R2379 – எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R2379 (page 322)

எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா

HEZEKIAH'S GREAT PASSOVER

2 நாளாகமம் 30:1-13

“நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வாருங்கள்.” (வசனம் 8)

ஏசாயாவின் தரிசனமும், இஸ்ரயேலின் வீழ்ச்சியைக் குறித்து அறிவிப்பதற்கான அவரது பணியும், “இராஜாவாகிய உசியா” மரணமடைந்த வருஷத்திலாகும் (ஏசாயா 6:1). உசியா இராஜாவிற்குப் பின்பு துன்மார்க்கமான இராஜாவாகிய ஆகாஸ் யூதாவின் அரியணையில் வந்து, 16-வருடங்களாகத் தேவனையும், அவரது பிரமாணங்களையும் புறக்கணித்தவனாய்த் துன்மார்க்கமாய் ஆளுகைச் செய்துவந்தான். ஆனால் இவருக்கு ஒரு சிறந்த மனைவி காணப்பட்டாள் மற்றும் அபியாளாகிய இவளது கவனமுள்ள பராமரிப்பின்கீழ், இவர்களது குமாரனாகிய எசேக்கியா இராஜ்யபராத்திற்கென ஆயத்தப்படுத்தப்பட்டு வந்தார் மற்றும் எசேக்கியா அநேக விதத்தில் முன்மாதிரியான ஓர் இராஜாவாகவும், தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரனுமானார். இராஜ குடும்பத்துடன் ஏசாயா தீர்க்கத்தரிசி தொடர்புகொண்டவராய்க் காணப்பட்டப்படியால், இவர் எசேக்கியாவிற்கு ஆசிரியராக இருந்திருப்பார் என்றும், சரியாய்ச் சிந்திப்பதற்கும், செய்வதற்கும் எசேக்கியாவை வழிநடத்துவதற்கு உதவியிருந்திருப்பார் என்றும் அனுமானங்கள் காணப்படுகின்றன. இத்தனைப் பொல்லாத ஒரு தகப்பனிடத்திலிருந்து, இப்படி ஒரு நல்ல குமாரன் வந்துள்ளதான உண்மையானது, தெய்வீக ஏற்பாட்டின்கீழ், நாம் நமது மூதாதையர்களின் பொல்லாப்பான தன்மைகள் அனைத்தையும் சுதந்தரித்துக்கொள்வோம் என்பதாய் இருப்பதில்லை என்பதற்கு நமக்குச் சான்று பகர்கின்றது. இவைகளை நாம் முழுமையாய் ஜெயங்கொள்ள முடியாதென்றாலும், தனிப்பட்ட பிரயாசங்கள் மற்றும் பயிற்றுவிக்கப்படுதல்களின் விளைவாக ஆதாமின் சந்ததியிலுள்ள எவரேனும் பூரணத்தைத் திரும்ப அடையப்பெறுவதற்கு எதிர்ப்பார்க்க முடியாது என்றாலும், சாதகமானச் சூழ்நிலைமைகள், மத ரீதியான பேணிவளர்த்தல் முதலானவைகள், இவைகளினால் சரியாய் இயக்கப்படுபவர்களைப் பெரியளவிலான சீர்த்திருந்துதலுக்கு நேராக வழிநடத்துகின்றது என்று நாம் காண்கின்றோம்.

இங்கு ஆயிரவருட காலத்தின்போது உலகம் – ஆசீர்வதிக்கப் படுவதற்கும், தூக்கிவிடப்படுவதற்கும் கர்த்தரால் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் குறித்த குறிப்பை நாம் பெற்றுக்கொள்கின்றோம். மனித குடும்பமானது, அது காணப்படுகின்றதான சீரழிந்த நிலைமையினின்று அதனையே தூக்கியெடுப்பதற்குக் கூடாததாய் உள்ளது; ஏனெனில் குறுகிய ஜீவியக்காலமும், தீமை மிகுதியாய்ப் பரவியுள்ளதாய்க் காணப்படுவதுமாகும்; ஆகையால் மனுக்குலத்தைத் தூக்கிவிடுகின்றதான வல்லமையானது, விழுகையினால் அசுசிப்படாததும், வெளியிலிருந்து வருகிறதுமான வல்லமையாகக் காணப்பட வேண்டும். இன்னுமாக மனிதன் ஆக்கினைத் தீர்ப்பிலிருந்தும், பெலவீனத்திலிருந்தும் முழுமையாய் விடுவிக்கப்படுவதற்கு முன்னதாக, தெய்வீகத் தீர்ப்பினுடைய நிபந்தனைகளின்கீழ், மனிதனுடையபாவத்திற்கான தண்டனை ரத்துச் செய்யப்பட வேண்டும்; அவனது தண்டனையானது, அவனுக்காகச் சந்திக்கப்பட வேண்டும். இந்த மீட்பானது (அ) விலைக்கொடுத்து வாங்குதலானது, மனுக்குலத்திற்காக ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது; பாவத்திலிருந்தும், மனதிலும், ஒழுக்கத்திலும், சரீரத்திலுமான சீரழிவுகளாகிய அதன் பின்விளைவுகளிலிருந்தும் மனுக்குலமானது விடுவிக்கப்படுவது என்பது, எதிர்க்கால வேலையாகும் மற்றும் இது கிறிஸ்துவின் மாபெரும் பலியினால் சாத்தியமாக்கப்படும். மனுக்குலத்தை மீட்டுக்கொண்டவரும் மற்றும் வல்லமைக்கும், மகா மகிமைக்கும் உயர்வாய் உயர்த்தப்பட்டவரும், மனுக்குலத்தின் குடும்பத்தில், தமது கிருபையை ஏற்றுக்கொள்பவர்கள் எவரையும் நீதியினிடத்திற்கும், பரிபூரணத்தினிடத்திற்கும் தூக்கிவிடுவதற்கென்று சீக்கிரத்தில் தமது இந்த வல்லமையை மனிதன் சார்பில் பயன்படுத்தப்போகின்றார் என்ற கருத்து கிருபை நிறைந்ததாயுள்ளது. தூக்கிவிடும் பணியானது, போதித்தல், சிட்சித்தல், நீதியில் சரிப்படுத்துதலின் அடிப்படையில் காணப்படும் மற்றும் இவைகள் விஷயத்தில் ஒவ்வொருவனும் “உலகத்தோற்றமுதல் பரிசுத்தத் தீர்க்கத்தரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் தேவன் உரைத்திட்டதான அனைத்திலும் சீர்ப்பொருந்தப்படுதலை” அடையத்தக்கதாக, ஒத்துழைப்புக் கொடுப்பதற்குக் கடமைப்பட்டிருப்பான் (அப்போஸ்தலர் 3:19-21).

எசேக்கியா ஏற்கெனவே நன்கு போதிக்கப்பட்டிருந்தார் என்பதும், அவரது தகப்பனாருடைய மரணத்தின்போதும் மற்றும் அவர் இராஜ பதவியில் பிரவேசிக்கும் போதும் கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம்பண்ணினவராய் இருந்தார் என்பதும் அவர் தனது ஆளுகையை ஆரம்பித்தவுடனே – தனது இராஜ்யபாரத்தினுடைய முதலாம் மாதத்தில், இப்பாடத்தில் நாம் பார்க்கிற சீர்த்திருத்தங்களை, அதாவது தெய்வீக நியமித்தலின்படியே யேகோவா தேவனுக்கான தொழுதுகொள்ளுதலை மீண்டும் கொண்டுவந்தார் என்பதில் உறுதியாகுகின்றது. ஒருவேளை அவர் கர்த்தருக்கு அர்ப்பணம் பண்ணாதவராய்க் காணப்படுவாரானால் மற்றும் சரியான இருதய நிலைமையில் காணப்படாமல் இருந்திருப்பாரானால், அவர் அதிகாரத்திற்கு உயர்ந்த காரியமானது, நேர் எதிர்மாறானவைகளைச் செய்திடுவதற்கு அவரை இயக்கியிருந்திருக்கும் மற்றும் சுயத்தைத் திருப்திப்படுத்துவதற்கும், இறுமாப்புக் கொள்வதற்கும் அவரை வழிநடத்தியிருந்திருக்கும்.

வருஷக் கணக்காகத் திறக்கப்படாமலும், செப்பனிடப்படாமலும், அதிக அளவிலான குப்பைகள் குவியுமளவுக்கு விடப்பட்டிருந்த நிலையிலுமான ஆலயத்தினைத் திறப்பதும், ஆயத்தப்படுத்துவதும் அவரது முதலாம் வெளியரங்கமானப் பணியாய் இருந்தது. இராஜா இந்த வேலையில் தனக்கு உதவிச் செய்திடுவதற்குரிய சரியான உதவியாளர்களை, அதாவது தேவனால் நியமிக்கப்பட்டிருந்ததான லேவிக் கோத்திரத்தாரை அழைத்தார். ஆலயத்தின் சுத்தீகரிப்பானது, மோசேயினுடைய பிரமாணத்திற்கு ஏற்ப நடைப்பெற்றது மற்றும் நிறைவேறி முடிந்தபோதோ, முதலாவதாகச் செய்ய வேண்டியிருந்தது பெரும் பாவநிவாரண மகா பலிச்செலுத்துதலாகும். இராஜாவாகிய எசேக்கியா பரந்த மனப்பான்மையுடையவராக இருந்து, பலியானது யூதேயாவின் ஜனங்களாகிய இரண்டு கோத்திரத்தாரின் சார்பாக மாத்திரமல்லாமல், தங்களைவிட்டுப் பிரிந்துபோனதான சகோதரராகிய “இஸ்ரயேலர்கள் அனைவரின்” சார்பாகவும் செலுத்தப்படுவதற்கு விசேஷித்தக் கட்டளைகளிட்டார்.

சில விதங்களில், அதாவது தெய்வீக வாக்குத்தத்தங்களானது ஆபிரகாமின் சந்ததியார் அனைவருக்குமாகப் பண்ணப்பட்டுள்ளது எனும் விதத்தில் (10 இஸ்ரயேலரும், 2 யூத கோத்திரத்தாரும்] இஸ்ரயேல் ஜாதியார் ஒன்றாகத்தான் உள்ளதாக, எசேக்கியா சரியாய் அடையாளம் கண்டுகொண்டிருந்தார்; ஆகையால் கர்த்தராகிய ஆண்டவரை தேவன் என்று அங்கீகரித்தும், அவரது முகத்தினை நாடும் நிலையிலுமான (12) அனைத்துக் கோத்ததிரத்திலுமுள்ள எவரும் சக இஸ்ரயேல் சகோதரனாகக் கருதப்பட வேண்டும்.

எகிப்திலிருந்துள்ள இஸ்ரயேலுக்கான கர்த்தருடைய விடுதலையின் நினைவுகூருதலுக்குரிய பஸ்கா பண்டிகையின் காலமாய் அப்போதிருந்தது; பஸ்கா பண்டிகையானது, பாவம் மற்றும் சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து ஆவிக்குரிய இஸ்ரயேலனுக்கான விடுதலைக்கு நிழலாய்க் காணப்படுகின்றது; இன்னுமாக நீதியை விரும்பி, கர்த்தருக்கு ஊழியம்புரிய விரும்புகிறவர்கள், ஆயிரவருடக் காலத்தின்போது, சாத்தானுடைய முழுமையான கவிழ்க்கப்படுதலின் வாயிலாக, அவனது அடிமைத்தனத்திலிருந்து இறுதியில் விடுவிக்கப்படுகிறதற்கும்கூட நிழலாய்க் காணப்படுகின்றது. இந்தப் பஸ்கா பண்டிகையானது, அந்த வருஷத்தில் முறையாய் ஆசரிக்கப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது; ஏனெனில் பதிவை வைத்துப்பார்க்கும்போது, பஸ்கா பண்டிகையானது சில இஸ்ரயேலர்களால் கைக்கொள்ளப்பட்டு வரப்பட்டிருந்தப்போதிலும், மத சம்பந்தமான விஷயத்தில் பரவலாய் ஒழுங்கீனம் நிலவியிருந்தபடியால், பஸ்காவானது அந்த ஜனங்களினால் கைக்கொள்ளவும் படவில்லை மற்றும் கைக்கொள்ளப்பட்டவர்களால் அதில் நியமித்து வழங்கப்பட்டதான அம்சங்கள் அனைத்துடன் கைக்கொள்ளவும் படவில்லை. இம்முறை அதன் முறையான ஆசரிப்பு மீண்டுமாகத் தொடங்கப்பட வேண்டும் என்றும், ஆசரிப்பதற்கு முன்னதாக ஜனங்களுடைய சுத்தீகரிப்புத் தொடர்பாகவும், ஜனங்கள் தங்கள் வீடுகளிலிருந்து பாவத்திற்கு அடையாளமான புளிப்பைப் புறம்பாக்கிப்போடுவது தொடர்பாகவுமுள்ள [R2379 : page 323] நியாயப்பிரமாணத்தின் காரியங்கள் அனைத்தையும் முறைப்படிச் செய்ய வேண்டும் என்றும் இராஜா தீர்மானம்பண்ணினார் (யாத்திராகமம் 12:15-20); இப்படியாக அடையாள விதத்திலாகிலும், ஜனங்கள் பண்டிகையை ஆசரிக்கத்தக்கதாகப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய்க் காணப்படுவார்கள். ஆனால் இவைகள் அனைத்திற்கும் காலம் தேவைப்பட்டது; அதாவது கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதற்கும், ஜனங்களுடைய பக்திவைராக்கியம் தூண்டிவிடப்படுவதற்கும் மற்றும் பாவத்திலிருந்து விலகுதல், கர்த்தருக்குப் பரிசுத்தமாய் இருத்தல் என்பவைகளை அடையாளப்படுத்துகின்றதான இவ்வேலைகளை ஜனங்கள் செய்திடுவதற்குத் தூண்டிடப்படுவதற்கும் காலம் தேவைப்பட்டது. ஜனங்கள் அவ்வளவுக்கு அசுசியுடன் இருந்தபடியாலும், முதலாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதியாகிய நியமிக்கப்பட்ட நாளில்தானே பஸ்காவை ஆசரிக்கத்தக்கதாக ஆயத்தமாகுவதற்குக் காலம் மிகவும் குறைவாய் இருந்தபடியாலும், கர்த்தருடைய அனுமதியின்பேரில் பஸ்காவானது இரண்டாம் மாதத்தினுடைய 14-ஆம் தேதியன்று ஆசரிக்கப்பட்டது (எண்ணாகமம் 9:10,11).

அனைத்து இஸ்ரயேலர்களின் சார்பாகப் பாவநிவாரண பலிச்செலுத்தப்பட வேண்டுமென்று [R2380 : page 323] எசேக்கியாவின் அறிவுறுத்தலில் வெளிப்பட்டதான அதே மனம் மற்றும் இருதய நிலைமையானது, இன்னும் அவரை இயக்கினதாய்க் காணப்பட்டு, “யூதேயாவில்” மாத்திரம் சீர்த்திருந்துதலை விரும்பாமல், தங்களிடமிருந்து பிரிந்து காணப்படுகின்ற சகோதரராகிய “இஸ்ரயேலிலும்” சீர்த்திருந்துதலை விரும்பிடுவதற்கு அவரை வழிநடத்தினதாய் இருந்தது. இதனால் விசேஷமான தூதுவர்கள், ஒவ்வொரு கோத்திரத்திலுள்ள அனைத்து இஸ்ரயேலர்களையும் யேகோவா தேவனைத் தொழுதுகொள்வதற்குத் திரும்பிடுவதற்கும் மற்றும் இந்தப் பண்டிகைக்கு விசேஷமாய் வந்திடுவதற்கும் உரிய அழைப்பினை விடுப்பதற்கு இஸ்ரயேல் தேசத்தினுடைய தெற்கு ஓரத்தில் இருக்கும் பட்டணமாகிய பெயெர்செபாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இன்றைய நாட்களிலுள்ள அஞ்சல் (post) முறைமையானது அப்போது நடைமுறையில் இல்லை; ஆகையால் இந்தக் கடிதங்களை எடுத்துச்செல்வதற்கு அப்போது விசேஷமான அஞ்சல் ஏற்பாடு பண்ணப்பட்டது.

இத்தகைய ஓர் அழைப்பு விடுக்கப்பட்டதான காலம் மிகவும் ஏற்றக்காலமாகும், ஏனெனில் இஸ்ரயேல் சிறையிருப்பிற்குள் கொண்டுபோகப்படுதல் குறித்ததான ஏசாயாவின் தீர்க்கத்தரிசனமானது ஏற்கெனவே நடைபெற்றுக்கொண்டிருந்தது; இக்காலக்கட்டத்தில் பத்துக் கோத்திரங்களும் அசீரியாவிற்குக் கப்பம் கட்டிக்கொண்டிருந்தனர் மற்றும் அநேக ஜனங்கள் (சிறைப்பிடித்து) கொண்டுபோகப்படுதலானது, உண்மையில் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. ஆகையால் “உத்தம இஸ்ரயேலர்களாய்க்” காணப்படும் எல்லோருக்கும், அவர்கள் சிறைப்பட்டுப் போவதானது, அவர்கள் கர்த்தரைப் புறக்கணித்ததற்கான தண்டனை என்பதைக் கவனத்திற்குக் கொண்டுவருகின்றதாகவும், கொஞ்சமேனும் விசுவாசமும், பக்திவைராக்கியமும் கொண்டிருப்பவர்களை, கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கெனத் திரும்பிடுவதற்குத் தூண்டிவிடுகின்றதாகவும் கர்த்தருடைய இந்த (எசேக்கியாவின் கடிதம் மூலமான) ஏற்பாடு காணப்பட்டது. இராஜாவாகிய எசேக்கியாவின் கடிதமானது, கழிந்ததை நினைவுகூருவதற்கும், யேகோவா தேவனிடத்திற்குத் திரும்பிடுவதற்குமான சுருக்கமான புத்திமதியாகவே காணப்பட்டது. “தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே;” “நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்த ஸ்தலத்திற்கு வந்து அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும்” (2 நாளாகமம் 30:7,8).

இந்தப் புத்திமதியானது, தற்போதைய விடுதலையை மாத்திரம் குறிப்பிடாமல், ஏற்கெனவே நாடு கடத்தப்பட்டுள்ள அவர்களது சகோதரருடைய திரும்பிவருதலையுங் கூடக் குறிப்பிட்டதாய் இருந்தது. ஆனால் இந்தச் செய்தியைச் சுமந்துவந்ததான தூதர்கள் வடக்குப்புறமான இராஜ்யத்தில் பரியாசம் பண்ணப்பட்டார்கள். எந்தளவுக்கு ஜனங்கள் கர்த்தரிடமிருந்து விலகி இருந்தார்களோ, அந்தளவுக்கு அவர்கள் பெருமையும், இறுமாப்பும் உடையவர்களாய் இருந்தனர் மற்றும் இப்படியாகவே எப்போதும் இருந்துவந்துள்ளது; மற்றும் இவர்களது அதிகளவிலான பெருமையே, இவர்கள் ஒரு தேசமாக அழிவிற்குள் செல்வதற்கு வழிநடத்தினதாய் இருந்தது. கர்த்தரோடு இசைவிற்குள் காணப்படுகின்றதான அனைவரும் தாழ்மையான மனமுடையவர்களாய் இருப்பார்கள் மற்றும் இப்படிப்பட்டவர்கள் மாத்திரமே மதிப்புடன் (அ) அன்புடன் கர்த்தருடைய கிருபை நிறைந்த செய்தியினை ஏற்றுக்கொள்வார்கள் மற்றும் செய்திகளைச் சுமந்துவந்த ஊழியக்காரர்களையும் நன்றாய் நடத்துவார்கள். (இஸ்ரயேலில் இம்மாதிரியான சூழ்நிலைகளின் மத்தியில் கீழ்ப்படிபவர்கள் அதிகளவிலான விசுவாசமும், யேகோவா தேவனுக்கு அன்பும் கொண்டிருந்திருக்க வேண்டும்; ஏனெனில் இவர்களுங்கூட, இவர்களை அழைத்ததான தூதுவர்களுடனே, விசுவாசமற்ற ஜனங்களுடைய கேலிக்கும், ஏளனத்திற்கும் ஆளாகியிருந்திருப்பார்கள். அநேகர் இல்லையென்றாலும், கொஞ்சம்பேர் தங்களைத் தாழ்த்திக்கொண்டார்கள் என்றும், இவர்கள் ஆசேர், மனாசே மற்றும் செபுலோன் கோத்திரங்களிலிருந்து வந்தார்கள் என்றும் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது; இவர்களும் தங்களைத் தாழ்த்துகிறவர்களுக்கும், கீழ்ப்படிகிறவர்களுக்கும் தேவன் எப்போதும் அருளுகின்றதான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்கள். வசனம் 11-இல் குறிப்பிடப்பட்டுள்ளவைகளோடுகூட, 18-ஆம் வசனத்தில் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் கோத்திரங்களிலிருந்து “ஏராளமான அநேகம்” ஜனங்கள் வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம். இப்படியாக பத்துக் கோத்திரத்திரங்களில், ஐந்து கோத்திரங்களிலிருந்து ஏறக்குறைய கொஞ்சம் ஜனங்கள் வந்தார்கள் மற்றும் ரூபன், காத் எனும் இரண்டு கோத்திரங்கள் ஏற்கெனவே சிறைப்பட்டுப் போயிருந்தனர். இஸ்ரயேலாகிய தங்கள் சொந்த தேசத்தில் பரவிக்கிடந்த விக்கிரக ஆராதனையின் காரணமாகவும், யூதேயாவில் பக்தியான ஜீவியத்திற்கான சிறந்த வாய்ப்புகள் காணப்பட்டதன் காரணமாகவும், பத்துக் கோத்திரங்களிலுள்ள சில மனுஷர்கள் ஏற்கெனவே தங்களை யூதேயாவின் இராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார்கள் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும் (2 நாளாகமம் 15:9).

யூதேயா முழுவதும், பஸ்கா பண்டிகைக்குக் கலந்துகொள்வதற்கான அழைப்பானது, மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளப்பட்டது; “யூதேயாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, இராஜாவும், பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.” (2 நாளாகமம் 30:12) இதன் விளைவாக, அந்த வருஷத்தில், எருசலேமில் வழக்கத்திற்கு மாறாக திரளான அளவில் ஜனங்கள் கூடிவந்திருந்தார்கள். சாலொமோனின் நாட்கள் முதற்கொண்டு, அதாவது 250 வருடங்களாக இப்படியானதொரு பஸ்கா ஆசரிக்கப்பட்டதில்லை என்பதாக பதிவுகள் காணப்படுகின்றன. பண்டிகையானது, மகா சந்தோஷத்துடனும், ஆனந்தத்துடனும், கர்த்தரை துதித்தும், பாடியும் ஆசரிக்கப்பட்டது; பக்தி பரவசத்தினால் ஜனங்கள் மிகவும் ஆட்கொள்ளப்பட்டுக் காணப்பட்டபடியால், அவர்களது யோசனையின் பேரிலேயே துதித்தலுக்கும், பரிசுத்தமானவைகளிடத்தில் பரிசுத்தமான உணர்வுகளைக் கொண்டிருத்தலுக்குமான பஸ்கா வாரத்தினை, இன்னும் ஒரு வாரம் நீட்டி ஆசரித்தார்கள் (வசனம் 21-26).

உண்மையான கபடற்ற இஸ்ரயேலர்கள், பத்துக் கோத்திரங்களினுடைய இராஜ்யத்தினின்று, அந்தநாளில் இரண்டு கோத்திரங்களினுடைய இராஜ்யத்தினிடத்திற்குச் சேர்க்கப்பட்டனர் என்ற உண்மையை இங்கு நாம் சற்று நிறுத்தி, கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம். யூதாவின் பிந்தைய சிறைப்பிடிப்பிற்குப் பிற்பாடு, இஸ்ரயேலில் இருந்த பிரிவுகளானது, அடையாளம் தெரியாமலாகிவிட்டது. சிறையிருப்பிலிருந்து திரும்பிடுவதற்கான அனுமதியின் கோரேசினுடைய கட்டளையானது, எந்தக் கோத்திர பிரிவினருக்கென்று குறிப்பிடாமல், இஸ்ரயேல் அனைவருக்கும் என்று பிறப்பிக்கப்பட்டது; மற்றும் திரும்பி வந்தவர்களான அனைத்துக் கோத்திரங்களிலுமுள்ள உண்மையுள்ளவர்கள் ஒன்றுசேர இஸ்ரயேல் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர் மற்றும் பிற்பாடு இப்படியாகவே வேதத்தில் குறிப்பிடவும்பட்டுள்ளனர். (concordence) கன்கார்டன்ஸ் புஸ்தகத்தைப் பயன்படுத்தி, புதிய ஏற்பாட்டில் ‘இஸ்ரயேல்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்களைக் கவனியுங்கள். யூதர்கள் மாத்திரம் என்றில்லாமல் இஸ்ரயேலில் மீதியானவர்களும்தான் சுவிசேஷயுகத்தில் கூட்டிச் சேர்க்கப்பட்டனர் மற்றும் மீதியானவர்களோ, சுவிசேஷயுகத்தில், [R2380 : page 324] “தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய,” ஆவிக்குரிய இஸ்ரயேல் தெரிந்தெடுக்கப்படுவது வரையிலும், “கடினப்பட்டிருப்பார்கள்,” உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்களிலிருந்து முறித்துப்போடப்பட்டவர்களாக இருப்பார்கள். (ரோமர் 11:7,25-32 பார்க்கவும்)

எசேக்கியாவினால் கொண்டுவரப்பட்டதான உண்மையான பக்தியின் விஷயத்திலான மறுமலர்ச்சியானது, அந்தப் பஸ்காவோடு முடிவடைந்து போகவில்லை. இது கர்த்தரை உண்மையாய்த் தொழுதுகொள்வதற்கும், ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களைத் தாங்கிடவும், பலிக்கடுத்தவைகளைப் பராமரிக்கவும் வேண்டி தாராளமாய்க் கொடுப்பதற்குமான பக்திவைராக்கியத்தினால் ஜனங்களை நிரப்பின தோடுகூட, யூதேயா தேசம் முழுவதிலும், இன்னுமாக பத்துக் கோத்திரங்களுடைய தேசத்திலும், அனைத்து விதமான விக்கிரக ஆராதனைக்கு எதிராக மிகுந்த கிளர்ச்சி உருவாகுவதற்கு நேராக வழிநடத்தினதாய் இருந்தது; இதன் காரணமாக தேசத்தில் விக்கிரகங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன, பாகாலுக்கான கட்டுப்பாடற்ற வழிபாட்டிற்கெனப் பயன்பட்டுவந்ததான அருவருப்பான மேடைகள் அழிக்கப்பட்டன. இப்படி ஜனங்கள் கர்த்தருக்கு நேராய்த் திரும்பினதன் காரணமாக, அந்த ஜாதியாருடன் பண்ணப்பட்டிருந்ததான தேவனுடைய உடன்படிக்கைக்கு இசைவாக அவர்கள்மீதும், அவர்களுடைய இராஜாவின்மீதும் மாபெரும் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் கடந்துவந்தன. இராஜா மிகவும் ஐசுவரியவானானார் மற்றும் ஜனங்களும் இப்படியானதால், கர்த்தருக்கான அவர்களது காணிக்கைகளும், தசமபாகங்களும், லேவியர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் கொடுப்பதற்குப் போதுமானதாய் மாத்திரம் காணப்படாமல், மிகவும் திரளாய்க் காணப்பட்டதினால், அவைகளை வைப்பதற்குப் பண்டகசாலைகள் கட்டப்பட்டன.

இவைகளில் ஆவிக்குரிய இஸ்ரயேலுக்கான ஒப்புமைகளுக்காக நோக்குகையில், அநேகவற்றை நாம் காண்கின்றோம்: (1) உண்மையான தேவபக்தி அனைத்துமே ஒழுங்கு மற்றும் (சுத்திகரித்தலுடன்) துப்புரவுடன் முழுவதும் ஒத்துவருகின்றதாய் இருக்கின்றது; அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுவதுபோன்று, ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார் மற்றும் யாரொருவன் தேவனுடைய ஆலயத்தைச் சுத்திகரிப்பதற்கும், தெய்வீக ஒழுங்கு முறைக்கு இசைவாய்க் கொண்டுவருவதற்கும் முயல்வானோ அவன் – எசேக்கியாவும், அவரது இராஜ்யமும் ஆசீர்வதிக்கப்பட்டதுபோலவே, இப்பொழுது ஆசீர்வதிக்கப்படுவான் என்று சொல்லலாம்; ஆனாலும் ஆவிக்குரிய இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள பலன்களானது, பூமிக்குரிய ஆசீர்வாதங்களாயிராமல், ஆவிக்குரியவைகளாக இருக்கின்றன என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். (இன்னமும் நிறைவடையாத) ஜெயங்கொள்ளும் சபையே உண்மையான ஆலயமாகப் காணப்பட்டாலும், இப்பாடத்தில் இதுவரையிலும் பார்த்து வந்துள்ளவைகளில் ஆலயமாகக் தற்காலத்திலுள்ள கர்த்தருடைய சபையாரே, அவரது ஆலயமாகப் பெயரளவில் கருதப்படலாம். எனினும் இந்தப் படிப்பினையை நாம் நமது சொந்த இருதயங்களுக்குக்கூடப் பொருத்திப்பார்த்திடலாம்; ஏனெனில் அப்போஸ்தலன் சுட்டிக்காட்டுகின்றதுபோல, ஒவ்வொரு கிறிஸ்தவனும் பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாக இருக்கின்றான் மற்றும் சபையுங்கூட மொத்தத்தில், அதன் தற்போதைய அபரிபூரணமான நிலைமையிலுங்கூட கர்த்தருக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட, சமர்ப்பிக்கப்பட்ட, பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாகக் கருதப்படலாம். ஆகையால் நமது பிரதான ஆசாரியனுடைய மாபெரும் பாவநிவாரணத்தின் காரணமாக நீதிமானாக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும், ஆவிக்குரியவைகளில் கர்த்தருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், அவன் சகல உலகப்பிரகாரமான அசுசியிலிருந்து தன்னையும் (தன்னால் முடிந்த மட்டும், தன்னோடுகூட உள்ளவர்களும், இதே சிந்தையுள்ளவர்களுமாகிய மற்றவர்களையும்) நீங்கப்பெற்ற நிலையில் காத்துக்கொள்வதற்கு நாடிட வேண்டும். கடந்த காலங்களிலுள்ளவைகள் மாத்திரமல்லாமல், உலகத்தில் எப்போதும் காணப்படும் உலகப்பிரகாரமான அசுசிகளிலிருந்தும் சுத்திகரிக்கப்படுவதற்கான அவசியத்தினைக் கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும். “பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக் கடவோம்” (2 கொரிந்தியர் 7:1) என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை நாம் நினைவுகூருகின்றோம்.

வெறுமனே சுத்திகரிப்புச் செய்யப்படக்கூடாது, மாறாக தெய்வீக ஒழுங்குமுறைக்கு இசைவாய்ச் செய்யப்பட வேண்டும். எசேக்கியாவும், ஆசாரியர்களும், லேவியர்களும், இஸ்ரயேலினுடைய உடன்படிக்கைக்கான மத்தியஸ்தராகிய “மோசேயினுடைய நியாயப்பிரமாணத்திற்கு” ஏற்ப சுத்திகரித்து, பரிசுத்தம் பண்ணினதுபோல், புத்திரர்கள் வீட்டாராகிய நாமும் “புதிய உடன்படிக்கையின்” மத்தியஸ்தராகிய கிறிஸ்துவின் பிரமாணத்திற்கு ஏற்ப, அதாவது “பிரியமானவருக்குள்” நாம் ஏற்றுக்கொள்ளப்பட்டதான பிரமாணத்திற்கு ஏற்ப சுத்திகரிக்கப்படுவதற்கும், பரிசுத்தம் பண்ணப்படுவதற்கும் நாட வேண்டும். நியாயப்பிரமாணத்தின் கீழ் ஒரு விதமான விதிமுறைகளின்படி சடங்குகள் ஆசரிக்கப்பட வேண்டியிருந்ததுபோன்று, சுவிசேஷத்தின் கீழிலும் ஒருவிதமான விசுவாசமும், ஒரு விதமான நல் வார்த்தைகளும், ஒரு விதமான கீழ்ப்படிதலும் கடைப்பிடிக்கப்பட வேண்டியிருந்தது. நமது சுத்திகரித்தலானது, காளை மற்றும் ஆட்டினுடைய இரத்தத்தினால் உண்டாகாமல், மாறாக கிறிஸ்துவினுடைய மிகுந்த விலையேறப்பெற்றதான இரத்தத்தின் புண்ணியத்தினாலேயே உண்டாகின்றது; கிறிஸ்துவினுடைய இரத்தமானது, அவரது மரணத்தின் காரணமாக நம்மிடத்தில் பழிவாங்குதலைப் பேசாமல், பிதாவினிடத்தில் அவர் மூலமாய்க் கடந்துவருபவர்கள் அனைவருக்கும் இரக்கத்தையும், மன்னிப்பையும், கிருபையையும் பேசுகின்றதாய் இருக்கின்றது.

(2) கர்த்தரைத் தொழுதுகொள்ளும் விஷயத்தில் இணைந்துகொள்வதற்கு விரும்புகின்ற இஸ்ரயேலர்கள் அனைவரையும், சகோதரர்களெனக் கருதுவதும், தொழுதுகொள்ளுவதற்கென அவர்களை வரவேற்பதுமாகிய எசேக்கியாவின் பரந்த மனப்பான்மையுடனான கருத்திலுங்கூட நமக்கு ஒரு படிப்பினை உள்ளது. இது தொடர்புடைய விஷயத்தில் அவர் பரந்து, விரிந்த, வேதவாக்கியங்களின் அடிப்படையிலான கருத்தைக்கொண்டிருந்தது மாத்திரம் போதாது; கர்த்தருடைய ஜனங்கள் நடுவில் எவ்விதமான பிரிவினையின் வேலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதும், கர்த்தருடைய வீடாகிய ஆலயத்தில், கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கு ஏற்பாடுபண்ணுவதும் அவரது கடமையாகவும், சிலாக்கியமாகவும் இருந்தது. இப்படியாகவே ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் மத்தியிலும், “உத்தம இஸ்ரயேலர்கள்” அனைவரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கின்றார்கள் என்ற உணர்ந்து கொள்ளுதல் காணப்பட வேண்டும் மற்றும் அனைவரையும் கிறிஸ்துவினுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினை மாபெரும் பாவநிவாரணம் என்று நம்புகின்ற உத்தம இஸ்ரயேலர்களாகவும், கர்த்தருடைய ஊழியத்திற்கென அர்ப்பணித்துள்ள உத்தம இஸ்ரயேலர்களாகவும் எண்ணி, நடத்திட வேண்டும். இப்படியாய் அடையாளம் கண்டு கொள்கின்றதான கிறிஸ்தவ பண்பானது, கடந்த நூற்றாண்டினுடைய பாதி முதற்கொண்டு அதிகளவில் பெருகிவருகின்றது என்று நம்புவதில் நாம் மகிழ்ச்சிக்கொள்கின்றோம்; இன்னும் செய்யப்பட வேண்டியவைகள் அநேகம் உள்ளன: கிறிஸ்தவ பிரிவுகள் எனும் வேலிகள் அனைத்தும் தகர்க்கப்பட வேண்டும் மற்றும் பிரிவுகளின் பெயர்களும், விசுவாசப் பிரமாணங்களும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்; இன்னுமாக (விலையேறப்பெற்ற இரத்தத்தில் விசுவாசித்து, கர்த்தருக்கும் மற்றும் தங்களால் புரிந்துகொள்ள முடிகிற அளவுக்கு அவரது வார்த்தைகளிலுள்ள அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவதற்கும் முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ள அனைவராகிய) உண்மை கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்துக் காணப்பட வேண்டும் மற்றும் சிலர் மற்றவர்களைக்காட்டிலும் அதிகப்படியான அறிவையும், பரிசுத்தமாக்குதலையும் அடைந்திருக்கலாமே ஒழிய, மற்றப்படி எந்த வேறுபாடுகள் இன்றி, ஒரே ஜனங்களாகக் காணப்பட்டு, “கிறிஸ்து இயேசுவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகுவதற்கு” நாட வேண்டும்.

(3) உண்மையான இஸ்ரயேலிடத்திலும், அனைவருக்குமான தேவ வாக்குத்தத்தத்திலும் உண்மையான ஐக்கியங்கொள்வதற்கும், அதுவும் அனைத்து விசுவாசப் பிரமாணங்களையும், பிரிவுகளையும் உதறி உண்மையான ஐக்கியம் கொள்வதற்குமுரிய செய்திக்கு/தூதிற்கு, அன்றும் அநேகர் ஆதரவு வழங்காதது போன்று இன்றும், ஆதரவு வழங்கப்படுவதில்லை. அன்றுபோல் [R2381 : page 324] இன்றும் பெரும்பாலானவர்கள் நகைப்பதற்கும் மற்றும் வேதவாக்கியங்களில் கற்பிக்கப்பட்டிருக்கின்றதும், ஆதி திருச்சபையில் கடைபிடிக்கப்பட்டதுமான கிறிஸ்து இயேசுவிலான எளிமையினை ஆதரிப்பவர்களைக் கற்பனையுலகில் சஞ்சரிப்பவர்களாக முத்திரை குறிப்பதற்கும் வழிநடத்தப்படுகின்றனர். எனினும் அன்றுபோல் இன்றும், சிலர் தங்களால் சரியான தூதென/செய்தியென அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றதான சத்தியத்தினால் ஈர்க்கப்படுகின்றனர். இஸ்ரயேலில் காணப்பட்டதுபோலவே இன்றும் கேட்ட செய்திக்கேற்ப செயல்படுவதற்குப்போதுமான தைரியம் இல்லாத நிலையில், செய்தியினைக் கேட்ட அநேகர் [R2381 : page 325] காணப்படுகின்றனர். அனைத்துக் கிறிஸ்தவ பிரிவுகளிலிருந்தும், வெவ்வேறான விசுவாச பிரமாணங்களைக் கொண்டிருப்பவர்கள் மத்தியிலிருந்தும் வெகு சொற்பமானவர்களே ஈர்க்கப்பட்டவர்களாய் இருக்கின்றனர்; இப்படிப்பட்டவர்கள் சாந்தமானவர்களாகவும், தங்களைத் தாழ்த்திடுவதற்கு ஆயத்தத்துடனும், விருப்பத்துடனும் காணப்படுபவர்களாகவும் இருப்பவர்கள் ஆவர். பெருமையுள்ளவர்களோ சபை பிரிவுணர்ச்சிக்காகவும், கனங்களுக்காகவும், மதிப்பிற்கும் போராடுகிறவர்களாய்க் காணப்பட்டு, தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்குத் தவறிவிடுவார்கள்; “சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.”

(4) தேவன் விஷயத்திலும் மற்றும் பரிசுத்த அலங்காரத்துடனும், அவரது வார்த்தை கூறுபவைகளுக்கு இசைவுடனும் தொழுதுகொள்ளும் விஷயத்திலும், பயபக்தியின் உணர்வுகளில் உண்மையான எழுப்புதல் என்பது எசேக்கியாவின் நாட்களிலும், இன்றும் மொத்தத்தில் விக்கிரகங்களை உடைப்பதைக் குறிக்கின்றதாய் இருக்கும். ஒ! வைராக்கியத்துடன் கவிழ்த்துப்போடுவதற்குக் கர்த்தருடைய ஜனங்களுக்கு எத்தனை விக்கிரகங்கள் காணப்படுகின்றன. அவைகள் அநேகமான தோற்றங்களிலும், வடிவங்களிலும் காணப்படுகின்றன, எனினும் அவற்றின் பொதுவான தன்மை ஒன்றே. இந்த விக்கிரகங்களில் ஒன்றும், ஆயிரமாயிரம் பேர்கள் புழுதிமட்டும் விழுந்து வணங்குகின்றதுமான ஒரு விக்கிரகம் சபை பிரிவுணர்ச்சியாகும்; இன்னொரு விக்கிரகம் பணமாகும்; இன்னொன்று இச்சை; இன்னொன்று சுயநலமான குறிக்கோள்; இன்னொன்று பெருமை; இன்னொன்று சுகபோகம் ஆகும்; இவையனைத்தும் சுயநலம் எனும் ஒரே குடும்பப் பெயருடைய லேகியோன் ஆகும். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான மீட்பின் வாயிலாக, கர்த்தருக்கான முழுமையான அர்ப்பணித்தலுக்குள் கடந்துவந்துள்ளவன், மற்றும் கர்த்தரைப் பரிசுத்த அலங்காரத்துடன் தொழுதுகொள்ளும் நிலைக்குள் கடந்துவந்துள்ளவன் எவனும், பாவத்தின் வாயிலாக மாபெரும் எதிராளியானவன் தன்னைத் தூண்டி, தன்னை வணங்கச் செய்ததும், தொழுதுகொள்ளச் செய்ததுமான இந்த விக்கிரகங்களிலுள்ள அருவருப்பான தன்மையை உடனடியாக உணர்ந்துகொள்வான். எந்தளவுக்கு கர்த்தருக்கான நமது பக்திவைராக்கியம் காணப்படுகின்றதோ மற்றும் எந்தளவுக்கு அவரது ஆவி நம்முடைய இருதயங்களில் காணப்படுகின்றதோ, அந்தளவுக்கு நாம் இந்த விக்கிரகங்களைத் தகர்ப்பதற்கும் மற்றும் நம்முடைய வாயின் வார்த்தைகளையும், ஜீவியத்தின் கிரியைகளையும் மாத்திரமல்லாமல், நமது எண்ணங்கள் அனைத்தையும் கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படுத்துவதற்கும் வைராக்கியம் உடையவர்களாக இருப்போம் (2 கொரிந்தியர் 10:5).