R2793 (page 120)
பல வருடங்களுக்கு முன்னதாகவே, பஸ்கா காலம் நமது அருமையான கர்த்தருக்குக் கெத்செமனே மற்றும் கல்வாரியின் வருத்தங்களையும், பரீட்சைகளையும் கொண்டுவந்தது என்பதையும், இதே காலமானது யூதாசுக்கும், பேதுருவுக்கும், கர்த்தருடைய அனைத்துப் பின்னடியார்களுக்கும் பரீட்சைகளின் மற்றும் புடமிடுதலின் காலமாகவும் இருந்தது என்பவைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தோம். மேலுமாக நமது எதிராளியான சாத்தானானவன் கர்த்தருடைய ஜனங்களைப் பரீட்சித்து, நிரூபிக்கும்படிக்கு விசேஷமான அதிகாரம் கொடுக்கப்பட்ட காலமாகவும் இது விளங்குகின்றது. “சோதனைக் காலமானது” பூமியில் குடியிருக்கும் யாவரையும் சோதிக்கும்படியாக இருக்க, இந்தப் பஸ்கா காலத்தின் பரீட்சைகள் விசேஷமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள தேவனுடைய வீட்டார் மீது வரக்கூடியவைகள் என்று நாம் கருதுகின்றோம்.
கடிதங்கள் வாயிலாக அநேகருடைய பாடுகள் மற்றும் கண்ணீர்ளை அறிந்துகொண்டோம்; சிலருக்குத் தங்கள் சொந்த பெலவீனங்களினால் பாடுகள் உள்ளன, சிலருக்கு மற்றவருடைய பெலவீனங்களினால் பாடுகள் உள்ளன, இன்னும் சிலருக்கு ஜெயங்கொள்ள முடியாத அல்லது கர்த்தரிடத்தில் முழுவதும் ஒப்புவிக்கப்படாத பூலோக பாரங்களினால் பாடுகள் உள்ளன. இத்தகையவர்கள்மீது அனுதாபங்கொண்டு, எங்களால் முடிந்தமட்டும் ஆலோசனைக் கொடுக்கும் அதேவேளையில், “இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள், இனிக் களிகூருவீர்கள்” என்ற நம்முடைய போதகரின் வார்த்தைகளை நினைவு கூருகின்றோம். மேலும் சோதனையிலிருந்தும், அதை உணரமுடியாத நிலையில் காணப்படுபவர்களுக்கு எங்கள் இருதயங்களில் ஆழமான விசேஷமான கவலைக்கொள்கின்றோம், அதாவது இலட்சியங்கள் அல்லது வியாபாரங்கள் அல்லது இவ்வுலகத்திற்கு அடுத்தக் கவலைகள் மற்றும் ஐசுவரியத்தின் மயக்கத்தினால் ஆவிக்குரிய அல்லது பூமிக்குரிய விஷயங்களில் மூழ்கடிக்கப்பட்டவர்களுக்காக ஆழமான கவலைக்கொள்கின்றோம்; இப்படிப்பட்டவர்களிடம் சத்தியத்தின்மீதான அன்பு ஒவ்வொரு வருடமும் அனலாகுவதற்குப்பதிலாக, குளிராகிவிடுகின்றது; இவர்கள் முன்பு கண்டதுபோல் காண்பதுமில்லை, உணர்ந்துகொள்வதிலும் குறைவு ஏற்படுகின்றது. இவர்கள் அப்போஸ்தலர்கள்போல் விழித்திருந்து, ஜெபிப்பதற்குப் பதிலாக, தூங்கிக் கொண்டிருந்து, சோதனை வேளைக்குத் தயாரற்று இருக்கின்றனர் என்றும், கெத்செமனேயில் நமது இரட்சகர் அழுது, போராடினதுபோல, சிலர் அழுது, போராடுகின்றனர் மற்றும் அத்தகையவர்கள் அவரைப்போன்று சோதனைக்காலத்தில் பலப்பட்டிருப்பார்கள் என்றும் நாம் நம்மிடமே சொல்கின்றோம்.
இம்மாதிரியான விசுவாசத்தின் பரீட்சைகளையும், பாடுகளையும் அனுமதிக்காதீர் என்று கர்த்தரிடத்தில் நாம் ஜெபம்பண்ணவும்கூடாது; ஏனெனில் “தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள்,” பரீட்சிக்கப்பட்ட ஜனங்களாக இருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம். இவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டதற்கான முக்கிய காரணம், இவர்கள் நீண்ட காலமாய் வாக்களிக்கப்பட்டுள்ள இராஜ்யத்தில் கிறிஸ்துவுடன் உடன்சுதந்தரர்களாய், ஆயிரவருட அரசாட்சியில் உலகத்தை நியாயந்தீர்த்து, ஆசீர்வதிக்கவேயாகும். “உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினி” என்று அப்போஸ்தலர் கூறுகின்றார். தற்கால கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்திலிருந்து, அவருடைய மகிமையான இராஜ்யத்தில் பங்கடைவதற்கு, முன்னேறுவதற்கு அவர்கள் பரீட்சையில் ஜெயம்பெறுவதற்கு இச்சோதனைகள் அவசியம், கண்டிப்பாக வேண்டும்.
இந்தச் சிந்தனையை நமக்குமுன் தொடர்ச்சியாக, எப்போதும் நாம் கொண்டிருக்க முடிந்தால், கர்த்தருக்குப் பிரியமானவைகளை நாம் விரும்புவதற்கும், அதைச் செய்வதற்கும் எவ்வளவாய் நம்மை ஊக்குவிக்கும், மேலுமாக நம்முடைய நித்திய கனம், மகிமைக்காக இவைகளையெல்லாம் கர்த்தர் நமக்கு அனுமதிக்கின்றார் என்று நாம் உணர்ந்து, நம்முடைய அன்பான போதகர் அனுமதிப்பதற்கு நல்லது என்று கண்டு அனுமதிக்கும் எதையும் உண்மையாகவும், உற்சாகத்துடனும் சகிப்பதற்கு நம்மை ஊக்குவிக்கும். இந்தக் கண்ணோட்டத்தின்படி-
“நம்முடைய சோதனைகள் எத்துணை இலேசானதாய்த் தோன்றுமே!
நம்முடைய பிரயாணத்தின் பாதை எத்துணை சொற்ப தூரமாய்த் தோன்றுமே!
கனவாய் உள்ள பூலோக ஜீவிதமும்,
நாளின் விடியல்தனிலே மறைந்துபோய்விடுமே!
ஆ, சமாதானம்கொள் என் நெஞ்சமே!
அமைதிக்கொள் என் நாவே!
அமைதலாகு கலக்கமுற்ற என் மனமே!
கடந்துபோகும் ஒவ்வொரு மணிநேரமும்,
உன்னை நித்திய இளைப்பாறுதலுக்காய் அதிகமாய் ஆயத்தமாக்குதே.”
அன்பான சகோதர சகோதரிகளே நமக்காகவும் மற்றும் ஒருவர்மீது ஒருவர் மிகவும் அக்கறைகொள்வோமாக. மேலும், “அவருடைய இளைப்பாறுதலில், பிரவேசிப்பதற்கு ஏதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப் போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்” என்று அப்போஸ்தலர் கூறுகிறபடி, சுவிசேஷத்தின் மூலம் நமக்குமுன் வைக்கப்பட்ட, அந்தப் பரிசை, எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதுவோமாக. எல்லாக் கர்த்தருடைய ஜனங்களை நாம் இப்படியாக அன்புகூர்ந்து, அவர்களுடைய நலனை நம்முடைய பிரதானமான நோக்கமாகக் கருதுவோமாக; இதுவே நமக்கு ஆவிக்குரிய ஆரோக்கியமாக இருக்கும். கர்த்தருடைய மணவாட்டிகள் காரியத்திலுள்ள அவரது நிபந்தனைகள் விஷயம் – புடைத்தெடுத்தல்களானது, நாம் அருமையானதாகக் கருதி நாம் ஐக்கியங்கொண்டுள்ள சிலரை நம்மைவிட்டு எடுத்துப்போடும் விஷயம் – தொடர்புடைய கர்த்தருடைய அன்பு மற்றும் ஞானம் மீதான நமது நம்பிக்கைக்கு சகோதர சகோதரிகளின்மீதுள்ள நம்முடைய அன்புகூட – இடையூறாக இருந்திடுவதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது.