R509 – அப்பம் மற்றும் திராட்சரசம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R509 (page 6)

அப்பம் மற்றும் திராட்சரசம்

THE BREAD AND THE WINE

வாட்ச் டவர் இதழாசிரியர் அவர்களே: “பஸ்கா” சம்பந்தமான ஏப்ரல் மாதத்தினுடைய உங்களுடைய வெளியீட்டினை நான் வாசித்தேன் மற்றும் அதில் நான் நன்கு திருப்தியும் அடைந்தேன். கர்த்தருடைய இராப்போஜனமானது, யூதருடைய பஸ்காவிற்குப்பதிலாக கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்றும், அது வருடந்தோறுமாக ஆசரிக்கப்பட வேண்டும் என்றும் நான் விசுவாசிக்கின்றேன்; ஆனால் நீங்கள் ஒரு காரியத்தைக் குறித்துப் பேசவில்லை. இந்த இராப்போஜனத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய (wine) திராட்சரச வகை குறித்தே நான் குறிப்பிடுகின்றேன். “புளிப்பில்லாத அப்பம்” பயன்படுத்தப்படும்படிக்கு நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள் மற்றும் இது முற்றிலும் சரியே என்று நான் எண்ணுகின்றேன்; ஆனால் என்ன வகை திராட்சரசம் (wine) பயன்படுத்தப்பட வேண்டும்? என்று நான் கேட்கின்றேன். புளிப்பென்பது பாவத்திற்கு நிழலாய் இருக்கின்றபடியால், இது கிறிஸ்துவினுடைய தூய்மைக்குப் பொருத்தமான நிழலல்ல என்று நீங்கள் சரியாகவே போதிக்கின்றீர்கள் என்று நான் எண்ணுகின்றேன். இப்படியாகவே புளிப்பேற்றப்பட்ட (அ) புளிப்பான திராட்சரசத்தின் (wine) விஷயத்திலும் காணப்படுகின்றது என்று நான் எண்ணுகின்றேன். இது (புளிப்பு) தூய்மையானதல்ல, ஆகையால் கிறிஸ்துவினுடைய இரத்தத்திற்குப் பொருத்தமான அடையாளமாய் இராது! “பாம்பைப்போல் கடிக்கிறதும், விரியனைப்போல் தீண்டுகின்றதுமான” திராட்சரச வகைக்குப்பதிலாக புதிய, சுத்தமான/தூய திராட்சரசத்தை நாம் பயன்படுத்திட வேண்டுமென்று நீங்கள் எங்களுக்குப் போதித்திடவில்லை.

ஒரு பொருளானது புளிக்க வைக்கப்பட்ட பிற்பாடு மற்றும் விஷமானபிற்பாடு, அது கிறிஸ்துவினுடைய தூயதும், விலையேறப்பெற்றதுமான இரத்தத்திற்கு ஏற்ற அடையாளமாய் இருக்க முடியுமோ? கர்த்தருடைய இராப்போஜனத்தைச் சரியாய் ஆசரிக்கும் விஷயத்தில் புளிப்பற்ற அப்பத்தைப்போலவே, நல்ல திராட்சரசமும் பயன்படுத்தப்படுவது முக்கியமானது என்று நான் கூறுகின்றேன். இதை நீங்கள் சிந்தித்து, இதையே கூறுவீர்கள் என்று நம்புகின்றேன்.

உங்கள் உண்மையுள்ள
பி. டி. லேன்.

எங்கள் பதில்:

பூரண மதுவிலக்கிற்கான நோக்கத்திற்கு – நாமும் ஒத்திசைந்து காணப்படும் இந்த நோக்கத்திற்குத் தடைப்பண்ணிடுவதற்கு ஏதுவாய், நாம் ஏதும் செய்துவிடக்கூடாது என்ற வாஞ்சையில், மேலே குறிப்பிட்டுள்ளதான இக்காரியம் குறித்து விசேஷமாய்க் கருத்துத் தெரிவிப்பதை நாங்கள் தவிர்த்திருந்தோம்; ஆனால் சமீபத்தில் எழுந்துள்ளதான அநேகம் கேள்விகளானது இக்காரியத்திற்கு, பதில் அவசியம் என்பதைக் காட்டுகின்றதாய் இருக்கின்றது.

முதலாவதாக நம்முடைய தட்பவெட்பநிலை மற்றும், மனவுளைச்சல் மற்றும் நம்முடைய நாட்களிலுள்ள உணர்ச்சிகளைத் தூண்டும் முறைமைகளானது, போதைத் தரும் மதுபானங்களினுடைய பயன்பாட்டு துவங்கினபோது, மனிதர்களை அதிகமாய் இந்தப் போதையூட்டும் பானங்களைப் பயன்படுத்திடுவதற்குத் தவிர்க்கமுடியாத அளவுக்கு வழிநடத்தினது குறித்து நாம் குறிப்பிட வேண்டும். இதுமாத்திரமல்லாமல், தற்காலத்தில் தயாரிக்கப்படுகின்றதான பெரும்பான்மையான போதையூட்டும் மதுபானங்களானது, இவைகளைப் பயன்படுத்துவதின் காரணமாக உண்டாகும் ஆபத்துகளையும், தீமைகளையும் பெரிதும் அதிகரிக்கும் வகையில் போதையூட்டப்பட்டுள்ளது மற்றும் பொருட்களால் கலப்படம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களினிமித்தமாக மதுபானங்களில் கலப்படம் பண்ணுகிறவர்களுக்கு எதிராக தற்போதைய சட்டங்களை அமுல்படுத்தும் காரியங்களில் அல்லது இதன் உற்பத்தி மற்றும் விற்பனையை முற்றிலும் தடைப்பண்ணிப்போடும் புதிய சட்டங்களைக் கொண்டுவரும் காரியத்தில் (இதைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதில் நமக்கு ஐயமே என்றபோதிலும்) இந்தத் தடையுத்தரவை ஆதரிப்பவர்களுக்கு நாமும் நம்முடைய ஆதரவைத் தெரிவிக்கின்றோம். இப்படி முற்றிலும் தடைப்பண்ணிடுவது என்பது, இந்த உலகத்தின் அதிபதியான சாத்தான் கட்டப்படுவது வரையிலும் நிறைவேறிடாது என்று நாம் எண்ணுகின்றோம்.

நம்முடைய ஆதரவு இருந்தபோதிலும், நம்முடைய பெரும்பான்மையான வாசகர்களின் அனுதாபங்களும், ஆதரவுகளும்கூடப் பூரண மதுவிலக்கின் பக்கமே காணப்படுகின்றது என்ற உண்மையினை நாங்கள் அறிந்திருந்தபோதிலும் – நாங்கள் ஒருவேளை பேசிட்டால் சத்தியம் என்று நாங்கள் கருதுவதையே பேசிடுவோம்; எந்த விக்கிரகம் உடைந்திட்டாலும் சரி, எந்தக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளானாலும் சரி, சத்தியம் என்று நாங்கள் கருதுவதையே பேசிடுவோம் மற்றும் அவை பின்வருமாறு:

போதையூட்டும் திராட்சரசங்களினுடைய பயன்படுத்துதலைக் குறித்து வேதாகமமானது ஒருபோதும் ஆதரிப்பதில்லை என்று வைராக்கியமிக்க குடியொழிப்பு ஆதரவாளர்கள் திரும்பத்திரும்பக் கூறுவதுண்டு. இயேசு உண்டுபண்ணின மற்றும் பருகின திராட்சரசமானது, திராட்சபழச்சாறு (grape juice) மாத்திரமேயொழிய, wine/திராட்சரசமல்ல என்றும், இந்தப் பல்வேறு பானங்களைக் குறிப்பிடுகையில் வேறு கிரேக்க வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவர்கள் கூறுகின்றனர். இது தவறு என்று நாம் பதிலளிக்கின்றோம். திராட்சப்பழச்சாறு (அ) “புதிய திராட்சரசத்திற்கான” gleukos எனும் கிரேக்க வார்த்தையானது புதிய ஏற்பாட்டில் ஒருமுறை இடம் பெறுகின்றதாய் இருக்கின்றது (அப்போஸ்தலர் 2:13) மற்றும் இது இங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது, ஒருவேளை இது அதிகமாய்ப் பயன்படுத்தப்பட்டால், இது மனதைக் குழப்புகின்றதாய் இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. திராட்சரசம் என்று மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளதற்கான வார்த்தையானது, அது இடம்பெறும் புதிய ஏற்பாட்டினுடைய மற்ற இடங்களில் எல்லாம் Oinos என்பதாகக் காணப்படுகின்றது மற்றும் இது பொதுவான வகை (grape wine) திராட்சரசத்தைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது மற்றும் இது அதிகப்படியாய்ப் பயன்படுத்தும்போது எப்போதும் போதையூட்டுகிறதாகவே இருக்கும் என்பதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது.

Oinos என்பது போதையூட்டுமா என்பதை அறிந்துகொள்வதற்குப் பின்வரும் வசனங்களைப் பார்க்கவும்: “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான (Oinos) வெறிக்கொள்ளாமல்” “And be not drunk with wine, Oinos, wherein is excess.” எபேசியர் 5:18; 1 பேதுரு 4:3; லூக்கா 1:15 மற்றும் 7:33,34-ஆம் வசனங்களையும் பார்க்கவும்.

ஒருவேளை திராட்சரசத்தில் புளிப்பின் தன்மைகள் காணப்பட்டால், அது இயேசுவினால் “இராப்போஜனத்தை நிறுவினப்போது” பயன்படுத்தப்பட்டதாகாது என்று கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இப்படியாக இல்லை. மது ஒழிப்பு பேச்சாளர்கள் இப்படியாகப் பேசிடலாம், ஆனால் பெரும்பாலும் அறியாமையிலேயே இப்படிச் செய்கின்றார்கள் என்பதில் ஐயமில்லை; ஆனால் அறிவியலில் அறிவுள்ள மனிதர்களோ alcoholic or vinous fermentation/ மது நொதித்தல் மற்றும் putrefactive fermentation/ புரதச்சிதைவு நொதித்தல் இடையில் இருக்கும் பெரிதான வித்தியாசத்தினை அடையாளங்கண்டு கொள்வார்கள். முதலாம் முறைமையானது மாசுகளை வெளியேற்றி, திராட்சரசமாகிய இனிப்பான மற்றும் இனிமையான பானத்தை உண்டுபண்ணுகின்றதாய் இருக்கின்றது; மற்ற முறைமையோ புளிப்பினை உண்டுபண்ணி, அழுகிவிடச் செய்கின்றதாய் இருக்கின்றது. இந்த இரண்டாம் முறைமையானது, அப்பத்தைப் புளிக்கப்பண்ணுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது; மற்றும் இது ஏற்படுத்தும் அழுகுதல் (அ) பூஞ்சைகளின் வளர்ச்சியானது, ஆரம்பக்கட்டத்திலேயே சுடுவதினால் நிறுத்தப்படுகின்றது.

திராட்சரசத்தில் (wine) புளிப்புத்தன்மை காணப்படுகின்றது என்ற காரியமானது யூதருடைய பாரம்பரியத்தைப் பொறுத்தமட்டில் நிரூபிக்கப்படுவதற்குப் பதிலாக மறுக்கவேபடுகின்றது; ஏனெனில் யூதர்கள் பஸ்காவில் திராட்சரசத்தைப் பயன்படுத்துகின்றவர்களாய் இருக்கின்றனர் மற்றும் பஸ்காவின்போது, அவர்கள் புளிப்பைக் களைந்துபோடுபவர்கள் ஆவர். இவர்கள் உண்மையான திராட்சரசத்தினைப் பயன்படுத்துகின்றார்கள். கர்த்தர் புளிப்பேற்றப்படாத திராட்சப்பழச்சாற்றையே (grape juice) பயன்படுத்தினார் என்று வலியுறுத்தப்படுவது என்பது இன்னொரு விதத்திலும் சரியல்ல என்று நம்மால் பார்க்க முடியும். பாலஸ்தீனியாவில் திராட்சப்பழங்களினுடைய அறுவடைக்காலமானது செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகும் மற்றும் பஸ்காவானது இதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னரே வருகின்றது. அக்டோபர் மாதத்தில் தயார் செய்யப்படுகின்றதான திராட்சரசமானது, ஏப்ரலுக்கு முன்னதாகவே நிச்சயமாய்ப் புளிப்பேறியிருக்கும்.

புதிய திராட்சரசத்தைப்பார்க்கிலும், பழைய திராட்சரசம் சிறந்தது என்ற இயேசுவின் சாட்சியும் (லூக்கா 5:39; யோவான் 2:10), அவர்கள் பயன்படுத்தின திராட்சரசமானது புளிப்பேறின ஒன்று என்றுமுள்ள உண்மையும், (alcoholic fermentation/மது நொதித்தல் – இன்னும் நிறைவுபெறாத) புதிய திராட்சரசத்தை – ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டதும், அதன் நீண்டு சுருங்கும் தன்மையானது (elasticity) இழந்துபோயுள்ளதன் காரணமாக, புளிப்பேறுவதினால் உண்டாகும் வாயுக்களினால் ஏற்படும் விரிவினால் வெடித்து, கிழியக்கூடிய வாய்ப்புள்ள பழைய துருத்தியில் (தோல்களில்) வைக்க வேண்டாம் என்பது பற்றின உவமையில் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதுபோன்று இயேசு மற்றும் அப்போஸ்தலருடைய நாட்களில் இருந்ததைக்காட்டிலும், இங்குள்ள தட்பவெட்ப நிலைகளும், சூழ்நிலைகளும், மதுபானங்களுடைய தூய்மையும் மிகவும் வேறுபட்டதாய் இருக்கின்றது; நமது கர்த்தருடைய மரணத்தை நினைவுகூரும் தருணத்தில் (wine) திராட்சரசத்தைச் சுவைப்பது தனக்கு ஆபத்தானது என்று ஒருவர் எண்ணுவாரானால், அப்படிப்பட்டவர் இதற்குப்பதிலாக உலர் திராட்சரசத்தைப் [R509 : page 7] பயன்படுத்தலாம்; இது திராட்சரசம் (wine) இல்லை என்றாலும், நிச்சயமாய் “திராட்சப்பழரசமேயாகும்” (fruit of the vine). நாங்கள் ஒவ்வொரு வருடமும் உலர் திராட்சரசத்தை ஏற்பாடு பண்ணி வைப்பதுண்டு, ஆனால் கடந்தவருடம் நாங்கள் இராப்போஜனம் ஆசரித்தப்போது ஒருவரால் மாத்திரமே அது பயன்படுத்தப்பட்டது.

அவர் வருமளவும்!

நாம் கர்த்தருடைய நினைவுகூருதல் இராப்போஜனத்தை ஆசரிக்கையில், கர்த்தர் வருமளவும் – அவர் வந்து, நம்மை மறுரூபமடையப்பண்ணி, மகிமைப்படுத்தி, நம்மை அவரது இராஜ்யமென நிறுவுமளவும் – அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறவர்களாய் இருப்போம்.
-1 கொரிந்தியர் 11:26.

அவர் வருமளவும், நாம் நம்முடைய தாலந்துகளைப் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.
– லூக்கா 19:13.

அவர் வருமளவும், நாம் விசுவாசத்தின் நல்ல போராட்டம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
– 1 தீமோத்தேயு 6:12-14.

அவர் வருமளவும், நாம் உபத்திரவங்களைச் சகித்துக்கொண்டிருக்கின்றோம்.
-2 தெசலோனிக்கேயர் 1:7

அவர் வருமளவும், நாம் பொறுமையாய் இருக்க வேண்டும்.
– யாக்கோபு 5:8

அவர் வருமளவும், நாம் நீதியின் கிரீடத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றோம்.
-2 தீமோத்தேயு 4:8

அவர் வருமளவும், நாம் மகிமையின் கிரீடத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றோம்.
– 1 பேதுரு 5:4

அவர் வருமளவும், நாம் கடந்துபோயுள்ள நண்பர்களுடன் மீண்டும் இணைந்திடுவதற்குக் காத்துக்கொண்டிருக்கின்றோம்.
– 1 தெசலோனிக்கேயர் 4:13-18

அவர் வருமளவும், நாம் சாத்தானின் கட்டப்படுதலுக்காய்க் காத்துக்கொண்டிருக்கின்றோம்.
– வெளிப்படுத்தல் 20:3

அவர் வருமளவும் என்று சொல்லும்போது, அது ஒரு விசேஷித்த தருணத்தையோ, மணிநேரத்தையோ (அ) நாளையோ குறிக்காது, மாறாக அவரது பிரசன்னத்தின் காலப்பகுதியைக் (Parousia/பரோஷியா) குறிக்கின்றதாய் இருக்கின்றது; இந்தக் காலப்பகுதியில், அவரது “அறுவடை வேலையானது,” அவரது பரிசுத்தவான்களைக் கூட்டிச்சேர்த்து, அவரது பரிசுத்தவான்களை மகிமைப்படுத்தும் மற்றும் வாக்களிக்கப்பட்ட அவரது இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்.

– ரீபிரிண்ட்ஸ், பக்கம் 3652.