R2473 – அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2473 (page 125)

அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்

HE WAS NUMBERED WITH THE TRANSGRESSORS

வெளிப்படுத்துதல் 19:17-30

“என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்.” கலாத்தியர் 2:20

முற்காலங்களில் சிலுவையில் அறையப்படும் காரியமானது, குற்றவாளிகளிலேயே மிகவும் வெறுக்கத்தக்கவர்களை மரணமடையச் செய்வதற்கான கொடூரமான முறையாகும். இந்தத் தண்டனை முறையின் கடுமையான வீரியத்திற்கான காரணம், கொடூரமான உணர்வுகளைத் தணிப்பதற்காக/திருப்திச் செய்யப்படுவதற்காக அல்லாமல் தீமை செய்கிறவர்களை அச்சமூட்டுவதற்காகவேயாகும். இம்மரண முறையைக்குறித்துப் பரார் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்:

“சிலுவையில் அறையப்படுவதினால் உண்டாகும் மரணத்தோடு சகலவிதமான வலிகளும் காணப்படுகின்றது. மேலும், இம்மரணத்தோடுகூடக் கடுமையான தலைசுற்றலும், தாகம், தூக்கமின்மை, உணவின்றி வலுவிழந்துபோதல், தசைகளில் ஏற்படும் சுளுக்கு, அவமானம், சித்திரவதைகள் தொடர்ந்து நீடிக்கும் நிலை, பயம், ஆற்றப்படாத புண்கள், சாவைக்கொண்டு வரும் நிலைகளும் காணப்படும். இன்னுமாக இவைகள் அனைத்தும், அம்மனிதனுடைய சுயநினைவை இழக்கச்செய்யும் அளவுக்கும், சுயநினைவு இழக்கும் கட்டம் வரையிலும் உச்சக்கட்ட வீரியத்தில் காணப்படும். இப்படிப்பட்ட ஒரு மரணத்திற்கே கிறிஸ்துவும் விதிக்கப்பட்டார்.”

பொறாமையும், கொலைவெறியும் கொண்டிருந்த பிரதான ஆசாரியர்களும், யூதமார்க்கத்தின் வல்லுநர்களுமாகிய இவர்களின் மாய்மாலத்தையும், முரண்பாடுகளையும் பயமின்றி பகிரங்கப்படுத்தினவரும், பொது ஜனங்கள் மத்தியில் துரிதமாய்த் தாக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறவருமான மாபெரும் போதகர் (இயேசு) மேற்கூறப்பட்ட இப்படியானதொரு வெளிப்படையான கண்டனம் பெறவேண்டும் என்றே விரும்பினார்கள். தேவதூஷணம் பேசியதற்காக அவரை அவர்கள் கல்லெறிந்து கொல்ல முடியும். ஆனால், அப்படிச் செய்யப்படும்போது, அநேகருடைய கண்களுக்கு அவர் இரத்தசாட்சி மரணம் மரித்தார் என்பதுபோல் தோன்றிவிடும். ஆனால், அவர் ஆலோசனை சங்கத்தாரால் குற்றவாளியெனத் தீர்க்கப்பட்டு, உலகத்திலேயே வல்லமையில் உயர்ந்த நிலையில் காணப்படும் அரசியல் சக்தியால் அவர் மரணத் தண்டனைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டால், அது இயேசுவுக்கும் அவருடைய போதனைகளுக்கும், அவருடைய பின்னடியார்களுக்கும் என்றென்றும் பெரும் பழியை/அவமதிப்பைச் சுமத்துவதாக இருக்கும் என்று எண்ணினார்கள். ஆகவே, இயேசுவை மரணத்தீர்ப்பிற்கு ஒப்புக்கொடுப்பதற்கெனக் கையெழுத்து இடும்படி பிலாத்துவை இறுதியில் சம்மதிக்க வைத்தபோது, அவர்களுடைய பொல்லாத இருதயங்கள் எத்துணை ஆனந்தம் அடைந்திருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகின்றது.

மாற்கினுடைய பதிவின்படி, (மாற்கு 15:25) மரணப் பத்திரமானது காலையில் சுமார் 9 மணியளவில் பிலாத்துவினால் கையெழுத்திடப்பட்டது என நாம் பார்க்கின்றோம் அதாவது இயேசுவின் மேல் மேற்கொண்ட விசாரணைகளும், இயேசுவை அவருடைய சத்துருக்களிடமிருந்து பாதுகாப்பதற்கெனப் பிலாத்து மேற்கொண்ட பல்வேறு பிரயாசங்களும் மூன்று மணி நேரத்தை எடுத்துக்கொண்டது. தங்கள் சிலுவைகளைச் சுமந்து செல்லும் இரண்டு கள்வர்கள் மற்றும் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படும் நிலையிலிருந்து விடுதலையாக்கப்பட்ட பரபாசினிடத்தில் இயேசு தமது சிலுவையைச் சுமந்து வந்ததுமாகிய ஊர்வலம் உடனடியாகப் புறப்பட்டது. குற்றவாளிகள் தாங்கள் சித்திரவதைப்படுவதற்குப் பயன்படப்போகிற ஆயுதங்களைத் தாங்களே சுமந்து செல்லப்படுவது பழங்காலத்தில் நிலவிய வழக்கமாகும். இன்றைய நவீன ஓவியங்களில் பொதுவாகக் காட்டப்படுவதுபோன்று, சிலுவைகள் அவ்வளவு உயரமானவைகளாகவும், மிகவும் பாரமானவைகளாகவும் இருந்ததில்லை. மாறாக, சிலுவையில் அறையப்படுபவர்களின் பாதங்கள், நிலத்திலிருந்து பன்னிரண்டு முதல் பதினெட்டு இஞ்ச் அளவு மேலே காணப்பட்டது என நிரூபணங்கள் உள்ளன. மேலும், இந்தச் சிலுவைகள் சிறிய உயரம் கொண்டவைகளாக இருப்பினும், ஒரு திடகாத்திரமான மனுஷனால் சுமந்து செல்ல முடிகின்ற அளவுக்குப் பாரம் கொண்டவைகளாகவே காணப்பட்டன. ஆனால், நமது கர்த்தர் தமது கெத்செமனே அனுபவங்களைக் கடந்துவந்த பிறகு, அடிகளும், சவுக்கடிகளும் மற்றும் பிலாத்துவின் ஆணையின்படி கொடுக்கப்பட்ட சவுக்கடிகளும் நிறைந்த இரவு பொழுதைக் கடந்துவந்த பிறகு அவர் பெலவீனமடைந்தவராகவும், உடல் சக்தி இழந்தவராகவும், புண்களினால் வலியுடையவராகவும், நலிந்தவராகவும் காணப்பட்டார். கல்மனமுள்ள சேவகர்கள் அவர் மேல் பரிதாபம் கொண்டு வழியில் வந்த சீரேனே ஊரானாகிய சீமோனைப் பிடித்து இயேசுவின் சிலுவைப் பளுவைச் சுமந்து வரும்படிக்குச் சீமோனைக் கட்டாயப்படுத்தினார்கள் என்று பார்க்கின்றோம்.

இந்தச் சீமோனைக்குறித்து நமக்கு எதுவும் தெரியாது. ஆனால் மாற்கு இவரை, அலெக்சந்தர் மற்றும் ரூப்புக்கும் தகப்பன் என்று குறிப்பிடுவதைப் பார்க்கும்போது, இவருடைய இரண்டு குமாரர்கள் பிற்பாடு இயேசுவின் பின்னடியார்கள் ஆகியுள்ளனர் என்றும், அவர்கள் சீஷர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்கள் என்றும் நமக்குத் தெரியவருகின்றது. ஆனால், பல பேர் ஆசைப்பட்ட மாபெரும் சிலாக்கியம், இந்தச் சீமோன் என்பவருக்குக் கிடைத்துள்ளது. இருதயத்தில் காணப்பட்ட பயமானது பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும், மற்றவர்களையும் மறைந்து ஒளிந்துகொள்ளச் செய்தது என்பதைக்குறித்தும், போதகரின் சோதனையான வேளையில் அவருக்குத் தங்கள் உதவியினை அளிப்பது தடை பண்ணப்பட்டதைக் குறித்தும் அவர்கள் எண்ணி எவ்வளவு வருத்தப்பட்டிருக்க வேண்டும்! யோவான் அவ்வளவு தொலைதூரத்தில் காணப்படவில்லை என்பதை நாம் அறிவோம். மற்றவர்களும் அநேகமாகக் கொஞ்சம் சமீபத்தில்தான் காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எத்தகைய வாய்ப்பை அவர்கள் நழுவ விட்டுவிட்டனர்!

இதேபோன்றதான வாய்ப்புகள் இன்னமும் நம் அனைவருக்கும் காணப்படுகின்றது. அதாவது, கிறிஸ்துவுக்கு ஊழியம் புரிவதற்கான வாய்ப்புகள் அதாவது, கிறிஸ்துவின் சரீர அங்கங்களுக்கு ஊழியம் புரிவதற்கான வாய்ப்புகள் இன்னமும் உள்ளன. போதகரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கின்ற ஒவ்வொருவருக்கும் சில கெத்செமனே அனுபவங்கள் பெற்றுக்கொள்வது அவசியமாய் இருப்பது போன்று, போதகரின் அனைத்து அனுபவங்களையும் (கொஞ்சமாவது) சுவைத்தேனும் பார்க்க வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாய் உள்ளது. ஆகவே, “சகோதர சகோதரிகளுக்கு,” “சிறியவர்களுக்கு,” கிறிஸ்துவின் சரீர அங்கங்களுக்கு [R2473 : page 126] ஊழியம் புரிவதற்கான வாய்ப்புகளைக் கவனிக்க நாம் மறந்துவிட வேண்டாம். ஆட்டுக்குட்டியானவரின் பின்னடியார்கள் மீது விழுந்துகொண்டிருக்கும்/விழ வேண்டிய நிந்தனைகளை நாம் கூட்டிவிடாமல் இருப்பதில் கவனமாய் இருப்போமாக. மேலும், ஆறுதலின் வார்த்தைகளை அவர்களுக்கு அளித்து ஒருவருக்கொருவர் வழியில் வரும் சோதனைகள், கஷ்டங்கள் மற்றும் சிலுவைகளைச் சுமப்பதற்கு உதவி செய்வோமாக. இவ்விதமாக, நம் தலையும் கர்த்தருமாய் இருப்பவரிடம் – கல்வாரிக்குப் போகும் வழியில் அவருடைய சிலுவையை அவர் சுமப்பதற்கு நாம் உதவிசெய்வதற்கான வாய்ப்பை நாம் எப்படி பயன்படுத்துவோம் என்பதைச் சிறப்பான விதத்தில் நம்மால் காட்டமுடியும்.

சிலுவையில் அறையப்படும் இடமானது, கொல்கொதாவாகும். மேலும் எபிரெய வார்த்தையான இதன் அர்த்தம் மண்டை ஓடாகும். மேலும் மண்டை ஓட்டின் இலத்தீன் வார்த்தை கல்வாரியாகும். இப்பெயர் இவ்விடத்திற்கு வழங்கப்பட்டதற்கான காரணம், எருசலேமுக்குச் சற்று வெளியே காணப்படும் இந்த மலையின் வடிவமாகவே இருக்க வேண்டும். இம்மலை தொலைதூரத்திலிருந்து பார்க்கப்படும்போது, அப்படியே மண்டை ஓடு போன்றே காட்சியளிக்கின்றது. இந்தக் கல்வாரிக்குப் போகிற வழியில்தான் எருசலேமின் சில இரக்கம் நிறைந்த ஸ்திரீகளால் தங்கள் பொதுவான வழக்கத்தின்படி கசப்பான வெள்ளைப்போளமும், புளிப்பான திராட்சரசமும் கலந்த பானத்தை மரணத் தீர்ப்புக்குக் கடந்து போகும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டது. இந்தப் பானமானது, நரம்புகளின் உணர்ச்சியை இழக்க வைக்கும் தன்மையை உண்டுபண்ணுவதினால், தண்டனை நிறைவேற்றப்படும்போது, வலி குறைவாகக் காணப்படும். அந்த இரண்டு கள்வர்களும் அநேகமாக அந்தப் பானத்தைக் குடித்திருக்க வேண்டும். ஆனால், மாற்கு 15:23-ஆம் வசனமானது, குடிக்க கர்த்தர் மறுத்துவிட்டார் என்று தெரிவிக்கின்றது. அதாவது, தம்முடைய இந்த அனுபவங்கள் பிதாவின் சித்தப்படியே அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கர்த்தர் அறிந்திருந்தபடியினால், அந்த அனுபவங்களை தாம் முழுமையாய் அனுபவிப்பதற்குத் தடையாய் இருக்கும் எதையும் அவர் அனுமதிக்கவில்லை என்று பார்க்கின்றோம்.

அவரது தாயாராகிய மரியாளும், மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும், கிலெயோப்பாவின் மனைவியாகிய சலோமேயும் மற்றும் இயேசுவின் மற்ற பல நண்பர்களும் தைரியம் கொண்டவர்களாக, ரசமும், வெள்ளைப்போளமும் கலந்த பானத்தைக் கொண்டுவந்த ஸ்திரீகளுடன் சேர்ந்து ஊர்வலத்தில் அவருக்குப் பின் இப்போது செல்ல ஆரம்பித்தார்கள் (மத்தேயு 27:56; மாற்கு 15:40). “திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” (லூக்கா 23:27-28).

இந்த வார்த்தைகள் யூத தேசம் மீது வரப்போகும் மாபெரும் உபத்திரவத்தின் காலங்களைத் தெரிவிக்கின்றதாய்க் காணப்படுகின்றது. “பச்சை மரத்திற்கே இப்படிச் செய்தார்களானால், பட்ட மரத்திற்கு எப்படியாகச் செய்வார்கள்” என்று அவரால் பேசப்பட்ட வார்த்தைகள் குறிப்பிடுவது என்னவெனில், “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்று அவர் முன்னமே அறிவித்தது முதல், பிறகு இஸ்ரயேல் தேசத்திற்கு ஐந்து நாட்கள் மாத்திரமே (அவகாசம்) கொடுக்கப்பட்டிருக்க, மேலும் அவர்களுடைய பசுமை தன்மையும், புத்துணர்வும், மத/பக்தியின் சக்தியும் காணப்பட்டிருக்கும்போதே ஒருவேளை அவர்களுடைய அதிகாரிகள் இப்படிப்பட்ட அநீதியையும், நியாயப்பிரமாணச் சட்டத்திற்கு மாறான அநியாயத்தையும் செய்வார்களேயானால், எதிர்க்காலத்தில் அவர்களுடைய மத/பக்தியின் சக்திகள் உலர்ந்துபோய், அவர்களுக்குரிய அழிவின் நாளுக்குரிய மாபெரும் சூளையில் போடப்படுவதற்கு அவர்கள் தேசமாக முழுமையாய் ஆயத்தப்பட்டிருக்கும்போது, என்னவெல்லாம் எதிர்ப்பார்க்கப்படலாம்; அவர்கள் மீது வரவிருக்கும் உபத்திரவ நாளுக்குரிய மாபெரும் அக்கினி சூளையானது, அவர்களுடைய ஆட்சி அமைப்பு முறையை முற்றிலும் விழுங்கிப்போடும் அளவுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் இப்படியாக தீர்க்கத்தரிசனமும் உரைக்கப்பட்டது. மேலும் நமது கர்த்தர் உரைத்த இந்தத் தீர்க்கத்தரிசனம் சொல்லர்த்தமாக நிறைவேறின காரியமானது, ஜோசபஸ் அவர்களால் நமக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது; அதாவது இஸ்ரயேல் தேசம் மீது கடந்துவந்த மாபெரும் உபத்திரவத்தின் காலத்தில் ஸ்திரீகள் மீதும், பிள்ளைகள் மீதும் வந்த கடுமையான பாடுகள் குறித்தும், அந்த உபத்திரவக் காலமானது கிபி 70-இல் எருசலேமின் அழிவுடன் நிறைவடைந்தது என்பவைகள் குறித்துமான விவரங்களை இவர் பதிவு செய்துள்ளார்.

“அவர் அக்கிரமக்காரர்களில் ஒருவராக எண்ணப்பட்டார்” என்ற தீர்க்கத்தரிசனத்தைக் கருத்தில் எடுத்துக்கொண்டு, பின்னர் அருமையான இந்த மீட்பர் கொல்லப்படுவதற்கென அன்று முன்னிலை வகித்துக்கொண்டிருந்த யூதர்கள் விடாப்பிடியாய் நாடின விஷயங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு பார்க்கையில், எந்த மனுஷனுடைய சுயாதீனத்திலும் தலையிடாமல், தெய்வீக முன்னறிவானது, தேவனுடைய சித்தம் குறித்த ஆலோசனைக்கு இசைவாக சகல காரியங்களையும் நடப்பித்தது என்பதற்கான புதிதான ஆதாரங்கள் நமக்கு வெளிப்படுகின்றன. மேலும், மனுஷனுடைய கோபமானது, தம்மைத் துதிக்கும்படிக்கும் தமது ஞானத்திற்கும், முன்னறிவிற்கும் சாட்சியாக விளங்கும்படி எப்படி நடத்தினார் என்பதற்கான புதிய ஆதாரங்களும் நமக்குக் கிடைக்கின்றது.

மரணத் தண்டனை அளிக்கப்படும் கைதியுடன், நான்கு சேவகர்கள் அனுப்பப்படுவது வழக்கமாக இருந்தது. முதலில் செல்லும் சேவகன், மரணத் தீர்ப்புக்குள்ளாயிருக்கும் கைதிகளின் குற்றங்கள் எழுதப்பட்டுள்ள வெள்ளை நிற பலகையுடன் காணப்படுவான். மேலும், இப்பலகையானது, சிலுவையில் கைதியின் தலைக்கு மேல் கட்டப்படும். முதல் சேவகனைப் பின் தொடர்ந்த நிலையில் ஆணிகள், சுத்தியல் முதலியவைகளுடன் மூன்று சேவகர்கள் பின் தொடர்ந்தனர். இந்த நான்கு சேவகர்களும், ஒரு நூற்றுக்கு அதிபதி அல்லது தலைவனின் கட்டளையின் கீழ்ச் செயல்படுபவர்கள் ஆவர். இயேசுவின் தலைக்கு மேல் சிலுவையில் காணப்பட்ட பலகையானது, மூன்று பாஷைகளில் இயேசு, யூதர்களுடைய இராஜா என்ற வார்த்தைகளினால் எழுதப்பெற்றிருந்தது. இவ்வார்த்தைகள், அந்நாட்டினுடைய பாஷையாகிய எபிரெய மொழியிலும், கல்வியறிவு உடையவர்களின் மற்றும் பயணிகளின் மொழியாகிய கிரேக்க மொழியிலும், ரோம சாம்ராஜ்யம் மற்றும் சேவகர்களின் மொழியாகிய இலத்தீன் மொழியிலும் எழுதப்பட்டிருந்தது. மேலும் இப்பலகையில் எழுதப்பட்டதான வார்த்தைகளைச் சுவிசேஷகர்கள் தெரிவிக்கும் விஷயத்தில் சில வித்தியாசங்கள் காணப்பட்டதற்கான காரணம் வெவ்வேறு பாஷைகளின் வார்த்தைகளில் காணப்படும் சில வித்தியாசங்களேயாகும் என யூகிக்கப்படலாம்.

“நசரேயனாகிய இயேசு யூதர்களின் இராஜா” என்ற வார்த்தைகளை எழுதிட கட்டளையிட்ட பிலாத்துவின் வாக்கியத்திற்குள் இருக்கும் மாபெரும் சத்தியத்தைப் பிலாத்துப் புரிந்துகொள்ளவில்லை. இயேசு ஓர் இராஜா என்ற இந்த வாக்கியத்திற்குள் அடங்கியுள்ள சத்தியத்தை இன்றும் சொற்பமானவர்களே புரிந்து கொண்டுள்ளனர். இன்னுமாக, புரிந்து கொண்டவர்களிலேயே சிலரே அவர் மேல் விசுவாசம் வைத்துக்கொண்டு உண்மையிலும், சத்தியத்திலும் தங்களுடைய இருதயத்தின் முழங்கால்களை மடக்கி முழங்கால் இட்டுள்ளனர். இன்னுமாக, கர்த்தர் கூறின பிரகாரமாக சகல முழங்கால்களும், முழங்கால் இடுவதற்கும் பிதாவாகிய தேவனுக்கு மகிமை செலுத்தும் வண்ணமாக சகல நாவுகளும் தம்மைக் கர்த்தர் என்றும், போதகர்/எஜமான், இராஜா என்றும் அறிக்கைப்பண்ணுவதற்குமான காலம் அண்மையில் வரவிருக்கின்றது. “அந்தத் தீர்க்கத்தரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்” (அப்போஸ்தலர் 3:23). அவர் யூதர்களால் உண்மையாகப் புறக்கணிக்கப்பட்டார். எனினும், (சபை) இஸ்ரயேலரின் பன்னிரண்டு கோத்திரத்தாராகத் தெரிந்தெடுக்கப்பட வேண்டிய முழு எண்ணிக்கை இன்னமும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த இஸ்ரயேலரின் பன்னிரண்டு கோத்திரத்தாராகத் தெரிந்தெடுக்கப்படுபவர்கள் ஆபிரகாமின் சந்ததியாராக இருந்து, மேசியாவை இராஜாவாக ஏற்றுக்கொண்டு, தற்கால ஜீவியத்தில் அவருக்கு உண்மையாய் ஊழியம் புரிந்து அவருடைய ஊழியத்திற்காகவும், சகோதர சகோதரிகளுக்காகவும் தங்கள் ஜீவியத்தை ஒப்புக்கொடுத்து, இறுதியில் அவருடைய இராஜ்யத்தில் அவரோடுகூட உடன்சுதந்தரர்களாகக் காணப்படுபவர்கள் ஆவர். இந்தக் கபடற்ற உத்தம இஸ்ரயேலரின் பன்னிரண்டு கோத்திரத்தாராக தெரிந்தெடுக்கப்பட வேண்டிய எண்ணிக்கையை நிறைவு செய்ய மாம்சீக இஸ்ரயேலர்களில் போதுமானவர்கள் இராதபடியினால், கடந்த 18 [R2473 : PAGE 127] நூற்றாண்டுகளாக புறஜாதி ஜனங்கள் மத்தியில் தெரிந்தெடுப்பதன் மூலம் தேவன் அந்த எண்ணிக்கையை நிறைவாக்குவார். “முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்” (வெளிப்படுத்தல் 7:4-8).

இயேசு தம்மை யூதர்களுடைய இராஜா என அறிவித்தப்படியால், யூத மத சாஸ்திரிகள் அவரை குற்றஞ்சாட்ட விரும்பினாலும், அவ்வார்த்தைகளினிமித்தமே அவர் குற்றம் தீர்க்கப்பட்டார் என்ற விஷயங்கள் பொதுஜனங்கள் பார்க்கத்தக்கதாக பலகையில் எழுதப்பட்டுக் காணப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மேலும் இவ்விலாசமானது இயேசுவின் இவ்வறிக்கையும், அவ்வறிக்கையின் செல்வாக்கையும் குறித்து, அவர்கள் மிகவும் பயந்ததினாலேயே அவரைக் கொன்றுபோட நாடினார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கும். குற்றச்சாட்டுடைய பலகையின் எழுத்துக்களை மாற்றி எழுத அவர்கள் கேட்டதற்குப் பிலாத்து மறுத்தக் காரியம் [R2474 : page 127] நியாயமானதாகும். ஒருவேளை இயேசு தம்மை இராஜாவென அறிவித்த வார்த்தைகளில் எவ்வித முக்கியத்துவம் இல்லையெனில், அவரைக்குறித்து அவர்கள் ஏன் பயப்பட வேண்டும்? ஏன் அவர் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும்? ஒருவேளை அவரைச் சிலுவையில் அறையப்படும் அளவுக்கு அவருடைய அறிக்கையில் முக்கியத்துவம் காணப்படுமாயின், அவ்விஷயங்கள் தெளிவாய் வெளிக்காட்டப்பட வேண்டும் என்று பிலாத்து எண்ணினார்.

சிலுவையில் அறையப்பட்டவர்களின் உடைமைகளை, ஒவ்வொரு சிலுவையில் அறையப்படும் தருணத்திலும் பங்குபோடப்படுவது வழக்கமான காரியமாக இருந்தது; மேலும் இது உபத்திரவமான சூழ்நிலைகள் சுற்றிக் காணப்படும்போது, சேவகர்களின் இருதயக் கடினத்தையும், அலட்சியப்போக்கையும் (விருப்பு வெறுப்பு அற்ற நிலையையும்) சுட்டிக்காட்டுகின்றது. பங்கு போடப்பட்ட கூட்டத்தில் தலைப்பாகை, மேலங்கி, இடைக்கச்சை மற்றும் பாதரட்சைகள் காணப்பட்டன. மேலும், இயேசுவின் விஷயத்தில் குறிப்பிடப்படும் வஸ்திரமானது, கழுத்து முதல் பாதம் வரையிலும் உள்ள உள் அங்கியாகும்; மேலும் அது தையல் இல்லாமல் மேல் துவங்கி கீழ் வரையிலும் நெய்யப்பட்டிருப்பதை வைத்து அது சிறந்த தன்மையுள்ள துணியினால் நெய்யப்பட்டது என்பதும் தெரிகின்றது. மேலும் இந்த வஸ்திரத்தின் மீது சீட்டுப் போடப்பட்ட சம்பவமானது, சங்கீதம் 22:18-ஆம் வசனத்தில் உரைக்கப்பட்ட தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதலாய் இருக்கின்றது என யோவான் கவனத்திற்குக் கொண்டு வருகின்றார். மேல் துவங்கி கீழ் வரையிலும் ஒன்றாய் நெய்யப்பட்டுத் தையலில்லாமல் காணப்படும் வஸ்திரமானது, கிறிஸ்துவின் நீதியை அடையாளப்படுத்துகின்றது. மேலும் அந்நீதியானது, பிரித்துப் பிரித்து எடுக்கப்படாமல், முழுமையாகவே சொந்தமாக்கிக் கொள்ளப்பட முடியும். மேலும், அவருடைய நீதியானது முழுமையாகக் காணப்படுகின்றது. அது அழிக்கப்பட முடியாது. மேலும், அதைப் பெற்றுக்கொள்ளும் எவனும் மிகவும் விலையேறப்பெற்ற (நீதியின்) வஸ்திரத்தைப் பெற்றுக்கொள்கின்றான். ஆனால், அதேசமயம் அதைப் பெற்றுக்கொள்ள தவறுகின்றவன் கிறிஸ்துவுக்குள்ளாக தேவனால் கிடைக்கும் நீதிமான் நிலையைப் பெற்றுக்கொள்ள தவறுகின்றான். ஆனால், கர்த்தருடைய ஜனங்களுக்கு இந்த (நீதியின்) வஸ்திரமானது, சீட்டுப்போடுவதன் மூலமாகவோ அல்லது தற்செயலாகவோ அல்லது சந்தர்ப்பவசத்திலோ கிடைப்பதில்லை. வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்ற பிரகாரமாக அது விசுவாசம் வைப்பதினால்/காட்டுவதினால் பெறப்படுகின்றது. மேலும், விசுவாசித்தவைகளுக்குக் கீழ்ப்படிதல் காட்டுவதன் மூலம் தக்கவைக்கப்படுகின்றது. இன்னுமாக, சீட்டுப் போடப்படுவதினால், சிறுமந்தை வகுப்பாருக்கு மாத்திரமே கிடைக்கப்பெறும் கலியாண வஸ்திரத்திற்கும் கூட இவ்வஸ்திரமானது, அடையாளமாகக் கருதப்படலாம். இந்தச் சிறுமந்தையினரோ, விசுவாசத்தின் மூலமாகவும், விடாமுயற்சியின் காரணமாகவும் கிறிஸ்துவினுடைய தையலில்லாத மற்றும் கறைதிறையற்ற நீதியினால் மூடி மறைக்கப்பட்டு, அவருடைய சரீரத்தின் அங்கங்களாக இராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.

நேரம் செல்ல செல்ல அப்போஸ்தலனாகிய யோவானின் தைரியம் பெருகிற்று. மேலும், நமது கர்த்தர் சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, யோவான் அவருக்கு அண்மையிலேயே, அதாவது பேசுவது கேட்பதற்குரிய தூரத்திலேயே காணப்படத்தக்கதாக முன்னே வந்து நின்று கொண்டிருந்தார். அநேகமாக, கிலெயோப்பாவின் மனைவியைப் பார்த்தபோது, இவர் தைரியமடைந்திருக்க வேண்டும்; இந்தக் கிலெயோப்பாவின் மனைவி, உறவினள் என்ற அனுமானம் காணப்படுகின்றது. போதகரை அன்புகூர்ந்தவர்களும், அதேசமயம் அவருக்கு ஆறுதல் கொடுக்கவோ அல்லது அவரை விடுவிக்கவோ வலிமையற்றவர்களாகக் காணப்பட்டு, அவருக்கான அனுதாபத்தினால் தங்கள் இருதயங்கள் நிறைய பெற்றிருப்பவர்களும் துக்கத்தினால் ஒன்று கூடினார்கள். “நீர் மேசியாவானால் சிலுவையைவிட்டு தாழ இறங்கிவாரும்” என்று மற்றவர்கள் அவரைப் பரியாசம் பண்ணி, கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கையில், இவர்களோ, (இயேசுவின் நண்பர்கள்) அழுதுகொண்டு, துக்கத்துடன் காணப்பட்டார்கள். நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட காரியமானது, அவர் தம்மை மேசியாவென அறிவித்த விஷயங்களைப் பொறுத்தமட்டில் அவரை ஏமாற்றுப் பேர்வழி என்றும், அவர் ஒரு வஞ்சகன் என்றும் நிரூபிக்கப்படுவதற்கு சிறந்த ஆதாரமாகக் காணப்படும் என்று அவருடைய சத்துருக்கள் எண்ணினார்கள் என்பதில் ஐயமில்லை.

கிறிஸ்துவின் சரீர அங்கங்களுக்கும் கூட இவர்கள் பிதாவின் தயவைப் பெற்றிராதவர்கள் என்றும், அவர்கள் உண்மையில் ஏமாற்றுக்காரர்கள் என்றும் கருதப்படத்தக்கதான அனுபவங்கள் அவர்களுக்கு வர, சில சமயங்கள் பிதா அனுமதித்திருப்பது உண்மையே. கர்த்தருடைய உண்மையான சீஷர்கள் கர்த்தரோடு இருதய பூர்வமான ஒற்றுமை கொண்டிருந்ததுபோன்று, அந்த இருதய பூர்வமான ஒற்றுமையை வெளிப்புறமான தர்ம சங்கடங்களினாலும், சந்தர்ப்பங்களினாலும் உடைத்துவிட முடியாததுபோன்று, அவர்களிடையிலான அந்த அன்பை எதிர்மாறான கஷ்டமான சந்தர்ப்பங்கள் தணித்துப்போட முடியாதது எப்படியோ, அப்படியே ஒரே ஆவியிலும், இருதய பூர்வமான இசைவுடனும் காணப்படும் அவருடைய அனைத்துச் சகோதர சகோதரிகளுக்கு இடையிலும் காணப்படுகின்றது; இவர்களும்கூட மிகவும் சோதனையான சூழ்நிலைகளிலும், எதிரிடையான சந்தர்ப்பங்களிலும் உண்மையாய்க் காணப்படுவார்கள், ஏனெனில் இவர்களிடமும் ஒரே ஆவியும், சகோதர சகோதரிகள் மீதான அன்பின் ஆவியும் உள்ளது; மேலும் இந்த அன்பின் ஆவியின் மூலம் இவர்களால் ஒருவரையொருவர் ஒரே சரீரத்தின் அங்கங்களாக அடையாளம் கண்டுகொள்ள முடிகின்றது.

நமது கர்த்தர் தாமே, உபத்திரவங்களுக்குள் காணப்படும்போது, அவர் மற்றவர்களுடைய நலன் கருதி யோசித்துக் கொண்டிருப்பதில் விளங்கும் அவருடைய இரக்கம் கொள்ளும் சுபாவத்தைக் குறித்து எத்துணை ஆழமாய் உணர முடிகின்றது. அவருடைய சொந்த வியாகுலங்கள், அவர் தம் தாய் குறித்துச் சிந்திப்பதற்கும், அவளை அன்பான சீஷனாகிய யோவானின் பராமரிப்பில் விடுவதற்கும், சொல்வதற்கும், அவர்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் தடைவிதிக்கவில்லை. இவ்விதமாக போதகர், “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரிக்க வேண்டும்” என்பதற்கு மாதிரியாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது; “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்” (1 தீமோத்தேயு 5:8). “விசுவாசம்” என்ற வார்த்தை மற்றவர்களுக்கு அதிலும் விசேஷமாக விசுவாச வீட்டாருக்கு அன்பு காட்டுவது, இரக்கம் கொள்வது, நலனைக் கருதுவது மற்றும் பராமரிப்பது போன்றதான எண்ணங்களையும் உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. யோவான் (மரியாளைப் பராமரிக்க) தெரிந்தெடுக்கப்பட்டதை நாம் கவனிக்க வேண்டும். அவர் தெரிந்தெடுக்கப்படுவதற்கான காரணம், முதலாவதாக, அவருடைய அன்பான சுபாவம், இரண்டாவதாக, கர்த்தருக்கும், சத்தியத்திற்கும் அவர் கொண்டிருக்கும் வைராக்கியம் மற்றும் மூன்றாவதாக, தன்னுடைய ஜீவனைப் பணயம் வைத்து யோவான் மரித்துக்கொண்டிருக்கும் போதகரின் இறுதி தருணங்களில் அவர் அருகே காணப்படத்தக்கதாகத் தைரியமாக முன்னேறி வந்தது என்பவைகள் போன்றதுதான் என்பதில் ஐயமில்லை. இந்த மூன்று விஷயங்களும் கர்த்தர் அங்கீகரிக்கும் விஷயங்கள் என நாம் கவனிக்கக்கடவோம். மேலும், இவைகளைக் கவனித்த பிற்பாடு, அவைகளை நமக்குள் விருத்திச் செய்ய நாடியிருப்போமாக. மேலும், இதன் விளைவாக அன்று காணப்பட்ட அதே போதகரால், ஊழியம் புரிவதற்கான விசேஷித்த வாய்ப்புகளால் நாம் அருளப்படுவோமாக.

நமது கர்த்தருடைய வேதனைகளுடைய நிறைவின்போதுதான் அவர், “நான் தாகமாயிருக்கின்றேன்” என்று கூறினார். மேலும் இது, “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்” என்ற தீர்க்கத்தரிசனம் நிறைவேறுவதற்கு இடம் உண்டாக்கிற்று (சங்கீதம் 69:21). இது சாதாரணமான காடியல்ல, இது சேவகர்களின் சாதாரணமான விலைகுறைந்த புளித்த திராட்சரசத்தின் பானமேயாகும். ஈசோப்பின் தண்டில் மாட்டப்பட்டிருந்த காடியில் தோய்த்த கடற்காளானானது, நமது கர்த்தருடைய வாய் அருகே கொண்டு செல்லப்பட்ட காரியமானது, அவரது உதடுகளுக்கும், நாவிற்கும் ஈரத்தன்மையைக் கொடுத்தது. மேலும் இரக்கத்தினாலேயே இது செய்யவும்பட்டது என்பது உறுதியே. பல்வேறு பதிவுகள் கூறும் சம்பவங்கள் தொகுக்கப்பட்டு “சிலுவையின் ஏழு வார்த்தைகள்” என அழைக்கப்படுகின்றது.

சிலுவையில் உரைக்கப்பட்ட முதல் வார்த்தை: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (லூக்கா 23:34). இவ்வார்த்தைகள் உண்மையில் கர்த்தருடைய சத்துருக்கள் குறித்து அவர் கொண்டிருக்கும் உணர்வை வெளிப்படுத்தினாலும், பழைய கிரேக்க மூலப்பிரதிகளில் இவ்வார்த்தைகள் காணப்படுவதில்லை என்பதை இங்கு நாம் குறிப்பிடுவது சரியானதாகக் காணப்படும்.

சிலுவையில் உரைக்கப்பட்ட இரண்டாம் வார்த்தை: இது நமது கர்த்தர் கள்வனுக்கு அளித்த செய்தியாகும். “இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்” (லூக்கா 23:43).

[R2474 : PAGE 128]

சிலுவையில் உரைக்கப்பட்ட மூன்றாம் வார்த்தை: “ஸ்திரீயே, இதோ உன் மகன் – இதோ, உன் தாய்!”

சிலுவையில் உரைக்கப்பட்ட நான்காம் வார்த்தை: “என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” (மாற்கு 15:34). இவ்வசனத்தைக் குறித்து ஓர் இறையியல் நிபுணர்: “முழு வேதாகமத்திலேயே இவ்வாக்கியத்தைக் காட்டிலும், வேறு எந்த வாக்கியமும் விவரிக்க கடினமாய் இருப்பதில்லை” என்று தெரிவிக்கின்றார். ஆனால், ஈடுபலி குறித்த சரியான கண்ணோட்டம் இருப்பவருக்கு, இதன் அர்த்தத்தையும், காரணத்தையும் புரிந்து கொள்வது சுலபமாய்க் காணப்படும். இந்தக் கண்ணோட்டத்தின்படி தேவனுடைய இரக்கத்தினால் ஒவ்வொரு மனுஷனுக்காகவும் மரணத்தை ருசி பார்க்கும்படிக்கு லோகாஸ் மாம்சமாக்கப்பட்டார் என்று நாம் காண்கின்றோம் (எபிரெயர் 2:9). மேலும், நீதியைத் திருப்திபடுத்துவதற்கும், ஆதாமையும் அவர் மூலம் தண்டனையின் கீழ் வந்தவர்களையும் விடுவிப்பதற்கும், தகப்பனாகிய ஆதாமின் மீது வந்த மரணத் தண்டனையை இயேசு அனுபவிக்க வேண்டும். மேலும், ஆதாமுக்கு எதிராக வந்த தண்டனையானது, மரணமாக இருந்தபடியினால், நம்மை மரணத் தண்டனையிலிருந்து விடுவிப்பதற்கும், மரணத்திலிருந்து உயிர்த்தெழும் காரியத்தை உறுதிப்படுத்துவதற்குமெனக் கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாடுபட்டார். இன்னுமாக, ஆதாமுக்கு எதிரான தீர்ப்பானது, ஆதாமை எதிராளியாக குற்றம் தீர்த்து, பிதாவுடனான ஐக்கியம் துண்டிக்கப்படுதலையும் உள்ளடக்கி இருந்ததினால் நமது கர்த்தராகிய இயேசுவுக்கும், ஆதாமின் ஸ்தானத்தை எடுத்து, பாவிகள் பிதாவிடமிருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கும் அனுபவத்திற்குள் கடந்து செல்வது (கொஞ்சம் நேரமாகிலும் கடந்து செல்வது) அவசியமாய் இருந்தது.

ஆதாமுடைய தண்டனையின் இப்பாகத்தை பிதா மிகுந்த இரக்கத்துடன் நமது மீட்பருடைய பலியுடன் கலந்த ஊழியக்காலம் முழுவதிலும் அவர் மேல் அனுமதிக்காமல், அவருடைய கடைசி நேரங்களில் மாத்திரமே அனுமதித்தார். பிதாவுடன் அவருக்குக் காணப்பட்ட தொடர்பும், ஐக்கியமுமே சகல வேதனையான அனுபவங்களையும், முந்தின நாள் இரவின் அனுபவங்களையும் அப்படி ஒரு தைரியத்துடன் அவர் கடந்து செல்ல உதவிற்று. ஆனால், இப்பொழுதோ, கிறிஸ்துவைத் திடப்படுத்தும் பிதாவினுடைய கிருபையும், ஐக்கியமும், தொடர்பும் இயேசுவிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. சிறப்பான உணர்வுகளையுடைய நமது மீட்பர், அவருடைய அருமையான நண்பரிடமிருந்து, (பிதாவிடமிருந்து) வரும் ஆறுதலை இழந்ததினிமித்தம் முழுமையும் துயரத்திற்குள்ளானார். ஆகவேதான் என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர் என்ற வியாகுலத்தின் வார்த்தைகளைக் கூறிக் கதறினார். ஆதாமின் மீறுதலினிமித்தம் உண்டான தண்டனையின் இந்தப் பாதகத்தையும் இயேசு அனுபவிக்க வேண்டும் என்ற விஷயம் இந்தக் கடைசி நிமிஷம் வரையிலும் அவரிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது.

சிலுவையில் உரைக்கப்பட்ட ஐந்தாம் வார்த்தை: “நான் தாகமாக இருக்கின்றேன்” இதனை நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம்.

சிலுவையில் உரைக்கப்பட்ட ஆறாம் வார்த்தை: “எல்லாம் முடிந்தது” என்ற வார்த்தைகள் நமது கர்த்தருடைய பூமிக்குரிய ஊழியம் நிறைவடைந்ததை நமக்குத் தெரிவிக்கின்றது. அவர் மரிப்பதற்காக வந்தார். மரணத்தண்டனையின் தீர்ப்பின் கீழ்க் காணப்படும் ஆதாமின் சந்ததியை மீட்கவும், தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் தம்முடைய ஜீவனால் அவர்களை விலைகொடுத்து வாங்கவும் வந்தார். பிதாவின் திட்டத்திற்கு இசைவான இவ்வேலைக்கென அவர் தம்மையே அர்ப்பணம் செய்திருந்தார். மேலும் பிதா தம்மிடத்தில் ஒப்புவித்திருந்த வேலையைத் தாம் செய்து முடித்துவிட்டதாக தமது இறப்பிற்குரிய கடைசி மூச்சு விடும் தருவாயில் அவரால் கூறமுடிந்தது. நமது அருமையான மீட்பர் அவ்வேலையை முடித்துவிட்டார் என்றும், “நீ மேசியாவானால் சிலுவையை விட்டு தாழ இறங்கி வா” மற்றும் “உன்னையே நீ இரட்சித்துக்கொள்” என்ற வார்த்தைகளினால் அவரை இம்சைபடுத்தினவர்கள் மீது அவர் சினம் கொள்ளவில்லை என்றும் நாம் அறிகையில் எவ்வளவாக சந்தோஷம் கொள்ளமுடிகின்றது. மாபெரும் பலி செலுத்தப்பட்டுவிட்டது என்பதை நினைக்கையில், (அது அங்கீகரிக்கப்படும் விதத்தில் நிறைவேற்றி முடிக்கப்பட்டுவிட்டது எனப் பிதாவும் பின்னர்த் தெரிவித்தார் என்ற உண்மையின் அடிப்படையிலான கண்ணோட்டத்தின்படி பார்க்கையில்) நம்மால் சந்தோஷம்கொள்ள முடிகின்றது. மேலும், இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் காணப்படுகிறவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பில்லை என்பதை நாம் உணரும்போதும் மகிழ்ச்சியடைகின்றோம் (ரோமர் 8:1)

தேவனுடைய ஆட்டுக்குட்டியானவரின், நம்முடைய கர்த்தரின் பலியின் மூலம், 18 நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டிருப்பினும், இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டிய மற்றும் ஒரு பாகமும் உள்ளது. தெய்வீகத் திட்டத்திற்கு இசைவாக நமது கர்த்தர் தம்முடைய சரீரமாகிய சபையானது, “கிறிஸ்துவின் பாடுகளில் குறைவானதை நிறைவேற்றுவதற்கு” காத்துக் கொண்டிருக்கின்றார் (கொலோசெயர் 1:24). மேலும், கர்த்தருடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நம் விஷயத்தை நோட்டமிடுகையில் அவ்வேலையானது, கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்று நம்மால் கூறமுடிகின்றது. வெகு சீக்கிரத்தில் கிறிஸ்துவின் சரீரத்தினுடைய கடைசி அங்கமானது, தலையோடு சேர்ந்து நீதியினிமித்தம் பாடுபட்டு முடிவது சம்பவிக்கும். அப்பொழுது இந்தச் சுவிசேஷ யுகம் அல்லது பாவநிவாரண நாளுக்குரிய பலி செலுத்தும் முழு வேலையும் நிறைவடைந்து, பின்னர் மகிமையின் ஆசீர்வதித்தலின், ஆளுகை செய்தலின், சீர்தூக்குதலின் ஆயிரம் வருஷ அரசாட்சியின் யுகம் ஆரம்பிக்கும். மாபெரும் ஆசீர்வாதங்கள் மனுக்குலத்தின் மீது கடந்துவரும். அதாவது, கல்வாரியில் நிறைவேற்றப்பட்ட விலைக்கிரயமாகிய மாபெரும் ஆசீர்வாதங்கள் மனுக்குலத்தின் மீது கடந்துவரும். “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்ற வார்த்தைகளை எஜமான் கூறும்வரையிலும், போதகரின் அடிச்சுவடுகளில் நடந்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பின்னடியானும், தனது ஓட்டம் நிறைவடையும் தருணம் வரையிலும், சுயத்தை வெறுத்துச் செல்லும் பாதையில் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் காணப்படுவானாக (மத்தேயு 25:21).

சிலுவையில் உரைக்கப்பட்ட ஏழாம் வார்த்தை: “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்” (லூக்கா 23:46). இங்குப் பேசப்பட்ட வார்த்தைகளான நமது கர்த்தருடைய கடைசி வார்த்தைகள் சங்கீதம் 31:5-ஆம் வசனமேயாகும். வேறுவார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், அவர் இவ்விதமாகவே தம்மை, சத்தியம் மற்றும் கிருபையின் பிதாவினிடத்தில் ஒப்புக்கொடுப்பார் என்பது ஏற்கெனவே முன்னுரைக்கப்பட்டுள்ளது. நமது கர்த்தர் அநேகம் பாவிகளுக்கான [R2475 : page 128] ஈடுபலியாக தம்முடைய மனுஷீக ஜீவனை ஒப்புக்கொடுப்பதை நிறைவேற்றிவிட்டார். அவருடைய விசுவாசம், கீழ்ப்படிதல் மற்றும் பலிக்கான பலனாக அவருக்கு உயர்வான தளத்தில் ஒரு புதிய ஜீவனைப் பிதா அவருக்கு வாக்களித்துள்ளார். இந்தப் புதிய ஜீவன் அல்லது புதிய சிருஷ்டியாகிய ஜீவன், நமது கர்த்தருடைய ஞானஸ்நானத்தின் போது, அவர் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது, அவருக்குள் ஆரம்பித்தது என எண்ணப்படுகின்றது. மேலும், இந்தப் புதிய ஜீவனானது, அவருடைய ஊழியத்தின் நாட்களிலும், மாம்சத்திற்கு அவர் நித்தமும் மரித்துக்கொண்டிருக்கும்போதும், அவருக்குள் தொடர்ந்து காணப்பட்டதாகவும், வளர்ந்து கொண்டுவந்ததாகவும் எண்ணப்பட்டது. வெளிமனுஷன் மரித்துக் கொண்டே இருக்கையில், உள்ளான புதுச் சிருஷ்டியோ, நாளுக்கு நாள் புதிதாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இப்பொழுதோ, (இயேசுவின்) வெளிமனுஷன் முழுமையாக மரித்துப் போகிற தருணம் வந்துவிட்டது; அதாவது முற்றிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டு பலி நிறைவடையும் தருணம் வந்துவிட்டது.

எதிர்க்காலத்திற்குரிய ஜீவன் குறித்த நமது கர்த்தருடைய எதிர்ப்பார்ப்பானது, பிதாவின் வாக்குத்தத்தத்திற்கு இசைவாக புதிய ஜீவனுக்கு அல்லது உயிர்த் தெழுப்பப்பட்ட புதிய ஜீவனுக்கு நேராகக் காணப்பட்டது. அவருடைய ஞானஸ்நானம் மற்றும் அர்ப்பணிப்பின்போது, அவருக்குள் ஆரம்பிக்கப்பட்டதென எண்ணப்பட்டதான புதிய மனம் அல்லது சிந்தையானது உயிர்த்தெழுதலில் பூரணமடையும் என்ற தெய்வீக வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தது. அதாவது, புதிய மனது, புதிய சிந்தைக்குப் பொருத்தமான ஆவிக்குரிய சரீரம் உயிர்த்தெழுதலில் கொடுக்கப்பட்டு, பூரணப்படுத்தப்படும் என்று தெய்வீக வாக்குத்தத்தம் காணப்பட்டது. ஆனால், இந்த மாறுதல் உடனடியாக நடக்கக்கூடாது. மூன்று நாளுக்குப் பிற்பாடே அவர் ஆவிக்குரிய சரீரமுடைய புதிய சிருஷ்டியாக உயிர்ப்பிக்கப்பட வேண்டுமெனத் தெய்வீகச் சட்டம் ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது. இயேசு இதனை விசுவாசிக்க வேண்டும். ஒருவரும் இப்படியான வழிமுறையின்படி ஒருபோதும் கடந்து சென்றதில்லை. ஆயினும், நமது அருமையான மீட்பர் முழு நம்பிக்கையுடன் பிதாவை நோக்கிப்பார்த்தார். மேலும், முழு விசுவாசத்துடன் தமது ஜீவியத்தின் அனைத்து விஷயங்களையும், எதிர்காலத்திற்குரிய இந்த ஆசீர்வாதமான நம்பிக்கைகளையும் பிதாவின் அன்பினிடத்திலும், பிதாவின் வல்லமையினிடத்திலும் ஒப்புவித்துவிட்டதாக, அதாவது பிதாவின் திட்டம் மற்றும் வார்த்தைகளுக்கு இசைவாக தமக்கு அளிக்கப்படத்தக்கதாக ஒப்புவித்துவிட்டதாக அறிக்கைப்பண்ணினார். நமது எஜமானின் அடிச்சுவடுகளைப் பின் தொடரும் அவருடைய பின்னடியார்களாகிய நாமும்கூட, தம்முடைய குமாரனை நமக்கான மீட்பராக அன்பளிப்பாக கொடுத்தலில் மாத்திரமல்லாமல், நம்முடைய (வாழ்க்கை) பிரயாணம் முழுவதும் காணப்பட்ட அவருடைய பராமரிப்பிலும், நமக்கு முன்பாகச் சென்று, நம்மைச் சூழ்ந்துக் கொண்டு நமக்குப் பலத்தையும், ஆறுதலையும், நிச்சயத்தையும் அருளின மகா மேன்மையும் அருமையுமான அவருடைய வாக்குத்தத்தங்களை அளித்ததிலும், தம்முடைய அன்பை வெளிப்படுத்தின பிதாவின் பொறுப்பில், நம்முடைய மரிக்கும் தருணத்தில், நம்முடைய அனைத்து நலன்களையும் ஒப்படைத்துவிடுகிறவர்களாகக் காணப்பட வேண்டும்.