R4146 – ஜீவ அப்பம் நானே

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R4146 (page 72)

ஜீவ அப்பம் நானே

I AM THE BREAD OF LIFE

யோவான் 6:26-37

“இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே என்றார்.”

அற்புதக்கரமாக அருளப்பட்டதான போஜனத்தைப் புசித்தப் பிற்பாடு ஜனக் கூட்டத்தார், தங்களுடைய வழக்கத்தின்படியே, தங்களது வெளி வஸ்திரங்களினால் தங்களைப் போர்த்திக்கொண்டு, புல்வெளியில் படுத்துக்கொண்டார்கள். இன்றும்கூடப் பாலஸ்தீனியாவிலுள்ள ஏழை மக்கள் பிரயாணம் பண்ணுகையில் இப்படியாகப் படுத்துக்கொள்வது வழக்கமாய்க் காணப்பட்டு வருகின்றது. காலையில் அவர்கள் தங்கள் உபகாரியைத் தேடினார்கள்; இயேசு அதே பகுதிகளில்தான் காணப்படுவார் என்பதை எதிர்ப்பார்த்தவர்களாகவும், அவர் தங்களுக்கு அற்புதகரமாய்க் காலை உணவையும் கொடுப்பார் என்று சந்தேகத்திற்கிடமின்றி எதிர்ப்பார்த்தவர்களாகவும் அவரைத் தேடினார்கள். ஆனால் அவரையோ (அ) சீஷர்கள் வந்ததான படகையோ காணமுடியாததினால், அவர்கள் எருசலேமை நோக்கி பிரயாணித்தவர்களானார்கள்; ஆனாலும் இன்னும் பிரபலமிக்க மேசியாவைக் கவனமாய்ப் பார்த்துக்கொண்டே பிரயாணித்தவர்களாய்க் காணப்பட்டனர். இறுதியில் கர்த்தரையும், அவரோடுகூட இருந்தவர்களையும் கண்டடைந்தபோது, தாங்கள் அவரைத் தேடினது குறித்துக் கூறினார்கள்; மற்றும் இங்கு நமது கர்த்தர் கொடுத்த பதிலோடுதான் நம்முடைய இன்றைய பாடம் ஆரம்பமாகுகின்றது “நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் இலவசமாய் இரா உணவு புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள்” என்பதாக இயேசுவின் பதில் காணப்பட்டது. இங்குக் காரியங்களை மிகவும் அழுத்தித் தெரிவிக்காததிலுள்ள கர்த்தருடைய ஞானத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. அவர் அற்புதம் செய்தபோது, எந்தப் பிரசங்கமும் பண்ணவில்லை, மாறாக அற்புதம் அதன் தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அனுமதித்தார்; ஆனால் இப்பொழுதோ மற்றுமொரு அற்புதத்தை நிகழ்த்துவதற்குப் பதிலாக, தமது அற்புதத்தை ஆதாரமாகக்கொண்டு ஒரு பிரசங்கம் பண்ணினார்.

அவரது கண்டனமானது, கடுமையானதாக இல்லை, எனினும் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருந்தது; அதாவது “அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல; நித்திய ஜீவன் கொடுக்கும் போஜன வகைக்காகவே நாடுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் ஆசீர்வாதத்திற்கான அவரது நியமிக்கப்பட்ட கருவியாகக் குறித்திருக்கின்றார், சுட்டிக்காட்டியிருக்கின்றார், முத்திரித்திருக்கின்றார்” என்று இயேசு கூறினார். இவ்வார்த்தைகளுக்குள் அடங்கியுள்ளதான படிப்பினையானது தெளிவானதாகவும், அன்றுபோல் இன்றும் பொருந்தக்கூடியதாகவே காணப்படுகின்றது. ஒட்டுமொத்த உலகத்திற்கான பிரச்சனை என்னவெனில், அவர்கள் ஒன்றில் பூமிக்கடுத்த இலட்சியம் உடையவர்களாகவோ (அ) இலட்சியம் ஏதும் இல்லாதவர்களாகவோ காணப்படுகின்றனர் மற்றும் இவை இரண்டிலும், இலட்சியம் ஏதும் இல்லாத நிலைமையே மோசமான நிலைமையாகக் காணப்படுகின்றது. இலட்சியம் உடையவர்களும், வாழ்க்கைக்கென்று நோக்கம் உடையவர்களுமான ஜனங்கள்தான் எதையாகிலும் தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் நிறைவேற்றுகின்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் உலக ஞானிகளாக இருந்து, ஒருகாலத்தில் கொஞ்சம் புல் முளைத்த இடத்தில், அதிகம் புற்கள் முளைக்கப்பண்ணினவர்களாகவும், தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்கூடங்கள் கட்டினவர்களாகவும், பெரிய வியாபார நிறுவனங்களை நடத்தினவர்களாகவும் காணப்படுகின்றனர் மற்றும் சமுதாயப் பண்பாட்டினுடைய உயர்வுக்கு இவர்களுடைய பங்களிப்பு மிகவும் பெரியதாய் இருக்கின்றது. இவர்கள் ஐசுவரியவான்களாக வேண்டும் என்று (அ) ஞானவான்களாக வேண்டும் என்று (அ) புகழ்மிக்கவர்கள்/பிரபலமிக்கவர்களாக வேண்டும் என்று இலட்சியம் உடையவர்களாகக் காணப்படுகின்றனர் மற்றும் இந்த இலட்சியங்களானது, இவர்களைக் கிரியைச் செய்திட தூண்டுகின்றது.

ஆனால், அந்தோ பரிதாபம்! பெரும்பான்மையான மனுக்குலமானது, மிகவும் மோசமான நிலைமையில் காணப்படுகின்றனர்; காரணம் இவர்கள் இலட்சியம் ஏதும் அற்றவர்களாக, ஜீவிப்பதற்கெனப் புசிப்பவர்களாகவும், புசிப்பதற்கென ஜீவிப்பவர்களாகவும் மாத்திரம் காணப்படுகின்றனர்; அதாவது உயர் அறிவுள்ள விலங்குகளாக மாத்திரமே ஜீவிக்கின்றனர். அழிந்துபோகின்றதான உணவிற்காக இவர்கள் உழைக்கின்றனர்; இதுவே இவர்களது இலட்சியமாகவும், குறிக்கோளாகவும் காணப்படுகின்றது. மேலும் சிலசமயம் குடிப்பதற்காகவே உழைக்கின்றனர்; இது இவர்களிடமுள்ள அனைத்தையும் திருடிப்போட்டுவிடுகின்றதாய் இருக்கின்றது. இந்த யுகம் முழுவதுமுள்ள தம்முடைய பின்னடியார்களை உள்ளடக்கி, தாம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்கள், தமது வாயின் வார்த்தைகளிலுள்ள செய்தியைக் கவனிக்கும்படிக்குக் கர்த்தர் விரும்புகின்றார்; அதென்னவெனில்: தற்காலத்தினுடைய சூழ்நிலைகளின்கீழ், அழிந்துபோகக்கூடிய உணவு என்பது அவசியமாய்க் காணப்பட்டாலுங்கூட, தம்முடைய பின்னடியார்களாகக் காணப்படுகின்றவர்கள், தங்கள் பரம பிதா தங்களது தேவை இன்னது என்று அறிவார் என்பதையும், கவலைக்கிடமான தேவையான நிலைக்குள் அனுமதிக்கமாட்டார் என்பதையும் நினைவுகூருவார்கள். இப்படியாக அழிந்துபோகிற உணவுக்காகக் கவலைக் கொள்ளாததினால், அவர்கள் தங்களது கவனத்தைப் பூமிக்குரியவைகள்மீது இல்லாமல், பரலோக இலட்சியங்களிடத்திற்குத் திருப்பிட முடியும்; இந்தப் பரலோக இலட்சியங்கள் என்பது, அவர்களால் விரும்பப்படுகின்றதான சிறந்தவைகளாகவும், பிரம்மாண்டமானவைகளாகவும் இருக்கின்றன; ஏனெனில் இப்படிப்பட்டதான பாக்கியமான ஜனங்கள், நித்தியமான ஜீவனுக்குரிய தெய்வீக ஆசீர்வாதத்தின் எல்லைக்குள் கடந்துவருகின்றவர்களாக இருக்கின்றனர். எந்த ஆகாரமானது, உணவானது இத்தகையதோர் (பரலோக) இலட்சியங்களை அவர்களிடத்தில் உருவாக்குகின்றதோ, மற்றும் அதன் திருப்திக்கு நேராக வழிநடத்துகின்றதோ, அதுவே உண்மையான ஆகாரமாகவும், அடையத்தக்கதாக அனைத்து முயற்சிகளை எடுப்பதற்குப் பாத்திரமான ஆகாரமாகவும் உள்ளது.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்

பிரசங்கமானது அதன் பலனைக்கொணர்ந்தது; தாங்கள் இலட்சியமற்ற வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் (அ) தங்களது இலட்சியங்களானது பூமிக்கடுத்தவைகளாகவும் மற்றும் இதனால் தாங்கள் மரிக்கையில், தங்கள் இலட்சியமும் அழிந்துபோவதாகக் காணப்படுகின்றது என்பதை ஜனங்கள் உணர்ந்தவர்களாக, தெய்வீகத் தயவைக் கொண்டுவருகிறதும், தங்களுக்கு நித்திய ஜீவனை அருளுகின்றதுமான உணவைப் பெற்றுக்கொள்வதற்குத் தாங்கள் எந்தவகை கிரியையை நடப்பிக்கும்படிக்கு அவர் குறிப்பிடுகின்றார் என்று கர்த்தரிடம் கேட்டார்கள். தேவனுக்கேற்ற கிரியை என்று நீர் குறிப்பிடுகிறீரே அதென்ன? என்று அவரிடம் கேட்டார்கள். இக்காரியத்தையே அவர்கள் கேட்க வேண்டுமென்றும், மற்றும் [R4146 : page 73] இதற்கே பதிலளிக்க வேண்டுமென்றும் இயேசு விரும்பினார். தாம் தேவனால் அனுப்பப்பட்ட மேசியா என்று தம்மேல் அவர்கள் உடனடியாக விசுவாசம் வைப்பதே அவர்களுக்கான கிரியையாய் இருக்கின்றது என்று அவர் பதிலளித்தார். ஆனால் அவர்களோ: “உம்மை மேசியா என்று நாங்கள் எண்ணுவதற்கு, எங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? நீர் மேசியா என்பதை நிரூபிக்கிறதான தீர்க்கமான அடையாளம் எதையாகிலும் எங்களுக்கு நடப்பியும், அப்போது நாங்கள் விசுவாசிப்போம். நீர் நேற்று சாயங்காலம் ஐந்து அப்பம் மற்றும் இரண்டு சிறு மீன்களைக்கொண்டு ஐயாயிரம் பேராயிருந்த எங்களுக்குப் போஷித்தக் காரியமானது, உம்முடைய மேசியாத்துவத்தை ஒன்றும் நிரூபிப்பதில்லை. மேசியா மோசேபோன்று காணப்படுவார்; மோசேயைப்பார்க்கிலும் பெரியவராய் மாத்திரம் காணப்படுவார் மற்றும் நீர் பண்ணின அற்புதமானது, மோசேயினால் நிறைவேற்றப்பட்டதான சில அற்புதங்களைக்காட்டிலும் பெரியதாய் ஒன்றும் இல்லை. ஐயாயிரம் பேருக்கு ஒருநேர உணவுக் கொடுப்பதற்கு, உம்மிடத்தில் (5) அப்பங்களும், (2) மீன்களும் இருந்தன; ஆனால் மோசேயோ, எந்த உணவையும் கையில் பெற்றிருக்காமலேயே எங்கள் பிதாக்களை வருடக்கணக்காக வனாந்தரத்தில் போஷித்தார். “வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார்” என்று எழுதியிருக்கிறபடி மோசே அருளியதான மன்னாவானது, வானத்திலிருந்து வந்ததாய் இருந்தது” என்றார்கள். சில விதங்களில் பார்க்கையில் அவர்கள் நன்கு சிந்தனை செய்கிறவர்களாகத் தெரிகின்றனர்; அவர்கள் மிகவும் எளிதாய் ஒன்றும் மனம் மாற்றப்பட முடியாது; இயேசுதான் மேசியா என்று விசுவாசம் வைப்பதற்கு முன்னதாக, தங்களுக்கு நன்கு நம்பிக்கை உண்டாக வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்; போலி மேசியாக்களினால் ஏமாற்றப்பட்ட மற்றவர்களைக் குறித்து அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள்; வேதவாக்கிய பதிவுகளை உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருக்கவும், மற்றும் தங்கள் மேசியாவென ஏற்றுக்கொள்ளப்படுவர் மோசேயைக்காட்டிலும் பெரியவராக இருந்து, தங்களையும், அனைத்து ஜனங்களையும் போஷிக்க முடிகிறவராகவும், அதுவும் மோசேயினால் வனாந்தரத்தில் கொடுக்கப்பட்டதைக்காட்டிலும் மேன்மையான அப்பத்தினால் போஷிக்க முடிகிறவராகவும் இருக்கின்றாரா என்று பார்க்கவேண்டுமென மனதில் எண்ணிக்கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

இப்பொழுது தம்முடைய போதனையை விளக்குவதற்கும், தமக்கும், மோசேக்கும் இடையிலான ஒப்புமை என்பது, யார் மிகச் சிறந்த வகையான பூமிக்கடுத்த உணவையும் மற்றும் அதை அதிகமாகவும் கொடுக்கப்போகிறார்கள் என்பதாக இல்லாமல், மாறாக தாம் பரலோக ஜீவனை அவர்களுக்குப் பெற்றுத் தருகின்றதான ஒரு பரலோக உணவை, ஓர் ஆவிக்குரிய உணவை அருளுவார் என்பதைக் காண்பித்துக் கொடுப்பதற்குமான இயேசுவின் வேளைவந்தது. ஆகையால் மன்னாவை மோசே கொடுத்தார் என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்ததிலுள்ள தவறினை, முதலாவதாக அவர்களது கவனத்திற்குக் கொண்டுவரும் விதமாக, வானத்திலிருந்து வந்த அப்பத்தை, மோசே கொடுக்கவில்லை, மாறாக என் பிதாவே கொடுத்தார்; தவறுதலாய் இன்னொருவருக்குக் கீர்த்தியைச் சாற்றாதீர்கள். இஸ்ரயேலுக்கு நியாயப்பிரமாணிக்கன் எனும் விதத்தில் மோசே உண்மையில், கர்த்தருடைய கனமிக்க ஊழியக்காரன்தான், ஆனாலும் அவர் மன்னாவை வழங்கவோ (அ) அனுப்பி வைக்கவோ இல்லை. வனாந்தரத்தில் காணப்படுகையில் மன்னாவை அனுப்பி வைத்ததான என் பிதா, இப்பொழுது வேறொரு வகையான அப்பத்தை, வேறொரு வகையான உணவை, வேறொரு வகையான வானத்திலிருந்து வந்த சொல்லர்த்தமானதாய்க் காணப்படாமல், மாறாக அடையாளமாய்க் காணப்படுகின்றதான – மன்னாவை அனுப்பியுள்ளார். தம்முடைய ஜனங்களுக்குத் தேவன் இப்பொழுது அனுப்பவிருக்கும் மன்னாவும், வானத்திலிருந்து இறங்கி வந்ததாகக் காணப்படுகின்றது மற்றும் அது சில நாட்களுக்கென்று மாத்திரமல்லாமல், சில வருடங்களுக்கென்றில்லாமல், மாறாக நித்திய காலமும், முழு மனுக்குலத்திற்குமான ஜீவ அப்பமாக இருக்கும்படிக்கு நோக்கம் கொண்டிருக்கப் பெற்றுள்ளது என்றார்.

இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும்

“இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தர வேண்டும்” என்பதான அவர்களது பதிலை வைத்துப்பார்க்கும்போது, பாடங்கள் அவர்களுடைய இருதயங்களைத் தொட்டுள்ளது என்று நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. அவர்களால் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைக்கும், ஜீவத்தண்ணீர் எனும் அடையாள வார்த்தையினால் ஜீவன் எனும் அன்பளிப்பை/ஈவைக் குறித்துக் கர்த்தர் சமாரியா ஸ்திரீயிடம் சொன்னபோது, அவள்: “அந்தத் தண்ணீரை எனக்குத் தர வேண்டும்” என்று கூறின வார்த்தைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதை நாம் கவனிக்கின்றோம். இரண்டு தருணங்களின்போதான பதிலானது, அக்காலக் கட்டத்தில் யூதர்களுக்கும் மற்றும் சமாரியர்களுக்கும், தங்களுக்கு இருப்பதைக் காட்டிலும் மேலான ஏதோ ஒன்றிற்கான ஏக்கம் இருந்துள்ளதை நமக்குக் காண்பிக்கின் றதாய் இருக்கின்றது. “மனித மனங்களில் எல்லையில்லாத ஏக்கங்கள் உள்ளன”. – நித்தியமான ஜீவனுக்கான ஏக்கங்கள் உள்ளன என்று ஒரு கவிஞன் குறிப்பிட்டிருக்கின்றார். நெடுங்காலத்திற்கு முன்புள்ள சரித்திரங்களானது, எவ்வாறு அனைத்துத் தேசங்களிலுமுள்ள ஜனங்கள், தற்கால ஜீவியத்தை நீடிக்கத்தக்கதாகவும், கூடுமானால் மரணத்தை முற்றிலுமாக ஒழித்துப்போடத்தக்கதாகவும் ஆரோக்கியம் தரும் உணவுகளையும், ஆரோக்கியம் தரும் ஊற்றுகளையும் நாடினார்கள் என்பதை நமக்குத் தெரிவிக்கின்றது. இது இன்னமும் அடையப்பெறவில்லை என்பதை அனைவருமே உணர்ந்துள்ளனர் மற்றும் இதற்கான போராட்டம் இன்னமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. ஜீவன் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்பதான இத்தகைய ஏக்கங்களினுடைய தாக்கத்தினாலேயே மருந்து மாத்திரைகள் உண்டாக்கப்படுகின்றன. ஜீவனை நீடிக்கப்பண்ணுவதற்கான மனித மனதினுடைய இத்தகைய ஏக்கங்களுக்காக நாம் மனமகிழ்வுறுகிறோம்; இந்த ஏக்கமே இப்பாடத்தில் இடம்பெறும் சம்பவத்திலும், சமாரியா ஸ்திரீயின் சம்பவத்திலும், கர்த்தர் வழங்கும் நித்திய ஜீவன்பற்றி, அதிகமாய் விசாரிப்பதற்கு அடிப்படையாய் அமைகின்றது.

“இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்” (யோவான் 6:35) என்றார். மீண்டுமாக நமது கர்த்தருடைய வார்த்தைகளுக்கு, ஜனங்களுடைய புரிந்துகொள்ளுதலின் ஆழத்தைக்காட்டிலும், ஆழம் இருந்தது என்பதில் ஐயமில்லை. ஜனங்களுடைய திகைப்பை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது; அப்போது பெந்தெகொஸ்தே நாள் வராததினாலும், “இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை” என்பதினாலும், அவர்கள் அப்பொழுது ஆவியினால் ஜெநிப்பிக்கப்படவில்லை என்பதை நாம் நினைவுகூருகையில், அவர்கள் மேல் நமக்கு அனுதாபம் ஏற்படுகின்றது (யோவான் 7:39). இந்தக் கேள்வியானது, இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்கள் அநேகருக்கு மிகவும் புரியாத ஒன்றாக உள்ளது மற்றும் ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எவரும் இதைத் தெளிவாய்ப் புரிந்துகொள்ளுவதில்லை. நம்மால் முடிந்தமட்டும், [R4147 : page 73] அவ்வசனப்பகுதியை ஆராய்வதன்மூலமாக, காரியத்தைத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். இங்கு இயேசு தாம் பரலோகத்திலிருந்து இறங்கி வந்திருக்கின்றார், அதாவது மேகத்திலிருந்து/வானத்திலிருந்து இறங்கி வந்ததான மன்னாவைப்போன்று மாத்திரம் இல்லாமல், மாறாக உலகம் உண்டாவதற்கு முன்னதாக, பிதாவோடு தமக்கு இருந்த மகிமையைத் துறந்த நிலையிலும், தமது முந்தைய ஆவியின் சுபாவத்திலிருந்து, இப்போது மனிதனாகிய கிறிஸ்து இயேசுவாக, தாம் அவர்களுக்கு முன்பாக நின்று, பேசிக்கொண்டிருக்கின்றதான பூமிக்குரிய சுபாவத்திற்குத் தாழ்த்தப்பட்ட நிலையிலும் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்திருக்கின்றார் என்று விவரித்தார். ஆனால் தாம் உயிரோடிருக்கையில், அவர்களால் அவரைப் புசிக்க முடியாது; “என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது” என்று அவர் கூறினபோதும், அவர்களால் அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல், “இந்த மனுஷன் தன்னுடைய மாம்சத்தைப் புசிப்பதற்கு நமக்குக் கொடுப்பாரோ? இப்படியான அர்த்தத்தில்தான் இவர் பேசினாரோ? என்று யோசித்தவர்களானார்கள். பாடம் அவர்கள் கிரகிக்க முடியாதளவுக்கு மிகவும் ஆழமாய்க் காணப்பட்டது; ஆனால் இது நமக்கு மிகவும் ஆழமாய்க் காணப்படாததற்குத் தேவனுக்கு நன்றி. “இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள்” என்று கூறிச் சீஷர்களில் சிலர் அவரைவிட்டுப் பிரிந்து, அவருடனேகூட நடவாமல் போய்விட்டது போலவே, இன்றும்கூடக் கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் அடிப்படையாக விளங்கும் இவ்வுபதேசத்தை, ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் காணப்படுகின்றனர். இந்த ஒரு பாடத்தினை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள், இதன்மீது கட்டியெழுப்பிக் காணப்படுகின்றதான மற்றப் பாடங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாய்க் காணப்படுவார்கள். “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே” என்று நமது கர்த்தர் இன்னும் விவரித்துக் கொடுத்தார். அவர் தமது மாம்சத்தைக் கொடுத்துக்கொண்டே இருந்தபோதிலும், அவர்களுக்கென்று ஊழியம் புரிவதில் அந்த மாம்சத்தின் சத்துவத்தை, அதன் பலத்தை எடுத்துப்பயன்படுத்திக் கொண்டிருந்தபோதிலும், அவரது மாம்சத்தை (இச்சம்பவத் தருணத்தின்போது) அவர் இன்னமும் கொடுக்கவில்லை; மரணத்தில், அதாவது சிலுவையின் மரணத்தில், அவர் தம்முடைய யாவையும் ஒப்படைப்பதன் மூலம், தமது பலியின் வேலையை அவர் நிறைவேற்றுவார். இதை அவர் கொஞ்சங்காலம் கழித்துச் செய்து முடித்தார்.

நாம் அவரது மாம்சத்தைப் புசிக்கின்றோம்

நாம் சொல்லர்த்தமாய், இயேசுவின் மாம்சத்தைப் புசிப்பதில்லை; அதை விசுவாசத்தினாலே புசிக்கின்றோம்; அதாவது நமக்காக மரணத்தில் அவர் ஒப்படைத்ததான, அவரது மாம்சத்தினுடைய புண்ணியத்தினை, பயனை, விசுவாசத்தின் வாயிலாக நாம் நமதாக்கிக்கொள்கின்றோம். ஏன் இப்படியாக? மற்றும் அவர் எதை ஒப்படைத்தார்? மற்றும் அதில் நாம் எவ்வாறு பங்கடைவது? நம்முடைய பதில் என்னவெனில்…. மனுக்குலத்தின் தலையாகிய ஆதாம், கீழ்ப்படியாமையின் காரணமாக, தனது ஜீவனை இழந்துபோனபடியால், தேவனுடன் இசைவாய்க் காணப்படுகின்றதான ஒரு பரிபூரணமான சந்ததியை இனப்பெருக்கம் பண்ணிடுவதற்கும், நித்திய ஜீவனைப் [R4147 : page 74] பெற்றுக்கொள்வதற்குரிய சிலாக்கியமுடையவராய் அவர் இருப்பதற்கும் பதிலாக, அவரது சந்ததியும் அவரைப் போலவே மரிக்கின்றவர்களாகவும், நித்திய ஜீவனுக்குப் பாத்திரமற்றவர்களாகவும் காணப்பட்டனர். தேவனுடைய ஏற்பாட்டில், மீட்பிற்கான ஒரு பலி அவசியமாயிருந்தது; அதாவது ஆதாமின் ஸ்தானத்தை ஒருவர் எடுத்துக்கொண்டு, ஆதாம் விடுதலையடையத்தக்கதாகவும், ஆதித் தண்டனைத் தீர்ப்பிலிருந்து அவரது சந்ததியை விடுவிக்கத்தக்கதாகவும், அவருக்காக மரிப்பதும் அவசியமாயிருந்தது. பரிபூரணமான நிலையிலும், நீதிக்கு முன்பாக தனது சகோதரனுக்காக ஒரு மீட்கும்பொருளைக்கொடுக்க முடிந்த நிலையிலும் எந்த ஒரு மனுஷனும் காணப்படவில்லை… ஏனெனில் அனைவரும் பாவிகளாகவும், நித்திய ஜீவனுக்கு அவசியமெனத் தேவன் அங்கீகரிக்கின்றதான பரிபூரணத்திற்கும், மகிமைக்கும் குறைவுப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தேவைகளைச் சந்திப்பதற்கெனத் தேவன் தம்முடைய குமாரனை ஏற்பாடு பண்ணினார்; குமாரன் தம் முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் பொருட்டு, நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படிக்கு, தாமாய் முன்வந்து, மகிழ்ச்சியுடன், அநீதியுள்ளவர்களுக்குப்பதிலாக, நீதியுள்ளவராய் மரித்தார் (1 பேதுரு 3:18). ஆகையால் நமது கர்த்தருடைய மாம்சம் (அ) மனித சுபாவமானது, ஆதாமுக்காகவும், அவரது சந்ததிக்காகவும் கொடுக்கப்பட்டது மற்றும் மனுக்குலத்தின் உலகமானது, மரணத்தண்டனைத் தீர்ப்பின் கீழிலிருந்து மீட்கப்படத்தக்கதாக, அவரது மாம்சம், உலகத்தின் ஜீவனுக்காகக் கொடுக்கப்பட்டதாயிருந்தது. இப்படியாக இயேசு, தேவனுடைய கிருபையினால், ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தவராயிருந்தார் மற்றும் நாம் அனைவரும் அழிவுக்குரிய வஸ்துக்களாகிய பொன் மற்றும் வெள்ளியினால் மீட்கப்படாமல், மாறாகக் குற்றமில்லாத, மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே (ஜீவனாலே) மீட்கப்பட்டிருக்கின்றோம் (1 பேதுரு 1:18,19).

கிறிஸ்து மாம்சமாக்கப்படுவதின் அவசியம் என்ன என்றும், மரணத்திற்குள்ளாகக் கடந்து செல்வதின் மூலமாக, உலகத்தின் ஜீவனுக்காக, கிறிஸ்து தம்முடைய மாம்சத்தைக் கொடுக்க வேண்டியது, அவருக்கு எப்படி அவசியமாயிருந்தது என்றும் நாங்கள் இங்கு அறிந்துகொண்டோம், எனினும் அவரது மாம்சத்தை நாங்கள் எவ்வாறு புசிப்பது? என்று எவரேனும் கேள்வி எழுப்புகின்றீர்களா? ஆ! அடையாளமான வார்த்தைகளில் கொடுக்கப்பட்டதான இக்காரியத்தை, நாம் புரிந்துகொள்ளும்போது, இது அருமையாயும், எளிமையாயும், அர்த்தமுள்ளதாயும் தோன்றும் என்று நாம் பதிலளிக்கின்றோம். கர்த்தருடைய மாம்சத்தைப் புசிக்கும் காரியமானது, அவரது பலியினாலான நன்மையை அடையும் அனைவரின் விஷயத்திலும், தனிப்பட்ட காரியமாய்க் காணப்படுகின்றது. புசித்தல் என்பது, விசுவாசத்தின் மூலம் சொந்தமாக்கிக்கொள்வதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஆகையால் மீட்பு குறித்த புரிந்துகொள்ளுதலுக்குள் ஒருவன் வந்து, அதை விசுவாசித்த நிலையில், ஜெபத்தில் தேவனிடத்தில் கடந்துபோய், விசுவாசத்தின்மூலமாக தனது பாவங்களுக்கான மன்னிப்பையும், தேவனோடு ஒப்புரவாகுதலையும் ஏற்றுக் கொள்கையில், அவன் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசிக்கின்றவனாகுகின்றான்; அவன் நமது கர்த்தருடைய மாம்சம் (அ) பலியானது பெற்றுத்தந்ததான அந்த நன்மைகளில் (அ) அனுகூலங்களில் பங்கடைபவனாகுகின்றான்.

நாம் ‘புசிப்பதன்’ மூலம் நீதிமானாக்கப்படுதல்

இப்படியாக விசுவாசத்தின் வாயிலாகப் புசிப்பதன் விளைவாக, நமது கர்த்தர் பரிபூரண மனிதனாகப் பெற்றிருந்ததான சிலாக்கியங்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் ஒருவன் தனதாக்கிக்கொள்கின்றான்; இது மனித தளத்திலான நம்முடைய நீதிமானாக்கப்படுதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது மற்றும் நமது பாவங்கள் கிருபையாக மூடப்பட்ட நிலையில், நமக்குத் தேவனுடன் உறவு காணப்படுகின்றது மற்றும் விலையேறப்பெற்ற இரத்தத்தின் மீதான விசுவாசத்தினால், நாம் தேவனிடத்தில் சந்தோஷம், சமாதானம் மற்றும் ஐக்கியம் பெற்றுக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றோம். நாம் பலம்மேல் பலமடையத்தக்கதாகவும், நமது கர்த்தருக்குச் சொந்தமானதும், ஆனால் அவர் நமக்காகவும், ஆதாமின் சந்ததியார் அனைவருக்காகவும் ஒப்படைத்துவிட்டதான அருமையான ஆசீர்வாதங்கள், சிலாக்கியங்கள், உறவுகள் மற்றும் தெய்வீகத் தயவுகளை அதிகமதிகமாய் நாம் நமதாக்கிக்கொள்ளத்தக்கதாகவும், நாம் தொடர்ந்து புசிக்க வேண்டும். இன்னுமாகப் புசித்தலினாலான சரியான தாக்கத்திற்குள்ளானவர்கள் கர்த்தருக்கு அருகாமையில் ஈர்க்கப்பட்டு, தங்களுடைய அனைத்தையும் அவருக்கென்று முழுமையாய் அர்ப்பணிக்கத்தக்கதாக வழிநடத்தப்படுபவர்கள், அவரது இரத்தத்தைப் பானம்பண்ணுவதற்கான இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய விசேஷித்த அழைப்பினைப் பெற்றுக்கொள்கின்றனர். வேதவாக்கிய மொழிநடையில், இரத்தம் என்பது ஜீவனாய் இருக்கின்றது; ஆகையால் யூதர்கள், பொதுவாய் இரத்தத்தைப் பானம் பண்ண தடைப்பண்ணப்பட்டவர்களாய் இருந்தனர்; அப்படிப் பானம்பண்ணுவது என்பது ஒரு நபர் (அ) ஜீவராசியினுடைய மரணத்திற்கு அவர்களைப் பொறுப்பாளி (அ) குற்றவாளியாக்குகின்றது. ஆகையால்தான் யூதர்கள் நமது கர்த்தரைக் குறித்து, “இவருடைய இரத்தப்பழி எங்கள்மேல் இருப்பதாக”. “இவரது மரணத்திற்கான பொறுப்பினை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்” என்றார்கள்.

ஆகையால்தான், இராப்போஜனத்தின் பாத்திரத்தில் அடையாளமான விதத்தில் கிறிஸ்துவினுடைய இரத்தத்தில் பங்குகொள்பவர்கள், அதன் உட்பொருளைச் சரியாய்ப் புரிந்து பங்குகொள்ளவில்லையெனில், அவர்கள் தாங்கள் கிறிஸ்துவின் இரத்தத்தின் விஷயத்தில் குற்றவாளிகளாக இருக்கின்றார்கள் என்றும், கிறிஸ்துவினுடைய மரணத்தின் விஷயத்தில் குற்றவாளிகளாக இருக்கின்றார்கள் என்றும் அடையாளமாய்த் தெரிவிப்பவர்களாய் இருப்பார்களென அப்போஸ்தலனும் விவரித்துள்ளார். அதன் உட்பொருள் என்ன? நமது பதில் என்னவெனில், இது குறித்து கர்த்தர் கடைசி இராப்போஜனத்தின்போது, தம்முடைய சீஷர்களிடத்தில் பின்வருமாறு கூறியதில் குறிப்பிட்டுள்ளார்: “இந்தப் பாத்திரம் என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்.” “இந்தத் திராட்சப்பழரச (fruit of the vine) பாத்திரமானது, என்னுடைய இரத்தத்தை, என்னுடைய மரணத்தைக்குறிக்கின்றதாய் இருக்கின்றது; இதனாலேயே புதிய உடன்படிக்கையானது, இறுதியில் முத்திரிக்கப்படும் மற்றும் என்மேல் விசுவாசமாயிருக்கிற நீங்கள், என்னோடுகூட இதில் பங்குகொள்ளும்படிக்கு, உங்களை நான் அழைக்கின்றேன்; அதுவும் என்னுடைய மரணத்திற்குக் காரணமாய் இருந்தவர்கள்போல், நீங்கள் இதில் பங்குகொள்ளாமல், மாறாக தங்கள் ஜீவனை தானாய் முன்வந்து ஒப்புக்கொடுத்து, இந்த மரணத்தில், இந்தச் சுயத்தைப் பலிச்செலுத்துதலில் என்னோடுகூட வந்து இணைந்து கொண்டவர்களைப்போன்று பங்குகொள்பவர்களாய் இருங்கள். இந்தப் பாத்திரத்தில் நீங்கள் என்னோடுகூடப் பங்குகொள்ளும் போது – அது நான் என் ஜீவனை ஒப்புக்கொடுத்ததுபோன்று, நீங்களும் உங்கள் ஜீவியங்களை ஒப்புக்கொடுப்பதைக் குறிக்கின்றதாயிருக்கும் மற்றும் பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிக்கப்போகின்றதான புதிய உடன்படிக்கையினை நிறுவுகின்றதும், மாபெரும் பலி, மாபெரும் ஜீவியம் ஒப்புக்கொடுக்கப்படுவதைக் குறிக்கின்றதுமான இந்தப் பாத்திரத்தில் நீங்கள் என்னோடுகூடப் பங்காளிகளாகுவதையும் குறிக்கின்றதாய் இருக்கும்.”

ஆகையால் பரிசுத்த ஆவியினுடைய வழிக்காட்டுதலின் கீழ், அப்போஸ்தலனுடைய வார்த்தைகள்மூலமாக, நமது கர்த்தர் (இப்பாடத்தின் சம்பவத்தில்) அந்த ஜனங்களிடம் பேசின மற்றும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாத அந்த வார்த்தைகளுக்கான அர்த்தத்தின் ஆழத்தை நம்மால் காணமுடிகின்றது. நமது கர்த்தர் இவ்வார்த்தைகளை யூதர்களிடம் பேசியிருந்தபோதிலும், அவர்களிடமிருந்து அவ்வார்த்தைகளானது கடந்துவந்த நமக்கே, மற்றும் அவ்வார்த்தைகளை முழுமையாய்ப் புரிந்துகொள்கின்றதான நமக்கே அவர் குறிப்பாய் அவ்வார்த்தைகளைப் பேசினார் என்று நாம் நம்புகின்றோம். அவரது மாம்சத்தில் பங்கெடுப்பதன் (புசிப்பதன்) வாயிலாக நாம் அடைந்துள்ளதான நீதிமானாக்கப்படுதலில் நாம் களிகூருகின்றோம்; அவரது மனுஷீகம் பலிசெலுத்தப்பட்டதின் வாயிலாக நாம் நீதிமானாக்கப்பட்டதில் நாம் களிகூருகின்றோம்; மனுஷீக நீதிமானாக்கப்படுதலிலுள்ள நமது பங்கை நமதாக்கிக்கொண்டதில் நாம் களிகூருகின்றோம். இறுதியில் முழு உலகமும்கூட, அந்த மாம்சத்தைப் புசிப்பதற்கும், தங்கள் மனுஷீக பாவங்கள் மற்றும் பெலவீனங்கள் இரத்துச் செய்யப்படுவதற்கான தேவனுடைய கிருபையை ஏற்றுக்கொள்வதற்கும், கிறிஸ்து தங்கள் பாவங்களுக்காக மரித்துள்ளதினாலும், அவர் தமது மாம்சத்தைப் புசிக்கக்கொடுத்ததினாலும், ஆயிரவருட அரசாட்சியின் ஆசீர்வாதங்களும், திரும்பக்கொடுத்தல் காலங்களினுடைய ஆசீர்வாதங்களுமாகிய அனைத்தும் தங்களுக்கு வருவதை உணர்ந்துகொள்வதற்குமுரிய சிலாக்கியம் பெறுவார்கள் என்பதில் நாம் களிகூருகின்றோம். முழு உலகமும் அந்த அப்பத்தைப் புசிக்கப்போகின்றார்கள் மற்றும் அப்போஸ்தலர் குறிப்பிட்டிருப்பதுபோல, பிட்கப்படும் அப்பத்தில் கர்த்தரோடு பங்கடைவதற்கும், பிதா அவருக்கு ஊற்றியுள்ளதும், நாமும் அவரோடுகூடப் பங்குகொள்ளத்தக்கதாக பிதா நமக்கு அனுமதித்துள்ளதுமான அவமானம்/நிந்தனை மற்றும் சுயத்தைப் பலிசெலுத்துதல் எனும் பாத்திரத்தில் பங்கடைவதற்கும் சபை இப்பொழுது சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர்; ஏனெனில் அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால், அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; நாம் அவரது பாத்திரத்தில் பானம் பண்ணுவோமானால், வரவிருக்கின்றதான இராஜ்யத்தில், அவரது சந்தோஷங்களில் நாமும் பங்கடைபவர்களாக இருப்போம் (2 தீமோத்தேயு 2:12).

பிதாவானவர் கொடுக்கிற யாவரும் வருவார்கள்

முந்தின இரவின்போது அப்பம் புசித்தவர்களும், இப்பொழுதும் நித்திய ஜீவனுக்கு அவசியமான மேலான உணவு குறித்த விளக்கத்தைப் பெற்றுக்கொண்டவர்களுமான ஜனக்கூட்டத்தார், இயேசு மிகவும் அற்புதகரமான மனிதர் என்று அடையாளங்கண்டு கொண்டிருந்தபோதிலும், “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும், ஒருக்காலும் பேசினதில்லை” [R4147 : page 75] என்று மற்றவர்கள்போன்று சொல்வதற்கு ஆயத்தமாய் அநேகமாகக் காணப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் இயேசுவை விசுவாசிக்கவில்லை. வாக்குத்தத்தத்தின் சுதந்தரவாளிகளாகிய ஆயிரக்கணக்கான இந்த இஸ்ரயேலர்கள் தம்மை ஏற்றுக்கொள்ளாமலும், தம்முடைய செய்திக்குச் செவிசாய்க்காமலும் போனதற்காக நமது கர்த்தர் குழப்பமும், நம்பிக்கை இழந்தும் போனாரா? நிச்சயமாய் இல்லை! இந்த அறுவடையின் காலத்திலுங்கூடத் தெய்வீகச் செய்தியானது, நம்முடைய நாட்களிலுள்ள விசுவாச வீட்டாரிலுள்ள பெரும்பான்மையானவர்களால் புரிந்துகொள்ளப்படாமல் காணப்படுவதைக்கண்டு, அவரது பின்னடியார்களும் ஆச்சரியமடையக்கூடாது. நமது கர்த்தர் ஆவேசம் அடைந்ததாகவும், தம்மை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், அவர்கள் நித்தியமான சித்திரவதைக்குள் கடந்து போகப்போகிறார்கள் என்று அவர் ஜனங்களுக்குப் போதித்ததாகவும் மற்றும் இப்படியாக பேசி ஜனங்களுடைய மனதை இளகச் செய்ததாகவும் நாம் பதிவுகளில் எதுவும் வாசிக்கவில்லை. ஜனங்கள் மத்தியில் அப்போஸ்தலர்கள் கடந்துசென்றதாகவோ, ஜனங்கள் மனம்வருந்தி, மீண்டும் திரும்பத்தக்கதாக வலியுறுத்தினதாகவோ நாம் பதிவுகளில் எதுவும் வாசிக்கவில்லை. இப்படியாகவெல்லாம் செய்வதற்கு முற்றிலும் நேர்மாறாகவே விஷயங்கள் நடந்தது. வெகு சொற்பமானவர்களே விசுவாசிப்பார்கள் என்று இயேசு நம்பினவராய்க் காணப்பட்டார்; அவர் தம்முடைய சீஷர்களிடத்திலும்கூடத் திரும்பி, “நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?” என்றார். அவர்களோ பிரதியுத்தரமாக: “இல்லை; யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. ஆண்டவரே நாங்கள் உம்மோடேக்கூடக் காணப்படுவோம்; இதை அல்லாமல் நாங்கள் வேறு எதுவும் செய்கிறதில்லை; உம்முடைய வாயிலிருந்து நாங்கள் கேட்டதான இந்த மகிமையான செய்தியின் மீதே, எங்களது காரியங்கள்/ஜீவியம் முழுவதும் சார்ந்துள்ளது. உம்மோடுகூட மரிப்பதற்கும், உம்முடைய பாத்திரத்தில் பானம்பண்ணுவதற்கும் நாங்கள் ஆயத்தமாய் இருக்கின்றோம்” என்றார்கள்.

கவலையை வெளிப்படுத்துவதற்குப்பதிலாக நமது கர்த்தர் ஜனக்கூட்டத்தாரை நோக்கி: “நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள்” என்று உங்களுக்கு நான் முன்னமே சொல்லியிருந்தேன். (நீங்கள் என்னை விசுவாசியாமலிருப்பதற்கான) காரணம் என்ன? காரணம் என்னவெனில், நீங்கள் தற்காலத்தில் நான் வழிநடத்தத்தக்கதாக என் பிதாவினால் எனக்குக் கொடுக்கப்பட்ட தொழுவத்திலுள்ள ஆடுகளல்ல. இந்தத் தொழுவத்திலுள்ளவைகள் அல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; மற்றும் அவைகளையும் நான் அடுத்துவரும் காலப்பகுதியில் பராமரித்துக்கொள்வேன். ஆனால் இப்பொழுதோ, பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை, அதாவது புறக்கணிப்பதில்லை” என்றார். இது தெரிந்துகொள்ளுதல் இல்லையெனில் வேறு என்ன என்று சொல்வோம்? இது எவ்வளவாய், நமது கர்த்தர் தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின இரவில் ஏறெடுத்த ஜெபத்தில் “நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன் அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் (பிற்பாடு) விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும், நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல் அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள வார்த்தைகளுக்கு [R4148 : page 75] இசைவாய்க் காணப்படுகின்றது (யோவான் 17:9,21). தம்மிடத்தில் வருவதற்கும், தாம் அளிக்கவிருக்கிறதான கிருபையான காரியத்தைப் பெற்றுக்கொள்வதற்கும், தம் மூலமான தேவனுடைய கிருபையான ஏற்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்கும் மற்றும் இப்படியாகத் தம்முடைய மாம்சத்தைப் புசிப்பதன்மூலம் நீதிமானாக்கப்படுவதற்கும், நமது கர்த்தர் அனைவரையும் எதிர்ப்பார்க்காததினால், அநேகர் இன்னும் முன்வருவார்கள் என்றோ, இடுக்கமான பாதையில் தம்முடைய அடிச்சுவட்டில் நடப்பதற்கென அர்ப்பணம்பண்ணுவார்கள் என்றோ மற்றும் இப்படியாக தமது பாத்திரத்தில் பங்கடைபவர்களாகவும், வருங்காலத்தில் தம்முடன் உடன்சுதந்திரர்கள் ஆகுவதற்கான வாய்ப்பினை உடையவர்களாகவும் காணப்படுவார்கள் என்றோ அவரால் எதிர்ப்பார்த்திட முடியாது. ஓ! இல்லை. தொடக்கம் முதல் இறுதிவரையிலும் சிறு மந்தையினராகக் காணப்பட்டவர்களும், மற்றும் மிகவும் பாக்கியவான்கள் ஆனவர்களுமாகிய இந்தச் சிறு மந்தையினரிடமே “பிதா இராஜ்யத்தைக் கொடுப்பார்” என்று ஆண்டவர் குறிப்பிட்டார் (லூக்கா 12:32). இவர்கள் மறுரூபமடைந்து, தங்கள் ஆண்டவருக்கு ஒப்பாகக் காணப்பட்டு, இராஜ்யத்தின் வல்லமையையும், மகிமையையும் மற்றும் ஆளுகையையும் பெற்றுக்கொள்ளும்போது, அந்த இராஜ்யத்தின் வாயிலாகவே, இருளின் அதிபதியும், இவ்வுலகத்தின் அதிபதியும் வீழ்த்தப்படுவான்; பாவம் வீழ்த்தப்படும் மற்றும் இப்பொழுது பிதாவினால் அழைக்கப்படாதவர்களும், இழுத்துக்கொள்ளப்படாதவர்களுமாகிய பரிதாபத்திற்குரிய மனுக்குலம் முழுவதையும் ஆசீர்வதித்தல் மற்றும் வெளிச்சமூட்டுதல் மற்றும் சீர்த்தூக்கிவிடுதல் வேலை நடைப்பெறும்!

இது தொடர்புடையதாக, “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான்” என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகளைக் கவனியுங்கள் (யோவான் 6:44). இதில் ஒரு தடைவிதிப்புத் தெரிகின்றது; அதாவது வெளிப்படுத்தின விசேஷத்தில் குறிப்பிட்டுள்ளபடி, விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்வதற்கான காலம் இன்னும் வரவில்லை (வெளிப்படுத்தல் 22:17). அந்த மகிமையான காலமானது, ஆயிரவருட இராஜ்யத்திற்குரியதே ஒழிய, பிதா இப்பொழுது இழுத்துக்கொள்கிறதும், அழைக்கிறதும், முத்திரையிடுகிறதுமான உடன்சுதந்திரர்களாகிய மணவாட்டி வகுப்பாரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதான தற்காலத்திற்குரியதல்ல. தற்காலத்தில் பிதாவினால் உண்டாகும் இந்த இழுத்துக்கொள்ளப்படுதலுக்கும் மற்றும் ஆயிரவருட யுகத்தின்போது பிதாவினால் இல்லாமல், மாறாக குமாரனால் உண்டாகும் இழுத்துக்கொள்ளப்படுதலுக்கும், அதுவும் எவரையும் நீக்கிவைக்காமல், அனைவரையும் உள்ளடக்கின நிலையிலுள்ள இழுத்துக்கொள்ளப்படுதலுக்கும் இடையிலான தெளிவான வித்தியாசத்தைக் கவனிக்கவும். இது தொடர்பான நமது ஆண்டவருடைய வார்த்தைகளாகிய, “நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன்” என்பதைக் கவனிக்கவும் (யோவான் 12:32). இன்னமும் அனைத்து மனிதர்களும் கர்த்தரிடத்தில் இழுத்துக்கொள்ளப்படவில்லை. ஏன்? ஏனெனில் உயர்த்தப்படுதல் இன்னமும் நிறைவடையவில்லை. தலையானவர் கல்வாரியில் மாத்திரம் உயர்த்தப்படாமல், இன்னுமாகப் பலனளிக்கப்பட்டவராக உயர்வாகவும் உயர்த்தப்பட்டார் மற்றும் உயர்த்தப்படுதல் காரியம் நிறைவடைவதற்கு முன்னதாக அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றின மணவாட்டி வகுப்பாரின் அங்கத்தினர்கள், அதாவது அவரது சரீரத்தின் அங்கத்தினர்களும் தங்கள் ஓட்டத்தினை முடித்து, அவரது உடன்சுதந்திரர்களென உயர்வாய் உயர்த்தப்பட வேண்டும்.

முதலாம் உயிர்த்தெழுதலுக்குரிய அந்த மகிமையான “மறுரூபமடைதலோடு,” ஆயிர வருட இராஜ்யமானது கடந்துவரும் மற்றும் அருமையாய் நீதி ஆளுகைச் செய்யும் அக்காலத்தில், உலகத்தின் ஆசீர்வாதத்திற்கெனச் சூரிய ஒளியும், சத்தியமும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதான அக்காலத்தில், மனுக்குலம் முழுவதும் பாவம் மற்றும் சுயநலத்தினின்றும், வியாதி, வலி மற்றும் துக்கத்தினின்றும், தீமையான அனைத்தினின்றும், கர்த்தர்பால் இழுக்கப்படுவார்கள், அதாவது அவரது மாம்சத்தை உண்மையில் புசிப்பதற்கென்றும், மாபெரும் மீட்பர் மூலம் தேவன் அருளியுள்ளதான நித்திய ஜீவனையும், அதனோடுகூடத் திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்வதற்கென்றும் கர்த்தர்பால் இழுக்கப்படுவார்கள். இப்படியாக நாம் சொல்லுகையில் நாம் (மக்கள் அனைவரும் முடிவில் மீட்கப்படுவார்கள் என்னும் இறைமைக் கோட்பாட்டை) universalism கோட்பாட்டைப் போதிக்கவில்லை; ஏனெனில் இப்பொழுது மணவாட்டி வகுப்பாராகும்படிக்கு அழைக்கப்படுபவர்களிலும், இழுக்கப்படுபவர்களிலும், இந்த இழுத்துக்கொள்ளுதலை எதிர்ப்பவர்களாய் அல்லது அப்போஸ்தலன் கூறுவதுபோன்று, “தேவனுடைய கிருபையை விருதாவாய்ப் பெற்றுக்கொள்கின்றவர்களாய்” இருப்பதற்கும் வாய்ப்புண்டு. இதுபோலவே ஆயிரவருட யுகத்தின்போதான இழுத்துக்கொள்ளுதலையும் எதிர்ப்பதற்கு வாய்ப்புள்ளது; இது குறித்துப்போதுமான அளவுக்கு வேதவாக்கியங்களில், பல்வேறு வார்த்தைகளினால் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது; “அந்தத் தீர்க்கத்தரிசியின் சொற்கேளாதவனெவனோ (கீழ்ப்படியாதவனெவனோ), அவன் ஜனத்திலிராதபடிக்கு – இரண்டாம் மரணத்தில் மீட்கப்படுவதற்கான எந்த நம்பிக்கை இல்லாமல் நிர்மூலமாக்கப்படுவான்.” பிதாவினால் இப்பொழுது இழுக்கப்பட்டவர்களும், இப்பொழுது வந்து நமது கர்த்தருடைய மாம்சத்தைப் புசித்தும், அவரது பாத்திரத்தில், அவரது இரத்தத்தில் பானம் பண்ணியும், அவருடைய பலியில் பங்குகொண்டும் காணப்படுபவர்களுமான இந்தத் தெரிந்துகொள்ளப்பட்ட அவருடன்வர்களுக்கான கர்த்தருடைய வாக்குத்தத்தத்தைக் கவனிக்கவும். இவர்களுக்கான நம்பிக்கையானது, “நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்” என்பதான வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடைசி நாள், மகா ஏழாம்நாள், ஆயிரவருட நாள். ஆ, ஆம்! மணவாட்டி வகுப்பாராகிய சபையைக் குறித்து, அந்த ஆயிரவருட நாளினுடைய காலையில் “அதிகாலையிலே தேவன் அவளுக்குச் சகாயம் = பண்ணுவார்” (சங்கீதம் 46:5) என்று எழுதப்பட்டுள்ளதை நாம் நினைவுகூருகின்றோம். ஆதாம் முதலான ஆறு நாட்கள் கடந்து போய்விட்டது மற்றும் ஏழாம்நாள் ஏற்கெனவே விடிந்து கொண்டிருக்கின்றது மற்றும் மணவாட்டியானவள் சகல மகிமையோடும் மாபெரும் இராஜாவாகிய பிதா முன்னிலையில், அவரது குமாரனும், மகாராஜனுமான நமது கர்த்தரினால் கொண்டுவரப்படுவதற்கான காலம் அண்மையில் உள்ளது. “அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, இராஜ அரண்மனைக்குள் பிரவேசிப்பார்கள்.” (சங்கீதம் 45:15).

நான் புறம்பே தள்ளுவதில்லை

நமது அருமை ஆண்டவர் இவ்வார்த்தைகளையும் கூடக்கூறினதற்காக நாம் எவ்வளவாய் மகிழ்கின்றோம். இவ்வார்த்தை இல்லையெனில், நாம் பெற்றுக் கொண்டதான அழைப்பு மற்றும் இழுத்துக்கொள்ளுதலின் உறுதிபாட்டினைக் குறித்து நாம் சந்தேகிக்கிறவர்களாக இருந்திருப்போம் [R4148 : page 76] மற்றும் சிலர் பின்வருமாறு கூடச் சொல்வதற்கு வாய்ப்புண்டு: “ஆம், நான் இழுக்கப்பட்டது உண்மைத்தான், ஆனால் கர்த்தருடைய பின்னடியார்கள் மத்தியில் ஒருவராகுவதற்கு என்னை இயேசு பாத்திரவானாய்க் கருதவில்லை என்பதும் உறுதியே.” பிதாவினால் இழுக்கப்பட்டு, தம்முடைய சீஷர்களாகுவதற்கான விருப்பத்தில், தம்மிடம் கடந்து வருபவர்களுக்கு, இங்கு (இவ்வார்த்தைகள் மூலமாக) அவர் தம்முடைய உதவியையும், துன்பமான வேளையின்போதான தம்முடைய உதவியையும், தம்முடைய துணையையும்/ ஆதரவையும், தம்முடைய ஏற்றுக்கொள்ளுதலையும் நமக்கு உறுதிப்படுத்துகின்றார். ஆகையால் இப்பொழுது இந்தப் பரமஅழைப்பில், அளிக்கப்பட்டதான தேவ கிருபையை நாம் பயன்படுத்தத் தவறிப்போவோமானால், அது நம்முடைய தவறினாலேயே இருக்கும் என்று நாம் அறிந்துகொள்ளலாம்; ஏனெனில் நாம் மேய்ப்பனுடைய சத்தத்திற்குச்செவிக்கொடுக்கவும், அவரது அடிச்சுவட்டில் நடப்பதற்கும் தவறிவிடுவதே காரணமாகும்.