R5550 – ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R5550 (page 299)

ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?

WHY GETHSEMANE'S AGONY?

மாற்கு 14:38-42

“நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்.”மத்தேயு 26:41

தமது மரணத்திற்கான நினைவுகூருதலாகிய இராப்போஜனத்தை நிறுவின பிற்பாடு, இயேசுவும், அவரது சீஷர்களும் ஸ்தோத்திரப்பாடல் பாடிவிட்டு, பட்டணத்திலிருந்து, வெளியே எதிரேயுள்ள ஒலிவ மலைக்குப் போனார்கள்; சுமார் ஒரு மைல் தொலைவிற்குப் போனார்கள். கெத்செமனேக்குப் போகிற வழியில் அநேக முக்கியமான படிப்பினைகளானது சீஷர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இவைகளைப் பரிசுத்த யோவான் அவர்களின் சுவிசேஷமானது, 15 முதல் 17 வரையிலான அதிகாரங்களில் பதிவு செய்கின்றதாய் இருக்கின்றது.

கெத்செமனே எனும் வார்த்தையின் அர்த்தம் எண்ணெய் செக்காகும்; இது மிகுந்த அர்த்தமுள்ள பெயராகும். யூதர்கள் ஒலிவ பழங்களை உணவிற்காகவும், வெளிச்சத்திற்காகவும் பயன்படுத்தினார்கள் என்பதை நாம் நினைவுகூருகையில் மற்றும் இயேசுவும் உலகத்திற்கு ஆகாரம் அளிப்பவர் மற்றும் வெளிச்சம் அளிப்பவர் என்பதை நாம் நினைவுகூருகையில், இயேசுவின் ஆத்துமாவை நசுக்கிப்போட்டதான, அவரது சோதனையான அனுபவங்களை, எண்ணெய்க்காக ஒலிவப்பழங்களை நசுக்கி எடுக்கும் தோட்டத்தில், அவர் பெற்றிருப்பது விசேஷித்த விதத்தில் பொருத்தமுடையதாய்க் காணப்படுகின்றது என்று நாம் காண்கின்றோம்.

கெத்செமனே என்பது மலர் தோட்டமாய் இராமல், ஒலிவ மரத்தோட்டமாய் இருந்தது. இவ்விடம் என்று அனுமானிக்கப்படுகின்ற இடமானது, இன்றும் கவனமாய்ப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது மற்றும் பிரான்சிஸ்கான் துறவிகளினால் (Franciscan Monks) பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்தத் தோட்டத்தில் மிகப் பழமைவாய்ந்த சில ஒலிவ மரங்களும், மிகவும் பழமை வாய்ந்த கர்வாலி மரம் ஒன்றும் காணப்படுகின்றது. தோட்டமானது இயேசுவினுடைய நண்பர்கள் சிலருக்குச் சொந்தமானதாகக் கருதப்படுகின்றது; மற்றும் இயேசு கைது செய்யப்பட்டபோது, ஏற்பட்ட சத்தம் காரணமாக எழுந்து, துப்பட்டியினால் தன்னைப் போர்த்திக்கொண்டு வந்த வாலிபன், பரிசுத்த மாற்கு அவர்களின் சுவிசேஷத்தினுடைய எழுத்தாளராகிய ஜான் மாற்கு ஆவார் என்றும் கூறப்படுகின்றது (மாற்கு 14:51,52).

எச்சரித்தல்

கெத்செமனேக்குப் போகிற வழியில், அவர்கள் மகா ஆபத்தானச் சூழ்நிலைக்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் பதியவைக்க முற்பட்டார். அவர், “மேய்ப்பனை வெட்டு அப்பொழுது ஆடுகள் சிதறிப்போம்” என்ற தீர்க்கத்தரிசனத்தை அவர்களுக்குக் குறிப்பிட்டார் (சகரியா 13:7). இதன் காரணமாக அவர்கள் அனைவரும் சோர்வடைவார்கள், இடறுவார்கள், கலங்கிப்போய்விடுவார்கள் என்று தெளிவாய் அவர்களுக்குக் கூறினார். அவர்கள் எதிர்ப்பார்த்திராதக் காரியங்கள் சம்பவிக்கும் என்று கூறினார்.

கர்த்தருக்கான தனது பக்தியில் முழு நம்பிக்கையுடையவரான பரிசுத்த பேதுரு, இதை மறுத்தார் மற்றும் இது ஒருவேளை மற்றவர்களுடைய விஷயத்தில் உண்மையாய் இருந்திட்டாலும், தன் விஷயத்தில் அப்படியாக இராது என்றும், போதகரை மறுதலிப்பதற்குப் பதிலாக, அவரோடுகூட மரிப்பதற்குத் தான் ஆயத்தமாய் உள்ளதாகவும் தெரிவித்தார். பரிசுத்த பேதுரு மாபெரும் அபாயத்தில் காணப்படுவதாக இயேசு இன்னும் வலியுறுத்தினவராக இருந்தார். பரிசுத்த பேதுரு தனது மாம்சத்தினிடத்தில் மிக அதிகமாய் நம்பிக்கைக் கொண்டவராகவும், தேவனை நோக்கிப்பார்க்காதவராகவும், சோதனைக்கு எதிராக ஜெபத்துடன் விழித்திராதவராகவும் காணப்பட்டார். இயேசு கூறினவைகளை, மறுத்து விளக்கம் அளிக்கும் வண்ணமாகச் சீஷர்கள் அனைவரும் பேசினவர்களானார்கள். அவர்கள் தாங்கள் உண்மையுள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள் என்றும், மரிப்பதற்கு ஆயத்தமாகக் காணப்படுகின்றார்கள் என்றும் தங்களைக் குறித்துக் கூறினார்கள். அவர்கள் மீது எத்துணை கடுமையான சோதனைகள் வரப்போகின்றது என்று அவர்கள் அறியாதவர்களாய்க் காணப்பட்டனர்!

இதில் அன்றுபோல் இன்றுமுள்ள இயேசுவின் பின்னடியார்கள் அனைவருக்கும் படிப்பினை நிச்சயமாய் உள்ளது. நமது கடைசி மூச்சு வரையிலும், கர்த்தருடைய காரணங்களுக்கு/நோக்கங்களுக்கு நேர்மையாய்/உண்மையாய்க்காணப்பட வேண்டுமென்று முழுமையாய் உறுதியுடன் காணப்படுவது சரியே; இத்தகைய உறுதி என்பது ஜெயம் கொள்ளுதலுக்கு மிகவும் அவசியமே. அநேகரால் செய்யப்படுகின்ற தவறு என்னவெனில், சோதனைகளும், பரீட்சைகளும் எவ்வளவு கடினமானதாகக் காணப்படும் என்பதை உணர்ந்துகொள்ளாததும், தேவையின் போதான பரம உதவியின் அவசியத்தினை உணர்ந்து கொள்ளாததுமேயாகும். அப்போஸ்தலன்: “நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாய் இருக்கிறேன்” என்று எழுதியுள்ளார். இப்படியாக அப்போஸ்தலன் குறிப்பிடுகையில், தான் கர்த்தருக்கு முழுக்க உண்மையாய் இருக்கும் அதேவேளையில், தான் தன்னுடைய சொந்த பலவீனங்களையும், இயலாமைகளையும் உணர்ந்துகொள்வதாகவும், ஆனால் பரம உதவியினை தான் விசேஷமாய் நாடுகையில், தான் பலமுள்ளவனாய்க் காணப்படுவதாகவும், தான் விழித்திருந்து, ஜெபம் பண்ணும்போது, தான் சோதனைகளுக்கு எதிராக முன்னெச்சரிக்கப்படுகின்றதாகவும் கூறுகின்றார்.

சந்தேகத்திற்கிடமின்றி இந்த யுகத்தினுடைய முடிவில், இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய நிறைவு நாட்களில், கிறிஸ்துவினுடைய சபைக்கு, கெத்செமனே அனுபவங்கள் கடந்துவரும். இந்தச் சோதனைகளிலும், பரீட்சைகளிலும் நிலைநின்று, ஜெயம்கொண்டவர்களாக வருபவர்களின் கர்த்தரிடத்திலான விசுவாசம் மற்றும் நம்பிக்கையே பலமுள்ளதாய்க் காணப்படும்; இவர்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து, ஜெபம் பண்ணுகிறவர்களாய் இருப்பார்கள் மற்றும் இவர்கள் இப்படியாய் அவைகளுக்கு எதிராய்ப் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். நமது கர்த்தர் பரிசுத்த பேதுருவையும், மற்ற அப்போஸ்தலர்களையும், அவர்களுக்கு வரவிருக்கின்ற சோதனைகள் குறித்து முன்னெச்சரித்தது போலவே, நமக்குச் சமீபமாய்க் காணப்படுகின்றதான மிக நெருக்கடியான பரீட்சைகள் குறித்து நம்மையும் முன்னெச்சரிக்கைச் செய்கின்றார். இப்பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதான அப்போஸ்தலர்களுடைய அனுபவங்களிலிருந்து நாம் நன்மை அடைவோமாக.

மரணத்திற்கு ஏதுவான துக்கம்

தோட்டத்தை வந்தடைந்தவுடன், இயேசு அப்போஸ்தலர்களில் எட்டுப் பேரை வாசலிலேயே நிறுத்திவிட்டு, இன்னும் சற்றுத் தொலைவில் நிழல்களுக்குள் பேதுருவோடும், யாக்கோபோடும், யோவானோடும் போனார். நடக்கப்போகின்ற ஏதோ ஒன்றிற்காகவும், இதைக் குறித்து இயேசுவினால் அறியப்பட்டிருந்த ஏதோ ஒன்றிற்காக, அவர்கள் அனைவரும் விழித்திருக்க வேண்டும், காவல்காக்க வேண்டும். ஆனால் இப்படியாக எதுவும் நடக்காது என்றே அப்போஸ்தலர்களுக்குத் தோன்றினது. போதகர் மீது அவர்களுக்கு அனுதாபம் இருந்தபோதிலும், மோசமான விளைவுகள் வரப்போவதாக அவர் எதிர்ப்பார்ப்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

நடுராத்திரியாயிற்று, அவர்கள் நேரமே தூங்கும் பழக்கம் உடையவர்களாய்க் காணப்பட்டனர். அன்றைய மாலையில் ஏற்பட்ட அழுத்தம் மற்றும் போதகர் கொடுத்திட்டதான பலமான பாடங்கள், அவர்களிடத்தில் அரைத் தூக்கத்தினை ஏற்படுத்தினது. அவர்கள் விழித்திருந்து, ஜெபம் பண்ணுவதற்குப் பதிலாக தூங்கினார்கள். போதகருக்கு நெருக்கமாய்க் காணப்பட்ட மூவரும்கூடத் தூங்கினார்கள்.

பிதாவோடு தனிமையில் சம்பாஷித்திட விரும்பினவராக, இயேசு கல்லெறியும் தூரம் அப்பால் நிழலுக்குள் மறைந்து சென்றார். அவர் மீது கடந்துவந்திட்டதான வியாகுலத்தின் நிமித்தமாக, அவர் அவ்வப்போது, மனித ஆறுதலை/அனுதாபத்தை நாடினபோது, தமக்கு நெருக்கமானவர்களும்கூட, அனைத்தையும் மறந்து போனவர்களாக, தூக்கத்திலிருப்பதைக் கண்டார். “ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை” என்று தீர்க்கத்தரிசி சரியாகவே கூறியுள்ளார் (ஏசாயா 63:3). அவர் ஒருவராய்த் துயரம் எனும் ஆலையை, தனிமையில் மிதித்திட்டார்.

தமது அப்போஸ்தலர்களுக்குப் புத்திமதி கூறி, அவர்களில் சிலரைத் தோட்டத்தினுடைய வாசலில் விட்டது முதல், போதகர் தம்மைக் குறித்தும், சில மணி நேரங்களில் நடக்க விருக்கின்றதென, எதிர்ப்பார்க்கப்படுகின்றதான முக்கியமான நிகழ்வுகள் குறித்தும் விசேஷமாய்ச் சிந்தனைச் செய்தவரானார். அவர் தமது அபிமான மூன்று சீஷர்களை விட்டுச் செல்லுகையில், அவரது ஆத்துமாவின் மீது சடுதியாக வந்திட்டதான அழுத்தத்தினுடைய பாரத்தினை உணர்ந்தவராக, “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது என் மீது வரவிருக்கின்றதான – ஆபத்துக்கள் வருவதற்கு முன்னதாக, நான் இப்போதே மரித்துவிடுவேன் போன்றுள்ளது” என்றார். அவர் “மிகவும் கலங்கியிருந்ததாகவும், திகிலடைந்ததாகவும்” அவரைக் குறித்து நாம் வாசிக்கின்றோம். இங்கு இடம்பெறுகின்றதான வார்த்தைகளுக்கான கிரேக்க வார்த்தையானது, உச்ச அளவிலான கலக்கத்தையும், திகிலடைதலையும் குறிக்கின்றதாய் இருந்து, தனிமையை, நண்பர் அற்ற நிலையை, ஏக்கத்தை அர்த்தப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

[R5551 : page 300]

இரட்சகர் மீது சடுதியாய் வந்திட்டதான மிகுந்த துயரங்களும், நம்பிக்கையின்மையின் உணர்வுகளும் சற்றுநேரம் தொடர்ந்தது; அவர் பிதாவிடம் மூன்றுதரம் ஜெபத்தில் சென்று, இந்த வேளை தம்மைவிட்டுக் கடந்துபோகும்படிக்கு வேண்டிக்கொண்டார்; தம்முடைய இருதயத்தை நொறுக்கிக்கொண்டிருக்கின்றதான கடுமையான அழுத்தமானது கடந்துபோகும்படிக்கு வேண்டிக்கொண்டார். போதகருக்கு இரத்த வியர்வை உண்டாகுமளவுக்குப் பெருந்துயரம் காணப்பட்டதாக, மருத்துவராகிய லூக்கா சுவிசேஷகர் தெரிவித்துள்ளார். இரத்த வியர்வை குறித்த இந்தப் பதிவானது சில பழைய மூலப்பிரதிகளில் இடம்பெறவில்லை என்றாலும், இத்தகைய அனுபவங்களானது, மாதுயரங்களில் காணப்பட்டுள்ளதான மற்றச் சிலருக்கு ஏற்பட்டுள்ளதென மருத்துவர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.

போதகருடைய துயரத்திற்கான காரணம்

போதகர் தம்முடைய மரணத்தைக் குறித்து முன்னறிந்தவராக இருக்க மற்றும் இதைக் குறித்துத் தம்முடைய சீஷர்களிடம் அவர் கூறியிருக்க மற்றும் தாம் மரணத்திலிருந்து, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார் என்று அவர்களுக்கு நிச்சயமளித்திருக்க, அவர் தம்முடைய மரணத்தை எதிர்ப்பார்த்ததில், கொண்டிருந்த மாதுயரத்தை நாம் எவ்வாறு விளக்குவது? அவரது பின்னடியார்களில் சிலருக்கு இல்லாத அளவுக்கும், ஆம் பொதுவான ஜனங்களுக்கு இல்லாத அளவுக்கும், மரணம் குறித்த எண்ணமானது, மீட்பருக்கு ஏன் இத்தனை பயத்தைக் கொடுத்தது?

சிலுவையில் அறையப்படுதலுக்கு நிகரான (அ) இதற்கும் மேலான அனுபவங்களுள்ள மரணங்களுக்குள்ளாகப் பல நூறு இரத்த சாட்சிகள் கடந்துபோயிருக்கின்றனர். இவர்கள் இயேசுவுக்கு நிகரான கொடுமையான மரணங்களுக்குள் கடந்துசெல்கையில், மிகுந்த தைரியத்தையும், மனோதிடத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் இரட்சகருடைய இத்தகைய மனநிலையையும் மற்றும் அந்த வேளை (அ) பாத்திரம் தம்மைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும் என்று மிகவும் ஏக்கமாய் அவர் ஜெபம் பண்ணினதையும் நாம் எப்படி எடுத்துக்கொள்வது?

இந்தக் கேள்வியையும், இதற்கானச் சரியான பதிலையும் புரிந்துகொள்வதற்கு, மீதமான மனுக்குலமிடமிருந்து போதகர் எவ்வளவு வித்தியாசமானவர்/வேறுபட்டவர் என்பதை நாம் நினைவில் கொண்டிட வேண்டும். உலகம் அனைத்தின் மீது, ஒரு மரணத்தண்டனை தீர்ப்புக் காணப்படுகின்றது. நாம் எப்போது மரிக்கப் போகின்றோம் என்பதுதான் கேள்வி என்பதை நாம் அனைவருமே அறிவோம். மரிக்கும் நிகழ்வானது, சில மணி நேரங்களுக்கு அதிகப்பட்சமாய் நீடிக்கக்கூடியவை என்பதை நாம் அனைவருமே அறிவோம். மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான எந்த நம்பிக்கையும் நமக்கு இல்லை என்பது மாத்திரமல்லாமல், நாம் ஏற்கெனவே பத்தில், ஒன்பதும் மரித்த நிலையில் உள்ளவர்களாகக் காணப்படுவதினால், நம்முடைய உணர்வுகளானது ஏறக்குறைய மரத்துப்போனதாகவே காணப்படுகின்றது. மரணம் குறித்த விஷயத்தில் நாம் ஏறக்குறைய அலட்சியமானவர்களாகவும், கவனமற்றவர்களாகவும் மற்றும் இதற்கேற்ப கடுமையானவர்களாகவும் காணப்படுகின்றோம்.

உண்மையான தைரியத்தினுடைய வெளிப்பாடு

மரணத்தைக் குறித்துக் கவலைக்கொள்ளாமல், பயமற்ற நிலையில் போர்வீரர்கள் யுத்தத்திற்கு பாய்ந்து செல்வதுண்டு மற்றும் இதைப்போன்று பாய்ந்திடும் குதிரைகளும் உண்டு. தாங்கள் என்ன செய்கின்றார்கள் என்று முழுக்கப் புரிந்துகொண்டுள்ள நிலைமையிலும், மரணத்தைக் கண்டு மிகவும் பயப்படுகிற நிலைமையிலும், ஆனால் கடமை மற்றும் அன்பினுடைய கட்டளையின் காரணமான கீழ்ப்படிதலின் நிமித்தமாக முன்னேறுகிறவர்கள்தான் மாபெரும் தைரியம் உடையவர்களாய் இருக்கின்றனர். இயேசு இப்படியானதொரு போர்வீரன்தான். மற்றவர்கள் மரணம் என்பது என்னவென்று புரிந்துகொண்டிராததை, அவர் புரிந்துகொண்டிருந்தார். ஜீவனுடைய முக்கியத்துவம் மற்றும் மதிப்புக் குறித்து மற்றவர்களால் உணர்ந்துகொள்ள முடியாததை, இயேசு உணர்ந்துகொண்டவராய்க் காணப்பட்டார்.

இயேசு பரலோக மகிமையைத் துறந்தவராக, ஆவிக்குரிய தளத்தின் சுபாவத்தை விட்டுவிட்டவராக, மனித சுபாவத்தை எடுத்துக்கொண்டார், காரணம் மனிதன் பாவம் செய்திருக்கின்றான் மற்றும் தெய்வீக ஏற்பாட்டின்படி இயேசு மனுஷனுக்கான மீட்கும் பொருளென, அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் மரிக்க வேண்டியிருந்தது. இதுவே அவரைக் குறித்த பிதாவின் சித்தமாயிருந்தது. இந்த நோக்கத்திற்காகவே, அவர் உலகத்திற்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஒரு சிந்தையே, அவரது ஜீவியம் முழுவதையும் இயக்கினதாய் இருந்தது. தேவனுடைய சித்தத்தைச் செய்வதிலும், மனுக்குலத்திற்கு ஊழியம் புரிவதிலும், அவர் தினந்தோறும் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்து வந்தார். இப்பொழுது அதன் மாபெரும் உச்சக்கட்டத்திற்கு வந்திருக்கின்றார்.

கர்த்தருக்குக் கொடுத்திருக்கும் இப்பணியில் அவர் உண்மையுள்ளவராய்க் காணப்பட்டாரானால், அவர் தெய்வீக வல்லமையினால் மரணத்தினின்று, அவர் முன்பிருந்த நிலைக்கும், ஜீவதளத்திற்கும் மேலான தளத்திற்கும், நிலைக்கும் உயிர்த்தெழுப்பப்படுவார் என்று பரம பிதா வாக்களித்திருந்தார். இவ்விஷயத்திலான பிதாவினுடைய உண்மையைக் குறித்தும், பிதாவின் வல்லமையைக் குறித்தும் இயேசு ஐயம் கொள்ளவில்லை. ஆனால் பிதாவின் வாக்குத்தத்தமும், ஏற்பாடும் நிபந்தனையின் அடிப்படையிலேயே இருந்தது; நமது கர்த்தர் உண்மையுள்ளவராகக் காணப்பட்டால் மாத்திரமே, அவர் உயர்நிலையான ஜீவனுக்கான உயிர்த்தெழுதலைப் பெற்றுக்கொள்ள முடியும். ஏதேனும் அளவில், பெரியளவிலோ (அ) சிறிய அளவிலோ, அவர் பாவத்தில் ஈடுபடுவாரானால், அவருக்கு பாவத்திற்கான தண்டனையானது, “சாகவே சாவாய்” என்பதாகவே இருந்திருக்கும்.

மூன்றரை வருடங்களாக அவரது ஜீவியமானது, தேவனுக்கும், தெய்வீகச் சித்தத்தினைச் செய்வதற்குமென்று அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. அவர் தெய்வீகச் சித்தத்தினைப் பரலோக பிதாவுக்குப் பிரியமானவிதத்தில், முற்றும் முழுமையாகச் செய்துள்ளாரா? என்பதுதான் கேள்வியாயிருந்தது. இதனோடுகூட இனி அடுத்து சில மணிநேரங்களில் வருகின்றதான அனுபவங்கள் வாயிலாகத் தம்மால் சரியான தைரியத்துடனும், சரியான விசுவாசத்துடனும், சரியான கீழ்ப்படிதலுடனும் கடந்துபோக முடியுமா, தாம் கடந்து போவாரா? அல்லது தவறிப்போய், தம்முடைய அனைத்தையும் மரணத்தில் இழந்துவிடுவாரா? என்ற கேள்விகள் அவருக்குள் குவிந்தன.

போதகருக்குப் பரிந்துபேசுபவர் எவருமில்லை

இப்படியாக அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்க நாடுகின்ற நம்மிடமிருந்து, நமது போதகருடைய விஷயம் எவ்வளவு வேறுபட்டிருந்தது என்று நாம் பார்க்கின்றோம். நாம் இழந்துபோய்விடுவதற்கென்று எதுவுமில்லை; ஏனெனில் நம் சந்ததியினர் அனைவரும் மரணத் தண்டனை தீர்ப்பின் கீழ்க் காணப்படுகின்றனர். இன்னுமாக இயேசுவினுடைய பின்னடியார்கள், தங்களுடைய பாவங்களுக்காக மரித்திட்ட தேவனுடைய குமாரன் அவரே என்றும், அவரது புண்ணியமானது நமது அபரிபூரணங்களினாலான குறைகளைச் சரிசெய்துவிடுகின்றது, ஏனெனில் நாமும் அவரில் நிலைத்திருந்து, பிதாவின் சித்தத்தைச் செய்ய விரும்புகின்றவர்களாய் இருக்கின்றோம் என்றும் உணர்ந்துகொள்கின்றனர்.

ஆனால் ஒருவேளை போதகர் தவறிப் போய்விடுவாரானால், அவரது குறைவுகளைச் சரி செய்திடுவதற்கு அவருக்கு எவருமில்லை. அவர் தவறிடுவது என்பது நித்தியமான மரணத்தைக் குறிப்பதாகிவிடும்; இன்னுமாக விசேஷித்த உண்மைக்கெனத் தேவனால் வாக்களிக்கப்பட்டிருந்த அந்த விசேஷித்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் இழந்திடுவதையும் குறிப்பதாகிவிடும். மேசியாவின் இராஜ்யத்தின் வாயிலாக, மனுக்குலத்தைப் பாவம் மற்றும் மரணத்தின் நிலைமைகளினின்று தூக்கிவிடும் பிதாவின் வேலையைப் புரிந்திடுவதற்கான மாபெரும் சிலாக்கியத்தினைக்கூட இழந்துவிடுவதைக் குறிப்பதாகிவிடும். சுருக்கமான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், போதகருடைய நித்தியமான ஜீவனும் மற்றும் தூதர்களுக்கும், துரைத்தனங்களுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக, பிதாவின் வலது பாரிசத்தில் உயர்வாய் அவர் உயர்த்தப்படுவதும், அழியாமையும், கனமும், மகிமையுமான அவருக்கானவைகள்யாவும், அந்த இரவில், கெத்செமனேயில் தராசில் காணப்பட்டது.

இவைகள் அனைத்தையும் போதகர் உணர்ந்தபோது, அவர் இந்த எண்ணங்களினால் அமிழ்த்தப்பட்டார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தமக்கு முன்பு காணப்படுகின்றதான விசேஷித்த உபத்திரவங்களிலிருந்தும், கோரமான/பயங்கரமான அனுபவங்களுள்ள வேளையினின்றும் தாம் தப்புவிக்கப்படத்தக்கதாகவும், தாம் கடாட்சிக்கப்படத்தக்கதாகவும், தெய்வீகத் திட்டமானது வேறு விதத்தில் நடந்தேறுவதற்கு வாய்ப்புள்ளதா என்று அவர் விரும்பினதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! அந்த அனுபவங்களினுடைய பயங்கரமான பாகமானது, அவர் தேவதுஷணம் புரிந்தவராக, தேவனுக்கும், நீதிக்கும் சத்துருவாக, பாதகனாக/குற்றவாளியாகக் கையாளப்படுவதாய் இருந்தது.

நமது கர்த்தர் எதற்குப் பயப்பட்டார்

இக்காரியங்களானது சீரழிந்த, சீர்க்கேடான ஆத்துமாவிற்குப் பெரிதாய் ஒன்றும் இராது, ஆனால் பிதாவுக்கு அன்பினாலும், உண்மையினாலும் நிரம்பிக்காணப்படுகிற இருதயத்திற்கோ, இத்தகைய அனுபவம் என்பது பயங்கரமானதாய்க் காணப்பட்டிருக்கும்; அதாவது பிதாவின் சித்தத்தைச் செய்யத்தக்கதாக, தம்முடைய அனைத்தையும் தியாகம் பண்ணிட்டவர், தம்முடைய பரலோக மகிமையை, தம்முடைய பூமிக்குரிய நலன்களைத் தியாகம் பண்ணிட்டவர் இப்படிப்பட்டவர் தேவனுக்கு – எதிராக தேவதூஷணம் பேசிட்டவராக கருதப்படுவதும், அவர் பாதகனென, குற்றவாளியெனச் சிலுவையில் அறையப்படுவதும், அவருக்குப் பயங்கரமானவைகளாகவே காணப்பட்டிருக்கும்! உயர்குணமுள்ளவரும், நேர்த்தியானவருமான இயேசுவுக்கு, அதாவது “பரிசுத்தரும், மாசில்லாதவரும், குற்றமற்றவரும், பாவிகளுக்கு விலகினவருமானவர்” என்று யாரைக் குறித்து எழுதப்பட்டிருக்கின்றதோ, அவருக்கு இவைகள் பயங்கரமான அனுபவங்களாகவே காணப்பட்டிருக்கும்!

இந்த அவமானமே, தம்மை விட்டுக் கடந்துபோகக்கூடுமோ என்று இயேசு ஜெபம் பண்ணினார். அவர் தாம் சாகக்கூடாது என்று ஜெபம் பண்ணிடவில்லை; ஏனெனில் இந்த நோக்கத்திற்காகவே (மரிப்பதற்காகவே) தாம் பூமியில் வந்திருக்கின்றார் என்றும், தம்முடைய மரணத்தின் மூலமாக மாத்திரமே, மனுஷஜாதியின் மீதான மரணத் தண்டனை மாற்றப்பட முடியும் என்றும் அறிந்திருந்தார். அவர் தம்முடைய மரணத்தைக் குறித்து அடிக்கடி பேசியிருந்தார்; மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டுமென்று அவர் ஒரு கணம்கூட எண்ணினதில்லை. “மாம்சமும், இரத்தமும் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை” என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அந்த வேளையினுடைய விசேஷித்த அவமானத்தை மாற்றிடுவதற்குப் பிதாவிடம் ஏதேனும் வழி இருக்கும் என்றுதான் அவர் எதிர்ப்பார்த்தார். எனினும் போதகர் தமக்கான மிகுந்த துயரமான வேளையிலுங்கூட, “ஆகிலும் என் சித்தப்படியல்ல, உம் சித்தப்படியே ஆகக்கடவது” என்று ஜெபம் பண்ணினார்.

போதகருடைய கெத்செமனே அனுபவங்களானது, பயத்துடன் இணைந்து காணப்பட்டது என்று பரிசுத்த பவுல் நமக்கு உறுதியளிக்கின்றார்; இது மரித்துவிடுவோம் என்பதற்கான பயமாய் இராமல், மாறாக மரணத்திலேயே என்றென்றும் காணப்பட்டுவிடுவது குறித்த பயமாக இருந்தது; முற்றும் முழுமையான கீழ்ப்படிதல் எனும் நிபந்தனையின் பேரில் பிதாவினால் வாக்களிக்கப்பட்டுள்ளதான மகிமையான உயிர்த்தெழுதலுக்குப் பாத்திரமாகக் கருதப்படாமல் போவது குறித்த பயமாக இருந்தது. “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று [R5551 : page 301] (உயிர்த்தெழுதல் வாயிலாக) இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு” (எபிரெயர் 5:7) என்று பரிசுத்த பவுல் கூறுகிறார். அவர் மரணத்திலிருந்து இரட்சிக்கப்பட்டார்; மற்றும் இதைவிட மேலாக அவர் மரணத்திலிருந்து (உயிர்த்தெழுதல் வாயிலாக) இரட்சிக்கப்படுவார் என்ற நிச்சயம் பிதாவினால் அவருக்குக் கொடுக்கப்பட்டது.

பரத்திலிருந்து பலப்படுத்தப்பட்டார்

இதுவே தேவனிடமிருந்து ஒரு தேவதூதன், அவருக்குத் தோட்டத்தில் தோன்றி, அவரைப் பலப்படுத்தினார் என்ற வார்த்தைகளுக்கான விளக்கமாகும்; இயேசு அந்நிமிடம்வரை உண்மையாய் இருந்திருக்கின்றார் என்றும், சீக்கிரத்தில் வரவிருக்கின்ற சோதனையான வேளையில், தெய்வீக ஆசீர்வாதமானது அவரோடே காணப்படும் என்றும் பிதாவிடத்திலிருந்ததான வாக்குறுதியை, தூதன் இயேசுவுக்குக் கொடுத்தார். அந்தக் கணம் முதல் அனைத்துப் பயங்களும், வியாகுலங்களும் போய்விட்டன. பிதா இதுவரையிலும் அங்கீகரித்துள்ளாரெனில், மற்றும் பிதாவின் ஆசீர்வாதமும், புன்முறுவலும் தம்மோடுகூட வருமாயின், எது வந்தாலும் அவரால் அனைத்தையும் சந்திக்க/சகிக்க முடியும். மீதமான இராத்திரி வேளையிலும், பின்தொடர்ந்து வந்த நாளிலும், மிகவும் கடுமையான சூழ்நிலைகள் மத்தியில், இயேசு அமைதியிலும் அமைதியுள்ளவராய்க் காணப்பட்டார். தமக்காக அழுதவர்களை அவர் ஆறுதல் படுத்தினார்; தம்முடைய தாயாரை, உண்மையுள்ள பரிசுத்த யோவானிடம் ஒப்படைத்தார்.

போதகருடைய இந்த அனுபவங்களில், அவரது சீஷர்களின் அனுபவங்களை அடையாளம்காணலாம். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றும், பிதா அவர்களை அன்புகூருகின்றார் என்றும், அவரது கிருபை அவர்களுக்குப் போதுமானது என்றும், மீட்பருடைய நீதியின் வஸ்திரமானது, அவர்களை மூடுகின்றது என்றும் அவர்களுக்கு உறுதியளிக்கப்படுகையில், அவர்கள் மரணத்தைக் கண்டு அச்சமடைந்திருந்தாலும், இம்மாதிரியானச் சூழ்நிலைகளில் அவர்களால் தைரியமாய்க் காணப்பட முடியும்.

போதகருக்கும், அவரது பின்னடியார்களுக்கும் இடையிலான மாபெரும் வித்தியாசமானது நினைவில் கொள்ளப்பட வேண்டும்; அதென்னவெனில்: “ஜனங்களில் ஒருவனும் அவரோடு இருக்கவில்லை” என்பதான போதகருடைய விஷயத்திலிருந்து நம்முடைய விஷயம் வேறுபட்டதாய்க் காணப்படுகின்றது; போதகர் நம்மோடுகூடக் காணப்படுகின்றார்; “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று போதகர் கூறுகின்றார். இதனோடுகூடக் கிறிஸ்துவினுடைய சகோதரரின் மத்தியிலான ஆவியின் ஐக்கியத்தினையும் நாம் பெற்றிருக்கின்றோம்; நம்மோடுகூட விழித்திருந்து, நம்மோடுகூட ஜெபம் பண்ணுகிறவர்களாகிய சகோதரர்களின் உற்சாகப்படுத்தும் வார்த்தைகளானது, ஒவ்வொரு சோதனையான வேளையிலும் பலப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. தெய்வீக ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குகள் அனைத்திற்குமாக நாம் அவருக்கு நன்றி செலுத்திக்கொண்டு, தேவன் தம்முடைய குமாரன் வாயிலாக கொடுத்திட்டதான பலத்தினுடைய பலத்தில் நம்முடைய கெத்செமனேக்குள் கடந்து செல்வோமாக.