R3850 – கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்

முழுமையான உள்ளடக்கம்
R465 – பஸ்கா
R839 - கர்த்தருடைய இராப்போஜனம்
R1013 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R1100 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான ஆண்டு நிறைவு நாள்
R2771 - கர்த்தருடைய இராப்போஜனம்
R3363 - கடைசி இராப்போஜனம்
R3525 - நம்முடைய "பஸ்காவின்" நினைவுகூருதல்
R3749 - பஸ்காவைப் பலியிட வேண்டிய
R3879 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R4590 - நினைவுகூருதலான பஸ்கா இராப்போஜனம்
R5191 - வரவிருக்கின்ற நினைவுகூருதல் இராப்போஜனம்
R5541 - பஸ்காவின் இரண்டு நினைவுகூருதல் சின்னங்கள்
R5640 - பஸ்காவின் தெளிக்கப்படும் இரத்தம்
R5869 - நினைவுகூருதல் காலப்பகுதிக்கான சிந்தனைகள்
நிழலான பஸ்கா
R94 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R208 - கர்த்தருடைய இராப்போஜனம்
R721 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து
R1657 - பஸ்கா ஏற்படுத்தப்பட்டது
R1657 - செங்கடலின் பாதை
R1800 - கர்த்தருடைய இராப்போஜனம்
R2379 - எசேக்கியாவின் மாபெரும் பஸ்கா
R2917 - நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து...பலியிடப்பட்டார்
R4384 - பஸ்கா மற்றும் பாவநிவாரணநாளின் பலிகள்
R4703 - என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்
R5272 - இஸ்ரயேல் தப்புவிக்கப்பட்டது (அ) கடந்துபோகப்பட்டது
முதற்பேறானவர்களின் கடந்துபோகுதல் (Over Land Monthly)
பஸ்கா ஏற்படுத்தப்பட்டது | The Photo-Drama Of Creation
பஸ்கா – எத்தனைதரம் திரும்பச் செய்யப்படுகின்றது? | What Pastor Russell Said
பஸ்கா – முதற்பேறானவர்கள் யாரை அடையாளப்படுத்துகின்றனர்? | What Pastor Russell Said
பஸ்கா – பஸ்காவுக்கும், பாவநிவாரணநாளுக்கும் தொடர்பு | What Pastor Russell Said
நிழலிலும், நிஜத்திலும் பஸ்கா - Pastor Russell's Sermons
நினைவுகூருதல்
R225 - நம்முடைய பஸ்கா
R325 - பஸ்கா
R1021 - அவர் வருமளவும்
R1382 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1625 - வருடாந்திர நினைவுகூருதல் இராப்போஜனம்
R1786 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R1793 - நினைவுகூருதல் அடையாளங்களின் ஆராதனை ஒழுங்கு
R1942 - நமது கர்த்தருடைய மரணத்திற்கான நினைவுகூருதல்
R2115 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2291 - நினைவுகூருதலின் ஆசரிப்பு
R2429 - நினைவுகூருதல் இராப்போஜனத்திற்கான தியதி
R2592 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2622 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R3635 - யார் நினைவுகூருவது ஏற்றது?
R3706 - பஸ்கா நினைவுகூருதல்
R4127 - முதலாம் மாதத்தில் பஸ்கா
R4375 - நினைவுகூருதல் ஆசரிப்பு
R4756 - 1911 – நினைவுகூருதல் இராப்போஜனம் - 1911
R5420 - நினைவுகூருதல் இராப்போஜனம்
நினைவுகூருதல் இராப்போஜனம் |The Photo-Drama Of Creation
நினைவுகூருதல் இராப்போஜனம் – ஏன் நாம் பங்கெடுக்கின்றோம் | What Pastor Russell Said
புளிப்பேற்றப்பட்ட திராட்சரசத்தைப் பயன்படுத்துதல் | What Pastor Russell Said
பஸ்கா மற்றும் பாவநிவாரணநாள் – எப்போது மற்றும் ஏன் ஆசரிக்கப்படுகின்றது | What Pastor Russell Said
அடையாளங்களின் அர்த்தம்
R509 - அப்பம் மற்றும் திராட்சரசம்
R740 - பஸ்கா இராப்போஜனம்
R899 - கர்த்தருடைய இராப்போஜனம்
R936 - நம்முடைய வருடாந்தர இராப்போஜனம்
R1636 - அடையாளங்களினுடைய முக்கியத்துவம்
R1898 - கர்த்தருடைய பாத்திரம் மற்றும் கர்த்தருடைய போஜனபந்தி
R2282 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R4146 - ஜீவ அப்பம் நானே
R4153 - நினைவுகூருதல்
R5050 - புளித்தமா பற்றின உவமை
R5341 - நமது "ஆசீர்வாதத்தின் பாத்திரம்”
R5421 - உங்களால் கூடுமா?
R5538 - இரட்சிப்பின் பாத்திரத்தினுடைய ஆசீர்வாதம்
மீட்கும்பொருள்
R13 - கிறிஸ்துவின் இரத்தம்
R485 - பதிலாள் தொடர்புடைய கேள்விகள்
R4605 - இரத்தத்தினைச் சாதாரணமானதாய் எண்ணுதல்
நினைவுகூருதலை எதிர்நோக்குதல்
R1504 - நினைவுகூருதல் இராப்போஜனம்
R2793 - பஸ்கா காலத்தின்போதான விசேஷித்தச் சோதனைகள்
R3178 - நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு...
R4346 - ஜெபத்திற்கு விடையாக விடுதலை
பெத்தானியாவில் நடந்த இராவிருந்து
R2447 - விலையேறப்பெற்ற நளததைலமுள்ள வெள்ளைக்கல் பரணி
R2743 - நறுமணம் வீசிய தைலம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R3877 - அவளால் இயன்றதை அவள் செய்தாள்
வெற்றி பிரவேசம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2745 - ஓசன்னா! வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவ
R3537 - உன்னதத்திலே ஓசன்னா
R3850 - கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்
சீஷர்களின் பாதங்களைக் கழுவுதல்
R843 - பாதம் கழுவுதல்
R2278 - பாதம் கழுவுதல்
R2449 - நான் உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்
R3542 - ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்
யோவான் 14-17 வரையிலான அதிகாரங்களின் வார்த்தைகள்
R2453 - நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R2464 - நான் திராட்சச்செடி - நீங்கள் கொடிகள்
R3544 - மெய்யான திராட்சச்செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R3759 - உனக்காக வேண்டிக்கொண்டேன்
கெத்செமனே
R1801 - கெத்செமனேயில் வியாகுலம்
R1806 - உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துதல்
R2773 - கெத்செமனே - விழிப்பும், ஜெபமும்
R3885 - பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும்
R4707 - இருளான கெத்செமனே வேளை
R5550 - ஏன் கெத்செமனேயில் வியாகுலம்?
யூதாசினால் காட்டிக்கொடுக்கப்படுதல்
R2467 - கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார்
R2778 - இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் கைவிடப்பட்டார்
R3366 - இப்பொழுதே முடிவு செய்யுங்கள்
R4167 - நமது கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்டார் மற்றும் மறுதலிக்கப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
பேதுருவின் மறுதலிப்பு
R4711 - சுய / தன்நம்பிக்கை ஒரு பெலவீனமாகும்
R5284 - தேவசமாதானம்
R5563 - பரிசுத்த பேதுரு கோதுமையைப்போல் புடைக்கப்பட்டார்
ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிரதான ஆசாரியனுடைய முன்னிலையில் இயேசு
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியன் குற்றம் சாட்டப்பட்டார்
R3887 - அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும்
R4710 - தேவனைத் தூஷிக்கிறவராகக் குற்றஞ்சாட்டப்பட்டார்
R5560 - இயேசுவைக் கேலிக்குள்ளாக்கும் விசாரணைகள்
பிலாத்துவுக்கு முன்பாக நடந்திட்ட விசாரணை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R2312 -பிலாத்துவின் முன்னிலையில் இயேசு
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R2785 - இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை
R3553 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R3895 - எத்தரென்னப்பட்டாலும், நிஜஸ்தர்
R5570 - இயேசு, பிலாத்துவினால் விசாரணைப்பண்ணப்பட்டார்
சிலுவை மரணம்
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R1988 - கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டார்
R2315 - சிலுவையில் அறையப்பட்டவர் மீது ஒரு பார்வை
R2473 - அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார்
R2787 - பாவநிவாரணபலி நிறைவேற்றப்பட்டது
R3369 - கிறிஸ்து எப்படி மற்றும் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்
R3560 - சரித்திரத்தில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு
R3900 - கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து மேன்மைபாராட்டுவேன்
R4171 - ஏன் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்டார்
R4712 - ஜீவாதிபதி சிலுவையில் அறையப்பட்டார்
R5577 - தேவனால் வாதிக்கப்பட்டவர், சிறுமைப்பட்டவர்
புதுச் சிருஷ்டியின் பஸ்கா
புதுச்சிருஷ்டியின் பஸ்கா - தொகுதி 6

R3850 (page 281)

கர்த்தருடைய நாமத்தில் வருகின்றவர்

COMING IN THE NAME OF THE LORD

மத்தேயு 21:1-17

“கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.” மத்தேயு 21:9

கடந்த பாடத்தில் இயேசுவும், அவருடைய சீஷர்களும், மற்றவர்களும் பஸ்காவை அநுசரிக்கும்படிக்கு எருசலேமை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர். அவர்கள் ஏற்கெனவே எரிகோவைக் கடந்துவிட்டனர். போகிற வழியில்தான் இயேசு தாலந்துகள் பற்றின உவமையைப் பேசினார்; இயேசு தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, வெள்ளி இரவு மார்த்தாள், மரியாள் மற்றும் லாசருவின் வீடு இருந்த பெத்தானியாவுக்கு வந்தடைந்தார். ஓய்வு நாளன்று அவர் தம்முடைய நண்பர்களுடன் ஓய்ந்திருந்து, அன்றைய சாயங்கால வேளையில் தம்மைக் கனப்படுத்தும் விதமாக ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த பந்தியில் பங்குகொண்டு, மரியாளிடமிருந்து விலையேறப்பெற்ற நளததைலத்தினால் அபிஷேகம் பெற்றுக் கொண்டார்; அடுத்த நாளாகிய வாரத்தின் முதலாம் நாளின் காலை வேளையில், எருசலேமை நோக்கிய தம்முடைய பிரயாணத்தை இயேசு தொடர்ந்தார். அந்த வாரம் முழுவதும் அவர் தினந்தோறும் பட்டணத்திற்குச் சென்று, இரவில் பெத்தானியாவுக்குத் திரும்பி, பெத்தானியாவிலேயே தங்கியிருந்தார். ஆலயத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் பெத்தானியா காணப்பட்டது. இங்கிருந்து நம்முடைய பாடம் ஆரம்பமாகிறது.

கர்த்தருடன்கூட அநேக திரளான ஜனங்கள் எருசலேமுக்கு வந்திருந்தார்கள்; மேலும் சிலர் அவரைப் பார்க்கும்படியாக எருசலேமிலிருந்து பெத்தானியாவுக்கு வந்திருந்திருந்தார்கள். காரணம் இவர்கள், லாசருவை மரணத்திலிருந்து எழுப்பின நாசரேத்தூர் தீர்க்கத்தரிசி, லாசருவின் வீட்டில் காணப்படுகின்றார் எனக் கேள்விப்பட்டிருந்தனர். இந்தக் கூட்டத்தினர் ஒலிவ மலைகளுக்கு மேலாகக் காணப்படும் சிறிய கிராமமாகிய பெத்பகேயுவை அடைந்தபோது, தமக்கு ஒரு கழுதையையும், அதனோடு அதன் குட்டியையும் கொண்டுவரத்தக்கதாக, தம்முடைய சீஷர்களில் இரண்டு பேரை, மற்றொரு கிராமத்துக்கு அனுப்பி வைத்தார். இவ்விலங்கினுடைய எஜமான், இயேசுவுக்கு அறிமுகமானவராக இருக்கலாம்; இப்படியிருக்குமாயின் அந்த எஜமான், கர்த்தருடைய சீஷருக்கும் கூட அறிமுகமானவராக இருக்கலாம். எப்படியிருப்பினும் கர்த்தருடைய வேண்டுகோளுக்கு மதிப்புக்கொடுக்கப்பட்டது; மேலும் மாற்கு சுவிசேஷத்தின்படி (revised மொழியாக்கத்தின்படி) கழுதையை இயேசு, எஜமானிடம் திருப்பி அனுப்பி வைப்பார் எனச் சீஷர்கள் வாக்களித்ததாகவும் காணப்படுகின்றது. நமது கர்த்தர், கழுதையின் மீது சவாரி பண்ணுவது என்பது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும்; அந்த வாரம் முழுவதும் அவர் ஒவ்வொரு நாள் காலையிலும், சாயங்காலத்திலும் நீண்ட தூரம் போக்கும் வரத்துமாய் இருந்தாலும், இந்த ஓர் இடத்தில் மாத்திரமே அவர் சவாரி பண்ணினதாக நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சமயத்தில் அவர் சவாரி பண்ணினதற்கான காரணம் களைப்பு அல்ல என்பதில் உறுதியே. முற்காலங்களில் இராஜாக்கள் வெள்ளைக் கழுதைகளின் மீது சவாரி பண்ணி தங்களை அறிமுகப்படுத்துவது போன்று, இயேசு ஜனங்களுக்குத் தம்மை முன்வைத்தார்.

சவாரியின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம்

முன்னிலை வகிக்கும் எழுத்தாளர் ஒருவர் இச்சம்பவம் தொடர்பான விஷயத்தில், நம்முடைய கர்த்தருடைய நடத்தையையும் மற்றும் திட்டத்தையும் மிகவும் தவறான கண்ணோட்டத்தில் பின்வரும் விதத்தில் முன்வைக்கின்றார்: “யூத தேசத்தார் தம்மை மேசியா என்று ஏற்றுக்கொள்வதற்கும், இப்படியாக அழிவிலிருந்து அவர்களை இரட்சிக்கவும் மற்றும் மனுஷர் மத்தியில் பரலோக இராஜ்யத்தைக் கொண்டுவரும் விஷயத்தில், அவர்களை மாபெரும் வல்லமையாக ஆக்கவுந்தக்கதாக, இயேசு இப்பொழுது மூன்று நாட்களாக, தம்முடைய இறுதி பிரயாசங்களை எடுத்தார். தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும்படியாக இயேசு பல்வேறு விதங்களில் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஓர் இராஜாவாக அவர்களுக்குத் தம்மை அவர் முன்வைத்தார். தம்முடைய பிதாவின் வீடாகிய ஆலயத்தைச் சுத்திகரித்ததின் மூலமாக அவர் தமது இராஜரிக அதிகாரத்தைக் காட்டினார். வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தும் விஷயத்தில் அவர் வல்லமை மற்றும் இரக்கத்தின் இராஜரிகச் செய்கைகளை நிகழ்த்தினார். அவர் விவாதித்தார், அவர் சொற்பொழிவாற்றினார், அவர் வற்புறுத்தினார், அவர் போதித்தார், அவர் மறுப்புகளுக்குப் பதிலளித்தார், அவர் பயமுறுத்தினார், அவர் எச்சரித்தார்.”

ஆனால் இவைகள் அனைத்திற்கும் நேர்மாறாக ஜனங்கள் தம்மை, “இராஜாவாக்கும்படி பிடித்துக்கொண்டு போகாதபடிக்கு” ஜனங்கள் தூண்டப்பட்டு விடுவதை, கர்த்தர் வேண்டுமென்றே தவிர்த்துவிடுவதை நாம் பார்க்கின்றோம். (யோவான் 6:15) உவமைகளினாலும், மறைப்பொருள்களினாலும் அவர் ஜனங்களுக்குப் போதித்தார், அதுவும் தனிமையிலிருக்கும் போதுதான், “தேவனுடைய இராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது” என்று கூறி தம்முடைய சீஷர்களுக்கு அவைகளை விவரித்துக்கொடுத்தார். (மாற்கு 4:11-12) இந்தச் சவாரி பண்ணுவதற்குக் கொஞ்சம் நாட்களுக்கு முன்னதாகத்தான், தாம் தேசத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தருளுவார் என்று தம்முடைய சீஷர்களுக்குத் தெரிவித்திருந்தார். இவைகளையெல்லாம் அவர்கள் பகுதியளவு புரிந்துகொண்டிருந்ததினால்தான், இப்படிப்பட்ட எண்ணத்தை அவர் மனதிலிருந்து மாற்றிப்போட செய்வதற்கென அவர்கள் முயற்சி எடுத்தனர்; மேலும் தம்முடைய இராஜ்யம் பரலோகத்திற்குரியது என்றும், “மறுஜென்ம” காலங்களில் இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களை நியாயந்தீர்க்கும்படியாக அப்போஸ்தலர்கள் பன்னிரண்டு சிங்காசனங்களில் உட்கார்ந்திருப்பார்கள் என்றும் அவர்களுக்குக் கர்த்தர் விவரித்துக்கொடுத்தார்.

தாம் புறக்கணிக்கப்படுவார் என நமது கர்த்தர் அறிந்திருந்தார்; அவர் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், அவர்களைப் பார்த்து, கண்ணீர்வடித்து, “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” என்று கூறினார். பூமிக்குரிய ஓர் இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கெனத் தமக்கு ஆதரவு அளிக்கத்தக்கதாக ஜனங்களை வசீகரிக்கும் நோக்கம் கொஞ்சமும் அவருக்கு இருக்கவில்லை என்பது உறுதியே. தம்முடைய நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்கென அவர் ஒருவேளை பேசி இருந்திருப்பாரானால், அவருக்கு எத்துணை அதிகாரம் காணப்பட்டிருக்கும் என்பதிலும் உறுதியே. அவர் பிலாத்துவுக்கு முன்பாகக் குற்றம் சாட்டப்பட்டபோதும், அவர் தம்மைக் காக்கும்படிக்கும் எதுவும் கூறாததினிமித்தம், ரோம தேசாதிபதியாகிய பிலாத்துக்கூட ஆச்சரியப்பட்டார். இவைகளனைத்துமே, “தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” என்ற தீர்க்கத்தரிசனத்திற்கு இசைவாகக் காணப்பட்டது. (ஏசாயா 53:7)

கபடற்ற உத்தம் இஸ்ரயேலர்களாக இருக்கும் யூதர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தவே இயேசு நாடினார்; தெய்வீக ஞானத்தினுடைய வழிநடத்துதலின் கீழ், தம்முடைய செய்தியானது இந்த வகுப்பாரை மாத்திரமே கவர்ந்து இழுப்பது, பிதாவின் திட்டமாக இருப்பதை இயேசு புரிந்துள்ளார் மற்றும் மற்றவர்கள் கவரப்பட வேண்டுமென இயேசுவும் விரும்பவில்லை. உத்தம இஸ்ரயேலர்கள், பரிசுத்தமானவர்கள் தவிர, அத்தேசத்தின் மீதமானவர்கள், தெய்வீகத் திட்டம் மற்றும் ஏற்பாட்டின்படி நமது கர்த்தரைப் புறக்கணித்து, அவரைச் சிலுவையில் அறைந்துபோட்டு, அவருடைய இரண்டாம் வருகையின் வேளையில் அவர்களுடைய புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்பட்டு, “அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” என்பது நிகழ்வது வரையிலும் 18 – நூற்றாண்டுகளுக்கும் மேலாக குருடான நிலைமையில் காணப்படுவார்கள். (சகரியா 12:10) இதற்கிடையில் திட்டமிட்டபடி, கர்த்தருடைய கிருபையானது, இந்தச் சுவிசேஷயுகத்தின்போது, உலகெங்கும் கடந்துபோய், இருதயத்தில் உண்மையுள்ளவர்களைச் சீஷர்களாக்கி, அதாவது பரலோக இராஜ்யத்திற்கு உடன்சுதந்தரர்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காகப் பல்வேறு ஜாதிகள், ஜனங்கள், கோத்திரங்கள், பாஷைக்காரர்களிலிருந்து ஒரு பக்தி வைராக்கியமுள்ள வகுப்பாரை ஏற்படுத்துகின்றது; இந்தப் பரலோக இராஜ்யமானது, தேவனுடைய ஏற்றவேளை வரையிலும், அதாவது நமது கர்த்தருடைய இரண்டாம் வருகை வரையிலும் ஒரு பூமிக்குரிய இராஜ்யமாகவோ, ஒரு பரலோகத்திற்குரிய இராஜ்யமாகவோ எஸ்தாபிக்கப்படுவதற்குத் திட்டமிடப்படவில்லை.

தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதல்

இரண்டு தீர்க்கத்தரிசனங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, சாட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது; அதாவது, “இதோ உன் இராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும், கழுதைக்குட்டியாகிய மறியின் மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று [R3850 : page 282] சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள்.” (ஏசாயா 62:11; சகரியா 9:9-ஆம் வசனங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்) இப்படியாக உரைக்கப்பட்டது நிறைவேறும்படியாக இயேசு கழுதையின் மீது ஏறி வந்தார். இந்தத் தீர்க்கத்தரிசனத்தை யூதர்கள் நன்கு அறிந்திருந்தனர். மேலும் பல நூற்றாண்டுகளாக இத்தீர்க்கத்தரிசனத்தை மேசியா நிறைவேற்றும்படிக்குக் காத்திருந்தனர். இஸ்ரயேலர்கள் இயேசுவைப் புறக்கணிக்கும் விஷயத்தில் சாக்குப்போக்குச் சொல்ல இடமில்லாமல் போகத்தக்கதாக, தீர்க்கத்தரிசிகளால் முன்னுரைக்கப்பட்டதை, தெய்வீகத் திட்டத்தின்படி நமது கர்த்தர் சொல்லர்த்தமாகவே உண்மையில் நிறைவேற்ற வேண்டுவது அவசியமாய் இருந்தது. ஆகவே எதிர்க்காலத்தில் இஸ்ரயேலர்களின் புரிந்துகொள்ளுதலின் கண்கள் திறக்கப்படும்போது, அவர்களுடைய குருட்டுத்தன்மை அப்புறப்படுத்தப்படும்போது, தாங்கள் குத்தினவரை அவர்கள் கண்டு, அவரைப் புறக்கணித்துப் போட்டதற்காகத் துக்கங்கொள்ளும்போது, அவர்கள் தங்களுக்கெனச் சாக்குப்போக்கு எதுவும் சொல்ல முடியாமல் இருப்பதைக் காண்பார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் ஜனங்களாகிய தங்களுக்கு, அவர் தம்முடைய அனைத்து நல் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றியுள்ளார் என உணர்ந்துகொள்வார்கள். மேலும் தாங்கள் புறக்கணித்ததில் உள்ள குற்றம் முற்றும் தங்களுடையதே என்று உணர்ந்துகொள்வார்கள்; இன்னுமாகத் தங்களுடைய இராஜாவை ஏற்றுக்கொள்வதற்குரிய இருதய நிலைமையில் தாங்கள் இல்லாமல் இருந்துள்ளார்கள் என்பதையும், தாங்கள் பெருமையுள்ளவர்களாகவும், தற்பெருமையடித்துக் கொண்டவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதையும் உணர்ந்துகொள்வார்கள்; இன்னுமாக அவர் தூய்மையானவராகவும், சுயநலமற்றவராகவும் இருந்திருக்க, தாங்கள் தூய்மையற்றும், சுயத்திற்காக நாடுபவர்களாக இருந்துள்ளதையும், தாங்கள் இராஜ்யத்திற்குத் தகுதியற்றுப்போனதையும் உணர்ந்துகொள்வார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், தேவன் தாம் நோக்கம் கொண்டிருந்ததும், வாக்களித்திருந்ததுமாகிய அனைத்தையும் மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு நிறைவேற்றினார். ஆகவே புறக்கணித்ததிலுள்ள தவறு முற்றிலும் அவர்களுடையதே என உறுதியானது.

கர்த்தரோடுகூடக் காணப்பட்ட திரளான ஜனக்கூட்டத்தார் சூழ்நிலையைக் கிரகித்துக்கொண்டவர்களாக மேசியாவிற்கு, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று உரக்கக் கூறிக்கொண்டிருந்து, அவர் ஏறிவரும் விலங்கிற்கு இராஜரிகமாக ஒரு வழிப்பாதையை ஏற்படுத்தினார்கள்; சிலர் தங்கள் வஸ்திரங்களை விரித்தனர். வேறுசிலர் மரக்கிளைகளையும் பரப்பினர். இப்படியாக ஜனங்கள் தங்களுடைய கனத்திற்குரிய அதிகாரிகளை நடத்துவது என்பது [R3851 : page 282] பல நூற்றாண்டுக்காலமாக, பல்வேறு ஜனங்கள் மத்தியில் இருந்த வழக்கமாயிருந்தது. மலர்கள் அதிகமாய்க் காணப்படும் நாடுகளில், மலர்கள் பயன்படுத்தப்படுவது உண்டு; இன்னும் சில நாடுகளில் மரக்கிளைகள் பயன்படுத்தப்படுவதுண்டு; சில சந்தர்ப்பங்களில் உண்மையுள்ள பிரஜைகள் தங்கள் வஸ்திரங்களை, விரிப்பதற்குப் பயன்படுத்துவதும் உண்டு. இயேசுவுடன்கூடக் காணப்பட்ட இந்தத் திரளான ஜனக்கூட்டத்தார் அநேகர் இயேசுவை விரும்பினவர்களாக இருப்பினும், இவர்கள் அனைவரும் பரிசுத்தவான்கள் அல்ல. இந்த ஊர்வலத்தை அப்போஸ்தலர்கள் தூண்டிவிடவில்லை என்ற உண்மையானது, வேறொரு சுவிசேஷகரின் பதிவு உறுதிப்படுத்துகின்றது. அதாவது குறிப்பிட்ட சில பரிசேயர்களும், வேதபாரகர்களும் சீஷர்களிடத்தில் வந்து, இப்படியான சம்பவங்கள் சரியில்லை எனக் கர்த்தருடைய கவனத்திற்கு அப்போஸ்தலர்கள் கொண்டுவரும்படி கூறினார்கள் என்பதில் உறுதிப்படுகின்றது.

நமது கர்த்தருடைய மேசியாத்துவம் தொடர்புடைய விஷயத்தில் அவரிடம் வெளிப்படும் தன்னடக்கமானது கவனிக்கத்தக்கதாகும். அவர் தம்மை மேசியா என்று அறிவித்த, ஒரு சம்பவத்தைக்கூட நாம் அறியோம். அவர் அதிகபட்சமாய்த் தம்மைக்குறித்து அறிவித்தது, அவர் தேவனுடைய குமாரன் என்பதேயாகும். அதாவது, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு சுவிசேஷ யுகம் முழுவதிலுமுள்ள அவருடைய உண்மையுள்ள சீஷர்கள் எவருக்கும் பொருந்தும் பெயரையே இயேசு தமக்கென உரிமைப்பாராட்டிக்கொண்டார். எல்லாச் சந்தர்ப்பங்களிலுமே, அவர் மேசியா என்ற கனமானது மற்றவர்களாலேயே குறிப்பிடப்பட்டதே ஒழிய, மாறாக கர்த்தரினால் சொல்லி வாதாடப்படவில்லை. உதாரணத்திற்கு முதலாம் தருணத்தின்போது, இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில், “ஜனங்கள் என்னைக்குறித்து யார் என்று சொல்கின்றார்கள்?” என்றும், பின்னர் “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்” என்றும் கேட்டதற்கு, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய மேசியா” என்று பேதுரு பதிலளித்தப்போது, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்” என்று கூறி, தம்முடைய ஒப்புக்கொள்ளுதலைச் சுட்டிக்காட்டினார். (மத்தேயு 16:17) (இரண்டாம் தருணத்தின்போது) இப்பொழுது திரளான ஜனங்களே அவரைத் தாவீதின் குமாரன் என்றும், மேசியா என்றும் பறைச் சாற்றினார்கள். அவர் அமைதியைக் காத்துக்கொண்டவராகக் காணப்பட்டார். மறுப்புகள்/எதிர்ப்புகள் வந்தபோது மாத்திரமே, “சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்” என்ற தீர்க்கத்தரிசனம் நிறைவேறத்தக்கதாக, ஆர்ப்பரித்து, இப்படியாக சத்தமிடுதல் அவசியம் என்று இயேசு கூறினார். (சகரியா 9:9) மூன்றாம் தருணத்தில், அவருடைய மேசியாத்துவம், அப்படியானால் நீர் இராஜாவோ?” எனப் பிலாத்து கேள்வி கேட்டபோது குறிப்பிடப்பட்டது; பிலாத்துவின் கேள்விக்கு இயேசு: “நீர் சொல்லுகிறபடி நான் இராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என்று பதிலளித்தார். (யோவான் 18:37)

உன்னதத்திலே ஓசன்னா

இந்தப் பவனியும், நமது இரட்சகருக்கான, இராஜ கனத்துடனான ஆரவாரமும் யூத தேசத்திற்கு ஒரு சாட்சியாய் இருப்பதைக் காட்டிலும், அதாவது அவர்கள் ஒன்றில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அல்லது புறக்கணிக்கத்தக்கதாக அவர்களுக்கு முன்பாக அவர்களுடைய இராஜா முன்வைக்கப்படுதலைக்காட்டிலும் வேறு ஏதேனும் அர்த்தங்கள் உள்ளனவா? அக்காலக்கட்டத்தில் இச்சம்பவத்திற்கு இதைக்காட்டிலும் வேறே அர்த்தம் இருக்கவில்லை. ஆனால், இதில் இந்த யுகத்தின் முடிவில் காணப்படும் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களாகிய நமக்கு மறைமுகமாக ஒரு படிப்பினை இருக்கின்றது. ஏனெனில் யாக்கோபின் மரணம் துவங்கி, இச்சம்பவம் வரையிலான மாம்சீக இஸ்ரயேலர்களுடைய வரலாறானது, இயேசுவின் மரணம் துவங்கி, அவர் தம்முடைய மகிமையில் வந்து, தம்முடைய ஜனங்களுக்கு முன் தம்மை முன்வைப்பது வரையிலுமாகக் காரியங்களுக்கு தெய்வீக ஏற்பாட்டின்படி நிழலாக இருக்கின்றது. அவர், “இஸ்ரயேலின் இரு வீட்டாராகிய” ஆவிக்குரிய வீட்டாருக்கும், மாம்சீக வீட்டாருக்கும் முன் தம்மை முன்வைக்க வேண்டும் என்றே தீர்க்கத்தரிசிகள் உரைத்தவைகள் தெரிவிக்கின்றன. மாம்சீக வீட்டார் மத்தியில் உண்மையுள்ள மற்றும் உண்மையற்ற இஸ்ரயேலர்கள் காணப்பட்டது போலவே, இந்தச் சுவிசேஷ யுகத்திற்கான ஆவிக்குரிய வீட்டாராகிய, “கிறிஸ்தவ மண்டலத்திலும்” மேசியாவிற்காகவும், அவருடைய இராஜ்யத்திற்காகவும் காத்துக்கொண்டிருப்பதாக அறிக்கைப் பண்ணிக்கொண்டிருக்கும் உண்மையுள்ள மற்றும் உண்மையற்ற இஸ்ரயேலர்களும் காணப்படுகின்றனர்.

மாம்சீக இஸ்ரயேலர்கள், கர்த்தர் தங்களுடைய இராஜாவாக வருவதற்கும், பூமியில் நீதியை ஸ்தாபிப்பதற்கும், ஆபிரகாமின் உடன்படிக்கைக்குரிய நிபந்தனைக்கு ஏற்ப மனுக்குலம் அனைத்தையும் ஆசீர்வதிப்பதற்கெனத் தங்களைக் கருவியாய்ப் பயன்படுத்துவதற்கும் 1845 வருடங்கள் காத்திருந்தார்கள். மேசியா வந்தபோது, அவரை ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இராமல், அவருடைய உடன் வேலைக்காரர்களாக இருப்பதற்குத் தகுதியற்றுப் போனார்கள்; ஆனால் சொற்ப உண்மையான இஸ்ரயேலர்களை மாத்திரம் அவர் அந்தத் தேசத்திலிருந்து சேர்த்துக் கொண்டு, அவர்களைப் புதிய ஜாதிக்கான அணுக்களாக்கிவிட்டார். மாம்சீக இஸ்ரயேலர்களாகிய, யூத தேசத்தார் தள்ளப்பட்டு, புறக்கணித்துப் போடப்பட்டபோது, கர்த்தர் முன்னறிந்து, முன்னுரைத்ததுபோன்று அனைத்து ஜாதிகளிலிருந்தும், ஆவிக்குரிய இஸ்ரயேலர்களைத் தெரிந்தெடுக்க ஆரம்பித்தார். இயேசுவின் மரணம் முதல், இயேசு தம்மை இராஜாவாக முன்வைப்பது வரையிலான 1845 வருடங்களாகப் பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களும் காத்துக்கொண்டிருந்தனர்.

நமது மீட்பர் எருசலேமுக்குச் சவாரி செய்து, தம்மை மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு முன்வைத்த இச்சம்பவத்திற்கு இசைவாக கி.பி. 1878-இல் நமது மீட்பர் தம்மை ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கு முன்வைத்ததற்குச் சாட்சியாக, அநேக வேதவாக்கியங்கள் காணப்படுகின்றன. (இக்காரியம் தொடர்பான தீர்க்கத் தரிசனமான காரியங்களுக்குத் தொகுதி 2 மற்றும் 3 பார்க்கவும்) இக்காலப் பகுதியில் பெயரளவிலான ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள், “பாபிலோன்” யூத ஜாதியார் புறக்கணிக்கப்பட்டது போலவே – புறக்கணிக்கப்பட்டார்கள் என நாம் நம்புகின்றோம். இந்தப் புறக்கணிக்கப்படுதலை/தள்ளிவிடப்படுதலை, கிறிஸ்தவ மண்டலத்தார் உணர்ந்துகொள்ளவில்லை; மாம்சீக இஸ்ரயேலும், அதன் வீடு பாழாக்கிவிடப்பட்டு, அழிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை உணரவில்லை. மாம்சீக இஸ்ரயேலர்களை நமது கர்த்தர் புறக்கணித்துப்போட்டு, முப்பத்தேழு வருடங்களுக்குப் பின்பாக அவர்களுடைய பட்டணங்களும், ஆட்சி அமைப்பும் அழிந்ததுபோல, 1878- ஆம் வருடத்திலிருந்து 37 வருடங்களுக்குப் பின்னர், தீர்க்கத்தரிசனத்தில் உரைக்கப் பட்டதுபோல, மகா உபத்திரவக் காலத்தில் கிறிஸ்தவ மண்டலம் அழிவிற்குள் செல்லும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆலயத்தைச் சுத்திகரித்தல்

ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் அவரைத் தங்களது மேசியா என்றும், வந்திருக்கும் தங்களுடைய கர்த்தரும், இராஜாவும் என்றும் ஏற்றுக்கொள்கின்ற அல்லது அவரைப் புறக்கணிக்கின்ற விஷயத்தில் தீர்மானம் எடுக்கும் காலக்கட்டத்தில்தான் நாம் இன்னமும் காணப்படுகின்றோம்; அதாவது, “கர்த்தருடைய நாமத்தில் வருகிறவராகிய தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று தங்களுடைய இருதயத்தில் ஆர்ப்பரிப்பதற்குரிய அல்லது இந்தச் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில், வெறுப்படைந்தவர்களில் ஒருவராக இருப்பதற்குத் தீர்மானம் எடுக்கும் காலக்கட்டத்தில்தான் நாம் இன்னமும் காணப்படுகின்றோம். அவரை ஏற்றுக்கொள்பவர்கள் நிச்சயமாக, பெந்தெகொஸ்தே நாளில் கர்த்தருடைய உண்மையான ஜனங்கள் மீது வந்த ஆசீர்வாதமான அனுபவங்களுக்கான [R3851 : page 283] நிஜத்தை அடைவார்கள். நிஜம், நிழலைக்காட்டிலும் மிகவும் பெரியதாகவும், பிரம்மாண்டமானதாகவும் காணப்படும். அதாவது, அழியக்கூடிய நிலையிலிருந்து, முதலாம் உயிர்த்தெழுதலில் அழியாத நிலைக்கு மாற்றப்படுவார்கள். கர்த்தரையும், ஆசீர்வாதங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு இருதயத்தில் ஆயத்தமற்றிருக்கும் மற்றவர்களோ, மகா உபத்திரவக் காலத்தில் பங்கடைவார்கள்; இந்த மகா உபத்திரவக் காலத்துடன் இந்த யுகம் முடிவடைந்து உடனடியாக வரும் நீதியின் மகிமையான ஆயிரவருட ஆளுகைக்கென மனுக்குலத்தை ஆயத்தப்படுத்தும்.

“இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள்” என்றுகூறி, யூத தேசத்திற்கான அழிவு பற்றின தீர்ப்பை இயேசு அறிவித்த உடனே, அந்தத் தேசம் தொடர்புடைய அனைத்துப் பிரயாசங்களையும் அவர் நிறுத்திவிட்டார் (மத்தேயு 23:38-39); தேச அளவிலான அவர்களுக்கான பரீட்சை முடிந்தபோதிலும், சரியான இருதய நிலைமையில் காணப்பட்ட தனி நபர்களை அவர் இன்னமும் நாடித்தேடினார். அவர் ஆலயத்திற்குச்சென்று, அங்கிருந்த விற்கிறவர்களையும், காசுக்காரர்களையும், கயிற்றினாலான சவுக்கைக்கொண்டு துரத்தி, ஆலயத்தைச் சுத்திகரித்தார். வாழ்க்கையின் எந்த மட்டத்திலுமுள்ள யூதனுக்குரிய அதிகாரத்தையும், அவர் கொண்டிருந்தார்; இன்னுமாக அவருடைய இராஜ அதிகாரமும், சரீரப்பிரகாரமாக அவருக்கு ஆதரவு அளிப்பதற்கு ஆயத்தமாய் அவரைச் சூழ்ந்திருந்த ஜனங்கள் மூலமான அதிகாரமும் அவர் கொண்டிருந்தார்; இவைகளுக்கெல்லாம் அப்பால், அவரிடம் பரலோக வல்லமையும் இருந்தது.

நிஜத்தில் ஆலயம் சுத்திகரிக்கப்படுதல்

நாம் புரிந்திருக்கிறபடி, இச்சம்பவமானது ஒரு நிழலாகும். அதாவது, ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கு இப்பொழுது பொருந்தக்கூடிய மாபெரும் ஒரு சத்தியத்திற்கான விளக்கமேயாகும். ஏரோதினால் கட்டப்பட்ட ஆலயம் நிழலேயாகும். உண்மையான ஆலயம் என்பது, ஜீவனுள்ள தேவனுடைய சபையாகும். இந்தச் சபை எனும் ஆலயம் இரண்டு கண்ணோட்டங்களிலிருந்து கருதப்படலாம்: (1) எதிர்காலத்தில், மகிமையின் சபை; இதில், இப்பொழுது அடிக்கப்பட்டு, ஆயத்தப்படுத்தப்படும் தற்காலத்திலுள்ள கர்த்தருடைய உண்மையுள்ளவர்கள், ஜீவனுள்ள கற்களாக இருப்பார்கள். (2) தாழ்வான நிலையிலும் பூரணமின்மையிலும் காணப்படும் தற்போது உள்ள சபை, தேவன் வாசம் பண்ணும் கூடாரமாய் இருக்கும். நிழலில் ஆராதனை விஷயத்திலும், ஆராதனை ஏறெடுக்கிறவர்கள் விஷயத்திலும் கடுமையான விதிமுறைகள் காணப்பட்டதுபோல, எதிர்க்காலத்திற்குரிய மகிமையான ஆலயமாக ஸ்தாபிக்கப்படத்தக்கதாக, ஆயத்தமாகுவதற்கு ஏதுவாக தற்காலத்திலுள்ள ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைகளைச் செய்யும் (ஆவிக்குரிய) லேவியர் மற்றும் ஆசாரியர்களுக்கும், தேவனுடைய வார்த்தைகளில் உறுதியான விதிமுறைகள் காணப்படுகின்றன.

இந்தச் சுவிசேஷயுகத்தின் முடிவில், தேவன் தம்முடைய ஆலயமாகிய, கிறிஸ்தவ மண்டலத்தைச் சுத்திகரிப்பதற்கான நோக்கம் கொண்டிருக்கின்றார் என்று வேதவாக்கியங்கள் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றன. மகிமையிலுள்ள ஆலயத்தில் சுத்திகரிக்கத்தக்கதாக, தூய்மையற்ற எதுவும் இராது, மற்றும் அசுத்தமான எதுவும் அங்கு நுழைவதுமில்லை; ஆனால் தற்காலத்திலுள்ள சபையின், ஆலயத்தின் விஷயத்தில், அதாவது அர்ப்பணம் பண்ணியுள்ள விசுவாசிகள் மாத்திரமே காணப்பட வேண்டிய சபையின், ஆலயத்தின் விஷயத்தில் கலப்பினம் காணப்படுகின்றபடியால், கிறிஸ்தவர்கள் மற்றும் சபை என்ற பெயரின் கீழ் முற்றிலும் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும், சுயநலத்தை அடிப்படையாகக்கொண்டு இவ்வுலகத்துடன் தொடர்பு கொண்டிருப்பவர்களுமாகிய அநேகரும், அநேக பிரிவினர்களும் காணப்படுகின்றனர். “இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் (வருஷம்) செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும்” என்று இந்த ஆலயத்தைக் குறித்துத் தீர்க்கத்தரிசியாகிய தானியேலின் மூலம் முன்னுரைக்கப்பட்டப் பிரகாரம், சுத்திகரிப்பதற்குக் கர்த்தர் நோக்கம் கொண்டுள்ளார். (தானியேல் 8:14) நிழலான ஆலயத்தில் நமது கர்த்தரால் நிறைவேற்றப்பட்டது, வெறும் நிழலான சுத்திகரித்தலேயாகும்; நிஜமான சுத்திகரித்தலே உண்மையான முக்கியத்துவம் உடையதாகும்; மேலும் இந்தச் சுத்திகரிப்பின் காலங்களில்தான் நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். (தொகுதி 3, அத்தியாயம் 4 – பார்க்கவும்)

நிழலானது, சுத்திகரிப்பின் அம்சம் தொடர்பான கருத்தை நமக்குக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது; சுத்திகரிப்பானது பரிசுத்தக் காரியங்களை விற்கிறவர்களைப் பிரதானமாய்ப் பாதிக்கின்றதாய் இருக்கின்றது; அதாவது சுயநலமான காரணங்களுக்காகத் தங்களைக் கர்த்தருடைய வேலையில் இணைத்துக்கொண்டவர்களைப் பெரிதும் பாதிக்கின்றதாய் இருக்கும்; காரணம் இப்படிப்பட்டவர்கள், தங்கள் சபையுடன் அடையாளப்பட்டுக் காணப்படும்போதுதான், அதிகமாக மனுஷர் மத்தியில் கனத்தையும், ஜீவியத்திற்கான அதிகப்படியான சொகுசையும், சௌகரியங்களையும், நல்ல வியாபாரத்தையும் அடையப்பெற முடிகின்றது. இந்த வகுப்பாரைச் சார்ந்த அனைவரும் வெளியே துரத்தப்பட வேண்டும்; இவ்வேலையைக் கர்த்தர் தாமே பார்த்துக்கொள்வார். கர்த்தருடைய வீடு, விற்கிறவர்களின் வீடாய் இருக்கக்கூடாது. கர்த்தர் தம்மை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்பவர்களையே நாடுகிறாரேயொழிய, அப்பத்திற்காகவோ, மீனிற்காகவோ அல்லது ஏதேனும் பூமிக்குரிய ஆதாயத்திற்காகவோ தம்மைத் தேடுகிறவர்களைக் கர்த்தர் நாடுவதில்லை. ஆகவே சரியான வகுப்பாருக்குச் சத்தியம் ஆசீர்வாதமாய் இருப்பதற்கு ஏதுவாகவும், இராஜா மற்றும் அவருடைய உண்மையுள்ளவர்கள் தொடர்புடைய விஷயத்தில், சரியற்ற வகுப்பார் சத்தியத்தினால் அடையும் வெறுப்பின் காரணமாகப் பிரிக்கப்படுவதற்கு ஏதுவாகவும் உள்ள விதத்தில், கர்த்தர் சத்தியத்தை முன்வைப்பார். தற்காலத்தில் கர்த்தரும், சத்தியமாகிய சவுக்கும் வியாபாரத்திற்காக ஆலயத்தில் இருப்பவர்களுக்கு மாத்திரமே பாதிப்பாய் இருக்கின்றதே ஒழிய, மற்றவர்கள் எவருக்கும் பாதிப்பாய் இருப்பதில்லை. பெயரளவிலான ஆலயத்தில் இன்றும் காசுக்காரர்கள் இருக்கின்றனர்; இவர்கள் உணவு அல்லாதவைகளைக் கொடுப்பதற்கு என்று சம்பளங்களைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஜனங்களிடமிருந்து திருடி, கர்த்தருடைய வழியைப் போதிக்கின்றோம் என்று அறிக்கைப் பண்ணிக்கொண்டு, மனுஷர் மத்தியில் கனத்தையும், சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு, உண்மையில் கர்த்தரையும், அவருடைய [R3852 : page 283] சத்தியத்தையும் தவறாய்க் காட்டுகின்றவர்களாய் இருக்கின்றார்கள். இப்படியான அனைவரும் உண்மையான ஆலய வகுப்பாரிடமிருந்து பிரிக்கப்படுவார்கள்; இவர்களும், நிழலான ஆலயத்திலுள்ள விற்கிறவர்களும், காசுக்காரர்களும் போதகர் மீதும், அவருடைய பின்னடியார்கள் மீதும் எரிச்சலாய் இருந்ததுபோல கோபமாய் இருப்பார்கள் மற்றும் ஆதரவாளர்களையும் பெற்றிருப்பார்கள்.

ஆலயம், கள்ளர்குகை

திருடுதல் என்பது மறைமுகமாக, ஏமாற்றும் விதமாக செய்யப்படுகின்றது. திருடன் தன்னை முற்றிலும் வித்தியாசமானவனாக முன்வைப்பான். திருடன் ஒரு கனமிக்க மனுஷன் போன்று காண்பித்துக்கொள்வான்; ஆனால் தந்திரமாய்ப் போர்வையின் கீழ், திருடன் அவனுக்குச் சொந்தமல்லாததை, தனக்கென வஞ்சித்துக்கொள்கின்றான். இப்படியாகவேதான் கிறிஸ்தவ மண்டலத்திலுள்ள பல்வேறு திசைகளில் கிறிஸ்தவ ஊழியக்காரர்கள், போதகர்கள், கண்காணிகள் எனத் தங்களை அறிக்கைப் பண்ணிக்கொள்ளும் அநேகர் காணப்படுகின்றார்கள் அல்லவா? கிறிஸ்துவினுடைய சிலுவைக்கும், தேவனுடைய வார்த்தைக்கும் ஊழியக்காரர்கள் என தங்களைக் காண்பித்துக்கொள்கின்ற அநேகர் தேவனுடைய வார்த்தைகளை மறுதலிக்கின்றவர்களாகவும், கிறிஸ்துவின் சிலுவை முட்டாள்தனமானது என எண்ணுகின்றவர்களாகவும் இருக்கின்றார்கள் அல்லவா? இவ்வகுப்பாரில், பரிணாமக்கொள்கைக்காரர்கள் எனத் தங்களை அறிக்கைப் பண்ணுகின்றவர்கள் காணப்படுகின்றனர்; அதாவது மனிதன் தேவனுடைய சாயலிலிருந்து விழுந்துள்ளான் என்றும், சிலுவையின் இரத்தத்தினால் மீட்கப்படுவது அவசியம் என்றும், மனிதன் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கு, கர்த்தருடைய இரண்டாம் வருகை அவசியம் என்றும் உள்ள காரியங்களுக்குப் பதிலாக, இவர்கள் கொண்டுள்ள சத்தியம் பற்றின கருத்து முற்றிலும் எதிர்மாறாய்க் காணப்படுகின்றது; அதாவது மனுஷன் விழுந்திருந்தாலும், அவன் மேலான நிலைக்குள்தான் விழுந்திருக்கின்றான் என்றும், அவன் மீட்கப்பட அவசியம் இல்லை என்றும், உலகத்தின் இரட்சிப்பிற்கான கர்த்தருடைய இரண்டாம் வருகையை எதிர்ப்பார்ப்பது என்பது முட்டாள்தனம் என்றுமுள்ள கருத்துக்கள் கொண்டிருக்கின்றனர். போலித்தனத்தின் கீழ் இம்மனுஷர்கள் பணம் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் அல்லவா? இப்படிப்பட்ட திருட்டு, உலகத்திலேயே மிகவும் மோசமான வகை திருட்டு அல்லவா? இது அப்பட்டமான கொள்ளை/திருட்டு அல்லவா? தேவனுடைய நற்பெயரைக் கெடுக்கும் விஷயத்தில், இவர்கள் தேவனிடமிருந்து திருடுகிறார்கள் அல்லவா? ஜனங்களை ஏமாற்றி, அப்பம் அல்லாததும், திருப்திப்படுத்தாததுமாகியவற்றை ஜனங்களுக்கு விற்பதின் மூலம், அவர்களிடமிருந்து பணத்தையும், கனத்தையும் இவர்கள் திருடுகிறார்கள் அல்லவா?

பிதாவின் வீடு, அவருடைய சபை, அவரை ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்கிறவர்களை மாத்திரமே கொண்டிருக்க வேண்டும். மீதமான மற்றவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவது சரியானதே மற்றும் கர்த்தர் இப்பொழுது இவைகளைப் பார்த்துக்கொள்வார். காரணம் இதற்கான ஏற்றவேளை இப்பொழுது வந்துள்ளது. பரிசுத்த ஸ்தலம் சுத்திகரிக்கப்படும், பின்னர் ஏற்றவேளையில் அதனை கர்த்தருடைய மகிமை நிரப்பும்; இராஜரிக ஆசாரியக்கூட்டமானது மறுரூபமடைந்து, மகிமையின் ஆலயமாக, கனத்துடனும், வல்லமையுடனும் உள்ள ஆலயமாக மாறும் மற்றும் அதிலிருந்து மனுக்குலத்தின் உலகத்திற்கான ஆசீர்வாதம் கடந்துவரும்.

இயேசு இப்படியாக எருசலேமுக்குக் கழுதையின் மீது ஏறி வந்ததும், காசுக்காரர்களைச் சவுக்கினால் துரத்தியடித்ததும் ஜனங்கள் மத்தியில் பரபரப்பை எழுப்பினது. யார் இவர்? என்று எழுந்த [R3852 : page 284] கேள்விக்கு, “இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கத்தரிசியாகிய இயேசு” என்று பதிலளிக்கப்பட்டது. செய்தி பரவியது, பட்டணத்திலுள்ள ஏழைகளும், முடவர்களும் ஆலயத்தில் குவிந்தனர். இந்த மாபெரும் தீர்க்கத்தரிசியைக்குறித்து ஜனங்கள் முன்னமே கேள்விப்பட்டிருந்தப்படியால், அவருடைய கரங்களிலிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இதுவே என எண்ணியிருக்க வேண்டும். இப்படியாகவே ஆவிக்குரிய ஆலயமானது முழுமையாகச் சுத்திகரிக்கப்பட்டிருக்கும் போது, எதிர்க்காலத்தில் அதாவது கர்த்தருடைய ஆலயமானது அதன் வல்லமையிலும், மாபெரும் மகிமையிலும் காணப்படும்போது, பூமியின் குடிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படுதலும், சொஸ்தப்படுத்தப்படுதலும் அரங்கேற்றப்பட்டு, நிறைவேறித் தீரும்.

ஜனக்கூட்டத்தாருடைய ஆரவாரம் நின்றிருந்தாலும், ஆலயத்தில் காணப்பட்ட பிள்ளைகள் எவ்விதமான நோக்கமும் இல்லாமல், “ஓசன்னா, ஓசன்னா, தாவீதின் குமாரனுக்கு” எனச் சத்தமிட்டுக்கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இப்படியாகக் கர்த்தரைத் துதிக்கும் துதிகள் ஆலயம் முழுவதும் காணப்பட்டிருக்க வேண்டும்; மேலும் பிள்ளைகளும் இப்படியாக ஆர்ப்பரித்துக்கொண்டிருப்பதைக் கேட்ட பரிசேயர்கள் எரிச்சலடைந்தனர்; தடுத்திடுவதற்கு இவர்கள் ஏறெடுத்த முயற்சித் தோல்வியடைந்ததின் காரணமாகத்தான் போதகரிடம் முறையிட்டனர்; அதாவது போதகருடைய அதிகாரத்திற்கு மதிப்பு இருக்கின்றபடியால், ஜனங்களைக் கடிந்துகொள்ளும்படியாகப் பரிசேயர்கள் போதகரிடம் முறையிட்டனர்; ஆனால் இவைகள் எல்லாம் “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர்” என்று எழுதியிருக்கிறபடி தீர்க்கத்தரிசனத்தின் நிறைவேறுதல் என போதகர் அவர்களுக்கு பதிலளித்தார். (சங்கீதம் 8:2; மத்தேயு 21:16) மாம்சீக இஸ்ரயேலர்கள் மத்தியில் அதிக அறிவும், தயவும் பெற்றிருந்தவர்களினால் உணர்ந்துகொள்ளப்படாமல், ஏற்றுக்கொள்வதில் தவறவிட்டதை, கர்த்தர் குழந்தைகளினுடைய வாயினால் நிறைவேற்றினார். பூமிக்குரிய ஞானமானது, தெய்வீக நோக்கங்களைத் தவறாய்ப் புரிந்துகொள்வதை நாம் எங்கும் காண்கின்றோம். ஆகையால் இப்படிப் பூமிக்குரிய ஞானமுடையவர்களைப் பார்க்கிலும் கர்த்தர் பெலவீனர்களையும், ஏழைகளையும், படிப்பறிவில்லாதவர்களையும் பயன்படுத்துகின்றார். அன்பான சகோதர சகோதரிகளே, நமக்கான வாய்ப்புகளும், தாலந்துகளும் எதுவாக இருப்பினும், சிறு பிள்ளைகளென இருக்க நாடி மற்றும் மேசியாவாகிய நமது ஆண்டவரை நாம் இப்பொழுது சரியான விதத்தில் பறைச்சாற்றத்தக்கதாகவும், எல்லா விதத்திலும் நாம் அவருடைய வேலையில் ஒத்துழைக்கத்தக்கதாகவும், இராஜ்யத்தின் மகிமையிலும், அவரோடுகூட உண்மையுள்ளவர்களெனக் கருதப்படத்தக்கதாகவும், நாம் பூமிக்குரிய ஞானத்தினால் மாத்திரம் வழிநடத்தப்படாமல், தேவனாலும் போதிக்கப்பட்டிருப்போமாக.

நான் அவரை அங்குக் காண்கிறேன்

ஆழ்ந்த சிந்தனையோடு கடந்தகாலங்களைப் பின் நோக்குகிறேன்,
அங்கே இதோ என் ஆண்டவர்,
கபடற்ற தாழ்மையுள்ள – நசரேயனாகிய
தேவனுடைய ஒரேபேறான குமாரன்!
இப்போது உள்ளார்வத்தில் அவரைப் பின்தொடர்ந்தேன்.
யோர்தானின் நிழலான ஆற்றங்கரையோரமாக
பணிவாக அவர் செல்ல – நான்
அங்கே அவர் நின்றதைக் காண்கிறேன்!
தேவனால் ஆயத்தப்படுத்த அனுப்பப்பட்ட
யோவான்ஸ்நானன் அங்கே நிற்கிறார்.
அவர்களின் மத்தியில் அவரின் வார்த்தையைக்
கவனித்துக் கொண்டிருக்கிறவரைப் பற்றி பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்!
தண்ணீரில் என் ஆண்டவர் இறங்கிக் கூறுகிறார்:
“என்னை ஞானஸ்நானம் செய்,
என் அர்ப்பணிப்பின் நேரம் வந்ததால்
இதற்கு இப்பொழுது இடங்கொடு!”
உலகப் பிதா இதனைக் கண்ணோக்கி
தேவ ஆவி புறாவைப்போல இறங்கி
தம் ஒரே பேறான குமாரனை அறிவிக்கும்போது
அவரின் இதயம் அன்பினால் நிரம்பி வழிந்தது!
அந்த மகா பரிசுத்தர், பாவமற்றவர்
தமக்குரிய எல்லாம் ஆனந்தமாய் தந்து,
மனுக்குலத்தைக் காத்திடவே – அவரும்
சிலுவையில் தம் உயிரை ஊற்றினார்!
நானும் அவர் வழியே நடந்து
என் சிறிய பங்கையும் தராமல் இருப்பேனோ?
நான் கொடுக்கும் காணிக்கை சிறிதாயினும் – பிதாவின்
சித்தம் செய்ய எனக்கு ஆனந்தம் அளிக்குமல்லவா!
அதினால் பிரியமான தேவப்பிள்ளையே
சொல்லப்பட்டது என்னவெனில்: “ஏன் தாமதிக்கிறாய்?”
உன் பொருத்தனையின் அடையாளமாக – எழுந்து
இன்றே ஞானஸ்நானம் பெறுவாயாக!
பாதை கரடுமுரடாயினும் பயம் வேண்டாம்
ஏனெனில் அவருக்கு நீ சொந்தம்.
உன் நுகத்தில் உன்னோடுகூட வருகிறார் – அதினால்
தனியாய் நீ என்றும் நடப்பதில்லையே!

– Poems of the Way, p.164