் அவரது மாம்சம் என்கிறபோது, அதன் அர்த்தமென்ன? “அவர் மாம்சமாக்கப்பட்டார்,” அதாவது மனுஷனானார் என்று மேலே நாம் காண்பித்தோம் (யோவான் 1:14). ஆகையால் அவரது மாம்சத்தைக் கொடுப்பது என்பது, மனிதனாக அப்போது காணப்பட்ட அவரையே கொடுப்பதாகும்.

தேவனுடைய பிரமாணத்தின் கீழ் அவர் பெற்றிருந்ததான மனித உரிமைகள் மற்றும் சிலாக்கியங்களை, நம்முடைய நன்மைக்காக துறந்திட்டார்; அதாவது பிரதிநிதியாகிய ஆதாமுக்குள் உரிமைகளையும், சிலாக்கியங்களையும் இழந்துபோனதின் காரணமாக, உரிமைகளோ (அ) சிலாக்கியங்களோ இல்லாமல் காணப்படும் மனித குடும்பமானது, இந்த உரிமைகள், சிலாக்கியங்கள் மற்றும் சுயாதீனங்களையும் திரும்பப்பெற்றுக்கொள்ளத்தக்கதாக அவர் துறந்திட்டார். ஆதாம் பாவம் செய்து, குமாரத்துவத்திற்குரிய உரிமை மற்றும் சிலாக்கியம் அனைத்தையும் இழந்தபோது, அவரது சந்ததி அனைத்தும் அவருக்குள் காணப்பட்டது; ஆகையால் நாம் அனைவரும் அந்த ஓர் இழப்பில், பங்காளிகளாகக் காணப்படுகின்றோம். ஆகையால் இப்பொழுது முழுமையான மற்றும் போதுமான உரிமைகளானது, புதிய மனிதனாகிய “மனிதனாகிய கிறிஸ்து இயேசுவுக்கு” உரியதாக இருக்கின்றது; பரிபூரணரும், ஆக்கினைக்குட்படாதவருமான இவர், ஆதாம் இழந்துபோனதான மனிதனுக்குரிய கீழ் நிலை உரிமைகளுக்காக, தம்முடைய உயர்நிலை உரிமைகளை மாற்றிக்கொண்டவரானார். இவர் தம்மையே கொடுத்துவிட்டு மற்றும் தாம் பெற்றிருந்ததான அனைத்தையும், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டிருந்ததான சந்ததிக்கான நன்மைக்காகவும், பயன்பாட்டிற்காகவும் ஒப்படைக்கையில், உலகத்தின் ஜீவனுக்காக இவரது மாம்சம் கொடுக்கப்படுகிற காரியமானது, இறந்து கொண்டிருக்கும் மனுஷனிடத்தில் இழந்துபோன சிலாக்கியங்களையும், சுயாதீனங்களையும், ஜீவனையும் திரும்பக்கொடுப்பதைக் குறிக்கின்றதாய் இருக்குமென நாம் காண்கின்றோம் (மத்தேயு 13:44; யோவான் 6:51). ஆகையால் இவரது மாம்சத்தைப் புசிப்பது என்பது, புசிப்பவன் பூரணரும், பாவமில்லாதவருமான “மனிதனாகிய கிறிஸ்து இயேசு” பெற்றிருந்ததான உரிமைகள், சுயாதீனங்கள் மற்றும் ஜீவனைத் தன்னுடைய பயன்பாட்டிற்கெனத் தன்னுடையதாக்கிக்கொள்வதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.

அவர் மரித்தபோது, கொடுத்ததானவைகளானது, நம்முடையதாகவும், ஆதாமின் அனைத்துப் பிள்ளைகளும் இலவசமாய்ப் பெற்றுக்கொள்ளுகிறதாகவும் காணப்படுகின்றது. ஆனால் அது அதைப் புசிப்பவர்களுக்கு மாத்திரமே, அதாவது கிறிஸ்து இயேசுவுக்குள்ளான மீட்பின் வாயிலாக தேவனால் நமக்கு இலவசமாய் அருளப்பட்டதான அந்த உரிமைகளையும், சிலாக்கியங்களையும் விசுவாசத்தினால் தங்களுடையதாக்கிக்கொள்பவர்களுக்கு மாத்திரமே ஜீவன் முதலானவைகளைக் கொடுக்கின்றதாய் இருக்கும்.

ஒரு மனிதன் குஷ்டரோகியானால், அவன் மாத்திரமல்லாமல், அவனுக்குள் இருக்கும் அனைவரும், அதாவது அவனுக்கு இன்னும் பிறக்காத சந்ததி அனைவரும் அதினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இப்படியாகவே ஆதாம் மற்றும் அவரது பிள்ளைகளின் விஷயத்திலும் காணப்படுகின்றது; நாம் “பாவத்தில் பிறந்தவர்களாய்” இருக்கின்றோம் மற்றும் அதன் தண்டனையாகிய மரணத்தின் கீழ், அதாவது நமக்கான இயல்பான பிரமாணமென மரணத்தின் கீழ்க் காணப்படுகின்றோம். குஷ்டரோகத்தினை நிச்சயமாய்க் குணப்படுத்தும் மருந்து (அ) ஜீவ அப்பம் ஒன்று, நன்மை உண்டாகத்தக்கதாக அளிக்கப்படுகின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள், அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, புசிக்கப்பட/சொந்தமாக்கிக்கொள்ளப்பட வேண்டும்; இல்லையேல் குணமடையாது. இப்படியாக கிறிஸ்துவின் விஷயத்திலும், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டு, மரித்துக்கொண்டிருக்கும் பாவியின் விஷயத்திலும்கூடக் காணப்படுகின்றது. அவனுக்கு அவசியமான தன்மைகளை அப்பமானது பெற்றிருப்பது மாத்திரமல்லாமல், அவன் அதை அடையத்தக்கதாகக் காணப்படுவது மாத்திரமல்லாமல், அவன் பாவம் எனும் நோயிலிருந்தும், மரணத்திற்குள்ளாக தீர்க்கும் அதன் சாபத்திலிருந்தும் விடுதலையடைய வேண்டுமெனில், அவன் அதைப் புசிக்க வேண்டும் (அ) விசுவாசத்தினால் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும். குஷ்டரோகியாகப் பிறந்த ஒவ்வொரு பிள்ளையும், தனக்கெனப் புசிப்பது அவசியமாக இருப்பதுபோலவும், குடும்பத்தில் ஒருவர் மருந்தை (அ) ஜீவன் தரும் உணவை உட்கொள்வதன் மூலம், குடும்பத்திலுள்ள அனைவரும் குணமடைவதில்லை என்பதுபோலவும், பாவிகளின் விஷயத்திலும் காணப்படுகின்றது; பாவிகளில் ஒவ்வொருவரும், உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறதான தேவ ஆட்டுக்குட்டியினுடைய, ஜீவன் அளிக்கும் மாம்சத்தினைத் தனக்காகப் புசித்துக்கொள்ள வேண்டும். அது அனைத்து மனிதர்களுக்கானதாகும்; ஆகையால் ஒவ்வொரு பாவியும், அதைப் புசித்து, ஜீவிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றிட வேண்டும் மற்றும் ஜீவனுக்கான இந்த அப்பத்தினைப் புசியாமல், எவரும் குணமடைந்து, ஜீவனுக்குள் (பூரணத்திற்குள்) கொண்டுவரப்பட முடியாது. (அநேகர் இதன் அடையாள சின்னத்தை அறியாமையில் புசித்தாலும்) எவரும் இதை அறியாமையில் புசிக்க முடியாது; புறமதத்தினர் எவரும் இதைப் புசித்து, ஜீவிப்பதற்கான வாய்ப்பினை இதுவரையிலும் பெற்றுக்கொள்ளவுமில்லை மற்றும் இந்த ஒரு சத்தியத்தினைப் பற்றின அறிவிற்குள்ளாக அனைவரும் வரவேண்டும் என்பதினால், இதுவே மாபெரும் ஆயிரவருட நாளில் வரவிருக்கும் நியாயத்தீர்ப்பிற்கான (பரீட்சைக்கான) நிரூபணமாய் இருக்கும்; ஏனெனில் அனைவரும் விரும்பினால், புசித்து என்றென்றும் ஜீவிக்கத்தக்கதாக “இதற்குரிய சாட்சி ஏற்றக்காலங்களில் அனைவருக்கும்” கொடுக்கப்பட வேண்டும் (1 தீமோத்தேயு 2:4-6). இந்த யுகத்தில் சொற்பமானவர்கள் மாத்திரமே சத்தியம் குறித்த குறைவான அறிவிற்குள் வந்திருக்கின்றபடியால், இந்த மாபெரும் விருந்தை உலகத்திற்கு முன்பு வைப்பதற்கான தேவனுடைய “ஏற்றக்காலங்களானது” காலையிலாகும், திரும்பக்கொடுத்தலின் காலங்களிலாகும், கர்த்தரைப்பற்றின அறிவானது பூமியை நிரப்பிக் காணப்படுகின்றதான ஆயிரவருட நாளிலாகும் என்பது உறுதியே (ஆபகூக் 2:14; ஏசாயா 25:6).

ஆயிரவருட யுகத்தின்போதே, மனிதர்கள் கிறிஸ்துவைத் தேவனுடைய ஆட்டுக்குட்டி என்றும், தங்களுக்கான ஈடுபலி விலைக்கிரயம் என்றும் ஏற்றுக்கொள்கையில், சரீர ரீதியிலும், மன ரீதியிலும், ஒழுக்க ரீதியிலுமான அவரது பரிபூரணங்களில் பங்கெடுப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்; மற்றும் இப்படியாக அவர்கள் செய்து, அவரது போதனைகளுக்கு இணங்கும்போது, அவர்கள் படிப்படியாகப் பரிபூரணத்திற்கு, ஆதாமுக்குள் இழந்த அனைத்திற்கும் திரும்பி, அந்த யுகத்தினுடைய முடிவில் முழுமையான பூரணத்தை அடைவார்கள் (அ) அடையவில்லையெனில் துணிகரமான கீழ்ப்படியாமையின் நிமித்தமாக, எந்தக் குணமாகுதலோ, எந்த ஜீவ அப்பமோ, எந்த மருந்தோ பெற்றிராத இரண்டாம் மரணத்திற்குள் முற்றும், முழுமையாக ஜீவனிலிருந்து அறுப்புண்டு போவார்கள்.

இப்பொழுது இந்த ஜீவ அப்பத்தைப் பெற்றுக்கொண்டு, அதைப் புசிப்பவர்களாகிய (அ) தங்களுடையதாக்கிக்கொள்பவர்களாகிய, சபையாகிய நாம் பரிபூரணத்திற்கு நேராக நமது மனித ஆற்றல்கள் படிப்படியாகச் சீர்ப்பொருந்தப் படுவதையோ, மனித உரிமைகள் மற்றும் சிலாக்கியங்கள் முதலானவைகளுக்கு நாம் சீர்ப்பொருந்தப்படுவதையோ அனுபவிப்பதில்லை. நம்முடைய நிலையானது, எண்ணப்பட்ட நிலையே ஒழிய, உண்மையான நிலையல்ல. விசுவாசத்தினால் மாத்திரமே நமது மீட்பருடைய மாம்சத்தை நம்மால் புசிக்க முடியும் மற்றும் புசிக்கின்றோம்; (தரிசித்து இல்லாமல்) விசுவாசத்தினாலேயே நமது கர்த்தரினால் ஏறெடுக்கப்பட்ட பலியின் மூலமான மனித உரிமைகளையும், சுயாதீனங்களையும், ஜீவனையும் ஏற்றுக்கொள்கின்றோம். அடுத்த யுகத்தில் ஜீவிக்கும் மனுக்குலமானது, தங்கள் விசுவாசத்திற்கு உதவியாகத் தரிசித்தலைப் பெற்றிருப்பார்கள்; ஏனெனில் அவர்கள் விசுவாசத்தின் மற்றும் கீழ்ப்படிதலின் படிகளை எடுத்து வைக்கையில், படிப்படியாக தங்கள் சரீரத்தில் சீர்த்திருந்துதலை உணர்ந்துகொள்வார்கள். ஆனால் இப்பொழுது எவரும் தரிசித்து நடக்க முடியாது; ஆகையால்தான் வரவிருக்கும் யுகத்தில் இராஜரிகத்திலும், ஆசாரியத்துவத்திலும் கிறிஸ்துவோடுகூட மணவாட்டியாகவும் உடன்சுதந்தரர்களாகவும் காணப்படத்தக்கதாக இப்பொழுது உலகத்திலிருந்து தெரிந்தெடுக்கப்படுகின்றதான “சிறுமந்தையினர்,” சொற்பமானவர்களாகவும், மிகவும் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆட்டுக்குட்டியினைப் புசிப்பதற்கு, அவரது தூய்மையையும், அவரது பரிபூரணத்தையும், அவரது கறையற்ற தன்மையையும், மனிதனுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டதான தேவதயவுகள் அனைத்திற்குமான அவரது உரிமையையும்குறித்து நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இன்னுமாக மனித உரிமைகள் மற்றும் சிலாக்கியங்கள் எனும் ஆசீர்வாதங்களானது – விழுந்துபோன மற்றும் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டுள்ளதான சந்ததிக்குத் திரும்பக்கொடுக்கப்படத்தக்கதாகவும், இப்படியாக ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட சிருஷ்டிகளுக்குத் தேவன் அருளாத நிலைகளுக்கு, அதாவது தேவனுடன் ஐக்கியம் கொள்ளும் நிலைக்கு, தேவனால் அங்கீகரிக்கப்படும் நிலைக்கு அனைவரும் வந்திடுவதற்கு அனுமதிக்கப்படத்தக்கதாகவும், அவர் இந்த மனித உரிமைகளையும், சிலாக்கியங்களையும் பலிச்செலுத்தியுள்ளார், ஒப்புக்கொடுத்துள்ளார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.

அனைவருக்கும் பொதுவாய் விருந்தானது பரிமாறப்படப் போகின்றதான பொதுவான காலத்திற்கு முன்னதாக, ஏன் இப்படியாகச் சிலர் அவரது மாம்சத்தைப் (அவரது மனித பரிபூரணங்கள், உரிமைகள், முதலானவைகளை புசிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும்? ஆ! இங்கு ஒரு மிகவும் விலையேறப்பெற்றதான சத்தியம் காணப்படுகின்றது; இங்குக் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக நமக்குப் பாராட்டப்பட்டுள்ளதான “அவருடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியமானது” உலகத்தின் பார்வைக்கு மறைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அதை இப்பொழுது பார்க்கலாம்.

திராட்சரசத்தினால் அடையாளப்படுத்தப்பட்டதான இரத்தமானது, மரணத்தைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; “இரத்தம் ஏதோ ஒன்றின் – உயிர்” ஆகும்; ஆகையால் இரத்தம் சிந்தப்படுவது என்பது அல்லது சிருஷ்டியினின்று எடுக்கப்படுவது என்பது சிருஷ்டியினுடைய மரணத்தைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஆகையால் கிறிஸ்துவினுடைய சிந்தப்பட்ட இரத்தமானது, கிறிஸ்துவினுடைய மரணத்தைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; அதாவது உலகத்தின் பாவங்களுக்கு ஜீவன் கொடுக்கப்பட்டதாய் இருக்கின்றது. நிழலான பஸ்காவில் ஆட்டுக்குட்டியானது புசிக்கப்பட்டது, ஆனால் இரத்தம் புசிக்கப்படவில்லை. இரத்தத்தைப் புசிப்பதற்கு எந்த இஸ்ரயேலனும் அனுமதிக்கப்படவில்லை. இக்காரியமானது எப்படி அனைவரும் மனுஷக்குமாரனுடைய மாம்சத்தைப் புசிப்பார்கள், ஆனாலும், அனைவருமே அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ண (அ) அவரது மரணத்தில் பங்கெடுக்கக்கூடாது என்பதற்கு அடையாளமாய் இருக்கின்றது. நமது கர்த்தர் தமது இரத்தத்திற்கு அடையாளமான திராட்சரசத்தை யாருக்குக் கொடுத்தாரோ, அவர்களே அவரது மரணத்தில் பங்கெடுப்பதற்கும், பங்கடைவதற்கும் அழைக்கப்பட்டனர் மற்றும் இது ஏற்றதுமாகும்; ஏனெனில் அவர்கள் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களாக இருக்கப்போகின்றனர் மற்றும் ஒவ்வொரு மனுஷனுக்காகவும் தலை மரணத்தை ருசிப்பார்க்க வேண்டியது மாத்திரமல்லாமல், அவரது சரீரமாகிய நாமும்கூட “அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,” “அவருடனேகூட மரிக்க” வேண்டும் (பிலிப்பியர் 3:10; ரோமர் 6:8). ஆகவே “பாத்திரம்” என்பது மரணத்திற்கான அடையாளமாய் இருக்கின்றது; இதை நாம் அறிந்த நிலையில், இதில் நாம் பங்கெடுக்கையில், நாம் நமது கர்த்தரும், மீட்பருமானவருக்கான ஊழியத்தில் நமது ஜீவியங்களை மரணம் வரையிலுமாக ஒப்புக்கொடுப்பவர்களாய் இருப்போம். திரும்பக்கொடுத்தலுக்கும், நித்தியமான ஜீவனுக்கும் நாம் பாத்திரவான்களா (அ) இல்லையா என்பது, அவரது மாம்சத்தை நாம் புசிக்கும் (ஏற்றுக்கொள்ளும் மற்றும் சொந்தமாக்கிக்கொள்ளும்) விஷயத்தைச் சார்ந்திருக்கின்றது; ஆனால் அவரது சரீரத்தின் அங்கத்தினர்களாக, அவரது மணவாட்டியாக, உடன்சுதந்தரர்களாக நாம் அங்கீகரிக்கப்படுவோமா (அ) இல்லையா என்பது, தற்கால யுகத்தில், விசுவாசத்தினால் அவரது மாம்சத்தை நாம் புசித்தப் பிற்பாடு, நாம் அவரது “பாத்திரத்தில்” பானம்பண்ணி, மரணம்வரையிலுமாக, அவரது சேவைக்கென்று நம்மையே முற்றிலும் அர்ப்பணிக்கும் விஷயத்தைச் சார்ந்திருக்கின்றது.

இது உண்மையானால், அப்பம் புசித்தப்பிற்பாடு, திராட்சரசம் கொடுக்கப்படும் காரியமும், அப்பத்தைப் புசித்தவர்களுக்கு மாத்திரமே இரசம் கொடுக்கப்படும் காரியமும் எவ்வளவு பொருத்தமானதாய் இருக்கின்றது. இக்காரியமானது அனைத்து வேதவாக்கியங்களுக்கு இசைவாகப் போதிப்பது என்னவெனில்: (மற்றவர்கள் அல்ல, மாறாக) தேவ ஆட்டுக்குட்டியானவருடைய பலியிலும், புண்ணியத்திலுமுள்ள விசுவாசத்தினால், பாவங்கள் அனைத்திலிருந்தும் நீதிமானாக்கப்பட்டவர்கள் மாத்திரமே, தங்கள் (நீதிமானாக்கப்பட்ட) மனுஷீகத்தைச் சிலுவையில் அறைந்திடுவதற்கும், இந்த யுகத்தில் கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் பங்கடைவதற்கும், பின்தொடரும் ஆயிரவருட யுகத்திலும், நித்திய காலமும் [R1016 : page 4] அவரது மகிமையில் பங்கடைவதற்கும் அழைக்கப்படுகின்றனர் என்பதாகும்.

அவரது மாம்சத்தைப் புசிக்கிறவர்கள் (அவரது புண்ணியங்களைத் தங்களுடையதாக்கிக்கொள்பவர்கள் – நீதிமானாக்கப்பட்டவர்கள்) மற்றும் அவரது இரத்தத்தைப் பானம்பண்ணுபவர்கள் (தங்கள் நீதிமானாக்கப்பட்ட மனுஷீகத்தை அவரது சேவையில் பலியாகக் கொடுப்பதன் வாயிலாக, அவரது பலியில் அவரோடுகூடப் பங்கெடுப்பவர்கள்) மாத்திரமே “கிறிஸ்துவினுடைய ஒரே சரீரத்தின்” அங்கத்தினர்களென, “மெய்யான திராட்சச்செடியின்” அங்கத்தினர்களென, அவரில் நிலைத்திருப்பார்கள் (யோவான் 6:56). இப்படியானவர்கள் மாத்திரமே (வசனம் – 53) தன்னில்தானே ஜீவனுடையவர்களாய் ஆகமுடியும்; அதாவது எதையும் சார்ந்திராத ஜீவனை, அழியாமையைப் பெற்றுக்கொள்ள முடியும் (மிலேனியல் டாண், தொகுதி – 1, அத்தியாயம் – 10 பார்க்கவும்).

மீதமான மனுக்குலத்தார் “மனிதனாகிய கிறிஸ்து இயேசுவினால்” பலிச் செலுத்தப்பட்ட உரிமைகளைப் புசிப்பதன் மூலம் (சொந்தமாக்கிக்கொள்வதன் மூலம்) சார்ந்திருக்கும் ஜீவனை அடைவார்கள்; இது விருப்பமுள்ளவர்களுக்கும், கீழ்ப்படிதலுள்ளவர்களுக்கும் நித்திய காலமும் அருளப்படும்.

இவர்கள் அனைவரும் முதலாவதாகக் கர்த்தரைப்பற்றியும், அவர் செலுத்தின பலிபற்றியும், அது அளித்ததான நீதிமானாக்கப்படுதலையும், திரும்பக்கொடுத்தலையும் பற்றியுமான அறிவிற்குள்ளாகக் கொண்டுவரப்பட வேண்டும் மற்றும் பின்னர் அதில் இலவசமாய்ப் பங்கெடுத்து, ஜீவிக்கலாம். இப்படியானவர்களைக்குறித்து (“பாத்திரத்தில்” பங்கெடுக்காமல்) “இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான்” என்றும், “என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்,” அதாவது ஜீவன் அளிப்பவராகிய கிறிஸ்துவைச் சார்ந்துள்ளவர்கள் அனைவருக்கும் – சார்ந்திருக்கும் ஜீவன் அருளப்படும் என்றும் எழுதப்பட்டுள்ளது. வித்தியாசம் என்னவெனில் இப்பொழுது தெரிந்தெடுக்கப்படுகின்றதான சுவிசேஷசபையானது, கிறிஸ்துவின் சரீரமானது, தலையானவரோடுகூட அழியாமையை உடையவர்களாய் இருப்பார்கள்; தன்னில்தானே ஜீவனுடையவர்களாய் இருப்பார்கள் மற்றும் உலகத்திற்கு ஜீவன் கொடுக்கிற ஆதாரமாய் இருப்பார்கள்; உலகமானது இந்த ஊற்றண்டைக்கு ஜீவனுக்காக வந்து, இதனால் ஜீவிப்பவர்களாய் இருப்பார்கள்.

“இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்” என்ற அப்போஸ்தலனின் வார்த்தைகளையும் நாம் கவனிக்கின்றோம் (1 கொரிந்தியர் 11:27, 29). இதன் அர்த்தம் என்னவெனில், கிறிஸ்துவின் பலியானது தங்களுடைய பாவங்களுக்கானது என்று அடையாளங்கண்டுகொள்ள தவறும் அனைவரும், இந்த அடையாளங்களைப் புசிப்பது என்பது, “இவரது இரத்தப்பழியானது எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக” என்று யூதர்கள் சத்தமிட்டப்போது, பழிக்கு ஆளானதுபோல, இவர்களும் அவரைக் கொன்றவர்கள் என்ற பழிக்கு ஆளானவர்களாய் இருப்பார்கள். யூதர்கள் தங்களைக் குற்றமில்லாத இரத்த (மரணத்திற்கான) பழிக்குள்ளாக்கினதுபோன்று, இப்பொழுது கர்த்தருடைய சரீரமும், இரத்தமும் தங்களுக்கான ஈடுபலியென்று நிதானித்தறியாமல், அடையாளங்களைப் புசிப்பவர்களும், அவரது இரத்தம் எங்கள்மேல் இருப்பதாக என்றும் சொல்லுகிறவர்களாய் இருப்பார்கள். கர்த்தருடைய சரீரமும், இரத்தமும் தங்களுக்கான ஈடுபலி என்று அடையாளம் கண்டுகொள்ளாதவர்கள் அனைவருக்கும், இதில் பங்கெடுப்பது என்பது, அவரது சரீரத்தைப் பிட்டதிலும், அவரது இரத்தத்தைச் சிந்தினதிலுமான குற்றத்தில் பங்குள்ளவர்களாக தீர்க்கப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும்; இது இவர்களுக்கு மன்னிப்பை – பாவங்களுக்கான மன்னிப்பையும் பேசாது.

பொதுவான (ஆங்கில) மொழியாக்கமானது condemnation என்று மொழிப்பெயர்ப்பதற்குப் பதிலாக, damnation என்று சரியற்ற மொழிப்பெயர்ப்பைக் கொடுத்துள்ளது. இதை அபாத்திரமாய், அறியாமையில் செய்யும் திரளான ஜனங்களுக்கு, அதாவது அடையாளங்களினுடைய அர்த்தத்தினைச் சரியாய் அடையாளம் கண்டுகொள்ளாமலும், அவ்வடையாளங்களானது குறிக்கின்றதான கர்த்தருடைய மரணத்தின் முக்கியத்துவத்தைச் சரியாய் அடையாளங்கண்டு கொள்ளாமலும், இதை அபாத்திரமாய் அறியாமையில் செய்யும் ஜனங்களுக்கு உண்மையான எந்த இரத்தப்பழியும் இல்லை, மாறாக அடையாள பழியே உள்ளது. அடையாளமாக இவர்கள் கர்த்தருடைய சரீரத்தைப்பிட்டு, அவரது இரத்தத்தினைத் தங்கள்மேல் எடுத்துக்கொள்கின்றார்கள். அடையாளமானது சரியாய்ப் புரிந்துகொள்ளப்படுகையில், அது சமாதானத்தையும், பாவங்களுக்கான மன்னிப்பையும், ஆட்டுக்குட்டியுடன் ஐக்கியத்தையும் பேசுகின்றாய் இருக்கும்; ஆனால் புரிந்துகொள்ளப்படவில்லையெனில் அது நியாயப்பிரமாணத்தின் கீழ், கொலைக்கான அடையாளமான ஒப்புக்கொள்ளுதலாக அர்த்தமாகிவிடும். ஆனால் இவை அனைத்தும் அடையாளமாய் இருப்பதினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவதும், அடையாளமான ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுதலாகவே இருக்கும். உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிறதான தேவனுடைய ஆட்டுக்குட்டியினால் கொடுக்கப்பட்டதான ஈடுபலி குறித்த அறிவிற்குள் முதலாவது வருபவர்கள் மாத்திரமே, இந்த அடையாளத்தை அபாத்திரமாய்ப் பயன்படுத்துகிறவர்களுக்கு வருகிறதான உண்மையான ஆக்கினைக்குள்ளான தீர்க்கப்படுதலுக்குள் உண்மையாய் வரமுடியும்.

அவர் நிமித்தமாக, பாடுகள் மற்றும் மரணம் எனும் பாத்திரத்தில் பானம் பண்ணுதலானது, பலிச் செலுத்துதலானது, அனைத்துமே தற்கால யுகத்திலேயே செய்து முடிக்கப்பட வேண்டும். மகிமையின் யுகமானது ஆரம்பமாகும்போது, கிறிஸ்துவின் பாடுகள் அனைத்தும், அதாவது தலை மற்றும் அவரது சரீரத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினருடைய பாடுகள் அனைத்தும் முடிந்துபோனதாய்க் காணப்படும். தீர்க்கத்தரிசிகள் கிறிஸ்துவின் பாடுகள்குறித்தும், பின்வரும் மகிமைகுறித்தும் பேசியுள்ளபோது, அவர்கள் சிறிய மற்றும் கடைநிலை அங்கத்தினன் அனைவரையும் உள்ளடக்கின முழுக் கிறிஸ்துவைக்குறித்தே பேசியுள்ளனர் (1 பேதுரு 1:11). மகிமை வரும்போது, இரத்தத்தைப் பானம்பண்ணுதலும், கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரர்களென அந்தப் “பரம அழைப்பில்” பங்கடைவதற்கான வாய்ப்பு அனைத்தும் முடிவடைந்துவிடும். அப்போது முழுக் கிறிஸ்துவுக்குத் தலையான நமது கர்த்தரும், அங்கத்தினர்கள் ஒவ்வொருவரும் பிட்கப்பட்டு, பலிச்செலுத்தப்பட்டவர்களாய்க் காணப்படுவார்கள் மற்றும் உலகத்தின் ஜனங்களைப் போஷித்தலானது உண்மையில் ஆரம்பமாகும். திரும்பக்கொடுத்தலானது, அப்போது மனுக்குலத்தினால் உணர்ந்துகொள்ள ஆரம்பிக்கப்படும். இதை நாம் இப்பொழுது விசுவாசத்தினால் தரிப்பிக்கப் பெற்றிருக்கின்றோம், அதாவது பலிச்செலுத்தக்கூடிய இந்த ஒரு காலப்பகுதியில் நாம் பலிச்செலுத்தத்தக்கதாகத் தரிப்பிக்கப்பெற்றிருக்கின்றோம்; ஏனெனில் ஒப்புக்கொடுப்பதற்கு ஜீவனே இல்லாதபோது, ஜீவனுக்கான உரிமை இல்லாதபோது, எவராலும் கிறிஸ்துவுடனே தன்னைப் பலியாக ஒப்புக்கொடுத்திட முடியாது. ஆகையால் சரீரம் நிறைவடைந்து பலிச்செலுத்துதல் முடிவடைகையில் வெளிப்படும் மகிமையில் நாமும் உடன் சுதந்தரர்களாகக் காணப்படத்தக்கதாக, கிறிஸ்துவுடன் உடன் பலிச் செலுத்துபவர்களாகுவதற்கும், அவரது பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்குமான அழைப்பாகிய “பரம அழைப்பை” நாம் பெற்றுக் கொள்ளத்தக்கதாக, முதலாவது விசுவாசத்தினால் கிறிஸ்துவின் புண்ணியங்களில் பங்கெடுப்பதற்கும், விசுவாசத்தின் மூலம் பிதாவை அணுகுவதற்கும், பிரியமான வருக்குள் அங்கீகரிக்கப்படுவதற்கும் நமக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் அர்ப்பணிக்கப்பட்டவர்களுக்கு அடையாளங்களானது (அப்பம் மற்றும் திராட்சரசமானது) கர்த்தருடைய பலிக்கான நினைவுகூருதல்களாக மாத்திரம் காணப்படாமல், அவருடன் பலிச் செலுத்துவதற்கான தங்களது உடன்படிக்கைக்கும் மற்றும் தாங்கள் நிபந்தனைகளை நிறைவேற்றி, திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகுவதற்கும், நமது கர்த்தரும், மீட்பரானவருடன் உடன் சுதந்தரர்களாகக் காணப்படுவதற்கும், ஜனங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பதில் அவருடன் உடன் வேலையாட்களாகக் காணப்படுவதற்கும் பாத்திரவான்களாகுவதற்கான காரியங்களுக்கும்கூட நினைவுகூருதல்களாகக் காணப்படுகின்றது.

நினைவுகூருதலின் இந்த அம்சத்தைப் பின்வரும் வார்த்தைகளைக்கூறி பவுல் நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறார்: “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய (அபிஷேகிக்கப்பட்ட வகுப்பார் அனைவருடைய) இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் (நமது கர்த்தரைத் தலையாகப் பெற்றிருக்கும் “சிறுமந்தையாகிய,” சபையின்) ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிற படியால், அநேகரான (அங்கத்தினர்களான) நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்” (1 கொரிந்தியர் 10:16,17).

இந்த யுகத்தில் விசுவாசத்தின் மூலமாக (அ) அடுத்த யுகத்தில் நிஜமாகவே அனைவரும் நமது கர்த்தர் இயேசுவின் மாம்சத்தைப் புசிக்க வேண்டும்; அதாவது அவரது பலியினால் அனைவருக்கும் பெற்றுத்தரப்பட்டதான அந்த மனுஷீக உரிமைகள் மற்றும் சிலாக்கியங்களில் பங்கெடுக்க வேண்டும்; இல்லையேல் ஒன்றில் இப்பொழுது பலிச்செலுத்துவதற்கு (அ) ஒன்றில் (பலிச்செலுத்தும் சிலாக்கியம் இல்லாமல் அடுத்த யுகத்தில்) அதை அனுபவிப்பதற்கு என்று ஜீவிப்பதற்கான உரிமைகள் ஏதும் இருக்காது. ஆகையால் “இதைச் செய்வதற்கும்,” நிதானித்து, அறிந்து செய்வதற்கும் என்று நாம் விசுவாசிகள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம். அடையாளத்தைப் பயன்படுத்துகையில், அனைத்துப் பாவங்களிலிருந்துமான நீதிமானாக்கப்படுதலையும், வேறு எந்த நாமத்தின் மூலமாகவோ, வழியின் மூலமாகவோ இல்லாமல், தேவனுடைய ஆட்டுக்குட்டியின் வாயிலாக தேவன் நீட்டுகின்றதான ஜீவிப்பதற்குரிய உரிமையையும் முழுமையாய் ஏற்றுக்கொள்ளுங்கள் சொந்தமாக்கிக்கொள்ளுங்கள், பயன்படுத்திக்கொள்ளுங்கள். விசேஷமாக கிறிஸ்துவோடுகூட அவரது மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவர்களும் மற்றும் இப்படியாய் அவரது “சரீரத்தின்” அங்கத்தினர்களுக்குள், வந்தவர்களுமாகிய விசுவாசிகள் அனைவரும், அவரது இரத்தத்தின் மூலமான நீதிமானாக்கப்படுதலை நினைவுகூர்ந்து, அவரோடுகூட மரிப்பதற்கான தங்களது உடன்படிக்கையினைப் புதிய, திவ்விய சுபாவத்தின் பங்காளிகளெனப் புதுப்பித்துக்கொண்டு, “இதை ஆசரிப்பார்களாக” (ரோமர் 6:3,4).

ஒரே சரீரத்தின் உடன் அங்கத்தினர்கள் என்று உங்களால் அடையாளங் கண்டுகொள்ள முடிகிறவர்களுடன் கூடிக்கொள்ளுங்கள்; ஈடுபலியில் விசுவாச மற்றவரைத் தவிர்த்துவிடுங்கள். முன்கூட்டியே கூட்டத்திற்கான ஆயத்தங்களைச் செய்துகொள்ளுங்கள். உங்களில் யார் அடையாளச் சின்னங்களைப் பரிமாறுகின்றார்கள் என்பது முக்கியமல்ல; முதலாம் ஆசரிப்பில் யூதாஸ்கூட உதவியிருந்திருக்கலாம். “நீங்கள் எல்லாரும் சகோதரராய் இருக்கிறீர்கள்” என்பதையும், உங்களது வாய்ப்பிற்கேற்ப, திறமைக்கேற்ப, எந்தக் காரியத்திலும் ஒருவருக்கொருவர் பணிவிடை புரிந்திடுவதற்கான சிலாக்கியம் உடையவர்களாய் இருக்கின்றீர்கள் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள். கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்; ஆனால் போலியான தன்னடக்கத்தைப்பார்த்து, உங்கள் மத்தியிலான கோதுமையைக்காட்டிலும் களையைத் கனத்திற்குரியவர்களாக எண்ணாதிருங்கள்.

நமது கர்த்தர் இயேசுவினுடைய கிருபையானது, உங்கள் அனைவரோடும் இருப்பதாக. அந்தத் தருணமானது மிகுந்த ஆசீர்வாதங்களில் ஒன்றாகவும், மிகுந்த நன்மை பயப்பவைகளில் ஒன்றாக இருப்பதாக.