R5191 (page 67)
“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” 1 கொரிந்தியர் 11:24,25
நம்முடைய பாவங்களுக்கான, அதாவது நம்முடையதற்காக மாத்திரமல்லாமல் சர்வலோகத்தினுடைய பாவங்களுக்கான நமது கர்த்தருடைய மாபெரும் பலிக்கான நினைவுகூருதலாக, அவரால் நிறுவப்பட்டதான இராப்போஜனமானது, அதன் எளிமையிலும், அதன் சிறப்பிலும் கவனத்தை ஈர்க்கின்ற ஒன்றாய்க் காணப்படுகின்றது. உலகத்தின் மாமனிதர்கள் தங்களைப்பற்றின நினைவுகளை நீடித்திருக்கப் பண்ணுவதற்கென மிக வித்தியாசமான வழிவகைகளை எப்போதும் நாடினதுண்டு. இவர்கள் தங்கள் மகத்துவங்களையும், தங்கள் சிறப்புகளையும், தங்கள் பின்னடியார்களுக்கு நினைப்பூட்ட முயன்றிட்டாலும், நிச்சயமாய் தங்கள் மரணத்திற்கான அதிலும் விசேஷமாக நமது கர்த்தருடைய விஷயத்தில் காணப்படுகின்றதுபோல், அவமானமான, நிந்தனையுள்ள, குற்றவாளியாக மரிக்கும் மரணத்தைப்போன்றதொரு மரணத்திற்கான நினைவுகூருதலையும், ஞாபகார்த்தத்தையும் ஏற்படுத்திடவேமாட்டார்கள். இயேசுவின் இடத்தில் இன்னொருவன் காணப்பட்டால், அநேகமாக தனது பராக்கிரமிக்கச் செயல்களுக்கான ஞாபகார்த்தமாகப் பதக்கங்களை ஏற்படுத்திடுவதற்கே அறிவுரை வழங்கியிருப்பான்; உதாரணத்திற்கு லாசருவை உயிர்த்தெழப்பண்ணினதற்கு (அ) சீறும் கடலை அமைதிப்படுத்தினதற்கு (அ) ஜனங்கள் குருத்தோலைகளுடன், இராஜாவுக்கு ஓசன்னா என்று சத்தமிட, எருசலேமுக்கு அவர் மேற்கொண்ட வெற்றி பிரவேசத்திற்கு ஞாபகார்த்தமான பதக்கங்களை ஏற்படுத்திடுவதற்கே அறிவுரை வழங்கியிருப்பான்.
ஆனால் நமது கர்த்தரோ, அவருடைய கணிப்பிலும், தேவனுடைய கணிப்பிலும், அவரது மகத்துவமான வேலையாகக் காணப்பட்ட காரியத்தையே, அதாவது நம் சார்பிலான அவரது பாவநிவாரண பலியையே, தமது பணியிலுள்ள மற்ற அனைத்து அம்சங்களைக் காட்டிலும் அதிகமாய், அவரது உண்மையான பின்னடியார்களால் மற்றும் அவர்களால் மாத்திரமே உணர்ந்துகொள்ளப்படப்போகின்ற காரியத்தையே, தமக்கு நினைவுகூருதலாகத் தெரிந்துகொண்டார். அவரது பின்னடியார்கள் அவரது ஆச்சரியமான வார்த்தைகள் அல்லது கிரியைகளுக்கு ஏதோ ஒன்றினை நினைவுகூருதலாக மதித்திருக்க முடியும் என்பது உண்மைதான்; ஆனால் உலகத்தாரால்கூட இவைகளை உணர்ந்துகொள்ளவும் முடியும். ஆனால் நம்முடைய ஒப்புரவாகுதலுக்கும், பாவநிவிர்த்திக்கும் அடிப்படையாகக் காணப்படும் நமக்கான ஈடுபலியென, அவரது மரணத்திற்கு இருக்கும் மதிப்பின் விஷயம் அப்படியல்ல. இது அர்ப்பணம் பண்ணினவர்களாகிய சிறுமந்தையினரை தெரிந்துகொள்ளப்பட்டவர்களைத் தவிர, வேறு எவராலும் இதுவரையிலும் முழுமையாய்ப் புரிந்துகொள்ளப்படவில்லை. மேலும் இவர்களுக்காகவே நினைவுகூரும் சின்னங்களானது ஏற்பாடுபண்ணப்பட்டு, நிறுவப்பட்டது. யூதாஸ் அங்குக் காணப்பட்டாலும், அவனுக்குத் துணிக்கையானது கொடுக்கப்பட்டது மற்றும் போஜனம் நிறைவுபெறுவதற்கு முன்னதாக, அவன் மற்றவர்களை விட்டுவிட்டு வெளியேறினான்; இது இந்த யுகத்தின் முடிவில் சிறுமந்தையினர் தங்கள் கர்த்தரோடுகூட, அவரது பாடுகளில் பங்கெடுப்பதற்கான தங்களது பங்கினை நிறைவேற்றிடுவதற்கு முன்னதாக, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியினால் நிறைவேற்றப்பட்டதான ஈடுபலியினைச் சரியாய் மதிப்பிடாதவர்களும், உணர்ந்துகொள்ளாதவர்களுமாகிய அனைவரும், உண்மையுள்ளவர்களின் கூட்டத்திலிருந்தும், ஐக்கியத்திலிருந்தும் வெளியேற்றப்படுமளவுக்குச் சத்தியம் எனும் துணிக்கையானது மிகவும் பலமிக்கதாகியிருக்கும் என்பதைக் குறிக்கின்றது என்பதில் ஐயமில்லை (1 யோவான் 2:19).
எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்ததான தங்களது விடுதலையையும், அக்காலத்தில் தங்களது முதற்பேறானவர்கள் தப்புவிக்கப்பட்டதையும், நினைவுகூரும் வண்ணமாக யூதர்கள் ஆட்டுக்குட்டியைப் புசிக்கின்றதான பஸ்கா இராப்போஜனத்தினுடைய தியதியானது, யூதர்களுடைய காலக்கணக்கீட்டு முறைமையின்படியே, அதாவது சந்திர காலக்கணக்கீட்டு முறைமையின்படியே கணக்கிடப்படுகின்றது (யாத்திரயாகமம் 12:2-14). நாம் மாதங்களைப் பிரிப்பதுபோல் பிரிப்பதற்குப்பதிலாக, அவர்கள் அமாவாசையை, புதிய மாதத்திற்கான ஆரம்பத்தினைக் குறிப்பதற்கு அனுமதித்தனர்; சூரிய காலத்திற்கும், சந்திர காலத்திற்கும் இடையிலான வித்தியாசமானது, எப்போதும் வசந்த கால/இளவேனிற் சம இரவு பகல் நாளைத் தொடரும் அமாவாசையுடன் புதிய வருடத்தை ஆரம்பிப்பதன் மூலம் சரிப்பண்ணப்படுகின்றது. தங்கள் மதம் சார்ந்த விழாக்களை ஆசரிக்கும் விஷயத்தில், யூதர்கள் இன்னமும் இந்தக் கணக்கீட்டு முறைமையையே கைக்கொள்ளுகின்றனர். மேலும் நமது கர்த்தரும், அப்போஸ்தலர்களும் ஆதித் திருச்சபையினரும் இதே ஒரு விதியை, நமது கர்த்தருடைய இறுதி இராப்போஜனத்திற்குரிய வருடாந்தர ஆசரிப்பிற்கான தியதியினை நிர்ணயிக்கும் விஷயத்திற்கும் பயன்படுத்தினதால், நாமும் அதையே பின்பற்றுகின்றோம்.
வசந்த கால/இளவேனிற் சம இரவு பகல் நாளைத் தொடரும் முதல் அமாவாசையானது, இந்த வருடத்தில் (1913), ஏப்ரல் 8-ஆம் தேதியில் நிகழ்வதாக எபிரெய ஆண்டு குறிப்பேட்டில் (almanacs/calendar) கணக்கிடப்பட்டுள்ளது அநேகமாக இது எருசலேமின் ஆய்வு கருத்து அறிவிப்பாகும். மாலை 6 மணிக்கு, யூதருடைய புனிதமான வருடத்தினுடைய முதலாம் மாதமாகிய, நீசான் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமாகுகின்றது. நீசான் முதலாந்தேதி துவங்கி 10-ஆம் தேதியில் பஸ்கா ஆட்டுக்குட்டியானது, மந்தையிலிருந்து தெரிந்தெடுக்கப்படுகின்றது. 14-ஆம் நாளில் (பௌர்ணமி அன்று*) “சாயங்காலங்களுக்கு நடுவில்” (நீசான் 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல், நீசான் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஏதேனும் ஒரு நேரத்தில்) ஆட்டுக்குட்டியானது அடித்து, புசிக்கப்பட வேண்டும். பதினைந்தாம் தேதி அவர்களது பஸ்கா பண்டிகையானது ஆரம்பித்து, ஏழு நாட்கள் நீடிக்கின்றது; இதன் முதலாம் மற்றும் ஏழாம் நாட்களானது விசேஷித்த விதமாய்ப் பரிசுத்தமானவைகளாக, ஓய்வுநாட்களாக (அ) “பிரதான” நாட்களாக ஆசரிக்கப்படுகின்றன (யாத்திராகமம் 12:16). பதினாறாம் தேதியில் வாற்கோதுமை அறுவடையின் முதற்பலன்கள், ஓமர் அளவு கர்த்தருக்குச் செலுத்தப்பட்டன மற்றும் 50 நாட்கள் கழிந்து (பெந்தெகொஸ்தே நாளில்) அவர்கள் கர்த்தருக்கு இரண்டு அப்பங்களை அசைவாட்டும் காணிக்கைகளாக்கினார்கள் (லேவியராகமம் 23:17). [* சூரியன் கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கான அடையாளமாய்க் காணப்படுவதினால், சந்திரனும் இஸ்ரயேல் ஜாதிக்கு அடையாளமாய்க் காணப்படுகின்றது. (வெளிப்படுத்தல் 12:1) பன்னிரண்டு மற்றும் சிலசமயம் இடம்பெறும் பதிமூன்று சந்திர மாதங்களானது, அந்த ஜாதியின் கோத்திரங்களை அடையாளப்படுத்துகின்றது. கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, சந்திரனானது பௌர்ணமி நிலையில் காணப்பட்டது. பின்னர் உடனடியாக தேய்வுற ஆரம்பித்தது மற்றும் பௌர்ணமிக்கு முன்பு சந்திரன் வளர்வதற்குரிய காலத்தைப்போலவே தேய்வதற்கும் காலம் எடுத்துக்கொண்டது. ஆகையால் கிறிஸ்துவின் மரணமானது இஸ்ரயேல் சரித்திரத்தினுடைய இரண்டு சரிசமமான பாகங்களுக்கிடையிலான திருப்புமுனையாகக் காணப்பட்டது. தொகுதி-2, ஆங்கிலத்தில் பக்கம் – 218, தமிழில் பக்கம் – 235 பார்க்கவும்.
அசுசியடைந்த யூதர்கள், இதன் காரணமாக பஸ்காவினை அதற்குரிய காலத்தில் கைக்கொள்ள முடியாமல் போவதால், அப்படியானவர்கள் இரண்டாம் மாதத்தின் 14-ஆம் தேதியில் (அடுத்த பௌர்ணமியில் எண்ணாகமம் 9:8-13) அதைக் கைக்கொள்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்; இதன் படிப்பினை என்னவெனில் – (அறியாமையின் காரணமாக) மேசியா தங்களுக்கு முன்வைக்கபட்டபோது, அவரைத் தங்கள் மீட்பர் என்று ஏற்றுக்கொள்வதற்குத் தடைப்பண்ணப்பட்டவர்கள், அனைத்தும் திரும்பிக்கொடுக்கப்படும் காலங்களில், தங்கள் ஜாதியானது (சந்திரன்) மீண்டும் முழுமையான ஆசீர்வாத நிலையில், பின் அறுவடையில் வரும்போது, மேசியாவை ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்புப் பெற்றுக் கொள்பவர்களாய் இருப்பார்கள் என்பதேயாகும்.]
[R5191 : page 68]
யூதர்களால் ஒவ்வொரு வருடமும் செய்யப்பட்டுவந்ததான இவைகள், நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறபடி, மாபெரும் மற்றும் பிரம்மாண்டமான நிகழ்வுகளுக்கு நிழலாய் இருக்கின்றன. பத்தாம் தேதியில் ஆட்டுக்குட்டியானது தெரிந்து கொள்ளப்படுவது என்பது, இஸ்ரயேலானது நிஜமான கடந்துபோகுதலிலுள்ள முதற்பேறானவர்களுடைய சபையென ஆசீர்வதிக்கப்படவும், அங்கீகரிக்கப்படவும் வேண்டுமெனில், அவர்கள் எவ்வாறு பஸ்கா பண்டிகைக்கு ஐந்து நாட்களுக்கு முன்னதாக, இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக இயேசுவை ஏற்றிருக்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்திக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. அந்த நாளில்தான் கர்த்தர் அவர்களது இராஜாவென, கழுதையின்மேல் ஏறி, பட்டணத்திற்குள் வந்தபோது, இறுதியாக அந்த ஜாதியாருக்கு தம்மை முன்வைத்தார் (யோவான் 12:12-16 ஒப்பிட்டுப்பார்க்கவும்). ஆனால் தேவ ஆட்டுக்குட்டியை ஏற்றுக்கொள்வதை அலட்சியப்படுத்தினவர்கள், உடனடியாக மறுக்கப்பட்டனர் மற்றும் அவர்கள் நிழலான முதற்பிறப்புகளாக இருப்பதிலிருந்து ஓயப்பண்ணப்பட்டார்கள்.
(இந்த வருடத்தில் [1913] ஏப்ரல் 20-ஆம் தேதி ஞாயிறு அன்று மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து, 21-ஆம் தேதி, மாலை ஆறு மணிவரை நீடிக்கின்றதான) 14-ஆம் தேதியில்தான் பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட வேண்டும் மற்றும் புசிக்கப்பட வேண்டும். (அநேகமாக இந்த ஒரு நோக்கத்திற்கான தெய்வீக ஏற்பாட்டின் காரணமாகவே) எபிரெய காலக்கணக்கிடுதலானது, “கடைசி இராப்போஜனத்தினுடைய” புசித்தலானது, கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டதான அதே நாளில் நிகழ்வதற்கு அனுமதித்ததாய் இருக்கின்றது. (சிலுவையில் அறையப்படுவது வரையிலும் முடிவடையாத, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றும் விதமாக ஆசரிக்கப்பட்டதான) ஆட்டுக்குட்டியும், கசப்பான கீரைகளும், புளிப்பில்லாத அப்பமும் உள்ள பஸ்கா இராப்போஜனமானது, மாலை ஆறு மணிக்குமேல் புசிக்கப்பட்டது. பின்னர்த் தொடர்ந்து நிஜமான ஆட்டுக்குட்டியினுடைய சரீரத்தையும், இரத்தத்தையும் அடையாளப்படுத்துகின்றதான அப்பமும், திராட்சரசமும் உள்ள நினைவுகூருதலின் இராப்போஜனத்தினுடைய நிறுவுதல் நடந்தது. ஆகையால் இதுவே வருடந்தோறும், அந்தத் தருணம் வருகையில், அவரது பின்னடியார்களால், சொல்லர்த்தமான ஆட்டுக்குட்டியினைப் புசிப்பதற்குப்பதிலாக, நிஜமான ஆட்டுக்குட்டிக்கும், நிஜமான முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதலுக்கும் – அவரது இரத்தத்தின் பயனான மாபெரும் கடந்துபோகுதலுக்கும் நினைவுகூருதலாக ஆசரிக்கப்பட வேண்டும்.
(ஓய்வு நாளுக்கு மறுநாளாகிய அல்லது 15-ஆம் தேதியின் பஸ்கா பண்டிகைக்கு மறுநாளாகிய) நீசான் 16-ஆம் தேதியில் முதல் பலன்களாகிய வாற்கோதுமையினுடைய கதிர்கட்டை அசைவாட்டுதலானது, “நித்திரையடைந்தவர்களில் முதற்பலனாக” நமது கர்த்தராகிய கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது (லேவியராகமம் 23: 5, 6, 11, 15-17; 1 கொரிந்தியர் 15:20).
ஐம்பதாம் நாளாகிய பெந்தெகொஸ்தே நாளில் இரண்டு அப்பங்கள் அசைவாட்டுக் காணிக்கையாக்கப்படுவது என்பது, சபையைத் தேவனுக்கு முன்னாக நிறுத்துவதையும், சபை மாபெரும் பிரதான ஆசாரியனுடைய புண்ணியத்தின் வாயிலாக ஏற்றுக்கொள்ளப்படுவதையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; இந்த ஏற்றுக்கொள்ளுதலானது பெந்தெகொஸ்தே நாளில் நிகழ்ந்த பரிசுத்த ஆவியினாலான அபிஷேகிக்கப்படுதலால் சுட்டிக்காட்டப்படுகின்றது. சபை உண்மையில் “ஒரே அப்பமாகக்” காணப்படுகின்றனர் (1 கொரிந்தியர் 10:17); இரண்டு அப்பங்களானது, பாவநிவாரண நாளில் இடம்பெறும் இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களினால் அடையாளப்படுத்தப்படுகின்ற அதே காரியங்களை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இது முன்னிறுத்தப்படும் அனைவரும், கிறிஸ்து இயேசுவின் மூலமாகத் தேவனுக்குள் ஏற்றுக்கொள்ளப்படுபவர்களாய் இருந்தாலும், முன்னிறுத்தப்படும் அனைவரும் முடிவுவரையிலும் உண்மையாய்க் காணப்படும் நிலைக்கு வரமாட்டார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் இரண்டு அப்பங்களானது, அர்ப்பணிக்கப்பட்டவர்களிலுள்ள இரண்டு வகுப்பாரை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது; அதாவது ஜெயங்கொள்ளுகிற சிறுமந்தையையும் மற்றும் உலகத்தை ஜெயங்கொள்வதின் மூலம், “பரம அழைப்பினை” உறுதிப்படுத்திக்கொள்ளாதவர்களாகிய திரள் கூட்டத்தினர் எனும் அர்ப்பணிக்கப்பட்ட தேவனுடைய பணிவிடைக்காரர்களையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
புனித வெள்ளிக்கும், ஈஸ்டர் ஞாயிறுக்குமான தேதிகளைக் கணக்கிடுவதற்கென எபிஸ்கோப்பலியன்ஸ் (Episcopalians) மற்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் மத்தியில் நடைமுறையில் காணப்படுகின்ற கணக்கிடும் முறைமையானது, முன்பிருந்த முறைமையிலிருந்து வேறுபடுகின்றது. இளவேனிற் சம இரவு பகல் நாளுக்குப் பின்வரும் முதல் பௌர்ணமியைத் தொடர்ந்துவரும் முதல் ஞாயிறை, இவர்கள் ஈஸ்டர் ஞாயிறு என்றும், இதற்கு முன்வரும் வெள்ளியை, புனித வெள்ளி என்றும் கொண்டாடுகின்றனர். இப்படியான கணக்கீட்டுமுறைமையானது, நாம் அங்கீகரிக்கின்றதான யூத முறைமைக்குப்பதிலாக கி. பி. 325-இல், நைஸ் ஆலோசனைக்குழுவினால் நிறுவப்பட்டது. ஆனால் “பஸ்கா” என்ற பெயரானது (ஈஸ்டர்* ஞாயிறு என்றில்லாமல்) நீண்ட காலம் பயன்படுத்தப்பட்டு வந்தது; போப்மார்க்கமானது அரசியல் செல்வாக்கில் உறுதியடைந்தப்பிற்பாடு, அறியாமையிலுள்ள புறமதத்தார், அரசினுடைய சலுகையினை அனுபவித்துக் கொண்டிருந்ததான இந்த அமைப்பிற்குள் குவிய ஆரம்பித்தப்பிற்பாடே “பஸ்கா” என்ற பெயருக்குப்பதிலாக, “ஈஸ்டர்” என்ற பெயர் நிறுவப்பட்டது; ஏனெனில் பஸ்கா ஆசரிக்கப்படுகின்றதான அதே காலப்பகுதியில், புறமதத்தினரும், இளவேனிற் தேவதையாகிய [R5192 : page 68] ஈஸ்டெரா (Estera), ஜெர்மனியில் ஒய்ஸ்ட்ரா (Ostara) என்று அழைக்கப்படும், அதாவது தங்கள் ஈஸ்டர் தேவதைக்குப் பண்டிகை கொண்டாடும் வழக்கத்தில் காணப்பட்டனர். இதுவும் அதிக எண்ணிக்கையிலான ஜனங்களைக் கூட்டுவதற்கும், செல்வாக்கினை அதிகரிப் பதற்கும் என்று, பேராசை மிக்க “குருமார் வகுப்பினர்” (clergy) கையாண்ட அநேக முறைமைகளில் ஒன்றாகும். (* அப்போஸ்தலர் 12:4-ஆம் வசனத்தில் இடம்பெறும் ஈஸ்டர் எனும் வார்த்தையானது, தவறான மொழிப்பெயர்ப்பாகும்; அது பஸ்கா என்றே மொழிப்பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். (Revised) ரிவைஸ்ட் மொழியாக்கம் பார்க்கவும்.]
சிலசமயம் யூத கணக்கிடுதல் முறைமையும், ரோம கணக்கிடுதல் முறைமையும், ஒரே நாட்களைச் சுட்டிக்காட்டுகின்றது; ஆனால் எப்போதும் இப்படியாகக் காணப்படுவதில்லை; சிலசமயங்களில் இவைகளின் கணக்கிடுதலானது கிட்டத்தட்ட ஒரு சந்திர (அ) மாத அளவு வித்தியாசப்படுகின்றது.
யூதர்கள் பஸ்கா வாரத்தினை, நீசான் 15-ஆம் தேதியாகிய ஏப்ரல் 22-ஆம் தேதியில் (அதாவது ஏப்ரல் 21-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு) ஆரம்பமாகும் “பண்டிகையாக” கொண்டாடுகின்றனர். நினைவுகூருதலினுடைய இராப்போஜனத்தில் நாம் பண்டிகை வாரத்தினை ஆசரியாமல், மாறாக பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்டதற்கும், புசிக்கப்பட்டதற்குமான நாளுக்கான ஆண்டுநிறைவு நாளாகிய, அதாவது முதற்பேறானவர்களின் சபையானது மரணத்திலிருந்து முதலாம் உயிர்த்தெழுதலில் முழுமைப்பெறுகின்றதான ஜீவனுக்குள்ளாகக் கடந்துபோவதற்குக் காரணமாய் இருந்த பலியை ஏறெடுத்த தேவனுடைய உண்மைான ஆட்டுக்குட்டியாகிய, நமது கர்த்தர் இயேசுவினுடைய மரணத்தின் ஆண்டுநிறைவு நாளும், நீசான் 15-ஆம் தேதிக்கு முந்தின நாளும், 1913-ஆம் வருஷத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை ஆரம்பமாகும் நீசான் 14-ஆம் நாளையே நாம் ஆசரிக்கின்றோம். பஸ்கா பண்டிகை வாரத்தினுடைய நிஜமானது, உண்மையான இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் அனைவருடைய இருதயத்தின் சந்தோஷத்தில் காணப்படுகின்றது; ஏழு நாட்கள் என்பது சந்தோஷம் மற்றும் இரட்சிப்பினுடைய பூரணத்தை (அ) முழுமையைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.
கணக்கிடுதல் தொடர்புடையதான அநேகம் கேள்விகளுக்கு நாம் பொதுவான பதிலாக, விவரங்களைக் கொடுத்துவிட்டோம்; இதற்குக் காரணம் இதற்கு ஏதேனும் மிகுந்த முக்கியத்துவம் இருப்பதினாலோ அல்லது துல்லியமான ஆண்டுநிறைவு நாள் ஆசரிப்பில் காணப்படும் அடிமைப்படுத்துதலோ அல்ல. கிறிஸ்துவினால் விடுதலைப் பண்ணப்பட்டவர்கள்மீது இப்படியாக எந்த ஓர் அடிமைத்தனமும் இல்லையென்று நாம் அடையாளம் கண்டுள்ளோம். “என்னை நினைவுகூரும்படி இதைச் (இந்த வருடாந்தர நினைவுகூருதலை நீங்கள் ஆசரிக்கும் ஒவ்வொரு முறையும்) செய்யுங்கள்” என்று நமது கர்த்தர் கூறுகையில், அவர் நோக்கம் கொண்டுள்ளதுபோன்று, நினைவுகூருதலின் இராப்போஜனத்தை அதன் சரியான ஆண்டுநிறைவு நாளில் ஆசரிப்பதற்கு விருப்பங்கொண்டவர்களாக நாம் இருப்பினும், இதை நாங்கள் கடமையாகப் பார்ப்பதைவிட சிலாக்கியமாகவே பார்க்கின்றோம்; ஒருவேளை அறியாமை (அ) தவறானப் புரிந்துகொள்ளுதலின் காரணமாக நாளைத் தெரிந்துகொள்ளும் விஷயத்தில் நாம் தவறு இழைத்தாலும், கர்த்தர் நம் நல் நோக்கங்களை ஏற்றுக்கொள்வார் என்றும், தவறை மன்னிப்பார் என்றும், தமது ஆசீர்வாதத்தை அருளுவார் என்றும் நாம் நம்புகின்றோம். தவறானப் போதனைகள் மற்றும் மனித பாரம்பரியங்களின் காரணமாக, அவரது மரணத்திற்கான இந்த நினைவுகூருதலை ஆசரிப்பதற்கென, அவர் நியமித்துள்ளதான அதன் ஆண்டுநிறைவு நாளை தெரிவு செய்வதற்குப்பதிலாக வேறு காலங்களையும், நேரங்களையும் தெரிவுசெய்யும் அவரது பிள்ளைகளாகிய அநேகருடைய நல் நோக்கங்களைக் கர்த்தர் ஏற்றுக்கொள்கின்றார் என்றும் நாம் நம்புகின்றோம். இதுபோலவே ஐக்கிய நாடுகள் சுதந்திரமடைந்தத் தேதியை மறந்தவராக (அ) ஜூலை 4-ஆம் தேதியே இந்நிகழ்வினுடைய ஆண்டுநிறைவு நாள் என்றும், இந்தத் தியதியே, இதைக் கொண்டாடுவதற்கென நியமிக்கப்பட்டுள்ளதான பொருத்தமான தேதி என்றுமுள்ள உண்மைகளை அறியாதவராக வருடத்திற்கு மூன்று, நான்கு (அ) ஐம்பது முறைகள் சுதந்திரத்தைக் கொண்டாடிடும் ஒரு மனிதனுடைய தேசப்பற்று நோக்கங்களை நாம் ஒத்துக்கொள்கின்றோம்.
மற்றச் சத்தியங்களைப்போலவே, இருண்ட யுகங்களையுடைய குப்பைகளின் கீழ் நீண்டகாலமாய்ப் புதைக்கப்பட்டுக்கிடந்த இதையும் இப்பொழுது தேவன் தம்முடைய ஜனங்களுக்குத் தெளிவுப்படுத்துகின்றார். அவரது ஜனங்களாக உண்மையில் காணப்படுபவர்கள் அனைவரும் சத்தியத்திற்காக ஆவலாய்க்காணப்படுகின்றனர் மற்றும் மற்றப் பாடங்களைப்போலவே இப்பாடத்திலுமுள்ள சத்தியங்களானது, தேவவார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
“நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” (1 கொரிந்தியர் 11:23-26).
கர்த்தருடைய மரணம் என்ற வார்த்தை எதைக்குறிக்கின்றது மற்றும் எதைக் குறிக்கவில்லை என்பதை நேர்மையான மனமுடையவர்களிடத்தில் விவாதித்திடுவதற்கு எந்த அவசியமும் [R5192 : page 69] இருப்பதில்லை. ஈடுபலிபற்றின உபதேசத்தினின்று அல்லது ஈடுபலி உபதேசத்துடன் சம்பந்தப்பட்டதான நியாயமான ஊகங்களின்று தங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் சிலர் வேதவாக்கியங்களுக்கு முரணாக, நமது கர்த்தருக்கு இரண்டு மரணங்கள் சம்பவித்தன என்றும், ஒன்று அவர் உலகத்திற்கு வந்தபோது நிகழ்ந்தது என்றும், மற்றொன்று கல்வாரியில் நிகழ்ந்தது என்றும், முதல் மரணத்திற்கு முன்னதாக, கல்வாரியில் “எல்லோரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசுவினுடைய” மரணமானது அவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்றும் வலியுறுத்திக் கூறுகின்றனர். இவர்கள் “அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்” என்று வேதவாக்கியம் தெரிவிக்கும் உண்மையினையும், நமது கர்த்தரினாலோ (அ) அவரது அப்போஸ்தலர்களாலோ குறிப்பிடப்பட்டுள்ளதான ஒரே மரணம், கல்வாரியில் நிகழ்ந்த மரணமே ஆகும் என்ற உண்மையினையும் வேண்டுமென்றே அறியாதவர்களாய்க் காணப்படுகின்றனர்.
எருசலேமில் தாம் அடையப்போகின்றதான மரணத்தைக்குறித்து அவர் பேசினதாக அப்போஸ்தலர்கள் தெரிவிக்கின்றனர். நம்முடைய மீட்பருடைய இந்த ஒரே ஒரு மரணம் மாத்திரமே, இந்த நினைவுகூரும் அடையாளங்களினால் அடையாளப்படுத்தப்படுகின்றது; அவரது சரீரம், அவரது மாம்சம் நமக்காகப் பிட்கப்பட்டுள்ளது மற்றும் நித்திய ஜீவன் அடைய வேண்டுமெனில் இதன் புண்ணியத்திலும், ஜீவனிலும் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இந்த முக்கியமான கேள்வி தொடர்புடைய விஷயத்தில், நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்.
எப்படித் தண்ணீர் ஞானஸ்நானமானது, முக்கியமான ஞானஸ்நானமாகக் காணப்படாமல், உண்மையான ஞானஸ்நானத்தை அடையாளப்படுத்தும் அடையாளமாக மாத்திரம் காணப்படுகின்றதோ, அதுபோலவே அடையாளங்களாகிய அப்பத்திலும், திராட்சரசத்திலும் பங்கெடுத்தல் என்பது மிக முக்கியமான விருந்திற்கு/காரியத்திற்கு அடையாளமாக மாத்திரமே காணப்படுகின்றது; அதாவது அவரது பிட்கப்பட்ட சரீரத்தின் மற்றும் சிந்தப்பட்ட இரத்தத்தின் வாயிலாக நமக்கு நித்திய ஜீவனை உறுதிப்படுத்துகின்றதான கிறிஸ்துவினுடைய புண்ணியத்தை நம்முடையதாக்கிக்கொள்ளும் காரியத்திற்கு அடையாளமாக மாத்திரமே காணப்படுகின்றது. அவரால் நிறைவேற்றப்பட்டதான பலியை விசுவாசத்தினால் ஏற்றுக்கொண்டு, அதே விசுவாசத்தினால், அவரால் போதிக்கப்பட்டுள்ளபடி மனிதனாகிய கிறிஸ்து இயேசு பெற்றிருந்ததும், நமக்காக மரணத்தில் கையளிக்கப்பட்டதுமான புண்ணியங்கள், பரிபூரணங்கள் மற்றும் உரிமைகள் அனைத்தையும் நமதாக்கிக்கொள்வதன் மூலமாக நமது இருதயங்களானது உண்மையில் நித்திய ஜீவனுக்கான அப்பத்தை, பரலோகத்திலிருந்து தேவன் நமக்கு அனுப்பிவைத்ததான அப்பத்தைப் புசிக்கின்றதாய் இருக்கின்றது. இதுதான் உண்மையான அப்பம் மற்றும் இதைப் புசிப்பது என்பது நித்தியமான ஜீவனைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இதுவே சொல்லர்த்தமான அப்பமானது அடையாளப்படுத்துகின்றதான அடிப்படையான அர்த்தமாய் இருக்கின்றது மற்றும் இப்படியான அர்த்தத்திலேயே அதில் சரியாயும், புரிந்த நிலையிலும் பங்கெடுக்கும் அனைவருக்கும் காணப்படுகின்றது. அது பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து ஆதாமையும், அவரது குடும்பத்தையும் மீட்ட ஈடுபலிக்கான நினைவுகூருதலாகும்.
மற்றுமொரு கருத்து: பயன்படுத்தப்பட்ட அப்பமானது, புளிப்பற்றதாகும். புளிப்பு என்பது கெடுக்கிற ஒன்றாக, சீரழிக்கும் ஒன்றாக இருப்பதினால், பாவத்திற்கான அடையாளமாய் இருக்கின்றது மற்றும் பாவம் மனுக்குலத்தில் கொண்டுவந்ததான சீரழிவையும், மரணத்தையும் அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் இந்த அடையாளமானது, நமது கர்த்தர் இயேசு பாவம் இல்லாதவராக இருந்தார் என்பதை, கறைதிறையற்ற ஆட்டுக்குட்டி என்பதை, “பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவருமாய்” இருந்தார் என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. அவர் ஆதாமின் சந்ததியில் வந்தவராய் இருந்திருப்பாரானால், வழக்கம்போல் ஏதோ ஒரு பூமிக்குரிய தந்தை வாயிலாக தமது ஜீவனைப் பெற்றவராக இருந்திருப்பாரானால், அவரும்கூட மற்ற மனிதர்களைப்போலவே ஆதாமின் பாவத்தினால், புளிப்பானவராய் இருந்திருப்பார்; ஆனால் அவருடைய ஜீவனானது கறைதிறை இல்லாமல், உயர்ந்த பரலோக நிலையிலிருந்து, பூமிக்குரிய நிலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலைமையில் வந்ததாய் இருந்தது; ஆகவே அவர் “வானத்திலிருந்து வந்த அப்பம்” என்று அழைக்கப்பட்டார் (யோவான் 6:41). ஆகவே தேவன் அருளியுள்ளதான தூய்மையான, புளிப்பற்ற, மாசற்ற அப்பத்தினைக்குறித்து உணர்ந்துகொள்வோமாக மற்றும் அவரைப்புசிப்போமாக; அதாவது சத்தியத்தைப் புசித்து, ஜீரணிப்பதன் வாயிலாக அவரை நாம் புசிப்போமாக; அதிலும் விசேஷமாக . . . விசுவாசத்தின் வாயிலாக அவரது நீதியை நமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளுதல் எனும் சத்தியத்தைப் புசிப்போமாக; மேலும் அவரை வழியாகவும், ஜீவனாகவும் அடையாளம் கண்டுகொள்வோமாக.
இந்த நினைவுகூருதல் அடையாளங்கள் தொடர்புடையதான இன்னும் ஆழமான ஓர் அர்த்தத்தை, அப்போஸ்தலன் தெய்வீக வெளிப்படுத்துதலின் வாயிலாக தெரிவித்துள்ளார். அப்பமானது நமது கர்த்தர் இயேசுவை மாத்திரம் அடையாளப்படுத்துகின்றதாயிராமல், நாம் அவரைப் புசித்தப்பிற்பாடு (அவரது நீதியை நமக்குரியதாக்கிக்கொள்வதன் வாயிலாக நாம் நீதிமானாக்கப்பட்ட பிற்பாடு) நாம் அர்ப்பணத்தின் வாயிலாக, உலகத்திற்கான உணவாகிய அந்தப் பிட்கப்பட்ட ஒரே அப்பத்தின் பாகமாக, நாம் அவரோடு இணைந்தவர்களானோம் என்றும் அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார். (1 கொரிந்தியர் 10:16). இது நீதிமானாக்கப்பட்ட விசுவாசிகளாகிய நாம், எதிர்க்கால மகிமைகளில் அவரோடுகூட உடன் சுதந்தரர்களாகுவதற்கும், பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பதும், பூமியின் குடிகள் அனைத்திற்கும் ஜீவன் வழங்குவதுமான மாபெரும் வேலையில் பங்காளிகளாகுவதற்குமுரிய நிபந்தனையாய்க் காணப்படுகின்ற கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும் இப்பொழுது பங்கடைவதற்கான சிலாக்கியத்தினை உடையவர்களாய் இருக்கின்றோம் என்பதைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது.
இதே கருத்தானது, அப்போஸ்தலனால் மீண்டும் மீண்டுமாகவும், பல்வேறு அடையாளங்களினாலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் அவை அனைத்தைக்காட்டிலும், இவ்வடையாளமே ஆற்றல் மிக்கதாய்க் காணப்படுகின்றது; அதாவது தங்கள் தலையோடுகூட (கிறிஸ்துவின் சரீரமாகிய – கொலோசெயர் 1:24 பார்க்கவும்) சபையே இப்பொழுது பிட்கப்படுகின்றதான “ஒரே அப்பமாக” இருக்கின்றனர். இது நமது தலையானவருடனான நமது ஐக்கியத்திற்கும், உறவிற்கும் குறிப்பிடத்தக்கதான விவரிப்பாய்க் காணப்படுகின்றது.
“நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம்;” “அப்பத்தைப்பிட்டு உண்ணுகிறோமே, அது கிறிஸ்துவின் உடலில் பங்குகொள்ளுதல் அல்லவா! அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்குகொள்கிறோம்.” (1 கொரிந்தியர் 10:16, 17 – KJV ; திருவிவிலியம்)
“திராட்சப்பழரசமானது” (fruit of the vine) நமது கர்த்தரினால் பலிச்செலுத்தப்பட்ட ஜீவனை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது (மரணத்தில் கையளிக்கப்பட்ட ஜீவனுக்கான அடையாளம்)” (மத்தேயு 26:27,28).
பாவத்தின் காரணமாக ஆதாமின் சந்ததி இழந்துபோனதான ஜீவனுக்கான மீட்கும் பொருளாகக் கர்த்தர் தமது ஜீவனைக் கொடுப்பதன் மூலமே, புதிய உடன்படிக்கையின் கீழ் விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் வாயிலாக மனிதர்களுக்கு ஜீவனுக்கான உரிமை கடந்துவர முடியும். (ரோமர் 5:18,19). சிந்தப்பட்ட இரத்தமானது, அனைவருக்குமான மீட்கும் பொருளாக” (விலையாகக்) காணப்பட்டது; இது அனைவருக்காகவும், நமது மீட்பரினாலே கொடுக்கப்பட்டதாய் இருந்தது; ஆனால் அவர் பாத்திரத்தைச் சீஷர்களிடத்தில் கொடுத்து, அதைப் பருகும்படிக்கு அவர்களிடம் கூறினதாவது, தம்முடைய பாடுகளில் அவர்கள் பங்காளிகளாகுவதற்கான அல்லது பவுல் குறிப்பிட்டுள்ளதுபோன்று “கிறிஸ்துவின் உபத்திரவங்களில் குறைவானதை நிறைவேற்றுவதற்கான” அழைப்பாய்க் காணப்பட்டது (கொலோசெயர் 1:24). விசுவாசத்தினால் நாம் நீதிமானாக்கப்பட்ட பிற்பாடு, நாமாய் முன்வந்து கிறிஸ்துவின் காரணங்களை/நோக்கங்களை ஆதரிப்பதின் வாயிலாக, அவரது பாடுகளில் பங்குகொள்வோமானால், நாம் தேவனால் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாகவும் மற்றும் இயேசுவின் பாடுகளில் பங்கடைபவர்களாகவும் கருதப்படுவோம் என்பதே நம்முன் வைக்கப்பட்ட காரியமாகும். “கடவுளைப் போற்றித் திருவிருந்துக் கிண்ணத்திலிருந்து பருகுகிறோமே, அது கிறிஸ்துவின் இரத்தத்தில் (சிந்தப்பட்ட இரத்தம் – மரணம்) பங்குகொள்ளுதல் அல்லவா?” (1 கொரிந்தியர் 10:16 திருவிவிலியம்) “பாத்திரத்தினுடைய” மதிப்பினை நாம் அனைவரும் உணர்ந்தவர்களாக, கிறிஸ்துவோடுகூட, அவரது பாடுகள் மற்றும் அவமானத்தின் “பாத்திரத்தில்” பங்குகொள்வதற்கான வாய்ப்பிற்காக, தேவனை ஸ்தோத்திரிப் போமாக; இப்படியானவர்கள் அனைவரும், அவரோடுகூட மகிமைப்படுத்தப்படுவர் என்ற நிச்சயமும் கொண்டிருக்கலாம். (ரோமர் 8:17)
பாத்திரமானது அவரது அவமானத்தில் நமது பங்குகொள்ளுதலையும், அவரது பலியில் நமது பங்குகொள்ளுதலையும், அதாவது நமது மனுஷீகத்தின் மரணத்தையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், நமது கர்த்தரும், பாத்திரத்திற்கு இந்த அர்த்தத்தைச் சாற்றினவராய் இருந்தார். உதாரணத்திற்கு அவரது சிங்காசனத்திலுள்ள எதிர்க்கால மகிமைக்குறித்த வாக்குறுதியை அவரது சீஷர்களில் இருவர், அவரிடத்தில் கேட்டபோது, அவரோ: “நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கக்கூடுமோ? என்றார். அவர்களது இருதயப்பூர்வமான உறுதிமொழியின் நிமித்தமாக, “என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்றார். திராட்சப்பழரசமானது, இரத்தம்/ரசம் வெளியே வருமளவுக்குத் திராட்சையைப் பிழிவதுமாத்திரம் குறிக்காமல், பிற்பாடு கடந்துவரும் புத்துணர்வையும் கூடக்குறிக்கின்றதாய் இருக்கின்றது; ஆகையால் “கிறிஸ்துவின் பாடுகளில்” இப்பொழுது பங்குகொள்ளும் நாம், அவரது மகிமைகளிலும், கனங்களிலும் மற்றும் அழியாமையிலும் சீக்கிரத்தில் பங்குகொள்வோம் – அதாவது இராஜ்யத்தில் அவரோடுகூடப் புதிய திராட்சரசத்தைப் பருகும்போது ஆகும்.
இவ்வார்த்தைகளினுடைய முழுமையான அர்த்தம் என்ன?
நினைவுகூருதலுக்கான இராப்போஜனத்தை நிறுவின நமது கர்த்தர், அதன் ஆசரிப்பு விஷயத்தில் எவ்விதமான எல்லைகளை வைக்காததினால், நமக்கான ஈடுபலியாக நமது கர்த்தர் [R5193 : page 69] இயேசுவினுடைய மரணத்திற்கும், அவரோடுகூடப் பலிச்செலுத்திடுவதற்கான நமது அர்ப்பணிப்பிற்குமான நினைவுகூருதலை ஒரு – குறிப்பிட்டக் காலளவில் ஆசரிப்பது ஏற்றதாய் இருக்கும் என்று அப்போஸ்தலன் கால அளவை எல்லைக்குட்படுத்துவதாக நாம் புரிந்துகொள்ளக் கூடாது. மாறாக அது கால வரம்பிற்குட்பட்ட, அதாவது கொஞ்சம் வருடங்களுக்குரிய ஏற்பாடு என்று கருதப்படாமல், கர்த்தருடைய இரண்டாம் வருகை வரையிலும் தொடர்ந்து ஆசரிக்கப்பட வேண்டும் என்று அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றார். நமது கர்த்தருடைய இரண்டாம் வருகையைக்குறித்துப் பேசுகையில், உலகத்தை ஆளுகைச்செய்து, ஆசீர்வதிக்கப்போகின்றதான கிறிஸ்துவின் இராஜ்யம் (அ) சபையினுடைய கூட்டிச் சேர்க்குதலையும், உயர்த்தப்படுதலையும் உள்ளடக்கின விதத்திலேயே, அப்போஸ்தலனுடைய வார்த்தைகள் காணப்படுகின்றன. ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயங்களை, ஒன்றுக்கொன்று ஒத்திருக்கும் விஷயங்களை இப்படியாய்ப் பேசுவது இன்றும் பொதுவான மற்றும் பொருத்தமான வழக்கமாய் இருக்கின்றது. கிறிஸ்துவாகிய தலையும், சரீரமும் வல்லமையிலும், மகா மகிமையிலும் உலகத்தை ஆளுவதற்கு வந்துகொண்டிருக்கின்றனர். கர்த்தர் (அ) தலையினுடைய பிரசன்னம் முதலாவது அவசியமாகும்; அடுத்து அவரது சரீரத்திலுள்ள [R5193 : page 70] நித்திரையடைந்த அங்கத்தினர்களின் மறுரூபமடைதலும், உயிரோடிருக்கும் அங்கத்தினர்களின் சலித்தெடுத்தலும், அவர்கள் படிப்படியாக அவரோடு கூட்டிச்சேர்க்கப்படுதலும் சம்பவிக்கும்.
இராஜா தம்முடைய மாபெரும் வல்லமையை 1878-ஆம் வருடத்தில் செயல்படுத்தத் துவங்கின காலத்திலிருந்து இராஜ்யம் ஆரம்பித்துவிட்டது என்று கருதப்படுகின்றதாய் இருப்பினும் (வெளிப்படுத்தல் 11:17), இராஜ்யத்தினுடைய கடைசி அங்கத்தினன் மறுரூபமடைவது (அ) மகிமைப்படுத்தப்படுவது வரையில், அப்பமாகிய கிறிஸ்து எனும் தலை மற்றும் சரீரத்தினுடைய பிட்கப்படுதல் நிறைவடைவது வரையில், அது முழுமையாய் ஸ்தாபிக்கப்பட்டிருக்காது. ஓர் அங்கம் பாடுபடுகையில், சரீரம் பாடுபடுகின்றது; ஓர் அங்கத்தினன் மகிமையடையாமல் இருக்கையில், இராஜ்யமானது வல்லமையிலும், ஆளுகையிலும் முழுமையாய் வரவில்லை என்பதாகும்.
“ஆகையால் நீங்கள் இந்த (பஸ்காவில்) அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும், அவருடைய மரணத்தைத் (உங்கள் நம்பிக்கை மற்றும் உறுதி என்று) தெரிவிக்கின்றீர்கள்” என்று அப்போஸ்தலன் கூறுகையில், கிறிஸ்துவினுடைய சபை (அ) இராஜ்யத்தினுடைய முழுமையான உயர்த்தப்படுதலை உள்ளடக்கின கிறிஸ்துவின் வருகையையே குறிப்பிட்டார் என்பதில் உறுதியே. இராஜ்யத்தின் மகிமையே, அடையாளத்தினுடைய முடிவு என்ற இதே கருத்தானது, நினைவுகூருதலை நிறுவினப்போதான நமது கர்த்தருடைய பின்வரும் வார்த்தைகளிலிருந்தும் எடுத்துக்கொள்ளப்படலாம்: “இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் இராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்தேயு 26:29).
நமது கர்த்தருடைய மரணமானது ஈடுபலி விலைக்கிரயமாக இருந்தது என்று நம்புகிறவர்கள் அதை அறிக்கைப்பண்ணுவது, அதைத் தங்கள் நம்பிக்கைகள் அனைத்திற்குமான அடிப்படை என்று தெரியப்படுத்துவது ஏற்றக்காரியமாகவும், நலமளிக்கிற காரியமாகவும் இருக்கும். இதற்கான ஏற்றக்காலமானது, இக்காலத்திலேயே, அதாவது தேவ வார்த்தையினுடைய இந்த அடிப்படையான உபதேசமானது, திரித்துக் கூறப்படுவதும், தவறாய் விவரமளிக்கப்படுகிறதுமான இக்காலத்திலேயே ஆகும்.
எந்த ஒரு காரணத்தை முன்னிட்டும், எவரும் இந்த வருடாந்திர சிலாக்கியத்தினைப் புறக்கணித்திட வேண்டாமென்று நாம் வலியுறுத்துகிறோம். இதை ஆசரிக்கும் விஷயத்தில் விசேஷித்த ஆசீர்வாதம் உள்ளது. நீங்கள் சோர்வடைந்திருக் கிறீர்களானால், போய்ப் பிட்கப்பட்ட அப்பத்தில் பங்கெடுத்து, உங்கள் நீதிமானாக்கப்படுதலைக்குறித்தப் புதிதான உணர்ந்துகொள்ளுதலையும், ஒரே அப்பத்தின் – அவரது சபையின், அவரது சரீரத்தின் அங்கத்தினர்களென அவரோடுகூடப் பிட்கப்படுவதற்கான (பலிச்செலுத்தப்படுவதற்கான) உங்களது அர்ப்பணிப்பைக்குறித்த புதிதான உணர்ந்துகொள்ளுதலையும் கர்த்தரிடத்தில் கேளுங்கள்.
இப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, உணர்ந்துகொள்ளப்படவில்லையெனில், நினைவுகூருதலானது அர்த்தமற்றதாக (அ) பாதகமானதாகக் காணப்படும் என்பதை நாம் மறக்காமல் இருப்போமாக. ஆனால் பாவங்களோ, அனலற்றத் தன்மைகளோ, அபாத்திரன் என்ற உணர்வுகளோ, நம்மைத் தடைச் செய்யாதிருப்பதாக. கர்த்தரிடத்தில்போய் உங்கள் குறைவுகள் அனைத்தையும் மறைக்காமல் கூறிவிடுங்கள். உங்கள் சகோதர சகோதரிகளிடத்தில் (அ) நீங்கள் யாருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தீர்களோ, அவர்களிடத்தில்போய், அவர்கள் உங்களிடத்தில் தவறுகளை ஒப்புக்கொள்கிறார்களோ, இல்லையோ, நீங்கள் முழுமையாய் ஒப்புக்கொண்டுவிடுங்கள். உங்கள் கர்த்தருடன் ஒப்புரவாகிக்கொள்ளுங்கள் மற்றும் கூடுமானமட்டும் அனைத்து மனிதர்களுடனும் ஒப்புரவாகிக்கொண்டு வந்து புசியுங்கள் – ஆம் இப்பொழுது (அ) பின்னர் “ஏற்றக்காலத்தில்” ஏற்றுக்கொள்பவர் அனைவருக்குமான கர்த்தருடைய ஐசவரியமான ஏற்பாட்டில் பங்கெடுங்கள்.
இப்படியானதொரு இருதய ஆராய்தலும், சுத்திகரித்தலும், யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டதான பஸ்கா நிழலில் காண்பிக்கப்பட்டுள்ளதை நாம் நினைவுகூருகிறோம். தங்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியினைப் புசிப்பதற்கெனக்கூடிடுவதற்கு முன்னதாக, புளிப்பான அல்லது அழுகிப்போனதான ஏதாகிலும் பொருட்கள், எலும்புகள், ரொட்டித் துண்டுகள் காணப்படுகின்றதா என்று தங்களது குடியிருப்புகளில் எல்லாம் அவர்கள் தேடினார்கள். இவைகளெல்லாம் எரிக்கப்பட்டன – அழிக்கப்பட்டன. ஆகையால் நாமும் நிஜத்தை நிறைவேற்றி, கோபம், பகைமை, சண்டை, துர்க்குணம் எனும் “பழைய புளித்த மாவைப் புறம்பே கழித்துப்போட” வேண்டும் (1 கொரிந்தியர் 5:7,8).
இவ்வகை பாவம் எனும் புளிப்பானது, எரிக்கப்படாமல், முற்றிலுமாகப் புறம்பே கழித்துப்போடப்பட முடியாது என்பதையும், அன்பு – பரம அன்பு, தேவ அன்பு மாத்திரமே இதை எரித்துப்போட முடியும் என்பதையும் நினைவில் கொண்டிருக்க வேண்டும். இந்த அன்பானது, நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருந்தால், இது எதிர்ப் பண்புடைய அனைத்தையும், அதாவது பொறாமை, பகைமை, புறங்கூறுதல் முதலானவைகள் அனைத்தையும் பட்சித்துப் போட்டுவிடும். இவைகளையெல்லாம் புறம்பே கழித்துப் போட்டு, கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டு, அவரது ஆவியில் நிரம்பிடுவதற்கு அப்போஸ்தலன் வலியுறுத்துகின்றார். மனம் தளர்ந்துபோக வேண்டாம். பாடத்தைக் கற்றுக்கொண்டு, புதிய தீர்மானங்களுடனும், ஆண்டவருடைய உதவியில்லாமல், நீங்கள் நீங்களாகவே பரிசை ஒருபோதும் அடையமுடியாது என்ற உண்மையினைப்பற்றின அதிகமானப் புரிந்துகொள்ளுதலுடனும், மீண்டுமாகத் தொடருங்கள். மேற்கூறிய உண்மையினை நம்மைவிட அவர் நன்றாய் அறிவார் மற்றும் “என்னையல்லாமல் உங்களால் ஒன்றுஞ்செய்யக் கூடாது” என்று கூறுகின்றார். நமக்கான தேவையின் காரணமாகவே, பிதா நமக்கு இப்படியாக ஏற்பாடு பண்ணியுள்ளார். “தைரியங்கொண்டிருங்கள்!” என்பதே “ஜெயங்கொள்ளுகிற’ வகுப்பாரில் அடங்குவதற்கு நாடுகிற மற்றும் ஏங்குகிற அனைவருக்குமான ஆண்டவருடைய வார்த்தைகளாக இருக்கின்றது.
வருஷத்தினுடைய இந்த ஒரு காலப்பகுதியில் சோதனைகளானது, விசேஷமாய் அனுமதிக்கப்படுகின்றதாய் இருக்கின்றது. எப்போதும் “கசப்பான வேர்களானது முளைத்தெழும்பி,” வளர்வது வழக்கமாகும்; ஆனால் இந்த ஒரு காலப்பகுதியிலோ பத்து மடங்கு வலிமையோடு வளர்கின்றது. நம்முடைய சீஷத்துவத்திற்கான இறுதிப் பரீட்சையானது, அறிவின் விஷயத்தில் இல்லாமல் அன்பின் விஷயத்தில்தான் என்பதை நாம் நினைவில்கொள்வோமாக. “நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாய் இருங்கள் என்கிற புதிதானக் கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” அப்போஸ்தலர்கள் ஒருவரிலொருவர் போதுமானளவுக்கு அன்புக்கொண்டிராததாலேயே, இராஜ்யத்தில் யார் பெரியவராய் இருப்பார் என்று வாக்குவாதம் பண்ணினவர்களாகக் காணப்பட்டனர் மற்றும் அன்புக்கொண்டிராததாலேயே ஒருவருக்கொருவர் தாழ்த்திக்கொள்ள மாட்டோம் என்று மிகவும் தீர்மானமாய்க் காணப்பட்டு, இதனால் ஆண்டவருடைய பாதங்களையும் கழுவும் காரியத்தினைப் புறக்கணித்தவர்களாக, கனம் குறைந்த வேலையிலும், அவரே அனைவருக்கும் பணிவிடைக்காரராக இருக்கத்தக்கதாக, அவருக்கு வாய்ப்பளித்தவர்களாகக் காணப்பட்டனர். இந்தத் தவறான சிந்தையே, அதாவது கர்த்தருடைய சிந்தை இல்லாமையே, அவர்கள் எதிராளியானவனுடைய வல்லமையினால் தாக்கப்படுவதற்கு ஏதுவாயிற்று மற்றும் யூதாசைக் காட்டிக்கொடுப்பதற்கு ஏதுவாய் வழிநடத்திற்று மற்றும் பேதுரு தனது அபிஷேகிக்கப்பட்ட கர்த்தரை மறுதலிப்பதற்கு ஏதுவாயிற்று.
ஆகையால் நாம் சோதனைக்குள் விழுந்துவிடாதபடிக்கு நம்மைக்குறித்து நாம் எச்சரிக்கையாயிருப்போமாக; விழித்திருந்து ஜெபம்பண்ணுவோமாக; மிகுந்த தாழ்மையுடனும், மிகுந்த அன்புடனும் காணப்படுவோமாக. இயேசுவினுடைய பின்னடியார்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கும் (அ) அவர்களைச் சிக்கவைப்பதற்கும் (அ) அவர்களை இடறப்பண்ணுவதற்கும் நமது மாபெரும் எதிராளியானவன் அன்றுமுதல் இன்றுவரையிலும் அதிக உற்சாகத்துடன் காணப்படுகின்றான்.
நம்முடைய பாவங்களை நிவிர்த்திச் (திருப்தி) செய்கிற கிருபாதார பலியாய், அதாவது நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாய், அவரது விலையேறப்பெற்ற இரத்தம் காணப்படுகின்றது என்ற விசுவாசத்தின் நம்பிக்கையை உடையவர்கள் அனைவரும், இந்த உண்மையை அறிக்கைச் செய்வதில் முன்பில்லாதளவுக்கு அதிக வைராக்கியத்துடனும், ஊக்கத்துடனும் காணப்படுவார்களாக; “ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய (பலியாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே; ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” பெயரளவிலான எந்த முதற்பிறப்புகளும் கடந்து போகப்படுவதுமில்லை, மகிமையிலுள்ள முதற்பேறானவர்களின் சபையினுடைய அங்கத்தினர்களும் ஆகுவதில்லை; அந்த இரவில், நிழலில் நடந்ததுபோலவே இரத்தத்தின் கீழ்க் காணப்படாதவர்களும், உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியினுடைய புண்ணியங்களில் பங்கெடுக்காதவர்களுமானவர்கள் எவரும் முதற்பேறானவர்களின் சபையினுடைய அங்கத்தினர்கள் ஆகுவதில்லை.
கர்த்தருடைய இராப்போஜனம் என்பது, உலகத்துக்குரியதாயும், பெயரளவிலான விசுவாசிகளுக்குரியதாயும் இராமல், (1) கிறிஸ்துவை தங்களுடைய மீட்பராகவும், தங்களுடைய பாவத்தைச் சுமந்தவராகவும், ஏற்றுக்கொண்டவர்களும் மற்றும் (2) அவருக்கும், அவருடைய ஊழியத்திற்கும் எனத் தங்களை அர்ப்பணம் பண்ணினவர்களுமாய் இருப்பவர்களுக்கு மாத்திரம் உரியதாகும். ஆனால், இதில் யார் பங்குகொள்ளலாம் அல்லது பங்குகொள்ளக்கூடாது என்று தீர்மானம் பண்ணுவது நமக்குரிய அல்லது எந்த மனுஷனுக்குரிய அல்லது ஒரு கூட்டத்தாருக்குரிய வேலையல்ல. “அப்பத்திலும்,” “பாத்திரத்திலும்” பங்குகொள்வதற்கான சரியான தகுதிகள் என்ன என்பதை கர்த்தருடைய வார்த்தையிலிருந்து சுட்டிக்காண்பிப்பதும், “எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன்” என்று அப்போஸ்தலன்போன்று கூறுவதும் நமக்குரிய கடமையாகும் (1 கொரிந்தியர் 11:28).
இப்பொழுது தேவனுடைய ஜனங்கள் இருண்ட யுகங்களினுடைய தவறான உபதேசங்களிலிருந்து வெளிவந்துகொண்டிருப்பதினாலும், இப்பொழுது இந்த நினைவுகூருதலின் விஷயங்கள் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளப் படுவதினாலும், ஒருவர் தன்னைச் சுய பரிசோதனைப் பண்ணிக்கொள்ளும் அல்லது நிதானித்துக்கொள்ளும் காரியம்கூட முன்பைக்காட்டிலும் இப்பொழுது மிக முழுமையாகக் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் பின் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களைத் தன்னிடத்திலேயே கேட்டுக்கொள்ளவார்களாக:
(1) மனித குடும்பத்தில் நான் ஓர் அங்கமாக இருக்கின்றபடியால், ஆதிப்பாவத்தின் காரணமாக எல்லார்மேலும் கடந்துவந்த மரணத்திற்கு ஏதுவான அந்த ஆக்கினைத் தீர்ப்பின் கீழ், நானும் காணப்பட்டேன் என்று வேதவாக்கியங்கள் போதிக்கும் காரியங்களை நான் நம்புகின்றேனா?
(2) இந்தப் பாவம் மற்றும் மரணத் தண்டனையினின்று நான் தப்பித்துக்கொள்வதற்கு எனக்கு இருக்கும் ஒரேவழி, என்னுடைய கர்த்தராகிய மனுஷனாகிய கிறிஸ்து இயேசுவினால் கொடுக்கப்பட்ட ஈடுபலியின் வழியாகவே உள்ளது என்று நான் நம்புகின்றேனா?
(3) அவர் நம் பொருட்டு தம்மையே அதாவது, அவருடைய மாம்சத்தையும், இரத்தத்தையும், மனுஷீகத்தையும் ஈடுபலிக்கான கிரயமாகக் கொடுத்தார் என்றும், அவர் தமது ஆத்துமாவை மரணத்தில் ஊற்றி, தம்முடைய ஆத்துமாவை பாவத்திற்கான பலியாகக் கொடுத்தார் என்றும் நான் நம்புகின்றேனா? (ஏசாயா 53:10-12)
(4) அவர் யோர்தானில் ஞானஸ்நானம் எடுத்தப்போது ஆரம்பமான, மரணம் வரையிலான அவருடைய அர்ப்பணமானது, மனுக்குலத்திற்காக அவர் தம்மையே பலிசெலுத்தினது மூலம், சிலுவையில் அவர் மரித்தபோது, நிறைவேறி முடிந்தது என்று நான் நம்புகின்றேனா?
(5) நியாயப்பிரமாணத்திற்கு அவர் கீழ்ப்படிந்ததின் காரணமாக அவர் சுதந்தரித்துக்கொண்ட (நித்தியஜீவன் மற்றும் உலகத்தின்மீது ஆளுகை எனும்) உரிமைகளை அவர் இப்படியாக, பலியானதின் மூலம் இறுதியில் புதிய – உடன்படிக்கையின் கீழ் ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்ளுகின்ற அனைவருக்கும் – விழுந்துபோன மற்றும் மரித்துக்கொண்டிருக்கும் மனுக்குலத்திற்கு கொடுத்துவிட்டார் என்பதை நான் புரிந்துள்ளேனா?
(6) இவ்விதமாக பலிச் செலுத்தப்பட்ட அவருடைய மாம்சமும், இரத்தமும் இவைகள் விலைக்கிரயமாகக் கொடுக்கப்பட்டுப் பெற்றுக்கொள்ளப்பட்ட அந்த ஆசீர்வாதங்களுக்கும், கிருபைகளுக்கும் அடையாளமாக இருக்கின்றது என்பதை நான் புரிந்துள்ளேனா?
[R5193 : page 71]
(7) அவருடைய மாம்சத்திற்கும், அவருடைய இரத்தத்திற்கும் அடையாளச்சின்னங்களாக இருக்கும் அப்பம் மற்றும் திராட்சரசத்தில் பங்குகொள்ளும் காரியமானது, என்னுடைய கர்த்தரின் மாம்சம் மற்றும் இரத்தம் எனக்காகவும், அனைவருக்காகவும் பெற்றுத்தந்த அந்த ஆசீர்வாதங்களையும், கிருபைகளையும் நான் ஏற்றுக்கொள்வதைச் சுட்டிக்காட்டுகின்றது என்பதை நான் புரிந்துள்ளேனா?
(8) ஒருவேளை இவ்விதமாய் நினைவுகூரப்பட்டதான ஈடுபலியை நான் இருதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு இருப்பேனாகில், இந்த ஈடுபலியின் மீதான விசுவாசத்தின் காரணமாக நீதிமானாக்கப்பட்ட என்னை – என்னுடைய மாம்சத்தையும், இரத்தத்தையும் கர்த்தரோடுகூடப் பிட்கப்படும்படிக்கும், அவரோடுகூடப் பாடுபடும்படிக்கும், அவரோடுகூட மரிப்பதற்கும் கர்த்தருக்கென்று முழுமையாய் நான் அர்ப்பணம் பண்ணியுள்ளேனா?
ஒருவேளை இக்கேள்விகளுக்கு நம்மால் தீர்க்கமான பதில் கொடுக்க முடியுமெனில், நாம் கர்த்தருடைய சரீரத்தைக்குறித்து முழுத் தெளிவுடனும், மற்றும் அவருடைய பலிக்கு மரியாதைக் கொடுக்கிறவர்களாகவும் காணப்படுகின்றோம். மேலும், நாம் அதைப் புசிக்கலாம் – கண்டிப்பாய்ப் புசிக்க வேண்டும்- “நீங்கள் எல்லாரும் இதிலே புசியுங்கள்.”
பாவத்திற்கும், பாவிகளுக்கும் ஓர் ஈடுபலி அவசியம் எனும் காரியத்தை மறுப்பவர்களும், கிறிஸ்துவின் புண்ணியத்தில் பங்கடைவது தங்களுக்குத் தேவையில்லை என்றும் எண்ணுபவர்களும், ஒருவருடைய புண்ணியம், மற்றவருக்குத் தரிப்பிக்க முடியும் எனும் காரியத்தை மறுப்பவர்களும், கிறிஸ்துவின் நீதியினால் கிடைத்திட்ட கலியாண வஸ்திரத்தைக் களைந்து போட்டவர்களும், தங்களுடைய சொந்த நீதியாகிய அழுக்கான கந்தைகளை அணிவதில் “சந்தோஷத்துடனும்,” “சுதந்திர உணர்வுடனும்” காணப்படுபவர்களும், தங்களைப் பரிசுத்தம்பண்ணின விலையேறப்பெற்ற இரத்தத்தை இப்பொழுது பரிசுத்தமற்றது அல்லது சாதாரணமான ஒன்றாக எண்ணுபவர்களும் – தாங்கள் விசுவாசிக்க இனி மறுப்புத் தெரிவிக்கின்ற இந்த நினைவுகூரும் காரியத்திலிருந்து விலகிக்கொள்ளும்படிக்கு நாம் அறிவுரை கூறுகின்றோம். ஏனெனில், ஒருவேளை அவர்கள் பங்குகொள்வது அவர்களது, விசுவாசமற்ற நிலையில் இன்னும் மாய்மாலத்தைக்கூட்டி வழங்கிவிடுவதாகிவிடும். இப்படிப்பட்டவர்கள் பங்குகொள்வது என்பது, தங்கள்மீதும், ஈடுபலி இல்லை என்ற தங்களுடைய கோட்பாடுகளின்மீதும் கண்டனம் சுமத்திக்கொள்வதற்கு ஏதுவாகிவிடும்.
[R5194 : page 71]
மாபெரும் எதிராளியானவனுடைய பல்வேறு வழிகள் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட தவறான வாதங்கள் மூலமாக, இந்தத் தப்பறைகளுக்குள் சிக்கினவர்களாக மாத்திரம் காணப்படும் அனைவருக்கும் நாம் அறிவுரை கூறுவது என்னவெனில்: வீணான அனைத்து மனித தத்துவ ஞானங்களை/கோட்பாடுகளை உதறித்தள்ளி, மீண்டுமாக எளிமையான தேவ வார்த்தைகளையும், அதினால் முன்வைக்கப்படும் சத்தியங்களையும் ஏற்றுக்கொள்வதுமாகும்; தேவ வார்த்தைகளினால் முன்வைக்கப்படும் சத்தியங்கள் என்னவெனில்: அனைவரும் விழுந்துள்ளனர் என்பதும், தெய்வீகப் பிரமாணத்திற்கும், தீர்ப்பிற்கும் இசைவாக நம்முடைய ஒப்புரவாகுதலுக்கும், சீர்த்தூக்கப்படுதலுக்குமான ஒரே வழி நம்முடைய பாவங்களுக்கான ஈடுபலியை (அ) முழுமையான மற்றும் துல்லியமான சரிநிகர்சமான விலையைக் கொடுப்பதேயாகும் என்பதும், இதுதவிர வேறெந்த வழியிலும் அவரால் நீதியுள்ளவராகவும், பாவிகளை நீதிமானாக்குகிறவருமாயும் காணப்பட முடியாது என்பதும் ஆகும். மேற்கூறப்பட்டவர்கள் நமது கர்த்தர் இயேசு தேவ ஆட்டுக்குட்டியென, நம்முடைய பாவங்களுக்கான முழுத் தண்டனையை அவர் மரத்தில், தம்முடைய சரீரத்தில் சுமந்தார் என்றும், அனைவருக்குமான முழுமையான ஈடுபலியை அவர் கொடுத்தார் என்றுமுள்ள உண்மைகளை அடையாளம் கண்டுகொள்வார்களாக.
கொள்கை மிகவும் எளிமையானதாகும்; ஆனால் ஒருவேளை அதைச் சிலரால் கிரகித்துக்கொள்ள முடியவில்லையெனில், இப்படியானவர்கள் தேவன் இப்படியாய்த் தெரிவித்துள்ளார் என்ற உண்மையையாகிலும் கிரகித்துக்கொள்வார்களாக மற்றும் கர்த்தரிடத்தில் திரும்புவார்களாக மற்றும் அவரும் திரளாய் மன்னிப்பார். இப்படியானவர்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது தேவனுடைய கிருபை அனைத்திற்குமான இந்த அஸ்திபாரத்தை இன்னதென்று சகல பரிசுத்தவான்களோடுங்கூட உணர்ந்துகொள்ளத்தக்கதாகப் பரிசுத்த ஆவியினுடைய வழிகாட்டுதலையும், கண்களின் அபிஷேகிக்கப்படுதலையும் கேட்பார்களாக. இப்படியாகப் பிட்கப்பட்ட அப்பத்தையும், சிந்தப்பட்ட இரத்தத்தையும் உண்மையாய் ஏற்றுக்கொண்டு, அதாவது தங்கள் பாவங்களுக்காகவே பலிச்செலுத்தப்பட்டுள்ளது என்றும், சிந்தப்பட்ட இரத்தமானது (கொடுக்கப்பட்ட ஜீவனானது) அனைவருக்குமான மன்னிப்பை உறுதிப்படுத்துகின்றது என்றும் உணர்ந்து, இப்படிப்பட்டவர்கள் சரித்திரத்தின் மாபெரும் நிகழ்வை, அதாவது நம்முடைய பாவங்களுக்காக தேவனுடைய நேசக்குமாரனின் விலையேறப்பெற்ற இரத்தம் சிந்தப்பட்டதையும், அவரது விலையேறப்பெற்ற ஜீவன் பலிச்செலுத்தப்பட்டதையும் நினைவுகூர்ந்து ஆசரிப்பார்களாக. “தெளிக்கப்பட்ட இரத்தத்தின்” கீழிலிருந்து அறிந்தும், மனப்பூர்வமாகவும் வெளியேறுகிறவர்களை, இந்த வார்த்தைகளும் சரி (அ) வேறெந்த வார்த்தைகளும் சரி – வழியினிடத்திற்கும் / சத்தியத்தினிடத்திற்கும், ஜீவனிடத்திற்கும் திருப்புவது என்பது கூடாதகாரியம் என்று தேவனுடைய வார்த்தைகளிலிருந்து நாம் அறிகின்றோம். அப்படியானவர்களுக்கு எந்தக் கடந்துபோகுதலும் கிடையாது. “மனந்திரும்புவதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்” (எபிரெயர் 6:4-10; 10:26-30). நம்மிடமிருந்து வரும் இந்த அன்புடன்கூடிய புத்திமதியும், வேதவாக்கியங்களை உண்மையாய்ச் சுட்டிக்காட்டுதலுங்கூடக் கர்த்தருக்கும் மற்றும் சத்தியத்திற்கும் மற்றும் பகுத்தறிவில்லாமல் இடறுகிற சகோதரர்கள் (அ) சகோதரிகளுக்கும் ஊழியம் புரிந்திடுவதற்கான வாஞ்சை எனும் உண்மையான நம்முடைய நோக்கத்தின் காரணமாய்க் கொடுக்கப்படுகிறது என்று பார்க்கப்படுவதற்குப் பதிலாக, (நம்முடைய) பகைமை, துர்க்குணம், பொறாமை மற்றும் அனைத்து விதமான பொல்லாப்புகளினால் உண்டானது என்று கருதப்படும் என்பதையும் நாம் நன்கு அறிவோம்.
ஈடுபலியினுடைய கொள்கையினை முழுமையாய் உணர்ந்துகொள்ளாத நிலையில், ஆனால் நமது மீட்பருடைய மரணமானது, நம்மை நம்முடைய குற்றங்களிலிருந்து நிவிர்த்திபண்ணி, குற்றத்திற்கான தண்டனையினின்று நம்மை விடுவித்தது என்ற உண்மைக்குறித்த பயபக்தியுடன்கூடிய உணர்ந்துகொள்ளுதலுடன் கடந்தகாலங்களில் அநேகர் கர்த்தருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் அடையாளப்படுத்தும் அடையாளங்களில் பங்கெடுத்துள்ளனர். இப்படியானவர்கள் நினைவுகூருதலின் உண்மையான அர்த்தத்தினை உய்த்துணர்ந்துள்ளனர்; எனினும் சத்தியத்துடன்கூடக் காணப்படும் மிகுதியான தப்பறைகளின் காரணமாக, இவர்களால், நாம் இப்பொழுது உணர்ந்துள்ளதான அதன் எளிமையான கொள்கையினை உணர்ந்துகொள்ள முடியவில்லை.
சில பேப்டிஸ்ட் (Baptist) சகோதரர் பின்வருமாறு குறிப்பிடலாம்: நினைவுகூருதல் இராப்போஜனத்தில் பங்கெடுப்பதற்கு, ஞானஸ்நானம் அவசியமான தகுதியாய் இருக்கின்றது என்பதைக் குறிப்பிடுவதற்கு நீங்கள் மறந்துவிட்டீர்கள்.
இல்லை, நாங்கள் ஞானஸ்நானத்தை மறந்துபோகவில்லை. ஞானஸ்நானம் என்பது அவசியம் என்றும், நினைவுகூருதல் இராப்போஜனமானது சபைக்கு மாத்திரமே உரியது என்றும், சபையாகுவதற்கு முன்னதாகவே, ஒருவருக்கு ஞானஸ்நானம் அவசியம் என்றும், நாங்கள் உங்களோடுகூட ஒத்துக்கொள்கின்றோம். ஆனால் சபை என்றால் என்ன என்பது தொடர்புடைய விஷயத்தில், நாங்கள் உங்களிடமிருந்து வேறுபடுகின்றோம். பேப்டிஸ்ட் சபையானது (Baptist Church) சபையல்ல என்று நாங்கள் எண்ணுகின்றோம். மற்றெல்லா சபைகளானது விழுந்துபோன மனிதர்களினால் ஏற்படுத்தப்பட்டு, நடத்தப்படுவதுபோலவே, பேப்டிஸ்ட் சபையும் “கோதுமைகளையும்”, *களைகளையும்” கொண்டிருக்கின்றது; ஆனால் சபையானது, கோதுமையை மாத்திரமே பெற்றிருக்கும். கிறிஸ்தவ மண்டலத்தினுடைய எந்த ஒரு பிரிவும், அதினிடத்தில் எந்தக் “களைகளும்” இல்லாமல், அனைத்துமே “கோதுமைகளாக” இருக்கின்றது என்று கூறமுடியாது. பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டுள்ளதான சபையானது “கோதுமைகள்” அனைத்தையும் கொண்டிருக்கின்றது மற்றும் “களைகளை” அதன் பட்டியலில் பெற்றிருப்பதில்லை. இந்த ஒரு சபையையே, நமது கர்த்தர் ஸ்தாபித்தார் மற்றும் இதில் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அனைவரும் கடந்துபோகப்பட்டவர்களாகிய சபை “பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சபையே” அங்கத்தினர்களாய் இருப்பார்கள் (எபிரெயர் 12:23).
இதுபோலவே ஞானஸ்நானத்தைக்குறித்த உங்களது வலியுறுத்தலும் எங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வேதவாக்கியங்களுடைய கண்ணோட்டமானது, உங்களுடையதைக்காட்டிலும் மிகவும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. “முதற்பேறானவர்களின் சபையினுடைய” அங்கத்தினர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாதவர்களை எல்லாம், உங்கள் பேப்டிஸ்ட் சபையில் நீங்கள் அங்கத்தினர்களாகப் பெற்றிருக்கின்றீர்கள். அப்படியானவர்கள் தண்ணீர் ஞானஸ்நானம் என்ற உங்களது பரீட்சையினைக் கடந்துவிட்டனர்; ஆனால் அவர்கள் பரலோகத்தில் தங்கள் பெயர்களை எழுதப்பெற்றவர்களாகிய சபையினுடைய அங்கத்தினர்கள் அனைவருக்கும் அவசியமான மாபெரும் ஞானஸ்நானம் எனும் பரீட்சையினைக் கடக்காதவர்களாகக் காணப்படுகின்றனர். உண்மையான ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளான முழுகுதலின் மூலமும், அவரது சாயலிலான உயிர்த்தெழுதலின் மூலமும் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக, சபைக்குள்ளான ஞானஸ்நானமாகும். தண்ணீர் ஞானஸ்நானம் என்பது கிறிஸ்துவின் சித்தத்திற்குள்ளான மனித சித்தத்தினுடைய உண்மையான முழுகுதலுக்கு அருமையான அடையாளமாய் இருக்கின்றது மற்றும் மரணம்வரையிலுமான பலிச்செலுத்துதலுக்கு அருமையான விளக்கமாகவும் காணப்படுகின்றது; எனினும் எப்படி இராப்போஜனத்தில் நாம் புசிக்கின்றதான அப்பமும், திராட்சரசமும், நமது கர்த்தருடைய பலியின் உண்மையான ஜீவன் கொடுக்கும் அம்சங்களாக இல்லாமல், மாறாக அவைகளின் அடையாளங்களாக மாத்திரம் காணப்படுவதுபோன்று, தண்ணீர் ஞானஸ்நானமும் வெறும் அடையாளமேயாகும்.
ஆகையால் சபையாகிய, முழுகப்பட்டவர்கள் மாத்திரமே இராப்போஜனத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதை நாம் ஒத்துக்கொள்கின்றோம்; இன்னுமாக உண்மையில் முழுகினவர்கள் என்பவர்கள் தங்கள் சித்தங்களை மரிக்கப் பண்ணினவர்களாகவும், கிறிஸ்துவின் சித்தத்திற்குள்ளாக அடக்கம் பண்ணினவர்களாகவும், அவருக்குள் புதிய சிருஷ்டிகளெனப் புதிதான ஜீவன் உள்ளவர்களாய் நடந்துக்கொள்ளும்படிக்கு எழுந்தவர்களாகவும், தங்களது ஓட்டமானது சொல்லர்த்தமான மரணத்தில் நிறைவுபெறுவதற்கும், முதலாம் உயிர்த்தெழுதலில் உண்மையான புதிய ஜீவன்களாக விழித்தெழுவதற்கும் காத்திருப்பவர்களாகவும் இருப்பவர்கள் என்று நாம் அடையாளம் கண்டுகொள்கின்றோம். இப்படியானவர்கள் அனைவரும் யாராக இருந்தாலும் சரி, எங்குக் காணப்பட்டாலும் சரி, இவர்கள் ஞானஸ்நான அடையாளத்தைப் பண்ணியிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இவர்களே கிறிஸ்துவினுடைய சரீரமாகிய சபையின் உண்மையான அங்கத்தினர்கள் ஆவர். ஆம் இப்படியான அர்ப்பணிக்கப்பட்டவர்கள், தங்கள் சொந்த சித்தத்திற்கு மரித்து, கிறிஸ்துவின் சித்தத்திற்கு மாத்திரமாக ஜீவனுடையவர்களாய் இருப்பவர்கள், நமது கர்த்தருடைய அறிவுரையானது தண்ணீர் ஞானஸ்நானத்தையும் (அ) அடக்கம்பண்ணுதலையும், மற்றும் தங்கள் சித்தங்களை அடக்கம் பண்ணுவதையும் உள்ளடக்குவதைக் காண்கையில், தங்கள் தலையும், கர்த்தருமானவரை அனைத்து விஷயங்களிலும் பின்பற்றிடுவதற்கும், அவருக்குக் கீழ்ப்படிந்திடுவதற்கும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்; அதிலும் விசேஷமாகத் தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, தாங்கள் “விசுவாசிகளாய்” இருக்கவில்லை” என்பதையும், தண்ணீர் துளிகள் தெளிக்கப்படுவது என்பது எந்த விதத்திலும் அடக்கத்தையும், உயிர்த்தெழுதலையும் அடையாளப்படுத்தாது என்பதையும் இப்பொழுது இவர்கள் உணர்ந்திருக்கையில் கர்த்தரை அனைத்து விஷயங்களிலும் பின்பற்றிடுவதற்கும், அவருக்குக் கீழ்ப்படிந்திடுவதற்கும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். இவர்கள் நினைவு கூருதலின் இராப்போஜனத்தில் பங்கெடுப்பதற்கு முன்னதாக (நமது கர்த்தரினாலும், அப்போஸ்தலர்களினாலும் நமக்குச் சுட்டிக்காட்டப்பட்டதுபோல) கூடுமானால் தண்ணீரிலும் அடக்கம் பண்ணப்பட வேண்டுமென்று தேவனுடைய வார்த்தைகளில் இடம் பெறுகின்றதான இந்தக் கட்டளையின் மதிப்பையும், அருமையையும் கண்டுகொள்வார்கள். வேதாகமப் பாடங்களினுடைய ஆராய்ச்சியின் தொகுதி-VI-இல் (Volume-6), அத்தியாயம் 10-இல், இடம்பெறும் “புதுச் சிருஷ்டியினுடைய ஞானஸ்நானம்” எனும் பாடத்தைப்பார்க்கவும்.
உண்மையான “கோதுமை” மாத்திரமே கர்த்தருடைய பந்தியில் காணப்படுவார்கள் என்று நாம் எதிர்ப்பார்த்திட முடியாது; எப்படி யூதாஸ் முதல் கூடுகையில் கலந்துகொண்டானோ அப்படியே சில “களைகள்” கூட வருவார்கள் என்றே நாம் எதிர்ப்பார்க்கலாம். ஆனால் நம்மால் இருதயத்தைக் [R5194 : page 72] கணிக்கமுடியாது என்பதினாலும், “களைகளினின்று,” “கோதுமையை” நம்மால் பிரிக்க முடியாது என்பதினாலும், இந்தப் பாடம் தொடர்புடையதாகத் தேவனுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டதான “தேவனுடைய ஆலோசனைகள் அனைத்தையும் அறிவிப்பதன்” மூலமாக எங்கள் கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, ஒப்புரவாகுதலின் இரத்தத்தின் மீதான தனது விசுவாசத்தைக்குறித்தும், மீட்பரிடத்திலான தனது அர்ப்பணிப்புக்குறித்தும் அறிக்கைப் பண்ணிக்கொள்கின்றதான ஒவ்வொருவனும் தான் பங்கெடுக்கலாமா அல்லது வேண்டாமா என்கிறதை முடிவுபண்ணும் விஷயத்தினை அவனவனிடத்திலேயே விட்டுவிடுகின்றோம்.
உங்களைத்தவிர, உங்கள் அயலகத்தார் மத்தியில் தேவனுடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்கள் எவரேனும் இருப்பார்களானால், அதை நீங்கள் அறிவீர்கள். அவர்களுக்காகவும், சத்தியத்திற்காகவுமான உங்களது உண்மையான அன்பானது, நீங்கள் சத்தியத்தைப் பெற்றுக்கொண்ட பிற்பாடு, அவர்களைச் சத்தியத்தினால் ஆசீர்வதிக்கத்தக்கதாக நீங்கள் நாடிடுவதற்கு உங்களை வழிநடத்தியிருந்திருக்கும். நீங்கள் ஐக்கியமும், உறவும் கொண்டிருக்கும் அப்படியானவர்கள், உங்களோடுகூட நினைவுகூருதலில் கலந்துகொள்வதற்கு நீங்கள் அழைத்திடலாம்; ஆனால் அவர்கள் ஈடுபலியை மறுக்கிறவர்கள் என்று நீங்கள் அறிவீர்களானால், அத்தகையவர்கள்மீது கூடுதல் ஆக்கினைத் தீர்ப்பு வருவதற்கு நீங்கள் உதவுகிறவர்களாக இராதபடிக்கு, அவர்களை அழைக்க வேண்டாம்.
சூழ்நிலைகளுக்கேற்ப கொஞ்சமானவர்களோடு அல்லது அநேகருடன் கூடிக்கொள்ளுங்கள்; ஆனால் கிறிஸ்துவுக்குள்ளான உறவின் மற்றும் ஐக்கியத்தின் ஆவி இல்லாத கும்பலோடு கூடிக்கொள்வதற்குப்பதிலாக, உங்களோடுகூட நினைவுகூருதலின் சிந்தையில் காணப்படுபவர்களாகிய கொஞ்சம் பேருடன் கூடிக்கொள்வது சாலச்சிறந்தது.
இந்த ஒரு தருணத்திற்குக் கர்த்தர் பயன்படுத்தினது போன்றதும், இப்பொழுது எபிரெயர்களால் பயன்படுத்தப்படுகின்றதுமான புளிப்பில்லாத அப்பத்தை (ரொட்டி- crackers) ஏற்பாடு பண்ணிக்கொள்ளலாம்; ஏனெனில் தூய்மையான/இனிப்பான, புளிப்பற்ற அப்பமானது (புளிப்பு அடையாளப்படுத்தும்) பாவம் அறியாதவரும், பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவருமான, தேவ ஆட்டுக்குட்டியினுடைய பாவமற்ற மாம்சத்தினை நன்கு அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. கர்த்தர் சுட்டிக்காட்டியுள்ளதுபோன்று “திராட்சப்பழரச” பானத்தை ஏற்பாடு பண்ணிக்கொள்ளுங்கள். சந்தேகத்திற்கிடமின்றி கர்த்தரும், சீஷரும் லைட் ஒயினை (Light Wines: 12.5%-க்கு குறைவான மதுசாரம் கொண்ட திராட்சரசம்) பயன்படுத்தினார்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமின்றி திராட்சரசமானது (wine) மிகப் பொருத்தமான அடையாளம் என்று கருதுகின்றோம். ஆனால் நமது கர்த்தர் திராட்சரசத்தை (wine) நிபந்தனை விதியாமல் திராட்சப்பழரசம் (fruit of the vine) என்று குறிப்பிடுவதால், திராட்சப்பழங்களை உலர வைப்பதன்மூலம் கிடைக்கும் உலர் திராட்சைகளைக் கொதிக்க வைத்து, வடிக்கட்டி எடுக்கும் இரசத்தினைப் பயன்படுத்துவதற்கு, மறுப்புத் தெரிவிப்பதற்கு நம்மிடத்தில் ஒன்றுமில்லை. நிச்சயமாய் இதுவும் (புளிப்பேற்றப்பட்ட திராட்சரசம் (wine) போன்று, திராட்சப்பழரசமே (fruit of the vine) ஆகும்.
(புளிப்பேற்றப்பட்ட) திராட்சரசத்தை (wine) பயன்படுத்திடுவதனைக் கடமை உணர்வின் காரணமாக விரும்புகிறவர்களிடத்தில், இந்த உலர் திராட்சப்பானத்தை (Raisin-liquor) நாம் வற்புறுத்துவதில்லை; ஆதித் திருச்சபையினரிடமிருந்து நம்முடைய சூழ்நிலைகள், பழக்கங்கள், தட்பவெட்ப நிலைகள் முதலானவைகள் மிகவும் வேறுபடுகின்றது என்பதை அனைவருக்கும் நாம் நினைப்பூட்டுவதற்கு மாத்திரம் விரும்புகின்றோம்; மற்றும் பரிசுத்தவான்களில் சிலர் மாம்சத்தின் சுதந்தரிக்கப்பட்ட பெலவீனங்களை உடையவர்களாய் இருக்கின்றனர் என்றும், ஒருமுறை சுவைத்தல் என்பது மாபெரும் சோதனைக்கு ஏதுவாய் மீண்டும் தூண்டிவிடுகிறதாய் அமையும் என்றும் விசேஷமாய் அறிந்த நிலையில், நம்முடைய நாட்களிலுள்ள அநேக வெறியூட்டும் திராட்சரசங்களைக் (wines) கர்த்தருடைய இரத்தத்திற்கு அடையாளமாய் நாம் பயன்படுத்திடுவதற்கு அவர் சித்தமாய் இருப்பாரோ என்று நாம் ஐயப்படலாமோ. “ஒவ்வொருவரும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலை போடலாகாது என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்” (ரோமர் 14:13). ஒருவேளை (புளிப்பேற்றப்பட்ட) திராட்சரசமானது மனமாற விரும்பப்படுகிறதெனில், லைட் ஒயினை தெரிவு செய்யுங்கள் அல்லது உலர் திராட்சரசத்துடன் சிறிதளவு திராட்ச ரசத்தை (wine) கலந்து கொள்ளுங்கள்.
நினைவுகூருதலின் ஆராதனையானது, மிகவும் எளிமையாய்க் காணப்பட வேண்டும்; அது பிரதானமாய் ஐக்கியத்திற்கான காலப்பகுதியாகும். அப்பம் மற்றும் திராட்சரசத்திற்கென்று சபையார் நடுவில் ஒரு மேஜையை ஏற்பாடு பண்ணிடுங்கள். ஒரு துதிப்பாடலைப் பாடின பிற்பாடு, சகோதரரில் ஒருவர் ஆராதனையின் நோக்கத்தினை, குறிப்பிட்ட சில வார்த்தைகளில் கூறிவிட்டு, இக்காரியம் தொடர்புடையதாக வேதவாக்கியங்களிலிருந்து சில வசனங்களை வாசித்திட வேண்டும். இன்னொருவர் நமது கர்த்தருடைய பிட்கப்பட்ட சரீரமாகிய ஜீவ அப்பத்திற்காக ஸ்தோத்திரித்திட வேண்டும்; இதன் பின்னர்ப் புளிப்பில்லாத அப்பமானது (அல்லது வசதியாக இருக்குமானால் சோடா ரொட்டியானது biscuits) கலந்துகொள்ள வந்திருக்கும் அனைவரிடத்திலும் கொடுக்கப்படுவதாக. ஜீவ – soda அப்பத்தைக்குறித்துக் கருத்துக்கள் குறிப்பிடுவதற்கு (அ) வேதாகம பாடங்களின் ஆராய்ச்சியில், தொகுதி-VI-இல் (Volume-VI), XI-ஆம் அத்தியாயத்தின் சாராம்சம் சொல்லப்படுவதற்கான வாய்ப்பு இப்பொழுது வழங்கப்படலாம். அடுத்ததாக “பாத்திரத்திற்காகவும்,” அது அடையாளப்படுத்தும் விலையேறப்பெற்றதான இரத்தத்திற்காகவும் ஸ்தோத்திரத்துடன்கூடிய ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். “திராட்சப்பழரசமுள்ள” பாத்திரமானது பரிமாறப்படுவதாக. இப்பொழுது விலையேறப்பெற்ற இரத்தம்பற்றின கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதற்கு வாய்ப்புக் கொடுக்கப்படலாம். ஆனால் இந்தக் கூடுகையில், கலந்தாய்வுகளானது தவிர்க்கப்படுவதாக. விசுவாசத்திற்காக உண்மையாய்ப் போராடுவது மற்றத் தருணங்களிலெல்லாம் எவ்வளவுதான் ஏற்றதாய்க் காணப்பட்டாலும், இது அப்படியான ஒரு தருணமல்ல. இது கர்த்தரும், நம்முடைய மீட்பரும், வந்திருக்கும் இராஜாவுமானவரிடத்தில் ஐக்கியம் மற்றும் உறவுக்/அந்நியோனியம் கொள்வதற்கானத் தருணமாகும். எவனாகிலும் வாக்குவாதஞ் செய்ய மனதாயிருந்தால், அவன் பேசட்டும்; மற்றவர்களோ நம்முடைய ஆசீர்வாதத்திற்கென ஆண்டவர் நியமித்த அவருடனான விசேஷித்த ஐக்கியத்திற்கான பரிசுத்தமான தருணங்களானது கெடாதபடிக்கு விவாதத்திலிருந்து விலகிக்கொள்வார்களாக.
[R5195 : page 72]
நினைவுகூருதலை உண்மையான, வஞ்சகமற்ற இருதயங்களுடன் ஆசரிப்பவர்கள், மாபெரும் மற்றும் புத்துயிர் அளிக்கின்றதான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள் மற்றும் இதற்காகவே ஆராதனையின் நடுவில், யாருமே சத்தமாய்ப் பேசாதபோது, அமைதியான தருணங்களைப் பெற்றிருப்பது நலமாயிருக்கும்; அதாவது ஐக்கியத்தினாலும் கடந்தகாலங்களிலும், தற்போதுமுள்ள அவரது அன்பினை உணர்ந்துகொள்ளுதலினாலும், மரணம்வரையிலுமாக அவரது உண்மையான பின்னடியார்களாக இருப்பதற்கெனப் பண்ணப்பட்டதான வாக்குறுதியினைப் புதுப்பித்துக்கொள்ளுதலினாலும், கடந்த வருடத்தில் எவ்வாறு அந்த வாக்குறுதியானது காப்பாற்றப்பட்டது (அ) மீறப்பட்டது என்று சிந்திப்பதினாலும், நமது கர்த்தரோடுகூட உடன்சுதந்திரர்களெனப் பரிசினைப் பெற்றுக்கொள்வதற்கென நாம் அழைக்கப்பட்டதான ஓட்டத்தில் பொறுமையோடுகூட ஓடிடுவதற்கு மீண்டும் தீர்மானிப்பதினாலும், அனைவருடைய இருதயங்களானது ஆண்டவருடன் மிகவும் நெருங்கிவர முடிகிற அமைதியான தருணங்களைப் பெற்றிருப்பது நலமாயிருக்கும்.
நம்முடைய பாடல் புஸ்தகத்திலுள்ள, 276-ஆம் துதிப்பாடலானது, நினைவுகூருதலை நிறைவு செய்வதற்கு அருமையாய்ப் பொருந்துகின்ற துதிப்பாடலாய்க் காணப்படுகின்றது. நமக்கொத்த விசுவாசத்தில் உலகமெங்கும் காணப்படும் சிலர் இதே மாபெரும் பலியை நினைவுகூர்ந்து ஆசரிக்கின்றனர் என்றும், அதே கிருபையான கர்த்தரை நினைவுகூருகின்றனர் என்றும், அதே மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களினால் தேற்றப்படுகின்றனர், ஊக்குவிக்கப்படுகின்றனர் என்றும், அதே கிருபையான இராஜாவினுடைய கிருபையினால், மாபெரும் பணிவிடைகள் புரிந்திடுவதற்கும், அவரது ஊழியத்திலும், அவரது ஜனங்களுக்கான ஊழியத்திலும் மாபெரும் பலிகளை ஏறெடுத்திடுவதற்கும் தீர்மானம் எடுக்கின்றனர் என்றும், அதே துதி, ஆராதனை பாடலினால் நிறைவு செய்கின்றனர் என்றும் நாம் உணர்கையிலும், நமது சந்தோஷம் பெருகுகின்றது.
“சிலுவை முன்தனிலே நாம் செலவழித்த
ஆசீர்வாதம் நிறைந்த தருணங்கள் இனிமையானதே;
பாவிகளுக்காக உயிர்த்தெழுந்த நண்பனிடமிருந்தே
ஜீவனையும், ஆரோக்கியத்தினையும், சமாதானத்தையும் பெற்றிருக்கின்றோமே.”
“அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, புறப்பட்டுப்போனார்கள்” என்று முதலாம் இராப்போஜனம் குறித்து எழுதப்பட்டுள்ளது. நாமும் அவ்வாறே செய்வோமாக. ஒவ்வொருவனும் நிறைவான இருதயத்துடன் தனது வீடு திரும்புவானாக. பொதுவாய், வழக்கமாய்க் கூடுகைகளுக்குப்பின் சொல்லப்படும், அதாவது சொல்வது ஏற்றதாய்க் காணப்படுகின்றதான வாழ்த்துதல்களையும், வழக்கமாய் இடம்பெறும் அனைத்து விதமான கருத்துத் தெரிவித்தல்களையும், அபிப்பிராயம் தெரிவித்தல்களையும் இந்தத் தருணங்கள்போது தவிர்த்து விடுங்கள் என்று நாம் யோசனைக் கூறுகின்றோம். இப்படியாக ஆண்டவருடனான நமது ஐக்கியத்தினையும், அந்நியோன்யத்தையும்/ உறவையும் நீட்டித்துக்கொள்ளலாம். அடுத்தநாள் முழுவதும் அவரைப் பின்தொடர்ந்துப் பார்த்துக்கொண்டிருங்கள். வஞ்சனையற்றவருக்கு எதிராக ஜனங்களுடைய கூச்சலைக் கவனியுங்கள். ஜனங்கள் எருசலேமின் குருமார் வகுப்பினரால் தூண்டப்படுவதைக் கவனியுங்கள். ஏரோதுக்கு முன்னிலையிலும், அவனது போர்ச்சேவகர்களின் முன்னிலையிலும் அவர் நிற்பதைப் பாருங்கள். அவர் கேலியாய் இராஜ வஸ்திரம் தரிப்பிக்கப்படுவதையும், முள்ளினாலான கிரீடம் தரிப்பிக்கப் படுவதையும், குட்டப்படுவதையும், உமிழப்படுவதையும் பாருங்கள்.
அவர் குற்றவாளியெனச் சிலுவையில் அறையப்படுவதையும், அவர் செய்திட்டதான மிகவும் கிருபையான கிரியைகளினாலேயே, அவர் பழித்துரைக்கப்படுவதையும், அதாவது “மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத்திராணியில்லை” என்று கூறிப் பழித்துரைக்கப்படுவதையும் பாருங்கள். அவரால் தம்மை இரட்சித்துக்கொண்டிருக்க முடியும் என்றும், அவர் வேண்டிக்கொண்டிருந்திருப்பாரானால், தம்மை விடுவிப்பதற்கும், தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கும், “பன்னிரண்டு லேகியோனுக்கும் அதிகமான தூதரை” பெற்றுக்கொண்டிருக்க முடியும் என்றும், தம்முடைய சத்துருக்களுக்காக, தம்மை பழித் தூற்றுபவர்களாகக் காணப்படுபவர்களுக்காக மரிப்பதற்குப்பதிலாக, அவர்களை அவரால் அழித்துப்போட்டிருக்க முடியும் என்றும், நமக்கான ஈடுபலி கிரயமென அவர் தம்மை மனமுவந்து கொடுத்தக் காரியத்திலேயே உயிர்த்தெழுதல் மற்றும் நித்திய ஜீவனுக்கான நமது நம்பிக்கை சார்ந்துள்ளது என்றும் நினைவுகூருவோமாக. நமக்காகவும், அனைவருக்காகவுமான அவரது அன்பை எண்ணிப்பார்க்கையில், அது சிலுவையின் நல்ல போர்ச் சேவகர்களென அதிகமதிகமாய்ச் சகித்துக்கொள்வதற்கு, அவரது பின்னடியார்களாகிய நம்மை நிச்சயமாய்ப் பலப்படுத்துகின்றதாய் இருக்கும். உண்மையாய்ச் சகிக்கப்படும் பட்சத்தில், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகின்றதும், நமக்கான சோதனையாக மற்றும் சிட்சையாகக் காணப்படுவதற்கு இப்பொழுது அனுமதிக்கப்பட்டிருக்கின்றதுமான இலேசான உபத்திரவங்களின் கீழ், நாம் இளைப்புள்ளவர்களாய் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே, எப்பொழுதும் நினைத்துகொள்வோமாக.
வழக்கம்போல புரூக்லினிலுள்ள சபையார், “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே” என்கிறதை ஆசரிப்பார்கள். எப்படி ஞானஸ்நானம் பெற்றிருந்தாலும் சரி, எந்தச் சபைப் பிரிவில் அவர்கள் காணப்பட்டாலும் சரி அல்லது அனைத்திலிருந்து சுதந்திரமாய்க் காணப்பட்டாலும் சரி, இயேசுவின் மாபெரும் பாவநிவாரண பலியில் விசுவாசமுள்ள பக்தியுள்ள விசுவாசிகள் – அனைவரும் நம்மோடுகூடக் கூடிடுவதற்கும், இந்த நினைவுகூருதலில் பங்கெடுப்பதற்கும் அன்போடு அழைக்கப்படுகின்றனர். கர்த்தருடைய பந்தியானது, [R5195 : page 73] அவருடையவர்களாய்க் காணப்படும் அனைவருக்குமானதாகும்.
வியாதிப்பட்டிருக்கின்ற அல்லது முடமான நிலையிலுள்ள சகோதர, சகோதரிகள் புரூக்லின் டேபர்நேக்கலுக்கு (Brooklyn Tabernacle) அஞ்சல் அட்டை மூலம் விண்ணப்பத்தைத் தெரிவித்துக்கொண்டு, அடையாளச் சின்னங்களை அவர்களது வீடுகளில் பெற்றுக்கொள்ளலாம்.
ஆ! என் இருதயம் மிகுந்த பாரம் கொண்டுள்ளதுவே
சோர்ந்து, நொறுங்கி போயுள்ளதே…
என்னிடத்தில் வா என்றழைத்தவர் ஒருவர்,
வந்து இளைப்பாறு என்றாரே.
அவர் எனது வழிகாட்டியாகிடுவதற்கு – நான்
அவரிடத்தில் போக – அவர் அடையாளக் குறிகள்
ஏதேனும் வைத்திருக்கின்றாரா? ஆம்! அவர் கைகளிலும்,
பாதங்களிலும், விலாவிலும் காயங்கள் உள்ளதுவே.
இராஜாவைப்போல் அவர் சிரசிசை
அலங்கரிக்க மகுடம் இருக்கிறதா?
ஆம்! அங்கே மகுடம் உள்ளது,
ஆனால் அது முள்ளினாலான மகுடமே!
நான் அவரைக் கண்டறிந்து, பின்தொடர்ந்தேனாகில்
இங்கே எனது பங்கு என்னவோ?
ஆ! அதிக வருத்தமும், போராட்டங்களும்,
அதிக கண்ணீருமே – ஆம் இவைகளே.
நான் அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்வேனாகில்
இறுதியில் நான் எதை அடைவேன்?
ஆ! துக்கம் மறைந்திருக்கும், போராட்டம் முடிந்திருக்கும்,
யோர்தானும் கடந்திருப்போமே!
என்னை ஏற்றருளுமே என நான் வேண்டினால்,
என்னை அவர் மறுப்பாரோ?
பூமியும், வானமும் ஒழிவது
வரையிலும் இல்லையே.
-விடியல் துதிப்பாடல்கள், #3
“அன்புக்குரிய சகோ. ரசல் அவர்களே . . . கர்த்தருடைய இராப்போஜனத்தைக் குறித்து அப்போஸ்தலன் எழுதுகையில் “கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்” என்று கூறுகின்றார். (1 கொரிந்தியர் 11:26) மேலும் கர்த்தர்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று கூறுகையில், நான் இல்லாதிருக்கிற காலங்களில் என்னை நினைவுகூருங்கள் என்ற அர்த்தத்திலேயே நிச்சயமாய்க் கூறியிருந்திருக்க வேண்டும். நினைவுகூருதல் ஆசரிப்பானது என்னுடைய புரிந்துகொள்ளுதலின்படி இப்பொழுது நிறுத்தப்பட வேண்டும், ஏனெனில் கர்த்தர் இப்பொழுது பிரசன்னமாயிருக்கின்றார். இதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?”
பதில். மேலே மேற்கோளிடப்பட்டிருக்கின்றதான பவுலினுடைய வார்த்தைகளானது, கவனமாய் வாசித்துப்பார்க்கப்படும்போது, அது கர்த்தர் வந்து, பிரசன்னமான பிற்பாடு அவ்வாசரிப்பைத் தடைப்பண்ணிடும் எதையும் நமக்குச் சுட்டிக்காண்பிக்கிறதில்லை. மாறாக அங்கு அப்போஸ்தலனின் கருத்தென்னவெனில்…நாம் அப்பத்தைப் பிட்கும்போது, கிறிஸ்துவோடு மரணத்தில், ஒரே அப்பத்தின், ஒரே சரீரத்தின் அங்கத்தினர்களெனக் காணப்படும் நம்முடைய பங்கெடுத்தலை நாம் வெளிப்படுத்துகின்றோம் என்பதாகும். ஆகையால் நாம் மாம்சத்தில் காணப்படும் நாட்கள்வரையிலும், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் பாடுகள் நிறைவடைவதுவரையிலும், அவருடைய பாடுகளில் குறைவானது நிறைவேற்றப்படுவது நிறைவடைவதுவரையிலும், நாம் அவைகளை நிறைவேற்றுவதும், பாத்திரத்தில் பங்குகொள்வதும், அதை அடையாளப்படுத்திக் காண்பிப்பதும் ஏற்றக்காரியமாகவே இருக்கும்.
“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகளின் விஷயத்தில், “தாம் இல்லாதிருக்கும்போது தம்மை நினைவுகூருங்கள்” என்ற அர்த்தத்தில் அவர் குறிப்பிட்டார் என்று நாம் எண்ணுகிறதில்லை. அவர் முதலாம் இராப்போஜனத்தின்போது காணப்பட்டார் மற்றும் அவர் இல்லாமல் இருக்கும்போதுதான் அவரது மரணத்தை நினைவுகூருவது சரி என்றால், அவர் இல்லாமல் காணப்படுவதற்கு முன்னதாகவே நினைவுகூருவதும்கூடப் பொருத்தமற்றதாகவே காணப்படும்.
இயேசு என்ன அர்த்தத்தில் கூறினார் என்று நாம் பின்வருமாறு எண்ணுகின்றோம்; “பஸ்கா ஒரு நிழலாகவும், நிச்சயமாய் நிறைவேற வேண்டிய நியாயப்பிரமாணத்தின் ஒரு பாகமாகவும் காணப்படுகின்றது. இதன் நிறைவேறுதலானது இப்பொழுது சமீபித்துக்கொண்டிருக்கின்றது. அடிக்கப்பட்டு, புசிக்கப்பட்டதான ஆட்டுக்குட்டியினுடைய நிஜமாக நான் இருக்கின்றேன்; மற்ற அனைத்து அம்சங்களும்கூட நிறைவேறும் – தேவ இராஜ்யமானது முழுமையாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் போது, என்னைப் பின்பற்றுபவர்களாகிய, என் சீஷர்கள் அனைவருமாகிய நீங்கள், முதற்பேறானவர்களெனக் கடந்து போகப்பட்டிருக்கும்போது, மரணத்திலிருந்து உயிர்த்தெழுதலில் விடுவிக்கப்பட்டிருக்கும்போது, முழு நிழலும் நிறைவேற்றப்படும். ஆகையால் நீங்கள் இதைப் புசிக்கும்போதெல்லாம் – பஸ்காவை நினைவுகூர்ந்து ஆசரிக்கும் போதெல்லாம் – நிழலுக்கு அப்பால்பார்த்து, என்னில் ஆட்டுக்குட்டியினுடைய நிஜத்தை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். இதை நிழலான ஆட்டுக்குட்டியின் நினைவாக இல்லாமல், மாறாக என்னை நினைவுகூரும்படி செய்யுங்கள்.”
– ரீபிரிண்ட்ஸ், பக்கம் 619.