R2592 (page 76)
நமது அருமை மீட்பருடைய மரணத்தினை அதன் ஆண்டு நிறைவு நாளில் ஆசரிக்கின்றதான நமது வழக்கத்தின்படி, இவ்வருடமும் முன்பில்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையாரால் ஆசரிக்கப்படும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
“பஸ்கா பண்டிகையானது” ஆரம்பிப்பதற்கு முந்தின நாளில் நமது கர்த்தர் பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய நிஜமெனச் சிலுவையில் அறையப்பட்டார் (1 கொரிந்தியர் 5:7); மற்றும் “அவர் தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே” தம்முடைய மாம்சத்தை அடையாளப்படுத்தும் அப்பத்தையும், தமது இரத்தத்தை அடையாளப்படுத்தும் “திராட்சப்பழரசத்தையும்” (fruit of the vine) எடுத்து, இவைகளைக் கொண்டு ஒரு புதிய நினைவுகூருதலை ஏற்படுத்தினார்; இந்தப் புதிய நினைவுகூருதலை ஆசரிப்பதன் வாயிலாக ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் விசுவாசத்தினால் “இரத்தம் தெளிக்கப்படுவதன்” வாயிலாகவும், விசுவாசத்தினால் அவரது மாம்சமானது “மெய்யானப் போஜனமென” புசிக்கப்படுவதன் வாயிலாகவும், அவர்களுக்கு உண்டான மாபெரும் நிஜமான கடந்துபோகுதலை ஆசரிக்கின்றவர்களாய் இருப்பார்கள். (யோவான் 6:55)
நம்முடைய ஆசரிப்பிற்கும், யூதர்களுடைய ஆசரிப்பிற்கும் சம்பந்தமில்லை; அவர்கள் “பண்டிகை வாரத்தினையே” ஆசரிக்கின்றனர்; நாமோ அவர்களது பண்டிகைக்கு முந்தின நாளில், உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கின்றதாக தேவ ஆட்டுக்குட்டியினுடைய மரணத்தினை நாம் ஆசரிக்கின்றோம். நாம் ஆசரிக்கின்ற தான நாளானது, முழுச் சுவிசேஷயுகத்தையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது; இதில் தலையாகிய கிறிஸ்து இயேசுவின் சரீரமானது முழுச்சபையானது அவரோடுகூட மனமுவந்து பலிச் செய்கிறவர்களாகப் பாடுபட வேண்டும். பண்டிகை வாரமானது, சீக்கிரத்தில் ஆயிரவருட யுகத்தில் வரவிருக்கின்ற மகிமையையும், சந்தோஷத்தையும் நமக்கு அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
இந்த நினைவுகூருதல் குறித்ததான நமது கர்த்தருடைய வார்த்தைகளானது: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்பதேயாகும். மேலும் அப்போஸ்தலனும்கூட “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” என்று கூறுகின்றார்; (1 கொரிந்தியர் 11:26) அதாவது அவர் தம்முடைய இராஜ்யத்தில் வல்லமையுடன் வந்து, உங்களை தம்மண்டை [R2593 : page 76] சேர்த்துக்கொள்ளுவது வரையிலுமாகும். அநேக கிறிஸ்தவர்கள், இந்த நினைவுகூருதலை பல்வேறு வேளைகளில், அதாவது வாரந்தோறுமாக, மாதந்தோறுமாக, காலாண்டுதோறுமாக, இன்னும் பல வேளைகளில் ஆசரிப்பதற்கான சுயாதீனம் காணப்படுவதாக அனுமானித்துள்ளனர்; ஆனால் ஆதித் திருச்சபையினருக்கு இசைவாகப் பார்க்கையில், நாம் மற்ற நிகழ்வுகளையெல்லாம் ஆசரிப்பதுபோலவே, இதையும், அதன் ஆண்டு நிறைவு நாளில் ஆசரிப்பதையே நமது கர்த்தர் தெரிவிக்கின்றார் என்று நாம் புரிந்துகொள்கின்றோம்; அதாவது “நீங்கள் 4-ஆம் ஜூலை அன்று ஆசரிக்கும்போதெல்லாம், இந்தத் தேசத்தினுடைய சுதந்திரத்தைத் தெரிவிக்கிறீர்கள்” என்று நாம் சொல்வதுபோலாகும்.
கடைசி இராப்போஜனத்தில் நமது கர்த்தருடைய மரணத்தினை, ஞாயிறுதோறும் நண்பகலில் ஆசரிப்பவர்கள், வாரந்தோறும் கர்த்தருடைய நாளன்று, ஆதித் திருச்சபையாரால் ஆசரிக்கப்பட்ட “அன்பின் விருந்துகளை” (அ) “அப்பம் பிட்குதலை,” நினைவுகூருதல் இராப்போஜனம் என்று தவறாய்ப் புரிந்திருக்கின்றனர்; இந்த “அப்பம் பிட்குதலானது” கர்த்தருடைய நாள்தோறும், நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்கான நினைவுகூருதலாகவும், அப்பம் பிட்குதல் மூலம் அவர்களது புரிந்துகொள்ளுதலின் கண்களை அவர் திறந்ததற்குமான நினைவுகூருதலாகவும் ஆதித் திருச்சபையாரால் ஆசரிக்கப்பட்டு வந்தது. சரியாய்ப் புரிந்துகொள்ளப்பட்டால் சந்தோஷகரமான வாரந்தோறுமுள்ள இந்த விருந்துகளில் எதுவும், நமது போதகருடைய துயரம் மற்றும் மரணத்திற்குமான வருடாந்தர நினைவுகூருதலுக்கு, ஒத்திருப்பதில்லை மற்றும் இந்த விருந்துகளில் “பாத்திரமும்” குறிப்பிடப்படுவதில்லை.
நமக்கான நமது மீட்பருடைய மரணத்திற்கும், அவரது பலியினுடைய புண்ணியத்தின் வாயிலாக மரணத்திலிருந்து, ஜீவனிடத்திற்கான நமது கடந்துபோகுதலுக்கும், “அவரோடுகூட மரிப்பதற்கும்” – அவரது “பாத்திரத்தில்” பானம் பண்ணுவதற்குமான நமது அர்ப்பணிப்பிற்குமான நினைவுகூருதலான, நினைவு கூருதல் இராப்போஜனத்தினை அலிகெனியிலுள்ள (Allegheny) சபையார், அலிகெனியிலுள்ள (Alegheny, Pa) பைபிள் ஹவுஸ் சேப்பலில் (Bible House Chapel) ஆசரிப்பார்கள். எங்களோடு கூடிடுவதற்குச் சௌகரியமுள்ள, சத்தியத்திலுள்ள நண்பர்களை அன்புடன் வரவேற்கின்றோம்; ஆனாலும் எங்கெல்லாம் உள்ளூர் கூடுகைகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளதோ அல்லது எங்கெல்லாம் இப்படிக் கூடிடுவதற்கு வாய்ப்புள்ளதோ, அவைகள் தவிர்க்கப்பட வேண்டாம் என்று நாம் புத்திமதிக் கூறுகின்றோம். இது கர்த்தருடைய ஜனங்களுடைய இருதயங்களானது நெருக்கமாய்க் கூடிடுவதற்கான ஏற்றக்காலப்பகுதியாகக் காணப்படுகின்றது; இன்னுமாக இந்த ஒரு காலங்களானது, கர்த்தருடைய பின்னடியார்கள் என்று தங்களைக் குறித்து அறிக்கைப் பண்ணிக்கொள்கின்ற யாவருக்கும் சோதனைக் காலங்களாகக் காணப்படுகின்றது; முற்காலத்து பேதுருவைப் போன்றவர்கள் வருடத்தினுடைய இந்த ஒரு காலப்பகுதியில் விசேஷமாய்ப் புடைத்தெடுக்கப்படுகின்றனர்.
வருடத்தினுடைய இந்த ஒரு காலப்பகுதியில் ஆதி சீஷர்களுக்கு நமது கர்த்தரினால் கொடுக்கப்பட்டதான புத்திமதியானது, இன்னமும் விசேஷித்த விதத்தில் பொருத்தமானதாகவே காணப்படுகின்றது; அது “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்!” என்பதேயாகும். இதை உணர்ந்தவர்களாகப் பழைய அமைப்புகளாகிய ரோமன் கத்தோலிக்க மற்றும் எப்பிஸ்கோப்பல் சபையார் இன்னமும் நினைவுகூருதலுக்கு முன்பு உபவாச (அ) லெந்து காலங்களைப் பெற்றிருக்கின்றனர்; இப்படியான உபவாசக் காலங்களுக்குள் சம்பிரதாயமாக இல்லாமல், சரியான ஆவியுடன் பிரவேசித்தல் என்பது, சரீர ரீதியிலும், ஆவிக்குரிய ரீதியிலும் அநேகருக்கு மிக உதவிகரமான வழக்கமாய் இருந்துள்ளது என்று நாம் நம்புகின்றோம்.
கர்த்தருடைய ஜனங்களால் ஆரம்பத்தில் ஆசரிக்கப்பட்டு வந்ததான நினைவுகூருதல் இராப்போஜனத்திற்குப்பதிலாக கணக்கீடு முறைமையின் சிறுமாற்றங்கள் காரணமாக “புனித வெள்ளி” என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது. கர்த்தருடைய இராப்போஜனத்தை மிகவும் அடிக்கடி புராட்டஸ்டண்டினர்கள் ஆசரிப்பதானது, உண்மையிலும், கொள்கையிலும் நமது கர்த்தருக்கு அருவருப்பானதாய்க் காணப்படுகின்றதான, போப்மார்க்கத்தினுடைய “பூசைபலி” எனும் ஆசரிப்பினுடைய அடிப்படையிலேயே ஆகும்; இந்தப் பூசைபலியானது, கல்வாரியில் நடைப்பெற்றதான பலி முழுக்கப் போதுமானதாய் இருக்கின்றது என்பதை மறுக்கின்றதாய் இருக்கின்றது.
எங்குமுள்ள கர்த்தருடைய ஜனங்கள், பாவத்திற்கான மாபெரும் பலியினுடைய நினைவுகூருதலாக இதைச் செய்வார்கள் என்றும், இதை வெளித்தோற்றமான நினைவுகூருதலாக மாத்திரமல்லாமல், அதேவேளையில் விசுவாசத்தினால், தங்கள் இருதயங்களில் கர்த்தரைப் [R2594 : page 77] புசிக்கிறவர்களாகவும், “பாத்திரத்தில்” பங்கெடுக்கையில், அவரிடத்தில் மரணம்வரையிலான தங்கள் அர்ப்பணிப்பை மீண்டுமாக உறுதிப்படுத்துபவர்களாகவும் இருப்பார்கள் என்றும் நாம் நம்புகின்றோம். மேலும் விவரங்களுக்கு R5191-ஐ பார்க்கவும்.
இதைச் செய்யும்படிக்கு அவரது அருமையான நாமத்தில் கூடிடுகின்றதான இரண்டு (அ) மூன்று பேர்கள் எங்கெல்லாம் கூடுகின்றார்களோ இப்படியான – ஒவ்வொரு சிறுகூட்டத்தாருடைய நியமிக்கப்பட்ட காரியதரிசியிடமிருந்து உடனடியாக அறிக்கைகளை, அஞ்சல் அட்டைகள் வாயிலாகப் பெற்றுக்கொள்வதில் நாம் மகிழ்ச்சியாயிருப்போம். தொழில் காரியங்களினால் அந்த விலையேறப்பெற்ற தருணத்தினுடைய இருதய “ஐக்கியமானது” குலைக்கப்படாதபடிக்கு, ஒழுங்குகளை முன்கூட்டியே செய்துவிடுங்கள். ஜெபத்திலும், ஐக்கியத்திலும் மாத்திரமாக நாம் அனைவரும் ஒன்றாய்க் காணப்படுவது மாத்திரமல்லாமல், விடியலின் துதி பாடல்களிலுள்ள 1, 23 மற்றும் 122-ஆம் துதிப் பாடல்களையும், முடிந்த அளவுக்குப் பழகிக்கொள்வோமாக.