R4153 – நினைவுகூருதல், ஏப்ரல் 14

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R4153 (page 86)

நினைவுகூருதல், ஏப்ரல் 14

THE MEMORIAL, APRIL 14

செவ்வாய்க்கிழமை, மாலை ஆறு மணிக்குமேல், ஏப்ரல் 14-ஆம் தேதியன்று, இந்த வெளியீட்டினுடைய வாசகர்கள், உலகமெங்கும் கிறிஸ்துவினுடைய பிரித்தெடுக்கப்பட்டவர்களென (Ecclesia), அவரது மரணத்தினை, அவரது பிட்கப்பட்ட சரீரம் மற்றும் சிந்தப்பட்ட இரத்தத்திற்கும் அடையாளங்களாகிய “புளிப்பில்லாத அப்பம்” மற்றும் “திராட்சப்பழரசத்துடன்” (fruit of the vine) நினைவுகூர்ந்திடுவதற்கென்று ஒன்று கூடிடுவார்கள். இந்தப் பிரித்தெடுக்கப்பட்டவர்களில் பெரிய எண்ணிக்கையில் இங்குக் காணப்படுகின்றவர்கள், இங்குள்ள அலிகெனி கார்நிஜீ ஹாலில் (Allegheny Carnegie Hall) கூடிக்கொள்வார்கள்; சிறு எண்ணிக்கையிலான பிரித்தெடுக்கப்பட்டவர்கள் (Ecclesias) பலர் காணப்படுவதினால், பெரும் திரளானவர்கள்/எல்லாரும் எங்கோ (ஓர் இடத்தில்) கூடுகின்றார்கள் என்று புரிந்துகொள்ளப்படக்கூடாது; ஏனெனில் ஆண்டவர் கூறியுள்ளதுபோல, “ஏனெனில், இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.” (மத்தேயு 18:20)

எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும், எவரும் இந்த வருடாந்திர சிலாக்கியத்தினைப் புறக்கணித்திட வேண்டாமென்று நாம் வலியுறுத்துகிறோம். இதை ஆசரிக்கும் விஷயத்தில் விசேஷித்த ஆசீர்வாதம் உள்ளது. நீங்கள் சோர்வடைந்திருக்கிறீர்களானால், போய்ப் பிட்கப்பட்ட அப்பத்தில் பங்கெடுத்து, உங்கள் நீதிமானாக்கப்படுதலைக் குறித்தப் புதிதான உணர்ந்து கொள்ளுதலையும், ஒரே அப்பத்தின் – அவரது சபையின், அவரது சரீரத்தின் அங்கத்தினர்களென அவரோடுகூடப் பிட்கப்படுவதற்கான (பலிச்செலுத்தப் படுவதற்கான) உங்களது அர்ப்பணிப்பைக் குறித்த புதிதான உணர்ந்துகொள்ளுதலையும் கர்த்தரிடத்தில் கேளுங்கள். அடுத்து “இந்தப் பாத்திரத்தில்” நீங்கள் பானம்பண்ணுகையில், அது நம் சார்பிலான நமது கர்த்தருடைய பாடுகளையும், ஒவ்வொரு மனுஷனுக்காகவும் அவர் மரணத்தை ருசிப்பார்த்ததையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்பதை நினைவுகூருங்கள். இன்னுமாக அது “நாம் அவரோடுகூட ஆளுகை செய்யத்தக்கதாக, அவரோடுகூடப் பாடுபடுவதற்கான” நமக்கான பெரிதான அழைப்பையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்பதையும் நினைவுகூருங்கள். இதுவே “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்ற அவரது வார்த்தைகளுக்கான அர்த்தமாய் இருக்கின்றது. மேலும் அப்போஸ்தலன் குறிப்பிடுகிறதுபோல, அது அவருடைய பாடுகளில் பங்கெடுத்தலை/ஐக்கியங்கொள்ளுதலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. (1 கொரிந்தியர் 10:16)

[R4153 : page 87]

இப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, உணர்ந்துகொள்ளப்படவில்லையெனில், நினைவுகூருதலானது அர்த்தமற்றதாக (அ) பாதகமானதாகக் காணப்படும் என்பதை நாம் மறக்காமல் இருப்போமாக. ஆனால் பாவங்களோ, அனலற்றத் தன்மைகளோ, அபாத்திரன் என்ற உணர்வுகளோ, நம்மைத் தடைசெய்யாதிருப்பதாக. கர்த்தரிடத்தில் போய் உங்கள் குறைவுகள் அனைத்தையும் மறைக்காமல் கூறிவிடுங்கள். உங்கள் சகோதர சகோதரிகளிடத்தில் (அ) நீங்கள் யாருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தீர்களோ, அவர்களிடத்தில்போய், அவர்கள் உங்களிடத்தில் தவறுகளை ஒப்புக்கொள்கிறார்களோ, இல்லையோ, நீங்கள் முழுமையாய் ஒப்புக்கொண்டுவிடுங்கள். உங்கள் கர்த்தருடன் ஒப்புரவாகிக்கொள்ளுங்கள் மற்றும் கூடுமானமட்டும் அனைத்து மனிதர்களுடனும் ஒப்புரவாகிக்கொண்டு வந்து புசியுங்கள் ஆம் இப்பொழுது (அ) பின்னர் “ஏற்றக்காலத்தில்” ஏற்றுக்கொள்பவர்கள் அனைவருக்குமான கர்த்தருடைய ஐசவரியமான ஏற்பாட்டில் பங்கெடுங்கள்.

இப்படியானதொரு இருதய ஆராய்தலும், சுத்திகரித்தலும், யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டதான பஸ்கா நிழலில் காண்பிக்கப்பட்டுள்ளதை நாம் நினைவு கூருகிறோம். தங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியினைப் புசிப்பதற்கெனக் கூடிடுவதற்கு முன்னதாக, புளிப்பான அல்லது அழுகிப்போனதான ஏதாகிலும் பொருட்கள், எலும்புகள், ரொட்டித் துண்டுகள் காணப்படுகின்றதா என்று தங்களது குடியிருப்புகளில் எல்லாம் அவர்கள் தேடினார்கள். இவைகளெல்லாம் எரிக்கப்பட்டன – அழிக்கப்பட்டன. ஆகையால் நாமும் நிஜத்தை நிறைவேற்றி, கோபம், பகைமை, சண்டை, துர்க்குணம் எனும் “பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போட” வேண்டும். (1 கொரிந்தியர் 5:7,8)

இவ்வகை பாவம் எனும் புளிப்பானது, எரிக்கப்படாமல், முற்றிலுமாகப் புறம்பே கழித்துப் போடப்பட முடியாது என்பதையும், அன்பு அதாவது பரம அன்பு, தேவ அன்பு மாத்திரமே இதை எரித்துப்போட முடியும் என்பதையும் நினைவில்கொண்டிருக்க வேண்டும். இந்த அன்பானது, நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருந்தால், இது எதிர்ப் பண்புடைய அனைத்தையும், அதாவது பொறாமை, பகைமை, புறங்கூறுதல் முதலானவைகள் அனைத்தையும் பட்சித்துப்போட்டுவிடும். இவைகளையெல்லாம் புறம்பே கழித்துப்போட்டு, கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டு, அவரது ஆவியில் நிரம்பிடுவதற்கு அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார். மனம் தளர்ந்துபோக வேண்டாம். பாடத்தைக் கற்றுக்கொண்டு, புதிய தீர்மானங்களுடனும், ஆண்டவருடைய உதவியில்லாமல், நீங்கள் நீங்களாகவே பரிசை ஒருபோதும் அடையமுடியாது என்ற உண்மையினைப்பற்றின அதிகமானப் புரிந்துகொள்ளுதலுடனும், மீண்டுமாகத் தொடருங்கள். மேற்கூறிய உண்மையினை நம்மைவிட அவர் நன்றாய் அறிவார் மற்றும் “என்னையல்லாமல் உங்களால் ஒன்றுஞ்செய்யக் கூடாது” என்று கூறுகின்றார். நமக்கான தேவையின் காரணமாகவே, பிதா நமக்கு இப்படியாக ஏற்பாடு பண்ணியுள்ளார். “தைரியங்கொண்டிருங்கள்!” என்பதே “ஜெயங்கொள்ளுகிற’ வகுப்பாரில் அடங்குவதற்கு நாடுகிற மற்றும் ஏங்குகிற அனைவருக்குமான ஆண்டவருடைய வார்த்தைகளாக இருக்கின்றது.

“உங்கள் எதிராளியான பிசாசு”

வருஷத்தினுடைய இந்த ஒரு காலப்பகுதியில் சோதனைகளானது, விசேஷமாய் அனுமதிக்கப்படுகின்றதாய் இருக்கின்றது. எப்போதும் “கசப்பான வேர்களானது முளைத்தெழும்பி”, வளர்வது வழக்கமாகும்; ஆனால் இந்த ஒரு காலப்பகுதியிலோ பத்து மடங்கு வலிமையோடு வளர்கின்றது. நம்முடைய சீஷத்துவத்திற்கான இறுதிப்பரீட்சையானது, அறிவின் விஷயத்தில் இல்லாமல் அன்பின் விஷயத்தில்தான் என்பதை நாம் நினைவில்கொள்வோமாக. “நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாய் இருங்கள் என்கிற புதிதானக் கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” அப்போஸ்தலர்கள் ஒருவரிலொருவர் போதுமானளவுக்கு அன்புக்கொண்டிராததாலேயே, இராஜ்யத்தில் யார் பெரியவராய் இருப்பார் என்று வாக்குவாதம் பண்ணினவர்களாகக் காணப்பட்டனர் மற்றும் அன்பு கொண்டிராததாலேயே, ஒருவருக்கொருவர் தாழ்த்திக்கொள்ளமாட்டோம் என்று மிகவும் தீர்மானமாய்க்காணப்பட்டு, இதனால் ஆண்டவருடைய பாதங்களையும் கழுவும் காரியத்தினைப் புறக்கணித்தவர்களாக, கனம் குறைந்த வேலையிலும், அவரே அனைவருக்கும் பணிவிடைக்காரராக இருக்கத்தக்கதாக, அவருக்கு வாய்ப்பளித்தவர்களாகக் காணப்பட்டனர். இந்தத் தவறான சிந்தையே, அதாவது கர்த்தருடைய சிந்தை இல்லாமையே, அவர்கள் எதிராளியானவனுடைய வல்லமையினால் தாக்கப்படுவதற்கு ஏதுவாயிற்று மற்றும் யூதாசைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏதுவாய் வழிநடத்திற்று மற்றும் பேதுரு தனது அபிஷேகிக்கப்பட்ட கர்த்தரை மறுதலிப்பதற்கு ஏதுவாயிற்று.

ஆகையால் நாம் சோதனைக்குள் விழுந்துவிடாதபடிக்கு நம்மைக் குறித்து நாம் எச்சரிக்கையாயிருப்போமாக; விழித்திருந்து ஜெபம்பண்ணுவோமாக; மிகுந்த தாழ்மையுடனும், மிகுந்த அன்புடனும் காணப்படுவோமாக. இயேசுவினுடைய பின்னடியார்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கும் (அ) அவர்களைச்சிக்கவைப்பதற்கும் (அ) அவர்களை இடறப்பண்ணுவதற்கும் நமது மாபெரும் எதிராளியானவன் அன்றுமுதல் இன்றுவரையிலும் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டுவருகின்றான்.

“பூமியின் கடையாந்தரங்களிலுள்ள’ வாசகர்களின் நன்மைக்காக, முடிந்தமட்டும் சீக்கரமாகவே நமது பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வெளியீட்டில், இந்த நினைவுகூருதல் பாடம் குறித்தக் கட்டுரையை (R4127), வெளியிட்டோம். மீண்டுமாக நமது மார்ச் 1-ஆம் தேதி வெளியீட்டில் ஜீவ அப்பம் குறித்தும் (R4146) கட்டுரையை வெளியிட்டோம். அந்த வெளியீடுகளையும், நினைவுகூருதல் தொடர்பாக தொகுதி 6-இல், பக்கம்: 607-இல் இடம் பெறுபவைகளையும் நீங்கள் மீண்டுமாக ஆராய்ந்து பார்த்திடுவதற்கு நாம் பரிந்துரைக்கின்றோம்.