R3542 (page 118)
யோவான் 13:1-14
“அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்.” கலாத்தியர் 5:13
நாம் சூழ்நிலைகளைக் கவனிக்கும்போதே, இந்த நம்முடைய பாடத்தை நம்மால் சரியாய்ப் புரிந்துகொள்ள முடியும். பெத்தானியாவில் நடைபெற்ற விருந்தும், திரளான ஜனக்கூட்டத்தாருடைய ஆரவாரத்தின் மத்தியில், நமது கர்த்தர் கழுதையின் மீது ஏறிவந்து பட்டணத்திற்குள் பிரவேசித்ததும், திரளான ஜனக்கூட்டத்தாருக்கு அவர் அநேகம் நாட்கள் ஆலயத்தில் பிரசங்கித்து வந்ததும், அவரிடத்தில் விசாரிக்கும்படிக்கு, கிரேக்கர்கள் அவரிடத்தில் வந்ததுமான காரியங்கள் அனைத்தும், அவருடைய பிரபலம் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; இன்னுமாக தாம் சீக்கிரத்தில் பிரதான ஆசாரியர்களால் மரணத்திற்குள் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்று ஆண்டவரால் கூறப்பட்ட வார்த்தைகளை முழுவதும் புரிந்துகொள்ள இயலாத சீஷர்களோ எதிர்காலத்தைக் குறித்த ஆசைப்பற்றின எண்ணங்களினால் நிறைந்து காணப்பட்டனர்; அதாவது கர்த்தரோடுகூடத் தாங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படுவது குறித்தும், எவ்வாறு கர்த்தர் இராஜாவாக உயர்த்தப்படும் காரியமானது, தங்களையும் அவரோடுகூடக் கனத்திற்கும், முதன்மை நிலைக்கும் கொண்டுவரும் என்பது குறித்தும், இப்படியாக அதிகப்படியான ஜனங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதற்கும், நன்மை செய்வதற்குமான விரும்பத்தக்க வாய்ப்புத் தங்களுக்குக் கிடைக்கும் என்பது குறித்ததுமான எதிர்காலம் குறித்த ஆசைப்பற்றின எண்ணங்களினால் நிறைந்து காணப்பட்டனர்.
நீசான் மாதம் 13-ஆம் தேதியானது, நமது கர்த்தரினால் அமைதியாகச் செலவழிக்கப்பட்டது மற்றும் அன்றைய நாளின் மாலை வேளையாகிய 14-ஆம் தேதியின் ஆரம்பமானது, பஸ்கா இராப்போஜனம் மேல்வீட்டறையில் அனுசரிக்கப்படுவதற்கென நியமிக்கப்பட்டிருந்தது. கர்த்தருடைய அறிவுரையின்படி, அப்போஸ்தலர்களில் சிலர், அனுசரிப்பிற்கான ஆயத்தங்களை முன்கூட்டியே செய்துவிட்டனர். மேலும் அவர்கள் அனைவரும் கூடிவந்திருக்கையில், இராப்போஜனத்தின்போது, அவர்கள் அமர வேண்டிய இடத்தை நியமிப்பதற்கு உபசரிப்பவர் எவரும் அங்கு இல்லாதபடியினால், தங்களது முதன்மை நிலைக் குறித்தும், ஆண்டவருக்கு அருகாமையில் உட்காருவதாகிய மிகுந்த கனமிக்க இடத்தின் விஷயத்தில், தங்களுக்கான உரிமைகள் குறித்தும் விவாதம் எழும்பினதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இம்மாதிரியான காரியங்கள் தொடர்புடைய விஷயத்தில் நமது கர்த்தர் இரண்டுமுறை ஏற்கெனவே சீஷர்களைக் கடிந்துகொண்டு, அவர்கள் சிறுபிள்ளைகளுக்கு இருப்பதுபோன்றதான சாந்தத்தின் ஆவியை வளர்த்துக்கொள்ளாதது வரையிலும், அவர்களால் இராஜ்யத்தில் பங்கடைய முடியாது என்று உறுதியும்படுத்தியுள்ளார். ஒரு வாரத்திற்கு முன்னதாகத்தான், எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுகையில் ஆண்டவருக்கு மிக அருகாமையில், ஒருவர் ஆண்டவருக்கு வலது புறத்திலும், மற்றொருவர் இடதுபுறத்திலும் உட்காரும்படிக்குச் செய்யப்பட வேண்டுமென யாக்கோபும், யோவானும் வேண்டிக்கொண்டார்கள். இதே ஆவியே, இப்பாடத்தின் சம்பவங்களிலும் அவர்களை ஆட்கொண்டிருந்து மற்றும் தாழ்மைபற்றியும், கனம் குறைந்த ஊழியங்களைக்கூட ஒருவருக்கொருவர் புரிந்திடுவதற்கான விருப்பம் பற்றியுமான படிப்பினையைப் புகட்டத்தக்கதாக, சீஷர்களுடைய பாதங்களைக் கழுவும்படிக்கு நமது கர்த்தரை வழி நடத்தினது.
சுயநலத்தின் கண்ணோட்டத்தில் மாத்திரமே அப்போஸ்தலர்களில் ஒவ்வொருவரும் அந்த உயர்வான இடத்தை அடைவதற்கு நாடினார்கள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மாறாக கடந்த காலங்களில் அநேகவிதங்களில் கர்த்தரினால் விசேஷித்தவிதமாய்க் கடாட்சிக்கப்பட்டவர்களாகவும், அவரிடத்தில் விசேஷித்த விதமாய் நெருக்கத்துடன் காணப்பட்டவர்களாகவும் இருக்கும் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான், ஆண்டவருக்கு அருகாமையில் காணப்படும் ஸ்தானங்களை விரும்பினதற்கானக் காரணம், அந்த ஸ்தானத்திற்கான கனங்களுக்காக மாத்திரமே என்றில்லாமல், மாறாக போதகருக்காகத் தாங்கள் கொண்டிருந்த மதிப்பும், அன்புமாகும் மற்றும் இதனோடுகூட இந்தச் சிலாக்கியத்தினை மற்றவர்களால் உணர்ந்துகொள்ள முடிகிறதைக் காட்டிலும், தாங்களே அதிகம் உணர்ந்துள்ளனர் என்ற எண்ணங்கூடக் காரணமாகவும் அநேகமாய்க் காணப்படலாம். இவர்கள் இந்தக் கனமிக்க ஸ்தானத்தைப் பெற வேண்டுமென, இவர்கள் சார்பில் மற்றச் சில அப்போஸ்தலர்களும் வலியுறுத்தியிருக்க வேண்டுமெனவும் நாம் அனுமானிக்கின்றோம். ஆனால் எந்தக் கண்ணோட்டத்தில் நாம் இக்காரியங்களைப் பார்த்திட்டாலும், அத்தருணத்திற்குப் பொருத்தமற்றதும், அதிலும் விசேஷமாக பஸ்கா இராப்போஜனத்திற்குப் பிற்பாடு, நமது கர்த்தர் நிறுவுவதற்குச் சித்தம் கொண்டுள்ள நினைவுகூருதலின் போஜனத்தின் காரியத்திற்குப் பொருத்தமற்றதுமான ஓர் ஆவி அங்குத் தோன்றிக் காணப்பட்டிருந்தது.
நமது சொந்த இருதயங்களை நாம் முழுமையாய்க் கணிப்பதே நமக்குக் கடினமான காரியமாயிருக்கின்றபடியால், நாம் மற்றவர்களுடைய இருதயங்களையும், நோக்கங்களையும் கணிக்கும் விஷயத்தில், நாம் பரந்த மனப்பான்மையுடன் காணப்பட வேண்டும் மற்றும் நாம் மற்றவர்களுடைய விஷயத்தில் மிகுந்த அனுதாபமும், இரக்கமும் காட்டித் தவறு செய்தாலும்கூட, மிகவும் பலமாய்க் கண்டித்து நாம் தவறு செய்துவிடக்கூடாது. ஒருவேளை இக்காரியங்கள் குறித்து அப்போஸ்தலரிடம் விசாரித்தால், அவர்கள் தங்கள் நோக்கங்களிலும், நடத்தையிலும் சுயநலத்தின் சுவடுகள் இல்லையென்றும், கர்த்தருக்கான பக்தி வைராக்கியமும் மற்றும் அவர் அருகாமையில் காணப்படுவதற்கான விருப்பமும்தான் தங்களுடைய இந்த எண்ணத்திற்கும், பேச்சிற்குமான காரணம் என்றும் கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. இது மனித இருதயமானது மகா திருக்குள்ளது என்றும், இருதயம் மிகக் கவனமாய்க்கூர்ந்துப் பரிசோதிக்கப்பட வேண்டும், இல்லையேல் அது நன்மையெனும் போர்வைக்கடியில் சில பண்புகளை, அதாவது ஒருவேளை போர்வையினால் மூடப்படவில்லையெனில் நம்மால் வெறுக்கப்படும் சில பண்புகளைக் கொண்டிருக்கும் என்றும் வேதவாக்கியங்கள் தெரிவிக்கும் கருத்துக்கு உதாரணமாகக் காணப்படுகின்றது.
இந்தக் காரியத்திற்கு மற்றுமொரு உதாரணமாகவும், இப்படிப்பினையை நாம் அனைவரும் தனிப்பட்ட விதத்தில் நமக்குச் செயல்படுத்திக்கொள்வதற்கு உதவியாகவும், நாம் ஸ்காட்ச் நாட்டு ஊழியக்காரனாகிய ஹோரேற்றியஸ் போனர் (Horatius Bonar) அவர்கள் மரிப்பதற்குக் கொஞ்சம் [R3542 : page 119] காலம் முன்னதாக தெரிவித்திட்டக் கனவு ஒன்றை முன்வைக்கின்றோம். இவர் தன்னுடைய கனவில், தன்னுடைய பக்திவைராக்கியத்தை அதிக அளவும், எடையுமுள்ள பொட்டலமாகக் கண்டார். சில தூதர்கள் வந்து, அதை எடையிட்டுப்பார்த்து, அதிக எடை இருக்கின்றது என்றும், நூறு பவுண்டு எடை என்றும் கூறினார்கள். இந்த அறிக்கையினிமித்தம், இவர் தன்னுடைய கனவில் மிகவும் திருப்திக்கொண்டிருந்திருக்கிறார். அடுத்தக்கட்டமாகத் தூதர்கள் இவரது பக்திவைராக்கியத்தைப், பகுதிகளாகப் பிரித்து ஆராய முற்பட்டார்கள். இவரது பக்திவைராக்கியத்தைத் தூதர்கள், உலோகங்களை உருக வைக்கும் ஒரு மட்பாத்திரத்தில் போட்டு, பல்வேறு விதங்களில் அதைப் பரீட்சித்துப்பார்த்து, பின்னர் பரீட்சையின் முடிவுகளைப் பின்வருமாறு அறிக்கையிட்டனர்: “100 பவுண்டு பக்திவைராக்கியத்தில், 14 – பாகங்கள் சுயநலம்; 15 – பாகங்கள் சபை பாகுபாடுகளை ஆதரிக்கும் தன்மை; 22 – பாகங்கள் புகழ் ஆர்வம்; 23 – பாகங்கள் மனிதனுக்கான அன்பு; 26 – பாகங்கள் தேவனுக்கான அன்பு” ஆகும். தூக்கத்திலிருந்து அவர் விழித்தெழுந்தபோது, நடந்தது கனவு என்று உணர்ந்துகொண்டார்; எனினும் மிகுந்த தாழ்மையையும் அடைந்தார் மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தக் கனவின் மூலம், ஜீவியம் முழுவதும் நன்மையடைந்தவராக இருந்தார். இந்தக் கனவானது, நம்முடைய வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் கிரியைகளுக்குப் பின்னால், அதிலும் விசேஷமாகக் கர்த்தர் மற்றும் சகோதரருக்கான நம்முடைய ஊழியங்களுக்குப் பின்னால் காணப்படும் நோக்கங்களை நாம் கவனமாய் ஆராய்ந்துப்பார்த்திட வழிநடத்தும் விஷயத்தில் அந்த ஸ்காட்ச் நாட்டு ஊழியக்காரனுக்கு இருந்ததுபோன்று, நமக்கு நன்மையாகவே காணப்படும்.
நமது பாடத்தினுடைய முதலாம் வசனமானது, நமது கர்த்தருடைய அன்பே, “தம்முடையவர்களின்” விஷயத்திலான, அவரது அனைத்து நடவடிக்கைகளுக்குமான அடிப்படையாக இருக்கின்றது எனும் காரியத்திற்குக் கவனத்தைத் திருப்புகின்றதாய் இருக்கின்றது. அவரது அன்பின் காரணமாகவே, அவர் தமது மகிமையைத் துறந்து மனுஷனானார்; அவரது அன்பின் காரணமாகவே, அவர் தம்மை மனிதனாகிய கிறிஸ்து இயேசுவாக அர்ப்பணம் பண்ணினார்; அவரது அன்பின் காரணமாகவே, அவர் தம்முடைய அருமையான சீஷர்களுக்கு ஓர் இடர்பாட்டில் உதவிடுவதற்கு ஆவல் உள்ளவராய் இருந்தார்; ஒருவேளை அவர்கள் இந்த இடர்பாட்டை மேற்கொள்ள வில்லையென்றால், அவர்கள் அவருடைய பின்னடியார்களெனத் தற்காலத்திலும், எதிர்க்காலத்திலும் பயன்படுத்தப்பட முடியாது. இந்த அன்பானது நமது கர்த்தரை அவசியமான கண்டிப்பைக் கொடுப்பதற்கு மாத்திரம் வழிநடத்திடாமல், இன்னுமாக அந்தக் கண்டிப்பை ஞானமான, சிறந்த மற்றும் அன்பான விதத்திலும் கொடுப்பதற்கும் அவரை வழிநடத்தினது. இவ்விஷயத்திலுள்ள அவருடைய மாதிரியானது, அவருடைய பின்னடியார்கள் அனைவராலும், அதிலும் விசேஷமாகச் சபையில் அவருடைய பிரதி நிதிகளெனப் பொதுவிடங்களில் ஊழியம் பண்ணுகிறவர்களால் கவனித்துப் பின்பற்றப்பட வேண்டும்.
ஒருவேளை இத்தருணத்தின்போது, நமது கர்த்தரும், அவருடைய சீஷர்களும் ஏதேனும் விருந்தளிப்பவரினால், விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்திருப்பார்களானால், அவர்களது பாதங்களைக் கழுவுவதற்கு, சில வேலையாட்களை அனுப்புவது, விருந்தளிப்பவரின் கடமையாக இருந்திருக்கும். இப்படிப் பாதங்களைக் கழுவுவது, அந்நாட்டின் வழக்கமாகவும், [R3543 : page 119] சௌகரியத்திற்கு/ஆறுதலுக்கு அவசியமானதாகவும் காணப்பட்டது. அக்காலப் பாதரட்சைகளின் வடிவங்கள் காரணமாக, சாலையின் புழுதி பாதங்களை அழுக்காக்குகின்றன மற்றும் ஒவ்வொரு பிரயாணத்திற்குப் பின்பும் பாதங்கள் கழுவப்படுவதற்கான அவசியத்தையும் ஏற்படுத்தியது; இன்னுமாக இப்படியான ஓர் அனுசரிப்பின் தருணத்தின்போது, கழுவுதல் குறிப்பாய் அவசியமாய் இருந்தது. கர்த்தரும், சீஷர்களும் விருந்தாளிகளாக இல்லாதபடியினாலும், மேல்வீட்டறையை மாத்திரம் பெற்றிருந்தபடியாலும், தங்கள் பாதங்களைக் கழுவுவதற்கு எந்த வேலையாட்களையும் பெற்றிராதபடியாலும், இம்மாதிரியான சூழ்நிலையில் கூடினவர்களில் ஒருவர் மற்றவருக்கான இந்தக் கனமற்ற வேலையைப் புரிய வேண்டுமென்பது கடமையாகவும் மற்றும் வழக்கமாகவும் இருந்தது. நாம் சற்றுமுன்பு பார்த்ததுபோன்று, சீஷர்களின் இருதயங்களில் போட்டி மனப்பான்மையின் ஆவியானது மேலோங்கிக் காணப்பட்டது மற்றும் இந்தக் கனமற்ற வேலையைப் புரிவதற்கு எவரும் முன்வரவில்லை மற்றும் சீஷர்கள் மத்தியில் கர்த்தர் எவரையும் வேலையாட்களாக நியமிக்காததால், சீஷர்கள் தங்களுக்குள் யாரையாகிலும் இவ்வேலையைப் புரிவதற்கு வற்புறுத்தவும் இல்லை. இவ்வேலையின் காரியமானது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டு மற்றும் உணர்ந்துகொள்ளப்பட்டால், மற்றவருக்காக இந்த வேலையைப் புரிவதற்கான மாபெரும் வாய்ப்புச் சீஷர்கள் மத்தியில் சிலருக்குக் கிடைத்திருக்கும். எத்தகைய ஒரு வாய்ப்பினை இழந்துவிட்டனர்!
இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, இவர்களுக்காக சீஷர்களில் எவரேனும் பணிவிடைக்காரனாகிக் கொள்கின்றானா அல்லது இல்லையா என்று காணத்தக்கதாக, நமது கர்த்தர் காரியத்தை அமைதியாக விட்டுவிட்டார்; போஜனம் பரிமாறப்படுவது வரையிலும் கர்த்தர் காத்திருந்தார் (போஜனம்பண்ணி முடிந்தபிறகு அல்ல, மாறாக பரிமாறி முடிவது வரையிலும் கர்த்தர் காத்திருந்தார்); பின்னர் கர்த்தர் பந்தியை விட்டெழுந்து மேல்வஸ்திரங்களைக் கழற்றி வைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டார், அதாவது உள்வஸ்திரங்கள் வேலை புரியும்போது இடைஞ்சலாக இராதபடிக்கு அரையிலே கட்டிக்கொள்ளும் கச்சையை, இறுக்கமாக்கிக் கொண்டார். இப்படியாகக் கர்த்தர் செய்வதையும், படுக்கையிலிருந்து நீட்டிக்கொண்டு காணப்படும் அப்போஸ்தலர்களின் பாதங்களினிடத்திற்கு ஒன்றன் பின் ஒன்றாக கர்த்தர் கடந்துபோவதையும், அப்போஸ்தலர்கள் கவனித்தப்போது, அவர்கள் திகைத்துப் போயிருப்பதை நம்மால் நன்கு கற்பனை செய்துபார்க்க முடிகின்றது. நாம் பாதங்கள் கழுவும் முறையிலிருந்து, அவர்களது முறை வித்தியாசமாய் இருந்தது; பாதங்கள் கழுவப்பட்டு, தேய்த்து, அலம்பிக் கழுவப்படுவதற்கென்று பாத்திரத்திலிருந்து தண்ணீர் கொஞ்சம், கொஞ்சமாக பாதங்கள் மீது) ஊற்றப்படுகையில், அழுக்கான தண்ணீர் வட்டமான விளிம்புள்ள தாம்பாளத்தில் (basin) விழுகின்றது.
நமது கர்த்தர் செய்திட்டக் காரியத்தினிமித்தம் அப்போஸ்தலர் மிகவும் ஆச்சரியமடைந்திருந்தனர் என்பதில் உறுதியே மற்றும் அவரது செய்கை அளித்திட்டக் கண்டனத்தை அவர்கள் உணர்ந்து கொண்டபடியால், என்னசொல்ல வேண்டுமென்று அறியாமல் இருந்தனர்; ஆகவே பேதுருவின் பாதங்களைக் கர்த்தர் கழுவ வருவதுவரையிலும் அமைதியே நிலவியது. பேதுரு விநோதமான குணலட்சணங்களின் கலவையைப் பெற்றிருந்தவராகக் காணப்பட்டார். இந்தக் கலவையில், பகுதி குணலட்சணங்கள் மிகவும் நல்லவைகளாகக் காணப்பட்டன. “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா?” என்று கூறி, கர்த்தர் தனது பாதங்களைக் கழுவுவதற்குப் பேதுரு மறுப்புத் தெரிவித்தார்; அதாவது, “ஆண்டவரே மிகவும் பெரியவரான நீர், ஏழை மீனவனாகிய எனக்குப் பணிவிடைப்புரிவது சரியல்ல” என்ற விதத்தில் பேதுரு கூறினார். ஆனால் நமது கர்த்தரோ, இக்காரியத்தைக் குறித்துப் பேதுரு முழுமையாய்ப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், தாம் அனைவருடைய பாதங்களையும் கழுவினப் பிற்பாடு இக்காரியத்தைப் பேதுருவுக்கு விளக்குவதாகப் பதிலளித்தார். பேதுருவின் இரண்டாம் வார்த்தைகளோ, முதல் போன்று பாராட்டத்தக்கதாய் இருக்கவில்லை. “பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றார்.”
தான் ஒரு சீஷன் மற்றும் கர்த்தர் போதகர் என்பதை, அதாவது தான் கீழ்ப்படிய வேண்டுமே ஒழிய, ஆணையிடக்கூடாது என்பதை உணர்ந்துகொள்வதற்கு பேதுருவுக்குக் கடினமாய் இருந்தது; ஆனால், “நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” என்ற கர்த்தருடைய பதிலானது, பேதுருவினுடைய உணர்ச்சிவசப்படும் சுபாவத்தின் சிறந்த பாகத்தை உடனடியாக வெளிக்கொண்டுவந்தது. தான் கழுவப்படுகின்றதான காரியமானது, தான் ஆண்டவருக்கு அருகாமையில் காணப்படும் விஷயத்திற்கும், ஆண்டவருடனான தனது உறவின் விஷயத்திற்கும் தொடர்புடையதாய் இருக்குமாயின், அப்படியானால் அது தனக்கு வேண்டுமென்று பேதுரு எண்ணினார். காரியங்களைக் கர்த்தருடைய பொறுப்பில் விடுவதற்குப் பேதுரு அஞ்சினவராக, “ஆண்டவரே, என் கால்களை மாத்திரமல்ல, என் கைகளையும், என் தலையையும்கூடக் கழுவ வேண்டும்” என்று பேதுரு கூறினார். இவ்விஷயத்தில் நமக்கு ஒரு பாடம் உள்ளது; நாம் கர்த்தருக்கு கட்டளையிடவும் கூடாது, அவர் சுட்டிக்காண்பித்திடாத விதங்களில் நல்லவர்களாகவோ, ஞானவான்களாகவோ (அ) கீழ்ப்படிதல் உள்ளவர்களாகவோ இருக்க நாம் முற்படவும் கூடாது. சிலர் கற்றுக்கொள்வதற்கு இது கடினமான பாடமாக உள்ளது; சிலர் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளவைகளுக்கும் அதிகமாய்த் தொடர்ந்து செய்ய வேண்டுமென விரும்புகிறவர்களாய் இருப்பார்கள். இப்படியாகச் செயல்படுவது என்பது ஒன்றில் கர்த்தருக்கும், அவருடைய வார்த்தைகளுக்கும், அவருடைய வார்த்தைகளுக்குள் விளங்கும் ஞானத்திற்குமான பயபக்தியின்மையை அல்லது அதிகப்படியான சுயநம்பிக்கையை, அதிகப்படியான சுயமதிப்பைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. “ஓ! கர்த்தாவே என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே, உமது சித்தமே, உமது வழியில், உம்முடைய நேரத்தில் ஆகக்கடவது” என்று கூறுவதற்குத் தாழ்மையும் மற்றும் அவர்மேல் நம்பிக்கையும் கொண்டுள்ள இருதயம் கற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுவான மொழியாக்கத்தில் (ஆங்கிலம்), பேதுருவுக்கான நமது கர்த்தருடைய பதிலானது கொஞ்சம் தெளிவற்றதாய் இருக்கின்றது; திருத்தப்பட்ட மொழியாக்கத்தில் (ஆங்கிலம்) தெளிவாய் உள்ளது (தமிழ் மொழியாக்கம் சரியாய் உள்ளது); “முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாய் இருக்கும், மற்றபடி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்” (K.JV); “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும்” (திருவிவிலியம் மொழியாக்கம்). பஸ்கா காலத்தின் ஆரம்பத்தில், அசுசிகள் அப்புறப்படுத்தத்தக்கதாக, யூதருடைய வழக்கத்தின்படி, அவர்கள் அனைவரும் சரியாய்க் குளித்திருந்தனர். ஆகவேதான் அவர்கள் குளித்தவர்களாய்க் [R3543 : page 120] காணப்படுவதினால், அவர்களின் பாதங்கள் அலம்பப்பட, அதாவது பூமியோடு தொடர்பு கொண்டிருந்த அவயத்தை மாத்திரம் இப்பொழுது கழுவ வேண்டுமென்று கர்த்தர் கூறினார். “ஆகிலும் எல்லாருமல்ல” என்று யூதாசைக் குறித்துக் கர்த்தர் குறிப்பிட்டார். இதிலிருந்து கர்த்தர் மேலான கழுவுதலைக் குறித்தே தம்முடைய மனதில் எண்ணங்கொண்டிருந்தார் என்பதும், அச்சமயத்தில் அவர்களுடைய பாதங்கள் கழுவப்பட்டக்காரியமும், அவர்கள் முன்னதாகக் குளித்திருந்த காரியமும், நிழல்கள் என்பதும் நமக்குத் தெளிவாய்த் தெரிகின்றது.
தம்முடைய சீஷர்களுடைய இருதயங்கள் உண்மையாய் இருந்ததைக் கர்த்தர் அறிந்திருந்தார். அவர்களை அவர் தம்முடைய சீஷர்களாக ஏற்றுக்கொண்டு, அவர்களின் குறைவுகளை மூடத்தக்கதாக, தம்முடைய பலியின் புண்ணியத்தை அவர்களுக்குத் தரிப்பிக்கப்பட்டதாக எண்ணப்பட்டது; இவைகளுக்கான முழுச் சாட்சியும் பெந்தெகொஸ்தே நாளின்போது, இவர்களின் சார்பிலான கர்த்தருடைய பாவநிவாரணபலியானது, பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனப் பரிசுத்த ஆவி பகிர்ந்த சாட்சியின் மூலம், இவர்களுக்கு வழங்கப்படப்போகின்றது. ஆனால் இவர்கள் மத்தியில், ஒருவருடைய இருதயம் சுத்தமாக இருக்கவில்லை. நமது கர்த்தர் யூதாசைவிட்டுக் கடந்துபோகவில்லை, மாறாக மற்றவர்களுக்குச் செய்வதுபோல யூதாசின் பாதங்களையும் கழுவினார்; யூதாசின் துரோகத்தை அறிந்த நிலையிலும், யூதாஸ் ஏற்கெனவே பிரதான ஆசாரியர்களுடன் பேரம் பேசிவிட்டார் என்றும், தனது தீயத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கான தகுந்த தருணத்திற்காக மாத்திரமே காத்துக்கொண்டிருக்கின்றார் என்றும் அறிந்த நிலையிலும், கர்த்தர் யூதாசின் பாதங்களைக் கழுவினார்.
நமது கர்த்தருடைய இந்த வார்த்தைகளை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அந்த வார்த்தைகளையும், பின்னர் யோவான் 13:18,26,27,28-ஆம் வசனங்களிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையும் யூதாஸ் புரிந்திருக்க வேண்டும். நமது கர்த்தர் யூதாசையும், அவனது நேர்மையின்மையையும், விருந்தோம்பல் காரியத்தை யூதாஸ் மீறுகிறதைக் குறிப்பிடும் தீர்க்கதரிசனத்தையுங்கூடக் குறிப்பிட்டார். இவைகள் எதுவும் யூதாசை அசைக்கவில்லை; யூதாஸ் தனது போக்கை மாற்றிக்கொள்ளத்தக்கதாக, இவைகளில் எதுவும் அவனது இருதயத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. இவ்வாறாக யூதாஸ் குற்றஞ்சாட்டப்படுவதற்குக் காரணமான அவரது துணிகரத்திற்குப் பலமான ஆதாரத்தைப் பெற்றிருக்கின்றோம் மற்றும் துணிகரத்திற்கான இந்த ஆதாரமானது, யூதாசை “கேட்டின் மகன்” என்று நம்முடைய கர்த்தர் பெயரிட்டு/அழைத்து, “அவன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும்” என்று நமது கர்த்தர் கூறின வார்த்தைகளுக்கான அர்த்தத்தை இன்னும் வலியுறுத்துகின்றது. “என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்” என்பதே சங்கீதத்தில் இடம்பெறும் வசனமாகும்.
யூதாசை கையாளும் விஷயத்திலான நமது கர்த்தருடைய நடவடிக்கையானது, யூதாஸ் வகுப்பாரிடத்திலான நம்முடைய நடவடிக்கைக்கான சிறந்த மாதிரியாக மாத்திரம் இராமல், இன்னுமாகக் கர்த்தர் தம்முடைய சீஷர்களாகியுள்ள அனைவரிடத்திலும் கொண்டிருக்கும் நீடியபொறுமை குறித்தும், சீஷர்களில் எவரும் கெட்டுப்போய்விடாமல், மாறாக முடிந்தமட்டிலுமான அனைத்தையும் அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய வழிகளிலுள்ள தவறுகளிலிருந்து அவர்கள் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையில், மீண்டும் மீண்டுமாக அவர்களுடைய வழிகளிலுள்ள தவறுகளை அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டுவருவதற்கு அவர் நாடுவது குறித்ததுமான பாடங்கள் காணப்படுகின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொண்டு, சத்தியத்தினால் வரும் அனைத்துக் கிருபைகளைப் பெற்றுக்கொண்ட பிற்பாடும், தங்களுக்குள் சுயநலத்தின் ஆவியை உற்சாகப்படுத்தி, வளர்த்துபவர்கள், மிகவும் கடினப்பட்டுப்போவதினால், போதகருடைய கண்டிப்புகளும், வேதவாக்கியங்களின் வார்த்தைகளுங்கூட, இவர்களிடத்தில் (நல்ல) தாக்கத்தினை ஏற்படுத்துவதில்லை எனும் கருத்தைக்கூட இங்குப் பார்க்கின்றோம். இது ஒருவேளை கர்த்தருடைய ஆவியானது இவர்களுடைய இருதயத்தில் சுயநலத்தின் ஆவிக்கு முழுமையாய்க் கீழ்ப்பட்டுப்போய்விட்டால் – “மனந்திரும்புவதற்கு ஏதுவாய் – சரியானப் பாதைக்குத் திரும்புவதற்கேதுவாய் – இவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்” எனும் அப்போஸ்தலனின் வார்த்தைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றது (எபிரெயர் 6:6).
கர்த்தர் பேதுருவுக்குப் பதிலளித்ததற்கு இசைவாக, அதாவது பேதுரு கழுவுதலின் அர்த்தத்தைப் பின்னால் அறிந்துகொள்வார் என்று கர்த்தர் கூறினதற்கு இசைவாக, அனைத்து அப்போஸ்தலருடைய பாதங்களைக் கழுவினப்பின், காரியங்களைக் கர்த்தர் விவரித்தார். “நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்” (யோவான் 13:13,14).
இங்கு முழுப் பாடமும் நமக்கு விவரிக்கப்படுகின்றது. சிறியவன் ஆகிவிடுவோமோ என்ற அவர்களுடைய அச்சத்தின் காரணமாகவே, அங்கிருந்த சீஷர்கள் அனைவரும் போதகருக்கும் மற்றும் ஒருவர் இன்னொருவருக்கும் பணிவிடைப் புரிவதற்கான வாய்ப்பினைத் தட்டிக்கழித்துவிட்டனர். அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலையும், எஜமானருமான மேசியாவாகிய நமது கர்த்தர், அவர்கள் அனைவருக்கும் பணிவிடைப் புரியத்தக்கதாக தம்மையே தாழ்த்தினார் மற்றும் இவ்வாறாக அவர்களிடத்தில் காணப்பட்ட தாழ்மையின்மையைக் கடிந்துகொண்டார் மற்றும் அதேவேளையில், ஜீவியத்தின் சகல காரியங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒரு மாதிரியை அவர்களுக்கு முன்னாக வைத்தார்; அதாவது ஜீவியத்தின் உயர்வான காரியங்களிலோ அல்லது சாதாரணமான காரியங்களிலோ எப்போதும் ஒருவருக்கொருவர் பணிவிடைப் புரிந்திட அவர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டும் என்பதற்கான மாதிரியை முன்வைத்தார். ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவுதல் என்பது, ஜீவியத்தில் சகல மற்றும் எந்த எளிமையான/கனமற்ற ஊழியங்களுக்கும், சகல மற்றும் எந்த இரக்கத்தின் பாராட்டுதலுக்கும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது, அதிலும் விசேஷமாக ஆவிக்குரிய உதவி மற்றும் ஆறுதல் அளிப்பது தொடர்புடைய விஷயங்களுக்கும், இரக்கம் பாராட்டுதலுக்கும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது.
இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, நம்முடைய டன்கார்டு (Dunkard) கிறிஸ்தவ நண்பர்களும், மற்றவர்களும் நம்பிக்கொண்டிருப்பது போன்று, நமது ஆண்டவர் இங்கு ஒரு சடங்காச்சாரத்தை (அ) அனுசரிப்பை உத்தரவிட்டதாக நாம் புரிந்துகொள்வதில்லை. இன்னுமாக இவ்விஷயத்தில் ரோமினுடைய போப் அனுசரிக்கும் வழக்கத்திற்கான அடித்தளத்தைக்கூட நம்மால் பார்க்கமுடியவில்லை; போப் வருடத்திற்கு ஒருமுறை, இந்தக் காலக்கட்டத்தில் பன்னிரண்டு ஏழை மனிதர்களின், அநேகமாகத் தரித்திரர்களாய் இருப்பவர்களின் பாதங்களைக் கழுவுவார்; ஆனால் இப்படியாகக் கழுவுவதற்கு முன்பு, அந்த ஏழை மனிதர்கள் முன்னமே விசேஷமாய்க் கழுவப்பட்டு, பின்னர் உள்ளே கொண்டுவரப்படுகின்றனர்; பின்னர் இவர்களின் பாதங்களைக் கழுவும் விசேஷித்த பொது மக்கள் முன்னிலையிலான ஊழியத்தைப் போப் நிறைவேற்றுவார். இப்படியான எந்தச் சடங்காச்சாரத்தையும், நம்மால் நமது கர்த்தருடைய நோக்கத்தில் காணமுடியவில்லை. ஆனால் நம்முடைய நாட்களிலும், நம்முடைய சூழ்நிலைகளின் கீழிலும் சொல்லர்த்தமாகப் பாதங்களைக் கழுவுவது ஆறுதலாகவோ (அ) அவசியமாகவோ இருப்பதற்குப் பதிலாக, நேர் எதிர்மாறாகவே காணப்படுகின்றது. முந்தைய காலங்களில் பரிசுத்தவான்களுடைய பாதங்களைக் கழுவுவது என்பது, விசேஷித்த விருந்தோம்பல் உபசரிப்பிற்கான அடையாளமாகவும், இப்படிச் செய்கிறவர் சபையில் அன்புடன் மதிக்கப்படுவதாகவும் அப்போஸ்தலர் சுட்டிக்காட்டுகின்றார் (1 தீமோத்தேயு 5:10).
ஒருவரையொருவர் ஆறுதல்படுத்துவதற்கும், புத்துணர்வு அடையச் செய்வதற்கும், தேற்றுவதற்கும், ஜீவியத்தின் சில எளிமையான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிடுவதற்கும் அல்லது இனிமையற்ற சில கடமைகளை, அனுபவங்கள் (அ) ஜீவியத்தின் பரீட்சைகள்/சோதனைகள் தொடர்புடைய விஷயத்தில் ஒருவருக்கொருவர் உதவிடுவதற்கும் நமக்கு எத்துணை ஆசீர்வாதமான வாய்ப்புகள் உள்ளன. நமது பாடத்திற்கான ஆதார வசனம் தெரிவிக்கின்ற பிரகாரம், நாம் அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்ய வேண்டுமே ஒழிய, கடமைக்காக/ சம்பிரதாயமாக ஊழியஞ்செய்யக்கூடாது. அன்பினாலும் மற்றும் கர்த்தருடைய ஜனங்களில் ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற வாஞ்சையினாலும் எந்த ஓர் ஊழியத்தைச் செய்திட்டாலும் (அ) செய்ய முற்பட்டாலும், இப்படியாகச் செய்யப்படும் ஊழியங்களுக்குத் தெய்வீக அங்கீகரிப்பும், ஆசீர்வாதமும் உண்டு என்பதில் நாம் உறுதிப்பெற்றுக்கொள்ளலாம். இம்மாதிரியான வாய்ப்புகளை நாம் இழந்துவிடாமல் இருப்போமாக; எஜமானுடைய மாதிரியை நினைவில் கொள்வோமாக; தாழ்மை கொண்டிருப்பதுபோல் நடிக்காமல், மாறாக நமது எஜமானைப் போன்று, நாமும் தாழ்மையை உண்மையாய்க் கொண்டிருப்போமாக; அதாவது நம்முடைய தொடர்புக்குள் வரும் அனைவருக்கும் நாம் இரக்கம் பாராட்டவும், பணிவிடைச் செய்யவும் அனுமதிக்கும் தாழ்மையை – அதிலும் விசேஷமாக தேவையில் காணப்படுபவர்கள் கர்த்தருடைய சரீரமாகிய சபையின் அங்கத்தினர்களாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு ஊழியம் புரிவதற்குரிய சிலாக்கியத்தில் மகிழ்ச்சிகொள்ளும் தாழ்மையை உண்மையாய்க் கொண்டிருப்போமாக.
“முழுகினவன் தன் கால்களை மாத்திரம் கழுவ வேண்டியதாய் இருக்கும்” என நமது கர்த்தர் சீஷர்களிடத்தில் தெரிவித்ததுபோலவே, நீதிமானாக்கப்பட்ட மற்றும் அர்ப்பணம் பண்ணப்பட்ட அவரது சரீரத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் ஏற்கெனவே குளித்துவிட்டனர் மற்றும் மறுஜென்ம முழுக்குப் பெற்றுவிட்டனர் மற்றும் தங்களுக்காகச் சொல்லப்பட்ட உபதேசத்தின் மூலம் சுத்தமாயிருக்கின்றனர் (யோவான் 15:3). இப்படியாகச் சுத்தமாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டாலும், [R3544 : page 121] நாம் உலகத்துடன் தொடர்புக்குள் இருப்பதுவரையிலும், நாம் பூமிக்குரிய அசுசியினால் அசுத்தப்படுவதற்கு ஏதுவாகவே இருக்கின்றோம்; ஆகவே ஒவ்வொருவனும் தனக்கானவைகளை நோக்கிப்பார்ப்பதற்கு மாத்திரமல்லாமல், ஒருவருக்கொருவர் பூமிக்குரிய அசுசிகளை அப்புறப்படுத்துவதற்கு உதவிடுவதும், இப்படியாய்ச் சகோதர சகோதரிகளுக்கு ஊழியம் புரிவதும், சகோதர சகோதரிகளின் பெலவீனங்களில், சோதனைகளில், மாம்சத்தின் பூரணமின்மைகளில் உதவிடுவதும், சகோதர சகோதரிகள் ஜெயங்கொள்பவர்கள் ஆகும்படிக்கு உதவிடுவதும், விசேஷமாக அவசியமாய் உள்ளது. இப்படியான விதங்களில், நாம் பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவி, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தும் மாபெரும் வேலையில் ஒத்துழைக்கிறவர்களாக இருப்போம் (2 கொரிந்தியர் 7:1).