R5284 – தேவசமாதானம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5284 (page 227)

தேவசமாதானம்

THE PEACE OF GOD

“அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” பிலிப்பியர் 4:7

சமாதானம் என்பதின் அர்த்தம், அமைதியான அல்லது மனம் கலக்கமற்ற நிலைமையாகவும், அமைதிக் குலைவிலிருந்து (அ) கலகத்திலிருந்து விடுதலைபெற்ற நிலைமையாகவும் சாந்தமான நிலைமையாகவும், மன அமைதியுடன் இருக்கும் நிலைமையாகவும் உள்ளது. இப்படியான மனநிலைமையில்தான் தேவன் காணப்படுவதாக, நம்முடைய ஆதார வசனம் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. தேவன் மனக்கலக்கமுறாதவராகவும், அமைதல் உள்ளவராகவும், அமைதி குலைவு பெறாதவராகவும், தம்முடைய பரந்த ஆட்சிப்பகுதி பற்றின எந்த அக்கறைகளினாலும் ஒருபோதும் கலக்கம் அடையாதவராகவும், சோர்வடையாதவராகவும், திகைப்புறாத வராகவும் காணப்படுகின்றார். எனினும் வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்ற தேவனுடைய இந்தப் பூரணமான சமாதானத்திற்கான காரணம், அவரது பரந்துவிரிந்து காணப்படும் ஆட்சி பகுதியில் எவ்விதமான ஒழுங்கீனங்களும் இல்லை என்பதாகவோ அல்லது அவர் விருப்பு வெறுப்பு அற்றவர் என்பதாகவோ இல்லாமல், மாறாக அவரது மகிமையான பண்புகள் பூரண சமநிலையில் காணப்படுவதினால், அவர் ஒட்டுமொத்த அண்டசராசரத்தின் இராஜாவாக, தமது சூழ்நிலைகளை அடக்கி ஆளுபவராகக் காணப்படுகின்றார் என்பதேயாகும்.

குழப்பமும், போரினுடைய புகை மேகத்தின் மத்தியிலும் மாபெரும் தளபதிகளாகிய கிராண்ட் மற்றும் நெப்போலியன் போன்றவர்கள் கொண்டிருந்த அமைதியையும், சாந்தத்தையும், தங்கள் உணர்வுகளைத் தாங்களே அமைதியுடன் கட்டுப்படுத்துவதையும் கண்டு நாம் வியந்திருக்கின்றோமா? அல்லது தேசிய குழப்பங்கள் மற்றும் ஆபத்துக்கள் மத்தியில் மாபெரும் ஆட்சி வல்லுநர்களாகிய கிலாட்ஸ்டோன் (அ) பிஸ்மார்க் போன்றவர்களும் அல்லது ஆபத்தான நேரங்களிலும், இடங்களிலும் திறமிக்க மருத்துவர்களும், இன்னும் மற்றவர்களும் தங்கள் உணர்வுகளைத் தாங்களே அமைதியுடன் கட்டுப்படுத்துவதையும், சாந்தத்தையும், அமைதலையும் கொண்டிருப்பதைக் கண்டு நாம் வியந்திருக்கின்றோமா? இவர்கள் அனைவரும், தேவனுடைய மனதை ஆண்டிடும் தன்னம்பிக்கை மற்றும் தமது உணர்வுகளைத் தாமே கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் விளைவான சமாதானத்திற்கான இலேசான உதாரணங்களே ஆவார்கள். தேவன் ஒருபோதும் குழப்பம் அடைவதில்லை, திகைப்பதில்லை, தடுமாறிவிடுவதில்லை, கவலைப்படுகிறதில்லை அல்லது தமது திட்டங்கள் தோல்வியடைந்துவிடுமோ என்றோ அல்லது தமது நோக்கங்கள் தோல்வியடைந்துவிடுமோ என்றோ பயப்படுவதும் இல்லை; காரணம் அவரிடம் அனைத்து வல்லமையும், ஞானமும் காணப்படுகின்றது.

எந்த ஒரு காரியத்தின் விஷயத்திலும், அது நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகளின் உச்சக்கட்டங்கள்வரை, நோக்கிப்பார்க்கும் அளவுக்கு, அவரது திறமிக்க அறிவு/ஞானம் காணப்படுகின்றது. மேலும் அவரது அறிவானது, அனைத்துக்காரணங்களையும் புரிந்து கொள்கின்றது மற்றும் சகல விளைவுகளையும் துல்லியமாய் உய்த்துணர்கின்றது; இதன் காரணமாக அவர் ஆதிமுதல் அந்தம் வரையிலுமானவைகளை, ஞானக்கொள்கைகளின் அடிப்படையில் மாத்திரமல்லாமல் உள்ளுணர்வினால் அறிந்தவராகவும் காணப்படுகின்றார். சகலவற்றின் சிருஷ்டிகராக மற்றும் சகல பிரமாணங்களைத் தோற்றுவித்தவராக அவர், சரீரம் மற்றும் மனம் அறிவு சார்ந்த பிரமாணங்களையுடைய சிக்கலான நுட்பங்களுக்கு முழுமையாய்ப் பழக்கப்பட்டவராகக் காணப்பட்டப்படியினால், அவரது மனதிற்குத் தெரிந்திராத தீர்வையுடைய எந்தப் பிரச்சனையும் எழும்புவதில்லை. “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை” (1 யோவான் 1:5).

சகலவற்றின் சிருஷ்டிகராகிய தேவன் அனைத்தையும் தாங்கிடுவதற்கும்/அழியாமல் தடுத்து நிறுத்துவதற்கும் ஆற்றல்மிக்கவராய்க் காணப்படுகின்றார். ஆபத்தின் (அ) குழப்பத்தின் எவ்விதமான ஐயமில்லாமல், கடந்த யுகங்களிலெல்லாம் ஒட்டுமொத்த அண்டசராசரமும் அவருடைய சித்தத்தை அமைதலான கம்பீரத்துடன் நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது; மற்றும் அவர் வல்லமையானது சதாகாலங்களிலும் அண்டசராசரத்தினைத் தாங்கிடுவதற்கு வாக்குறுதியும் அளித்துள்ளது.

ஆகவே திரளாகவும் மற்றும் தமக்குள்ளாகவும் காணப்படுகின்ற வல்லமை மற்றும் ஞானம் என்னும் ஆதாரத்திலிருந்தே, தேவனுடைய சமாதானம் தோன்றியுள்ளது. ஆனால் இந்த ஆதாரங்களிலிருந்து மாத்திரமே தெய்வீகச் சமாதானம் தோன்றிடவில்லை; ஏனெனில் சமாதானம் என்பது உள்ளான நற்பண்புகளுடன் இணைந்துவரும் ஒன்றாகும். தேவனே சகல பண்புகளுக்கும், சகல கிருபைகளுக்குமான உருவமாக இருக்கின்றார்; இதன் காரணமாக அவர் தம்முடைய உள்ளான ஞானம் மற்றும் வல்லமையினாலும் மற்றும் நன்மைத் தீமை பற்றின பூரண உணர்வினாலும் பாக்கியமான சமாதானத்தையும், திருப்தியையும் கொண்டிருக்கின்றார்.

உணர்வு பூர்வமான தேவன்

அதிகமான குழப்பங்களும், பிரச்சனைகளும் இருந்தபோதிலும், தேவனுடைய சமாதானமும் காணப்பட்டே வருகின்றதை நாம் பார்க்கின்றோம். ஒரு தகப்பனாக, அவர் தமது அறிவுள்ள சிருஷ்டிகள் அனைத்தின் மீதிலும், அதாவது “பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள முழுக்குடும்பத்தின்” மீதிலும் தகப்பனுக்குரிய அன்பைக் கொண்டிருப்பதாகவும், மற்றும் “சிருஷ்டிக்கப்பட்டவைகள் அனைத்தும் அவருடைய சித்தத்தினாலேயே உண்டாக்கப்பட்டவைகளும், சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாக” இருக்கின்றது என்பதாகவும் நமக்குக் காட்டித்தருகின்றார் (எபேசியர் 3:14; வெளிப்படுத்தல் 4:11). அவர்களை அவர் தமது சாயலில் சிருஷ்டித்தார், அதாவது புத்திரர்கள் என அவர்களிடம் தாம் ஐக்கியமும், உறவும் கொண்டிருக்கவும் மற்றும் பிதாவென தம்மிடம் அவர்கள் ஐக்கியமும், உறவும் கொண்டிருக்கத்தக்கதாகவும், மற்றும் இப்படியான பரஸ்பர உறவு மற்றும் ஐக்கியத்தின் காரணமாக சிருஷ்டிகரும், சிருஷ்டிகளும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் இன்பமும் அடையத்தக்கதாகவும் அவர்களைத் தம்முடைய சாயலில், அதாவது அதே மனம் மற்றும் நன்னெறித் தன்மைகளில் சிருஷ்டித்தார்.

தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட காரியமானது, ஒரே மனதின் தன்மைகளை மாத்திரம் உள்ளடக்குவதாக இராமல், இன்னுமாகக் குணலட்சணம் உருவாகுவது தொடர்புடைய விஷயத்தில், ஒரேமாதிரி சுயமாய்ச் செயல்படும் விஷயத்தையும் உள்ளடக்குவதாக இருக்கின்றது. குணலட்சணத்தை வளர்த்துக் கொள்ளும் விஷயத்தில் சுயமாய்ச் செயல்பட முடியாத சிருஷ்டி, தேவனுடைய சாயலில் காணப்படாத சிருஷ்டியாக இருக்கும். குணலட்சணத்தை வளர்த்துக் கொள்ளும் நோக்கத்திற்காக, நன்மையும், தீமையும், இரண்டுமே சிருஷ்டியின் முன் வைக்கப்பட வேண்டும். சிருஷ்டியானவன் நடவடிக்கைகள் சார்ந்த சரியான மற்றும் தவறான கொள்கைகளை உய்த்துணர வேண்டும்; மேலும் நீதியானவைகளைச் சிருஷ்டியானவன் சுயமாய்த் தேர்ந்துகொள்வதன் விளைவாக உண்டாகும் நற்பண்புகளில் தேவன் பிரியமாய் இருப்பதை உணர்ந்து கொள்ளத்தக்கதாக, சிருஷ்டியானவன் சுயமாய்ச் செயல்படுவதற்கு/தெரிந்துகொள்ளும்படிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான்.

கபடற்ற குழந்தையினிடத்தில்/சிசுவினிடத்தில் பூமிக்குரிய பெற்றோர் கொண்டிருக்கும் அன்பைப்போன்று, இதனிலும் பலமானதுமாக புதிதாய்ச் சிருஷ்டிக்கப்பட்டு, கபடற்ற சிருஷ்டிகளாய் இருப்பவர்களிடத்தில் தேவனுடைய அன்பு காணப்படுவதினாலும், மற்றும் சிருஷ்டி வயதில் வளருகையில், அச்சிருஷ்டியின் மீதான அந்த அவருடைய அன்புடன்கூடிய அக்கறையும், கவனமும் குறைந்துபோகாமல், மாறாக கொள்கைகளினுடைய மற்றும் நீதியின் கனிகளினுடைய வளர்ச்சியினை ஆர்வமாய்க் கவனிப்பதாலும், பூமிக்குரிய பெற்றோர்களைப்போலவே, தேவனும் சுயாதீனமுள்ள, அறிவுடைய தமது சிருஷ்டிகள் சரியானப் போக்கையோ அல்லது தவறான போக்கையோ தெரிந்துகொள்ளும்போது மனமகிழ்ச்சியையோ அல்லது வேதனையையோ அனுபவிக்கின்றார். இது தொடர்புடைய விஷயத்தில் அவரது தகப்பன்துவம் பற்றின உண்மையைவைத்து நாம் நியாயமாக கணித்த விஷயங்களினால் மாத்திரம் முழுமையாய் உறுதிபடுத்தப்படாமல், இன்னுமாக அவருக்கு வெறுப்பாகவும், விசனமாகவும், அருவருப்பாகவும் சில விஷயங்கள் இருப்பதாகவும், அவைகள் அவருக்குப் பிரியமாய் இருப்பதில்லை என்பதாகவும், அவைகளுக்கு எதிராக அவருடைய கோபம் தீவிரமாய்க் காணப்படுகின்றது என்பதாகவும், அவைகளை உடையவர்களை அழித்துப்போடுமளவுக்கு, அவரது சினமும், கோபமும் தீவரமாய்க் காணப்படுகின்றது என்பதாகவும் கூறும் வேத வாக்கியங்களினாலும் நாம் மேற்கூறிய காரியங்களில் முழுமையாய் உறுதியடைகின்றோம். இன்னும் மற்றச் சில வேதவாக்கியங்களானது அவர் நீதியின் கொள்கைகளிலும், அவைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடத்திலும் பிரியமும், மகிழ்ச்சியும், சந்தோஷமும் கொள்வதாகத் தெரிவிக்கின்றது; அதாவது வேதனைக்கு எதிரான இன்ப உணர்வுகளையும் அவர் கொண்டிருப்பதாக வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன; வலியும், மகிழ்ச்சியும் ஒரே உணர்வுகளின் இறக்கமும், ஏற்றமுமாக இருக்கின்றது என்று கருதப்படலாம்.

[R5284 : page 228]

தெய்வீக மனம் பற்றின இந்த வெளிப்பாடுகள் அனைத்தும், தெய்வீகமானவர் உணர்வுகள் உடையவர் என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றது மற்றும் மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளபடியால் நாம் உணர்வுகளுடைய சுபாவமுடையவர்கள் என்பதை வைத்தே, தெய்வீகமானவரும் உணர்வுகள் உடையவர் என்பதை நிதானித்துக்கொள்ளலாம். அன்புக்குரியவர்களே தேவன் உணர்வுகள் அற்றவர் அல்ல; அவர் வேதனை மற்றும் மகிழ்ச்சி எனும் உணர்வுகளின் விஷயத்தில் உணர்விழந்தவர் அல்ல; மாறாக அவரது குணாதிசயங்கள்/இயல்புகள் முழுமையாய்ச் சமநிலையில் காணப்படுவதின் காரணமாக, வேதனையான (அ) ஆனந்தமான சூழ்நிலைகளிலும், அனைத்துச் சூழ்நிலைகளிலும் சீரான சமாதானம் தக்கவைக்கப்படுகின்றது.

கண்களுக்குப் புலப்படுகின்ற பிரச்சனைகள் தேவனுடைய சமாதானத்தைக் குலைத்துப்போடுவதில்லை

இந்த ஒரு கருத்தை மனதில்கொண்டவர்களாக, பிரம்மிக்கத்தக்கதான தேவனுடைய சமாதானமானது, நிரந்தரமாய்த் தக்கவைக்கப்படுகின்ற சூழ்நிலைகளைக் குறித்துப் பார்க்கலாம். தேவனுடைய சகல சிருஷ்டிப்பின் கிரியைகளில் காணப்படும் ஆழமான அவரது திட்டங்கள் நிறைவேறுவதற்கு நீண்ட யுகங்கள் (aions) தேவையாய் இருக்கின்றது. யுகங்களின் ஊடே அவரால் தம்முடைய மகிமையின் திட்டத்தின் வாயிலாக, நீதியில் ஸ்திரப்படுத்தப்பட்டு மற்றும் தமது ஈவாகிய நித்திய ஜீவனுக்குப் பாத்திரமான நிலையிலும், தம்முடைய சாயலிலும் (இறுதியில்) அறிவுள்ள சிருஷ்டிகள் காணப்படுவதைப் பார்த்திட முடிந்தது. இன்னுமாகச் சிருஷ்டிகருக்கும், சிருஷ்டிகளுக்கும் இடையிலான பரஸ்பர மகிழ்ச்சியுங்கூட தமது திட்டத்தின் வாயிலாக ஏற்படப்போவதை யுகங்களின் ஊடே அவரால் பார்க்கமுடிந்தது; ஆகவே அந்த மகிமையான நிறைவேறுதலுக்காகக் காத்திருப்பதற்கென, அவர் சமாதானத்துடன்கூடிய பொறுமையுடன் உறுதி கொண்டு காணப்பட்டார்.

திட்டங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கையில் மற்றும் காலங்கள் கடந்துபோய்க் கொண்டிருக்கையில் அவருடைய சிருஷ்டிகளுக்குக் கொடுக்கப்பட்ட தான சுயாதீனம் சிலரால் தவறாய்ப் பயன்படுத்தப்பட்டதினிமித்தம், அந்தச் சிலர் பொல்லாப்பான குணலட்சணங்களை வளர்த்திக் கொண்டவர்களானார்கள். இதன் காரணமாக அவருடைய குடும்பத்திற்குள், அதாவது “பரலோகத்திலும், பூலோகத்திலுமுள்ள முழுகுடும்பத்திற்குள்,” அதாவது அவரது சகல சிருஷ்டிகளாகிய மனிதர்கள் மற்றும் தூதர்களாகிய அவரது குடும்பத்திற்குள் பிரச்சனைகள் வந்தது; குடும்பமே பிரிந்தது; சிலர் நீதியின் பக்கமாய் நின்றார்கள் மற்றும் சிலரோ தீமை செய்வதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். ஆனால் இந்த எதிர்பாராத நிகழ்வானது நடைப்பெற்றுவரும் திட்டத்திற்கு அவசியமான ஒன்றாக முன்கூட்டியே தேவனால் அறியப்பட்டதாகும்; தெய்வீகக் கணிப்பின்படி தெய்வீகத் திட்டத்தின் மகிமையான பலனுக்கு, இந்த அனைத்துப் பிரச்சனைகளும், இழப்புகளும் அவசியம் என்பதைத் தேவன் முன்கூட்டியே அறிந்திருந்தார்.

குடும்பத்தில் பிரச்சனை என்பது எத்துணைப் பயங்கரமானதொரு காரியமாகும்! கெட்டக் குமாரனும் அல்லது சிறுபிள்ளைத்தனமாய் நடந்துகொள்ளும் பெண் பிள்ளைகளும் எவ்வளவாய் மனுஷீக பெற்றோர்களின் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுகிறார்கள்! ஆ! இப்படிப்பட்டதான ஒரு துயரத்தைப் பற்றிப் பரமபிதாவும் அறிந்திருக்கின்றார்; ஏனெனில் அவரது குமாரர்களில் ஒருவனும், ஒளியின் ஒரு தூதனுமாய் இருந்த சாத்தான், மின்னலைப்போல் பரலோகத்திலிருந்து விழுந்ததைப் பிதா பார்த்தார். ஆறாயிரம் ஆண்டுகளாக அந்தக் குமாரன், தேவனுக்கு எதிராக பகிரங்கமாய் எதிர்த்து நின்று, கலகம் புரிந்துகொண்டு வருகின்றான் மற்றும் இன்னும் கலகத்தையும், பொல்லாப்பையும் தூண்டிவிடுவதில் மிகவும் சுறுசுறுப்புடனும், மோசமான சூழ்ச்சியுடனும் ஈடுபட்டிருக்கின்றான் (ஏசாயா 14:12; லூக்கா 10:18). தேவதூதர்களில் அநேகர் தங்களது, ஆதிமேன்மையை விட்டுவிட்டுச் சென்றதையும், சாத்தானுடன் கூட்டாளிகளானதையும், பிதா பார்த்தார் (யூதா 6); பின்னர் முழு மனுக்குலமும் பாவத்திற்குள் விழுந்ததையும் பிதா பார்த்தார். எந்த ஒரு மனுஷீக பெற்றோராகிலும் தனது குடும்பத்திற்குள் இவ்வளவுக்கு வெறுக்கத்தக்கதான மற்றும் கடுமையான சதி எழும்பியுள்ளதைக் கண்டதுண்டோ/எதிர்கொண்டதுண்டோ? நிச்சயமாய் எந்த மனுஷனும் இல்லை.

பிற்பாடு சிட்சித்தல் எனும் இனிமையற்ற கடமையைச் செயல்படுத்துவதற்குரிய அவசியத்தைத் தேவன் கண்டார். அவருடைய நீதியின்படி, அவர் உண்மையற்ற குமாரர்களை, தம்முடையவர்கள் அல்லவென்று மறுக்க வேண்டும் மற்றும் அவர்களைச் சத்துருக்கள்போல் கையாள வேண்டும். இவ்வளவு காலமும் தேவனுடைய தகப்பனுக்குரிய அன்பானது, வஞ்சிக்கப்பட்டவர்களையும், விழுந்துபோனவர்களையும், ஆசீர்வதிப்பதற்கென ஆயத்தங்களைப் பண்ணிக்கொண்டிருந்தபோதிலும், மீட்பினுடைய நோக்கமானது, மனம் திரும்புகிறவர்களை அவருடைய கிருபையினிடத்திற்குச் சீர்ப்பொருந்தப் பண்ணுவதாக இருந்தபோதிலும், அன்பு திரையிட்டு மூடப்பட்டிருக்க வேண்டும், மற்றும் இரக்கமற்ற, கண்டிப்பான/கடுமையான நீதி மாத்திரமே வெளிக்காட்டப்பட வேண்டும். இது ஓர் இனிமையான கடமையும் அல்ல, இதினிமித்தம் பாவியும் அவரிடத்தில் பிரியப்படுவதும் இல்லை.

இந்தத் துரோகிகள் எத்தகைய அன்பிற்கு எதிர்த்துப் பாவம் புரிந்திட்டார்கள் என்பது குறித்துச் சிந்தித்துப்பாருங்கள். தேவனிடத்திலிருந்து நன்மையான எந்த ஈவும், பூரணமான எந்த வரமும் வந்திட்டாலுங்கூட, அவரது கிருபைகள் இழிவாகப் பார்க்கப்படுகின்றது; அவரது அன்பு வெறுப்புடன் உதைத்துத் தள்ளப்படுகின்றது; அவரது நீதியான அதிகாரத்திற்கு எதிராக சதித்திட்டம் போடப்படுகின்றது மற்றும் எதிர்த்து நிற்கப்படுகின்றது; அவரது குணாதிசயங்கள் தவறாய்க் காட்டப்படுகின்றது, அவதூறாய்ப் பேசப்படுகின்றது மற்றும் வெறுக்கத்தக்கதாயும், அநீதியானதாயும், இழிவானதாயும் காண்பிக்கப்படுகின்றது. எனினும் இவைகள் அனைத்தின் மத்தியிலுங்கூட, தேவனுடைய சமாதானம் தொடர்ந்து காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது மற்றும் ஆறாயிரம் ஆண்டுகளாக தேவன் தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்டுவரும் இந்த விபரீதங்களைச் சகித்தவராகவே காணப்படுகின்றார். ஆனால் இன்னமும் அவரது ஆச்சரியமான கிருபையும், அவரது அன்பும் பெருகிக்கொண்டே இருக்கின்றது; மேலும் அவர் உலகத்தை மிகவும் அன்புகூர்ந்தபடியால், உலகம் பாவிகளாக இருந்தபோதிலும் அவர்களுக்காக மரிப்பதற்கெனத் தம்முடைய ஒரேபேறான குமாரனைத் தந்தருளினார் என்றும், இந்த ஒரே பேறான குமாரன் வாயிலாக, நியாயத்தீர்ப்பானது (பரீட்சை/தேர்வாய்வு பொய்க்குப் பிதாவும், ஒட்டுமொத்த சதிதிட்டத்திற்குத் தலைவனும், பின்னிருந்து தூண்டிவிடுபவனுமான சாத்தானைத் தவிர, மற்றப்படி விழுந்துபோன தூதர்களுக்கும் அருளப்படும் என்றும் வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது (யோவான் 3:16; 1 கொரிந்தியர் 6:3; யூதா 6; எபிரெயர் 2:14; வெளிப்படுத்தல் 20:10,14).

துயரத்துடன் இசைந்து செல்லும் தேவனுடைய சமாதானம்

தெய்வீக அன்பினுடைய இந்த அன்பளிப்பானது, நமது பரம பிதா, தம்முடைய மாபெரும் மற்றும் ஆச்சரியமான திட்டத்தைச் செயல்படுத்தும் விஷயத்தில் கொடுக்க வேண்டிய விலைக்கான மற்றுமொரு அடையாளமாகும். தம்முடைய குடும்பத்தில் ஒரு பெரும்பகுதி பாவத்திற்குள் விழுந்ததை மாத்திரமாக அவர் பார்க்க வேண்டியதாய் இராமல், இன்னுமாக அவர்களை மீட்பதற்கு, அவர் தமது இருதயத்திற்கு அருமையான பொக்கிஷமானவராய்க் காணப்பட்டவரைப் பலிச் செலுத்தவும், இந்தப் பிரியமான குமாரனை மிகவும் கீழாக அவமானத்திற்கும், நிந்தனைக்கும், பாடுகளுக்கும், மரணத்திற்கும் கீழ்ப்படுத்தவும் வேண்டியிருந்தது. மீண்டுமாக மனுஷீக பெற்றோரின் அன்பானது, தேவனுடைய அன்பின் இந்த வெளிப்பாட்டிற்கான விலையினைப்பற்றிப் புரிந்துகொள்வதற்கு நமக்கு உதவியாய் இருக்கின்றது. தமக்குப் பிரியமாய் இருந்த குமாரனை, அவரது நேசக்குமாரனை அன்பின் எத்துணை மென்மையான மற்றும் ஆழமான உணர்வுகளுடன் இப்படியாகப் பலிச் செலுத்தியிருக்க வேண்டும்! லோகோஸ் சிருஷ்டிக்கப்பட்டது முதற்கொண்டு வெளிப்பட்டிருந்த குணலட்சணங்களோடுகூட, அவருக்கு அவமானம் மற்றும் வலியின் பாதை சுட்டிக்காட்டப்பட்ட போது, அவர் தெய்வீகச் சித்தத்திற்கு முழுமையாய்க் கீழ்ப்படித்தி, ஒப்புக்கொடுத்ததினால் வந்த குணலட்சணமும் இப்பொழுது சேர்ந்தது/வெளிப்பட்டது.

ஆ! இரக்கத்தைச் சுமந்துசென்ற இயேசுவை, பிதாவானவர் கொஞ்சமேனும் வேதனையான உணர்வுகள் இல்லாமலா அனுப்பி வைத்தார்? மரணத்தின் அம்புகளானது, தமது நேசக் குமாரனுடைய இருதயத்தை ஊடுருவினபோது, தகப்பனுக்குரிய அன்பின் நோவு/வலி தேவனுக்கு இல்லாமலிருந்ததா? “என் ஆத்துமா மரணத்திற்கு ஏதுவான துக்கங்கொண்டிருக்கிறது” என்றும், “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின் படியே ஆகக்கடவது” என்றும் நமது அருமை கர்த்தர் கூறினபோது இவ்வார்த்தைகளானது, நித்தியமானவருடைய இருதயத்தின் அனுதாபம் என்னும் நரம்பை தொடவில்லையா? பிதாவினுடைய உண்மையான அன்பானது, கர்த்தருடைய வேதனையில், பரிவிரக்கத்துடன் பங்குகொண்டது (மத்தேயு 26:38,39).

உண்மையான அன்பானது, அழுவாரோடு அழும் என்றும், சந்தோஷப் படுவாரோடு சந்தோஷப்படும் என்றும் திவ்விய வார்த்தைகளில் போதிக்கப்பட்டக் கொள்கையானது, தெய்வீகமானவரிடத்திலும் உதாரணமாய்க் காட்டப்படுகின்றது. அழிவில்லாத தேவனால், நமக்காக மரிக்க முடியாது; அவரது திவ்விய சுபாவமானது, மரணம் அவருக்குச் சம்பவிப்பதற்கு இடம் கொடுப்பதில்லை. ஒருவேளை தேவன் மரிப்பாரென்றால், அவரை மரணத்திலிருந்து எழுப்புவதற்கு அவரைக் காட்டிலும் வல்லவர் எவருமில்லை; ஆகவே அனைத்துச் சிருஷ்டிகளும் அதிகாரி இல்லாமல் விடப்பட்டிருக்கும் மற்றும் அழிவும், சீர்க்குலைவுமே தொடர்ந்திருக்கும். ஆனால் தேவனால் தம்முடைய அன்புக்குரிய, தகப்பனுக்குரிய சுபாவத்தில் மிகுந்த வலியுடன், தம்முடைய இருதயத்திற்கு அருமையான பொக்கிஷத்தைப் பலிச் செலுத்திட முடியும் மற்றும் செலுத்தவும் செய்தார்; இவ்வாறாக வஞ்சிக்கப்பட்ட மற்றும் விழுந்துபோன தம்முடைய சிருஷ்டிகள் மீது வைத்த அன்பின் மூலமாக, தேவன் மாபெரும் அன்பை வெளிப்படுத்திட்டார் (1 யோவான் 4:9). ஒருவேளை இந்தப் பலியானது, அவருக்கு எந்த வலியையும்/இழப்பையும் கொடுக்கவில்லையெனில், ஒருவேளை இம்மாதிரியான பலியின் ஒரு சந்தர்ப்பத்தில் அவருடைய மனதில் எவ்விதமான வலியின் உணர்வு ஏற்படுவது சாத்தியமற்றதெனில், அப்போது அவரது குமாரனை அவர் தந்திட்டதானது, அவரது அன்பின் வெளிப்படுத்துதலாக இருக்காது; ஏனெனில் இழப்புகள் இல்லாத எதுவும், எதையும் வெளிப்படுத்துகிறது இல்லை.

பிதா பல யுகங்களாக மிகவும் பொறுமையுடன் தம்முடைய குணலட்சணம் தவறாய்க் காட்டப்பட்டதைச் சகித்து வந்த காரியத்திற்காக, நமது கர்த்தர் இயேசுவும் தமது மாபெரும் அனுதாபத்தை வெளிப்படுத்தினார். பிதாவை மகிமைப்படுத்துவதும், மனுஷர் மத்தியில் பிதாவின் மகிமையான குணலட்சணம் பற்றின தவறான கருத்துகளைச் சரிசெய்வதும், மனுஷர்களுக்கு அவரது நற்பண்புகளையும், பரிவையும், அன்பையும் கிருபைகளையும் காட்டுவதும், தாங்கள் பாவிகளாக இருந்தபோதிலும், தங்களைப் பாவத்திலிருந்து வெளிக்கொண்டுவருவதற்கும், தங்களுக்கான நித்திய இரட்சிப்பைத் திட்டமிடுவதற்கும் நாடினதன் மூலம், தங்களை அன்புகூர்ந்த இரக்கமுள்ள தேவனை, மனிதர்களும் அன்புகூரத்தக்கதாக, வழிநடத்துவதுமே இயேசுவின் ஜீவியத்தினுடைய ஒரே பிரயாசமாகும்.

தேவனுடைய சமாதானம் அவருக்குள் மையம் கொண்டிருக்கின்றது

உடைந்துபோன தேவனுடைய குடும்பத்தில் மாபெரும் குழப்பம்/அமைதியின்மை ஏற்பட்டது; இந்தக் குழப்பத்தில் தமக்குப் பிரியமில்லையென்று தேவன் தெரிவித்துள்ளார் (சங்கீதம் 5:4); எனினும் தேவனுடைய சமாதானம் ஒருபோதும் குலைக்கப்படவில்லை. தமது பூரணமான நன்னெறி [R5284 : page 229] பற்றியும், தவறிழைக்காத தமது ஞானம் பற்றியும், தமது ஆற்றல்மிக்க வல்லமைப்பற்றியுமான உணர்வுடனும் மற்றும் நீதி பற்றின முழுமையான உணர்ந்துகொள்ளுதலும், பரிசுத்த அலங்காரமுடைய மிகுந்த தீவிரமான அன்புடனும், பொறுமையுடனும், சமாதானத்துடனும், உபத்திரவத்தின் மத்தியிலான மகிழ்ச்சியுடனுங்கூடப் பாவிகளால் தமக்கு விரோதமாகச் செய்யப்பட்ட விபரீதங்களை ஆறாயிரம் வருடங்களாகத் தேவன் சகித்திருக்கின்றார்.

ஆனால் ஏழாம் ஆயிரவருடத்திலோ, தெய்வீக நோக்கங்களின்படியே, பிதாவின் மகிமையான குணலட்சணங்களை, பரலோகத்திலும், பூமியிலும் உள்ள சகல சிருஷ்டிகளுக்கு முழுமையாய் வெளிப்படுத்துவது, நமது கர்த்தர் இயேசுவுக்கான சந்தோஷகரமான சிலாக்கியமாகக் காணப்படும். பிற்பாடு நிறைவடைந்துள்ள தம்முடைய வேலையினுடைய மகிமையிலும், “ஒரே தலையின்கீழ் மீண்டும் ஒன்றுசேர்க்கப்பட்டுள்ள, பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள” அவரது குடும்பத்தின் நித்தியமான சமாதானத்திலும், மகிழ்ச்சியிலும், பிதாவானவர் களிகூருவார் (எபேசியர் 1:10; Diaglott).

இந்த ஆசீர்வாதமான நிறைவேறுதலானது, தேவனுடைய விழுந்துபோன குமாரர்களில், திருத்தப்பட முடியாதவர்கள், அநீதியை விரும்பினதின் காரணமாக தேவனால் ஏற்க மறுக்கப்பட்டவர்களும், தீமையினின்று மீண்டுவராதவர்களும், அறுப்புண்டு போகாதது வரையிலும் நடைப்பெறுவதில்லை. இதுவே சிருஷ்டிகரும், அனைவருக்கும் பிதாவுமானவரால் செய்யப்படும், இனிமையற்ற கடைசி கடமையாகும்; இது ஒரு வேதனையான கடமை எனினும், உலகளாவிய நீதி மற்றும் சமாதானத்தின் நலன் கருதி, இதனால் உண்டாகுபவைகளைச் சகித்துப் பொறுமையுடன் தம்மால் இக்கடமையை நிறைவேற்ற முடியும் என்று தேவனே தெளிவாய்க் கூறியுள்ளார். “கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு” (எசேக்கியேல் 33:11).

இப்படியாகத் தேவனுடைய சமாதானமானது, மாபெரும் குழப்பங்களுடனும், எல்லா விதமான துக்கம் மற்றும் துயரங்களுடனும் இசைந்து செல்கின்றதை நாம் பார்க்கின்றோம்; ஏனெனில் தேவனுடைய சமாதானமானது வெளிப்புறமான சூழ்நிலைகளைச் சார்ந்ததாய் இராமல், மாறாக மனதை சரியாய்ச் சமநிலையில் கொண்டிருப்பதையும், பூரணமான இருதயத்தினுடைய நிலைமையையும் சார்ந்ததாய் இருக்கின்றது. இத்தகைய சமாதானத்தை, அதாவது தேவனுடைய சமாதானத்தை நமது கர்த்தர் இயேசுவும்கூட, அவருடைய பூமிக்குரிய ஜீவியத்தில் ஏற்பட்ட அனைத்துக் குழப்பங்கள் மற்றும் கொந்தளிப்புகள் மத்தியில் அனுபவித்தார். இக்காரியமானது, நமது கர்த்தர் உலகைவிட்டுப் பிரிவதற்கு முன்னால், தம்முடைய சீஷர்களுக்கு விட்டுச்சென்ற சொத்தைக்குறித்து நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகின்றது:

“சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன் (குறைவான அளவிலோ அல்லது நீடித்திராத விதத்திலோ இல்லை), என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக” (யோவான் 14:27).

நமது கர்த்தருடைய இறுதி உயிலும், மரணச் சாதனமும் / விருப்ப ஆவணமும்

நமது கர்த்தர் தம்முடைய பூமிக்குரிய ஜீவியத்தின் கடைசி இரவில் மிகுந்த பரிவுடனும், கருணையுடனும் தம்முடைய பிரியமான சீஷர்களுக்கு, தம்முடைய இறுதி ஆசியாக, தமது சொத்தாக/சாதனமாக, சமாதானத்தை அருளினார். இது அவர் சீஷர்களுக்குக் கொடுத்திட்ட ஐசுவரியமான சொத்தாகவும், விலையேறப்பெற்ற ஒன்றாகவும் காணப்பட்டது. இது இயேசுதாமே பெற்றிருந்த அந்த ஆத்தும அமைதி, அந்த மன அமைதி, அதாவது தேவ சமாதானம் பற்றின வாக்குத்தத்தமாகும். இந்த ஒரு சமாதானமானது, தீமையின் அனுமதியினால் வந்திட்ட குழப்பங்கள் அனைத்தின் மத்தியிலுங்கூட தேவனால் எப்போதும் அனுபவிக்கப்பட்ட அதே சமாதானமாகும்; ஆனால் இந்தச் சமாதானமானது அதே ஆதாரத்திலிருந்து வரவில்லை. தேவனுடைய விஷயத்தில் இந்தச் சமாதானம், அவரிலேயே மையம் கொண்டிருந்தது; தேவன் தம்மிலே சர்வ வல்லமையுள்ள ஞானமும், வல்லமையும் இருப்பதை உணர்ந்தவராய் இருந்தார்; ஆனால் கிறிஸ்துவின் சமாதானமோ, அவரில் மையம் கொண்டிராமல் மாறாக தேவனுடைய ஞானத்தின் மீதும், வல்லமையின் மீதும், கிருபையின் மீதுமான விசுவாசத்தின் மூலமாக, தேவனிலேயே மையம் கொண்டதாய் இருக்கின்றது. ஆகவே நாமும் தேவனுடைய சமாதானத்தை, கிறிஸ்துவின் சமாதானத்தைக் கொண்டிருப்போமானால், “இந்த நம்முடைய சமாதானமும்,” விசுவாசத்தின் மூலமாய்த் தேவனில் மையம் கொண்டிருக்கவேண்டும்.

ஆம், கிறிஸ்துவின் சமாதானம் என்பது பெரும் மதிப்புள்ள சொத்தாகும். எனினும் இயேசு இவ்வார்த்தைகளை அப்போஸ்தலர்களிடத்தில் நேரடியாய்க் கூறின பிற்பாடு, எத்தனை சீக்கிரமாய், அதுவரை கருமையாகிக்கொண்டேவந்த உபத்திரவத்தின் புயலுக்குரிய மேகம், அப்போஸ்தலர்கள்மேல் சீறி வெடித்தது. கிருபையான இந்தச் சொத்துக்குரிய உயில் கொடுக்கப்பட்டவுடனே, இந்த உபத்திரவத்தின் புயலுக்குரிய மேகமானது, திகைப்பையும், தடுமாற்றத்தையும், குழப்பத்தையும் அப்போஸ்தலர்களுடைய இருதயத்தில் ஏற்படுத்தி, அவர்களது விசுவாசத்தை வேர் வரையிலும் உலுக்கிப்போட்டது. எங்கே போயிற்று இந்தச் சமாதானம்? கர்த்தர் இந்தச் சமாதானம் குறித்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தபோது, வெறுக்கத்தக்க துரோகியான யூதாஸ், தன்னுடைய கொலைப்பாதகத் திட்டத்தை நிறைவேற்றிட போயிருந்தான்; பின்னர் கெத்செமனேயின் வியாகுலம் தொடர்ந்தது; தங்கள் அருமை கர்த்தரின் வாழ்க்கையினுடைய முடிவை அப்போஸ்தலர்கள் உணர ஆரம்பித்தபோதோ, திகைப்பும், பீதியும் அவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இன்னுமாக பிலாத்துவின் அரண்மனையிலும், ஏரோதின் அரண்மனையிலும் கர்த்தர் தம்மேல் இரக்கமற்ற நிலையில் குற்றஞ் சாட்டுகிறவர்களின் முன்னிலையிலும், தம்மைத் துன்பப்படுத்துகிறவர்களின் முன்னிலையிலும் தனிமையில் நின்றபோது, கர்த்தரைப் பாதுகாத்திட அப்போஸ்தலர்களும் வல்லமையற்றுக் காணப்பட்டபோது, அப்போஸ்தலர்களை அதுவரையிலும் திணறவைத்திட்டக் கவலையுடன்கூடிய நிச்சயமின்மையானது, இப்பொழுது வரப்போகும் தீமையை நடுக்கத்தோடு ஆழமாய் அறிந்துகொள்ளும் உணர்ந்துகொள்ளுதலாயிற்று; பிற்பாடு சோகமான முடிவாகிய, சிலுவையில் அறையப்படுதல் எனும் பேரச்சங்களுக்குரிய நிகழ்வுகள் வந்தன.

எங்கே போயிற்று அந்தச் சமாதானம்?

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், வாக்களிக்கப்பட்டச் சமாதானம் எங்கே போயிற்று, அப்போஸ்தலர்கள் பயத்தினாலும், திகிலினாலும் மேற்கொள்ளப்பட்டுக் கர்த்தரைத் தனிமையில் கைவிட்டுவிட்டு, ஓடிப்போனப்போதும் மற்றும் பேதுரு கர்த்தரைக் காப்பாற்ற ஆவல் கொண்டிருந்தபோதிலும், பயத்தினால் நிரம்பியிருந்ததின் காரணமாக இயேசுவை மூன்றுதரம் மறுதலித்தப்போதும், கர்த்தரைத் தெரியாது என்று கூறி, சபித்தப்போதும், எங்கேபோனது அந்த வாக்களிக்கப்பட்டச் சமாதானம்? சமாதானம் இன்னும் வரவில்லை என்பதே பதிலாகும்; ஏனெனில் அப்போஸ்தலர் பவுல் குறிப்பிடுகின்றதுபோல், “ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே” (எபிரெயர் 9:16,17). ஆனால் சோகமான சம்பவம் முடிவடைந்து, “எல்லாம் முடிந்தது” என்னும் கூக்குரல், அப்போஸ்தலர்களுடைய ஆவலுள்ள காதுகளில் விழுந்திருக்கும்போது, அது விநோதமாய் இருப்பினும் அவர்களுடைய துயரப்பட்டுக் கொண்டிருக்கும் இருதயத்திற்குள், சமாதானம் புகுந்திருக்க வேண்டுமென்பது உறுதியே. இருண்ட வானங்களும், அதிரும் பூமியும், பிளந்த கன்மலைகளும், கிழிந்துபோன ஆலயத்தின் திரைச்சீலையும், இவைகளனைத்தும், உலகத்தினால் அடையமுடியாத ஆறுதலின் ஒரு செய்தியை அப்போஸ்தலர்களுக்கு, சீஷர்களுக்குத் தெரிவித்ததாய் இருக்கின்றது.

(இயேசுவின் கொலைக்குற்றத்தில் பங்குகொள்ளும் யூதர்களும், புறஜாதியாருமான) உலகத்திற்கு, இச்சம்பவங்களின் பொருளானது, அவர்களுக்கு எதிரான தெய்வீகக் கோபாக்கினையும், கோபமுமாகும். ஜனங்களைப் பயம் ஆட்கொண்டபோது, மற்றும் அந்தப் பயங்கரமான நாளினுடைய கூச்சல்களும், கிளர்ச்சிகளும் தணிந்தபோது, அவர்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள். ரோம நூற்றுக்கதிபதியும், இவரோடுகூடக் காணப்பட்டவர்களும் மிகவும் பயமடைந்து, “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்” என்றார்கள் (மத்தேயு 27:54).

ஆனால் கர்த்தருடைய சீஷர்களுக்கோ, இச்சம்பவங்கள் மிகவும் வேறான பொருளைக் கொண்டதாய் இருந்தது. இவர்களுடைய ஆண்டவருடைய நோக்கங்கள்/காரணங்கள், இவர்களுடைய நோக்கங்களாகவும், தேவனுடைய நோக்கங்களாகவும் இருந்தது. இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையினால் நிகழ்த்தப்பட்ட இச்சம்பவங்களானது, தேவன் இக்காரியங்களை அலட்சியமாகக் கருதவில்லை என்பதற்கான சாட்சியமாக சீஷர்களுக்குக் காணப்பட்டது; இருளின் திரைஊடாய் அவர்களால் தேவனுடைய பிரகாசமான திட்டங்களைப் பார்க்கமுடியவில்லை என்றாலும், (இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையினால் நிகழ்த்தப்பட்ட) இச்சம்பவங்களில் நம்பிக்கைக்கான மெல்லிய சத்தம் காணப்பட்டது.

மூன்று நாட்களுக்குப் பிற்பாடு, அந்த நம்பிக்கையானது, நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலினாலும், அவருடைய உயிர்த்தெழுதலானது, சீஷர்கள் நடுவில் அவர் தோன்றி காட்சியளித்து உறுதிப்படுத்தப்பட்டதாலும் மீண்டும் புத்துயிர் பெற்றது. மீண்டுமாக நாற்பது நாட்களுக்குப் பிற்பாடு, அந்த நம்பிக்கையானது, அவர் இறுதி ஆலோசனையை வழங்கி மற்றும் ஆசீர்வாதம் அருளி மற்றும் திரும்பிவருதல் குறித்து வாக்குத்தத்தம் பண்ணி மற்றும் பிதாவினால் வாக்களிக்கப்பட்டுள்ள தேற்றரவாளனாகிய, புத்திரசுவிகாரத்தின் பரிசுத்த ஆவியை அவர்கள் பெற்றுக் கொள்ளுவது வரையிலும், அவர்கள் எருசலேமிலேயே தங்கி இருக்கும்படியான அறிவுரைகளை வழங்கினப் பிற்பாடு, அவர் பரமேறினது காரணமாகப் பலப்படுத்தப்பட்டது. பெந்தெகொஸ்தே நாளின்போது, தேவனால் வாக்களிக்கப்பட்டிருந்த பரிசுத்த ஆவி வந்தது. பிறகே கிறிஸ்துவினுடைய ஐசவரியமான சொத்தாகிய, கிறிஸ்துவின் சமாதானமானது உணர்ந்துகொள்ள ஆரம்பிக்கப்பட்டது மற்றும் அவர்கள் ஜெபத்துடனும், எதிர்பார்ப்புகளுடனும் காத்துக்கொண்டிருந்த நாட்களானது, நிரந்தரமான சமாதானமுடைய நாட்களாகும்; அதாவது நதிபோல் பாயும் சமாதானமாய்க் காணப்பட்டது. ஆனால் பெந்தெகொஸ்தே நாளின்போது, வாக்களிக்கப்பட்டத் தேற்றரவாளன் வந்தபோது, அவர்களுடைய சமாதானம் என்னும் நதியானது, ஆழமான நதிப்படுகையை/ஆற்றின் அடித்தரையைக் கண்டடைந்தது; மேலும் அவர்களுடைய சந்தோஷத்திற்கும் எல்லையில்லாமல் போயிற்று.

“மகிமையான நதிபோன்றுள்ளதே தேவனுடைய பூரண சமாதானமே,
ஜெயம்கொண்டவர்கள் அனைவரிடத்திலும், அதன் ஆனந்தம் பெருகுகின்றதே.
பூரணமாய் உள்ளதே; எனினும் ஒவ்வொரு நாளும் பொங்கிப் பொங்கி வழிந்திடுதே
பூரணமாய் உள்ளதே; எனினும் ஆழமாய் ஆழமாய் வளருதே.”

சமாதானம் எனும் நம்முடைய ஐசுவரியமான சொத்து

ஆதித் திருச்சபையாருக்கு மாத்திரமாக, சமாதானம் எனும் இந்தச் சொத்து, உயிலாக்கப்படவில்லை. இது யுகத்தின் முடிவுவரையிலுமான முழுச் சபையாருக்கும் உரியதான ஆசீர்வாதமான சுதந்திரமாகும். நம் அனைவருக்குமான கர்த்தருடைய எண்ணத்தை அவர், “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை [R5284 : page 230] விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” என்று ஜெபம் பண்ணினதின் மூலமாய் வெளிப்படுத்தியுள்ளார் (யோவான் 17:20).

வாக்களிக்கப்பட்டுள்ள சமாதானமானது, உலகத்தின் குறுகிய கால சமாதானமாக இல்லையென்பதைக் கவனிக்கவும்; உலகத்தினுடைய இந்தக் குறுகிய கால சமாதானமானது, அதிர்ஷ்டம்/நல்ல காலம் இருக்கும்போதும், திரளான நண்பர்கள் காணப்படும்போதும், ஆரோக்கியம் நீடித்திருக்கும்போதும் காணப்படும், ஆனால் தரித்திரம் உள்ளே வரும்போதும், நண்பர்கள் கைவிட்டுச் செல்லும்போதும், ஆரோக்கியம் பாதிக்கும்போதும், மரணமானது நம் இருதயத்திற்கு அருமையானவர்களைத் திருடிச்செல்லும்போதும், இந்தக் குறுகிய கால சமாதானம் மறைந்துபோய்விடும். கிறிஸ்து ஐசுவரியவானாக இருந்தப்போதிலும், நம் நிமித்தம் தரித்திரரானார்; அவர் தம்முடைய நண்பர்களை ஒன்றன் பின் ஒன்றாக இழந்தார்; அவரது இறுதிவேளையில், அவருக்கு இருந்த கொஞ்சமானவர்களும், அவரை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்; விசுவாசத்தின் காரணமாகக் கிறிஸ்துதாமே அனுபவித்திட்டச் சமாதானமானது, இழப்புகளின் மத்தியிலும், துன்புறுத்துதல்களின் மத்தியிலும், ஏளனங்களின் மத்தியிலும், இகழ்ச்சிகளின் மத்தியிலும், சிலுவையினுடைய பலிகளின் மத்தியிலும் சகித்துக்காணப்பட்டது. இந்தவொரு சமாதானத்தைத் தற்கால ஜீவியத்தின் எந்தக் காரியங்களினாலும்/சூழ்நிலைகளினாலும் அழித்திடமுடியாது. மற்ற எந்தச் சத்துருவும் இந்தச் சமாதானத்தை நம்மிடமிருந்து திருடவும் முடியாது.

எத்துணை ஐசவரியமான சொத்தினைக் கர்த்தர் தம்முடைய பிரியமான ஜனங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்? ஒருவேளை கர்த்தர் இயேசு, தமது பூமிக்குரிய ஜீவியத்தின்போது, பணத்தைச் சம்பாதித்து, சேர்த்துக்கொள்ளத்தக்கதாக தம்முடைய சக்தியையெல்லாம் பிரயோகித்தார் என்று வைத்துக்கொள்ளுங்கள்; ஒருவேளை இப்படியாக அவர் செயல்பட்டு, தாம் சீஷர்களை விட்டுப் பிரியும்போது சுவிசேஷயுகத்திற்குரிய மாபெரும் வேலையினை நடத்தும்படிக்கு, திரளான பணங்களை, சீஷர்கள் வசத்தில் விட்டுச்சென்றார் என்று வைத்துக் கொள்ளுங்கள்; அப்போஸ்தலர்களுடைய போக்குவரத்துச் செலவிற்கும், பல்வேறு இடங்களில் (அறுவடை) வேலை தொடங்குவதற்குரிய அதிகளவிலான செலவுகளாகிய பிரசங்கம் பண்ணுவதற்குரிய அறைகளுக்கான வாடகை, பயணம் மேற்கொள்ளும் சகோதரர்களுக்கு ஊதியம் வழங்குதல் மற்றும் இதுபோன்ற பல தேவைகளுக்குப் பணம் தேவையாய் இருக்கும். ஒருவேளை கர்த்தர் சீஷர்களைப்பிரியும்போது தாம் சேர்த்து வைத்தப் பணத்தைச் சீஷர்கள் வசத்தில் கொடுத்திருந்திருப்பாரானால், இத்தனை தேவைகள் இருக்க, அந்தப் பணங்கள் எத்தனை சீக்கிரமாய்க் குறைந்துபோயிருக்கும், மற்றும் இன்றுள்ள நமக்கு அச்சொத்தில் மிகக் கொஞ்சமே கிடைத்திருக்கும். “பாவ மனுஷனும்” ஏதாவது விதத்தில் இந்தச் சொத்தில் (பணத்தில்) கொஞ்சத்தைக் கைவசப்படுத்தியிருப்பான் (2 தெசலோனிக்கேயர் 2:3); மேலும் இந்த யுகத்தின் முடிவில் உள்ளவர்களால், அச்சொத்தின் தடயத்தைக் கூடப்பார்த்திருந்திருக்க முடியாது. ஆனால் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாகுவதாக, சமாதானம் எனும் அவரது ஐசவரியமான சொத்தானது, இன்னமும், அவருடைய ஜனங்களுக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது!

வாக்களிக்கப்பட்டுள்ள சமாதானமானது, உலகத்தினால் அடையாளம் கண்டுகொள்ளவோ, உணர்ந்துகொள்ளவோ முடியாத ஒன்றாகும்; ஏனெனில் இச்சமா தானத்தை உடையவர், கர்த்தரைப்போன்றும், பரமபிதாவைப்போன்றும், புயல் நிறைந்த பாதைகளையே பெற்றிருப்பார்கள். உண்மைதான், தீமையை அனுமதிப்பதிலுள்ள தேவனுடைய நோக்கங்கள் நிறைவேறி முடிவதுவரையிலும், உண்மையுள்ளவர்கள் அனைவரின் விஷயத்திலும் இப்படிப் புயல் நிறைந்த பாதைகளே காணப்பட வேண்டும்; எனினும் அனைத்துப் புயல்களின் மத்தியிலும், இந்தச் சமாதானம் காணப்படும் என்ற வாக்குறுதியுடன்கூட முன்னெச்சரிப்பு வழங்கப்பட்டிருக்கிறோம்; “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவான் 16:33).

சமாதானத்திற்கு அஸ்திபாரமாகிய விசுவாசம்

ஜீவியத்தின் கடுமையான புயல்களின் மத்தியிலும், தொடர்ந்து காணப்படுகின்ற இந்த நிரந்தரமான சமாதானத்திற்கான அஸ்திபாரத்தையும், பாதுகாப்பு ஏற்பாட்டினையும் நாம் ஒருவேளை அறிய வேண்டுமெனில், நாம் கர்த்தர் மற்றும் அப்போஸ்தலர்களுடைய போதனைகளையும், மாதிரியையும் மாத்திரமே நோக்க வேண்டும். இவர்கள் பாடுகள் படும்போது, இவர்களை உறுதியாய் வைத்திட்டதும், இவர்களுக்கு அத்தகைய ஒரு மன அமைதியையும் கொடுத்ததும் எது? அது இவர்களுடைய விசுவாசமாகும், அதாவது தேவனுடைய அன்பிலும், வல்லமையிலும், ஞானத்திலுமான இவர்களுடைய விசுவாசமாகும். தேவன் வாக்களித்துள்ளவைகளை, தேவனால் நிறைவேற்ற முடியுமென்றும், தேவனுடைய நீதியான மற்றும் கிருபையான திட்டமானது தோல்வியடைவதில்லை என்றும் இவர்கள் நம்பினார்கள். “முந்திப்பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக்கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன். சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்?” ஆகிய வசனங்களைத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளுடைய வாயின் மூலம் அறிவித்துள்ளார். (ஏசாயா 46:9-11; 14:27) தேவனுடைய வாக்குத்தத்தங்களில் இவர்கள் இளைப்பாறினார்கள். அவருக்குள் இவர்களுடைய விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருந்தது; இவர்களுடைய நங்கூரமானது, தேவனுடைய சிங்காசனத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கையில், இவர்கள் மீது புயல்கள் எத்தனை சீற்றத்துடன் வீசினாலும் சரி அல்லது ஜீவயத்தின் சூறாவளிகளினால் இவர்கள் எவ்வளவாய்த் தூக்கி, தூக்கி எறியப்பட்டாலும், இவைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

நமது கர்த்தருடைய விசுவாசத்தின் பாஷையானது . . . “நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்” என்பதேயாகும் (யோவான் 17:25). கர்த்தர் ஆரம்பம் துவங்கி பிதாவுடன் காணப்பட்டிருந்திருக்கிறார் மற்றும் பிதாவின் அன்பையும், அவரது கருணையையும் கர்த்தர் உணர்ந்திருக்கிறார் மற்றும் பிதாவின் வல்லமையைக் கண்டிருக்கின்றார் மற்றும் பிதாவின் அனைத்துக் கிரியைகளிலும், பிதாவின் நீதியையும், அவரது அன்புடன்கூடிய இரக்கத்தையும், தகப்பனுக்குரிய பராமரிப்பையும் கர்த்தர் அடையாளம் கண்டிருக்கின்றார். ஆகவேதான், “அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்” என்று எழுதப்பட்டுள்ளது (ஏசாயா 53:11). பிதாவைக் குறித்துக் குமாரன் கொண்டிருந்த அறிவானது, எதிர்க்காலம் குறித்த தேவனுடைய நோக்கங்கள்/திட்டங்கள் அனைத்தின் விஷயத்திலும் விசுவாசம் வைப்பதற்குக் குமாரனுக்கு உதவினது/ஆதாரமாய் இருந்தது. ஆகையால் குமாரனால் விசுவாசத்தினால் நடக்கமுடியும் மற்றும் நடக்கவும் செய்தார். இந்த விசுவாசமானது அனைத்துத் தடைகளை/இடற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கும், மரணத்தின் மீது ஜெயங்கொள்ளுவதற்கும் குமாரனுக்கு உதவியாய் இருந்தது.

ஆகவேதான் நமக்கு அறிவுரையாக, “நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்” என்றும் எழுதப்பட்டுள்ளது (1 யோவான் 5:4); அதாவது தேவன் மீதுள்ள விசுவாசம், அதாவது நமது கர்த்தரால் பிதாவைக்குறித்துக் கொடுக்கப்பட்ட சாட்சியின் மீதான விசுவாசமே ஜெயிக்கும்; மீண்டுமாக “விசுவாசமில்லாமல், தேவனைப் பிரியப்படுத்துவது கூடாத காரியம்” என்றும் எழுதப்பட்டுள்ளது. உறுதியான, அசைவுறாத விசுவாசத்தின் மூலமாய் மாத்திரமே, தேவ சமாதானமானது, கிறிஸ்துவின் சமாதானமானது அவருடைய ஜனங்களில் நிலைத்திருக்கும். கர்த்தர் சீஷருடன் காணப்பட்டப்போது, கர்த்தரில் பிதாவின் வெளிப்படுத்தலைச் சீஷர்கள் கண்டபோது, அவர்களுடைய விசுவாசம் பலமாய் இருந்தது மற்றும் அவருக்குள் அவர்கள் சமாதானம் கொண்டிருந்தனர் மற்றும் இதனாலேயே, “நான் அவர்களுடனேகூட உலகத்தில் இருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்” என்று கர்த்தர் கூறினார் (யோவான் 17:12). ஆனால் அவர்களை விட்டுக் கர்த்தர் பிரிந்துபோனப் பின்னரே, அவர்களுடைய விசுவாசமானது, தேவனில் நங்கூரமடைந்தது. பெந்தெகொஸ்தேவிற்குப் பிறகு, அவர்கள் கிறிஸ்து அனுபவித்த அதே சமாதானத்தை அனுபவித்தார்கள்; அதாவது தாங்கள் ஒருவேளை மீட்பருடைய அடிச்சுவடுகளைப் பின்தொடருவதில் உண்மையாய்க் காணப்பட்டார்களானால், தங்களைத் தேவன் குமாரர்களென, சுதந்திரர்களென, கிறிஸ்துவுடன் உடன் சுதந்திரர்களென அங்கீகரிப்பார் என்ற உண்மைப்பற்றின அறிவின் காரணமாக, ஆசீர்வாதமான சமாதானம் அவர்களுக்குக் கடந்துவந்தது.

அசைவுறா விசுவாசத்தை வளர்த்துதல்

இதுவும் நம்முடைய சமாதானத்திற்கான அஸ்திபாரமாகும். ஜீவியத்தின் சூறாவளிகள் எவ்வளவுதான் நம்மைத் தாக்கினாலும், நம்முடைய நங்கூரத்தை நாம் ஒருபோதும் கைவிடக் கூடாது; நாம் காற்றுப்போக்கில் இழுத்துச் செல்லப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது; மாறாக “தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது” என்றும், “அவருடைய சத்தியம் நமக்குப் பரிசையும், கேடகமுமாயிருக்கிறது” என்றும், நமக்கு மனுஷீக பூரணமின்மைகளும், வலுவின்மைகளும் காணப்பட்டாலுங்கூட, தேவன் வாக்களித்துள்ளவைகளை, அவர் நிறைவேற்றிட வல்லவராய் இருக்கின்றார் என்றும், நம்முடைய மனுஷீக பூரணமின்மைகளை மூடுவதற்கு நமக்குப் பரிந்துபேசுபவரும், நமக்கு மீட்கும் பொருளாகவும் இருக்கும் கிறிஸ்துவினால் தரிப்பிக்கப்படும் நீதி காணப்படுகின்றது என்றும், “பிதா தாமே நம்மைச் சிநேகிக்கிறார்” என்றும், “அவர் நம்முடைய உருவம் இன்னதென்று அறிந்துள்ளபடியால்” அவர் தம்முடைய குமாரர்களிடத்தில் இரக்கமும், அன்பும் கொண்டிருக்கின்றார் மற்றும் மிகுந்த அனுதாபமும், மிகுந்த இரக்கமும் கொண்டிருக்கின்றார் என்றும் நாம் எப்போதும் நினைவுகூர வேண்டும் (சங்கீதம் 103:14; 2 தீமோத்தேயு 2:19; யோவான் 16:27; சங்கீதம் 91:4). பலியினுடைய இடுக்கமான பாதையின் சோதனைகள் மற்றும் போராட்டங்கள் மத்தியில் பொறுமையாய்ச் சகிக்கத்தக்கதாக நம்முடைய இருதயங்களைப் பெலப்படுத்திடவும், உறுதிபடுத்திடவும் மற்றும் நம்முடைய விசுவாசத்தை உறுதிபடுத்திடவும், தேவனால் நமக்குக் கூறப்பட்டவைகளிலும் அதிகமாய் வேறு என்ன தேவனால் சொல்லக்கூடும்.

கிறிஸ்தவன் தனது விசுவாசத்தின் நங்கூரத்தை விட்டுவிடுவது, அதாவது தற்காலிகமாகக் கூட அதன் பிடியை விட்டுவிடுவது என்பது, அவனது சத்துருக்களின் முன்னிலையில், அவனுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இப்படியாக அவன் கணநேரம் விட்டுவிடுவானானால் இருள் அவனைச் சூழ்ந்துகொள்ளும். அவனால் பிதாவின் முகத்தினுடைய பிரகாசத்தைப் பார்க்க முடியாது; ஏனெனில், “விசுவாசமில்லாமல் தேவனை பிரியப்படுத்துவது கூடாத காரியமாகும்; மேலும் அவன் நங்கூரத்தை மீண்டும் பிடித்திட போராடுகையில், இருளின் வல்லமைகளானது, பயங்களினாலும், சந்தேகங்களினாலும், அவனைக் கடுமையாய்த் தாக்குகின்றன. இந்தத் தாக்குதல்களானது அவனது மனுஷீகப் பூரணமின்மைகள் பற்றிய பயங்கள்/சந்தேகங்களாகவே பொதுவாக காணப்படுகின்றது; ஆனால் இந்த மனுஷீக பூரணமின்மைகளானது, கிறிஸ்துவின் நீதி எனும் வஸ்திரத்தினால் மூடப்பட்டுள்ளது என்பதை அவன் எப்போதும் மனதில் கொண்டிருக்க வேண்டும்.

தேவ சமாதானம் நம்முடைய இருதயங்களை ஆள வேண்டுமெனில், நாம் நம்முடைய நங்கூரத்தின் பிடியை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது மற்றும் சாத்தானுடைய கடுமையான தாக்குதல்களானது, நம்முடைய தைரியத்தை நலிந்துபோகப் பண்ணுவதற்கு நாம் அனுமதித்திடவும் கூடாது. “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்” என்பதே நம்முடைய இருதயங்களுடைய வார்த்தைகளாக இருக்க வேண்டும். இந்த ஒரு விசுவாசம் காணப்படும்போது, தேவசமாதானம், அதாவது ஆண்டவரால், நமக்குச் சொத்தாகக் கொடுக்கப்பட்டச் சமாதானமானது, என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வாறாகவே “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானமானது, நமது இருதயங்களையும், நமது சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்;” ஏனெனில் “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரணசமாதானத்துடன் காத்துக்கொள்வீர்” என்று எழுதப்பட்டுள்ளது (ஏசாயா 26:3; பிலிப்பியர் 4:7; யோபு 13:15).

கிறிஸ்தவ போராட்டங்கள் மத்தியில், நம்முடைய இருதயங்களானது, தெய்வீக நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற உறுதியினால் மாத்திரமல்லாமல், தனிப்பட்டத் தயவுகள் பற்றின வாக்குத்தத்தங்களினாலும் களிகூர்ந்து, நம்முடைய மனங்கள் உறுதியடைந்து காணப்படுவதாக.

தனிப்பட்டத் தயவுகள் தொடர்புடைய வாக்குத்தத்தங்களானது பின்வருமாறு:- “தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு [R5284 : page 231] இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” “ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது” (சங்கீதம் 103:13,14; ஏசாயா 49:15,16); “பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” (யோவான் 16:27); “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்” (லூக்கா 12:32); ; “உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள்” (நீதிமொழிகள் 11:20); “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்” (சங்கீதம் 37:4). ஆம் புயல் மற்றும் சூறாவளியின் மத்தியிலுங்கூட தேவசமாதானத்தை அருள்செய்வார்.