R4167 – நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R4167 (page 139)

நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்

OUR LORD BETRAYED AND DENIED

யோவான் 18:1-27

“இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார்.” மத்தேயு 17:22

இன்றைய பாடமானது சரித்திரத்திலேயே துயரம் மிகுந்த அதிகாரங்களெனக் காணப்படுபவைகளில் ஒன்றைப்பற்றினதாகும். இப்பாடமானது, மனிதனுடைய நன்றியற்ற தன்மை, சுயநலம், பெலவீனம், பயம் ஆகியவற்றின் ஆழத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் நமக்கு வெளிப்படுத்துகின்றதாக இருக்கும். எனினும் இப்பாடத்தை ஏற்றுக்கொள்வதற்குரிய சரியான இருதயத்தின் நிலைமையில் காணப்படுபவர்களுக்கு இது மிகவும் உதவிகரமாய் இருக்கும். காரணம் இப்பாடமானது ஏறக்குறைய அனைவருக்கும் பொதுவாய் இருக்கும் பெலவீனங்களுக்கு எதிராகவும், அனைவரும் ஆளாகக்கூடிய ஆபத்துக்களுக்கு எதிராகவும் எச்சரிக்கின்றதாயும் இருக்கின்றது. நமது கர்த்தர் தம்முடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்குக் கூறினதும், தம்முடைய பின்னடியார்கள் அனைவருக்குங்கூடப் பொருந்துகின்றதாய்க் கூறினதுமான வார்த்தைகளாகிய, “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்” என்பதையே இப்பாடமானது முக்கியத்துவப்படுத்துகின்றது. இன்னுமாக அப்போஸ்தலர் பேதுருவின் அனுபவம் மற்றும் அவரைக் கையாண்ட விதத்தில் வெளிப்பட்ட கர்த்தருடைய பெருந்தன்மை தொடர்புடைய விஷயத்திலும்கூட இப்பாடமானது, விவேகமற்றுச் சரியானப் பாதையைவிட்டு அலைந்து திரியும் பேதுருவைப் போன்றவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கின்றதாய் இருக்கின்றது.

இப்பாடத்தை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், பஸ்கா போஜனத்தைப் புசிக்கும்படிக்கு கர்த்தரும், அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட பன்னிரண்டு பேரும் ஒன்று கூடியிருந்த சாயங்கால வேளைக்கு முன்பான வேளைகளுக்கு நாம் செல்ல வேண்டும். மூன்று வருடங்களாக நமது கர்த்தர் இந்தப் பன்னிரண்டு மனுஷர்களைப் பயிற்றுவித்து, இவர்கள் உலகில் தம்முடைய பிரதிநிதிகளாகவும், சபைக்கான தம்முடைய வாயாகவும் இருக்கத்தக்கதாக இவர்களை ஆயத்தம் பண்ணிக்கொண்டும் இருந்தார். இவர்கள் அவருடைய வல்லமையைக் கண்டிருக்கின்றனர். அவருடைய போதனைகளை அறிந்திருக்கின்றனர் மற்றும் இவர்களுங்கூடத் தங்கள் மூலமாய்ச் செயல்படும், அவருடைய வல்லமையைச் சொஸ்தப்படுத்துவதற்கும், பிசாசுகளைத் துரத்துவதற்கும் செயல்படுத்தியிருக்கின்றனர். தாழ்மை அவசியம் என்பதை இவர்களுக்குப் போதித்திட விழிப்புள்ளவராக இருந்தார். தம்மோடுகூடப் பங்கடையும்படிக்கு இவர்கள் அழைக்கப்பட்டுள்ள இராஜ்யத்திற்கு இவர்கள் தகுதியுள்ளவர்கள் ஆகும்பொருட்டு, இவர்கள் சிறுபிள்ளைகளென, எளிமையானவர்களாயும், நேர்மையுள்ளவர்களாயும் கீழ்ப்படிதல் உள்ளவர்களாயும் மாற வேண்டியதன் அவசியத்தைப் போதித்திட கர்த்தர் விழிப்புள்ளவராக இருந்தார். இவர்கள் மத்தியில் போட்டிமனப்பான்மை மற்றும் அதிகாரத்தின் ஆவி இருப்பதை உணர்ந்துள்ள கர்த்தர், தாழ்மை மற்றும் சாந்தத்தின் அவசியம் குறித்து இவர்களுடைய கவனத்திற்குக்கொண்டுவருவதற்குரிய கடமையில் அநேக சந்தர்ப்பங்களில் காணப்பட்டார். மாம்சத்தில் இவர்களோடு அவர் செலவழிக்க இருந்த அந்தக் கடைசியான சாயங்கால வேளையில் அனைவரும் பஸ்கா போஜனத்திற்கெனக்கூடியிருக்க, இவர்கள் அக்காலக்கட்டத்தில் காணப்பட்ட விருந்தோம்பல் வழக்கத்தை ஒருவருக்கொருவர் செய்யாமல் விட்டுவிட்டதோடு, தங்கள் கர்த்தருக்கு, தங்கள் தலைவருக்கு, தங்கள் போதகருக்கு, மேசியாவென்றும், தேவனுடைய விசேஷித்த குமாரன் என்றும் அவரை விசுவாசிப்பதாக தாங்கள் அறிக்கைப் பண்ணினவருக்கும்கூட, அதைச் செய்யாமல் இவர்கள் விட்டுவிட்டதைக் கர்த்தர் வருத்தத்துடன் கவனித்தார். இவர்கள் ஒருவருக்கொருவரின் பாதங்களையும் மற்றும் அவருடைய பாதங்களையும் கழுவும் வழக்கத்தைச் செய்யாமல் விட்டுவிட்டனர். இந்த வழக்கமானது, காலணிகளுக்குப் (shoes) பதிலாகப் பாதரட்சைகள் (sandals) அணிந்து புழுதி நிறைந்த தேசத்தில் நடந்துவரும் பாதங்களுக்கு ஆறுதலாய்ச்செய்யும் வழக்கமாயிருந்தது.

உங்கள் கர்த்தராகிய நான் – எல்லோருக்கும் ஊழியக்காரன்

இயேசு தம்முடைய துக்கம் மற்றும் துயரத்தின் பாரத்தை மறந்தவராக, தம்முடைய பின்னடியார்களின் நலன்களில் அக்கறைக்கொண்டவராக, அனைவருக்கும் தாழ்மையின் ஒரு மாபெரும் பாடத்தைக் கற்றுக்கொடுப்பதற்கென வாய்ப்பைப் பயன்படுத்தினார். அவர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரையும், சீலையையும் [R4167 : page 140] எடுத்து பாதங்களைக் கழுவினார். சீஷர்களோ வெட்கப்பட்டு, குழம்பிப்போய், இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் என்ன சொல்ல வேண்டும் என்றோ அல்லது என்ன செய்ய வேண்டும் என்றோ தெரியாமல் காணப்பட்டனர். பேதுரு மாத்திரம் போதகர் தன்னுடைய பணிவிடைக்காரன் போன்று நடந்துகொள்வதற்குத் தன்னால் அனுமதிக்க முடியாது என்று மறுப்பைத் தெரிவித்தார். ஆனால் இவ்விஷயத்திற்கு ஓர் அடையாள அர்த்தம் இருக்கின்றது என இயேசு விவரித்தப்போது, பேதுரு கழுவப்படுவதற்கு ஆவலாய்க் காணப்பட்டார். பாடத்தைப் பெற்றுக்கொள்ள அவர்கள் தவறிவிடக்கூடாது என்பதற்காக, அனைத்தையும் செய்து முடித்தப் பிற்பாடு, நமது கர்த்தர் பின்வருமாறு விளக்கினார். “உங்கள் கர்த்தரும், போதகருமாகிய நானே உங்கள் பாதங்களைக் கழுவி, மிகவும் கனம் குறைந்த வேலையையும் உங்களுக்குப் புரிவதில் வாஞ்சையையும், தாழ்மையையும் வெளிப்படுத்தியிருக்க, நீங்களும் இதே உதாரணத்தை ஒருவரிலொருவர் பின்பற்றுவதற்கும், ஒருவருக்கொருவர் மிகவும் கனம் குறைந்த வேலையைச் செய்வதற்கும், அதுவும் ஒருவேளை வாய்ப்பு அனுமதிக்கும் பட்சத்தில் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவுமளவுக்கு உள்ள வேலையைச் செய்வதற்கும் வாஞ்சையுடன் காணப்பட வேண்டும்.”

இவைகளை இயேசு அப்போஸ்தலர்களுக்குப் பேசிக்கொண்டிருக்கும் கொஞ்ச நேரத்திற்குள்ளாகவே, தாம் அதிகாரிகளிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், சீஷர்கள் அனைவரும் தம்மைத் தனியே விட்டுப்போய்விடுவார்கள் என்றும் அவர்களிடம் தெளிவாக இயேசு கூறினார். இவை, அப்போஸ்தலர்களுக்குக் கடுமையான வார்த்தைகளெனத் தோன்றியது. இயேசுவுக்குத் தங்களிடத்தில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதைத் தெரிவிப்பதுபோன்று அவர்களுக்குத் தோன்றியது. உணர்ச்சிவசப்பட்டுப் பேதுரு பேசினார்; இன்னுமாக அனைவரும் கர்த்தரை மறுதலித்து, அவரைக் கைவிட்டுப்போனாலும், தான் இப்படியாக ஒருபோதும் செய்வதில்லை எனப் பேதுரு அறிக்கையிட்டார். அப்பொழுதுதான் சேவல் இரண்டுமுறை கூவுவதற்கு முன்னதாக, தம்மைப் பேதுரு, தம்முடைய போதகர் அல்ல என்று மறுதலிப்பார் என நமது கர்த்தர் தீர்க்கத்தரிசனமாய்ப் பேதுருவிடம் கூறி, சாத்தான் பேதுருவை ஜெயிக்க விரும்புகின்றான் என்றும், பேதுருவினுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு, தாம் பேதுருவுக்காக ஜெபம் பண்ணுகின்றார் என்றும், பேதுருவுக்குக் கர்த்தர் உறுதிப்படுத்தினார். உண்மையில் இந்த வார்த்தைகள் அனைத்தும், அப்போஸ்தலனுக்கு (பேதுருவுக்கு) அவருடைய சோதனையான வேளையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. உண்மையில் இந்த வார்த்தைகள் அனைத்தும், என்ன சம்பவிக்கப்போகின்றது என எதிர்பார்க்கத்தக்கதாகவும், அவைகளுக்கு எதிராக அனைத்து அப்போஸ்தலர்களும் எச்சரிக்கையாய்க் காணப்படத்தக்கதாகவும் உதவும் வண்ணமாகக் காணப்பட்டது.

ஆண்டவரே நானோ? ஆண்டவரே நானோ?

தம்முடைய எச்சரிப்பை இன்னும் தொடர்ந்தவராக நமது கர்த்தர், “உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார்! அங்கு எத்தகைய ஒரு பீதி காணப்பட்டிருக்க வேண்டும்! கர்த்தரிடமிருந்து அதிகமான அனுகூலத்தை அடைந்தவர்களிலும், அவருடன் நீண்ட காலமாய்ப் பழகி இருப்பவர்கள் மத்தியிலும், தன்னுடைய கர்த்தரைக் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு இழிவாக நடந்துகொள்ளும் ஒருவர் இருக்கக்கூடுமோ?

இப்பாடத்தின் முக்கியத்துவத்தை நாம் இழந்துவிடக்கூடாது. சுவிசேஷயுகம் முழுவதிலும் உள்ள கர்த்தருடைய சீஷர்கள், அப்போஸ்தலர்கள் பன்னிரண்டு பேரைக்குறித்து, “உங்களைப்போன்று நாங்களும் பாடுள்ள மனுஷர் தான்!” அதாவது, மனித பூரணமின்மைக்குரிய அளவுகோலுக்கு மேலானவர்களாகவோ அல்லது கீழானவர்களாகவோ இல்லாமல், வாழ்க்கையின் சாதாரண தரப்பினர்களையே சார்ந்தவர்கள்! என்று அப்போஸ்தலன் கூறுவது போன்றுதான் உள்ளவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக. அந்தப் பன்னிரண்டு பேர்கள் மீது வரவிருக்கின்ற சோதனைகள் தொடர்பான விஷயத்தில் அவர்களை எச்சரித்த அதே கர்த்தர் இன்னமும் தம்முடைய சபை, தம்முடைய மந்தைக்குறித்துக் கவனமுள்ளவராகவே இருக்கின்றார் என்பதையும் நாம் நினைவில் கொள்வோமாக. அதிலும் விசேஷமாகச் சகோதரர்கள் மத்தியில் பொறுப்பின் விஷயத்தில் எவ்விதமான முக்கிய பங்கை வகித்துக்கொண்டிருக்கும் அனைவர் குறித்து விசேஷித்த அக்கறையுடன் இருக்கின்றார் என நாம் எண்ணுகின்றோம். நாம் எதிராளியானவனுடைய வல்லமையின் கீழ் விழுந்துவிடாதபடிக்கு நம்மைக் காத்துக்கொள்வதற்கு நாடுகின்றவராகவும், நம்மை எச்சரிக்கின்றவராகவும், நம்மைப் பாதுகாக்கின்றவராகவும் இன்னமும் காணப்படுகின்றார். இருதயத்தில் தம்பால் நேர்மைக் கொண்டிருந்தும், அதேசமயம் சோதனைகளைக் கடுமையானதாய் இருக்கச் செய்யும் அளவுக்கு உள்ள மாம்சத்தின் பலவீனங்களைக்கொண்டிருக்கும் தம்முடைய உண்மையுள்ளவர்களுக்குக் கர்த்தர் இன்னமும் ஜெபம் ஏறெடுக்கின்றார். அப்போஸ்தலர்கள் அவர்களுக்கான சோதனையின் விசேஷித்த காலப் பகுதியை நெருங்கினபோது, அவர்களுக்கான நமது கர்த்தருடைய அக்கறையும், பிரயாசங்களும் பெருகினதுபோலவே, இன்றுள்ள அவருடைய சபையின் விஷயத்திலும், அவருடைய சரீரத்தின் கடைசி அங்கங்களாகிய, “அவருடைய பாதங்கள்” “பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனை காலமாகிய” நெருக்கடியான வேளையை நெருங்கும்போதும் காணப்படும் என்பது உறுதியே (வெளிப்படுத்தல் 3:10).

ஆண்டவர் தம்முடைய அப்போஸ்தலர்களிடம் பேசினதுபோல, நம்மிடத்திலும் காதுகளுக்குக்கேட்கும் சொல்லர்த்தமான விதத்தில் பேசுவதில்லை. ஆனாலும் அப்போஸ்தலர்களுடன் பேசின அதே அழுத்தத்துடனும், அதே ஊக்கத்துடனும் அவர் நம்முடன் பேசுகின்றார் அல்லவா? அந்தச் சீஷர்களுக்கான கர்த்தருடைய வார்த்தைகளும், கிரியைகளும் அதே படிப்பினையுடனும், அவர்களுக்கு இருந்த அதே அழுத்தத்துடனும் இன்று நம்மிடத்திற்கும் கடந்து வருகின்றதல்லவா? இந்த உதாரணங்கள் மற்றும் எச்சரிப்புகளுடன்கூட, யுகத்தின் முடிவு தொடர்பான வேதவாக்கியங்களின் விசேஷித்த அறிவிப்பும் நமக்குக் கூடுதலாகக் வழங்கப்பட்டுள்ளதல்லவா? சரியான மீன் மற்றும் சரியற்ற/ஆகாத மீன்கள் பற்றின உவமையில், இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய முடிவில் சுவிசேஷ வலையில் காணப்படுபவர்களில் ஒரு பிரித்தெடுத்தல் நடைபெறும் என நமது கர்த்தர் நமக்கு விவரித்துள்ளார் அல்லவா? கோதுமை மற்றும் களைகள் பற்றின உவமையிலுங்கூட, இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய அறுவடையின் காலபகுதியில், பிரித்தெடுத்தல் நடந்து, உண்மையும், முதிர்ச்சி அடைந்ததுமான கோதுமைத்தான் களஞ்சியத்தில் சேர்க்கப்படும் எனக் கர்த்தர் மீண்டுமாகக் கூறினார் அல்லவா? “மனுஷர்கள் தற்பிரியராயும் – தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும் – இருப்பார்கள்” என்ற காரணங்களினால், யுகத்தின் முடிவில் கொடிதான காலங்கள் வரும் என்று அப்போஸ்தலன் மூலமாகக் கர்த்தர் நமக்கு முன் எச்சரிப்புக்கொடுத்துள்ளார் அல்லவா? (2 தீமோத்தேயு 3:1-3). இன்னுமாக தெய்வீகத் திட்டத்தின்படி அக்காலத்தில், சத்தியத்தை அதிலுள்ள அன்பின் பிரகாரமாகவும், பக்தி வைராக்கியத்துடனும் ஏற்றுக்கொண்டிராத அனைவரும் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக தேவன் கொடிய வஞ்சகத்தை அனுப்புவார் என்றும் கர்த்தர் நமக்குத் தெரிவித்திருக்கின்றார் அல்லவா? (2 தெசலோனிக்கேயர் 2:11).

சோதிப்பதற்கான சோதனைக்காலம்

இக்காலத்திற்குரிய சோதனைகளானது, கூடுமானால், “தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும்” வஞ்சிப்பதற்குக்காணப்படும் என்றும், அதுவும் அவர்களுடைய விஷயத்தில் அது கூடாமல் போகும்; காரணம் அவர்களுடைய அன்பு, அவர்களுடைய பக்திவைராக்கியம் மற்றும் இவைகளின் பலனாக தெய்வீகக் கிருபையானது அவர்களுக்கு அருளும் ஆசீர்வாதங்கள் மற்றும் சிலாக்கியங்கள் ஆகும் என்றும் கர்த்தர் நமக்குக் கூறியுள்ளார் அல்லவா? ஒருவேளை பேதுருவுக்கு விசேஷித்த ஊக்கமளிக்கப்பட்டுள்ளதெனில், அதாவது “உன்னுடைய விசுவாசம் ஒழிந்து போகாதப்படிக்கு நான் உனக்காக வேண்டிக்கொண்டேன்” என்று ஊக்கமளிக்கப்பட்டுள்ளதெனில், இதற்குச் சரிசமமானது, “இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கின்றேன்” என்றும், “என் கிருபை உனக்குப் போதும்; உன்னுடைய பெலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்றுமுள்ள வேதவாக்கியங்களின் வாக்குத்தத்தங்களில் நமக்குக் காணப்படுகின்றது அல்லவா? (மத்தேயு 28:30; 2 கொரிந்தியர் 12:9). உண்மையில் அப்போஸ்தலர்களுக்கு அவர்களுடைய சோதனை வேளையில் இருந்ததைக் காட்டிலும் நமக்கு எல்லா விதத்திலும் மிகுந்த அனுகூலங்கள் காணப்படுகின்றன. இந்த நமக்கான அனுகூலத்திற்கான காரணம், அப்போஸ்தலர்களுடைய அச்சோதனையானது, அவர்கள் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்படுவதற்கு முன்பு வந்தது; ஆனால் நமக்கான சோதனைகள் என்பது நாம் அபிஷேகிக்கப்பட்ட சரீரத்தில் காணப்பட்ட காலத்தில்தான் வந்தது என்ற உண்மையில் விளங்குகின்றது. ஆகவே நாம் எதிர்காலத்தை நோக்கிப் பார்க்கையில், “விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது” என்ற செய்தியை நாம் கேட்கும்பொழுது, உலகத்திற்குப் பரவலாய் வருவதற்கு முன்னதாக அர்ப்பணிக்கப்பட்ட பின்னடியார்களைப் பாதிக்கும் இந்தச் சிறிய இராக்காலத்தின் வேளையில் என்னவெல்லாம் வருமென எதிர்பார்க்கலாம் என்பது குறித்து நாம் முன்னெச்சரிக்கப்பட்டவர்களாய்க் காணப்படுகின்றோம் (ஏசாயா 21:12). இந்தச் சோதனை காலத்தில்தான், “உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது” என்ற வார்த்தைகளினுடைய சம்பவித்தலை நாம் எதிர்பார்க்கலாம் (சங்கீதம் 91:7,9). எனினும் இவ்வசனத்தில் இடம்பெறும் வாக்குத்தத்தமானது, ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கே உரியது; அதாவது கர்த்தரையும், உன்னதமானவரையும் தங்களுடைய அடைக்கலமாகவும், தாபரமாகவும் கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரமே உரியது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். “ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்” (அப்போஸ்தலர் 20:28).

[R4168 : page 141]

ஒன்றாய்ச் சேர்ந்து, கூடிப் போஜனம் புசிப்பது என்பது, உண்மைக்கான வாக்குறுதியாக இருப்பதினால், ஆண்டவர் விசேஷமான துணிக்கையைத் தோய்த்துக்கொடுப்பது என்பது அன்பிற்கான விசேஷித்த அடையாளமாக இருக்க வேண்டும். மேலும் அது, யார் கர்த்தரைக் காட்டிக்கொடுக்கப்போகின்றான் என்பதைக் காண்பிக்கும் வண்ணமாக, இராப்போஜனத்தின்போது, யூதாசுக்குக்கொடுக்கப்பட்டது. அப்போஸ்தலர்கள் பல்வேறு குரல்களில் கர்த்தரை நோக்கி நானோ? என்பதை எப்படிக்கேட்டிருப்பார்கள் என்பதையும், இதே கேள்வியை யூதாசும் எப்படிக் கேட்டிருந்திருப்பார் என்பதையும் நாம் விவரிப்பதைப் பார்க்கிலும் நாம் நன்கு கற்பனைப் பண்ணிப்பார்த்துக்கொள்ளலாம். துணிக்கையை யூதாசிடம் கொடுத்தபோது, நமது கர்த்தருடைய கண்ணின் பார்வையையும் நாம் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளலாம். அதாவது, “யூதாஸ் நான் உன்னிடத்தில் காண்பிக்கும் அன்புடன் கூடிய இரக்கத்தை ஏன் நீ ஏற்க மறுத்துக்கொண்டிருக்கின்றாய்? நீ என்னுடைய நண்பன் என்றும், சீஷன் என்றும் உன்னைக் குறித்து அறிக்கை செய்திருக்கின்றாய். ஒரு நண்பனாக உனக்கு நான் என்னுடைய பங்கை செய்துள்ளேன்” என்ற விதத்தில் நமது கர்த்தர் பார்வையின் மூலமாகவும், செய்கையின் மூலமாகவும் பேசினதை நாம் கற்பனை பண்ணிப் பார்த்துக்கொள்ளலாம். இந்தக் கண் பார்வையும், இந்தத் துணிக்கையும், சுயநலமான யூதாசைத் திணற வைத்திருக்க வேண்டும். ஆனாலும் பார்வோனின் விஷயத்தில், வாதைகளை எடுத்துப்போடுவதன் மூலமாகக் கர்த்தர் இரக்கத்தைக் காட்டும்போதெல்லாம் பார்வோனுடைய இருதயம் அதிகமதிகமாகக் கடினப்பட்டதுபோலவே, நமது கர்த்தருடைய தாழ்மை மற்றும் அன்பிற்கான/இரக்கத்திற்கான ஒவ்வொரு வெளிப்படுத்தலும், யூதாசினுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினது. நமது கர்த்தருடைய கண் பார்வைக்கும், துணிக்கைக்கும் பிரதியுத்தரமாக, யூதாஸ் மனம் திரும்புவதற்குப்பதிலாக மிகவும் கசப்பு/வெறுப்புக்கொண்டு, தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதிக தீர்மானமாய்க் காணப்பட்டான். இது யூதாசின் கண்களில் ஜொலித்தது. நமது கர்த்தர் யூதாசினுடைய எண்ணங்களை வாசித்தவராக, “நீ செய்கிறதைச் சீக்கிரமாய் செய்” என்று கூறினார்.

இதிலுள்ள படிப்பினையையும், அது இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்களுக்குப் பொருந்துவதையும் பார்க்கத் தவறிடாமல் இருப்போமாக. அர்ப்பணம் பண்ணியுள்ளவர்களில் எவரேனும் சுயநலத்தையும், பேராசையையும்/தனிப்பட்ட இலட்சியத்தையும் வளர்த்திக்கொண்டு வருவார்களெனில், அவர்கள் யூதாசின் முடிவைப்போன்ற முடிவை அடைவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களுக்குள் வளர்த்துக்கொண்டிருக்கும் ஆவியினுடைய செல்வாக்கானது, இவர்கள் யூதாசைப்போன்று தனிப்பட்ட சிறு ஆதாயங்களுக்கெனச் சத்தியத்தை விற்றுப்போடுவதற்கு ஆயத்தப்படும் நிலைக்கு வருமளவுக்கு, கர்த்தருடைய நோக்கங்கள் மற்றும் உண்மையுள்ள சகோதரர்களுக்கான பரிவிரக்கத்திலிருந்து இவர்கள் வெகு தொலைவிற்கு வழிநடத்தப்படுவார்கள். இப்படியான இருதய நிலைக்கு, முன்பொரு காலத்தில் பிரகாசிக்கப்பட்டு, தேவனுடைய வார்த்தைகளையும், இனிவரப்போகும் பலன்களையும் ருசி பார்த்திருந்தவர்கள் வந்துவிடுவார்களானால், இவர்கள் தங்களுடைய பொல்லாத நடத்தைக்கான எல்லைக்குப் போவதை எந்த வல்லமையும் தடைப்பண்ணுவதில்லை. இப்படிப்பட்டவர்களுடைய மனங்கள் சத்தியத்திற்கு எதிராக மிகவும் விஷமாகியுள்ளபடியால் இரக்கத்தின் துணிக்கைகளானது, இப்படிப்பட்டவர்களைத் தீமைக்கு/பொல்லாப்பிற்கு நேராக அதிகம் தூண்டுகின்றதாகக் காணப்படும். சாத்தான் யூதாசுக்குள் புகுந்தான் என்று நாம் வாசிக்கின்றதுபோல, யூதாஸ் வகுப்பாரின் விஷயத்திலும் இப்படியாகவே காணப்படும். இவர்கள் மீது எதிராளியானவன் முழு வல்லமைக்கொண்டு, இவர்களை அடக்கி ஆளுவதை நாம் எதிர்பார்க்கலாம்.

கெத்செமனேயின் பாடங்கள்

அந்த இரவிற்குரிய, ஆழமாய் மனதில் பதியக்கூடிய படிப்பினைகள், அப்போஸ்தலர்களுடைய மனங்களை முழுமையாய் நிரப்பி இருந்திருக்கும் என்றும், அவர்கள் கண்களுக்கு நித்திரை/உறக்கம் தூரமாய் இருக்குமளவுக்கு அவர்களை விழிப்பாய் இருக்கச் செய்திருக்கும் என்றும் ஒருவர் எண்ணக்கூடும். ஆனால், இப்படியாக இருக்கவில்லை. ஆண்டவருடைய வார்த்தைகளை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையே அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. மேசியாவாக இருப்பதற்கும், ஆளுகை செய்வதற்குமென வந்தவர் காட்டிக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படுவார் என்பதும், அவரோடுகூட அவருடைய சிங்காசனத்தில் இருப்பார்கள் என்று அவரால் வாக்களிக்கப்பட்டவர்களாகிய தாங்கள் அனைவரும் அவரைக் கைவிட்டு, ஓடுவது என்பதும் மிகவும் புரிந்துகொள்ள முடியாததாய் அவர்களுக்கு இருந்தது. அவர்களால் புரிந்துகொள்ள முடியாத அநேக உயர்வான காரியங்களை அவர்களிடம் அவர் கூறியிருந்தார். ஆகவேதான் அவர்கள் விழித்திருந்து, ஜெபம் பண்ணும்படியாக அவர் திரும்பத்திரும்ப அறிவுறுத்தினது, அவர்களுக்குப் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. இயேசுவின் விசேஷித்த மூன்று நண்பர்களும்கூட, அதாவது அவரது நம்பிக்கைக்கு விசேஷித்த பாத்திரமானவர்களாகக் காணப்பட்டவர்களும், வேறு ஒரு தருணத்தின் போது மறுரூப மலைக்கு அவரால் அழைத்துச் செல்லப்பட்டவர்களுமான மூன்று பேரும் கூடத் தூங்கிவிட்டனர். அவ்வப்போது கர்த்தர் இவர்களிடத்தில் வந்து, இவர்களை விழிக்கப்பண்ணினபோது, இவர்கள் கவனித்த குறிப்பிட்ட சம்பவங்களையே/நிகழ்வுகளையே இவர்கள் நமக்குப் பதிவு செய்துள்ளனர்.

யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பி…

இப்பொழுது எப்படியாகக் காணப்படுகின்றது? உபத்திரவமாகிய இரவு நெருங்கிக்கொண்டிருக்க பூச்சக்கரத்துக்குடிகள் அனைத்தையும் சோதிக்கும்படியான சோதனை வேளை அண்மையில் இருக்க, மற்றும் நாம் சோதனையில் விழுந்துவிடாதபடிக்கு நாம் விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டுமென வசனங்கள் வாயிலாக ஆண்டவருடைய அநேக எச்சரிப்புகள் இருக்க நாம் எப்படிக் – காணப்படுகின்றோம்? அந்தோ பரிதாபம்! பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் போன்று கர்த்தரிடத்திலிருந்து விசேஷித்த அனுகூலங்கள் பெற்றுக்கொண்டு, அவருக்கு நெருக்கமாய் இருப்பவர்களில் அநேகர், தாங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் காலத்தின் முக்கியத்துவத்தை உணரத் தவறியும், தங்கள் மீது வரும் என முன்னுரைக்கப்பட்டுள்ள சோதனைகளை உணரத் தவறியும்போய், பேதுருவை போன்று கர்த்தருடைய உண்மையுள்ளவர்கள் மத்தியிலிருந்து பிரித்துப்போடப்படும் மாபெரும் அபாயத்திற்குள்ளாகுகின்றவர்களாக இருக்கின்றனர்.

நமது கர்த்தருடைய நிலைமையை, நம்மால் ஓரளவுக்குக் கற்பனை செய்துகொள்ள முடிகின்றது. அவருக்கான மாபெரும் சோதனை வேளை அவர்மேல் கடந்துவந்தது. அதைக் கர்த்தர் முழுவதுமாக உணர்ந்திருந்தார். கடந்த காலங்களிலும், தற்போதும், அடுத்துவரும் நாளிலும் உள்ள அவருடைய உண்மையானது, பிதாவுக்கான அவருடைய உண்மையையும், மேலான பலனாகிய கனம், மகிமை மற்றும் அழியாமையை அடைவதற்கான அவருடைய உரிமையையும் தீர்மானிப்பதாய் மாத்திரம் இல்லாமல், அது ஒட்டுமொத்த மனுக்குலத்தின் நலம் தொடர்பானதை தீர்மானிக்கின்றதையும் இச்சோதனையானது குறிக்கின்றதாய் இருக்கின்றது. சோதனையில் ஜெயம் என்பது பாவம் மற்றும் மரணம் எனும் அடிமைத்தனத்தினின்று அனைத்துக் கைதிகளையும் முடிவில் விடுவிப்பதைக் குறிக்கின்றதாகும். இதில் தோல்வி என்பது அனைத்தையும் இழந்துவிடுவதாகும்! ஆகவே அவருடைய ஆத்துமா மரணத்திற்கு ஏதுவான துக்கம் கொண்டிருந்ததிலும், அவருடைய உணர்வுகளின் உச்சக்கட்டத்தில் அவருடைய வியர்வை நுண்துளைகளிலிருந்து இரத்தம் வந்ததிலும் என்று ஆச்சரியப்படுவதற்கு இல்லை அல்லவா? ஆ, அன்பான ஆண்டவரைக்குறித்து, “ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை” சரியாகவே எழுதப்பட்டிருக்கின்றது. அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களாகவும், மிகவும் அன்பிற்குரியவர்களாகவும் இருந்த சீஷர்கள் கூட, நிலைமையை உணர தவறி, அவர் ஏங்கின/விரும்பின அனுதாபத்தின் சகாயத்தை அவருக்கு அளித்திட தவறிவிட்டனர். இந்த சீஷர்கள் தங்களுடைய கர்த்தருக்கு அவருடைய சோதனை வேளையில் ஊழியம் புரிவதற்குரிய வாய்ப்பை மீண்டுமாகப் பெற்றுக்கொள்ளதக்கதாக பிற்காலங்களிலும் எதையும் செய்வதற்குக்கூடத் தயாராய் இருந்திருப்பார்கள் அல்லவா? எத்தகைய ஒரு சிலாக்கியத்தை அவர்கள் தவற விட்டுவிட்டனர்! இங்கு நமக்கும் ஒரு படிப்பினை உள்ளது. ஏனெனில், ஆண்டவர் மாம்சத்தில் இல்லாமலும், இனிப் பாடுபடுவதில்லை என்றாலும், அவருடைய அங்கங்களில் சிலர் இன்னமும் மாம்சத்தில்தான் காணப்படுகின்றனர் மற்றும் அவருடன் ஆளுகை செய்வதற்கென இப்பொழுது அவருடன் பாடுபட்டுக்கொண்டிருக்கும் சிலர் இருக்கின்றனர். நம்முடைய பாடுகள் ஆண்டவருடைய அந்தப் பாடுகள் போன்றதல்ல. அதேசமயம் நம் அனைவருக்கும் கூட ஒரே பாடுகள் இல்லை. ஒவ்வொருவனுக்கும் தான் ஆண்டவருடைய பயன்பாட்டிற்குத் தகுதியடையத்தக்கதாக, நிரூபிக்கப்படுவதற்கும், பரீட்சிக்கப்படுவதற்கும் தகுதியடைவதற்கும்/பொருந்துவதற்கும், மெருகூட்டப்படுவதற்கும் தனக்கேற்ற அனுபவங்களைப் பெறுகின்றவனாகக் காணப்படுகின்றான். நாம் ஒருவருக்கொருவர் அந்த அனுதாபத்தை/பரிவிரக்கத்தைக் கொண்டிருக்கின்றோமா? ஒருவருக்கொருவர் உதவவும், ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமக்கவும், இவ்விதமாக கிறிஸ்துவின் பிரமாணத்தை, அன்பின் பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு நம்மை வழிநடத்தக்கூடிய அந்த இரக்கத்துடன்/பேராவலுடன்கூடிய அன்பைக்கொண்டிருக்கின்றோமா? இல்லையேல் காயப்படுத்தும் யூதாசின் ஆவியைக் கொண்டிருக்கின்றோமா? இல்லையேல் சரீரத்திலுள்ள மற்றவர்கள் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, சகோதர சகோதரிகள் பாடுபடும்போது, சோதனையில் காணப்படும்போது, நம்மைத் தூங்கிபோகச் செய்யும் அளவிற்கு உணர்ந்துகொள்ளுதலை இழந்தவர்களாகவும், சோம்பலுடன் கூடிய அக்கறையின்மையின் ஆவியைக்கொண்டவர்களாக இருக்கின்றோமா? இக்கேள்விக்கான நடைமுறை பதில்களையே கர்த்தர் எதிர்பார்க்கின்றார் மற்றும் தம்முடைய ஆவியை அதிகமாய் வெளிப்படுத்துகிறவர்களின் மீது கர்த்தருடைய அன்பும், கிருபையும் காணப்படும். நமக்கு அதிகமான காரியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற பிற்பாடே இங்குப் பேசப்படும் சோதனை வேளை நம்மீது கடந்துவருகின்றது. நமக்கு அதிகமாய்க்கொடுக்கப்பட்டுள்ளபடியினால், நம்மிடத்தில் அதிகமாய் எதிர்பார்க்கப்படும் [R4168 : page 142] நாம் சகோதரர்களுக்கென நம்முடைய ஜீவனையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

தேவதூதர் அவருக்கு ஊழியஞ்செய்தார்

நமது கர்த்தர் தம்முடைய வியாகுலத்தில், “இப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்” என்று பிதாவிடம் ஜெபம் பண்ணினதில் அவர் மரணத்தின் பாத்திரத்தைக் குறிப்பிட்டார் என்று எண்ணிவிடக்கூடாது. காரணம், இந்த மரணம் அவசியமானது என்றும், இந்தக் காரணத்திற்காகவே தாம் உலகத்திற்கு வந்துள்ளார் என்றும் அவர் ஏற்கெனவே தம்முடைய சீஷர்களிடம் எடுத்துக் கூறியிருக்கின்றார். அப்படியானால் தம்மைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும் என்று அவர் குறிப்பிட்ட பாத்திரம்தான் என்ன? இது அநேகமாக அவர் சிலுவையில் அறையப்படுதலுடன் கூட வரும் அவமானத்தைக் குறிக்கின்றதாய் இருக்கும் என நாம் பதிலளிக்கின்றோம். அதாவது, தேவனுக்கு எதிராக தேவ தூஷணம் உரைத்ததாக இரண்டு கள்வர்களின் நடுவில் சிலுவையில் அறையப்படுதலிலுள்ள அவமானம் ஆகும். தம்முடைய உயிர்த்தெழுதல் சார்ந்துள்ள தம்முடைய சொந்த உண்மைத்தன்மை தொடர்பாகவே நமது கர்த்தருக்குக் கடுமையான துயரம் காணப்பட்டது என்று வேறொரு வேதவாக்கியம் நமக்குத் தெரிவிக்கின்றது. ஒரு சிறு விஷயத்திலோ, ஒரு சிறு பிரமாணத்திலோ ஒருவேளை அவர் தவறியிருப்பாரானால் ஆதாமை போன்று அவரும் ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கப்பட்டு, ஜீவனை இழக்க நேரிடும் மற்றும் இதன் விளைவாக அவருக்கு உயிர்த்தெழுதலும், எவ்விதமான எதிர்கால ஜீவியமும் இருந்திருக்காது மற்றும் அவர் நிறைவேற்றும்படியாக உலகத்திற்கு வந்து செய்த முழு வேலையும் தோல்வியடைந்திருக்கும். “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு” என்று வேதவாக்கியமானது நமக்குத் தெரிவிக்கின்றது (எபிரெயர் 5:7). அவருடைய சீஷர்கள் அவரைச் சூழ்ந்து நின்று, அவருடைய வாழ்க்கையில் கறைதிறை எதுவும் இல்லாமல், முற்றும் முழுமையாகத் தெய்வீகச் சித்தத்திற்கு இசைவாகவே இருந்தது என அவருக்கு உறுதியளிக்கவில்லை என்றாலும், ஒரு தேவதூதனை விசேஷித்தவிதமாய் அனுப்பி வைத்து, அவர் பயப்பட்ட விஷயத்தில் அவருக்கு உற்சாகம் கொடுத்து, தேவன் அதிகமாகவே செய்துவிட்டார். இயேசு உண்மையுள்ளவராக இருக்கின்றார் என்றும், அவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார் என்றும் பிதாவினிடத்திலுள்ள வாக்குறுதியைத் தேவதூதன் இயேசுவுக்குக் கொடுத்திருக்க வேண்டும்.

அந்த வாக்குறுதியின் பலத்தினால் நமது கர்த்தர் அந்த இரவிலும், அடுத்தநாள் அதாவது அவரது மரணத்தின் தருணம் வரையில் வரவிருக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் சந்திப்பதற்கு உறுதியுடனும், அமைதியுடனும், பலத்துடன் எழுந்து நின்றார். இப்படியாகவே நம் விஷயத்திலும் காணப்பட வேண்டும். எதிர்க்காலத்தைக்குறித்த கொஞ்சம் கவலைக் காணப்பட வேண்டும். நம்முடைய அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்ளும் விஷயத்தில் நாம் ஒருவேளை ஜாக்கிரதையற்று/அக்கறையற்று இருப்போமானால், கர்த்தர் பிரியமாய் இரார். நாம் ஜீவனை மதிப்பிட்டு உணர்ந்தவர்களாகக் காணப்பட வேண்டும். அதுவும் நாம் ஒருவேளை உண்மையுள்ளவர்களாய் இருக்கும் பட்சத்தில் நமக்கு வாக்களிக்கப்பட்டுள்ள மேலான ஜீவனை விசேஷமாக நாம் மதிப்பிட்டு உணர்ந்தவர்களாகக் காணப்பட வேண்டும். நாம் இன்னமும் அவருடையவர்களாகத்தான் இருக்கின்றோம் என்றும், மகிமையான நம்பிக்கைகளும், வாக்குத்தத்தங்களும் இன்னமும் நம்முடையவைகளாகத்தான் இருக்கின்றது என்றுமுள்ள நிச்சயத்தைக் கொடுக்கக்கூடிய அவருடைய அன்பு மற்றும் கிருபையின் நமக்கான ஊழியங்களை/உற்சாகப்படுத்தல்களை, நமது கண்கள் கர்த்தரிடத்திலிருந்து எதிர்பார்க்கும் அளவுக்கு நாம் ஜீவனை மதிப்பிட்டு உணர்ந்திருக்க வேண்டும். மேலும் இந்த வாக்குறுதி/நிச்சயம் அல்லது ஆறுதல் என்பது பூமிக்குரிய ஊழியங்கள் மூலமாக வருவதில்லை. இவ்விஷயத்தில் மிகுந்த உண்மையுடனும், பேராவலுடனும் காணப்படும் தம்முடைய சரீரத்திலுள்ள ஒவ்வொரு அங்கங்களும் ஆவியின் சரியான சாட்சியைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, அதாவது அவனுடைய ஏற்றுக்கொள்ளப்படுதல் மற்றும் உண்மை பற்றி அவனுடைய இருதயத்திற்குச் சரியான சாட்சியை அருளத்தக்கதாக கர்த்தர் தாமே பார்த்துக்கொள்வார்.

இயேசு முத்தத்தினால் காட்டிக்கொடுக்கப்பட்டார்

துரோகம் என்பது உலகளவில் இழிவாகப் பார்க்கப்படுவதினால், தேவனுக்குத் துரோகியாகிய சாத்தானும், நமது கர்த்தர் இயேசுவுக்குத் துரோகியான யூதாசும், அனைவராலும் தவிர்க்கப்பட வேண்டிய இம்மாதிரியான மனநிலமைக்கும், இருதய நிலைமைக்கும் பிரதிநிதிகளாகக் காணப்படுகின்றனர். இந்த இருதய நிலைமையை உடையவர்கள் இரண்டாம் மரணத்தை அதாவது நித்தியத்திற்குமான அழிவை அடைவார்கள் என்று கர்த்தர் அறிவிக்கின்றார். பல்வேறு சுவிசேஷப் பதிவுகளை வைத்துப் பார்க்கும்பொழுது, கர்த்தரையும், பதினொரு அப்போஸ்தலர்களையும் விட்டு, யூதாஸ் புறப்பட்டுப்போன பிற்பாடு, யூதாஸ் தான் ஏற்கெனவே பேசியிருந்த பிரதான ஆசாரியர்களிடத்திற்கு மீண்டும் சென்றதாகக் காண்கின்றோம். பேரத்தை முடிவு கட்டிவிட்டு, ஆலயத்தின் போர்ச்சேவர்களுக்கு யூதாஸ் வழிக்காட்டியாக ஆனான். அன்று பௌர்ணமியாக இருந்த போதிலும் செடிகள் மத்தியில் தேடுவதற்கு அவசியப்படும் விளக்குகளுடனும், தடிகளுடனும் சேவகர்கள் வந்தார்கள். அதிகாரிகளின் [R4169 : page 142] கண்ணோட்டத்தின்படி நடுராத்திரி வேளை என்பது மிகவும் சாதகமான வேளையாகக் காணப்பட்டது; காரணம் இயேசுவை அறிந்தவர்களும் அவருடைய அற்புதங்களுக்குச் சாட்சியாய் இருப்பவர்களுமான திரளான ஜனங்கள் பஸ்கா பண்டிகைக்கென எருசலேமில் காணப்பட்டப்படியால், காலை வேளையில் இயேசுவைக் கைது செய்வது என்பது கலகத்தைத் தூண்டிவிடுவதாகிவிடும். நமது கர்த்தர் கெத்செமனே தோட்டத்திற்குச் சென்றதற்கான காரணம், அத்தோட்டம் அவருடைய ஒரு நண்பனுக்குச் சொந்தமானதாகும் மற்றும் வெளியிடத்தில் காணப்படும் பட்சத்தில் கைது செய்யப்படுவதிலிருந்து தம்முடைய சீஷர்கள் தப்பித்துக்கொள்வதற்கான நல்ல வாய்ப்பு இருக்கும் என்பதினாலேயே ஆகும். மாற்கு பதிவு செய்துள்ளபடி ஒரு வாலிபன், இயேசு கூட்டிக்கொண்டு சென்ற கூட்டத்தாரைத் தொடர்ந்து போனான் என்றும், அந்த வாலிபன் நீண்டதும் தளர்ந்ததுமான அங்கிபோட்டிருந்தான் என்றும், சேவகர்கள் அவன்மேல் கைப்போட்டபோது, அவன் அங்கி கழன்று போய் நிர்வாணமாய்த் தப்பி ஓடிப்போய்விட்டானே ஒழிய, மற்றபடி சீஷர்களைக் கைது செய்வதற்கான எந்த விசேஷித்த முயற்சிகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த வாலிபன், மாற்கு சுவிசேஷத்தை எழுதின யோவான் மாற்காக இருக்கும் என்று அனுமானிக்கப்படுகின்றது. மேலும் இந்த யோவான் மாற்கு வாழ்ந்த இடத்தின் ஒரு பகுதியில்தான், கெத்செமனே தோட்டம் காணப்பட்டது.

நமது கர்த்தர் வியாகுலம் அடைந்து ஜெபம் பண்ணி, இறுதியில் ஆறுதல் படுத்தப்பட்ட பின்னர், அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் மீண்டுமாக வந்து, “இனி நித்திரைப்பண்ணி இளைப்பாறுங்கள்” என்று கூறினார். அதாவது, “என்னோடுகூட விழித்திருப்பதற்கு அல்லது எனக்கு ஆறுதலின் வார்த்தையைப் பேசுவதற்குரிய உங்களுக்கான வாய்ப்பு முடிந்துவிட்டது. வரவிருக்கின்ற பரீட்சைகள் மற்றும் சோதனைகளுக்கு எதிராக பாதுகாப்பாக, உங்களது இருதயங்களையும், மனங்களையும் ஜெபத்தில் விழிக்கப்பண்ணுவதற்குரிய உங்களுக்கான வாய்ப்புக் கடந்துபோய்விட்டது. இதோ என்னைக் கைது பண்ணுவதற்குரியவர்கள் வருகின்றார்கள்!” என்ற விதத்தில் கூறினார். சேவகர் கூட்டத்தாருக்கும் கொஞ்சம் முன்னதாக வந்து காணப்பட்ட யூதாஸ் துரோகத்தனமான முத்தத்தினால், இயேசுவை அடையாளம் காட்டிக்கொடுத்ததை அவமானத்தின் காரணமாக யோவான் பதிவு செய்யவில்லை. “மனுஷகுமாரனை முத்தத்தினாலா காட்டிக்கொடுக்கிறாய்?” என்ற ஆண்டவருடைய வார்த்தைகளின் நிமித்தம் தன்னுடைய ஏமாற்று வேலை வெளியாகிவிட்டது என்பதை உணர்ந்த யூதாஸ் அவரிடமிருந்து விலகி அவரைக் கைது செய்யும்படியாக வந்திருந்த கூட்டத்தாருடன்கூடச் சேர்ந்து நின்றான். மறைவிலிருந்து இயேசு வெளியே வந்து, “யாரைத் தேடுகின்றீர்கள்?” என்றார். அவர்களுடைய கேள்விக்குப் பிரதியுத்தரமாக: “நான் தான் அவர்; என்னுடைய நண்பர்களாகிய இவர்களைப் போகவிடுங்கள்” என்று கூறினார். மேலும் அவர்கள் பின்னிட்டுபோய் விழுந்தார்கள் என்று நாம் வாசிக்கின்றோம். சந்தேகத்திற்கிடமின்றி இது அவர்கள் மீது நமது கர்த்தரால் செயல்படுத்தப்பட்ட வல்லமையினாலேயே ஆகும். அதாவது அவர் ஒருவேளை விரும்பினால் அவர்களை முற்றிலுமாய் எதிர்ப்பதற்கு அவரால் பயன்படுத்தப்படக்கூடிய வல்லமையாகும். வேறுவழியின்றி கட்டாயத்திற்காக அல்லாமல், மாறாக பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்கே தாம் தம்மைக் கையளிக்கின்றார் என்பதைச் சேவகர்களுக்கும், தம்முடைய அப்போஸ்தலர்களுக்கும் காட்டுவதற்கு, இந்த வல்லமை அவரால் செயல்படுத்தப்பட்டது போதுமானதாய் இருந்தது.

இவைகள் நடப்பதற்குக் கொஞ்சம் நேரத்திற்கு முன்னதாக, அப்போஸ்தலர்கள் சில பட்டயங்கள் எடுத்துகொள்ள வேண்டும் என்றும், இரண்டு பட்டயங்கள் இருக்கின்றது என அவருக்குத் தெரிவிக்கப்பட்டபோது, அவைகள் போதுமென்றும் கர்த்தர் கூறினார். இரண்டு பட்டயங்களில் ஒன்றை, அப்போஸ்தலர் பேதுருதான் வைத்திருந்ததுபோன்று தெரிகிறது. மேலும் ஆயுதங்களைக் கொண்டிருந்த மனிதர்கள் கர்த்தரை நெருங்கின போது, பேதுரு பட்டயத்தைப் பயன்படுத்த, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனாகிய மல்குஸ் என்பவனின் காதை வெட்டினார். தாம் சரணடைந்ததற்கான காரணம், தமது அல்லது சீஷர்களின் கோழைத்தனம் அல்ல என்பதைக் காட்டுவதற்கே இச்சம்பவம் நிகழ்வதற்கான கர்த்தருடைய நோக்கமாய் இருந்தது என்பதில் உறுதியே. இன்னுமாக இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கர்த்தர் பேதுருவிடம்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; [R4169 : page 143] பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள் என்று கூறினார்” (மத்தேயு 26:52); அதாவது வேறுவார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், “என்னுடைய பின்னடியார்கள், பூமிக்குரிய ஆயுதங்களைக் கொண்டு யுத்தம் பண்ணக்கூடாது; என்னுடைய இராஜ்யம் இப்படியான விதத்தில் ஸ்தாபிக்கப்படப் போவதில்லை” என்றார்.

அன்னா பல வருடங்களாக பிரதான ஆசாரியனாக இருந்துள்ளார் மற்றும் இவருக்குப் பின்பு இவருடைய குமாரர்களில் பலர் இந்த ஸ்தானத்திற்கு வந்துள்ளனர். மேலும் இப்பொழுது இவருடைய மருமகனாகிய காய்பா இந்த ஸ்தானத்தில் காணப்பட்டார். எனினும், அன்னாவுக்கு ஒரு குறிப்பிட்ட விதத்தில் அங்கீகாரம் இருந்தது. ஆகவேதான் நமது கர்த்தர் முதலாவதாக இவரிடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார். அன்னா இயேசுவிடம் கேள்வி கேட்டார். ஆனால் சட்டரீதியிலான விசாரணையைச் செய்யவில்லை. இந்த விசாரணை பிரதான ஆசாரியனுடைய அரண்மனையின் இன்னொரு இடத்தில் காய்பாவிற்கு முன்னிலையில் நடைபெற்றது.

அன்னாவினால் நமது கர்த்தர் கேள்வி கேட்கப்பட்டுக்கொண்டிருக்கும் போதுதான், நெருப்பின் முன் குளிர் காய்ந்துக்கொண்டிருந்த பேதுரு, மூன்று முறை கர்த்தருடைய பின்னடியார்களில் ஒருவராக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டுக் கேள்வி கேட்கப்பட்டார் மற்றும் மூன்று முறை மறுதலிக்க, சேவலும் கூவிற்று. சேவல் கூவுவதைப் பேதுருவும் கேட்டார். நமது கர்த்தர் அன்னாவின் முன்னிலையில் நின்று காய்பாவின் நியாயஸ்தனத்திற்கு முன்பாக அழைத்துச் செல்லப்பட்டபோது, பேதுருவைப் பார்த்தார். பேதுருவைப் பார்த்த அந்தப் பார்வையில் எத்தகைய ஒரு பிரசங்கம் இருந்திருக்கும்! கர்த்தரை ஒருபோதும் மறுதலிக்கமாட்டேன் என்று தன்னுடைய தைரியத்தைக்குறித்துப் பெருமையடித்துக் கொண்டவர் தோற்றுப்போனார். பேதுரு தன்னைப் பற்றி எண்ணியிருந்ததைக் காட்டிலும் எவ்வளவு பெலவீனமாய்க் காணப்பட்டார்! “சேவல் இரண்டு தரம் கூவுவதற்கு முன்னே, நீ மூன்று தரம் என்னை மறுதலிப்பாய்” என்ற கர்த்தருடைய தீர்க்கத்தரிசனம் நிறைவேறினது. பேதுரு வெளியேறி, மிகவும் மனங்கசந்து அழுது, இருதயத்தில் நொந்துபோய், தன்னைக் குறித்து வெட்கம் அடைந்து, இனி எதிர்க்காலத்தில் தற்பெருமையடித் துக்கொள்வதுமில்லை என்றும், ஆண்டவர் சொன்னதுபோல அதிகமாய் விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும் என்றும், தீர்மானம் எடுத்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்களில் சில, இன்றுள்ள கர்த்தருடைய அருமையான ஜனங்களில் சிலருக்கு அப்படியே இணையாகக் காணப்படும் என்பதை நாம் அறியோம். நம்மில் எவரேனும் இப்படியான குறைவுள்ள நிலைமைக்குள் காணப்படுவோமேயானால், ஆண்டவர் பேதுருவுக்கு ஜெபம் பண்ணினதுபோன்று, நமக்கும் ஜெபம் பண்ணுவதோடுகூட, அவருடைய சிட்சையின், கண்டிப்பின் பார்வையைக்கூட நம்மேல் விழப்பண்ணுவார். மேலும் நாம் நமது பெலவீனத்தினிமித்தமும், அவமானத்தினிமித்தமும் மூழ்க்கடிக்கப்பட்டுவிடாமல், யூதாஸைப் போன்று இல்லாமல், நம்முடைய மனம்திரும்புதல் பேதுருவைப் போன்று கர்த்தருக்கு உண்மையானதாகவும், அங்கீகரிக்கத்தக்கதாகவும் காணப்படத்தக்கதாக அவருடைய பரிவிரக்கத்தையும், அன்பையும் நமக்கு நினைப்பூட்டக்கூடிய அவருடைய பார்வைகளையும் நம்மீது விழப்பண்ணுவார் என்று நாம் எதிர்ப்பார்க்கலாம்.