R3900 – கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3900 (page 375)

கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்

IN THE CROSS OF CHRIST I GLORY

லூக்கா 23:33-46

“பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.” லூக்கா 23:34

சிலுவையின் இரத்தத்தினால் உண்டாகும் இரட்சிப்பைப் பற்றின சுவிசேஷமானது, மிகமிகப் பிரபலமற்ற நிலைக்குப் போய்க்கொண்டிருக்கின்றது. தெய்வீக நீதியானது, “ஜீவனுக்கு ஜீவனை” கேட்டது. மேலும் ஆதாமின் ஜீவனுக்காகவும், அவர் மூலம் ஜீவனை இழந்துபோன அவருடைய சந்ததியின் ஜீவனுக்காவும், இயேசுவின் ஜீவனை தெய்வீக நீதி, ஈடுபலியாக ஏற்றுக்கொண்டது. ஆனால் அந்தோ! இந்த ஈடுபலியின் விஷயங்கள், மாம்சமான மனுஷனுடைய மனதிற்கு ஒப்புக்கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது. மேலும் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டு, ஆவிக்குரிய காரியங்களை ஆவிக்குரிய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கிறவர்களின் எண்ணிக்கைகூட மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. உலக ஞானமானது, வீழ்ச்சி குறித்த வேதாகமத்தின் பதிவுகளை நிராகரித்து, அதற்குப் பதிலாக பரிணாம வளர்ச்சி பற்றின கூற்றை முன்வைக்கையில், அதாவது மனுஷன் தன்னைத்தானே படிப்படியாக மிருகம் போன்ற நிலையிலிருந்து, பகுத்தறியும் நிலைக்கு வளர்த்தி முன்னேறுகின்றான் என்ற பரிணாம வளர்ச்சி கூற்றை முன்வைக்கையில், மீட்பின் முழுக் கதையையும் கூட நிராகரிக்கின்றதாய்க் காணப்படுகின்றது. ஆம், ஒருவேளை பரிபூரண நிலையிலிருந்து எவ்விதமான வீழ்ச்சியும் சம்பவிக்கவில்லையெனில், எவ்விதமான பாவமும், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுதலும் இருப்பதில்லை. மேலும் ஆதாமும் அவருடைய சந்ததியாரும் சபிக்கப்படாமல், ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்கப்படாமல், மரணத்தீர்ப்பு அளிக்கப்படவில்லையெனில், இப்படிப்பட்ட (மரண) தீர்ப்பிலிருந்து ஒரு மீட்பு அவசியமாய் இராது. (கல்லூரிகளிலும், மேல்நிலைப்பள்ளிகளிலும், ரோம கத்தோலிக்க சமய குருமார் பயிற்சி கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும்) இவ்வுலக ஞானத்தின் கண்ணோட்டத்தின்படி சிலுவையில் சிந்தின இரத்தத்தின் மூலம் உண்டான மீட்பைக்குறித்த முழு வேதாகம நிகழ்வானது முட்டாள்தனமானதாகக் கருதப்படுகின்றது.

இரத்தத்தின் மூலம் உண்டான மீட்பு குறித்த வேதாகம சாட்சியின் மீதான விசுவாசத்தை வலுவற்றதாக்க “கிறிஸ்துவ விஞ்ஞானம்” என்ற தவறான கோட்பாட்டினாலும், உதவியளிக்கப்படுகின்றது. இதன் கூற்று என்னவெனில்: பாவம் என்ற ஒன்று இல்லை, எவ்விதமான தீமையோ, பாவமோ ஒருபோதும் இருந்ததில்லை; இவைகள் அனைத்தும் உண்மையில் மனபிரம்மைகளும், ஏமாற்றுதல்களுமேயாகும் – ஆகையால் ஆதாம் மற்றும் அவருடைய சந்ததியார்களுக்கு, பாவிகள் என்ற எவ்விதமான தெய்வீகத் தீர்ப்பும் அளிக்கப்படவில்லை என்றும், மரணம் என்பது தெய்வீகத் தீர்ப்பல்ல என்றும் கூறுகின்றது. இவ்விதமான கூற்றின் மூலம், இது “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” என்று அப்போஸ்தலர் கூறியுள்ள வார்த்தைகளை எதிர்க்கின்றதாய் இருக்கின்றது (ரோமர் 5:12). இந்தத் தவறான நம்பிக்கைகளானது, சத்திய வார்த்தைகளை நன்கு பகுத்து ஆராயக் கற்றுக்கொண்டவர்களுக்கு தரம் குறைந்தவைகளாகவும், அர்த்தமற்றவைகளாகவும் தோன்றும். ஆனால் தெய்வீக வார்த்தைகள் மீது மேலோட்டமான அறிவு கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தவறான நம்பிக்கைகள், வேதவாக்கியங்கள் அறிவிக்கிற பிரகாரம் “கொடிய வஞ்சகமாக” அமைகின்றது. இவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களில்காணும் உண்மைகளை மறுதலிக்கக் கற்றுக்கொண்டு, சகல வலிகளையும் மறுதலிக்க இவர்கள் பயிற்சி செய்து கொள்கையில், படிப்படியாக இவர்களுடைய மனங்கள் மிகவும் தவறான வழியில் செல்வதினால், இவர்களால் எவ்விஷயத்தையும் சரியாகவும், உண்மையுடனும் யோசிக்கவோ, பகுத்தறியவோ முடியாமல் போய்விடுகின்றது. இவர்கள் மனதளவில் குருடாக்கப்பட்டதால், இவர்களின் கைகளும், பாதங்களும் கட்டப்படும் விதத்தில் வேதவாக்கியங்கள் இவர்களுக்கு உருமாறிக் காணப்பட்டு, சத்தியம் இவர்களுக்குள் பிரவேசிக்க முடியாத நிலைக்கு இவர்களை ஆளாக்கிவிடுகின்றது.

தப்பறைகள் இன்னும் அதிகமான தப்பறைகளை விளைவிக்கின்றது

சிலுவை பற்றின மூன்றாவது கண்ணோட்டமே, தற்போது காணப்படும் இரண்டு வஞ்சனைகளின் தோற்றத்திற்கான காரணமாகக் காணப்படுகின்றது: இக்கண்ணோட்டமானது, வேதவாக்கியங்களையும், கிறிஸ்துவின் சிலுவையையும் ஏற்றுக்கொள்கின்றது. மேலும் சிலுவையில் மனுக்குலத்திற்காக ஏதோ ஒரு வேலை நிறைவேறியுள்ளது என்றும் ஏற்றுக்கொள்கின்றது. ஆனால் குழப்பமும், குருட்டுதன்மையும் இருப்பதினால் என்ன வேலை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தெளிவாகக்காணும் தன்மை இல்லாமல் போயிற்று. இக்கண்ணோட்டத்தின் குருட்டுத் தன்மையினிமித்தம், கிறிஸ்து தம்முடைய பின்னடியார்களுக்கு மாதிரியை விட்டுச்சென்றார் என்ற வசனத்தை ஏற்றுக்கொள்கின்றது, ஆனால் அவருடைய பாடுகள், மீட்பின் வேலைக்காக அல்லாமல், அவருடைய பின்னடியார்களுக்குப் போதிப்பவைகளாக, வழிகாட்டுபவைகளாக மாத்திரம் இருக்கின்றது என்று காண்பிக்கின்றது. எப்படிப் பாடுபட வேண்டும் என்பதை நமக்குக் காண்பித்துக் கொடுக்கவே இயேசு பாடுபட்டார் என்றும், எப்படி மரிக்க வேண்டும் என்பதை நமக்குக் காண்பித்துக் கொடுக்கவே இயேசு மரித்தார் என்றும், பிதாவின் சித்தத்திற்கு எப்படி அவர் தம்மை ஒப்புக்கொடுத்தார் என்று நமக்குக் காண்பிக்கவுமே என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் அநேக வேதவாக்கியங்கள் மூலம் முன்வைக்கப்படும் நமது கர்த்தருடைய மரணத்தைப் பற்றின உண்மையான கண்ணோட்டத்தை முழுமையாகக்காணத் தவறி, புறக்கணித்து விடுகின்றனர்; அதாவது கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து, தம்மையே எல்லோருக்குமான ஈடுபலியாக ஒப்புக்கொடுத்தார் என்றும், கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் மீட்டுக்கொள்ளப்படத்தக்கதாக அவர் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் நம்மை வாங்கினார் என்றதுமான வேதவாக்கியங்களின் கருத்தைப் புறக்கணித்து விடுகின்றனர்.

[R3900 : page 376]

சிலுவையைப் பற்றின உண்மையான கண்ணோட்டமானது, இயேசுவைச் சபையின் போதகராகவும், சபைக்குத் தலையாகவும், சபையாகிய மணவாட்டிக்கு மணவாளனாகவும் அடையாளங்கண்டு கொள்கின்றதாயிருப்பினும் – அது கர்த்தர் நம்முடைய போதகராக இருப்பதற்கும், பின்னர் உலகத்திற்கு இராஜாவாக இருப்பதற்கும் உள்ள அதிகாரத்தை மாத்திரம் பெற்றுக்கொள்ளாமல், அதே பலியின் மூலம், அதே ஈடுபலி என்னும் விலைக்கிரயம் மூலம் சபையையும், உலகத்தையும்கூட வாங்கினார் என்றும், சாபமாகிய மரணத்தீர்ப்பிலிருந்து, சகல மனுக்குலத்திற்கான விடுதலையையும்கூடப் பெற்றுக்கொண்டார் என்றும், இவ்விதமாக தேவன் நீதியுள்ளவராகவும், அதேசமயம் இயேசுவை விசுவாசிக்கிறவர்களை நீதிமானாக்குகிறவராகவும் இருப்பதற்கு ஏதுவாக்கிற்று என்றும் அடையாளங்கண்டு கொள்கின்றதாயிருக்கும். கிறிஸ்துவின் மரணமானது, ஆதாமுக்கும், இவருடைய கீழ்ப்படியாமையினிமித்தம் அனைத்தையும் இழந்துபோன இவர் சந்ததியாருக்கும் ஈடுபலி விலைக்கிரயம் எனக் கருதப்படும் போதுதான் அவருடைய மரணத்தின் உண்மையான முக்கியத்துவத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மேலும் தெய்வீக ஏற்பாட்டின்படியாக மரணத்திற்குள்ளான ஞானஸ்நானமானது, நமது கர்த்தரால் தவிர்க்கப்பட முடியாது என்பதையும் புரிந்துகொள்ளலாம். அதேசமயம், அவருடைய மகிமையான மணவாட்டி வகுப்பாரில் அங்கங்களாக இருக்கும் அனைவரும் அவரோடுகூட இந்த மரணத்திற்குள்ளான ஞானஸ்நானத்திலும் கண்டிப்பாக பங்கடைய வேண்டும் என்பதையும், அவருடைய இரத்தம் சிந்தப்படாமல் பாவமன்னிப்போ, தேவனுடன் ஒப்புரவாக்கப்படுதலோ, மரணத்தினின்று உயிர்த்தெழுதலோ, நித்தியகாலமாய் ஜீவன் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்போ இருப்பதில்லை என்பதையும் நம்மால் காணமுடிகின்றது. இப்படிப்பட்ட சரியான கண்ணோட்டத்தை நமக்கு முன் கொண்டிருப்போமானால், இப்பாடத்தில் சித்தரிக்கப்படப்போகும் கல்வாரியில் நடைப்பெற்றதான நமது அருமையான மீட்பருடைய பாடுகளினிமித்தம் நாம் அனுதாப உணர்வு கொள்வதோடு, அவர் (கடைசி வரையிலும்) உண்மையாய் இருந்ததினிமித்தம் சந்தோஷமும் அடைகின்றோம். ஏனெனில், அவர் உண்மையாய் இருந்தார் என்பது நமது மீட்பையும், இறுதியில் அவர் மூலம் உயிர்த்தெழுதலில் பாவம் மற்றும் மரணத்தின் வல்லமையிலிருந்து நாம் விடுவிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகின்றது.

கல்வாரிக்குப் போகிற பாதையில்

பிலாத்து எதிர்ப்புகளினிமித்தம் இயேசுவுக்கு மரண ஆணை விடுத்தான். மேலும் அவன் தனது கைகளைக் கழுவினது என்பது, அவன் இவ்வழக்கானது, நீதிக்குப் புறம்பானது எனத் தான் கருதுகின்றார் என்றும், ஆனால் ஜனங்கள், “சிலுவையில் அவரை அறையும்” என்று விரும்பி கூக்குரலிட்டபடியினால், அவர்களுடைய விருப்பத்திற்கு எதிராக செயல்படும்பட்சத்தில் வன்முறை எழும்பும் என்பதினால், உதவி செய்ய முடியாத நிலையில், தான் இருக்கின்றார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருந்தது. சவுக்கினால் அடிக்கப்பட்ட இயேசு, முடிவை முன்கூட்டியே அறிந்தவராகக் கூட்டத்தார் மத்தியில் மிகுந்த அமைதலுடனும், மனதைக் கட்டுப்படுத்தின நிலையிலும் காணப்பட்டு, பிதா தமக்கென ஆயத்தமாக்கப்படுவதற்கு அனுமதித்த பாத்திரத்தின் அடிமண்டி வரையிலும் குடித்துத்தீர முழு ஆயத்தத்துடன் காணப்பட்டார். மேலும் பிதாவின் அன்பும், பராமரிப்பும் எதையும் தவறாக செய்யாது என்றும், இறுதியில் அனைத்தையும் தமது நன்மைக்கேதுவாக செய்துமுடிக்கும் என்றுமுள்ள உணர்வோடு குடிக்க முழு ஆயத்தத்துடன் காணப்பட்டார். உடனடியாக எல்லாம் ஆயத்தமாக்கப்பட்டது. சிறு ஊர்வலம் ஒன்றுசேர்ந்து பிலாத்துவின் அரண்மனையிலிருந்து தமஸ்குவின் வாசலண்டைக்கு எருசலேமின் ஒடுங்கிய தெருக்கள் வழியாக மெல்ல நடந்து சென்றது. வரிசையில் முதலாவதாக, ஒரு வெண்மையான நிறத்திலான மரப்பலகையைச் சுமந்தவனாக ஒரு சேவகன் சென்றான். அப்பலகையில் குற்றவாளியின் குற்றம் பற்றின வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது. இவனுக்குப் பின்னாக, நூற்றுக்கு அதிபதியின் கட்டளைபடி, நான்கு சேவகர்கள் ஆணிகள் மற்றும் சுத்தியலுடன் தம் சிலுவையைச் சுமந்துவரும் இயேசுவைக் காவல் காக்க நடந்து வந்தார்கள். இவர்களுக்குப் பின்னாக, இரண்டு திருடர்கள் தங்கள் தங்கள் சிலுவையைச் சுமந்து வருபவர்களாக, ஒவ்வொருவரும் நான்கு சேவகர்களால் காவல் காக்கப்பட்டு நடந்துவந்தார்கள். திரளான மக்கள் கூட்டம் வழியில் நெருக்கிக் கொண்டுவந்தார்கள். திரளான மக்கள் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தவர்களும், மகிழ்ச்சியுடன் காணப்படும் சத்துருக்களும், கர்த்தருடைய நண்பர்களில் சிலரும் காணப்பட்டார்கள். “திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்” (லூக்கா 23:27). Antonio எனும் அரமனையிலிருந்து கல்வாரி என்று அழைக்கப்படும் மலை உச்சிக்கு இடையில் ஒரு மைல் தூரத்தில், நான்கில் மூன்று பங்கு தூரம் இருந்தது. கல்வாரி என்பது இலத்தீன் வார்த்தையாகும் மற்றும் இதன் அர்த்தம் மண்டையோடாகும்; மத்தேயுவினால் பயன்படுத்தப்படும் கொல்கொதா எனும் வார்த்தையினுடைய அர்த்தமும் மண்டையோடாகும்; இது பாலஸ்தீனிலுள்ள யூதர்களுடைய மூல பாஷையாகிய – அராமிக் (Aramic) வார்த்தையாகும். இந்த இடமானது, கொஞ்சம் தொலைவிலிருந்து பார்க்கப்படும்போது, மண்டையோடு போன்ற தோற்றத்தினைக் கொண்டிருப்பதினாலேயே அநேகமாக இப்பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எழுத்தாளர் ஒருவர் அதைப் பின்வருமாறு விவரிக்கின்றார்:

“எருசலேமினுடைய தமஸ்கு வாயிலிருந்து 200 கெஜம் அளவுக்கு (yard) வெளியே, 60 அடி உயரமும், மண்டையோடுபோன்ற வடிவில், வெள்ளைச் சுண்ணாம்புக் கல்லினாலான குன்று தனியே காணப்படுகின்றது. அதன் செங்குத்தான கோணத்தில், அது அப்படியே மண்டையோட்டைப் போன்றே காணப்படுகின்றது. இரண்டு கண் குழிகள், மேலே நெற்றியும், மூக்கு, வாய் மற்றும் நாடியின் வரம்புக்கோட்டையும் தெளிவாய்ப் பார்க்கலாம். அது உட்குழிவானதாகவும், மண்டை ஓட்டினுடைய நிறத்திலும் காணப்படுகின்றது. கொல்கொதாவினுடைய உச்சியில், கற்களால் குவிக்கப்பட்டதான பெரிய குழி காணப்படுகின்றது… இந்தக் குழியானது சிலுவையில் அறையப்பட்ட மற்றும் கல்லெறியப்பட்ட பழங்கால குற்றவாளிகளுடைய எலும்புகளினால் நிரப்பப்பட்டுக் காணப்படுகின்றது. இதே குழிக்குள் குற்றவாளிகளினுடைய சரீரங்களும் தூக்கி வீசப்படுகின்றது. பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று, நில மட்டத்தை உயர்த்தி, இந்தப் பாறையைப் பகுதி பகுதியாக பிளந்துபோட்டது. மண்டையோட்டினுடைய வலதுபக்கத்தில், செங்குத்தான பாறையானது, விநோதமாய்ப் பிளந்து காணப்படுகின்றது மேற்குச் செங்குத்தான பாறையினுடைய அடிவாரத்தில், மிகவும் பழமைவாய்ந்த கிணறு ஒன்றுடன், ஒரு பெரிய தோட்டமும் காணப்படுகின்றது. செங்குத்தான பாறையின் அடிவாரத்தில் பாறைக்குள் குடைந்து உருவாக்கப்பட்ட கல்லறை காணப்படுகின்றது மற்றும் இதிலே நமது கர்த்தருடைய சரீரம் வைக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மையான கல்வாரி என்று ஒருமனதாய் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.”

[R3901 : page 376]

போகிற வழியில் அநேகமாக தமஸ்குவின் வாசலண்டையில் மரணத் தண்டனை பெறப்போகிறவர்களின் பாடுகளின் கடுமையினைத் தணிக்க உதவும் ஸ்திரீகளின் கூட்டம் இந்த ஊர்வலத்தில் வந்தவர்களைச் சந்தித்தனர். இவர்கள், சிலுவையில் அறையப்படுவதினால் உண்டாகும் வலிகளை, அவர்களின் உணர்வுகளை மரத்துப்போகச் செய்வதன் மூலம் தணிக்கத்தக்கதாக திராட்சரசமும், வெள்ளைப்போளமும் கலந்த வலியை நீக்கும் பானங்களைக் கொடுப்பது வழக்கம். மேலும் இவர்களுடைய அனுதாபமானது, இவர்கள் சிந்தும் கண்ணீரின் மூலமும் வெளிப்பட்டது. பதிவுகள் நமக்குத் தெரிவிப்பது என்னவெனில், அவர்களுடைய இரக்கத்தை தாம் ஏற்றுக்கொள்வதைக் காண்பிக்கும் பொருட்டு, அப்பானத்தை அவர் மரியாதை செலுத்தும்விதமாக ருசிபார்த்தாரே ஒழிய, அவர் அதைக் குடிக்க மறுத்துவிட்டார். பிதா பிரியம் கொண்டு தம் மேல் வர அனுமதித்த யாவற்றையும் இறுதி வரையிலும் சகிக்க இயேசு விருப்பம் கொண்டவராக இருந்தார். “முற்றிலும் ஜெயம் கொண்டவராக” நாம் அவரைக் காண்கின்றோம். நம்முடைய இரட்சிப்பின் அதிபதியாகிய அவருடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும், அவரை இயக்கிய கொள்கைகளைக்குறித்து நாம் மேன்மை பாராட்டுகின்றோம். உறுதியுடன் அவர் தொடர்ந்து முன்னேறினதான அவருடைய மாதிரி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. மேலும், “நமக்கு எதிராய் இருக்கும் எல்லாவற்றைக்காட்டிலும் அவர் நமக்குப் பெரியவராய் இருக்கின்றார்” என்றும், நம்முடைய நன்மைக்கு மாறுபட்ட எவ்விதமான அனுபவங்களையும், அவர் நமக்கு அனுமதிப்பதில்லை என்றும், நாம் அவரால் வாக்களிக்கப்பட்டிருக்கின்றோம்.

அவருக்குப் பின்னாக சிலுவையைச் சுமந்து செல்லுதல்

வேறொரு சம்பவமும் இத்தருணத்தில் நடந்தது: நாட்டிலிருந்து வந்த சிரேனே ஊரானாகிய சீமோன் என்பவர், பாரம்பரியத்தின்படி இயேசு வலுவிழந்து போனபோது அவ்வூர்வலத்தைச் சந்தித்தார்; இரவு நேரம் நடந்த விஷயங்களின் அனுபவங்களினாலும், முன் நாட்களில் திரளான வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்கின தினிமித்தம் அவரிடமிருந்து சக்தி/சத்துவம் வெளியே சென்றபடியினாலும் பலவீனமடைந்த இயேசு, சிலுவையின் பாரப்பளுவினால் வலுவிழந்து போனார். இயேசுவுக்குப் பின்னே சிலுவையைச் சுமந்து வரும்படிக்குச் சீமோன் கட்டாயப்படுத்தப்பட்டார். ஆனால் இயேசு முன்னே செல்ல, சீமோன் பிறகே சிலுவைச் சுமந்து வந்தாரா அல்லது இயேசு சிலுவை சுமந்து செல்ல தரையில் இழுத்துக்கொண்டுவரப்பட்ட சிலுவையின் நுனிபாகத்தை சீமோன் சுமந்து அவர் பிறகே வந்தாரா என்பது நமக்குத் தெளிவாய்த் தெரியவில்லை. ஒருவேளை சீமோன் சிலுவையின் நுனிப் பகுதியைச் சுமந்து கொண்டு இயேசுவின் பிறகே சென்றிருப்பாரானால் இக்காட்சியானது, எப்படிக் கர்த்தருடைய பின்னடியார்கள் இன்று அவருடைய அடிச்சுவடுகளில் நடந்து, சொல்லர்த்தமான சிலுவையை அல்ல, அடையாளமான சிலுவையை அவரோடு கூடச் சுமந்து செல்ல வேண்டும் என்பதற்கான மிக அருமையான விளக்கமாக அமைகின்றது.

[R3901 : page 377]

பேதுருவும், யோவானும், யாக்கோபும் மற்ற அப்போஸ்தலர்களும் போதகருக்கு உதவி கரம் வழங்குவதற்குப்பதிலாக, எங்கே போனார்கள் என்று நம் எண்ணங்கள் எழலாம். அவர்கள், “பொதுவான ஜனங்கள்” என்றும், கலிலேயர்கள் என இழிவாகக் கருதப்பட்டவர்கள் என்றும், இயேசுவுக்கு எதிரான அதிகாரிகள் மற்றும் பிரதான ஆசாரியர்களின் கோபம் தங்கள் மீதும் தாவும் என அஞ்சினார்கள் என்றும், இப்படியாக அவர்கள் எண்ணி அஞ்சினதால், பின் வாங்கினார்கள் என்றும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். தங்களுடைய போதகர் கடந்து சென்று கொண்டிருக்கும் அனுபவங்கள் குறித்த மாபெரும் குழப்பத்தில் அவர்கள் காணப்பட்டார்கள். மேலும் நமது கர்த்தர் உயிர்த்தெழுந்து இவ்விஷயங்கள் தொடர்பான வேதவாக்கியங்களின் விளக்கத்தை கொடுக்கும் வரையிலும், அவர்கள் எதையும் புரிந்துகொள்ளவில்லை. ஆகவே, (உதவிக்கரம் அளிப்பதற்கான) இப்படிப்பட்ட வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கும்பொழுது, நாம் எப்படியாக மகிழ்ச்சி கொள்வோம் என யோசித்துக்கொண்டு, பயங்கரமான தைரியத்துடன் காணப்படுவோம் என யோசித்து நாம் வீண் பெருமை அடையக்கூடாது/கனவில் மிதக்க வேண்டாம். நம்மிடத்தில் இப்பொழுது இருக்கும் வெளிச்சமும், அறிவும், பரிசுத்த ஆவியும் அத்தருணத்தில் அவர்களுக்கு இல்லை என்றும், எல்லாவிதத்திலும் அவர்களைக் காட்டிலும் நமக்கு மிகுந்த அனுகூலங்கள் இருக்கின்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எனினும், எப்படிப் பேதுரு, யாக்கோபு, யோவான் மற்றும் மற்ற அப்போஸ்தலர்களும் உண்மையுடன் கர்த்தருடைய வேலைகளை நிறைவேற்றினார்கள் என்றும், எப்படி அவருடைய அப்போஸ்தலர்களாகவும், ஊழியர்களாகவும் அவர்கள் கிறிஸ்துவின் சிலுவையை மேலான விதத்தில் சுமந்து சென்றார்கள் என்றும் எண்ணிப்பார்க்கையில் அவர்களில் மகிழ்ச்சி கொள்ளவும், அவர்களைக் கனப்படுத்துவதற்கும் சகல காரணங்களும் காணப்படுகின்றது. இப்பொழுதோ சிலுவை நமக்கு உள்ளது. நமது கர்த்தரிடத்திலும், அவருடைய போதனைகளிலும், அவருடைய பலியிலும் வெளிப்படும் சத்தியமாவது இன்னமும் மனுஷர்களால் புறக்கணிக்கப்பட்டும், இழிவாகக் கருதப்பட்டும் காணப்படுகின்றது. உலகத்தால் மாத்திரம் அல்லாமல், பெயர்க் கிறிஸ்தவ மண்டலத்தாரின் பிரதான ஆசாரியர்கள், வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களாலும் கூடப் புறக்கணிக்கப்படுகின்றது. கிறிஸ்துவின் சரீர அங்கங்களும், மகிமை, கனம் மற்றும் அழியாமை மற்றும் பூமியின் குடிகளை ஆசீர்வதிக்கப் போகிறதான அவர்களது நம்பிக்கைகளும் இன்றும் ஏளனத்துடன் நகைக்கப்படுகின்றது. மேலும், நம்மை அன்புகூர்ந்து நம்மைத் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் சம்பாதித்தவரின் பிரதிநிதிகளாக இருந்து, நம்முடைய மாம்சம் சிலுவையில் அறையப்படும் அனுபவங்களுக்கும், சிலுவை சுமப்பதற்கும் இன்னும் வாய்ப்பு உள்ளது. இவ்விஷயத்தில், கடந்த காலங்களில் நாம் எந்த அளவுக்கு உண்மையாய் இருந்துள்ளோம்? எதிர்காலத்தில் நாம் எந்தளவுக்கு உண்மையாய் இருப்போம்? இதுவே அவருடைய அடிச்சுவடுகளில் நடப்பதில் உண்மையாய் இருப்பதன் மூலம், நாமும் ஜெயங்கொண்டவர்களாக வருவதற்கான நமது வாய்ப்பாகும்.

பிதாவே, இவர்களை மன்னியும்

கொல்கொதாவில், கல்வாரியில் வந்து சேர்ந்தவுடன் மரத்தினால் உண்டாக்கப்பட்ட சிலுவைகள் தரையில் வைக்கப்பட்டன. குற்றவாளிகள் அதன் மேல் கிடத்தப்பட்டுக் கைகளிலும், பாதங்களிலும் ஆணி அறையப்பட்டனர். பின்னர், சேவகர்கள் சிலுவையை நிமிர்த்தி ஏற்கெனவே தோண்டி வைக்கப்பட்ட குழிகளில் நிலைநிறுத்தி வைத்தார்கள். இப்படிச் செய்யப்படுவதன் காரணமாக ஏற்படும் சித்திரவதைகள் சொல்லி விளக்குவதைப் பார்க்கிலும், கற்பனை செய்து பார்த்தாலேயே நன்கு விளங்கும். இது மிகவும் கொடுமையான மரணமாகும் என்றாலும், கர்த்தருடைய பின்னடியார்களும், மற்றவர்களும் மரிக்கையில் கடந்துசென்ற மற்றச் சில கொடுமையான முறைகளின் அளவுக்கு அதிகம் கொடுமையானதாக இல்லாமல் கூட இருக்கலாம். இயேசுவின் பலியோ, பாடுகளோ நமக்கான ஈடுபலி விலைக்கிரயமாக இராமல், மரணமே விலைக்கிரயமாகக் காணப்பட்டது. ஆதித் தகப்பனாகிய ஆதாமின் மீது வந்த தண்டனையானது, அவர் அனுபவிக்க வேண்டிய வலியின் அளவாக இருக்கவில்லை. உண்மை என்னவெனில், அவர் ஜீவனை இழப்பதே தண்டனையாக இருந்தது. ஆகவேதான், ஆதாமின் சில பிள்ளைகள் மிகுந்த வலி அனுபவித்து மரித்திருக்கின்றார்கள்; இன்னும் சிலர் வலிகள் அவ்வளவாய் இல்லாமலேயே மரித்திருக்கின்றார்கள். ஆனால், “நீ சாகவே சாவாய்” என்ற தீர்ப்பும் எங்கும் ஆளுகை செய்து கொண்டிருக்கின்றது. சில கோணங்களில் பார்க்கையில், கர்த்தர் மரித்துபோவது, போதுமானதாய்க் காணப்படுகின்றது. ஆனால், வேறு சில கோணங்களில் பார்க்கையில் இது போதுமானதல்ல. “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன்” என்று மோசேயின் பிரமாணத்தில் காணப்படுகின்றது (கலாத்தியர் 3:13). நியாயப்பிரமாணத்தின் கீழ்ப் பாவிகளாக இருப்பவர்களுக்கான சாபத்தை அல்லது வெறுக்கத்தக்கதான தண்டனை தீர்ப்பை இயேசு ஏற்றுக்கொண்டதினிமித்தம் அவர் பொதுவான உலகத்தின் மீட்பராக இருப்பதோடல்லாமல், யூதர்களின் மீட்பராகவும் கூட இருந்தார். “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்” (கலாத்தியர் 3:13).

தோண்டி வைக்கப்பட்ட குழிகளுக்குள் சிலுவை நிறுத்தப்பட்டபோது ஏற்றபட்ட வலியானது, கடந்து சென்ற அனுபவங்களில் மிகவும் வேதனையான ஒன்றாகும் என்று அனுமானிக்கப்படுகின்றது. மேலும் இத்தகைய வலியின் மத்தியில்தான் நமது கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்காக, “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னது என்று அறியாமல் செய்கின்றார்கள்” என்று ஜெபம் பண்ணுகின்றார். இப்படிப்பட்ட ஒரு ஜெபத்தை நமது அருமையான போதகரால்தான் ஏறெடுத்திருக்க முடியும். மேலும் இந்த ஜெபத்தின் வார்த்தைகள் கர்த்தருடைய இருதயத்தின் உணர்வுகளுக்கு ஒத்ததாக இருக்கின்றது என்பதிலும் நமக்கு நிச்சயமே. இதேபோன்ற வார்த்தைகளையுடைய ஜெபத்தைத்தான் முதல் இரத்த சாட்சியாகிய ஸ்தேவானும், மரிக்கும் தருணத்தில் பயன்படுத்தினார் – “அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்” (அப்போஸ்தலர் 7:60). எனினும் இயேசு ஏறெடுத்த இந்த ஜெபத்தின் வார்த்தைகள் பழமைமிக்க பிரதிகளில் ஒன்றாகிய Vatican Manuscripts/முலப்பிரதிகளில் இல்லை. மேலும் இது Sinaitic-இல் இடம்பெற்றாலும், பின்னர்ச் சந்தேகத்திற்குரியதாகவே கருதப்பட்டும் வருகின்றது. எனினும், சத்துருக்கள்பால் உள்ள கர்த்தருடைய மனநிலையை வெளிப்படுத்தும் இவ்வார்த்தைகள் மீது நமக்கு ஐயமில்லை. ஏனெனில் இவைகள், “உங்கள் சத்துருக்களை அன்பு செய்யுங்கள், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக நன்மை செய்யுங்கள், அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்று போதகர் தம்முடைய பின்னடியார்களுக்குப் போதித்தவைகளுக்கு முழு இசைவுடன் காணப்படுகின்றது.

அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுக் கொண்டார்கள்

இயேசுவுக்குக் காவலாய் இருந்த நான்கு சேவகர்கள் சிலுவையை நிறுத்தின பிற்பாடு, அவருக்குச் சொந்தமான வஸ்திரத்தை நோட்டமிட்டுத் தங்களுக்கென எடுத்துக்கொண்டார்கள். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்குபோட்டு, விலையேறப்பெற்றதாய், தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டிருந்த அவருடைய அங்கியின் மீது சீட்டுப் போட்டபோது, அவர்கள் சங்கீதம் 22:18-ஆம் வசனத்தின் தீர்க்கத்தரிசனத்தை நிறைவேற்றினார்கள் எனக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. இப்படியாகவே, முழு உலகமும் காணப்படுகின்றது. பல காரியங்கள் நாளுக்கு நாள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றது. தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிக்கொண்டிருக்கின்றது. மேலும் இதில் நம்மில் அநேகர் பங்குபெறவும் செய்கின்றோம். ஆனால், வெகு சிலரே அவைகளைக்காணவும், புரிந்துகொள்ளவும் செய்கின்றனர். ஏனெனில், சிலருக்கு மாத்திரமே பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் உள்ளது. “யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும் அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்” என்ற தீர்க்கத்தரிசனங்கள் நம்முடைய நாட்களில் நிறைவேறியுள்ளது (தானியேல் 12:1-4). எனினும், சொற்பமானவர்களே, தாங்கள் விசேஷமான மற்றும் அருமையான காலப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும், இவைகள் அனைத்தும் தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதல்கள் என்பதையும் கண்டு ஒப்புக்கொள்கிறார்கள்.

வஞ்சகன் என்று அவர் நிரூபிக்கப்படுவதற்கான போலி நிரூபணங்கள்

மக்கள் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மேலும் சமீபகாலத்தில் கழுதையின் மேல் யூதர்களின் இராஜாவாக வந்தவரை அதிகாரிகள், மக்கள் கூட்டத்தாரோடு சேர்ந்து ஏளனம் செய்து சிரித்தார்கள். அவர் வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தின அற்புதங்களையும், மரணத்தினின்று உயிர்ப்பெறச் செய்த அற்புதங்களையும் முன்வைத்து, “இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மேசியாவானால் தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள். இவர்கள் எவ்வளவு வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது மனிதனின் நியாயத்தீர்ப்புக் குறித்த விஷயத்தில் அவன் எவ்வளவாக தவறு இழைக்கக்கூடியவன் என்றும், தேவன் மற்றும் அவர் வார்த்தைகள் தொடர்பான விஷயங்களில் விசேஷமாக, ஆழமாகப் பார்க்க வேண்டியதன் அவசியம் எவ்வளவாய் இருக்கின்றது என்றும், நமக்குக் கற்றுத்தரக்கூடியதாக இருக்கின்றது. சற்று முன்பு வரையிலும் அதிகாரிகள் தங்களின் நடவடிக்கைக் குறித்து ஏதேனும் மனசாட்சியில் உள்ளுறுத்தல் கொண்டிருந்தாலும்கூட, இப்பொழுது அவர்கள் அதை வெளிப்படுத்தவில்லை. ஏனெனில், நமது கர்த்தர் ஓர் ஏமாற்று பேர்வழி, வஞ்சகன் என அவர்கள் இப்பொழுது முழுதும் நம்பினவர்களாயிருந்தார்கள்/தங்கள் இருதயத்தில் தங்களையே நம்ப வைத்துக்கொண்டார்கள். ஆகவேதான், “அவருடைய இரத்தப்பழி எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் வரக்கடவது” என்று துணிந்து கூறினார்கள். இவர்களுடைய மனசாட்சி [R3901 : page 378] கண நேரம் குத்தப்பட்டிருப்பினும், இவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறையப்பட்டவராக, உதவியின்றி மரித்துக்கொண்டிருப்பவராக பார்த்த மாத்திரத்தில் குத்தல்கள் அனைத்தும் மறைந்துபோயிற்று/சாந்தியடைந்துவிட்டது. இது ஒரு பரீட்சையே என்று அவர்கள் சொல்லிக் கொண்டார்கள்; ஒருவேளை அவர் மேசியாவாக இருப்பாரானால் சந்தேகத்திற்கு இடமின்றி அவர் இவ்விதமான அவமானத்திற்குரிய நிலையில் பாடுபடமாட்டார். மாறாக, அவர் சிலுவையை விட்டு உடனடியாக இறங்கி வந்துவிடுவார் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆகவேதான், தங்கள் ஜனங்கள் மீது அதிகாரமும், ஆளுகையும் செலுத்திக் கொண்டிருக்கும் ஆசாரியருக்குரிய அதிகாரத்தைக் கவிழ்த்திப்போடும் போதகம் உடையவரும், தேசத்தின் சமாதானத்தைக் குலைப்பவருமானவரை அப்புறப்படுத்தும் விஷயத்தில், தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கையானது ஞானமுள்ளதாகவும், சரியானதாகவும் இருக்கின்றது என்பதற்கான நிரூபணம் தங்களிடத்தில் உள்ளது என்று அவர்கள் கூறினார்கள்.

இந்த யுகத்தின் அறுவடையின் போதும், நிஜமான பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேல் மத்தியில் முன்பு இருந்தது போன்று சத்தியமானது கட்டுக்கதைகளைக் காட்டிலும் அந்நியமானவைகளாகக் காணப்படுகின்றது. மேலும் கர்த்தருடைய ஆவியினால் வழிநடத்தப்படாமலும், தவறான இருதய நிலை உடையவர்களுமாகிய திரளான ஜனங்களும், அவர்களின் அதிகாரிகளாகிய (Doctors of Divinity) வேதசாஸ்திரிகளும், சத்தியத்திற்குக் குருடாக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். ஒரு காலம் வரவிருக்கின்றது. அப்போது, கர்த்தருக்கும், அவருடைய சத்தியத்திற்கும் உண்மையாய் நிற்கப்போகிற அனைவருக்கும் எதிராக வல்லமைகள் செயல்படுத்தப்படும். இவர்கள் மரித்தால் நன்மை உண்டாகும் என்ற பெயரில் இவர்களுக்குத் துன்பம் வரும். அதாவது, இப்படிப்பட்டவர்களின் செல்வாக்கானது அதிகாரத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் மத அமைப்புகளுக்கு எதிராக செயல்பட அனுமதிப்பதைப் பார்க்கிலும், சொற்பமான இப்படிப்பட்டவர்களுக்கு அநீதி செய்யப்படுவது நலமாயிருக்கும் என்று சொல்லப்படப்போகும் வேளை வரவிருக்கின்றது.

யூத அதிகாரிகளின் தூண்டுதலின் பேரில் ரோம சேவகர்களும், யூதர்களின் இராஜாவாகச் சிலுவையில் அறையப்பட்டிருந்த அவரை ஏளனம் பண்ணி சிரித்தார்கள். அவருடைய தலைக்கு மேல், “இவர் யூதர்களின் இராஜா” என்று முழு மக்கள் கூட்டமும் வாசிக்கத்தக்கதாக இலக்கிய மொழியாக கிரேக்கத்திலும், ஆளுகை செய்பவர்களாகிய ரோமர்கள் வாசிக்கத்தக்கதாக இலத்தீன் பாஷையிலும், அந்தத் தேசத்து ஜனங்கள் வாசிக்கத்தக்கதாக எபிரெய பாஷையிலும் எழுதப்பட்ட பலகையின் வார்த்தைகளை வாசிப்பவர்களுக்கு, அங்கு நிலவின சூழ்நிலைகள் அர்த்தமற்றதாகக் காணப்பட்டது. ஒரு தேசத்தின்/ஜாதியாரின் இராஜா இவ்விதமாக அவருக்குச் சொந்தமான ஜனங்களினால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளார், தாக்கப்பட்டுள்ளார், குற்றவாளியாகக் கண்டனம் செய்யப்பட்டுள்ளார்! அவருடைய பலத்தை அவர்கள் எவ்வளவு குறைவாக மதிப்பிட்டுள்ளார்கள்! அவரால் சிலுவையிலிருந்து இறங்கி வந்திருக்க முடியும், மரிக்க மறுத்திருக்க முடியும், அவர்களுடைய கேலி பேச்சுக்களை எதிர்த்திருக்கவும் முடியும். தம்மைக் காத்துக்கொள்வதற்குப் பன்னிரண்டு லேகியோன்களுக்கு அதிகமான தூதர்களையும் அப்போது [R3902 : page 378] பெற்றுக்கொண்டிருந்திருக்கவும் முடியும். ஆனால், இப்படி நடந்துகொள்வது அவருடைய அர்ப்பணிப்புக்கு எதிரானதாகவும், பிதாவின் சித்தத்திற்கு இசைவில்லாததாகவும் ஆகிவிடும். மேலும் எதிர்கால வாழ்க்கைக்குரிய நம்பிக்கையில்லாமல் ஆதாமின் சந்ததியாராகிய நாம் மரணத்தீர்ப்பின் கீழேயே விடப்பட்டவர்களாகிவிடுவோம்; அதாவது மிருகஜீவன்கள் மரிப்பதுபோன்று எவ்வித எதிர்கால நம்பிக்கையுமில்லாமல் மரித்துப்போயிருப்போம்.

நமது அருமையான மீட்பர் அவர் வையப்படும்போது பதில் வையாமலும், தம்மைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேல் சினம் கொள்ளாமலும், தம்மைத் தண்டிக்கிறவர்களைத் தாக்காமலும் இருந்தபடியினால் நாம் எவ்வளவாய்ச் சந்தோஷமடைய முடிகின்றது. நம் சார்பாக, ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதான பலியை ஒப்புக்கொடுக்க காரணமாயிருந்த அவருடைய அன்பு மற்றும் அவருடைய உண்மையினிமித்தம் நாம் எவ்வளவாய்ச் சந்தோஷமடைய முடிகின்றது. கர்த்தருக்குப் பரிசாகவும், பிதாவின் அங்கீகரிப்பிற்கான அடையாளமாகவும், அவருக்குக் கிடைத்த மகா கனம், மகிமை, ஆளுகை மற்றும் முடிவில்லாத/எல்லையற்ற வல்லமையில் நாம் எவ்வளவாய்ப் பேரானந்தம் கொள்ளமுடிகின்றது. மேலும் இது, அவருடைய கிருபையினாலும், உதவியினாலும் அவருடன்கூட அவருடைய இராஜ்யத்தில் நாம் உடன் சுதந்தரர்கள் நிலையை அடைய முடியும் என்ற எத்துணை நம்பிக்கையையும் கொடுக்கின்றது.

என்னோடுகூடப் பரதீசில்

அவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் சிலர் அனுதாபப் படுகிறவர்களாகவும், சிலர் ஏளனம் பண்ணுகிறவர்களாகவும் காணப்பட்டது போன்று, இயேசுவோடு கூடச் சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களின் மனதிலும் கூட, இப்படிப்பட்ட உணர்வுகள் எழுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இயேசுவோடுகூட இவர்கள் இருவரும் வந்தபடியினால், அவருடைய சாந்தத்திற்கும், பெருந்தன்மைக்கும், பொறுமைக்கும், தேவன் மீதான விசுவாசத்திற்கும் இவர்கள் இருவரும் சாட்சிகளாய் இருந்தும், இவர்களில் ஒருவனே இவைகளை உணர்ந்துகொள்ளத்தக்கதான புரிந்துகொள்ளுதலின் கண்களைப் பெற்றிருந்தான். மற்றவனோ, அதிகாரிகளைப் போன்றும், ஜனங்கள் போன்றும் குருடனாக இருந்தபடியினால், அவர்களோடுகூடக் கர்த்தரை வஞ்சகன் என்றும், மாய்மாலக்காரன் என்றும் வைய ஆரம்பித்தான். முதலாவது கள்வன் குறிப்பிடத்தக்க தான விசுவாசத்தை வெளிப்படுத்தினவனாக, மற்றவனை நோக்கி, “நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டான்” (லூக்கா 23:40,41). நம் கர்த்தருடைய வெளிச்சம் இருளில் பிரகாசித்தது. ஆனால், இருளின் பிள்ளைகளோ அதைப் புரிந்துகொள்ளவில்லை. மாறாக அவருடைய சீஷர்களோ, அதனை புரிந்து கொண்டார்கள். ஆகவே இந்தப் பாவப்பட்ட கள்வனும் கூட நமது கர்த்தர் அநீதியாக துன்பப்படுத்தப்படுகின்றார் என்றும், அடிக்கப்படுகின்றார் என்றும், அதேசமயம் இவைகள் அனைத்தையும் அவர் பொறுமையுடன் ஏற்றுக்கொள்கின்றார் என்றும் உணர்ந்து கொண்டான்.

இக்கள்வன் இயேசுவைக் குறித்தும், அவர் மேசியா எனச் சிலரால் உயர்வாகக் கருதப்படுகின்றார் என்பதைக்குறித்தும் கேள்விப்பட்டிருப்பான் என்பதில் ஐயமில்லை. மேலும் முரண்பாடான சூழ்நிலைகள் நிலவிக்கொண்டிருப்பது அவனுக்குத் தென்பட்டிருந்த போதிலும், நமது மீட்பரிடத்தில் இராஜாவுக்குரிய அந்தஸ்து/தோற்றம் காணப்படுவதை அவனால் உணரமுடிந்தது. மேலும் இவ்வுணர்வு அவனுக்குள்ளே பெருகிக்கொண்டிருந்தது என்பதிலும் ஐயமில்லை. இவர் ஆவிக்குரிய உலகத்தைச் சார்ந்த பெரியவர்களில் ஒருவராக ஒருவேளை இருப்பாரோ? இவர் சொல்வதுபோன்று ஒருவேளை வேறு ஒரு காலத்தில் தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபித்துவிட்டால் என்ன செய்வது? இந்த அதிகாரிகள் ஒருவேளை சுயநலம் மற்றும் பொறாமை காரணமாகத்தான் இவருடைய போதனைகளுக்குக் குருடாய்ப் போயிருப்பார்களானால் என்ன செய்வது? என்ற எண்ணங்கள் அவனுக்குள் அலைபாய்ந்தன. மேலும் தன்னோடிருந்த மற்றக் கள்வன் அவரை ஏளனம் செய்ய முற்பட்டபோது, இக்கள்வன் இரட்சகரின் சார்பாக அவரைப் பாதுகாக்கும் வண்ணம் தன்னுடைய வாயைத் திறந்தான். இக்கள்வன் தனது அபாத்திரமான நிலையை ஒப்புக்கொண்டவனாக, “சர்வவல்லவரின் கரங்களில் நம்முடைய எதிர்க்காலம் எப்படியாக இருக்குமோ என்று நம் மரண நேரத்தில் பயம் கொள்வதற்கு எனக்கும், மற்றக் கள்வனாகிய உனக்கும் காரணங்கள் இருக்கின்றது. ஆனால் இங்குப் பழித் தூற்றப்பட்டு, அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் காணப்படும், இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்பதற்கு நாமும் சாட்சியாக இருக்கின்றோமே” எனக் கூறி, நியாயத்தை எடுத்துக் கூறினவனாகக் காணப்படுகின்றான்.

ஆண்டவரே, அடியேனை நினைத்தருளும்

இக்கள்வன் மற்றக் கள்வனைக் கடிந்து கொண்டு நமது கர்த்தரை நோக்கி, “ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்” என்று விண்ணப்பம் பண்ணினான் (லூக்கா 23:42). அதாவது “நீர் உம்முடைய இராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, அது எங்குக் காணப்பட்டாலும் சரி, என்ன சூழ்நிலைகளின் கீழ்க் காணப்பட்டாலும் சரி, இராஜ்யம் உம்முடைய வல்லமைக்குள் இருக்குமாயின் அடியேனை நினைத்தருளும். என்னைவிட நீர் மிகவும் அப்பாற்பட்டவராகவும், எங்கள் அனைவரைக்காட்டிலும் மிகவும் உயர்ந்தவராகவும் நான் காண்கின்றேன். உம்முடைய பிரஜைகளில் உள்ள சிலரால் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்ட வல்லமையுள்ள இராஜாவாய் இருக்கின்றீர் என்று எனக்குத் தோன்றுகின்றது. இவ்விண்ணப்பத்தை நான் உம்மிடத்தில் வேண்டிக்கொள்கின்றேன். நான் கேட்பது மற்றவர்களின் பார்வைக்கு முட்டாள்தனமாக இருந்தாலும் பரவாயில்லை. நீர் ஓர் இராஜாவாகும் பொழுது, “அடியேனை நினைத்தருளும்”; ஏனெனில் ஏதோ ஒருவிதத்தில், ஏதோ ஒரு காலக்கட்டத்தில், எங்கோ ஓர் இடத்தில் நீர் ஓர் இராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டிருப்பீர் என்று நான் மெய்யாகவே விசுவாசிக்கின்றேன். ஏனெனில் நீர் அதற்கு நிச்சயமாகப் பாத்திரவானாயும் இருக்கின்றீர்” என்ற விதத்தில் கூறினான்.

இதற்கு நமது கர்த்தர் பதிலளித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் கிறிஸ்தவர்கள் மத்தியில் மிகுந்த விவாதம் எழக் காரணமாய் இருக்கின்றது. ஆங்கிலத்தில் இவ்வசனமானது, கர்த்தர் அந்நாளிலேயே பரதீசில் இருக்கப்போவதாகவும், அன்றைய தினமே கள்வனும் பரதீசில் வந்து, அவர் கரத்தில் இருந்து ஆசீர்வாதத்தையும், தயவையும் பெற்றுக்கொள்வான் என்பதுபோன்று கருத்தைக் கொடுக்கின்றதாக தோன்றுகின்றது. பரதீஸ் என்பது பரலோகம் எனப் புரிந்துகொள்ளப்படுமாயின், இதில் சில சிக்கல்கள் ஏற்படும் என்பதை நாம் அறிவோம். ஏனெனில், நமது கர்த்தர் அந்நாளில் பரலோகம் செல்லவில்லை. அப்போஸ்தலர் தீர்க்கதரிசியான தாவீதின் வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி, அவர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுதல் அடையும் வரையிலும் அவர் ஷியோலில் (SHEOL), கிரேக்க வார்த்தையில் – ஹேடிசில் இருந்தார் என்று கூறுகின்றார் (அப்போஸ்தலர் 2:31; சங்கீதம் 16:10). நமது கர்த்தரும் கூட அவர் உயிர்த்தெழுந்த காலையில் [R3902 : page 379] அவர் இன்னமும் அவருடைய பிதாவிடத்திலும், சீஷர்களின் பிதாவிடத்திலும், தம்முடைய தேவனிடத்திலும், சீஷர்களின் தேவனிடத்திலும் ஏறிப்போகவில்லை எனத் தம் சீஷர்களிடம் சொல்லும்படிக்கு மரியாளிடம் கூறினார். “அவர் அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,” (1 கொரிந்தியர் 15:4) என்ற வசனத்தில் இடம்பெறும் பவுலின் வார்த்தைகளையும் கவனியுங்கள்.

இழந்துபோகப்பட்ட பரதீஸ் மீண்டும் கொண்டுவரப்படும்

வேதவாக்கியங்களில் குறிப்பிடப்படும் பரதீஸ் என்கின்ற வார்த்தையானது, ஆதாமும், ஏவாளும் துரத்தப்பட்டதுமான ஏதேன் தோட்டத்தையே குறிக்கின்றது. மேலும் நமது கர்த்தர் தம்முடைய இரண்டாம் வருகையில் வந்து, தமது இராஜ்யத்தை ஸ்தாபிக்கும்போது, முழு உலகமும் பரதீசாக மாற்றப்படும். இயேசுவின் கள்வனோடு கூட நடந்த இச்சம்பாஷணையானது, நடப்பதற்கு பல காலங்களுக்கு முன்னதாகவே, ஏதேன் தோட்டம் அழிந்துவிட்டது. ஆகவே கர்த்தர் குறிப்பிட்டது, இராஜ்யத்தின் பரதீசாகத்தான் இருக்க முடியும். கர்த்தர் பேசின வார்த்தைகளில் இடம்பெறும் “இன்று” என்ற வார்த்தையின் அடிப்படையிலேயே முழுக் கேள்விகளும் எழும்புகின்றது. ஆனால், இன்றைய ஆங்கில வேதாகமங்களில் (இன்று) Today என்ற வார்த்தைக்கு முன்பு போடப்பட்டிருக்கும் காற்புள்ளியை, Today என்ற வார்த்தைக்குப் பின்பு போட்டுப் பார்க்கும்பொழுது, அர்த்தம் தெளிவாகின்றது. இப்பொழுது வசனம் இப்படியாக வாசிக்கப்பட வேண்டும்: “மெய்யாகவே, நான் உன்னிடம் இன்று (எல்லாம் சாதகமற்றதாய்த் தென்படுகையில், நான் வஞ்சகனாகக் கருதப்படுகின்ற நிலையில், என்னுடைய சத்துருக்களின் அவமதிப்புகளுக்கும், பழித் தூற்றுதலுக்கும் நான் ஆளாகிக் காணப்படும் போதிலும், இன்று) சொல்லுகின்றேன், நீ என்னுடன் கூட பரதீசில் இருப்பாய்.” அன்றைய தினம் கர்த்தரும், அக்கள்வனும், ஹேடிசுக்கு, கல்லறைக்கு, மரணநிலைக்குள் போனார்கள். கர்த்தர் மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். ஆனால், கள்வனோ மீதமான/மற்ற எல்லா உலக ஜனங்களுடன் உணர்வற்ற நிலையில் மாபெரும் மரணம் எனும் சிறைச்சாலையில் கைதியாகவே காணப்படுகின்றான்.

கர்த்தர் தமது இரண்டாம் வருகையின்போது, ஏற்றக்காலத்தில் கல்லறையிலிருந்து கள்வனை அழைப்பார். அப்பொழுது, அவன் பரதீசுக்கு வருவான். காரணம், அப்பொழுது முழு உலகமும் கர்த்தருடைய மகிமையினாலும் நிரப்பப்பட்டுக் காணப்படும். மேலும், நீதியின் சூரியன் தெய்வீகச் சத்தியத்தின் ஒளியினால் பூமியை நிரப்புவார். அப்பொழுது, குறிப்பிடத்தக்க அளவில் விசுவாசம் கொண்டிருந்த கள்வன் நினைவுகூரப்படுவான். மேலும், அவன் காட்டின விசுவாசத்திற்கு ஏற்ப ஆசீர்வாதமும் பெற்றுக்கொள்வான். இன்னுமாக, மீட்பர் இறந்துபோகும் தருவாயில், அவன் அவருக்குப் புரிந்த ஊழியத்திற்கு (அவரை மற்றக் கள்வன் பழிதூற்றினபோது, அவருக்காக இக்கள்வன் நியாயத்தை எடுத்துக்கூறினதே இவன் இயேசுவுக்குப் புரிந்த ஊழியமாகும்) ஏற்ப ஆசீர்வாதமும் பெற்றுக்கொள்வான். அக்கள்வனின் வேண்டுகோளானது, மேசியா அவருடைய இராஜ்யத்தில் வரும்போது, நினைவுகூரப்படும். “உம்முடைய இராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவதுபோன்று பூமியிலும் செய்யப்படுவதாக” என்று நாம் இன்னமும் ஜெபம் பண்ணுகிறவர்களாக இருக்கின்றோம். அவருடைய இராஜ்யம் வராததுவரையிலும் எவ்விதமான பரதீசும் இருப்பதில்லை. நமது கர்த்தருடைய பதில் வார்த்தைகளின், “மெய்யாகவே, மெய்யாகவே” என்ற பதம் “அப்படியே ஆகக்கடவது” என்பதை குறிக்கின்றதாய் உள்ளது. அதாவது, நீ கேட்பதுபோல் நீ என்னோடுகூடப் பரதீசில் இருப்பாய், இருளின் வல்லமையும் மற்றும் பாவிகளின் முரண்பாடுகளும் செயல்படும் சூழ்நிலைகளின் மத்தியில் இன்று நான் உனக்கு இதைக் கூறுகின்றேன் என்ற விதத்தில் கூறினார்.

பரதீசில் கொஞ்சம் அல்லது அதிகமான அடிகள்

தற்காலங்களில் தேவனுடைய கிருபையைக் கண்டு ருசிபார்த்துவிட்டு, வேண்டும் என்றே அவர் கிருபையை மறுத்துப்போனவர்கள் தவிர, மற்ற மனுக்குலம் முழுவதும் பரதீசின் பாக்கியமான வாய்ப்புகளை, ஆயிரம் வருஷம் அரசாட்சியின் கீழ்ப்பெற்றுக்கொள்வார்களா? ஆம், என்று நாம் பதிலளிக்கின்றோம். குருடாய் இருந்த மற்றக் கள்வனும் அங்கு இருப்பான். கர்த்தரை வசைக்கூறி, இகழ்ந்து அவரை “சிலுவையிலறையும்” என்று கூக்குரலிட்டவர்களும், அவரைக் குத்தினவர்களும், “இவருடைய இரத்தப்பழி எங்கள் மீதும், எங்கள் பிள்ளைகள் மீதும் வரட்டும்” என்று கூறினவர்களுமான இந்த அனைத்துக் குருடர்களும் அங்கு வருவார்கள். “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்… எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்” (யோவான் 5:28,29). ஆனால், இவர்களை விட கர்த்தருக்கு நண்பர்களாய் இருந்தவர்களுக்கு எவ்விதமான அனுகூலங்கள் காணப்படும்? எல்லாவிதத்திலும் கர்த்தருடைய நண்பர்களாய் இருந்தவர்களுக்கு மிகுந்த அனுகூலம் காணப்படும் என்பதே நமது பதிலாகும். முதலாவதாக, விசுவாசிப்பதன் மூலம் தற்காலத்திலேயே அவர்கள் ஆசீர்வாதத்தையும், சமாதானத்தையும் பெற்றுக்கொள்கின்றார்கள். கர்த்தருடைய அனைத்துச் சீஷர்களும் இதை அறிவார்கள். மேலும் விசுவாசம் வைத்த கள்வனும் கூட இவ்விசுவாசத்தின் மூலம் ஆசீர்வாதத்தை உணர்ந்து கொண்டான் என்பது உறுதியே. மேலும் அக்கள்வன் மகிழ்ச்சியுடன் மரித்தான். விசுவாசம் வைக்காதவர்களின் மனமானது இப்பிரபஞ்சத்தின் அதிபதியினால் குருடாக்கப்பட்டிருக்கின்றது என்று வேதவாக்கியங்கள் கூறுவதினால், குருடாய் இருப்பவர்கள் தங்கள் குருட்டுத் தன்மைக்கு முழுப் பொறுப்பாளிகளாக இராவிட்டாலும், எதிர்கால வாழ்க்கையைப் பொறுத்தமட்டில், சிலவற்றிற்கு அவர்கள் பொறுப்பாளிகளாககூட இருப்பார்கள் மற்றும் தற்காலத்தில் அவர்களின் துணிகரமான பாவத்தின் அளவிற்கு ஏற்ப, எதிர்காலத்தில் அவர்கள் சிலவற்றில் ஊனராய்க் காணப்படுவார்கள்.

விசுவாசித்த கள்வன் பரலோகத்திற்கென நிச்சயமாக ஆயத்தமாக்கப்படவில்லை. அவன் ஆவியில் ஜெநிப்பிக்கப்படவும் இல்லை. ஆதலால் உயிர்த்தெழுதலின் மூலம் அவனால் ஆவியில் பிறக்கவும் முடியாது. அவன் ஆவிக்குரிய கனிகளையும், கிருபைகளையும் வளர்த்துக் கொள்ளாததால் அவன் ஜெயம்கொண்டவனாகவும், பரிசுத்தவான்களுடன் உடன் சுதந்தரமுள்ளவனாகவும் ஏற்றுக்கொள்ளப்படவும் முடியாது. ஆனால் அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைகளில் அவனுக்குள் ஏற்பட்ட/வளர்ந்த விசுவாசமானது கர்த்தரைக் காக்குமளவு செயல் புரிந்த காரியங்களானது, அவனிடத்தில் நீதியின் மீதான அன்பு மற்றும் கொள்கை இருதயத்தில் அதிகமாகவே காணப்படுவதைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆகவே ஆயிரம் வருஷம் இராஜ்யத்தின் சூழ்நிலைகளின் கீழ் விசுவாசமுள்ள அந்தக் கள்வன், கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் கீழ் மிகவும் வேகமாக வளர்ச்சியில் முன்னேறி, ஆதாமுக்குள் இழக்கப்பட்டு, விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்ட அனைத்திற்குமான முழுப் பூரணத்திற்கு முன்னேறுவான் என்பதில் ஐயமில்லை.

டாக்டர் அல்புரோட் அவர்கள் இப்படியாகக் கூறுகின்றார்: “அவமானம், வலி மற்றும் ஏளனம் மத்தியிலும் கூடச் சிலுவையில் அறையப்பட்டவரை இராஜா என்று புரிந்துகொள்ள துணிந்த அந்தக் கள்வனுடைய விசுவாசத்தின் வலிமையும், பலமுமே உண்மையில் ஆச்சரியத்திற்குள் ஆழ்த்துகின்றது. எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விசுவாசமுள்ள வீரர்கள் போன்று, இக்கள்வன் பிரசித்தமான இடத்தைப் பெற்றுக்கொள்வான்.”

பூமியை இருள் மூடினது

மதிய வேளையளவு இயேசு தமது தாயும், யோவானும் தம் அருகே நிற்கிறதைக் கண்டு, “தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26,27). நமது கர்த்தருடைய வேதனையின் உச்சக்கட்டத்திலும் கூட அவர் தம்மைப் பற்றி எண்ணுவதைப் பார்க்கிலும், தம்முடைய சீஷர்கள் மற்றும் தமக்கு அருமையாய் இருப்பவர்கள் குறித்தும் எண்ணினவராகக் காணப்படுகின்றார். இச்சமயத்தில்தான் இருள் பூமியைச் சுமார் மூன்று மணி நேரம் மூடிக்கொண்டது. சந்தேகத்திற்கு இடமின்றி இருளின் நிழலானது, சிலுவையில் அறையப்பட்டவர்களுக்கு சூரிய ஒளியைக் காட்டிலும், இதமாக இருந்திருக்க வேண்டும். உண்மைதான், இத்தகைய (சிலுவையின்) காட்சியின் மீது இயற்கையானது தனது திரைச்சீலையைப் போர்த்தினது. மேலும் இது உலகத்தின் ஒளியாக இருக்கும் அவர் மேல் இருளின் வல்லமையானது, தற்காலிகமாக ஜெயம் கொள்வதைக் கூடச் சித்தரிக்கின்றதாய்க் காணப்படுகின்றது. தேவனுக்கும், நமது கர்த்தருக்கும் நன்றி. பாவத்திற்கான அவருடைய ஆசீர்வாதமான பலியின் மூலம், சகல நிழல்கள் வெகு சீக்கிரத்தில் கடந்து போய்விடும். ஏனெனில், பூமியின் சகல குடிகளையும் ஆசீர்வதிப்பதற்கென நீதியின் சூரியனானது, சுகமளிக்கும் செட்டைகளுடன் எழும்பிப் பிரகாசிக்கும்.

ஆவியை ஒப்புக்கொடுத்தார்

நமது பாடத்தின் கடைசி வசனமானது, நமது கர்த்தருடைய கடைசி வியாகுலத்துடன் கலந்த உரத்த கூக்குரலாய் இருக்கின்றது; அதாவது எஞ்சியிருந்த பலத்தைப் பயன்படுத்தி உரக்கக் கத்தினார். “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று அவருடைய வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கெத்செமனே தோட்டத்தில் தூதன் வந்து, இதுவரையிலும் அவரது நடத்தைகள் பிதாவின் பார்வையில் பிரியமாயும், அங்கீகரிக்கப்படக் கூடியதாகவுமே இருந்துள்ளது என்று நிச்சயம் கொடுத்து அவரைப் பெலப்படுத்தின நேரம் முதல், நமது அருமையான [R3903 : page 380] எஜமானிடம் மிகுந்த அமைதியை நம்மால் காணமுடிந்தது. ஆனால், பாவிக்குரிய கசப்பான அனுபவமும் பெற்றுக்கொண்டு, பிதாவுடன் கொண்டிருக்கும் ஐக்கியம் துண்டிக்கப்படும் அளவிற்கு அனுபவங்களுக்குள் அவர் செல்ல வேண்டியது அவசியமாயிருந்தது. தேவனுடைய ஏற்பாட்டின்படி இந்த நிலை அதிக நேரம் நீடிக்கப்படவில்லை. மாறாக, “ஒரு கணம்” மாத்திரமே அனுமதிக்கப்பட்டது. பிதா தம்முடைய அருமையான/பிரியமான குமாரனிடமிருந்து தம் முகத்தை மறைத்துக்கொண்டது என்பது, சகல ஆவிக்குரிய ஐக்கியத்தையும், உறவையும் எடுத்துப்போடுவதைக் குறிக்கின்றது. ஒரு கணப்பொழுது நம்முடைய மீட்பர் இருளின் ஆழத்திற்குள்ளாக விடப்பட்டு விட்டார். மேலும் அவருடைய வேதனை நிறைந்த கதறல்கள், அவர் இருதயத்தில் தனிமைப்படுத்தப்பட்டதைக் காட்டுகின்றது. ஜனங்கள் மாத்திரம் அவரைத் தனித்து விட்டுவிடுவது போதாது. பிதாவும் தற்காலிகமாக அவரைத் (இயேசுவை) தக்கவைக்கும் வலிமையையும், உதவியையும் எடுத்துவிட வேண்டியிருந்தது.

எனினும், நமது கர்த்தர் ஜெயங்கொண்டார். மேலும், அவருடைய இறுதி வார்த்தைகள், “பிதாவே. உம்முடைய கரங்களில் என்னுடைய ஆவியை ஒப்புக்கொடுக்கின்றேன்” என்பதேயாகும். மேலும் இப்படிக் கூறி தம்முடைய ஜீவனை (ghost) விட்டார் என்று பார்க்கின்றோம். இங்கு ஆங்கில வேதாகமத்தில் வரும் ghost என்ற வார்த்தையானது, ஆவி எனும் பொருளைக் கொடுக்கின்றது. அதாவது, கர்த்தர் தமது ஆவியை, ஜீவ சுவாசத்தை விட்டார் என்று பொருள்படுகின்றது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், அவர் தமது கடைசி மூச்சைவிட்டார், தமது ஜீவனைப் போக விட்டார் என்பதாகும்.

“உம்முடைய கரங்களில் என்னுடைய ஆவியை ஒப்புக்கொடுக்கின்றேன்.” அதாவது, என் சுவாசத்தை, என் ஜீவனை ஒப்புக்கொடுக்கின்றேன் என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன? நம்முடைய பதில் என்னவெனில்! தேவன் ஆதாமைச் சிருஷ்டித்தபோது, முதலாவது, ஆதாமை உண்டுபண்ணி, அவருக்கு ஜீவனாகிய அன்பளிப்பைக் கொடுத்தார். ஆனால் இந்த அன்பளிப்பை வைத்திருப்பதற்கான உரிமையைக் கீழ்ப்படியாமையினிமித்தம் இழந்துபோனார். ஆதாம் தன்னுடைய சந்ததிக்கு ஜீவனின் ஒரு துகளைக் கொடுக்க முடிந்ததே ஒழிய, பூரணமான ஜீவனைக் கொடுக்க முடியவில்லை. காரணம், அதற்கான சகல உரிமைகளையும் அவர் இழந்து போய்விட்டார். ஆகவே, ஆதாமும், அவருடைய சந்ததியின் ஒவ்வொரு அங்கமும் மரிக்கையில் அவர்கள் ஜீவனுக்கு அபாத்திரர்கள் மற்றும் ஜீவனை அவர்கள் வைத்துக்கொள்ளவோ அல்லது அதைக் கேட்கவோ என்றென்றும் அதிகாரமில்லை எனும் தெய்வீகத் தீர்ப்பின் பிரகாரம் தங்களது ஜீவனைத் தேவனிடத்தில் ஒப்படைத்துவிடுகின்றவர்களாக இருக்கின்றார்கள். ஆனால், நமது கர்த்தர் இயேசுவின் விஷயமோ வேறுபட்டதாகும். ஆதாமிடமிருந்து பெற்றுக்கொள்ளாத ஜீவனை அவர் பெற்றிருந்தார்; பரலோகத்தின் நிலையிலிருந்து மாற்றப்பட்ட ஜீவனை உடையவராக இருந்தார். அவரிடம் ஜீவனுக்கான உரிமை இருந்தது. மேலும், அவருக்கு உரிமையான இந்த ஜீவனைத்தான் அவர் ஆதாம் மற்றும் அவர் சந்ததிக்குரிய ஈடுபலியின் விலைக்கிரயமாக ஒப்புக்கொடுத்தார். இந்த ஜீவன் மீதான தமது பிடியை அவர் விடுகையில் அதை அவர் பிதாவினிடத்தில் ஒப்படைத்தார். பிதாவாகிய தேவன், குமாரன் இப்படியாக ஒப்படைக்கும் ஜீவனானது, அவர் மேலான ஒரு ஜீவனை அதிகமான அனுகூலங்களுடன் பெற்றுக்கொள்வதற்கு உரிமை கொடுக்கும்/வழி வகுக்கும் ஏற்கெனவே வாக்களித்திருந்தார். நமது கர்த்தரும் என வாக்களிக்கப்பட்டிருந்த இந்த மேலான ஜீவனை, மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுகையில் பெற்றுக்கொண்டார். “அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” (1 பேதுரு 3:18).