R2291 – நினைவுகூருதலின் ஆசரிப்பு

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2291 (page 117)

நினைவுகூருதலின் ஆசரிப்பு

THE CELEBRATION OF THE MEMORIAL

அலிகெனியில் (Allegheny) சமீபத்தில் ஆசரிக்கப்பட்டதான நினைவு கூருதலானது நாங்கள் இதுவரை அனுபவித்திராத அளவுக்கு மிகவும் தாக்கம் நிறைந்ததாகவும், பயபக்தியாயும் காணப்பட்டது. கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்பட்டது; இந்த ஒரு தேதிகளில் 1892-ஆம் வருடம் முதல் பொது மாநாடு நடத்துவதைத் தவிர்த்தது முதற்கொண்டு, இவ்வருஷமே அதிகமான எண்ணிக்கையானவர்கள் கலந்துகொண்டனர். சுமார் 200 பேர்கள் கலந்துகொண்டனர்; இந்த ஒரு தருணத்தில் ஈடுபலியில் விசுவாசம்கொண்டிருந்து, கர்த்தருக்கு முழுமையான அர்ப்பணிப்பை அறிக்கைப்பண்ணின விசுவாசிகளுக்குத் தவிர வேறு எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அநேக சகோதரர்களால் அதிகப்படியான வேலை நேரத்தின் காரணமாகவும், தங்கள் விடுப்புக் காலத்தின்போது பணியில் யாரையாவது அமர்த்துவதற்கு ஆட்கள் கிடைக்காத காரணமாகவும், அலிகெனியில் வந்து கலந்துகொள்ள முடியாமல்போயிற்று. மாலை 7:30 மணிக்கு நாங்கள் கூடினோம்; எனினும் இந்த நேரத்திற்கு வரமுடியாதவர்களுக்காக 8 மணிவரைக்கும் ஆராதனையை நாங்கள் தாமதித்தோம். இதற்கிடையில் சபையார் அனைவரும் சங்கீதங்களும், ஸ்தோத்திரப் பாடல்களும், ஆவிக்குரிய பாடல்களும் பாடி கர்த்தரைத் தொழுதுகொண்டிருந்தோம் மற்றும் நம்மை அன்புகூர்ந்து, நம்மை தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வாங்கினவருக்காக எங்கள் இருதயங்களில் இசை இசைத்துக்கொண்டிருந்தோம்.

நாங்கள் துதிபாடலின், 15-ஆம் பாடலைப் பாடினோம்.

பின்னர் கூடியிருக்கிற எங்களுக்காகவும், இதே நோக்கத்திற்காக எங்கும் கூடியிருக்கும் கர்த்தருடைய ஜனங்கள் அனைவருக்காகவும் தெய்வீக ஆசீர்வாதங்களுக்கு வேண்டி, நாங்கள் ஜெபம் ஏறெடுத்தோம்; தனிமையில் ஆசரிப்பவர்களையும் நாங்கள் ஜெபத்தில் மறந்துவிடவில்லை; எங்களுக்கு முன்பாகக் காணப்படும் “இராப்போஜனத்தினால்” அடையாளப்படுத்தப்படும் உண்மைகளை உணர்ந்துகொள்ளத்தக்கதாக தெய்வீக ஆசீர்வாதத்திற்காகவும், ஞானத்திற்காகவும், கிருபைக்காகவும் வேண்டிக்கொண்டோம். பின்னர் எங்கள் இருதயங்களும், குரல்களும் ஒன்றுசேர துதிப்பாடலின் 290-ஆம் பாடலைப் பாடினோம்.

இதைத் தொடர்ந்து துதிப்பாடலின், 123-ஆம் பாடலைப் பாடினோம்.

பின்னர் பழைய மற்றும் பரிட்சயமான, பக்திக்குரிய, இருதயத்தை உற்சாகப்படுத்துகிற துதிப்பாடலின், 276-ஆம் பாடலைப் பாடினோம்.

எட்டு மணிக்கு நமது கர்த்தர் தம்மை ஜீவ அப்பமாக விவரிக்கும், அவரது வார்த்தைகளை – யோவான் 6:48-58 வரையிலான வசனங்களை வாசித்தோம்.

“ஜீவ அப்பம் நானே. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம் பண்ணினார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. என் மாம்சத்தைப் (தொடர்ந்து) புசித்து, என் இரத்தத்தைப் (தொடர்ந்து) பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினது போலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் (தொடர்ந்து) புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.” (யோவான் 6:48-58)

இதைக் குறித்து விவரமாய்ப் பார்க்கையில், வனாந்தரத்தின் மன்னாவானது, நித்திய ஜீவனை அடையத்தக்கதாக நாம் புசிக்க வேண்டிய நம்முடைய ஆத்துமாக்களுக்கான உண்மையான மன்னாவாகிய நமது கர்த்தர் இயேசுவைச் சித்தரிப்பதற்கான நிழலாக மாத்திரமே காணப்பட்டது என்பதை நாங்கள் பார்த்தோம். நாம் யூதர்களுக்காக அனுதாபம் கொண்டோம் மற்றும் அவர்களால் அவர்களது மாம்சமான நிலையிலும், அப்போது அருளப்படாத பரிசுத்த ஆவியினுடைய வெளிச்சமூட்டுதலில்லாமலும், நமது எஜமானுடைய வார்த்தைகளில் காணப்பட்டதான தேவனுடைய ஆழமான காரியங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் காணப்பட்டிருப்பார்கள் என்று உணர்ந்துகொள்ள முடிகின்றது. பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள்கூட இன்று அவரது வார்த்தைகளினுடைய அர்த்தத்தை தெளிவற்றே புரிந்துகொண்டிருக்கின்றனர். நமது கர்த்தருடைய மாம்சம் எப்படி, அதைப் புசிக்கின்றவர்களுக்கு ஜீவ அப்பமாக இருக்கின்றது என்று நாங்கள் ஆராய்ந்து பார்த்தோம். “அப்பமே ஜீவிதத்திற்கான ஆதாரமாக” மனுக்குலம் அனைத்திற்கும் காணப்படுகின்றது மற்றும் இந்தத் தற்கால ஜீவியம், இதன்மேலேயே முக்கியமாய்ச் சார்ந்துள்ளது; ஆகையால் நமது கர்த்தரையும் அவருக்குள்ளான கிருபைகளையும், சத்துவங்களையும் புதிய ஜீவனுக்கான ஆதாரமாய்க் காணப்படும் அப்பத்திற்கு ஒப்பிடும் அடையாளமான வார்த்தைப் பொருத்தமானதாகவே காணப்படுகின்றது என்பதை நாங்கள் பார்த்தோம்.

நமது கர்த்தருடைய மாம்சத்திற்கான முக்கியத்துவத்தையும், அது பாவமில்லாதது என்றும் அவர் “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், – பாவிகளுக்கு விலகினவருமானவர்” என்றும் நாங்கள் கவனித்தோம்.

இது அவசியம் என்றும், காரணம் நமது தகப்பனாகிய ஆதாம் இதேபோன்று பாவமில்லா மாம்ச நிலையில் சிருஷ்டிக்கப்பட்டவராய்க் காணப்பட்டதினாலும், தெய்வீகப் பிரமாணத்தை மீறின காரணத்தினால், பாவியானார் மற்றும் அவரது மாம்சம் மரணம் எனும் தெய்வீகத் தீர்ப்பின்கீழ் ஒழுக்க ரீதியிலும், சரீர ரீதியிலும் சீர்க்கெட்டுப்போய்விட்டது என்றும் நாங்கள் பார்த்தோம். மனிதனாகிய கிறிஸ்து இயேசுவின் அவசியத்தையும் நாங்கள் பார்த்தோம்; இவரது பாவமில்லா மாம்சமே பாவத்தின் காரணமாக அசுசிப்பட்ட ஆதாம் மற்றும் அவரது மாம்சத்திற்குப்பதிலாக சரிநிகர் சமான விலையாக, ஈடுபலி விலைக்கிரயமென ஏற்றுக்கொள்ளப்பட முடியும். இந்த நோக்கத்திற்காகவே நமது கர்த்தர் இயேசு உயர் சுபாவத்தின் மற்றும் நிலையின் கனங்களையும், மகிமைகளையும் துறந்து, “தேவனுடைய கிருபையால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி பார்க்கும்படிக்கு . . . அவர் மாம்சமாக்கப்பட்டார்” என்ற வேதவாக்கியத்தினுடைய விளக்கத்தினை நாங்கள் பார்த்தோம்.

நம்முடைய மீட்பருடைய வார்த்தைகளையே நாங்கள் கவனித்தோம்; அதென்னவெனில்: “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே.” (யோவான் 6:51) தகப்பனாகிய ஆதாமின் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதான மாம்சத்திற்காக, நமது கர்த்தருடைய கறைதிறையற்ற மாம்சம் சரிநிகர்சமான விலையாகக் கொடுக்கப்பட்டதானது, [R2291 : page 118] தகப்பனாகிய ஆதாமின் மீட்பிற்காக மாத்திரமல்லாமல், அவருடைய மீறுதலின்போது அவருடைய அரைக்குள்ளாகக் காணப்பட்டதான அவரது சந்ததியார் அனைவரின் மீட்பிற்காகக் கொடுக்கப்பட்ட விலையாகக் காணப்படுகின்றது. நமது மீட்பருடைய கறைதிறையற்ற மாம்சத்திற்காக நாம் தேவனை ஸ்தோத்திரித்தோம் மற்றும் அவரது மாம்சமானது அனைவருக்காகவும் பிட்கப்பட்டுள்ளபோதிலும், அந்தப் பிட்கப்பட்ட சரீரம் மற்றும் சிந்தப்பட்ட இரத்தம் நிறைவேற்றிட்டதான மாபெரும் பாவநிவாரண வேலையில் ஒவ்வொருவனும் தனக்கான பங்கினை தனக்காய் ஏற்றுக் கொள்வது, ஒவ்வொருவனிடமும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது என்ற உண்மையையும் நாங்கள் கவனித்தோம். இந்தப் பிட்கப்பட்ட சரீரத்தில் பங்கெடுக்காமல் எவனும் நித்தியமான ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் பார்த்தோம். இது பல்வேறு வலியுறுத்தல்களுக்கு முற்றிலும் எதிர்மாறான கருத்தை நமக்குக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது; அதாவது கிறிஸ்துவைப்பற்றியும், பாவங்களுக்கான அவரது பலிப் பற்றியுமான அறிவு, இரட்சிப்பிற்கு அவசியமற்றது என்ற கருத்திற்கு நேர் எதிரான நிலையை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; இது கர்த்தருடைய மாம்சத்தைப் புசிப்பது மற்றும் அவரது இரத்தத்தில் பங்கெடுப்பது மூலம் மாத்திரமே எவர் ஒருவராலும் நித்திய ஜீவனை அடையமுடியும் எனும் கருத்தைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது.

மாம்சத்தைப் புசிப்பது என்பதன் அர்த்தமென்ன என்பதைப்பற்றி நாங்கள் பார்த்தோம்; சொல்லர்த்தமான அப்பத்தைப் புசித்தல் என்பது இரத்தத்தின் மூலம் உறுப்புகளுக்குள் அவை ஒன்றிப்போய் விடுவதையும், எடுத்துக்கொள்ளப்படுவதையும் குறிப்பதாய் இருப்பதுபோல, நாம் கிறிஸ்துவினுடைய மாம்சத்தைப் புசிப்பது என்பது (1) அவர் பாவமில்லாதவர் மற்றும் நமக்கான பொருத்தமான பலியாக இருக்கின்றார் என்ற உண்மையினைக் குறித்த நம்முடைய உணர்ந்துகொள்ளுதலைக் குறிக்கின்றது; மற்றும் (2) அவர் தம்மையே அனைவருக்குமான ஈடுபலியாக ஒப்புக்கொடுத்தார் என்ற உண்மையின் மீதான நமது விசுவாசத்தைக் குறிக்கின்றது; மற்றும் (3) இந்த அவருடைய பலியானது, பரமபிதா அங்கீகரிக்கத்தக்கதாகக் காணப்பட்டதற்கு ஆதாரம் – மரித்தோரிலிருந்தான நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலிலும், அவர் வாயிலாக விசுவாசிகளைப் பிதா ஏற்றுக்கொள்ளுதலிலும், பெந்தெகொஸ்தே நாள் துவங்கி, இன்றுவரையிலுமாக தொடர்ந்துகொண்டிருக்கும் புத்திர சுவிகாரத்தின் பரிசுத்த ஆவியைப் பிதா அருளினதிலும் விளங்குகின்றது என்ற நம்முடைய நம்பிக்கையையும் குறிக்கின்றது; மற்றும் (4) நித்திய ஜீவனுக்கான நம்முடைய வாஞ்சையையும், கிறிஸ்துவுக்குள்ளாகக் காணப்பட்டதான தூய்மைக்கான நமது வாஞ்சையையும் குறிக்கின்றது; இன்னுமாகப் பாவத்திலிருந்து நம்முடைய விலகுதலையும், முதலாம் ஆதாமுடனான நம்முடைய உறவைத் துறத்தலையும், உலகத்தின் ஜீவனுக்காகக் கொடுக்கப்பட்டதான இரண்டாம் ஆதாமினுடைய மாம்சத்தின் – அவரது பலியின் – அடிப்படையில் இரண்டாம் ஆதாம் மூலமான ஜீவனுக்கான நம்பிக்கையை நாம் ஏற்றுக்கொள்வதையும் குறிக்கின்றது.

அடுத்ததாக நாங்கள் 1 கொரிந்தியர் 11:23-26 வரையிலான வசனங்கள் குறித்துப் பார்த்திட்டோம். மேலும் கர்த்தருடைய நினைவுகூருதல் இராப்போஜனமானது, பஸ்கா இராப்போஜனத்திற்குப் பின் நடந்தது மற்றும் நினைவுகூருதல் இராப்போஜனமானது புதியதும், பஸ்காவின் இடத்தில் இடம்பெறுவதற்கெனத் திட்டமிடப்பட்டதுமானதாய் இருக்கின்றது என்ற உண்மைகளையும் நாங்கள் கவனித்தோம். எகிப்தின் அடிமைத்தனத்தினின்றுள்ள மாம்சீக இஸ்ரயேலர்களின் விடுதலையையும், அவர்கள் எகிப்தை விட்டுப்புறப்படுவதற்கு முந்தின இரவில் சம்பவித்த, அவர்களது முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதலையும் நாங்கள் பார்த்து, அவைகளின் நிஜங்களைக் கவனித்தோம்; அதாவது எகிப்து உலகத்திற்கான நிழலாய்க் காணப்படுகின்றது என்றும், அதன் இராஜாவாகிய பார்வோன், இவ்வுலகத்தின் அதிபதிக்கு நிழலாய் இருக்கின்றார் என்றும், எகிப்தின் அடிமைத்தனமானது, பாவத்தினுடைய அடிமைத்தனத்திற்கான நிழலாக இருக்கின்றது என்றும், மோசேயின் தலைமையின் கீழான அனைவருடைய விடுதலையானது, அடுத்த யுகத்தில் தேவனை அன்புகூருகின்ற அனைவருக்கும், அவருக்குப் பலி ஏறெடுக்க விரும்புகின்றவர்களுக்கும், நிஜமான மோசேயின் (கிறிஸ்துவின்) தலைமையின் கீழான இறுதி விடுதலைக்கான நிழலாய் இருக்கின்றது என்றும், சாத்தான் மற்றும் அவனது பின்னடியார்களின் இறுதி வீழ்ச்சிக்கு, பார்வோன் மற்றும் அவனது சேனைகளின் அழிவானது நிழலாய் இருக்கின்றது என்றும் பார்த்தோம்.

இக்கருத்துக்கள் அனைத்திற்கும் இசைவாகவும் மற்றும் இக்கருத்துக்களின் ஒரு பாகமாகவும் ஜனங்கள் அனைவரும் அடிமைத்தனத்தினின்று விடுவிக்கப்படுவதற்கு முந்தின இரவில் நிகழ்ந்ததான இஸ்ரயேலருடைய முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதலானது (அ) விடுதலையானது, (நீதியை அன்புகூர்ந்து, அதை நாடுகின்ற அனைவரின் விடுதலைக்காக ஆயிரவருட யுகம் மற்றும் அவரது இராஜ்யத்தின் முழுமையான அறிமுகத்திற்கு முந்தின “இரவில்”) இப்பொழுது தேவன் எப்படி ஒரு குறிப்பிட்ட வகுப்பாரைத் தப்புவிக்கப்பண்ணுகின்றார், கடந்துபோகப்பண்ணுகின்றார், ஜீவன் அளிக்கின்றார் என்பதற்கு நிழலாக இருக்கின்றது என்று நாங்கள் பார்த்தோம். தேவனுடைய ஜனங்கள் இவ்வுலகத்திலும், இவ்வுலகத்தினுடைய அதிபதியின் பொல்லாத செல்வாக்கின்கீழும் இன்னமும் காணப்படுகையில், இந்த இரவில் தப்புவிக்கப்படுகின்ற, விடுவிக்கப்படுகின்ற, கடந்துபோகப்படுகின்றதான வகுப்பார் முதற்பேறானவர்களாக – சபையாக மாத்திரமே காணப்படுகின்றனர்; “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வ சங்கமாகிய சபையாக” மாத்திரமே காணப்படுகின்றனர். (எபிரெயர் 12:23)

முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதலுக்கான நிழலில், பழுதற்ற ஆட்டுக்குட்டி அடிக்கப்படுவதும், அதன் இரத்தம் அவர்களுடைய வீட்டின் நிலைக்கால்களில் தெளிக்கப்படுவதும், அதன் மாம்சம், கசப்பான கீரைகளுடன் புசிக்கப்படுவதும் அவசியமாய் இருந்ததை நாங்கள் கவனித்தோம். இந்தப் பஸ்கா ஆட்டுக்குட்டியானது “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டிக்கான” நிழலாய் இருக்கின்றது என்றும், நிழலான இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் நிழலான ஆட்டுக்குட்டியைப் புசித்ததுபோன்று, நிஜமான முதற்பேறானவர்களாகிய தெரிந்தெடுக்கப்பட்ட சபையும் நம்முடைய ஆட்டுக்குட்டியினுடைய மாம்சத்தைப் புசிக்க வேண்டும் என்றும் நாங்கள் பார்த்தோம். நம்முடைய இருதயங்களும் துர்மனசாட்சி அனைத்திடமிருந்தும், பாவத்துடனான தவறான தொடர்பு அனைத்திடமிருந்தும் நீங்க, விலையேறப்பெற்ற இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், “கசப்பான கீரைகள்” என்பது உலகத்தின் ஜீவனுக்காகக் கொடுக்கப்பட்டதான நமது கர்த்தருடைய மாம்சத்தை நாம் புசிப்பதற்கு அவசியமான [R2292 : page 118] சோதனைகளை, எதிர்ப்புகளை, துன்புறுத்தல்களை, சிரமங்களை, மனித சித்தத்தின் சிலுவைகளைக் குறிக்கின்றதென்றும் நாங்கள் பார்த்தோம்.

தம்முடைய மாம்சத்திற்கும், இரத்தத்திற்கும் அடையாளமாக அப்பத்தையும், திராட்சப்பழரசத்தையும் கொடுத்துள்ள விஷயத்தில், நாம் இரண்டு காரியங்களை அடையாளங்கண்டுகொள்ள நமது கர்த்தர் விரும்பியுள்ளார் என்று நாங்கள் பார்த்தோம்; அவை: (1) தாம்தான் நிஜமான ஆட்டுக்குட்டி மற்றும் சுவிசேஷயுக சபையைக் கடந்துபோகுதலும் (அ) தப்புவிக்கப்படுதலும் மற்றும் அவள் மரணத்திலிருந்து கிறிஸ்துவுக்குள்ளான புதிய ஜீவனுக்குள் கொண்டுவரப்படுதலும், அவள் அவரோடுகூட முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைதலுமானவைகள் நிஜமான பஸ்காவாய் இருக்கின்றது. (2) புளிப்பில்லாத அப்பமும், திராட்சப்பழரசமும் உண்மையான ஆட்டுக்குட்டியினுடைய சரீரத்தையும், இரத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றதாகவும், நிழலான பஸ்கா ஆட்டுக்குட்டியினுடைய இடத்தை எடுத்துக்கொள்கின்றதாகவும் இருக்கின்றது. அப்பமும், திராட்சப்பழரசமும் ஆட்டுக்குட்டியின் நிஜமாக இராமல், மாறாக நிஜமான ஆட்டுக்குட்டிக்கான அடையாளங்களாகவே காணப்படுகின்றது. ஆகையால் நமது கர்த்தரை விசுவாசத்தினால் நாம் புசிக்கும், நாம் பங்கெடுக்கும் காரியத்தோடும் மற்றும் இதன் அர்த்தத்தோடும், நாம் (சொல்லர்த்தமான) புளிப்பில்லாத அப்பத்திலும், திராட்சப்பழரசத்திலும் பங்கெடுக்கும் காரியத்தினை ஒப்பிடுகையில், அப்பம் மற்றும் திராட்சப்பழ ரசத்தில் பங்கெடுக்கும் காரியமானது குறைவான முக்கியத்துவம் உடைய காரியமாகவே காணப்படுகின்றது என்று நாங்கள் பார்த்தோம்; கர்த்தர் கிருபையுள்ளவர் என்று ருசித்துப்பார்த்திடாத அநேகர், இந்த அடையாளச் சின்னங்களில் பங்கெடுத்துள்ளனர் என்றும், கர்த்தர் கிருபையுள்ளவர் என்றும் ருசிப்பார்த்துள்ள அநேகர், தங்கள் சிலாக்கியத்தினைக் காணாதவர்களாகவும், அவரது பிட்கப்பட்ட சரீரத்திற்கும், சிந்தப்பட்ட இரத்தத்திற்கும் அடையாளமான சின்னங்களில் பங்கெடுக்கும் வாய்ப்பினைப் பெற்றிராதவர்களாகவும் காணப்படுகின்றனர் என்று நாங்கள் பார்த்தோம். எங்களுடைய இருதயங்களில் உண்மையான விருந்தையும் மற்றும் நாம் பயன்படுத்தும்படிக்குக் கர்த்தர் நமக்குக் கற்பித்ததும், அருளியுள்ளதுமான அடையாளச் சின்னங்களின் விருந்தையும் இரண்டையும் – பெற்றிருப்பதற்கான நம்முடைய சிலாக்கியத்தின் நிமித்தம் நாங்கள் களிகூர்ந்தோம்.

[R2292 : page 119]
அப்பம் புளிப்பில்லாததாய் இருந்தது என்றும், புளிப்பானது நிழலில் பாவத்தைக் குறிக்கின்றது என்றும் நாங்கள் பார்த்தோம். அப்பமானது நாம் விசுவாசத்தினால் புசிக்கின்றதான நமது கர்த்தருடைய மாம்சத்தை மாத்திரம் அடையாளப்படுத்தாமல், அதை நாம் புசித்தவர்களாக, அவருடைய ஆவியைப் பெற்றவர்களாக, முதற்பேறானவர்களின் அவரது சபையென நாம் புளிப்பில்லாத ஒரே அப்பத்தில் ஒன்றாய் அங்கத்தினர்களெனக் கருதப்படுகின்றோம் என்ற அப்போஸ்தலனுடைய விளக்கத்தையும் நாங்கள் கவனித்தோம். ஆகையால் எப்படி ஒரு சிறு புளிப்பானது, முழு மாவையும் புளிக்க வைத்திடுகின்றதோ, அப்படியே ஒரு சிறு பாவமும்கூட நம் மத்தியில், மாபெரும் புளிப்புகளை உண்டாக்கிவிடும் என்று நாம் நினைவில் கொள்ளும்படிக்கு அப்போஸ்தலன் நமக்குப் புத்திமதி கூறுகின்றார். ஆகையால் “நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. ஆதலால் பழைய புளித்தமாவோடே (மிக மோசமான துன்மார்க்கத்தோடே) அல்ல, (துன்மார்க்கமாயும், இரகசியமாயும் இருக்கிறதுமான) துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்” என்று அப்போஸ்தலன் புத்திமதி கூறுகின்றார். (1 கொரிந்தியர் 5:6-8)

இந்தக் கருத்தைத் தொடர்ந்து, வளர்ச்சியடைந்துள்ள கிறிஸ்தவர்களைப் (தங்கள் இருதயங்களிலிருந்து பாவங்கள் சுத்திகரிக்கப்பட்டு, தங்களை முழுமையாய்க் கர்த்தருக்கு அர்ப்பணித்தவர்களை) புளிப்பில்லாத ஓர் அப்பத்தோடு ஒப்பிட்டவராக, அப்போஸ்தலன், இவர்கள் அனைவரும் (கிறிஸ்துவுடன்) ஓர் அப்பத்தில் அங்கத்தினர்களாக (அ) பாகங்களாக – மற்றவர்களுக்கு ஜீவனளிக்கும் வல்லமையாகவும், ஆற்றலாகவும் தாங்கள் ஆகத்தக்கதாக, பிட்கும்படிக்கு உறுதி பூண்டிருப்பவர்களாக இருக்கின்றனர் என்று தெரிவிக்கின்றார்; “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்ளுதல் அல்லவா (சொல்லர்த்தமான) அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். (1 கொரிந்தியர் 10:16,17; திருவிவிலியம்) இப்படியாக இரட்டைக் காரியங்களைக் காண்கின்றோம்; அவை: (1) நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கின்றார்; ஆதலால் பாவத்தை விட்டொழிக்க நாடி மற்றும் நமது மீட்பருடைய புண்ணியத்தினைப் புசித்துப் பண்டிகையை ஆசரிக்கின்றோம். (2) அவருடனான நம்முடைய ஐக்கியம் மற்றும் எதிர்க்காலத்தில் வரும் மகிமையில் பங்கடையத்தக்கதாக, இந்தத் தற்காலத்தின் பாடுகளில் பங்கெடுப்பதற்கான அர்ப்பணிப்புமாகும். கிறிஸ்துவினுடைய சரீரத்தில் இந்த ஒரு வளர்ச்சி நிலையை எட்டியுள்ளவர்கள் அனைவரும், மற்றவருடைய நலனுக்காக, அவரோடுகூடத் தாங்கள் பிட்கப்படும்படிக்கு உறுதிபூண்டவர்களாகக் காணப்படுவார்கள் என்று நாம் பார்க்கின்றோம்.

இப்படியானவர்கள் அனைவரும் தங்களுடைய ஆண்டவருடைய ஆவியினால் – பிதாவினிடத்திலும், பிதாவின் சாயலை உடையவர்களிடத்திலும் மற்றும் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டும் ஆவியினால் இயக்கப்படுபவர்களாய் இருப்பார்கள். இவர்களிடத்திலேயே அப்போஸ்தலன்: “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” என்று கூறுகின்றார். (1 யோவான் 3:16) மற்றவர்களுடைய நலனுக்காகப் பிட்கப்படுவதற்கான இந்த விருப்பமும், வாஞ்சையும், நமது கர்த்தருடைய பிட்கப்பட்ட சரீரத்தை நாம் முதலாவது புசித்து, அவரது சிந்தையை/ஆவியை, மனதை, பண்பை, அன்பைப் பெற்றுக்கொண்டதன் விளைவாக உண்டானதேயாகும். இப்படிப்பட்டவர்களே, “நாம் அவரோடுகூடப் பாடுபட்டால், அவரோடுகூட ஆளுகையும் செய்வோம்” என்றும், “அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்தும் இருப்போம்” என்றுமுள்ள வாக்குத்தத்தங்களைப் பெற்றிருக்கின்றனர்.

இப்படியாக அப்பத்தினுடைய அர்த்தத்தைப்பார்த்து, அதை எங்கள் இருதயத்தில் புசித்தவர்களாக இருந்து மற்றும் மற்றவர்களைப் போஷிப்பதற்காகவும், ஆசீர்வதிப்பதற்காகவும் கர்த்தரோடுகூடப் பிட்கப்படும்படிக்கு மீண்டுமாக உறுதிபூண்டவர்களாக இருந்து, வேதவாக்கியத்தினுடைய மாதிரியைப் பின்பற்றினவர்களாக, நித்திய ஜீவனளிக்கும் அப்பத்திற்காக தேவனை ஸ்தோத்திரித்தோம். இதைத் தொடர்ந்து கொஞ்சம் நேரம் அமைதி காக்கப்பட்டது; இவ்வேளையில் அப்பமானது பங்கெடுப்பவர்களிடத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.

அடுத்து நாங்கள் திராட்சப்பழரசத்தைக் குறித்துப் பார்த்தோம் மற்றும் அது மரணத்தை அடையாளப்படுத்துகின்றது என்று பார்த்தோம்; அதில் மரணம் மாத்திரமல்லாமல், பாடுகளும் ஏறக்குறைய சம்பந்தப்பட்டு இருக்கின்றது. திராட்சப்பழங்களானது நசுக்கப்படுகின்றது, மிதிக்கப்படுகின்றது, வெகுவாய்ப் பிழியப்படுகின்றது, இல்லையேல் திராட்சப்பழரசம் கிடைக்காது என்று நாங்கள் பார்த்தோம். திராட்சப்பழச்சாறானது, கிறிஸ்துவினுடைய இரத்தத்திற்கு, அவரது அர்ப்பணிக்கப்பட்ட ஜீவனுக்கு அடையாளமாகவும், அவரோடுகூட உடன் பலிச் செலுத்துபவர்கள் அனைவருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜீவியங்களுக்கான அடையாளமாகவும் காணப்படுவதை நாங்கள் பார்த்தப்போது, அது மிகவும் அருமையான மற்றும் பொருத்தமான அடையாளமாய்க் காணப்படுவதை நாங்கள் கண்டோம். நமது கர்த்தர்தாமே தம்மைத் திராட்சச்செடிக்கும், அவரது பின்னடியார்களைக் கொடிகளுக்கும் ஒப்பிட்டு, நாம் அதிகக் கனிகள் கொணர்வது அவரது விருப்பமாய் இருக்கின்றது என்று தெரிவித்தார்; மேலும் நாம் பயன்படுத்துகின்றதான திராட்சப்பழச்சாறானது, கிறிஸ்துவாகிய திராட்சச்செடியின் கனிகளுக்கும், அவரது சரீரத்தின் அங்கத்தினர்களென உண்மையுள்ளவர்களாய்க் காணப்படும் அனைவரின் – தங்களைப் பலியாக்கிடுவதற்கென்றும், தேவனுக்குச் சொந்தமான தங்கள் சரீரங்களிலும், தங்கள் ஆவிகளிலும் தேவனை மகிமைப்படுத்தத்தக்கதாகக் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளைப் பின்தொடர நாடும் அனைவரின் பாடுகளுக்கும் பொருத்தமான அடையாளமாய்க் காணப்படுகின்றது.

கர்த்தருடைய சிங்காசனத்தில் தாங்களும் உட்காரத்தக்கதாக, அவரிடம் வேண்டிக்கொண்டதான ஆதிக்காலத்து அந்த இரண்டு சீஷர்களுடைய வார்த்தைகளை நாங்கள் நினைவுகூர்ந்தோம் மற்றும் அவர்கள் வேண்டிக்கொண்டதானது, சுயத்தை வெறுத்தலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்பதை அவர்கள் முழுமையாய்ப் புரியாதிருந்தார்கள் என்னும் விதமான நமது கர்த்தருடைய பின்வரும் பதிலையும் நாங்கள் நினைவுகூர்ந்தோம்; “நான் குடிக்கும் (அவமானம் மற்றும் பாடுகளின்) பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை (மரணத்தை) நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார்.” (மத்தேயு 20:22) அப்போஸ்தலர்களால் இவ்விஷயம் குறித்து முழுமையாய்ப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், அர்ப்பணம் பண்ணுவதிலும், கிரீடத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, சிலுவையைச் சகிக்க தாங்கள் விரும்புவதாகக் கூறுவதிலுமுள்ள அவர்களது ஆயத்தத்தில் நமது கர்த்தர் மகிழ்ச்சியடைந்தார் மற்றும் இதுவே அவர்களது இருதயத்தின் வாஞ்சையாக இருக்கின்றபடியால், இப்படியாகவே அவர்கள் செய்வார்கள் கிறிஸ்துவோடுகூடப் பாடுபடுவதற்கான விருப்பம் அவர்களிடத்தில் காணப்படுகின்றதால் (காணப்படும் வரை), அவர்கள் வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார்கள் என்றும், இந்த வாய்ப்பின் மூலமாகவும், அதற்கான உண்மையின் மூலமாகவும், அவர்கள் அவரது இராஜ்யத்தில் பங்கடைவார்கள் என்றும், அதுவும் அவர்களுள் யார்யாருக்கு எந்த இடம் என்று தம்மால் நிர்ணயிக்க முடியாதபோதிலும், மற்றும் இது பிதாவின் கரங்களில் காணப்படுகின்ற போதிலும், அவர்கள் அவருடைய இராஜ்யத்தில் பங்கடைவார்கள் என்றும் அவர்களுக்கு உறுதியளித்தார். இது நாம் எவ்வளவுதான் பெலவீனர்களாகவும், முக்கியத்துவமற்றவர்களாகவும் காணப்பட்டாலுங்கூட, நம்மை வழிநடத்திடுவதற்குக் கர்த்தர் தம்முடைய கிருபையினால் விருப்பமும், வல்லமையும் கொண்டவராய் இருக்கின்றார் என்றும், நாம் அவருக்கும், பலிச்செலுத்தும் அவரது ஆவிக்கும் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்தால், அவர் நம்மை ஜெயங்கொண்டவர்களாகவும், முற்றிலும் ஜெயங்கொண்டவர்களாகவும் வெளிக்கொண்டுவருவார் என்றுமுள்ள உற்சாகமூட்டும் எண்ணங்களை எங்களுக்குக் கொடுத்ததாய் இருந்தது.

பின்னர்ப் பாத்திரத்திற்காக – நம்முடைய மீட்பின் காரணமாக, நம் சார்பிலான கிறிஸ்துவின் பாடுகளுக்காகவும் மற்றும் அவரது பாத்திரத்தில், அவரது பாடுகளில், அவரது அவமானங்களில் [R2292 : page 120] – பங்கடைவதற்கான நமக்கான சிலாக்கியத்திற்காகவும் நாங்கள் கர்த்தரை ஸ்தோத்திரித்தோம்; அவரை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகளில் நாம் பங்கடைவோமாக; “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்” என்ற திவ்விய வாக்குத்தத்தம் அனைத்தும் நித்திய கனமகிமையை உண்டுபண்ணும் என்று அறிந்து களிகூருவோமாக. (மத்தேயு 5:11,12) “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்.” என் பாடுகளில் ஐக்கியம் கொள்ளுங்கள் என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகள் நினைவுகூரப்பட்டு, பாத்திரமானது பரிமாறப்பட்டது.

எங்கள் அனைவரின் ஜெபமாகவும், கர்த்தருக்கான எங்களது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதியளிக்கும் விதமாகவும் காணப்படும் வார்த்தைகள் அடங்கிய துதிப்பாடலின் 259-ஆம் பாடலைப் பாடி, ஆராதனையை நிறைவு செய்தோம்.

இருதயத்தை ஆராய்கின்றதான நினைவுகூருதலானது அண்மையில் உள்ளது; வருஷத்தினுடைய துயரமான, ஆனால் மிகவும் மகிமையான அந்தக் காலப்பகுதி அண்மையில் உள்ளது. பாவமற்ற மனிதனை, இந்த அளவுக்குப் பாடுபடுத்தின உலகத்தினை நினைத்துப்பார்ப்பதற்கு மிகவும் வேதனையாய் இருக்கின்றது மற்றும் அவர் பாவமில்லாதவராகவும், அனைவருக்குமான மீட்கும்பொருளானார் என்பதையும் நினைத்துப்பார்க்கையில் களிகூரவே செய்கின்றோம். ஆம் அது துக்கமாயும், அதே நேரம் மகிமையாயும் உள்ளது; ஏனெனில் அவர் அனைத்து மனுஷர்களையும் தம்மிடத்திற்கு இழுத்துக்கொள்வார் மற்றும் அனைவருமே அவரை ஒருகாலத்தில் அறிந்துகொள்வார்கள் மற்றும் நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள்ளான கிருபை அனைத்தையும் குறித்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். இவைகள் அனைத்தையும் சாத்தியமாக்குகிறவரும், தமது குமாரனைப் பெலப்படுத்துவதற்கும், குமாரன் இறுதியில், “முடிந்தது” என்று கூறுவது வரையிலும் அவர் முன்னேறிச் செல்வதற்கு என்று அவருக்கு உதவுவதற்கும் பரலோகத்திலிருந்து பேசினவருமான ஆச்சரியமான எகோவா தேவனை நானும் எதிர்நோக்கியிருக்கின்றேன். விலைக்கொடுக்கப்பட்டாயிற்று மற்றும் போராட்டத்தில் வெற்றி அடைந்தாயிற்று. பாழும், அவாந்திரமான வனாந்தரத்தில் அவர் கடந்துபோய், தமக்குச் சொந்தமானவர்களைத் திரும்பக்கொண்டு வந்துள்ளார் மற்றும் பரலோகத்தின் வாயில்களில், “களிகூருங்கள், என் ஆடுகளை நான் கண்டுபிடித்துள்ளேன்!” என்ற சத்தம் தொனிக்கின்றது.

அவர் நமக்குச் செய்துள்ளதான மாபெரும் மற்றும் ஆச்சரியமான காரியங்களுக்காக தேவனுக்கு, அவருக்குரிய மகிமையைச் சாற்றிடுவோமாக.

– Songs of the Nightingale, p. 128