R2315 – சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2315 (page 170)

சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை

A LOOK AT THE CRUCIFIED ONE

மத்தேயு 27:35-50

“கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்தார்.” – 1 கொரிந்தியர் 15:3

நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட விவரமானது, வேதவாக்கியங்களினால் மிகவும் எளிமையான விதத்திலும், கலைத்திறன் இல்லாவிதத்திலும் மற்றும் சோகமான தாக்கம் ஏற்படுத்துவதற்காக, விவரங்களை மெருகேற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படாத விதத்திலும் வழங்கப்பட்டிருந்தாலும், இந்த எளிமையான விவரத்தில்தான், சரித்திரத்திலேயே மிகவும் நெஞ்சைத்தொடும் சம்பவத்தின் விவரம் காணப்படுகின்றது. மிகவும் முக்கியமான ஒரு வாழ்க்கையைக் குறித்து (வேதாகமம் போன்று) எந்த ஒரு காவியமும் முன்வைக்க முடியாதது போன்று, எந்த ஒரு காவியமும், சர்வ வல்லமையுள்ள தேவனால் தேவதூதர்களுக்கும், மனுஷர்களுக்குமெனத் தமது நீதியையும், அன்பையும் இணைத்து வெளிப்படுத்தத்தக்கதாக அரங்கேற்றப்பட்ட, இந்த மாபெரும் நிஜமான நாடகம் மிகவும் சோகமுடையதாய் நிறைவடைவது போன்றும் நிறைவடைவதில்லை. நமது கர்த்தருடைய அநேக அற்புதகரமான கிரியைகளையும், எதையும் எதிர்க்காமல் அவர் நம்முடைய பாவங்களுக்காகப் பலியானதையும் கல்நெஞ்சத்துடன், [R2316 : page 170] உணர்வற்ற நிலையில் கண்டுகொண்டிருந்தவர்களில் எவ்வளவாய் விழுந்துபோன மனித சுபாவத்தினுடைய சீர்க்கேடு வெளிப்படுகின்றது. இந்தக் காரியத்தினை, நமது கர்த்தருடைய வஸ்திரங்களைப் பங்குபோட்டுக்கொண்ட விஷயத்தைக் [R2316 : page 171] காட்டிலும் அவரது நெய்யப்பட்ட அங்கியானது யாருக்குக் கிடைக்கும் என்பதற்காக சீட்டுப்போட்டுக் கொண்ட விஷயத்தைக் காட்டிலும், வேறு எவ்விஷயமும் நன்கு விளக்கிட முடியாது; நெய்யப்பட்டிருந்த வஸ்திரமானது, நமது கர்த்தருடைய தனிப்பட்ட பூரணத்தை அடையாளப்படுத்துகின்றதாக இருந்தது மற்றும் இது அநேகமாக அவருடைய நண்பர்கள் என்று லூக்கா 8:3-ஆம் வசனத்தில் குறிப்பிடப்படுபவர்களாகிய, ஐசுவரியமுள்ள ஸ்திரீகளில் ஒருவர் கர்த்தருக்குக் கொடுத்திட்ட அன்பளிப்பாக இருக்க வேண்டும். வஸ்திரங்களைப் பங்குபோட்டப் பிற்பாடு, அவரைச் சிலுவையில் அறைந்தவர்கள், அவரது பாடுகளையும், மரணத்தையும் இரக்கமற்றுக் கண்ணோக்கும் வண்ணமாக, அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். (கவனித்தார்கள்);” பின்னரே உச்சக்கட்டம் வந்தது.

கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் செல்வாக்கானது, மனுக்குலத்தினுடைய உலகத்தின்மீது பெரிதான தாக்கம்கொண்டிருந்து, சமுதாயப் பண்பாட்டை உயர்த்தியுள்ள காரியமானது, கடந்த காலத்தினுடைய அதிகப்படியான முரட்டுத்தனமான மற்றும் கொடூரமான நிலைமைகளையும் அதிகம் மேற்கொண்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் காணப்பட்டாலும், உலகப்பிரகாரமான நாகரிகம் மற்றும் மரியாதையான பண்புகள் எனும் மாயத்தோற்றத்தின் கீழ், இன்னமும் இயல்பான இருதயத்தில் அதிகப்படியான சீரழிந்த பண்புகள் இருப்பதை நம்மால் உடனடியாகக் கண்டுகொள்ள முடிகின்றது. இன்றும்கூட, கர்த்தரைப் பற்றின அறிவிற்கு வந்த பிற்பாடும், அதாவது அன்றுள்ள ரோம சேவகர்கள் அறிந்திருந்ததைக் காட்டிலும் அதிகப்படியான மற்றும் தெளிவான அறிவிற்குள் வந்த பிற்பாடும், கிறிஸ்துவினுடைய அற்புதமான கிரியைகளைக் குறித்தும், பாடுகள் குறித்தும் அறிந்துகொண்ட பிற்பாடும், அவர் நம் நிமித்தமாகப் பாடுபட்டார் என்பதை அறிந்துகொண்ட பிற்பாடும், அநேகர் அவர் பாதத்தில் விழுந்து, “என் கர்த்தரே, என் மீட்பரே” என்று கூறுவதற்குப் பதிலாக, நேர்மாறாக ரோம சேவகர்கள் பண்ணினது போன்று, “உட்கார்ந்து அவரைக் கவனித்துக் கொண்டிருக்கின்றார்கள்” அல்லவா? இவர்களுடைய இருதயங்களானது, இரக்கத்தினால் அசைக்கப்படவில்லை (அ) தங்களது சித்தங்கள் மற்றும் நடக்கைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் அளவுக்குரிய, அனுதாபங்கூடக் கொண்டிருக்கவில்லை; இவர்கள் “கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞராகவே” தொடர்ந்து காணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், ஏனெனில் “என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்” என்று கர்த்தர் கூறியுள்ளார் (மத்தேயு 12:30; பிலிப்பியர் 3:18).

அநேகமாக பிலாத்து வேறு உள்நோக்கத்துடன்தான் “இயேசு யூதருடைய இராஜா” என்று எழுதின மேல்விலாசத்தை, சிலுவையில் நமது கர்த்தருடைய தலைக்கு மேலாக போடுவித்தார். போதகரான இயேசு பெற்றிருந்த செல்வாக்கின் மீதான பொறாமையின் காரணமாகவே, யூதருடைய அதிகாரிகள், இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தனர் என்று பிலாத்து அறிந்திருந்தார்; மேலும் “இராயனேயல்லாமல் தங்களுக்கு வேறே இராஜா இல்லை” என்று கூறி இயேசு, தம்மைத்தாமே இராஜாவாக்கிக் கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை இயேசுவுக்கு எதிராக, அவர்கள் பிலாத்துவிடம் கொண்டு வந்தபடியாலும், இன்னுமாக இப்படி மாய்மாலம் பண்ணி, இராயனுடைய அரியணை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது என்று கூறி, இயேசுவைச் சிலுவையில் அறைந்துபோடும்படிக்கு அவர்கள் பிலாத்துவைக் கட்டாயப்படுத்தினபடியாலும், பிலாத்து இப்பொழுது அவர்களைப் பழிவாங்கி, அவர்களது ஆயுதத்தை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தினார். ஆனால் அவர்கள் கொன்றுபோட்ட ஆச்சரியமான மனிதனாகிய கிறிஸ்து இயேசுவின் உண்மையான பெயரைத்தான் மேல்விலாசத்தில், தான் எழுதிப்போட்டுள்ளார் என்பதை நிச்சயமாக பிலாத்து எண்ணிப்பார்த்திருந்திருக்கவேமாட்டார். வேறொரு சுவிசேஷகர், இப்படி மேல்விலாசத்தில் எழுதியிருப்பதை முன்னிலைவகித்த யூதர்கள் வன்மையாய் எதிர்த்தார்கள் என்றும், ஆனால் எழுதப்பட்டதை, மாற்றி எழுதுவதற்குப் பிலாத்து மறுத்துவிட்டார் என்றும் நமக்குத் தெரிவிக்கின்றார்.

நமது அருமை மீட்பர் சகித்திட்ட அவமானங்களின் ஒரு பாகமாகவும், கூடுமானால் நீங்கட்டும் எனக் கர்த்தர் விரும்பிட்ட பாத்திரத்தின் ஒரு பாகமாகவுந்தான், அவர் பொல்லாங்கன் போன்று, இரண்டு கள்வர்கள் மத்தியிலே சிலுவையில் அறையப்பட்டார். இதை நாம் – அவர் பாவிகளால் தமக்குச் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்தார் என்ற கண்ணோட்டத்தில் நினைத்துக் கொள்ளவேண்டும் என்றும், இப்படியாக நாம் நினைத்துக்கொள்ளும்போது, அவருக்கு வந்ததுபோன்றதும், ஆனாலும் இலேசான எதிர்ப்புகளாகவும், உபத்திரவங்களாகவும், தவறாய்க் கருதப்படுவதாகவும் உள்ளவைகளைச் சகிப்பதில் நாம் பலப்படுத்தப்படுவோம் (சொல்லர்த்தமான பட்டயங்கள் (அ) ஆயுதங்கள் கொண்டு யுத்தம் பண்ணுவதற்குப் பலப்படுத்தாமல், மாறாக சகிப்பதற்குப் பலப்படுத்தப்படுவோம்) என்றும் அப்போஸ்தலர் நமக்குக் கருத்துத் தெரிவிக்கின்றார்.

“என்னால் இப்பொழுது புரிந்துகொள்ளப்படுகிறதைக் காட்டிலும்
அதிகமாய் எனக்காய்ப் பாடுபட்டுள்ளாரே!
கடுமையான வியாகுலத்துடனே பருகிட்டாரே துக்கத்தின் பாத்திரத்திலிருந்தே.
அனைத்தையும் அவர் எனக்காய்ச் சகித்திட்டாரே, எனக்காய்ச் சகித்திட்டாரே!
உமக்காய் நான் என்ன சகித்திருக்கின்றேன், சகித்திருக்கின்றேன்?”

நமது கர்த்தரினால் சகிக்கப்பட்ட வலியோ, துயரமோ நமக்கான ஈடுபலி விலையாக இராமல், மாறாக அவரது மரணமே நமக்கான ஈடுபலி விலையாகக் கொடுக்கப்பட்டது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இயேசு கொடூரமான விதத்தில் இல்லாமல், அவமானமான விதத்தில் இல்லாமல் மரித்திருந்தாலும்கூட, இது நமக்கான ஈடுபலி விலைக்கிரயம் கொடுக்கப்பட்டதாகவே இருந்திருக்கும்; ஆனால் நமது கர்த்தரினால் சகிக்கப்பட்ட சோதனைகளும், பாடுகளும், எதிர்ப்புகளும், நமக்கான ஈடுபலியின் பாகமாக இல்லையென்றாலும், இவைகள் பிதாவின் கணிப்பில், இயேசுவுக்கான பரீட்சையின் பாகமாக இருப்பது நலமாய் இருந்தது. இவைகளை இயேசு பொறுமையாய்ச் சகித்திட்டக் காரியமானது, பிதாவுக்கும், நீதிக்குமான அவரது உண்மையை முழு அளவில் நிரூபித்துக் காட்டியதாய்க் காணப்பட்டது; மேலும் இவ்வாறாக இயேசுவுக்கான பலனாக பிதா ஆயத்தம் பண்ணி வைத்திருந்த, உன்னத நிலைக்கு உயர்த்தப்படும் காரியத்திற்கு, தாம் பாத்திரவானாக இருப்பதை இயேசு நிரூபித்துக்காட்டினார். ஆகவே அவர் மனித சாயலுக்குத் தாழ்த்தப்பட்டதினிமித்தமும், நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்ததின் நிமித்தமும் மாத்திரமல்லாமல், இன்னுமாக அவர் பருகின நிந்தனை மற்றும் அவமானத்தின் பாத்திரத்தினிமித்தமாகவும், அவரைக் குறித்து இவ்வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது: “ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்” (பிலிப்பியர் 2:9,10,11).

விழுந்துபோன நிலைமையிலும், கர்த்தருடைய வார்த்தைகள் மற்றும் கணிப்பினுடைய தெளிந்த கொள்கைகளினால் வழிகாட்டப்படாத நிலைமையிலுமுள்ள மனமானது எவ்வளவாய் ஓர் எல்லையிலிருந்து, மறு எல்லைக்குத் தடுமாறிவிடுகின்றது. இது சிலுவையில் அறையப்பட்டிருந்த கர்த்தரை நோக்கி, தங்களது தலைகளைத் துலுக்கி, தூஷித்து, அவர் தம்மைத் தேவனுடைய குமாரன் என்று கூறின விஷயத்தையும், தமது சரீரமாகிய ஆலயத்தைக்குறித்து அவர் பேசின விஷயத்தையும் பழித்துரைத்தவர்களில் அநேகர், இயேசுவின் 31/2 வருட ஊழிய காலத்தின்போது, அவரால் பேசப்பட்டவைகளைக் கேட்டவர்கள் மத்தியில் காணப்பட்டவர்களாகவே இருந்தனர் என்னும் உண்மையில் விளங்குகின்றது. இவர்களில் சிலர் அவர் செய்திட்ட அற்புதங்களைக் கண்டிருந்தவர்களாகவும் இருந்தனர்; இன்னுமாக இவர்களில் சிலர், “அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டவர்கள் மத்தியில் காணப்பட்டனர்; இன்னுமாக “மேசியா வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப் பார்க்கிலும் அதிகம் செய்வாரோ” என்று கூறினவர்களிலும் சிலர், இவர்களில் காணப்பட்டனர் (யோவான் 7:31; லூக்கா 4:22).

எனினும் சூழ்நிலைகள் இயேசுவுக்கு எதிராக மாறுவதை, இவர்கள் கண்டபோதோ, அதிலும் விசேஷமாக இவர்களது செல்வாக்குமிக்க மதப் போதகர்கள் இயேசுவை எதிர்த்தபோதோ, இவர்கள் எளிதில் தடுமாற்றமடைந்தனர். இங்கு வெளியாகியுள்ள நமது விழுந்துபோன இனத்திற்கான பலவீனத்தினிமித்தம் நாம் வெட்கம் அடைகின்றோம். எனினும் அதே காரியங்கள் இன்றும் காணப்படுகின்றது. தெய்வீகச் சத்தியம் எவ்வளவுதான் தூய்மையானதாகவும், வெளிச்சமுடையதாகவும் காணப்பட்டாலும்கூட, ஒருவேளை கிறிஸ்தவ மண்டலத்தாரின் பிரதான ஆசாரியர்களும், பரிசேயர்களும், வேதபாரகர்களும் தெய்வீகச் சத்தியங்களைக் கண்டனம் பண்ணினார்கள் என்றால், இதினிமித்தம் ஜனங்களும் தடுமாறிவிடுகின்றனர்; கர்த்தருடைய ஊழியக்காரருடைய ஜீவியங்கள் எவ்வளவுதான் தூய்மையானதாகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் காணப்பட்டாலும்கூட, சாத்தானால் இன்னமும் இவர்களைப் பழிப்புரைப்பதற்கும், நிந்திப்பதற்குமெனப் பொய்ச்சாட்சியாளர்களையும், கனமிக்க ஊழியர்களையும் கைக்கூலிக் கொடுத்து, தூண்டிவிட்டு ஏற்படுத்த முடியும். இப்படிச் சம்பவிக்கும் என்றே நாம் எதிர்பார்க்கின்றவர்களாய் இருக்கவேண்டும். “சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் [R2316 : page 172] எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?” (மத்தேயு 10:25) என்று நமது எஜமான் தாமே கூறியுள்ளார் அல்லவா? “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” (மத்தேயு 5:11,12) என்று நமது எஜமான் நமக்குக் கூறி உறுதியளித்துள்ளார் அல்லவா? இப்படியாகவே, “உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது” என்று தீர்க்கத்தரிசிகள் உரைத்தவைகள் நம்மில் நிறைவேறுகின்றது (சங்கீதம் 69:9).

வேதபாரகர்கள் மற்றும் பரிசேயர்களுடைய நிந்திப்புகள்தான் மிகவும் காயம் ஏற்படுத்துகின்றதாய்க் காணப்பட்டது. இயேசு தம்மை இராஜா என்று உரிமைப் பாராட்டிக்கொண்ட காரியத்தையும், அவரது வல்லமையையும், பரம பிதாவின் மீதுள்ள அவரது விசுவாசத்தையும், பிதாவுடனான தம்முடைய உறவைக் குறித்து இயேசு உரிமைப்பாராட்டிக்கொண்ட காரியத்தையும் இவர்கள் ஏளனம் பண்ணிக்கொண்டிருக்கையில், இயேசு தம்முடைய அந்த வல்லமையை வெளிப்படுத்தி, சிலுவையிலிருந்து தாழ இறங்கிவரும்படிக்குக்கூறி, அவரை நகைத்தனர். ஓ! மனுஷ குமாரன் தமக்கான மகிமைக்குள் பிரவேசிப்பதற்கு, இப்படியாக பாடுபட வேண்டும் என்பதை இவர்கள் அறியாதிருந்தார்கள். மேசியா முதலாவதாக தமது ஜீவனை, நமக்கான ஈடுபலி விலைக்கிரயமாக ஒப்புக்கொடுக்காதது வரையிலும், அவரால் சாத்தான் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து இஸ்ரயேலையும், உலகத்தையும் விடுவிக்கிறதற்கான வல்லமையைக் கொண்டிருக்க முடியாது எனும் தெய்வீகத் திட்டத்தை இவர்கள் புரியாமல் காணப்பட்டனர். நமது அருமை மீட்பர் சீற்றத்தினாலும், பழிவாங்கும் எண்ணத்தினாலும் ஆட்கொள்ளப்படாமல், மாறாக பிதாவினுடைய சித்தம் மற்றும் வார்த்தைகளுக்கு ஏற்ப, சாந்தமாய்த் தம்மைச் சித்திரவதைப்படுத்துபவர்களின் பழிதூற்றல்களைச் சகித்து, தமது சித்தத்தைப் பரம பிதாவுடைய சித்தம் மற்றும் திட்டத்திற்கெனத் தாழ்த்திவிட்டபடியால் நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய்க் காணப்பட வேண்டும்.

இதுபோலவே கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஜீவனுள்ள அங்கத்தினர்களும், எவ்வளவாய் உலகத்தாரினால் மாத்திரமல்லாமல், இன்றுமுள்ள முன்னிலை வகிக்கும் பரிசேயர்களாலும் விசேஷமாய்த் தவறாய்ப் புரிந்துகொள்ளப்படுகின்றனர்; ஏனெனில் “அவர் இருக்கிற பிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்” (1 யோவான் 4:17). நமது எஜமானுடைய பாடுகளையும், சோதனைகளையும் உலகம் புரிந்துகொள்ளாதது போலும், அவரது பலிக்கான அவசியத்தைக் கண்டுகொள்ள முடியாதது போலும், இன்னுமாக அவருடைய பாடுகளானது, “அவர் தேவனால் அடிபட்டு, வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்” என்று எழுதப்பட்டிருக்கின்ற பிரகாரம், தெய்வீக அதிருப்திக்கான அடையாளங்கள் என்று எண்ணிக்கொண்டது போலும், சபையினுடைய விஷயத்திலும் காணப்படும்; தேவனுக்கென்று அர்ப்பணம் பண்ணப்பட்ட ஜனங்கள் அவரது கிருபையை ஆவிக்குரியவற்றிலேயே பெற்றிருந்து, பூமிக்குரிய ஆசீர்வாதங்களில் பெற்றிராமல் இருப்பதாகிய உண்மையானது, உலகத்தாரால் தவறாய்ப் புரிந்து கொள்ளப்படுகின்றது. பூமிக்குரிய தயவுகளைப் பலிச்செலுத்துவதன் மூலமாய் நாம் அடைய நாடும் ஆவிக்குரிய தயவுகள் மற்றும் ஆவிக்குரிய சுபாவத்தின் ஆசீர்வாதத்தை உலகத்தார் காண்பதில்லை. இப்படியாகப் பலிச்செலுத்தும் வகுப்பாரிலுள்ள அனைவரும் மற்றும் பரம அழைப்பிற்கான பந்தய பொருளுக்காக ஓட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் அனைவரும், தற்காலத்தின் பாடுகளில் களிகூர்ந்து, கிறிஸ்துவை ஆதாயமாக்கிக் கொள்வதற்கும், அவருக்குள் அதாவது மகிமையடைந்த கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கங்கள் ஆகுவதற்குமென அனைத்தையும் குப்பையும், நஷ்டமுமாகவும் கருதுவார்கள்.

நமது மீட்பருடன், இரு பக்கங்களிலும் சிலுவையில் அறையப்பட்டிருந்த இரண்டு குற்றவாளிகளும் சேர்ந்து கிறிஸ்துவை வைததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்தக் கள்வர்களில் ஒருவன்தான் பின்னர், அனுதாபத்தின் சில வார்த்தைகளைப் பேசினவனாகக் காணப்பட்டான்.

நமது கர்த்தர் ஆறாம் மணி வேளையில், காலை 9 மணி அளவு சிலுவையில் அறையப்பட்டார்; நிழலில் காணப்பட்ட வேளைக்குப் பொருத்தமாகவே கால காரியங்கள் சம்பவித்தது; ஏனெனில் இந்த வேளைதான் அன்றாட காலை பலிச்செலுத்துவதற்கான வேளையாக இருந்தது. ஆறு மணி நேரங்கள் பிற்பாடே, பிற்பகல் 3 மணியளவு, அதாவது யூதர்கள் வழக்கத்தின்படியான ஒன்பதாம் மணிவேளையில் கர்த்தர் மரித்தார்; இதுவும் நிழலிலுள்ள வேளைக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஏனெனில் இந்த ஒன்பதாம் மணிவேளைதான் அன்றாட மாலை பலிச்செலுத்துவதற்கான வேளையாக இருந்தது. இப்படியான ஒரு காட்சிக்கு முன்னதாக, இயற்கையும் தனது மகிமைகளைத் திரையிடுவதும், இருள் காணப்படுவதும்கூடப் பொருத்தமானதாய் இருந்தது. அது அடர்த்தியான இருளாக இருந்ததென நாம் அனுமானிக்க வேண்டியதில்லை, மாறாக பதிவு செய்யப்பட்டிருப்பதுபோன்று, இருள் காணப்பட்டது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். எனினும் அது இயற்கைக்கு அப்பாற்பட்ட இருளாகவே இருந்திருக்க வேண்டும், ஏனெனில் அன்று பௌர்ணமியாக இருந்தபடியால், கொஞ்சம் நேரம் சூரிய கிரகணம் காணப்பட்டிருக்க வேண்டும்.

அப்போதுதான் “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற வியாகுலம் நிறைந்த வார்த்தைகளை நமது கர்த்தர் கூறினார். தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட விபரீதத்தையும், பேதுருவின் மறுதலிப்பையும், தம்முடைய சீஷர்கள் அனைவரும் தம்மைவிட்டு ஓடிவிட்டனர் என்ற உண்மையையும், தமது கடைசி மணி நேரங்கள் தமது சத்துருக்களுடைய இகழ்ச்சிகளின் மத்தியில் செலவிடப்பட வேண்டும் எனும் உண்மையையும் வியக்கத்தக்கச் சகிப்புத்தன்மையுடன் சகித்துவிட்டார்; ஆனால் தம்மிடமிருந்து, பிதா ஆவியின் ஐக்கியத்தைத் துண்டிப்பதற்கான வேளை வந்தபோதோ, இதைக் கர்த்தரினால் சகித்துக்கொள்ள முடியவில்லை; அவர் சொல்லர்த்தமாகவே இருதயம் வெடித்து மரித்ததாகக் கூறப்படுகின்றது; மேலும் இதன் காரணமாகவே, அவர் மரித்தக் கொஞ்சம் நேரத்திற்குள்ளாக ஈட்டியினால் குத்தப்பட்டபோது, இரத்தமும், தண்ணீரும் வந்தது என்று பார்க்கின்றோம்.

இது ஒருவேளை உண்மையிலேயே பிதாவிடத்திலான ஐக்கியம் மற்றும் தயவின் துண்டிக்கப்படுதலாய் இராமல், மாறாக நமது கர்த்தருடைய விசுவாசக் குறைச்சலாக மாத்திரமாக இருக்குமா அல்லது இல்லையா என்று சிலர் கேட்கலாம். இது விசுவாசக் குறைச்சல் இல்லை. [R2317 : page 172] இப்படியாக ஐக்கியம் துண்டிக்கப்படுகின்ற காரியமானது, பாவம் சுமப்பவராகிய நமது கர்த்தருடைய பாடுகளில் அவசியமான ஒரு பாகமாக உள்ளது என்றே நாம் நம்புகின்றோம். ஆதாமுடைய மீறுதலுக்கான தண்டனை என்பது, மரணமாக மாத்திரம் இராமல், இன்னுமாக தெய்வீகத் தயவு மற்றும் ஐக்கியத்திலிருந்து தனிமைப்படுத்தலையும் உள்ளடக்கினதாய் இருந்தது; ஆகையால் நம்மைத் தேவனிடத்திற்கு, தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கத்தக்கதாக, நமது கர்த்தர் ஆதாமின் ஸ்தானத்தை எடுத்து, ஆதாமுக்குப் பதிலாக அதாவது அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் பாடுபட்டபோது, அவர் நம் நிமித்தமாக மரிப்பது மாத்திரம் அவசியமாய் இராமல், ஆதாமினுடைய மீறுதலுக்கான தண்டனையின் பாகமாக, பிதாவிடமிருந்து முழுமையாய்த் துண்டிக்கப்படுதல் மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் எனும் அனுபவத்தையும் அனுபவிக்க வேண்டியது அவசியமாய் இருந்தது. இயேசு தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்துக்கொண்டு வந்த 31/2 வருட காலபகுதியில், பிதாவிடமிருந்து பாவியெனத் துண்டிக்கப்படவில்லை (அ) தனிமைப்படுத்தப்படவில்லை; இயேசு அந்த மூன்றரை வருட காலபகுதியில் முழுத் தண்டனையையும் அனுபவிக்கவில்லை; மாறாக சிலுவையில்தான் கவலைக்கிடமான தருணம் வந்தது; அவர் கொஞ்ச நேரமாகிலும் பிதாவின் ஐக்கியத்திலிருந்து துண்டிக்கப்பட வேண்டும் மற்றும் இப்படியாக ஒரு பாவியாக, நம்முடைய பாவங்களுக்காக மரிக்க வேண்டும்; “மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாகத்தக்கதாக” இயேசு இங்ஙனம் மரிக்க வேண்டியிருந்தது (1 கொரிந்தியர் 15:21).

நமது அருமை எஜமானுடைய அனுபவங்களைக் கருத்தில் எடுத்துக் கொண்டாலும், மரிக்கிற [R2317 : page 173] அனைவருடைய இறுதி வார்த்தைகளையும் வைத்து, நாம் அவரவருடைய ஆவிக்குரிய நிலைமையைக் குறித்துக் கணிப்பதில்லை. தவறான கொள்கைகளானது, சிலரில் தவறான நம்பிக்கைகளை உண்டுபண்ணி, தாங்கள் உண்மையில் மரணம் எனும் மாபெரும் சிறைச்சாலையின் வாயிலுக்குள் போய்க்கொண்டிருக்கையில், தாங்கள் புதிய எருசலேமின் வாயிலுக்குள்ளாகப் போவதாக நம்பிக்கொள்ளத்தக்கதாக வழிநடத்திவிடுகின்றது. பதிவுகளைப் பொறுத்தமட்டில் கர்த்தரினாலோ (அ) அவரது ஆவியினால் ஏவப்பட்ட அப்போஸ்தலர்களாலோ மரிக்கும் தருணத்தின் மிதமிஞ்சின வார்த்தைகள் எதுவும் பேசப்படவில்லை. கர்த்தரும், அப்போஸ்தலர்களும் நல்ல நம்பிக்கையும், உறுதியான நம்பிக்கையும், வேதவாக்கியங்களின் அடிப்படையிலான நம்பிக்கையையும், கொண்டிருந்தார்கள்; வாழ்க்கையின் போராட்டங்களில் தங்களைப் பெலப்படுத்துகின்றதும், வாழ்க்கையின் இறுதிவரை தேவனுக்கும், அவரது வார்த்தைகளுக்கும் உண்மையாய்க் காணப்பட உதவினதுமான ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள்; ஆனால் நம்பிக்கைக் குறித்த மிதமிஞ்சின வார்த்தைகளைக்கூறி மரிப்பவர்கள் பெரும்பாலானவர்கள், கர்த்தருக்கும், அவருடைய வார்த்தைகளுக்கும், அவருடைய ஊழியத்திற்கான தங்களின் அர்ப்பணிப்பு விஷயத்திற்கும் உண்மையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். நமது விசுவாசமும், நம்பிக்கையும், களிகூருதலும் நமது எஜமான் மற்றும் அப்போஸ்தலர்களுடையது போன்று காணப்படுவதாக; தேவனுடைய வார்த்தைகளுக்கும் மற்றும் அதன் சாட்சிகளுக்கும் இசைவாகக் காணப்படுவதாக – “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்” (2 பேதுரு 1:19).

நமது கர்த்தர் மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டபோது கூறின வார்த்தைகளை மத்தேயு அவர்கள் பதிவு செய்யவில்லை, ஆனால் அவைகளை லூக்கா அவர்களும், யோவான் அவர்களும் பதிவு செய்துள்ளனர்; “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்” (லூக்கா 23:46); “இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்” (யோவான் 19:30).

எதுவும் முடியவில்லை என்று அநேக கள்ளப்போதகர்கள் நம்மிடத்தில் கூறி, பாவங்களுக்காக எந்தப் பலியும் தேவையில்லை என்றும், எதுவும் கொடுக்கப்படவுமில்லை என்றும் அறிவிக்கின்றார்கள்; ஆனால் இது தொடர்புடைய விஷயத்தில், வேதவாக்கியங்களுடைய சாட்சி மிகவும் தெளிவாய்க் காணப்படுகின்றது; பலிச்செலுத்தப்படாமல் அதாவது, “இரத்தஞ்சிந்துதலில்லாமல் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டாகாது” என்று கூறப்பட்டுள்ளது (எபிரெயர் 9:22). நமது கர்த்தர் பூரண புருஷனுக்குரிய 30-ஆம் வயதை அடைந்து, உடனடியாக யோர்தானில் காணப்பட்ட யோவானிடத்திற்கு வந்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு, இப்படியாகப் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றத்தக்கதாக, மரணம் வரையிலான தமது அர்ப்பணிப்பை வெளிப்புறமான அடையாளத்தின் மூலம் தெரிவித்தபோது, நமது கர்த்தருடைய பலி ஆரம்பமானது. இங்கு ஆரம்பமான பலி, அவருடைய கடைசித் தருணம்வரை உண்மையாய்த் தொடர்ந்து முடிந்தது. அவர் அனைத்து நிந்தனைகளையும், அனைத்து அவமானங்களையும் கடைசிவரை சகித்துக்கொண்டு, பின்னர் இறுதியில் பிதாவுடனான ஐக்கியத்தில் துண்டிக்கப்பட்டபோது, இதுவே கடைசி காரியமாயிருந்தது மற்றும் இதை நமது கர்த்தர் “முடிந்தது!” என்ற வார்த்தைகள் மூலம் சுட்டிக்காட்டினார். அவருடைய வேலை முடிந்தது; மீட்பிற்கான விலை கொடுக்கப்பட்டு முடிந்தது; பாடுகள் முடிவடைந்துவிட்டன; அவர் நிறைவேற்றும்படிக்கு, பிதா அவமானம் மற்றும் நிந்தனைகளாகிய அம்சங்கள் தொடர்புடையதாகக் கொடுத்திருந்த வேலையின் பாகத்தை அவர் நிறைவேற்றிவிட்டார். அவருடைய வேலையின் மற்றொரு பாகம் உள்ளது மற்றும் அது இன்னும் முடிவடையவில்லை; பூமியின் குடும்பங்கள் அனைத்தையும் ஆசீர்வதிப்பதும், பாவங்களுக்கான தம்முடைய பலியின் மூலமாய்ச் சம்பாதிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கான வாய்ப்புகளையும், இரக்கமான கிருபைகளையும் மனுக்குலத்திற்கு அருளுவதுந்தான் அந்த வேலையின் முடிவடையாத பாகமாகும்.

அவர் தமது ஆவியை விட்டார். எந்த ஆவியை விட்டார்? அவர் தமது ஆவிக்குரிய சரீரத்தை மரிக்க ஒப்புக்கொடுக்கவில்லை; ஏனெனில் அச்சமயத்தில் அவருக்கு ஆவிக்குரிய சரீரம் இல்லாதிருந்தது. 34-வருடங்களுக்கு முன்னதாக, அவர் தமது தாயாகிய மரியாள் மூலமாய் மனுஷீக சுபாவத்தில் பங்குகொள்ளத்தக்கதாக, தமது ஆவிக்குரிய நிலைமையையும், சுபாவத்தையும் துறந்து வந்திட்டார் பரலோகத்தில் அவருக்குச் சொந்தமாய்க் காணப்பட்டதான ஜீவனின் ஆவியானது, மனித நிலைக்கு மாற்றப்பட்டது. தமது மனுஷீக சரீரத்தை, உயிரூட்டின இந்த ஜீவனின் ஆவியை அவர் 331/2 வருடங்களாக அனுபவித்து, பயன்படுத்தி வந்தார்; இப்பொழுது அதை மரணத்திற்கு அவர் ஒப்புக்கொடுக்கின்றார். சிலுவையில் அறையப்பட்ட மாம்சமானது, இனி ஒருபோதும் அவருடையதல்ல, ஏனெனில் அப்போஸ்தலர் கூறியுள்ள பிரகாரம், அவர் மரிக்க வேண்டும் என்பதற்காகவே அடிமையின் ரூபம் எடுத்தாரே ஒழிய, அந்த அடிமையின் ரூபத்தை என்றென்றுமாய்த் தக்கவைத்துக்கொள்ள அல்ல. குமாரன் தம்மோடுகூட மகிமைப்படுத்தப்படுவார் என்றும், அதுவும் உலகம் உண்டாகுவதற்கு முன்னதாக, குமாரன் பிதாவோடு இருந்தபோது கொண்டிருந்த மகிமையைக் காட்டிலும் உயர்வான ஒரு மகிமையில் மகிமைப்படுத்தப்படுவார் என்றும், அது மனுஷீக நிலையிலான மகிமையாய் இராமல், மாறாக ஆவிக்குரிய நிலையிலான மகிமைப்படுத்தலாய் இருக்கும் என்றுமாக பிதாவின் வாக்குத்தத்தம் காணப்பட்டது. “அவர் மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணினபோது” அவர் தமது ஆவிக்குரிய நிலையை விட்டுவந்தவராய் இருந்தார்; தம்மிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள வேலையை தாம் நிறைவேற்றின பிற்பாடு, தாம் மீண்டுமாக மகிமைக்குள், அதாவது ஆவிக்குரிய நிலைமைக்குள் ஏற்றுக்கொள்ளப்படுவாரெனப் பிதாவின் மீது குமாரன் நம்பிக்கைக் கொண்டிருந்தார். ஆகவேதான், “மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்?” என்று இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் கூறினார் (யோவான் 6:62).

இயேசு தம்முடைய ஆவியைப் பிதாவின் பராமரிப்பில் ஒப்படைத்தக் காரியமானது, அவர் மரணம் என்றால் என்ன என்பதை, அதாவது மரணம் என்பது ஜீவன் நின்றுபோகும் நிலைமை என்பதை முழுமையாய் அறிந்திருந்தார் என்பதையும், எனினும் தாம் என்றென்றும் மரணத்தில் இருக்கும்படிக்கு அனுமதிக்கப்படாமல், இப்பொழுதும் பிதாவின் சித்தத்திற்கு இசைவாக தம்மால் ஒப்படைக்கப்பட்ட ஜீவனின் ஆவியானது, உயிர்த்தெழுதலின் மூலம் தமக்கு மீண்டும் அருளப்படும் என்று பிதாவின் மீது குமாரன் நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்பதையும் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றது. தாம் மரணத்திலிருந்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்படுவார் என்று இயேசு அறிந்திருந்து, அதைத் தம்முடைய சீஷர்களுக்கு முன்னறிவித்திருந்தார். தமது ஜீவனின் ஆவியானது, தமது ஜீவனானது பிதாவிடமிருந்து வந்தது என்றும், அந்த ஜீவனானது பிதாவின் வல்லமைக்கும், பராமரிப்பிற்கும் கீழ்ப்பட்டது என்றும் இயேசு அறிந்திருந்தார்; தாம் மீண்டும் ஜீவன் பெற்றுக்கொள்வதாக, பிதா தமக்கு வாக்களித்துள்ளதை அறிந்திருந்த இயேசு, அந்த வாக்குத்தத்தத்தின் மீதான தமது நம்பிக்கையை மாத்திரமே வெளிப்படுத்தினவராகக் காணப்பட்டார். இயேசுவினுடைய நம்பிக்கை நிறைவேறினது; தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, மனித சுபாவத்திற்கும் மேலாக மாத்திரமல்லாமல், தேவதூதர்களுக்கும், துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக உயர்வாக, ஆவிக்குரிய சுபாவத்தின் தளத்திலேயே, மிகவும் உயர்வான தளமாகிய திவ்விய சுபாவத்திற்கு உயர்த்தினார்.

இந்தச் சுவிசேஷயுகத்தினுடைய சபையானது, தங்களுடைய எஜமானின் பாடுகளில் பங்கடைவதற்கும், இறுதியில் அவரோடுகூட மகிமையில் பங்கடைவதற்கும் மற்றும் பூரணமான மனுக்குலத்தின் சுபாவத்திலும் கொஞ்சம் மேலானதாய்க் காணப்படும் தேவதூதர்களின் சுபாவம் மற்றும் கனத்திலும் மிக உயர்வானதாய்க் காணப்படும் திவ்விய சுபாவம் மற்றும் அதன் மகிமை, கனம் மற்றும் அழியாமையில் பங்கடைவதற்குமென, அதே அழைப்பினால் அழைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கக் காரியமாகும் (2 பேதுரு 1:4; ரோமர் 2:7; சங்கீதம் 8:5). இவை அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு, நாம் “மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவரு மாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர் 12:1) என்ற வார்த்தைகளை ஒருவருக் கொருவர் புத்திமதியாய்க் கூறுவோமாக.