R225 – நம்முடைய பஸ்கா

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R225 (page 6)

நம்முடைய பஸ்கா

OUR PASSOVER

நம்முடைய கடந்த வெளியீட்டில் நாம் குறிப்பிட்டிருந்ததான “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்துவின் மரணத்தை” அதன் ஆண்டு நிறைவு நாளில் ஏப்ரல் 14-ஆம் தேதியில் நாங்கள் ஆசரித்ததானது எப்போதும் காணப்படுகிறதுபோலவே, “ஆசீர்வாதமான காலப்பகுதியாகவே இருந்தது; அது நம் பாவங்களுக்கான நமது கர்த்தருடைய வியாகுலத்தையும், “அவரது இரத்தத்தினாலான மீட்பையும்” நினைவுகூருவதற்கான காலப்பகுதியாகும். நமக்கான ஈடுபலி ஏற்றுக்கொள்ளப்பட்டதை நாம் பார்க்கையில், நமக்கான மன்னிப்பினுடைய முழுமையினை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகையில், நாமும் பவுலோடுகூடப் பின்வருமாறு கூறுகின்றோம்: “தேவன் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதியாயிருப்பவன் யார்? தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். (தேவன் தம்முடைய ஏற்பாட்டினால், நம்மைப் பாவங்களறச் சுத்திகரித்துள்ளார் – இது முழுமையாயும், சரியாயும் செய்யப்படவில்லை என்று யாரால் சொல்லிட முடியும்?); ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர் (நாங்கள் இன்னும் பாவிகள் என்று சொல்லுகிறவன் யார்? அப்படியானவன், யார் எங்களுக்காகக் கடனை அடைத்தார் என்பதை நினைவில்கொள்வானாக கிறிஸ்துவே எங்கள் கடனை அடைத்தார் மற்றும் நிச்சயமாய் அவரது பலியானது, அங்கீகரிக்கப்படத்தக்கதான பலியாகும்)” (ரோமர் 8:31-34).

நம்முடைய நீதிமானாக்கப்படுதலைக் கண்டு, நீதிமானாக்கப்பட்டுள்ள நபர்கள் அனைவருக்கும் பவுல் சொன்னதானவைகளை நாங்கள் ஆழ்ந்து சிந்தித்தோம்; அது என்னவெனில் “சகோதரரே நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு (நாள்தோறுமுள்ள அவரது இரக்கங்கள் மற்றும் விசேஷமாக நமக்கான ஈடுபலியாக இயேசுவைக் கொடுத்ததிலும், இப்படியாய் நம்மை நீதிமானாக்கினதிலுமுள்ள அவரது இரக்கங்களை முன்னிட்டு) உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.” இயேசு தம்முடைய மரணத்திற்கான நினைவுகூருதலுக்கென்று கொடுத்திட்டதான அப்பம் மற்றும் திராட்சரசத்தினுடைய அர்த்தத்தினை நோக்கிப்பார்த்து, அவைகளும் அர்ப்பணிப்பு மற்றும் பலியென்னும் அதே – படிப்பினைகளைக் கற்பிக்கின்றது என்று கண்டோம். முதலாவது நம்முடைய பாவங்களுக்காக – நம்மை நீதிமானாக்கத்தக்கதாக சரீரமானது பிட்கப்பட்டது மற்றும் இரத்தமானது சிந்தப்பட்டது; பின்னர் அப்பமானது (சத்தியம் – “நானே சத்தியம்”), நாம் ஏறெடுக்கும்படிக்குக் கூறப்பட்டுள்ளதான பலிக்கு, நம்மைப் பெலப்படுத்தத்தக்கதாக, நமக்குக் கொடுக்கப்பட்டது. தேவன் முதலாவதாக நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடுகூட, “திவ்விய சுபாவத்திலும்,” இராஜ்யத்திலும், உடன்சுதந்தரர்களாகுவதற்கான மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களைக் கொடுத்து மற்றும் அடுத்ததாக நாம் எவ்வாறு அந்த வாக்குத்தத்தங்களை உரிமைப்பாராட்டிக் கொள்ளலாம், அடையலாம் என்று நம்மிடம் கூறுகின்றார்; அதாவது “கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட வேண்டும்” என்று கூறுகின்றார் (ரோமர் 8:17). இவைகள் அனைத்தும்தான் இயேசு முதலாவது கொடுத்ததான [R226 : page 6] “அப்பம் எனும்” மற்றும் பின்னர் கொடுத்ததான “பாத்திரம் எனும்” அடையாளத்திலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த யுகம் முழுவதும் தம்மிடத்தில் சீஷர்களென வருபவர்கள் அனைவருக்கும், அவர் முதலாவதாக சத்தியத்தினுடைய போஷாக்கையும், ஆயத்தப்படுத்துதலையும் கொடுக்கின்றார் மற்றும் அவர்கள் அதைப் புசித்து, தங்களுக்கான பரம அழைப்பினுடைய பரிசினைப் புரிந்து, உணர்ந்துகொண்ட பின்னர், அவர் அவர்களுக்கு மரணத்தின் பாத்திரத்தினை அருளுகின்றார். திராட்ரசமானது இரண்டு விஷயங்களுக்கு அடையாளமாய் இருக்கின்றது; முதலாவதாக அதன் தோற்றத்தில், அது இரத்தத்தைப்போன்று காணப்படுகின்றது மற்றும் “திராட்சப்பழங்களின் இரத்தம்” என்று அழைக்கப்படுகின்றது மற்றும் இதன் காரணமாய், அது மரணத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; இரண்டாவதாக அது சந்தோஷப்படுத்துகிற, புத்துணர்வு கொடுக்கின்ற மற்றும் உற்சாகப்படுத்துகின்ற ஆவியையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

நாம் பரலோக உணவினால் வெளிச்ச மூட்டப்பட்டு, பெலப்படுத்தப்பட்ட பிற்பாடு, இயேசு நம் ஒவ்வொருவரிடத்திலும் பாத்திரத்தைக் கொடுத்து கூறுவதாவது: “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;” “என்னுடைய மரணத்திற்குள்ளாகப் பானம் பண்ணுங்கள் – உங்கள் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றி வாருங்கள் மற்றும் அதே வேளையில் நீங்கள் என்னுடைய ஆவியையும் பானம் பண்ணுகின்றவர்களாய் இருந்து, உலகத்தினால் கொடுக்க முடியாததும், எடுத்துப்போட முடியாததுமான சந்தோஷத்தையும், புத்துணர்வையும் பெற்றுக்கொள்வீர்கள் மற்றும் இறுதியில் என்னோடுகூட அனைத்தையும் சுதந்தரித்துக்கொள்வீர்கள்.”

தேவனுடைய வாக்குத்தத்தங்களினால் நாம் இவ்விதமாய்ப் போஷிக்கப்பட்டதையும், பெலப்படுத்தப்பட்டதையும், அவரது பாத்திரத்தில் பானம் பண்ணுவதற்கும், அவரோடுகூட “நாம் ஆளுகை செய்யத்தக்கதாக” நாம் அவரோடுகூட மரிப்பதற்கும் ஏற்கெனவே உடன்படிக்கைப் பண்ணியிருக்கின்றோம் என்பதையும் நாங்கள் நினைவுகூர்ந்தோம்.

இயேசுவினுடைய சிங்காசனம் தொடர்புடைய விஷயத்தில், தங்களுக்கான ஸ்தானங்கள் குறித்து இயேசுவிடம் இரண்டு சீஷர்கள் வேண்டிக்கொண்டதையும், அவர்களுக்கு அவர் பின்வருமாறு பதிலளித்ததையும் நாங்கள் நினைவுகூர்ந்தோம்; அதென்னவெனில், “நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. (“பிதாவே இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்” என்று வேண்டிக்கொண்டதான மரணம் என்ற) நான் குடிக்கும் – பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், (தண்ணீரை அடையாளமாய்க் கொண்டுள்ள – நான் முழுக வேண்டிய ஒரு ஸ்நானம் உண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்)” நான் பெறும் மரண – ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள் மற்றும் அவரோ “மெய்யாகவே கூடும்” என்றார். ஆகவே அவருடைய சிங்காசனத்தில் அவரோடுகூட உட்காருவோம் என்ற நம்பிக்கையில் நாம் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கின்றோம் மற்றும் என்னுடைய பாத்திரத்தில் உங்களால் குடிக்கக்கூடுமா? என்ற அவரது வார்த்தைகளானது எவ்வளவாய் நமக்குப் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. மகிமையிலும், பாடுகளிலும் நாம் பங்கடைவதற்கு விரும்புகின்றோமா? என்று நாம் நம்மையே கேட்டுக்கொண்டோம். பின்னர் நாம் கூறினதாவது: ‘ஆண்டவரே, உம்முடைய வார்த்தைகள் மூலமாக, எங்களுக்கு “ஏற்றசமயத்தில் சகாயஞ்செய்யும் கிருபை” கொடுக்கப்படும் என்றும், “உம்முடைய கிருபை எங்களுக்குப் போதுமானது” என்றும் நாங்கள் அறிந்திருக்கின்றோம். எங்களுடைய அனைத்தையும் நாங்கள் உம்மிடத்தில் கொடுத்துவிட்டோம் – உம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும், செய்கையையும் எங்களில் உண்டுபண்ணியருளும்.” இப்படியாய் எங்களது பலவீனத்திலே உம் பலம் பூரணமாய் விளங்கினபடியால் – எங்களால் கூடும். ஆமென்.’

நாங்கள் பெற்றுக்கொண்டதான அநேக கடிதங்களானது, இந்நிகழ்வு மிகவும் பரவலாய் இவ்வழியில் அங்கும், இங்குமாகக் காணப்படுகின்ற இரண்டு (அ) மூன்று பேர்கள் மத்தியில் ஆசரிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டுகின்றது. சுமார் இருபது இடங்களில் இது ஆசரிக்கப்பட்டுள்ளதென நாம் எண்ணுகின்றோம். எழுதியுள்ளவர்கள் அனைவருமே, இந்நிகழ்வை, வேறு நாட்களில் கொண்டாடுவதற்குப்பதிலாக, அதன் ஆண்டு நிறைவு நாளில் ஆசரிப்பது பொருத்தமானதாகவும், பயப்பக்திக்குரியதாகவும் இருந்ததெனத் தெரிவித்துள்ளனர்.

அறிவிக்கப்பட்டிருந்த தேதியைக் குறித்து ஒன்றிரண்டு சகோதரர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்; அதாவது ஆண்டுக்குறிப்பேடுபடி (almanac/calendar) அந்நாளானது ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப்பதிலாக, 12-ஆம் தேதி வருமெனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு நாம் பதிலளிப்பது என்னவெனில், பெரும்பான்மையான ஆண்டுக்குறிப்பேடுகளானது (almanac) வானசாஸ்திரக் கணக்கிடுதலின்படி ஆயத்தம் பண்ணப்படுகின்றன மற்றும் இவை கண்களால் பார்த்த சாட்சியின் அடிப்படையிலான யூத முறைமைகளுக்கு அபூர்வமாக இசைந்து வருகின்றது. சில ஆண்டுக்குறிப்பேடுகளானது, யூத ஆண்டுக்குறிப்பேடுகளை வெளியிடுகின்றன மற்றும் இவைகளைப் பயன்படுத்தியே, யூத கணக்கீட்டின்படி முதலாம் மாதத்தின் 14- ஆம் தேதி எப்போது வருமென்று உறுதிச் செய்தோம்.

நியாயப்பிரமாணத்தை (அ) யூத ஜாதியை அடையாளப்படுத்துகின்றதான சந்திரனானது, இயேசு உயிரோடு இருக்கையில் அதன் முழுமை நிலையை அடைந்தது, ஆனால் அவர் கையளித்து, மரித்தபோது, அது தேய்வுற ஆரம்பித்தது. ஏப்ரல் 14-ஆம் தேதியில் சந்திரன் பௌர்ணமி நிலவாய் இருந்தது மற்றும் அது தேய்வுற ஆரம்பித்தது; இக்காரியமானது யூத ஆண்டுக்குறிப்பேட்டிற்கு இசைவாகவே காணப்படுகின்றது மற்றும் இதனால் அந்நாளில் ஆசரித்தோம்.

ஒரு சகோதரி தனது மறுப்பைத் தெரிவிக்கும் வண்ணமாக, பஸ்காவைக் கைக்கொள்ளும் விஷயத்திற்கும், அனைத்து விஷயத்திற்கும் ஏன் நியாயப் பிரமாணத்தினையே பார்த்திடலாமே? என்று [R226 : page 7] கேட்டார்கள். நம்முடைய சகோதரி அவசரப்பட்டுவிட்டார்கள்; நாம் நியாயப்பிரமாணத்தினால் நிறுவப்பட்டதான பஸ்காவை ஆசரிப்பதற்குக் கூறவில்லை, மாறாக இதற்குப்பதிலாக நிறுவப்பட்டதான “கர்த்தருடைய இராப்போஜனத்தையே” ஆசரிப்பதற்குக் கூறினோம். “விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்” (ரோமர் 10:4) என்று விசுவாசிக்கின்ற நாம், இதை ஒரு நியாயப்பிரமாணம் என்றும் கூறவில்லை (ரோமர் 10:4; 7:6). ஆனால் “இதைப் புசித்து, பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” என்றிருக்க, யார்தான் நமக்கான ஆட்டுக்குட்டியினுடைய மரணத்தினை, அதன் ஆண்டு நிறைவு நாளில் ஆசரிக்கமாட்டோம் என்று சொல்லுவார்கள்.