R2282 – நினைவுகூருதல் இராப்போஜனம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2282 (page 101)

நினைவுகூருதல் இராப்போஜனம்

THE MEMORIAL SUPPER

ஜியோர்ஜியாவில் (Georgia) சத்தியத்தில் காணப்படும் நண்பர்கள் சிலர், தாங்கள் பாபிலோனிலிருந்து வெளியே வந்ததுமுதல் நினைவுகூருதலை ஆசரிக்கவில்லை என்றும் எழுதி, இதற்கான தங்கள் காரணத்தையும் பின்வருமாறு கொடுக்கின்றனர்: “எங்கள் மனங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, ஆனால் எங்களுடைய மாம்சம் இப்படியாக இல்லை மற்றும் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளின்கீழ் முடியவும் செய்யாது என்று நாங்கள் எண்ணுகின்றோம். நாங்கள் ஏழைகளாக இருக்கின்றோம் மற்றும் எங்களைச் சார்ந்திருக்கும் பெரிய குடும்பங்களையும் பெற்றிருக்கின்றோம் மற்றும் அவர்களை எங்களால் கைவிட்டுவிடவும் முடியாது. ஆகையால் பெரிதும் விரும்பப்படும் இந்த ஆசீர்வாதத்திடமிருந்து நாங்கள் விலகியிருக்கின்றோம்.”

சகோதரர்கள் சில தவறான புரிந்துகொள்ளுதலில் காணப்படுகின்றனர் என்று நாம் புரிந்துகொள்கின்றோம். நமது மாம்சம் பூரணப்படுவதுவரைக்கும் ஒருவேளை காத்திருப்போமானால், நம்மில் எவராலும் நினைவுகூருதல் இராப்போஜனத்தில் பங்கெடுக்க முடியாது; ஏனெனில் இந்த யுகத்தில் சபை, மாம்சத்தில் பூரணத்தினை எதிர்ப்பார்த்திடக்கூடாது; நமது பூரணமானது, நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்போமானால், முதலாம் உயிர்த்தெழுதலில் ஆவிக்குரிய ஜீவிகள் என்றதிலேயே காணப்படும். இப்பொழுது புதிய சுபாவம், புதிய மனம் (அ) சித்தம் எனும் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கின்றோம்; இந்த மண்பாண்டங்களானது ஏறக்குறைய பாவத்தினால் கெடுக்கப்பட்டு, கறைபடுத்தப்பட்டே காணப்படுகின்றது. [R2283 : page 101] ஆனால் உடன்படிக்கையினுடைய நிபந்தனைகளின்கீழ், (நமது சிறந்த பிரயாசங்களுடன்கூட உள்ள) நமது பூரணமான சித்தங்களை, தேவன் நமது முழுமையான பூரணமென்று ஏற்றுக்கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். இப்படியானவர்கள் அனைவரும் அப்போஸ்தலனோடுகூட “நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறுகின்றது” – நாம் “மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கின்றோம்”, முடிந்தமட்டும் நடக்கின்றோம் என்று கூறிடமுடியும்.

அர்ப்பணிப்பு என்பது நமது குடும்பங்களைப் புறக்கணிப்பதையோ, விட்டுவிடுவதையோ குறிப்பதாகாது; தேவனுடைய மற்றும் நம்முடைய எதிராளிகளானவர்கள், நம்மைக் கொல்லுவதற்கோ, சிறைப்பிடித்துச் செல்லுவதற்கோ, சிறையில் அடைப்பதற்கோ, தேவனுடைய வழிநடத்துதலில் அனுமதிக்கப்பட்டு, இப்படியாக வலுக்கட்டாயமாக (குடும்பத்திற்கான) நமது பராமரிப்பினைத் தடுக்கவோ அல்லது நம்மைப் (குடும்பத்திடமிருந்து) பிரிக்கவோ முற்பட்டாலொழிய, மற்றபடி, இதற்கு வாய்ப்பில்லை; ஆனால் இப்படியாகவே இருண்ட யுகங்களில் காரியங்கள் காணப்பட்டன. மற்றபடி நமது குடும்பங்களுக்கு நியாயமான பராமரிப்பினைக் கொடுப்பதே, தேவனுடைய சித்தம் என்றும், நமக்கான கடமை என்றும் தேவன் நமக்குக் கற்பித்துள்ளார்.

கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்பு என்பது தேவனுடைய சித்தத்திற்குள், நம்முடைய சித்தத்தை முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிடுவதையும், நம்முடைய சரீரங்களைப் புதிய சித்தத்திற்குள் முழுமையாய் ஒப்புக்கொடுத்துவிடுவதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இது கர்த்தரின் வார்த்தையினுடைய வழிகாட்டுதலின் கீழ் நம்மால் முடிந்தமட்டும், பாவங்களைக் களைந்துபோடுதலையும், தினந்தோறும் மற்றும் மணிநேரந்தோறும் பரிசுத்த ஆவியினை அதன் கனிகள், மலர்களாகிய சாந்தம், நற்குணம், பரிசுத்தம், இரக்கம் – அன்பு ஆகியவற்றுடன் வளர்த்தி, விருத்தியாக்குதலையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது.

ஆகையால் அருமை சகோதரர்களே விசுவாசத்தில் தேவ ஆட்டுக்குட்டியானது நம்முடைய பாவங்களுக்காக அடிக்கப்பட்டுள்ளது என்பதையும், அவரது பலியினுடைய புண்ணியமானது, தேவனுடைய பார்வையில் நம்மைப் பாவங்களினின்று மூடுகின்றது மற்றும் சுத்திகரிக்கப்பட்டதாகக் கருதப்படச்செய்கின்றது என்பதையும் உணர்ந்துகொள்ளுங்கள்; இப்படியாக விசுவாசித்து, இருதயங்களும், சித்தங்களும் கர்த்தருக்கு முழுமையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிலையில், அவரது பந்தியினிடத்திற்கு வந்து, சாந்தத்துடனும், திடமனதுடனும் அவரது அடையாளங்களில் பங்கெடுங்கள்.

***

நீசான் 14-ஆம் தேதி தொடர்புடையதாக, பல்வேறு கேள்விகள் நம்மிடம் கேட்கப்படுகின்றது; இக்கேள்விகள் அனைத்துமே யூதர்களால் பஸ்கா என்று புரிந்துகொள்ளப்பட்டிருப்பது, பஸ்கா பண்டிகையையே ஒழிய, நாம் ஆசரிக்கின்றதும், 14-ஆம் தேதியில் இடம்பெறுகின்றதுமான ஆட்டுக்குட்டியின் அடிக்கப்படுதல் இல்லை என்பதை அடையாளம் கண்டுகொள்ளுதலில் தவறுவதினாலேயே எழும்புகின்றது. யூதனைப் பொறுத்தவரையில் 14-ஆம் தேதி என்பது, பஸ்காவிற்கான ஆயத்தநாள் மாத்திரமேயாகும் மற்றும் ஆட்டுக்குட்டி புசிக்கப்படுவதும், விசேஷமாக அதன் அடிக்கப்படுதலும், அந்த ஆயத்தத்தின் ஒரு பகுதி மாத்திரமேயாகும். நியாயப்பிரமாணத்தின்படி ஆட்டுக்குட்டியானது நீசான் 14-ஆம் தேதியன்று, மாலையில் – அல்லது சொல்லர்த்தமாகவே சொல்ல வேண்டுமெனில் சாயங்காலங்களுக்கு நடுவில் அடிக்கப்பட வேண்டும். ஆகவே நியாயப்பிரமாணத்தின்படி ஆட்டுக்குட்டியானது 14- ஆம் தேதி, அதாவது 13-ஆம் தேதி மாலை ஆறு மணிக்குமேல் எந்த ஒருவேளையிலாவது அடிக்கப்பட்டு, புசிக்கப்படுகின்றது.

பஸ்காவைப் புசிப்பதற்கு ஆயத்தமாக, பாவமாகிய – புளிப்பு – யாவற்றையும் களைந்துபோடுவதற்கு நம்மில் யாவரும் மறவாமல் இருப்போமாக. “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசீயும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1; 1 யோவான் 1:7) இப்படியாக மீதி ஜீவிதம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையாக இருக்கும்.

புளிப்பானது போலியான உபதேசத்தை மாத்திரமே அடையாளப்படுத்துகின்றது என்று மிகவும் தவறாய் எண்ணிவிடாதிருங்கள் (மத்தேயு 16:6-12); புளிப்பானது பொல்லாப்பான தன்மைகளைக்குறிக்கின்றது என்று அப்போஸ்தலன் அர்த்தம் கொடுப்பதை நினைவில்கொள்ளுங்கள். பொல்லாத தன்மைகள் என்பது (மிகவும் கொடிதான பொல்லாப்பாகிய) திருட்டு, பொய் மற்றும் கொலைப்பாதகம் எனும் பொல்லாப்பை மாத்திரமல்லாமல், பேரளவில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கின்றதானவர்களைக் கூடத் தாக்குவதற்கு இடம்தருகின்றதான பொல்லாப்புகளாகிய “துர்க்குணம், பகைமை உண்டுபண்ணுதல், பொறாமைகள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல்கள், தீமை பேசுதல்கள் மற்றும் மாம்சம், பிசாசின் கிரியைகளையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. அன்பின் ஆவியானது நம்முடைய இருதயங்களுக்குள்ளாகக் கடந்துவந்து, துர்க்குணம் எனும் புளித்தமாவைக் களைந்துபோடுவதாக. 1 கொரிந்தியர் 5:6-8; எபேசியர் 4:31; கொலோசெயர் 3:8; தீத்து 3:3 ஆகிய வசனங்களைப்பார்க்கவும்.

“எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன்.” (1 கொரிந்தியர் 11:28) ஒவ்வொருவனும் தனது சொந்த ஆவிக்குரிய நலனைக் கருதி, இந்தத் தருணத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள நாடிட வேண்டும். ஒவ்வொருவனும் மீண்டுமாக இரத்தத்தினால் சுத்திகரிப்பைப் பெற்றுக்கொண்டு, மரணம்வரையிலும் ஆண்டவருக்கு உண்மையாய்க் காணப்படுவதற்கான தனது அர்ப்பணிப்பைப் புதுப்பித்துக்கொள்வானாக. “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து, ஜெபம்பண்ணுங்கள்” எனும் ஆண்டவருடைய வார்த்தைகளையும்கூட நினைவில்கொள்வோமாக.

“சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.”(1 தெசலோனிக்கேயர் 5:25)