R3635 (page 287)
கேள்வி. நினைவுகூருதலானது கிறிஸ்துவினுடைய பலியின்மீதான விசுவாசத்தின் வாயிலாக, அவரது நீதியைச் சொந்தமாக்கிக்கொள்வதை அடையாளப்படுத்துகின்றது என்று கூறுவது சரியா? சரியென்றால் விசுவாசத்தின் வாயிலாக நீதிமானாக்கப்பட்ட, ஆனால் இன்னமும் அர்ப்பணம் பண்ணாத ஒரு நபர், அடையாளச் சின்னங்களில் பங்கெடுப்பதற்கு முழு உரிமையுடையவராய் இருக்கின்றாரா?
பதில். இந்தத் தற்கால யுகத்தில் நீதிமானாக்கப்படுவதற்கான ஒரே நோக்கமானது, நீதிமானாக்கப்பட்டவன் தன்னை அர்ப்பணம்பண்ணுவதற்குத் தகுதியாக்குவதேயாகும் மற்றும் அர்ப்பணம்பண்ணுவதற்கும், புதிய சுபாவத்திற்குள் ஜெநிப்பிக்கப்படுவதற்கும் என்று ஒருவன் தன்னுடைய நீதிமானாக்கப்படுதலைப் பயன்படுத்தவில்லையெனில், அவன் தேவனுடைய கிருபையை விருதாவாகப் பெற்றுக்கொண்டவனாய் இருக்கின்றான் அதைப் பயன்படுத்துவதற்குத் தவறுகின்றவனாய் இருக்கின்றான். அவன் செய்வது பின்வரும் உதாரணத்திற்கு ஒத்ததாய் இருக்கும்: ஐசுவரியமுள்ள நண்பர் ஒருவர், ஏழை ஒருவன் பொருட்களைத் தன்னுடைய கடையில் வாங்கத்தக்கதாகச் சீட்டுக் கொடுத்துவிட்டு, “1905-ஆம் வருடமாகிய இந்த வருடத்தில், எந்த ஒரு காலபகுதியிலும் ஜான் பிலாங்கோ (அ) மேரி பிலாங்கோ, என்னுடைய கடையில் இந்தச் சீட்டைக் கொண்டுவந்து காண்பிப்பார்களானால், அவர்கள் விரும்புகிற பொருட்களுக்கு விலையில் பத்தில் ஒரு பாகத்தினைச் செலுத்தினால் போதும், அவர்கள் வாங்கின பொருட்கள் அனைத்திற்குமான விலையில் 90 சதவிகிதமான பாகத்தினை நான் செலுத்திடுவேன்” என்று கூறுகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை ஜான் பிலாங்கோ (அ) மேரி பிலாங்கோ அந்த வருடத்தில் அந்தச் சீட்டினைக் கொண்டுசெல்வதற்கும், அந்தக் குறிப்பிட்டக் காலப்பகுதியில் பொருட்கள் எதையேனும் வாங்குவதற்கும் தவறினால், அந்தச் சீட்டானது உண்மையில் அவர்களுக்குப் பயனற்றதாய் இருக்கும், ஏனெனில் அவர்கள் அதன் நன்மை பயக்கும் நிபந்தனைகளைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதுபோலவே இப்பொழுது விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டவர்கள், தங்களையே அர்ப்பணம்பண்ணுவதற்கும், பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், தற்கால சிலாக்கியங்களைப் பலிச்செலுத்துதல் எனும் சிறிய விலைக்கொடுத்து மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களை அடைவதற்குமான சிலாக்கியத்தினைப் பெற்றுக்கொள்பவர்களாய் இருக்கின்றனர் மற்றும் பரம அழைப்பினைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக இந்த யுகத்தில் தனது நீதிமானாக்கப்படுதலை இப்படியாய்ப் பயன்படுத்தாதவன், அதினால் எந்த நன்மையும் அடையாதவனாய் இருக்கின்றான்; ஏனெனில் அது இந்த ஜீவிதம் முடிவதோடு, செயலற்றுப் போய்விடுகின்றது மற்றும் அடுத்துவரும் ஜீவியத்தில், மீதமான மனுக்குலத்திற்குக் காணப்படுவதுபோலவே அதே நிபந்தனைகளுடன் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இதை நினைவுகூருதல் இராப்போஜனத்திற்குப் பொருத்திப்பார்த்தல்: நினைவுகூருதல் இராப்போஜனமானது, நம்முடைய நீதிமானாக்கப்படுதலை அடையாளப்படுத்துகின்றதான அப்பத்தைப் புசித்தலை மாத்திரமல்லாமல், கிறிஸ்துவினுடைய பாடுகளில் ஐக்கியங்கொள்ளுதலை, பாத்திரத்தில் பங்கெடுத் தலையும்கூட அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இந்த இரண்டு கருத்துகளுமே அந்த அடையாளத்தில் இணைத்துக் காட்டப்பட்டுள்ளது மற்றும் அதை நாம் பொருத்திப்பார்க்கும் விஷயத்தில், அதைப் பகுதிகளாகப் பிரித்திடக்கூடாது. ஆகையால் கிறிஸ்துவினுடைய நீதியில் பங்கெடுப்பதன் வாயிலாக நீதிமானாக்கப் பட்டவர்கள் மாத்திரமல்லாமல், இன்னுமாக அவரோடுகூடப் பலியிலும், அவரது பாத்திரத்தில் பானம்பண்ணுவதிலும் உடன்சுதந்தரர்களானவர்கள் மாத்திரமே ஒழிய, மற்றவர்கள் நினைவுகூருதல் இராப்போஜனத்தில் பங்கெடுப்பது ஏற்றதாயிராது.