R1021 (page 1)
கர்த்தருடைய இராப்போஜனத்தைக் குறிப்பிடுகையில் பவுல், நாம் இதைப் பானம் பண்ணும்போதெல்லாம் “கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கின்றீர்கள்” என்று கூறுவதினால், வரையறை இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். கவனியுங்கள், யூத யுகத்தில் நிழலான ஆட்டுக்குட்டியானது, நிஜமான (அ) உண்மையான ஆட்டுக்குட்டியாகிய நமது கர்த்தர் வரும்வரை ஒவ்வொரு வருடமும் அடித்து, புசிக்கப்பட்டு வந்தது. ஆனால் யோவான் ஸ்நானன் நமது கர்த்தர் வந்திருக்கின்றார் என்று அவரை அறிமுகப்படுத்தி, “இதோ தேவ ஆட்டுக்குட்டி” என்று கூறினபோது, நிழலான ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டு, புசிக்கப்படுவதானது உடனடியாக ஓய்ந்துவிடவில்லை; ஏனெனில் நமது கர்த்தர் தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவில் அவரே அதை அனுசரித்தார் என்று நாம் பார்க்கின்றோம். நிஜமான ஆட்டுக்குட்டியானது கல்வாரியில் அடிக்கப்பட்டபோதுதான், நிழலான ஆட்டுக்குட்டியினுடைய ஆசரிப்பானது ஓய்ந்தது.
ஆகையால் இப்பொழுது, தேவனுடைய உண்மையான ஆட்டுக்குட்டியானவர், நமது கர்த்தரானவர் நமக்காகக் கொடுத்திட்டதான, அதாவது நம்முடைய கடந்துபோகுதலுக்காக (அ) நாம் தப்புவிக்கப்படுவதற்காகக் கொடுத்திட்டதான அவரது மாம்சம் மற்றும் இரத்தத்திற்கான அடையாளங்களாக நமக்கு அப்பத்தையும், திராட்சரசத்தையும் கொடுத்திருக்கின்றார். நாம் அவரது மரணத்தை, இந்த அடையாளங்களினால், அவர் வருமளவும் மற்றும் அவரது சரீரத்தின் கடைசி அங்கத்தினன், அவரோடுகூட மற்றும் அவருக்கு ஒத்த நிலையில் முழுமையான இரட்சிப்புக்குள் கடந்துபோகப்படுவதுவரையிலும், நினைவுகூர்ந்து ஆசரிக்க வேண்டும். பின்னர் நாம் கடந்துபோகப்படுவதில், நிஜமானது முழுமையாய் நிறைவேறுகையில், அடையாளம் ஓய்ந்துவிடும். நம்முடைய நம்பிக்கைகள் நிறைவேறுவதுவரையிலும், இந்த நம்பிக்கைகளை நிறைவேற்றுகிறதான அவரது பிட்கப்பட்ட சரீரத்தையும், சிந்தப்பட்ட இரத்தத்தையும் நினைவுகூர்ந்து ஆசரிப்பதன் மூலமாக, இந்த நம்பிக்கைகளைத் தெரிவிப்பது ஏற்றதாய் இருக்கும்.
கடைசி இராப்போஜனத்தினுடைய உண்மையான ஆவிக்குரிய அர்த்தமானது, விசுவாசத்தினால் நமது கர்த்தருடைய பலியின் புண்ணியத்தில் நாம் பங்கெடுப்பதையும், நம்முடைய இருதயங்களில் நாம் அவரை உட்கொள்ளுவதையும் மற்றும் அவருடைய சத்தியத்திற்கான ஊழியத்தில், அவரோடுகூடப் பிட்கப்படுவதற்கும், சத்தியத்தினிமித்தமாகச் சுயத்தை வெறுத்தல் மற்றும் அவரோடுகூடப் பாடுகளின் பாத்திரத்தில் பானம்பண்ணிடுவதற்குமான நம்முடைய அர்ப்பணிப்பையும் குறிப்பதாக இருக்கின்றது என்று நாம் அடையாளம் கண்டுகொண்டுள்ளபடியால், மற்றவர்களாகிய சிலர் கடைசி இராப்போஜனத்தை ஆசரிப்பது ஏற்றதல்ல என்று இன்னமும் பிடிவாதமாய்க் காணப்படுகின்றனர். இந்த உண்மைகளைக் கண்ட பிற்பாடும்கூட, “நீங்கள் எல்லாரும் இதிலே புசியுங்கள்”; “நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்” என்று தம்முடைய பின்னடியார்கள் அனைவருக்கும் நமது அருமை மீட்பர் கட்டளையிட்டதும், அப்போஸ்தலர்களால் கைக்கொள்ளப்பட்டதும், ஆதித் திருச்சபையினர் கைக்கொள்ளும்படிக்குப் போதிக்கப்பட்டது போல, நமது அருமை மீட்பருடைய மரணத்தை நினைவுகூர்ந்து ஆசரிப்பதன் மூலமாக, மேற்கூறியவைகளின் அடையாளங்களை நாம் ஆசரிக்கக்கூடாது என்றே மற்றவர்களாகிய சிலர் பிடிவாதமாய்க் காணப்படுகின்றனர். நமக்கு நமது கர்த்தர் விட்டுச்சென்றதான அருமையான மற்றும் எளிமையான அடையாளங்களை இப்படியாய் ஒதுக்கித் தள்ளுவதானது, “தேவனால் போதிக்கப்பட்ட” காரியமல்ல மற்றும் அவரது வார்த்தைகளினால் ஆதரிக்கப்படுவதுமில்லை. கர்த்தருக்குப் பிரியமானதாகவும், “சாந்தமுள்ளவர்கள்” யாவருக்கும் ஏற்புடையதாகவும் காணப்படும் எளிமையினின்றும், கீழ்ப்படிதலினின்றும் நம்மை இப்படியாய் மயக்கி இழுப்பது மாபெரும் எதிராளியானவனேயாகும். “தேவனால் போதிக்கப்பட்டவர்கள்” அனைவரும், வேதவாக்கியங்களில் முன்வைக்கப்பட்டுள்ளதான அவரது போதனைகளுடன் மிகவும் நெருங்கிக் காணப்பட வேண்டும் மற்றும் விக்கிரகாராதனை மற்றும் ஆச்சாரங்களுக்கு நேரான போக்கினையும், தங்கள் சொந்த புரிந்து கொள்ளுதலை மற்றும் ஞானத்தைச் சார்ந்திருக்கக்கூடிய போக்கினையும், கர்த்தரால் கட்டளையிடப்பட்டதான எளிமையான மற்றும் அர்த்தமுள்ள ஆசரிப்புகளைப் புறக்கணிப்பதற்கான போக்கினையும் புறக்கணித்திட வேண்டும். இப்படியாய்ச் செய்வதே பாதுகாப்பானதாய் (அ) நியாயமானதாய்க் காணப்படும்.
– ரீபிரிண்ட்ஸ், பக்கம் 2387.