R208 – கர்த்தருடைய இராப்போஜனம்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R208 (page 3)

கர்த்தருடைய இராப்போஜனம்

THE LORD'S SUPPER

“நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே, ஆதலால் பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்.” 1 கொரிந்தியர் 5:7, 8

எகிப்தின் மீதான 10-வது வாதையின்போது, தங்கள் முதற்பேறானவர்கள் மரணத்திலிருந்து வியக்கத்தக்க விதத்தில் கடந்துபோகப்பட்டதை அல்லது கடாட்சிக்கப்பட்டதை நினைவுகூரத்தக்கதாக வருடந்தோறும் (மற்றும் இன்னமும்) ஆசரிக்கப்பட்டுவரும் யூதருடைய பண்டிகையாகப் பஸ்கா இருந்தது.

யாத்திராகமம் 12-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள காரியங்களாகிய – ஆட்டுக்குட்டி அடிக்கப்படுதலும், அதன் மாம்சம் நெருப்பில் சுடப்பட்டதும், அந்த மாம்சம் கசப்பான கீரைகளுடனும், புளிப்பில்லாத அப்பங்களுடனும் புசிக்கப்பட்டதும், அதைப் புசிக்கின்றவர்கள் நின்ற வண்ணமாகவும், இடைக்கட்டிக்கொண்டவர்களாகவும், பாதரட்சையைத் தொடுத்தவர்களாகவும், தடி பிடித்தவர்களாகவும், வாக்களிக்கப்பட்டுள்ள கானான் தேசத்திற்கு நேராக, எகிப்திலிருந்து வெளியேறி, புறப்படுவதற்கு ஆயத்தமாக இருந்ததும் – சந்தேகத்திற்கிடமின்றி நம் வாசகர்கள் அநேகருக்கு தெரிந்த விஷயங்களேயாகும். இன்னுமாக இவைகளின் அர்த்தங்கள் நிழல்களாக இருக்கின்றன என்பது தெரிந்த விஷயங்களேயாகும்: அதாவது எப்படி “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாகிய” இயேசு வந்தார் என்பதும், “பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கின்றார் என்பதும், எப்படி விசுவாச வீட்டாரின் நிலைக்கால்களும், மேற்சட்டங்களும், மேன்மையானவைகளைப் பேசுகிறதும், வீட்டிலிருப்பவர்களுக்கு மேலான விதத்தில் இரட்சிப்பைக் கொண்டுவருகிறதுமான ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் (அடையாளமாய்) தெளிக்கப்படுகின்றது என்பதும், எப்படி நாம் அந்நியர்களுமாய், பரதேசிகளுமாய் இருந்து, எகிப்தை (உலகத்தை) நமது வீடாகக் கொண்டிராமல் அல்லது அங்குத் தரித்திராமல், மாறாக கையில் தடி பிடித்திருக்க வேண்டும் என்பதும், இந்த ஜீவியத்தின் சோதனைகளையும், கசப்பான அனுபவங்களையும் அடையாளப்படுத்தும் “கசப்பான கீரைகள்” எப்படி நமக்கு அவசியமாய் இருக்கின்றது என்பதும், அது எப்படி (புளிப்பு அசுத்தத்திற்கு அல்லது தப்பறைக்கு நிழலாய் இருக்கின்றபடியால், தூய்மையான சத்தியத்தை அடையாளப்படுத்தும்) புளிப்பில்லாத அப்பத்திற்கான நமது பசியை/விருப்பத்தை அதிகப்படுத்துகின்றது மற்றும் “என்னுடைய மாம்சத்தைப் புசியாமல் இருந்தால், உங்களுக்குள்ளே ஜீவனில்லை” என்று கூறின நமது ஆட்டுக்குட்டியானவரைப் புசிப்பதற்கான நமது விருப்பத்தையும் அதிகப்படுத்துகின்றது என்பதும், தெரிந்த விஷயங்களேயாகும். இவ்வாறாக நாம் நம்முடைய ஆட்டுக்குட்டியைப் புசித்து, மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்துவானவரை நமக்குள் உருவாக்கப்பெற்றிருக்கிறோம். 1800-வருடங்களுக்கும் மேலான காலப்பகுதியை உடைய இந்த இரவு வேளையின்போது, நமது ஆட்டுக்குட்டி அடிக்கப்பட்டது முதல், உண்மையான அந்த ஒரே விசுவாச வீட்டாரே புசித்துக்கொண்டு வருகின்றனர் விடுதலையின் காலைக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர் – இந்தக் காலையின் விடியலானது ஏற்கெனவே வந்துவிட்டதென நாம் நம்புகின்றோம்.

இயேசு, அதாவது ஆட்டுக்குட்டியானவர் அதே நாளிலும் மற்றும் நிழலின் அந்த அம்சத்தினுடைய நிறைவேறுதலாகவும் மரித்திருப்பதினால், கிறிஸ்தவர்கள் அனைவரும் நமது ஆட்டுக்குட்டியானவர் மரித்தநாளை, நினைவுகூரும்படிக்கு அனுசரிப்பது எவ்வளவு பொருத்தமானதாய்த் தோன்றுகின்றது. நிழலை மாத்திரமே அங்கீகரிக்கின்ற “மாம்சீக இஸ்ரயேலர்களை” காட்டிலும், அந்நாளின்மீது நமக்கு நிச்சயமாய் அதிக கவனமுள்ளது. தினந்தோறும் பண்டிகையை நாம் ஆசரிக்கையில், அதாவது தினந்தோறும் கிறிஸ்துவிலும், அவருடைய சத்திய வார்த்தைகளிலும் நாம் பங்குபெறுகையில், நமது கர்த்தருடைய மரணத்தை, அதன் ஆண்டு நிறைவு நாளில் நினைவுகூரும்படிக்கு அனுசரிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், அருமையானக் காரியமாகவும் இருக்குமல்லவா?

அந்த நாளானது, தம்மை நினைவுகூரும்படிக்கு வருடந்தோறும் அனுசரிக்கப்பட வேண்டும் என்பது நமது கர்த்தருடைய விருப்பமாக இருந்தது என்றும், நிழலான யூதர்களுடைய அனுசரிப்பிற்குப்பதிலாக, அவருடைய சரீரத்திற்கும், இரத்தத்திற்குமான அடையாளச் சின்னங்களாகிய அப்பம் மற்றும் திராட்சரசம் அடங்கிய கர்த்தருடைய இராப்போஜனத்தை, அதாவது நம்முடைய பஸ்கா இராப்போஜனத்தை நிறுவினார் என்றும் நாம் புரிந்துகொள்கின்றோம்.

இதனோடு தொடர்புடைய அனைத்தும், இதுவே அவரது நோக்கம் என்பதைக் காண்பிக்கின்றதாய் இருக்கின்றது. அவர் ஒவ்வொரு வருடமும் பஸ்காவை முறையாக ஆசரித்துவந்தார் மற்றும் அவரது கடைசி பஸ்காவின்போது, அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இரவில், லூக்கா 22:15-ஆம் வசனத்தின் வார்த்தைகளைக் கூறினார். இயேசு ஆசரித்தது, பஸ்கா (ஆட்டுக்குட்டியின்) அடிக்கப்படுதலேயொழிய, பஸ்காவைப் பின்தொடரும் ஏழு நாட்களுக்குரிய பஸ்கா பண்டிகையல்ல. அக்காலங்களில் யூதர்கள் இரண்டையும் ஆசரித்தனர், அதிலும் குறிப்பாக பஸ்கா பண்டிகையையே ஆசரித்தனர். பஸ்கா ஆட்டுக்குட்டியின் அடிக்கப்படுதலுக்கான நினைவுகூரும் ஆசரிப்பை இப்பொழுது அவர்கள் ஆசரிப்பதுமில்லை மற்றும் நீண்டகாலமாய் ஆசரிக்கவுமில்லை. மாறாக பண்டிகையை மாத்திரமே ஆசரித்திருக்கின்றனர்.

(கடைசி வேளையில்) இயேசு அடிக்கப்படுதலுக்கான நினைவுகூருதலை மாத்திரம் ஆசரித்து, பின்னர் தம்மை உண்மையான பலியாக ஒப்புக்கொடுத்தார். பழைய நிழலுக்குப் (ஆட்டுக்குட்டிக்கு பதிலாக, (அப்பம் மற்றும் திராட்சரசம் எனும்) நினைவுகூருதலின் சின்னங்களை புதிய இராப்போஜனத்தை இயேசு நிறுவி, – தம்முடைய அப்போஸ்தலர்களுக்குக்கொடுத்து, “என்னை நினைவுகூரும்படிக்கு இதைச் செய்யுங்கள்” என்றார். (இனிமேல் நிழலை ஆசரிக்க வேண்டாம், மாறாக என்னை – நிஜத்தை நினைவுகூர்ந்து ஆசரிக்கத்தக்கதாக, இந்தப் புதிய அடையாளச் சின்னங்களைப் பயன்படுத்துங்கள்). “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் மற்றும் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுமளவும்” மற்றும் “ஜெயங்கொண்டவர்களாகிய முதற்பேறானவர்களைக் கடந்துபோகுதல் (அ) கடாட்சிப்பதன் மூலமாக நிழல் நிறைவடையுமளவும் மற்றும் முழு விசுவாச வீட்டாரின் இறுதி விடுதலை சம்பவிக்குமளவும்” – (நிழலான ஆட்டுக்குட்டியினுடைய மரணத்தையல்ல, மாறாக) அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

பஸ்காவின் அடிக்கப்படுதல் – கிறிஸ்துவின் மரணமானது, முதலாம் மாதத்தின் 14-ஆம் தேதியாகிய அதன் ஆண்டு நிறைவு நாளில் வருடந்தோறும் நினைவுகூரப்படுவதே சரியாக இருக்குமேயொழிய மற்றபடியல்ல. இந்த ஆண்டு நிறைவு நாளானது 1881-ஆம் வருடமாகிய இவ்வருடத்தில் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று (மாலை 6 மணிக்குத் தொடங்கும் நிலையில்) வருகின்றது. பின்வரும் ஏழு நாட்களுக்குரிய புளிப்பில்லாத அப்பம் புசித்தலின் பண்டிகையானது, நமது மீட்கும்பொருளின் காரணமாக, நாம் பிற்பாடு அனுபவிக்கும் தொடர்ச்சியான, பூரணமான மற்றும் நித்தியமான பண்டிகையை அடையாளப்படுத்துகின்றது; (ஏழு என்ற எண்ணானது, பூரணத்திற்கான அடையாளமாக இருக்கின்றது).

சில கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைதோறும், கர்த்தருடைய இராப்போஜனத்தை அனுசரிப்பதையும், மற்றும் தங்களுடைய இந்த வழக்கமானது, அப்போஸ்தலர் நடபடிகைகள் புஸ்தகத்தில், “வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருந்தார்கள்” என்று மீண்டும் மீண்டுமாகக் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களின் அடிப்படையில் காணப்படுவதாகக் கூறிக்கொள்வதையும் நாம் அறிந்திருக்கின்றோம். (அப்போஸ்தலர் 20:7) அப்பம் பிட்குதல் அடிக்கடிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இப்படியாக (அப்பம் பிட்குதல்) குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஓர் இடத்திலும், அப்பத்தைப்போன்று அக்கட்டளையில் முக்கியமான அம்சமாக இடம்பெறும் திராட்சரசம் குறிப்பிடப்படவில்லை என்பதையோ, இதுவுமல்லாமல் வாரத்தின் முதல்நாளில்கூடின இந்தக் கூடுகைகள் எங்குமே “கர்த்தருடைய இராப்போஜனம்” என்றோ அல்லது நாம் அது இராப்போஜனம் என்று முடிவுசெய்யத்தக்கதாக வேறு ஏதாகிலும் பெயரிலோ அழைக்கப்படவில்லை என்பதையோ மேற்கூறப்பட்டுள்ள கிறிஸ்தவர்கள் பார்க்கத் தவறியுள்ளனர் என்பது உறுதியே.

“கர்த்தருடைய நாளானது (வாரத்தின் முதல் நாளானது) கர்த்தருடைய மரணத்தின் நினைவுகூருதலை ஆசரிப்பதற்கு ஏற்ற நாளாகவே இருக்க முடியாது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன; அவைகளில் முக்கியமான காரணம், “முதல்நாள்” (அ) “கர்த்தருடைய நாளானது” முற்றிலும் வேறுபட்ட ஒரு சம்பவத்தின் நினைவுகூருவதற்குரிய நாளாக நிறுவப்பட்டது மற்றும் கைக்கொள்ளப்பட்டது, அதாவது நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்குரிய நினைவுகூருதலின் நாளாகவே நிறுவப்பட்டது என்பதேயாகும். ஒன்று “இரவில்” ஆசரிக்கப்பட்டு, இராப்போஜனம் என்று அழைக்கப்பட்டது, மற்றொன்றோ பகற்பொழுதில் ஆசரிக்கப்பட்டது. ஒன்று அழுகையின் மற்றும் துயரத்தின் இரவாய் இருந்தது, மற்றொன்றோ “கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்தார்” என்றுகூறி மகிழ்ச்சியும், களிகூருதலும்கொள்ளும் காலை வேளையாக இருந்தது. ஒன்று சுவிசேஷயுகமாகிய, பாடுகளுள்ள தற்காலத்து இரவு வேளைக்கு நிழலாய் இருந்தது, மற்றொன்றோ “அதிகாலையில்” சரீரத்தினுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு, பிரகாசமான ஆயிரவருட இராஜ்யத்தின் பகலில் இடம்பெறும் நம்முடைய ஒன்றுசேர்க்கப்படுதல் மற்றும் ஐக்கியத்திற்கான நிழலாக இருக்கின்றது.

இயேசு மரணத்திலிருந்து எழுந்த பிற்பாடு, அவர் அடிக்கடி, வாரத்தினுடைய முதல்நாளில் சீஷர்களுக்குத் தோன்றிக் காட்சியளித்தார் மற்றும் பல்வேறு தருணங்களில் அவர்கள் சாதாரணமாக உணவு உட்கொள்ளும்போது அப்பம் பிட்கையில் தம்மை அவர்களுக்கு அவர் வெளிப்படுத்தினவராகக் காணப்பட்டார். சபை இந்த வாரத்தின் முதல்நாளை விசேஷமாக ஒருவரோடொருவரும், கர்த்தரோடும் சந்திப்பதற்கான நாளாக ஒதுக்கி வைத்தார்கள் என்றும், அவர்கள் நீண்ட தொலைவிலிருந்து வருவதினாலும், மற்றுமாகக் கர்த்தர் தம்மை இப்படியாக (அப்பம் பிட்குதல் மூலம்) வெளிப்படுத்தினதாலும், அந்தநாளில் அவர்கள் தங்கள் போஜனத்தைப் பொதுவாய் உட்கொள்வதற்கென ஒழுங்குப்படுத்தியிருந்திருப்பார்கள் என்றும் எண்ணுவதைக்காட்டிலும் வேறு ஏதேனும் நியாயமான அனுமானங்கள் இருக்கக்கூடுமோ? இந்த நாளானது, எப்போதும் சந்தோஷத்தின் ஒரு நாளாகக்காணப்பட்டது, மற்றநாளோ அனுதாபத்துடன்கூடிய துயரம் நிறைந்த இரவாக இருந்தது.

ஞானஸ்நானத்தைப்போன்று, இந்தக் கட்டளையின் சரியான அனுசரிப்பும்கூட, போப்மார்க்கத்தினுடைய ஆளுகையின்போது மறைந்துபோய்விட்டது; இது முற்றிலும் அகற்றப்பட்டு, இதனிடத்தில் மரிக்கும் நபர் உத்தரிக்கும் ஸ்தலம் முதலானவைகளிலிருந்து காக்கப்படத்தக்கதாக, மரணபடுக்கையின்போது கொடுக்கப்படும் நற்கருணை விருந்து (sacrament) அனுமதிக்கப்பட்டது என்பதில் ஐயமில்லை. புராட்டஸ்டண்டினரோ (Protestants) இவ்விஷயத்திற்குப் பொதுவாய் அதிகம் கவனம் காட்டாதவர்களாய் இருந்து, “பானம்பண்ணும்போதெல்லாம்” எனும் வார்த்தைகளை, சௌகரியமான வேளைகளிலெல்லாம் செய்வதற்கான அதிகாரமாக எடுத்துக்கொள்கின்றனர் மற்றும் இவ்வசனத்தின் வார்த்தைகளில் இடம்பெறும் “இந்த” எனும் வார்த்தையானது பஸ்காவைக்குறிக்கின்றதாய் இருக்கின்றது என்பதையும், இந்தச் சம்பவத்திற்கான நினைவுகூருதலை ஆசரிக்கும்போதெல்லாம், நிழலை இல்லாமல், நிஜமாகிய என்னை நினைவுகூரும்படி – இதைச் செய்யுங்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பதையும் காணத்தவறிவிடுகின்றனர்.
காலந்தவறி ஆசரிப்பதினால் பாவம் செய்யப்படுகின்றது என்றோ, ஆசரியாமல் இருப்பது பாவம் என்றோ நாம் சொல்லுகிறதில்லை; மாறாக அது நிறுவப்பட்டது போலவே ஆசரிப்பது என்பது வேறுவிதமாய் ஆசரித்தலைக்காட்டிலும் மிகவும் ஏற்றதாகவும், நல்யோசனையாகவும், நினைவுகூருதலாகவும் காணப்படும் என்றே நாம் சொல்லுகின்றோம்.