R2778 – இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2778 (page 88)

இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்

JESUS BETRAYED AND FORSAKEN

யோவான் 18:1-14

“பிதா எனக்குக்கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ என்றார்.”

சுவிசேஷ பதிவுகளின் எளிமையே, அதன் மற்றக் காரியங்கள் அனைத்தையும் விட, மனித கணிப்பை மிகவும் பலமாய்க் கவர்கின்றதாய் இருக்கின்றது. அப்போஸ்தலர்களுடைய பெலவீனங்கள், தவறுகள், இடறல்கள் குறித்து உண்மையாய் விவரம் கொடுக்கப்பட்டிருக்கின்றதும், அதுவும் தவறுகளுக்குச் சாக்குப்போக்குகள் சொல்வதற்கு (அ) தவறுகளுக்குக் காரணம் காட்டுவதற்கு அல்லது தவறுகளைப் பூசி மெழுகுவதற்கு எவ்விதமான முயற்சிகள் எடுக்கப்படாததுமாகிய இச்செயல்களின் நேர்மையையும், நோக்கத்திலுள்ள உண்மையையும் வேறே புத்தகங்களில் பார்ப்பது அரிதான ஒன்றாகும். நம்முடைய இந்தப் பாடத்திலுங்கூட யூதாசினுடைய வெட்கக்கேடான நம்பிக்கைத் துரோகம் பற்றியும் கர்த்தருடைய இருளான வேளையில், அவரைத் தனியே விட்டுவிட்டு, தனிப்பட்ட பாதுகாப்பை நாடின மீதமுள்ள பதினொரு பேரின் பெலவீனம் பற்றியும், பின்னர் இந்தப் பதினொரு பேரிலும் ஒருவர் அவரை மறுதலிப்பது பற்றியும் உள்ள பதிவுகள், மற்றப் புத்தகங்களைக் காட்டிலும் கவனத்தை மிகவும் ஈர்க்கின்றதாக இருக்கின்றது. சுவிசேஷ புத்தகங்களின் எழுத்தாளர்கள் ஒருவேளை தங்களது நடத்தைகளுக்கு விளக்கங்களையும், காரணங்களையும் கொடுத்திருந்தாலும்கூட, அது பழியாய்க் கருதப்பட்டிருந்திருக்காது; ஆனாலும் பதிவுகளானது, அவைகள் கொடுக்கப்பட்டிருக்கிற விதத்தில் பலமானதாகவே காணப்படுகின்றது மற்றும் அவர்களுக்காக அவர்களது குறைகளுக்கான விளக்கத்தினைக் கொடுப்பதற்கு நாம் முற்படுகின்றோம்; ஆனால் ஒருவேளை அவர்களே இந்தக் காரணங்களைக் கொடுக்க முற்பட்டிருந்திருப்பார்களானால், அதை ஏற்றுக்கொள்வதில் நாமும் ஒருவேளை ஆர்வமற்றிருந்திருப்போம்.

அப்போஸ்தலர்களில் இருவர் பட்டயங்கள் வைத்திருந்தார்கள் என்றும், கர்த்தருடைய அனுமதியின் பேரில் வைத்திருந்தார்கள் என்றும் நாம் பார்க்கின்றோம்; பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரர்களினால் கர்த்தர் மேற்கொள்ளப்படாமல், அவர் தாம் கைது செய்யப்படத்தக்கதாக, [R2779 : page 89] தம்மையே கையளித்துள்ளார் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே, பட்டயங்களை வைத்துக்கொள்ளுமாறு கர்த்தரினால் கட்டளையிடப்பட்டிருந்திருக்கலாம். பட்டயங்கள் கொண்டுவர கர்த்தர் சொல்லியிருக்கிறார் என்றால் அது ஜோடிப்புக்காக அல்லாமல், பயன்படுத்துவதற்கே என அப்போஸ்தலர் பேதுரு நியாயமாக எண்ணிக்கொண்டு, கர்த்தர் மேல் கைப்போடுவதற்கு முதலாவதாக வந்தவர்களிடமிருந்து, கர்த்தரைப் பாதுகாக்கத்தக்கதாகப் பாராட்டத்தக்கதான தைரியத்தில், பேதுரு தம்முடைய பட்டயத்தை உறையிலிருந்து உருவிக்கொண்டார். தலையை நோக்கம் கொண்டே பட்டயத்தை வீசினார். ஆனால் அநேகமாக காதுக்கு மாத்திரம் பாதிப்பு ஏற்படத்தக்கதாகப் பட்டயத்தின் வீச்சுத் தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் பட்டயத்தைப் பயன்படுத்தக்கூடாது எனப் போதகர் மறுப்புத் தெரிவித்து, தம்மை அவர்கள் பாதுகாக்க முற்படுவதை மறுத்து, வெட்டப்பட்ட சேவகனைச் சொஸ்தப்படுத்தினபோது, பேதுருவுக்கும், மற்றவர்களுக்கும் எத்தகைய ஒரு திகைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்! இப்படியான சூழ்நிலைகளால் சூழப்பட்டிருக்கும் நிலையில், உண்மையுள்ள பதினொரு அப்போஸ்தலர்கள் கீழுள்ள இரண்டில் ஒன்றைச் செய்திருப்பார்கள் என நம்மால் பார்க்க முடிகின்றது: அதாவது ஒன்றில் போதகருடன் கூடவே காணப்பட்டு, அவரைப்போலவே கைது செய்யப்படுவதற்கென ஒப்புக்கொடுக்க வேண்டும்; இல்லையேல் ஓடி, தங்களுடைய தனிப்பட்ட உரிமையையும், பாதுகாப்பையும் தேட வேண்டும்; ஆனால் இயேசு இந்தப் பாதுகாப்பைத் தமக்கெனத் தேடிக்கொள்ள விரும்பவில்லை.

இந்தப் பதினொரு பலமுள்ள புருஷர்கள், வாழ்க்கையின் முக்கியமான ஒரு கட்டத்தில் காணப்படுகையில் அவர்களிடம் இரண்டு பட்டயங்கள்தான் இருந்த போதிலும், நமது கர்த்தரைக் கைது செய்யும்படிக்கு வந்திருந்த கூட்டத்தாருக்கு, அவர்களால் போதுமான அளவுக்குச் சேதத்தை ஏற்படுத்தியிருந்திருக்கக்கூடும் என்பதை நம்மால் உடனடியாக கற்பனை செய்துகொள்ள முடிகின்றது; எனினும் யுத்தக்களத்தின் பரபரப்புகளும், நடவடிக்கைகளும் தைரியத்தைத் தூண்டுகிற தாயிருக்க, உபயோகமில்லாமல் நிற்பதற்குரிய கட்டாயத்திற்குள் ஆக்கப்படும்போது, ஆயுதங்களுடன் காணப்படும் சத்துருவின் முன்னிலையில், தற்காப்பிற்கெனக் கரம் கூட உயர்த்துவதற்கு அனுமதிக்கப்படாதபட்சத்தில், இது எவருக்கும் சோர்வை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கும். இப்படியான ஒரு சூழ்நிலையில் காணப்படும் போது, ஓடித் தப்பிவிடுவதே இயல்பானதாய்க் காணப்படும்; இன்னுமாக, இச்சந்தர்ப்பத்தில் போதகருடைய கருத்தும், “இவர்களைப் போகவிடுங்கள்” என்பதாகக் காணப்பட்டது. ஆகவே, சூழ்நிலையை முழுமையாய்க் கவனிக்கும்போது, அப்போஸ்தலர்கள் கோழைத்தனமாக நடந்துகொள்ளவில்லை என்றே கூற வேண்டும்; இன்னுமாக அப்போஸ்தலர்களுடைய சூழ்நிலையைப் போன்ற சூழ்நிலை ஏற்படுகையில், அப்போஸ்தலர்கள் ஓடிவிட்டது போன்று ஓடிவிடுவதற்குப்பதிலாக, வேறு விதமாய் நடந்துகொள்வதற்குக் கர்த்தருடைய ஜனங்களிலேயே மிகவும் சொற்பமானவர்களுக்கே தெரியும் எனச் சொல்லலாம்.

நமது கர்த்தரைக் கைது செய்யும்படிக்கு, யூதாசினால் வழிகாட்டப்பட்டு வந்த திரளான மனுஷர்கள் ரோம சேவகர்களாய் இராமல், மாறாக பட்டயங்கள், தடிகள் முதலிய ஆயுதங்களுடன் காணப்பட்ட பிரதான ஆசாரியனுடைய வீட்டின் வேலைக்காரர்களும், சேவகர்களும் மாத்திரமே ஆவர். அடுத்த நாளில் ஆசாரியர்களும், பிரதான அதிகாரிகளும், தூண்டிவிடப்பட்ட வேலைக்காரர்களும், ஜனங்களும், இயேசுவைத் தீர்ப்பு மன்றத்திற்கு முன்பாகக் கொண்டுவந்து, இயேசுவுக்கு மரணத் தண்டனையை நிறைவேற்றும்படிக்குக் கேட்பது வரையிலும் பிலாத்துவும், அவருடைய ரோம இராணுவ அதிகாரமும் இயேசுவைக் கவனத்தில் கொள்ளவே இல்லை.

பன்னிரண்டு பேரில் யார் இயேசு என்று அடையாளம் காட்டிக்கொடுத்த யூதாசின் காட்டிக்கொடுத்தலாகிய இழிவான காரியத்தையும், காட்டிக்கொடுக்கப் பயன்படுத்தின முத்தத்தையும், “சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய்? முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கின்றாய் என்ற நமது கர்த்தருடைய கடிந்துகொள்ளுதலின் வார்த்தைகளையும் பற்றிப் பரிசுத்தவானாகிய யோவானின் பதிவுகள் தெரிவிப்பதில்லை. அவர்கள் தேடினவரை இன்னவிதமாய்த் தான் அடையாளம் காட்டிக்கொடுப்பதாக யூதாஸ் பண்ணியிருந்த முன்னேற பாட்டின்படி, யூதாஸ் இயேசுவிடம் வாழ்த்துதல் சொல்லத்தக்கதாக சேவகர்கள் கூட்டத்திற்கு முன்பு கொஞ்சம் தொலைவில் வந்திருக்க வேண்டும்.

யூதாசினுடைய நடத்தையைக் குறித்து வாசிக்கின்ற எந்த உயர் மனமுள்ள நபராலும், ஒரு நீதியான கோபத்தின் உணர்வை அடையாமல் காணப்பட முடியாது; இன்னுமாக யூதாஸ் இயேசுதான் மேசியா என்று உறுதியாய் இருந்தாரோ, இல்லையோ, ஆனால் மனுஷர்கள் மத்தியிலேயே உயர்குணமுள்ளவராக அடையாளம் கண்டிருந்த இயேசுவை, முப்பது வெள்ளி காசுகளுக்காக யூதாஸ் காட்டிக்கொடுப்பது என்பது இழிவான குணம் என்ற உணர்வையும், எவராலும் அடையாமல் காணப்பட முடியாது. இந்த அளவுக்கு அக்கிரமத்தின் ஆழத்திற்கு, யூதாஸ் திடீரென வரவில்லை என்று கூறுவது தவறல்ல; மாறாக போதகருடன் தொடர்புகொண்டிருந்த மூன்று வருடங்களாக, யூதாசின் இந்த எதிர்மாறான பண்பானது அவரை முற்றிலும் கட்டுப்படுத்தத்தக்கதாக யூதாசுக்குள் வளர்ந்துகொண்டு வந்தது. யூதாஸ் அப்போஸ்தலனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இவர் நல்ல மனுஷனாகவே இருந்தார்; இவருடைய பெயரின், துதி என்ற அர்த்தமானது, இவருடைய பெற்றோர்களும் தேவபக்தியுள்ள மனதைக்கொண்டிருந்ததையும், இவர் தேவனுக்குத் துதி சேர்க்கத்தக்கதாக, தேவனுடைய செய்தியாளராக இருக்க வேண்டும் என்று விரும்பினதையும், யூதாசைக்குறித்துத் தீர்க்கத்தரிசனம் உரைத்ததையும் சுட்டிக்காண்பிக்கின்றது. இவர் எத்தகைய ஒரு சிலாக்கியத்தையும், வாய்ப்பையும் (இப்படித் தேவனுக்குத் துதி சேர்க்கும்) இவ்விஷயத்தில் அடைந்திருந்தார்!

பணத்தின் மீதான ஓர் ஆசையை/அன்பை இவர் தனக்குள் குடிகொள்ளச் செய்ததே இவருடைய வீழ்ச்சிக்கான ஆரம்பமாய் இருந்தது எனச் சுவிசேஷபதிவுகளில் உள்ள சிறுசிறு குறிப்புகளிலிருந்து நாம் நியாயமாக அனுமானித்துக்கொள்ளலாம். இந்தத் தவறான ஆவியைக் கடிந்துகொள்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் பதிலாக, இந்த ஆவிக்கு எதிரான வகையில் அன்பையும், இரக்கத்தையும், பரந்த மனப்பான்மையையும் நாடுவதற்குப்பதிலாக இவர் தன்னுடைய ஜீவியத்தையும், இருதயத்தையும் ஆளத்தக்கதாக சுயநலத்தை அனுமதித்துவிட்டார். இயேசு மற்றும் அப்போஸ்தலர்களுக்குமான சிறிய கூட்டத்திற்குப் பொருளாளராக இருக்கும் பொறுப்பை யூதாஸ் தெரிந்துகொண்டார் என்று நாம் எண்ணுகின்றோம்; ஒருவேளை யூதாஸ் தன்னுடைய சொந்த நிலையைக்குறித்துப் போதுமான அளவுக்கு உணர்வுடையவராய் இருந்திருப்பாரானால், இவர் தனக்கு ஏற்கெனவே பணத்தின் மீது மோகம் இருக்கும் காரணத்தினால் பணங்களை, தான் கையாளுவது என்பது, தனக்குச் சோதனையாக இருக்கும் என்று உணர்ந்தவராக, இப்படியான ஒரு பொறுப்பை ஏற்க மறுத்திருந்திருப்பார். ஆனால் இதற்கு மாறாக, யூதாஸ் அப்பொறுப்பை நாடினார், அதை அடைந்தார், பணப்பையையும், அதில் போடப்பட்ட பணத்தையும் சுமந்தவராகக் காணப்பட்டார்; மற்றும் இவர் திருடன் என்று அப்போஸ்தலன் யோவான் நமக்குத் தெரிவிக்கின்றார் (யோவான் 12:6). நம்முடைய விழுந்துபோன சுபாவத்திற்குரிய மற்ற ஒழுங்கற்ற தன்மைகள் போலவே, இந்தப் பணத்தின் மீதான ஆசையும் கூட உற்சாகப்படுத்தப்படும்போதும், விருத்திப்பண்ணப்படும் போதும், இறுதியில் எல்லைகள் இல்லாமல் போகும் அளவுக்கு அதிகமதிகமாகப் பலமடைகின்றது; மற்றும் யூதாஸ் தன்னுடைய அன்பான போதகரை, மேசியாவை முப்பது வெள்ளிக் காசுகளுக்காக விற்றுப்போடுவதற்கு ஆயத்தமானார்.

இப்படிப்பட்ட ஒரு குணத்தை வெறுத்து, இழிவாய்க் கருதி, அருவருப்பாகக் கருதி, இதற்கு எதிர்மாறாக நம்மால் முடிந்த மட்டும் நம்முடைய குணலட்சணங்களைக் கொண்டிருக்க நாடுகின்ற அதே வேளையில், யூதாசைப்போன்று கர்த்தரை அன்புகூருகின்றேன் என்று கூறியும், அவரை விற்றுப்போட்டு, காட்டிக்கொடுக்கின்ற இதே மாதிரியான குற்றத்தைப் (குறைந்த அளவில்) புரிகின்றவர்கள் அநேகர் கர்த்தருடைய சீஷர்கள் மத்தியில் காணப்படுவார்கள் என்ற உண்மையையும் நாம் பார்க்கத் தவறிவிடக்கூடாது. இந்தத் தவறு சொல்லர்த்தமான விதத்தில் இன்று செய்யப்பட முடியாது என்பது உண்மைதான்; எனினும் இதன் ஆவியை அவ்வப்போது பார்க்கலாம் என்பதை வேதனையுடன் நாம் தெரிவிக்கின்றோம்; யூதாஸ் காணப்பட்டது போன்று, இயேசுவை உண்மையாய் விசுவாசிக்கின்ற சிலர், அவருடைய பின்னடியார்களெனத் தங்களை அர்ப்பணம் பண்ணியுள்ள சிலர், அவருடைய சத்தியத்தின் ஊழியத்தில் தங்களை ஈடுபடுத்தியுள்ள சிலர், ஒரு பானைக் கூழுக்காக, அதாவது இந்தத் தற்கால ஜீவியத்திற்கான நன்மைகளுக்காக, சம்பளத்திற்காக, சமுதாயத்தின் அந்தஸ்திற்காக, மனுஷர் மத்தியிலான கனத்திற்காக, பிரபலம் அடைவதற்காக, பட்டப்பெயர்களைப் பெற்றுக்கொள்வதற்காக, கர்த்தரை விற்றுப்போடுவதற்கு [R2779 : page 90] விரும்புகின்றனர்; யூதாசைப் போன்று தங்களுடைய உதடுகளைக்கூட விற்றுப்போடுவதற்கு விரும்புகின்றனர்; ஆகவே கர்த்தரைக் கனப்படுத்துகின்றோம் என்றும், கர்த்தருக்காக ஊழியம் புரிகின்றோம் என்றும் அறிக்கைப் பண்ணிக்கொண்டிருந்தும், தேவனுடைய குணலட்சணத்தையும், அவருடைய திட்டத்தையும், அவருடைய வார்த்தைகளையும் தவறாய்க் காட்டுகின்றவர்களுடன் சேர்ந்துகொள்ள விரும்புகின்றனர். கர்த்தரைக் கொலை செய்ய நாடுபவர்களுடன் சேர்ந்து களிகூர விரும்புகின்றனர். ஆ! இராப்போஜனத்தின்போது, “ஆண்டவரே நானோ?” என்று எழுப்பப்பட்டக் கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்வது எவ்வளவு நலமாயிருக்கும்; இன்னுமாக எவனும் தன்னைத்தான் மன்னித்துக்கொள்ளும் விஷயத்தில் மிகவும் துரிதமாய் இல்லாமல் இருப்பானாக; ஆனால் ஒவ்வொருவனும் தான் எந்தவிதத்திலாகிலும், சத்தியத்தையும், ஜீவியத்தையும் எதற்காகவும் விற்றுப்போட்டுவிடாதப்படிக்கு, தன்னுடைய சொந்த இருதயத்தையும், ஜீவியத்தையும், நடத்தையையும் உண்மையாய் ஆராய்ந்து தேடிப்பார்ப்பானாக.

நம்முடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகள் அல்ல

பேதுரு தன்னுடைய பட்டயத்தை உறையிலே போடும்படிக்குக் கூறப்பட்டதன் மூலம் நமது கர்த்தர் ஒரு படிப்பினையை ஆழப் பதிய வைக்கின்றார்; இப்படிப்பினையானது நல் எண்ணத்தினால் தூண்டப்பட்டுள்ள அவருடைய பின்னடியார்கள் அநேகரால் அதுமுதல் கற்றுக்கொள்ளப்படுவதற்கு முற்றிலுமாய்த் தவறப்பட்டு வருகின்றது. மாறாக இருண்ட யுகங்கள் முழுவதிலும் பட்டயங்களும், இராணுவ வல்லமைகளும் கிறிஸ்துவின் பின்னடியார்கள் எனத் தங்களைக்குறித்து அறிக்கை பண்ணிக் கொள்பவர்களின் சார்பில் உதவிக்கு அழைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டது; சிலசமயம் அவிசுவாசிகளுக்கு எதிராகவும், மற்றும் பெரும்பாலும் சக கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. பட்டயமானது, பெயரளவிலான சபையில் இரத்த அச்சடையாளங்களை விட்டுள்ளது மற்றும் இவ்விஷயமானது, நமது அருமையான மீட்பர் தம்முடைய பின்னடியார்களுக்குப் பரிந்துரைத்த வழியிலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கின்றது எனக்காணும் உலகத்திலுள்ள சிலர் அவமதிப்பாய்க் கருதுவதற்குக் காரணமுமாய் இருக்கின்றது. இந்த ஒரு படிப்பினையானது இன்று அனைத்துச் சபை பிரிவுகளிலும் போர் மனப்பான்மையானது நிலவுகின்றபடியால், பெயரளவிலான கிறிஸ்தவ மண்டலத்திற்கே மிகவும் அவசியமாயுள்ளது. கிறிஸ்தவ ஊழியர்களின், மற்றும் இன்னும் சிலரின் மரணத்திற்காக, புற மதத்தாராகிய சீன மக்களைப் பழிக்குப்பழி வாங்கிக்கொண்டிருப்பவர்களாக கிறிஸ்தவ தேசங்கள் என அறிக்கைப்பண்ணிக்கொள்ளும் தேசங்களிலுள்ள போர்வீரர்கள்தான் காணப்படுகின்றனர். புறமதத்தாராகிய ஜனங்களுக்கு முன்னதாக இத்தகைய பாவகரமான/கெட்ட மாதிரியை வைக்கின்றதான கிறிஸ்தவ தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றதான தேசங்களின் இதே பிரதிநிதிகள்தான், தங்களது பொல்லாத நடத்தையின் வாயிலாக, இரக்கமும், தன்னடக்கமும், சுயக்கட்டுபாடுமுள்ளவர்களென உலகளாவ ஒப்புக்கொள்ளப்டுகின்றதான புறமத நாடாகிய ஜப்பான் வீரர்களைக்காட்டிலும் மோசமானவர்களாகக் காட்டப்படுகின்றனர்.

இந்தப் போர்வீரர்கள் செய்த தவறுகள், கிறிஸ்துவின் காரணத்திற்காக எனச் சொல்வது சரியாக இருக்காது. இவர்கள் கிறிஸ்தவ தேசத்தார் என்பதை நாம் மறுக்கின்றோம், மேலும் இவர்கள் கிறிஸ்தவ போர்வீரர்கள் என்பதையும் நாம் மறுக்கின்றோம். இந்தப் போர்வீரர்கள், “இவ்வுலகத்தின் பிள்ளைகள்” என்றும், இவர்கள் “இவ்வுலகத்தின் இராஜ்யங்களினுடைய” பிரதிநிதிகளாக “இவ்வுலகத்தின் அதிபதியின் கீழ்” போராடுகின்றனர் என்றுமே நாம் கூறுகின்றோம். சீன மக்களைப் பழி வாங்க வேண்டுமெனக் கிறிஸ்தவ ஊழியர்கள், அமெரிக்கா அரசாங்கத்திடம் விண்ணப்பம் பண்ணியுள்ளதை நாம் காண்கின்றோம். இன்னுமாகச் செய்தித்தாள்களில் வெளிவந்துள்ள செய்தியை வைத்துப் பார்க்கையில், இரக்கத்திற்கான பெரும்பான்மையான வேண்டுகோள்கள் உலக ஜனங்களிடமிருந்து வந்துள்ளதையும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் படியான பெரும்பான்மையான வேண்டுகோள்கள், “உன் பட்டயத்தை உறையிலே போடு என்று பேதுருவிடம் கூறின இயேசுவின் பிரதிநிதிகளாய் இருக்கும் பெயரளவிலான ஊழியர்களிடமிருந்தே வந்துள்ளது.

இங்கு நாம் தெரிவிக்க முற்படுவது என்னவெனில், “இஸ்ரயேல் வம்சத்தார் அனைவரும் இஸ்ரயேலரல்லவே” என முற்காலத்தில் அப்போஸ்தலர் தெரிவித்ததுப்போல, கிறிஸ்தவ மண்டலத்திலுள்ள அனைவரும் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதேயாகும். “கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல” என்ற அப்போஸ்தலரின் வார்த்தைகள் இன்னமும் உண்மையாகவே இருக்கின்றது என நாம் எண்ணவேண்டும் (ரோமர் 8:9). மேலும் எந்தளவுக்கு ஒருவரிடம் அன்பின் ஆவியும், சாந்தமும், நற்பண்புகளும் குறைவுப்பட்டிருக்கின்றதோ, இந்தக் குறைவானது அந்நபர் தன்னை என்னவாக அறிக்கைப்பண்ணியிருந்தாலும், அந்நபர் கிறிஸ்துவினுடைய ஊழியக்காரன் அல்ல என்பதற்கும், உண்மையான சுவிசேஷத்திற்கு ஊழியக்காரன் அல்ல என்பதற்கும் சான்றாக இருக்கின்றது; இன்னுமாகச் சத்தியத்திற்கு மாறான ஏதோ சில தவறான சுவிசேஷத்திற்கும், ஏதோ சில மனுஷீக சமயப்பிரிவுக்கும் ஊழியக்காரன் மாத்திரம்தான் என்பதற்கும் சான்றாக இருக்கின்றது.

தேவ பக்தியுள்ளவர்கள் எனத் தங்களைக் குறித்து அறிக்கைப் பண்ணிக்கொள்கின்றவர்கள் மத்தியில், அதாவது சிறப்பானவைகளை நாம் நியாயமாய் எதிர்பார்க்கின்றவர்கள் மத்தியில் இரக்கமின்மை, கசப்பு, பகைமை/பழிக்குப்பழி வாங்குதல், எரிச்சலின் ஆவி பரவலாய்ப் பரவி காணப்படுவதை நாம் பார்க்கின்றோம். இந்தக் கசப்பான மற்றும் எரிச்சலின் ஆவிக்கான ஓர் எடுத்துக்காட்டினை, அறிவு பெருத்த நம்முடைய இந்த நாட்டில், அதாவது பெரும்பான்மையானவர்களின் கரங்களில் சட்டம் காணப்பட்டு, தப்பிப்பதற்கான வழியில்லாத இந்த நாட்டில் பெரிய அளவில் நிலவும் லின்ஞ் சட்டம்/சட்டவிரோதமான நீதிமன்ற முறைமையில் நாம் பார்க்கலாம். இந்தச் சட்டவிரோதமான நீதிமன்ற முறைமையின்படியான கொலைகளானது, நல்நோக்கம் உள்ளவர்களாகவும், சாந்தமானவர்களாகவும் காணப்படுகின்ற அநேக ஜனங்களுடைய இருதயங்களில், எரிச்சலான, மிருகத்தனமான, காட்டுமிராண்டித்தனமான தன்மைகள் ஆழமாய்க் காணப்படுகின்றது என்றும், இந்தத் தன்மைகளானது, பரிசுத்த ஆவியினுடைய வல்லமையினாலான மனங்களின் புதிதாக்குதலினால் மாற்றம்/மறுரூபம் அடையவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இது எதிர்க்காலத்தில் எதற்குள்ளாகவோ நடத்திவிடும் என்பதைச் சொல்வது சிரமமானதாயினும், இது ஒழுங்கின்மையினுடைய ஆவியின் ஒரு பாகமேயாகும். மற்றும் இது கிறிஸ்தவ மண்டலம் முழுவதும் பரவிடும் என்றும், பின்னர் முன்னுரைக்கப்பட்டபடி மகா உபத்திரவக்காலம் வரும் என்றும் வேதவாக்கியங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன; இந்த மகா உபத்திரவக்காலத்தின்போது, மனுக்குலத்தினுடைய கோபத்திற்கு முன்பாக அனைத்துச் சட்டமும், ஒழுங்கும் ஒன்றுமில்லாமலாகிவிடும்.

எண்ணங்கள் மற்றும் உணர்வுகளின் இந்த எல்லை மீறின தன்மைகளானது, சில சமயங்களில் வார்த்தைகளில் மாத்திரம் வெளிப்படுகின்றது; அதாவது பத்திரிக்கையினுடைய பகுதிகளில், கண்டனத்திற்குரிய விதத்தில் வெளிப்படுகின்றது. கட்டுப்படுத்தப்படாத எண்ணங்கள் மற்றும் அதன் வெளிப்படுத்தல்களுக்கான உதாரணமாய், நியூயார்க் சன்ஸ் பத்திரிக்கையில் இடம் பெற்ற கடுமையான மற்றும் நியாயம் கற்பிக்கமுடியாத விதத்தினாலான ஒரு மெத்தடிஸ்ட் கண்காணியின் வார்த்தைகளைக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம்; பின்வருமாறு:

[R2780 : PAGE 90]

“பிராயன் அவர்கள், தேர்ந்தெடுக்கப்படலாமா? இல்லை; ஆயிரம் முறை இல்லை, இல்லை என்றே நான் சொல்வேன்! அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், நான் கல் படகில், ஈய பாயுடனும், இரும்புத் துடுப்புடனும், தேவனுடைய கோபத்தைப் புயலெனவும், நரகத்தை வாயிலெனவும் கொண்டிருந்து கடலில் வருவேன்.”

இந்தக் கண்காணிக்கு ஆதரவாக, இந்த வார்த்தைகளே, தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்; இந்த நோய்க்கு எதிராக எந்த மருந்தும் போதுமானதாக இருக்கிறதில்லை. இம்மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்திடுவதற்குக் கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் எந்த ஓர் ஊழியக்காரனும், எவ்விதமான சூழ்நிலைகளினாலும், சந்தர்ப்பங்களினாலும் வழிநடத்தப்படக்கூடாது; மேலும் இதுவே சகல சிருஷ்டிகளைச் சித்திரவதைப் பண்ணிடுவதற்கும், கொல்வதற்குமான நம்முடைய காலங்களிலுள்ள சட்ட விரோதமான நீதிமன்ற கொலை முறைமைக்கான தற்கால பாணியாகும் என்பதை மாத்திரமே [R2780 : page 91] நாம் இப்பொழுது சுட்டிக்காண்பிக்கின்றோம்; மேலும் அனைத்து விஷயங்களிலும், ஒழுங்கற்றுப்போவதற்கும், சட்டம் அற்றுப்போவதற்கும், கட்டுப்பாடற்றுப் போவதற்கும் கிறிஸ்தவ மண்டலத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் மற்றும் வேகமாய் வழிநடத்திக்கொண்டிருக்கும் பயங்கர சீற்றமான எண்ணங்களைச் சுட்டிக்காண்பிப்பதற்கும், நாம் குறிப்பிடுகின்றோம். “உன் பட்டயத்தை உறையிலே போடு” என்றும், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்றும், “உங்களை நிந்திக்கிறவர்களுக்கும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்” என்றும் உள்ள ஆண்டவருடைய கட்டளையை, கிறிஸ்துவின் உண்மையான சீஷர்கள் அனைவரும் அதிகமதிகமாய் நினைவுகூருவார்களாக.

பிதா ஊற்றும் பாத்திரம்

நம்முடைய பாடத்தின் ஆதார வசனமே, இந்த முழுப்பாடத்தினுடைய சாராம்சமாகும். நமது போதகர் அனைத்து விஷயங்களில் ஜெயங்கொண்டவராக வெளிவரத்தக்கதாக, அவருக்கு உதவிப்பண்ணினதும், பரம பிதாவினிடத்திலான அவருடைய கீழ்ப்படிதலுக்குக் காரணமுமான கொள்கைகளை இந்த ஆதார வசனமானது மிகவும் அருமையாகவும், மிகவும் சுருக்கமாகவும், மிகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்துகின்றது; மேலும் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கும், அவருடைய உண்மையான சீஷர்களாய் இருப்பதற்கும் நாடுகின்ற அனைவரும் இவ்வசனத்திலுள்ள கருத்தைச் சிந்தித்துப் பார்ப்பது நலமாயிருக்கும். “பிதா எனக்குக்கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ”. இதிலுள்ள கருத்துத் தெளிவாய் வெளிப்படுகின்றது. தமக்குக் காணப்படும் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் தம்மால் ஏற்படுத்தப்படவில்லை என்றும், தம்முடைய சத்துருக்களினால் தமக்கு ஏற்படுத்தப்படவில்லை என்றும் கர்த்தர் உணர்ந்திருந்தார். தம்முடைய விஷயங்கள் அனைத்திலும் தெய்வீக மேற்பார்வை இருக்கின்றது என்பதை உணர்ந்திருந்தார்; மேலும் பிதா அனுமதிக்காத எதுவும் தம் மீது வருவதில்லை என்பதையும் அறிந்திருந்தார்; காரணம் பிதா இப்படியாக ஏற்பாடு பண்ணியுள்ளார் என்றும், தமக்கெனப் பிதா இந்தப் பாத்திரத்தில் ஊற்றியிருக்கின்றார் என்றும், இதநிமித்தம் அதைப் பானம் பண்ணுவது தம்முடைய கடமை என்றும் அறிந்திருந்தார்.

அச்சுறுத்தும் சோதனைகள் மற்றும் சிரமங்களில் கர்த்தருடைய ஜனங்கள் ஒருபோதும் தப்பித்துக்கொள்வதற்குரிய போக்கைப் பார்க்கக்கூடாது என்பதை நாம் சொல்ல வரவில்லை, காரணம் நாம் திராணிக்கு மேலாக சோதிக்கப்படுவதில்லை என்றும், சோதனையில் தம்முடைய திராணிக்கு மிஞ்சினதாய் இருக்கும் அம்சங்களுக்கு நமக்குத் தப்பித்துக்கொள்வதற்கான போக்கும் அருளப்படும் என்றும் உள்ள கர்த்தருடைய வாக்குத்தத்தம் நமக்குக் காணப்படுகின்றது. ஆகவே, தீமைக்கு நாம் நம்மைக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுக்கும் விஷயமானது, உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது என நாம் உணரும்போது, உதவி வந்தாக வேண்டும் இல்லையேல் நாம் முற்றிலுமாய் விழுந்துபோய்விடுவோம் எனும் நிலைமை வரும் நேரம்தான், நாம் தப்பித்துக்கொள்ளத்தக்கதாக கர்த்தர் நமக்கு எந்த வழியைத் திறக்கின்றார் என நாம் பார்க்க வேண்டிய நேரமாகும். ஆனாலும் தப்பித்துக்கொள்ளும் வழியானது, நம்முடைய சொந்த வழியாய் இராமல், மாறாக கர்த்தர் ஏற்பாடு பண்ணினதாக இருக்கத்தக்கதாகவும் நாம் நிச்சயத்துடன் காணப்பட வேண்டும். ஏனெனில், ஓர் இடத்திலுள்ள கடமையிலிருந்தும், பரீட்சையிலிருந்தும், சோதனையிலிருந்தும் ஓடிப்போய்விடுவது என்பது, வேறு ஏதோ திசையிலுள்ள வேறொரு சோதனைக் குள்ளாகவும், பரீட்சைக்குள்ளாகவும், ஒருவேளை கடுமையான சோதனைக் குள்ளாகவும் விழுந்துவிடுவதாக மாத்திரமே காணப்படும். சரீரத்தினுடைய தலைக்கு மாத்திரமல்லாமல், அங்கங்கள் அனைத்திற்கும் பிதா ஊற்றியுள்ளதின் பாகம்தான் இந்தப் பரீட்சைகள், துன்பங்கள், சிரமங்கள், அவதூறுகள் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்திட வேண்டும். ஆகவே நாம் நல்ல போர்ச்சேவகர்களெனத் துன்பம் சகிப்பதற்கு ஆயத்தப்பட வேண்டும்; நம்முடைய உடன்படிக்கையை மீறாத விதத்திலும், நீதியின் எந்தப் பிரமாணத்தை மீறாத விதத்திலும், தப்பித்துக்கொள்வதற்கு நியாயமானதாக, சரியானதாக சூழ்நிலை ஒன்றைக் கண்டாலே ஒழிய மற்றப்படி கர்த்தர் நம்மீது வரத்தக்கதாக அனுமதிக்கும் எதையும் தைரியமாய்க் கர்த்தருடைய ஏற்பாடு என ஏற்றுக்கொள்ள வேண்டும்; மாறாக ஓடிப்போய்விடக்கூடாது.

பிதா ஊற்றியுள்ள பாத்திரத்தில் பானம் பண்ணுவதை விரும்புவதைக் காட்டிலும், கர்த்தருடைய பின்னடியார்கள் கற்றுக்கொள்வதற்கு அவசியமான படிப்பினை வேறு எதுவும் இல்லை; அதாவது, நாம் பிதாவினுடையவர்கள் ஆனபடியினாலும், அபிஷேகம் பண்ணப்பட்டவரின் சரீரத்தினுடைய அங்கங்களாய் இருக்கின்றபடியினாலும், நம்முடைய காரியங்கள் அனைத்தையும் பிதா வழிநடத்துகின்றார், மற்றும் வழிக்காட்டுகின்றார் என்பதை அடையாளம் கண்டுகொள்ளுதல் ஆகும். இவ்விஷயத்தில் பார்க்கும்போது, தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள், உலகத்தாரிடமிருந்து முற்றிலும் வேறான ஸ்தானத்தில் காணப்படுகின்றனர்; உலகத்தாரை, பிதா தம்முடைய புத்திரர்களெனக் கையாளுவதில்லை; உலகத்தார் மகிமை, கனம் மற்றும் அழியாமைக்கான பரீட்சையில் இல்லை; மேலும் உலகத்தாருக்குப் பிதா இப்பொழுது பரீட்சைகள், சோதனைகள் முதலான பாத்திரங்களை ஊற்றிக்கொண்டிருக்கவில்லை. “நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிற தல்லவா?” – அவரது பாடுகளில் பங்கடைதலாயிருக்கிறதல்லவா? (1 கொரிந்தியர் 10:16); “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (2 தீமோத்தேயு 2:12); “ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.” ரோமர் 6:8).