R485 – பதிலாள் தொடர்புடைய கேள்விகள்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R485 (page 7)

பதிலாள் தொடர்புடைய கேள்விகள்

QUESTIONS ON SUBSTITUTION

கேள்வி. மரணத்தில், இயேசு மனிதனுக்கு பதிலாள் ஆவாரானால், நமக்காக அவர் தமது ஜீவனைப் பதிலாளாக இருந்து கொடுத்தது முதற்கொண்டு, இன்னும் மனிதன் ஏன் மரித்துக்கொண்டே இருக்கின்றான்? மனிதர்கள் தொடர்ந்து மரித்துக்கொண்டிருப்பது, அவரது நோக்கத்திற்கு எதிரான காரியமல்லவா? ஏனெனில் தேவன் நீதியுள்ளவர் என்றால், அவரால் ஒரே ஆதாமின் பாவத்திற்காக பாவியையும், அவனுக்கானபதிலாளையும் விடாது வைத்திருக்கக்கூடாதே.

பதில். இயேசு நம்முடைய பிரதிநிதியென அல்லது பதிலாளாக, “நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்” என்று மாத்திரம் வேதவாக்கியம் கூறாமல், “நாம் கிரயத்துக்குக்கொள்ளப்பட்டோம்” என்றும் கூறுகின்றது மற்றும் இக்காரியத்தினை முழுமையாய்ப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், இதற்கே உரிய முக்கியத்தினை இதற்கு நாம் கொடுத்திடவேண்டும்.

மீறப்பட்டதான தேவனுடைய பிரமாணமானது நமக்கு எதிராய்ச் சாற்றியுள்ளதான தண்டனையை, இயேசுதாமே சந்தித்தார் என்ற விதத்தில், இயேசு மனிதனுக்கான பதிலாளானார். இதன்விளைவாக தேவன் இனி ஆக்கினைக்குள்ளாக தீர்ப்பதில்லை; ஏனெனில் கிறிஸ்துவே மரித்திருக்கின்றார். (ரோமர் 8:34-ஆம் வசனத்தைப் பார்க்கவும்) ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படும் காரியமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்பொழுது கேள்வி என்னவெனில், நீதி பிரமாணம் திருப்திப்படுத்தப்பட்டாயிற்று என்றால், மரணத்துக்கு அதிகாரியான, மரண தண்டனையை நிறைவேற்றுபவன் பிசாசானவன் – எபிரெயர் 2:14) உடனடியாக ஏன் தடுத்து நிறுத்தப்படவில்லை? என்பதேயாகும். இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிக்க, நாம் நினைவுகூர வேண்டியது என்னவெனில்: கிறிஸ்துவினுடைய வேலையும், சித்தமும் பிதாவினுடையதாக இருப்பினும், நாம் பார்த்துக்கொண்டிருக்கும் விஷயத்தினுடைய சட்டரீதியான கோணத்தில் பார்க்கையில், மனிதர்கள் இப்பொழுது பிதாவுக்குக் கட்டுப்பட்டவர்களாய் இல்லாமல், மாறாக அவர்களைக் (கிரயத்துக்குக்) கொண்டவராகிய அவரது குமாரனுக்குக் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள் என்பதேயாகும். ஆகையால் சத்துருவானவன் இன்னமும் அவனது வேலையில் குறுக்கிடப்படவில்லை என்ற காரியத்தினை எந்தவிதத்திலும் யேகோவா தேவன் அநீதி செய்திட்டார் என்று குற்றமாகச் சாட்டிடமுடியாது மற்றும் (கிரயத்துக்குக்) கொண்டவராகிய இயேசுவுக்கும் எதிராகவும் குற்றமாகச் சாட்டிடமுடியாது; இயேசு தம்முடைய அதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கும், அனைவரையும் விடுவிப்பதற்குமான தம்முடைய நோக்கத்தினைத் தம்முடைய ஏற்றவேளையில் செய்திடுவார் என்று தெரிவித்துள்ளார்; இன்னுமாக நமக்கு ஜீவிக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தவர், அதை அவர் உடனடியாக வழங்காததினால், யாராகிலும் அவரைக் குற்றஞ்சாட்டிட கூடுமா? நமக்குக் காரணம் தெரியவில்லை என்றாலும், தாமதத்திற்கு அவர் சில நல் காரணங்களையே கொண்டிருக்க வேண்டும் என்பதில் நமக்கு நிச்சயமே; ஏனெனில் அவர் நம்மேல் அன்புகூர்ந்து, மனதுருகினார் என்பதை நாம் நினைவுகூருகின்றோம்; காரணம், “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” (யோவான் 15:13)

கடந்த காலங்களிளெல்லாம் ஆயிரமாயிரமான நமது சகோதரர்கள் ஏன், எதற்காக என்று தெரியாமலேயே அவரது ஞானத்தையும், அன்பையும் விசுவாசித்தது போன்று, நாமும் விசுவாசிக்கக்கூடும் என்றாலும், தேவன் அதிகமதிகமாய்த் தம்முடைய திட்டங்களை நமக்கு வெளிப்படுத்துவதற்குச் சித்தமாய் இருக்கிறதும், இயேசு சட்டப்பூர்வமாக மரணத்தை ஜெயங்கொண்டு, மரணத்திற்கும், பாதாளத்திற்குமான திறவுகோல்களைப் (திறப்பதற்கான அதிகாரத்தினை) பெற்றிருந்தப் பிற்பாடும், இன்னமும் மரணம் ஆளுகை செய்ய அனுமதிக்கப்படுவதற்கான காரணத்தை நமக்கு வெளிப்படுத்துவதற்குமான காலப்பகுதியில் நாம் ஜீவிப்பதினால் நாம் தேவனுக்கு நன்றி செலுத்துகின்றோம். (வெளிப்படுத்தல் 1:18)

மரணத்தினாலும், இதற்குக் காரணமுமான பாவத்தினாலும் கெடுக்கப்படுவதற்கு முன்னதாகக் காணப்பட்ட மனிதனுடைய பூரண சுபாவத்தினிடத்திற்கு மனுக்குலத்தைச் சீர்ப்பொருந்தப்பண்ணுவதற்கு மாத்திரம் தேவன் நோக்கம் கொண்டிராமல், இன்னுமாக மனுஷர்கள் மத்தியிலிருந்து “சிறுமந்தையினரை” தெரிந்துகொள்வதற்கும்கூடத் தேவன் நோக்கங்கொண்டிருந்தார்; இந்தச் சிறுமந்தையினர் மனித சுபாவத்திலிருந்து, திவ்விய சுபாவத்திற்கு மறுரூபமடைவது மூலம் “புதுச் சிருஷ்டிகளாகவும்,” உயர்த்தப்பட்டுள்ள கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவைப் போன்று காணப்பட்டு, அவரது வேலையிலும், மகிமையிலும், அதிலும் விசேஷமாக மனுக்குலத்தைச் சீர்ப்பொருத்தும் வேலையில் பங்காளிகளாகக் காணப்பட வேண்டும் என்பதும்கூடத் தேவனுடைய நோக்கமாயிருந்தது.

அவரது சிங்காசனத்திலும், வேலையிலும், பங்கடையும் இந்தச் சிறுமந்தையினர், மணவாட்டி, “திரும்பக்கொடுத்தலின் காலங்கள்” ஆரம்பமாகுவதற்கு முன்னதாக, முதலாவது தெரிந்தெடுக்கப்பட வேண்டும், இல்லையேல் அவளால் பங்கடைய முடியாது என்பதை இப்பொழுது அனைவராலும் காணமுடிகின்றது. ஒருவேளை இயேசு மனிதர்களை மீட்டுக்கொண்ட உடனே, அவருக்குச் “சகல அதிகாரமும் கொடுக்கப்பட்ட” (திறவுகோல்கள் கொடுக்கப்பட்ட) உடனே, அவர் மனிதர்களைச் சீர்ப்பொருந்த ஆரம்பித்திருப்பாரானால், இது அவரது மணவாட்டியாகவும், வேலையில் துணைவியாகவும் இருக்கத்தக்கதாக கற்புள்ள கன்னிகையைத் தெரிந்தெடுக்கும் பணியைத் தடைப்பண்ணியிருந்திருக்கும்.

இயேசு தம்முடைய மகா வல்லமையையும், ஆளுகையையும் கையில் எடுக்கையில் தேவகிருபையினால் நாமும் அவரோடுகூட மகிமையடைந்து, வரவிருக்கும் அனைத்திற்குமான திரும்பக்கொடுத்தலுக்கு நிழலாய் மாத்திரம் காணப்பட்டதான தம்முடைய அற்புதங்கள் தொடர்புடையதாய், “இவைகளைப்பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் செய்வான்” என்று வாக்களித்ததற்கு ஏற்ப, அவர் தம்முடைய வல்லமையைச் செயல்படுத்துவதில் நாமும் பங்கடைவோம் என்று இயேசு விசுவாசித்தவராக, இயேசு தமது மகா வல்லமையைப் பயன்படுத்துவதில் தாமதிக்கும் காரியமானது, தேவனுடைய திட்டத்தில் இடம்பெறுவதினால் நாம் மகிழ்ச்சிக் கொள்கின்றோம், மிகுந்த மகிழ்ச்சிக்கொள்கின்றோம்.

மணவாட்டி தெரிந்தெடுக்கப்பட்டு, திரும்பக்கொடுத்தல் வேலைக்கான காலம் வருவதுவரையிலும், ஏன் இயேசு தமது முதலாம் வருகையைத் தாமதிக்கவில்லை? என்று கேள்வி எழும்பலாம். இதுவும், நமது முந்தின கேள்வியும் தொடர்புடையதாகக் காணப்படுவதினால், நாம் இங்கு அதற்குப் பதிலைப் பதிவு செய்கின்றோம்:

இயேசுவோடுகூடத் திவ்விய சுபாவத்திலும், மகிமையிலும் நாம் பங்கடையத்தக்கதாக, இயேசுவோடுகூட நாம் மனுஷசுபாவத்தைப் பலிசெலுத்துவது மாத்திரம் போதாது, நமது மனுஷசுபாவமானது அபூரணமானதாகவும், ஆதாம் மூலமாக ஏற்கெனவே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதாகவும் காணப்படுவதினால், அது கறைதிறையற்றப் பலிசெலுத்தப்படுகின்ற யேகோவா தேவனின் பலிபீடத்தில், அங்கீகரிக்கப்படத்தக்கதான பலியாகுவதற்கு முன்னதாக, ஆக்கினைக்குள்ளான நிலையினின்று விலைக்கொடுத்து வாங்கப்படுவது (அ) மீட்கப்படுவது அவசியமாகும். ஆகையால் இயேசுவினுடைய பலியிலும், மகிமையிலும் பங்கடைவதற்கான அழைப்புச் சபைக்கு வருவதற்கு முன்னதாக, நம்முடைய பாவங்களுக்கான மீட்கும் பொருளென, இயேசுவினுடைய பலி அவசியமாய் உள்ளது என்று உடனடியாகப் புரிந்துகொள்ளப்படலாம்.

ஈடுபலிக்கும், திரும்பக்கொடுத்தலுக்கும் இடையில் சிறுமந்தையினர் அவரது பலியில் பங்கடையத்தக்கதாக காலங்கள் பல கடந்துசெல்ல வேண்டியுள்ளது என்பது மாத்திரமல்லாமல், அந்த ஒரு காலப்பகுதியில்தான் தீமையும் ஆளுகைச் செய்ய வேண்டும். ஒரு கணம் யோசித்துப்பாருங்கள், ஒருவேளை நமது அதிபதி இப்பொழுது ஆளுகை செய்கின்றாரானால் மற்றும் நன்மை செய்தலுக்குப் பலனும், தீமை செய்தலுக்குத் தண்டனை முதலானவை வழங்கப்படுகிறது என்றால், சிறுமந்தையினர் தீமையினால் சோதிக்கப்படுவதற்கும், பரீட்சிக்கப்படுவதற்கும் வாய்ப்பிராது மற்றும் நீதிக்காகவும், சத்தியத்திற்காகவும் தங்களையே பலிசெலுத்திடுவதற்கும் வாய்ப்பிராது. இப்படியாகவே இயேசுவினுடைய பலியின் விஷயத்திலும்கூடக் காணப்பட்டிருக்கும்; அப்போது தீமையின் ஆளுகை காணப்படவில்லையெனில், அவர் சத்தியத்திற்குச் சாட்சிபகர்ந்த காரியமானது எந்தப் புறக்கணிப்பையும், நிந்தனைகளையும், முட்களையும் (அ) சிலுவையையும் (அ) மரணத்தையும் கொண்டுவந்திருக்காது.

ஆயிரவருட யுகத்தின்போது, கிறிஸ்துவினுடைய ஆளுகையின்கீழ் “தீமையை நன்மையினாலே வெல்லும்” வாய்ப்பிராது; ஏனெனில் அப்போது தீமையின் ஆளுகையானது முடிவிற்குக்கொண்டுவரப்பட்டு, நீதியின் ஆளுகையானது ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.

பாவங்களை விட்டுவிடுவதே (அதாவது தீமை செய்வதை, குடிப்பழக்கத்தை, கெட்ட நடத்தை முதலானவற்றைத் தொடராமல் இருப்பதே) பலி என்று கருதுகின்றவர்களால், நம்முடைய நிலைப்பாட்டினைப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் யார் பலியினை மனுஷீக உரிமைகள், சிலாக்கியங்கள், சௌகரியங்கள் – மற்றும் நலன்கள் ஆகியவற்றை ஒப்புக்கொடுத்தல் மற்றும் தியாகம் செய்தல் என்று காண்கின்றார்களோ அவர்களே, இம்மாதிரியான பலியானது, தீமையான சூழ்நிலைகள் நிலவும்போதே சாத்தியமாகுகின்றது என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

ஆகையால் சுவிசேஷயுகமானது, “கர்த்தருடைய அநுக்கிரக வருஷமாய்” இருக்கின்றது. இந்தக் காலப்பகுதியிலேயே முறையாய் ஏறெடுக்கப்படுகின்றதான பலிகள் அனைத்தையும் தேவன் ஏற்றுக்கொள்கின்றார். நிழலாகச் செய்வதற்கே ஒழிய, மற்றப்படி இந்த யுகத்திற்கு முன்னதாக இப்படியானதொரு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஈடுபலியானது அதுவரையிலும் கொடுக்கப்படாததினாலும், அனைவரும் பாவிகளென மரணம் எனும் ஆக்கினைத்தீர்ப்பிற்குள்ளாகக் காணப்பட்டதினாலும், பலி செலுத்துவதற்கான வாய்ப்பு இந்த யுகத்திற்கு முன்னதாகக் கூடாததாயிருந்தது உண்மைதான். சிலர் தேவனுடைய கிருபையின் திட்டத்தினை விசுவாசித்தவர்களாக, பாவங்களுக்கான விசேஷித்தப் பலிகளைக் குறித்து உய்த்துணர்ந்தவர்களாக, எதிர்நோக்கினவர்களாகக் காணப்பட்டு, விசுவாசத்தினாலே பலனை ஏற்றுக்கொண்டவர்களானார்கள். இயேசு பாவங்களுக்கான தம்முடைய பலியை நிறைவேற்றி, அதை நம்முடைய பாவங்களுக்கான ஈடுபலி விலைக்கிரயமென முன்வைப்பதற்கு முன்வரையிலும், தேவன் பாவத்தை நிஜமாய் இரத்துச் செய்யப்பட்டதாகக் கருதவில்லை என்கிற காரியமானது, பெந்தெகொஸ்தே நாள் வருவதற்கு முன்புவரை, இயேசுவின் சீஷர்களைக்கூட யேகோவா தேவன் பலிகளாக ஏற்றுக்கொள்ளவில்லை என்ற உண்மையிலிருந்து உறுதிப்படுகின்றது.

இயேசு அங்கீகரிக்கப்படத்தக்க பலியாய்க் காணப்பட்டார்; ஏனெனில் அவரில் பாவம் ஏதுமில்லை. இந்த யுகத்தில், அவரது ஈடுபலியினை ஏற்றுக்கொண்டு, அவரது பலியின் பலன்களில் இப்பொழுது பங்கடைபவர்கள், பாவம் மற்றும் அதன் ஆக்கினைத் தீர்ப்பினின்றும் விடுவிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். பாவத்தினின்று விடுவிக்கப்பட்டுள்ளவர்களாகிய இவர்களும் அங்கீகரிக்கப்படத்தக்கதான பலிகளாகக் கூடும், அதாவது “கர்த்தருடைய அநுக்கிரக வருஷம்” நீடிப்பதுவரையிலும் பிரியமானவருக்குள் அங்கீகரிக்கப்படுபவர்களாகக் கூடும். சுத்திகரித்தல் மற்றும் பலிச் செலுத்துதல் (அல்லது நீதிமானாக்கப்படுதல் மற்றும் பரிசுத்தமாக்கப்படுதல்) எனும் இந்தப் பிரமாணத்திற்கேற்ப “சிறுமந்தை” மணவாட்டி – ஆட்டுக்குட்டியானவரின் மனைவி தெரிந்தெடுக்கப்பட்ட பிற்பாடு, பலிசெலுத்துவதன்மூலம் சுபாவ மாற்றம் அடைவதற்கான விசேஷித்த அழைப்பானது, அதாவது பரம அழைப்பானது, பரலோக அழைப்பானது நிறைவுபெறும்.

அடுத்த யுகத்தின்போது காணப்படுகின்றதான பரீட்சையின் நிலைமைகளானது, இப்பொழுது இருப்பதைக்காட்டிலும் மிகவும் சுலபமானதாய் இருக்கும் மற்றும் அவர்களுக்கான கிரீடமானது [R486 : PAGE 7] மகிமையானதாய் இருப்பினும், நாம் எந்தக் கிரீடத்திற்காய் ஓடிக்கொண்டிருக்கின்றோமோ அந்தக் கிரீடத்தைக்காட்டிலும் குறைவான மகிமையுடையதாகவே இருக்கும். அவர்களது நோக்கம், மனித சுபாவத்தில் பூரணமடைதல் ஆகும்; நம்முடையதோ திவ்விய சுபாவத்தில் பூரணமடைதலாகும்; ஒன்று பரலோகச் சாயல், மற்றொன்று மகிமையான, பூமிக்குரிய சாயலாகும். பரலோகத்திற்குரிய மகிமை என்பது ஒரு காரியமாகவும், பூமிக்குரிய மகிமை என்பது இன்னொரு காரியமாகவும் காணப்படுகின்றது. முதல் மனிதனுக்கும் (மற்றும் அவரது மனைவிக்கும்) கொடுக்கப்பட்டிருந்த மகிமையும், ஆளுகையும் திரும்பக் கொடுக்கப்படுகையில், மனிதன் மீண்டுமாக, தேவதூதரிலும் சற்று சிறிய நிலையிலேயே வைக்கப்படுவான் என்ற காரியமானது, நமது கர்த்தராகிய இரண்டாம் ஆதாமுக்கான (மற்றும் அவரது மனைவிக்குமான) உன்னதமான மகிமையையும், அவர் தேவதூதர்களுக்கும் மேலானவராக்கப்பட்டிருப்பதையும், முழங்கால்யாவும் அவருக்கு முடங்கவும், நாவுகள்யாவும் அவரை அறிக்கைப்பண்ணவும் செய்யப்பட்டிருப்பதையும் மங்கலாய் விளக்குகின்றதாய் இருக்கின்றது. (சங்கீதம் 8:5; பிலிப்பியர் 2:9,10; எபிரெயர் 1:4 மற்றும் 1 கொரிந்தியர் 6:3 ஆகிய வசனங்களை ஒப்பிட்டுப்பார்க்கவும்.)